Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 7 :

பாடலின் கருத்து :

காட்டில் உள்ள ஒரு பெரிய மரத்தில் தூக்கணாங் குருவி ஒன்று கூடுகட்டியிருந்தது. அது தன் குஞ்சுகளுடன் அங்கே வசித்து வந்தது. ஒரு நாள் அங்கே வந்த ஒட்டகச்சிவிங்கி குஞ்சுகளின் சத்தம் கேட்டுக் கோபம் அடைந்தது. அது மரக்கிளையைக் கோபத்துடன் உலுக்கியது. தூக்கணாங்குருவியின் குஞ்சுகள் மிகவும் பயந்து நடுங்கின. அங்கே வந்த தேனீ ஒன்று அதற்கு அறிவுரை கூறியது.

மரமானது அனைவருக்கும் பொதுவானது. பறவைகள் அங்கு கூடுகட்டுகின்றன. தேனீக்கள் பூக்களில் தேன் சேகரிக்கின்றன. மரம் விலங்குகளுக்கு நிழல் தருகிறது. எனவே அனைவருடனும் நட்புடன் இருக்க வேண்டுமென்று தேனீ கூறியது. ஆனால் அதை ஒட்டகச்சிவிங்கி கேட்கவில்லை. எனவே தேனீ அருகில் உள்ள – குளத்தை அடைந்தது. அங்குள்ள தவளையிடம் நடந்ததைக் கூறி உதவி கேட்டது. தவளையும் உதவி செய்வதாகக் கூறியது.

மறுநாள் ஒட்டகச்சிவிங்கி மீண்டும் அந்த மரத்தின் அருகே வந்தது. அங்கிருந்த தேனீக்களின் ஓசையைக் கேட்டு அது கோபம் கொண்டது. தேன்கூட்டைக் கலைக்க முயன்று தன் தலையை ஆட்டியது. உடனே தேனீக்கள் அனைத்தும் ஓடிவந்து ஒட்டகச் – சிவிங்கியைக் கடிக்க ஆரம்பித்தன. வலி பொறுக்க முடியாமல் ஒட்டகச்சிவிங்கி குளத்தில் இறங்கியது.

ஆனால் தேனீக்கள் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தன. தவளைகள் அதன் உடல் மீது) ஏறின. ஒட்டகச்சிவிங்கி தன் தவற்றை உணர்ந்து தன்னை ) மன்னித்துக் கொள்ளும்படி வேண்டியது. இனிமேல் தான் யாருக்கும் துன்பம் தரமாட்டேன் என உறுதி அளித்தது. அதன்பின் அது அனைவரோடும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 10:

படிப்போம். சிந்திப்போம்!

எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
மரக்கிளையை உலுக்கியது
(அ) தேனீ
(ஆ) ஒட்டகச்சிவிங்கி
(இ) தவளை
(ஈ) சிட்டுக்குருவி
விடை :
(ஆ) ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 2.
மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மரம் + தூள்
(ஆ) மர + தூள்
(இ) மரத்து + தூள்
(ஈ) மரத் + தூள்
விடை :
(அ) மரம் + தூள்

கேள்வி 3.
திட்டம் + படி – இச்சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) திட்டபடி
(ஆ) திட்டப்படி
(இ) திட்டம்படி
(ஈ) திட்டுபடி
விடை :
(ஆ) திட்டப்படி

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 4.
மிதிபட்டு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மிதி + பட்டு
(ஆ) மிதிப் + பட்டு
(இ) மீதி + பட்டு
(ஈ) மீதிப் + பட்டு
விடை :
(அ) மிதி + பட்டு

கேள்வி 5.
இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) மகிழ்ந்து
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) சிறந்து
விடை :
(ஆ) பிரிந்து

வினாக்களுக்கு விடையளிக்க:

கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஏன் கத்தின?
விடை :
ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையைப் பிடித்து உலுக்கியது எனவே தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் பயந்து போய்க் கத்தின.

கேள்வி 2.
தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார் யார்?
விடை :
தேனீக்களும் தவளைகளும் தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் ஆவர்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 3.
தேனீ எதன் காதருகே சென்று கடித்தது?
விடை :
தேனீ, ஒட்டகச்சிவிங்கியின் காதருகே சென்று கடித்தது.

கேள்வி 4.
இக்கதையின் மூலம் நீ அறியும் நீதிக்கருத்து யாது?
விடை :
நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்.

அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக.

கேள்வி 1.
புத்திசாலி –
விடை :
அறிவாளி

கேள்வி 2.
அடாத செயல் –
விடை :
தகாத செயல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

குருவிக்கேற்ற கூட்டைத் தேர்ந்தெடுப்போமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

சரியான சொல்லை நிரப்பிப் படித்துக் காட்டுக.

கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ____________ என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன.
(கீச்… கீச்… / கூக்கு… கூக்கு )
விடை :
கீச்… கீச்….

கேள்வி 2.
மரத்தியின் அடியில் ______________ ஒதுங்கியது. (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)
விடை :
ஒட்டகச்சிவிங்கி

கேள்வி 3.
தூக்கணாங்குருவிக்கு முதலில் ___________ வந்தது. (மரங்கொத்தி /மீன்கொத்தி)
விடை :
தேனீ

கேள்வி 4.
ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த _____________ தொப்பென்று விழுந்தது. (ஆற்றில் / குளத்தில்)
விடை :
குளத்தில்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 12:

வினைமரபினை அறிந்துகொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 3

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 4

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் 5

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

பக்கம் 13:

சொல் விளையாட்டு:

ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!

