Samacheer Kalvi 3rd Standard Maths Guide Term 1 Chapter 1 Geometry

Samacheer Kalvi 3rd Standard Maths Book Solutions Term 1 Chapter 1 Geometry

Practice (Text Book Page No. 4)

Question 1.
Triangle has ______ corners.
Answer:
three

Question 2.
Four sides of a square are _______.
Answer:
equal

Question 3.
Circle has _______ sides.
Answer:
no

Question 4.
Rectangle has _______ diagonals.
Answer:
two

Question 5.
Opposite sides of a rectangle are _______.
Answer:
equal

Question 6.
Circle has _______ centre point.
Answer:
one

Samacheer Kalvi 3rd Standard Maths Book Solutions Term 1 Chapter 1 Geometry

Activity 2(Text Book Page No. 5)

Tick the appropriate boxes to show the lines found in the given objects.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 1

Practice(Text Book Page No. 5)

Put a tick mark in the appropriate columns.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 2

Answer:

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 3

Samacheer Kalvi 3rd Standard Maths Book Solutions Term 1 Chapter 1 Geometry

Practice (Text Book Page No. 6)

Question 1.
Match the following.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 4

Answer:

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 5

Samacheer Kalvi 3rd Standard Maths Book Solutions Term 1 Chapter 1 Geometry

Question 2.
Complete the following table by filling the properties of 2D and 3D shapes:

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 6

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 7

Answer:

Samacheer Kalvi 3rd Maths Guide Term 1 Chapter 1 Geometry 8

Samacheer Kalvi 3rd Standard Maths Guide

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

6th Social Science Guide சாலை பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி.

Question 1.
சாலை பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுதவும்.
விடை:

  • விழிப்புடன் பயணம் விபத்தில்லா பயணம்.
  • வாழ்க்கையில் முந்துங்கள் வாகனத்தில் அல்ல.
  • வேகத்தை கூட்டாதே ஆயுளை குறைக்காதே.
  • நடக்க பாரு இடப்பக்கம் கடக்க பாரு இருபக்கம்.
  • வாகனம் ஓட்டுவதற்கு மட்டும் பறப்பதற்கு அல்ல.
  • வேகம் சோகத்தை தரும் நிதானம் நிம்மதியை தரும்.

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை அடையாளம் காண்க.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு 10
விடை:
அ) திருப்பம் கிடையாது
ஆ) செல்லக் கூடாது
இ) குறுக்கு சாலை
ஈ) மருத்துவமனை,

Question 3.
2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துக்கள் குறித்த தகவல்களைக் கொண்டு
விடை:
கலந்துரையாடல் நடத்தவும்.

  • சாலை விபத்துக்கள் 2017ல் 3 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் பெருமளவு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
  • பீகார், உபி, ஒடிசா மற்றும் மபி மாநிலங்களில் சாலை விபத்துக்களில் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
  • 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது பெருமளவு சாலை விபத்துக்கள் தவிர்க்கப்பட்ட மாநிலங்களில்
    முதலாவதாகத் தமிழ்நாடு திகழ்கின்றது என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
  • சதவிகிதத்தின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் 15.7 சதவீதம் சாலை விபத்துக்கள் படு வீழ்ச்சி அடைந்துள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

Question 4.
விவாதம் – தலைக் கவசம் அணிதல் அவசியமானதா அல்லது அவசியமற்றதா?
விடை:
தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் :

  • 88% வரை தலைக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம்.
  • பார்க்கும் திறனை அதிகரிக்கும்

தீமைகள் :

  • அதன் வடிவமைப்பு
  • பின்னால் வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

முடிவு :

  • தலைக்கவசம் அணிவதில் சில தீமைகள் இருந்தாலும், நாம் தலைக்கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
  • நம்முடைய உயிர் நாம் இந்த பூமியில் வாழ முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • எனவே நாம் இந்த விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செய்வோம். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.

Question 5.
சாலை பாதுகாப்பு குறித்த சுவரொட்டிகள் தயாரிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு 90

6th Social Science Guide சாலை பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனங்களை எப்படி, எப்போது, ஏன் இயக்கம் அனுமதிக்கப் படுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களே ….. ஆகும்.
விடை:
சாலைவிதிகள்

Question 2.
…… மற்றும் … வீடுகள் மற்றும் பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
விடை:
பெற்றோர் மற்றும்
ஆசிரியர்கள்

Question 3.
எச்சரிக்கைக் குறியீடுகள் …… வடிவத்தில் காணப்படுகின்றன.
விடை:
முக்கோண

Question 4.
… வட்டங்கள் சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.
விடை:
நீலநிற

Question 5.
…….. விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும்.
விடை:
பச்சை நிற.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
……… வட்டங்கள் சாலையில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதை வழங்குகின்றன.
அ) ஆரஞ்சு
ஆ) சிவப்பு
இ) பச்சை
விடை:
ஆ) சிவப்பு

Question 2.
…… அம்புக் குறி அது காட்டும் திசையை நோக்கிப் பயனிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அ) பச்சை
ஆ) சிவப்பு
இ) நீலம்
விடை:
அ) பச்சை

Question 3.
பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. அமைக்கப்பட்டது.
அ) பிரான்ஸ்
ஆ) ரசியா
இ) பிரிட்டன்
விடை:
இ) பிரிட்டன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

Question 4.
கட்டாயக் குறியீடுகள் … வடிவில் காணப்படுகின்றன.
அ) முக்கோண
ஆ) செவ்வக
இ) வட்ட
விடை:
இ) வட்ட

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மூன்று வகையான போக்குவரத்து சமிக்ஞைகள் யாவை?
விடை:
கட்டாயக் குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் அறிவுறுத்தும் குறியீடுகள்.

Question 2.
கட்டாயக் குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவைகள் பற்றிய விதிகளாகும். இவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை. இச்சமிக்கைஞகள் வட்ட வடிவில் காணப்படுகின்றன.

Question 3.
எச்சரிக்கை குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்ககளுக்கு அறிவிப்பவை எச்சரிக்கைக் குறியீடுகள் ஆகும். இவை பொதுவாக முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.

Question 4.
அறிவுறுத்தும் குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன. இவை பொதுவாக செவ்வக வடிவத்தில் காணப்படுகின்றன.

Question 5.
சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு, மஞ்சள், மற்றும் பச்சை எவற்றை குறிக்கின்றன?
விடை:
சிவப்பு – நில், மஞ்சள் – கவனி, பச்சை – செல்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

IV. விரிவான விடையளி.

Question 1.
பாத சாரிகள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை யாவை?
விடை:
செய்யக் கூடியவை :

  • நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம்.
  • நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர் வரும் வாகனங்களை நோக்கி வலப்பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.
  • 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும்.
  • பாதுகாப்பான தூரத்தில் வாகனங்கள் வரும்போது சாலையைக் கடக்க வேண்டும்.
  • இரவு நேரங்களில் வெளிர் நிற ஆடையை அணிய வேண்டும்.

செய்யக் கூடியவை :

  • சாலைகளில் ஓடி கடக்கக் கூடாது.
  • நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்புறத்திலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ சாலையைக் கடக்கக் கூடாது.
  • வாகன ஓட்டுநருக்குத் தெளிவாக தெரியாத மூலைகளிலிருந்தும் வளைவுகளில் இருந்தும் சாலையைக் கடக்கக் கூடாது.
  • சாலை தடுப்புகளைத் தாண்டிக் குதித்துச் சாலையை கடக்கக் கூடாது.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு 95

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 2 புவி மாதிரி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

6th Social Science Guide புவி மாதிரி Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ………..
விடை:
நிலநடுக்கோடு

Question 2.
புவியின் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள் ………..
விடை:
அட்சக்கோடு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 3.
புவியில் 90° அட்சங்கள் ……. என அழைக்கப்படுகின்றன.
விடை:
துருவம்

Question 4.
முதன்மை தீர்க்கக்கோடு ………. என அழைக்கப்படுகிறது.
விடை:
கிரீன்விச் தீர்க்கக்கோடு

Question 5.
உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை ……….
விடை:
24

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவியின் வடிவம்
அ) சதுரம்
ஆ) செவ்வகம்
இ) ஜியாய்டு
ஈ) வட்டம்
விடை:
இ) ஜியாய்டு

Question 2.
வடதுருவம் என்பது
அ) 90° வ அட்சக்கோடு
ஆ) 90° தெ அட்சக்கோடு
இ) 90° மே தீர்க்கக்கோடு
ஈ) 90° கி தீர்க்கக்கோடு
விடை:
அ) 90° வ அட்சக்கோடு

Question 3.
0° முதல் 180 கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பகுதி இவ்வாறு அழைக்கப் படுகிறது.
அ) தெற்கு அரைக்கோளம்
ஆ) மேற்கு அரைக்கோளம்
இ) வடக்கு அரைக்கோளம்
ஈ) கிழக்கு அரைக்கோளம்
விடை:
ஈ) கிழக்கு அரைக்கோளம்

Question 4.
231/2° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) மகரரேகை
ஆ) கடகரேகை
இ) ஆர்க்டிக் வட்டம்
ஈ) அண்டார்டிக் வட்டம்
விடை:
ஆ) கடகரேகை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 5.
180 தீர்க்கக்கோடு என்பது
அ) நிலநடுக்கோடு
ஆ) பன்னாட்டு தேதிக்கோடு
இ) முதன்மை தீர்க்கக்கோடு
ஈ) வடதுருவம்
விடை:
ஆ) பன்னாட்டு தேதிக்கோடு

Question 6.
கிரீன்விச்முதன்மைதீர்க்கக்கோட்டிற்குநேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்
அ) நள்ளிரவு 12 மணி
ஆ) நண்பகல் 12 மணி
இ) பிற்பகல் 1 மணி
ஈ) முற்பகல் 11 மணி
விடை:
ஆ) நண்பகல் 12 மணி

Question 7.
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
அ) 1240 நிமிடங்கள்
ஆ) 1340 நிமிடங்கள்
இ) 1440 நிமிடங்கள்
ஈ) 1140 நிமிடங்கள்
விடை:
இ) 1440 நிமிடங்கள்

Question 8.
கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
அ) 82 1/2° கிழக்கு
ஆ) 82 1/2° மேற்கு
இ) 81 1/2° கிழக்கு
ஈ) 81 1/2° மேற்கு
விடை:
அ) 82 1/2° கிழக்கு

Question 9.
அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை
அ) 171
ஆ) 161
இ) 181
ஈ) 191
விடை:
இ) 181

Question 10.
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
அ) 370
ஆ) 380
இ) 360
ஈ) 390
விடை:
இ) 360

III. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு
விடை:
பன்னாட்டு தேதிக்கோடு

