Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7th Social  Science Guide இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
……………….. என்பவை பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
அ) காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நாணயங்கள்
ஈ) பொறிப்புகள்
விடை:
ஈ) பொறிப்புகள்

Question 2.
கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ………………… ஆகும்.
அ) வேளாண்வகை
ஆ) சாலபோகம்
இ) பிரம்மதேயம்
ஈ) தேவதானம்
விடை:
ஈ) தேவதானம்

Question 3.
………………… களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
அ) சோழர்
ஆ) பாண்டியர்
இ) ராஜபுத்திரர்
ஈ) விஜயநகர அரசர்கள்
விடை:
அ) சோழர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 4.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ……………….. ஆகும்.
அ) அயினி அக்பரி
ஆ) தாஜ் – உல் – மா – அசிர்
இ) தசுக் – இ – ஜாஹாங்கீரி
ஈ) தாரிக் – இ – பெரிஷ்டா
விடை:
ஆ) தாஜ் – உல் – மா – அசிர்

Question 5.
அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ………….. ஆவார்.
அ) மார்க்கோபோலோ
ஆ) அல் – பரூனி
இ) டோமிங்கோ பயஸ்
ஈ) இபன் பதூதா
விடை:
ஈ) இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………… கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
விடை:
உத்திரமேரூர்

Question 2.
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ……………. ஆவார்
விடை:
முகமது கோரி

Question 3.
ஒரு ……………….. என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது
விடை:
ஜிட்டல்

Question 4.
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் ………………… ஆவார்
விடை:
மின்கஜ் உஸ் சிராஜ்

Question 5.
கி.பி 1420 இல் விஜயநகருக்கு வருகை புரிந்த இத்தாலியப் பயணி ……………. ஆவார்
விடை:
நிகோலோ கோண்டி

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 2

IV. சரியா? தவறா?

Question 1.
பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.
விடை:
தவறு (பொருளாதார நிலை)

Question 3.
தாமிரத்தின்விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவைநிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.
விடை:
சரி

Question 4.
டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி 1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.
விடை:
தவறு (விஜயநகரப் பேரரசுக்கு வருகை புரிந்தார்)

V. கூற்று மற்றும் காரணம்

அ) கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை ழக் (✓) இட்டுக் காட்டவும்.

கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

ஆ) தவறான இணையைக் கண்டறியவும் :
1. மதுரா விஜயம் – கங்கா தேவி
2. அபுல் பாசல் – அயினி அக்பரி
3. இபன் பதூதா – தாகுயூக் – இ – ஹிந்த்
4. அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்
விடை:
3. இபன் பதூதா – தாகுயூக் – இ – ஹிந்த்

இ) பொருந்தாததைக் கண்டுபிழ.
அ) பொறிப்புகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நினைவுச் சின்னங்கள்
ஈ) நாணயங்கள்
விடை:
ஆ) பயணக்குறிப்புகள்

VI. ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்.

Question 1.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
விடை:
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி என்பவர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
விடை:
சுய சரிதை

Question 3.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
விடை:
தசுக் – இ – ஜஹாங்கீரி

Question 4.
வரலாற்றை அறிந்து கொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
விடை:

  • முதல் நிலைச் சான்றுகள்
  • இரண்டாம் நிலைச் சான்றுகள்

Question 5.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய திகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும்.
விடை:
மசூதிகள்:

  1. குவ்வத் – உல் – இஸ்லாம் மசூதி
  2. மோத் – கி – மசூதி
  3. ஜமா மசூதி
  4. பதேப்பூர் சிக்ரி தர்கா
  5. சார்மினார்.

