Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
அ) கால்டுவெல்
ஆ) F.W. எல்லிஸ்
இ) சீகன்பால்கு
ஈ) மீனாட்சி சுந்தரனார்
விடை:
இ சீகன்பால்கு

Question 2.
1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.
அ) இரட்டைமலை சீனிவாசன்
ஆ) B.R. அம்பேத்கார்
இ) ராஜாஜி
ஈ) எம்.சி. ராஜா
விடை:
அ) இரட்டைமலை சீனிவாசன்

Question 3.
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.
அ) 1918
ஆ) 1917
இ) 1916
ஈ) 1914
விடை:
அ) 1918

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 4.
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.
அ) பணியாளர் தேர்வு வாரியம்
ஆ) பொதுப் பணி ஆணையம்
இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
ஈ) பணியாளர் தேர்வாணையம்
விடை:
அ) பணியாளர் தேர்வு வாரியம்

Question 5.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அ) எம்.சி. ராஜா
ஆ) இரட்டை மலை சீனிவாசன்
இ) டி.எம். நாயர்
ஈ) பி. வரதராஜூலு
விடை:
அ) எம்.சி. ராஜா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.
விடை:
தமிழ்

Question 2.
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.
விடை:
F.W. எல்லிஸ்

Question 3.
……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
விடை:
மறைமலையடிகள்

Question 4.
தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.
விடை:
நீதிக்கட்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 5.
சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.
விடை:
பரிதிமாற்கலைஞர்

Question 6.
…………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
விடை:
ஆபிரகாம் பண்டிதர்

Question 7.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………
விடை:
டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

அ) (i), (ii) ஆகியன சரி
ஆ) (i), (iii) ஆகியன சரி
இ) (iv) சரி
ஈ) (ii), (iii) ஆகியன சரி
விடை:
ஆ) (i), (iii) ஆகியன சரி

Question 2.
கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு.
ஈ) கூற்று சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .
விடை:
அ) காரணம், கூற்று ஆகியவை சரி.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின.
  • அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 2.
தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பை நன்குப் புலப்படுத்துக.
விடை:

  • தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ – ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.
  • ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.
  • திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழன் தொன்மையையும் நிலைநாட்டினார்.

Question 3.
தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டிலிடவும்.
விடை:
சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், சுப்பிரமணிய பாரதி, ச. வையாபுரி, கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில் தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின்
புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

Question 4.
நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
விடை:

  • நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
  • அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

Question 5.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.

Question 6.
பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
விடை:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
விடை:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை.தாமோதரனார் உ.வே. சாமிநாதர் போன்றவர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர்.

சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.

திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர்.

தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது.

வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.

சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர் மறைமலையடிகள். சுப்பிரமணிய பாரதி. ச.வையாபுரி. கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில், தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

வி. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

பண்டிதர் அயோத்திதாசரும் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தனர்.

Question 2.
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்.
விடை:
1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்தனர்.

நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.

சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர்.

ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது.

இச்சமூகத் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது.

சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையம் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன.

நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது.

இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப்பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.

Question 3.
தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈவே.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
விடை:
பெரியார் ஈ.வெ.ரா:

  • பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
  • 1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது.
  • இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார்.

பெரியார் ஒரு பெண்ணியவாதி:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
  • குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன. என்றார்.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் “பெண் ஏன் அடிமையானாள்?” என்பதாகும்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Question 2.
……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அ) 1999
ஆ) 1909
இ) 1990
ஈ) 1899
விடை:
ஆ) 1909

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 3.
தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.
அ) பிரான்ஸ்
ஆ) சமஸ்கிருதம்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) சமஸ்கிருதம்

Question 4.
சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
அ) 1996
ஆ) 1932
இ) 1923
ஈ) 1899
விடை:
இ 1923

Question 5.
……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
அ) பெரியார்
ஆ) காமராஜ்
இ) காந்திஜி
ஈ) நேரு
விடை:
அ) பெரியார்

Question 6.
M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு
ஆ) கீழ் வகுப்பு
இ) மேல் வகுப்பு
ஈ) நடுத்தர வகுப்பு
விடை:
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

Question 7.
அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.
அ) ஆக்ரா
ஆ) கொல்கத்தா
இ) பம்பாய்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பம்பாய்

Question 8.
சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.
அ) M.C. ராஜா
ஆ) M. சிங்காரவேலர்
இ) அடிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) M. சிங்காரவேலர்

Question 9.
இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) இவையெல்லாம்
விடை:
ஆ) தமிழ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.
விடை:
கருத்தியல்

Question 2.
தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.
விடை:
தமிழ் மறுமலர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 3.
……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.
விடை:
பௌத்தம்

Question 4.
………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.
விடை:
மறைலை அடிகள்

Question 5.
நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.
விடை:
இந்து சமய அறநிலை

Question 6.
பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.
விடை:
ஆணாதிக்க

Question 7.
1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.
விடை:
ஆதிதிராவிட மகாஜன சபை

Question 8.
……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
விடை:
பெண்களின் விடுதலை

Question 9.
………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.
விடை:
மதராஸ் தேவதாசி சட்டம்

Question 10.
மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.
விடை:
15 ஆண்டுகள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும்.
காரணம் : பண்பாடு மற்றும் உணர்வுகளோடு இயைந்திருப்பதால்.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
இ காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 2.
கூற்று : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார். ‘மதராஸ் தேவதாசி’ சட்டத்தை இயற்றினார்.
காரணம் : 1949ல் இச்சட்டம் இயற்றப்பட்டது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ஆ) காரணம் சரி, கூற்று தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
எந்தெந்த துறைகளில் மனிதநேயம் படைப்பாற்றலைத் தூண்டியது?
விடை:
சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் படைபாற்றலைத் தூண்டி எழுப்பியது.

Question 2.
நீதிக்கட்சியின் செயல்பாடுகளைக் கூறு.
விடை:

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

Question 3.
இரட்டைமலை சீனிவாசன் பற்றிக் கூறு.
விடை:

  • இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக
  • ராவ்சாகிப் (1926),
  • ராவ் பகதூர் (1936),
  • திவான் பகதூர் (1936)
  • ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.

Question 4.
பெண்கள் இயக்கங்கள் யாவை?
விடை:

  • இந்தியப் பெண்கள் சங்கம் (WIA)
  • அகில இந்திய பெண்கள் மாநாடு (ALWC)

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 5.
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • முத்துலட்சுமி அம்மையார்,
  • நாகம்மை ,
  • கண்ணம்மா,
  • நீலாவதி,
  • மூவலூர் இராமாமிர்தம்,
  • ருக்மணி அம்மாள்,
  • அலமேலு மங்கை தாயாரம்மாள்,
  • நீலாம்பிகை மற்றும்
  • சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
பெண்களின் இயக்கங்களைப் பற்றி விவரிக்க.
விடை:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன.

அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம், அகில இந்தியப் பெண்கள் மாநாடு ஆகியவை முக்கியமானவையாகும்.

இந்தியப் பெண்கள் சங்கம் என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது.

இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டனர்.

பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினார்.

தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டு கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர்.
முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 5 செவ்வியல் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 5 செவ்வியல் உலகம்

9th Social Science Guide செவ்வியல் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
_____ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
அ) அக்ரோபொலிஸ்
ஆ) ஸ்பார்ட்டா
இ ஏதென்ஸ்
ஈ) ரோம்
விடை:
இ) ஏதென்ஸ்

Question 2.
கிரேக்கர்களின் மற்றொரு பெயர் _____ ஆகும்.
அ) ஹெலனிஸ்டுகள்
ஆ) ஹெலனியர்கள்
இ பீனிசியர்கள்
ஈ) ஸ்பார்ட்டன்கள்
விடை:
ஆ) ஹெலனியர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ______ ஆவார்.
அ) வு-தை
ஆ) ஹங் சோவ்
இ லீயு-பங்
ஈ) மங்கு கான்
விடை:
இ) லீயு-பங்

Question 4.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _____ ஆவார்.
அ) முதலாம் இன்னசென்ட்
ஆ) ஹில்ட்பிராண்டு
இ முதலாம் லியோ
ஈ) போன்டியஸ் பிலாத்து
விடை:
ஈ) போன்டியஸ் பிலாத்து

Question 5.
பெலப்பொனேஷியப் போர் ______ மற்றும் ______ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது.
அ) கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
ஆ) பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
இ ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
ஈ) கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
விடை:
இ) ஸ்பார்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கிரேக்கர்கள் _____ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
விடை:
மராத்தான்

Question 2.
ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் ______
விடை:
கிராக்கஸ் சகோதரர்கள் (டைபிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.
விடை:
ஹான்

Question 4.
_______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.
விடை:
புனித சோபியா ஆலயம்

Question 5.
_____ மற்றும் _____ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
விடை:
மாரியஸ், சுல்லா

III. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.
ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.
iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 2.
i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.
ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.
iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iv) சரி
ஈ) (iv) சரி
விடை:
ஆ) (ii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.
iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றவர்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iv) சரி
ஈ) (iii) சரி
விடை:
ஈ) (ifi) சரி

Question 4.
i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.
ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
iii) பேபியஸ் ஒரு புழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (ii) மற்றும்
(iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 5.
i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.
ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பினார்.
iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.
iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
இ) (iii) சரி

IV. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 30

V. சுருக்கமான விடையளி

Question 1.
ரோமானிய அடிமை முறையைப் பற்றி எழுதுக.
விடை:

  • ரோம் போர்க்கைதிகளை அடிமைகளாக ஆக்கியதன் மூலம் பணம் படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை உருவாக்கியது. பெரும் நிலப்பிரபுக்கள் அடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர்.
  • கி.மு. முதலாம் நூற்றாண்டில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன், அடிமைகளின் எண்ணிக்கை 2 மில்லியன் அடிமைகளால் சுதந்திர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வறியவரானார்கள். வறியவர்களின் குழந்தைகள் இறுதியில் அடிமைச்சந்தையை வந்தடைந்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 2.
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
விடை:

  • ரோமில் பேரரசருடைய உருவச்சிலைக்கு கிறிஸ்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது, அரச துரோகமாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். சிங்கங்களின் முன் வீசப்பட்டனர். ஆனாலும் ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் வெற்றிபெறவில்லை.
  • ரோமானியப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறியதால் கிறிஸ்தவம் ரோமப் – பேரரசின் அரச மதம் ஆயிற்று.

Question 3.
கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?
விடை:
கார்த்தேஜ் ஹன்னிபால் :

  • இத்தாலியில் ரோம், வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் ஆகிய இரு சக்திகளிடையே நடைபெற்ற மூன்று போர்களே ‘பியூனிக் போர்கள்’ ஆகும். கார்த்தேஜ் தளபதி ஹன்னிபால் ரோமின் படையைத் தோற்கடித்தது. இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்
  • இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட ரோமானிய படைத்தளபதி பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் ஹன்னிபாலை தோற்கடித்தார். ரோமானியர்களால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார். மூன்றாவது போரில் கார்த்தேஜ் அழிக்கப்பட்டது.

Question 4.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
விடை:

  • பட்டு வணிக வழித்தடத்தை ஹன் பேரரசு திறந்துவிட்டதால் ஏற்றுமதிப்பண்டங்கள் குறிப்பாக பட்டு ரோமப் பேரரசைச் சென்றடைந்தது.
  • பண்பாட்டில் பின்தங்கிய வடபகுதி ஆட்சியாளர்களின் கைவினைஞர்கள், கால்நடை மேய்ப்பர்கள், குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், அங்கவாடி போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர். இப்புதிய தொழில்நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.

Question 5.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
விடை:
புனித சோபியா ஆலயம் :

  • ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான புனித சோபியா ஆலயம் கி.பி. 6-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. இது அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர்பெற்றது.
  • உதுமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிளை கைப்பற்றியபோது ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது.

VI. விரிவான விடையளி

Question 1.
ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.
விடை:
ஏதென்ஸ் எழுச்சி:

  • ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மக்களாட்சி முறை நிறுவப்பட்டது. சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
  • நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்தட்டு மக்கள் மக்களாட்சியை ‘கும்பலின் ஆட்சி’ எனக கருதினர்.

வளர்ச்சி:

  • பாரசீகப் படையெடுப்பின் அபாயன் கிரேக்கர்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்தது. ஆபத்து நீங்கியவுடன் அவர்கள் மீண்டும் சண்டையினைத் தொடங்கினர். விதிவிலக்காக இருந்து ஏதென்ஸ் மட்டுமே அங்கு மக்களாட்சி முறை 200 ஆண்டுகள் நீடித்தது
  • 30 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பெரிகிளிஸ் என்றும் மாபெரும் தலைவரை ஏதென்ஸ் பெற்றிருந்தது, ஸ்பார்ட்டாவோடு பகைமை, இடையூறுகள் ஆகியவற்றையும் மீறி ஏதென்ஸ், பிரமிக்கச் செய்யும் கட்டடங்களை கொண்ட உன்னத நகராக மாறியது. மாபெரும் கலைஞர்களும். சிந்தனையாளர்களும் இருந்த இக்குறிப்பிட்ட காலட் ‘பெரிகிளிசின் காலம்’ எனப்படுகிறது.

கொடைகள்:

  • சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற சிந்தனையாளர்கள் உண்மையைக் கண்டடைவதற்கான புதிய பாரபட்சமற்ற அடிப்படை ஒன்றைக் கண்டறியும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்,
  • டெமோகிரைடஸ், எபிகியூரஸ் ஆகிய இரவரும் உலகம் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்தனர். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்சும், தூசிடைபிதம் இக்காலத்தவர்கள்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 2.
செவ்வியல் காலத்தில் இந்தியாவின் நிலை குறித்து எழுதுக.
விடை:
செவ்வியல் காலத்தில் இந்தியா:

  • குஷாணர்கள் காலம் ரோமானியப் பேரரசின் இறுதி காலகட்டமான ஜுலியஸ் சீசரின் ஆட்சி காலத்தின் சமகாலமாகும்.
  • ஜுலியஸ் சீசரின் காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
  • தென்னிந்தியாவில் களப்பிரர் காலம் செவ்வியல் காலத்தின் இறதிக்காலமாகும் (4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகள்)
  • தேக்கு, மிளகு, மணிகள், தந்தம் போன்றவை மலபார் கடற்கரை வழியாக பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.
  • பதினெண்மேல்கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் தொகுக்கப்பட்டன. சங்ககாலம் செவ்வியல் காலத்தின் சமகாலமாகும் (கி.மி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை).

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய வரைபடத்தில் மேலை மற்றும் கீழை ரோமானிய பேரரசுகளின் எல்லைகளைக் குறிக்கவும்.
2. ஆசிரியரின் உதவியோடு மாணவர்கள் கூகுள் இணையத்தில் கிரேக்கம், ரோம் மற்றும் சீனாவின் சிறப்புமிக்க அழகினைப் பார்க்கவும்.

9th Social Science Guide செவ்வியல் உலகம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிளோட்டோ ______ ன் சீடராவார்.
விடை:
சாக்ரடீஸ்

Question 2.
வடிவயில் தொடர்பான அடிப்படைத் தோற்றங்களை _____ முறைப்படுத்தினார்.
விடை:
யூக்ளிட்

Question 3.
ரோமில் பிளபியன்ஸ் என்பவர்கள் _______
விடை:
சாதாரண மக்கள்

Question 4.
பிளினி _____ நூலை எழுதினார்.
விடை:
அறிவியல் கலைக் களஞ்சியம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 5.
வெர்ஜில் எழுதிய நுல் ______
விடை:
ஏனேய்ட்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
எந்த நாடுகள் செவ்வியல் உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தின?
விடை:

  • கிரீஸ்
  • ரோம்
  • சீனா.

Question 2.
பெலப்போனேசியப் போர்கள் என்றால் என்ன?
விடை:
பெரிக்கிளிஸ் ஆட்சியின் போது ஏதென்சும், ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து போர் செய்தன. இப்போர்கள் “பெலப்போனேசியப் போர்கள்” ஆகும்.