Question 2.
மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மை தீர்க்கக்கோடு
விடை:
முதன்மை தீர்க்கக்கோடு

Question 3.
வெப்பமண்டலம், (நேரமண்டலம்), மிதவெப்ப மண்டலம், குளிர் மண்டலம்
விடை:
நேர மண்டலம்

Question 4.
இராயல் வானியல் ஆய்வுமையம்), முதன்மை தீர்க்கக்கோடு, கிரீன்விச், பன்னாட்டு தேதிக்கோடு
விடை:
இராயல் வானியல் ஆய்வுமையம்

Question 5.
10° வடக்கு, 20° தெற்கு, 30° வடக்கு, 40° மேற்கு
விடை:
40° மேற்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 60
விடை:
1. நிலநடுக்கோடு
2. கிரீன்விச்
3. பன்னாட்டு தேதிக்கோடு
4. துருவம்

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
அ) 1 மற்றும் 3 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 2 சரி
ஈ) 1.2 மற்றும் 3 சரி
விடை:
இ) 1 மற்றும் 2 சரி

VI. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

கூற்று 1 : புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
கூற்று 2 : புவியில், தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) சுற்று சரி, சுற்று 2 தவறு

VII. பெயரிடுக

Question 1.
புவியில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.
விடை:
அட்சக்கோடு

Question 2.
புவியில் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்
விடை:
தீர்க்கக்கோடு

Question 3.
புவியின் முப்பரிமாண மாதிரி
விடை:
புவி மாதிரி

Question 4.
தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் இந்தியா அமைந்துள்ள அரைக்கோளம்
விடை:
தென் அரைக்கோளம்

Question 5.
தீர்க்கக்கோடுகள் மற்றும் அட்சக்கோடுகளின் வலை அமைப்பு
விடை:
புவி வலைப்பின்னல்

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
ஜியாய்டு என்பது என்ன?
விடை:

  • புவியின் வடிவமானது தனித்தன்மை வாய்ந்தது.
  • புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது.
  • எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
தல நேரம் என்பது என்ன?
விடை:
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.

Question 3.
ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர் உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?
விடை:
ஒரு நாளில் ஒரு முறை தான் சூரியன் நேர் உச்சிக்கு வரும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 4.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
விடை:

  • புவியின் மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப் பட்டுள்ள கற்பனைக் கோடுகள், அட்சக்கோடுகள் எனப்படும்.
  • புவியின் மீது வடக்கு தெற்காக, செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள் தீர்க்கக் கோடுகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும்.

Question 5.
புவியில் காணப்படும் நான்கு அரைக்கோளங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • வட அரைக்கோளம்
  • தென் அரைக்கோளம்
  • கிழக்கு அரைக்கோளம்
  • மேற்கு அரைக்கோளம்

IX. காரணம் கூறுக

Question 1.
0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.
விடை:
0° தீர்க்கக்கோடு கீரின்விச் வழியே செல்வதால் கிரீன்விச் தீர்க்கக் கோடு என்று அழைக்கப் படுகிறது.

Question 2.
புவியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், 66 1/2° அட்சக்கோடு முதல் 90° துருவம் வரை உள் ள பகுதிகள் குளிர் மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது எனவே இப்பகுதி குளிர்மண்டலம் என அழைக்கப்படுகிறது.

Question 3.
பன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.
விடை:
பன்னாட்டு தேதிக்கோடு நேராகச் சென்றால், ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும், இந்த குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைந்து வரையப்பட்டுள்ளது.

X. விரிவான விடை தருக

Question 1.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
விடை:

  • முழு பூமியையும் படிப்பதற்கான ஒரே துல்லியமான வழி புவி மாதிரி.
  • இது பூமியின் மேற்பரப்பில் நிலம் மற்றும் நீர் விநியோகத்தை காட்டுகிறது.
  • சரியான வடிவ அளவு மற்றும் கண்டங்கள் மற்றும் கடல்களின் இடம் காட்டப்பட்டுள்ளது.
  • கடல்வழிபாதை, காற்று பாதை, ஆறுகள், நகரங்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவுகிறது.

Question 2.
அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 81
0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென் வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனப்படும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 82
0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென் துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனப்படும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 83
0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி கிழக்கு அரைக் கோளம் (Eastern Hemisphere) என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 84
0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180° மேற்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere) என அழைக்கப்படுகிறது.

Question 3.
முக்கிய அட்சக்கோடுகள் யவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
விடை:
முக்கிய அட்சக்கோடுகள்:

  • நிலநடுக்கோடு 0°
  • கடகரேகை 23 1/2° வ
  • மகரரேகை 23 1/2° தெ
  • ஆர்க்டிக் வட்டம் 66 1/2°
  • அண்டார்டிக் வட்டம் 66 1/2° தெ
  • வடதுருவம் 90°வ
  • தென்துருவம் 90° தெ
    புவி சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் அடிப்படையில் பல காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.

வெப்ப மண்ட லம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டின் இருபக்கங்களிலும் கடகரேகை மற்றும் மகர ரேகை இடையே அமைந்துள் ள பகுதியே வெப்பமண்டலம் என அழைக்கப்படுகிறது. சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகு தி அதிக வெப்பமடைகிறது. எனவே காலநிலை வெப்பம் மற்றும் ஈரப்பதமாக இருக்கும்.

மித வெப்ப மண்ட லம் (Temperate Zone)
இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. இது இரண்டு அரைக்கோளங்களிலும் வெப்ப மண்டலத்திற்கும், குளிர் மண்டலத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

குளிர் மண்ட லம் (Frigid Zone)
ஆர்க்டிக் வட்டம் மற்றும் வட துருவத்திற்கும் அண்டார்டிக் மற்றும் தென் துருவத்திற்கும் இடையிலான பகுதி குளிர்மண்டலம் என அழைக்கப்படுகிறது. சூரிய கதிர்கள் ஆண்டு முழுவதும் மிக வும் சாய்ந்த நிலையில் விழுவதால் இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது.

Question 4.
இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக.
விடை:

  • இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 68°7′ கிழக்கு முதல் 97°25′ கிழக்கு வரை உள்ளது.
  • சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன.
  • இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே இந்தியாவின் மையத்தில் செல்லும் 82 1/2° கிழக்கு தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் ISI (Indian Standard time) கணக்கிடப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

செயல்பாடு

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள வலைப்பின்னலில் (Grid) ஐந்து இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் உற்று நோக்கி கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களில் அவற்றின் அட்சதீர்க்க அளவைகளைக் குறிக்கவும்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 90
புவிவலைப்பின்னல்
1. A அட்ச தீர்க்கப்பரவல் 40° வ 30° மே
2. B தீர்க்க ப்பரவல் 20° வ 10° A
3. C தீர்க்க ப்பரவல் 10° வ 20° கி
4. D தீர்க்கப்பரவல் 40° தெ 50° A
5. E தீர்க்கப்பரவல் 20° தெ 20 மே

6th Social Science Guide புவி மாதிரி Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புவி ………. மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
விடை:
510.1

Question 2.
……… என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.
விடை:
தாலமி

Question 3.
………. என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.
விடை:
கிரீன்விச்

Question 4.
புவியில் திசைகளைக் சுட்டிக் காண்பிக்கும் பொழுது …… திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
விடை:
வடக்கு

Question 5.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் …… திசைகளாகும்.
விடை:
அடிப்படை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
23 1/2° வடக்கு முதல் 66 1/2% வடக்கு வரையிலும், 23 1/2° தெற்கு முதல் 66 1/2° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ….. அழைக்கப்படுகின்றன.
அ) தாழ் அட்சக்கோடுகள்
ஆ) மத்திய அட்சக்கோடுகள்
இ) உயர் அட்சக்கோடுகள்
விடை:
ஆ) மத்திய அட்சக்கோடுகள்

Question 2.
சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி
அ) குளிர்மண்டலம்
ஆ) மித வெப்பமண்டலம்
இ) வெப்பமண்டலம்
விடை:
இ) வெப்பமண்டலம்

Question 3.
23 1/2° வட அட்சக்கோடு …… என்றும் அழைக்கப்படுகிறது.
அ) கடகவரை
ஆ) நிலநடுவரை
இ) மகரவரை
விடை:
அ) கடகவரை

Question 4.
அட்சக்கோடுகள் ……. என்றும் அறியப்படுகிறது.
அ) நிலவாங்கு
ஆ) அகலாங்கு
இ) நெட்டாங்கு
விடை:
ஆ) அகலாங்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 5.
1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு
அ) கனடா
ஆ) மெக்ஸிகோ
இ) வாஷிங்டன்
விடை:
இ) வாஷிங்டன்

III. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
இது யார் கூற்று?
”விண்மீன்கள் வானில் மேற்குப் புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது.”
விடை:
ஆரியபட்டர் – இந்திய வானியல் அறிஞர்

Question 2.
‘Geographia’ என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை:
தாலமி (கிரேக்க ரோமானிய கணித வல்லுநர், வான் ஆய்வாளர் மற்றும் புவியியல் ஆய்வாளர்)

Question 3.
எந்த நாட்டில் 7 நேர மண்டலங்கள் உள்ளன?
விடை:
ரஷ்யா

IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
மெரிடியன் – வரையறு
விடை:
மெரிடியன் (Meridian) என்ற சொல் மெரிடியானஸ் (Meridianies) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும்:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 9
என்பது சூரியன் ஓர் இடத்தின் நேர் மேலே உச்சியில் உள்ளதைக் குறிக்கிறது.

Question 2.
அச்சு என்றால் என்ன?
விடை:

  • கோளம் சுற்றி வருவதாக கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு
  • புவி தனது அச்சில் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் இடையே சுற்றுகின்றது.

Question 3.
அரைக்கோளம் என்றால் என்ன?
விடை:
பூமியின் நடுவில் வரையப்பட்டுள்ள நில நடுக்கோட்டு பூமியை வடபகுதி, தென்பகுதி என இரு பகுதி களாக பிரித்திருப்பதே அரைக்கோளமாகும். (அல்லது) துருவத்தில் இருந்து மேல் கீழாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடு பிரித்து இருக்கும் பகுதிகளை அரைக்கோளம் என்பர்.

