Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

6th Social Science Guide பன்முகத் தன்மையினை அறிவோம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்வு செய்க:

Question 1.
இந்தியாவில் மாநிலங்களும், 4. யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
அ) 27, 9
ஆ) 29, 7
இ) 28, 7
ஈ) 28, 9
விடை:
ஆ) 29, 7

Question 2.
இந்தியா ஒரு _____ என்று அழைக்கப்படுகிறது.
அ) கண்டம்
ஆ) துணைக்கண்டம்
இ) தீவு
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை:
ஆ) துணைக்கண்டம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 3.
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ____ மாநிலத்தில் உள்ளது.
அ) மணிப்பூர்
ஆ) சிக்கிம்
இ) நாகலாந்து
ஈ) மேகாலயா
விடை:
ஈ) மேகாலயா

Question 4.
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை ?
அ) சீக்கிய மதம்
ஆ) இஸ்லாமிய மதம்
இ) ஜொராஸ்ட்ரிய மதம்
ஈ) கன்ஃபூசிய மதம்
விடை:
ஈ) கன்ஃபூசிய மதம்

Question 5.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______ அ) 25
ஆ) 23
இ) 22
ஈ) 26
விடை:
இ) 22

Question 6.
______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) பஞ்சாப்
ஈ) கர்நாடகா
விடை:
அ) கேரளா மோகினியாட்டம்

Question 7.
மாநிலத்தின் _____ செவ்வியல் நடனம் ஆகும்.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) மணிப்பூர்
ஈ) கர்நாடகா
விடை:
அ) கேரளா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 8.
“டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _____
அ) இராஜாஜி
ஆ) வ.உ.சி
இ) நேதாஜி
ஈ) ஜவகர்லால் நேரு.
விடை:
ஈ) ஜவகர்லால் நேரு

Question 9.
‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______
அ) ஜவகர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) அம்பேத்கார்
ஈ) இராஜாஜி
விடை:
அ) ஜவகர்லால் நேரு

Question 10.
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.
அ) பெரிய ஜனநாயகம்
ஆ) தனித்துவமான பன்முகத்தன்னை கொண்ட நிலம்
இ) இனங்களின் அருங்காட்சியம்
ஈ) மதச்சார்பற்ற நாடு
விடை:
இ) இனங்களின் அருங்காட்சியகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
விடை:
பொருளாதார

Question 2.
மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
விடை:
ராஜஸ்தான்

Question 3.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______
விடை:
2004

Question 4.
பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
விடை:
அசாம்

III. பொருத்துக:

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 1

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பன்முகத்தன்மையினை வரையறு.
விடை:
இந்தியர்களாகிய நாம் பல்வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகளைச் சார்ந்து வாழ்கிறோம். இதுவே பன்முகத் தன்மை எனப்படும்.

Question 2.
பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?
விடை:

  • நில அமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத் தன்மை
  • சமூக பன்முகத்தன்மை
  • சமய பன்முகத்தன்மை
  • மொழி சார். பன்முகத் தன்மை
  • பண்பாடு பன்முகத் தன்மை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 3.
இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
விடை:
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு ஆகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றைப் பற்றி எழுதுக.
விடை:
தீபாவளி – இந்துக்கள்
கிறிஸ்துமஸ் – கிறிஸ்தவர்கள்
ரம்ஜான் – இஸ்லாமியர்கள்
சில விழாக்களை பல்வேறு மதத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகக் கொண்டாடுகின்றனர்.

Question 5.
இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 70

Question 6.
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன் அழைக்கப் – படுகிறது?
விடை:

  • இந்தியா மாறுபட்ட புவியியல் அமைப்பு, தட்ப வெப்பநிலை, தாவரங்கள், விலங்குகள், பலவகைப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கொண்டுள்ளது.
  • இவ்வாறு இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி:

Question 1.
மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத் தன்மையினை விவரி.
விடை:

  • இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
  • தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
  • இந்தியா ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது.
  • இதனால் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக எழுச்சி பெற்றது.
  • பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும், ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

பண்பாட்டு பன்முகத்தன்மை:

  • பண்பாடு என்பது மக்களின் மொழி, உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள், இசை, கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
  • ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.
  • இது சமூக வடிவமைப்புகளால் முன்னிறுத்தப்படும் குழு அடையாளத்தின் வளர்ச்சி நிலை ஆகும்.
  • கலை மற்றும் கட்டிடக்கலை ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபையும் நுண்ணிய கலைவெளிப்பாட்டு வடிவங்களையும் பெற்றிருக்கின்றன.

Question 2.
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் – கலந்துரையாடுக.
விடை:

  • இந்தியாபன்முகத்தன்மை நிறைந்த நாடு நாட்டுப்பற்று” என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம்.
  • தேசியக்கொடி, தேசிய கீதம் தாய்நாட்டில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
  • தேசிய விழாக்கள் கொண்டாடப்படுவதால் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துகின்றன.
  • நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒரே தேசத்தால் ஒன்றுபட்டுள்ளோம்.
  • விடுதலைப் போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்கின்றன.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள். (மாணவர்கள் செய்ய வேண்டியவை)

1. ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.
2. ஏதேனும் ஒரு மாநிலம் பற்றிய தகவல்களை அறிந்து, அம்மாநில மக்களின் பாரம்பரியம், பண்பாடு குறித்த தகவல்களை ஒரு புகைப்படத் தொகுப்பாக தயார் செய்க.
3. தமிழ் நாட்டின் கலை மற்றும் கட்டிடக்கலை சார்ந்த புகைப்படங்களை தொகுக்க.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

VII. சிந்தனை வினா:

Question 1.
நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக. மாநிலங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 80

VIII. வாழ்வியல் திறன்.

1. உனது பள்ளியில் ஒற்றுமையை நிலை நிறுத்த மேற்கொள்ளும் பரிந்துரைகள் யாவை?

1. பள்ளியில் சீருடை அணிதல்
2. மதம் சார்ந்த விழாக்களை கொண்டாடுவது
அ. – தீபாவளி
ஆ. – பொங்கல் விழா
இ. – ரம்ஜான் விழா
ஈ. – ஹோலிபண்டிகை
3. சர்வசமய பிரார்த்தனை நடத்துதல்
4. சமபந்தி உணவு ஏற்பாடு செய்தல்.
5. பள்ளி விளையாட்டு விழா, ஆண்டுவிழா, நடத்துதல்.
6. மாணவர்களின் திறனை வெளிக்கொணர கலைவார விழா நடத்துதல்

6th Social Science Guide பன்முகத் தன்மையினை அறிவோம் Additional Important Questions and Answers

I . சரியான விடையளித் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திராவிட மொழிகளில் பழமையானது.
அ) இந்தி
ஆ) தமிழ்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
விடை:
ஆ) தமிழ்

Question 2.
அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
அ) 13
ஆ) 18
இ) 22
ஈ) 25
விடை:
இ) 22

Question 3.
தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு.
அ) 2002
ஆ) 2004
இ) 2012
ஈ) 2008
விடை:
ஆ) 2004

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குருநானக் ஜெயந்தியைக் கொண்டாடுபவர்கள் _______
விடை:
சீக்கியர்கள்

Question 2.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு ______
விடை:
1947

Question 3.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் _____
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 4.
சமூகத்தின் அடிப்படை அலகு _____
விடை:
குடும்பம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 5.
பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் ______
விடை:
பங்க்ரா

III. சுருக்கமான விடை தருக.

Question 1.
குடும்பம் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறுக.
விடை:
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குடும்பம் என்பது இரு வகைப்படும்.

  1. கூட்டுக் குடும்பம்
  2. தனிக்குடும்பம்

Question 2.
சமுதாயம் என்றால் என்ன?
விடை:

  • சமூகம் என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும்.
  • சமுதாயம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள், பெற்றோர்கள், ‘ஆசிரியர்கள், மாணாக்கர் போன்ற பலரையும் உள்ளடக்கியது.

Question 3.
கண்டம் எனப்படுவது யாது?
விடை:
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பாகும்.

Question 4.
இந்தியாவில் பின்பற்றப்படும் மதங்களைக் குறிப்பிடுக.
விடை:
இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவமதம், சீக்கிய மதம், புத்த மதம், சமணமதம், ஜொராஸ்டிரியமதம் போன்ற மதங்கள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 90

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

6th Social Science Guide பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Text Book Back Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ______
விடை:
பெருவெடிப்பு

Question 2.
இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு _____ ஆகும்.
விடை:
ஒளியாண்டு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 3.
சூரியக் குடும்பத்தின் மையம் _____
விடை:
சூரியன்

Question 4.
கோள் என்ற வார்த்தையின் பொருள் _____
விடை:
சுற்றி வருபவர்

Question 5.
அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _____
விடை:
வியாழன்

Question 6.
நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _____
விடை:
சந்திராயன் – 1

Question 7.
புவியின் சாய்வுக் கோணம் _____
விடை:
23\(\frac{1}{2}\)°

Question 8.
நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் ____ மற்றும் _____
விடை:
மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

Question 9.
சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு _____ ல் காணப்படும்.
விடை:
மிக அருகில்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 10.
புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு – என்றுபெயர்.
விடை:
ஒளிர்வு வட்டம்

ஆ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்.
அ) சுற்றுதல்
ஆ) பருவகாலங்கள்
இ) சுழல்தல்
ஈ) ஓட்டம்
விடை:
இ) சுழல்தல்

Question 2.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்.
அ) மார்ச் 21
ஆ) ஜூன் 21
இ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
விடை:
ஈ) டிசம்பர் 22

Question 3.
சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்.
அ) ஆண்டிரோமெடா
ஆ) மெகலனிக்கிளவுட்
இ) பால்வெளி
ஈ) ஸ்டார்பர்ஸ்ட்
விடை:
இ) பால்வெளி

Question 4.
மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
அ) செவ்வாய்
ஆ) சந்திரன்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) சந்திரன்

Question 5.
எந்த கோளால் தண்ணீ ரில் மிதக்க இயலும்?
அ) வியாழன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெப்டியூன்
விடை:
ஆ) சனி

இ. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
வெள்ளி வியாழன், நெப்டியூன், சனி
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 80

Question 2.
சிரியஸ் ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 81

Question 3.
புளூட்டோ , ஏரிஸ், செரஸ், அயோ
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 82

Question 4.
வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 83

Question 5.
தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி விண்கலம்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 84

ஈ. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 85

உ. (i). கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2. ஜுன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2 மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
அ) 1 மற்றும் 2

ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, கூற்று 2 தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

ஊ. பெயரிடுக.

Question 1.
விண்மீன்களின் தொகுப்பு ______
விடை:
விண்மீன் திரள்

Question 2.
சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் _______
விடை:
பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்

Question 3.
பிரகாசமான கோள் _____
விடை:
வெள்ளி

Question 4.
உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் _______
விடை:
உயிர்க்கோளம்

Question 5.
366 நாட்களை உடைய ஆண்டு ______
விடை:
லீப் ஆண்டு

எ. இரு வார்த்தைகளுக்கு மிகாமல் விடை தருக.

Question 1.
உட்புறக்கோள்களைப் பெயரிடுக.
விடை:

  1. புதன்
  2. வெள்ளி
  3. புவி
  4. செவ்வாய்

Question 2.
புளூட்டோ ஒரு கோளாக தற்சமயம் கருதப்படவில்லை. காரணம் தருக.
விடை:
புளூட்டோ கிரகத்தின் பாதை நெப்டியூன் கிரகத்தின் வளையத்திற்குள் வருவதால், புளூட்டோவை தனி கிரகமாக கருத முடியாது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 3.
சூரிய அண்மை என்றால் என்ன?
விடை:
சூரிய அண்மை ‘ என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.

Question 4.
ஒருவர் 20° வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?
விடை:
இரண்டு முறை

Question 5.
எந்த விண்பொருள் தன் சுற்றுப்பாதையை பிறவிண்பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது? உதாரணம் தருக.
விடை:
குறுங்கோள்கள் தன்
சுற்றுப்பாதையை பிறவிண் பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
உதாரணம் : புளூட்டோ, செரஸ், மேக்மேக் மற்றும் ஹௌமிய

ஏ. காரணம் கூறுக.

Question 1.
யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது?
விடை:

  • வெள்ளிக் கோளைப் போன்றே இக்கோளும் தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றுகிறது.
  • இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.

Question 2.
நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக
விடை:

  • நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது.
  • இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் இதன் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.

Question 3.
புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.
விடை:
புவி கோள வடிவமாக இருப்பதால் சுழலும் வேகம் துருவப்பகுதிகளில் சுழியாக உள்ளது.

ஐ. விரிவான விடை தருக.

Question 1.
உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 95

Question 2.
புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
சுழலுதல் :

  1. புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவது சுழலுதல் எனப்படும்.
  2. புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது.
  3. புவி கோள வடிவமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டும் படும் அப்பகுதி பகல் பொழுது எனப்படும்.
  4. புவி ஒளிபடாத பகுதி இரவாகவும் இருக்கும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

சுற்றுதல் :

  1. புவி தன் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றிவரும் நகர்வு சுற்றுதல் எனப்படும்.
  2. புவி சூரியனை சுற்றி வருவதால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.
  3. புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  4. இதனால் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாள்கள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும்.
  5. இதன் காரணமாக புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும்.
  6. டிசம்பர் 22ம் தேதி மகரரேகையின் மீது சூரியனின் செங்குத்துக்கதிர்கள் விழுவதால் தென் அரைக்கோளத்தில் பகல்பொழுது அதிகமாகவும் வட அரைக்கோளம் நீண்ட இரவையும் கொண்டிருக்கும்.

Question 3.
புவிக் கோளங்களின் தன்மைகள் பற்றி விவரி.
விடை:

  1. உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
  2. புவியின் மூன்று தொகுதிகள் உள்ளன. அவைபாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகும்.
  3. உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் ‘உயிர்க்கோளம்’ ஆகும்.

பாறைக் கோளம்:

  1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் பாறைக் கோளம் எனப்படும்.
  2. இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.

நீர்க் கோளம்:

1. “‘ஹைட்ரோ” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர். 2. கடல்கள், ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள், வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

வளி மண்டலம்:

  1. புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படும்.
  2. வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்ஸிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும்.
  3. கார்பன் – டை – ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோன் வாயுக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

உயிர்க் கோளம்:

  1. பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு பகுதி உயிர்க்கோளம்’ எனப்படும்.
  2. உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  3. ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை, தாவரங்கள், விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.

ஓ.. அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளிக்கவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 96
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 96.2

Question 1.
சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
விடை:
புதன்

Question 2.
பெரிதான கோள் எது?
விடை:
வியாழன்

Question 3.
சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
விடை:
நெப்டியூன்

Question 4.
செந்நிறக் கோள் எது?
விடை:
செவ்வாய்

ஆ. படத்தைப் பார்த்து பதிலளி

Question 1.
படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
விடை:
யுரேனஸ்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 97

Question 2.
கோளின் நிறம் என்ன?
விடை:
பச்சை

Question 3.
இந்நிறத்திற்கான காரணம் என்ன?
விடை:
மீத்தேன் வாயு இக்கோளில் உள்ளதால் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.

இ. குறுக்கெழுத்து புதிர் இடமிருந்து வலம்

Question 1.
இரவும் பகலும் சமமாக காணப்படும்
விடை:
சமப்பகலிரவு

Question 5.
குருளைக் கோள்
விடை:
புளூட்டோ

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 7.
சூரியனிடமிருந்து மிகத் தொலைவில் உள்ள கோள்
விடை:
நெப்டியூன்

Question 8.
சூரியனில் உள்ள வாயு
விடை:
ஹைட்ரஜன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99.8
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99.9

மேலிருந்து கீழ்

Question 4.
நான் காலையில் தென்படுவேன்
விடை:
விடிவெள்ளி

Question 2.
நிலவை ஆராய இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம்
விடை:
சந்திராயன்

Question 3.
நான் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுவேன்
விடை:
ஹேலி

Question 6.
பூமியின் நடுவில் செல்லும் ஓர் கற்பனைக் கோடு
விடை:
அச்சு

Question 7.
எனக்கு இரண்டு துணைக் கோள்கள் உண்டு
விடை:
செவ்வாய் பகுதி

6th Social Science Guide பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு ____ என்று பெயர்.
விடை.:
அண்டவியல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 2.
நட்சத்திரங்களின் தொகுப்பு ____ என்றழைக்கப்படுகிறது.
விடை:
விண்மீன் திரள் மண்டலம்

Question 3.
Sol என்ற இலத்தீன் வார்த்தைக்கு ____ என்று பொருள்
விடை:
சூரியக் கடவுள்

Question 4.
சூரியக் குடும்பத்தின் மையத்தில் _____ அமைந்துள்ளது.
விடை:
சூரியன்

Question 5.
கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை _____ எனப்படுகிறது.
விடை:
சுற்றுப்பாதை

Question 6.
மிக வெப்பமான கோள்
விடை:
வெள்ளி

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்.
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) யுரேனஸ்
ஈ) சனி
விடை:
அ) புதன்

Question 2.
உருளும் கோள்.
அ) வெள்ளி
ஆ) செவ்வாய்
இ) நெப்டியூன்
ஈ) யுரேனஸ்
விடை:
ஈ) யுரேனஸ்

Question 3.
வளையங்களைக் கொண்ட கோள்.
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) சனி
ஈ) புதன்
விடை:
இ) சனி

Question 4.
ஹேலி விண்மீன் இனி தோன்றும் ஆண்டு.
அ) 2051
ஆ) 2041
இ) 2061
ஈ) 2031
விடை:
இ) 2061

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 5.
கடகரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
அ) மார்ச் 21
ஆ) ஜுன் 21
ஆ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
விடை:
ஈ) டிசம்பர் 22

III. i) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சூரியன் குடும்பத்தின் மூன்றாவது கோள் புவி.
2. சூரியன் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனது.