கேள்வி 1.
‘வெயில்’ – இச்சொல்லில் ‘வெ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
ஆடும் பறவை வரும் அழகாய் இருக்கும். – ___________
விடை :
மயில்

கேள்வி 2.
‘மரம்’ இச்சொல்லில் ‘ம’ வை மாற்றி அவை நிரப்பு.
அறுக்க உதவும் கருவியைப் பெறுவாய் ___________
விடை :
அரம்

கேள்வி 3.
கூச்சம்’ இச்சொல்லில் கூ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய் _________
விடை :
மச்சம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்

கேள்வி 4.
‘குருவி’ இச்சொல்லில் ‘கு’ வை மாற்றி ‘அ’ வை நிரப்பு.
குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய் ____________
விடை :
அருவி

கேள்வி 5.
‘பணம்’ இச்சொல்லில் ப வை மாற்றி ‘ம’ வை நிரப்பு.
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய் ___________
விடை :
மணம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 1:

பாடலின் கருத்து :

கணினி என்பது நமது உள்ளங்கையில் உலகைக் காட்டும் ஒரு அற்புதமான படைப்பாகும். நாம் கேட்கும் தகவல்களைக் கணினி ஒரு நொடியில் நமக்குத் தருகிறது. மட்டிலா மகிழ்ச்சியை மனதிற்குள் கொண்டு வருகிறது.

கணினியின் இணையம் மக்கள் அனைவரையும் இணைக்கக் கூடிய ஓர் அற்புத அமைப்பாகும். விரைவாகக் கடிதம் அனுப்ப, குறுஞ் செய்திகளை அனுப்ப இது நமக்கு உதவுகிறது.

கணினி தகவல் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. எந்த விதமான தகவல் வேண்டுமென்றாலும் நாம் இதன் வழியே எளிதில் பெற முடியும். உலகத்தைச் சுருக்கி, உள்ளங்கையில் கொண்டு வரும் கணினி ஓர் உன்னதமான படைப்பன்றோ?

எவ்வளவு நேரம் வேலை செய்தாலும் சரி. கணினிக்குக் களைப்போ சோர்வோ ஏற்படுவதில்லை. எந்தச் செய்தியைத் தேடினாலும் அது எளிதாய் நமக்கு எடுத்து வழங்கும்.

கணினியை உள்ளங்கையில் ஓர் உலகம்’ என்றும் உள்ளதைக் காட்டும் கண்ணாடி’ என்றும் மக்கள் போற்றுவர். இது அறிவியல் படைப்பின் ஓர் அற்புதம் அன்றோ ?

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 2:

படிப்போம்! சிந்திப்போம்!

எழுதுவோம்! சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஏற்றம் என்ற சொல்லின் பொருள் _____________
(அ) சோர்வு
(ஆ) தாழ்வு
(இ) உயர்வு
(ஈ) இறக்கம்
விடை:
இ) உயர்வு

கேள்வி 2.
என்று + இல்லை – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
(அ) என்றில்லை
(ஆ) என்றும் இல்லை
(இ) என்று இல்லை
(ஈ) என்றல்லை
விடை:
(அ) என்றில்லை

கேள்வி 3.
முன்னே என்ற சொல்லின் எதிர்ச்சொல் _______________
(அ) எதிரே
(ஆ) பின்னே
(இ) உயரே
(ஈ) கீழே
விடை:
(ஆ) பின்னே

கேள்வி 4.
கணினி ____________ வழியே அனைவரையும் இணைக்கிறது.
(அ) தகவல் களஞ்சியம்
(ஆ) செய்தி
(இ) கடிதம்
(ஈ) இணையம்
விடை:
(ஈ) இணையம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

வினாக்களுக்கு விடையளிக்க:

கேள்வி 1.
தகவல்களை எதன் வழியே எளிமையாகப் பெறமுடியும்?
விடை:
இணையத்தோடு இணைந்த கணினியின் வழியே தகவல்களை எளிதாகப் பெற முடியும்.

கேள்வி 2.
கணினியின் பயன்கள் குறித்து இப்பாடலின் வழியே நீ அறிந்து கொண்டவற்றைக் கூறுக. (பார்க்க – பாடலின் கருத்து)
ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 1

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

கேள்வி 3.
விசைப்பலகையிலுள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களைக் கண்டறிவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 3

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 4

சொல் விளையாட்டு:

அலைபேசியோடு தொடர்பில்லாத எழுத்துகளை நீக்கிச் சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 5

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 6

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 5:

பின்வரும் செயலிகளுக்குப் பொருத்தமான படத்தினைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 7

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம் 8

Samacheer Guru 3rd Tamil Guide Term 3 Chapter 1 உள்ளங்கையில் ஓர் உலகம்

பக்கம் 6:

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
இன்று வாணியின் பிறந்த நாள். வாணியின் மாமா வெளியூரில் வசிக்கிறார். பிறந்தநாளுக்கு அவர் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவளுடைய மாமா எப்படி வாழ்த்துகள் தெரிவிப்பார்?
சிந்திக்கலாமா?
மின்னஞ்சல் மூலம் அவர் வாணிக்கு வாழ்த்து தெரிவிப்பார்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 8 நட்பே உயர்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 8 நட்பே உயர்வு

பக்கம் 50:

வாங்க பேசலாம் :

அன்பை மறவா முயல் கதையை உமது சொந்தநடையில் கூறுக.

பாடச்சுருக்கம் :
ஒரு காட்டில் முயலும், மானும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. மானை எப்படியாவது வேட்டையாடிட வேண்டும் என ஒரு நரி நினைத்தது. மான் தனியாக இருக்கும் போது நரி அதனிடம் சென்று பேசியது. முயலிடம் நட்புக் கொள்ளக் கூடாதென்றும் முயலானது அந்த மானை அங்கே தூரத்தில் உள்ள குகையில் வாழும் சிங்கத்திற்கு இரையாக்கிவிடும் என்றும் கூறியது. மானும் நரியின் பேச்சைக் கேட்டு, நடுக்காட்டிற்குள் சென்றுவிட்டது.