V. விரிவான விடையளி

Question 1.
காலநிலை மண்டலங்களை வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 95

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 100

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

7th Social  Science Guide வரியும் அதன் முக்கியத்துவம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வரிகள் என்பவை ……………… செலுத்தப்பட வேண்டும்.
அ) விருப்பத்துடன்
ஆ) கட்டாயமாக
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) கட்டாயமாக

Question 2.
வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது …………………..
அ) சமத்துவ விதி
ஆ) உறுதிப்பாட்டு விதி
இ) சிக்கன விதி
ஈ) வசதி விதி
விடை:
இ) சிக்கன விதி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ……………….
அ) விகிதச்சாரா வரி
ஆ) தேய்வுவீத வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) தேய்வுவீத வரி

Question 4.
வருமான வரி என்பது ……………………
அ) நேர்முக வரி
ஆ) மறைமுக வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) நேர்முக வரி

Question 5.
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ……………..
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) விற்பனை வரி
ஈ) சேவை வரி
விடை:
ஈ) சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ……………….. என்னும் சொல்லால் குறிக்கிறோம்.
விடை:
வரிவிதிப்பு

Question 2.
வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ………………..
விடை:
விகிதாச்சார வரி

Question 3.
……………………. வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
விடை:
அன்பளிப்பு

Question 4.
…………………… வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.
விடை:
நேர்முக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
மறைமுக வரி என்பது ……………….. நெகிழ்ச்சி உடையது.
விடை:
அதிக

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 2

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?
அ) சேவை வரி
ஆ) மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
இ) சொத்துவரி
ஈ) சுங்கவரி
விடை:
இ) சொத்துவரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
பின்வரும் வரியில் எது நேர்முக வரி?
அ) சேவை வரி
ஆ) செல்வ வரி
இ) விற்பனை வரி
ஈ) வளர் விகித வரி
விடை:
ஆ) செல்வ வரி

VI. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
வரியை வரையறுக்கவும்.
விடை:
வரி செலுத்துவோர், எவ்வித நேரடியான பலனையும் எதிர்பார்க்காமல் அரசுக்கு கட்டாயமாகச் செலுத்துபவையே வரிகள் ஆகும்.

Question 2.
வரி ஏன் விதிக்கப்படுகிறது?
விடை:

  • ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டு வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
  • வரியாகச் செலுத்தப்படும் மொத்தத் தொகையும் அரசுக் கருவூலத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.
  • அவ்வாறு பெறப்பட்ட வரிப்பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பதையும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதையும் அரசே தீர்மானிக்கிறது.
  • அதிகமாகப் பெறப்படும் வரிகள், மேன்மேலும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
வரிவிதிப்பு வகைகளின் பெயரை எழுதி அதன் வரைபடத்தை வரையவும்.
விடை:
வரி விதிப்பில் மூவகை உள்ளன. அவை யாவன:

  • விகிதாச்சார வரி
  • வளர் வீத வரி
  • தேய்வு வீத வரி
    Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 3

Question 4.
வரிகளின் முக்கியத்துவம் ஏதேனும் மூன்றினைக் கூறுக.
விடை:

  • வரிகள் இல்லையெனில், சமுதாய நலத்திற்குத் தேவையானவற்றைச் செய்ய அரசால் இயலாது.
  • அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் பின்வரும் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
    1. நலவாழ்வு
    2. கல்வி
    3. ஆட்சி நிர்வாகம்

Question 5.
வரியின் வகைகள் யாவை? மற்றும் அதனைப் பற்றி விளக்குக.
விடை:
இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி

நேர்முக வரி:
நேர்முக வரி என்பது தனியாளோ. நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர். பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார். (எ.கா) சொத்து வரி, வருமான வரி

மறைமுக வரி:
ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவர் மீது மாற்ற இயலும் முறையையே மறைமுக வரி என்கிறோம் (எ.கா) சேவை வரி, விற்பனை வரி

Question 6.
நன்கொடை அல்லது அன்பளிப்பு வரி மற்றும் சேவை வரி பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
விடை:
அன்பளிப்பு வரி:
ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாக பெறும் பொருள்களின் மதிப்புக்கேற்ப விதிக்கப்படும் வரி அன்பளிப்பு வரியாகும்.

சேவை வரி:
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது சேவை வரியாகும். சேவையை பெறுபவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டு மத்திய அரசுக்குச் செலுத்தப்படுகிறது.

Question 7.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்றால் என்ன?
விடை:

  • பொருள்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுவது பொருள் மற்றும் சேவை வரியாகும்.
  • தேசிய அளவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.

Question 8.
நேர்முக மற்றும் மறைமுக வரிக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 4

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
வரி விதிப்பு கொள்கை பற்றிச் சுருக்கமாகக் கூறுக.
விடை:
வரி விதிப்பு கோட்பாடுகள், இன்றைய காலக்கட்டத்திலும் வரிகட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.

சமத்துவ விதி:

  • மக்கள் தத்தமது வசதிக்கேற்ப வகையில் செலுத்துவதற்கு அரசு வரி விதிக்கும் முறைகளுள் ஒன்று சமத்துவ விதியாகும்.
  • இதனால் அனைவரும் சமமாக வரி செலுத்த வேண்டும் என்பது பொருளன்று, மாறாக மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது, எளிமையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதையே இவ்விதி விளக்குகிறது.

உறுதிப்பாட்டு விதி:

  • வசூலிக்கப்படும் வரியின் மூலம் வரி செலுத்துவோர்க்கு ஓர் உறுதிப்பாட்டுத் தன்மையை, இவ்விதி உருவாக்குகிறது. பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறது.
  • ஏனெனில் இவ்விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.

வசதி விதி :
வரி செலுத்துவோர்க்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையில் வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தாம் செலுத்தும் வரியின் மூலம் குறைந்தபட்ச அளவிலேயே துன்பப்படுவர்.

சிக்கன விதி:

  • வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும்.
  • வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசுக் கருவூலத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 2.
வரி விதிப்பின் வகைகளாக விளக்குக.
விடை:
வரி விதிப்பில் மூவகை உள்ளன. அவையாவன:

  1. விகிதாச்சார வரி (Propotional tax)
  2. வளர் வீத வரி (Progressive tax)
  3. தேய்வு வீத வரி (Regressive tax)

விகிதாச்சார வரி:

  • வருமான அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியாக வரி விதிப்பது, விகிதாச்சார வரி ஆகும்.
  • வருமான விகிதத்திற்கேற்ப, வரி விகிதமும் மாறுபடும்.

வளர்வீத வரி :

  • ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப வரி விகிதிமும் அதிகரிப்பது, வளர்வீத வரி ஆகும். (எ.கா) ஒருவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 எனில் அதற்கான வரி விகிதம் 10% ஆகவே அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 100 ஆகும்.
  • மற்றொருவரின் வருமானம் ரூபாய் 10,000 எனில், அவருக்கு விதிக்கப்படும் வரி விகிதம் 25% அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 2500/-.
  • வேறொருவர் ரூபாய் 1,00,000 வருமானம் பெற்றால், வரி விகிதம் 50% எனில் அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 50,000/.

தேய்வு வீத வரி:

  • அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி, தேய்வு வீத வரியாகும்.
  • இதனால், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Question 3.
வரியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குக.
விடை:
அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

  1. நலவாழ்வு
  2. கல்வி
  3. ஆட்சி நிர்வாகம்
  4. உள் கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள்.

1. நலவாழ்வு

  • வரிகள் இல்லையெனில், இத்தகைய செயல்கள் நடைபெறுவது கடினம். சமூக நலவாழ்வு, மருத்துவ ஆய்வு,
  • சமூக நலப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கப்படுகிறது.

2. கல்வி

  • அரசுக்குச் செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக அளவிலான தொகை, கல்விக்காகச் செலவிடப்படுகிறது.
  • மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வியை மையப்படுத்துவதற்கும் அரசு அதிக முதன்மை அளிக்கிறது.

3. ஆட்சி நிர்வாகம்

  • அரசின் நிர்வாக அமைப்புகள் நன்முறையில் இயங்கினால்தான், ஆட்சியும் நன்முறையில் இயங்கும்.
  • நன்முறையில் நிர்வகிக்கும் ஓர் அரசு, தான் வசூலிக்கும் வரிப்பணத்தை, நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

4. உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள் :

  • அரசு வசூலிக்கும் வரிப்பணத்தைச் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவு செய்கிறது.
  • மக்கள் நலன் காக்கும் வகையில் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்குகிறது.

Question 4.
நேர்முக மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக
விடை:
இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி

நேர்முக வரி:
நேர்முகவரி என்பது தனியாகவோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார்.
எ.கா:

  • சொத்து வரி
  • தனியாள் சொத்து வரி
  • வருமான வரி
  • நிறுவன வரி
  • அன்பளிப்பு வரி

மறைமுக வரி:
தொடக்கத்தில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவர் மீது மாற்ற இயலும்.

  • சேவை வரி
  • விற்பனை வரி
  • கலால் வரி
  • பொழுதுபோக்கு வரி
  • சரக்கு மற்றும் சேவை வரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
மக்கள் நலனுக்கு வரி ஏன் அவசியம் என்பதை பற்றி விளக்குக.
விடை:
நிதி நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்துவதே, வரி விதிப்பதன் நோக்கமாகும். நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமன் செய்ய, விலை மாற்றத்திற்கு உதவுகிறது.

நிதி நிர்வாக வரி விதிப்பின் மூலமாக பல செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

போக்குவரத்து, சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பு, கல்வி, நலவாழ்வுத் திட்டங்கள், அறிவியல் ஆராய்ச்சி கலையும், பண்பாடும், பொதுப்பணி, பொதுக் காப்பீடு மேலும் பல உள்கட்டமைப்புகளுக்காகவும் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது.

ஓர் அரசின் திறனுக்கேற்ப, வரிகளை உயர்த்துவது, நிதித்திறன் என்றழைக்கப்படுகிறது.

செலவுகள், வரி வருவாயை விட அதிகமாகும் போது, அரசு கடன்களைத் திரட்டுகிறது.

நாணய மதிப்பைத் தக்கவைத்தல், சொத்துப் பங்கீடு தொடர்பான பொதுக் கொள்கை வெளியிடுதல், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் அல்லது குழுக்கள் அல்லது நெடுஞ்சாலைகள் போன்ற தனிப்பட்ட வகையில் நன்மை தருவன ஆகியவற்றிற்கு மானியம் அளித்தல் போன்றவை வரி விதிப்பின் நோக்கங்களாகும்.

VIII. செயல்பாடு மற்றும் செயல் திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்து கேட்டறிந்து அதைப் பற்றி கலந்துரையாடுக.

Question 2.
வரி என்றால் என்ன? நாம் ஏன் வரி செலுத்துகிறோம்? இந்த வரியை மக்கள் நலனுக்காக அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை குறித்து கட்டுரை எழுதுக.

IX. வாழ்க்கைத் திறன்கள்

Question 1.
ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து நாட்டின் வளர்ச்சியில் வரியின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தல்.