Question 3.
புதன் கோளுக்கு துணைக் கோள்கள் எதுவுமில்லை. சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
இ) 1 மற்றும் 3

ii) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சூரியன் புவியைச் சுற்றி வருகிறது.
2. ரோமானிய போர்க் கடவுள் பெயரால் செவ்வாய் கோள் அழைக்கப்படுகிறது.
3. யுரேனஸ் பச்சை நிறமாகக் காணப்படுகிறது.
சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 3
ஈ) 3 மட்டும்
விடை:
ஆ) 2 மற்றும்

iii) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 – சூரியக் குடும்பத்தில் வேகமாகச் சுழழும் கோள் வியாழன்
கூற்று 2 – நெப்டியூன் மிகக் குளிர்ந்த கோள் ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரி

iv) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 – புவி தன் அச்சில் 32 1/2° சாய்ந்து கொண்டு சுற்றுகிறது.
கூற்று 2 – சனிக்கோளின் ஈர்ப்புத்திறன் நீரை விட அதிகமானது சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் சரி

IV. குறுகிய விடையளி :

Question 1.
ஒளியாண்டு என்றால் என்ன?
விடை:

  1. ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.
  2. ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 300000 கி.மீ ஆகும்.

Question 2.
பேரண்டத்தின் படிநிலைகள் யாவை?
விடை:

  1. பேரண்டம்
  2. விண்மீன்திரள் மண்டலம்.
  3. சூரியக் குடும்பம்.
  4. கோள்கள்
  5. துணைக்கோள்கள்.

Question 3.
சூரியக் குடும்பத்தில் எத்தனை கோள்கள் உள்ளன. அவை யாவை?
விடை:
சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. அவை

  1. புதன்
  2. வெள்ளி
  3. புவி
  4. செவ்வாய்
  5. வியாழன்
  6. சனி
  7. யுரேனஸ்
  8. நெப்டியூன் பருவம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
அ) ஈராக்
ஆ) சிந்துவெளி
இ) தமிழகம்
ஈ) தொண்டைமண்டலம்
விடை:
அ) ஈராக்

Question 2.
இவற்றுள் எது தமிழக நகரம்?
அ) ஈராக்
ஆ) ஹரப்பா
இ) மொகஞ்சதாரோ
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஈ) காஞ்சிபுரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 3.
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஆ) மதுரை

Question 4.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரிஆறு
இவற்றில் அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அ மற்றும் ஆ சரி
விடை:
ஈ) அ மற்றும் ஆசரி

Question 5.
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) சென்னை
விடை:
ஈ) சென்னை

Question 6.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) ஹரப்பா
விடை:
அ) மதுரை

II. கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும்
நடைபெற்றது. காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
அ) கூற்று சரி: காரணம் தவறு
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி.
இ) கூற்று தவறு: காரணம் சரி.
ஈ) கூற்று தவறு: காரணம் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
அ) ‘திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில்” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
இ) “நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்” என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஈ) அனைத்தும் சரி

Question 3.
சரியான தொடரைக் கண்டறிக
அ) நாளங்காடி என்பது இரவு நேர கடை.
ஆ) அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
இ) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
விடை:
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது

Question 4.
தவறான தொடரைக் கண்டறிக.
அ) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
இ) கோவலனும், கண்ண கியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
ஈ) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
இ) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்

Question 5.
சரியான இணையைக் கண்டறிக.
அ) கூடல் நகர் – பூம்புகார்
ஆ) தூங்கா நகரம் – ஹரப்பா
இ) கல்வி நகரம் – மதுரை
ஈ) கோயில் நகரம் – காஞ்சிபுரம்
விடை:
ஈ) கோயில் நகரம்- காஞ்சிபுரம்

Question 6.
தவறான இணையைக் கண்டறிக.
அ) வட மலை – தங்கம்
ஆ) மேற்கு மலை – சந்தனம்
இ) தென்கடல் – முத்து
ஈ) கீழ்கடல் – அகில்
விடை:
ஈ) கீழ்கடல் – அகில்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _______
விடை:
ராஜசிம்மன்

Question 2.
கோயில் நகரம் என அழைக்கப்படுவது _____
விடை:
காஞ்சி

Question 3.
மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ______
விடை:
பெருவணிகன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

IV. சரியா? தவறா?

1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.
விடை:
1. சரி
2. சரி
3. சரி
4. சரி

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
ஏற்றுமதி என்றால் என்ன?
விடை:
ஒரு நாடு தன்னிடம் உள்ள உபரிப் பொருள்களை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வது ஏற்றுமதியாகும்.

Question 2.
இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் மற்றும் சங்கப் பாட நூலைக் கூறு
விடை:
காப்பியம்: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
சங்கப்பாடநூல்: பட்டினப்பாலை

Question 3.
தொண்டைநாட்டின் தொன்மையான நகரம் எது?
விடை:
காஞ்சி

Question 4.
கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள ஏதேனும் ஒரு வேறுபாட்டைக் கூறு.
விடை:
கிராமத்தை விட நகரத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்.

Question 5.
லோத்தல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?
விடை:
சிந்து வெளி நாகரிகம்

Question 6.
உலகின் தொன்மையான நாகரிகம் எது?
விடை:
மெசபடோமிய நாகரிகம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

Question 1.
இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:
இந்தியாவில் பண்டைய நகரங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
ஜான்சி:

  • ஜான்சி நகரம் உத்திரப் பிரதேசத்தில் உள்ளது
  • இது ஜான்சி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்
  • இது உத்திரப் பிரதேசத்தின் அனைத்து நகரங்களோடும் சாலை மற்றும் இருப்புப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்நகரம் இந்திய அரசாங்கத்தினால் சிறந்த நகரங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்நகரம் ஜான்சிராணி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஜான்சி கோட்டை, அரசு .அருங்காட்சியகம், ராணிமஹால் ஆகியவை இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

பாடலிபுத்திரம்:

  • தற்போதைய பாட்னா நகரத்தை ஒட்டியுள்ளது.
  • மௌரியப் போரசு, நந்த போரசு போன்றவற்றின் தலைநகராக இந்நகரம் இருந்தது

தட்சசீலம்:

  • இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக இருந்தது.
  • தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது.
  • இது ஒரு கல்வி நகரம் ஆகும்.
  • உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று இங்கு இருந்தது.

லோத்தல்:

  • குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் கிளை நதியின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது.
  • இது பழங்கால இந்தியாவின் ஒரு முக்கிய வணிகமையம் ஆகும்.
  • இங்கு கப்பல் கட்டும் தளம் ஒன்று இருந்துள்ளது.
  • இது சிந்து வெளி மக்களின் கடல் கடந்த வணிகம் பற்றி எடுத்துக் காட்டுகிறது.

ஹரப்பா :

  • இந்நகரம் 1921 ஆம் ஆண்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஹரப்பா என்றால் இறந்தோர் மேடு என்று பொருள்.
  • சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுச்சின்னங்கள் இங்கு காணப்பட்டன.
  • இது ஒரு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் ஆகும்.
  • இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
தமிழகத்தின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பூம்புகார்
  • மதுரை
  • காஞ்சி
  • வஞ்சி
  • தொண்டி
  • உறையூர்
  • கரவூர்
  • மாமல்லபுரம்
  • தகடூர்
  • காயல்

Question 3.
தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை?
விடை:

  • சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பட்டினப்பாலை ஆகியவை பூம்புகாரைப் பற்றி அறிய உதவுகிறது.
  • கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்பு மற்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றில் மதுரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காளிதாசர், திருநாவுக்கரசர் ஆகியோர் தங்களது பாடல்களில் காஞ்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • மணிமேகலையிலும் காஞ்சியின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

Question 4.
மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • மதுரையை பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர்.
  • இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், அவர்களுக்குப் பின் நாயக்கர்களும் ஆட்சி செய்தனர்.

Question 5.
மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தூங்கா நகரம்
  • சங்கம் வளர்த்த நகரம்
  • கூடல் நகர்

Question 6.
நாளங்காடி, அல்லங்காடி-வேறுபடுத்துக.
விடை:

  • நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடி
  • அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.

Question 7.
காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?
விடை:

  • தர்மபாலர்
  • ஜோதிபாலர்
  • சுமதி
  • போதி தர்மர்

Question 8.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:

  • காஞ்சிபுரம் ஏரிகள் மாவட்டம் எனப்படுகிறது.
  • காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர்தேக்கி வைக்கப்பட்டிருந்தன. எனவே காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஈராக் – குறிப்பு தருக.
விடை:
தற்போதைய ஈராக் பழங்காலத்தில் மெசபடோமியா என்றழைக்கப்பட்டது. இப்பகுதிதான் சுமேரிய நாகரிகத்தின் பிறப்பிடம் ஆகும். இது யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் என்ற இரு நதிகளால் வளப்படுத்தப்படுகிறது. இது ஒரு முக்கிய வணிக மையமாகும். ஈராக்கிற்கும் பிற நாடுகளுக்குமிடையேயிருந்த வர்த்தகத் தொடர்பு பற்றி பட்டினப் பாலையில் கூறப்பட்டுள்ளது.

Question 2.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
விடை:

  • பூம்புகார் ஒரு துறைமுக நகரம்
  • பெருவணிகர்களும், பெருங்கடல் வணிகர்களும் நிறைந்த பகுதியாக பூம்புகார் விளங்கியது.
  • இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், ரோம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் இங்கு வந்தவண்ணம் இருந்தனர்.
  • வணிகத்தின் காரணமாக பலர் இந்நகரிலேயே தங்கியதால் இங்கு வெளிநாட்டவர் குடியிருப்புகள் தோன்றின.

Question 3.
காஞ்சியில் பிறந்த சான்றோர்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • கவிஞர் காளிதாசர் “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கூறுகிறார்.
  • திருநாவுக்கரசர், “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று கூறுகிறார்.
  • சீன வரலாற்றாசிரியரான யுவான்சுவாங் புத்தகயா, காஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்று கூறுகிறார்.

Question 4.
கோயில் நகரம் – குறிப்பு தருக.
விடை:

  • காஞ்சியிலுள்ள கைலாச நாதர் கோயில் புகழ் பெற்றது.
  • பல்லவர்கள் காலத்தில் ஏராளமான குடைவரைக் கோயில்களும் காஞ்சியில் கட்டப்பட்டுள்ளன. எனவே காஞ்சி கோயில் நகரம் எனப்படுகிறது.

Question 5.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதென்பதை நிரூபி.
விடை:

  • காஞ்சியில் ஏராளமான பள்ளிகளும், புத்த விகாரங்களும் இருந்தன.
  • சீன வரலாற்று ஆசிரியரான யுவான் சுவாங் காஞ்சியிலுள்ள கடிகைக்கு கல்வி கற்பதற்காக வந்தார்.
  • திருநாவுக்கரசர் காஞ்சியை கல்வியில் கரையில்லாத காஞ்சி என்று புகழ்ந்துள்ளார்.

VIII . மாணவர் செயல்பாடுகள்

1. கீழடி அகழாய்வுகள் குறித்த ஆல்பம் தயாரிக்கவும்.
2. பண்டைய தமிழகத்தின் வணிக சிறப்புமிக்க நகரம் பூம்புகார்….. கலந்துரையாடு.
3. பல்லவர்கள் காலக்கோயில்கள் பற்றிய புகைப்படங்களை சேகரி.
4. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகள் பற்றி ஒரு சிறு நூலினைத் தயாரிக்கவும்.
5. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நகரங்கள் குறித்து ஒரு சிறு நூலைத் தயாரிக்கவும்.
6. நூலகத்திற்குச் சென்று, உன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களைக் கண்டுபிடி.

IX. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95.2

X. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)
நீ வாழும் பகுதியின் முக்கியத்துவத்தைக் காட்டும் கையேடு ஒன்றினைத் தயாரி.

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்
அ) எகிப்திய நாகரிகம்
ஆ) சீன நாகரிகம்
இ) சிந்து வெளி நாகரிகம்
ஈ) மெசபடோமியா நாகரிகம்
விடை:
ஈ) மெசபடோமியா நாகரிகம்

Question 2.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
அ) உருத்திரங்கண்ண னார்
ஆ) சேக்கிழார்
இ) நக்கீரர்
ஈ) ஜெயங் கொண்டார்
விடை:
அ) உருத்திரங்கண்ணனார்

Question 3.
கைலாச நாதர் கோயிலைக்கட்டியவர்
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்மவர்மன்
இ) ராஜ சிம்மன்
ஈ) அபராஜிதர்
விடை:
இ) ராஜ சிம்மன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 4.
பின் வருவனவற்றுள் எது ஒரு கல்வி நகரம்?
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) காஞ்சி
ஈ) தஞ்சாவூர்
விடை:
இ) காஞ்சி

Question 5.
புகார் இவர்களின் துறைமுகம்
அ) சேர அரசு
ஆ) சோழ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) களப்பிரர்கள்
விடை:
ஆ) சோழ அரசு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பெருங்கடல் வணிகர் ______ என்று அழைக்கப்பட்டனர்.
விடை:
மாநாய்கன்

Question 2.
சாணக்கியர் என்பவர் சந்திர குப்தரின் _____ ஆவார்
விடை:
அமைச்சர்

Question 3.
பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தை _____ யில் கழித்தார்.
விடை:
காஞ்சி

III. சரியா, தவறா?

Question 1.
சிலப்பதிகாரத்தின் நாயகி மணிமேகலை ஆவார்.
விடை:
தவறு

Question 2.
தற்போதைய தஞ்சாவூர் முற்காலத்தில் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
விடை:
தவறு

Question 3.
பூம்புகார் சோழ அரசின் துறைமுகம்.
விடை:
சரி

Question 4.
சிலப்பதிகாரம் பூம்புகாரின் சிறப்பைக் கூறுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 5.
பல்லவர்கள் காலத்தில் பல குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன.
விடை:
சரி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பூம்புகார் நகர் மற்ற நகரங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது?
விடை:

  • பூம்புகாரில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி குடியிருப்பு இருந்தது.
  • நீண்ட, நேரான தெருக்களைக் கொண்டிருந்தது.
  • இங்கு கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்தது.

Question 2.
ஏரிகளின் மாவட்டம் எது? ஏன்?
விடை:
காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது. ஏனெனில் காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த ஏரிகள் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்தன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

6th Social Science Guide சிந்து வெளி நாகரிகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
2. செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
3. செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி.
4. செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
விடை:
1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

Question 2.
சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது?
1. பழைய கற்காலம்
2. இடைக்கற்காலம்
3. புதிய கற்காலம்
4. உலோக காலம்
விடை:
4. உலோக காலம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 3.
ஆற்றங்கரைகள் நாகரிகத்தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
1. மண் மிகவும் வளமானதால்
2. சீரான கால நிலை நிலவுவதால்
3. போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
4. பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
விடை:
4. பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

II. கூற்றைக்காரணத்தோடு பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று – ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். காரணம் – திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறு, காரணம் சரி.
3. கூற்று சரி, காரணம் தவறு.
4. கூற்றும் காரணமும் தவறு.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி

Question 2.
கூற்று – ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது: காரணம் – ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறானது, காரணம் சரி.
3. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
4. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி

Question 3.
கூற்று – ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது
காரணம் – கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறானது, காரணம் சரியானது.
3. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
4. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 4.
கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவைப் பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
1. தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை
2. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
3. கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
4. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
விடை:
2 மற்றும் 4. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.

