Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

6th Social Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

அ) பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 20
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 21

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது.
விடை:
சர்க்கரை

Question 2.
வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
விடை:
கவனமாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது.
விடை:
உள்ளூர் வளங்கள்

Question 4.
தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கண்டறியப்பட்ட வளங்கள்

Question 5.
………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
விடை:
பணமதிப்புள்ள

Question 6.
இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
விடை:
முதல்நிலைச் செயல்பாடு

இ) சிறு குறிப்பு வரைக.

Question 1.
புதுபிக்கக் கூடிய வளங்கள்.
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி

Question 2.
மனித வளம்.
விடை:

  • இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Question 3.
தனிநபர் வளம்.
விடை:

  • தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  • எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள்.

Question 4.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
விடை:
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

ஈ) மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
வளங்கள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
  • எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு.
  • எ.கா. : பெட்ரோலியம், காற்று

Question 2.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
விடை:
தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படும். எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.

Question 3.
உயிரற்ற வளங்களை வரையறு.
விடை:

  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
  • எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

Question 4.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
விடை:

  • நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • வருங்கால தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைக்க வேண்டும்.
    இவ்வாறு சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

உ) சுருக்கமான விடையளி.

Question 1.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக. உள்ளூர் வளங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 60

Question 2.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
விடை:
கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறன் ஆகியவை மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக உருவாக்குகிறது. எனவே மனிதனை நாம் தனி ஒரு வளமாக கருதுகின்றோம்.
எ.கா. : மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் ஒப்பிடுக.
விடை:
நாட்டு வளங்கள் :
ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள். எ.கா. : இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

பன்னாட்டு வளங்கள் :
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : திமிங்கலப் புனுகு

Question 4.
மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 61

Question 5.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
விடை:

  • வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
  • உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனக் குற்றம் சாட்டும் மகாத்மா காந்தி வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுவதும், மனித தேவைகள் எல்லையை மீறுவதும் காரணங்களாக அமைகின்றன என்கிறார்.

ஊ) விரிவான விடையளி. (100 – 120 வார்த்தைகள் வரை)

Question 1.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
விடை:
இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

I. தோற்றத்தின் அடிப்படையில்
– உயிரியல் வளங்கள்
– உயிரற்ற வளங்கள்

  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். எ.கா. : தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

II. வளர்ச்சி நிலை அடிப்படையில்
– கண்டறியப்பட்ட வளங்கள்.
– மறைந்திருக்கும் வளங்கள்

  • கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
    எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
  • தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் உள்ளதுமான வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
    எ.கா. : வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் காடிச்சத்து.

III. புதுப்பித்தலின் அடிப்படையில்
– புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
– புதுப்பிக்க இயலா வளங்கள்

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படும்.எ.கா. : காற்று, நீர், சூரிய ஒளி
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்

Question 2.
வளங்களை பாதுகாப்பது எப்படி?
விடை:
வளங்களைப் பாதுகாத்தல் :

  • வளத்தினை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.
  • மக்கள் தொகையின் திடீர் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. வளங்கள் குறைந்து வரும் வேகமும் அதிகரிக்கிறது.
  • இதைத் தவிர்த்திட நிலையான வளர்ச்சி அவசியம்.

நிலையான வளர்ச்சி நடைபெற:

  • வீணாக்குதலையும் அதிகப்படியான பயன்பாட்டினையும் தவிர்க்க வேண்டும்.
  • மறுபயன்பாடுள்ள வளங்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
  • மாசைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வளங்களைப் பாதுகாக்க (3Rs) பின்பற்ற வேண்டும். அவைகள் குறைத்தல் (Reduce) மறுபயன்பாடு (Reuse) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 70 (Recycle)

Question 3.
வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
விடை:

  • வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகும்.
  • வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
  • வளங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமல்ல. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகிறது.
  • வளங்களை அதிக சுரண்டலில் இருந்து தடுத்து பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியம்.

Question 4.
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
விடை:
முதல்நிலை செயல்பாடுகள் :

  • பழங்கால மனிதர்கள் தங்களின் தேவைக்கேற்ப பொருட்களை சேகரித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாத்தனர்.
  • மனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
  • இவ்வாறான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற அவனது செயல்பாடுகள் முதல் நிலை செயல்பாடுகளாக அமைந்தன.
  • பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர் செய்து விவசாயத்தின் மூலம் தேவையை நிறைவு செய்தான்.
  • சுரங்கத்தொழில் இன்றைய நிலையிலும் முன்னிலை வகிக்கும் செயல்பாடாக உள்ளது.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகள்: இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருளாகக்
    கிடைக்கிறது. எ.கா. : கரும்பு → சர்க்கரை
  • மூலப்பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு ” இரண்டாம் நிலை செயல்பாடுகள்” எனப்படும்.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகளுக்கு மனிதத்திறனும் சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.

