Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 மக்களாட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

6th Social Science Guide மக்களாட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதிமனிதன் …….. பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
(அ) சமவெளி
(ஆ) ஆற்றோரம்
(இ) மலை
(ஈ) குன்று
விடை:
(ஆ) ஆற்றோரம்

Question 2.
மக்களாட்சியின் பிறப்பிடம் ……….
(அ) சீனா
(ஆ) அமெரிக்கா
(இ) கிரேக்கம்
(ஈ) ரோம்
விடை:
(இ) கிரேக்கம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 3.
உலக மக்களாட்சி தினம் ………. ஆகும்.
(அ) செப்டம்பர் 15
(ஆ) அக்டோபர் 15
(இ) நவம்பர் 15
(ஈ) டிசம்பர் 15
விடை:
(அ) செப்டம்பர் 15

Question 4.
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ……
(அ) ஆண்கள்
(ஆ) பெண்கள்
(இ) பிரதிநிதிகள்
(ஈ) வாக்காளர்கள்
விடை:
(ஈ) வாக்காளர்கள்

II. நிரப்புக.

Question 1.
நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ……………
விடை:
சுவிட்சர்லாந்து

Question 2.
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் …….
விடை:
ஆப்ரகாம் லிங்கன்

Question 3.
மக்கள் …………… அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
விடை:
வாக்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
நம் நாட்டில் …… மக்களாட்சி செயல்படுகிறது.
விடை:
நாடாளுமன்ற

III. விடையளிக்கவும்

Question 1.
மக்களாட்சி என்றால் என்ன?
விடை:
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”

Question 2.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
விடை:
நேரடி மக்களாட்சி மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி

Question 3.
நேரடி மக்களாட்சி – வரையறு.
விடை:
“நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றனர். அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள் தான் அங்கீகரிப்பர். அரசியல் வாதிகள் நாடாளுமன்ற செயல் முறைகளின்படி ஆட்சி செய்வர்”.

Question 4.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
விடை:
“சுதந்திரமான தேர்தல் முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தெரிந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள்.

Question 5.
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை?
விடை:
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகள்

  • அரசியல் கொள்கைகளை வரையறுத்துள்ளது.
  • அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
  • அரசு நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் கடமைகளையும் விளக்குகிறது.
  • குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.

IV. உயர்சிந்தனை வினா

Question 1.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

V. செயல்பாடுகள்

Question 1.
உங்கள் தொகுதி பிரதிநிதிகளின் பெயர்களைக் கேட்டறிந்து எழுதவும்.
விடை:
(அ) நாடளுமன்ற உறுப்பினர் – K.R.P. பிரபாகரன்
(ஆ) சட்டமன்ற உறுப்பினர் – TP. மொஹிதின்கான்
(இ) உள்ளாட்சி உறுப்பினர் – A. ராதாகிருஷ்ணன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 2.
மக்களாட்சி முறையின் நிறை, குறைகளை விவாதிக்கவும்.
விடை:
நிறைகள் :

  • மக்களாட்சி முறை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை பெற்று தருகின்ற ஒரு சிறந்த அரசாட்சியாகும்.
  • இவ்வாட்சி ஜனநாயக ரீதியாக முடிவெடிக்கும் தன்மையை செம்மைப்படுத்துகிறது.
  • குடிமக்களின் சுயமரியாதையை பாதுகாக்கிறது.
  • மக்களாட்சி மக்களின் தவறுகளை திருத்தி கொள்ள வழி வகை செய்கிறது.

குறைகள் :

  • மக்களாட்சியில் தலைமை மாறிக் கொண்டே இருப்பதால் நிலையற்ற தன்மை உருவாகிறது.
  • நன்னடைத்தைக்கு வாய்ப்பு குறைகிறது
  • முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
  • ஊழலுக்கு வழி வகை செய்கிறது.

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
விடை:
2004

Question 2.
……… அரசமைப்புச் சட்டம் தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலே மிகப் பெரியது
விடை:
இந்திய

Question 3.
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு …………. தலைமையில் உருவானது.
விடை:
டாக்டர் பி.ஆர்.
அம்பேத்கார்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
இந்தியாவில் ………. வயது நிரம்பிய எந்த ஒருகுடிமகனும் வாக்களிக்கலாம்
விடை:
18

Question 5.
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது ……..
விடை:
ஐஸ்லாந்து

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
…….. நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்”
(அ) டாக்டர் இராஜேந்திரபிரசாத்
(ஆ) பி.ஆர். அம்பேத்கர்
(இ) டாக்டர் S. ராதாகிருஷ்ணன்
விடை:
(ஆ) பி.ஆர்.அம்பேத்கர்

Question 2.
பழமையான அரசியலைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
(அ) கிரேக்கம்
(ஆ) சன்மரினோஸ்
(இ) ரோமானியப்பேரரசு
விடை:
(ஆ) சன்மரினோஸ்

Question 3.
அதிபர் மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு(கள்)
(அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(ஆ) கனடா
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா
விடை:
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா

Question 4.
நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பவர்கள் ……….
(அ) ஜனாதிபதி
ஆ) பிரதமர்
இ) மக்கள்
விடை:
(இ) மக்கள்

Question 5.
இந்திய அரசமைப்புச் சட்டம் தன் மக்களுக்கு ……… அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளது.
அ) 6
ஆ) 9
இ) 8
விடை:
அ) 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
அரசு என்றால் என்ன?
விடை:
மக்களை ஆளும் அரசு என்பது நிதி – நிர்வாகம், சட்டம் ஒழுங்கு என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கிவிட்ட உறுப்புகளை கொண்டது.

Question 2.
தேர்தல் என்றால் என்ன ?
விடை:
மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முறையே தேர்தல் எனப்படும்.

Question 3.
“ஜனநாயக ரீதியாக முடிவெடிப்பது என்றால் என்ன?
விடை:

  • மக்களாட்சி அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது.
  • மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும்.
  • பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொருமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும்.
  • இதை தான் ஜனநாயக ரீதியாக முடிவெடித்தல் என்கிறோம்.

V. விரிவான விடையளி

Question 1.
மக்களாட்சியின் நோக்கங்களை – விளக்கு
விடை:

  • மக்களின் சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், உயர்த்தவும்.
  • சமூக நீதி மற்றும் சமுதாய வளர்ச்சியை அடையவும்
  • சட்டத்தின் விதி முறைகளை செயல்படுத்தவும்
  • மக்கள் தங்கள் பிரதிநிதிகளை’ – தாங்களே தேர்ந்தெடுக்கவும்.
  • நாட்டின் உயர்வுக்கு மக்களின் பங்களிப்புடன் பாடுபடுவதே மக்களாட்சியின் நோக்கமாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 99