தன் நண்பன் மானைத் தேடி முயல் அலைந்தது. நரியின் சூழ்ச்சி அதற்குப் புரிந்துவிட்டது. தன் நண்பன் மானை விட்டு விடும்படி நரியிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கு சரியான விடை சொன்னால் மானை விட்டுவிடுவதாகக் கூறி அந்தப் புதிர்களைக் கூறியது.

  1. கீழேவரும், ஆனால் மேலே போகாது. அது என்ன?
  2. கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது. அது என்ன?
  3. தொடக்கத்தில் உயரம், எரிந்து முடிந்தவுடன் குட்டை. அது என்ன ?

இதற்கு முயல்

  1. மழை
  2. கடிகாரம்
  3. மெழுகுவர்த்தி எனச் சரியான பதில்களைக் கூறியது. நரி வேறு வழியின்றி மானை விடுவித்தது. மானும், முயலும் மகிழ்ச்சியுடன் காட்டில் தொடர்ந்து வசித்தன.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

பக்கம் 50:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘இரை’ என்ற சொல்லின் பொருள்
(அ) உணவு
(ஆ) இருப்பிடம்
(இ) மலை
(ஈ) இறைவன்
விடை:
(அ) உணவு

கேள்வி 2.
‘மகிழ்ச்சியுடன்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மகிழ்ச்சி + யுடன்
(ஆ) மகிழ்ச்சி + உடன்
(இ) மகிழ் + உடன்
(ஈ) மகிழ்ச் + சியுடன்
விடை:
(ஆ) மகிழ்ச்சி + உடன்

கேள்வி 3.
சொல்லி + கொண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) சொல்லிக்கொண்டு
(ஆ) சொல்கொண்டு
(இ)சொல்லக்கொண்டு
(ஈ) சொல்லிகொண்டு
விடை:
(அ) சொல்லிக் கொண்டு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

கேள்வி 4.
‘முதுமை’ – என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) தீமை
(ஆ) சிறுமை
(இ) பெருமை
(ஈ) இளமை
விடை:
(ஈ) இளமை

கேள்வி 5.
‘சூழ்ச்சி’ – என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு
(அ) மான்
(ஆ) முயல்
(இ) நரி
(ஈ) சிங்கம்
விடை:
(இ) நரி

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?
விடை:
முயல், மான் ஒன்றுடன் நண்பனர்கப் பழகியது.

கேள்வி 2.
மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?
விடை:
மானை விட்டுவிட நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கான விடையைக் கேட்டது.

கேள்வி 3.
மான் எதனால் மாட்டிக்கொண்டது?
விடை:
நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தால் மான் மாட்டிக் கொண்டது.

கேள்வி 4.
மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்த ன?
விடை:
நரி சூழ்ச்சி மிக்கது. எனவே மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதைத் தவிர்த்தன.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 6

கேள்வி 1.

உணவை எடுத்திடுவாள்
உண்ணாமல் வைத்திடுவாள்
உடல் மெலிந்த பெண் – அவள் யார்?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 4

கேள்வி 2.
வெள்ளையாம் வெள்ளைக்குடம்
விழுந்தால் சல்லிக்குடம் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 5

கேள்வி 3.
கொடிகொடியாம் பூங்கொடியாம்
கிளிதின்னும் பழம் இதுவாம் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு

கேள்வி 4.
தட்டு தங்கத் தட்டு
தகதகக்கும் வெள்ளித்தட்டு
தலைக்குமேல் உலாவரும் – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 1

கேள்வி 5.
ஆயிரம் அறை கொண்ட
மிகப்பெரிய மிட்டாய் கடை – அது என்ன?
விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 8 நட்பே உயர்வு 3

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பக்கம் 41:

வாங்க பேசலாம்:

ஓநாயும், நாயும் கதையை உம் சொந்த நடையில் கூறுக.

பாடச்சுருக்கம் :

காட்டில் ஒரு ஓநாய் பசியால் வாடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. அது கொழுகொழு என்று இருந்தது. அந்த நாயைப் பார்த்த ஓநாய் அதனுடன் பேச ஆரம்பித்தது. ஓநாயைக் காட்டைவிட்டு வெளியே வரும்படி நாய் அழைத்தது. தன்னைப் போல் இருந்தால் ஓநாய்க்கும் நல்ல உணவு கிடைக்கும் என்றது. வீட்டில் கடினமான வேலை எதுவும் கிடையாது.

புதியவர்களைக் கண்டால் விரட்டி அடிக்க வேண்டும். வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் உள்ளவர்கள் அன்பு காட்டுவார்கள். நல்ல உணவு கொடுப்பார்கள். இதனைக் கேட்ட ஓநாய் அந்த நாயுடன் வரச் சம்மதித்தது. திடீரென நாயின் கழுத்தில் உள்ள கருப்புப் பட்டையை

ஓநாய் பார்த்தது. அந்தக் கருப்புப் பட்டை எப்படி வந்தது என ஓநாய் கேட்டது. அது தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட உதவும் பட்டை என நாய் கூறியது.