Question 3.
பெரிகிளிசின் காலம் என்றால் என்ன?
விடை:
மாபெரும் கலைஞர்களும், சிந்தனையாளர்களும் ஏதென்ஸ் நகரில் இருந்த குறிப்பிட்ட காலத்தை ‘பெரிகிளிசின் காலம்’ என அழைக்கின்றனர்.

Question 4.
பட்டு வழித்தடம் என்றால் என்ன?
விடை:
பட்டு வழித்தடம் அல்லது பட்டுப்பாதை :

  • சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையிலான வணிக வழித்தடம், பட்டுப் பாதை (அ) பட்டுச் சாலை (அ) பட்டு வழித்தடம் என்று அறியப்படுகிறது. இது சீனாவை மேலை நாடுகளோடு இணைக்கின்றது.
  • இப்பாதை வழியாக இருபெரும் நாகரிகங்களான சீனா மற்றும் ரோம் ஆகியவற்றுக்கிடையே பண்டங்களும், கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பட்டு மேற்கு நோக்கிச் செல்ல, கம்பளி, தங்க, வெள்ளி ஆகியன கிழக்கு நோக்கிச் சென்றன.

III. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி

Question 1.
ரோம் ஒரு பேரரசாக உருவாதல்

அ) கிராக்கஸ் சகோதரர்கள் யார்?
விடை:
டைபிரியஸ் கிரோக்ஸ் காரியஸ் டோ கிராக்கஸ் (பாட்ரீசியப் பிரிவினர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

ஆ) அவர்கள் ஆற்றிய பங்கு என்ன?
விடை:
பிளபியன்ஸ் பிரிவினரான ஏழைகளை ஆதரித்தனர்.

இ அவர்களின் உயிர்த் தியாகத்தின் வெளிப்பாடு என்ன?
விடை:
குடியரசு பேரரசாக மாற்றம் பெற்றது

ஈ) முதல் ரோமப் பேரரசர் யார்?
விடை:
அகஸ்டஸ்

Question 2.
ஹன் பேரரசு

அ) ஹன் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?
விடை:
லீயு-பங்

ஆ) ஹன் பேரரசின் தலைநகரம் எது?
விடை:
சாங்-அன்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

இ) ஹன் பேரரசின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
விடை:
சாங்-அன்

ஈ) ஹன் பேரரசின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் யார்?
விடை:
வு-தை

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 81

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
அ) T.M. நாயர்
ஆ) P. ரங்கையா
இ) G. சுப்பிரமணியம்
ஈ) G.A. நடேசன்
விடை:
ஆ) P. ரங்கையா

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
அ) மெரினா
ஆ) மைலாப்பூர்
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) ஆயிரம் விளக்கு
விடை:
ஈ) ஆயிரம் விளக்கு

Question 3.
“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
அ) அன்னிபெசன்ட்
ஆ) M. வீரராகவாச்சாரி
இ) B.P. வாடியா
ஈ) G.S. அருண்டேல்
விடை:
அ) அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 4.
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
அ) S. சத்தியமூர்த்தி
ஆ) கஸ்தூரிரங்கர்
இ) P. சுப்பராயன்
ஈ) பெரியார் ஈவெ.ரா
விடை:
அ) S. சத்தியமூர்த்தி

Question 5.
சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
அ) K. காமராஜ்
ஆ) C. இராஜாஜி
இ) K. சந்தானம்
ஈ) T. பிரகாசம்
விடை:
ஈ) T. பிரகாசம்

Question 6.
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
அ) ஈரோடு
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) மதுரை
விடை:
இ சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.
விடை:
T. முத்துச்சாமி

Question 2.
………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.
விடை:
பாரத மாதா சங்கம்

Question 3.
சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.
விடை:
B.P. வாடியா

Question 4.
சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..
விடை:
C. இராஜாஜி

Question 5.
……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.
விடை:
யாகுப் ஹசன்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 6.
1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
விடை:
ஆரியா (எ) பாஷ்யம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
iv) V.S சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (iii) மட்டும் சரி
இ) (iv) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

Question 2.
i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.
ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.
iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (i) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii) மட்டும் சரி
ஈ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
இ (ii) மட்டும் சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 2

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பை பட்டியலிடுக.
விடை:

  • தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.

Question 2.
திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.
  • தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
  • மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது. காவல்நிலைய, நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
  • காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
இந்தியாவின் விடுதலைப் பேராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
விடை:

  • 1916இல் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
  • அன்னி பெசன்ட் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது இந்தியா ஒரு தேசம் எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
  • நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
விடை:
சுதேசி இயக்கம் :

  • வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
  • வ.உ. சிதம்பரனார். V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர்.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
  • மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது.
    மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
  • சுதேசி கருத்துக்களைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின.
  • சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும்.
  • சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் தொடங்கப்பட்ட சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
விடை:
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்:

  • பிராமணரல்லாதோர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர்.
  • 1912இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
  • அதன் செயலராக (. நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார்.
  • 1916 ஜீன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கா ‘திராவிடர் சங்க தங்கும் விடுதி’யை நிறுவினர்.
  • 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், டாக்டர் T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் – சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடினர்.
  • பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.
விடை:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்:
காந்தியடிகள் முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.

ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார்.

1930 ஏப்ரல் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது.

இவ்வணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் புனைந்திருந்தார்.

காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அணிவகுத்துச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு பயணித்த பாதையெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் இராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர்.

T.S.S. ராஜன் திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C. சாமிநாதர் மற்றும் K. சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.

தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள்:

  • T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர்.
  • இராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார்.
  • 1932 ஜனவரி 26இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

திருப்பூர் குமரனின் வீரமரணம்:
1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.
அ) நவம்பர் 1884
ஆ) டிசம்பர் 1994
இ) டிசம்பர் 1884
ஈ) நவம்பர் 1994
விடை:
ஆ) டிசம்பர் 1994

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.
அ) 1886
ஆ) 1898
இ) 1868
ஈ) 1888
விடை:
அ) 1886

Question 3.
இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.
அ) 22
ஆ) 72
இ) 83
ஈ) 17
விடை:
ஆ) 72

Question 4.
மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.
அ) ஆங்கிலம்
ஆ) தமிழ்
இ) ஹிந்தி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 5.
புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.
அ) தமிழ்நாடு
ஆ) பாண்டிச்சேரி
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
ஆ) பாண்டிச்சேரி

Question 6.
…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
அ) 1912
ஆ) 1921
இ) 1812
ஈ) 1821
விடை:
அ) 1912

Question 7.
……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.
அ) சுப்பராயலு
ஆ) T.M. நாயர்
இ) சி. நடேசனார்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சுப்பராயலு

Question 8.
தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
அ) மே 17, 2000
ஆ) 17 ஏப்ரல் 1920
இ) 12 ஏப்ரல் 1922
ஈ) 25 ஏப்ரல் 1930
விடை:
ஆ) 17 ஏப்ரல் 1920

Question 9.
………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.
அ) 13 ஜனவரி 1922
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930)
ஈ) அக்டோபர் 1919
விடை:
அ) 13 ஜனவரி 1922

Question 10.
……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.
அ) காந்திஜி
ஆ) ராஜாஜி
இ) நேரு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ராஜாஜி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.
விடை:
G. சுப்ரமணியம்

Question 2.
தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.
விடை:
சென்னை மகாஜன சபை

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
………. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.
விடை:
சுதேசமித்ரன், தி ஹிந்து

Question 4.
…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
விடை:
சுதேசி

Question 5.
சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.
விடை:
பாண்டிச்சேரி

Question 6.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.
விடை:
ஆஷ்

Question 7.
……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.
விடை:
செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

Question 8.
…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.
விடை:
அன்னிபெசன்ட்

Question 9.
1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.
விடை:
பனகல் அரசர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 10.
1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.
விடை:
கருப்புச் சட்டத்தை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று: வங்கப்பிரிவினை சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்றது.
காரணம்: வங்கப் பிரிவினை 1905ஆம் ஆண்டு நடந்தது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி
விடை:
அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 2.
கூற்று: சைமன் குழு இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டது.
காரணம்: ஒரு இந்தியர்கள் கூட அக்குழுவில் இடம்பெறவில்லை என்பதால்

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
விடை:
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
ஜார்ஜ் ஜோசப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் பணி செய்தார்.
  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர் ஆற்றி சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை ‘ரோசாப்பு துரை’ என அன்புடன் அழைத்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
நீல் சிலை அகற்றும் போராட்டம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர்.
  • 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

Question 4.
திருப்பூர் குமரனின் வீரமரணம் குறித்து எழுதுக.
விடை:

  • 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்தியவண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.
  • பரவலாக திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R. குமாரசாமி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார்.
  • ஆகையால் இவர் கொடிகாத்த குமரன் என புகழ்ப்படுகிறார்.

Question 5.
முதல் காங்கிரஸ் அமைச்சரவை பற்றிக் கூறு.
விடை:

  • 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
  • நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
  • தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது, மக்களிடையே அது பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டிக்காட்டியது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சென்னை மகாஜன சபை மற்றும் மிதவாதக் கூட்டத்தை விவரி.
விடை:
சென்னை மகாஜன சபை:

  • தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
  • 1884 மே 16இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு , P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார்.
  • இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்காற்றினார்.
  • அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
  • குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
  • இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

மிதவாதக் கூட்டம் :

  • சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
  • அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் அடையாறு எனும் இடத்தில் உள்ள பிரம்மஞான சபையில் கூடியது.
  • தாதாபாய் நௌரோஜி, K.T. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G. சுப்பிரமணியம், P. ரங்கையா, P. அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

VII. செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் உள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 5

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

9th Social Science Guide அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய ______ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.
அ) புத்தர்
ஆ) லாவோட்சே
இ) கன்ஃபூசியஸ்
ஈ) ஜொராஸ்டர்
விடை:
அ) புத்தர்

Question 2
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் _______
அ) தனநந்தர்
ஆ) சந்திரகுப்தர்
இ) பிம்பிசாரர்
ஈ) சிசுநாகர்
விடை:
இ) பிம்பிசாரர்

Question 3.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ______ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.
அ) மஹாஜனபதங்கள்
ஆ) கனசங்கங்கள்
இ) திராவிடம்
ஈ) தட்சிணபதா
விடை:
அ) மஹாஜனபதங்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 4.
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் _____
அ) புத்தர்
ஆ) மகாவீரர்
இ) லாவோட்சே
ஈ) கன்ஃபூசியஸ்
விடை:
ஆ) மகாவீரர்

Question 5.
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.
அ) மார்க்கோ போலோ
ஆ) ஃபாஹியான்
இ) மெகஸ்தனிஸ்
ஈ) செல்யூகஸ்
விடை:
இ) மெகஸ்தனிஸ்

Question 6.
(i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.
(ii) மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.
(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும்
(ii) சரி
ஈ)(iii) மற்றும்
(iv) சரி
விடை:
ஆ) (ii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும், மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு _____ ஆகும்.
விடை:
ஜென்ட் அவெஸ்தா

Question 2.
கங்கைச் சமவெளியில் _____ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.
விடை:
இரும்பு – கலப்பை

Question 3.
______ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.
விடை:
மகாவீரர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 4.
புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _____ இல் உள்ளது.
விடை:
புத்தகயா.

Question 5.
மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள _____ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.
விடை:
அசோகரின்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

Question 1.
அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.
ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.
இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மௌரியர்களுக்கு முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
விடை:
ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.
அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு.
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரசவம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.
ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.
விடை:
ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 1

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
ஹீனயானம் மற்றும் மகாயானம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
ஹீனயானம் (சிறிய பாதை) :

  • ஹீனயானம் புத்தர் போதித்த அசல் வடிவம்.
  • இதைப் பின்பற்றியவர்கள் புத்தரைத் தமது குருவாக ஏற்றார்கள். அவரைக் கடவுளாக வழிபடவில்லை.
  • இவர்கள் உருவவழிபாட்டை மறுத்தார்கள். மக்கள் மொழியையே (பாலி) தொடர்ந்து பயன்படுத்தினார்கள். மகாயானம்
  • மஹாயானம் புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்.
  • இதைப் பின்பற்றுவோர் புத்தர் சிலைகளை நிறுவி அவர் புகழ்பாடும் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர்.
  • இவர்கள் தம்முடைய மதநூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள்.

Question 2.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக் கூறு.
விடை:
மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கப்படும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகளைக் குறிப்பதாகும். அந்த மூன்று கொள்கைகள்,

  • நன்னம்பிக்கை – ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.
  • நல்லறிவு – கடவுள் இல்லை, அனைத்துக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்றல்.
  • நன்னடத்தை – மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பிடித்தல்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 3.
அஜாத சத்ருவைப் பற்றிக் கூறு?
விடை:

  • இராணுவ வெற்றிகள் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையைப் பின்பற்றிய அஜாத சத்ரு, தனது தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு கி.மு. 493ல் அரியணை ஏறினார்.
  • ஐந்து மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான, மகதத் தலைநகரான ராஜகிருஹம் கோட்டையை
    வலுப்படுத்தினார். கங்கைக் கரையில் பாடலி கிராமத்தில் மற்றொரு கோட்டையை கட்டினார்.
  • உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்றமையமாக விளங்கிய பாடலிபுத்திரம் மௌரியத் தலைநகரமாக மாறியது. கி.மு. 461ல் அஜாத சத்ரு இறந்தார்.

Question 4.
கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன ?
விடை:
கலிங்கா கல்வெட்டு:

  • அசோகரின் கல்வெட்டுகளில் 2 கலிங்கக் கல்வெட்டுகள், ஒரு கல்வெட்டில் அசோகர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைக் கண்டு தான் அடைந்த மனவேதனையைப் பதிவு செய்துள்ளார்.
  • மற்றொரு கல்வெட்டில் அசோகர், தான் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்காகக்கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட பொறுத்துக் கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Question 5.
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன ?
விடை:

  • தீவிர புத்த பற்றாளரான அசோகர் புத்த மத கருத்துக்களை பாறைகளில் பொறித்தார். விலங்குகளைப் பலியிடுவது தடை செய்யப்பட்டது. விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
  • தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த தம்மம் குறித்த செய்தியைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக் கூறு.
விடை:
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 30

  • மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியோ, அறிஞரோ மட்டும் இல்லை, முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவர்.

நேர்மை :

  • கீழ்ப்படிதல் வற்புறுத்தப்பட்டாலும் உத்தரவு தவறென்றால், இரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்.
  • ஆட்சியாளர்கள் பாரபட்சமின்றி ஆட்சி நடத்தவேண்டும்.

நன்னடத்தை :

  • குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  • நன்னடத்தை கொண்டோரைத்தான் அரசப் பதவிகளில் அமர்த்த வேண்டும்.

மெய்யறிவு :
மெய்யறிவு குடும்பத்திலிருந்துதான் வளரும். ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க தனி நபர்தான் சமூகத்தின் அடித்தளம்.

நம்பகத்தன்மை :

  • அரசுக்கு அவசியமான மூன்று விஷயங்கள்
    • நாட்டில் போதுமான உணவு
    • போதுமான இராணுவத் தளவாடங்கள்
    • மக்களுக்கு ஆட்சியாளர் மீது நம்பிக்கை
  • அரசு இயங்க குறிக்கோள் வேண்டும். மக்களுக்கான கடமைகள் உண்டு.
    கன்பூசியனிசம் : மதம் அல்ல ஒரு சமூக அமைப்பு அறம்சார் தத்துவ முறை.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 2.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் எழுதுக.
விடை:
ஒற்றுமைகள் :

  • மகாவீரரும், கௌதம புத்தரும் தங்களது 30வது வயதில் குடும்பத்தை துறந்தனர்.
  • சமணரும், புத்தரும் மதச் சடங்குகளுக்காக விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தனர்.
  • சமணர் மற்றும் புத்தரின் துறவு, இரந்துண்ணுதல், அரச குடும்ப சொத்துக்களைத் துறந்து வாழும் முறை மக்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்கின.
  • இருவரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள். தன்னிலை மறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்கள்.
  • புகழ்பெற்ற மகதமன்னர்களான பிம்பிசாரர், அஜாத சத்ரு ஆகியோரின் சம காலத்தவர்கள்.
  • வைசியர்கள் சமூக நிலையை உயர்ந்த சமணம் மற்றும் பௌத்தம் நோக்கி திரும்பினார்கள்.
  • மகாவீரரும், புத்தரும் சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்து எழுச்சிமிக்க நன்னெறிப் போதனைகளை முன்வைத்தனர்.
  • காலப்போக்கில் சமணமும். பௌத்தமும் இரண்டிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தன.

