Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடைளி.

Question 1.
பேரிடர் – விளக்குக.
விடை:
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.

Question 2.
பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம். எ.கா.
இயற்கை பேரிடர் :

  • நிலநடுக்கம்
  • எரிமலை
  • சுனாமி
  • சுறாவளி

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

  • நெருப்பு
  • கட்டிடங்கள் இடிந்துபோதல்
  • தீவிரவாதம்
  • கூட்ட நெரிசல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 3.
இடி மின்னல் – குறிப்பு வரைக.
விடை:

  • வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும்.
  • இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது.
  • இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.

Question 4.
சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப் படுகின்றன. காரணம் கூறு.
விடை:

  • சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடி நிலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவக் காற்று மற்றும் வெப்பமண்டல புயல் கடுமையான சூறாவளி மழையை எற்படுத்துகிறது.
  • இந்த மிக கனமழையால் சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

Question 5.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுப்படுத்துக.
விடை:
நிலச்சரிவு :
பாறைகள், பாறைச் சிதைவுகள், மண் போன்ற பொருட்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது.
பனிச் சரிவு :
பெரும் அளவிலான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

II. ஒரு பத்தியில் விடயளி

Question 1.
வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை? செய்யக்கூடாதவை எவை?
விடை:
அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.
மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும். – கழிப்பிடத்துளை மீதும், கழிவு நீர் வெளியேறும் துளை

  • மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
  • குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
  • வெள்ளத்தில் மிதந்து வரும் எந்த பொருளையும் எடுப்பதை தவிர்க்கவும்.

III. செயல்பாடு

ஒரு காகிதத்தில் உனது கிராமம்/ நகரம் படம் வரைந்து அதில் உனது பள்ளி, வீடு, விளையாட்டுத்திடல் ஆகியவற்றைக் குறி. பிறகு ஆறுகள் /ஓடைகள்/ஏரி/சாலை போன்றவற்றைக் குறி. இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

Question 1.
எந்த இடம் மற்றும் சாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
விடை:
பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம்

Question 2.
உன்னால் மீட்பு வழியைக் காணமுடியுமா?
விடை:
முடியும்

Question 3.
நீங்கள் வெள்ளப்பாதிப்பு பகுதியில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
விடை:

  1. குடியிருப்புப் பகுதி வெள்ளப் பாதிப்பிற்கு உட்படும் தன்மையானதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
  2. முதலுதவிப் பெட்டி, மற்றும் பொருட்களைக் கட்டுவதற்குத் திடமான கயிறு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
நெருக்கடியான காலங்களில் அவசியமான பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பைகளில் உன்னிடம் ஒரு பை உள்ளது என்றால் அதில் என்னென்ன பொருள்கள் எடுத்துச் செல்வாய்?
விடை:
அடையாள அட்டை, பணம், குடிநீர், முதலுதவிப் பெட்டி, துணிகள், மின்னுட்டி

Question 5.
முக்கியமான அவசரக்காலத் தொடர்பு எண்களைக் பட்டியலிடுக.
விடை:

  1. காவல் – 100
  2. மருத்துவ ஊர்தி – 108
  3. தீ – 101
  4. அவசரநிலை – 112

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகில் அதிகமாகப் பேரிடர்கள் நிகழக் கூடிய நாடுகளில் …… ஒன்று
விடை:
இந்தியாவும்

Question 2.
எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் …… மையம்
விடை:
எனப்படுகிறது.

Question 3.
நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி …….. ஆகும்
விடை:
மையப்புள்ளி

Question 4.
….சாலை விதிகளை மீறுவதாலும் கவனக்குறைவாலும் ஏற்படுகின்றன.
விடை:
சாலை விபத்து

Question 5.
…….. நிகழ்ந்த சுனாமி உலகம் இதுவரை கண்டறியாத சுனாமியாக அமைந்தது.
விடை:
சுமித்தரா
தீவுக்:கருகில்

II. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
நிலநடுக்கம் என்றால் என்ன?
விடை:
சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு நிலநடுக்கம் ஆகும்.

Question 2.
சுனாமி என்றால் என்ன?
விடை:
நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடலடி நிலச்சரிவுகளால் தோற்றுவிக்கப்படும் பேரலையே சுனாமி.

Question 3.
சூறாவளி எவ்வாறு உருவாகிறது.
விடை:
அதிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியில் இருந்து சூறாவளி உருவாகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
காட்டுத் தீ எவ்வாறு ஏற்படுகிறது?
விடை:
மனிதர்களின் கவனக்குறைவாலும், மின்னல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தாலும் மேலும் பிற நடைமுறை காரணிகளாலும் காட்டுத் தீ உண்டாகிறது.

Question 5.
கூட்ட நெரிசல் என்றால் என்ன?
விடை:
ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் ஏற்படும் நெரிசலை கூட்ட நெரிசல் என்கிறோம். இதனால் ஏற்படும் மிதிபடுதல் மற்றம் மூச்சுத்திணறல் காரணமாக காயமடைதலும் மரணமும் ஏற்படுகிறன்றது

III. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் அல்லது புள்ளியில் மதிப்பீடுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்தில் நடக்கப்போகும் பேரிடர்களைப் பற்றி கூறுவதாகும்.
விடை:
முன்னறிவிப்பு

Question 2.
நீர் கேரிப்பது குறிப்பாக தேசிய அளவில் மழைநீர் சேகரிக்கப்படும் பகுதி
விடை:
நீர்பிடிப்பு

Question 3.
நேரிடையான அல்லது மறைமுகமான தொடர்பால் ஏற்படும் நோய்
விடை:
தொற்று

Question 4.
பேரிடரின் போது ஏற்படும் இடர்களையும் அவற்றின் அளவையும் குறைத்தல் (அ) தணித்தல் என்பதாகும்
விடை:
தணித்தல்

Question 5.
புவி அதிர்வின் போது அளக்கப்படும் அளவு
விடை:
புவி அதிர்வு
அளவு

V. விரிவான விடையளி

Question 1.
சுனாமியின்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை விவரி.
விடை:

  • உனது தெரு கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
  • மீட்பு வழிகளைத் திட்டமிடுதல் மற்றம் மீட்பு முறைகளைப் பயிற்சி செய்து பார்த்தல்
  • கடல்நீர் உங்களை நோக்கி முன்னேறி வரும்போது உடனடியாகக் கடற்கரை பகுதியிலிருந்து வெளியேறி உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
  • சுனாமியை வேடிக்கை பார்க்கவோ அல்லது உலாவுவதற்கோ கடலோரப் பகுதிகளுக்குச் செல்லச் கூடாது.
  • சுனாமி பற்றிய உண்மைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் 20