Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 2 மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Text Book Back Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Question 1.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அ) அங்கங்கள்
ஆ) திரிபிடகங்கள்
ஆ) திருக்குறள்
ஈ) நாலடியார்
விடை:
ஆ) திரிபிடகங்கள்
Question 2.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
அ) ரிஷபா
ஆ) பார்சவ
இ) வர்தமான
ஈ) புத்தர்
விடை:
அ) ரிஷபா
Question 3.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
அ) 23
ஆ) 24
இ) 25
ஈ) 26
விடை:
ஆ) 24
Question 4.
மூன்றாம் பௌத்தசபை எங்கு கூட்டப்பட்டது?
அ) ராஜகிரகம்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) காஷ்மீர்
விடை:
இ) பாடலிபுத்திரம்
Question 5.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
அ) லும்பினி
ஆ) சாரநாத்
இ) தட்சசீலம்
ஈ) புத்தகயா
விடை:
ஆ) சாரநாத்
II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக /பொருத்தமான விடையை தேர்ந்தெடு.
Question 1.
கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்துகொள்ள இயலாது.
காரணம் : உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.
ஆ) கூற்று தவறானது.
இ) கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.
விடை:
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை
Question 2.
கூற்று : ஜாதகங்கள் புகழ்பெற்ற கதைகளாகும்.
காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளை சித்தரிக்கின்றன. அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.
ஆ) கூற்று தவறு.
இ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
அ) சுற்றும் அதன் காரணமும் சரி
Question 3.
சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
1. கல்வி கூடமாக
2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக
4. வழிபாட்டுக் கூடம்
அ) 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 1, 2, 4 ஆகியவை சரி
ஈ) 1 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1 மற்றும் 3 சரி
Question 4.
சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்ட கூற்றுகளைக் காரணமாக கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களை குழப்பமுறச் செய்தன. மேற்சொல்லப்பட்ட கூற்றில் / கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2
Question 5.
சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது.
ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக்கொள்கிறது.
இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலை வழிபாடாகும்.
ஈ) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக்கொள்கிறது.
விடை:
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது
Question 6.
பொருந்தாததை வட்டமிடு.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
விடை:
பார்சவா
Question 7.
தவறான இணையைக் கண்டுபிடி.
அ) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்
ஆ) சத்யா – உண்மைபேசுதல்
இ) அஸ்தேய – திருடாமை
ஈ) பிரம்மச்சரியா – திருமணநிலை
விடை:
ஈ) பிரம்மச்சரியா – திருமண நிலை
Question 8.
சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்.
இ) அவர் நிர்வாணம் அடைந்தார்.
ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.
விடை:
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
மகாவீரரின் கோட்பாடு ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சமணம்
Question 2.
………………. என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.
விடை:
நிர்வாண நிலை
Question 3.
பௌத்தத்தை நிறுவியவர் …………… ஆவார்.
விடை:
கௌதம புத்தர்
Question 4.
காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் ……………. என்று அழைக்கப்பட்டது.
விடை:
ஜைனக்காஞ்சி
Question 5.
……………… என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.
விடை:
ஸ்தூபி
IV. சரியா? தவறா?
Question 1.
புத்தர் கர்மாவை நம்பினார்.
விடை:
சரி
Question 2.
புத்தருக்கு சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.
விடை:
தவறு
Question 3.
கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.
விடை:
சரி
Question 4.
விகாரைகள் என்பன கோவில்களாகும்.
விடை:
தவறு
Question 5.
அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.
விடை:
சரி
V. பொருத்துக.
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
Question 1.
சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை?
விடை:
- நன்னம்பிக்கை
- நல்லறிவு
- நற்செயல்
Question 2.
பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை?
விடை:
- ஹீனயானம்
- மகாயானம்
Question 3.
‘ஜினா என்பதின் பொருள் என்ன?
விடை:
ஜினா என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.
Question 4.
பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக.
விடை:
- வேதங்களின் ஆதிக்கத்தை வெறுத்தல்.
- இரத்த பலிகளை எதிர்த்தல்.
Question 5.
பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக.
விடை:
- புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம்.
- சங்கத்தின் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள் என அழைக்கப்பட்டனர்.
- மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டனர்.
Question 6.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
யுவான் சுவாங்
Question 7.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன?
விடை:
கவந்தியடிகள்
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Question 1.
பௌத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- நல்ல நம்பிக்கை
- நல்ல எண்ணம்
- நல்ல பேச்சு நல்ல செயல்
- நல்ல வாழ்க்கை
- நல்ல முயற்சி
- நல்ல அறிவு
- நல்ல தியானம்
Question 2.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
விடை:
- அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
- சத்யா – உண்மையை மட்டுமே பேசுதல்
- அஸ்தேய – திருடாமை
- அபரிக்கிரகா – பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
- பிரம்மச்சரியா – திருமணம் செய்து கொள்ளாமை.
Question 3.
பௌத்தத்தின் நான்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும்.
விடை:
- வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள் நிறைந்தது.
- ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
- ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கிவிடலாம்.