Question 5.
கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.
1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான – தன்மை.
2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
4. மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை? 1. 1 &2 2. 1&3 .3.2 &3 4. அனைத்தும் சரி
விடை:
4. அனைத்தும் சரி

Question 6.
பொருந்தாததை வட்டமிடு.
காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 50
விடை:
குதிரைகள்

Question 7.
தவறான இணையைத் தேர்ந்தெடு
1. ASI – ஜான் மார்ஷல்
2. கோட்டை – தானியக் களஞ்சியம்
3. லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
விடை:
4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

III. கோடிட்ட இடத்தை நிரப்புக:

Question 1.
______ மிகப் பழமையான நாகரிகம்.
விடை:
மெசபடோமியா நாகரிகம்

Question 2.
இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ______ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
விடை:
அலெக்ஸாண்டர் கன்னிங்காம்

Question 3.
______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
விடை:
தானியக்களஞ்சியம்

Question 4.
மக்கள் குழுக்களாகச் சேர்ந்து _____ யை உருவாக்குகிறார்கள்.
விடை:
சமுதாயத்தை

IV. சரியா? தவறா?

Question 1.
மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 2.
இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.
விடை:
சரி

Question 3.
தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Question 4.
முதல் எழுத்து வடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 85

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உலோகங்களின் பயன்களைக் கூறு.
விடை:

  • தங்கம், வெள்ளி ஆகியவை ஆபரணங்கள் செய்ய பயன்பட்டன
  • செம்பு, வெண்கலத்தால் ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்கள் செய்யப்பட்டன.
  • சிலைகள் செய்வதற்கு வெண்கலம் பயன்பட்டது. (உ-ம்) வெண்கலத்தால் ஆன நடன மாது சிலை

Question 2.
நாம் உண்ணும் உணவில் வேக வைத்த உணவு, பச்சையான உணவு என ஒரு பட்டியலை உருவாக்கு.
விடை:
வேகவைத்த உணவு: அரிசி, கோதுமை, காய்கள், கீரைவகைகள், கிழங்குகள், இறைச்சி ஆகியவை
பச்சையான உணவு: பழங்கள், காய்கள் மற்றும் கொட்டைகள்

Question 3.
மிருகங்களையும் மரங்களையும் வழிபடும் பழக்கம் நம்மிடையே உள்ளதா?
விடை:
ஆம். சில மதத்தினர் மிருகங்களையும் மரங்களையும் வழிபடுகின்றனர்.

Question 4.
ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்கள். ஏன்?
விடை:

  • ஆற்றங்கரைகளில் வளமானமண் அமைந்திருந்தது
  • ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டது.
  • ஆறுகள் போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன. எனவே மக்கள் ஆற்றங்கரைகளில் குடியேறினர். அப்பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. ஆகவே ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்கள் எனப்பட்டன.

Question 5.
ஒரு பொம்மை நகர்வதாலேயே அதை நவீன கால பொம்மைகள் என்று பொருள் கொள்ள முடியாது. சிந்து வெளி மக்கள் பொம்மைகளில் பேட்டரிக்கு (மின் கலம்) மாற்றாக எதைப் பயன்படுத்தினர்?
விடை:
அவர்கள் சக்கரத்தைப் பயன்படுத்தினர்.

Question 6.
நீ ஒரு தொல் பொருள் ஆய்வாளர் எனில் என்ன செய்வாய்?
விடை:
எனது மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூருக்குச் சென்று, அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்வேன்.

Question 7.
இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இரு பகுதிகளைக் கூறு.
விடை:
கலிபங்கன், லோத்தல்

Question 8.
சிந்து வெளி நாகரிகத்தின் கூறுகளில் உன்னைக் கவர்ந்தது எது? ஏன்
விடை:

  • சிந்துவெளி நாகரிகத்தின் கூறுகளில் கழிவு நீர் அமைப்பு என்னைக் கவர்ந்தது.
  • மூடப்பட்ட கழிவுநீர்வடிகால் அமைப்பு. அது செங்கலாலும், கல்தட்டைகளாலும் மூடப் பட்டிருந்தது. அன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்றும் சில நவீன நகரங்களில் மூடப்பட்டவடிகால் அமைப்பு இல்லை.
  • கழிவு நீர்ப் பொருட்களை அப்புறப்படுத்த துளைகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • திடக்கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக் கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.

Question 9.
தற்காலத்தில் பொருட்களின் நிறையை அளக்க என்ன கருவி பயன்படுத்தப்படுகிறது?
விடை:
மின் எடைத் தராசு.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
புதைந்த கட்டிடங்களைக் கண்டுபிடிக்க தற்போது எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது?
விடை:

  • அகழ்வாராய்ச்சியாளர்கள் செங்கற்கற்கள், கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை பயன்படுத்தப்பட்ட காலத்தை அறிந்து கொள்கிறார்கள்.
  • பண்டைய இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • வான் வழி புகைப்படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பைக் கண்டறிந்து கொள்கிறார்கள்.
  • நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை (Magnetic scanner) பயன்படுத்துகின்றனர்.
  • எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் தொலை நுண்ணுணர்வு முறை மூலம் கண்டறிகின்றனர்.

Question 2.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:
மக்கள் வெண்கலத்திலான பொருட்களைப் பயன்படுத்தினர். எனவே இது வெண்கல கால நாகரிகம் எனப்படுகிறது.

Question 3.
சிந்து வெளிநாகரிகம் ஒரு நகர நாகரிகம் காரணம் கூறுக.
விடை:

  • சிறப்பான நகரத்திட்டமிடல்
  • சிறப்பான கட்டடக் கலை வேலைப்பாடு
  • தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை.
  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
  • விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம்.

Question 4.
கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.
விடை:

  • மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு. இது செங்கலாலும் கல் தட்டைகளாலும் மூடப் பட்டிருந்தது
  • வடிகால் மென்சரிவைக் கொண்டிருந்தது.
  • கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சரியான இடைவெளியில் துளைகள் இருந்தன.
  • ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவுநீரை மட்டும் வெளியேற்றின.

Question 5.
பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறுக.
விடை:

  • பெருங்குளம் நன்கு அகன்று செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும்.
  • இது நீர் கசியாத கட்டுமானத்திற்கான மிகப்பழமையான சான்று ஆகும்.
  • குளத்தின் சுவர்கள் செங்கலால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக இயற்கைத்தார் பூசப்பட்டிருந்தது.
  • குளத்தின் இருபுறத்திலும் படிக்கட்டுகள் அமைந்திருந்தன.
  • குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் இருந்தன.
  • உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேற வகை செய்யப்பட்டிருந்தது.

Question 6.
சிந்து வெளி மக்கள் வெளிநாட்டினருடன் வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து கொள்கிறாய்?
விடை:

  • மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற முத்திரைகள் சிந்து வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இது இரு பகுதிகளுக்கிடையே நடந்த வணிகத்தைக் காட்டுகிறது.
  • சுமேரியாவின் அக்கடியப் பேரரசின் அரசன் நாராம்-சின் சிந்து வெளிப்பகுதியிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாக எழுதியுள்ளார்.
  • குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல்கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது அவர்களின் கடல் வணிகத்தை உறுதிப் படுத்துகிறது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கீழே கொடுக்கப்படுள்ளவற்றை சிந்து வெளியின் சிறப்பம்சங்களைக் கவனித்து தற்காலத்துடன் ஒப்பிடு
1. விளக்குக் கம்பங்கள்
2. சுட்ட செங்கற்கள்
3. நிலத்தடி வடிகால் அமைப்பு
4. எடைகள் மற்றும் அளவீடு
5. கப்பல் கட்டும் தளம்
விடை:
1. விளக்குக் கம்பங்கள்:
சிந்து வெளிப்பகுதியின் விளக்குக் கம்பங்கள் ஒரு சிறப்பம்சம் ஆகும். அக்காலத்தில் கல்லாலான விளக்குக் கம்பங்கள் இருந்தன. தற்போது இரும்பு மற்றும் சிமிண்டு விளக்குத் தூண்கள் உள்ளன.

2. சுட்ட செங்கல்கள்:

  • சிந்து வெளிப் பகுதியில் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. ஏனெனில் சுட்ட செங்கற்கள் வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை, நெருப்பைக் கூட தாங்குபவை. மேலும் அவை நீரில் கரைவதில்லை
  • தற்காலத்திலும் கட்டடங்கள் சுட்ட செங்கலால் கட்டப்படுகின்றன.

3. நிலத்தடி வடிகால் அமைப்பு:

  • சிந்துவெளிப்பகுதியில் மூடப்பட்ட நிலத்தடி வடிகால் அமைப்பு இருந்தது. அது செங்கற்கலாலும் கல்தட்டைகளாலும் மூடப்பட்டிருந்தது. கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சரியான இடைவெளியில் துளைகள் இருந்தன.
  • தற்காலத்தில் கூட சில நகரங்களில் மூடப்பட்ட நிலத்தடி வடிகால் அமைப்பு இல்லை . தற்போதுதான் சில நகரங்களில் இம்முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது.

4. எடைகள் மற்றும் அளவீடு:

  • சிந்து வெளிநாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளைப் ‘ பயன்படுத்தினர். அளவு கோல்களையும் பயன்படுத்தினர்
  • தற்காலத்தில் நாம் பல்வேறு விதமான மின் அளவீடுகளைப் பயன்படுத்துகிறோம்

5. கப்பல் கட்டும் தளம்:

  • குஜராத்திலுள்ள லோத்தல் என்ற இடத்தில் ஒரு கப்பல்கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் கடல் வணிகத்தை உறுதிப்படுத்துகிறது.
  • தற்போது அநேகமாக அனைத்து பெரிய துறைமுகங்களிலும் கப்பல் கட்டும் மற்றும் பழுது நீக்கும் வசதிகள் உள்ளன.
    எ.கா: மும்பையிலுள்ள மேசகவான் கப்பல்கட்டும்தளம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 2.
வேளாண்மை சிந்துவெளி மக்களின் தொழில்களுள் ஒன்று – எவ்வாறு நிரூபிப்பாய்?
(கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து)
விடை:

  • சிந்து வெளி மக்களின் தொழில்களில் ஒன்று வேளாண்மை. அவர்கள் கோதுமை, பார்லி, திணைவகைகள், எள் மற்றும் பயறு வகைகளைப் பயிரிட்டனர்.
  • தானியங்களை சேகரிக்க தானியக்களஞ்சியங்கள் கட்டப்பட்டன.
  • எடுத்துக்காட்டாக ஹரியானா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக் களஞ்சியத்தைக் கூறலாம்.
  • மேலும் கலப்பைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • எனவே சிந்து வெளி மக்கள் வேளாண்மைத் தொழில் செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

Question 3.
மட்பாண்டங்களும் அதன் உடைந்த துண்டுகளும் சிந்துவெளிப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நீ அறிவது என்ன?
விடை:

  • அவர்கள் மட்பாண்டங்கள் செய்யக் கற்றிருந்தனர் என்பது தெரிகிறது.
  • உடைந்த பானைத்துண்டுகளிலிருந்த விலங்குகளின் உருவங்கள், அவர்கள் விலங்குகளை வளர்த்தனர் என்பதைக் காட்டுகிறது.
  • பானைத் துண்டுகளிலுள்ள சித்திரங்கள் அவர்களது ஓவியம் மற்றும் வண்ண வேலைப் பாடுகளிலிருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது
  • அவர்கள் உணவுகளை சமைத்து உண்டனர் என்பதும் தெளிவாகிறது.

Question 4.
லோத்தல் ஒரு கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீ அறிவது என்ன ?
விடை:
லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் அவர்கள் கடல் வணிகத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

Question 5.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்குக் காரணம் என்ன?
விடை:
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்குக் காரணங்கள் பின்வருமாறு.

  • அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
  • சுற்றுச்சூழல் மாற்றம்
  • படையெடுப்பு
  • இயற்கைச் சீற்றங்கள்
  • காலநிலை மாற்றம்
  • காடுகள் அழிதல்
  • தொற்று நோய்த் தாக்குதல்

IX. மாணவர் செயல்பாடு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 96
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 96.1

1. ஒரு குறிப்புப் புத்தகம் தயாரி. (மொஹஞ்ச- தாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய செய்திகள்)
2. சிந்துவெளி நாகரிகம் ஒரு பகுதியாக விளங்கிய இடத்தில் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராக உன்னை நினைத்துக் கொள். நீ எதையெல்லாம் சேகரிப்பாய்?
3. தகவல் அட்டை தயாரி. (சதுர அட்டைகளை எடுத்துக் கொள். அதில் சில அட்டைகளில் படங்களை ஒட்டு. சில அட்டைகளில் அதற்கான தகவல்களை எழுது. மாணவர்களிடம் இந்த அட்டைகளைக் கொடுத்துப் பொருத்தச் செய்).
4. கற்பனையாக ஒரு மாதிரி நகர அமைப்பை வரைந்து பார்.
5. சிந்துவெளி நாகரிகத்தின் ஏதாவது ஓர் அமைப்பை களிமண், வளையல் துண்டுகள், தீக்குச்சிகள், கம்பளி நூல் மற்றும் ஐஸ்கிரிம் குச்சிகள் கொண்டு வடிவமைத்தல்.
6. விளையாட்டு பொம்மைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாறியுள்ளன என்று உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
களிமண் → கல் → மரம் → உலோகம் → பிளாஸ்டிக் → பர் (fur) → விலங்குகளின்
உரோமம் → மின்சாரம் → மின்னணு???

7. குறுக்கெழுத்து

இடமிருந்து வலம்
(4) ஒவ்வொரு வீட்டிலும் _____ இருந்தது.
(5) இது _____ கால நாகரிகம்.
(10) தானியங்களை சேகரித்து வைக்கப் பயன்பட்டது.

வலமிருந்து இடம்
(2) மொஹஞ்ச-தாரோவைவிட பழமையானது
(6) இது நீர் கசியாமல் இருக்கப் பூசப்பட்டது.
(7) இது தான் தொல்பொருள் ஆய்விற்கு பொறுப்பு வகிக்கிறது.

மேலிருந்து கீழ்
(1) கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
(3) இந்தியத் தொல்பொருள் ஆய்வியல் துறையின் இயக்குநராக இருந்தவர்.

கீழிருந்து மேல்
(8) சிந்துவெளி மக்களுக்கு இதன் பயன் தெரியாது.

வினாடி – வினா

Question 1.
சிந்துவெளி மக்கள் ஆடை தயாரிக்க எதைப் பயன்படுத்தினார்கள்?
விடை:
பருத்தி

Question 2.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிக நகரம் எது?
விடை:
ஹரப்பா

Question 3.
சிந்துவெளி நாகரிகம் எங்கு இருந்தது?
விடை:
சிந்து நதிச் சமவெளியில்

Question 4.
எந்த விலங்கு வண்டி இழுக்கப் பயன்பட்டது?
விடை:
எருது

Question 5.
சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகம் தெரியாது?
விடை:
இரும்பு

Question 6.
பானை செய்வதற்கு எதைப் பயன்படுத்தினர்?
விடை:
சக்கரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 7.
உலகின் நான்கு பழம்பெரும் நாகரிகங்களில் மிகப் பழமையானது எது?
விடை:
மெசபடோமியா நாகரிகம்

X. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

1. களிமண்ணைக் கொண்டு ஒரு விலங்கு அல்லது பானை செய்யுங்கள்.
2. நகரும் கைகால்களைக் கொண்ட களிமண் பொம்மைகளைச் செய்யுங்கள்.
3. பானையில் ஓவியம் தீட்டு (வடிவியல் படங்களுடன் கூடிய முறையில்)
4. தகவல் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப் பதாகைகள் செய்தல்.

XII. கட்டத்தில் பதிலளி:-

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 98

6th Social Science Guide சிந்து வெளி நாகரிகம் Additional Important Questions and Answers

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

Question 1.
இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்.
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) புது டெல்லி
விடை:
ஈ) புது டெல்லி

Question 2.
கூட்ட அரங்கு அமைந்துள்ள இடம்
அ) ஹரப்பா
ஆ) மொஹஞ்ச தாரோ
ஈ) லோத்தல்
ஈ) கலிபங்கன்
விடை:
ஆ) மொஹஞ்ச தாரோ

Question 3.
நாகரிகம் என்ற இலத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ்’ என்பதன் பொருள்
அ) நகரம்
ஆ) கிராமம்
இ) மக்கள்
ஈ) ஆட்சி செய்
விடை:
அ) நகரம்

Question 4.
மனிதர்களால் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உயோகப்படுத்தப்பட்ட உலோகம்.
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) வெண்கலம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) செம்பு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

II. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக்க.

Question 1.
கீழ்க்காணும் கூற்றுக்களில் எது சரியானது?
அ) மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு.
ஆ) சிந்து வெளிமக்கள் வண்டிகளை இழுக்க குதிரைகளைப் பயன்படுத்தினார்கள்
இ) மொஹஞ்சதாரோ ஹரப்பாவை விட பழமையானது.
ஈ) ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரிகம்.
விடை:
அ) மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு.

Question 2.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. சிந்து வெளி தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன
2. அங்கு அரண்மனைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
3. அங்கு வழிபாட்டுத்தலங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை
அ) 1 & 2
ஆ) 1 & 3
இ) 2 & 3
ஈ) அனைத்தும் சரி
விடை:
அ) 1 & 2

Question 3.
பொருந்தாததை வட்டமிடுக. ஹரப்பா, மொஹஞ்சதாரோ, லோத்தல், கலிபங்கன், லாகூர்
விடை:
(லாசர்)

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
1924 இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநராக இருந்தவர் _____
விடை:
ஜான் மார்ஷல்

Question 2.
இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு ______
விடை:
1861

Question 3.
முதல் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர்கள் _____
விடை:
சுமேரியர்கள்

Question 4.
கிசே பிரமிடைக் கட்டிய மன்னர் _____
விடை:
குஃபு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 5.
தானியக் களஞ்சியம் _____ சேகரித்து வைப்பதற்காகப் பயன்பட்டது.
விடை:
தானியங்களை

IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
மக்கள் ஏன் நதிக்கரைகளில் குடியேறினர்?
விடை:

  • மக்கள் நதிக்கரைகளில் குடியேறக் காரணங்கள் பின் வருமாறு
  • வளமான மண்
  • ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டது.
  • ஆறுகள் போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன.

