Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

7th Social  Science Guide புவியின் உள்ளமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்வு செய்க

Question 1.
நைஃப் (Nife) __________ ஆல் உருவானது.
அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
ஆ) சிலிக்கா மற்றும் அலுமினியம்
இ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
ஈ) இரும்பு மற்றும் மெக்னீசியம்
விடை:
அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

Question 2.
நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ___________ விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது.
அ) மலை
ஆ) சமவெளிகள்
இ) தட்டுகள்
ஈ) பீடபூமிகள்
விடை:
இ) தட்டுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை ___________ மூலம் அளக்கலாம்.
அ) சீஸ்மோகிராஃப்
ஆ) ரிக்டர் அளவு கோல்
இ) அம்மீட்டர் தான்
ஈ) ரோட்டோ மீட்டர்
விடை:
ஆ) ரிக்டர் அளவு கோல்

Question 4.
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழைக்கப்படுகிறது.
அ) எரிமலைத்துளை
ஆ) ளிமலைப் பள்ளம்
இ) நிலநடுக்க மையம்
ஈ) எரிமலை வாய்
விடை:
அ) எரிமலைத் துளை

Question 5.
மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை ___________
அ) ஸ்ட்ராம்போலி
ஆ) கரக்கபோவா
இ) பியூஜியாமா
ஈ) கிளிமாஞ்சாரோ
விடை:
அ) ஸ்ட்ராம்போலி

Question 6.
___________ பகுதி ” பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகிறது.
அ) பசிபிக் வளையம்
ஆ) மத்திய அட்லாண்டிக்
இ) மத்திய கண்டம்
ஈ) அண்டார்ட்டிக்
விடை:
அ) பசிபிக் வளையம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. அக

Question 1.
புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _____________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி

Question 2.
நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.
விடை:
நில அதிர்வுமானி (Seismograph)

Question 3.
பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
எரிமலை வெளியேற்றம்

Question 4.
செயல்படும் எரிமலைக்கு உதாரணம் ____________ ஆகும்.
விடை:
செயின்ட் ஹெலன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 5.
எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை __________ என அழைக்கின்றனர்.
விடை:
எரிமலை ஆய்வியல்

III. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
மேலோடு, மாக்மா, புவிக்கருவம், கவசம்
விடை:
மாக்மா

Question 2.
நிலநடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலைகள்
விடை:
எரிமலைவாய்

Question 3.
உத்தரகாசி, சாமோலி, கொய்னா, கரக்கடோவே
விடை:
கரக்கடோவே

Question 4.
லாவா , எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்.
விடை:
சிலிக்கா

Question 5.
ஸ்ட்ராம் போலி, ஹெலென் , ஹவாய், பூயூஜியாமா
விடை:
ஹவாய்

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 2

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.
காரணம் : புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி, காரணம் தவறு ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன.
காரணம் : பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

VI. ஒரு வரியில் விடையளிக்கவும்:

Question 1.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக.
விடை:
புவிமேலோடு (Crust)

Question 2.
சியால் (SIAL) என்றால் என்ன?
விடை:
கண்டங்களின் மேற்பகுதி.

Question 3.
புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?
விடை:
கண்டத்திட்டு நகர்வுகள்

Question 4.
செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் தருக.
விடை:
ஆப்பிரிக்காவின் கென்யா எரிமலைகள்.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன?
விடை:
மெல்லிய புறத்தோல் (அ) கவசம்:

  • புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு கவசம் (mantle) எனப்படுகிறது.
  • கவசம் மேல் கவசம் மற்றும் கீழக்கவசம் என இருவகைப்படும்.

Question 2.
புவிக்கருவம் பற்றி சுருக்கமாக எழுதவும்.
விடை:
புவிக்கருவம் :

  • புவியின் மையப் பகுதியை புவிக்கரு எனக் குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் என்றும் அழைக்கப்படுகிறது.
  • புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டது.
    1. வெளிப்புற புவிக்கரு (திரவநிலையில் இரும்புக் குழம்பு)
    2. உட்புற புவிக்கும் (திட நிலையில் உள்ள நைஃப்)

Question 3.
நிலநடுக்கம் வரையறு.
விடை:
நிலநடுக்கம் : புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே “நிலநடுக்கம்” என்கிறோம்.

