Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7th Social  Science Guide வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?
அ) கல்ஹ ணர்
ஆ) விசாகதத்தர்
இ) ராஜசேகரர்
ஈ) சந்த் பார்தை
விடை:
ஈ) சந்த் பார்தை

Question 2.
பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?
அ) முதலாம் போஜா
ஆ) முதலாம் நாகபட்டர்
இ) ஜெயபாலர்
ஈ) சந்திரதேவர்
விடை:
ஆ) முதலாம் நாகபட்டர்

Question 3.
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
அ) மங்கோலியா
ஆ) துருக்கி
இ) பாரசீகம்
ஈ) ஆப்கானிஸ்தான்
விடை:
ஈ) ஆப்கானிஸ்தான்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 4.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
அ) சிலை வழிபாட்டை ஒழிப்பது.
ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இ) இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
ஈ) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது
விடை:
ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் …………. ஆவார்
விடை:
தர்ம பாலர்

Question 2.
கி.பி ……………….. இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்
விடை:
712

Question 3.
ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் …….. ஆவார்
விடை:
சிம்மராஜ்

Question 4.
காந்தர்யா கோவில் ………………. ல் அமைந்துள்ளது
விடை:
மத்தியப் பிரதேசம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 2

IV. சரியா? தவறா?

Question 1.
ராஜபுத்ர என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.
விடை:
தவறு (சமஸ்கிருத வார்த்தை)

Question 2.
அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 3.
அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு (சமணகோயில்)

Question 4.
ரக்ஷாபந்தன் சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.
விடை:
சரி

Question 5.
இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
விடை:
தவறு (அரேபியர்கள் இந்தியரிடமிருந்து கற்றுக் கொண்டனர்)

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையைக் டிக் (✓) இட்டுக் காட்டவும்.

Question 1.
கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

அ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) கூற்றும், காரணமும் தவறு.
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

Question 2.
கூற்று : மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்துவிரிவுபடுத்த முடியவில்லை .
காரணம் 1 :மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவார்.

அ) I சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) | மற்றும் பதவறு
விடை:
இ) மற்றும் 1 சரி

Question 3.
கூற்று : இந்தியாவில் இஸ்லாமியக்காலக்கட்டம் கி.பிபொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை. இந்த
காரணம் : கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி –
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

Question 4.
கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.
காரணம் : ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை..

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி. க
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 5.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.
i. ரக்ஷாபந்தன் என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது.
ii. வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
iii. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

அ) கூற்று சரியானது.
ஆ) கூற்று ii சரியானது.
இ) கூற்று iii சரியானது.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை.
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை

VI. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக.
விடை:

  • கூர்ஜரப் பிரதிகாரர்கள், ராஷ்டிர கூடர்கள், பாலர்கள் ஆகிய மூவரும் வளம் நிறைந்த கன்னோஜியின் மீது தங்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர்.
  • இதனால் இவர்களுக்குள் மும்முனைப் போராட்டம் ஏற்பட்டது.

Question 2.
ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள், பரமாரர்கள்.

Question 3.
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் கோபாலர் ஆவார்.

Question 4.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துக்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அப்பாசித்துகள்
  • உமையாத்துகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 5.
காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
தாஹீர்

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும். சிந்துவை

Question 1.
அரேபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்)
விடை:

  • அராபிய அறிஞர்கள் பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
  • சமஸ்கிருத மொழியிலிருந்த வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பான பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
  • 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக் கொண்டனர்.
  • பூஜ்யத்தின் பயன்பாட்டை கற்றுக் கொண்டனர்.
  • இந்தியர்களிடமிருந்து சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொண்டனர்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
மாமுது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:
மாமூது கஜினியின் படையெடுப்பு :
வட இந்தியாவின் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதே மாமூது கஜினியின் நோக்கமாகும்.

முகமது கோரியின் படையெடுப்பு :
இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்வதே முகமது கோரியின் நோக்கமாகும்.

Question 2.
கண்டுபிடித்து நிரப்புக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 4

IX. மாணவர் செயல்பாடு

Question 1.
வார்த்தைத் துளிகள் :
இவ்வார்த்தைகள் பற்றி மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதை மாணவர்கள் விவாதிக்க வேண்டும்; குறிப்பும் எழுத வேண்டும்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 5
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 6

X. வரைபட வினா

Question 1.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் பிரதிகாரர்கள், சௌகான்கள், பாலர்கள், பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக. (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

XI. கட்டக வினாக்கள்

Question 1.
மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட பஞ்சாபின் ஷாகி வம்ச அரசர் யார்?
விடை:
ஜெயபாலர்

Question 2.
ராஜபுத்திர ஓவிய பாணிகள் ………………… என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ராஜஸ்தானி

Question 3.
ராஜபுத்திரக் குலங்கள் எத்தனை இருந்தன?
விடை:
3G

Question 4.
இந்தியாவில் முதல் இஸ்லாமியப் பேரரசை உருவாக்கியவர் யார்?
விடை:
முகமது கோரி

Question 5.
டெல்லியின் முதல் சுல்தான் யார்?
விடை:
குத்புதீன் ஐபக்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 6.
மெக்கா எங்குள்ளது?
விடை:
அராபியா

XII . வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
ராஜபுத்திர அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோவில்களின் படங்களைக் கொண்டு ஒரு செருகேட்டினை (ஆல்பம்) தயார் செய்யவும்.

