Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்
6th Social Science Guide சிந்து வெளி நாகரிகம் Text Book Back Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடு
Question 1.
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
2. செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
3. செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி.
4. செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
விடை:
1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
Question 2.
சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது?
1. பழைய கற்காலம்
2. இடைக்கற்காலம்
3. புதிய கற்காலம்
4. உலோக காலம்
விடை:
4. உலோக காலம்
Question 3.
ஆற்றங்கரைகள் நாகரிகத்தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
1. மண் மிகவும் வளமானதால்
2. சீரான கால நிலை நிலவுவதால்
3. போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
4. பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
விடை:
4. பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
II. கூற்றைக்காரணத்தோடு பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.
Question 1.
கூற்று – ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். காரணம் – திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறு, காரணம் சரி.
3. கூற்று சரி, காரணம் தவறு.
4. கூற்றும் காரணமும் தவறு.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி
Question 2.
கூற்று – ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது: காரணம் – ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறானது, காரணம் சரி.
3. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
4. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி
Question 3.
கூற்று – ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது
காரணம் – கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறானது, காரணம் சரியானது.
3. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
4. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி
Question 4.
கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவைப் பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
1. தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை
2. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
3. கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
4. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
விடை:
2 மற்றும் 4. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
Question 5.
கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.
1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான – தன்மை.
2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
4. மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை? 1. 1 &2 2. 1&3 .3.2 &3 4. அனைத்தும் சரி
விடை:
4. அனைத்தும் சரி
Question 6.
பொருந்தாததை வட்டமிடு.
காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்)
விடை:
குதிரைகள்
Question 7.
தவறான இணையைத் தேர்ந்தெடு
1. ASI – ஜான் மார்ஷல்
2. கோட்டை – தானியக் களஞ்சியம்
3. லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
விடை:
4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
III. கோடிட்ட இடத்தை நிரப்புக:
Question 1.
______ மிகப் பழமையான நாகரிகம்.
விடை:
மெசபடோமியா நாகரிகம்
Question 2.
இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ______ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
விடை:
அலெக்ஸாண்டர் கன்னிங்காம்
Question 3.
______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
விடை:
தானியக்களஞ்சியம்
Question 4.
மக்கள் குழுக்களாகச் சேர்ந்து _____ யை உருவாக்குகிறார்கள்.
விடை:
சமுதாயத்தை
IV. சரியா? தவறா?
Question 1.
மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.
விடை:
சரி
Question 2.
இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.
விடை:
சரி
Question 3.
தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
விடை:
சரி
Question 4.
முதல் எழுத்து வடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.
விடை:
தவறு
V. பொருத்துக
VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி
Question 1.
உலோகங்களின் பயன்களைக் கூறு.
விடை:
- தங்கம், வெள்ளி ஆகியவை ஆபரணங்கள் செய்ய பயன்பட்டன
- செம்பு, வெண்கலத்தால் ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்கள் செய்யப்பட்டன.
- சிலைகள் செய்வதற்கு வெண்கலம் பயன்பட்டது. (உ-ம்) வெண்கலத்தால் ஆன நடன மாது சிலை
Question 2.
நாம் உண்ணும் உணவில் வேக வைத்த உணவு, பச்சையான உணவு என ஒரு பட்டியலை உருவாக்கு.
விடை:
வேகவைத்த உணவு: அரிசி, கோதுமை, காய்கள், கீரைவகைகள், கிழங்குகள், இறைச்சி ஆகியவை
பச்சையான உணவு: பழங்கள், காய்கள் மற்றும் கொட்டைகள்
Question 3.
மிருகங்களையும் மரங்களையும் வழிபடும் பழக்கம் நம்மிடையே உள்ளதா?
விடை:
ஆம். சில மதத்தினர் மிருகங்களையும் மரங்களையும் வழிபடுகின்றனர்.
Question 4.
ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்கள். ஏன்?
விடை:
- ஆற்றங்கரைகளில் வளமானமண் அமைந்திருந்தது
- ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டது.
- ஆறுகள் போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன. எனவே மக்கள் ஆற்றங்கரைகளில் குடியேறினர். அப்பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. ஆகவே ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்கள் எனப்பட்டன.
Question 5.