வேற்றுமைகள் :
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 60

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ஓர் ஆய்வறிக்கை தருக.
2. புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளைச் சித்தரிக்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்த்தவும்

9th Social Science Guide அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
கன்பூசியஸ் எந்த ஆண்டு பிறந்தார் ?
அ) பொ.ஆ.மு. 550
ஆ) பொ.ஆ.மு. 551
இ) பொ.ஆ.மு. 552
விடை:
ஆ) பொ.ஆ.மு. 551

Question 2.
லாவோட்சே எழுதிய நூல் எது?
அ) ஆவண நூல்
ஆ) மாற்றம் குறித்த நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) தாவோ டே ஞங்
விடை:
ஈ) தாவோ டே ஜிங்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 3.
மகாவீரர் பிறந்த இடம் _______
அ) ராஜகிருஹம்
ஆ) பாடலிபுத்திரம்
இ) குந்த கிராமம்
ஈ) மகதம்
விடை:
இ) குந்த கிராமம்

Question 4.
வட இந்தியாவில் சத்திரியரல்லாத ஆண்ட முதல் வம்சம்
அ) நந்த வம்சம்
ஆ) சிசுநாக வம்சம்
இ) பால வம்சம்
ஈ) அஜிவிக வம்சம்
விடை:
அ) நந்த வம்சம்

Question 5.
அசோகரை புத்தப்பற்றாளராக மாற்றியவர் யார்?
அ) குப்தர்
ஆ) உபகுப்தர்
இ) சந்திரகுப்தர்
ஈ) சமுத்திரகுப்தர்
விடை:
ஆ) உபகுப்தர்

Question 6.
மௌரியர்களின் ஆட்சி நிர்வாகம் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் நூல் எது?
அ) இண்டிகா
ஆ) கதசப்தசாயி
இ) அர்த்த சாஸ்திரம்
ஈ) மனுசரிதம்
விடை:
இ) அர்த்த சாஸ்திரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் ______
விடை:
ஜென்ட் அவெஸ்தா

Question 2.
ஜீனர் (அ) உலகை வென்றவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை:
மகாவீரர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 3.
இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணச்சிலை எங்கு உள்ளது.
விடை:
கர்நாடகா, சிரவண பெலகொலா

Question 4.
ஆசீவகம் என்ற நாத்திகப் பிரிவைத் தோற்றுவித்தவர் _______
விடை:
மக்கலி கோசலர்

Question 5.
ஹைடாஸ்பெஸ் போர் நடைபெற்ற ஆண்டு _____
விடை:
பொ.ஆ.மு. 326

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 62

IV. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
மகாவீரர்:
(அ)மகாவீரர் துறவற வாழ்வின் பதின்மூன்றாவது ஆண்டில் எதனைப் பெற்றார்?
விடை:
உயரிய ஞானம் (கைவல்யம்)

(ஆ)மகாவீரர் எங்கு எப்போது காலமானார்?
விடை:
72வது வயதில் ராஜகிருகம் அருகில் உள்ள பவபுரி என்ற இடத்தில் காலமானார்.

(இ)சமண மதத்திற்கு ஆதரவு அளித்த மன்னர்கள் யார்?
விடை:
தனநந்தர்

  • சந்திரகுப்த மௌரியர்
  • காரவேலன்

(ஈ)சமண சமயத்தின் இரண்டு பிரிவுகள் யாது?
விடை:
திகம்பரர்
சுவேதாம்பரர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 2.
ஜொராஸ்ட்ரியனிசம்
(அ) இதைத் தோற்றுவித்தவர் யார் ?
விடை:
பாரசீகத்தை சேர்ந்த ஜொராஸ்டர்

(ஆ) அவர் ” ஒளியின் கடவுள் ” என யாரைப் பிரகடனம் செய்தார் ?
விடை:
அஹீரமஸ்தா (ஒளிக் கடவுள்)

(இ) ஜொராஸ்ட்ரியர் எதனைப் போதித்தார் ?
விடை:
ஒரு சமூகத்தின் முதன்மையான நோக்கம் ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பது.

(ஈ) வழிபாட்டின் உயர்ந்த வடிவம் எது?
விடை:
கடவுளின் வடிவமான தீயை வணங்குவது.

Question 3.
கௌதம புத்தர்
(அ) புத்தரின் இயற்பெயர் என்ன ?
விடை:
சித்தார்த்தர்

(ஆ) புத்தர் பிறந்த ஊர் என்ன ?
விடை:
நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து

(இ) அவருக்கு எங்கே ஞானோதயம் ஏற்பட்டது?
விடை:
புத்தகயா (மஹாபோதி கோவில்)

(ஈ) புத்தர் முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார் ?
விடை:
சாரநாத

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
சமணக் காஞ்சி என்றால் என்ன?
விடை:
சமணம் 7-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்த முக்கியமான சமயங்களில் ஒன்று, தற்போதைய காஞ்சி நகரத்துக்கு அருகில் சமணக் காஞ்சி அமைந்துள்ளது. அங்கு உள்ள சமணக் கோயில்களுள் முக்கியமானது திருப்பபருத்திக் குன்றம். இக்கோயிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கைக் கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

Question 2.
பதினாறு மஹாஜனபதங்கள் யாவை?
விடை:
காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம்.

Question 3.
புத்தரின் போதனைகளில் அஹிம்சையை பற்றி கூறு.
விடை:
அகிம்சை என்பது புத்தரின் அடிப்படையான நம்பிக்கை. அவர் வேள்விகளில் தரப்படும் ரத்தப் பலிகளைக் கண்டித்தார். புத்தத்தை கடைபிடிப்பவரின் அத்தியாவசியமான பண்பு அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்துவது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 4.
லாவோட்சேவின் போதனைகள் யாவை?
விடை:

  • உலகில் மனிதர்களின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் மனிதர்களின் சுயநலம்.
  • மனித நடத்தைக்கான விதி இயற்கையோடு பொருந்தியிருக்க வேண்டும்.
  • தமது திரட்டப்பட்ட அறிவினைக் கொண்டு அவர்கள் ஒரு நகர நாகரிகத்தை ஏற்படுத்தி, தம்மைத்தாமே மகிழ்ச்சியற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

Question 5.
நாளந்தா – குறிப்பு வரைக.
விடை:

  • நாளந்தா அக்காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி மையமாகத் திகழ்ந்தது. அதன் நிர்வாகச் செலவுகளுக்காக 100 கிராமங்களின் வருவாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை . மாணவர்களுக்கு இலவசத் தங்குமிடமும் உணவும் தரப்பட்டன.

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
இந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆராய்க.
விடை:
இந்தியாவில் இரும்பு தொழில் நுட்பத்தின் தாக்கம்:

  • கங்கைச் சமவெளி மக்கள் தேவைக்கு அதிகமான உணவுப் பயிர்கள் உற்பத்தி செய்ய அறிந்து கொண்டதால் மற்றொரு பகுதி மக்கள் கைத்தொழில்களை மேற்கொள்ள வாய்ப்பு அமைந்தது.
  • கைவினைக்கலைஞர்கள் தமக்கு மூலப்பொருட்களை சேகரித்துத் தரவும், உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கவும் சிலரை நம்பி இருக்க நேர்ந்தது.
  • இரண்டு விதங்களில் நிகழ்ந்த நகரமயமாக்கலில் ஒருவகை சில கிராமங்கள் இரும்புத்தொழில், மட்பாண்டங்கள் செய்தல், மரவேலைகள் தொழில், நெசவு போன்றவற்றில் ஈடுபட்டதன் மூலம் நிகழ்ந்தது.
  • இரண்டாவது வகை தனித்திறமை கொண்ட கிராமக் கைவிளைஞர் குழுக்கள், மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவாறு சந்தைகளை இணைத்ததன் மூலம் நிகழ்ந்தது.
  • மக்கள் ஒரே இடத்தில் குவிந்தது கிராமங்கள் நகரங்களாகவும் பரிமாற்ற மையங்களாகவும் வளர்ச்சி பெற உதவியது.
    எ.கா. வைசாலி, சிராவஸ்தி, ராஜகிருஹம், கௌசாம்பி, காசி.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

Question 2.
மௌரியர்களின் ஆட்சி முறை நிர்வாகத்தை பற்றி விவரி.
விடை:
மௌரியர்கள் ஆட்சி நிர்வாகம்:

  • மௌரியர்கள் உருவாக்கிய செயல் திறம்மிக்க அரசாட்சி முறை பெரிய நிலையான ராணுவத்தை அமைக்கவும், பரந்த நிர்வாகத்தை உருவாக்கவும் உதவியது.
  • அரசர் நிர்வாகத்தின் தலைவர். அவருக்கு அமைச்சர்குழு உதவி புரிந்தது. மகாமாத்ரேயர்கள் என்ற அதிகாரிகள் அமைச்சர்களின் செயலாளர்கள். சமஹர்த்தா வருவாய் மற்றும் செலவினங்களுக்குப் பொறுப்பு அதிகாரி.
  • பேரரசு நான்கு மாநிலங்களாகப்பிரிக்கப்பட்டிருந்தது. மாநில ஆளுநர்களாக இளவரசர்களே செயல்பட்டனர். மாவட்ட நிர்வாகம் ஸ்தானிகா என்பவரால் நிர்வாகிக்கப்பட்டது.
  • 5 – 10 கிராமங்களின் நிர்வாகி ‘கோபர்’, நகர நிர்வாகி ‘நகரகா’, வெளிநாட்டவர் கவனிப்பு, பிறப்பு-இறப்பு பதிவு, வணிகம், பல்வேறு உற்பத்தி தொழில்கள், சுங்க-கலால் வரி வசூல் ஆகிய பணிகளை நகரகா தலைமையில் தலா 5 உறுப்பினர்களைக் கொண்ட 6 குழுக்கள் மேற்கொண்டன.
  • இராணுவ நிர்வாகமும், நகர நிர்வாகத்தைப்போலவே 30 பேர் கொண்ட குழுவால் நிர்வாகிக்கப்பட்டது. கிராம மட்டத்தில் ‘கிராமணி’ என்ற அதிகாரி இருந்தார். சிறந்த உளவுத்துறை இருந்தது. நீதி வழங்க முறையான நீதி மன்றங்கள் இருந்தன.
  • கிராமப்புற மேம்பாட்டுக்கு அரசு உபரி வருவாயைப் பயன்படுத்தியது. நிலவிற்பனை தடை செய்யப்பட்டது. வணிகப் பெருவழிகள் உருவாக்கப்பட்டன. தோஆப் பகுதியில் புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டது.

மனவரைபடம்

அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 81
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 4 அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும் 82

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
அ) ஆங்கிலம்
ஆ) தேவநாகரி
இ) தமிழ்-பிராமி
ஈ) கிரந்தம்
விடை:
இ) தமிழ் – பிராமி

Question 2.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
அ) தீபவம்சம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மகாவம்சம்
ஈ) இண்டிகா
விடை:
இ) மகாவம்சம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 3.
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
அ) கரிகாலன்
ஆ) முதலாம் இராஜராஜன்
இ) குலோத்துங்கன்
ஈ) முதலாம் இராஜேந்திரன்
விடை:
அ) கரிகாலன்

Question 4.
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
அ) புகளூர்
ஆ) கிர்நார்
இ) புலிமான்கோம்பை
ஈ) மதுரை
விடை:
அ) புகளூர்

Question 5.
(i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
(ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.
(iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது.
(iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக்குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும்
(ii) சரி
ஈ) (iii) மற்றும்
(iv) சரி
விடை:
இ) (i) மற்றும்
(ii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 6.
(i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள். (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.
அ) (i) சரி
ஆ) (ii) மற்றும்
(iii) சரி
இ) (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
இ) (iii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ______ ஆகும்.
விடை:
கல்வெட்டியல்

Question 2.
கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் _____ ஆகும்.
விடை:
தொல்லியல்

Question 3.
மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் _____ ஆகும்.
விடை:
அர்த்தசாஸ்த்ரா

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 4.
______ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.
விடை:
திணை

Question 5.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____ என்னும் சொல் குறிக்கிறது.
விடை:
யவனம்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளூஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.
இ) இந்தியாவில்தொடக்ககாலத்தில்பயன்படுத்தப்பட்டநாணயங்களில் உருவங்கள்பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.
விடை:
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

Question 2.
அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.
விடை:
இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 1

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
விடை:
வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாக சங்ககால மக்களின் வாழ்க்கை முறை குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.

அகழாய்வு நிகழ்விடங்கள்: அரிக்கமேடு, அழகன் குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம்,கொற்கை, வசவ சமுத்திரம் மற்றும் கேரளத்தின் பட்டணம்.

சங்ககாலத் துறைமுகப்பட்டிணமான புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டில் அகழ்வாய்வு நடந்தது. இவ்வாய்வில் சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறை கிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
விடை:

  • சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியன சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் சான்றாகும். சங்ககாலத்தின் முதன்முதலாக செலவாணிக்குரிய பொருளாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • முத்திரை பொறித்த நாணயங்கள் கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும், ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர் மண்டலத்திலும் கிடைத்துள்ளன.

Question 3.
சங்ககாலத்தில் விவசாயம் ஒருமுக்கியமானவாழ்வாதாரமாக இருந்தது. இதற்கானகாரணங்களைக் கூறுக.
விடை:

  • சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. ஏனெனில், நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. ஆற்று வடிநீர்ப் பகுதிகளிலும், குளம், ஏரி போன்ற நீர்ப்பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது. புன்செய் நிலத்தில் தானியங்கள் பயிரிடப்பட்டன.
  • செந்நெல், வெண்ணெல், ஐவனநெல் என நெல் வகைககள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது. காடுகளில் இடம் விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 4.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
விடை:
தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

  • அயல் நாடுகளுடனான தமிழகத் தொடர்புக்கான சான்றுகள்:
  • ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று காலத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
  • கிரேக்க ரோமானிய, மேற்கு ஆசிய மக்களான யவனர்களோடு வாணிபத் தொடர்பு இருந்தது. (யவனர் – கிரேக்க அயோனியா பகுதி சொல்)
    செங்கடல் பகுதியில் உள்ள பெர்னிகே, குசேர் அல் காதிம், தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள்.
  • தமிழ் இலக்கியங்கள் தென்கிழக்கு ஆசியாவை சுவர்ணபூமி என குறிப்பிடுகின்றன.
    (ஏற்றுமதி : மிளகு போன்ற நறுமணம் பொருட்கள், நவமணிகள், யானைத் தந்தம். இறக்குமதி : தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்கள்).

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
விடை:
இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களின் தலைவர்கள் தங்கள் நிலப்பகுதியை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களிடமிருந்தே வேந்தர்கள் தோன்றினார்கள். இவ்வாறு சங்காலத்திற்கான அடித்தளம் வேர்கொண்டது.

சேரர்:
சேரர் ஆட்சிப்பகுதி தற்கால கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி, தலைநகர் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி மற்றும் தொண்டி, பதிற்றுப்பத்து சேரர்கள் குறித்து குறிப்பிடுகிறது. மாலைபனம்பூ, இலச்சிளை வில் அம்பு. (சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம்)

சோழர்:
சோழரின் ஆட்சிப்பகுதி காவிரி வடிநிலம் மற்றும் தமிழ்நாட்டின் வடபகுதி. தலைநகர் உறையூர், துறைமுகம் பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினம் குறித்து குறிப்பிடுகிறது. இலச்சிளை புலி. (கரிகால் சோழன் கல்லணை கட்டினார்).