உடனே ஓநாய் சுதாரித்துக் கொண்டது. வீட்டில் மாட்டிக் கொண்டு நல்ல உணவுகளைச் சாப்பிடுவதை விட வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சுதந்திரம் இல்லாவிட்டால் பயன் கிடையாது. சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல் என்று கூறிவிட்டு ஓநாய் அங்கிருந்து அகன்று சென்றது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பக்கம் 42:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
மகிழ்ச்சி – இச்சொல் உணர்த்தும் பொருள் ____________.
(அ) இன்பம்
(ஆ) துன்பம்
(இ) வருத்தம்
(ஈ) அன்பு
விடை :
(அ) இன்பம்

கேள்வி 2.
ஒன்றுமில்லை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) ஒன்று + இல்லை
(ஆ) ஒன்றும் + இல்லை
(இ) ஒன்றுமே + இல்லை
(ஈ) ஒன்று + மில்லை
விடை :
(ஆ) ஒன்றும் + இல்லை

கேள்வி 3.
அப்படி + ஆனால் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) அப்படியானால்
(ஆ) அப்படியனால்
(இ) அப்படியினால்
(ஈ) அப்படி ஆனால்
விடை :
(அ) அப்படியானால்

கேள்வி 4.
விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) வெறுப்பு
(ஆ) கருப்பு
(இ) சிரிப்பு
(ஈ) நடிப்பு
விடை :
(அ) வெறுப்பு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
பசியால் மெலிந்த ஓநாய் எங்குச் சுற்றித் திரிந்தது?
விடை :
பசியால் மெலிந்த ஓநாய் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது.

கேள்வி 2.
நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?
விடை :
நாய், ஓநாயைக் காட்டைவிட்டு வெளியேறி வீட்டிற்கு வரும்படி சொன்னது.

கேள்வி 3.
நாயின் கழுத்தில் என்ன இருந்தது?
விடை :
நாயின் கழுத்தில், அதைச் சங்கிலியால் கட்டிப்போட ஒரு கருப்புப் பட்டை இருந்தது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.

கேள்வி 1.
விதவிதமான – ________________
விடை :
வகைவகையான

கேள்வி 2.
சுதந்திரம் – ________________
விடை :
விடுதலை

கேள்வி 3.
வருடுதல் – ________________
விடை :
தடவுதல்

கேள்வி 4.
பிரமாதம் – ________________
விடை :
பெருஞ்சிறப்பு

கேள்வி 5.
சந்தேகம் – ________________
விடை :
ஐயம்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக.

கேள்வி 1.
ஓநாய் தின்பதற்கு எதுவும் கிடைக்காமல் மெலிந்திருந்தது.
விடை :

கேள்வி 2.
நாய் புதியவர்களைக் கண்டால் விரட்டியடிக்காது.
விடை :

கேள்வி 3.
ஓநாயின் கழுத்தில் கருப்புப் பட்டை இருந்தது.
விடை :

கேள்வி 4.
ஓநாய் சுதந்திரமாக வாழ ஆசைப்படவில்லை.
விடை :

கேள்வி 5.
ஓநாயை நாய் வீட்டிற்கு அழைத்தது.
விடை :

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சரியான சொல்லால் நிரப்புக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 1

கேள்வி 1.
நீ எவ்வ ளவு ___________ இருக்கிறாய்?
விடை :
அழகாக

கேள்வி 2.
நாயின் கழுத்தில் ____________ இருந்தது.
விடை :
கருப்புப்பட்டை

கேள்வி 3.
வீட்டுக்காரர்கள் நாயை ___________ வருடிக் கொடுப்பார்கள்.
விடை :
அன்பாக

கேள்வி 4.
வீட்டில் மாட்டிக் கொள்வதைவிட _____________ காட்டில் அலைவதே மேல.
விடை :
சுதந்திரமாக

கேள்வி 5.
என்னைத் தயவுசெய்து அழைத்துச் செல் என்று _______________ கூறியது.
விடை :
ஓநாய்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொற்களை இணைத்து எழுதுவோம்

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 2

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 3

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொல் விளையாட்டு:

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 5

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 6

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 7

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரை உருவாக்குக.

எ.கா. சுதந்திரத்தை கொடுக்க என் மாட்டேன் விட்டு
விடை :
என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

கேள்வி 1.
கொழு, கொழு அழகையும் புகழ்ந்தது நாயின் உடம்பையும்.
விடை :
நாயின் கொழு, கொழு உடம்பையும் அழகையும் புகழ்ந்தது.

கேள்வி 2.
பார்த்தால் வீட்டுக்காரர்களைப் ஆட்ட வாலை வேண்டும்.
விடை :
‘வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.

எ.கா. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை :
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?

கேள்வி 1.
ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை :
ஆகா! என்ன சுகம் தெரியுமா?

கேள்வி 2.
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது
விடை :
ஒன்றுமில்லை என்றால் கழுத்தில் எப்படி பட்டை ஏற்பட்டது?

கேள்வி 3.
என்ன கட்டிப் போடுகிறார்களா
விடை :
என்ன, கட்டிப் போடுகிறார்களா?

கேள்வி 4.
நம் விருப்பம் போல போக முடியாது அது என்ன பிரமாதம்.
விடை :
நம் விருப்பம் போல போக முடியாது. அது என்ன பிரமாதம்?

