Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்
6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Text Book Back Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Question 1.
தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
Question 2.
இந்தியாவின் தேசிய கீதம். ……….
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த
விடை:
அ) ஜன கண மன
Question 3.
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
Question 4.
…………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
அ) மகாத்மா காந்தி
Question 5.
நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
விடை:
ஆ) கருநீலம்
Question 6.
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை கோட்டை
Question 7.
தேசிய கீதத்தை இயற்றியவர் …………..
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
விடை:
இ) ரவீந்திரநாத் தாகூர்
Question 8.
தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
விடை:
இ) 52 வினாடிகள்
Question 9.
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
விடை:
ஆ) ரவீந்திரநாத் தாணர்
Question 10.
விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
விடை:
அ) பிரதம அமைச்சர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
சாரநாத்
Question 2.
இந்தியாவின் தேசியக் கனி …………….
விடை:
மாம்பழம்
Question 3.
இந்தியாவின் தேசியப் பறவை …………
விடை:
மயில்
Question 4.
இந்தியாவில் தேசிய மரம் ………..
விடை:
ஆலமரம்
Question 5.
1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
குடியாத்தம்
Question 6.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………
விடை:
பிங்காலி வெங்கையா
Question 7.
சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..
விடை:
கனிஷ்கர்
Question 8.
இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..
விடை:
கங்கை
Question 9.
இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………
விடை:
டி. உதயகுமார்
Question 10.
தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.
விடை:
24
III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
விடை:
சாரநாத்
Question 2.
தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)
விடை:
1950
Question 3.
……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
விடை:
லாக்டோபேசில்லஸ்
IV. நிரப்புக.
Question 1.
காவி – தைரியம்; வெள்ளை – ……………
விடை:
நேர்மை
Question 2.
குதிரை – ஆற்றல்; காளை – ……………….
விடை:
கடின உழைப்பு
Question 3.
1947 – விடுதலை நாள்; 1950 – ……….
விடை:
குடியரசு நாள்
V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
விடை:
ஈ அ ஆ இ
VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?
விடை:
1 – இ,
2 – ஈ,
3 – அ,
4 – ஆ
VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை:
1 – இ
Question 2.
அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
2 – ஆ
VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விடை:
1
IX. விடையளிக்கவும்.
Question 1.
தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
விடை:
- காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
- பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
- வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
- கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.
Question 2.
தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
விடை:
- மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.
Question 3.
தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
விடை:
- ஜன கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
- ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.
Question 4.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
விடை:
- இந்திய ரூபாய்க் குறியீடு என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணக்குறியீடு ஆகும். (வடிவமைத்தவர் டி. உதயகுமார்)
- இந்த வடிவமைப்பு இந்திய அரசால் 15 ஜூலை 2010-ல் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
Question 5.
தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
Question 6.
தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?
விடை:
தேசிய உறுதி மொழியை எழுதியவர் பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.
Question 7.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
விடை:
யானை, குதிரை, காளை மற்றும் சிங்கம்
Question 8.
இயற்கை தேசிய சின்னங்கள் எவை?
விடை:
- ஆலமரம் – மயில்
- கங்கை ஆறு
- ஆற்று ஓங்கில்
- ராஜநாகம்
- தாமரை
- புலி
- யானை
- லாக்டோபேசில்லஸ்
- மாம்பழம்
Question 9.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விடை:
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)
1. இயற்கை தேசியச் சின்னங்களைக் காட்சிப்படமாக வரைக / கதை உருவாக்குக.
2. உன் வகுப்பு / பள்ளிக்கான அடையாளக் குறியீட்டை (Logo) உருவாக்குக.
Question 3.
அறுகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் கலந்துரையாடுக.
விடை:
- உயிரினங்களின் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது தலையாய பணியாகும்.
- உயிரினங்கள் பாதுகாப்பில் எந்த மையங்கள் செயல்படுகிறது என்பதை தெரிந்து வைத்து கொண்டிருக்க வேண்டும்.
- அம்மையங்களுக்கு உறுதுணையாக இருந்து நம்மால் இயன்ற சேவையை செய்ய வேண்டும்.
Question 4.
பள்ளியில் நடைபெற்ற தேசிய விழா / நிகழ்வு குறித்து உள்ளூர் செய்தித்தாளுக்கு செய்தி அறிக்கை தயாரிக்கவும்.
விடை:
கண்களுக்கு விருந்து!
- ஏஞ்சல் பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பு, உடற்பயிற்சி மற்றும் கலைநிகழ்ச்சி, சுதந்திரதின விழாவின் முக்கியமான நிகழ்வுகள்.
- வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டியங்கள் அமைக்கப்பட்ருந்தன.
XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)
Question 1.
குறிப்பிட்ட சில உயிரினங்களை மட்டும் தேசியச் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணங்களை ஆய்க.
விடை:
- இந்திய குடிமகனின் ஆழ் மனதில் நாட்டின் பெருமைகளை விதைப்பதற்கும்.
- இந்தியா மற்றும் இந்தியர்களின் தனி தன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கும்.
6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Additional Important Questions and Answers
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
திருப்பூர் குமரனின் …… மற்றும் ………. நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது
விடை:
அர்ப்பணிப்பு, தியாகத்தை
Question 2.
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடியை ………….. 15.08.1947ல் செங்கோட்டையில் முல்லி) ஏற்றினர்.
விடை:
ஜவஹர்லால் நேரு
Question 3.
16ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரியால் வெளியிடப்பட்ட நாணயம் ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ரூபாய்
Question 4.
…………… செரிமானத்துக்கும், குளிர்ச்சி தருவதற்கும் உகந்தது.
விடை:
தயிர்
Question 5.
1947-ல் இருந்து 26 ஜனவரி 1950 வரை ……….. இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.
விடை:
பிரிட்டனின் அரசி
Question 6.
முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் ………. என அழைக்கப்பட்டது.
விடை:
இமாம்பசந்த்
II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
Question 1.
தேசியக் கீதத்தை பாடும் போது பின்பற்ற வேண்டியன யாவை?
விடை:
- பாடும் போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
- பொருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்.
Question 2.
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள் பட்டியலிடுக.
விடை:
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில மலர் – செங்காந்தள் மலர்
மாநில மலர் – பனைமரம்
மனவரைபடம்