Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
அ) ஈராக்
ஆ) சிந்துவெளி
இ) தமிழகம்
ஈ) தொண்டைமண்டலம்
விடை:
அ) ஈராக்

Question 2.
இவற்றுள் எது தமிழக நகரம்?
அ) ஈராக்
ஆ) ஹரப்பா
இ) மொகஞ்சதாரோ
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஈ) காஞ்சிபுரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 3.
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஆ) மதுரை

Question 4.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரிஆறு
இவற்றில் அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அ மற்றும் ஆ சரி
விடை:
ஈ) அ மற்றும் ஆசரி

Question 5.
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) சென்னை
விடை:
ஈ) சென்னை

Question 6.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) ஹரப்பா
விடை:
அ) மதுரை

II. கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும்
நடைபெற்றது. காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
அ) கூற்று சரி: காரணம் தவறு
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி.
இ) கூற்று தவறு: காரணம் சரி.
ஈ) கூற்று தவறு: காரணம் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
அ) ‘திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில்” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
இ) “நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்” என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஈ) அனைத்தும் சரி

Question 3.
சரியான தொடரைக் கண்டறிக
அ) நாளங்காடி என்பது இரவு நேர கடை.
ஆ) அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
இ) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
விடை:
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது

Question 4.
தவறான தொடரைக் கண்டறிக.
அ) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
இ) கோவலனும், கண்ண கியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
ஈ) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
இ) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்

Question 5.
சரியான இணையைக் கண்டறிக.
அ) கூடல் நகர் – பூம்புகார்
ஆ) தூங்கா நகரம் – ஹரப்பா
இ) கல்வி நகரம் – மதுரை
ஈ) கோயில் நகரம் – காஞ்சிபுரம்
விடை:
ஈ) கோயில் நகரம்- காஞ்சிபுரம்

Question 6.
தவறான இணையைக் கண்டறிக.
அ) வட மலை – தங்கம்
ஆ) மேற்கு மலை – சந்தனம்
இ) தென்கடல் – முத்து
ஈ) கீழ்கடல் – அகில்
விடை:
ஈ) கீழ்கடல் – அகில்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _______
விடை:
ராஜசிம்மன்

Question 2.
கோயில் நகரம் என அழைக்கப்படுவது _____
விடை:
காஞ்சி

Question 3.
மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ______
விடை:
பெருவணிகன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

IV. சரியா? தவறா?

1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.
விடை:
1. சரி
2. சரி
3. சரி
4. சரி

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
ஏற்றுமதி என்றால் என்ன?
விடை:
ஒரு நாடு தன்னிடம் உள்ள உபரிப் பொருள்களை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வது ஏற்றுமதியாகும்.

Question 2.
இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் மற்றும் சங்கப் பாட நூலைக் கூறு
விடை:
காப்பியம்: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
சங்கப்பாடநூல்: பட்டினப்பாலை

Question 3.
தொண்டைநாட்டின் தொன்மையான நகரம் எது?
விடை:
காஞ்சி

Question 4.
கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள ஏதேனும் ஒரு வேறுபாட்டைக் கூறு.
விடை:
கிராமத்தை விட நகரத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்.

Question 5.
லோத்தல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?
விடை:
சிந்து வெளி நாகரிகம்

Question 6.
உலகின் தொன்மையான நாகரிகம் எது?
விடை:
மெசபடோமிய நாகரிகம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

Question 1.
இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:
இந்தியாவில் பண்டைய நகரங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
ஜான்சி:

  • ஜான்சி நகரம் உத்திரப் பிரதேசத்தில் உள்ளது
  • இது ஜான்சி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்
  • இது உத்திரப் பிரதேசத்தின் அனைத்து நகரங்களோடும் சாலை மற்றும் இருப்புப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்நகரம் இந்திய அரசாங்கத்தினால் சிறந்த நகரங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்நகரம் ஜான்சிராணி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஜான்சி கோட்டை, அரசு .அருங்காட்சியகம், ராணிமஹால் ஆகியவை இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

பாடலிபுத்திரம்:

  • தற்போதைய பாட்னா நகரத்தை ஒட்டியுள்ளது.
  • மௌரியப் போரசு, நந்த போரசு போன்றவற்றின் தலைநகராக இந்நகரம் இருந்தது

தட்சசீலம்:

  • இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக இருந்தது.
  • தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது.
  • இது ஒரு கல்வி நகரம் ஆகும்.
  • உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று இங்கு இருந்தது.