ஒரு பொம்மை நகர்வதாலேயே அதை நவீன கால பொம்மைகள் என்று பொருள் கொள்ள முடியாது. சிந்து வெளி மக்கள் பொம்மைகளில் பேட்டரிக்கு (மின் கலம்) மாற்றாக எதைப் பயன்படுத்தினர்?
விடை:
அவர்கள் சக்கரத்தைப் பயன்படுத்தினர்.
Question 6.
நீ ஒரு தொல் பொருள் ஆய்வாளர் எனில் என்ன செய்வாய்?
விடை:
எனது மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூருக்குச் சென்று, அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்வேன்.
Question 7.
இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இரு பகுதிகளைக் கூறு.
விடை:
கலிபங்கன், லோத்தல்
Question 8.
சிந்து வெளி நாகரிகத்தின் கூறுகளில் உன்னைக் கவர்ந்தது எது? ஏன்
விடை:
- சிந்துவெளி நாகரிகத்தின் கூறுகளில் கழிவு நீர் அமைப்பு என்னைக் கவர்ந்தது.
- மூடப்பட்ட கழிவுநீர்வடிகால் அமைப்பு. அது செங்கலாலும், கல்தட்டைகளாலும் மூடப் பட்டிருந்தது. அன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்றும் சில நவீன நகரங்களில் மூடப்பட்டவடிகால் அமைப்பு இல்லை.
- கழிவு நீர்ப் பொருட்களை அப்புறப்படுத்த துளைகள் அமைக்கப்பட்டிருந்தன.
- திடக்கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக் கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.
Question 9.
தற்காலத்தில் பொருட்களின் நிறையை அளக்க என்ன கருவி பயன்படுத்தப்படுகிறது?
விடை:
மின் எடைத் தராசு.
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
புதைந்த கட்டிடங்களைக் கண்டுபிடிக்க தற்போது எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது?
விடை:
- அகழ்வாராய்ச்சியாளர்கள் செங்கற்கற்கள், கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை பயன்படுத்தப்பட்ட காலத்தை அறிந்து கொள்கிறார்கள்.
- பண்டைய இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
- வான் வழி புகைப்படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பைக் கண்டறிந்து கொள்கிறார்கள்.
- நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை (Magnetic scanner) பயன்படுத்துகின்றனர்.
- எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் தொலை நுண்ணுணர்வு முறை மூலம் கண்டறிகின்றனர்.
Question 2.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:
மக்கள் வெண்கலத்திலான பொருட்களைப் பயன்படுத்தினர். எனவே இது வெண்கல கால நாகரிகம் எனப்படுகிறது.
Question 3.
சிந்து வெளிநாகரிகம் ஒரு நகர நாகரிகம் காரணம் கூறுக.
விடை:
- சிறப்பான நகரத்திட்டமிடல்
- சிறப்பான கட்டடக் கலை வேலைப்பாடு
- தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை.
- தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
- விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம்.
Question 4.
கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.
விடை:
- மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு. இது செங்கலாலும் கல் தட்டைகளாலும் மூடப் பட்டிருந்தது
- வடிகால் மென்சரிவைக் கொண்டிருந்தது.
- கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சரியான இடைவெளியில் துளைகள் இருந்தன.
- ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவுநீரை மட்டும் வெளியேற்றின.
Question 5.
பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறுக.
விடை:
- பெருங்குளம் நன்கு அகன்று செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும்.
- இது நீர் கசியாத கட்டுமானத்திற்கான மிகப்பழமையான சான்று ஆகும்.
- குளத்தின் சுவர்கள் செங்கலால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக இயற்கைத்தார் பூசப்பட்டிருந்தது.
- குளத்தின் இருபுறத்திலும் படிக்கட்டுகள் அமைந்திருந்தன.
- குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் இருந்தன.
- உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேற வகை செய்யப்பட்டிருந்தது.
Question 6.
சிந்து வெளி மக்கள் வெளிநாட்டினருடன் வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து கொள்கிறாய்?
விடை:
- மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற முத்திரைகள் சிந்து வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இது இரு பகுதிகளுக்கிடையே நடந்த வணிகத்தைக் காட்டுகிறது.
- சுமேரியாவின் அக்கடியப் பேரரசின் அரசன் நாராம்-சின் சிந்து வெளிப்பகுதியிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாக எழுதியுள்ளார்.
- குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல்கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது அவர்களின் கடல் வணிகத்தை உறுதிப் படுத்துகிறது.
VIII. உயர் சிந்தனை வினாக்கள்
Question 1.
கீழே கொடுக்கப்படுள்ளவற்றை சிந்து வெளியின் சிறப்பம்சங்களைக் கவனித்து தற்காலத்துடன் ஒப்பிடு
1. விளக்குக் கம்பங்கள்
2. சுட்ட செங்கற்கள்
3. நிலத்தடி வடிகால் அமைப்பு
4. எடைகள் மற்றும் அளவீடு
5. கப்பல் கட்டும் தளம்
விடை:
1. விளக்குக் கம்பங்கள்:
சிந்து வெளிப்பகுதியின் விளக்குக் கம்பங்கள் ஒரு சிறப்பம்சம் ஆகும். அக்காலத்தில் கல்லாலான விளக்குக் கம்பங்கள் இருந்தன. தற்போது இரும்பு மற்றும் சிமிண்டு விளக்குத் தூண்கள் உள்ளன.
2. சுட்ட செங்கல்கள்:
- சிந்து வெளிப் பகுதியில் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. ஏனெனில் சுட்ட செங்கற்கள் வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை, நெருப்பைக் கூட தாங்குபவை. மேலும் அவை நீரில் கரைவதில்லை
- தற்காலத்திலும் கட்டடங்கள் சுட்ட செங்கலால் கட்டப்படுகின்றன.
3. நிலத்தடி வடிகால் அமைப்பு:
- சிந்துவெளிப்பகுதியில் மூடப்பட்ட நிலத்தடி வடிகால் அமைப்பு இருந்தது. அது செங்கற்கலாலும் கல்தட்டைகளாலும் மூடப்பட்டிருந்தது. கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சரியான இடைவெளியில் துளைகள் இருந்தன.
- தற்காலத்தில் கூட சில நகரங்களில் மூடப்பட்ட நிலத்தடி வடிகால் அமைப்பு இல்லை . தற்போதுதான் சில நகரங்களில் இம்முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது.
4. எடைகள் மற்றும் அளவீடு:
- சிந்து வெளிநாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளைப் ‘ பயன்படுத்தினர். அளவு கோல்களையும் பயன்படுத்தினர்
- தற்காலத்தில் நாம் பல்வேறு விதமான மின் அளவீடுகளைப் பயன்படுத்துகிறோம்
5. கப்பல் கட்டும் தளம்:
- குஜராத்திலுள்ள லோத்தல் என்ற இடத்தில் ஒரு கப்பல்கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் கடல் வணிகத்தை உறுதிப்படுத்துகிறது.
- தற்போது அநேகமாக அனைத்து பெரிய துறைமுகங்களிலும் கப்பல் கட்டும் மற்றும் பழுது நீக்கும் வசதிகள் உள்ளன.
எ.கா: மும்பையிலுள்ள மேசகவான் கப்பல்கட்டும்தளம்.
Question 2.
வேளாண்மை சிந்துவெளி மக்களின் தொழில்களுள் ஒன்று – எவ்வாறு நிரூபிப்பாய்?
(கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து)
விடை:
- சிந்து வெளி மக்களின் தொழில்களில் ஒன்று வேளாண்மை. அவர்கள் கோதுமை, பார்லி, திணைவகைகள், எள் மற்றும் பயறு வகைகளைப் பயிரிட்டனர்.
- தானியங்களை சேகரிக்க தானியக்களஞ்சியங்கள் கட்டப்பட்டன.
- எடுத்துக்காட்டாக ஹரியானா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக் களஞ்சியத்தைக் கூறலாம்.
- மேலும் கலப்பைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- எனவே சிந்து வெளி மக்கள் வேளாண்மைத் தொழில் செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
Question 3.
மட்பாண்டங்களும் அதன் உடைந்த துண்டுகளும் சிந்துவெளிப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நீ அறிவது என்ன?
விடை:
- அவர்கள் மட்பாண்டங்கள் செய்யக் கற்றிருந்தனர் என்பது தெரிகிறது.
- உடைந்த பானைத்துண்டுகளிலிருந்த விலங்குகளின் உருவங்கள், அவர்கள் விலங்குகளை வளர்த்தனர் என்பதைக் காட்டுகிறது.