Question 4.
சீஸ்மோகிராஃப் என்றால் என்ன?
விடை:
சீஸ்மோகிராஃப்:
புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை சீஸ்மோகிராஃப் என அழைக்கிறோம்.

Question 5.
எரிமலை என்றால் என்ன?
விடை:
எரிமலை:
புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக் குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம்.

Question 6.
செயல்படும் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
செயல்படும் அடிப்படையில் எரிமலைகளின் வகைகள்:

  • கேடய எரிமலை
  • தழல் கூம்பு எரிமலை
  • பல்சிட்டக் கூம்பு எரிமலை

VIII. காரணம் கூறு

Question 1.
புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை.
விடை:
புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை.
ஏனெனில்
புவியின் மையப்பகுதி (புவிக்கரு ) 5150 கி.மீ முதல் 6370 கி.மீ அளவில் பரந்துள்ளது. அதிக வெப்பநிலையும் அழுத்தமும் கொண்ட பகுதி. வெளிப்புறக் கருவில் திரவநிலையில் இரும்பாலான குழம்பு உள்ளது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டைவிட அடர்த்தி குறைவு.
விடை:
கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டை விட அடர்த்தி குறைவு.
ஏனெனில்
கண்டங்களின் மேற்பகுதி கருங்கற் பாறைகளால் ஆனது. முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது. இதுவேசியால் என அழைக்கப்படுகிறது. இதன் சராசரி அடர்த்தி 2.7 கி/செ.மீ3

மேலோட்டின் கீழ்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளால் ஆனது. கடல் தரைகளான இப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்துள்ளது. இதுவே சிமா என அழைக்கப்படுகிறது. இதன் சராசரி அடர்த்தி 3.0 கி/செ.மீ3

IX. வேறுபடுத்துக.

Question 1.
சியால் மற்றும் சிமா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 3

Question 2.
செயல்படும் எரிமலை மற்றும் உறங்கும் எரிமலை
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 4

X. பத்தியளவில் விடையளி

Question 1.
நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.
விடை:
நிலநடுக்கத்தின் விளைவுகள்:
புவி மேலோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாரா நகர்வு, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் ஆகும்.

நிலநடுக்கம் புவிப்பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன.

கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும். மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுக்கி மரணக் குழிகளாக மாறுகின்றன.

நிலத்தடி நீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது.

தீப்பற்றுதல் மற்றோர் முக்கிய ஆபத்தாகும்.

நிலநடுக்கத்தால் கடலில் ஏற்படும் பெரிய அலைகளான சுனாமி ஜப்பானிய கடலோரப் பகுதிகளிலும், பசிபிக் கடலோரப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெருத்த சேதத்தை உண்டாக்குகின்றன.

Question 2.
எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.
விடை:
எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகள்:
புவிமேற்பரப்பு பிளவு வழியே மாக்மா பாறைக் குழம்பு வெளியேறுவது எரிமலை ஆகும். எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவினை கொண்டு > செயல்படும் எரிமலை > செயல்படாத எரிமலை > செயலிழந்த எரிமலை என மூவகைப்படும்.

செயல்படும் எரிமலை:

  • அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலை செயல்படும் எரிமலைகள் ஆகும். பெரும்பாலான எரிமலைகள் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளன.
  • ஸ்ட்ராம்போலி (மத்திய தரைக்கடல்)
  • செயின்ட் ஹெலன் (அமெரிக்கா)
  • மவுனோலோ (ஹவாய்) ஆகியன செயல்படும் எரிமலைகள்.

செயல்படாத எரிமலை :

  • பல ஆண்டுகளாக எரிமலைக்குழம்பை வெளியேற்றும் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக் கூடிய எரிமலைகள் செயல்படாத எரிமலைகள் ஆகும். இவை உறங்கும் எரிமலைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • வெசுவியஸ் (இத்தாலி)
  • பியூஜியாமா (ஜப்பான்)
  • சிரகோட்டா (இந்தோனேஷியா) ஆகியன செயல்படாத எரிமலைகள்.