லோத்தல்:

  • குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் கிளை நதியின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது.
  • இது பழங்கால இந்தியாவின் ஒரு முக்கிய வணிகமையம் ஆகும்.
  • இங்கு கப்பல் கட்டும் தளம் ஒன்று இருந்துள்ளது.
  • இது சிந்து வெளி மக்களின் கடல் கடந்த வணிகம் பற்றி எடுத்துக் காட்டுகிறது.

ஹரப்பா :

  • இந்நகரம் 1921 ஆம் ஆண்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஹரப்பா என்றால் இறந்தோர் மேடு என்று பொருள்.
  • சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுச்சின்னங்கள் இங்கு காணப்பட்டன.
  • இது ஒரு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் ஆகும்.
  • இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
தமிழகத்தின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பூம்புகார்
  • மதுரை
  • காஞ்சி
  • வஞ்சி
  • தொண்டி
  • உறையூர்
  • கரவூர்
  • மாமல்லபுரம்
  • தகடூர்
  • காயல்

Question 3.
தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை?
விடை:

  • சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பட்டினப்பாலை ஆகியவை பூம்புகாரைப் பற்றி அறிய உதவுகிறது.
  • கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்பு மற்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றில் மதுரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காளிதாசர், திருநாவுக்கரசர் ஆகியோர் தங்களது பாடல்களில் காஞ்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • மணிமேகலையிலும் காஞ்சியின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

Question 4.
மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • மதுரையை பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர்.
  • இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், அவர்களுக்குப் பின் நாயக்கர்களும் ஆட்சி செய்தனர்.

Question 5.
மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தூங்கா நகரம்
  • சங்கம் வளர்த்த நகரம்
  • கூடல் நகர்

Question 6.
நாளங்காடி, அல்லங்காடி-வேறுபடுத்துக.
விடை:

  • நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடி
  • அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.

Question 7.
காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?
விடை:

  • தர்மபாலர்
  • ஜோதிபாலர்
  • சுமதி
  • போதி தர்மர்

Question 8.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:

  • காஞ்சிபுரம் ஏரிகள் மாவட்டம் எனப்படுகிறது.
  • காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர்தேக்கி வைக்கப்பட்டிருந்தன. எனவே காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஈராக் – குறிப்பு தருக.
விடை:
தற்போதைய ஈராக் பழங்காலத்தில் மெசபடோமியா என்றழைக்கப்பட்டது. இப்பகுதிதான் சுமேரிய நாகரிகத்தின் பிறப்பிடம் ஆகும். இது யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் என்ற இரு நதிகளால் வளப்படுத்தப்படுகிறது. இது ஒரு முக்கிய வணிக மையமாகும். ஈராக்கிற்கும் பிற நாடுகளுக்குமிடையேயிருந்த வர்த்தகத் தொடர்பு பற்றி பட்டினப் பாலையில் கூறப்பட்டுள்ளது.

Question 2.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
விடை:

  • பூம்புகார் ஒரு துறைமுக நகரம்
  • பெருவணிகர்களும், பெருங்கடல் வணிகர்களும் நிறைந்த பகுதியாக பூம்புகார் விளங்கியது.
  • இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், ரோம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் இங்கு வந்தவண்ணம் இருந்தனர்.
  • வணிகத்தின் காரணமாக பலர் இந்நகரிலேயே தங்கியதால் இங்கு வெளிநாட்டவர் குடியிருப்புகள் தோன்றின.

Question 3.
காஞ்சியில் பிறந்த சான்றோர்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • கவிஞர் காளிதாசர் “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கூறுகிறார்.
  • திருநாவுக்கரசர், “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று கூறுகிறார்.
  • சீன வரலாற்றாசிரியரான யுவான்சுவாங் புத்தகயா, காஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்று கூறுகிறார்.

