Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ……
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோ அடிகள்
ஈ) முடத்திருமாறன்
விடை:
ஆ) சேரன் செங்குட்டுவன்

Question 2.
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
விடை:
இ) பல்லவர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 3.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ……. ஆவர்.
அ) சாத வாகனர்கள்
ஆ) சோழர்கள்
இ) களப்பிரர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை:
இ) களப்பிரர்கள்

Question 4.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ………
அ) மண்ட லம்
ஆ) நாடு
இ) ஊர்
ஈ) பட்டினம்
விடை:
இ) வர்

Question 5.
குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ) கொள்ளையடித்தல்
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ) வேளாண்மை
விடை:
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
விடை:
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மட்டும்
விடை:
ஆ. 1 மற்றும் 3 மட்டும்

Question 3.
பண்டைக்காலத்தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.
அ. ஊர்<நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை:
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 80
விடை:
அ) 3, 2, 1

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வெண்ணி போரில் வெற்றி பெற்றது …………
விடை:
கரிகால் வளவன்

Question 2.
சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ……….
விடை:
தொல் காப்பியம்

Question 3.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ……… கட்டினார்
விடை:
கரிகாலன்

Question 4.
படைத்தலைவர் ………… என அழைக்கப்பட்டார்
விடை: தானைத்தலைவன் Question 5. நில வரி ……. என அழைக்கப்பட்டது விடை:
இறை

IV. சரியா /தவறா

Question 1.
சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர் விடை:
தவறு

Question 2.
சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
விடை:
தவறு

Question 3.
கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை:
சரி

Question 4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 90
விடை:
அ. பாண்டியர்
ஆ. சேரர்
இ. சோழர்
ஈ) வேளிர்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறு கட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கிய சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தொல்காப்பியம்
  • எட்டுத் தொகை
  • பத்துப்பாட்டு

Question 2.
நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
விடை:
பண்டைத் தமிழகத்தில் போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்ற நடப்பட்டவை நடுகற்கள் (வீரக்கற்கள்)

Question 3.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • குறிஞ்சி – முல்லை மருதம்
  • நெய்தல் – பாலை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அரிக்கமேடு
  • ஆதிச்ச நல்லூர்

Question 5.
கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பாரி
  • காரி
  • ஓரி
  • பேகன்
  • ஆய்
  • அதியமான்
  • நள்ளி

Question 6.
களப்பிரர் காலத்தைச் சேர்ந்த ஏதேனும் மூன்று தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை
  • யாப்பெருங்கலம்
  • பெரியபுராணம்

VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
விடை:

  • சங்ககாலப் பெண்கள் கற்றறிந்தவர்கள், அறிவுக் கூர்மையுடையவர்கள்
  • அரிய நூல்களைக் கொடுத்துச் சென்றுள்ள நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்தனர்.
  • சொந்த விருப்பத்தைச் சார்ந்து திருமணம் அமைந்தது. கற்பு மிகச் சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது.
  • பெற்றோரின் சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு உண்டு.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்படுகிறான். நிறுவுக.
விடை:

  • கரிகாலன் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படைகளை வெண்ணி போரில் தோற்கடித்தார். காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
  • வேளாண்மை மேம்பாட்டிற்காக காவிரியில் கல்லணை கட்டினார்.
  • புகார் துறைமுகம் மூலம் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பட்டினப்பாலை நூல் மூலம் தெரிகிறது. எனவே கரிகாலன் சோழர்களின் மிகச்சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்.

Question 2.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரிய புராணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கியச் சான்றுகள் களப்பிரர்கள் ஆட்சி குறித்தவை.
  • சீவகசிந்தாமணி, குண்டலகேசி, இரண்டும் களப்பிரர்கள் காலத்தவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன. .
  • இக்காலத்தில்தான் சமணமும், பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து முறை உருவானது.
  • வணிகமும் வர்த்தகமும் செழித்தோங்கின. எனவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல.

X. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. பல்வகை நிலப்பரப்புக் காட்சிப் படங்களைச் சேகரித்து, ஒட்டி, அவை எந்தத் திணைப் பகுதியைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்கவும். அங்கு விளையும் முக்கியப் பயிர்கள், வாழும் மக்களின் தொழில் ஆகியவை பற்றி எழுதவும்.

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 91
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 92

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூற்றுப்படி தமிழ்மொழி …….. மொழியின் அளவிற்குப் பழமையானது
அ) சீன
ஆ) கிரேக்க
இ) இலத்தீன்
ஈ) ஆங்கிலம்
விடை:
இ) இலத்தீன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 2.
சிலப்பதிகார காவியப் பாத்திரம்
அ) கண்ண கி
ஆ) மணிமேகலை
இ) சீதை
ஈ) பாஞ்சாலி
விடை:
அ) கண்ண கி

Question 3.
பாண்டியர் துறைமுகம்
அ) புகார்
ஆ) கொற்கை
இ) முசிறி
ஈ) தொண்டி
விடை:
ஆ) கொற்கை

Question 4.
இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிடப்படுவது
அ) முசிறி
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) புகார்
விடை:
அ) முசிறி

II. கூற்றை வாசிக்கவும். சரியான விடையை (✓) செய்யவும்

கூற்று : களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல.
காரணம் : இலக்கியச் சான்றுகள், புதிய எழுத்துமுறை, வணிகம் வர்த்தகம் செழிப்பு பற்றி தெரிகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?

1. பாண்டியர் அத்திப்பூ மாலை சூடினர்
2. குறிஞ்சி மக்களின் வழிபடு தெய்வம் இந்திரன்
3. இயற்கை வரலாறு நூலின் ஆசிரியர் இளைய பிளினி
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 3
விடை:
அ) 1, 2 மற்றும் 3

III. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
‘மென்புலம்’ – ‘வன்புலம்’ குறிப்பு தருக.
விடை:
மென்புலம் :

  • மருத நிலம் ‘மென்புலம்’ (நன்செய்) என அழைக்கப்பட்டது. நெல்லும் கரும்பும் விளைந்தன.
    வன்புலம் :
  • நெய்தல் தவிர மற்றவை ‘வன்புலம் ‘ (புன்செய்) என அழைக்கப்பட்டன. தானியங்களும் பருப்புவடை ககளும் விளைந்தன.

Question 2.
அணிகலன்கள் செய்யப் பயன்பட்டவை யாவை?
விடை:

  • தங்கம்
  • வெள்ளி
  • முத்துக்கள்
  • நவரத்தினக் கற்கள்
  • சங்கு
  • பாசிமணிகள்

Question 3.
முக்கிய இறக்குமதிப் பொருட்கள் யாவை?
விடை:

  • புஷ்பராகம்
  • ஈயம்
  • திராட்சை மது
  • கண்ணாடி
  • குதிரைகள்

Question 4.
இந்தியப் பட்டு குறித்து நீ அறிவன யாவை?
விடை:

  • இந்திய வணிகர்கள் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்த பட்டு மிக முக்கியமானது.
  • ரோமப் பேரரசர் ஆரிலியன் இந்தப் பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என்றார்.

Question 5.
அரசுரிமைச் சின்னங்கள் யாவை?
விடை:

  • செங்கோல்
  • முரசு
  • வெண்கொற்றக் குடை

IV. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்ககால மத நம்பிக்கைகள், சமூக பிரிவுகள் பற்றி விவரி.
விடை:

  • மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன்.
  • வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன் (விஷ்ணு, இந்திரன். வருணன், கொற்றவை ஆ கியோராவர்.
  • நடுகல் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது.
  • பௌத்தமும் சமணமும் கூட உடனிருந்தன.
  • வடக்கே வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை.
  • ஒப்பீட்டளவில் வர்ணாசிரம முறை திராவிடத் தென்னாட்டில் பின்னர் வந்ததே.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 2.
இந்தியாவின் தேசிய கீதம். ……….
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த
விடை:
அ) ஜன கண மன

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 4.
…………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
அ) மகாத்மா காந்தி

Question 5.
நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
விடை:
ஆ) கருநீலம்

Question 6.
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை கோட்டை

Question 7.
தேசிய கீதத்தை இயற்றியவர் …………..
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
விடை:
இ) ரவீந்திரநாத் தாகூர்

Question 8.
தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
விடை:
இ) 52 வினாடிகள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 9.
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
விடை:
ஆ) ரவீந்திரநாத் தாணர்

Question 10.
விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
விடை:
அ) பிரதம அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
சாரநாத்

Question 2.
இந்தியாவின் தேசியக் கனி …………….
விடை:
மாம்பழம்

Question 3.
இந்தியாவின் தேசியப் பறவை …………
விடை:
மயில்

Question 4.
இந்தியாவில் தேசிய மரம் ………..
விடை:
ஆலமரம்

Question 5.
1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
குடியாத்தம்

Question 6.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………
விடை:
பிங்காலி வெங்கையா

Question 7.
சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..
விடை:
கனிஷ்கர்

Question 8.
இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..
விடை:
கங்கை

Question 9.
இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………
விடை:
டி. உதயகுமார்

Question 10.
தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.
விடை:
24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
விடை:
சாரநாத்

Question 2.
தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)
விடை:
1950

Question 3.
……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
விடை:
லாக்டோபேசில்லஸ்

IV. நிரப்புக.

Question 1.
காவி – தைரியம்; வெள்ளை – ……………
விடை:
நேர்மை

Question 2.
குதிரை – ஆற்றல்; காளை – ……………….
விடை:
கடின உழைப்பு

Question 3.
1947 – விடுதலை நாள்; 1950 – ……….
விடை:
குடியரசு நாள்

V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 60
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 61
விடை:
ஈ  அ ஆ  இ

VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 62
விடை:
1 – இ,
2 – ஈ,
3 – அ,
4 – ஆ

VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை:
1 – இ

Question 2.
அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
2 – ஆ

VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விடை:
1

IX. விடையளிக்கவும்.

Question 1.
தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
விடை:

  • காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
  • பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
  • வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
  • கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

Question 2.
தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
விடை:

  • மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
விடை:

  • ஜன கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
  • ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

Question 4.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
விடை:

  • இந்திய ரூபாய்க் குறியீடு என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணக்குறியீடு ஆகும். (வடிவமைத்தவர் டி. உதயகுமார்)
  • இந்த வடிவமைப்பு இந்திய அரசால் 15 ஜூலை 2010-ல் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
    Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 90

Question 5.
தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Question 6.
தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?
விடை:
தேசிய உறுதி மொழியை எழுதியவர் பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.

