Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ….. அமைக்கப்படுகிறது.
அ) ஊராட்சி ஒன்றியம்
ஆ) மாவட்ட ஊராட்சி
இ) வட்டம் ஈ) வருவாய் கிராமம்
விடை:
அ) ஊராட்சி ஒன்றியம்

Question 2.
தேசிய ஊராட்சி தினம் ……. ஆகும்.
அ) ஜனவரி 24
ஆ) ஜீலை 24
இ) நவம்பர் 24
ஈ) ஏப்ரல் 24
விடை:
ஈ) ஏப்ரல் 24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 3.
இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் …
அ) டெல்லி
ஆ) சென்னை
இ) கொல்கத்தா
ஈ) மும்பாய்
விடை:
ஆ) சென்னை

Question 4.
அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ……….
அ) வேலூர்
ஆ) திருவள்ளூர்
இ) விழுப்புரம்
ஈ) காஞ்சிபுரம்
விடை:
இ) விழுப்புரம்

Question 5.
மாநகராட்சியின் தலைவர் …… என அழைக்கப்படுகிறார்
அ) மேயர்
ஆ) கமிஷ்னர்
இ) பெருந்தலைவர்
ஈ) தலைவர்
விடை:
அ) மேயர்

II. நிரப்புக

Question 1.
இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் …….. ஆகும்.
விடை:
தமிழ்நாடு

Question 2.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு …………..
விடை:
1992

Question 3.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் …………. ஆண்டுகள்.
விடை:
5

Question 4.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ……. ஆகும்.
விடை:
வாலாஜாபேட்டை நகராட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 80
விடை:
1. நிரந்தர அமைப்பு
2. வட்டார வளர்ச்சி அலுவலர்
3. செயல் அலுவலர்
4. மாநிலத் தேர்தல் ஆணையம்

IV. விடையளிக்கவும்.

Question 1.
உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரைக் எழுதவும்?
விடை:
ஆம். திருநெல்வேலி மாநகராட்சி

Question 2.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யாது?
விடை:
உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உள்ளூர் அமைப்புகளின் திறமையான செயல்பாட்டிற்கும் மக்களை நேரடியாக ஈடுபடுவதற்கு அவசியமாகும்.

Question 3.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 4.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி.

Question 5.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாவர்?
விடை:
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்

  • ஊராட்சி மன்றத் தலைவர்.
  • பகுதி உறுப்பினர்கள்
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

Question 6.
மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
விடை:

  • குடிநீர் வசதி
  • தெரு விளக்கு அமைத்தல்
  • தூய்மைப் பணி
  • மருத்துவச் சேவை
  • மாநகராட்சிப் பள்ளிகள்
  • பிறப்பு, இறப்பு பதிவு இன்னும் பிற

Question 7.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக.
விடை:
வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீதான வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு, மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்னும் பிற

Question 8.
கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை? அந்நாள்களின் சிறப்புகள் யாவை?
விடை:

  • கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2, ஆகிய நாட்களில் நடைபெறும்.
  • தேசிய விழா தினமாக இந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

Question 9.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:
கிராம சபை அமைத்தல், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு, இட ஒதுக்கீடு, தேர்தல், பதவிக்காலம், நிதி க்குழு, கணக்கு மற்றும் தணிக்கை, இன்னும் பிற

Question 10.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • கிராமத்து பஞ்சாயத்துகளின் திறமையான செயல்பாட்டுக்கு கிராமப்புற சபா மிகவும் அவசியமானதாகும்.
  • இது சமூக நலனுக்கான திட்டங்களை தீட்டுதல் மற்றும் செயல்படுத்துவதில் பொது மக்கள் பங்கேற்பைப் மேம்படுத்துகிறது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
விடை:

  • இந்திய நாடு ஒரு அகன்ற நாடாகும். ஒரே ஒரு அரசாங்கத்தால், நாட்டின் முழு நிர்வாகத்தையும், கவனிக்க இயலாது.
  • நமது இந்திய அரசமைப்புச்சட்டம் மூன்று நிலைகளில் நிர்வாகத்தை பிரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்.
  • உள்ளாட்சி அமைப்புகள் கிராமம் மற்றும் நகரங்களின் உள்ளூர் நிர்வாகத்தை கவனித்துக்
    கொள்ளும்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணிகள் :
    • தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்,
    • சாலைகள் மற்றும் பள்ளிகள் கட்டுதல்,
    • குடிநீர் மற்றும் மின்வசதி அமைத்தல்

