Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 2 புவி மாதிரி Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 2 புவி மாதிரி
6th Social Science Guide புவி மாதிரி Text Book Back Questions and Answers
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ………..
விடை:
நிலநடுக்கோடு
Question 2.
புவியின் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள் ………..
விடை:
அட்சக்கோடு
Question 3.
புவியில் 90° அட்சங்கள் ……. என அழைக்கப்படுகின்றன.
விடை:
துருவம்
Question 4.
முதன்மை தீர்க்கக்கோடு ………. என அழைக்கப்படுகிறது.
விடை:
கிரீன்விச் தீர்க்கக்கோடு
Question 5.
உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை ……….
விடை:
24
II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
புவியின் வடிவம்
அ) சதுரம்
ஆ) செவ்வகம்
இ) ஜியாய்டு
ஈ) வட்டம்
விடை:
இ) ஜியாய்டு
Question 2.
வடதுருவம் என்பது
அ) 90° வ அட்சக்கோடு
ஆ) 90° தெ அட்சக்கோடு
இ) 90° மே தீர்க்கக்கோடு
ஈ) 90° கி தீர்க்கக்கோடு
விடை:
அ) 90° வ அட்சக்கோடு
Question 3.
0° முதல் 180 கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பகுதி இவ்வாறு அழைக்கப் படுகிறது.
அ) தெற்கு அரைக்கோளம்
ஆ) மேற்கு அரைக்கோளம்
இ) வடக்கு அரைக்கோளம்
ஈ) கிழக்கு அரைக்கோளம்
விடை:
ஈ) கிழக்கு அரைக்கோளம்
Question 4.
231/2° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) மகரரேகை
ஆ) கடகரேகை
இ) ஆர்க்டிக் வட்டம்
ஈ) அண்டார்டிக் வட்டம்
விடை:
ஆ) கடகரேகை
Question 5.
180 தீர்க்கக்கோடு என்பது
அ) நிலநடுக்கோடு
ஆ) பன்னாட்டு தேதிக்கோடு
இ) முதன்மை தீர்க்கக்கோடு
ஈ) வடதுருவம்
விடை:
ஆ) பன்னாட்டு தேதிக்கோடு
Question 6.
கிரீன்விச்முதன்மைதீர்க்கக்கோட்டிற்குநேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்
அ) நள்ளிரவு 12 மணி
ஆ) நண்பகல் 12 மணி
இ) பிற்பகல் 1 மணி
ஈ) முற்பகல் 11 மணி
விடை:
ஆ) நண்பகல் 12 மணி
Question 7.
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
அ) 1240 நிமிடங்கள்
ஆ) 1340 நிமிடங்கள்
இ) 1440 நிமிடங்கள்
ஈ) 1140 நிமிடங்கள்
விடை:
இ) 1440 நிமிடங்கள்
Question 8.
கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
அ) 82 1/2° கிழக்கு
ஆ) 82 1/2° மேற்கு
இ) 81 1/2° கிழக்கு
ஈ) 81 1/2° மேற்கு
விடை:
அ) 82 1/2° கிழக்கு
Question 9.
அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை
அ) 171
ஆ) 161
இ) 181
ஈ) 191
விடை:
இ) 181
Question 10.
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
அ) 370
ஆ) 380
இ) 360
ஈ) 390
விடை:
இ) 360
III. பொருந்தாததை வட்டமிடுக
Question 1.
வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு
விடை:
பன்னாட்டு தேதிக்கோடு
Question 2.
மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மை தீர்க்கக்கோடு
விடை:
முதன்மை தீர்க்கக்கோடு
Question 3.
வெப்பமண்டலம், (நேரமண்டலம்), மிதவெப்ப மண்டலம், குளிர் மண்டலம்
விடை:
நேர மண்டலம்
Question 4.
இராயல் வானியல் ஆய்வுமையம்), முதன்மை தீர்க்கக்கோடு, கிரீன்விச், பன்னாட்டு தேதிக்கோடு
விடை:
இராயல் வானியல் ஆய்வுமையம்
Question 5.
10° வடக்கு, 20° தெற்கு, 30° வடக்கு, 40° மேற்கு
விடை:
40° மேற்கு
IV. பொருத்துக
விடை:
1. நிலநடுக்கோடு
2. கிரீன்விச்
3. பன்னாட்டு தேதிக்கோடு
4. துருவம்
V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
அ) 1 மற்றும் 3 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 2 சரி
ஈ) 1.2 மற்றும் 3 சரி
விடை:
இ) 1 மற்றும் 2 சரி
VI. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 : புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
கூற்று 2 : புவியில், தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) சுற்று சரி, சுற்று 2 தவறு
VII. பெயரிடுக
Question 1.
புவியில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.
விடை:
அட்சக்கோடு
Question 2.