பாண்டியர்:
பாண்டியரின் ஆட்சிப்பகுதி தென் தமிழகம். தலைநகர் மதுரை, துறைமுகம் கொற்கை, தமிழ் இலக்கியங்கள், தமிழ்ச்சங்கங்கள் குறித்து குறிப்பிடுகின்றன. மாலை வேப்பம்பூ, இலச்சிளை மீன். (பாண்டியன் நெடுஞ்செழியன் குறித்து மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கூறுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?
விடை:
சங்ககாலப் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில்கள் மற்றும் கைவினைக் கலைகளின் பங்கு.

  • வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், பணப்பரிமாற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்ப தொழில்களும் அவை சார்ந்த பொருளாதாரமும் இருந்தன. வணிகம் கடல் கடந்து பல நாடுகளுடன் நடைபெற்றது.
  • உயிர் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நன்செய், புன்செய் நிலங்களில் நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. மாடுகள், ஆடுகள் வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.
  • பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகளாக தொழிற்கூடங்கள் இருந்தன.
    • அன்றாட வாழ்வுக்குத் தேவையான பலவித மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன. (கரிய நிறம், செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள், கருப்பு-சிவப்பு நிறத்தவை)
    • இரும்பை உருக்கும் உலைகள் இருந்தன (உழக்கருவிகள், வாள், ஈட்டி, கத்தி தயாரிக்கப்பட்டன)
    • பலவித அணிகலன்கள், தங்க ஆபரணங்கள் செய்யப்பட்டன. (சுட்ட களிமண், செம்பு, தங்கம், வெள்ளி, நவமணிகள், செவ்வந்திக் கல், செம்மணிக்கல் ஆகியவற்றில் ஆபரணங்கள் செய்யப்பட்டன.
    • கண்ணாடி மணிகள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டன.
    • சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும், முத்துக் குளித்தலும் நடைபெற்றள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. சங்க காலத் தமிழகம் மற்றும் அன்றைய தமிழ் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளையும் தென்னிந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
2. அருங்காட்சியகத்துக்குச் சென்று, பழங்காலத் தமிழர்கள் குறித்த கல்வெட்டுச் செய்திகள், அவர்கள் பயன்படுத்திய நாணயங்கள், கருவிகளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க.
3. வரலாற்றின் தொடக்க காலத்தில் மக்கள் வாழ்ந்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், கீழடி போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிடுக.
4. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஆய்வுக்களங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பொருட்கள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்து முறை குறித்து ஓர் ஆய்வை மேற்கொள்க.

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க. கல்வெட்டுகளைப் பற்றி படிப்பது

Question 1.
அ) கல்வெட்டு படிப்பு
ஆ)கல்வெட்டு ஆய்வு
இ) கல்வெட்டியல்
விடை:
இ) கல்வெட்டியல்

Question 2.
சுடுமண் களங்களில் காணப்படும் பெரும்பாலான பெயர்கள் எந்த மொழியில் உள்ளன
அ) பிராமி மற்றும் பிராகிருத மொழி
ஆ) பிராகிருத மற்றும் தமிழ்
இ) தமிழ் மற்றும் வடமொழி
ஈ) பிராமி மற்றும் தமிழ்
விடை:
ஆ) பிராகிருத மற்றும் தமிழ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 3.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வு செய்த சங்ககால துறைமுகப்பட்டினம் எது?
அ) கீழடி
ஆ) அரிக்கமேடு
இ) காவிரிப்பூம்பட்டினம்
ஈ) கொடுமணல்
விடை:
ஆ) அரிக்கமேடு

Question 4.
இந்தியாவுடன் நடைப்பெற்ற மிளகு வணிகம் குறித்து குறிப்பிட்டவர் யார்?
அ) மூத்த பிளினி
ஆ) கௌடில்யர்
இ) தாலமி
ஈ) தொல்காப்பியர்
விடை:
அ) மூத்த பிளினி

Question 5.
பதிற்றுப்பத்து எந்த அரசர்களை குறித்தும், அந்த நாட்டின் எல்லைகள் குறித்தும் பேசுகின்றது
அ) சோழன்
ஆ) பாண்டியன்
இ) சேரன்
ஈ) பல்லவன்
விடை:
இ) சேரன்

Question 6.
சதுர வடிவிலான செப்பு நாணயம் யாரால் வெளியிடப்பட்டது?
அ) சேரர்
ஆ) சோழர்
இ) பாண்டியர்
விடை:
ஆ) சோழர்

Question 7.
சங்க இலக்கியங்களில் பெண்பாற் புலவராக கண்டெடுக்கப்பட்டவர்
அ) கண்ண கி
ஆ) மாதவி
இ) மணிமேகலை
ஈ) வெண்ணிக்குயத்தியார்
விடை:
ஈ) வெண்ணிக்குயத்தியார்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 8.
எந்த குல மகளிர் உப்பு விற்றது குறித்து சங்க செய்யுள் குறிப்பிடுகிறது
அ) சமணர்
ஆ) புத்த
இ) சைவ
ஈ) உமணர்
விடை:
ஈ) உமணர்

Question 9.
சங்க காலத்தில் தானியம் எந்த நிலத்தில் பயிரிடப்பட்டது?
அ) நன்செய்
ஆ) புன்செய்
இ) குறிஞ்சி நிலம்
ஈ) முல்லை நிலம்
விடை:
ஆ) புன்செய்

Question 10.
இரும்பு உருக்கு உலை அமைந்திருந்த இடம்
அ) கொடுமணல், கீழடி
ஆ) கீழடி, குட்டூர்
இ) அரிக்கமேடு, கொடுமணல்
ஈ) கொடுமணல், குட்டூர்
விடை:
ஈ) கொடுமணல், குட்டூர்

Question 11.
‘காயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்?
அ) வாஸ்கோடகாமா
ஆ) அல்பெருனி
இ) மார்கோபோலோ
ஈ) மெகஸ்தனிஸ்
விடை:
இ) மார்கோபோலோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ் மொழி முதன் முதலில் எந்த வரி வடிவத்தில் எழுதப்பட்டது?
விடை:
தமிழ் பிராமி

Question 2.
காலத்தால் பிந்தைய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை:
பதினெண்கீழ்க்கணக்கு நூல்

Question 3.
காப்பியம் என்பவை கவிதை நயமுடைய _____ வடிவிலான நீண்ட இலக்கியப் படைப்புகள்.
விடை:
செய்யுள்

Question 4.
கப்பல் உருவம் கொண்ட சுடுமண் கலம் கண்டெடுக்கப்பட்ட இடம் ______
விடை:
அழகன்குளம்

Question 5.
பிராகிருதம் வட இந்தியாவில் யார் காலத்தில் பேசப்பட்ட மொழி?
விடை:
மௌரியர்

Question 6.
பெரிப்ளஸ் என்பது _____
விடை:
கடல் வழிகாட்டி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 7.
கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்த இடம் _______, _______
விடை:
அரிக்கமேடு, குடிக்காடு

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடிவத்திற்கு அசோகன் கல்வெட்டு என்று பெயர்.
ஆ) பாப்பிரஸ் என்பது பண்டைய எகிப்தில் பாப்பிரஸ் என்ற நாணயத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தாள் ஆகும்.
இ) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளவர்கள் சோழர்கள் ஆவர்.
ஈ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.
விடை:
(ஈ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.

Question 2.
அ) திணை என்ற கருத்து விவரிக்கப்பட்டுள்ளது பதினெண்கீழ்கணக்கு நூல்
ஆ) சங்க காலத்திற்கான அடித்தளம் தாமிர காலத்தில் வேர் கொண்டது.
இ) கண்ணகிக்குக் கோயில் எழுப்பியவன் நெடுஞ்சேரலாதன்.
ஈ) காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
விடை:
(ஈ) காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

Question 3.
அ) எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் என்பது பண்டைய ரோமானிய நூலாகும்.
ஆ) இந்நூலின் ஆசிரியர் பெரிப்ளஸ்
இ) பெரிப்ளஸ் என்றால் திசை வழிகாட்டி என்று பொருள்.
ஈ) செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும்.
விடை:
(ஈ) செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 2

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
சங்ககால பெண்கள், படிப்பறிவு, முதல் நிலை உற்பத்தியில் ஈடுபட்டனர் – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
விடை:

  • வெண்ணி என்ற ஊரைச் சார்ந்த வெண்ணிக்குயத்தியார் பெண்பாற் புலவராகக் கண்டறியப்படுகிறார். இதன் மூலம் சங்ககால பெண்கள் கல்வியில் மேம்பட்டு இருந்ததை அறியலாம்.
  • மகளிர் திணைப்புனம் காத்தல் குறித்தும், உமணர் குல மகளிர் உப்பு விற்றது குறித்தும் சங்கச் செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் பெண்கள் முதல்நிலை உற்பத்தியில் ஈடுபட்டதை அறியலாம்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
நூல் நூற்கும் கதிர் என்றால் என்ன?
விடை:
பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.

Question 3.
தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகர்கள் பற்றிய குறிப்பு யாது?
விடை:

  • தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் ஆளப்படுகின்றன.
  • பொன் வணிகர்கள், துணி வணிகர்கள், உப்பு வணிகர்கள் என்று குறிப்பிட்ட பண்டத்தை மட்டும் வியாபாரம் செய்த வணிகர்களும் இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Question 4.
சுடுமண் களங்களில் மக்களின் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன – இதற்கான காரணம் மற்றும் சான்றுகளுடன் விளக்குக.
Answer:
காரணம்:

  • ஒரு பொருள் தமக்கு உரிமையானது என்பதைக் குறிப்பதற்காகவே அதன்மீது மக்கள் தம் பெயர்களைப் பொறித்து வைத்தனர்.
  • கப்பல்களில் அல்லது வண்டிகளில் தம் பொருள்களை அடையாளம் காண்பதற்கும் தங்களது பெயர்களை எழுதினர்.

சான்று:
தமிழ்நாட்டில் அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி, மேலும், எகிப்து நாட்டின் பெரேனிகே, குசேர் அல் காதிம் ஆகிய இடங்களிலும், ஓமன் நாட்டின் கோர் ரோரி என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த சுடுமண் கலங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

VI. தலைப்பு வினாக்கள்.

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
பியூட்டிங்கேரியன் அட்டவணை
(அ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது எதனை குறிக்கும்.
விடை:
நிலப்படம்

(ஆ) இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் யாவை?
விடை:
பண்டைய தமிழகம் முசிறி துறைமுகம்

(இ) இந்த அட்டவணையில் இலங்கை தீவு எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
விடை:
இலங்கைத் தீவு Taprobane என குறிக்கப்பட்டுள்ளது.

(ஈ) இதில் முசிறி துறைமுகம் எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
விடை:
முசிறிஸ் என குறிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
நடுகற்கள்
(அ) மேய்ச்சல் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பொதுவான நடைமுறை என்ன?
விடை:
கால்நடைகளைக் கவர்ந்து தமதாக்கிக் கொள்ள ஒரு குழுவினர் மற்ற குழுவினருடன் சண்டையிட்டனர்.

(ஆ) பகைவர்களின் கால்நடைச் செல்வத்தைக் கவர்ந்தவர்கள் யாவர்?
விடை:
முல்லைநில மக்களின் தலைவர்கள்.

(இ) இறந்த வீரர்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர்ந்தனர்?
விடை:
இறந்தவர் தியாகத்தை நினைவுகூர்ந்து நடுகற்களை நிறுவினர்.

(ஈ) நடுகற்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை விளக்கும் தமிழ் நூல் எது?
விடை:
தொல்காப்பியம்.

Question 3.
தமிழ் அல்லாத சான்றுகள் (வெளிநாட்டவர் குறிப்புகள்)

(அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன?
விடை:
பண்டைத் தமிழ்ச் சமூகம் உலகெங்கும் கொண்டிருந்த விரிந்த தொடர்புகள்.

(ஆ) பாண்டிய நாட்டிலிருந்து முத்தும் சங்கும் வந்ததைக் கூறும் மௌரியர் காலச்
விடை:
செவ்வியல் நூல் யாது? சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் உள்ள “பாண்டிய காவாடகா என்ற குறிப்பு.

(இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?
விடை:
முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் காலவரிசையில் விவரிக்கும் குறிப்பு.

(ஈ) இந்தியாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் யார்?
விடை:
மூத்த பிளினி

Question 4.
இந்தியத் தொழில்துறைகள் மற்றும் சங்க காலக் கைவினைகள்
(அ) நகர மயமாக்கத்தின் முக்கியமான கூறுகளைக் கூறுக.
விடை:
கைவினைத் தயாரிப்புகள், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்கள்.

(ஆ)மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர் என்ன?
விடை:
பானை செய்வோர்.

(இ) பானை செய்தலின் வெவ்வேறு வகைகள் யாவை?
விடை:
கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை, கருப்பு-சிவப்பு நிறத்தவை.

(ஈ) விவசாயத்திலும் போரிலும் இரும்பின் பயன்பாடுகள் என்ன?
விடை:
உழுகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.

VII. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சங்க கால சமுதாயத்தைப் பற்றி ஆராய்க.
விடை:
சமூகப் பிரிவுகள்:

  • சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் பாணர், பரதவர், எயினர், உழவர், கானவர், வேட்டுவர், மறவர் போன்ற சமூக பிரிவுகள் இருந்தன.
  • வட இந்தியாவில் காணப்பட்ட சாதி அமைப்பு தமிழகத்தில் வேரூன்றவில்லை. மாறாக செய்தொழில் அடிப்படையில் சமூகக் குழுக்களாகக் காணப்பட்டனர்.
  • அரசர்களும், குலத்தலைவர்களும், வணிகர்களும் செழிப்பான வாழ்வில் திளைத்தனர். அந்தணர்கள் என்று அறிப்பட்ட பூசாரிகளும் இருந்தனர்.
  • சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியில் வறுமை நிலவியது. இசைவாணர்களாகிய பாணர்கள், செல்வம் படைத்தோரைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்க்கை நடத்தினர்.

பெண்கள்:

  • சங்க இலக்கியங்களில் தாய், தலைவி, செவிலித்தாய், தோழி என்று பற்பல இடங்களில் மகளிர் குறித்த செய்திகள் பலவாறு கூறப்படுகின்றன
  • பாணர் குலப்பெண்கள், நாட்டிய மகளிர், பெண்பாற் புலவர்கள், அரச மகளிர் ஆகியோர் குறித்தும் ஐவகை (நிலப்பகுதி சார்ந்த பெண்கள்) குறித்தும் குறிப்பிடுகின்றன
  • பெண்கள் தங்கள் கணவரோடு உயிர்துறக்க முன் வந்ததை அக்கால இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்.

மனவரைபடம்

தொடக்க காலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 60

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

10th Social Science Guide தேசியம்: காந்திய காலகட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
அ) மோதிலால் நேரு
ஆ) சைஃபுதீன் கிச்லு
இ) முகம்மது அலி
ஈ) ராஜ் குமார் சுக்லா
விடை:
ஆ) சைஃபுதீன் கிச்லு

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) கல்கத்தா
ஈ) நாக்பூர்
விடை:
ஈ) நாக்பூர்

Question 3.
விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
அ) 1930 ஜனவரி 26
ஆ) 1929 டிசம்பர் 26
இ) 1946 ஜூன் 16
ஈ) 1947 ஜனவரி 15
விடை:
அ) 1930 ஜனவரி 26

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 4.
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
அ) 1858
ஆ) 1911
இ) 1865
ஈ) 1936
விடை:
இ 1865

Question 5.
1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
அ) கோவில் நுழைவு நாள்
ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
இ) நேரடி நடவடிக்கை நாள்
ஈ) சுதந்திரப் பெருநாள்
விடை:
அ) கோவில் நுழைவு நாள்

Question 6.
மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
அ) 1858ஆம் ஆண்டு சட்டம்
ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909
இ) இந்திய அரசுச் சட்டம், 1919
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
விடை:
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
காந்தியடிகளின் அரசியல் குரு ……………… ஆவார்.
விடை:
கோபால கிருஷ்ண கோகலே

Question 2.
கிலாபத் இயக்கத்துக்கு ……………… தலைமை ஏற்றனர்.
விடை:
அலி சகோதரர்கள்

Question 3.
1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ………………. அறிமுகம் செய்தது.
விடை:
இரட்டை ஆட்சி முறையை

Question 4.
வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ………………
விடை:
கான் அப்துல் கஃபார்கான்

Question 5.
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ……………..ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
விடை:
வகுப்புவாரி ஒதுக்கீடு

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 6.
…………… என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார். விடை:
உஷா மேத்தா
ans:

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
ii) எம். சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.
iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

அ) (i) மற்றும் (ii) சரியானது
ஆ) (ii) மற்றும் (iii) சரியானது
இ) (iv) சரியானது
ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது
விடை:
ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது

Question 2.
கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.
காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுகான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
இ கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

Question 3.
கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
விடை:

  • அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைதார்.
  • ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள்.
  • அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிக்சூட்டில் கொல்லப்பட்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 2.
கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தபோது இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
  • அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
  • மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது.
  • இந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் ஆதரவளித்தார்.

