Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
அ) விஜயாலயன்
ஆ) முதலாம் ராஜராஜன்
இ) முதலாம் ராஜேந்திரன்
ஈ) அதிராஜேந்திரன்
விடை:
அ) விஜயாலயன்

Question 2.
கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
அ) கடுங்கோன்
ஆ) வீரபாண்டியன்
இ) கூன்பாண்டியன்
ஈ) வரகுணன்
விடை:
அ) கடுங்கோன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
அ) மண்ட லம்
ந ஆ) நாடு
இ) கூற்றம்
ஈ) ஊர்
விடை:
ஈ) ஊர்

Question 4.
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) வீர ராஜேந்திரன்
ஆ) ராஜாதிராஜா
இ) ஆதி ராஜேந்திரன்
ஈ) இரண்டாம் ராஜாதிராஜா
விடை:
இ) ஆதி ராஜேந்திரன்

Question 5.
சோழர்களின் கட்டக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
அ) கண்ணாயிரம்
ஆ) உறையூர்
இ) காஞ்சிபுரம்
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஈ) தஞ்சாவூர்

Question 6.
கீழக்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
அ) சோழமண்டலம்
ஆ) பாண்டிய நாடு
இ) கொங்குப்பகுதி
ஈ) மலைநாடு
விடை:
ஆ) பாண்டிய நாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
_______________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2.
_______________ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Question 3.
_____________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை:
ஐடில பராந்தக நெடுஞ்சடையன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________ என அறியப்பட்டது.
விடை:
எழுத்து மண்டபம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 3

IV. சரியா? தவறா?

Question 1.
டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.
விடை:
சரி

Question 2.
‘கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.
விடை:
சரி

Question 3.
சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
தவறு – காவிரியின் கழிமுகப் பகுதி

Question 4.
முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
விடை:
சரி

Question 5.
சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க

பொருத்தமான விடையை (✓ டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்

அ) i), ii) மற்றும் iii)
ஆ) ii), iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) i), iii) மற்றும் iv)
விடை:
இ) i), ii) மற்றும் iv)

Question 2.
ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

அ) i) மற்றும் ii)
ஆ) iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 3.
கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம் : நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
1. நாடு
2. மண்ட லம்
3. ஊர்
4. கூற்றம்
விடை:
1. மண்டலம்
2. நாடு
3. கூற்றம்
4. ஊர்

Question 5.
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
1) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
2) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
3) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
4) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன்.
5) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
6) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை:
4, 1, 2, 5, 6, 3

Question 6.
கண்டுபிடிக்கவும்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 4
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 5

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
விடை:

  • சந்தனக் கட்டை
  • கருங்காலிக் கட்டை
  • சுவையூட்டும் பொருட்கள்
  • விலையுயர்ந்த ஆபரணக் கற்கள்
  • மிளகு
  • எண்ணெய்
  • நெல்
  • தானியங்கள்
  • உப்பு

Question 2.
‘சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
விடை:
பாண்டிய அரசர்களும், உள்ளூர் தலைவர்களும் பிராமணர்கள் குடியிருப்புகளை உருவாக்கினர். அக்குடியிருப்புகள் சதுர்வேதி மங்கலம்’ என அழைக்கப்பட்டன.

Question 3.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
விடை:

  • சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
  • மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
  • இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூலிக்கப்பட்டது.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

Question 1.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
விடை:

  • சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்ற சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு மிகச் சிறந்த அம்சமாகும்.
  • சோழ மன்னர்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பல வாய்க்கால்களை வெட்டினர்.
  • அவர்கள் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டினர்.
  • நடனம், இசை, நாடகம், கட்டக்கலை மற்றும் ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
  • சோழப் பேரரசர்கள் கல்விப்பணிக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். பல கல்லூரிகளை நிறுவினர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
‘சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ – இக்கூற்றை உறுதி செய்க.
விடை:

  • சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
  • முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார். அங்கு 14 ஆசிரியர்கள் மற்றும் 340 மாணவர்கள் இருந்தனர்.
  • அங்கு வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
  • திருபுவனை, திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன
  • பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணமும் சோழர் காலத்தவையேயாகும்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

நான் யார்?
1. மாலிக்கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு நானே பொறுப்பு.
2. நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன்.
3. நான் நீர் விநியோகம் செய்வதற்காகக் கட்டப்பட்டவன்.
4. நான் திருமுறையைத் தொகுத்தேன்.
5. நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம். மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 6

X. கட்டக வினாக்கள்

Question 1.
சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களை எழுதுக.
விடை:
கொற்கை

Question 2.
முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?
விடை:
பெரிய புராணம், கம்பராமாயணம்

Question 3.
காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன?
விடை:
தங்க நாணயங்கள்

Question 4.
காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை:
தூத்துக்குடி

Question 5.
முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்?
விடை:
இரண்டாம் ராஜ சிம்மன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 6.
புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது?
விடை:
மதுரை

XI. களப்பயணம் (மாணவர்களுக்கானது)

Question 1.
சோழர்கள் அல்லது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று அதன் உன்னதத்தைப் பார்க்கவும்.

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.
அ) அரிகேசரி
ஆ) முதலாம் பராந்தகர்
இ) விஜயாலயர்
ஈ) இரண்டாம் ராஜசிம்மர்
விடை:
அ) அரிகேசரி

Question 2.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
அ) புத்த சமயம்
ஆ) சமணமதம்
இ) சைவ சமயம்
ஈ) வைஷ்ணவம்
விடை:
இ) சைவ சமயம்

Question 3.
பாண்டியர்களின் தலைநகர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஆ) மதுரை

Question 4.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
அ) மார்க்கோபோலோ
ஆ) மெகஸ்தனிஸ்
இ) அல்பரூனி
ஈ) யுவான் சுவாங்
விடை:
அ) மார்க்கோபோலோ

Question 5.
மார்க்கோபோலோ ___________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
அ) சீனா
ஆ) வெனிஸ்
இ) கிரீஸ்
ஈ) போர்ச்சுகல்
விடை:
ஆ) வெனிஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் __________
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2
கங்கை கொண்டான் எனப் பெயர் பெற்றவர் ___________.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
குந்தவை ___________ னின் மகளாவார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 4.
பாண்டியர்களின் காலத்தில் நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் ____________ என அழைக்கப்பட்டனர்.
விடை:
பூமி புத்திரர்

Question 5.
வீரசோமேஸ்வரரை சுந்தர பாண்டியன் ____________ என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தார்.
விடை:
கண்ணனூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 7

IV. சரியா? தவறா?

Question 1.
முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரனின் மகன் ஆவார்.
விடை:
தவறு (தந்தை)

Question 2.
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அரசுரிமை பரம்பரை இயல்புடையதாய் இருந்தது.
விடை:
சரி

Question 3.
சோழர்கள் காலத்தில் விளைச்சலில் 1/5 பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
விடை:
தவறு (1/3 பகுதி)

Question 4.
நாயன்மார்கள் சைவ சமணத்தினர்கள் ஆவர்
விடை:
சரி

Question 5.
மதுரை பொதுமக்களால் கூடல்’ என்று போற்றப்பட்டது.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:

பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
1) பிற்காலப் பாண்டியர் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை.
2) அவர்கள் ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர். .
3) அவர்கள் புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினர்
4) மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சாவூரில் உள்ளது.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1, 2 மற்றும் 3 சரி
இ) மேற்கூறிய எல்லாம் சரி
ஈ) 1, 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1, 2 மற்றும் 3 சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 2.
கூற்று : சுந்தர பாண்டியன் தனது தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
காரணம் : மாறவர்மன் குலசேகரன் தனது மகன் வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 8
விடை:
காணிக்கடன் – சொத்துவரி

VII. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
காசு, கழஞ்சு, பொன், தங்கம்
விடை:
தங்கம்

Question 2.
மிளகு, எண்ணெய், ஆபரணக்கற்கள், ஏலம்
விடை:
ஏலம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
குடவோலை முறை – சிறு குறிப்பு வரைக.
விடை:
சோழ அரசில் கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்முறையில் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும்.

ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதிலுள்ள பெயர்வாசிக்கப்படும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இம்முறையின் படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்.

Question 2.
முதலாம் குலோத்துங்கள் யார்?
விடை:

  • முதலாம் ராஜராஜ சோழரின் மகளான குந்தவையை சாளுக்கிய இளவரசரான விமலாதித்தியன் மணந்தார்.
  • அவர்களின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா இ தேவியை மணந்தார். இவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கள் ஆவார்.

Question 3.
பிற்காலச் சோழர்கள் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
யானைத் தந்தங்கள் பவழம், சங்குகள், ஒளி புகும், புகாக் கண்ணாடிகள், பாக்கு, ஏலம், வர்ணப்பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள்

Question 4.
பாண்டிய மன்னர்கள் செய்த யாகங்கள் யாவை?
விடை:

  • அஸ்வமேத யாகம்
  • ஹிரண்ய கர்ப்பம்
  • வாஜ்பேய வேள்வி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 5.
மாலிக்கபூர் ஏன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார்?
விடை:

  • மாறவர்மன் குலசேகரன் தனது மகனான வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.
  • இதனால் தனது தந்தை மீது வெறுப்புற்ற இவரது இன்னொரு மகனான சுந்தர பாண்டின் தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
  • தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப்போரில் வீரபாண்டியன் சுந்தர பாண்டியனைத் தோற்கடித்தார்.
  • தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்குச் சென்று அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலமானார்.
  • இதனால் அலாவுதீன் கில்ஜி தனது படைத்தளபதியான மாலிக்கபூரை பாண்டியநாட்டின் மீது படையெடுக்கும்படி அனுப்பிவைத்தார்.

IX. விடையளிக்கவும்.

Question 1.
முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் பெருமைகளை விளக்குக.
விடை:
முதலாம் ராஜராஜன்

  • சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற அரசர் முதலாம் ராஜராஜன் ஆவார்.
  • இவர் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை வென்றார்.
  • இலங்கை வரை சோழர்களின் ஆட்சியை விரிவடையச் செய்தார்.
  • தஞ்சாவூர் பிரகதிஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார்.

முதல் ராஜேந்திரன்:

  • முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது.
  • இவர் கங்கைப் பகுதியை வென்றார். இதனால் கங்கை கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
  • கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டினார்.
  • ஸ்ரீ விஜயப் பேரரசைக் கைப்பற்றினார்.
  • இவரது காலத்தில் கடல் கடந்த வணிகம் சிறப்பாக நடைபெற்றது.

Question 2.
சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.
விடை:

  • உள்ளாட்சி நிர்வாகம் ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகள் மூலம் செயல்பட்டது.
  • விவசாயிகளின் குடியிருப்புகள் ஊர்கள் என அழைக்கப்பட்டன.
  • பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் நீதி, நிதி மற்றும் பொது நிர்வாகங்களை மேற்கொண்டனர்.
  • வணிகர்களின் குடியிருப்பை நகரத்தார் நிர்வகித்தனர்.
  • கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.
  • ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
பாண்டியர்கள் கோவில் கட்டடக் கலைக்கு ஆற்றிய பணிகள் யாவை?
விடை:

  • இடைக்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் ஒன்றையும் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர்.
  • புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர்.
  • பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக் கல்தூண்களைக் கட்டினர்.
  • சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.
  • பாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பேராதரவு நல்கினர்.
  • புதிய கோபுரங்களையும்மண்டபங்களையும் கட்டி இக்கோவிலைத்தொடர்ந்து விசாலப்படுத்தினர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 9
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 10