7th Social  Science Guide வரியும் அதன் முக்கியத்துவம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அரசுக்கு செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக தொகை ……………………… க்காக செலவிடப்படுகிறது.
அ) கல்வி
ஆ) பாதுகாப்பு
இ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு
ஈ) ஓய்வூதியம்
விடை:
அ) கல்வி

Question 2.
முன்னோர்கள் சொத்துகளின் மீது விதிக்கப்படும் வரி …………………
அ) சொத்து வரி
ஆ) அன்பளிப்பு வரி
இ) நலவாழ்வு வரி
ஈ) சேவை வரி
விடை:
அ) சொத்து வரி

Question 3.
கண்காட்சிக்கு விதிக்கப்படும் வரி என்பது ……………….
அ) சரக்கு மற்றும் சேவை வரி
ஆ) கலால் வரி
இ) சேவை வரி
ஈ) பொழுதுபோக்கு வரி
விடை:
ஈ) பொழுதுபோக்கு வரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 4.
ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன் உள்ள வரி ………………..
அ) மதிப்பு கூட்டு வரி
ஆ) வருமான வரி
இ) சரக்கு மற்றும் சேவை வரி
ஈ) நிறுவன வரி
விடை:
இ) சரக்கு மற்றும் சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………………. அமைப்பு நன்முறையில் இயங்கினால் தான் ஆட்சியும் நன்முறையில் இயங்கும்.
விடை:
ஆட்சி நிர்வாகம்

Question 2.
………………….. ன் வரிவிதிப்புக் கோட்பாடுகள், இன்றைய காலக்கட்டத்திலும் வரிக்கட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.
விடை:
ஆடம் ஸ்மித்

Question 3.
வரியாகச் செலுத்தப்படும் மொத்த தொகை ………………. ல் இருப்பு வைக்கப்படுகிறது.
விடை:
அரசு கருவூலம்

Question 4.
அதிகமாகப் பெறப்படும் வரிகள், மேன்மேலும் பல ………………… செயல்படுத்த அரசுக்கு உதவுகின்றன.
விடை:
நலத்திட்டம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
பொதுவாக, வரிகள் நாட்டின் ………………. க்கு தம் பங்களிப்பை வழங்குகின்றன.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 5

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் வரிவிதிப்பு வகைகளில் இல்லாதது எது?
அ) விகிதாச்சார வரி
ஆ) வளர்வீத வரி
இ) மதிப்பு கூட்டு வரி
ஈ) தேய்வு வீத வரி
விடை:
இ) மதிப்பு கூட்டு வரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் வரி விதிப்பு கோட்பாட்டைச் சேர்ந்தது எது?
அ) சிக்கன விதி
அ) விகிதாச்சார வரி
இ) கல்வி
ஈ) நலவாழ்வு
விடை:
அ) சிக்கன விதி

VI. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
சேலிக்மனின் கூற்றுப்படி வரி வரையறு.
விடை:

  • சேலிக்மனின் கூற்றுப்படி வரிகள் என்பவை, ஒருவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பங்களிப்பாகும்.
  • இதில், பெறப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை . இப்பங்களிப்பின் மூலம், பொது நலத்திற்காக அரசு மேற்கொள்ளும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Question 2.
நிறுவன வரி என்றால் என்ன?
விடை:

  • நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே நிறுவன வரியாகும்.
  • காப்புரிமை, வட்டி இந்தியாவிலுள்ள மூலதனச் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபம், தொழில்நுட்பப் பணிகளுக்காகவும் பங்கீடுக்காகவும் பெறப்படும் கட்டணங்கள் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
பொழுதுபோக்கு வரி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • மாநில அரசுகளால் பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் வரி, பொழுதுபோக்கு வரியாகும்.
  • (எ.கா) திரைப்படங்களுக்கான கட்டணங்கள், மேடை அரங்கேற்ற நிகழ்ச்சிகள், கண்காட்சிகள்

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
சுங்க வரி, சாலை வரி மற்றும் தூய்மை பாரத வரி விளக்குக.
விடை:
சுங்க வரியும், சாலை வரியும்:

  • அரசால் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதற்காக விதிக்கப்படும் வரி, சுங்கம் மற்றும் சாலை வரிகளாகும்.
  • சாலை / பாலம் வசதிகளின் பராமரிப்புப் பணிக்காகவும், குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் இவ்வரிகள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன.

தூய்மை பாரத வரி:

  • இந்திய அரசால் இவ்வரி விதிக்கப்படுகிறது.
  • இது 2015-ம் ஆண்டு , நவம்பர் 15-ம் நாள் தொடங்கப்பட்டது.
  • இஃது அனைத்து வகையான வரிச் சேவைகளுக்கும் பொருந்தும். இதன் வரி விகிதம் 0.5% ஆகும்.
  • தற்போது, 14% க்கும் மேற்பட்ட சேவை வரி நடைமுறையில் உள்ளது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 6

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது.
அ) வழிப்போக்கர்கள்
ஆ) ஓட்டுநர்கள்
இ) பொதுமக்கள்
ஈ) சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை:
ஈ) சாலையைப் பயன்படுத்தவோர் அனைவருக்கும்

Question 2.
சாலை விபத்துகள் ஒரு நாட்டின் …………….. பாதிக்கின்றன.
அ) முன்னேற்றத்தை படிக்க
ஆ) வாழ்வை – பக்கம்
இ) பொருளாதாரத்தை பாது
ஈ) மேற்கூறிய அனைத்தையும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தையும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
அனுமதி என்பது
அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்ய சான்றிதல்
விடை:
அ) இயக்குவதற்கு அனுமதி

Question 4.
ரக்ஷா பாதுகாப்பு
அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள் பாகம் தனது
இ) கார் இயக்குபவர்கள்
ஈ) பயணிகள்
விடை:
இ) கார் இயக்குபவர்கள்

Question 5.
இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
அ) 1947
ஆ) 1990
இ) 1989
ஈ) 2019
விடை:
இ) 1989

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு …………………. ஆகும்.
விடை:
சக்கரம்

Question 2.
நமது வாழ்க்கைப் பயணத்தில் ………………யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை:
சாலை

Question 3.
சாலைகளில் அதிகமான வாகனங்களால் ……………. மற்றும் ……………. மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை:
போக்குவரத்து நெரிசலும், அதிகமான

Question 4.
…………………… குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்.
விடை:
வருவாய் ஆதரவாளர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 5.
மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ………………….. எண்ணை அழைக்கலாம்.
விடை:
108

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 2

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி, காரணமும் சரி

V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி

Question 1.
அ) கார்
ஆ) டிரக்
இ) டெம்போ
ஈ) ஏரோப்ளேன்
விடை:
ஈ) ஏரோப்ளேன்

VI. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி

அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை:
சரியானவை : ஆ, இ

VII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
வாகனம் இயக்கும் போது ஏற்படக்கூடிய கவனச்சிதறல்கள் எவை?
விடை:
கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனத்சிதறலுக்கு வழிவகுக்கிறது.

Question 2.
பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கு இரண்டு பாதுகாப்பு முறைகளைக் கூறு.
விடை:

  1. இருசக்கர வாகனங்கள் இயக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
  2. நான்கு சக்கர வாகனம் இயக்கும் போது இருக்கைப்பட்டை அணிவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏன்?
விடை:

  • இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏனெனில்
  • கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு.
  • சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவை ஆகும்.

Question 4.
ஒரு வாகனத்தை இயக்குவதற்குரிய உரிமம் எப்போது ஒருவருக்குக் கிடைக்கும் ?
விடை:

  • இந்திய சட்டப்படி ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும்.
  • ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர் தனக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

Question 5.
பொதுமக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஊடகம் என்ன செய்ய வேண்டும்.
விடை:
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஓர் இந்தியன் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை:
வாகனம் இயக்குபவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :

  1. ஓட்டுநர் உரிமம்
  2. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  3. காப்பீட்டுச் சான்றிதழ்
  4. வாகன வரி கட்டியதற்கான சான்றிதழ்
  5. அனுமதி மற்றும் தகுதிச்சான்றிதழ்

Question 2.
பள்ளிப்பாடத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்புக் கல்வியை இணைத்திடும் தேவை என்ன?
விடை:

  1. குழந்தை பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை கற்று தருவதால் விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  2. மாணவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் பற்றிய அறிவும் பெறுகின்றனர்.
  3. இது மாணவர்களை வழிநடத்தவும், சாலைகளை பாதுகாப்பாக கடக்கவும், தேவையான கல்வியறிவு கிடைக்கச்செய்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சாலைப்பாதுகாப்பு விதிகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?
விடை:

  • இளம் வயதினருக்கு சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவுங்கள்.
  • சரியான குறியீட்டிற்காக காத்திருந்து பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையை கடந்திட அறிவுறுத்துங்கள்.
  • சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யுங்கள்.
  • சாலைகளில் நடந்து செல்லும் போது நடைபாதையை பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
சாலைப்பாதுகாப்பு விதிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட நீங்கள், உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் இடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.
விடை:

  1. நான் போக்குவரத்து குறியீடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
  2. சாலை விதிகள் பின்பற்றுவதன் தேவையை புரிந்துக்கொள்ளச் செய்வேன்.
  3. வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டைகள் அணிதல், கைப்பேசியில் பேசுவதை தவிர்த்தல் போன்றவைகளை அறிந்திடச் செய்வேன்.

Question 2.
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்து எவ்விதமாக இருந்திருக்கும்?
விடை:
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்தக்கு கழுதைகளையும், ஒட்டகங்களையும், குதிரைகளையும் நாம் பயணிப்பதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி இருப்போம்.

X. செயல்பாடுகள்

Question 1.
போக்குவரத்துக் குறியீடுகள் பற்றிய ஆல்பம் தயாரித்தல்

Question 2.
பொது மக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவையான வாசகங்களைத் தொகுத்து எழுதுக.

Question 3.
சாலைப்பாதுகாப்பு பற்றிய போட்டிகளை நடத்துக.