Question 2.
கட்டடங்கள் கட்டுவதற்கு ஏன் சுட்ட செங்கற்கள் பயன்படுத்தபட்டன?
விடை:

  • ஏனென்றால் அவை வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை.
  • நெருப்பைக் கூடத் தாங்கக் கூடியவை.
  • மேலும் அவை நீரில் கரைவதில்லை.

Question 3.
சிந்து வெளி மக்களின் தொழில்கள் பற்றி எழுது.
விடை:

  • வேளாண்மை, கை வினைப் பொருட்கள் செய்தல் போன்ற தொழில்களை செய்தனர்.
  • அங்கு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களும் இருந்தனர்.
  • கால்நடைகளை வளர்த்தனர்.

Question 4.
பானை வனைதல் பற்றி சிலவரிகள் எழுதுக.
விடை:

  • பானைகள் செய்ய சக்கரத்தைப் பயன்படுத்தினர்.
  • அவை தீயிலிட்டு சுடப்பட்டன
  • அவற்றிற்கு வர்ணங்கள் தீட்டினர்.
  • அவற்றில் விலங்குகளின் உருவங்களை வரைந்தனர்.

மனவரை படம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

6th Social Science Guide மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
பரிணாமத்தின் வழிமுறை _____
அ) நேரடியானது
ஆ) மறைமுகமானது
இ) படிப்படியானது
ஈ) விரைவானது
விடை:
இ) படிப்படியானது

Question 2.
தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது.
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை:
ஆ) ஆப்பிரிக்கா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
அ) கூற்று சரி.
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
இ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது

III. சரியான இணையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 80
விடை:
இ) ஹோமோ எரக்டஸ் – சிந்திக்கும் மனிதன்

IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

Question 1.
தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _____ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள். விடை:
மானுடவியல் ஆய்வாளர்கள்

Question 2.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _____ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை:
நாடோடி

Question 3.
பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _____ மற்றும் _____ ஆகும்.
விடை:
வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்

Question 4.
_______ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
விடை:
கலப்பை

Question 5.
பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
விடை:
கரிக்கையூர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

V. சரியா, தவறா?

Question 1.
நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
விடை:
தவறு

Question 2.
ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
விடை:
சரி

Question 3.
மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
விடை:
சரி

Question 4.
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
விடை:
தவறு

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

Question 1.
அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
விடை:
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு முறை

Question 2.
தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள் ?
விடை:
அவர்கள் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள், மரங்களின் கிளைகள், இலைகள் ஆகியவற்றை அணிந்தார்கள்.

Question 3.
தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
விடை:
அவர்கள் மரம், குகை மற்றும் மலையடிவாரத்தில் வாழ்ந்தார்கள்.

Question 4.
நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
விடை:
எருது

Question 5.
மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
விடை:

  • விவசாயம் செயல்பாட்டுக்கு வந்த பின் மக்கள் விலங்குகளைப் பழக்கி, அவற்றையும் விவசாயத்தில் ஈடுபடுத்தினர்.
  • வேட்டையாடி வாழ்க்கை நடத்தியதை விட இந்த வாழ்க்கை எளிதாக இருந்தது. விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படிச் செய்தது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பரிணாமம் என்றால் என்ன?
விடை:
மனித இனம் மாற்றங்களை அடைந்து, ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி பெறும் வழிமுறையைப் பரிணாமம் என்கிறோம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 2.
ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுதுக.
விடை:

  • அவர்கள் சுயமாக சிந்திக்கும் தன்மை பெற்றிருந்தனர்.
  • மனிதனைப் போன்ற தோற்றம் உடையவர்கள்
  • கரடு முரடான கருவிகளைப் பயன்படுத்தினர்
  • வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தனர்.

Question 3.
மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
விடை:

  • அவர்கள் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்தனர்.
  • நிலத்தில் விவசாயம் செய்து வந்த அவர்கள், அந்த நிலத்தின் மண்வளம் குன்றி விட்டால் வேறொரு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.

Question 4.
பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
விடை:

  • வேட்டையாடுதல் பழங்கால மக்களின் முக்கியத் தொழிலாகும்.
  • கல்லாலும், எலும்பாலும் செய்த கருவிகளைப் பயன்படுத்தினார்கள்
  • கூர்மையான கருவிகளைப் பயன் படுத்தினார்கள்
  • பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி போன்ற விலங்குகளை வேட்டையாடினர்.

Question 5.
கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
விடை:
மரம் வெட்டவும், மரக்கிளைகளை நீக்கவும், குழிதோண்டவும், விலங்குகளின் தோலை உரிக்கவும் கோடரிகள் உருவாக்கப்பட்டன.

Question 6.
தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
விடை:
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 7.
மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன ?
விடை:

  • மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றிப் படிப்பது மானுடவியல் ஆகும்.
  • மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தை களிலிருந்து பெறப்பட்டது. anthrops என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ண ங்கள் அல்லது காரணம்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

Question 1.
பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
விடை:

  • சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
  • மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்தபோது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பழங்கால மக்கள் பெற்றிருக்கலாம்.
  • சக்கரத்தின் உதவியால் பானை செய்யக் கற்றுக் கொண்டனர்.
  • சக்கரத்தின் உதவியினால் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றனர்.
  • நவீன இயந்திரங்களில் சக்கரம் இல்லாத இயந்திரங்களே இல்லை எனலாம்.
  • இவ்வாறு சக்கரம் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

IX. மாணவர் செயல்பாடு

1. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மனிதர்களின் படங்கள் அடங்கிய ஒரு படத்தொகுப்பைத் தயார் செய்.

X. வாழ்க்கைத் திறன்

1. களிமண் பானைகள் மற்றும் கருவிகளைச் செய்துபார்.
2. விதவிதமான பொம்மை வண்டிகளைச் சேகரி. அவற்றில் செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களில் சக்கரத்தைப் பொருத்தி, வண்டிகள் எப்படி நகர்கின்றன என்று சோதனை செய்து பார்.

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 91

6th Social Science Guide மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Additional Important Questions and Answers

I. கூற்று: க்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று: தொடக்ககால மனிதர்கள் வேட்டையாட துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள்.
காரணம்: ஒரு குச்சி அல்லது கல்லால் பெரிய விலங்கினைக் கொல்வது கடினமாக இருந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை:
இ) கூற்று தவறு, காரணம் சரி

II. சரியான இணையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 96
விடை:
ஈ) குரோ மக்னான்ஸ் – சீனா

III. சரியா, தவறா?

Question 1.
நியாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தனர்.
விடை:
சரி

Question 2.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வண்டிகளை இழுக்க மக்கள் குதிரைகளைப் பயன் படுத்தினர்.
விடை:
தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 3.
ஹோமோ சேபியன்ஸ் சுயமாக சிந்திக்கும் மனிதர்கள்.
விடை:
சரி

Question 4.
சிக்கிமுக்கிக் கல் அவர்களுக்கு எளிதாகக் கிடைத்தது.
விடை:
தவறு

Question 5.
வரலாற்றுக்கு முந்தைய மக்கள் இரும்பிலான நாணயங்களைப் பயன்படுத்தினர்
விடை:
தவறு

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
1850 ஆம் ஆண்டில் மக்களின் போக்குவரத்து முறை எவ்வாறு இருந்தது?
விடை:

  • பேருந்துகளோ, மிதிவண்டிகளோ காணப்படவில்லை
  • மாடுகள் அல்லது கோவேறி கழுதைகள் பூட்டப்பட்ட வண்டிகளைப் பயன்படுத்தினர்.
  • குதிரை வண்டிகள் அரிதாகவே காணப்பட்டன.

Question 2.
பண்ட மாற்று முறை என்றால் என்ன?
விடை:
பழங்கால மக்கள் தேவைக்கு அதிகமாக தங்களிடம் இருந்த தானியங்களை, பிற குழுக்களிடம் பரிமாற்றம் செய்து தங்களுக்குத் தேவையானவற்றைப்பெற்றுக் கொண்டார்கள். இது பண்டமாற்று முறை எனப்பட்டது.

Question 4.
பழங்கால மனிதர்களின் வாழ்வில் நெருப்பு இன்றியமையாத இடத்தைப் பிடித்தது எவ்வாறு?
விடை:
நெருப்பு இவர்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், சமைக்கவும், இரவில் ஒளியை உருவாக்கவும் பயன்பட்டது. இவ்வாறு அவர்களின் வாழ்வில் நெருப்பு இன்றியமையாத இடத்தைப் பிடித்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 97

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
அ) விஜயாலயன்
ஆ) முதலாம் ராஜராஜன்
இ) முதலாம் ராஜேந்திரன்
ஈ) அதிராஜேந்திரன்
விடை:
அ) விஜயாலயன்

Question 2.
கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
அ) கடுங்கோன்
ஆ) வீரபாண்டியன்
இ) கூன்பாண்டியன்
ஈ) வரகுணன்
விடை:
அ) கடுங்கோன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
அ) மண்ட லம்
ந ஆ) நாடு
இ) கூற்றம்
ஈ) ஊர்
விடை:
ஈ) ஊர்

Question 4.
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) வீர ராஜேந்திரன்
ஆ) ராஜாதிராஜா
இ) ஆதி ராஜேந்திரன்
ஈ) இரண்டாம் ராஜாதிராஜா
விடை:
இ) ஆதி ராஜேந்திரன்

Question 5.
சோழர்களின் கட்டக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
அ) கண்ணாயிரம்
ஆ) உறையூர்
இ) காஞ்சிபுரம்
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஈ) தஞ்சாவூர்

Question 6.
கீழக்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
அ) சோழமண்டலம்
ஆ) பாண்டிய நாடு
இ) கொங்குப்பகுதி
ஈ) மலைநாடு
விடை:
ஆ) பாண்டிய நாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
_______________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2.
_______________ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Question 3.
_____________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை:
ஐடில பராந்தக நெடுஞ்சடையன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________ என அறியப்பட்டது.
விடை:
எழுத்து மண்டபம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 3

IV. சரியா? தவறா?

Question 1.
டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.
விடை:
சரி

Question 2.
‘கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.
விடை:
சரி

Question 3.
சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
தவறு – காவிரியின் கழிமுகப் பகுதி

Question 4.
முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
விடை:
சரி

Question 5.
சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க

பொருத்தமான விடையை (✓ டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்

அ) i), ii) மற்றும் iii)
ஆ) ii), iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) i), iii) மற்றும் iv)
விடை:
இ) i), ii) மற்றும் iv)

Question 2.
ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

அ) i) மற்றும் ii)
ஆ) iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 3.
கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம் : நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
1. நாடு
2. மண்ட லம்
3. ஊர்
4. கூற்றம்
விடை:
1. மண்டலம்
2. நாடு
3. கூற்றம்
4. ஊர்

Question 5.
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
1) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
2) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
3) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
4) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன்.
5) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
6) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை:
4, 1, 2, 5, 6, 3

Question 6.
கண்டுபிடிக்கவும்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 4
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 5

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
விடை:

  • சந்தனக் கட்டை
  • கருங்காலிக் கட்டை
  • சுவையூட்டும் பொருட்கள்
  • விலையுயர்ந்த ஆபரணக் கற்கள்
  • மிளகு
  • எண்ணெய்
  • நெல்
  • தானியங்கள்
  • உப்பு

Question 2.
‘சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
விடை:
பாண்டிய அரசர்களும், உள்ளூர் தலைவர்களும் பிராமணர்கள் குடியிருப்புகளை உருவாக்கினர். அக்குடியிருப்புகள் சதுர்வேதி மங்கலம்’ என அழைக்கப்பட்டன.

Question 3.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
விடை:

  • சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
  • மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
  • இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூலிக்கப்பட்டது.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

Question 1.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
விடை:

  • சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்ற சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு மிகச் சிறந்த அம்சமாகும்.
  • சோழ மன்னர்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பல வாய்க்கால்களை வெட்டினர்.
  • அவர்கள் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டினர்.
  • நடனம், இசை, நாடகம், கட்டக்கலை மற்றும் ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
  • சோழப் பேரரசர்கள் கல்விப்பணிக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். பல கல்லூரிகளை நிறுவினர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
‘சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ – இக்கூற்றை உறுதி செய்க.
விடை:

  • சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
  • முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார். அங்கு 14 ஆசிரியர்கள் மற்றும் 340 மாணவர்கள் இருந்தனர்.
  • அங்கு வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
  • திருபுவனை, திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன
  • பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணமும் சோழர் காலத்தவையேயாகும்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

நான் யார்?
1. மாலிக்கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு நானே பொறுப்பு.
2. நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன்.
3. நான் நீர் விநியோகம் செய்வதற்காகக் கட்டப்பட்டவன்.
4. நான் திருமுறையைத் தொகுத்தேன்.
5. நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம். மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 6

X. கட்டக வினாக்கள்

Question 1.
சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களை எழுதுக.
விடை:
கொற்கை

Question 2.
முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?
விடை:
பெரிய புராணம், கம்பராமாயணம்

Question 3.
காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன?
விடை:
தங்க நாணயங்கள்

Question 4.
காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை:
தூத்துக்குடி

Question 5.
முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்?
விடை:
இரண்டாம் ராஜ சிம்மன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 6.
புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது?
விடை:
மதுரை

XI. களப்பயணம் (மாணவர்களுக்கானது)

Question 1.
சோழர்கள் அல்லது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று அதன் உன்னதத்தைப் பார்க்கவும்.

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.
அ) அரிகேசரி
ஆ) முதலாம் பராந்தகர்
இ) விஜயாலயர்
ஈ) இரண்டாம் ராஜசிம்மர்
விடை:
அ) அரிகேசரி

Question 2.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
அ) புத்த சமயம்
ஆ) சமணமதம்
இ) சைவ சமயம்
ஈ) வைஷ்ணவம்
விடை:
இ) சைவ சமயம்

Question 3.
பாண்டியர்களின் தலைநகர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஆ) மதுரை

Question 4.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
அ) மார்க்கோபோலோ
ஆ) மெகஸ்தனிஸ்
இ) அல்பரூனி
ஈ) யுவான் சுவாங்
விடை:
அ) மார்க்கோபோலோ

Question 5.
மார்க்கோபோலோ ___________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
அ) சீனா
ஆ) வெனிஸ்
இ) கிரீஸ்
ஈ) போர்ச்சுகல்
விடை:
ஆ) வெனிஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் __________
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2
கங்கை கொண்டான் எனப் பெயர் பெற்றவர் ___________.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
குந்தவை ___________ னின் மகளாவார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 4.
பாண்டியர்களின் காலத்தில் நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் ____________ என அழைக்கப்பட்டனர்.
விடை:
பூமி புத்திரர்

Question 5.
வீரசோமேஸ்வரரை சுந்தர பாண்டியன் ____________ என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தார்.
விடை:
கண்ணனூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 7

IV. சரியா? தவறா?

Question 1.
முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரனின் மகன் ஆவார்.
விடை:
தவறு (தந்தை)

Question 2.
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அரசுரிமை பரம்பரை இயல்புடையதாய் இருந்தது.
விடை:
சரி

Question 3.
சோழர்கள் காலத்தில் விளைச்சலில் 1/5 பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
விடை:
தவறு (1/3 பகுதி)

Question 4.
நாயன்மார்கள் சைவ சமணத்தினர்கள் ஆவர்
விடை:
சரி

Question 5.
மதுரை பொதுமக்களால் கூடல்’ என்று போற்றப்பட்டது.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:

பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
1) பிற்காலப் பாண்டியர் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை.
2) அவர்கள் ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர். .
3) அவர்கள் புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினர்
4) மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சாவூரில் உள்ளது.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1, 2 மற்றும் 3 சரி
இ) மேற்கூறிய எல்லாம் சரி
ஈ) 1, 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1, 2 மற்றும் 3 சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 2.
கூற்று : சுந்தர பாண்டியன் தனது தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
காரணம் : மாறவர்மன் குலசேகரன் தனது மகன் வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 8
விடை:
காணிக்கடன் – சொத்துவரி

VII. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
காசு, கழஞ்சு, பொன், தங்கம்
விடை:
தங்கம்

Question 2.
மிளகு, எண்ணெய், ஆபரணக்கற்கள், ஏலம்
விடை:
ஏலம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
குடவோலை முறை – சிறு குறிப்பு வரைக.
விடை:
சோழ அரசில் கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்முறையில் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும்.

ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதிலுள்ள பெயர்வாசிக்கப்படும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இம்முறையின் படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்.