கோட்டைகள்:

  1. ஆக்ரா கோட்டை
  2. சித்தூர் கோட்டை
  3. குவாலியர் கோட்டை
  4. டெல்லி செங்கோட்டை
  5. தௌலதாபாத் மற்றும் பிரோஷ் கொத்தளம்

Question 6.
இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த முக்கியமான அயல் நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
விடை:

  • மார்கோபோலா
  • அல்பரூனி
  • இபன் பதூதா
  • நிகோலோ கோண்டி
  • அப்துல் ரஸாக்
  • டோமிங்கோ பயஸ்

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

Question 1.
டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
விடை:

  • டெல்லி சுல்தான்கள் பலவகையான நாணயங்களை வெளியிட்டனர்.
  • தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களை வெளியிட்டனர்.
  • ஜிட்டல் எனப்படும் செம்பு நாணயங்களும், டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களும் வெளியிடப்பட்டன.
  • நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள படங்களும், உருவங்களும், அரசர்களுடைய பெயர்கள், பட்டங்கள் அவர்களின் உருவப்படங்கள், நிகழ்வுகள், இடங்களின் பெயர்கள் சின்னங்கள் ஆகி யவற்றை நமக்கு உணர்த்துகின்றன.
  • அரசர்களின் இராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்பு மற்றும் சமய நம்பிக்கை ஆகியவையும் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன.
  • நாணயங்களில் உள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்து விளக்குகின்றது.
  • அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள் நாட்டின் பொருளாதார வளத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • அதேபோன்று முகமது பின்துக்ளக்கின் செப்பு நாணயங்கள் நாட்டின் நலிவு நிலையைக் காட்டுகின்றன.

VIII. கட்டக வினாக்கள்

Question 1.
…………. பேரரசர் ஒளரங்கசீப்பின் காலத்தைச் அரசவை அறிஞர் ஆவார்.
விடை:
காஃபி கான்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
திருவாலங்காடு செப்பேடுகள் ………………….. சேர்ந்ததாகும்.
விடை:
முதலாம் இராஜேந்திர சோழன்

Question 3.
……………….. என்பது கல்விக் கூடங்களைப் பராமரிப்பதற்கான நிலமாகும்.
விடை:
சாலபோகம்

Question 4.
பெரியபுராணத்தைத் தொகுத்தவர் ………………… ஆவார்.
விடை:
சேக்கிழார்

Question 5.
………………… ஓர் அரேபியச் சொல். இதன் பொருள் வரலாறு’ என்பதாகும்.
விடை:
தாரிக்

Question 6.
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கே அமைந்திருந்த …………….. க்கு மாற்றினார்.
விடை:
தேவகிரி

IX. உயர் சிந்தனை வினா வது

Question 1.
“நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.” விளக்குக.
விடை:

  • பழங்கால அரசர்களால் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
  • செப்பு நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க நாணயங்களை அவர்கள் வெளியிட்டனர்.
  • உண்மையிலேயே உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பை எடுத்துக் காட்டும் ஓர் அளவு கோல் ஆகும்.
  • அலாவுதீன் கில்ஜி போன்ற அரசர்கள் தங்க நாணயங்களை வெளியிட்டனர். இது அவர்களின் செல்வச் செழிப்பையும், உயர்ந்த பொருளாதார நிலையையும் உணர்த்துகிறது.
  • இம்மன்னர்கள் காலத்தில் தங்கம் தாராளமாகக் கிடைத்திருக்கிறது.
  • ஆனால் முகமது பின் துக்ளக் போன்ற மன்னர்களின் காலத்தில் நாட்டில் அமைதியும் செழிப்பும் இல்லை. எனவே அவர் தோல் நாணயங்களை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
  • இவ்வாறு நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார செழிப்பைக் காட்டுகிறது என்பதை அறியலாம்.

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இடைக்கால இந்தியாவின் அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய செருகேடு (ஆல்பம்) ஒன்றைத் தயார் செய்யவும்.

XI. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
உனது நகரத்தில் அல்லது கிராமத்திலுள்ள நூல்களிலிருந்து அங்குக் கிடைக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலைச் சான்றுகளைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றைத் தயார் செய்யவும்.