7th Social  Science Guide வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
அ) ஹரிச்சந்திரா
ஆ) வத்சராஜா
இ) நாகபட்டர்
ஈ) தேவ பாலர்
விடை:
அ) ஹரிச்சந்திரா

Question 2.
பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்
அ) தர்ம பாலர்
ஆ) தேவ பாலர்
இ) கோபாலர்
ஈ) மகி பாலர்
விடை:
இ) கோபாலர்

Question 3.
தேவபாலர் ஆதரித்த மதம்
அ) சீக்கிய மதம்
ஆ) இந்து மதம்
இ) பௌத்த மதம்
ஈ) சமண மதம்
விடை:
இ) பௌத்த மதம்

Question 4.
கஜினி மாமுதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
அ) ஜெயச்சந்திரா
ஆ) ஜெயபாலர்
இ) ராஜ்ய பாலர்
ஈ) ஜெய சுந்தர்
விடை:
ஆ) ஜெயபாலர்

Question 5.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
அ) பால்பன்
ஆ) இல்டுமிஷ்
இ) நாசிர் உதீன்
ஈ) குத்புதீன் ஐபக்
விடை:
ஈ) குத்புதீன் ஐபக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ராஜபுத்திரர்களின் கூட்டமைப்பு ……………… எனப்பட்டது
விடை:
ராஜபுதனம்

Question 2.
பால வம்சத்தின் மிகச் சிறந்த வலிமை மிக்க அரசர் ……………. ஆவார்
விடை:
முதலாம் மகிபாலர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 3.
சௌகான் வம்சத்தைச் தோற்றுவித்தவர் ……………. ஆவார்
விடை:
சிம்மராஜ்

Question 4.
சௌகான்களின் தலைநகர் ………………… ஆகும்
விடை:
சாகம்பரி

Question 5.
இறைதூதர் முகமது நபி தோற்றுவித்த சமயம் ………….
விடை:
இஸ்லாம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 7

IV. சரியா? தவறா?

Question 1.
தர்ம பாலர் வீக்கிரமசீலா மடாலயத்தை நிறுவினார்.
விடை:
சரி

Question 2.
மும்முனைப் போட்டிக்குப் பின், மூன்று சக்திகளும் பலம் பெற்றன
விடை:
தவறு (பலவீன மடைந்தன)

Question 3.
சௌகான் வம்சாவளியின் முதல் அரசர் பிருதிவிராஜ் ஆவார்.
விடை:
சரி

Question 4.
சூரியனார் கோவில் கொனார்க்கில் உள்ளது.
விடை:
சரி

Question 5.
இரண்டாம் தரெயின் போர் ராஜபுத்திரர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
விடை:
சரி

V. கூற்று மற்றும் காரணம்

அ) கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான கூற்று கூற்றுகளைக் கூறவும்.
1. தர்மபாலர் தலைசிறந்த சமண மத ஆதரவாளர் ஆவார்.
2. அவர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்
3. தர்மபாலருக்குப்பின் அவரது மகன் தேவபாலர் ஆட்சிக்கு வந்தார்

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 2 தவறு
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) 1 மற்றும் 2 தவறு

Question 2.
கூற்று : தரெய்ன் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
காரணம் : தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) காரணம் கூற்றக்கான சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

ஆ) தவறான இணையைக் கண்டறியவும் :
Question 1.
1. வத்ச ராஜா – பிரதிகாரர்கள்
2. கோபாலர் – பாலர்கள்
3. சிம்மராஜ் பராமரர்கள்
விடை:
3. சிம்மராஜ் – பராமரர்கள்

Question 2.
1. பிரதிகாரர்கள் – மாளவம்
2. பாலர்கள் – வங்காளம்
3. பராமரர்கள் – டெல்லி
விடை:
3. பராமரர்கள் – டெல்லி

இ) பொருந்தாததைக் கண்டுபிடி.
Question 1.
பிரதிகாரர்கள், சோலங்கிகள், துருக்கியர், பராமரர்கள்
விடை:
துருக்கியர்

Question 2.
சோமநாதபுரம், ஆம்பர், கஜுராகோ, தில்வாரா
விடை:
ஆம்பர்

VI. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
வங்கப்பிரிவினை எப்போது நிகழ்ந்தது?
விடை:
வங்கப்பிரிவினை 1905ல் நிகழ்ந்தது.