Question 3.
ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார்?
விடை:

  • 1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் தூண்டுதலில் வன்முறையாக மாறியது.
  • இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர்.
  • இதன் காரணமாக காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.

Question 4.
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
விடை:

  • 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
  • இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
  • இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.

Question 5.
முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
விடை:

  • டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
  • அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 6.
பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
    லாலா லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை
  • அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
  • அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
  • ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
  • பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

Question 7.
பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
விடை:

  • தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.
விடை:
ஜெனரல் டயரின் கொடுங்கோன்மை:

  • அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைத்தார்.
  • உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள்.
  • அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.
  • ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

கிலாபத் இயக்கம் :

  • 1918இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.
  • இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
  • அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
  • இந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் ஆதரவளித்தார்.
  • இந்த இயக்கத்தை இந்து முஸ்லீம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார்.
  • 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு அவர் தலைமையேற்றார்.
  • அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து முஸ்லீம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார்.
  • ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்டு முதல் நாள் தொடங்கியது.

வரிகொடா இயக்கம் மற்றும் சௌரி சௌரா சம்பவம்:

  • 1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
  • இந்த இயக்கங்கள் ஒரு தேசியத் தலைவராக காந்தியடிகளின் நற்பெயரைப் பெரிதும் மேம்படுத்தின.
  • குறிப்பாக விவசாயிகள் மத்தியில் ஒரு மாபெரும் தலைவராக அவரது மரியாதையை உயர்த்தின.
  • வேல்ஸ் இளவரசரின் இந்தியப் பயணத்தை புறக்கணிப்பது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
  • 1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
  • தாம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புக்காக தங்களை காவல்நிலையத்துக்குள் அடைத்துக் கொண்டனர்.
  • ஆனால் ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர்.
  • காந்தியடிகள் உடனடியாக இந்த இயக்கத்தை திரும்பப்பெற்றார்.

சைமன் குழு புறக்கணிப்பு:

  • 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்காா இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
  • சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
  • இது ‘சைமன் குழு’ என்றே அழைக்கப்பட்டது.
    இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
  • இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.

Question 2.
காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.
விடை:

  • டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
  • அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.

உப்பு சத்தியாகிரகம்:

  • 1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அவை கீழ்க்கண்டவையாகும்:
  • இராணுவம் மற்றும் ஆட்சிப்பணி சேவைகளுக்கான செலவுகளை 50 சதவிகிதம் வரை குறைப்பது.
  • முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.
  • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.
  • நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.
  • உப்பு வரியை ரத்துசெய்வது.

வட்டமேசை மாநாடு:

  • காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை.
  • இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.

காந்தி-இர்வின் ஒப்பந்தம்:
வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குபோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.

கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டல் :
இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.

  • இந்தமுறை அரசு எதிர்ப்பை சமாளிக்க ஆயத்தமாக இருந்தது.
  • படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 1932 ஜனவரி 4ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
  • விரைவில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • ஆர்ப்பட்டங்கள் மற்றும் மறியல் செய்த மக்கள் படைகொண்டு அடக்கப்பட்டனர்.

அதன் முக்கிய விதிமுறைகள் :

  • தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 3.
இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.
விடை:
நேரு அறிக்கை:

  • அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.
  • அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது.

சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை: சிம்லா மாநாடு

  • 1945ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதிகள் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.
  • போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன.

அமைச்சரவைத் தூதுக்குழு:

  • பிரிட்டனில் தொழிற்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார்.
  • பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகை செய்தது.
  • முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள், வடமேற்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள், மற்றும் வடகிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் என மூன்றுவகையாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

10th Social Science Guide தேசியம்: காந்திய காலகட்டம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் ……………… புறப்பட்டுச் சென்றார்.
அ) வடஆப்பிரிக்கா
ஆ) தென்னாப்பிரிக்கா
இ) தென் அமெரிக்கா
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தென்னாப்பிரிக்கா

Question 2.
……………. நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால் இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.
அ) பன்னிரெண்டாம்
ஆ) பதினெட்டாம்
இ) பத்தொன்பதாம்
ஈ) இருபதாம்
விடை:
இ பத்தொன்பதாம்

Question 3.
………………இல் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அ) அமிர்தசரஸ்
ஆ) நாக்பூர்
இ) தில்லி
ஈ) கொல்கத்தா
விடை:
அ) அமிர்தசரஸ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 4.
ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் அதிகாரப்பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் மற்றும் ……………… க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அ) 10
ஆ) 100
இ) 1000
ஈ) 10000
விடை:
இ 1000

Question 5.
……………… ஆண்டு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்.
அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1991
ஈ) நவம்பர் 1991
விடை:
அ) நவம்பர் 1919

Question 6.
……………. மாதம் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1920
ஈ) நவம்பர் 1902
விடை:
இ டிசம்பர் 1920

Question 7.
இந்திய தேசிய காங்கிரஸ் ……………… க்கு அங்கீகாரம் அளித்தது.
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) கோபால கிருஷ்ண கோகலே
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) காந்தியடிகள்

Question 8.
காந்தியடிகள் ………………. பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
அ) 98
ஆ) 87
இ 78
ஈ) 88
விடை:
இ 78

Question 9.
…………….. ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.
அ) 1898
ஆ) 1878
இ) 1888
ஈ) 1988
விடை:
ஆ) 1878

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 10.
……………… ஆம் ஆண்டு லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.
அ) டிசம்பர் 1920)
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930
ஈ) அக்டோபர் 1919
விடை:
இ நவம்பர் 1930

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ……………… ஒப்பந்தத்தின் படி ரத்து செய்யப்பட்டது.
விடை:
ஸ்மட்ஸ்-காந்தி

Question 2.
காந்தியடிகளுக்கு ………………….. ஆகியோரின் எழுத்துகளுடன் அறிமுகம் கிடைத்தது.
விடை:
டால்ஸ்டாய், ஜான் ராஸ்கின்

Question 3.
ரௌலட் சட்டத்தை ……………… என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6-ல் அழைப்புவிடுத்தார்.
விடை:
கருப்புச் சட்டம்

Question 4.
……………. மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விடை:
ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு

Question 5.
1922 பிப்ரவரி மாதம் ……………… வரிகொடா இயக்கம் பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
விடை:
பர்தோலி

Question 6.
1925ல் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு ……………… கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.
விடை:
சுயராஜ்ஜிய கட்சி

Question 7.
அரசியல் சாசன வரைவுக்கான குழுவின் ……………… நேரு அறிக்கை என்று அழைக்கப்பட்டது.
விடை:
கமிட்டி அறிக்கை

Question 8.
………………இல் இடஒதுக்கீடு வழங்குவது கிறித்து ஜின்னா சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
விடை:
மத்திய சட்டபேரவையில்

Question 9.
தமிழ்நாட்டில் ………………யிலிருந்து ………………வரை தண்டியாத்திரை போன்று ஒரு யாத்திரையை சி.ராஜாஜி மேற்கொண்டார்.
விடை:
திருச்சிராப்பள்ளி – வேதாரண்யம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 10.
கான் அப்துல் கஃபார்கான் …………….. என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர் இயக்கத்தை நடத்தினார்
விடை:
செஞ்சட்டைகள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : ஜாலியன் வாலா பாக் படுகொலை 1919 ஏப்ரல் 13ல் நடந்தது.
காரணம் : ஜெனரல் டயரின் தலைமையில் நடந்தது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

Question 2.
கூற்று : காந்தியடிகள் தனது 61வது வயதில் 24 நாட்களில் 241 மைல் கடந்து தண்டியை அடைந்தார்.
காரணம் : ஏப்ரல் 4ஆம் நாள் தண்டி கடற்கரையை சென்றடைந்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
இரட்டை ஆட்சி குறிப்பு வரைக.
விடை:

  • 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதன் மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது.
  • நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய், மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன.

Question 2.
நேரு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகள் யாவை?
விடை:

  • இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்ம்களுக்கு இடஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையிராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இட ஒதுக்கீடு.
  • பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 3.
காந்தி இர்வின் ஒப்பந்தம் குறிப்பு வரைக.
விடை:

  • காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து 1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

Question 4.
B.R. அம்பேத்கரின் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை எழுதுக.
விடை:

  • அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார்.
  • கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப்பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார்.
  • கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
  • 1933 ஜனவரி 8ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.

Question 5.
இந்திய அரசுச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசர் சட்டமும் ஒன்றாகும்.
  • மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச் சட்டத்தின் ‘ முக்கிய அம்சங்களாகும்.

Question 6.
காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல் பற்றிக் கூறு.
விடை:

  • 1939இல் இரண்டாம் உலக போர் மூண்டது.
  • காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது.
  • எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.
  • ஜின்னா 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Question 7.
கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்ட அறிக்கை யாது?
விடை:

  • போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
  • பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய அளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.
  • போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
ஒத்துழையாமை இயக்கத்தின் திட்டத்தின் கூறுகளை விவரி.
விடை:

  1. பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.
  2. அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.
  3. நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.
  4. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.
  5. அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.
  6. குடிமைப்பணி (சிவில்) அல்லது இராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.
  7. அந்நியப் பொருள்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

10th Social Science Guide காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
அ) வஹாபி கிளர்ச்சி
ஆ) ஃபராசி இயக்கம்
இ) பழங்குடியினர் எழுச்சி
ஈ) கோல் கிளர்ச்சி
விடை:
ஆ) ஃபராசி இயக்கம்

Question 2.
‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
அ) டிடு மீர்
ஆ) சித்து
இ) டுடு மியான்
ஈ) ஷரியத்துல்லா
விடை:
இ டுடு மியான்

Question 3.
நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?
அ) சாந்தலர்கள்
ஆ) டிடு மீர்
இ) முண்டா
ஈ) கோல்
விடை:
அ) சாந்தலர்கள்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 4.
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே
இ) பிபின் சந்திர பால்
ஈ) ரொமேஷ் சந்திரா
விடை:
இ பிபின் சந்திர பால்

Question 5.
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?
அ) 1905 ஜூன் 19
ஆ) 1906 ஜூலை 18
இ) 1907 ஆகஸ்ட் 19
ஈ) 1905 அக்டோபர் 16
விடை:
1905 அக்டோபர் 16

Question 6.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
விடை:
இ முண்டா கிளர்ச்சி

Question 7.
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
அ) அன்னி பெசன்ட் அம்மையார்
ஆ) பிபின் சந்திர பால்
இ) லாலா லஜபதி ராய்
ஈ) திலகர்
விடை:
ஈ) திலகர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 8.
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
அ) தீன பந்து மித்ரா
ஆ) ரொமேஷ் சந்திர தத்
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) பிர்சா முண்டா
விடை:
அ) தீன பந்து மித்ரா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக .

Question 1.
மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான …………….. இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.
விடை:
வஹாபி

Question 2.
சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ………………
விடை:
கோல் கிளர்ச்சி

Question 3.
……………… சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.
விடை:
சோட்டா நாக்பூர் குத்தகை

Question 4.
சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு …………….
விடை:
1908

Question 5.
W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ………..
விடை:
1885

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை
ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை
இ) (iii) மற்றும் (iv) சரியானவை
ஈ) (i) மற்றும் (iv) சரியானவை
விடை:
அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
(i) காலனி ஆட்சி பற்றியப் பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். (
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.

அ) (i) மற்றும் (iii) சரியானவை
ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை
இ) (ii) மற்றும் (iii) சரியானவை
ஈ) (iii) மற்றும் (iv) சரியானவை
விடை:
ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

Question 3.
கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

Question 4.
கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
இ கூற்றும் மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
ஆங்கிலேயே இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை:

  • மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்
  • சமய இயக்கங்கள்
  • சமூகக் கொள்ளை
  • மக்களின் கிளர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
விடை:
சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.

Question 3.
வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?
விடை:

  • இந்தியா பொருளாதார ரீதியாக அடிபணிந்து பிரிட்டிஷ் தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்குபவராக மாற்றப்பட்டது.
  • அதேசமயம் இது ஆங்கில உற்பத்தியை கைவிடுவதற்கும் பிரிட்டிஷ் மூலதனத்தின் முதலீட்டிற்கும் ஒரு சந்தையாக மாறியது.
  • எனவே காலனித்துவ பொருளாதாரம் இந்தியாவுக்கு எந்தவொரு சாதகமான வருமானமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வளங்களை மாற்றுவதாக இருந்தது.
  • இது ‘செல்வத்தின் வடிகால்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
விடை:

  • அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.
  • தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராதநிலை வழங்கப்பட்டது.
  • அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.

Question 5.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
விடை:

  • லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதே ஏற்றுக்கொண்டது.
  • இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
1857ஆம் ஆண்டின் கிளாச்சியான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.
விடை:
காரணங்கள் : ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை :
உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

வாரிசு இழப்புக் கொள்கை:

  • சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
  • இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது.
  • 1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக் குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
  • ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர்.
  • ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக் குறைந்த அளவில்
    ஊதியம் வழங்கப்பட்டது.
  • அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.

உடனடிக்காரணம்:

  • புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது.
  • பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டன.
  • சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர்.
  • மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?
விடை:
இந்து முஸ்லிம் பிரிவினை:
வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.

பிரிவினைக்கு எதிரான இயக்கம்:

  • பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது அவற்றில் ஒரு முறையாகும்.
  • எனினும் சுதேசி இயக்கத்தின் கொள்கை வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் இன்னமும் கட்டுப்பட்டிருந்தது.
  • 1905 அக்டோபர் 16இல் வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது.
  • ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.