செயலிழந்த எரிமலை :

  • வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து, வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலை செயலிழந்த எரிமலை எனப்படும்.
  • போப்பா (மியான்மர்)
  • கிளிமாஞ்சரோ (ஆப்பிரிக்கா)
  • கென்யா (ஆப்பிரிக்கா) ஆகியன செயலிழந்த எரிமலைகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
முக்கியமான எரிமலை மண்டலங்களை எழுதி ஏதேனும் ஒன்று பற்றி விவரி
விடை:
முக்கியமான எரிமலை மண்டலங்கள்:
உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன. அவை

  • பசிபிக் வளையப் பகுதி
  • மத்திய கண்டப் பகுதி
  • மத்திய அட்லாண்டிக் பகுதி.

பசிபிக்வளையப் பகுதி:

  • இந்த எரிமலைப் பகுதியானது குவிய கடல்தட்டின் எல்லை பகுதியில் அமையப் பெற்றுள்ளது. பசிபிக் பெருக்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது.
  • மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இதனை “பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கின்றனர்.

XI. சிந்தனை வினா (HOTS)

Question 1.
பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது ஏன்?
விடை:
பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது.
ஏனெனில் புவிக்கரு
புவியின் மையப் பகுதியாகவும் புவியின் மிகுந்த வெப்பமான அடுக்காகவும் உள்ளது. நைஃப் என்ற உட்புற புவிக்கரு அதிக அடர்த்தியும் வெப்பமும் கொண்டது. வெளிப்புற புவிக்கருவானது திரவ நிலையில் இரும்புக் குழம்பாலானது.

Question 2.
எரிமலைகள் அழிவானதா அல்லது ஆக்கப்பூர்வமானதா?
விடை:
எரிமலைகள் அழிவானது மற்றும் ஆக்கபூர்வமானது
அழிவானது: –

  1. எரிமலை வெடிப்பு நிலநடுக்கங்கள், பெரு வெள்ளப் பெருக்குகள், மண் சரிவுகள், பாறை வீழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
  2. லாவா எனும் எரிமலைக் குழம்பு நீண்ட தூரம் பயணிக்கும் பொழது தனது பாதைய அனைத்தையும் எரிக்கும், புதைக்கும் அல்லது சேதத்திற்கு உட்படுத்தும்.
  3. உண்டாகும் பெருமளவு தூசு மற்றும் சாம்பல் சுவாசத்தை கடினமாக்கும் அல்லது எரிச்சல் ஊட்டும்.
  4. ளிமலை வெடிப்புகள் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். எளிமலைப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைப் பாதிக்கும்.

ஆக்கபூர்வமானது:

  1. ளிமலையின் போது உண்டாகும் பொருட்கள் மண் வளத்தை அதிகரித்து வேளாண் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கிறது.
  2. வெப்பமான எரிமலைப் பகுதி புவி வெப்ப ஆற்றலை உருவாக்குவதற்கு உதவுகிறது.
  3. பெரும்பாலான ளிமலைப் பொருட்கள் கட்டுமானப் பொருட்களாக பயன்படுகின்றன.
  4. செயல்படாத (உறங்கும்) எரிமலைகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் அதிகமாக ஈர்க்கும் சுற்றுலாத் தலங்களாக இருக்கின்றன. –

Question 3.
எரிமலை எவ்வாறு ஒரு தீவை உருவாக்குகிறது?
விடை:
எரிமலை ஒரு தீவை உருவாக்குதல்:

  1. பல எரிமலைகள் புவியின் பெருங்கடல்களின் அடியில் உருவாகின்றன. கடல் நீருக்குக் கீழே வெடிப்புக்கு உட்படும் எரிமலை பெருங்கடலின் நீர்ப்பரப்புக்கு மேலே எழும்புகிறது.
  2. பெருங்கடல் தீவுகள் எரிமலைத் தீவுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  3. ஐஸ்லாந்து நாடு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவானதாகும்.