Question 2.
முதலாம் குலோத்துங்கள் யார்?
விடை:

  • முதலாம் ராஜராஜ சோழரின் மகளான குந்தவையை சாளுக்கிய இளவரசரான விமலாதித்தியன் மணந்தார்.
  • அவர்களின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா இ தேவியை மணந்தார். இவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கள் ஆவார்.

Question 3.
பிற்காலச் சோழர்கள் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
யானைத் தந்தங்கள் பவழம், சங்குகள், ஒளி புகும், புகாக் கண்ணாடிகள், பாக்கு, ஏலம், வர்ணப்பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள்

Question 4.
பாண்டிய மன்னர்கள் செய்த யாகங்கள் யாவை?
விடை:

  • அஸ்வமேத யாகம்
  • ஹிரண்ய கர்ப்பம்
  • வாஜ்பேய வேள்வி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 5.
மாலிக்கபூர் ஏன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார்?
விடை:

  • மாறவர்மன் குலசேகரன் தனது மகனான வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.
  • இதனால் தனது தந்தை மீது வெறுப்புற்ற இவரது இன்னொரு மகனான சுந்தர பாண்டின் தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
  • தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப்போரில் வீரபாண்டியன் சுந்தர பாண்டியனைத் தோற்கடித்தார்.
  • தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்குச் சென்று அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலமானார்.
  • இதனால் அலாவுதீன் கில்ஜி தனது படைத்தளபதியான மாலிக்கபூரை பாண்டியநாட்டின் மீது படையெடுக்கும்படி அனுப்பிவைத்தார்.

IX. விடையளிக்கவும்.

Question 1.
முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் பெருமைகளை விளக்குக.
விடை:
முதலாம் ராஜராஜன்

  • சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற அரசர் முதலாம் ராஜராஜன் ஆவார்.
  • இவர் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை வென்றார்.
  • இலங்கை வரை சோழர்களின் ஆட்சியை விரிவடையச் செய்தார்.
  • தஞ்சாவூர் பிரகதிஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார்.

முதல் ராஜேந்திரன்:

  • முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது.
  • இவர் கங்கைப் பகுதியை வென்றார். இதனால் கங்கை கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
  • கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டினார்.
  • ஸ்ரீ விஜயப் பேரரசைக் கைப்பற்றினார்.
  • இவரது காலத்தில் கடல் கடந்த வணிகம் சிறப்பாக நடைபெற்றது.

Question 2.
சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.
விடை:

  • உள்ளாட்சி நிர்வாகம் ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகள் மூலம் செயல்பட்டது.
  • விவசாயிகளின் குடியிருப்புகள் ஊர்கள் என அழைக்கப்பட்டன.
  • பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் நீதி, நிதி மற்றும் பொது நிர்வாகங்களை மேற்கொண்டனர்.
  • வணிகர்களின் குடியிருப்பை நகரத்தார் நிர்வகித்தனர்.
  • கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.
  • ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
பாண்டியர்கள் கோவில் கட்டடக் கலைக்கு ஆற்றிய பணிகள் யாவை?
விடை:

  • இடைக்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் ஒன்றையும் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர்.
  • புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர்.
  • பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக் கல்தூண்களைக் கட்டினர்.
  • சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.
  • பாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பேராதரவு நல்கினர்.
  • புதிய கோபுரங்களையும்மண்டபங்களையும் கட்டி இக்கோவிலைத்தொடர்ந்து விசாலப்படுத்தினர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 9
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 10

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7th Social  Science Guide வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?
அ) கல்ஹ ணர்
ஆ) விசாகதத்தர்
இ) ராஜசேகரர்
ஈ) சந்த் பார்தை
விடை:
ஈ) சந்த் பார்தை

Question 2.
பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?
அ) முதலாம் போஜா
ஆ) முதலாம் நாகபட்டர்
இ) ஜெயபாலர்
ஈ) சந்திரதேவர்
விடை:
ஆ) முதலாம் நாகபட்டர்

Question 3.
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
அ) மங்கோலியா
ஆ) துருக்கி
இ) பாரசீகம்
ஈ) ஆப்கானிஸ்தான்
விடை:
ஈ) ஆப்கானிஸ்தான்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 4.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
அ) சிலை வழிபாட்டை ஒழிப்பது.
ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இ) இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
ஈ) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது
விடை:
ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் …………. ஆவார்
விடை:
தர்ம பாலர்

Question 2.
கி.பி ……………….. இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்
விடை:
712

Question 3.
ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் …….. ஆவார்
விடை:
சிம்மராஜ்

Question 4.
காந்தர்யா கோவில் ………………. ல் அமைந்துள்ளது
விடை:
மத்தியப் பிரதேசம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 2

IV. சரியா? தவறா?

Question 1.
ராஜபுத்ர என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.
விடை:
தவறு (சமஸ்கிருத வார்த்தை)

Question 2.
அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 3.
அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு (சமணகோயில்)

Question 4.
ரக்ஷாபந்தன் சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.
விடை:
சரி

Question 5.
இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
விடை:
தவறு (அரேபியர்கள் இந்தியரிடமிருந்து கற்றுக் கொண்டனர்)

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையைக் டிக் (✓) இட்டுக் காட்டவும்.

Question 1.
கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

அ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) கூற்றும், காரணமும் தவறு.
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

Question 2.
கூற்று : மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்துவிரிவுபடுத்த முடியவில்லை .
காரணம் 1 :மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவார்.

அ) I சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) | மற்றும் பதவறு
விடை:
இ) மற்றும் 1 சரி

Question 3.
கூற்று : இந்தியாவில் இஸ்லாமியக்காலக்கட்டம் கி.பிபொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை. இந்த
காரணம் : கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி –
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

Question 4.
கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.
காரணம் : ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை..

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி. க
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 5.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.
i. ரக்ஷாபந்தன் என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது.
ii. வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
iii. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

அ) கூற்று சரியானது.
ஆ) கூற்று ii சரியானது.
இ) கூற்று iii சரியானது.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை.
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை

VI. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக.
விடை:

  • கூர்ஜரப் பிரதிகாரர்கள், ராஷ்டிர கூடர்கள், பாலர்கள் ஆகிய மூவரும் வளம் நிறைந்த கன்னோஜியின் மீது தங்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர்.
  • இதனால் இவர்களுக்குள் மும்முனைப் போராட்டம் ஏற்பட்டது.

Question 2.
ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள், பரமாரர்கள்.

Question 3.
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் கோபாலர் ஆவார்.

Question 4.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துக்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அப்பாசித்துகள்
  • உமையாத்துகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 5.
காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
தாஹீர்

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும். சிந்துவை

Question 1.
அரேபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்)
விடை:

  • அராபிய அறிஞர்கள் பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
  • சமஸ்கிருத மொழியிலிருந்த வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பான பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
  • 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக் கொண்டனர்.
  • பூஜ்யத்தின் பயன்பாட்டை கற்றுக் கொண்டனர்.
  • இந்தியர்களிடமிருந்து சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொண்டனர்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
மாமுது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:
மாமூது கஜினியின் படையெடுப்பு :
வட இந்தியாவின் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதே மாமூது கஜினியின் நோக்கமாகும்.

முகமது கோரியின் படையெடுப்பு :
இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்வதே முகமது கோரியின் நோக்கமாகும்.

Question 2.
கண்டுபிடித்து நிரப்புக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 4

IX. மாணவர் செயல்பாடு

Question 1.
வார்த்தைத் துளிகள் :
இவ்வார்த்தைகள் பற்றி மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதை மாணவர்கள் விவாதிக்க வேண்டும்; குறிப்பும் எழுத வேண்டும்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 5
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 6

X. வரைபட வினா

Question 1.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் பிரதிகாரர்கள், சௌகான்கள், பாலர்கள், பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக. (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

XI. கட்டக வினாக்கள்

Question 1.
மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட பஞ்சாபின் ஷாகி வம்ச அரசர் யார்?
விடை:
ஜெயபாலர்

Question 2.
ராஜபுத்திர ஓவிய பாணிகள் ………………… என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ராஜஸ்தானி

Question 3.
ராஜபுத்திரக் குலங்கள் எத்தனை இருந்தன?
விடை:
3G

Question 4.
இந்தியாவில் முதல் இஸ்லாமியப் பேரரசை உருவாக்கியவர் யார்?
விடை:
முகமது கோரி

Question 5.
டெல்லியின் முதல் சுல்தான் யார்?
விடை:
குத்புதீன் ஐபக்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 6.
மெக்கா எங்குள்ளது?
விடை:
அராபியா

XII . வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
ராஜபுத்திர அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோவில்களின் படங்களைக் கொண்டு ஒரு செருகேட்டினை (ஆல்பம்) தயார் செய்யவும்.

7th Social  Science Guide வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
அ) ஹரிச்சந்திரா
ஆ) வத்சராஜா
இ) நாகபட்டர்
ஈ) தேவ பாலர்
விடை:
அ) ஹரிச்சந்திரா

Question 2.
பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்
அ) தர்ம பாலர்
ஆ) தேவ பாலர்
இ) கோபாலர்
ஈ) மகி பாலர்
விடை:
இ) கோபாலர்

Question 3.
தேவபாலர் ஆதரித்த மதம்
அ) சீக்கிய மதம்
ஆ) இந்து மதம்
இ) பௌத்த மதம்
ஈ) சமண மதம்
விடை:
இ) பௌத்த மதம்

Question 4.
கஜினி மாமுதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
அ) ஜெயச்சந்திரா
ஆ) ஜெயபாலர்
இ) ராஜ்ய பாலர்
ஈ) ஜெய சுந்தர்
விடை:
ஆ) ஜெயபாலர்

Question 5.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
அ) பால்பன்
ஆ) இல்டுமிஷ்
இ) நாசிர் உதீன்
ஈ) குத்புதீன் ஐபக்
விடை:
ஈ) குத்புதீன் ஐபக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ராஜபுத்திரர்களின் கூட்டமைப்பு ……………… எனப்பட்டது
விடை:
ராஜபுதனம்

Question 2.
பால வம்சத்தின் மிகச் சிறந்த வலிமை மிக்க அரசர் ……………. ஆவார்
விடை:
முதலாம் மகிபாலர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 3.
சௌகான் வம்சத்தைச் தோற்றுவித்தவர் ……………. ஆவார்
விடை:
சிம்மராஜ்

Question 4.
சௌகான்களின் தலைநகர் ………………… ஆகும்
விடை:
சாகம்பரி

Question 5.
இறைதூதர் முகமது நபி தோற்றுவித்த சமயம் ………….
விடை:
இஸ்லாம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 7

IV. சரியா? தவறா?

Question 1.
தர்ம பாலர் வீக்கிரமசீலா மடாலயத்தை நிறுவினார்.
விடை:
சரி

Question 2.
மும்முனைப் போட்டிக்குப் பின், மூன்று சக்திகளும் பலம் பெற்றன
விடை:
தவறு (பலவீன மடைந்தன)

Question 3.
சௌகான் வம்சாவளியின் முதல் அரசர் பிருதிவிராஜ் ஆவார்.
விடை:
சரி

Question 4.
சூரியனார் கோவில் கொனார்க்கில் உள்ளது.
விடை:
சரி

Question 5.
இரண்டாம் தரெயின் போர் ராஜபுத்திரர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
விடை:
சரி

V. கூற்று மற்றும் காரணம்

அ) கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான கூற்று கூற்றுகளைக் கூறவும்.
1. தர்மபாலர் தலைசிறந்த சமண மத ஆதரவாளர் ஆவார்.
2. அவர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்
3. தர்மபாலருக்குப்பின் அவரது மகன் தேவபாலர் ஆட்சிக்கு வந்தார்

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 2 தவறு
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) 1 மற்றும் 2 தவறு

Question 2.
கூற்று : தரெய்ன் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
காரணம் : தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) காரணம் கூற்றக்கான சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

ஆ) தவறான இணையைக் கண்டறியவும் :
Question 1.
1. வத்ச ராஜா – பிரதிகாரர்கள்
2. கோபாலர் – பாலர்கள்
3. சிம்மராஜ் பராமரர்கள்
விடை:
3. சிம்மராஜ் – பராமரர்கள்

Question 2.
1. பிரதிகாரர்கள் – மாளவம்
2. பாலர்கள் – வங்காளம்
3. பராமரர்கள் – டெல்லி
விடை:
3. பராமரர்கள் – டெல்லி

இ) பொருந்தாததைக் கண்டுபிடி.
Question 1.
பிரதிகாரர்கள், சோலங்கிகள், துருக்கியர், பராமரர்கள்
விடை:
துருக்கியர்

Question 2.
சோமநாதபுரம், ஆம்பர், கஜுராகோ, தில்வாரா
விடை:
ஆம்பர்

VI. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
வங்கப்பிரிவினை எப்போது நிகழ்ந்தது?
விடை:
வங்கப்பிரிவினை 1905ல் நிகழ்ந்தது.

Question 2.
ரக்ஷா பந்தன் பற்றி சிறு குறிப்பு வரைக. (ராக்கி)
விடை:

  • ரக்ஷா பந்தன் என்பது ராஜபுத்திரர்களுக்கு உரிய ஒரு விழாவாகும்
  • இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
  • ஒரு பெண் ஒரு ஆடவரின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டி விட்டால் அப்பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறார் என்று பொருள்.
  • அப்படியான ஆண்கள் அப்பெண்களைப் பாதுகாக்கக் கடமைப் பட்டவர்கள் ஆவர்.

Question 3.
ராஜபுத்திரர்களின் தோற்றம் பற்றி கூறு.
விடை:

  • ராஜபுத் எனும் சொல் ரஜ்புத்ர எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • ராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்த காலத்திலிருந்து தொடங்குகின்றனர்.
  • அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள் சூரிய வம்சி, எனும் சூரிய குலம், சந்திர வம்சி எனும் சந்திர குலம் மற்றும் அக்னி குலம் என்பனவாகும்.
  • ராஜபுத்திரர்களில் 36 அரச குலங்கள் உள்ளன.

Question 4.
தர்மபாலர் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • தர்ம பாலர், கோபாலர் என்பவருடைய மகன் ஆவார்.
  • இவர் வட இந்தியாவில் ஒரு வலிமை மிக்க சக்தியாக விளங்கினார்.
  • கன்னோசி மீது படையெடுத்து வெற்றி பெற்றார்.
  • அவர் மிகச் சிறந்த பௌத்த ஆதரவாளராவார்.
  • அவர் விக்ரமசீலா என்ற கல்விக்கான மடாலயத்தை உருவாக்கினார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 5.
கஜினி மாமூதுவின் வெற்றிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கஜினி மாமூது ஷாகி அரசுக்கு எதிராக படையெடுத்து அதன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்தார்
  • வைகிந்த் என்னுமிடத்தில் ஆனந்த பாலரைத் தோற்கடித்தார்.
  • நாகர்கோட், தானேஸ்வர் ஆகிய நகரங்களைச் சூறையாடினார்.
  • கன்னோஜியின் மன்னரைத் தோற்கடித்தார்.
  • மதுரா நகர் மற்றும் சோமநாதபுரம் கோவிலைக் கொள்ளையடித்தார்.

VII. விடையளிக்கவும்.

Question 1.
கலை மற்றும் கட்டடக் கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பினை விவாதி.
விடை:
கலை :

  • ராஜபுத்திரர்களின் காலத்தில் இலக்கியம், இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளும் கவின் கலைகளும் செழிப்புற்றன.
  • ராஜஸ்தானி என்றழைக்கப்பட்ட ஓவியக்கலை தோன்றியது.

கட்டடக் கலை :
ராஜபுத்திரர்கள் சித்தோர்கார், ரான்தம்பூர், கும்பல்கார், மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினர்.

குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் கோட்டை, உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை ஆகியவை இவர்கள் காலத்தவையாகும்.

கஜுராகோ எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவில், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது அமைந்துள்ள தில்வாரா கோயில், காந்தர்யா கோவில் ஆகியவை ராஜபுத்திரரின் கோவில் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாகும்.

Question 2.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?
விடை:

  1. பாலர்கள் பௌத்த கோயில்களையும், புகழ் பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களையும் ஆதரித்தனர்.
  2. பாலர்கள் மூலம் பௌத்த சமயம் திபெத்தில் நிறுவப்பட்டது.
  3. சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த அரசுகளுடன் பாலர்கள் சுமூகமான உறவு கொண்டிருந்தனர்.
  4. தனித்தன்மை வாய்ந்த பாலர்களின் கலை உருவானது.
  5. செப்புச் சிலைகளிலும் பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வெளியிடப்பட்டன.

Question 3.
முதல் மற்றும் இரண்டாம் தரெய்ன் போர்களை விவரிக்க.
விடை:
முதல் தரெய்ன் போர் :

  • முகமது கோரி முல்தான் மற்றும் பஞ்சாப்பைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றினார்.
  • இந்த ஆபத்தான சூழலில் பிருதிவிராஜ் சௌகானின் தலைமையில் வட இந்திய இந்து அரசர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினர்.
  • 1191ல் தரெய்ன் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் பிருதிவிராஜ் சௌகான் முகமது கோரியைத் தோற்கடித்தார். இது முதல் தரெய்ன் போர் எனப்படுகிறது.