வங்காளத்தில் புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் (1905-1911):

  • புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன.
  • வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன.
    1. மிதவாதப்போக்கு
    2. ஆக்கப்பூர்வ சுதேசி
    3. தீவிர தேசியவாதம்
    4. புரட்சிகர தேசியவாதம்

10th Social Science Guide காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது ………………………. ஆண்டுகளுக்கு நீடித்தது.
அ) 100
ஆ) 190
இ) 109
ஈ) 209
விடை:
ஆ) 190

Question 2.
……………… ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்தது.
அ) 1857
ஆ) 1987
இ) 1587
ஈ) 1875
விடை:
அ) 1857

Question 3.
மார்ச் 29ம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ……………………… அதிகாரியைத் தாக்கினார்.
அ) அமெரிக்க
ஆ) ரஷ்ய
இ) ஐரோப்பி
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஐரோப்பிய

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 4.
1857ஆம் ஆண்டில் பிற்பகுதியில் …………….. ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது.
அ) சென்னை
ஆ) தில்லி
இ) மும்பை
ஈ) ஆந்த்ரா
விடை:
ஆ) தில்லி

Question 5.
இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் ………………. முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
அ) ஐந்து
ஆ) இரண்டு
இ) மூன்று |
ஈ) ஏழு
விடை:
ஆ) இரண்டு

Question 6.
பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு ……………. விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர்.
அ) குறைந்த விலையில்
ஆ) அதிக விலையில்
இ) நடுத்தர விலையில்
ஈ) மிக அதிக விலையில்
விடை:
அ) குறைந்த விலையில்

Question 7.
இண்டிகோ கிளர்ச்சி தொடங்கப்பட்ட ஆண்டு ………………….
அ) 1989
ஆ) 1859
இ) 1789
ஈ) 1895
விடை:
ஆ) 1859

Question 8.
அதிக அளவிலான வரி விதிப்பு ……………… பாதித்தது.
அ) வேளாண்மை
ஆ) மீன்பிடித்தல்
இ) சுரங்கத் தொழில்
ஈ) தொழிலகம்
விடை:
அ) வேளாண்மை

Question 9.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.
அ) உமேஷ் சந்திர பானர்ஜி
ஆ) A.O. ஹியூம்
இ) கர்சன் பிரபு
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) உமேஷ் சந்திர பானர்ஜி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 10.
……………. ல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1866
விடை:
ஆ) 1906

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிளாசிப் போருக்கு வித்திட்டவர் ……………. ஆவார்.
விடை:
ராபர்ட் கிளைவ்

Question 2.
கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக ………….. விவசாயிகள் ஒன்று திரட்டப்பட்டனர்.
விடை:
பெரும் எண்ணிக்கையில்

Question 3.
ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் …………….. பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை.
விடை:
தனிச்சொத்துரிமை

Question 4.
சாந்தலர் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கிய மண்ட லம் ………….. ஆகும்.
விடை:
சாந்தல் பர்கானா

Question 5.
கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு ………………. என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர் பெற்றவர்கள்.
விடை:
குண்டக்கட்டி

Question 6.
தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க ………………. தமது சேவைகளை வழங்கினார்.
விடை:
A.0. ஹியூம்

Question 7.
வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட ………………. வாழ்ந்த மக்களும் உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தெரிவித்தனர்.
விடை:
கிராம சமூகத்தில்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 8.
1905ஆம் ஆண்டின் ………………. மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
விடை:
வங்கப் பிரிவினை

Question 9.
1914ஆம் அண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை …………… ஆதரவைத் தந்தது.
விடை:
பிரிட்டிஷாருக்கு

Question 10.
முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை ……………. ஏற்றது.
விடை:
காங்கிரஸ் தலைமை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : ஹாஜி ஷரீயத்துல்லா என்பவரால் 1819ஆம் ஆண்டு பராசி இயக்கம் தொடங்கப்பட்டது.
காரணம் : ஃஷரீயத்துல்லாவிற்கு பிறகு டுடுமியான் தலைமை ஏற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
ஆ) கூற்று தவறு காரணம் சரி.

Question 2.
கூற்று : வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும், நிலப்பிரபுக்களுக்கும் ஏகிராகத் துவங்கப்பட்டது.
காரணம் : டிடு மீர் விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபராகத் திகழ்ந்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சமய இயக்கங்கள் குறிப்பு வரைக.
விடை:
சமய இயக்கங்களுக்கு தலைமையேற்ற சமயத்தலைவர்கள் சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.

Question 2.
சமூகக் கொள்கை குறிப்பு வரைக.
விடை:

  • இத்தகைய இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர்.
  • ஆனால் அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அவர்களைத் தங்களுடைய மேம்பாட்டிற்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கண்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 3.
மேலாதிக்கக் கொள்கை குறிப்பு வரைக.
விடை:

  • ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள்.
  • உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

Question 4.
1857ம் ஆண்டின் பெருங்கலகத்தின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.
  • இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.

Question 5.
இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல் பற்றி எழுதுக.
விடை:

  • 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காலனிகளில் ஒன்றாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
  • அமைச்சரவை உறுப்பினர் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது, அவர் இந்தியாவுக்கான அரசுச் செயலராக பதவி வகிப்பார்.

Question 6.
பிரித்தாளும் கொள்கை வரையறு.
விடை:
இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆகிலேயர்கள் தங்களுக்கச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டதையடுத்து அது பிரித்தாளும் கொள்கை என்று அறியப்பட்டது.

Question 7.
வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போக்குகள் யாவை?
விடை:

  • மிதவாதப் போக்கு
  • ஆக்கபூர்வ சுதேசி
  • தீவிர தேசியவாதம்
  • புரட்சிகர தேசியவாதம்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை எழுதுக.
விடை:

  • மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குகிறது.
  • சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
  • நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது. – இராணுவச்செலவுகளைக் குறைப்பது.
  • உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
  • நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.
  • ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.
  • காவல்துறை சீர்திருத்தங்கள்.
  • வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.
  • இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய எழுச்சி மற்றும் பொருளாதாரத்தை பற்றி விவரிக்க.
விடை:
அ. தேசியத்தின் எழுச்சி:
19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.

எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர்.

அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள்.

ஆ. காலனி ஆட்சிபற்றிய பொருளாதார விமர்சனம்:
காலனி ஆட்சி பற்றி பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.

தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியில் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள்.

இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வதுதான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வேலுநாச்சியார்
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை:
ஆ) பூலித்தேவர்

Question 2.
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
அ) வேலுநாச்சியார்
ஆ) கட்டபொம்மன்
இ) பூலித்தேவர்
ஈ) ஊமைத்துரை
விடை:
இ) பூலித்தேவர்

Question 3.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
அ) கயத்தாறு
ஆ) நாகலாபுரம்
இ) விருப்பாட்சி
ஈ) பாஞ்சாலங்குறிச்சி
விடை:
ஆ) நாகலாபுரம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ) கோபால நாயக்கர்
விடை:
அ) மருது சகோதரர்கள்

Question 5.
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
அ) 1805 மே 24
ஆ) 1805 ஜூலை 10
இ) 1806 ஜூலை 10
ஈ) 1806 செப்டம்பர் 10
விடை:
இ 1806 ஜூலை 10

Question 6.
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
அ) கர்னல் பேன்கோர்ட்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) சர் ஜான் கிரடாக்
ஈ) கர்னல் அக்னியூ
விடை:
இ சர் ஜான் கிரடாக்

Question 7.
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
அ) கல்கத்தா
ஆ) மும்பை
இ) டெல்லி
ஈ) மைசூர்
விடை:
அ) கல்கத்தா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
விஸ்வநாத நாயக்கர்

Question 2.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.
விடை:
கோபால நாயக்கர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 3.
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் என்பவரை அனுப்பிவைத்தார்.
விடை:
இராமலிங்க முதலியார்

Question 4.
கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
விடை:
கயத்தார்

Question 5.
மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை:
2ம் பாளையக்காரர் போர்

Question 6.
…………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
விடை:
ஃபதேக் ஹைதர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
(i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழி நடத்தினார்.

அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி.
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.
இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி.
ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி.
விடை:
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799ல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
ஈ) (i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

Question 3.
கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
விடை:

  • பாளையக்காரர்கள் வரிவசூலிப்பதிலும், நிலப்பகுதிகளை நிர்வகிப்பதிலும், வழக்குகளை விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் தன்னிச்சையாகச் செயல்பட முடிந்தது.
  • அவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது.

Question 2.
கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.
விடை:
கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள்:
சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியனவாகும்.

மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் :
ஊத்துமலை, தலைவன் கோட்டை நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியனவாகும்.

Question 3.
களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குக் செல்லும் படையை பலப்படுத்தினார்.
  • மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600 க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
  • மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
  • களக்காட்டில் நடைப்பெற்ற போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. cooooooooo பிரிலியண்ட் ’ஸ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?
விடை:

  • வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
  • பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது,
  • அனைத்து பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.

Question 5.
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
விடை:

  • பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
  • இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
  • ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்ட னர்.
  • உத்தி விரைவில் பாளையக்காரர்களின் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
வீரபாண்டிய கட்டபொம்மன் :

  • பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
  • தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.
  • ளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்காரர்களிடம் வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும்பகை ஏற்பட அடிப்படையானது.

ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல்:

  • 1798 ஆகஸ்ட் 19இல் இராமநாதபுத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு, கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார்.
  • ஆனால் கட்டபொம்மன் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததோடு ஜாக்சன் அவரைச் சந்திக்க மறுத்தார்.
  • ஊமைத்துரை கட்டபொம்மன் தப்ப உதவினார்.
  • சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை:

  • மே 1799இல் மதராஸில் இருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
  • பானெர்மென் செப்டம்பர் 5 அன்று முழுப் படைகளையும் பாஞ்சாலங்குறிச்சியில் கொண்டுவந்து நிறுத்தினார்.
  • பானெர்மென் இராமலிங்கரை தூதனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.
  • கட்டபொம்மன் மறுத்தார்.
  • கள்ளர்பட்டியில் நடைபெற்ற மோதலில் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்படல் :

  • கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார்.
  • எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகமிழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்.
  • திருநெல்வேலிக்கு மிக அருகேயுள்ள கயத்தாறில் பாளையங்கோட்டைக்கு முன்பாக இருந்த புளியமரத்தில் சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆராய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.
விடை:

  • மருது சகோதரர்கள் இருவரும் சிவகங்கையின் முத்துவடுகநாதரின் திறமையான படைத்தளபதிகளாவார்.
  • மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்கத் திட்டமிட்டனர்.
  • 1800இல் மீண்டும் கலகம் வெடித்தது.
  • இது இரண்டாம் பாளையக்காரர் போர் எனப்பட்டது.

சிவகங்கையின் வீழ்ச்சி:

  • ஆங்கிலேயர்கள் மே 1801இல் தஞ்சாவூரிலும், திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களைத் தாக்கினார்கள்.
  • கலகக்காரர்கள், பிரான்மலையிலும், காளையார் கோவிலும் தஞ்சம் புகுந்தனர்.
  • அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டனர்.
  • இறுதியாக வலுவான இராணுவமும், சிறப்பான தலைமையும் கொண்ட ஆங்கிலேய கம்பெனியே விஞ்சி நின்றது.
  • கலகம் தோற்றதால் 1801இல் சிவகங்கை இணைக்கப்பட்டது.
  • ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16இல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.
  • கலகக்காரர்களில் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேசியாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
  • மருது சகோதரர்களின் கலகம் தென்னிந்தியப் புரட்சி என்று அழைக்கப்படுவதோடு தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.

கர்நாடக உடன்படிக்கை:

  • 1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.
  • பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.

Question 3.
வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
விடை:
புரட்சி வெடித்தல்:

  • 1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.
  • கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார்.
  • இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
  • கோட்டையைக் கடந்து சென்று கொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்டார்.
  • சூழலை விசாரித்தறிய முற்பட்ட அவரது உடல் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது.
  • ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்.
  • அவர்களின் லெப்டினென்ட் எல்லியும், லெப்டினென்ட் பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை:

  • கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.
  • புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.

புரட்சியின் பின்விளைவுகள் :

  • திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
  • கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
  • புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.

10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
பரம்பரை பரம்பரையாக ………………… பாளையக்காரர்கள் இருக்கிறார்கள்.
அ) 72
ஆ) 52
இ) 62)
ஈ) 27
விடை:
அ) 72

Question 2.
…………… இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது.
அ) சமஸ்கிருதம்
ஆ) ஹிந்தி
இ) தமிழ்
ஈ) பெங்காலி
விடை:
இ தமிழ்

Question 3.
எந்த ஆண்டில் பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?
அ) 16 மார்ச் 1761
ஆ) 18 மே 1961
இ) 16 மே 1761
ஈ) 18 மார்ச் 1761
விடை:
இ 16 மே 1761

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
யூசுப்கான் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
அ) 1764
ஆ) 1876
இ) 1766
ஈ) 1876
விடை:
அ) 1764

Question 5.
ஹைதர் அலி தனது ……………… கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
இ திண்டுக்கல்

Question 6.
பிரிட்டிஷ் படைகளால் கோபால நாயக்கர் ……………. வெற்றிகொள்ளப்பட்டார்.
அ) 1872
ஆ) 1901
இ) 1801
ஈ) 1972
விடை:
இ 1801

Question 7.
கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் …………………. பகோடாக்களாக இருந்தது.
அ) 2510
ஆ) 3310
இ) 6310
ஈ) 3301
விடை:
ஆ) 3310

Question 8.
1798 ஆகஸ்ட் 18ல் …………… வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஜாக்சன் ஆணை பிறப்பித்தார்.
அ) திருச்சி
ஆ) இராமநாதபுரம்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
ஆ) இராமநாதபுரம்

Question 9.
மருது சகோதரர்களும், கட்டபொம்மனும் இணைந்து …………….ஐ எதிர்ப்பது என்று முடிவெடுத்தனர்.
அ) துருக்கியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) ஆங்கிலேயர்கள்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை:
இ ஆங்கிலேயர்கள்

Question 10.
சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் ………………. அன்று தூக்கிலிடப்பட்டார்.
அ) 13 செப்டம்பர்
ஆ) 31 செப்டம்பர்
இ) 13 அக்டோபர்
ஈ) 30 அக்டோபர்
விடை:
அ) 13 செப்டம்பர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நாடுபிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை ……………… பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்த பூலித்தேவரிடமிருந்து வெளிப்பட்டது.
விடை:
திருநெல்வேலி

Question 2.
பூலித்தேவர் மைசூரின் …………….. மற்றும் பிரெஞ்சுகாரர்களது ஆதரவினைப் பெற முயன்றது.
விடை:
உடையாள்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 3.
……………… என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
விடை:
ஹைதர் அலி

Question 4.
வசூலிக்கப்பட்ட வரியில் ……………… நவாபிற்கும் குடும்ப பராமரிப்பிற்கும் ஒதுக்கப்பட்டது.
விடை:
ஆறில் ஒரு பங்கு

Question 5.
கட்டபொம்மனும் நிலுவைத் தொகையில் ………………. பகோடாக்கள் நீங்கலாக பிற நிலுவைத் தொகையினை செலுத்தி இருந்தனர். விடை:
1080

Question 6.
.கட்டபொம்மணின் ………………. மேஜர் பானர்மென் செப்டம்பர் 5 அன்று கோட்டையைத் தாக்கினார்.
விடை:
பிடிகொடுக்கா பதிலால்

Question 7.
………………. கோட்டை மிக குறைந்த காலத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது.
விடை:
பாஞ்சாலங்குறிச்சி

Question 8.
மருது சகோதரர்கள் …………….. நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.
விடை:
ஜீன் 1801

Question 9.
ஆங்கிலேயரின் ………………. என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களில் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
விடை:
பிரித்தாளும் கொள்கை

Question 10.
கலகக்காரர்களில் ……………… பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
விடை:
73 பேர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பினார்.
காரணம் : மாபூஸ்கான் வெற்றி பெற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
கூற்று : நாயக்க மன்னர்களால் 75 பாளையங்கள் உருவாக்கப்பட்டது.
காரணம் : இவை இரு தொகுதியைக் கொண்டது .

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
ஏன் யூசுப்கான் பூலித்தேவருடன் போர் தொடுக்க ஆயத்தமாகவில்லை?
விடை:
கம்பெனியாரால் அனுப்பப்பட்ட யூசுப்கான் (கான்சாகிப் என்றும் தமது மதமாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர்) திருச்சிராப்பள்ளியில் இருந்து தான் எதிர்பார்த்த பெரும்பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வந்துசேரும் வரை பூலித்தேவர் மீது தாக்குதல் தொடுக்க அவர் ஆயுத்தமாகவில்லை.

Question 2.
பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யாவை?
விடை:

  • நெற்கட்டும்செவல்
  • வாசுதேவநல்லூர்
  • பனையூர்

Question 3.
ஒண்டிவீரன் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் தலைமையேற்றிருந்தார்.
  • பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.