XII. செயல்பாடுகள்

Question 1.
நிலநடுக்கம் மற்றும் எரிமலை பற்றிய படங்களை வைத்து ஒரு புத்தகம் தயாரிக்கவும். (மாணவர்களுக்கானது)

Question 2.
எரிமலையின் பாகங்களைக் குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 5

Question 3.
உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 6
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

7th Social  Science Guide புவியின் உள்ளமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
புவியின் கொள்ளளவில் கவசம் _____________ கொண்டுள்ளது.
அ) 1%
ஆ) 84%
இ) 51%
ஈ) ஒன்றுமில்லை
விடை:
ஆ) 84%

Question 2.
வெளிப்புற புவிக்கருவில் ___________ மிகுதியாக உள்ளது.
அ) சிலிக்கா
ஆ) மக்னீ சியம்
இ) இரும்பு
ஈ) நிக்கல்
விடை:
இ) இரும்பு

Question 3.
கொலம்பியா பீடபூமி’ ___________ ல் உள்ளது
அ) வட அமெரிக்கா
ஆ) தென் அமெரிக்கா
இ) ஆஸ்திரேலியா
ஈ) கனடா
விடை:
அ) வட அமெரிக்கா

Question 4.
பேரென் தீவு கடைசியாக ___________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
அ) 1997
ஆ) 2007
இ) 2017
ஈ) 1987
விடை:
இ) 2017

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 5.
உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை ____________
அ) மவுனாலோ
ஆ) செயின்ட் ஹெலன்
இ) ஸ்டாராம் போலி
ஈ) பினாடுபோ
விடை:
அ) மவுனாலோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
எரிமலைகள் பற்றி அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் ______________ என அழைக்கப்படுகின்றனர்.
விடை:
எரிமலை ஆய்வியலாளர்கள்

Question 2.
எரிமலை மீண்டும் வெடித்து கூம்பு வட்டக் குன்றின் உச்சியில் தோற்றுவிக்கும் பெரிய பள்ளம் ____________
விடை:
வட்ட எரிமலைவாய்

Question 3.
எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகள் ____________ எனப்படும்.
விடை:
எரிமலை ஆய்வியல்

Question 4.
புவியின் சுற்றளவு _____________ கி.மீ ஆகும்.
விடை:
6371

Question 5.
கவசமானது சுமார் _____________ கி.மீ தடிமனாக காணப்படுகிறது.
விடை:
2900

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 7
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 8

IV. சரியா? தவறா?

Question 1.
கடல் தரைகள் பகுதி பசால்ட் பாறைகளாலானது
விடை:
சரி

Question 2.
ஜப்பானிய கடலோரப் பகுதிகளில் சுனாமியின் உருவாக்கம் பொதுவாகக் காணப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
உலகில் 68 % நிலநடுக்கங்கள் பசிபிக் வளைய பகுதியில் ஏற்படுகின்றன.
விடை:
சரி

Question 4.
எரிமலை வெடிப்பு வெளியேற்றத்துக்கு எடுத்துக்காட்டு கரக்காட்டாவோ தீவிலுள்ள எரிமலை ஆகும்.
விடை:
சரி

Question 5.
பேரன் தீவு அந்தமான் கடலில் உள்ளது.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : சிலிகா அதிகமுள்ள அமில லாவா வேகமாகப் படிகின்றது.
காரணம் : செயல்படாத எரிமலைகள் அதிக செயல்பாடு கொண்டவை. அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள்.
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

Question 2.
கூற்று : புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி ரிக்டர் ஆகும்
காரணம் : சுனாமி கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உண்டாகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
இ) கூற்றும் தவறு ஆனால் காரணம் சரி

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 9
விடை:
புவிமேலோடு – அஸ்தினோஸ்பியர்

VII. பொருத்தமில்லாதாதைக் கண்டுபிடி,

Question 1.
புவிமேலோடு, புவிக்கரு, எரிமலைப்பள்ளம், கவசம்
விடை:
எரிமலைப் பள்ளம்

Question 2.
சியால் (SIAL), நைஃப் (NIFE), சிமா (SIMA), எபின் (EFIN)
விடை:
எபின் (EFIN)

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி:

Question 1.
மூன்று வகையான நிலநடுக்க அலைகளைப் பெயரிடு.
விடை:
மூன்று வகையான நிலநடுக்க அலைகள்:

  • P – அலைகள் (அழுத்த அலைகள்)
  • S – அலைகள் (முறிவு அலைகள்)
  • L – அலைகள் (மேற்பரப்பு அலைகள்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
மென் அடுக்கு (மென் பாறைக் கோளம்) என்றால் என்ன?
விடை:
மென் பாறைக் கோளம் :
புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதியே மென்பாறைக் கோளம் எனப்படும்.