கேள்வி 5.
நல்ல உணவு உனக்கும் கிடைக்கும் என்று சொன்னது
விடை :
“நல்ல உணவு உனக்கும் கிடைக்கும்” என்று சொன்னது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சூழலுக்கேற்ற உணர்வைத் தெரிவு செய்க.
(சிரிப்பு, மகிழ்ச்சி, வருத்தம், வியப்பு, அச்சம்)

கேள்வி 1.
பாட்டி புத்தாடை வாங்கித் தரும்போது ஏற்படுவது
விடை :
மகிழ்ச்சி

கேள்வி 2.
மிகப்பெரிய யானையைப் பார்க்கும்போது
விடை :
வியப்பு

கேள்வி 3.
கோமாளி செய்யும் செயல்களைக் காணும்போது
விடை :
சிரிப்பு

கேள்வி 4.
நம்முடைய நண்பர் கீழே விழுவதைக் காணும்போது
விடை :
வருத்தம்

கேள்வி 5.
திடீரென எதிரில் பாம்பைக் காணும்போது
விடை :
அச்சம்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும்

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
எந்தக் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்? ஏன்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 7 நாயும், ஓநாயும் 8

விடை :
மரக்கிளையில் உள்ள கிளி மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் அது சுதந்திரமாக உள்ளது. கூண்டுக்கிளி கவலையோடு இருக்கும். ஏனெனில் அது அடிமைபோல் அடைந்து கிடக்கிறது. அதனால் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியாது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

பக்கம் 34:

படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _____________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.
(அ) தங்கத்தை
(ஆ) வெள்ளியை
(இ) இரும்பை
(ஈ) கற்பாறையை
விடை :
(ஆ) வெள்ளியை

கேள்வி 2.
‘ஒகேனக்கல்’ – என்ற சொல்லின் பொருள் _____________
(அ) பவளப்பாறை
(ஆ) வழுக்குப்பாறை
(இ) பனிப்பாறை
(ஈ) புகைப்பாறை
விடை :
(ஈ) புகைப்பாறை

கேள்வி 3.
‘வெண்புகை’ – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
(அ) வெண் + புகை
(ஆ) வெ + புகை
(இ) வெண்மை + புகை
(ஈ) வெம்மை + புகை
விடை :
(இ) வெண்மை + புகை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

கேள்வி 4.
பாதை + அமைத்து — இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
(அ) பாதை அமைத்து
(ஆ) பாதையமைத்து
(இ) பாதம் அமைத்து
(ஈ) பாதயமைத்து
விடை :
(ஆ) பாதையமைத்து

கேள்வி 5.
தோற்றம் – இச்சொல்லின் எதிர்ச் சொல் ________________
(அ) தொடக்கம்
(ஆ) மறைவு
(இ) முதல்
(ஈ) ஆரம்பம்
விடை :
(ஆ) மறைவு

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, முதலைப் பண்ணை .

கேள்வி 2.
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?
விடை :
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காணப்படும்.

கேள்வி 3.
சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன ?
விடை :
தேசநாதீஸ்வரர் கோயில்.

கேள்வி 4.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது?
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக:

கேள்வி 1.
ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
விடை :

கேள்வி 2.
அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும்.
விடை :

கேள்வி 3.
கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது.
விடை :

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக:

கேள்வி 1.
எழில் – ____________
விடை :
அழகு

கேள்வி 2.
களிப்பு – ____________
விடை :
மகிழ்ச்சி

கேள்வி 3.
நீராடலாம் – _____________
விடை :
குளிக்கலாம்

கேள்வி 4.
பரவசம் – _____________
விடை :
மகிழ்ச்சி

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

பொருத்தமான சொல்லால் நிரப்புக:

கேள்வி 1.
கடற்கரையில் _____________ (மனல் / மணல்) வீடு, கட்டி விளையாடலாம்.
விடை :
மணல்

கேள்வி 2.
மரத்தின் பழங்கள் _____________ (குரைவாக / குறைவாக)உள்ளன.
விடை :
குறைவாக

கேள்வி 3.
வலப்பக்க சுவரின் மேல் ____________ (பல்லி / பள்ளி ) இருக்கிறது.
விடை :
பல்லி

கேள்வி 4.
ஆதிரைக்கு நல்ல _____________ (வேலை / வேளை) கிடைத்துள்ளது.
விடை :
வேலை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

சிந்திக்கலாமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 3

படம் 1                                                               படம் 2

படங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது? உன் கருத்துகளை வெளிபடுத்துக.
விடை :
1. மரங்கள் நிறைந்த இப்பகுதியில் தூய்மையான காற்று கிடைக்கிறது. மரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இதனால் நாம் சுவாசிப்பதற்கு தேவையான தூய்மையான காற்று கிடைக்கிறது.

2. தொழிற்சாலைகளும், வாகனப் போக்குவரத்தும் உள்ளபகுதிகளில் இந்தக் கரும்புகை வெளிப்படுகிறது. இது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது. இந்தக் காற்றை நாம் சுவாசிப்பதால் சுவாச மண்டலம் சார்ந்த உடல்நலக் கேடுகள் – ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 5

இன எழுத்துகள்:

பக்கம் 39:

உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்.

ங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்.

விடுபட்ட இடங்களில் சரியான இன எழுத்துகளை நிரப்பலாமா?

கேள்வி 1.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 6

விடை :

செம்பருத்தி

கேள்வி 2.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 7

விடை :
குன்று

கேள்வி 3.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 8

விடை :
சுண்டல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

கேள்வி 4.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 9

விடை :
தொங்குபாலம்

கேள்வி 5.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 10

விடை :
இஞ்சி

கேள்வி 6.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 11

விடை :
ஆந்தை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி

செயல் திட்டம்:

உங்கள் வீட்டில் நீங்கள் காணும் பொருள்களுள் இன எழுத்துகள் இடம்பெற்ற சொற்கள் 20 எழுதி வருக.
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி 12

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் … டும் … டும் … டும்

பக்கம் 30:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
விறகெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
(அ) விறகு + எல்லாம்
(ஆ) விறகு + கெல்லாம்
(இ) விற + கெல்லாம்
(ஈ) விறகு + எலாம்
விடை :
(அ) விறகு + எல்லாம்