Question 7.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
விடை:
யானை, குதிரை, காளை மற்றும் சிங்கம்

Question 8.
இயற்கை தேசிய சின்னங்கள் எவை?
விடை:

  • ஆலமரம் – மயில்
  • கங்கை ஆறு
  • ஆற்று ஓங்கில்
  • ராஜநாகம்
  • தாமரை
  • புலி
  • யானை
  • லாக்டோபேசில்லஸ்
  • மாம்பழம்

Question 9.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விடை:
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இயற்கை தேசியச் சின்னங்களைக் காட்சிப்படமாக வரைக / கதை உருவாக்குக.
2. உன் வகுப்பு / பள்ளிக்கான அடையாளக் குறியீட்டை (Logo) உருவாக்குக.

Question 3.
அறுகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் கலந்துரையாடுக.
விடை:

  • உயிரினங்களின் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது தலையாய பணியாகும்.
  • உயிரினங்கள் பாதுகாப்பில் எந்த மையங்கள் செயல்படுகிறது என்பதை தெரிந்து வைத்து கொண்டிருக்க வேண்டும்.
  • அம்மையங்களுக்கு உறுதுணையாக இருந்து நம்மால் இயன்ற சேவையை செய்ய வேண்டும்.

Question 4.
பள்ளியில் நடைபெற்ற தேசிய விழா / நிகழ்வு குறித்து உள்ளூர் செய்தித்தாளுக்கு செய்தி அறிக்கை தயாரிக்கவும்.
விடை:
கண்களுக்கு விருந்து!

  • ஏஞ்சல் பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பு, உடற்பயிற்சி மற்றும் கலைநிகழ்ச்சி, சுதந்திரதின விழாவின் முக்கியமான நிகழ்வுகள்.
  • வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டியங்கள் அமைக்கப்பட்ருந்தன.

XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
குறிப்பிட்ட சில உயிரினங்களை மட்டும் தேசியச் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணங்களை ஆய்க.
விடை:

  • இந்திய குடிமகனின் ஆழ் மனதில் நாட்டின் பெருமைகளை விதைப்பதற்கும்.
  • இந்தியா மற்றும் இந்தியர்களின் தனி தன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கும்.

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
திருப்பூர் குமரனின் …… மற்றும் ………. நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது
விடை:
அர்ப்பணிப்பு, தியாகத்தை

Question 2.
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடியை ………….. 15.08.1947ல் செங்கோட்டையில் முல்லி) ஏற்றினர்.
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 3.
16ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரியால் வெளியிடப்பட்ட நாணயம் ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ரூபாய்

Question 4.
…………… செரிமானத்துக்கும், குளிர்ச்சி தருவதற்கும் உகந்தது.
விடை:
தயிர்

Question 5.
1947-ல் இருந்து 26 ஜனவரி 1950 வரை ……….. இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.
விடை:
பிரிட்டனின் அரசி

Question 6.
முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் ………. என அழைக்கப்பட்டது.
விடை:
இமாம்பசந்த்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
தேசியக் கீதத்தை பாடும் போது பின்பற்ற வேண்டியன யாவை?
விடை:

  • பாடும் போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
  • பொருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்.

Question 2.
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள் பட்டியலிடுக.
விடை:
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில மலர் – செங்காந்தள் மலர்
மாநில மலர் – பனைமரம்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

6th Social Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

அ) பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 20
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 21

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது.
விடை:
சர்க்கரை

Question 2.
வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
விடை:
கவனமாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது.
விடை:
உள்ளூர் வளங்கள்

Question 4.
தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கண்டறியப்பட்ட வளங்கள்

Question 5.
………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
விடை:
பணமதிப்புள்ள

Question 6.
இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
விடை:
முதல்நிலைச் செயல்பாடு

இ) சிறு குறிப்பு வரைக.

Question 1.
புதுபிக்கக் கூடிய வளங்கள்.
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி

Question 2.
மனித வளம்.
விடை:

  • இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Question 3.
தனிநபர் வளம்.
விடை:

  • தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  • எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள்.

Question 4.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
விடை:
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

ஈ) மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
வளங்கள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
  • எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு.
  • எ.கா. : பெட்ரோலியம், காற்று

Question 2.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
விடை:
தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படும். எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.

Question 3.
உயிரற்ற வளங்களை வரையறு.
விடை:

  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
  • எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

Question 4.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
விடை:

  • நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • வருங்கால தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைக்க வேண்டும்.
    இவ்வாறு சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

உ) சுருக்கமான விடையளி.

Question 1.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக. உள்ளூர் வளங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 60

Question 2.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
விடை:
கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறன் ஆகியவை மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக உருவாக்குகிறது. எனவே மனிதனை நாம் தனி ஒரு வளமாக கருதுகின்றோம்.
எ.கா. : மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் ஒப்பிடுக.
விடை:
நாட்டு வளங்கள் :
ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள். எ.கா. : இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

பன்னாட்டு வளங்கள் :
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : திமிங்கலப் புனுகு

Question 4.
மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 61

Question 5.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
விடை:

  • வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
  • உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனக் குற்றம் சாட்டும் மகாத்மா காந்தி வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுவதும், மனித தேவைகள் எல்லையை மீறுவதும் காரணங்களாக அமைகின்றன என்கிறார்.

ஊ) விரிவான விடையளி. (100 – 120 வார்த்தைகள் வரை)

Question 1.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
விடை:
இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

I. தோற்றத்தின் அடிப்படையில்
– உயிரியல் வளங்கள்
– உயிரற்ற வளங்கள்

  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். எ.கா. : தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

II. வளர்ச்சி நிலை அடிப்படையில்
– கண்டறியப்பட்ட வளங்கள்.
– மறைந்திருக்கும் வளங்கள்

  • கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
    எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
  • தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் உள்ளதுமான வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
    எ.கா. : வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் காடிச்சத்து.

III. புதுப்பித்தலின் அடிப்படையில்
– புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
– புதுப்பிக்க இயலா வளங்கள்

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படும்.எ.கா. : காற்று, நீர், சூரிய ஒளி
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்

Question 2.
வளங்களை பாதுகாப்பது எப்படி?
விடை:
வளங்களைப் பாதுகாத்தல் :

  • வளத்தினை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.
  • மக்கள் தொகையின் திடீர் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. வளங்கள் குறைந்து வரும் வேகமும் அதிகரிக்கிறது.
  • இதைத் தவிர்த்திட நிலையான வளர்ச்சி அவசியம்.

நிலையான வளர்ச்சி நடைபெற:

  • வீணாக்குதலையும் அதிகப்படியான பயன்பாட்டினையும் தவிர்க்க வேண்டும்.
  • மறுபயன்பாடுள்ள வளங்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
  • மாசைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வளங்களைப் பாதுகாக்க (3Rs) பின்பற்ற வேண்டும். அவைகள் குறைத்தல் (Reduce) மறுபயன்பாடு (Reuse) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 70 (Recycle)

Question 3.
வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
விடை:

  • வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகும்.
  • வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
  • வளங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமல்ல. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகிறது.
  • வளங்களை அதிக சுரண்டலில் இருந்து தடுத்து பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியம்.

Question 4.
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
விடை:
முதல்நிலை செயல்பாடுகள் :

  • பழங்கால மனிதர்கள் தங்களின் தேவைக்கேற்ப பொருட்களை சேகரித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாத்தனர்.
  • மனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
  • இவ்வாறான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற அவனது செயல்பாடுகள் முதல் நிலை செயல்பாடுகளாக அமைந்தன.
  • பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர் செய்து விவசாயத்தின் மூலம் தேவையை நிறைவு செய்தான்.
  • சுரங்கத்தொழில் இன்றைய நிலையிலும் முன்னிலை வகிக்கும் செயல்பாடாக உள்ளது.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகள்: இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருளாகக்
    கிடைக்கிறது. எ.கா. : கரும்பு → சர்க்கரை
  • மூலப்பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு ” இரண்டாம் நிலை செயல்பாடுகள்” எனப்படும்.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகளுக்கு மனிதத்திறனும் சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.

மூன்றாம் நிலை செயல்பாடுகள் :

  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருட்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பாகும்.
    எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்பு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

எ) வாக்கியமும் புரிதலும்

Question 1.
வாக்கியம் : வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்துக் கொண்டே வருகிறது.
புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது. சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
வாக்கியம் : வளங்களை பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களை பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2 : வளங்களை பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் 2 மட்டும் சரி

Question 3.
வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் மட்டும் சரி

ஏ. வளங்களை பாதுகாக்க மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற சொற்களை சரியான இடத்தில் எழுதுக.

Question 1.
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தல் ………….
விடை:
மறுபயன்பாடு

Question 2.
கழிப்பறையில் குறைவான நீரை பயன்படுத்துதல் …………..
விடை:
குறைத்தல்

Question 3.
பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கி சாலை அமைத்தல் ………….
விடை:
மறுசுழற்சி

ஐ. குறுக்கெழுத்துப் புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 75

இடமிருந்து வலம்:

Question 1.
எங்கும் காணப்படும் வளங்கள்
விடை:
உலகளாவிய வளம்

Question 2.
காலத்தை சமநிலையில் வைக்கும் வளர்ச்சி
விடை:
நிலையான வளர்ச்சி

Question 3.
சூரியனிடமிருந்து பெறப்படும் ஆற்றல்
விடை:
சூரிய ஆற்றல்

Question 4.
இயற்கையினால் அளிக்கப்படும் வளம்
விடை:
இயற்கை வளங்கள்

Question 5.
ஒரு நாட்டிற்கு சொந்தமான வளங்கள்
விடை:
நாட்டு வளங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 6.
குறிப்பிட்ட இடங்களில் காணப்படும் வளம்
விடை:
உள்ளூர் வளம்

மேலிருந்து கீழ் :

Question 1.
வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளில்
விடை:
மறுபயன்பாடு ஒன்று

Question 2.
திமிங்கலப் புனுகு வளம்
விடை:
இது ஒரு பன்னாட்டு

ஓ. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரச் செயல்பாடுகள் தொடர்பான படங்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91.1

ஒள) ஆசிரியர் செயல்பாடுகள்

1. பள்ளி அல்லது வகுப்பளவில் மாதத்திற்கு நெருநாள் “மின்சாரம் சேமித்தல் நாள்” கொண்டாடுதல்.
2. பயன்பாடற்ற பொருள்களைக் கொண்டு பள்ளியின் நடைக்கூடச் சுவர்ப் பகுதியை அலங்கரிக்கவும்.
3. பள்ளியின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு தொழிற்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவும்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் தொடர்பான படங்கள் சேகரிக்கச் செய்தல்.
1. மீன் பிடித்தல்
2. வேட்டையாடுதல்
3. உணவு சேகரித்தல்
4. காட்டு வளங்களைச் சேகரித்தல்
5. சுரங்கத் தொழில்
6. விவசாயம்
7. கால்நடை வளர்த்தல்
8. மரங்களை வெட்டுதல்

