Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ……..
விடை:
விவசாயி

Question 2.
‘தேன் சேகரித்தல்’ என்பது ……………… தொழில்.
விடை:
முதல்நிலைத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மூலப்பொருட்களை பயன்பாட்டு பொருட்களாக மாற்றுவது ……… எனப்படும்.
விடை:
இரண்டாம் நிலை தொழில்கள்

Question 4.
காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ……………
விடை:
முதுகெலும்பு

Question 5.
தமிழ்நாட்டில் …………. சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
விடை:
47

II. பொருத்துக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 1
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 51

III. பொருந்திய பின் பொருந்தாத இணையை கண்டறிக.

Question 1.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 52
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 53
பொருந்தாத இணை : சிறிய அளவிலான தொழிற்சாலை – கால்நடை வளர்ப்பு

IV. சரியான விடையைக் கண்டறிக.

Question 1.
வேளாண்மை என்பது முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
முதன்மை

Question 2.
பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பயன்பாடு

Question 3.
சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை:
இரண்டாம்

Question 4.
வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை / மரச்சாமான்கள்).
விடை:
பருத்தியாலை

Question 5.
பால் பண்ணை ஒரு (பொது நிறுவனம் கூட்டுறவு துறை)
விடை:
கூட்டுறவுத்துறை

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
சந்தை – வரையறு.
விடை:
கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பொதுவான ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற பொருள்களை ஒருங்கிணைந்து விற்பனை செய்யும் இடம் தான் சந்தை.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 2.
பண்டமாற்று முறை என்றால் என்ன?
விடை:

  • பண்டமாற்று முறை என்றால் ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் கொள்வது.
  • எ.கா. ஒரு மூட்டை அரிசிக்கு பதிலாக தேவையான அளவு துணியைப் பெற்றுக் கொள்வதாகும்.

Question 3.
வணிகம் என்றால் என்ன?
விடை:
வணிகம் என்பது மனிதனது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.

Question 4.
சேமிப்பு என்றால் என்ன?
விடை:
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்கு செலவு செய்தது போக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

Question 5.
பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
விடை:

  • பண்டங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் போது பண்டங்களின் மதிப்பில் பல வேறுபாடுகள் தோன்றுகின்றன.
  • இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.

Question 6.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?
விடை:

  • நீர்நிலைகள் வேளாண்மை செய்வதற்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கின.
  • எனவே பழங்கால மக்கள் நீர்நிலைகள் அருகே நிரந்தரமாகக் குடியேறினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 7.
இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
விடை:
முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.

Question 5.
நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
விடை:
மின்னகம், கப்பல் கட்டுமானம், அலுமினியம், இரசாயனம், தானியுதிரிப் பாகங்கள், இருப்புப்பாதை, தோல், உரங்கள்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக.

Question 1.
உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக.
விடை:

  • வேளாண்மை
  • கால்நடை வளர்த்தல்
  • கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள் போன்றவை சேகரித்தல்.

Question 2.
உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தி தொழிற்சாலைகளை குறிப்பிடுக.
விடை:

  • பருத்தி தொழில்
  • நெய்யுந்தொழில்
  • உணவு பதப்படுத்துதல்
  • பீடி தயாரிப்பு
  • காற்றாலை உற்பத்தி

Question 3.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:
மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 70

Question 4.
சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 80

Question 5.
நகரங்களின் அம்சங்களாக நீ அறிவன யாவை?
விடை:

  • கிராமங்களை விட நகரங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம்.
  • சிறுதொழில் செய்பவர்கள் தொடங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை நகரத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
  • நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றமதி, இறக்குமதி சிறப்பாக நடக்க துணை புரிகின்றன.
  • வங்கி கிளைகள் நகரங்களில் அதிகம். இப்படி அன்றாட பணப்புழக்கத்திற்கு பெருமளவில் வங்கிகள் உதவி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கம் துணையாக நிற்கிறது.
  • நவீன மருத்துவ வசதி எளிதில் கிடைக்கப்பெறும்.

VII. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 81
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 82
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 83

செயல்பாடு :

”சிந்து நதியின் மிசை நிலவினிலே” என்ற பாரதியாரின் பாடலிலுள்ள வரிகளை எழுதவும். இப்பாடலில் பண்டமாற்று முறையின் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்ட பொருட்கள் எவையெவை என ஆசிரியர் உதவியுடன் அறிந்து கொள்ளவும்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்
நாட்டியம் பெண்களுடனே சுந்தர தெலுங்கினில்
பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி
வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்கமராட்டியர்
தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில்
ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம்.

  1. கோதுமை
  2. வெற்றிலை
  3. தந்தம்

VIII. படங்களை ஒட்டவும் (மாணவர்களுக்கானது)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 85

6th Social Science Guide பொருளியல் – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நீர்நிலைகள் அருகே நிரந்தரமாக அமைக்க பெற்ற குடி இருப்புகள் ………….. என்று அழைக்கப்பட்டன.
விடை:
கிராமம்

Question 2.
உலக மக்கள்தொகையில் …………… சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் தான் வாழ்கிறார்கள்.
விடை:
50

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம்

Question 3.
மக்களின் அன்றாடத் தேவைகளை …… துறை வழங்குகிறது.
விடை:
சேவைத்

Question 4.
பொருட்களை பயன்படுத்துவோர் ………. என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
நகர்வோர்

Question 5.
“நகரங்களின் நிழல்” எனப்படுவது ………..
விடை:
கிராமம்

II. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மூன்றாம் நிலை தொழில்கள் ……….. துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) தனியார்
ஆ) சேவைத்
இ) பொது
விடை:
ஆ) சேவைத்

Question 2.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொழில்கள் …………. மையமாகக் கொண்டே இயங்குகின்றன.
அ) நகரங்களை
ஆ) பட்டணங்களை
இ) கிராமங்களை
விடை:
அ) நகரங்களை

Question 3.
கிராமங்களில் ………. தான் பிரதானமான வேலையாக இருக்கும்.
அ) கனிமங்கள் சேகரித்தல்
ஆ) மீன்பிடித்தல்
இ) விவசாயம்
விடை:
இ) விவசாயம்

III. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
நுகர்வோர் பொருட்கள் என்றால் என்ன?
விடை:
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
விடை:
வேளாண்மை மற்றும் மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள் உழவர்கள், விவசாயிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Question 3.
தொழில்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

Question 4.
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை யாவை?
விடை:
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Economics Chapter 1 பொருளியல் – ஓர் அறிமுகம் 90