Question 2.
ரக்ஷா பந்தன் பற்றி சிறு குறிப்பு வரைக. (ராக்கி)
விடை:

  • ரக்ஷா பந்தன் என்பது ராஜபுத்திரர்களுக்கு உரிய ஒரு விழாவாகும்
  • இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
  • ஒரு பெண் ஒரு ஆடவரின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டி விட்டால் அப்பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறார் என்று பொருள்.
  • அப்படியான ஆண்கள் அப்பெண்களைப் பாதுகாக்கக் கடமைப் பட்டவர்கள் ஆவர்.

Question 3.
ராஜபுத்திரர்களின் தோற்றம் பற்றி கூறு.
விடை:

  • ராஜபுத் எனும் சொல் ரஜ்புத்ர எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • ராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்த காலத்திலிருந்து தொடங்குகின்றனர்.
  • அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள் சூரிய வம்சி, எனும் சூரிய குலம், சந்திர வம்சி எனும் சந்திர குலம் மற்றும் அக்னி குலம் என்பனவாகும்.
  • ராஜபுத்திரர்களில் 36 அரச குலங்கள் உள்ளன.

Question 4.
தர்மபாலர் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • தர்ம பாலர், கோபாலர் என்பவருடைய மகன் ஆவார்.
  • இவர் வட இந்தியாவில் ஒரு வலிமை மிக்க சக்தியாக விளங்கினார்.
  • கன்னோசி மீது படையெடுத்து வெற்றி பெற்றார்.
  • அவர் மிகச் சிறந்த பௌத்த ஆதரவாளராவார்.
  • அவர் விக்ரமசீலா என்ற கல்விக்கான மடாலயத்தை உருவாக்கினார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 5.
கஜினி மாமூதுவின் வெற்றிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கஜினி மாமூது ஷாகி அரசுக்கு எதிராக படையெடுத்து அதன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்தார்
  • வைகிந்த் என்னுமிடத்தில் ஆனந்த பாலரைத் தோற்கடித்தார்.
  • நாகர்கோட், தானேஸ்வர் ஆகிய நகரங்களைச் சூறையாடினார்.
  • கன்னோஜியின் மன்னரைத் தோற்கடித்தார்.
  • மதுரா நகர் மற்றும் சோமநாதபுரம் கோவிலைக் கொள்ளையடித்தார்.

VII. விடையளிக்கவும்.

Question 1.
கலை மற்றும் கட்டடக் கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பினை விவாதி.
விடை:
கலை :

  • ராஜபுத்திரர்களின் காலத்தில் இலக்கியம், இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளும் கவின் கலைகளும் செழிப்புற்றன.
  • ராஜஸ்தானி என்றழைக்கப்பட்ட ஓவியக்கலை தோன்றியது.

கட்டடக் கலை :
ராஜபுத்திரர்கள் சித்தோர்கார், ரான்தம்பூர், கும்பல்கார், மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினர்.

குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் கோட்டை, உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை ஆகியவை இவர்கள் காலத்தவையாகும்.

கஜுராகோ எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவில், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது அமைந்துள்ள தில்வாரா கோயில், காந்தர்யா கோவில் ஆகியவை ராஜபுத்திரரின் கோவில் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாகும்.

Question 2.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?
விடை:

  1. பாலர்கள் பௌத்த கோயில்களையும், புகழ் பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களையும் ஆதரித்தனர்.
  2. பாலர்கள் மூலம் பௌத்த சமயம் திபெத்தில் நிறுவப்பட்டது.
  3. சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த அரசுகளுடன் பாலர்கள் சுமூகமான உறவு கொண்டிருந்தனர்.
  4. தனித்தன்மை வாய்ந்த பாலர்களின் கலை உருவானது.
  5. செப்புச் சிலைகளிலும் பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வெளியிடப்பட்டன.

Question 3.
முதல் மற்றும் இரண்டாம் தரெய்ன் போர்களை விவரிக்க.
விடை:
முதல் தரெய்ன் போர் :

  • முகமது கோரி முல்தான் மற்றும் பஞ்சாப்பைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றினார்.
  • இந்த ஆபத்தான சூழலில் பிருதிவிராஜ் சௌகானின் தலைமையில் வட இந்திய இந்து அரசர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினர்.
  • 1191ல் தரெய்ன் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் பிருதிவிராஜ் சௌகான் முகமது கோரியைத் தோற்கடித்தார். இது முதல் தரெய்ன் போர் எனப்படுகிறது.

இரண்டாம் தரெய்ன் போர் :

  • இத்தோல்விக்குப் பழிவாங்கும் பொருட்டு முகமது கோரி ஒரு பெரும் படையைத் திரட்டி பிருதிவி ராஜிக்கு எதிராக புறப்பட்டார்.
  • பல இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும் பிருதிவிராஜிக்கு ஆதரவு அளித்தனர்.
  • ஆயினும் 1192ல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் முகமது கோரியால் தாற்கடிக்கப்பட்டார். பிருதிவிராஜ் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
  • இப்போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 8