- பானைத் துண்டுகளிலுள்ள சித்திரங்கள் அவர்களது ஓவியம் மற்றும் வண்ண வேலைப் பாடுகளிலிருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது
- அவர்கள் உணவுகளை சமைத்து உண்டனர் என்பதும் தெளிவாகிறது.
Question 4.
லோத்தல் ஒரு கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீ அறிவது என்ன ?
விடை:
லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் அவர்கள் கடல் வணிகத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
Question 5.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்குக் காரணம் என்ன?
விடை:
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்குக் காரணங்கள் பின்வருமாறு.
- அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
- சுற்றுச்சூழல் மாற்றம்
- படையெடுப்பு
- இயற்கைச் சீற்றங்கள்
- காலநிலை மாற்றம்
- காடுகள் அழிதல்
- தொற்று நோய்த் தாக்குதல்
IX. மாணவர் செயல்பாடு
விடை:
1. ஒரு குறிப்புப் புத்தகம் தயாரி. (மொஹஞ்ச- தாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய செய்திகள்)
2. சிந்துவெளி நாகரிகம் ஒரு பகுதியாக விளங்கிய இடத்தில் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராக உன்னை நினைத்துக் கொள். நீ எதையெல்லாம் சேகரிப்பாய்?
3. தகவல் அட்டை தயாரி. (சதுர அட்டைகளை எடுத்துக் கொள். அதில் சில அட்டைகளில் படங்களை ஒட்டு. சில அட்டைகளில் அதற்கான தகவல்களை எழுது. மாணவர்களிடம் இந்த அட்டைகளைக் கொடுத்துப் பொருத்தச் செய்).
4. கற்பனையாக ஒரு மாதிரி நகர அமைப்பை வரைந்து பார்.
5. சிந்துவெளி நாகரிகத்தின் ஏதாவது ஓர் அமைப்பை களிமண், வளையல் துண்டுகள், தீக்குச்சிகள், கம்பளி நூல் மற்றும் ஐஸ்கிரிம் குச்சிகள் கொண்டு வடிவமைத்தல்.
6. விளையாட்டு பொம்மைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாறியுள்ளன என்று உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
களிமண் → கல் → மரம் → உலோகம் → பிளாஸ்டிக் → பர் (fur) → விலங்குகளின்
உரோமம் → மின்சாரம் → மின்னணு???
7. குறுக்கெழுத்து
இடமிருந்து வலம்
(4) ஒவ்வொரு வீட்டிலும் _____ இருந்தது.
(5) இது _____ கால நாகரிகம்.
(10) தானியங்களை சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
வலமிருந்து இடம்
(2) மொஹஞ்ச-தாரோவைவிட பழமையானது
(6) இது நீர் கசியாமல் இருக்கப் பூசப்பட்டது.
(7) இது தான் தொல்பொருள் ஆய்விற்கு பொறுப்பு வகிக்கிறது.
மேலிருந்து கீழ்
(1) கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
(3) இந்தியத் தொல்பொருள் ஆய்வியல் துறையின் இயக்குநராக இருந்தவர்.
கீழிருந்து மேல்
(8) சிந்துவெளி மக்களுக்கு இதன் பயன் தெரியாது.
வினாடி – வினா
Question 1.
சிந்துவெளி மக்கள் ஆடை தயாரிக்க எதைப் பயன்படுத்தினார்கள்?
விடை:
பருத்தி
Question 2.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிக நகரம் எது?
விடை:
ஹரப்பா
Question 3.
சிந்துவெளி நாகரிகம் எங்கு இருந்தது?
விடை:
சிந்து நதிச் சமவெளியில்
Question 4.
எந்த விலங்கு வண்டி இழுக்கப் பயன்பட்டது?
விடை:
எருது
Question 5.
சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகம் தெரியாது?
விடை:
இரும்பு
Question 6.
பானை செய்வதற்கு எதைப் பயன்படுத்தினர்?
விடை:
சக்கரம்
Question 7.
உலகின் நான்கு பழம்பெரும் நாகரிகங்களில் மிகப் பழமையானது எது?
விடை:
மெசபடோமியா நாகரிகம்
X. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)
1. களிமண்ணைக் கொண்டு ஒரு விலங்கு அல்லது பானை செய்யுங்கள்.