Question 4.
குயிலி பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
  • உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
  • குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 5.
கர்நாடக உடன்படிக்கை வரையறு.
விடை:
1799 மற்றும் 1800-1801ஆம் ஆண்டு பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டதன் விளைவு தமிழகத்திலிருந்த அனைத்து உள்ளூர் குடித்தலைமையினரின் எண்ணங்களையும் நீர்த்துப்போகச்செய்தது.
1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி, பிரிட்டிஷார் நேரயாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
வேலூர்ப் புரட்சியைப் பற்றி மதிப்பிடுக.
விடை:
புரட்சியைப் பற்றிய மதிப்பீடு:
வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்காத காரணத்தினாலேயே வேலூர் புரட்சி தோல்வியுற்றது.

புரட்சிக்கான ஏற்பாடுகளை 23ஆம் படைப்பிரிவின் 2ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும், ஜமேதாரான ஷேக் ஹீஸைனும், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதார்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது.

1857ஆம் ஆண்டு பெரும்கலகத்திற்கான அனைத்து முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை .

1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்துவிடவில்லை.

பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது எதிரொலித்தது.

Question 2.
வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
தனது தந்தையாரான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.

கம்பெனி நிர்வாகிகளான ஜேம்ஸ் லண்டன் மற்றும் காலின் ஜாக்சன் என்போர் இவரை அமைதியை விரும்பும் மனம் கொண்டவராகவே கருதினார்.

எனினும் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.

1781இல் கம்பெனியாருடன் நவாப் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, மைசூரின் திப்பு சுல்தானுடன் ஆற்காட்டு நவாப் போர்புரிந்து கொண்டிருந்தபோது, கர்நாடகப்பகுதியில் வரி மேலாண்மையும், நிர்வாகமும் கம்பெனியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்நிலை ஏற்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது.

அனைத்துப் பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.

ஆட்சியர்கள் பாளையக்கரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.

இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
அ) 1827
ஆ) 1829
இ) 1826
ஈ) 1927
விடை:
ஆ) 1829

Question 2.
தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்
விடை:
அ) ஆரிய சமாஜம்

Question 3.
யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை
விடை:
அ) பார்சி இயக்கம்

Question 5.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
ஆ) பாபா ராம்சிங்

Question 6.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
விடை:
அ) M.G. ரானடே

Question 7.
‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா
விடை:
அ) தயானந்த சரஸ்வதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
விடை:
இராமலிங்க சுவாமிகள்

Question 2.
புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………
விடை:
மகாதேவ் கோவிந்த் ரானடே

Question 3.
குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..
விடை:
ஜோதிபா பூலே

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.
விடை:
சுவாமி விவேகானந்தர்

Question 5.
………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
விடை:
சிங்சபா

Question 6.
‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.
விடை:
அயோத்தி தாசர்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) இராஜா ராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி
ஆ) i), ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி
விடை:
ஈ) i), iv) ஆகியன சரி

Question 2.
i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபாபூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

அ) i) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி
விடை:
இ) i), ii) ஆகியன சரி

Question 3.
i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
விடை:
ஆ) i) மற்றும் ii) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
விடை:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
விடை:

  • நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக் கூறுகளை முன் வைத்தார்.
  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  • அவர் ஒருவரே உண்மையின் எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின் சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை.
  • நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  • அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

Question 2.
சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
விடை:

  • சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம் விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவார்.
  • மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.
  • அன்பையும், இரக்கத்தையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்டினர். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

Question 4.
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
விடை:
சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள், விதவைப் பெண்கள் மறுமணம், பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 5.
ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
விடை:
ஜோதிபா பூலே :

  • 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
விடை:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியா சதி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பலதார மறுமணம் மற்றும் பல சமூக தீமைகளால் பிடிக்கப்பட்டிருந்தது.
  • பெண்களுக்கு கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை.
  • பெண்கள் ஆண்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நிலை பரிதாபகரமாக இருந்தது.
  • பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு தடை விதிக்கப்பட்டது.
  • ஆகவே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வியில்லை.
  • மூடநம்பிக்கை, மத நம்பிக்கை மற்றும் விலங்குகளை பலி கொடுப்பது போன்ற தீய நடைமுறைகள் இந்திய சமுதாயத்தில் இருந்தன.
  • குழந்தை திருமண முறை இருந்ததால் குழந்தை விதவைகளுக்கு வழிவகுத்தது.
  • இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
விடை:
இராமகிருஷ்ண பரமஹம்சர் :

  • இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவார்.
  • அவர் கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
  • அவருடைய கருத்தினப்டி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார்.
  • மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

சுவாமி விவேகாநந்தர்:

  • பின்னாளில் நரேந்திரநாத் தத்தா என்றழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர் (1863-1902).
  • இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார்.
  • மரபு சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
  • இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
  • 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.

Question 3.
பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
விடை:
ராஜாராம் மோகன்ராய்:

  • விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.
  • பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.
  • மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
  • பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை வலுவாக முன் வைத்தார்.

தயானந்த சரஸ்வதி:
குழந்தை திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற நடைமுறைகளை அவர் அறிவித்தார்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்:

  • இவர் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினார்.
  • இவர் விதவை மறுமணத்தை ஆதரித்தார் மற்றும் பலதார மணம் (ம) குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.

ஜோதிபாபூலே:

  • இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
  • விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபாபூலேவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
நவீன இந்தியாவின் முன்னோடி …………
அ) ஜோதிபாய் பூலே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) விவேகானந்தர்
ஈ) இராஜாராம் மோகன்ராய்
விடை:
ஈ) இராஜாராம் மோகன் ராய்

Question 2.
மகரிஷி …………….. கொள்கைக் கூறுகளை முன்வைத்தார்.
அ) 4
ஆ) 5
இ) 8
ஈ) 6
விடை:
அ) 4

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
தேவேந்திரநாத் ……………… சீர்திருத்தவாதியாவார்.
அ) மிதவாத
ஆ) தீவிரவாத
இ) கம்யூனிச
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) மிதவாத

Question 4.
அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் ………….
அ) யாசர் அரபாத்
ஆ) கமால் பாட்சா
இ) ஆசாத்
ஈ) சர் சையது அகமது கான்
விடை:
ஈ) சர் சையது அகமது கான்

Question 5.
ஜோதிபா பூலேவின் ……………. சாவித்திரி பாய் ஆவார்.
அ) மகள்
ஆ) தாய்
இ) சகோதரி
ஈ) மனைவி
விடை:
ஈ) மனைவி

Question 6.
வங்காளத்தை சேர்ந்த முதன்மையான சீர்திருத்தவாதி ……………
அ) அஹமது கான்
ஆ) M.G. ரானடே
இ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஈ) அய்யன்காளி
விடை:
இ ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Question 7.
……………… நூல்கள் முற்போக்கானவை.
அ) சீக்கியம்
ஆ) இந்து
இ) கிறித்துவ
ஈ) இஸ்லாமிய
விடை:
ஆ) இந்து

Question 8.
தியோபந்த் இயக்கம் ஒரு ……………… இயக்கம் ஆகும்.
அ) அரசியல்
ஆ) சமூக
இ) கலாச்சார
ஈ) மீட்பு
விடை:
ஈ) மீட்பு

Question 9.
ராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் ……………. ஆவார்.
அ) ஜோதிபா பூலே
ஆ) அய்யன்காளி
இ) விவேகானந்தர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ விவேகானந்தர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 10.
ஜோதிபா பூலே எழுதிய நூல் …………… ஆகும்.
அ) சுதேசி
ஆ) குலாம்கிரி
இ) இண்டிகா
ஈ) வெனிஸ் நகர வணிகர்
விடை:
ஆ) குலாம்கிரி

Question 11.
……………….. நாராயணகுருவால் கவரப்பட்டார்.
அ) பூலே
ஆ) அய்யன்காளி
இ) ராமலிங்க அடிகள்
ஈ) அயோத்தி தாசர்
விடை:
ஆ) அய்யன்காளி

Question 12.
இராமகிருஷ்ணரின் போதனைகளை பரப்பும் பெரும்பணியின் பின்புலமாய் …………………… இருந்தார்.
அ) பரமஹம்சர்
ஆ) விவேகானந்தர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) அய்யன்காளி
விடை:
ஆ) விவேகானந்தர்

Question 13.
மௌலானா முகமத் உல்-ஹசன் ……………… புதிய தலைவரானார்.
அ) தியோபந்தின்
ஆ) புதிய தியோபந்த்
இ) அலிகார்
ஈ) அஹமது கான்
விடை:
அ) தியோபந்தின்

Question 14.
விவேகானந்தரின் இயற்பெயர் …………………………
அ) நரேந்திரநாத் தத்தா
ஆ) இராமலிங்க அடிகள்
இ) அயோத்தி தாசர்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
விடை:
நரேந்திரநாத் தத்தா

Question 15.
மேற்கத்திய கருத்துக்களின் சிந்தனைகளின் தாக்கங்களுக்குள்ளானது ……………………… வர்க்க ம் ஆகும்.
அ) இஸ்லாம்
ஆ) இந்து
இ) நடுத்தர
ஈ) எதுவுமில்லை
விடை:
இ நடுத்தர

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இராஜா ராம் மோகன் ராய் …………….., ……………… பெற்றிருந்தார்.
விடை:
ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிர்ப்பு

Question 2.
இராஜராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை …………….. நிறுவினார்.
விடை:
20 ஆகஸ்ட் 1808

Question 3.
தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ……………… எனப்பட்டது.
விடை:
ஆதி பிரம்ம சமாஜம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் ……………… முக்கியப் பங்காற்றியது.
விடை:
பிரம்ம ஞான சபை

Question 5.
அன்னிபெசன்டின் நாளிதழ்கள் … ………………….. ஆகியன ஆகும்.
விடை:
நியூ இண்டியா, காமன் வீல்

Question 6.
ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ……………… பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
விடை:
1920

Question 7.
……………… அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்.
விடை:
சிங்சபா

Question 8.
அயோத்தி தாசர் ………………. எனும் அமைப்பை உருவாக்கினார்.
விடை:
திராவிடர் கழகம்

Question 9.
………………. எனும் ஊரில் பெரிய கோவிலைக் கட்டியவர் நாராயணகுரு.
விடை:
அருவிபுரம்

Question 10 .
……………… மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது.
விடை:
1856

Question 11.
தக்காணக் கல்விக் கழகத்தை நிறுவியவர் …………………..
விடை:
M.G. ரானடே

Question 12.
வேதங்களுக்கு திரும்புவோம் என்பது ………………. சமாஜத்தின் முழக்கமாகும்.
விடை:
ஆசிய

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 13.
ஆணும், பெண்ணும் சமம் என்று ………………. கூறியது.
விடை:
சீக்கிய சீர்திருத்த இயக்கம்

Question 14.
சுத்தி இயக்கத்தை நிறுவியவர் ………………. ஆவார்.
விடை:
தயானந்த சரஸ்வதி

Question 15.
உலக சமய மாநாடு ……………….. நடந்தது.
விடை:
1893

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) அய்யன்காளி 1863ல் பிறந்தார்.
ii) “ஜீவன்” என்பதே “சிவன்” என பரமஹம்சர் கூறினார்.
iii) பரமஹம்சரின் சீடர் ஜோதிபா பூலே.
iv) 1999ல் பிரம்மஞான சபை தொடங்கப்பட்டது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iv சரி
ஈ) iii சரி
விடை:
அ) i, ii சரி

Question 2.
கூற்று : சர்சையது அஹமது கான், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
காரணம் : இஸ்லாமியர்கள் மேலை நாட்டு அறிவியலை கற்க வேண்டும் என்பதற்காக.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 4

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்து புத்தெழுச்சி இயக்கத்திற்கு வித்திட்டவர்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • சுவாமி தயானந்த சரஸ்வதி
  • இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • சுவாமி விவேகானந்தர்
  • அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இராமகிருஷ்ண மிஷனின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது.
  • மருத்துவ உதவி
  • இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது.

Question 3.
பிரம்மஞான சபையின் முக்கியப் பங்கு யாது?
விடை:

  • பிரம்மஞான சபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
  • இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றுகிறது.

Question 4.
அலிகார் இயக்கம் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
  • ‘அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
  • இந்திய முஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
  • 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 5.
தியோபந்த் இயக்கம் பற்றி எழுதுக. தியோபந்த் இயக்கம்:
விடை:

  • தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.
  • இவ்வியக்கம் பழமைவாய்ந்த முஸ்லீம் உலகமக்களால், தொடங்கப்பெற்றது.
  • இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர்.
  • இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் பற்றி விவரிக்க.
விடை:
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்):

  • பஞ்சாப் சீக்கியச் சமூகத்திலும் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
  • சிலைவழிபாடு, சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
  • ஆரியசமாஜம் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது. சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
  • ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. > சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

Question 2.
இராமலிங்க சுவாமிகள் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட, இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் (1823 – 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார்.
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்” எனும் கருத்தினை முன்வைத்தார்.
  • அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

10th Social Science Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தெரிவு செய்க.

Question 1.
எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
அ) உட்ரோ வில்சன்
ஆ) ட்ரூமென்
இ) தியோடர் ரூஸ்வேல்ட்
ஈ) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
விடை:
ஆ) ட்ரூமென்

Question 2.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
அ) செப்டம்பர் 1959
ஆ) செப்டம்பர் 1949
இ) செப்டம்பர் 1954
ஈ) செப்டம்பர் 1944
விடை:
ஆ) செப்டம்பர் 1949

Question 3.
அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ………………… ஆகும்.
அ) சீட்டோ
ஆ) நேட்டோ
இ) சென்டோ
ஈ) வார்சா ஒப்பந்தம்
விடை:
ஆ) நேட்டோ

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 4.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
அ) ஹபீஸ் அல் – ஆஸாத்
ஆ) யாசர் அராபத்
இ) நாசர்
ஈ) சதாம் உசேன்
விடை:
ஆ) யாசர் அராபத்

Question 5.
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
அ) 1975
ஆ) 1976
இ) 1973
ஈ) 1974
விடை:
ஆ) 1976

Question 6.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
அ) 1979
ஆ) 1989
இ) 1990
ஈ) 1991
விடை:
ஈ) 1991

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ………………. ஆவார்.
விடை:
டாக்டர் சன்-யாட்-சென்

Question 2.
1918இல் ………….. பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைவு நிறுவப்பட்டது.
விடை:
பீகிங்

Question 3.
டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் …………….. ஆவார்.
விடை:
சியாங்-கை-ஷேக்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 4.
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ……………… ஆகும்.
விடை:
சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்

Question 5.
துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ……………
விடை:
வெர்செய்ல்ஸ்

Question 6.
ஜெர்மனி நேட்டோவில் …………….ஆம் ஆண்டு இணைந்தது.
விடை:
1955

Question 7.
ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
ஸ்ட்ராஸ்பர்க்

Question 8.
ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ……………….. ஆகும்.
விடை:
மாஸ்டிரிக்ட்

III. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க.

Question 1.
i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1898) இளம் பேரரசர் துவக்கிய சீர்த்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறியப்படுகிறது.
ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.
iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) i) மற்றும் iv) சரி
விடை:
இ) i) மற்றும் iii) மட்டும் சரி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.
ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.
iii) சிட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.
iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.

அ) ii), iii) மற்றும் iv) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) மற்றும் iv) சரி
ஈ) i), ii) மற்றும் iii) சரி
விடை:
ஆ) i) மற்றும் ii) மட்டும் சரி

Question 3.
கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறு நிர்மானத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.

அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை
இ) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
இ கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
விடை:
1911ஆம் ஆண்டு சீனப்புரட்சி:

  • மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேராசிரியர் தாவோகரின் மரணத்தோடு துவங்கியது.
  • புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர்.
  • உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
  • ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934-இல் கிளம்பினர்.
  • அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது. இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களைக் கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
  • அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன.

Question 3.
பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக.
விடை:
சென்டோ (CENTO) அல்லது பாக்தாத் ஒப்பந்தம்:

  • துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் 1955இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.
  • 1958இல் இணைந்ததோடு, இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு என்று அறியப்பட்டது.
  • இவ்வொப்பந்தம் 1979இல் கலைக்கப்பட்டது.