கேள்வி 2.
‘படம் + கதை’ – இச்சொற்களைச் சேர்த்து எழுதிக் கிடைப்பது ____________
(அ) படம்கதை
(ஆ) படக்கதை
(இ) படகதை
(ஈ) படகாதை
விடை :
(ஆ) படக்கதை

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 1 இப்படத்திற்கு உரிய சொல்லைக் கண்டறிக ______________
(அ) ஓனான்
(ஆ) ஓநான்
(இ) ஓணான்
(ஈ) ஓணன்
விடை :
(இ) ஓணான்

கேள்வி 4.
தோசை – இச்சொல்லின் ஒலிப்புடன் தொடர்பில்லாத சொல் எது? ___________
(அ) ஆசை
(ஆ) மேசை
(இ) பூசை
(ஈ) இசை
விடை :
(ஈ) இசை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
ஓணான் எதற்காக உழவரிடம் சென்றது?
விடை :
ஓணானின் வாலில் முள் குத்தி மாட்டிக் கொண்டது. அதை எடுப்பதற்காக ஓணான் உழவரிடம் சென்றது.

கேள்வி 2.
தோட்டக்காரன் ஓணானிடம் என்ன கூறினான்?
விடை :
தோட்டக்காரன் ஓணானிடம் பானை உடைந்து விட்டது. எனவே அதற்குப் பதில் பூக்களைத் தருவதாகக் கூறினான்.

கேள்வி 3.
கதையில் ஓணான் பெற்று வந்த பொருள்களைக் கூறுக.
விடை :
கத்தி, விறகு, தோசை, பானை, பூக்கள், மேளம் – ஆகியவை ஓணான் பெற்று வந்த பொருள்கள் ஆகும்.

கேள்வி 4.
படக்கதையிலிருந்து நீ அறிந்து கொண்ட கருத்து யாது?
விடை :
துன்பம் வரும் வேளையில் மனம் சோர்வு அடையக் கூடாது. eஒன்று போனால் மற்றொன்று கிடைக்கும் என் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

கேள்வி 1.
ஊர்கூடி என்னை இழுத்தால்தான் நான் அசைந்து வருவேன் – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 5

விடை :
தேர்

கேள்வி 2.
இடி இடிக்கும்; மின்னல் மின்னும்; மழை பெய்யாது – அது என்ன?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 3

விடை :
வாண வேடிக்கை

கேள்வி 3.
நிழல் தருவேன் காய் தருவேன் பழம் தருவேன். நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 4

விடை :
மரம்

கேள்வி 4.
‘கலை’ என்ற சொல்லில் முதல் எழுத்து ‘படம்’ என்ற சொல்லில் இடை எழுத்து மடல்’ என்ற சொல்லில் இறுதி எழுத்து – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 2

விடை :
கடல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும்

சொல் விளையாட்டு :

ஒரு சொல்லில் உள்ள ஏதாவது ஓர் எழுத்தைக்கொண்டு, புதிய சொற்களை உருவாக்கி மகிழ்க.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 6

இதே போன்று ஒட்டகம், குருவி, சிங்கம், கவிதை போன்ற சொற்களைத் தொடக்கமாக வைத்துச் சொற்களை உருவாக்குக.
விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 7

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 8

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 9

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 5 வாலு போயி கத்தி வந்தது! டும் ... டும் ... டும் ... டும் 10

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

பக்கம் 23:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஞாலம் – இச்சொல்லுடன் பொருந்தாத சொல் –
(அ) உலகம்
(ஆ) வையகம்
(இ) புவி
(ஈ) மலை
விடை :
(ஈ) மலை

கேள்வி 2.
கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது
(அ) அறம்
(ஆ) தீமை
(இ) கொடை
(ஈ) ஈகை
விடை :
(ஆ) தீமை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

கேள்வி 3.
‘என்பு’ இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்
(அ) முகம்
(ஆ) எலும்பு
(இ) கை
(ஈ) கால்
விடை :
(ஆ) எலும்பு

கேள்வி 4.
‘நல்ல + செயல்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) நல்லசெயல்
(ஆ) நல்செயல்
(இ) நற்செயல்
(ஈ) நல்லச்செயல்
விடை :
(அ) நல்லசெயல்

கேள்வி 5.
‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) இனிமை + சொல்
(ஆ) இன் + சொல்
(இ) இன்மை + சொல்
(ஈ) இனிமை + செல்
விடை :
(அ) இனிமை + சொல்

குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
ஞாலம் / காலம்
என்பிலதனை / அன்பிலதனை
கேடில் / மாடல்ல
பணிவுடையன் / அணியல்ல

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 4 திருக்குறள் கதைகள்

முறைமாறி உள்ள சீர்களை வரிசைப்படுத்தி எழுதுக.

கேள்வி 1.
இன்சொலன் பணிவுடையன் ஒருவற்கு
ஆதல் பிற மற்றுப் அணியல்ல.
விடை :
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
கொமதபாலாபாகவத்பாக பனங்காக்க

கேள்வி 2.
தகவிலர் தக்கார் அவரவர் என்பது
படும் எச்சத்தாற் காணப்
விடை :
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
அச்சத்தாற் காணப் படும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

பக்கம் 14:

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘துன்பம்’ இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________
(அ) இன்பம்
(ஆ) துயரம்
(இ) வருத்தம்
(ஈ) கவலை
விடை:
(அ) இன்பம்

கேள்வி 2.
‘உதவித் தொகை’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
(அ) உதவ + தொகை
(ஆ) உதவிய + தொகை
(இ) உதவு + தொகை
(ஈ) உதவி + தொகை
விடை :
(ஈ) உதவி + தொகை