6th Social Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரு முக்கிய காரணிகள் …………
விடை:
காலமும் தொழில்நுட்பமும்

Question 2.
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் …………. எனப்படும்.
விடை:
இயற்கை வளங்கள்

Question 3.
புவியைத் தோண்டும் முயற்சியின் போதுதான் மனிதன் வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் …………… செய்தான்.
விடை:
அணிகலன்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 4.
புதுப்பிக்க இயலாத வளங்கள் அனைத்தும் ஒருநாள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ………….. போய்விடும்.
விடை:
இல்லாமல்

Question 5.
திமிங்கலப் புனுகு …………… தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
வாசனை திரவியங்கள்

Question 6.
கடல் காடிச்சத்தானது நிலக்காடிச் சத்தை விட மிகுந்த …………..
விடை:
வீரியத் தன்மையுடையது

ஆ) சிறுகுறிப்பு வரைக

Question 1.
புதுப்பிக்க இயலா வளங்கள் :
விடை:
குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். எ.கா. நிலக்கரி, பெட்ரோலியம்

Question 2.
சமூக வளங்கள் :
விடை:
ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் வளத்தினை பயன்படுத்திக் கொள்வர். இது சமூகவளம் எனப்படும். எ.கா. பூங்கா

Question 3.
உலகின் பெரும் மருந்தகம் :
விடை:

  • வெப்ப மண்டல மழைக்காடுகள் உலகின் பெரும் மருந்தகம்’ எனப்படுகிறது.
  • இங்கு காணப்படும் தாவரங்களில் 25ரூ மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். எ.கா. சின்கோனா.

இ) மிகச் சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்கள் எதனடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:

  • தோற்றம்
  • வளர்ச்சி நிலை
  • புதுப்பித்தல்
  • பரவல்
  • உரிமை

Question 2.
ஆரம்ப நிலையில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் யாவை?
விடை:

  • உணவு
  • உடை
  • இருப்பிடம்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்கள் சிலவற்றைக் குறிப்பிடு.
விடை:

  • நிலக்கரி
  • பெட்ரோலியம்
  • இயற்கை வாயு
  • கனிமங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அ) அங்கம்
ஆ) மகதம்
இ) கோசலம்
ஈ) வஜ்ஜி
விடை:
ஆ) மகதம்

Question 2.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அ) அஜாதசத்ரு
ஆ) பிந்துசாரா
இ) பத்மநாப நந்தா
ஈ) பிரிகத்ரதா
விடை:
அ) அஜாதசத்ரு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 3.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அ) அர்த்த சாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்ஷம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனத்தும்

Question 4.
சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து ……………. என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
அ) பத்ரபாகு
ஆ) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 60
இ) பார்ஸ்வ நாதா
ஈ) ரிஷபநாதா
விடை:
அ) பத்ரபாகு

Question 5.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ………….
அ) டாலமி
ஆ) கொளடில்யர்
இ) ஜெர்சக்ஸ்
ஈ) மெகஸ்தனிஸ்
விடை:
ஈ) மெகஸ்தனிஸ்.

Question 6.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிரிகத்ரதா
ஈ) பிந்துசாரர்
விடை:
இ) பிரிகத்ரதா

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக . சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் : தர்மத்தின் கொள்கையின் படி அவர் ஆட்சி புரிந்தார்.
அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்றும் காரணமும் உண்மையான, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
விடை:
கூற்று 1 : ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று 2 : மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, 2 ஆகிய இரண்டும்
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

Question 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
விடை:
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2

Question 4.
கீழ்க்காண்பனவற்றை காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 65
விடை:
இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மெளரியா

Question 5.
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
அ) 1, 2 மற்றும் 3 மட்டும்
ஆ) 3 மற்றும் 4 மட்டும்
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
விடை:
ராஜகிரகம்

Question 2.
முத்ரராட்சசத்தை எழுதியவர் ……………
விடை:
விசாகதத்தர்

Question 3.
…………. பிந்துசாரரின் மகனாவார்.
விடை:
அசோகர்

Question 4.
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ………..
விடை:
சந்திகுப்த மௌரியர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ………….. பணியமர்த்தப்பட்டனர்.
விடை:
தர்ம – மகா மாத்திரர்கள்

IV. சரியா? தவறா?

Question 1.
தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.
விடை:
தவறு

Question 2.
அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.
விடை:
தவறு

Question 3.
அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
விடை:
சரி

Question 4.
நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
விடை:
தவறு

Question 5.
புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

V. பொருத்துக. கணா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 85
விடை:
அ) 3 4 1 2

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.
விடை:

  • அர்த்த சாஸ்திரம்
  • முத்ராராட்க்ஷம்

Question 2.
ஸ்தூபி என்றால் என்ன?
விடை:

  • ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது.
  • புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

Question 3.
மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக நம்சம்
  • நந்த வம்சம்
  • மௌரிய வம்சம்

Question 4.
மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?
விடை:

  • நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  • கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகா வுக்கு உதவியவர் யார்?
விடை:

  • ஸ்தானிகா
  • கோவா

Question 6.
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
விடை:
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மூவேந்தர்கள்

  • பாண்டியர்
  • சோழர்
  • கேரள புத்திரர் மற்றும் சத்திய புத்திரர்

Question 7.
மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக.
விடை:
மாமூலனாரின் அகநானுற்றுப்பாடல்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்? (ஏதேனும் மூன்று)
விடை:

  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்றும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
விடை:

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்தது. வளம் மிகுந்த இப்பகுதி வேளாண் விளைச்சலை அதிகரித்தது, இது அரசுக்கு நிலையான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு மரங்களையும் படைகளுக்கு யானைகளையும் வழங்கியது.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
விடை:

  • கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.
  • 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.
  • அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.
  • தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.
  • அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.
  • இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக.
விடை:

  • அனைவருக்கும் இலவசக் கல்வி
  • இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.
  • அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.
  • வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.
  • அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

IX. படங்களைப் படிப்போம்.

இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்
அ) பேராணைகள் என்றால் என்ன?
ஆ) எவ்வகைகளில் அசோகரது பேராணைகள் பயன்படுகின்றன?
இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?
ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?
உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
விடை:
அ) பேராணைகள் என்பது அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஆகும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 90
ஆ) அசோகர் அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் நலன் மீது கொண்டிருந்த அக்கறையையும் தெரிந்துக் கொள்ள பேராணைகள் பயன்படுகின்றன.
இ) தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் இப்பேராணைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஈ) பிராமி உ) 33 பாறைப் பேராணைகள் உள்ளன.

X. நான் யார்.

Question 1.
நான் ஹரியங்கா அரசவம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன், நான் யார்?
விடை:
பிம்பிசாரர்

Question 2.
சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக் கொழுமுனை – செய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?
விடை:
இரும்பு

Question 3.
நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன் நான் யார்?
விடை:
அசோகர்

Question 4.
நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன், நான் சல்லேகனா நோன்பிருந்தேன் நான் யார்?
விடை:
சந்திரகுப்த மௌரியர்

Question 5.
அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?
விடை:
அசோக சக்கரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XI. அர்த்தப்படுத்தி விடையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 91

Question 1.
மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் ………. (39, 30, 27, 6, 5)
விடை:
ஹரியங்கா

Question 2.
………… பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)
விடை:
மௌரிய

Question 3.
…………… புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார். (2, 13, 27, 38)
விடை:
உதயன்

Question 4.
…………….. ஒரு முக்கியமான ஏற்று மதிப்பொருள். (17, 36, 24, 11, 19, 22, 31, 34)
விடை:
நறுமணப்பொருள்

Question 5.
பண்டைய மகத நாட்டில் இருந்த மடலாயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது. (18, 35, 16, 14)
விடை:
நாளந்தா

Question 6.
நிலவரி …………… (20, 5)
விடை:
பகா

Question 7.
கலிங்கப் போரின் பயங்கரம் …………. பொறிக்கப்பட்டுள்ளது. (21, 37, 3, 4, 32, 33, 9, 10)
விடை:
பாறைக்கல்வெட்டு

Question 8.
கிரேக்கர்கள் பிந்துசாரரை ………. என்று அழைத்தனர். (1, 25, 28, 13, 4, 14)
விடை:
8அமிர்தகதா

Question 9.
சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது ………… (13, 28, 24, 7, 8, 3, 4, 29, 23)
விடை:
தர்மச்சக்கரம்

Question 10.
அமைச்சரவை ………….. என அழைக்கப்பட்டது. (24, 16, 15, 30, 20, 30, 40, 12)
விடை:
மந்திரிபரிஷத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. களப் பயணமாக அருங்காட்சியகம் செல்லுதல்.
2. அசோகர், சந்திர குப்தர் ஆகியவர்களோடு தொடர்புடைய திரைப்படங்களைக் காணுதல்.

XIV. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. அசோகச் சக்கரத்தின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
2. காஞ்சி ஸ்தூபியின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
3. நமது தேசக் கொடியின் படம் வரைந்து வர்ணம் தீட்டவும்.

XV. விடைக்கட்டம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 92
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 93

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் …………. மகாஜனபதங்கள் இருந்தன.
அ) பத்து
ஆ) பதினான்கு
இ) பதினாறு
ஈ) பதினெட்டு
விடை:
இ) பதினாறு

Question 2.
தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு ………. நுழைவு வாயில்கள் இருந்தன.
அ) 24
ஆ) 32
இ) 49
ஈ) 64
விடை:
ஈ) 64

Question 3.
கலிங்கப் போரின் பயங்கரம் ……… வது பாறைக்கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
அ) 10
ஆ) 11
இ) 12
ஈ) 13
விடை:
ஈ) 13

Question 4.
காலசோகா ………. வம்சத்தைச் சேர்ந்தவர்
அ) ஹரியங்கா
ஆ) சிசுநாக
இ) நந்த
ஈ) மௌரிய
விடை:
ஆ) சிசுநாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

II. சாற்றைக் காரணத்துடன் பொருந்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
காரணம் : பிம்பிசாரர் படையெடுப்பு மற்றும் திருமண உறவு ஆகியவற்றின் மூலம் அரசை விரிவுபடுத்தினார்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி,
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி , அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிழ.
1. நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 40 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
2. நகர நிர்வாகம் ‘நகரிகா என்னும் அதிகாரியின் கீழிருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2 இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
விடை:
தனநந்தர்

Question 2.
…………….. ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
விடை:
அஜாத சத்ரு

Question 3.
…………… பொருள் குறித்து அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது.
விடை:
தர்மத்தின்

Question 4.
……………… என்னும் அமைச்சரவை அரசருக்கு உதவியது.
விடை:
மந்திரி பரிஷத்

IV. சரியா? தவறா?

1. சமூக மாற்றத்தில் தங்கம் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகித்தது.
விடை:
தவறு

Question 2.
மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்து இருந்தது.
விடை:
சரி

Question 3.
மகாபத்ம நந்தரும் அவருடைய எட்டு மகன்களும் நவநந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
விடை:
சரி

Question 4.
அசோகர் மூன்றாம் பௌத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 96
விடை:
அ) 4 3 2 1

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் செயல்பட்ட இருவகை அரசுகள் யாவை?
விடை:

  • கண சங்கங்கள் – மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி
  • முடியாட்சி அரசுகள் – மன்னராட்சி முறையில் அமைந்தவை.

