Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

6th Social Science Guide மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
பரிணாமத்தின் வழிமுறை _____
அ) நேரடியானது
ஆ) மறைமுகமானது
இ) படிப்படியானது
ஈ) விரைவானது
விடை:
இ) படிப்படியானது

Question 2.
தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது.
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை:
ஆ) ஆப்பிரிக்கா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
அ) கூற்று சரி.
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
இ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது

III. சரியான இணையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 80
விடை:
இ) ஹோமோ எரக்டஸ் – சிந்திக்கும் மனிதன்

IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

Question 1.
தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _____ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள். விடை:
மானுடவியல் ஆய்வாளர்கள்

Question 2.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _____ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை:
நாடோடி

Question 3.
பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _____ மற்றும் _____ ஆகும்.
விடை:
வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்

Question 4.
_______ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
விடை:
கலப்பை

Question 5.
பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
விடை:
கரிக்கையூர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

V. சரியா, தவறா?

Question 1.
நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
விடை:
தவறு

Question 2.
ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
விடை:
சரி

Question 3.
மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
விடை:
சரி

Question 4.
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
விடை:
தவறு

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

Question 1.
அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
விடை:
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு முறை

Question 2.
தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள் ?
விடை:
அவர்கள் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள், மரங்களின் கிளைகள், இலைகள் ஆகியவற்றை அணிந்தார்கள்.

Question 3.
தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
விடை:
அவர்கள் மரம், குகை மற்றும் மலையடிவாரத்தில் வாழ்ந்தார்கள்.

Question 4.
நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
விடை:
எருது

Question 5.
மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
விடை:

  • விவசாயம் செயல்பாட்டுக்கு வந்த பின் மக்கள் விலங்குகளைப் பழக்கி, அவற்றையும் விவசாயத்தில் ஈடுபடுத்தினர்.
  • வேட்டையாடி வாழ்க்கை நடத்தியதை விட இந்த வாழ்க்கை எளிதாக இருந்தது. விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படிச் செய்தது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பரிணாமம் என்றால் என்ன?
விடை:
மனித இனம் மாற்றங்களை அடைந்து, ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி பெறும் வழிமுறையைப் பரிணாமம் என்கிறோம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 2.
ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுதுக.
விடை:

  • அவர்கள் சுயமாக சிந்திக்கும் தன்மை பெற்றிருந்தனர்.
  • மனிதனைப் போன்ற தோற்றம் உடையவர்கள்
  • கரடு முரடான கருவிகளைப் பயன்படுத்தினர்
  • வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தனர்.

Question 3.
மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
விடை:

  • அவர்கள் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்தனர்.
  • நிலத்தில் விவசாயம் செய்து வந்த அவர்கள், அந்த நிலத்தின் மண்வளம் குன்றி விட்டால் வேறொரு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.

Question 4.
பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
விடை:

  • வேட்டையாடுதல் பழங்கால மக்களின் முக்கியத் தொழிலாகும்.
  • கல்லாலும், எலும்பாலும் செய்த கருவிகளைப் பயன்படுத்தினார்கள்
  • கூர்மையான கருவிகளைப் பயன் படுத்தினார்கள்
  • பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி போன்ற விலங்குகளை வேட்டையாடினர்.

Question 5.
கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
விடை:
மரம் வெட்டவும், மரக்கிளைகளை நீக்கவும், குழிதோண்டவும், விலங்குகளின் தோலை உரிக்கவும் கோடரிகள் உருவாக்கப்பட்டன.

Question 6.
தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
விடை:
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 7.
மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன ?
விடை:

  • மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றிப் படிப்பது மானுடவியல் ஆகும்.
  • மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தை களிலிருந்து பெறப்பட்டது. anthrops என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ண ங்கள் அல்லது காரணம்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

Question 1.
பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
விடை:

  • சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
  • மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்தபோது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பழங்கால மக்கள் பெற்றிருக்கலாம்.
  • சக்கரத்தின் உதவியால் பானை செய்யக் கற்றுக் கொண்டனர்.
  • சக்கரத்தின் உதவியினால் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றனர்.
  • நவீன இயந்திரங்களில் சக்கரம் இல்லாத இயந்திரங்களே இல்லை எனலாம்.
  • இவ்வாறு சக்கரம் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

IX. மாணவர் செயல்பாடு

1. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மனிதர்களின் படங்கள் அடங்கிய ஒரு படத்தொகுப்பைத் தயார் செய்.

X. வாழ்க்கைத் திறன்

1. களிமண் பானைகள் மற்றும் கருவிகளைச் செய்துபார்.
2. விதவிதமான பொம்மை வண்டிகளைச் சேகரி. அவற்றில் செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களில் சக்கரத்தைப் பொருத்தி, வண்டிகள் எப்படி நகர்கின்றன என்று சோதனை செய்து பார்.

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 91

6th Social Science Guide மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Additional Important Questions and Answers

I. கூற்று: க்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று: தொடக்ககால மனிதர்கள் வேட்டையாட துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள்.
காரணம்: ஒரு குச்சி அல்லது கல்லால் பெரிய விலங்கினைக் கொல்வது கடினமாக இருந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை:
இ) கூற்று தவறு, காரணம் சரி

II. சரியான இணையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 96
விடை:
ஈ) குரோ மக்னான்ஸ் – சீனா

III. சரியா, தவறா?

Question 1.
நியாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தனர்.
விடை:
சரி

Question 2.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வண்டிகளை இழுக்க மக்கள் குதிரைகளைப் பயன் படுத்தினர்.
விடை:
தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 3.
ஹோமோ சேபியன்ஸ் சுயமாக சிந்திக்கும் மனிதர்கள்.
விடை:
சரி

Question 4.
சிக்கிமுக்கிக் கல் அவர்களுக்கு எளிதாகக் கிடைத்தது.
விடை:
தவறு

Question 5.
வரலாற்றுக்கு முந்தைய மக்கள் இரும்பிலான நாணயங்களைப் பயன்படுத்தினர்
விடை:
தவறு

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
1850 ஆம் ஆண்டில் மக்களின் போக்குவரத்து முறை எவ்வாறு இருந்தது?
விடை:

  • பேருந்துகளோ, மிதிவண்டிகளோ காணப்படவில்லை
  • மாடுகள் அல்லது கோவேறி கழுதைகள் பூட்டப்பட்ட வண்டிகளைப் பயன்படுத்தினர்.
  • குதிரை வண்டிகள் அரிதாகவே காணப்பட்டன.

Question 2.
பண்ட மாற்று முறை என்றால் என்ன?
விடை:
பழங்கால மக்கள் தேவைக்கு அதிகமாக தங்களிடம் இருந்த தானியங்களை, பிற குழுக்களிடம் பரிமாற்றம் செய்து தங்களுக்குத் தேவையானவற்றைப்பெற்றுக் கொண்டார்கள். இது பண்டமாற்று முறை எனப்பட்டது.

Question 4.
பழங்கால மனிதர்களின் வாழ்வில் நெருப்பு இன்றியமையாத இடத்தைப் பிடித்தது எவ்வாறு?
விடை:
நெருப்பு இவர்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், சமைக்கவும், இரவில் ஒளியை உருவாக்கவும் பயன்பட்டது. இவ்வாறு அவர்களின் வாழ்வில் நெருப்பு இன்றியமையாத இடத்தைப் பிடித்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 97