கேள்வி 3.
‘யாருக்கு + எல்லாம்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக்
கிடைப்பது –
(அ) யாருக்கு எலாம்
(ஆ) யாருக்குல்லாம்
(இ) யாருக்கல்லாம்
(ஈ) யாருக்கெல்லாம்
விடை :
(ஈ) யாருக்கெல்லாம்

கேள்வி 4.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
(அ) பணம்
(ஆ) பொய்
(இ) தீமை
(ஈ) கல்வி
விடை :
(ஈ) கல்வி

கேள்வி 5.
‘தண்டோரா’ என்பதன் பொருள் தராத சொல்
(அ) முரசு அறிவித்தல்
(ஆ) தெரிவித்தல்
(இ) கூறுதல்
(ஈ) எழுதுதல்
விடை :
(ஈ) எழுதுதல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

வினாக்களுக்கு விடையளி:

கேள்வி 1.
‘தண்டோரா’ மூலம் என்ன செய்தி அறிவிக்கப்பட்டது?
விடை :
இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ‘தண்டோரா’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது.

கேள்வி 2.
பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் எதனைக் குறித்துப் பேசினார்?
விடை :
அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்து பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் பேசினார்.

கேள்வி 3.
பொன் வண்ணனுக்கு உதவித் தொகை ஏன் கிடைக்கவில்லை?
விடை :
பண உதவி தேவைப்படுவோருக்கான கூட்டத்தில் பொன்வண்ணன் கலந்து கொள்ள வில்லை. எனவே அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.

கேள்வி 1.
ஆவல் – ____________
விடை :
ஆசை

கேள்வி 2.
தபால் – ____________
விடை :
அஞ்சல்

கேள்வி 3.
தண்டோரா – ____________
விடை :
முரசறைந்து செய்தி தெரிவித்தல்

கேள்வி 4.
நெறிப்படுத்துதல் – ____________
விடை :
வழிகாட்டுதல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

பக்கம் 15 :

சரியான சொல்லால் நிரப்புக.

கேள்வி 1.
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் _____________ (களந்து / கலந்து) கொள்ள வேண்டும்.
விடை :
கலந்து

கேள்வி 2.
கல்வி ______________ (கன் / கண்) போன்றது.
விடை :
கண்

கேள்வி 3.
நான் மிதிவண்டி _____________ (பளுதுபார்க்கும் / பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.
விடை :
பழுதுபார்க்கும்

கேள்வி 4.
ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ____________ (அரிவுரை / அறிவுரை) கூறினார்.
விடை :
அறிவுரை

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

எதனை, எங்கே செய்வோம்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 2

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

சொல் விளையாட்டு:

மயில் தோகையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 3

விடை :

1. சுற்றம்
2. மாற்றம்
3. ஏற்றம்
4. முற்றம்
5. தோல்வி
6. ஆற்றல்

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 4

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது 5

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
வளர்மதியும், பொன்மணியும் நல்ல தோழிகள். பொன்மணி சொற்களைத் தெளிவாகவும், அழகாகவும் எழுதுவாள். வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவாள். இதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
விடை :
சொற்களைத் தெளிவாக எழுதினால் அதை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும். இதனால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே பொன்மணி எழுதுவது போல் சொற்களை அழகாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும். வளர்மதி போல் தெளிவின்றி எழுதினால் அதைப் பிறர் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது.

தேர்வில் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். எனவே வளர்மதியும் பொன்மணி போல் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாங்க பேசலாம்:

கேள்வி 1.
மரங்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பயன் தருகின்றன. எப்படி? உம் கருத்தை வெளிப்படுத்துக.
விடை :

  1. மரங்கள் நமக்கு காய், கனிகளைத் தருகின்றன.
  2. மரங்கள் நமக்கு நிழல் கொடுக்கின்றன.
  3. காய்ந்த மரக்கிளைகள் விறகாகப் பயன்படுகின்றன.
  4. பற்பல மரங்களின் இலைகள், வேர்கள், விதைகள், பட்டைகள் நமக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
  5. மரங்களின் வேர்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன.

(படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!)

பக்கம் 7:

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஒத்துக்கொள்கிறோம் – இச்சொல்லின் பொருள் ____________
அ) விலகிக் கொள்கிறோம்
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
இ) காத்துக் கொள்கிறோம்
ஈ) நடந்து கொள்கிறோம்,
விடை:
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்

கேள்வி 2.
வேட்டை + – ஆட – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) வேட்டையட
ஆ) வேட்டையாட
இ) வேட்டை ஆடு
ஈ) வெட்டையாட
விடை:
ஆ) வேட்டையாட

கேள்வி 3.
மரங்களிடையே – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + இடையே
ஆ) மரங்கள் + இடையே
இ) மரங்கள் + கிடையே
ஈ) மரங்கல் + இடையே
விடை:
ஆ) மரங்கள் + இடையே

கேள்வி 4.
அங்குமிங்கும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அங்கு + மிங்கும்
ஆ) அங்கும் + இங்கும்
இ) அங்கு + இங்கும்
ஈ) அங்கும் + இங்கு
விடை:
ஆ) அங்கும் + இங்கும்

கேள்வி 5.
‘மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்’ என்று கூறியது
அ) சிங்கம்
ஆ) புலி
இ) முயல்
ஈ) மான்
விடை:
(ஈ) மான்

வினாக்களுக்கு விடையளி :

கேள்வி 1.
மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
விடை:
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன.

கேள்வி 2.
காட்டைவிட்டு எவை வெளியேறின?
விடை:
காட்டைவிட்டு விலங்குகள் வெளியேறின.

கேள்வி 3.
விலங்குகளுக்கும், மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?
விடை:
தங்களில் உயர்ந்தவர் யார் என்பதே போட்டி வரக் காரணம் ஆகும்.