Question 2.
பத்ரபாகு யார்?
விடை:

  • பத்ரபாகு ஒரு சமணத்துறவி.
  • இவர் சந்திரகுப்த மௌரியரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார்.

Question 3.
அசோகர் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?
விடை:

  • இரக்க உணர்வு
  • அறக்கொடை
  • தூய்மை புனிதத்தன்மை
  • சுய – கட்டுப்பாடு
  • உண்மையுடைமை
  • மரியாதையும் பணிவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • அசோகருக்குப் பின் வந்து அரசர்கள் வலிமை குன்றியவர்கள்
  • பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள்
  • பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை வலிமை குன்றச் செய்தது.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
  • புஷ்யமித்ரர் சுங்க அரச வம்சத்தை ஏற்படுத்தினார்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ……..
விடை:
விவசாயி

Question 2.
‘தேன் சேகரித்தல்’ என்பது ……………… தொழில்.
விடை:
முதல்நிலைத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மூலப்பொருட்களை பயன்பாட்டு பொருட்களாக மாற்றுவது ……… எனப்படும்.
விடை:
இரண்டாம் நிலை தொழில்கள்

Question 4.
காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ……………
விடை:
முதுகெலும்பு

Question 5.
தமிழ்நாட்டில் …………. சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
விடை:
47

II. பொருத்துக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 1
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 51

III. பொருந்திய பின் பொருந்தாத இணையை கண்டறிக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 52
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 53
பொருந்தாத இணை : சிறிய அளவிலான தொழிற்சாலை – கால்நடை வளர்ப்பு

IV. சரியான விடையைக் கண்டறிக.

Question 1.
வேளாண்மை என்பது முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
முதன்மை

Question 2.
பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பயன்பாடு

Question 3.
சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
இரண்டாம்

Question 4.
வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை / மரச்சாமான்கள்).
விடை:
பருத்தியாலை

Question 5.
பால் பண்ணை ஒரு (பொது நிறுவனம் கூட்டுறவு துறை)
விடை:
கூட்டுறவுத்துறை

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
சந்தை – வரையறு.
விடை:
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பொதுவான ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற பொருள்களை ஒருங்கிணைந்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 2.
பண்டமாற்று முறை என்றால் என்ன?
விடை:

  • பண்டமாற்று முறை என்றால் ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது.
  • எ.கா. ஒரு மூட்டை அரிசிக்கு பதிலாக தேவையான அளவு துணியைப் பெற்றுக் கொள்வதாகும்.

Question 3.
வணிகம் என்றால் என்ன?
விடை:
வணிகம் என்பது மனிதனது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.

Question 4.
சேமிப்பு என்றால் என்ன?
விடை:
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்கு செலவு செய்தது போக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

Question 5.
பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
விடை:

  • பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் போது பண்டங்களின் மதிப்பில் பல வேறுபாடுகள் தோன்றுகின்றன.
  • இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.

Question 6.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?
விடை:

  • நீர்நிலைகள் வேளாண்மை செய்வதற்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கின.
  • எனவே பழங்கால மக்கள் நீர்நிலைகள் அருகே நிரந்தரமாகக் குடியேறினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 7.
இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
விடை:
முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.

Question 5.
நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
விடை:
மின்னகம், கப்பல் கட்டுமானம், அலுமினியம், இரசாயனம், தானியுதிரிப் பாகங்கள், இருப்புப்பாதை, தோல், உரங்கள்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக.

Question 1.
உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக.
விடை:

  • வேளாண்மை
  • கால்நடை வளர்த்தல்
  • கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள் போன்றவை சேகரித்தல்.

Question 2.
உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகளை குறிப்பிடுக.
விடை:

  • பருத்தி தொழில்
  • நெய்யுந்தொழில்
  • உணவு பதப்படுத்துதல்
  • பீடி தயாரிப்பு
  • காற்றாலை உற்பத்தி

Question 3.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:
மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 70

Question 4.
சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 80

Question 5.
நகரங்களின் அம்சங்களாக நீ அறிவன யாவை?
விடை:

  • கிராமங்களை விட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம்.
  • சிறுதொழில் செய்பவர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை நகரத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
  • நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றமதி, இறக்குமதி சிறப்பாக நடக்க துணை புரிகின்றன.
  • வங்கி கிளைகள் நகரங்களில் அதிகம். இப்படி அன்றாட பணப்புழக்கத்திற்கு பெருமளவில் வங்கிகள் உதவி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கம் துணையாக நிற்கிறது.
  • நவீன மருத்துவ வசதி எளிதில் கிடைக்கப்பெறும்.

VII. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 81
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 82
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 83

செயல்பாடு :

”சிந்து நதியின் மிசை நிலவினிலே” என்ற பாரதியாரின் பாடலிலுள்ள வரிகளை எழுதவும். இப்பாடலில் பண்டமாற்று முறையின் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்ட பொருட்கள் எவையெவை என ஆசிரியர் உதவியுடன் அறிந்து கொள்ளவும்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்
நாட்டியம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில்
பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி
வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்கமராட்டியர்
தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில்
ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம்.

  1. கோதுமை
  2. வெற்றிலை
  3. தந்தம்

VIII. படங்களை ஒட்டவும் (மாணவர்களுக்கானது)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 85

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நீர்நிலைகள் அருகே நிரந்தரமாக அமைக்க பெற்ற குடி இருப்புகள் ………….. என்று அழைக்கப்பட்டன.
விடை:
கிராமம்

Question 2.
உலக மக்கள்தொகையில் …………… சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்கள்.
விடை:
50

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மக்களின் அன்றாடத் தேவைகளை …… துறை வழங்குகிறது.
விடை:
சேவைத்

Question 4.
பொருட்களை பயன்படுத்துவோர் ………. என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
நகர்வோர்

Question 5.
“நகரங்களின் நிழல்” எனப்படுவது ………..
விடை:
கிராமம்

II. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மூன்றாம் நிலை தொழில்கள் ……….. துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) தனியார்
ஆ) சேவைத்
இ) பொது
விடை:
ஆ) சேவைத்

Question 2.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் …………. மையமாகக் கொண்டே இயங்குகின்றன.
அ) நகரங்களை
ஆ) பட்டணங்களை
இ) கிராமங்களை
விடை:
அ) நகரங்களை

Question 3.
கிராமங்களில் ………. தான் பிரதானமான வேலையாக இருக்கும்.
அ) கனிமங்கள் சேகரித்தல்
ஆ) மீன்பிடித்தல்
இ) விவசாயம்
விடை:
இ) விவசாயம்

III. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
நுகர்வோர் பொருட்கள் என்றால் என்ன?
விடை:
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
விடை:
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் உழவர்கள், விவசாயிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Question 3.
தொழில்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

Question 4.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை யாவை?
விடை:
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 90

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

6th Social Science Guide இந்திய அரசமைப்புச் சட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள்
அ) ஜனவரி 26
ஆ) ஆகஸ்டு 15
இ) நவம்பர் 26
ஈ) டிசம்பர் 9
விடை:
இ) நவம்பர் 25

Question 2.
அரசமைப்புச் சட்டத்தை ……………… ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டது.
அ) 1946
ஆ) 1950
இ) 1947
ஈ) 1949
விடை:
ஈ) 1949

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ………….. சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அ) 101
ஆ) 100
இ) 78
ஈ) 46
விடை:
அ) 101

Question 4.
இஃது அடிப்படை உரிமை அன்று …………
அ) சுதந்திர உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) ஓட்டுரிமை
ஈ) கல்வி பெறும் உரிமை
விடை:
இ) ஓட்டுரிமை

Question 5.
இந்திய குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது …………….
அ) 14
ஆ) 18
இ) 16
ஈ) 21
விடை:
ஆ) 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ………………… தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
முனைவர். ராஜேந்திர பிரசாத்

Question 2.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் …………..
விடை:
அண்ணல் அம்பேத்கர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது ……………. ஆகும்.
விடை:
அரசியல் ஒழுங்குமுறை

Question 4.
நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ………….
விடை:
26 ஜனவரி 1950

III. பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 1
விடை:
ஆ) இ ஈ அ ஆ

IV. தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை:
அரசமைப்பு நிர்ணய சபை 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Question 2.
வரைவுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?
விடை:
வரைவுக் குழுவில் எட்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Question 3.
அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
விடை:
15 பெண் உறுப்பினர்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்தனர்.

Question 4.
அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது?
விடை:
அரசமைப்புச் சட்ட உருவாக்கம் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் முடிவடைந்தது.

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
விடை:

  • 1929 – ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்யத்தை அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றது.
  • அதனைத் தொடர்ந்து 1930. ஜனவரி 26 அன்று முழு சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது.
  • பின்னாளில் அதுவே நமது குடியரசு தினமாக ஆனது.

Question 2.
அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன?
விடை:

  • அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், கொள்கைகளை உருவாக்கி ஆவணப்படுத்துகிறது.
  • தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • இந்திய அரசமைப்புச் சட்டம் தான் நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டமாக விளங்குகிறது.
  • அது அடிப்படை அரசியல் கொள்கைகளை வரையறுப்பதோடு அரசு நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுகிறது.
  • குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்கிறது.
  • வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குகிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டம் ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்குத் தருகிறது.

Question 4.
அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?
விடை:
“ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகத் தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை

  • சம உரிமை
  • சுதந்திரமாக செயல்படும் உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சுதந்திர சமய உரிமை
  • கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை
  • சட்டத்தீர்வு பெறும் உரிமை

Question 5.
நீ செய்ய விரும்பும் கடமைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடப்பது
  • நாட்டுக்காகத் தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருப்பது
  • நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காப்பது
  • வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாப்பது
  • குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தருவது.