புவியில் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்
விடை:
தீர்க்கக்கோடு
Question 3.
புவியின் முப்பரிமாண மாதிரி
விடை:
புவி மாதிரி
Question 4.
தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் இந்தியா அமைந்துள்ள அரைக்கோளம்
விடை:
தென் அரைக்கோளம்
Question 5.
தீர்க்கக்கோடுகள் மற்றும் அட்சக்கோடுகளின் வலை அமைப்பு
விடை:
புவி வலைப்பின்னல்
VIII. சுருக்கமாக விடையளி
Question 1.
ஜியாய்டு என்பது என்ன?
விடை:
- புவியின் வடிவமானது தனித்தன்மை வாய்ந்தது.
- புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது.
- எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்று அழைக்கப்படுகிறது.
Question 2.
தல நேரம் என்பது என்ன?
விடை:
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
Question 3.
ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர் உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?
விடை:
ஒரு நாளில் ஒரு முறை தான் சூரியன் நேர் உச்சிக்கு வரும்.
Question 4.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
விடை:
- புவியின் மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப் பட்டுள்ள கற்பனைக் கோடுகள், அட்சக்கோடுகள் எனப்படும்.
- புவியின் மீது வடக்கு தெற்காக, செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள் தீர்க்கக் கோடுகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும்.
Question 5.
புவியில் காணப்படும் நான்கு அரைக்கோளங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
- வட அரைக்கோளம்
- தென் அரைக்கோளம்
- கிழக்கு அரைக்கோளம்
- மேற்கு அரைக்கோளம்
IX. காரணம் கூறுக
Question 1.
0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.
விடை:
0° தீர்க்கக்கோடு கீரின்விச் வழியே செல்வதால் கிரீன்விச் தீர்க்கக் கோடு என்று அழைக்கப் படுகிறது.
Question 2.
புவியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், 66 1/2° அட்சக்கோடு முதல் 90° துருவம் வரை உள் ள பகுதிகள் குளிர் மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது எனவே இப்பகுதி குளிர்மண்டலம் என அழைக்கப்படுகிறது.
Question 3.
பன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.
விடை:
பன்னாட்டு தேதிக்கோடு நேராகச் சென்றால், ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும், இந்த குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைந்து வரையப்பட்டுள்ளது.
X. விரிவான விடை தருக
Question 1.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
விடை:
- முழு பூமியையும் படிப்பதற்கான ஒரே துல்லியமான வழி புவி மாதிரி.
- இது பூமியின் மேற்பரப்பில் நிலம் மற்றும் நீர் விநியோகத்தை காட்டுகிறது.
- சரியான வடிவ அளவு மற்றும் கண்டங்கள் மற்றும் கடல்களின் இடம் காட்டப்பட்டுள்ளது.
- கடல்வழிபாதை, காற்று பாதை, ஆறுகள், நகரங்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவுகிறது.
Question 2.
அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.
விடை:
0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென் வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனப்படும்.
0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென் துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனப்படும்.
0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி கிழக்கு அரைக் கோளம் (Eastern Hemisphere) என அழைக்கப்படுகிறது.
0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180° மேற்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere) என அழைக்கப்படுகிறது.
Question 3.
முக்கிய அட்சக்கோடுகள் யவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
விடை:
முக்கிய அட்சக்கோடுகள்:
- நிலநடுக்கோடு 0°
- கடகரேகை 23 1/2° வ
- மகரரேகை 23 1/2° தெ
- ஆர்க்டிக் வட்டம் 66 1/2°
- அண்டார்டிக் வட்டம் 66 1/2° தெ
- வடதுருவம் 90°வ
- தென்துருவம் 90° தெ
புவி சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் அடிப்படையில் பல காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.
வெப்ப மண்ட லம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டின் இருபக்கங்களிலும் கடகரேகை மற்றும் மகர ரேகை இடையே அமைந்துள் ள பகுதியே வெப்பமண்டலம் என அழைக்கப்படுகிறது. சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகு தி அதிக வெப்பமடைகிறது. எனவே காலநிலை வெப்பம் மற்றும் ஈரப்பதமாக இருக்கும்.
மித வெப்ப மண்ட லம் (Temperate Zone)
இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. இது இரண்டு அரைக்கோளங்களிலும் வெப்ப மண்டலத்திற்கும், குளிர் மண்டலத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
குளிர் மண்ட லம் (Frigid Zone)
ஆர்க்டிக் வட்டம் மற்றும் வட துருவத்திற்கும் அண்டார்டிக் மற்றும் தென் துருவத்திற்கும் இடையிலான பகுதி குளிர்மண்டலம் என அழைக்கப்படுகிறது. சூரிய கதிர்கள் ஆண்டு முழுவதும் மிக வும் சாய்ந்த நிலையில் விழுவதால் இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது.