மூன்றாம் நிலை செயல்பாடுகள் :

  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருட்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பாகும்.
    எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்பு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

எ) வாக்கியமும் புரிதலும்

Question 1.
வாக்கியம் : வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்துக் கொண்டே வருகிறது.
புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது. சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
வாக்கியம் : வளங்களை பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களை பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2 : வளங்களை பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் 2 மட்டும் சரி

Question 3.
வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் மட்டும் சரி

ஏ. வளங்களை பாதுகாக்க மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற சொற்களை சரியான இடத்தில் எழுதுக.

Question 1.
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தல் ………….
விடை:
மறுபயன்பாடு

Question 2.
கழிப்பறையில் குறைவான நீரை பயன்படுத்துதல் …………..
விடை:
குறைத்தல்

Question 3.
பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கி சாலை அமைத்தல் ………….
விடை:
மறுசுழற்சி

ஐ. குறுக்கெழுத்துப் புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 75

இடமிருந்து வலம்:

Question 1.
எங்கும் காணப்படும் வளங்கள்
விடை:
உலகளாவிய வளம்

Question 2.
காலத்தை சமநிலையில் வைக்கும் வளர்ச்சி
விடை:
நிலையான வளர்ச்சி

Question 3.
சூரியனிடமிருந்து பெறப்படும் ஆற்றல்
விடை:
சூரிய ஆற்றல்

Question 4.
இயற்கையினால் அளிக்கப்படும் வளம்
விடை:
இயற்கை வளங்கள்

Question 5.
ஒரு நாட்டிற்கு சொந்தமான வளங்கள்
விடை:
நாட்டு வளங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 6.
குறிப்பிட்ட இடங்களில் காணப்படும் வளம்
விடை:
உள்ளூர் வளம்

மேலிருந்து கீழ் :

Question 1.
வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளில்
விடை:
மறுபயன்பாடு ஒன்று

Question 2.
திமிங்கலப் புனுகு வளம்
விடை:
இது ஒரு பன்னாட்டு

ஓ. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரச் செயல்பாடுகள் தொடர்பான படங்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91.1

ஒள) ஆசிரியர் செயல்பாடுகள்

1. பள்ளி அல்லது வகுப்பளவில் மாதத்திற்கு நெருநாள் “மின்சாரம் சேமித்தல் நாள்” கொண்டாடுதல்.
2. பயன்பாடற்ற பொருள்களைக் கொண்டு பள்ளியின் நடைக்கூடச் சுவர்ப் பகுதியை அலங்கரிக்கவும்.
3. பள்ளியின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு தொழிற்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவும்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் தொடர்பான படங்கள் சேகரிக்கச் செய்தல்.
1. மீன் பிடித்தல்
2. வேட்டையாடுதல்
3. உணவு சேகரித்தல்
4. காட்டு வளங்களைச் சேகரித்தல்
5. சுரங்கத் தொழில்
6. விவசாயம்
7. கால்நடை வளர்த்தல்
8. மரங்களை வெட்டுதல்

6th Social Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரு முக்கிய காரணிகள் …………
விடை:
காலமும் தொழில்நுட்பமும்

Question 2.
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் …………. எனப்படும்.
விடை:
இயற்கை வளங்கள்

Question 3.
புவியைத் தோண்டும் முயற்சியின் போதுதான் மனிதன் வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் …………… செய்தான்.
விடை:
அணிகலன்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 4.
புதுப்பிக்க இயலாத வளங்கள் அனைத்தும் ஒருநாள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ………….. போய்விடும்.
விடை:
இல்லாமல்

Question 5.
திமிங்கலப் புனுகு …………… தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
வாசனை திரவியங்கள்

Question 6.
கடல் காடிச்சத்தானது நிலக்காடிச் சத்தை விட மிகுந்த …………..
விடை:
வீரியத் தன்மையுடையது

ஆ) சிறுகுறிப்பு வரைக

Question 1.
புதுப்பிக்க இயலா வளங்கள் :
விடை:
குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். எ.கா. நிலக்கரி, பெட்ரோலியம்

Question 2.
சமூக வளங்கள் :
விடை:
ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் வளத்தினை பயன்படுத்திக் கொள்வர். இது சமூகவளம் எனப்படும். எ.கா. பூங்கா

Question 3.
உலகின் பெரும் மருந்தகம் :
விடை:

  • வெப்ப மண்டல மழைக்காடுகள் உலகின் பெரும் மருந்தகம்’ எனப்படுகிறது.
  • இங்கு காணப்படும் தாவரங்களில் 25ரூ மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். எ.கா. சின்கோனா.

இ) மிகச் சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்கள் எதனடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:

  • தோற்றம்
  • வளர்ச்சி நிலை
  • புதுப்பித்தல்
  • பரவல்
  • உரிமை

Question 2.
ஆரம்ப நிலையில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் யாவை?
விடை:

  • உணவு
  • உடை
  • இருப்பிடம்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்கள் சிலவற்றைக் குறிப்பிடு.
விடை:

  • நிலக்கரி
  • பெட்ரோலியம்
  • இயற்கை வாயு
  • கனிமங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 99