இரண்டாம் தரெய்ன் போர் :

  • இத்தோல்விக்குப் பழிவாங்கும் பொருட்டு முகமது கோரி ஒரு பெரும் படையைத் திரட்டி பிருதிவி ராஜிக்கு எதிராக புறப்பட்டார்.
  • பல இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும் பிருதிவிராஜிக்கு ஆதரவு அளித்தனர்.
  • ஆயினும் 1192ல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் முகமது கோரியால் தாற்கடிக்கப்பட்டார். பிருதிவிராஜ் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
  • இப்போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 8

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7th Social  Science Guide இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
……………….. என்பவை பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
அ) காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நாணயங்கள்
ஈ) பொறிப்புகள்
விடை:
ஈ) பொறிப்புகள்

Question 2.
கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ………………… ஆகும்.
அ) வேளாண்வகை
ஆ) சாலபோகம்
இ) பிரம்மதேயம்
ஈ) தேவதானம்
விடை:
ஈ) தேவதானம்

Question 3.
………………… களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
அ) சோழர்
ஆ) பாண்டியர்
இ) ராஜபுத்திரர்
ஈ) விஜயநகர அரசர்கள்
விடை:
அ) சோழர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 4.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ……………….. ஆகும்.
அ) அயினி அக்பரி
ஆ) தாஜ் – உல் – மா – அசிர்
இ) தசுக் – இ – ஜாஹாங்கீரி
ஈ) தாரிக் – இ – பெரிஷ்டா
விடை:
ஆ) தாஜ் – உல் – மா – அசிர்

Question 5.
அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ………….. ஆவார்.
அ) மார்க்கோபோலோ
ஆ) அல் – பரூனி
இ) டோமிங்கோ பயஸ்
ஈ) இபன் பதூதா
விடை:
ஈ) இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………… கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
விடை:
உத்திரமேரூர்

Question 2.
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ……………. ஆவார்
விடை:
முகமது கோரி

Question 3.
ஒரு ……………….. என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது
விடை:
ஜிட்டல்

Question 4.
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் ………………… ஆவார்
விடை:
மின்கஜ் உஸ் சிராஜ்

Question 5.
கி.பி 1420 இல் விஜயநகருக்கு வருகை புரிந்த இத்தாலியப் பயணி ……………. ஆவார்
விடை:
நிகோலோ கோண்டி

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 2

IV. சரியா? தவறா?

Question 1.
பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.
விடை:
தவறு (பொருளாதார நிலை)

Question 3.
தாமிரத்தின்விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவைநிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.
விடை:
சரி

Question 4.
டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி 1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.
விடை:
தவறு (விஜயநகரப் பேரரசுக்கு வருகை புரிந்தார்)

V. கூற்று மற்றும் காரணம்

அ) கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை ழக் (✓) இட்டுக் காட்டவும்.

கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

ஆ) தவறான இணையைக் கண்டறியவும் :
1. மதுரா விஜயம் – கங்கா தேவி
2. அபுல் பாசல் – அயினி அக்பரி
3. இபன் பதூதா – தாகுயூக் – இ – ஹிந்த்
4. அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்
விடை:
3. இபன் பதூதா – தாகுயூக் – இ – ஹிந்த்

இ) பொருந்தாததைக் கண்டுபிழ.
அ) பொறிப்புகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நினைவுச் சின்னங்கள்
ஈ) நாணயங்கள்
விடை:
ஆ) பயணக்குறிப்புகள்

VI. ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்.

Question 1.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
விடை:
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி என்பவர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
விடை:
சுய சரிதை

Question 3.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
விடை:
தசுக் – இ – ஜஹாங்கீரி

Question 4.
வரலாற்றை அறிந்து கொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
விடை:

  • முதல் நிலைச் சான்றுகள்
  • இரண்டாம் நிலைச் சான்றுகள்

Question 5.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய திகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும்.
விடை:
மசூதிகள்:

  1. குவ்வத் – உல் – இஸ்லாம் மசூதி
  2. மோத் – கி – மசூதி
  3. ஜமா மசூதி
  4. பதேப்பூர் சிக்ரி தர்கா
  5. சார்மினார்.

கோட்டைகள்:

  1. ஆக்ரா கோட்டை
  2. சித்தூர் கோட்டை
  3. குவாலியர் கோட்டை
  4. டெல்லி செங்கோட்டை
  5. தௌலதாபாத் மற்றும் பிரோஷ் கொத்தளம்

Question 6.
இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த முக்கியமான அயல் நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
விடை:

  • மார்கோபோலா
  • அல்பரூனி
  • இபன் பதூதா
  • நிகோலோ கோண்டி
  • அப்துல் ரஸாக்
  • டோமிங்கோ பயஸ்

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

Question 1.
டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
விடை:

  • டெல்லி சுல்தான்கள் பலவகையான நாணயங்களை வெளியிட்டனர்.
  • தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களை வெளியிட்டனர்.
  • ஜிட்டல் எனப்படும் செம்பு நாணயங்களும், டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களும் வெளியிடப்பட்டன.
  • நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள படங்களும், உருவங்களும், அரசர்களுடைய பெயர்கள், பட்டங்கள் அவர்களின் உருவப்படங்கள், நிகழ்வுகள், இடங்களின் பெயர்கள் சின்னங்கள் ஆகி யவற்றை நமக்கு உணர்த்துகின்றன.
  • அரசர்களின் இராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்பு மற்றும் சமய நம்பிக்கை ஆகியவையும் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன.
  • நாணயங்களில் உள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்து விளக்குகின்றது.
  • அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள் நாட்டின் பொருளாதார வளத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • அதேபோன்று முகமது பின்துக்ளக்கின் செப்பு நாணயங்கள் நாட்டின் நலிவு நிலையைக் காட்டுகின்றன.

VIII. கட்டக வினாக்கள்

Question 1.
…………. பேரரசர் ஒளரங்கசீப்பின் காலத்தைச் அரசவை அறிஞர் ஆவார்.
விடை:
காஃபி கான்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
திருவாலங்காடு செப்பேடுகள் ………………….. சேர்ந்ததாகும்.
விடை:
முதலாம் இராஜேந்திர சோழன்

Question 3.
……………….. என்பது கல்விக் கூடங்களைப் பராமரிப்பதற்கான நிலமாகும்.
விடை:
சாலபோகம்

Question 4.
பெரியபுராணத்தைத் தொகுத்தவர் ………………… ஆவார்.
விடை:
சேக்கிழார்

Question 5.
………………… ஓர் அரேபியச் சொல். இதன் பொருள் வரலாறு’ என்பதாகும்.
விடை:
தாரிக்

Question 6.
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கே அமைந்திருந்த …………….. க்கு மாற்றினார்.
விடை:
தேவகிரி

IX. உயர் சிந்தனை வினா வது

Question 1.
“நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.” விளக்குக.
விடை:

  • பழங்கால அரசர்களால் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
  • செப்பு நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க நாணயங்களை அவர்கள் வெளியிட்டனர்.
  • உண்மையிலேயே உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பை எடுத்துக் காட்டும் ஓர் அளவு கோல் ஆகும்.
  • அலாவுதீன் கில்ஜி போன்ற அரசர்கள் தங்க நாணயங்களை வெளியிட்டனர். இது அவர்களின் செல்வச் செழிப்பையும், உயர்ந்த பொருளாதார நிலையையும் உணர்த்துகிறது.
  • இம்மன்னர்கள் காலத்தில் தங்கம் தாராளமாகக் கிடைத்திருக்கிறது.
  • ஆனால் முகமது பின் துக்ளக் போன்ற மன்னர்களின் காலத்தில் நாட்டில் அமைதியும் செழிப்பும் இல்லை. எனவே அவர் தோல் நாணயங்களை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
  • இவ்வாறு நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார செழிப்பைக் காட்டுகிறது என்பதை அறியலாம்.

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இடைக்கால இந்தியாவின் அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய செருகேடு (ஆல்பம்) ஒன்றைத் தயார் செய்யவும்.

XI. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
உனது நகரத்தில் அல்லது கிராமத்திலுள்ள நூல்களிலிருந்து அங்குக் கிடைக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலைச் சான்றுகளைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றைத் தயார் செய்யவும்.

7th Social  Science Guide இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
அ) வேளாண்வகை
ஆ) பிரம்ம தேயம்
இ) சாலபோகம்
ஈ) தேவதானம்
விடை:
அ) வேளாண்வகை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
அ) நீதி நிர்வாகம்
ஆ) நிதி நிர்வாகம்
இ) கிராம நிர்வாகம்
ஈ) இராணுவ நிர்வாகம்
விடை:
இ) கிராம நிர்வாகம்

Question 3.
வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்.
அ) சோழர்கள்
ஆ) முகலாயர்கள்
இ) விஜயநகரப் பேரரசர்கள்
ஈ) டெல்லி சுல்தான்கள்
விடை:
ஈ) டெல்லி சுல்தான்கள்

Question 4.
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்.
அ) சேரர்கள் காலம்
ஆ) சோழர்கள் காலம்
இ) பாண்டியர் காலம்
ஈ) பல்லவர்கள் காலம்
விடை:
ஆ) சோழர்கள் காலம்

Question 5.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
அ) மார்க்கோபோலோ
ஆ) அல் பரூனி
இ) இபன் பதூதா
ஈ) நிகோலோ கோண்டி
விடை:
இ) இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பொறிப்புகள் என்பவை …………………. மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்
விடை:
கடினமான மேற்பரப்பு

Question 2.
பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ………… எனப்பட்டன
விடை:
பிரம்ம தேயம்

Question 3.
பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் ………………..
விடை:
தஞ்சாவூர்

Question 4.
சார்மினார் அமைந்துள்ள இடம் …………………….
விடை:
ஹைதராபாத்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 5.
தபகத் என்ற அரேபியச் சொல்லின் பொருள் ……………..
விடை:
தலைமுறைகள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 3

IV. சரியா? தவறா?

Question 1.
அயல்நாட்டு வரலாற்றுத் தொகுப்பாளர்களின் குறிப்புகள் சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்து ஏராளமான செய்திகளைத் தருகின்றன.
விடை:
தவறு (குறைவான செய்திகளையே தருகின்றன)

Question 2.
கல்வெட்டுக்களில் கொடை வழங்கியவர் மட்டுமே சிறப்புக் கவனம் பெறுகிறார்
விடை:
சரி

Question 3.
திருவாலங்காடு செப்பேடுகள் முதலாம் இராஜ ராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது.
விடை:
தவறு (முதலாம் இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தது)

Question 4.
ஆழ்வார்கள் மொத்தம் 63 பேர் இருந்தனர்
விடை:
தவறு (12 பேர்)

Question 5.
சீனாவிலிருந்து தாம் கப்பலில் வந்ததாக மார்க்கோபோலோ கூறியிருக்கிறார்.
விடை:
சரி

V. கூற்று மற்றும் காரணம்

கூற்றைக் காரணத்தோடு பொருத்துக . பொருத்தமான விடையை முக் (✓) இட்டுக் காட்டவும்.

Question 1.
கூற்று : முகமது பின் துக்ளக் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
காரணம் : இது நாட்டில் செல்வச் செழிப்பு இருந்ததைக் காட்டுகிறது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
கூற்று : அல்பரூனி ஒரு கற்றறிந்த அறிஞர்
காரணம் : இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியத் தத்துவங்களையும் கற்றார்.

அ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

VI. தவறான இணையைக் கண்டறியவும் :

Question 1.
1. நாணயங்கள் – முதல் நிலைச் சான்றுகள்
2. வாழ்க்கை வரலாறு – இரண்டாம் நிலைச் சான்றுகள்
3. தஜுக் – கிரேக்க சொல்
4. தாகுயுக் – அரேபியச் சொல்
விடை:
3. தஜுக் – கிரேக்க சொல்

Question 2.
1. காயல் – தூத்துக்குடி மாவட்டம்
2. உத்திரமேரூர் – காஞ்சிபுரம் மாவட்டம்
3. தஜுக் – வாழ்க்கை வரலாறு
4. தாரிக் – வரலாறு
விடை:
3. தஜுக் – வாழ்க்கை வரலாறு

VII. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
பாபர் நாமா, அக்பர் நாமா, அயினி அக்பரி, தபகத் – இ – அக்பரி
விடை:
பாபர் நாமா

Question 2.
கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள், நாணயங்கள்
விடை:
நாணயங்கள்

VIII. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சான்றுகள் – வரையறு.
விடை:
கடந்த காலத்தை மறு கட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.

Question 2.
நினைவுச் சின்னங்கள் என்றால் என்ன? –
விடை:
கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள், ஸ்தூபிகள் ஆகிய கட்டடங்கள் நினைவுச் சின்னங்கள் ஆகும்.

Question 3.
தாரிக்-இ-பெரிஷ்டா என்ற நூலை எழுதியவர் யார்? அந்நூல் கூறுவது என்ன?
விடை:

  • பெரிஷ்டா என்பவர் தாரிக் – இ – பெரிஷ்டா என்ற நூலை எழுதினார்.
  • இந்நூல் இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி பற்றி விவரிக்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 4.
வாழ்க்கை வரலாறு மற்றும் சுய சரிதை – வேறுபடுத்துக.
விடை:

  • ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி வேறொருவர் எழுதிய வரலாற்றுக் குறிப்பு வாழ்க்கை வரலாறு எனப்படும்.
  • எடுத்துக்காட்டு : அபுல் பாசல் எழுதிய அயினி அக்பரி என்ற நூல். இது அக்பரின் வாழ்க்கையைப் பற்றிய நூல்
  • ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி அவரே எழுதிய வரலாற்றுக்குறிப்பு சுய சரிதை எனப்படும். எடுத்துக்காட்டு: பாபர் எழுதிய பாபர் நாமா என்ற நூல். இது பாபரின் வாழக்கையைப் பற்றிய நூல்

IX. விடையளிக்கவும்.

Question 1.
சான்றுகளை வகைப்படுத்தி, அவற்றை விவரிக்கவும்.
விடை:

  • கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.
  • சான்றுகள் முதல் நிலைச்சான்றுகள் மற்றும் இரண்டாம் நிலைச் சான்றுகள் என இருவகைப்படும்.

முதல் நிலைச் சான்றுகள் :
பொறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள், ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகளும் முதல் நிலைச் சான்றுகள் ஆகும்.

இரண்டாம் நிலைச் சான்றுகள் :
இலக்கியங்கள், கால வரிசையிலுள்ள நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுய சரிதைகள் ஆகியவை இரண்டாம் நிலைச் சான்றுகள் ஆகும்.

Question 2.
சமயச் சார்பற்ற இலக்கியங்கள் பற்றி ஒரு விளக்கம் தருக.
விடை:

  1. மதுரா விஜயம், அமுக்த மால்யதா ஆகியவை சமய சார்பற்ற இலக்கியங்கள் ஆகும். இவை விஜய க. நகரப் பேரரசைப் பற்றி அறிய உதவுகின்றன.
  2. மதுரா விஜயம் கங்காதேவியாலும், அமுக்த மால்யதா என்ற நூல் கிருஷ்ண தேவராயராலும் எழுதப்பட்டன.
  3. இராஜபுத்திர அரசர்களைப் பற்றிய பிருதிவி ராஜ ராசோ என்ற நூலை சந்த் பார்தை என்பவர் எழுதினார்.
  4. கல்ஹணரின் ராஜதரங்கினி இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்துதெரிவிக்கிறது.