Question 6.
முகப்புரை என்றால் என்ன?
விடை:
“அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது”

Question 7.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்களின் மூலம் நீ புரிந்து கொள்வது என்ன ?
விடை:

  • சுதந்திரம் என்றால் விடுதலை. தான் செய்ய வேண்டிய செயலைத் தானே முடிவு செய்யும் சுதந்திரம்
  • சமத்துவம் என்றால் அனைத்து மக்களுக்கும் சமத்துவ பொருளாதார, நிலை, சமத்துவ வாய்ப்பு அளித்தல்.
  • சகோதரத்துவம் என்றால் சகோதரத் தன்மை.

Question 8.
வரையறு : இறையாண்மை
விடை:
ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.

VI. செயல்பாடுகள் :

Question 1.
மாணவர்கள் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ தங்கள் வகுப்புக்கான விதிமுறைகளைத் தயாரித்தல், பின்பு அவற்றிலிருந்து
வகுப்புக்கான விதிகளின் தொகுப்பை உருவாக்குதல்.
விடை:

  • வகுப்பறையில் முழுமையான கவனத்தை செலுத்தவும்.
  • அனைவரையும் மதிக்க வேண்டும்.
  • அமைதியான வேலையை செய்ய வேண்டும்.
  • நமது பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும்.
  • மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேள்.

Question 2.
வீடு, பள்ளி, சமூக அளவில் உன் உரிமைகளையும் கடமைகளையும் பட்டியலிடுக.
விடை:

  • காலம் தவறாமல் பள்ளிக்கு செல்லுதல்
  • புதிய கற்கும் வாய்ப்பினில் பங்கு பெறுதல் வீடு
  • பெற்றோரை கௌரவப்படுத்தல்
  • சின்ன, சின்ன உதவிகள் செய்தல் சமூகம்.
  • பொது உடைமைகளை பாதுகாத்தல்
  • கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு கற்பித்தல்

Question 3.
சமத்துவம், குழந்தைத் தொழிலாளர் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை இத்தலைப்புகளைப் பற்றி கலந்துரையாடுக.
விடை:
சமத்துவம் :

  • அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும்.
  • யாருக்கும், எதற்காகவும் முன்னுரிமை வழங்க கூடாது.

குழந்தை தொழிலாளர் :
குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஒரு வேலையில் ஈடுபடவைப்பது அவர்கள் குழந்தைதனத்தை இழக்க நேரிடும்

கல்விபெறும் உரிமை :

  • இது ஒரு அடிப்படை உரிமையாகும்.
  • ஒவ்வொரு குடிமகனும், மொழி, இனம், மதம், வயது என்ற வேற்றுமையை கடந்து பெற வேண்டிய முக்கிய உரிமையாகும்.

Question 4.
அமைதிக்கான நோபல் பரிசு (2014) இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்திக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யுசூப்சாய்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது – இவர்களின் பணிகளைக் கேட்டறிக.
விடை :
அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இருவரும் குழந்தை கல்விக்காக போராடி வருகிறார்கள்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

1. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளுள் உனக்குப் பிடித்தமானது எது? ஏன்.
2. இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கான உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் குறித்து எண்ணங்களைப் பகிர்க.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 80

6th Social Science Guide இந்திய அரசமைப்புச் சட்டம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………… நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்..
விடை:
60

Question 2.
அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரம் ……….. எனப்படும்.
விடை:
இறையாண்மை

Question 3.
………….. சட்டமன்றத்திற்கு முழு பொறுப்புடையதாக உள்ளது.
விடை:
நிர்வாகத்துறை

Question 4.
……………. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்.
விடை:
பி.ஆர்.அம்பேத்கர்

Question 5.
இந்திய அரசமைப்புச் சட்டமானது ……….. மற்றும் …….. அரசுகள் சட்டமன்ற ஆட்சிமுறையைப் பின்பற்றி ஆட்சி செய்ய வழிவகை செய்துள்ளது.
விடை:
மாநில், ஒன்றிய

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
“ஓட்டுரிமை” என்றால் என்ன?
விடை:
பதினெட்டு வயது பூர்த்தியான இந்தியக் குடிமகன் ஒவ்வொரு வரும் தமது அரசை தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையே ஓட்டுரிமை எனப்படும்.

Question 2.
“வழிகாட்டு நெறிமுறை” என்றால் என்ன?
விடை:
“அரசுகள் சட்டமியற்றும் போதும். ஆட்சி செய்யும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில வழிகாட்டல்களே வழிகாட்டு நெறிமுறை ஆகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம்

Question 3.
மக்களாட்சி என்றால் என்ன?
விடை:
மக்களால் மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசாங்கமே மக்களாட்சி ஆகும்.

Question 4.
மதச்சார்பின்மை என்றால் என்ன?
விடை:
அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் சமமமாக நடத்துவதே மதச்சார்பின்மை ஆகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 2 இந்திய அரசமைப்புச் சட்டம் 9

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அ) அங்கங்கள்
ஆ) திரிபிடகங்கள்
ஆ) திருக்குறள்
ஈ) நாலடியார்
விடை:
ஆ) திரிபிடகங்கள்

Question 2.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
அ) ரிஷபா
ஆ) பார்சவ
இ) வர்தமான
ஈ) புத்தர்
விடை:
அ) ரிஷபா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
அ) 23
ஆ) 24
இ) 25
ஈ) 26
விடை:
ஆ) 24

Question 4.
மூன்றாம் பௌத்தசபை எங்கு கூட்டப்பட்டது?
அ) ராஜகிரகம்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) காஷ்மீர்
விடை:
இ) பாடலிபுத்திரம்

Question 5.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
அ) லும்பினி
ஆ) சாரநாத்
இ) தட்சசீலம்
ஈ) புத்தகயா
விடை:
ஆ) சாரநாத்

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக /பொருத்தமான விடையை தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்துகொள்ள இயலாது.
காரணம் : உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.
ஆ) கூற்று தவறானது.
இ) கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.
விடை:
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை

Question 2.
கூற்று : ஜாதகங்கள் புகழ்பெற்ற கதைகளாகும்.
காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளை சித்தரிக்கின்றன. அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.
ஆ) கூற்று தவறு.
இ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
அ) சுற்றும் அதன் காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
1. கல்வி கூடமாக
2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக
4. வழிபாட்டுக் கூடம்
அ) 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 1, 2, 4 ஆகியவை சரி
ஈ) 1 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1 மற்றும் 3 சரி

Question 4.
சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்ட கூற்றுகளைக் காரணமாக கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களை குழப்பமுறச் செய்தன. மேற்சொல்லப்பட்ட கூற்றில் / கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2

Question 5.
சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது.
ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக்கொள்கிறது.
இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலை வழிபாடாகும்.
ஈ) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக்கொள்கிறது.
விடை:
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது

Question 6.
பொருந்தாததை வட்டமிடு.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
விடை:
பார்சவா

Question 7.
தவறான இணையைக் கண்டுபிடி.
அ) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்
ஆ) சத்யா – உண்மைபேசுதல்
இ) அஸ்தேய – திருடாமை
ஈ) பிரம்மச்சரியா – திருமணநிலை
விடை:
ஈ) பிரம்மச்சரியா – திருமண நிலை

Question 8.
சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்.
இ) அவர் நிர்வாணம் அடைந்தார்.
ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.
விடை:
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மகாவீரரின் கோட்பாடு ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சமணம்

Question 2.
………………. என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.
விடை:
நிர்வாண நிலை

Question 3.
பௌத்தத்தை நிறுவியவர் …………… ஆவார்.
விடை:
கௌதம புத்தர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 4.
காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ……………. என்று அழைக்கப்பட்டது.
விடை:
ஜைனக்காஞ்சி

Question 5.
……………… என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.
விடை:
ஸ்தூபி

IV. சரியா? தவறா?

Question 1.
புத்தர் கர்மாவை நம்பினார்.
விடை:
சரி

Question 2.
புத்தருக்கு சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.
விடை:
தவறு

Question 3.
கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.
விடை:
சரி

Question 4.
விகாரைகள் என்பன கோவில்களாகும்.
விடை:
தவறு

Question 5.
அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.
விடை:
சரி

V. பொருத்துக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 20

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
விடை:

  • நன்னம்பிக்கை
  • நல்லறிவு
  • நற்செயல்

Question 2.
பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை?
விடை:

  • ஹீனயானம்
  • மகாயானம்

Question 3.
‘ஜினா என்பதின் பொருள் என்ன?
விடை:
ஜினா என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

Question 4.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.
விடை:

  • வேதங்களின் ஆதிக்கத்தை வெறுத்தல்.
  • இரத்த பலிகளை எதிர்த்தல்.

Question 5.
பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம்.
  • சங்கத்தின் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 6.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
யுவான் சுவாங்

Question 7.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?
விடை:
கவந்தியடிகள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • நல்ல நம்பிக்கை
  • நல்ல எண்ணம்
  • நல்ல பேச்சு நல்ல செயல்
  • நல்ல வாழ்க்கை
  • நல்ல முயற்சி
  • நல்ல அறிவு
  • நல்ல தியானம்

Question 2.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
விடை:

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
  • சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்
  • அஸ்தேய – திருடாமை
  • அபரிக்கிரகா – பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
  • பிரம்மச்சரியா – திருமணம் செய்து கொள்ளாமை.

Question 3.
பௌத்தத்தின் நான்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.
விடை:

  • வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
  • ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கிவிடலாம்.
  • சரியான பாதையைப் பின்பற்றினால் (எண் வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.

Question 4.
பௌத்தத்தின் பிரிவுகளான ஹினயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.
விடை:
ஹீனயானம் :

  • புத்தரின் சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்கமாட்டார்கள்.
  • மிக எளிமையாக இருப்பர்.
  • பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.

மகாயானம் :

  • புத்தரின் உருவங்களை வணங்கினர்.
  • விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
  • சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்.

Question 5.
சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
விடை:
சமணம் :

  • அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
  • கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

பௌத்தம் :

  • சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தார்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
கர்மா – ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தேவையில் இருக்கின்ற நண்பனுக்கு உதவுதல்.
  • உங்களின் முதல் நற்காரியம் பிறரன்புப் பணிக்காக (தர்மம்) இருக்கட்டும்.
  • ஒரு மரம் நடுவோம்.
  • பழைய அலைபேசியொன்றை தானம் செய்வோம்.
  • இரத்ததானம் செய்வோம்.
  • நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் சிறந்த நபராக மாற தீர்மானிப்போம்.
  • சுய கௌரவத்தை விழுங்கி, பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ செய்யப்பட்ட ஒரு செயலுக்காக – மன்னிப்பு வேண்டுவோம்.
  • பள்ளிக்கல்விக்குத் தேவையான பொருட்களை, உரிமைகளின் தேடலில் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு வழங்குவோம்.
  • தொலைபேசியில் உரையாடும் பொழுது இனிமையாக உரையாடுவோம்.
  • உணவுப்பொருள் வாங்க வெளியே செல்கின்ற பொழுது கூடுதலாக ஒரு பொருளை வீடற்ற ஒருவருக்கு அல்லது உணவுக் கூடத்திற்கு வழங்குவதற்காக வாங்குவோம்.