2. நகரும் கைகால்களைக் கொண்ட களிமண் பொம்மைகளைச் செய்யுங்கள்.
3. பானையில் ஓவியம் தீட்டு (வடிவியல் படங்களுடன் கூடிய முறையில்)
4. தகவல் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப் பதாகைகள் செய்தல்.
XII. கட்டத்தில் பதிலளி:-
6th Social Science Guide சிந்து வெளி நாகரிகம் Additional Important Questions and Answers
I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்
Question 1.
இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்.
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) புது டெல்லி
விடை:
ஈ) புது டெல்லி
Question 2.
கூட்ட அரங்கு அமைந்துள்ள இடம்
அ) ஹரப்பா
ஆ) மொஹஞ்ச தாரோ
ஈ) லோத்தல்
ஈ) கலிபங்கன்
விடை:
ஆ) மொஹஞ்ச தாரோ
Question 3.
நாகரிகம் என்ற இலத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ்’ என்பதன் பொருள்
அ) நகரம்
ஆ) கிராமம்
இ) மக்கள்
ஈ) ஆட்சி செய்
விடை:
அ) நகரம்
Question 4.
மனிதர்களால் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உயோகப்படுத்தப்பட்ட உலோகம்.
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) வெண்கலம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) செம்பு
II. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக்க.
Question 1.
கீழ்க்காணும் கூற்றுக்களில் எது சரியானது?
அ) மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு.
ஆ) சிந்து வெளிமக்கள் வண்டிகளை இழுக்க குதிரைகளைப் பயன்படுத்தினார்கள்
இ) மொஹஞ்சதாரோ ஹரப்பாவை விட பழமையானது.
ஈ) ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரிகம்.
விடை:
அ) மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு.
Question 2.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. சிந்து வெளி தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன
2. அங்கு அரண்மனைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
3. அங்கு வழிபாட்டுத்தலங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை
அ) 1 & 2
ஆ) 1 & 3
இ) 2 & 3
ஈ) அனைத்தும் சரி
விடை:
அ) 1 & 2
Question 3.
பொருந்தாததை வட்டமிடுக. ஹரப்பா, மொஹஞ்சதாரோ, லோத்தல், கலிபங்கன், லாகூர்
விடை:
(லாசர்)
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
1924 இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநராக இருந்தவர் _____
விடை:
ஜான் மார்ஷல்
Question 2.
இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு ______
விடை:
1861
Question 3.
முதல் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர்கள் _____
விடை:
சுமேரியர்கள்
Question 4.
கிசே பிரமிடைக் கட்டிய மன்னர் _____
விடை:
குஃபு
Question 5.
தானியக் களஞ்சியம் _____ சேகரித்து வைப்பதற்காகப் பயன்பட்டது.
விடை:
தானியங்களை
IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
மக்கள் ஏன் நதிக்கரைகளில் குடியேறினர்?
விடை:
- மக்கள் நதிக்கரைகளில் குடியேறக் காரணங்கள் பின் வருமாறு
- வளமான மண்
- ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டது.
- ஆறுகள் போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன.
Question 2.
கட்டடங்கள் கட்டுவதற்கு ஏன் சுட்ட செங்கற்கள் பயன்படுத்தபட்டன?
விடை:
- ஏனென்றால் அவை வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை.
- நெருப்பைக் கூடத் தாங்கக் கூடியவை.
- மேலும் அவை நீரில் கரைவதில்லை.
Question 3.
சிந்து வெளி மக்களின் தொழில்கள் பற்றி எழுது.
விடை:
- வேளாண்மை, கை வினைப் பொருட்கள் செய்தல் போன்ற தொழில்களை செய்தனர்.
- அங்கு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களும் இருந்தனர்.
- கால்நடைகளை வளர்த்தனர்.
Question 4.
பானை வனைதல் பற்றி சிலவரிகள் எழுதுக.
விடை:
- பானைகள் செய்ய சக்கரத்தைப் பயன்படுத்தினர்.
- அவை தீயிலிட்டு சுடப்பட்டன
- அவற்றிற்கு வர்ணங்கள் தீட்டினர்.
- அவற்றில் விலங்குகளின் உருவங்களை வரைந்தனர்.
மனவரை படம்