7th Social  Science Guide இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
அ) வேளாண்வகை
ஆ) பிரம்ம தேயம்
இ) சாலபோகம்
ஈ) தேவதானம்
விடை:
அ) வேளாண்வகை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
அ) நீதி நிர்வாகம்
ஆ) நிதி நிர்வாகம்
இ) கிராம நிர்வாகம்
ஈ) இராணுவ நிர்வாகம்
விடை:
இ) கிராம நிர்வாகம்

Question 3.
வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்.
அ) சோழர்கள்
ஆ) முகலாயர்கள்
இ) விஜயநகரப் பேரரசர்கள்
ஈ) டெல்லி சுல்தான்கள்
விடை:
ஈ) டெல்லி சுல்தான்கள்

Question 4.
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்.
அ) சேரர்கள் காலம்
ஆ) சோழர்கள் காலம்
இ) பாண்டியர் காலம்
ஈ) பல்லவர்கள் காலம்
விடை:
ஆ) சோழர்கள் காலம்

Question 5.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
அ) மார்க்கோபோலோ
ஆ) அல் பரூனி
இ) இபன் பதூதா
ஈ) நிகோலோ கோண்டி
விடை:
இ) இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பொறிப்புகள் என்பவை …………………. மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்
விடை:
கடினமான மேற்பரப்பு

Question 2.
பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ………… எனப்பட்டன
விடை:
பிரம்ம தேயம்

Question 3.
பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் ………………..
விடை:
தஞ்சாவூர்

Question 4.
சார்மினார் அமைந்துள்ள இடம் …………………….
விடை:
ஹைதராபாத்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 5.
தபகத் என்ற அரேபியச் சொல்லின் பொருள் ……………..
விடை:
தலைமுறைகள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 3

IV. சரியா? தவறா?

Question 1.
அயல்நாட்டு வரலாற்றுத் தொகுப்பாளர்களின் குறிப்புகள் சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்து ஏராளமான செய்திகளைத் தருகின்றன.
விடை:
தவறு (குறைவான செய்திகளையே தருகின்றன)

Question 2.
கல்வெட்டுக்களில் கொடை வழங்கியவர் மட்டுமே சிறப்புக் கவனம் பெறுகிறார்
விடை:
சரி

Question 3.
திருவாலங்காடு செப்பேடுகள் முதலாம் இராஜ ராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது.
விடை:
தவறு (முதலாம் இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தது)

Question 4.
ஆழ்வார்கள் மொத்தம் 63 பேர் இருந்தனர்
விடை:
தவறு (12 பேர்)

Question 5.
சீனாவிலிருந்து தாம் கப்பலில் வந்ததாக மார்க்கோபோலோ கூறியிருக்கிறார்.
விடை:
சரி

V. கூற்று மற்றும் காரணம்

கூற்றைக் காரணத்தோடு பொருத்துக . பொருத்தமான விடையை முக் (✓) இட்டுக் காட்டவும்.

Question 1.
கூற்று : முகமது பின் துக்ளக் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
காரணம் : இது நாட்டில் செல்வச் செழிப்பு இருந்ததைக் காட்டுகிறது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
கூற்று : அல்பரூனி ஒரு கற்றறிந்த அறிஞர்
காரணம் : இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியத் தத்துவங்களையும் கற்றார்.

அ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

VI. தவறான இணையைக் கண்டறியவும் :

Question 1.
1. நாணயங்கள் – முதல் நிலைச் சான்றுகள்
2. வாழ்க்கை வரலாறு – இரண்டாம் நிலைச் சான்றுகள்
3. தஜுக் – கிரேக்க சொல்
4. தாகுயுக் – அரேபியச் சொல்
விடை:
3. தஜுக் – கிரேக்க சொல்

Question 2.
1. காயல் – தூத்துக்குடி மாவட்டம்
2. உத்திரமேரூர் – காஞ்சிபுரம் மாவட்டம்
3. தஜுக் – வாழ்க்கை வரலாறு
4. தாரிக் – வரலாறு
விடை:
3. தஜுக் – வாழ்க்கை வரலாறு

VII. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
பாபர் நாமா, அக்பர் நாமா, அயினி அக்பரி, தபகத் – இ – அக்பரி
விடை:
பாபர் நாமா

Question 2.
கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள், நாணயங்கள்
விடை:
நாணயங்கள்

VIII. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சான்றுகள் – வரையறு.
விடை:
கடந்த காலத்தை மறு கட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.

Question 2.
நினைவுச் சின்னங்கள் என்றால் என்ன? –
விடை:
கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள், ஸ்தூபிகள் ஆகிய கட்டடங்கள் நினைவுச் சின்னங்கள் ஆகும்.