IX. மாணவர் செயல்பாடு

1. ஜாதகக் கதைகளில் ஒன்றை வாசிக்கவும். அதை நீயே சொந்தமாக எழுதவும்.
2. கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒரு அட்டவணை தயார் செய்யவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 80
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 81

Question 3.
கீழ்க்காணும் வார்த்தைகளை பொருத்தமான கட்டத்திற்குள் இடவும்.
விடை:
வார்த்தைகள் : ஜினா, மகாயானா, தீர்த்தங்கரர்கள், ஸ்தூபிகள், நிர்வாணா, திகம்பரர், திரிபிடகங்கள் – ஆகமசித்தாந்தம்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 86

Question 4.
தகவல் அட்டை தயாரித்தல் – செயல்பாடு
கீழ்க்காணும் மதங்கள் குறித்த செய்திகளைக் கொண்ட அட்டைகள் தயார் செய்யவும்.
விடை:
இந்து மதம், கிறித்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம்.
விடை:
இந்து மதம் :

  • தசாவதாரம்
  • ருத்ர தாண்டவம்
  • மனுதர்மம்
  • சிவன் – விஷ்ணு
  • மகா கும்பமேளா

கிறித்துவம் :

  • சிலுவையில் அறைதல்
  • புனித கடல் (Holy Sea)
  • நாசரேத்
  • மலைப்பொழிவு
  • 12 சீடர்கள்

இஸ்லாம் :

  • மெக்கா
  • 786
  • ஹிஜிரா
  • குரான்
  • முகம்மது நபி

பொத்தம் :

  • ஹீனயானம்
  • புத்த கயா
  • தம்மம்
  • திரிபீடகம்
  • ஸ்தூபிகள்

சமணம் :

  • தீர்த்தங்கரர்கள்
  • சுவேதாம்பரர்
  • அறவோர் பள்ளி
  • கவுந்தியடிகள்
  • திரிரத்தினங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 5.
‘வென் வரைபடம் மூலம் சமணத்துக்கும் பௌத்தத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளைச் சுட்டிக்காட்டுக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 90.1
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 90

Question 6.
குறுக்கெழுத்து புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 92
இடமிருந்து வலம் :
1. மூன்று ரத்தினங்களுள் ஒன்று
2. புத்தரின் போதனைகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.
3. ஒரு சிறந்த கல்வி மையம்
4. புத்தர் ஞானம் பெற்ற இடம்
5. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது

வலமிருந்து இடம் :
6. சித்தார்த்தரின் தாயார்
7. மனித வாழ்க்கையை அவரின் செயலே தீர்மானிக்கிறது.

மேலிருந்து கீழ் :
8. லும்பினி ……………. மாநிலத்தில் உள்ள து.
9. புத்த வழிபாட்டுக் கூடம்
10. பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுதலை
11. கௌதம சுவாமியால் தொகுக்கப்பட்ட சமணநூல்
விடை :
இடமிருந்து வலம் :
1. நற்செயல் (அல்லது) நல்லறிவு
2. தர்மம்
3. நாளந்தா
4. கயா
5. அகிம்சை
வலமிருந்து இடம் :
6. மாயா
7. கர்மா
மேலிருந்து கீழ் :
8. நேபாளம்
9. சைத்தியம்
10. நிர்வாணம்
11. ஆகம சித்தாந்தா

X. வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

பௌத்தம், சமணம் குறித்த கதை அட்டைகளைத் தயாரிக்கவும் (மாதிரி)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 95
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 95.1

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 96
விடை:

  • சுவேதாம்பரர் /ஞானம் பெற்றவர் / மகாவீரர்
  • புத்தர் / நான்கு /பௌத்தம்
  • ஜாதகக்கதைகள் /புகார், உறையூர், மதுரை, காஞ்சி /சிலப்பதிகாரம்

6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழக்குயில் குடி கிராமத்தில் உள்ள சமணர் மலை ………… நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
அ) திருச்சி
ஆ) சென்னை
இ) புதுக்கோட்டை
ஈ) மதுரை
விடை:
ஈ) மதுரை

Question 2.
சித்தார்த்தா தனது …………. வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.
அ) 19
ஆ) 29
இ) 39
ஈ) 49
விடை:
ஆ) 29

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Question 3.
………… உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.
அ) தர்ம சக்கரம்
ஆ) சட்ட சக்கரம்
இ) தம்ம சக்கரம்
ஈ) வாழ்க்கை சக்கரம்
விடை:
ஈ) வாழ்க்கை சக்கரம்

Question 4.
மகாயானத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி ………
அ) சமஸ்கிருதம்
ஆ) பிராகிருதம்
இ) பிராமி
ஈ) அரமாயிக்
விடை:
அ) சமஸ்கிருதம்

II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். காரணம் : சமயத்தின் பெயரால் செயப்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.
அ) கூற்று தவறானது.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை.
இ) கூற்றும் காரணமும் சரி.
ஈ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
லிடை:
இ) கூற்றும் காரணமும் சரி

Question 2.
சரியான விடையைக் கண்டறியவும்.
வர்த்தமானர்
1. ஒரு சத்திரிய இளவரசர்
2. பன்னிரண்டரை ஆண்டு கால தவத்திலிருந்தார்
3. இவர் தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர்.
4. முதல் தீர்த்தங்கரர் ஆவார்.
அ) அனைத்தும் சரி
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி
இ) அனைத்தும் தவறு
ஈ) 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி

III . கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புகழ்பெற்ற பௌத்த தர்க்க வியல் அறிஞர் …………..
விடை:
தின்னகர்

Question 2.
வர்த்த மானர் என்பதற்கு …………… என்று பொருள்.
விடை:
செழிப்பு

Question 3.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை ………… என்று குறிப்பிடுகின்றன.
விடை:
சமணம்

Question 4.
சித்தார்த்தரின் சிற்றன்னை ……………
விடை:
கௌதமி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

IV. சரியா? தவறா?

Question 1.
ஆறாம் நூற்றாண்டில் வேள்விச் சடங்குகளுக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்தது.
விடை:
சரி

Question 2.
உறையூரில் பௌத்த விகாரை இருந்தது.
விடை:
தவறு

Question 3.
புத்தர் ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார்.
விடை:
தவறு

Question 4.
சமணம் இந்தியாவில் மட்டுமே இருந்தது.
விடை:
சரி

V. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சமணத்தின் இரு பிரிவுகள் யாவை?
விடை:

  • திகம்பரர்
  • சுவேதாம்பரர்

Question 2.
‘தர்ம சக்கர பரிவர்த்தனா என்றால் என்ன?
விடை:
புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை சாரநாத்தில் உள்ள மான்கள் பூங்கா என்ற இடத்தில் நிகழ்த்தினார். இது தர்ம சக்கர பரிவர்த்தனா என்றழைக்கப்படுகிறது.

VII. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
புத்தரின் நான்கு பெரும் காட்சிகள் பற்றி எழுதுக.
விடை:
சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார். அவை

  • கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர்.
  • குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி.
  • இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுதல்.
  • ஒரு துறவி

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

6th Social Science Guide வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆரியர்கள் முதலில் ………………… பகுதியில் குடியமர்ந்த னர்.
அ) பஞ்சாப்
ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
இ) காஷ்மீர்
ஈ) வடகிழக்கு
விடை:
அ) பஞ்சாப்

Question 2.
ஆரியர்கள் ………… லிருந்து வந்தனர்.
அ) சீனா
ஆ) வடக்கு ஆசியா
இ) மத்திய ஆசியா
ஈ) ஐரோப்பா
விடை:
இ) மத்திய ஆசியா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 3.
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” …………. லிருந்து எடுக்கப்பட்டது.
அ) பிராமணா
ஆ) ஆரண்யகா
இ) வேதம்
ஈ) உபநிடதம்
விடை:
ஈ) உபநிடதம்

Question 4.
வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
அ) 1/3
ஆ) 1/6
இ) 1/8
ஈ) 19
விடை:
ஆ) 1/6

II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகளும் கிடைத்துள்ளன. காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ; காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு; காரணம் சரி

Question 2.
கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிகப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்
கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
அ) கூற்று 1 தவறானது
ஆ) கூற்று 2 தவறானது
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை.
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

Question 3.
வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அ) ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளலாம்.
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.
இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.
விடை:
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது

Question 4.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஸ்டிரா
விடை:
ஆ) குலா < கிராமா விஷ் < ஜனா < ராஸ்டிரா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வேதப்பண்பாடு ……………. இயல்பைக் கொண்டிருந்தது.
விடை:
செம்புகால பண்பாடு

Question 2.
வேதகாலத்தில் மக்களிடமிருந்து ………… என்ற வரி வசூலிக்கப்பட்டது.
விடை:
பாலி

Question 3.
………… முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
விடை:
குருகுலக்கல்வி

Question 4.
ஆதிச்சநல்லூர் ……………… மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விடை:
தூத்துக்குடி

IV. சரியா? தவறா?

Question 1.
பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய – ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
விடை:
சரி

Question 2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
விடை:
சரி

Question 3. படைத்தளபதி கிராமணி’ என அழைக்கப்பட்டார்.
விடை:
தவறு

Question 4.
கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
விடை:
சரி

Question 5.
பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
விடை:
சரி

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 1
விடை:
1 2 3 4

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரிக்
  • யஜூர்
  • சாம
  • அதர்வ

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?
விடை:

  • யானைகள்
  • பசு
  • வெள்ளாடு
  • செம்மறியாடு
  • குதிரை

Question 3.
‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.

Question 4.
‘கற்திட்டைகள்’ என்பது என்ன?
விடை:

  • கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம்
  • இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.

Question 5.
முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள் தாழிகள் ஆகும்.