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உலகத்திலேயே அதிகமான சாலை விபத்துகள் ……………….. தான் ஏற்படுகின்றன.
அ) இந்தியா
ஆ) இங்கிலாந்து
இ) சீனா
ஈ) ஜப்பான்
விடை:
அ) இந்தியா

Question 2.
வாகன இயக்குநர் ஒருவர் ………………….. பெறுவதற்கு தேவையான பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும.
அ) ஆதார் அட்டை
ஆ) வாக்காளர் அட்டை
இ) ஓட்டுநர் உரிமம்
ஈ) குடும்ப அட்டை
விடை:
இ) ஓட்டுநர் உரிமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இந்திய சட்டப்படி ஒரு வாகன ஓட்டுநர், ஓட்டுநர் உரிமம் பெறும் வயது …………
அ) 21
ஆ) 18
இ) 24
ஈ) 19
விடை:
ஆ) 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனங்கள் ஓட்டும் போது ……………………. பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது
விடை:
கைப்பேசி

Question 2.
நாம் சாலை பாதுகாப்பிற்கான ………………. மற்றும் ………….. தீவிரமாக கடைபிடித்து நாட்டை பாதுகாப்போம்.
விடை:
விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்

Question 3.
……………….. அல்லது …………………… அருகில் வாகனங்கள் ஒலியெழுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
விடை:
மருத்துவமனை, பள்ளி வளாகம்

Question 4.
வாகனத்தின் ……………. திடீரென பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
விடை:
பிரேக்

Question 5.
இளம் வயதினருக்கு …………………… தருவதில் பெற்றோரும், ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
விடை:
சாலை பாதுகாப்பு

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 3

IV. சரியான கூற்றை தேர்ந்தெடு

Question 1.
கூற்று : குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள், விளையாட்டுகளை அரசு தடை செய்யவேண்டும்.
காரணம் : அது பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 2.
கூற்று : இளம் வயதிலேயே சாலை பாதுகாப்புக் கல்வியைத் தரவேண்டும்.
காரணம் : பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது அந்தக்குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

V. கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதை கண்டுபிடி

அ) கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆ) வாகனத்தின் பிரேக் திடீரெனப் பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
இ) மிதிவண்டியில் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகவும் காற்று மாசுபாட்டை தடுப்பதாகவும் உள்ளது.
ஈ) போக்குவரத்துக் குறியீடுகள் சாலைகளில் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா நடத்துநராகவே செய்யப்படுகின்றன.
விடை:
சரியான விடை : ஆ, இ, ஈ

VI. பொருந்தாததை கண்டுபிடிக்க

Question 1.
அ) தகுதிச்சான்றிதழ்
ஆ) அனுமதி
இ) காப்பீட்டுச் சான்றிதழ்
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை
விடை:
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை

Question 2.
அ) கட்டாயக் குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) வழக்கமான குறியீடுகள்
ஈ) தகவல் குறியீடுகள்
விடை:
இ) வழக்கமான குறியீடுகள்

VII. சுருக்கமான விடையளி

Question 1.
கார்பூலிங் என்றால் என்ன?
விடை:

  • கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.
  • பலர் ஒரே வாகனத்தை பயன்படுத்துவதால் எரிபொருள், பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது காற்று மாசுபாடும் குறைகிறது.

Question 2.
ரக்ஷா – வரையறு.
விடை:

  • ரக்ஷா ஒரு தானியங்கி கருவி.
  • இது வாகனத்தில் பொருத்தப்பட்டு வாகனம் தற்போது எங்குள்ளது என்பதையும், வாகனத்தின் இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
போக்குவரத்து குறியீடுகளில் மூன்று வகைகளை யாவை?
விடை:

  1. கட்டாயக் குறியீடுகள்
  2. எச்சரிக்கை குறியீடுகள்
  3. தகவல் குறியீடுகள்

VIII. விரிவான விடையளி.

Question 1.
சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை விவரி.
விடை:

  • அதிகமான விபத்து பகுதிகளில் சாலைகளை சீர்செய்தல் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துதல்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சாலைச் சைகைகள் முதலியன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நன்றாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்கின்றன.
  • நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலைகளை நல்ல முறையில் அமைத்தல்
  • அதி வேகமாக இயக்குபவர்களைக் கண்காணித்திட கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துதல்.
  • சாலைகளில் குழிதோண்டுதல் மற்றும் மணல்களை குவிப்பதை தடை செய்தல்.
  • சாலை ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பெதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ….. அமைக்கப்படுகிறது.
அ) ஊராட்சி ஒன்றியம்
ஆ) மாவட்ட ஊராட்சி
இ) வட்டம் ஈ) வருவாய் கிராமம்
விடை:
அ) ஊராட்சி ஒன்றியம்

Question 2.
தேசிய ஊராட்சி தினம் ……. ஆகும்.
அ) ஜனவரி 24
ஆ) ஜீலை 24
இ) நவம்பர் 24
ஈ) ஏப்ரல் 24
விடை:
ஈ) ஏப்ரல் 24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 3.
இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் …
அ) டெல்லி
ஆ) சென்னை
இ) கொல்கத்தா
ஈ) மும்பாய்
விடை:
ஆ) சென்னை

Question 4.
அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ……….
அ) வேலூர்
ஆ) திருவள்ளூர்
இ) விழுப்புரம்
ஈ) காஞ்சிபுரம்
விடை:
இ) விழுப்புரம்

Question 5.
மாநகராட்சியின் தலைவர் …… என அழைக்கப்படுகிறார்
அ) மேயர்
ஆ) கமிஷ்னர்
இ) பெருந்தலைவர்
ஈ) தலைவர்
விடை:
அ) மேயர்

II. நிரப்புக

Question 1.
இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் …….. ஆகும்.
விடை:
தமிழ்நாடு

Question 2.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு …………..
விடை:
1992

Question 3.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் …………. ஆண்டுகள்.
விடை:
5

Question 4.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ……. ஆகும்.
விடை:
வாலாஜாபேட்டை நகராட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 80
விடை:
1. நிரந்தர அமைப்பு
2. வட்டார வளர்ச்சி அலுவலர்
3. செயல் அலுவலர்
4. மாநிலத் தேர்தல் ஆணையம்

IV. விடையளிக்கவும்.

Question 1.
உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரைக் எழுதவும்?
விடை:
ஆம். திருநெல்வேலி மாநகராட்சி

Question 2.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யாது?
விடை:
உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உள்ளூர் அமைப்புகளின் திறமையான செயல்பாட்டிற்கும் மக்களை நேரடியாக ஈடுபடுவதற்கு அவசியமாகும்.

Question 3.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 4.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி.

Question 5.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாவர்?
விடை:
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்

  • ஊராட்சி மன்றத் தலைவர்.
  • பகுதி உறுப்பினர்கள்
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

Question 6.
மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
விடை:

  • குடிநீர் வசதி
  • தெரு விளக்கு அமைத்தல்
  • தூய்மைப் பணி
  • மருத்துவச் சேவை
  • மாநகராட்சிப் பள்ளிகள்
  • பிறப்பு, இறப்பு பதிவு இன்னும் பிற

Question 7.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக.
விடை:
வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீதான வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு, மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்னும் பிற

Question 8.
கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை? அந்நாள்களின் சிறப்புகள் யாவை?
விடை:

  • கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2, ஆகிய நாட்களில் நடைபெறும்.
  • தேசிய விழா தினமாக இந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

Question 9.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:
கிராம சபை அமைத்தல், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு, இட ஒதுக்கீடு, தேர்தல், பதவிக்காலம், நிதி க்குழு, கணக்கு மற்றும் தணிக்கை, இன்னும் பிற

Question 10.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • கிராமத்து பஞ்சாயத்துகளின் திறமையான செயல்பாட்டுக்கு கிராமப்புற சபா மிகவும் அவசியமானதாகும்.
  • இது சமூக நலனுக்கான திட்டங்களை தீட்டுதல் மற்றும் செயல்படுத்துவதில் பொது மக்கள் பங்கேற்பைப் மேம்படுத்துகிறது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
விடை:

  • இந்திய நாடு ஒரு அகன்ற நாடாகும். ஒரே ஒரு அரசாங்கத்தால், நாட்டின் முழு நிர்வாகத்தையும், கவனிக்க இயலாது.
  • நமது இந்திய அரசமைப்புச்சட்டம் மூன்று நிலைகளில் நிர்வாகத்தை பிரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்.
  • உள்ளாட்சி அமைப்புகள் கிராமம் மற்றும் நகரங்களின் உள்ளூர் நிர்வாகத்தை கவனித்துக்
    கொள்ளும்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணிகள் :
    • தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்,
    • சாலைகள் மற்றும் பள்ளிகள் கட்டுதல்,
    • குடிநீர் மற்றும் மின்வசதி அமைத்தல்

VI. செயல்பாடுகள்

Question 1.
உள்ளாட்சி பிரதிநிதியை நேர்காணல் செய்வதற்காக வினா நிரல் தயாரிக்கவும்.
விடை:

  • நம் பகுதியில் சிறந்த வடிகால் அமைப்பதற்கு தங்களின் திட்டம் என்ன?
  • மகாராஜ நகர், மற்றும் தியாகராஜ நகரை இணைக்கும் பாலக் கட்டுமானம் எப்போது நிறைவடையும்?
  • நம் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணி எத்தனை மாதங்களில் முடிவடையும்?

Question 2.
பள்ளியின் மேம்பாட்டிற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இருப்பின் கலந்துரையாடுக.
விடை:

  • உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக அபரிமிதமான உதவிகள் செய்துள்ளனர்.
  • பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் பள்ளியின் பழைய மாணவர்களை நாடி உதவி பெற்றனர்.
  • அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து பள்ளிக்கு தேவையான கணினி, ஆய்வக உபகரணங்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினர்.

Question 3.
நான் உள்ளாட்சி பிரதிநிதியானால்…?
விடை:

  • சிறந்த வடிகால் திட்டம் அமைக்கப் பாடுபடுவேன்.
  • டெங்கு போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துவேன்.
  • நன்கு திட்டமிட்ட சாலை வசதிகளையும், நன்கு ஒளியூட்டும் விளக்குகளையும் ஏற்பாடு செய்து மக்கள் நலமுடன் வாழ வழி வகுப்பேன்.

Question 4.
உன் மாவட்டத்தில் உள்ள பல வகையான உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்து பதிவிடவும்.
விடை:
மாவட்டத்தின் பெயர் : திருநெல்வேலி
கிராம ஊராட்சி : இராஜகோபாலபுரம்
ஊராட்சி ஒன்றியம் : முத்தூர்
மாவட்ட ஊராட்சி பேரூராட்சி : குலவணிகர்புரம்
நகராட்சி மாநகராட்சி : திருநெல்வேலி மாநகராட்சி

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ்நாட்டில் ………. மாநகராட்சிகள் இருக்கின்றன.
விடை:
12

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 2.
சென்னை மாநகராட்சி ……….. உருவாக்கப்பட்டது.
விடை:
1688

Question 3.
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ……….. மாவட்டம்
விடை:
காஞ்சிபுரம்

Question 4.
நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர் ………….
விடை:
பேரூராட்சி

Question 5.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ………. ஊராட்சி ஆகும்.
விடை:
கிராமம்

Question 6.
……. மற்றும் …….. மாவட்டங்களில் மிக குறைந்த அளவு ஊராட்சி ஒன்றியங்களே உள்ளன.
விடை:
நிலகீரி மற்றும் பெரம்பலூர்

Question 7.
தொகுதிகள் …….. எனவும் அழைக்கப்படுகின்றன.
விடை:
பகுதிகள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜை பரிந்துரைத்தவர் ….
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) இராஜேந்திர பிரசாத்
விடை:
ஆ) மகாத்மா காந்தி

Question 2.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் …. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அ) 30%
ஆ) 25%
இ) 33%
விடை:
இ) 33%

Question 3.
2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் … இடங்களில் வெற்றி பெற்றனர்.
அ) 38%
ஆ) 28%
இ) 48%
விடை:
அ) 38%

Question 4.
தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு உள்ளாட்சியில் ………… இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
அ) 40%
ஆ) 50%
இ) 60%
விடை:
ஆ) 50%

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 5.
தமிழகத்தின் தேர்தல் ஆணையம் … மாவட்டத்தில் உள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
விடை:
அ) சென்னை

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மாநகராட்சியின் அதிகாரிகள் குறிப்பு வரைக.
விடை:

  • மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்.
  • நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  • பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் ஆவார்.