- சரியான பாதையைப் பின்பற்றினால் (எண் வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
Question 4.
பௌத்தத்தின் பிரிவுகளான ஹினயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபாடுகளை எழுதவும்.
விடை:
ஹீனயானம் :
- புத்தரின் சிலைகளையோ உருவப்படங்களையோ வணங்கமாட்டார்கள்.
- மிக எளிமையாக இருப்பர்.
- பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.
மகாயானம் :
- புத்தரின் உருவங்களை வணங்கினர்.
- விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
- சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்.
Question 5.
சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
விடை:
சமணம் :
- அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
- கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் சமண பெண் துறவியான கவுந்தியடிகள் அவர்களை ஆசீர்வதித்து அவர்களுடன் சென்றதாக தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
பௌத்தம் :
- சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அசோகரால் கட்டப்பட்ட 100 அடி உயரமுள்ள ஸ்தூபியை அவர் பார்த்தார்.
VIII. உயர் சிந்தனை வினா
Question 1.
கர்மா – ஒரு மனிதனின் செயல்கள். ஏதாவது 10 நல்ல செயல்களைக் குறிப்பிடுக.
விடை:
- தேவையில் இருக்கின்ற நண்பனுக்கு உதவுதல்.
- உங்களின் முதல் நற்காரியம் பிறரன்புப் பணிக்காக (தர்மம்) இருக்கட்டும்.
- ஒரு மரம் நடுவோம்.
- பழைய அலைபேசியொன்றை தானம் செய்வோம்.
- இரத்ததானம் செய்வோம்.
- நம்மில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் சிறந்த நபராக மாற தீர்மானிப்போம்.
- சுய கௌரவத்தை விழுங்கி, பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ செய்யப்பட்ட ஒரு செயலுக்காக – மன்னிப்பு வேண்டுவோம்.
- பள்ளிக்கல்விக்குத் தேவையான பொருட்களை, உரிமைகளின் தேடலில் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்கு வழங்குவோம்.
- தொலைபேசியில் உரையாடும் பொழுது இனிமையாக உரையாடுவோம்.
- உணவுப்பொருள் வாங்க வெளியே செல்கின்ற பொழுது கூடுதலாக ஒரு பொருளை வீடற்ற ஒருவருக்கு அல்லது உணவுக் கூடத்திற்கு வழங்குவதற்காக வாங்குவோம்.
IX. மாணவர் செயல்பாடு
1. ஜாதகக் கதைகளில் ஒன்றை வாசிக்கவும். அதை நீயே சொந்தமாக எழுதவும்.
2. கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒரு அட்டவணை தயார் செய்யவும்.
விடை:
Question 3.
கீழ்க்காணும் வார்த்தைகளை பொருத்தமான கட்டத்திற்குள் இடவும்.
விடை:
வார்த்தைகள் : ஜினா, மகாயானா, தீர்த்தங்கரர்கள், ஸ்தூபிகள், நிர்வாணா, திகம்பரர், திரிபிடகங்கள் – ஆகமசித்தாந்தம்.
Question 4.
தகவல் அட்டை தயாரித்தல் – செயல்பாடு
கீழ்க்காணும் மதங்கள் குறித்த செய்திகளைக் கொண்ட அட்டைகள் தயார் செய்யவும்.
விடை:
இந்து மதம், கிறித்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம்.
விடை:
இந்து மதம் :
- தசாவதாரம்
- ருத்ர தாண்டவம்
- மனுதர்மம்
- சிவன் – விஷ்ணு
- மகா கும்பமேளா
கிறித்துவம் :
- சிலுவையில் அறைதல்
- புனித கடல் (Holy Sea)
- நாசரேத்
- மலைப்பொழிவு
- 12 சீடர்கள்
இஸ்லாம் :
- மெக்கா
- 786
- ஹிஜிரா
- குரான்
- முகம்மது நபி
பொத்தம் :
- ஹீனயானம்
- புத்த கயா
- தம்மம்
- திரிபீடகம்
- ஸ்தூபிகள்
சமணம் :
- தீர்த்தங்கரர்கள்
- சுவேதாம்பரர்
- அறவோர் பள்ளி
- கவுந்தியடிகள்
- திரிரத்தினங்கள்
Question 5.
‘வென் வரைபடம் மூலம் சமணத்துக்கும் பௌத்தத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளைச் சுட்டிக்காட்டுக.
விடை:
Question 6.
குறுக்கெழுத்து புதிர்
இடமிருந்து வலம் :
1. மூன்று ரத்தினங்களுள் ஒன்று
2. புத்தரின் போதனைகள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.
3. ஒரு சிறந்த கல்வி மையம்
4. புத்தர் ஞானம் பெற்ற இடம்
5. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
வலமிருந்து இடம் :
6. சித்தார்த்தரின் தாயார்
7. மனித வாழ்க்கையை அவரின் செயலே தீர்மானிக்கிறது.
மேலிருந்து கீழ் :
8. லும்பினி ……………. மாநிலத்தில் உள்ள து.