Question 6.
வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • நிஷ்கா
  • சத்மனா (தங்கம்)
  • கிருஷ்ணாலா (வெள்ளி)

Question 7.
தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • முதுமக்கள் தாழிகள்
  • கற்திட்டைகள்
  • நினைவு கற்கள்
  • நடுகற்கள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
விடை:

  • கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
  • பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.
  • தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • நூல் சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
விடை:

  • ரிக் வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
  • பெண்கள் தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
  • குழந்தைத் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
  • விதவை மறுமணத்திற்கு தடை இல்லை.
  • சொத்துரிமையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
  • பின் வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:

  • நவீன கால கல்வி முறையை ஒப்பீடு செய்யும் பொழுது குருகுலக் கல்வி முறை என்பது பழங்காலக் கற்றல் முறை.
  • மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்து அதே வேளையில் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.
  • வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். அனைத்தையும் மனப்பாடம் செய்தனர்.
  • நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறி முறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.
  • இரு பிறப்பாளர்கள் மட்டுமே மாணவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஒழுக்கமான வாழ்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

IX. பெருமிதமும் மகிழ்ச்சியும் – உண்மைகளை நாம் கண்டறிவோம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 80
விடை :

  • இந்தோ – ரோமானிய வணிகத் தொடர்புக்கு சான்று.
  • இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்று
  • மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்ததற்கான சான்று
  • நெசவுத் தொழில் நடைபெற்றதற்கான சான்று

X. மாணவர் செயல்பாடு

Question 1.
புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குதல்.
சுருதி, கிராமணி, ராஷ்ட்ரா, இரும்புக்காலம் , நாடோடிகள், பண்டமாற்று
விடை:

  • வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டவை சுருதி ஆகும்.
  • கிராமத்திற்கு கிராமணி தலைவர் ஆவார்.
  • பல ஜனாக்கள் இணைந்து ராஷ்ட்ரா உருவாயின.
  • வட இந்தியாவின் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவின் இரும்புக்காலமும் சம காலத்தைச் சேர்ந்தவை.
  • ரிக்வேத காலத்தில் பண்டமாற்று முறை பரவலாகக் காணப்பட்டது.

Question 2.
வார்த்தை விளையாட்டு
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 90
1. ஒரு கணவாய்
2. மத போதனைக் கொண்ட நூல்
3. கிராமங்களின் தொகுதி
4. இனக்குழு மன்றம்
5. மக்கள் மன்றம்
6. அக்னி
7. தங்க நாணயம்
8. வேதகாலம்
9. இறந்தவர்களை புதைத்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னம்.
விடை:
1. கைபர்
2. ஸ்மிருதி
3. விஸ்
4. கானா
5. சமிதி
6. நெருப்பு
7. தங்க நாணயம்
8. இரும்புக்காலம்
9. கற்திட்டை

XI. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

ஆசிரியரின் உதவியோடு செய்தித் தாள்களிலிருந்து தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த செய்தி – களைச் சேகரிக்கவும்.
கல்விச் சுற்றுலா
நீங்கள் இருக்கும் இடத்திற்கே அருகேயுள்ள தொல்லியல் சார்ந்த ஓர் இடத்திற்கு சென்று வரவும்.

XII. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 92
விடை:

  • இராமாயணம், மகாபாரதம் / நினைவுகற்கள் / கீழடி
  • பையம்பள்ளி, பொருந்தல் /அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை/அயோத்தி, இந்திரப் பிரஸ்தம்

6th Social Science Guide வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆரியர்களின் முதன்மைத் தொழில் ……
அ) வேளாண்மை
ஆ) மீன் பிடித்தல்
இ) கால்நடை மேய்த்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
இ) கால்நடை மேய்த்தல்

Question 2.
சப்த சிந்து என்பது ………. ஆறுகள் ஓடும் நிலப்பகுதி
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) பத்து
விடை:
ஆ) ஏழு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 3.
…………… முதன்மை பயிர்
அ) பார்லி
ஆ) கோதுமை
இ) அரிசி
ஈ) பருத்தி
விடை:
அ) பார்லி

Question 4.
பையம்பள்ளி …………. மாவட்டத்திலுள்ளது.
அ) ஈரோடு
ஆ) வேலூர்
இ) தூத்துக்குடி
ஈ) திண்டுக்கல்
விடை:
ஆ) வேலூர்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் ………… பிரிவுகள் காணப்பட்டன.
விடை:
மூன்று

Question 2.
ஆரியர்கள் நிரந்தமாகக் குடியேறிய பின் அவர்கள் …………. செய்யத் தொடங்கினர்.
விடை:
வேளாண்மை

Question 3.
…………. தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன.
விடை:
திருமணம்

III. சரியா? தவறா?

Question 1.
ரிக்வேத ஆரியர்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுள்களை வழிபட்டனர்.
லிடை:
சரி

Question 2.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
விடை:
சரி

Question 3.
பெருங்கல் என்ற Megalith’ வேர்ச்சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
விடை:
தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 96
விடை :
ஆ) 2 4 1 3

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் யாவை?
விடை:

  • தங்கம் (ஹிரண்யா)
  • இரும்பு (சியாமா)
  • தாமிரம் (அயாஸ்)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
என்ன பயிர்கள் பயிரிடப்பட்டன?
விடை:

  • கோதுமை
  • நெல்
  • பார்லி

Question 3.
ரிக் வேத ஆரியர்களின் தொழில்கள் யாவை?
விடை:

  • கால்நடை வளர்ப்பு
  • கை வினைஞர்கள்
  • நகை செய்வோர்
  • சாயத் தொழில் செய்வோர்
  • உலோகங்களை உருவாக்குவோர்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

6th Social Science Guide சமத்துவம் பெறுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
அ) சமூகமயமாக்கல்
ஆ) பொருளாதார நன்மைகள்
இ) அதிகாரத்துவ ஆளுமை
ஈ) புவியியல்
விடை:
ஈ) புவியியல்

Question 2.
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
அ) பாலின பாகுபாடு
ஆ) சாதி பாகுபாடு
இ) மத பாகுபாடு
ஈ) சமத்துவமின்மை
விடை:
அ) பாலின பாகுபாடு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 3.
பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
அ) திரைப்படங்கள்
ஆ) விளம்பரங்கள்
இ) தொலைக்காட்சி தொடர்கள்’
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 4.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்
அ) இந்தியா 2020
ஆ) அக்கினிச்சிறகுகள்
இ) எழுச்சி தீபங்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 5.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1997
ஆ) 1996
இ) 1995
ஈ) 1994
விடை:
அ) 1997

Question 6.
விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
அ) 1985
ஆ) 1986
இ) 1987
ஈ) 1988
விடை:
ஈ) 1988

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 7.
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
அ) செஸ்
ஆ) மல்யுத்தம்
இ) கேரம்
ஈ) டென்னிஸ்
விடை:
இ) கேரம்

Question 8.
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறுகிறது?
அ) 14(1)
ஆ) 15 (1)
இ) 16 (1)
ஈ) 17 (1)
விடை:
அ) 15 (1)

Question 9.
பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1989
இ) 1988
ஈ) 1987
விடை:
அ) 1990

Question 10.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) சேலம்
இ) கன்னியாகுமரி
ஈ) சிவகங்கை
விடை:
இ) கன்னியாகுமரி

II. பொருத்துக பாரபட்சம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் 60
விடை:
1 – ஆ;
2 – ஈ;
3 – உ;
4 – இ;
5 – அ

III. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
______ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
விடை:
பாரபட்சம்

Question 2.
_____ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தார்.
விடை:
1931

Question 3.
இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் _____
விடை:
விஸ்வநாதன் ஆனந்த்

Question 4.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____.
விடை:
டாக்டர் B.R. அம்பேத்கார்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 5.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _____
விடை:
தருமபுரி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பாரபட்சம் என்றால் என்ன?
விடை:

  • பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவது ஆகும்.
  • அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறான முன் முடிவு எடுப்பதாகும்.
  • மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.

Question 2.
ஒத்தக் கருத்து என்றால் என்ன ?
விடை:

  • ஒத்தக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
  • (எ.கா) பெண்கள் விளையாட்டிற்கு உகந்தவர்கள் அல்ல என முன் முடிவு கொள்வது.
  • முன்முடிவு வலுவாக இருக்கும் போது ஒத்தக் கருத்து உருவாகிறது.

Question 3.
பாகுபாடு என்றால் என்ன?
விடை:

  • மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

Question 4.
இந்திய அரசியலமைப்பின் படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு மற்றும் பிரிவு 15(1) ஆகியவை சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றன.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.
விடை:
பாரபட்சம் உருவாவதற்கு பொதுவான சமூக காரணிகள்.

  • சமூகமயமாக்கல்
  • நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
  • பொருளாதார பயன்கள்
  • சர்வாதிகார ஆளுமை
  • இன மையக் கொள்கை
  • கட்டுப்பாடான குழு அமைப்பு
  • முரண்பாடுகள்

Question 2.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
விடை:
சாதி பாகுபாடு

  • இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.
  • ஆரம்ப காலங்களில் சமுதாயம் என்பது தொழில் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்ததையே வர்ணாசிரமமுறை என அறியப்பட்டது.
  • இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஆவார்.
  • இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலினப் பாகுபாடு

  • பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
  • எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
  • அநேக பெண்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.
  • இன்னும் சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஆண் பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர்.

Question 3.
இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.
விடை:

  • அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.
  • தற்போதைய பாலின பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
  • பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொது வாழ்வில் மற்றும் நிறுவனத்தில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.
  • மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.
  • வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்தவித பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றாக இணைக்கச்செய்தல்.
  • பல தரப்பட்ட மக்களிடமும் பேசுதல்.
  • சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வகுப்பறையை சிறு குழுக்களாகப் பிரித்து, பாகுபாடு ஏற்படுத்துவதற்கான காரணங்களைப்பற்றி கலந்துரையாடி, அறிக்கை ஒன்றினை எழுதவும்.
2. பாரபட்சம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொண்ட நபர்கள் பற்றி தகவல்களை சேகரிக்கவும்.

VII. உயர் சிந்தனை வினா.

Question 1.
இந்தியாவில் நிகழும் பல்வேறு பாகுபாட்டினை விவரி.
விடை:

  • மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, மதச்சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.
  • இந்தியாவில் நிகழும் பாகுபாடுகளின் மூன்று வகைகள்.
    1. சாதி பாகுபாடு
    2. பாலின பாகுபாடு
    3. மத பாகுபாடு

சாதி பாகுபாடு

  • இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.
  • இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக முன்னோடியாகத் திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்.
  • இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலின பாகுபாடு

  • பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கிறது.
  • எடுத்துக்காட்டாக, சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுவதில்லை.
  • ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாலின பாகுபாடு ஆகும்.

