Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு
6th Social Science Guide சாலை பாதுகாப்பு Text Book Back Questions and Answers
I. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி.
Question 1.
சாலை பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுதவும்.
விடை:
- விழிப்புடன் பயணம் விபத்தில்லா பயணம்.
- வாழ்க்கையில் முந்துங்கள் வாகனத்தில் அல்ல.
- வேகத்தை கூட்டாதே ஆயுளை குறைக்காதே.
- நடக்க பாரு இடப்பக்கம் கடக்க பாரு இருபக்கம்.
- வாகனம் ஓட்டுவதற்கு மட்டும் பறப்பதற்கு அல்ல.
- வேகம் சோகத்தை தரும் நிதானம் நிம்மதியை தரும்.
Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை அடையாளம் காண்க.
விடை:
அ) திருப்பம் கிடையாது
ஆ) செல்லக் கூடாது
இ) குறுக்கு சாலை
ஈ) மருத்துவமனை,
Question 3.
2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துக்கள் குறித்த தகவல்களைக் கொண்டு
விடை:
கலந்துரையாடல் நடத்தவும்.
- சாலை விபத்துக்கள் 2017ல் 3 சதவிகிதம் குறைந்துள்ளது.
- பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் பெருமளவு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
- பீகார், உபி, ஒடிசா மற்றும் மபி மாநிலங்களில் சாலை விபத்துக்களில் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
- 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது பெருமளவு சாலை விபத்துக்கள் தவிர்க்கப்பட்ட மாநிலங்களில்
முதலாவதாகத் தமிழ்நாடு திகழ்கின்றது என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. - சதவிகிதத்தின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் 15.7 சதவீதம் சாலை விபத்துக்கள் படு வீழ்ச்சி அடைந்துள்ளது.
Question 4.
விவாதம் – தலைக் கவசம் அணிதல் அவசியமானதா அல்லது அவசியமற்றதா?
விடை:
தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் :
- 88% வரை தலைக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம்.
- பார்க்கும் திறனை அதிகரிக்கும்
தீமைகள் :
- அதன் வடிவமைப்பு
- பின்னால் வரும் வாகனங்கள் தெரிவதில்லை.
முடிவு :
- தலைக்கவசம் அணிவதில் சில தீமைகள் இருந்தாலும், நாம் தலைக்கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
- நம்முடைய உயிர் நாம் இந்த பூமியில் வாழ முக்கியமானதாக கருதப்படுகிறது.
- எனவே நாம் இந்த விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செய்வோம். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.
Question 5.
சாலை பாதுகாப்பு குறித்த சுவரொட்டிகள் தயாரிக்கவும்.
விடை:
6th Social Science Guide சாலை பாதுகாப்பு Additional Important Questions and Answers
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
வாகனங்களை எப்படி, எப்போது, ஏன் இயக்கம் அனுமதிக்கப் படுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களே ….. ஆகும்.
விடை:
சாலைவிதிகள்
Question 2.
…… மற்றும் … வீடுகள் மற்றும் பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
விடை:
பெற்றோர் மற்றும்
ஆசிரியர்கள்
Question 3.
எச்சரிக்கைக் குறியீடுகள் …… வடிவத்தில் காணப்படுகின்றன.
விடை:
முக்கோண
Question 4.
… வட்டங்கள் சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.
விடை:
நீலநிற
Question 5.
…….. விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும்.
விடை:
பச்சை நிற.
II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
……… வட்டங்கள் சாலையில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதை வழங்குகின்றன.
அ) ஆரஞ்சு
ஆ) சிவப்பு
இ) பச்சை
விடை:
ஆ) சிவப்பு
Question 2.
…… அம்புக் குறி அது காட்டும் திசையை நோக்கிப் பயனிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அ) பச்சை
ஆ) சிவப்பு
இ) நீலம்
விடை:
அ) பச்சை
Question 3.
பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. அமைக்கப்பட்டது.
அ) பிரான்ஸ்
ஆ) ரசியா
இ) பிரிட்டன்
விடை:
இ) பிரிட்டன்
Question 4.
கட்டாயக் குறியீடுகள் … வடிவில் காணப்படுகின்றன.
அ) முக்கோண
ஆ) செவ்வக
இ) வட்ட
விடை:
இ) வட்ட
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
Question 1.
மூன்று வகையான போக்குவரத்து சமிக்ஞைகள் யாவை?
விடை:
கட்டாயக் குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் அறிவுறுத்தும் குறியீடுகள்.
Question 2.
கட்டாயக் குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவைகள் பற்றிய விதிகளாகும். இவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை. இச்சமிக்கைஞகள் வட்ட வடிவில் காணப்படுகின்றன.
Question 3.
எச்சரிக்கை குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்ககளுக்கு அறிவிப்பவை எச்சரிக்கைக் குறியீடுகள் ஆகும். இவை பொதுவாக முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.
Question 4.
அறிவுறுத்தும் குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன. இவை பொதுவாக செவ்வக வடிவத்தில் காணப்படுகின்றன.
Question 5.
சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு, மஞ்சள், மற்றும் பச்சை எவற்றை குறிக்கின்றன?
விடை:
சிவப்பு – நில், மஞ்சள் – கவனி, பச்சை – செல்.
IV. விரிவான விடையளி.
Question 1.
பாத சாரிகள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை யாவை?
விடை:
செய்யக் கூடியவை :
- நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம்.
- நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர் வரும் வாகனங்களை நோக்கி வலப்பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.
- 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும்.
- பாதுகாப்பான தூரத்தில் வாகனங்கள் வரும்போது சாலையைக் கடக்க வேண்டும்.
- இரவு நேரங்களில் வெளிர் நிற ஆடையை அணிய வேண்டும்.
செய்யக் கூடியவை :
- சாலைகளில் ஓடி கடக்கக் கூடாது.
- நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்புறத்திலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ சாலையைக் கடக்கக் கூடாது.
- வாகன ஓட்டுநருக்குத் தெளிவாக தெரியாத மூலைகளிலிருந்தும் வளைவுகளில் இருந்தும் சாலையைக் கடக்கக் கூடாது.
- சாலை தடுப்புகளைத் தாண்டிக் குதித்துச் சாலையை கடக்கக் கூடாது.
மன வரைபடம்