Question 2.
ஊராட்சி ஒன்றியம் பற்றி விளக்குக.
விடை:

  • பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
  • கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர்.
  • துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
  • ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

IV. விரிவான விடையளி.

Question 1.
மாவட்ட ஊராட்சி குறிப்பு வரைக.
விடை:

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
  • 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
  • பகுதி உறுப்பினர்களாக கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 மக்களாட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

6th Social Science Guide மக்களாட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதிமனிதன் …….. பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
(அ) சமவெளி
(ஆ) ஆற்றோரம்
(இ) மலை
(ஈ) குன்று
விடை:
(ஆ) ஆற்றோரம்

Question 2.
மக்களாட்சியின் பிறப்பிடம் ……….
(அ) சீனா
(ஆ) அமெரிக்கா
(இ) கிரேக்கம்
(ஈ) ரோம்
விடை:
(இ) கிரேக்கம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 3.
உலக மக்களாட்சி தினம் ………. ஆகும்.
(அ) செப்டம்பர் 15
(ஆ) அக்டோபர் 15
(இ) நவம்பர் 15
(ஈ) டிசம்பர் 15
விடை:
(அ) செப்டம்பர் 15

Question 4.
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ……
(அ) ஆண்கள்
(ஆ) பெண்கள்
(இ) பிரதிநிதிகள்
(ஈ) வாக்காளர்கள்
விடை:
(ஈ) வாக்காளர்கள்

II. நிரப்புக.

Question 1.
நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ……………
விடை:
சுவிட்சர்லாந்து

Question 2.
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் …….
விடை:
ஆப்ரகாம் லிங்கன்

Question 3.
மக்கள் …………… அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
விடை:
வாக்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
நம் நாட்டில் …… மக்களாட்சி செயல்படுகிறது.
விடை:
நாடாளுமன்ற

III. விடையளிக்கவும்

Question 1.
மக்களாட்சி என்றால் என்ன?
விடை:
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”

Question 2.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
விடை:
நேரடி மக்களாட்சி மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி

Question 3.
நேரடி மக்களாட்சி – வரையறு.
விடை:
“நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றனர். அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள் தான் அங்கீகரிப்பர். அரசியல் வாதிகள் நாடாளுமன்ற செயல் முறைகளின்படி ஆட்சி செய்வர்”.

Question 4.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
விடை:
“சுதந்திரமான தேர்தல் முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தெரிந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள்.

Question 5.
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை?
விடை:
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகள்

  • அரசியல் கொள்கைகளை வரையறுத்துள்ளது.
  • அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
  • அரசு நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் கடமைகளையும் விளக்குகிறது.
  • குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.

IV. உயர்சிந்தனை வினா

Question 1.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

V. செயல்பாடுகள்

Question 1.
உங்கள் தொகுதி பிரதிநிதிகளின் பெயர்களைக் கேட்டறிந்து எழுதவும்.
விடை:
(அ) நாடளுமன்ற உறுப்பினர் – K.R.P. பிரபாகரன்
(ஆ) சட்டமன்ற உறுப்பினர் – TP. மொஹிதின்கான்
(இ) உள்ளாட்சி உறுப்பினர் – A. ராதாகிருஷ்ணன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 2.
மக்களாட்சி முறையின் நிறை, குறைகளை விவாதிக்கவும்.
விடை:
நிறைகள் :

  • மக்களாட்சி முறை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை பெற்று தருகின்ற ஒரு சிறந்த அரசாட்சியாகும்.
  • இவ்வாட்சி ஜனநாயக ரீதியாக முடிவெடிக்கும் தன்மையை செம்மைப்படுத்துகிறது.
  • குடிமக்களின் சுயமரியாதையை பாதுகாக்கிறது.
  • மக்களாட்சி மக்களின் தவறுகளை திருத்தி கொள்ள வழி வகை செய்கிறது.

குறைகள் :

  • மக்களாட்சியில் தலைமை மாறிக் கொண்டே இருப்பதால் நிலையற்ற தன்மை உருவாகிறது.
  • நன்னடைத்தைக்கு வாய்ப்பு குறைகிறது
  • முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
  • ஊழலுக்கு வழி வகை செய்கிறது.

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
விடை:
2004

Question 2.
……… அரசமைப்புச் சட்டம் தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலே மிகப் பெரியது
விடை:
இந்திய

Question 3.
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு …………. தலைமையில் உருவானது.
விடை:
டாக்டர் பி.ஆர்.
அம்பேத்கார்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
இந்தியாவில் ………. வயது நிரம்பிய எந்த ஒருகுடிமகனும் வாக்களிக்கலாம்
விடை:
18

Question 5.
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது ……..
விடை:
ஐஸ்லாந்து

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
…….. நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்”
(அ) டாக்டர் இராஜேந்திரபிரசாத்
(ஆ) பி.ஆர். அம்பேத்கர்
(இ) டாக்டர் S. ராதாகிருஷ்ணன்
விடை:
(ஆ) பி.ஆர்.அம்பேத்கர்

Question 2.
பழமையான அரசியலைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
(அ) கிரேக்கம்
(ஆ) சன்மரினோஸ்
(இ) ரோமானியப்பேரரசு
விடை:
(ஆ) சன்மரினோஸ்

Question 3.
அதிபர் மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு(கள்)
(அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(ஆ) கனடா
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா
விடை:
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா

Question 4.
நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பவர்கள் ……….
(அ) ஜனாதிபதி
ஆ) பிரதமர்
இ) மக்கள்
விடை:
(இ) மக்கள்

Question 5.
இந்திய அரசமைப்புச் சட்டம் தன் மக்களுக்கு ……… அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளது.
அ) 6
ஆ) 9
இ) 8
விடை:
அ) 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
அரசு என்றால் என்ன?
விடை:
மக்களை ஆளும் அரசு என்பது நிதி – நிர்வாகம், சட்டம் ஒழுங்கு என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கிவிட்ட உறுப்புகளை கொண்டது.

Question 2.
தேர்தல் என்றால் என்ன ?
விடை:
மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முறையே தேர்தல் எனப்படும்.

Question 3.
“ஜனநாயக ரீதியாக முடிவெடிப்பது என்றால் என்ன?
விடை:

  • மக்களாட்சி அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது.
  • மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும்.
  • பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொருமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும்.
  • இதை தான் ஜனநாயக ரீதியாக முடிவெடித்தல் என்கிறோம்.

V. விரிவான விடையளி

Question 1.
மக்களாட்சியின் நோக்கங்களை – விளக்கு
விடை:

  • மக்களின் சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், உயர்த்தவும்.
  • சமூக நீதி மற்றும் சமுதாய வளர்ச்சியை அடையவும்
  • சட்டத்தின் விதி முறைகளை செயல்படுத்தவும்
  • மக்கள் தங்கள் பிரதிநிதிகளை’ – தாங்களே தேர்ந்தெடுக்கவும்.
  • நாட்டின் உயர்வுக்கு மக்களின் பங்களிப்புடன் பாடுபடுவதே மக்களாட்சியின் நோக்கமாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

7th Social  Science Guide சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது?
அ) காலாவதியாகும் தரவு குறிப்பிடப்படாதது
ஆ) பொருட்களின் விலை
இ) பொருட்களின் தொகுதி எண்
ஈ) உற்பத்தியாளரின் முகவரி
விடை:
இ) பொருட்களின் தொகுதி எண்

Question 2.
உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. காதில்
அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்
ஆ) பரந்த அளவிலான பொருட்கள்
இ) நிலையான தரமான பொருட்கள்
ஈ) உற்பத்தியின் அளவு கம்
விடை:
அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 3.
நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
அ) உற்பத்தியின் முதலீடு லீடு
ஆ) பொருட்கள் விற்பனையில் முடிவு
இ) கடனில் பொருட்கள் வாங்குதல்
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு
விடை:
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு

Question 4.
தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது
அ) மூன்று அடுக்கு அமைப்பு
ஆ) ஒரு அடுக்கு அமைப்பு
இ) இரு அடுக்கு அமைப்பு
ஈ) நான்கு அடுக்கு அமைப்பு
விடை:
அ) மூன்று அடுக்கு அமைப்பு

Question 5.
தரம் குறைவான பிற வெளிப்புற பொருள்களை ஒரு உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) தூய்மையாக்கல்
ஆ) கலப்படம்
இ) சுத்திகரிப்பு
ஈ) மாற்றம்
விடை:
ஆ) கலப்படம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ………………………. பொருட்கள் சேவைகள் மற்றும் தகவல்களின் ஈடுபடும் சந்தை என்று கொள்ளும் அழைக்கப்படுகிறது.
விடை:
பரிமாறிக்

Question 2.
ஒழங்குப்படுத்தப்பட்ட சந்தைகளில், பொருத்தமான ……………… அதிகாரிகளால் சில மேற்பார்வை உள்ளது.
விடை:
அரசாங்க

Question 3.
……………………….. என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது, அதில் முழு உற்பத்தியிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு ஒற்றை தயாரிப்பு அல்லது விற்பனையாளராக இருக்கிறார்.
விடை:
முற்றுரிமை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 4.
……………………….. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மகா சாசனம் என்று கருதப்படுகிறது.
விடை:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 2

IV. பின்வரும் கூற்றுகளை ஆய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க.
கூற்று : உள்ளூர் சந்தைகளில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதி பகுதியை சேர்ந்தோர் அல்லது மட்டுமே
காரணம் : ஒரு சந்தை இயற்க்கை இடம் அல்லது புவியியல் இருப்பிடத்திற்கு கட்டுப்படுத்தப்படவில்லை.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. அனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
சந்தை என்றால் என்ன?
விடை:

  • ஒரு சந்தை என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அமைப்புகள் வாங்குவதிலும், விற்பதிலும் ஈடுபடுகின்ற இடமாக அமைகின்றது.
  • பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு சந்தை என அழைக்கப்படும்.