Question 4.
இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக.
விடை:
- இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 68°7′ கிழக்கு முதல் 97°25′ கிழக்கு வரை உள்ளது.
- சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன.
- இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே இந்தியாவின் மையத்தில் செல்லும் 82 1/2° கிழக்கு தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் ISI (Indian Standard time) கணக்கிடப்படுகிறது.
செயல்பாடு
Question 1.
கொடுக்கப்பட்டுள்ள வலைப்பின்னலில் (Grid) ஐந்து இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் உற்று நோக்கி கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களில் அவற்றின் அட்சதீர்க்க அளவைகளைக் குறிக்கவும்
புவிவலைப்பின்னல்
1. A அட்ச தீர்க்கப்பரவல் 40° வ 30° மே
2. B தீர்க்க ப்பரவல் 20° வ 10° A
3. C தீர்க்க ப்பரவல் 10° வ 20° கி
4. D தீர்க்கப்பரவல் 40° தெ 50° A
5. E தீர்க்கப்பரவல் 20° தெ 20 மே
6th Social Science Guide புவி மாதிரி Additional Important Questions and Answers
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
புவி ………. மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
விடை:
510.1
Question 2.
……… என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.
விடை:
தாலமி
Question 3.
………. என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.
விடை:
கிரீன்விச்
Question 4.
புவியில் திசைகளைக் சுட்டிக் காண்பிக்கும் பொழுது …… திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
விடை:
வடக்கு
Question 5.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் …… திசைகளாகும்.
விடை:
அடிப்படை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
Question 1.
23 1/2° வடக்கு முதல் 66 1/2% வடக்கு வரையிலும், 23 1/2° தெற்கு முதல் 66 1/2° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ….. அழைக்கப்படுகின்றன.
அ) தாழ் அட்சக்கோடுகள்
ஆ) மத்திய அட்சக்கோடுகள்
இ) உயர் அட்சக்கோடுகள்
விடை:
ஆ) மத்திய அட்சக்கோடுகள்
Question 2.
சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி
அ) குளிர்மண்டலம்
ஆ) மித வெப்பமண்டலம்
இ) வெப்பமண்டலம்
விடை:
இ) வெப்பமண்டலம்
Question 3.
23 1/2° வட அட்சக்கோடு …… என்றும் அழைக்கப்படுகிறது.
அ) கடகவரை
ஆ) நிலநடுவரை
இ) மகரவரை
விடை:
அ) கடகவரை
Question 4.
அட்சக்கோடுகள் ……. என்றும் அறியப்படுகிறது.
அ) நிலவாங்கு
ஆ) அகலாங்கு
இ) நெட்டாங்கு
விடை:
ஆ) அகலாங்கு
Question 5.
1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு
அ) கனடா
ஆ) மெக்ஸிகோ
இ) வாஷிங்டன்
விடை:
இ) வாஷிங்டன்
III. ஓரிரு வார்த்தைகளில் விடையளி
Question 1.
இது யார் கூற்று?
”விண்மீன்கள் வானில் மேற்குப் புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது.”
விடை:
ஆரியபட்டர் – இந்திய வானியல் அறிஞர்
Question 2.
‘Geographia’ என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை:
தாலமி (கிரேக்க ரோமானிய கணித வல்லுநர், வான் ஆய்வாளர் மற்றும் புவியியல் ஆய்வாளர்)
Question 3.
எந்த நாட்டில் 7 நேர மண்டலங்கள் உள்ளன?
விடை:
ரஷ்யா
IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
மெரிடியன் – வரையறு
விடை:
மெரிடியன் (Meridian) என்ற சொல் மெரிடியானஸ் (Meridianies) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும்:
என்பது சூரியன் ஓர் இடத்தின் நேர் மேலே உச்சியில் உள்ளதைக் குறிக்கிறது.
Question 2.
அச்சு என்றால் என்ன?
விடை:
- கோளம் சுற்றி வருவதாக கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு
- புவி தனது அச்சில் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் இடையே சுற்றுகின்றது.
Question 3.
அரைக்கோளம் என்றால் என்ன?
விடை:
பூமியின் நடுவில் வரையப்பட்டுள்ள நில நடுக்கோட்டு பூமியை வடபகுதி, தென்பகுதி என இரு பகுதி களாக பிரித்திருப்பதே அரைக்கோளமாகும். (அல்லது) துருவத்தில் இருந்து மேல் கீழாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடு பிரித்து இருக்கும் பகுதிகளை அரைக்கோளம் என்பர்.
V. விரிவான விடையளி
Question 1.
காலநிலை மண்டலங்களை வரைக.
விடை:
மன வரைபடம்