Question 3.
“நீல நிறக் கோள்” குறித்து எழுதுக.
விடை:
நீல நிறக் கோள்:

  • பூமியின் பரப்பு 71% நீரால் சூழப்பட்டுள்ளது.
  • பூமி நீல நிறக்கோள் ‘ என அழைக்கப்டுகிறது.

Question 4.
புவியின் நகர்வுகளை அதன் ஆக்க சக்திகளின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
ஆக்க சக்திகளின் அடிப்படையில் புவி நகர்வுகள் :

  • புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்
  • புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள்

Question 5.
நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவு என்ன?
விடை:
நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவு: புவியின் மேலோட்டில் பிளவு மற்றும் விரிசல்கள் கொண்ட ஒரு பகுதி பிளந்து, கீழ் இறங்குவதே நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவாகும்.

IX. விரிவான விடை தருக.

Question 1.
‘கண்டத்தட்டு நகர்வுகள் குறித்து எழுதுக
விடை:
கண்டத்தட்டு நகர்வுகள் :
கற்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகளை கற்கோள தட்டுகள் என்கிறோம்.

கற்கோள தட்டுகளின் (கண்டத்தட்டுகள் அல்லது கடற் தட்டுகள்) நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.

புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பமானது இத்தட்டுகளின் இயக்க சக்தியாக செயல்படுகிறது. இத்தட்டுகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன.

சிற்சில பகுதிகளில் தட்டுகள் ஒன்றிலிருந்து மற்ஹான்று விலகிச் செல்கின்றன. சிற்சில பகுதிகளில் ஒன்று மற்றொன்றின் அருகாமையில் நெருங்கிவரும்போது மோதிக் கொள்கின்ளன.

ஒரு கடற்தட்டு கண்டத்தட்டின் மீது போதும் போது கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் எரிமலைகளாக உருவெடுக்கின்றது. சமயங்களில் தட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன. இமயமலைச் சிசரங்கள் உருவானது இவ்வகையில்தான்.

புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்

புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள் என புவியின் நகர்வுகளை ஆக்க சக்தியின் அடிப்படையில் பிரிக்கலாம்.

Question 2.
எரிமலை வெடிப்பின் விளைவுகள் யாவை?
விடை:
எரிமலை வெடிப்பின் விளைவுகள் :

  • புவியின் உள் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது 35 மீட்டருக்கு 1° செ ஆக உயர்ந்து கொண்டே வருகிறது.
  • வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது. 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சதுர செ.மீக்கு 5 டன்கள் என்ற அளவில் உயருகின்றது.
  • இத்தகைய நிலையில் புவியின் உள்ளே பாறைக் குழம்பு மிதமான இளகிய நிலையில் உள்ளது. இதுவே மாக்மா ஆகும். மிகுதியான அழத்த நிலையில் மாக்மாவானது எளிதில் பற்றக் கூடிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.
  • இத்திறன் காரணமாகவே ஆற்றலற்ற புவிப்பகுதிகளில் மாக்மா பாறைக்குழம்பு வெடித்து வெளியேறுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
மத்திய தரைக்கடல் – இமயமலை நிலநடுக்கம் பகுதி குறித்து எழுது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்கள் பற்றி கூறுக.
விடை:
மத்திய தரைக்கடல் – இமயமலை நிலநடுக்கப்பகுதி:

  1. உலகின் 31% நிலநடுக்கங்கள் ஆசியா கண்டத்தில் உள்ள இமயமலைப் பகுதியிலும் வடமேற்கு சீனாவிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதி வரையிலும் ஏற்படுகின்றன.
  2. இந்தியாவின் இமயமலைப் பகுதிகள், கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகள் நிலநடுக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
  3. அதிக எண்ணிக்கையிலுள்ள நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. மோசமான மற்றும் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டதாக உணரப்பட்டுள்ளது.
  4. உத்திரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1991)
  5. சாமோலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1999)
  6. நிலநடுக்கப் பாதிப்புகள் அற்ற பகுதிகளாக சொல்லப்பட்ட தக்காண பீடபூமியிலேயே இரண்டு மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
  7. கெய்னாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1967)
  8. லாத்தூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1993)

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 10