VI. செயல்பாடுகள்

Question 1.
உள்ளாட்சி பிரதிநிதியை நேர்காணல் செய்வதற்காக வினா நிரல் தயாரிக்கவும்.
விடை:

  • நம் பகுதியில் சிறந்த வடிகால் அமைப்பதற்கு தங்களின் திட்டம் என்ன?
  • மகாராஜ நகர், மற்றும் தியாகராஜ நகரை இணைக்கும் பாலக் கட்டுமானம் எப்போது நிறைவடையும்?
  • நம் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணி எத்தனை மாதங்களில் முடிவடையும்?

Question 2.
பள்ளியின் மேம்பாட்டிற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இருப்பின் கலந்துரையாடுக.
விடை:

  • உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக அபரிமிதமான உதவிகள் செய்துள்ளனர்.
  • பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் பள்ளியின் பழைய மாணவர்களை நாடி உதவி பெற்றனர்.
  • அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து பள்ளிக்கு தேவையான கணினி, ஆய்வக உபகரணங்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினர்.

Question 3.
நான் உள்ளாட்சி பிரதிநிதியானால்…?
விடை:

  • சிறந்த வடிகால் திட்டம் அமைக்கப் பாடுபடுவேன்.
  • டெங்கு போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துவேன்.
  • நன்கு திட்டமிட்ட சாலை வசதிகளையும், நன்கு ஒளியூட்டும் விளக்குகளையும் ஏற்பாடு செய்து மக்கள் நலமுடன் வாழ வழி வகுப்பேன்.

Question 4.
உன் மாவட்டத்தில் உள்ள பல வகையான உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்து பதிவிடவும்.
விடை:
மாவட்டத்தின் பெயர் : திருநெல்வேலி
கிராம ஊராட்சி : இராஜகோபாலபுரம்
ஊராட்சி ஒன்றியம் : முத்தூர்
மாவட்ட ஊராட்சி பேரூராட்சி : குலவணிகர்புரம்
நகராட்சி மாநகராட்சி : திருநெல்வேலி மாநகராட்சி

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ்நாட்டில் ………. மாநகராட்சிகள் இருக்கின்றன.
விடை:
12

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 2.
சென்னை மாநகராட்சி ……….. உருவாக்கப்பட்டது.
விடை:
1688

Question 3.
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ……….. மாவட்டம்
விடை:
காஞ்சிபுரம்

Question 4.
நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர் ………….
விடை:
பேரூராட்சி

Question 5.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ………. ஊராட்சி ஆகும்.
விடை:
கிராமம்

Question 6.
……. மற்றும் …….. மாவட்டங்களில் மிக குறைந்த அளவு ஊராட்சி ஒன்றியங்களே உள்ளன.
விடை:
நிலகீரி மற்றும் பெரம்பலூர்

Question 7.
தொகுதிகள் …….. எனவும் அழைக்கப்படுகின்றன.
விடை:
பகுதிகள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜை பரிந்துரைத்தவர் ….
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) இராஜேந்திர பிரசாத்
விடை:
ஆ) மகாத்மா காந்தி

Question 2.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் …. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அ) 30%
ஆ) 25%
இ) 33%
விடை:
இ) 33%

Question 3.
2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் … இடங்களில் வெற்றி பெற்றனர்.
அ) 38%
ஆ) 28%
இ) 48%
விடை:
அ) 38%

Question 4.
தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு உள்ளாட்சியில் ………… இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
அ) 40%
ஆ) 50%
இ) 60%
விடை:
ஆ) 50%

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 5.
தமிழகத்தின் தேர்தல் ஆணையம் … மாவட்டத்தில் உள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
விடை:
அ) சென்னை

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மாநகராட்சியின் அதிகாரிகள் குறிப்பு வரைக.
விடை:

  • மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்.
  • நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  • பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் ஆவார்.

Question 2.
ஊராட்சி ஒன்றியம் பற்றி விளக்குக.
விடை:

  • பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
  • கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர்.
  • துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
  • ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

IV. விரிவான விடையளி.

Question 1.
மாவட்ட ஊராட்சி குறிப்பு வரைக.
விடை:

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
  • 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
  • பகுதி உறுப்பினர்களாக கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 99