Question 2.
‘நுகர்வோர் பாதுகாப்பு ‘ விவரிக்கவும்.
விடை:
நுகர்வோர் பாதுகாப்பு என்பது நுகர்வோரின் உரிமைகள் நியாயமான வர்த்தகப் போட்டி மற்றும் துல்லியமான தகவல்கள் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் குழு ஆகும்.

Question 3.
நுகர்வோரின் உரிமைகளைப் பட்டியலிடுக.
விடை:
எட்டு அடிப்படையான நுகர்வோர் உரிமைகள்:

  1. அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை
  2. பாதுகாப்புக்கான உரிமை
  3. தகவல் அறியும் உரிமை
  4. தேர்ந்தெடுக்கும் உரிமை
  5. பிரதிநிதித்துவ உரிமை
  6. குறை தீர்க்கும் உரிமை
  7. நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை
  8. தூய்மையான சுற்றுப்புறச் சூழலை பெறுவதற்கான உரிமை

Question 4.
நுகர்வோர் நீதிமன்றங்களின் பங்கு பற்றி விவாதிக்கவும்.
விடை:
ஒரு தேசிய அளவிலான நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் குறைதீர் ஆணையமாக செயல்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 5.
சந்தைகளின் வகைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி எழுதுக.
விடை:
1) புவியில் இருப்பிடத்தின் அடிப்படையில்.
உள்ளூர் சந்தைகள் :
உள்ளூர் சந்தையில் வாங்குபவர்களும், விற்பவர்களும் உள்ளூர் பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

பிராந்திய சந்தைகள்:
பிராந்திய சந்தைகளானது உள்ளூர் சந்தையைவிட பரந்த அளவிலானவை, அல்லது சில சிறிய மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருக்கும்.

தேசிய சந்தைகள்:
தேசிய சந்தையில் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம். சர்வதேச சந்தை: தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது

2) நேரத்தின் அடிப்படையில்.
மிகக் குறுகிய கால சந்தை:
பொருள்களின் அளிப்பு நிலையானது

குறுகிய கால சந்தை:
முந்தைய சந்தையை விட சற்று கூடுதல் நேரம் உடையது. நீண்ட கால சந்தை: உற்பத்தியை கணக்கிடுவதன் மூலம் விநியோகத்தை மாற்றி அமைக்கலாம். இத்தகையை சந்தையை தேவைகேற்ப மாற்றலாம்.

3) பரிவர்த்தனையின் அடிப்படையில் உடனடி சந்தை:
பரிவர்த்தனைகள் நிகழும் இடத்திலேயே பணம் உடனடியாக செலுத்தப்படுகிறது. கடன் முறை இல்லை .

எதிர்கால சந்தை:
இது கடன் அடிப்படையிலான பரிவர்த்னைகள் ஆகும்.

4) ஒழுங்குமுறையின் அடிப்படையில்,
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை:
பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன.

‘கட்டுப்பாடற்ற சந்தை:
முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை, கண்காணிப்போ, ஒழுங்குமுறையோ கிடையாது.

5) போட்டியின் தன்மை அடிப்படையில்.
முற்றுரிமை:
இது சந்தை கட்டமைப்பை குறிக்கிறது. ஒரு விற்பனையாளார் அல்லது உற்பத்தியாளர் முழு சந்தையில் கட்டுப்பாட்டை கொண்டு உள்ளார்.

ஏகபோக போட்டி:
ஏராளமான வாங்குபவர்கள் விற்பவர்கள் உள்ளனர். ஒவ்வொரு விற்பனையாளரின் தயாரிப்பும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டுள்ளது.

ஒலிகோபோலி:
இது சந்தை வடிவத்தைக் குறிக்கிறது. ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இன்றைய நாளில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பத்து அத்தியாவசிய பொருட்களின் பெயர் மற்றும் அதன் விலையைப் பட்டியலிடுக.

7th Social  Science Guide சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை
அ) ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை
இ) நீண்டகால சந்தை
ஈ) குறுகிய கால சந்தை
விடை:
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை

Question 2.
கடன் முறை இல்லாத சந்தை ……………………..
அ) உள்ளூர் சந்தை
ஆ) சர்வதேச சச்தை
இ) உடனடிச் சந்தை
ஈ) பிராந்திய சந்தை
விடை:
இ) உடனடிச் சந்தை

Question 3.
பொருள்களின் விலையானது தேவையைப் பொறுத்து அமையும்
அ) மிகக் குறுகிய காலசந்தை
ஆ) குறுகிய கால சந்தை
இ) நீண்ட கால சந்தை
ஈ) மேற்கண்டவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) மிகக் குறுகிய காலசந்தை

Question 4.
எது நுகர்வோரின் அடிப்படை உரிமைகளில் இல்லாதது?
அ) பாதுகாப்புக்கான உரிமை
ஆ) தேர்ந்தெடுக்கும் உரிமை
இ) குறை தீர்க்கும் உரிமை
ஈ) சமத்துவ உரிமை
விடை:
ஈ) சமத்துவ உரிமை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விற்பனையாளம் …………. மற்றும் பரிமாற்றங்களை வாங்குபவருக்கு விற்கிறார்
விடை:
பணம்

Question 2.
ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு…………………… சொற்களிலிருந்து பெறப்பட்டது.
விடை:
கிரேக்க

Question 3.
ஒலிகோய் என்றால் …………… மற்றும் பாலி என்றால் ………….
விடை:
சில, கட்டுக்காடு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 4.
ஏகபோக போட்டி என்ற சொல்லை …………… என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
விடை:
பேராசிரியர் எட்வர்ட். எச். சேம்பர்லின்

Question 5.
…………….. மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாக உள்ளது.
விடை:
பங்குச்சந்தை

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 3

IV. பின்வரும் கூற்றுகளை ஆய்க

Question 1.
கூற்று : ஒழுங்குமுறை அடிப்படை சந்தையில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இல்லை.
காரணம் : ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையானது பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் கீழ் நடைபெறுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

V. சுருக்கமான விடையளி.

Question 1.
நுகர்வோர் என்பவர் யார்?
விடை:
நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை வாங்குதல் அல்லது ஒரு சேவையைப் பெறுவதற்காக அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது சுய வேலை வாய்ப்பு மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்பவர் ஆவார்.

Question 2.
நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றால் என்ன?
விடை:
நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பது ஒரு வர்த்தக நடைமுறை அல்லது எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் விற்பனை, பயன்பாடு அல்லது விநியோகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக நியாயமற்ற துறையை அல்லது நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுற பின்பற்றப்படுவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 3.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019 பற்றி எழுதுக.
விடை:
இந்திய பாராளுமன்றத்தில் ஆகஸ்ட், 2019ஆம் ஆண்டு ஒரு மைல்கல் என்று அழைக்கப்படும் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019-ல் நிறைவேற்றப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் நுகர்வோர்களின் குறைகளை குறித்த நேரத்திலும் பயனுள்ள நிர்வாகத்தையும் நியாயமான தீர்வையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் முப்பது வருடங்களுக்கு மேலான சட்டமாகும்

பழைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ல் மாற்றங்களை ஏற்படுத்த முற்படுகிறது.

Question 4.
நுகர்வோர் இல்லாதவர் யார்?
விடை:

  • ஒரு நபர் எப்போது நுகர்வோராய் இருக்க இயலாது.
  • எந்தவொரு பொருளையோ வாங்குகிறது அல்லது எந்தவொரு சேவையையோ இலவசமாக பெறுகின்ற போது.
  • வணிக நோக்கத்திற்காக ஒரு சேவையை அமர்த்துவது அல்லது பொருளை வாங்குவது.
  • ஒப்பந்த அடிப்படையில் ஒரு சேவையைப் பெறுவது.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்தியாவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்து விளக்குக.
விடை:
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • ஒரு தேசிய அளவிலான நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் குறைதீர் ஆணையமாக செயல்படுகிறது.
  • இவ்வகை நுகர்வோர் நீதிமன்றங்கள் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
  • இது 1986ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1988ல் அமைக்கப்பட்டது.
  • இதன் தலைமை அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இந்த ஆணையம் இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் செயல்படுகிறது.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • மாநில அளவில் ஒரு நீதிமன்றம் செயல்படுகிறது.
  • இழப்பீடு கோரப்பட்ட வழக்குகள் 20 லட்சத்திற்கும் மேல் இருந்தால் இவ்வாணையம் ஏற்கிறது.
  • மாவட்ட ஆணையத்தின் மேல் முறையீட்டு அதிகார வரம்பை மாநில ஆணையம் கொண்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் இழப்பீடு 20 லட்சம் வரை விசாரிக்க அனுமதிக்கிறது.
  • மாவட்ட அளவிலான நீதிமன்றம் மாவட்ட அளவில் செயல்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?
அ) மோசமான பேறுகால ஆரோக்கியம்
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
இ) எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுதல்
ஈ) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
விடை:
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

Question 2.
பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
அ) பெண் குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்
இ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
ஈ) வளர்ந்த நாடுகள் மட்டும்
விடை:
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
அ) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஆ) பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
இ) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

Question 4.
வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவறவிடுவது ஏன்?
அ) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
ஆ) பெண் குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
இ) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் ………………….. 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 2.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண்
விடை:
சுஷ்மா ஸ்வராஜ்

Question 3.
முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ……….. ஆவார்.
விடை:
காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 4.
புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் ……………
விடை:
அருந்ததி ராய்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 2

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் (கா) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று (கூ) : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது.
காரணம் (கா) : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும் .
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை பற்றி விவாதிக்கவும்.
விடை:

  • சமுதாயத்தில் பெண்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து பல்வேறு உறவுமுறைகளில் தன்னையே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
  • பெண்கள் தங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை மகளாக, சகோதரியாக மனைவியாக, தாயாக இன்னும் பலவாறாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
  • எவ்வாறாயினும் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பது மனைவி மற்றும் தாய் என்பதாகும்.

Question 2.
பாலின சமத்துவம் என்றால் என்ன?
விடை:
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரது நடத்தைகளும், தேவைகளும் வேறுபட்டு காணப்பட்டாலும் அவர்கள் சமத்துவமிக்கவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது ஆண், பெண் இருவரும் சமம் என்பதல்ல. ஆனால் அவர்களின் உரிமைகள் பொறுப்புகள், வாய்ப்புகள் இவை அனைத்தும் அவர்கள் ஆண், பெண் என்பதைப் பொறுத்து அமைவதில்லை.

