Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?
அ) மோசமான பேறுகால ஆரோக்கியம்
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
இ) எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுதல்
ஈ) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
விடை:
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

Question 2.
பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
அ) பெண் குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்
இ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
ஈ) வளர்ந்த நாடுகள் மட்டும்
விடை:
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
அ) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஆ) பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
இ) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

Question 4.
வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவறவிடுவது ஏன்?
அ) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
ஆ) பெண் குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
இ) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் ………………….. 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 2.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண்
விடை:
சுஷ்மா ஸ்வராஜ்

Question 3.
முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ……….. ஆவார்.
விடை:
காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 4.
புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் ……………
விடை:
அருந்ததி ராய்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 2

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் (கா) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று (கூ) : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது.
காரணம் (கா) : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும் .
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை பற்றி விவாதிக்கவும்.
விடை:

  • சமுதாயத்தில் பெண்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து பல்வேறு உறவுமுறைகளில் தன்னையே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
  • பெண்கள் தங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை மகளாக, சகோதரியாக மனைவியாக, தாயாக இன்னும் பலவாறாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
  • எவ்வாறாயினும் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பது மனைவி மற்றும் தாய் என்பதாகும்.

Question 2.
பாலின சமத்துவம் என்றால் என்ன?
விடை:
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரது நடத்தைகளும், தேவைகளும் வேறுபட்டு காணப்பட்டாலும் அவர்கள் சமத்துவமிக்கவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது ஆண், பெண் இருவரும் சமம் என்பதல்ல. ஆனால் அவர்களின் உரிமைகள் பொறுப்புகள், வாய்ப்புகள் இவை அனைத்தும் அவர்கள் ஆண், பெண் என்பதைப் பொறுத்து அமைவதில்லை.

Question 3.
பெண்கள் உரிமையை விளக்குக.
விடை:
பெண்கள் உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்தின்படி முக்கியமாக சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா பெண்களுக்கு என்று பல உரிமைகளை வகுத்துள்ளது. ஆண், பெண் இருவருக்கும் இடையில் காணப்படும் மணவிலக்கு, சொத்துரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பல செயல்களில் சட்ட உறுதி வழங்கியுள்ளது.

Question 4.
பெண்களின் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய காரணிகளை பட்டியலிடுக
விடை:
கல்வி :
ஒருவருக்கு அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

பாலினப்பாகுபாடு:
பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னுேறுவதற்கான வாய்ப்பு அரிது. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாக கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதுக.
விடை:

  • 40 ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை வலியுறுத்தி உள்ளது.
  • கல்வி பெறும் பெண் குழந்தை தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கிறார்.
  • பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி அறிவினைப் பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதிநலை உயரவும், அவர்களின் சுயமுன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த ஏதேனும் பத்து பெண்மணிகளைப் பற்றிய படத்தொகுப்பை தயார் செய்க.
விடை:

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணமாக அமையாதது எது?
அ) பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை
ஆ) பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு
இ) பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்
விடை:
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்

Question 2.
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் …………………….
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்
ஆ) கிரண் பேடி
இ) அருந்ததி ராய்
ஈ) சுஷ்மா சுவராஜ்
விடை:
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………………. என்பது பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று.
விடை:
பெண்ணியம்

Question 2.
…………………. பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.
விடை:
கல்வி

Question 3.
………………… பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 4.
நீடித்த நிலையான வளர்ச்சிக்கு …………………. மற்றும் …………………… ஆகியன அவசியக் காரணிகள் ஆகும்.
விடை:
பெண்கள் மேம்பாடு பாலின சமத்துவம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
உலகின் மொத்த மக்கள் தொகையில் ………………….. பெண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விடை:
50%

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 3

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இலக்கை அடைய உண்மையிலேயே செயல்படுகின்றன.
காரணம் (கா) : உலகில் பெண்களை மேம்பாடு அடையச் செய்யாமல் உலக அமைதியையும், செழிப்பையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணம் என்ன?
விடை:
1. பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை 2. சமூகப்பாகுபாடு மற்றும் பொருளாதார சீரழிவு 3. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது 4. பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு 5. பள்ளிகளில் குறைந்த தக்கவைப்பு வீதம் மற்றும் அதிக இடைநிற்றல் விகிதம்

Question 2.
பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்ன?
விடை:

  • பெண்களின் பொருளாதார வளர்ச்சி அல்லது முன்னேற்றம் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று.
  • மனித உரிமைகளை முன்னெடுக்கும் போதும் அதன் வளர்ச்சியின் போதும் பெண்கள் மேம்பாடு அவசியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.
  • நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம், மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் அடைவது ஆகியன அவசியக்காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  1. பெண்களின் பொருளாதார மேம்பாடானது, பெண்கள் பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் உரிமைகளை அடைவதற்கும் வழிவகுக்கிறது.
  2. பெண்களைப் பொருளாதார முன்னேற்றமடைய செய்வதும், உலகில் பாலின இடைவெளிகளை குறைப்பதும் நிலைத்த நீடித்த இலக்கை அடைய உதவுகிறது.
  3. பொருளாதாரம் மேம்பாடு அடைகின்றது.

VI. விரிவான விடையளி

Question 1.
பெண் கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள் யாவை? ஏதேனும் இரண்டை விளக்குக.
விடை:

  1. அதிகரித்த கல்வியறிவு
  2. ஆள் கடத்தல்
  3. அரசியல் பிரதிநிதித்துவம்
  4. வளரும் குழந்தைகள்
  5. காலம் தாழ்த்திய திருமணம்
  6. வருமான சாத்தியம்
  7. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்
  8. வறுமை குறைப்பு

கல்வியறிவு:

  • உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம் பேர் பெண்கள்.
  • எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும்.
  • அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.

வருமான சாத்தியம்:
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.

ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 4