9. புத்த வழிபாட்டுக் கூடம்
10. பிறப்பு இறப்பு ஆகியவற்றில் இருந்து விடுதலை
11. கௌதம சுவாமியால் தொகுக்கப்பட்ட சமணநூல்
விடை :
இடமிருந்து வலம் :
1. நற்செயல் (அல்லது) நல்லறிவு
2. தர்மம்
3. நாளந்தா
4. கயா
5. அகிம்சை
வலமிருந்து இடம் :
6. மாயா
7. கர்மா
மேலிருந்து கீழ் :
8. நேபாளம்
9. சைத்தியம்
10. நிர்வாணம்
11. ஆகம சித்தாந்தா
X. வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)
பௌத்தம், சமணம் குறித்த கதை அட்டைகளைத் தயாரிக்கவும் (மாதிரி)
விடை:
XI. கட்டக வினாக்கள்
விடை:
- சுவேதாம்பரர் /ஞானம் பெற்றவர் / மகாவீரர்
- புத்தர் / நான்கு /பௌத்தம்
- ஜாதகக்கதைகள் /புகார், உறையூர், மதுரை, காஞ்சி /சிலப்பதிகாரம்
6th Social Science Guide மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Additional Important Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Question 1.
கீழக்குயில் குடி கிராமத்தில் உள்ள சமணர் மலை ………… நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
அ) திருச்சி
ஆ) சென்னை
இ) புதுக்கோட்டை
ஈ) மதுரை
விடை:
ஈ) மதுரை
Question 2.
சித்தார்த்தா தனது …………. வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.
அ) 19
ஆ) 29
இ) 39
ஈ) 49
விடை:
ஆ) 29
Question 3.
………… உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.
அ) தர்ம சக்கரம்
ஆ) சட்ட சக்கரம்
இ) தம்ம சக்கரம்
ஈ) வாழ்க்கை சக்கரம்
விடை:
ஈ) வாழ்க்கை சக்கரம்
Question 4.
மகாயானத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி ………
அ) சமஸ்கிருதம்
ஆ) பிராகிருதம்
இ) பிராமி
ஈ) அரமாயிக்
விடை:
அ) சமஸ்கிருதம்
II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு.
Question 1.
கூற்று : கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். காரணம் : சமயத்தின் பெயரால் செயப்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.
அ) கூற்று தவறானது.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை.
இ) கூற்றும் காரணமும் சரி.
ஈ) கூற்று சரி. ஆனால் அதற்கான காரணம் தவறு.
லிடை:
இ) கூற்றும் காரணமும் சரி
Question 2.
சரியான விடையைக் கண்டறியவும்.
வர்த்தமானர்
1. ஒரு சத்திரிய இளவரசர்
2. பன்னிரண்டரை ஆண்டு கால தவத்திலிருந்தார்
3. இவர் தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர்.
4. முதல் தீர்த்தங்கரர் ஆவார்.
அ) அனைத்தும் சரி
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி
இ) அனைத்தும் தவறு
ஈ) 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 4ஐத் தவிர அனைத்தும் சரி
III . கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
புகழ்பெற்ற பௌத்த தர்க்க வியல் அறிஞர் …………..
விடை:
தின்னகர்
Question 2.
வர்த்த மானர் என்பதற்கு …………… என்று பொருள்.
விடை:
செழிப்பு
Question 3.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை ………… என்று குறிப்பிடுகின்றன.
விடை:
சமணம்
Question 4.
சித்தார்த்தரின் சிற்றன்னை ……………
விடை:
கௌதமி
IV. சரியா? தவறா?
Question 1.
ஆறாம் நூற்றாண்டில் வேள்விச் சடங்குகளுக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்தது.
விடை:
சரி
Question 2.
உறையூரில் பௌத்த விகாரை இருந்தது.
விடை:
தவறு
Question 3.
புத்தர் ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார்.
விடை:
தவறு
Question 4.
சமணம் இந்தியாவில் மட்டுமே இருந்தது.
விடை:
சரி
V. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
Question 1.
சமணத்தின் இரு பிரிவுகள் யாவை?
விடை:
- திகம்பரர்
- சுவேதாம்பரர்
Question 2.
‘தர்ம சக்கர பரிவர்த்தனா என்றால் என்ன?
விடை:
புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை சாரநாத்தில் உள்ள மான்கள் பூங்கா என்ற இடத்தில் நிகழ்த்தினார். இது தர்ம சக்கர பரிவர்த்தனா என்றழைக்கப்படுகிறது.
VII. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
Question 1.
புத்தரின் நான்கு பெரும் காட்சிகள் பற்றி எழுதுக.
விடை:
சித்தார்த்தா தனது 29வது வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார். அவை
- கூன் விழுந்த முதுகுடனும், கந்தல் ஆடைகளுடனும் கவனிப்பாரற்ற ஒரு முதியவர்.
- குணப்படுத்த முடியாத வியாதியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளி.
- இறந்துவிட்ட ஒரு மனிதனின் சடலம் அழுது கொண்டிருக்கும் அவனின் உறவினர்களால் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுதல்.
- ஒரு துறவி
மனவரைபடம்