Question 3.
பெண்கள் உரிமையை விளக்குக.
விடை:
பெண்கள் உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்தின்படி முக்கியமாக சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா பெண்களுக்கு என்று பல உரிமைகளை வகுத்துள்ளது. ஆண், பெண் இருவருக்கும் இடையில் காணப்படும் மணவிலக்கு, சொத்துரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பல செயல்களில் சட்ட உறுதி வழங்கியுள்ளது.

Question 4.
பெண்களின் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய காரணிகளை பட்டியலிடுக
விடை:
கல்வி :
ஒருவருக்கு அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

பாலினப்பாகுபாடு:
பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னுேறுவதற்கான வாய்ப்பு அரிது. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாக கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதுக.
விடை:

  • 40 ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை வலியுறுத்தி உள்ளது.
  • கல்வி பெறும் பெண் குழந்தை தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கிறார்.
  • பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி அறிவினைப் பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதிநலை உயரவும், அவர்களின் சுயமுன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த ஏதேனும் பத்து பெண்மணிகளைப் பற்றிய படத்தொகுப்பை தயார் செய்க.
விடை:

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணமாக அமையாதது எது?
அ) பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை
ஆ) பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு
இ) பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்
விடை:
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்

Question 2.
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் …………………….
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்
ஆ) கிரண் பேடி
இ) அருந்ததி ராய்
ஈ) சுஷ்மா சுவராஜ்
விடை:
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………………. என்பது பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று.
விடை:
பெண்ணியம்

Question 2.
…………………. பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.
விடை:
கல்வி

Question 3.
………………… பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 4.
நீடித்த நிலையான வளர்ச்சிக்கு …………………. மற்றும் …………………… ஆகியன அவசியக் காரணிகள் ஆகும்.
விடை:
பெண்கள் மேம்பாடு பாலின சமத்துவம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
உலகின் மொத்த மக்கள் தொகையில் ………………….. பெண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விடை:
50%

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 3

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இலக்கை அடைய உண்மையிலேயே செயல்படுகின்றன.
காரணம் (கா) : உலகில் பெண்களை மேம்பாடு அடையச் செய்யாமல் உலக அமைதியையும், செழிப்பையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணம் என்ன?
விடை:
1. பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை 2. சமூகப்பாகுபாடு மற்றும் பொருளாதார சீரழிவு 3. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது 4. பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு 5. பள்ளிகளில் குறைந்த தக்கவைப்பு வீதம் மற்றும் அதிக இடைநிற்றல் விகிதம்

Question 2.
பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்ன?
விடை:

  • பெண்களின் பொருளாதார வளர்ச்சி அல்லது முன்னேற்றம் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று.
  • மனித உரிமைகளை முன்னெடுக்கும் போதும் அதன் வளர்ச்சியின் போதும் பெண்கள் மேம்பாடு அவசியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.
  • நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம், மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் அடைவது ஆகியன அவசியக்காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  1. பெண்களின் பொருளாதார மேம்பாடானது, பெண்கள் பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் உரிமைகளை அடைவதற்கும் வழிவகுக்கிறது.
  2. பெண்களைப் பொருளாதார முன்னேற்றமடைய செய்வதும், உலகில் பாலின இடைவெளிகளை குறைப்பதும் நிலைத்த நீடித்த இலக்கை அடைய உதவுகிறது.
  3. பொருளாதாரம் மேம்பாடு அடைகின்றது.

VI. விரிவான விடையளி

Question 1.
பெண் கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள் யாவை? ஏதேனும் இரண்டை விளக்குக.
விடை:

  1. அதிகரித்த கல்வியறிவு
  2. ஆள் கடத்தல்
  3. அரசியல் பிரதிநிதித்துவம்
  4. வளரும் குழந்தைகள்
  5. காலம் தாழ்த்திய திருமணம்
  6. வருமான சாத்தியம்
  7. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்
  8. வறுமை குறைப்பு

கல்வியறிவு:

  • உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம் பேர் பெண்கள்.
  • எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும்.
  • அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.

வருமான சாத்தியம்:
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.

ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடைளி.

Question 1.
பேரிடர் – விளக்குக.
விடை:
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.

Question 2.
பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம். எ.கா.
இயற்கை பேரிடர் :

  • நிலநடுக்கம்
  • எரிமலை
  • சுனாமி
  • சுறாவளி

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

  • நெருப்பு
  • கட்டிடங்கள் இடிந்துபோதல்
  • தீவிரவாதம்
  • கூட்ட நெரிசல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 3.
இடி மின்னல் – குறிப்பு வரைக.
விடை:

  • வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும்.
  • இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது.
  • இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.

Question 4.
சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப் படுகின்றன. காரணம் கூறு.
விடை:

  • சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடி நிலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவக் காற்று மற்றும் வெப்பமண்டல புயல் கடுமையான சூறாவளி மழையை எற்படுத்துகிறது.
  • இந்த மிக கனமழையால் சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

Question 5.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுப்படுத்துக.
விடை:
நிலச்சரிவு :
பாறைகள், பாறைச் சிதைவுகள், மண் போன்ற பொருட்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது.
பனிச் சரிவு :
பெரும் அளவிலான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

II. ஒரு பத்தியில் விடயளி

Question 1.
வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை? செய்யக்கூடாதவை எவை?
விடை:
அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.
மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும். – கழிப்பிடத்துளை மீதும், கழிவு நீர் வெளியேறும் துளை

  • மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
  • குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
  • வெள்ளத்தில் மிதந்து வரும் எந்த பொருளையும் எடுப்பதை தவிர்க்கவும்.

III. செயல்பாடு

ஒரு காகிதத்தில் உனது கிராமம்/ நகரம் படம் வரைந்து அதில் உனது பள்ளி, வீடு, விளையாட்டுத்திடல் ஆகியவற்றைக் குறி. பிறகு ஆறுகள் /ஓடைகள்/ஏரி/சாலை போன்றவற்றைக் குறி. இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

Question 1.
எந்த இடம் மற்றும் சாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
விடை:
பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம்

Question 2.
உன்னால் மீட்பு வழியைக் காணமுடியுமா?
விடை:
முடியும்

Question 3.
நீங்கள் வெள்ளப்பாதிப்பு பகுதியில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
விடை:

  1. குடியிருப்புப் பகுதி வெள்ளப் பாதிப்பிற்கு உட்படும் தன்மையானதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
  2. முதலுதவிப் பெட்டி, மற்றும் பொருட்களைக் கட்டுவதற்குத் திடமான கயிறு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
நெருக்கடியான காலங்களில் அவசியமான பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பைகளில் உன்னிடம் ஒரு பை உள்ளது என்றால் அதில் என்னென்ன பொருள்கள் எடுத்துச் செல்வாய்?
விடை:
அடையாள அட்டை, பணம், குடிநீர், முதலுதவிப் பெட்டி, துணிகள், மின்னுட்டி

Question 5.
முக்கியமான அவசரக்காலத் தொடர்பு எண்களைக் பட்டியலிடுக.
விடை:

  1. காவல் – 100
  2. மருத்துவ ஊர்தி – 108
  3. தீ – 101
  4. அவசரநிலை – 112

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகில் அதிகமாகப் பேரிடர்கள் நிகழக் கூடிய நாடுகளில் …… ஒன்று
விடை:
இந்தியாவும்

Question 2.
எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் …… மையம்
விடை:
எனப்படுகிறது.

Question 3.
நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி …….. ஆகும்
விடை:
மையப்புள்ளி

Question 4.
….சாலை விதிகளை மீறுவதாலும் கவனக்குறைவாலும் ஏற்படுகின்றன.
விடை:
சாலை விபத்து

Question 5.
…….. நிகழ்ந்த சுனாமி உலகம் இதுவரை கண்டறியாத சுனாமியாக அமைந்தது.
விடை:
சுமித்தரா
தீவுக்:கருகில்

II. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
நிலநடுக்கம் என்றால் என்ன?
விடை:
சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு நிலநடுக்கம் ஆகும்.

Question 2.
சுனாமி என்றால் என்ன?
விடை:
நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடலடி நிலச்சரிவுகளால் தோற்றுவிக்கப்படும் பேரலையே சுனாமி.

Question 3.
சூறாவளி எவ்வாறு உருவாகிறது.
விடை:
அதிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியில் இருந்து சூறாவளி உருவாகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
காட்டுத் தீ எவ்வாறு ஏற்படுகிறது?
விடை:
மனிதர்களின் கவனக்குறைவாலும், மின்னல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தாலும் மேலும் பிற நடைமுறை காரணிகளாலும் காட்டுத் தீ உண்டாகிறது.

Question 5.
கூட்ட நெரிசல் என்றால் என்ன?
விடை:
ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் ஏற்படும் நெரிசலை கூட்ட நெரிசல் என்கிறோம். இதனால் ஏற்படும் மிதிபடுதல் மற்றம் மூச்சுத்திணறல் காரணமாக காயமடைதலும் மரணமும் ஏற்படுகிறன்றது

III. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் அல்லது புள்ளியில் மதிப்பீடுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்தில் நடக்கப்போகும் பேரிடர்களைப் பற்றி கூறுவதாகும்.
விடை:
முன்னறிவிப்பு

Question 2.
நீர் கேரிப்பது குறிப்பாக தேசிய அளவில் மழைநீர் சேகரிக்கப்படும் பகுதி
விடை:
நீர்பிடிப்பு

Question 3.
நேரிடையான அல்லது மறைமுகமான தொடர்பால் ஏற்படும் நோய்
விடை:
தொற்று

Question 4.
பேரிடரின் போது ஏற்படும் இடர்களையும் அவற்றின் அளவையும் குறைத்தல் (அ) தணித்தல் என்பதாகும்
விடை:
தணித்தல்

Question 5.
புவி அதிர்வின் போது அளக்கப்படும் அளவு
விடை:
புவி அதிர்வு
அளவு

V. விரிவான விடையளி

Question 1.
சுனாமியின்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை விவரி.
விடை:

  • உனது தெரு கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
  • மீட்பு வழிகளைத் திட்டமிடுதல் மற்றம் மீட்பு முறைகளைப் பயிற்சி செய்து பார்த்தல்
  • கடல்நீர் உங்களை நோக்கி முன்னேறி வரும்போது உடனடியாகக் கடற்கரை பகுதியிலிருந்து வெளியேறி உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
  • சுனாமியை வேடிக்கை பார்க்கவோ அல்லது உலாவுவதற்கோ கடலோரப் பகுதிகளுக்குச் செல்லச் கூடாது.
  • சுனாமி பற்றிய உண்மைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் 20