Question 3.
தாரிக்-இ-பெரிஷ்டா என்ற நூலை எழுதியவர் யார்? அந்நூல் கூறுவது என்ன?
விடை:

  • பெரிஷ்டா என்பவர் தாரிக் – இ – பெரிஷ்டா என்ற நூலை எழுதினார்.
  • இந்நூல் இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி பற்றி விவரிக்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 4.
வாழ்க்கை வரலாறு மற்றும் சுய சரிதை – வேறுபடுத்துக.
விடை:

  • ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி வேறொருவர் எழுதிய வரலாற்றுக் குறிப்பு வாழ்க்கை வரலாறு எனப்படும்.
  • எடுத்துக்காட்டு : அபுல் பாசல் எழுதிய அயினி அக்பரி என்ற நூல். இது அக்பரின் வாழ்க்கையைப் பற்றிய நூல்
  • ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி அவரே எழுதிய வரலாற்றுக்குறிப்பு சுய சரிதை எனப்படும். எடுத்துக்காட்டு: பாபர் எழுதிய பாபர் நாமா என்ற நூல். இது பாபரின் வாழக்கையைப் பற்றிய நூல்

IX. விடையளிக்கவும்.

Question 1.
சான்றுகளை வகைப்படுத்தி, அவற்றை விவரிக்கவும்.
விடை:

  • கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.
  • சான்றுகள் முதல் நிலைச்சான்றுகள் மற்றும் இரண்டாம் நிலைச் சான்றுகள் என இருவகைப்படும்.

முதல் நிலைச் சான்றுகள் :
பொறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள், ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகளும் முதல் நிலைச் சான்றுகள் ஆகும்.

இரண்டாம் நிலைச் சான்றுகள் :
இலக்கியங்கள், கால வரிசையிலுள்ள நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுய சரிதைகள் ஆகியவை இரண்டாம் நிலைச் சான்றுகள் ஆகும்.

Question 2.
சமயச் சார்பற்ற இலக்கியங்கள் பற்றி ஒரு விளக்கம் தருக.
விடை:

  1. மதுரா விஜயம், அமுக்த மால்யதா ஆகியவை சமய சார்பற்ற இலக்கியங்கள் ஆகும். இவை விஜய க. நகரப் பேரரசைப் பற்றி அறிய உதவுகின்றன.
  2. மதுரா விஜயம் கங்காதேவியாலும், அமுக்த மால்யதா என்ற நூல் கிருஷ்ண தேவராயராலும் எழுதப்பட்டன.
  3. இராஜபுத்திர அரசர்களைப் பற்றிய பிருதிவி ராஜ ராசோ என்ற நூலை சந்த் பார்தை என்பவர் எழுதினார்.
  4. கல்ஹணரின் ராஜதரங்கினி இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்துதெரிவிக்கிறது.

Question 3.
இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:

  • மார்க்கோ போலோ என்ற வெனிஸ் நகரப் பயணி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழகத்திற்கு வந்தார்.
  • அவர் காயல் துறைமுகம் பற்றியும் அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
  • கற்றறிந்த அறிஞரான அல்பரூனி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களைப் பற்றி அறிய முயன்றார்.
  • இவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார்.
  • இந்தியத் தத்துவங்களைக் கற்றார்.
  • அவர் எழுதிய தாகுயூக் – இ – ஹிந்த் என்ற நூலில் இந்தியாவின் நிலைகளையும், அறிவு முறையினையும், சமூக விதிகளையும் மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
  • மொரக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயணநூல்ரிக்ளா – பயணங்கள் என்பதாகும். அவர் இந்தியாவின் சமூக நிலை, சாதி, சதி என்ற உடன் கட்டை ஏறும் பழக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்திய வணிக நடவடிக்கைகள் பற்றியும் இவரது நூல் தெரிவிக்கிறது.
  • இவர்கள் தவிர நிகோலோ கோண்டி, அப்துர் ரஸாக், டோமிங்கோ பயஸ் ஆகிய அந்நியப் பயணிகளும் இந்தியாவுக்கு வந்தனர்.
  • இவர்கள் விஜயநகரப் பேரரசின் சிறப்பு பற்றி தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 4