கேள்வி 4.
கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.
விடை:
உலகில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் நமக்கு வலிமை கிடைக்கும்.

புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.

கேள்வி 1.
காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான் – அவன் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1

விடை:
சிங்கம்

கேள்வி 2.
என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித் துள்ளி ஓடுவேன் – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 2

விடை:
மான்

கேள்வி 3.
வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 3

விடை:
மரம்

பக்கம் 9:

எந்த மரத்திலி ருந்து என்ன பொருள்? – பொருத்துவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 4

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 5

குழுவில் சேராததை வட்டமிடுக.

கேள்வி 1.
மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை:
புலி

கேள்வி 2.
ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை:
மலை

கேள்வி 3.
தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து
விடை:
மட்டைப்பந்து

கேள்வி 4.
வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை:
மென்மை

கேள்வி 5.
கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை:
பாசம்

சொல் விளையாட்டு:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 6

விடை:

  1. பாலம்
  2. பாரம்
  3. பாடம்
  4. பாதம்
  5. பாசம்

பக்கம் 10:

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
விலங்குகளின் இருப்பிடம் காடுகள். காடுகளை அழித்து, அடுக்குமாடிகளும், தொழிற்சாலைகளும் கட்டினால், விலங்குகள் எங்குச் செல்லும்? உணவுக்கு என்ன செய்யும்? இதற்கென்ன தீர்வு?
விடை:
காடுகளை அழித்தால் பற்பல உயிரினங்கள் அழிந்துவிடும். காட்டு விலங்குகள் நீரையும், உணவையும் தேடி ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும். இதனைத் தடுக்க மரக் கன்றுகளை ஊன்றிப் பாதுகாக்க வேண்டும். பூமியைப் பசுமை நிறைந்ததாக மாற்ற வேண்டும்.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 1 உண்மையே உயர்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

பக்கம் 2:

வாங்க பேசலாம் :

கதைப்பாடலில் உள்ள கருத்துகளை உம் சொந்த நடையில் கூறுக.

பாடல் விளக்கம் :

1. ஒரு ஊரில் கழுதை ஒன்று இருந்தது. அது தன் முதுகில் உப்பு மூட்டை சுமப்பது வழக்கம். ஒரு நாள் அது உப்பு மூட்டையுடன் ஓடை ஒன்றைக் கடந்தது. அப்போது உப்பு மூட்டை முதுகிலிருந்து தவறி ஓடையில் விழுந்துவிட்டது.

2. உப்பு நீரில் கரைந்தது. இதனால் உப்பு மூட்டையின் எடை குறைந்தது. அந்த மூட்டையை, உரிமையாளர் கழுதையின் முதுகில் ஏற்றினார்.

3. உப்பின் எடை குறைந்ததால் கழுதை மகிழ்ச்சி அடைந்தது. அது வேகமாகச் சென்றது.

4. ஒவ்வொரு நாளும் இவ்வாறு கழுதையின் முதுகில் உப்பு மூட்டை ஏற்றப்படும். ஓடைக்குள் வந்ததும் கழுதை உப்பு மூட்டையை நீருக்குள் தள்ளிவிடும்.

5. எடை குறைந்து போனதால் கழுதை உற்சாகமாக ஓடும். கழுதையின் சூழ்ச்சியை அதன் உரிமையாளர் புரிந்து கொண்டார். அதற்கு ஒரு பாடம் புகட்ட எண்ணினார்.

6. அடுத்த நாள் உப்பு மூட்டைக்குப் பதில் பஞ்சு மூட்டையைக் கழுதையின் முதுகில் ஏற்றினார். கழுதை ஓடையை அடைந்தது.

7. கழுதை பஞ்சு மூட்டையை அசைத்து ஓடை நீருக்குள் தள்ளியது. உப்பு மூட்டை போல் இதுவும் இலேசாகிவிடும் என அது நினைத்தது.

8. ஆனால் பஞ்சு மூட்டை நீரை உறிஞ்சி கனத்துப் போய்விட்டது. உரிமையாளர் அதைக் கழுதையின் முதுகில் ஏற்றினார்.

9. கழுதை அந்தக் கனத்த மூட்டையை அதிக சிரமத்துடன் சுமந்து சென்றது. உண்மையான உழைப்பு நமக்கு எப்போதும் வெற்றியைத் தரும். பிறரை ஏய்த்துப் பிழைக்க விரும்பினால் நமக்குத் தோல்வியும், துன்பமுமே கிடைக்கும்.

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
‘சுமந்து’ இச்சொல்லின் பொருள்
(அ) தாங்கி
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) விரைந்து
விடை :
(அ) தாங்கி

கேள்வி 2.
‘வேண்டுமென்று’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) வேண்டு + மென்று
(ஆ) வேண்டும் + என்று
(இ) வேண் + டுமென்று
(ஈ) வேண்டி + என்று
விடை :
(ஆ) வேண்டும் + என்று

கேள்வி 3.
‘நினைத்தது’ – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
(அ) மறந்தது
(ஆ) பேசியது
(இ) எண்ணியது
(ஈ) வளர்ந்த து
விடை :
(அ) மறந்தது

Samacheer Guru 3rd Tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு

பக்கம் 3:
கேள்வி 1.
இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 1

விடை :

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 2

கேள்வி 2.
சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 3

விடை :

  1. கடை
  2. குடை
  3. தடை
  4. உடை
  5. ஓடை
  6. எடை

கேள்வி 3.
படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 1 உண்மையே உயர்வு 4

விடை :

  1. புன்னகை
  2. அழுகை
  3. சிந்தனை
  4. சினம்
  5. கவலை
  6. பயம்