மத பாகுபாடு

  • மதம் சார்ந்த பாகுபாடு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தனிநபரின் மீதோ அல்லது குழுவினர் மீதோ சமத்துவமின்றி நடத்துவது ஆகும்.
  • சில மக்கள் வேற்று மதத்தவர்களாக இருப்பதால் பொது இடங்களில், மத வழிபாட்டு தலங்களில் நுழைய அனுமதி இல்லை.
  • சில மதத்தவர்கள் தங்கள் சடங்குகள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது).

1. உங்கள் கிராமத்தில் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போராடுவீர்?

6th Social Science Guide சமத்துவம் பெறுதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு.
அ) ஜெர்மனி
ஆ) ஆஸ்திரேலியா
இ) தென் ஆப்பிரிக்கா
ஈ) இந்தியா
விடை:
இ) தென் ஆப்பிரிக்கா

Question 2.
இன வெறிக் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு.
அ) 1885
ஆ) 1990
இ) 1995
ஈ) 2005
விடை:
ஆ) 1990

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 3.
நமது அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவர்
அ) நேரு
ஆ) டாக்டர். அம்பேத்கார்
இ) மவுண்ட்பேட்டன்
ஈ) டாக்டர். அப்துல் கலாம்
விடை:
ஆ) டாக்டர். அம்பேத்கார்

Question 4.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டம்.
அ) சென்னை
ஆ) தூத்துக்குடி
இ) நீலகிரி
ஈ) தர்மபுரி
விடை:
ஈ) தர்மபுரி

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பாரபட்சமான எவ்வகைகளில் காணப்படுகிறது.
விடை:

  • பாலின ரீதி
  • இன ரீதி
  • வர்க்க ரீதி
  • மாற்றுத் திறனாளிகளின் மீதும் காணப்படுகிறது.

Question 2.
பாகுபாடு எவ்வகைகளில் நிலவுகிறது.
விடை:

  • சாதிபாகுபாடு
  • பாலினப் பாகுபாடு
  • மத பாகுபாடு

Question 3.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:
அரசியலமைப்பு என்பது நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிமுறைகளின் தொகுப்பு ஆகும்

Question 4.
பாகுபாடு பற்றி இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 15(1) என்ன கூறுகிறது?
விடை:
எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகிறது

Question 5.
சமத்துவம் பற்றி இந்திய அரசியலமைப்பின் 14 வது சட்டப்பிரிவு என்ன கூறுகிறது?
விடை:
சட்டத்திற்குமுன் அனைவரும் சமம். மேலும் நாட்டிற்குள் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பினை அளித்து, தேவையற்ற பாகுபாட்டினை தடை செய்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் 90

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

6th Social Science Guide பன்முகத் தன்மையினை அறிவோம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்வு செய்க:

Question 1.
இந்தியாவில் மாநிலங்களும், 4. யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
அ) 27, 9
ஆ) 29, 7
இ) 28, 7
ஈ) 28, 9
விடை:
ஆ) 29, 7

Question 2.
இந்தியா ஒரு _____ என்று அழைக்கப்படுகிறது.
அ) கண்டம்
ஆ) துணைக்கண்டம்
இ) தீவு
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை:
ஆ) துணைக்கண்டம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 3.
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ____ மாநிலத்தில் உள்ளது.
அ) மணிப்பூர்
ஆ) சிக்கிம்
இ) நாகலாந்து
ஈ) மேகாலயா
விடை:
ஈ) மேகாலயா

Question 4.
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை ?
அ) சீக்கிய மதம்
ஆ) இஸ்லாமிய மதம்
இ) ஜொராஸ்ட்ரிய மதம்
ஈ) கன்ஃபூசிய மதம்
விடை:
ஈ) கன்ஃபூசிய மதம்

Question 5.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______ அ) 25
ஆ) 23
இ) 22
ஈ) 26
விடை:
இ) 22

Question 6.
______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) பஞ்சாப்
ஈ) கர்நாடகா
விடை:
அ) கேரளா மோகினியாட்டம்

Question 7.
மாநிலத்தின் _____ செவ்வியல் நடனம் ஆகும்.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) மணிப்பூர்
ஈ) கர்நாடகா
விடை:
அ) கேரளா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 8.
“டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _____
அ) இராஜாஜி
ஆ) வ.உ.சி
இ) நேதாஜி
ஈ) ஜவகர்லால் நேரு.
விடை:
ஈ) ஜவகர்லால் நேரு

Question 9.
‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______
அ) ஜவகர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) அம்பேத்கார்
ஈ) இராஜாஜி
விடை:
அ) ஜவகர்லால் நேரு

Question 10.
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.
அ) பெரிய ஜனநாயகம்
ஆ) தனித்துவமான பன்முகத்தன்னை கொண்ட நிலம்
இ) இனங்களின் அருங்காட்சியம்
ஈ) மதச்சார்பற்ற நாடு
விடை:
இ) இனங்களின் அருங்காட்சியகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
விடை:
பொருளாதார

Question 2.
மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
விடை:
ராஜஸ்தான்

Question 3.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______
விடை:
2004

Question 4.
பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
விடை:
அசாம்

III. பொருத்துக:

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 1

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பன்முகத்தன்மையினை வரையறு.
விடை:
இந்தியர்களாகிய நாம் பல்வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகளைச் சார்ந்து வாழ்கிறோம். இதுவே பன்முகத் தன்மை எனப்படும்.

Question 2.
பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?
விடை:

  • நில அமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத் தன்மை
  • சமூக பன்முகத்தன்மை
  • சமய பன்முகத்தன்மை
  • மொழி சார். பன்முகத் தன்மை
  • பண்பாடு பன்முகத் தன்மை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 3.
இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
விடை:
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு ஆகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றைப் பற்றி எழுதுக.
விடை:
தீபாவளி – இந்துக்கள்
கிறிஸ்துமஸ் – கிறிஸ்தவர்கள்
ரம்ஜான் – இஸ்லாமியர்கள்
சில விழாக்களை பல்வேறு மதத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகக் கொண்டாடுகின்றனர்.

Question 5.
இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 70

Question 6.
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன் அழைக்கப் – படுகிறது?
விடை:

  • இந்தியா மாறுபட்ட புவியியல் அமைப்பு, தட்ப வெப்பநிலை, தாவரங்கள், விலங்குகள், பலவகைப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கொண்டுள்ளது.
  • இவ்வாறு இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி:

Question 1.
மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத் தன்மையினை விவரி.
விடை:

  • இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
  • தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
  • இந்தியா ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது.
  • இதனால் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக எழுச்சி பெற்றது.
  • பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும், ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

பண்பாட்டு பன்முகத்தன்மை:

  • பண்பாடு என்பது மக்களின் மொழி, உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள், இசை, கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
  • ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.
  • இது சமூக வடிவமைப்புகளால் முன்னிறுத்தப்படும் குழு அடையாளத்தின் வளர்ச்சி நிலை ஆகும்.
  • கலை மற்றும் கட்டிடக்கலை ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபையும் நுண்ணிய கலைவெளிப்பாட்டு வடிவங்களையும் பெற்றிருக்கின்றன.

Question 2.
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் – கலந்துரையாடுக.
விடை:

  • இந்தியாபன்முகத்தன்மை நிறைந்த நாடு நாட்டுப்பற்று” என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம்.
  • தேசியக்கொடி, தேசிய கீதம் தாய்நாட்டில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
  • தேசிய விழாக்கள் கொண்டாடப்படுவதால் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துகின்றன.
  • நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒரே தேசத்தால் ஒன்றுபட்டுள்ளோம்.
  • விடுதலைப் போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்கின்றன.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள். (மாணவர்கள் செய்ய வேண்டியவை)

1. ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.
2. ஏதேனும் ஒரு மாநிலம் பற்றிய தகவல்களை அறிந்து, அம்மாநில மக்களின் பாரம்பரியம், பண்பாடு குறித்த தகவல்களை ஒரு புகைப்படத் தொகுப்பாக தயார் செய்க.
3. தமிழ் நாட்டின் கலை மற்றும் கட்டிடக்கலை சார்ந்த புகைப்படங்களை தொகுக்க.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

VII. சிந்தனை வினா:

Question 1.
நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக. மாநிலங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 80

VIII. வாழ்வியல் திறன்.

1. உனது பள்ளியில் ஒற்றுமையை நிலை நிறுத்த மேற்கொள்ளும் பரிந்துரைகள் யாவை?

1. பள்ளியில் சீருடை அணிதல்
2. மதம் சார்ந்த விழாக்களை கொண்டாடுவது
அ. – தீபாவளி
ஆ. – பொங்கல் விழா
இ. – ரம்ஜான் விழா
ஈ. – ஹோலிபண்டிகை
3. சர்வசமய பிரார்த்தனை நடத்துதல்
4. சமபந்தி உணவு ஏற்பாடு செய்தல்.
5. பள்ளி விளையாட்டு விழா, ஆண்டுவிழா, நடத்துதல்.
6. மாணவர்களின் திறனை வெளிக்கொணர கலைவார விழா நடத்துதல்

6th Social Science Guide பன்முகத் தன்மையினை அறிவோம் Additional Important Questions and Answers

I . சரியான விடையளித் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திராவிட மொழிகளில் பழமையானது.
அ) இந்தி
ஆ) தமிழ்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
விடை:
ஆ) தமிழ்

Question 2.
அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
அ) 13
ஆ) 18
இ) 22
ஈ) 25
விடை:
இ) 22

Question 3.
தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு.
அ) 2002
ஆ) 2004
இ) 2012
ஈ) 2008
விடை:
ஆ) 2004

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குருநானக் ஜெயந்தியைக் கொண்டாடுபவர்கள் _______
விடை:
சீக்கியர்கள்

Question 2.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு ______
விடை:
1947

Question 3.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் _____
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 4.
சமூகத்தின் அடிப்படை அலகு _____
விடை:
குடும்பம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 5.
பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் ______
விடை:
பங்க்ரா

III. சுருக்கமான விடை தருக.

Question 1.
குடும்பம் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறுக.
விடை:
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குடும்பம் என்பது இரு வகைப்படும்.

  1. கூட்டுக் குடும்பம்
  2. தனிக்குடும்பம்

Question 2.
சமுதாயம் என்றால் என்ன?
விடை:

  • சமூகம் என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும்.
  • சமுதாயம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள், பெற்றோர்கள், ‘ஆசிரியர்கள், மாணாக்கர் போன்ற பலரையும் உள்ளடக்கியது.

Question 3.
கண்டம் எனப்படுவது யாது?
விடை:
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பாகும்.

Question 4.
இந்தியாவில் பின்பற்றப்படும் மதங்களைக் குறிப்பிடுக.
விடை:
இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவமதம், சீக்கிய மதம், புத்த மதம், சமணமதம், ஜொராஸ்டிரியமதம் போன்ற மதங்கள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 90