Question 4.
கோயில் நகரம் – குறிப்பு தருக.
விடை:

  • காஞ்சியிலுள்ள கைலாச நாதர் கோயில் புகழ் பெற்றது.
  • பல்லவர்கள் காலத்தில் ஏராளமான குடைவரைக் கோயில்களும் காஞ்சியில் கட்டப்பட்டுள்ளன. எனவே காஞ்சி கோயில் நகரம் எனப்படுகிறது.

Question 5.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதென்பதை நிரூபி.
விடை:

  • காஞ்சியில் ஏராளமான பள்ளிகளும், புத்த விகாரங்களும் இருந்தன.
  • சீன வரலாற்று ஆசிரியரான யுவான் சுவாங் காஞ்சியிலுள்ள கடிகைக்கு கல்வி கற்பதற்காக வந்தார்.
  • திருநாவுக்கரசர் காஞ்சியை கல்வியில் கரையில்லாத காஞ்சி என்று புகழ்ந்துள்ளார்.

VIII . மாணவர் செயல்பாடுகள்

1. கீழடி அகழாய்வுகள் குறித்த ஆல்பம் தயாரிக்கவும்.
2. பண்டைய தமிழகத்தின் வணிக சிறப்புமிக்க நகரம் பூம்புகார்….. கலந்துரையாடு.
3. பல்லவர்கள் காலக்கோயில்கள் பற்றிய புகைப்படங்களை சேகரி.
4. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகள் பற்றி ஒரு சிறு நூலினைத் தயாரிக்கவும்.
5. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நகரங்கள் குறித்து ஒரு சிறு நூலைத் தயாரிக்கவும்.
6. நூலகத்திற்குச் சென்று, உன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களைக் கண்டுபிடி.

IX. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95.2

X. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)
நீ வாழும் பகுதியின் முக்கியத்துவத்தைக் காட்டும் கையேடு ஒன்றினைத் தயாரி.

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்
அ) எகிப்திய நாகரிகம்
ஆ) சீன நாகரிகம்
இ) சிந்து வெளி நாகரிகம்
ஈ) மெசபடோமியா நாகரிகம்
விடை:
ஈ) மெசபடோமியா நாகரிகம்

Question 2.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
அ) உருத்திரங்கண்ண னார்
ஆ) சேக்கிழார்
இ) நக்கீரர்
ஈ) ஜெயங் கொண்டார்
விடை:
அ) உருத்திரங்கண்ணனார்

Question 3.
கைலாச நாதர் கோயிலைக்கட்டியவர்
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்மவர்மன்
இ) ராஜ சிம்மன்
ஈ) அபராஜிதர்
விடை:
இ) ராஜ சிம்மன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 4.
பின் வருவனவற்றுள் எது ஒரு கல்வி நகரம்?
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) காஞ்சி
ஈ) தஞ்சாவூர்
விடை:
இ) காஞ்சி

Question 5.
புகார் இவர்களின் துறைமுகம்
அ) சேர அரசு
ஆ) சோழ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) களப்பிரர்கள்
விடை:
ஆ) சோழ அரசு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பெருங்கடல் வணிகர் ______ என்று அழைக்கப்பட்டனர்.
விடை:
மாநாய்கன்

Question 2.
சாணக்கியர் என்பவர் சந்திர குப்தரின் _____ ஆவார்
விடை:
அமைச்சர்

Question 3.
பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தை _____ யில் கழித்தார்.
விடை:
காஞ்சி

III. சரியா, தவறா?

Question 1.
சிலப்பதிகாரத்தின் நாயகி மணிமேகலை ஆவார்.
விடை:
தவறு

Question 2.
தற்போதைய தஞ்சாவூர் முற்காலத்தில் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
விடை:
தவறு

Question 3.
பூம்புகார் சோழ அரசின் துறைமுகம்.
விடை:
சரி

Question 4.
சிலப்பதிகாரம் பூம்புகாரின் சிறப்பைக் கூறுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 5.
பல்லவர்கள் காலத்தில் பல குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன.
விடை:
சரி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பூம்புகார் நகர் மற்ற நகரங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது?
விடை:

  • பூம்புகாரில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி குடியிருப்பு இருந்தது.
  • நீண்ட, நேரான தெருக்களைக் கொண்டிருந்தது.
  • இங்கு கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்தது.

Question 2.
ஏரிகளின் மாவட்டம் எது? ஏன்?
விடை:
காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது. ஏனெனில் காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த ஏரிகள் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்தன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 99