Question 4.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
விடை:
மார்ஷல் திட்டம் :

  • மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
  • இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலர், ஜார்ஜ், சி. மார்ஷல் ஐரோப்பாவின் சுய முன்னேற்ற முயற்சிக்குத் தம் நாடு பண உதவி செய்யுமென்று அறிவித்தார்.
  • நிதியுதவி வழங்கும் மார்ஷலின் திட்டமானது 1951-இல் முடிவுக்கு வந்தது.

Question 5.
மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரசியலில் முதலாம் உலக நாடுகள் என்றும் சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன.
  • இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?
விடை:

  • சோவியத்நாடு கியூபாவில் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை இரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
  • இறுதியாக சோவியத் நாட்டின் குடியரசுத் தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப்பெற உறுதியளித்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

VI. விரிவான விடை தருக.

Question 1.
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
விடை:
கோமிங்டாங்கும் ஷியாங்கே-ஷேக்கும்

  • சன்யாட் சென் இறந்தபின் கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங்கே-ஷேக்கும்.
  • பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ-யென்-லாயும் மாசே துங்கும் விளங்கினர்.
  • பொதுவுடைமைவாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமைவாதிகளை முக்கிய பொறுப்புகளிலிருந்து விடுவித்தார்.
  • வெற்றிகரமாக அவர் 1928ஆம் ஆண்டு பீகிங் நகரைக் கைப்பற்றினார்.
  • மீண்டும் சீனாவில் ஒரு நடுவண் அரசு உருவானது.

விவசாயிகளை வழி நடத்திய மாவோ:

  • கோமிங்டாங்கின் கட்டுப்பாடு நகரங்களின் மீது கடுமையாக இருந்ததை மாவோ (மா சே துங்) உணர்ந்தார்.
    அதனால் அவர் விவசாயிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.
  • மாவோவின் தலைமையில் சில நூறு கம்யூனிஸ்டுகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்தனர்.
  • கோமிங்டாங்கால் அக்காட்டு மலைப்பகுதிகளில் நுழைய முடியாத அதே வேளையில் மாவோவின் படை பெருகிக் கொண்டே சென்றது.

1934இல் நீண்ட பயணம்:

  • 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக்கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
  • 1934இல் 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் நீண்ட பயணத்தை மேற்கொண்டனர்.
  • அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
  • இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களை கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
  • அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன. 1937ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.

Question 2.
ஐரேப்பியக்குழு எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.
விடை:
ஐரோப்பிய குழுமம்:

  • ஐரோப்பியர்களுக்கிடையே மூண்ட போர்களைத் தவிர்க்கவும் அதிலும் குறிப்பாக பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த பகைமையை ஒடுக்கவும்
  • ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கொண்ட சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும்.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளுக்கும் சோவியத் நாட்டின் படைகளுக்கும் சமமாக ஒரு படை பலத்தை நிறுவவும்.
  • கண்டங்களிடையே அல்லது கண்டங்களில் பொருளாதார மற்றும் இராணுவ வளங்களையும் திறன்களையும் முழுதாகப் பயன்படுத்தவும் முடியும் என்று கருதப்பட்டது.

ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்:

  • ஐரோப்பியப் பாதுகாப்பு சமூகமும் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகமும் துவங்கப்பட்டன.
  • ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
  • ஐரோப்பியப் பொருளாதார, சமூகம் பிரெஸெல்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஏற்படுத்தியது.

ஐரோப்பியப் பொருளாதார சமூகம்:

  • இச்சமூகம் பண்டங்கள், சேவைகள், முதலீடு, தொழிலாளர்கள் போன்றவற்றின் நகர்வை எல்லைகள் கொண்டு நிறுத்துவதை மாற்றியது.
  • சந்தைப்போட்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது.
  • ஐரோப்பிய பொதுச்சந்தை என்பது ஒரு வெற்றிகரமான முயற்சியாகும்.

ஒற்றை ஐரோப்பியச் சட்டம்:

  • ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1 ஜுலை 1987இல் நடைமுறைக்கு வந்தது.
  • ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்டவடிவம் கொடுத்தது.
  • ஒரு சட்ட நிறைவேற்றத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என நிலை நிறுத்தப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

ஐரோப்பிய ஒன்றியம்:

  • 1992 பிப்ரவரி 7இல் கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிகட் (நெதர்லாந்து) ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. பிரெஸெல்ஸ் (பெல்ஜியம்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

10th Social Science Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
………………. சீனாவில் ஒரு கம்யூனிச அரசை நிறுவியது.
அ) முதல் உலகப் போர்
ஆ) இரண்டாம் உலகப் போர்
இ) அ (மற்றும்) ஆ
ஈ) பனிப்போர்.
விடை:
ஆ) இரண்டாம் உலகப் போர்

Question 2.
மார்ஷல் திட்டத்தின் மூலம் அமெரிக்கா ………………………ன் நம்பிக்கையை வென்றது.
அ) ஜெர்மனி
ஆ) ஐரோப்பா
இ) ஜப்பான்
ஈ) இத்தாலி
விடை:
ஆ) ஐரோப்பா

Question 3.
……………… சுவர் உடைக்கப்பட்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது.
அ) சீனா
ஆ) பெர்லின்
இ) ஐரோப்பா
ஈ) எதுமில்லை
விடை:
ஆ) பெர்லின்

Question 4.
நீண்ட வரலாற்றைக் கொண்ட ……………… நாகரிகம் ஐரோப்பாவை விட மேம்பட்டதாகும்.
அ) ரஷ்யா
ஆ) சீன
இ) பிரெஞ்சு
ஈ) அ (மற்றும்) ஆ
விடை:
ஆ) சீன

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசியார் தாவேகரின் மரணத்தோடு …………………..ல் துவங்கியது.
அ) 1917
ஆ) 1929
இ) 1908
ஈ) 1999
விடை:
இ 1908

Question 6.
இராணுவக் கிளர்ச்சி ……………………….. ல் ஏற்பட்டது.
அ) 1911 அக்டோபர்
ஆ) 1929 அக்டோபர் .
இ) 1909 அக்டோபர்
ஈ) 1999 அக்டோபர்
விடை:
1911 அக்டோபர்

Question 7.
சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராக …………….. தேர்வு செய்யப்பட்டார்.
அ) ஷியாங் கைஷேக்
ஆ) சோ என் லாய்
இ) Dr. சன்யாட் சென்
ஈ) மாசே துங்
விடை:
இ Dr. சன்யாட் சென்

Question 8.
யுவான் ஷி கேயின் கீழ் ………………. வருடம் சீனா ஒருமைப்பாட்டுடன் விளங்கியது.
அ) 2
ஆ) 3
இ) 6
ஈ) 4
விடை:
ஈ) 4

Question 9.
பீகிங் பல்கலைக் கழகத்தில் ……………… கற்கும் அமைப்பு உருவானது.
அ) பாசிசம்
ஆ) நாசிசம்
இ) மார்க்ஸியம்
ஈ) சீக்கியம்
விடை:
இ மார்க்ஸியம்

Question 10.
பொதுவுடைமை (மற்றும்) செல்வாக்கின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………… ஆவார்.
அ) ஷியாங் கை ஷேக்
ஆ) கோமிங்டாங்
இ) சன்யாட் சென்
ஈ) மா சே துங்
விடை:
ஆ) கோமிங்டாங்

Question 11.
1928ல் கோமிங்டாங் …………………….. யைக் கைப்பற்றினார்.
அ) நான்கிங்
ஆ) பீகிங்
இ) ஹாங்கிங்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பீகிங்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 12.
………………. முழு சீன பொதுவுடைமையும் மாவே வசம் வந்தது.
அ) 1933
ஆ) 1928
இ) 1954
ஈ) 1952
விடை:
அ) 1933

Question 13.
பீகிங்கை சுற்றியிருந்த பகுதி …………….. கட்டுப்பாட்டின் கீழிருந்தது.
அ) மார்ஷல்
ஆ) ஷியாங் கை ஷேக்
இ) யுவான் கே ஷேக்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஷியாங் கை ஷேக்

Question 14.
……………. வர்க்கத்தின் ஆதரவைப் பெற மாவோ முயற்சித்தார்.
அ) முதல்தர
ஆ) நடுத்தர
இ) கீழ்த்தர
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) நடுத்தர

Question 15.
தற்போதைய உலகில் …………….. வல்லரசுகள் உள்ள ன.
அ) 4
ஆ) 5
இ) 2
ஈ) 3
விடை:
இ 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. என்பது வடக்கு அட்லாண்டிக் சாசனம் ஆகும்.
விடை:
நேட்டோ

Question 2.
…………….. சீனப் புரட்சியில் ஒரு முக்கிய எழுச்சியாகும்.
விடை:
தைபிங் கலகம்

Question 3.
…………… என்பது இராணுவக் கூட்டுகளின் ஒப்பந்தமாகும்.
விடை:
NATO

Question 4.
நேட்டோ போல எந்தவொரு அமைப்பையும், ……………… கொண்டிருக்கவில்லை .
விடை:
சீட்டோ

Question 5.
……………. 1991ல் முடிவுக்கு வந்தது.
விடை:
வார்சா ஒப்பந்தம்

Question 6.
சீட்டோ ……………….ல் கலைக்கப்பட்டது.
விடை:
1979

Question 7.
1958ல் அமெரிக்கா சீட்டோவில் இணைந்ததோடு இவ்வொப்பந்தம் ……………… எனப் பெயர் மாற்றப்பட்டது.
விடை:
மத்திய உடன்படிக்கை அமைவு

Question 8.
யூதர்களின் பூர்வீகப்பகுதி …………….. ஆகும்.
விடை:
பாலஸ்தீனம்

Question 9.
உலக சீயோனிய இயக்கம் ……………… உருவானது.
விடை:
1897

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 10.
பெர்லின் சுவர் ………………. தகர்க்க ப்பட்டது.
விடை:
1961

Question 11.
…………….. கிழக்கு, மேற்கு ஜெர்மனியை இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.
விடை:
ஹெல்மட்கோல்

Question 12.
பெரிட்ஸ்ரோய்கா என்பதன் பொருள் …………….. என்பதாகும்.
விடை:
மறுகட்டமைப்பு

Question 13.
மாஸ்கோ நகரின் மேயர் ……………. ஆவார்.
விடை:
எல்சின்

Question 14.
செர்னோபில் பேரழிவு. ……………… நடந்தது.
விடை:
உக்ரைனில்

Question 15.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ……………… உறுப்பு நாடுகள் உள்ளன.
விடை:
28

III. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க.

Question 1.
i) ஒற்றை ஐரோப்பிய சட்டம் 1992 பிப்ரவரி 7ல் கையெழுத்தானது.
ii) ஒற்றை ஐரோப்பியா வெளியுறவுக் கொள்கையின் ஒத்துழைப்பை நாடியது.
iii) ஐரோப்பிய ஒன்றியத்தில் 29 நாடுகள் உள்ளது.
iv) மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவானது.

அ) i, iii சரி
ஆ) ii, iv சரி
இ) ii, iii சரி
ஈ) iv சரி
விடை:
ஆ) ii, iv சரி

Question 2.
கூற்று : இஸ்ரேல் என்ற தேசம் 1948ல் உருவானது.
காரணம் : பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர் “யாசர் அராபத்” ஆவார்.

அ) கூற்று, காரணம் சரி
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
ஈ) கூற்று, காரணம் தவறு, காரணம் கூற்றுக்கு பொருத்தமானது.
விடை:
இ கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
பனிப்போர் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் இந்நாடுகளின் நட்பு நாடுகளுக்குமிடையே மூண்ட விரோதம், பரபரப்பையே பனிப்போர் என்கின்றனர்.
  • அவை நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தவில்லை.
  • மாறாக அவர்கள் அரசியல் பொருளாதார சிந்தனைத் தளங்களைத் தேர்வு செய்து கொண்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
அணிசேரா இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை?
விடை:

  • அமைதியோடு இணைந்திருத்தல்.
  • அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல்.
  • எந்த அணியோடும் ராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல்.
  • எந்த வல்லரசுக்கும் நாட்டிற்குள் ராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல்.

Question 3.
புலம்பெயர் சமூகம் பற்றி எழுதுக.
விடை:

  • யூதர்களின் பூர்வீகப்பகுதியான பாலஸ்தீனத்தில் 1900இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர்.
  • இவ்வினத்தின் பதினைந்து மில்லியன் மக்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் பரவிக்கிடந்தனர்.
  • இதுவே ‘புலம்பெயர்’ சமூகம் என்று குறிக்கப்படுகிறது.

Question 4.
பாலஸ்தீனிய விடுதலை அமைப்புப் பற்றி எழுதுக.
விடை:

  • இஸ்ரேல் என்ற தேசம் 1948இல் உருவாவதற்கு முன் பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும்.
  • இரகசியமாக செயல்பட்டு வந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964-இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
  • இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.

Question 5.
பெரிஸ்ட்ரோய்கா என்றால் என்ன?
விடை:
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் முன்னேற்றத்திற்கு சோவியத்தின் பொருளாதாரம் ஈடுகொடுக்கும்படி அதற்குப் புத்துணர்வு ஊட்ட வெளிப்படைத்தன்மை கொள்கையோடு அறிமுகப்படுத்தப்பட்டதே பெரிஸ்ட்ரோய்கா ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

VI. விரிவான விடை தருக.

Question 1.
கியூபாவின் புரட்சி பற்றி விவரிக்க.
விடை:
அமெரிக்க ஐக்கிய நாடு மத்திய அமெரிக்காவிலும் (ஹோண்டுரஸ், எல் சல்வதோ, நிகரகுவா, பனாமா, க்வாத்தமாலா) கரீபியப் பகுதியிலும் (கியூபா, டோமினியக் குடியரசு, ஹைதி) கிழக்கு ஆசியாவிலும் (பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தெற்கு வியட்நாம், தாய்லாந்து) தனக்கு துணைக் கோள்களாகச் சுற்றிச் செயல்படும் நாடுகளைக் கொண்டிருந்தது.

இந்நாடுகள் இராணுவ அதிகாரிகளாலும் பெரும் நிலச்சுவான்தாரர்களாலும் சில சூழ்நிலைகளில் பெருமுதலாளிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தன.

காஸ்ட்ரோ பதவியேற்ற பின் கியூபாவிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களைச் சுத்திகரிக்க மறுத்தன.

அதற்குப் பதிலடியாக அமெரிக்க ஐக்கிய நாடு அதுவரை கியூபாவிலிருந்து மொத்தமாக சர்க்கரைக் கொள்முதல் செய்து வந்ததை நிறுத்திக் கொண்டது.

காஸ்ட்ரோநாட்டிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் சர்க்கரை ஆலைகளை தேசியமயமாக்கியதன் மூலம் மின்சார விநியோகத்திலும் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்துவதிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கிருந்த ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

Question 2.
சூயஸ் கால்வாய் சிக்கல் பற்றி விவரிக்க.
விடை:
எகிப்தில் 1952இல் நிகழ்ந்த ஓர் இராணுவக் கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத்தலைவராக ஆக்கப்பட்டார்.

  • அவர் 1956ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
  • இது பிரிட்டிஷாரின் நல்லெண்ணெத்திற்கு விரோதமாகத் தெரிந்தது.
  • இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தன.
  • இஸ்ரேலியப் படைகள் அக்டோபர் 29இல் எகிப்து மீது படையெடுத்தன.
  • இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரிட்டன் தனது படைகளைக் கால்வாயைக் காப்பாற்றும் வகையில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது.
  • இதற்கு எகிப்து மறுத்ததால் அக்டோபர் 31இல் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து அந்நாட்டின் விமானத்தளங்கள் மீதும் இன்னபிற முக்கியத்தளங்கள் மீதும் சூயஸ்கால்வாய்ப் பகுதியிலும் குண்டுவீசின.
  • எனினும் உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் நவம்பர் 6ஆம் தேதி பிரான்சும் பிரிட்டனும் தங்கள் எதிர்ப்பை நிறுத்திக்கொண்டன.
  • இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நேரு இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட சீரிய பங்காற்றினார்.