Question 3.
இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:

  • மார்க்கோ போலோ என்ற வெனிஸ் நகரப் பயணி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழகத்திற்கு வந்தார்.
  • அவர் காயல் துறைமுகம் பற்றியும் அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
  • கற்றறிந்த அறிஞரான அல்பரூனி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களைப் பற்றி அறிய முயன்றார்.
  • இவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார்.
  • இந்தியத் தத்துவங்களைக் கற்றார்.
  • அவர் எழுதிய தாகுயூக் – இ – ஹிந்த் என்ற நூலில் இந்தியாவின் நிலைகளையும், அறிவு முறையினையும், சமூக விதிகளையும் மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
  • மொரக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயணநூல்ரிக்ளா – பயணங்கள் என்பதாகும். அவர் இந்தியாவின் சமூக நிலை, சாதி, சதி என்ற உடன் கட்டை ஏறும் பழக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்திய வணிக நடவடிக்கைகள் பற்றியும் இவரது நூல் தெரிவிக்கிறது.
  • இவர்கள் தவிர நிகோலோ கோண்டி, அப்துர் ரஸாக், டோமிங்கோ பயஸ் ஆகிய அந்நியப் பயணிகளும் இந்தியாவுக்கு வந்தனர்.
  • இவர்கள் விஜயநகரப் பேரரசின் சிறப்பு பற்றி தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

7th Social  Science Guide புவியின் உள்ளமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்வு செய்க

Question 1.
நைஃப் (Nife) __________ ஆல் உருவானது.
அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
ஆ) சிலிக்கா மற்றும் அலுமினியம்
இ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
ஈ) இரும்பு மற்றும் மெக்னீசியம்
விடை:
அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

Question 2.
நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ___________ விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது.
அ) மலை
ஆ) சமவெளிகள்
இ) தட்டுகள்
ஈ) பீடபூமிகள்
விடை:
இ) தட்டுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை ___________ மூலம் அளக்கலாம்.
அ) சீஸ்மோகிராஃப்
ஆ) ரிக்டர் அளவு கோல்
இ) அம்மீட்டர் தான்
ஈ) ரோட்டோ மீட்டர்
விடை:
ஆ) ரிக்டர் அளவு கோல்

Question 4.
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழைக்கப்படுகிறது.
அ) எரிமலைத்துளை
ஆ) ளிமலைப் பள்ளம்
இ) நிலநடுக்க மையம்
ஈ) எரிமலை வாய்
விடை:
அ) எரிமலைத் துளை

Question 5.
மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை ___________
அ) ஸ்ட்ராம்போலி
ஆ) கரக்கபோவா
இ) பியூஜியாமா
ஈ) கிளிமாஞ்சாரோ
விடை:
அ) ஸ்ட்ராம்போலி

Question 6.
___________ பகுதி ” பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகிறது.
அ) பசிபிக் வளையம்
ஆ) மத்திய அட்லாண்டிக்
இ) மத்திய கண்டம்
ஈ) அண்டார்ட்டிக்
விடை:
அ) பசிபிக் வளையம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. அக

Question 1.
புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _____________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி

Question 2.
நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.
விடை:
நில அதிர்வுமானி (Seismograph)

Question 3.
பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
எரிமலை வெளியேற்றம்

Question 4.
செயல்படும் எரிமலைக்கு உதாரணம் ____________ ஆகும்.
விடை:
செயின்ட் ஹெலன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 5.
எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை __________ என அழைக்கின்றனர்.
விடை:
எரிமலை ஆய்வியல்

III. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
மேலோடு, மாக்மா, புவிக்கருவம், கவசம்
விடை:
மாக்மா

Question 2.
நிலநடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலைகள்
விடை:
எரிமலைவாய்

Question 3.
உத்தரகாசி, சாமோலி, கொய்னா, கரக்கடோவே
விடை:
கரக்கடோவே

Question 4.
லாவா , எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்.
விடை:
சிலிக்கா

Question 5.
ஸ்ட்ராம் போலி, ஹெலென் , ஹவாய், பூயூஜியாமா
விடை:
ஹவாய்

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 2

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.
காரணம் : புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி, காரணம் தவறு ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன.
காரணம் : பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

VI. ஒரு வரியில் விடையளிக்கவும்:

Question 1.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக.
விடை:
புவிமேலோடு (Crust)

Question 2.
சியால் (SIAL) என்றால் என்ன?
விடை:
கண்டங்களின் மேற்பகுதி.

Question 3.
புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?
விடை:
கண்டத்திட்டு நகர்வுகள்

Question 4.
செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் தருக.
விடை:
ஆப்பிரிக்காவின் கென்யா எரிமலைகள்.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன?
விடை:
மெல்லிய புறத்தோல் (அ) கவசம்:

  • புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு கவசம் (mantle) எனப்படுகிறது.
  • கவசம் மேல் கவசம் மற்றும் கீழக்கவசம் என இருவகைப்படும்.

Question 2.
புவிக்கருவம் பற்றி சுருக்கமாக எழுதவும்.
விடை:
புவிக்கருவம் :

  • புவியின் மையப் பகுதியை புவிக்கரு எனக் குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் என்றும் அழைக்கப்படுகிறது.
  • புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டது.
    1. வெளிப்புற புவிக்கரு (திரவநிலையில் இரும்புக் குழம்பு)
    2. உட்புற புவிக்கும் (திட நிலையில் உள்ள நைஃப்)

Question 3.
நிலநடுக்கம் வரையறு.
விடை:
நிலநடுக்கம் : புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே “நிலநடுக்கம்” என்கிறோம்.

Question 4.
சீஸ்மோகிராஃப் என்றால் என்ன?
விடை:
சீஸ்மோகிராஃப்:
புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை சீஸ்மோகிராஃப் என அழைக்கிறோம்.

Question 5.
எரிமலை என்றால் என்ன?
விடை:
எரிமலை:
புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக் குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம்.

Question 6.
செயல்படும் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
செயல்படும் அடிப்படையில் எரிமலைகளின் வகைகள்:

  • கேடய எரிமலை
  • தழல் கூம்பு எரிமலை
  • பல்சிட்டக் கூம்பு எரிமலை

VIII. காரணம் கூறு

Question 1.
புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை.
விடை:
புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை.
ஏனெனில்
புவியின் மையப்பகுதி (புவிக்கரு ) 5150 கி.மீ முதல் 6370 கி.மீ அளவில் பரந்துள்ளது. அதிக வெப்பநிலையும் அழுத்தமும் கொண்ட பகுதி. வெளிப்புறக் கருவில் திரவநிலையில் இரும்பாலான குழம்பு உள்ளது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டைவிட அடர்த்தி குறைவு.
விடை:
கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டை விட அடர்த்தி குறைவு.
ஏனெனில்
கண்டங்களின் மேற்பகுதி கருங்கற் பாறைகளால் ஆனது. முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது. இதுவேசியால் என அழைக்கப்படுகிறது. இதன் சராசரி அடர்த்தி 2.7 கி/செ.மீ3

மேலோட்டின் கீழ்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளால் ஆனது. கடல் தரைகளான இப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்துள்ளது. இதுவே சிமா என அழைக்கப்படுகிறது. இதன் சராசரி அடர்த்தி 3.0 கி/செ.மீ3

IX. வேறுபடுத்துக.

Question 1.
சியால் மற்றும் சிமா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 3

Question 2.
செயல்படும் எரிமலை மற்றும் உறங்கும் எரிமலை
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 4

X. பத்தியளவில் விடையளி

Question 1.
நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.
விடை:
நிலநடுக்கத்தின் விளைவுகள்:
புவி மேலோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாரா நகர்வு, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் ஆகும்.

நிலநடுக்கம் புவிப்பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன.

கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும். மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுக்கி மரணக் குழிகளாக மாறுகின்றன.

நிலத்தடி நீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது.

தீப்பற்றுதல் மற்றோர் முக்கிய ஆபத்தாகும்.

நிலநடுக்கத்தால் கடலில் ஏற்படும் பெரிய அலைகளான சுனாமி ஜப்பானிய கடலோரப் பகுதிகளிலும், பசிபிக் கடலோரப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெருத்த சேதத்தை உண்டாக்குகின்றன.

Question 2.
எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.
விடை:
எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகள்:
புவிமேற்பரப்பு பிளவு வழியே மாக்மா பாறைக் குழம்பு வெளியேறுவது எரிமலை ஆகும். எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவினை கொண்டு > செயல்படும் எரிமலை > செயல்படாத எரிமலை > செயலிழந்த எரிமலை என மூவகைப்படும்.

செயல்படும் எரிமலை:

  • அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலை செயல்படும் எரிமலைகள் ஆகும். பெரும்பாலான எரிமலைகள் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளன.
  • ஸ்ட்ராம்போலி (மத்திய தரைக்கடல்)
  • செயின்ட் ஹெலன் (அமெரிக்கா)
  • மவுனோலோ (ஹவாய்) ஆகியன செயல்படும் எரிமலைகள்.

செயல்படாத எரிமலை :

  • பல ஆண்டுகளாக எரிமலைக்குழம்பை வெளியேற்றும் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக் கூடிய எரிமலைகள் செயல்படாத எரிமலைகள் ஆகும். இவை உறங்கும் எரிமலைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • வெசுவியஸ் (இத்தாலி)
  • பியூஜியாமா (ஜப்பான்)
  • சிரகோட்டா (இந்தோனேஷியா) ஆகியன செயல்படாத எரிமலைகள்.

செயலிழந்த எரிமலை :

  • வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து, வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலை செயலிழந்த எரிமலை எனப்படும்.
  • போப்பா (மியான்மர்)
  • கிளிமாஞ்சரோ (ஆப்பிரிக்கா)
  • கென்யா (ஆப்பிரிக்கா) ஆகியன செயலிழந்த எரிமலைகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
முக்கியமான எரிமலை மண்டலங்களை எழுதி ஏதேனும் ஒன்று பற்றி விவரி
விடை:
முக்கியமான எரிமலை மண்டலங்கள்:
உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன. அவை

  • பசிபிக் வளையப் பகுதி
  • மத்திய கண்டப் பகுதி
  • மத்திய அட்லாண்டிக் பகுதி.

பசிபிக்வளையப் பகுதி:

  • இந்த எரிமலைப் பகுதியானது குவிய கடல்தட்டின் எல்லை பகுதியில் அமையப் பெற்றுள்ளது. பசிபிக் பெருக்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது.
  • மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இதனை “பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கின்றனர்.

XI. சிந்தனை வினா (HOTS)

Question 1.
பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது ஏன்?
விடை:
பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது.
ஏனெனில் புவிக்கரு
புவியின் மையப் பகுதியாகவும் புவியின் மிகுந்த வெப்பமான அடுக்காகவும் உள்ளது. நைஃப் என்ற உட்புற புவிக்கரு அதிக அடர்த்தியும் வெப்பமும் கொண்டது. வெளிப்புற புவிக்கருவானது திரவ நிலையில் இரும்புக் குழம்பாலானது.

Question 2.
எரிமலைகள் அழிவானதா அல்லது ஆக்கப்பூர்வமானதா?
விடை:
எரிமலைகள் அழிவானது மற்றும் ஆக்கபூர்வமானது
அழிவானது: –

  1. எரிமலை வெடிப்பு நிலநடுக்கங்கள், பெரு வெள்ளப் பெருக்குகள், மண் சரிவுகள், பாறை வீழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
  2. லாவா எனும் எரிமலைக் குழம்பு நீண்ட தூரம் பயணிக்கும் பொழது தனது பாதைய அனைத்தையும் எரிக்கும், புதைக்கும் அல்லது சேதத்திற்கு உட்படுத்தும்.
  3. உண்டாகும் பெருமளவு தூசு மற்றும் சாம்பல் சுவாசத்தை கடினமாக்கும் அல்லது எரிச்சல் ஊட்டும்.
  4. ளிமலை வெடிப்புகள் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். எளிமலைப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைப் பாதிக்கும்.

ஆக்கபூர்வமானது:

  1. ளிமலையின் போது உண்டாகும் பொருட்கள் மண் வளத்தை அதிகரித்து வேளாண் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கிறது.
  2. வெப்பமான எரிமலைப் பகுதி புவி வெப்ப ஆற்றலை உருவாக்குவதற்கு உதவுகிறது.
  3. பெரும்பாலான ளிமலைப் பொருட்கள் கட்டுமானப் பொருட்களாக பயன்படுகின்றன.
  4. செயல்படாத (உறங்கும்) எரிமலைகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் அதிகமாக ஈர்க்கும் சுற்றுலாத் தலங்களாக இருக்கின்றன. –

Question 3.
எரிமலை எவ்வாறு ஒரு தீவை உருவாக்குகிறது?
விடை:
எரிமலை ஒரு தீவை உருவாக்குதல்:

  1. பல எரிமலைகள் புவியின் பெருங்கடல்களின் அடியில் உருவாகின்றன. கடல் நீருக்குக் கீழே வெடிப்புக்கு உட்படும் எரிமலை பெருங்கடலின் நீர்ப்பரப்புக்கு மேலே எழும்புகிறது.
  2. பெருங்கடல் தீவுகள் எரிமலைத் தீவுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  3. ஐஸ்லாந்து நாடு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவானதாகும்.

XII. செயல்பாடுகள்

Question 1.
நிலநடுக்கம் மற்றும் எரிமலை பற்றிய படங்களை வைத்து ஒரு புத்தகம் தயாரிக்கவும். (மாணவர்களுக்கானது)

Question 2.
எரிமலையின் பாகங்களைக் குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 5

Question 3.
உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 6
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

7th Social  Science Guide புவியின் உள்ளமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
புவியின் கொள்ளளவில் கவசம் _____________ கொண்டுள்ளது.
அ) 1%
ஆ) 84%
இ) 51%
ஈ) ஒன்றுமில்லை
விடை:
ஆ) 84%

Question 2.
வெளிப்புற புவிக்கருவில் ___________ மிகுதியாக உள்ளது.
அ) சிலிக்கா
ஆ) மக்னீ சியம்
இ) இரும்பு
ஈ) நிக்கல்
விடை:
இ) இரும்பு

Question 3.
கொலம்பியா பீடபூமி’ ___________ ல் உள்ளது
அ) வட அமெரிக்கா
ஆ) தென் அமெரிக்கா
இ) ஆஸ்திரேலியா
ஈ) கனடா
விடை:
அ) வட அமெரிக்கா

Question 4.
பேரென் தீவு கடைசியாக ___________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
அ) 1997
ஆ) 2007
இ) 2017
ஈ) 1987
விடை:
இ) 2017

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 5.
உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை ____________
அ) மவுனாலோ
ஆ) செயின்ட் ஹெலன்
இ) ஸ்டாராம் போலி
ஈ) பினாடுபோ
விடை:
அ) மவுனாலோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
எரிமலைகள் பற்றி அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் ______________ என அழைக்கப்படுகின்றனர்.
விடை:
எரிமலை ஆய்வியலாளர்கள்

Question 2.
எரிமலை மீண்டும் வெடித்து கூம்பு வட்டக் குன்றின் உச்சியில் தோற்றுவிக்கும் பெரிய பள்ளம் ____________
விடை:
வட்ட எரிமலைவாய்

Question 3.
எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகள் ____________ எனப்படும்.
விடை:
எரிமலை ஆய்வியல்

Question 4.
புவியின் சுற்றளவு _____________ கி.மீ ஆகும்.
விடை:
6371

Question 5.
கவசமானது சுமார் _____________ கி.மீ தடிமனாக காணப்படுகிறது.
விடை:
2900

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 7
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 8

IV. சரியா? தவறா?

Question 1.
கடல் தரைகள் பகுதி பசால்ட் பாறைகளாலானது
விடை:
சரி

Question 2.
ஜப்பானிய கடலோரப் பகுதிகளில் சுனாமியின் உருவாக்கம் பொதுவாகக் காணப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
உலகில் 68 % நிலநடுக்கங்கள் பசிபிக் வளைய பகுதியில் ஏற்படுகின்றன.
விடை:
சரி

Question 4.
எரிமலை வெடிப்பு வெளியேற்றத்துக்கு எடுத்துக்காட்டு கரக்காட்டாவோ தீவிலுள்ள எரிமலை ஆகும்.
விடை:
சரி

Question 5.
பேரன் தீவு அந்தமான் கடலில் உள்ளது.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : சிலிகா அதிகமுள்ள அமில லாவா வேகமாகப் படிகின்றது.
காரணம் : செயல்படாத எரிமலைகள் அதிக செயல்பாடு கொண்டவை. அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள்.
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

Question 2.
கூற்று : புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி ரிக்டர் ஆகும்
காரணம் : சுனாமி கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உண்டாகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
இ) கூற்றும் தவறு ஆனால் காரணம் சரி

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 9
விடை:
புவிமேலோடு – அஸ்தினோஸ்பியர்

VII. பொருத்தமில்லாதாதைக் கண்டுபிடி,

Question 1.
புவிமேலோடு, புவிக்கரு, எரிமலைப்பள்ளம், கவசம்
விடை:
எரிமலைப் பள்ளம்

Question 2.
சியால் (SIAL), நைஃப் (NIFE), சிமா (SIMA), எபின் (EFIN)
விடை:
எபின் (EFIN)

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி:

Question 1.
மூன்று வகையான நிலநடுக்க அலைகளைப் பெயரிடு.
விடை:
மூன்று வகையான நிலநடுக்க அலைகள்:

  • P – அலைகள் (அழுத்த அலைகள்)
  • S – அலைகள் (முறிவு அலைகள்)
  • L – அலைகள் (மேற்பரப்பு அலைகள்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
மென் அடுக்கு (மென் பாறைக் கோளம்) என்றால் என்ன?
விடை:
மென் பாறைக் கோளம் :
புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதியே மென்பாறைக் கோளம் எனப்படும்.

Question 3.
“நீல நிறக் கோள்” குறித்து எழுதுக.
விடை:
நீல நிறக் கோள்:

  • பூமியின் பரப்பு 71% நீரால் சூழப்பட்டுள்ளது.
  • பூமி நீல நிறக்கோள் ‘ என அழைக்கப்டுகிறது.

Question 4.
புவியின் நகர்வுகளை அதன் ஆக்க சக்திகளின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
ஆக்க சக்திகளின் அடிப்படையில் புவி நகர்வுகள் :

  • புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்
  • புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள்

Question 5.
நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவு என்ன?
விடை:
நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவு: புவியின் மேலோட்டில் பிளவு மற்றும் விரிசல்கள் கொண்ட ஒரு பகுதி பிளந்து, கீழ் இறங்குவதே நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவாகும்.

IX. விரிவான விடை தருக.

Question 1.
‘கண்டத்தட்டு நகர்வுகள் குறித்து எழுதுக
விடை:
கண்டத்தட்டு நகர்வுகள் :
கற்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகளை கற்கோள தட்டுகள் என்கிறோம்.

கற்கோள தட்டுகளின் (கண்டத்தட்டுகள் அல்லது கடற் தட்டுகள்) நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.

புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பமானது இத்தட்டுகளின் இயக்க சக்தியாக செயல்படுகிறது. இத்தட்டுகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன.

சிற்சில பகுதிகளில் தட்டுகள் ஒன்றிலிருந்து மற்ஹான்று விலகிச் செல்கின்றன. சிற்சில பகுதிகளில் ஒன்று மற்றொன்றின் அருகாமையில் நெருங்கிவரும்போது மோதிக் கொள்கின்ளன.

ஒரு கடற்தட்டு கண்டத்தட்டின் மீது போதும் போது கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் எரிமலைகளாக உருவெடுக்கின்றது. சமயங்களில் தட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன. இமயமலைச் சிசரங்கள் உருவானது இவ்வகையில்தான்.

புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்

புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள் என புவியின் நகர்வுகளை ஆக்க சக்தியின் அடிப்படையில் பிரிக்கலாம்.

Question 2.
எரிமலை வெடிப்பின் விளைவுகள் யாவை?
விடை:
எரிமலை வெடிப்பின் விளைவுகள் :

  • புவியின் உள் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது 35 மீட்டருக்கு 1° செ ஆக உயர்ந்து கொண்டே வருகிறது.
  • வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது. 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சதுர செ.மீக்கு 5 டன்கள் என்ற அளவில் உயருகின்றது.
  • இத்தகைய நிலையில் புவியின் உள்ளே பாறைக் குழம்பு மிதமான இளகிய நிலையில் உள்ளது. இதுவே மாக்மா ஆகும். மிகுதியான அழத்த நிலையில் மாக்மாவானது எளிதில் பற்றக் கூடிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.
  • இத்திறன் காரணமாகவே ஆற்றலற்ற புவிப்பகுதிகளில் மாக்மா பாறைக்குழம்பு வெடித்து வெளியேறுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
மத்திய தரைக்கடல் – இமயமலை நிலநடுக்கம் பகுதி குறித்து எழுது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்கள் பற்றி கூறுக.
விடை:
மத்திய தரைக்கடல் – இமயமலை நிலநடுக்கப்பகுதி:

  1. உலகின் 31% நிலநடுக்கங்கள் ஆசியா கண்டத்தில் உள்ள இமயமலைப் பகுதியிலும் வடமேற்கு சீனாவிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதி வரையிலும் ஏற்படுகின்றன.
  2. இந்தியாவின் இமயமலைப் பகுதிகள், கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகள் நிலநடுக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
  3. அதிக எண்ணிக்கையிலுள்ள நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. மோசமான மற்றும் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டதாக உணரப்பட்டுள்ளது.
  4. உத்திரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1991)
  5. சாமோலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1999)
  6. நிலநடுக்கப் பாதிப்புகள் அற்ற பகுதிகளாக சொல்லப்பட்ட தக்காண பீடபூமியிலேயே இரண்டு மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
  7. கெய்னாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1967)
  8. லாத்தூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1993)

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 10

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

6th Social Science Guide நிலப்பரப்பும், பெருங்கடல்களும் Text Book Back Questions and Answers

I. புத்தக வினாக்கள்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
மிகச் சிறிய பெருங்கடல்
அ) பசிபிக் பெருங்கடல்
ஆ) இந்தியப் பெருங்கடல்
இ) அட்லாண்டிக் பெருங்கடல்
ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்
விடை:
ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்

Question 2.
மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது
அ) பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ) பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
இ) பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
ஈ) பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
விடை:
இ) பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 3.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
அ) பசிபிக் பெருங்கடல்
ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) ஆர்க்டிக்பெருங்கடல்
விடை:
ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்

Question 4.
உறைந்த கண்டம்
அ) வட அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) அண்டார்டிகா
ஈ) ஆசியா
விடை:
இ) அண்டார்டிகா

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
உலகின் மிகப் பெரிய கண்டம் _____
விடை:
ஆசியா

Question 2.
இந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி _______
விடை:
சோட்டா நாகபுரி

Question 3.
பெருங்கடல்களில் மிகப்பெரியது _______
விடை:
பசிபிக் பெருங்கடல்

Question 4.
டெல்டா ______ நிலை நிலத்தோற்றம்
விடை:
மூன்றாம் நிலை

Question 5.
தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது ______
விடை:
ஆஸ்திரேலியா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

இ. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, (இலங்கை)
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 20

Question 2.
ஆர்க்டிக்பெருங்கடல், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 21

Question 3.
பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 22

Question 4.
வங்காள விரிகுடா , பேரிங் கடல், சீனாக் கடல், தாஸ்மானியா கடல்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 23

Question 5.
ஆண்டிஸ், ராக்கி, எவரெஸ்ட், இமயமலை
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 24

ஈ. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 25

உ. (i) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சமவெளிகள் ஆறுகளால் தோற்றுவிக்கப்படுகின்றன.
2. இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி சான்ட்விச் அகழி.
3. பீடபூமிகள் வன்சரிவைக் கொண்டிருக்கும்.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
அ) 1 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2, மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
அ) 1 மற்றும் 3

உ. ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

கூற்று 1: மலைகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
கூற்று 2: மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி.
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரி

ஊ. ஒரு வார்த்தையில் விடையளி.

Question 1.
உலகின் உயரமான பீடபூமி எது?
விடை:
திபெத்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 2.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம் எவை?
விடை:
மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்.

Question 3.
ஒரு நாட்டின் பெயரைக் கொண்டுள்ள பெருங்கடல் எது?
விடை:
இந்தியப் பெருங்கடல்.

Question 4.
அரபிக் கடலில் உள்ள தீவுகள் யாவை?
விடை:
மாலத்தீவு, மினிகாய் தீவு.

Question 5.
கடலிலுள்ள ஆழமான பகுதி யாது?
விடை:
அகழி

எ. சுருக்கமான விடையளி:

Question 1.
கண்டம் என்றால் என்ன?
விடை:

  • மிகப்பெரும் நிலப்பரப்பினை கண்டங்கள் என அழைக்கிறோம்
  • உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன.
  • எடுத்துக்காட்டு: ஆசியா, ஐரோப்பா

Question 2.
அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?
விடை:
அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வட அமெரிக்காவும், தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன.

Question 3.
பெருங்கடல் என்றால் என்ன?
விடை:

  • மிகப்பரந்த நீர்ப்பரப்பினை பெருங்கடல்கள் என அழைக்கிறோம்
  • புவியில் ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும்.

Question 4.
பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுது?
விடை:

  1. ஆசியா
  2. ஆப்பிரிக்கா
  3. வட அமெரிக்கா
  4. தென் அமெரிக்கா
  5. அண்டார்டிகா
  6. ஐரோப்பா
  7. ஆஸ்திரேலியா.

Question 5.
வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?
விடை:
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

ஏ. வேறுபாடறிக

Question 1.
மலை – பீடபூமி மலை .
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 50

Question 2.
பெருங்கடல் – கடல்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 51

ஐ. விரிவான விடையளி

Question 1.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக
விடை:
பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. இந்நிலத் தோற்றங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். > முதல் நிலை நிலத்தோற்றங்கள்

  • இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்
  • மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் முதல் நிலை நிலத்தோற்றங்கள்
  • கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்

முதல் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.

  • மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனவும், பரந்த நீர்ப்பரப்பு பெருங்கடல்கள் எனவும் அழைக்கப்படும். உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா,ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா.
  • ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்

  • மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
  • சுற்றுப்புற நிலப்பகுதியை விட 600 மீ.க்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும்.
  • சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீட பூமி ஆகும். இவை மலைகளைப் போன்று சரிவுகளைக் கொண்டது.
    எடுத்துக்காட்டு: திபெத் பீடபூமி, சோட்டா நாகபுரி பீடபூமி
  • சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும். இது 200மீ.க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம்.
  • எடுத்துக்காட்டு: கங்கைச் சமவெளி

மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்

  • ஆறுகள், பனியாறுகள், காற்று, கடல் அலைகள் போன்றவற்றின் அரித்தல் மற்றும் படியவைத்தல் செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
  • எடுத்துக்காட்டு: கடற்கரை, மணல் குன்று.

Question 2.
பீடபூமி பற்றிக் குறிப்பு வரைக
விடை:

  • சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
  • இவை மலைகளைப் போன்று வன்சரிவுகள் கொண்டவை.
  • பீடபூமிகள் நூறு மீட்டரிலிருந்து பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன.
  • உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும்.
  • பீடபூமிகளில் கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் சோட்டா நாகபுரி பீடபூமி கனிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
    தென்னிந்தியாவிலுள்ள தக்காண பீடபூமி எரிமலைப் பாறைகளால் ஆனது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 3.
சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.
விடை:

  • சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும்.
  • சமவெளிகள் ஆறுகள், துணை ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகளால் உருவாக்கப் படுகின்றன.
  • இங்கு வளமான மண்ணும், நீர்ப்பாசனமும் காணப்படுகிறது.
  • இதனால் வேளாண்மை தழைத்தோங்குகிறது.
  • எனவே மக்கள் வாழ்வதற்கு சமவெளி ஏற்றதாய் அமைகிறது. இதனால் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக சமவெளிகள் விளங்குகின்றன.

Question 4.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.
விடை:

  • புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
  • புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
  • பசிபிக் பெருங்கடலின் மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும் கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன.
  • இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது.
  • முக்கோண வடிவத்தின் மேற்பகுதி பெரிங் நீர்ச்சந்தியில் காணப்படுகிறது.
  • புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
  • பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் “நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.

Question 5.
பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை விளக்குக.
விடை:

  • பெருங்கடல்கள் முதல் நிலை நிலத்தோற்றமாகும்.
  • புவியில் மேற்பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.
  • பெருங்கடல்கள் மனித வாழ்வில் கால நிலையிலிருந்து அவன் உண்ணும் உணவு வரை தீர்மானிக்கின்றன.
  • பேராழிகள் வளமான புரதச் சத்து மிகுந்த மீன் உணவினைக் கொண்டுள்ளது.
  • பேராழிகள் உப்பு, மதிப்பு மிக்க உலோகங்கள், பெட்ரோலியம், முத்து, வைரம் போன்ற உலோகங்களைக் கொண்டுள்ளன.
  • கடல் நீரோட்டங்கள் அண்மைப் பகுதிகளின் காலநிலையைப் பாதிக்கின்றன.
  • கடல் வணிகம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • கடல் நீரோட்டங்களை மின்னாற்றலாக மாற்ற இயலும்

ஒ. கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளி :

Question 1.
இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
விடை:
மணல் குன்று

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 100

Question 2.
இது எவ்வகை நிலத்தோற்றம்?
விடை:
மூன்றாம் நிலத்தோற்றம்

Question 3.
இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது?
விடை:
படிய வைத்தல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

ஓ. i) செயல்பாடு (மாணவர்களுக்கானது)

அ) அருகில் உள்ள குறிப்பிடத்தக்க ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்திற்குக் களப் பயணம் மேற்கொள்க.
ஆ) நிலத்தோற்றம் மற்றும் பெருங்கடல்கள் பற்றி வினாடி வினா நடத்துதல்.

ஓ. ii. செயல்பாடு

Question 1.
நிலவரைபடப் புத்தகத்தைப் பயன்படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்பவும்
விடை:
அ) விரிகுடா – வங்காள விரிகுடா, ஹட்சன் விரிகுடா, ஜமைக்கா விரிகுடா
ஆ) வளைகுடா – பாரசீக வளைகுடா, மெக்ஸிகோ வளைகுடா, மன்னார் வளைகுடா
இ) தீவு – ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, லட்சத்தீவு.
ஈ) நீர்ச்சந்தி – பாக் நீர்ச்சந்தி, பேரிங் நீர்ச்சந்தி, ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி

Question 2.
கீழ்க்கண்டவற்றை நிலவரைப்பட புத்தக உதவியுடன் கண்டுபிடிக்கவும்
அ) இந்தியாவின் கிழக்கில் உள்ள கடல்
விடை:
வங்காள விரிகுடா

ஆ) அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கில் உள்ள கண்டங்கள்
விடை:
வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா

இ) ஆர்க்டிக் பெருங்கடலின் தெற்கில் உள்ள கண்டங்கள்
விடை:
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா

ஈ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள நீர்ச்சந்தி
விடை:
பாக் நீர்ச்சந்தி

உ) ஆஸ்திரேலியாவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள்
விடை:
இந்தியப்பெருங்கடல், பசிபிக்பெருங்கடல்

ஊ) நிலச்சந்திகளை கண்டுபிடிக்கவும்
விடை:
பனாமா நிலச்சந்தி, அவலான் நிலச்சந்தி, லாடியூன் நிலச்சந்தி

6th Social Science Guide நிலப்பரப்பும், பெருங்கடல்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சர்வதேச மலைகள் தினம்
அ) ஜுன் 15
ஆ) ஏப்ரல் 11
இ) நவம்பர் 11
ஈ) டிசம்பர் 11
விடை:
ஈ) டிசம்பர் 11

Question 2.
எவரெஸ்ட்சிகரம் இங்கு அமைந்துள்ளது
அ) இந்தியா
ஆ) நேபாளம்
இ) பூடான்
ஈ) பாகிஸ்தான்
விடை:
ஆ) நேபாளம்

Question 3.
உலகிலேயே உயரமான பீடபூமி
அ) லடாக் பீடபூமி
ஆ) திபெத் பீடபூமி
இ) தக்காண பீடபூமி
ஈ) சோட்டா நாகபுரி பீடபூமி
விடை:
ஆ) திபெத் பீடபூமி

Question 4.
பின்வருவனவற்றுள் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம் அல்ல
அ) சமவெளிகள்
ஆ) பீடபூமிகள்
இ) பள்ளத்தாக்குகள்
ஈ) மலைகள்
விடை:
இ)பள்ளத்தாக்குகள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 5.
பசிபிக் பெருங்கடலையும் ஆர்டிக் பெருங்கடலையும் இணைப்பது
அ) பேரிங் நீர்ச்சந்தி
ஆ) மெகல்லன் நீர்ச்சந்தி
இ) ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
ஈ) பாக் நீர்ச்சந்தி
விடை:
அ) பேரிங் நீர்ச்சந்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாஞ்சியாவைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பு _____.
விடை:
பான்தலாசர்

Question 2.
கண்டங்களில் மிகச்சிறியது ______
விடை:
ஆஸ்திரேலியா

Question 3.
பெருங்கடல்களில் மிகச்சிறியது ______
விடை:
ஆர்டிக் பெருங்கடல்

Question 4.
உலகத்தின் கூரை எனப்படுவது ______
விடை:
திபெத் பீடபூமி

Question 5.
இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி ______
விடை:
ஜாவா அகழி

Question 6.
உலகின் மிக உயரமான சிகரம் _____
விடை:
எவரெஸ்ட்

III. சுருக்கமான விடை தருக:

Question 1.
நிலச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக்கூடியதும் இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக் கூடியதுமான மிகக் குறுகிய நிலப்பகுதி நீர்ச்சந்தி ஆகும்.

Question 2.
தமிழ் நாட்டிலுள்ள கோடைவாழிடங்கள் சிலவற்றைக் கூறு?
விடை:

  1. உதகமண்ட லம்
  2. கொடைக்கானல்
  3. கொல்லி மலை
  4. ஏற்காடு
  5. ஏலகிரி

Question 3.
மலைகளின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்
விடை:

  • மலைகள் ஆறுகள் உற்பத்தியாகும் இடமாகத் திகழ்கின்றன.
  • நீராவி நிரம்பிய காற்றினைத்தடுத்து மழைப் பொழிவைத் தருகின்றன.
  • தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றன.
  • மலைகளில் சுற்றுலாத்தலங்களும், கோடை வாழிடங்களும் அமைந்துள்ளன.

Question 4.
மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
  • இச்செயல்களால் மலைகள், பீடபூமி மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலைத்தோற்றங்கள் ஆகும்.

Question 5.
இந்தியப் பெருங்கடல் பற்றி சில வரிகள் எழுதுக.
விடை:

  • புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் இந்தியப் பெருங்கடல் ஆகும்.
  • இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால் இக்கடல் இப்பெயரைப் பெற்றுள்ளது.
  • இது முக்கோண வடிவமானது.
  • இப்பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள், மாலத் தீவுகள், இலங்கை மொரிஷியஸ் போன்ற பல தீவுகள் உள்ளன.
  • இப்பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழியாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 90