Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?
அ) பாதுகாப்பு அமைச்சர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) வெளிவிவகாரங்கள் அமைச்சர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
இ வெளிவிவகாரங்கள் அமைச்சர்

Question 2.
எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
அ) இந்தியா மற்றும் நேபாளம்
ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இ) இந்தியா மற்றும் சீனா
ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
விடை:
இ இந்தியா மற்றும் சீனா

Question 3.
இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
அ) சட்டப்பிரிவு 50
ஆ) சட்டப்பிரிவு 51
இ) சட்டப்பிரிவு 52
ஈ) சட்டப்பிரிவு 53
விடை:
ஆ) சட்டப்பிரிவு 51

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 4.
இன ஒதுக்கல் கொள்கை என்பது
அ) ஒரு சர்வதேச சங்கம்
ஆ) இராஜதந்திரம்
இ) ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
ஈ) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை
விடை:
இ ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

Question 5.
1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.
அ) வியாபாரம் மற்றும் வணிகம்
ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
இ) கலாச்சார பரிமாற்றங்கள்
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
விடை:
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

Question 6.
நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?
அ) உலக ஒத்துழைப்பு
ஆ) உலக அமைதி
இ) இனச் சமத்துவம்
ஈ) காலனித்துவம்
விடை:
ஈ) காலனித்துவம்

Question 7.
கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
அ) யூகோஸ்லோவியா
ஆ) இந்தோனேசியா
இ) எகிப்து
ஈ) பாகிஸ்தான்
விடை:
ஈ) பாகிஸ்தான்

Question 8.
பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி.
அ) சமூக நலம்
ஆ) சுகாதாரம்
இ) ராஜதந்திரம்
ஈ) உள்நாட்டு விவகாரங்கள்
விடை:
இ ராஜதந்திரம்

Question 9.
அணிசேராமை என்பதன் பொருள்…………
அ) நடுநிலைமை வகிப்பது
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
இ) இராணுவமயமின்மை
ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

Question 10.
இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது ……………
அ) ஆற்றல் பாதுகாப்பு
ஆ) நீர் பாதுகாப்பு
இ) தொற்றுநோய்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ………….
விடை:
பொக்ரான்

Question 2.
தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ……………… உருவாக்குவதற்கான வழிமுறையாக செயல்படுகிறது.
விடை:
உள் முதலீட்டை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
…………. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 4.
இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை ………..
விடை:
அணி சேராக் கொள்கை

Question 5.
நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் …………….. நடைமுறைப்படுத்துவதாகும்.
விடை:
படைவலிமைக் குறைப்பை

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். i) பஞ்சசீலம்
ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை
iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

அ) (i), (iii), (iv), (ii)
ஆ) (i), (ii), (iii), (iv)
இ) (i), (ii), (iv), (iii)
ஈ) (i), (iii), (ii), (iv)
விடை:
அ) (i), (iii), (iv), (ii)

Question 2.
பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.
iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
v) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

அ) (1) மற்றும் (ii)
ஆ) (iii) மற்றும் (iv)
இ) (ii) மட்டும்
ஈ) (iv) மட்டும்
விடை:
இ (ii) மட்டும்

Question 3.
கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா தவறா என எழுதுக.
அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.
ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
விடை:
அ) சரி, ஆ) தவறு, இ சரி

Question 4.
கூற்று : 1971இல் இந்தோ – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத்யூனியனுடன் இணைந்தது.
காரணம் : இது 1962இன் பேரழிவுகரமான சீன போருக்கு பின் தொடங்கியது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு.

Question 5.
கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது.
அ) கடுமையான வறுமை
ஆ) எழுத்தறிவின்மை
இ) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
விடை:
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.

Question 2.
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.
விடை:
இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துக்கள் :

  • முதலில் பயன்படுத்துவதில்லை .
  • குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத்திறன்.
  • அணு ஆயுதத்தை போர்த்தாக்குதலுக்கு பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.

Question 3.
வேறுபடுத்துக:
விடை:
உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை.
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 3

Question 4.
பஞ்சசீல கொள்கைகளில் நான்கினைப் பட்டியலிடுக.
விடை:
பஞ்சசீலம் :

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல்.
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை .
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
  • அமைதியாக சேர்ந்திருத்தல்.

Question 5.
இந்தியா அணிசேரா கொள்கையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
விடை:
நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

Question 6.
சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
விடை:
சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் :
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை .

Question 7.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
விடை:
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யூகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 8.
வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • உடன்படிக்கைகள் மற்றும் நிர்வாக ஒப்பந்தங்கள்
  • தூதுவர்களை நியமித்தல்
  • வெளிநாட்டு உதவி
  • சர்வதேச வணிகம் மற்றும்
  • ஆயுதப்படைகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
விடை:
அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961:

  • அணி சேரா இயக்கம் என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
  • அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
  • பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
ஜவஹர்லால் நேரு – இந்தியா
டிட்டோ – யூகோஸ்லோவியா
நாசர் – எகிப்து
சுகர்னோ – இந்தோனேசியா
குலாமே நிக்ரூமா – கானா

Question 2.
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?
விடை:
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் :

  • நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு.
  • நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.
  • இயற்கை வளங்கள்
  • பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
  • அரசியில் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
  • அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை
  • இராணுவ வலிமை
  • சர்வதேச சூழ்நிலை
  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்துதல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிறநாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்

Question 3.
அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவு கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.
விடை:
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகள் :

  • தேசிய நலனைப் பேணுதல்.
  • உலக அமைதியை எய்துதல்.
  • ஆயுதக் குறைப்பு.
  • பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்.
  • அமைதியான வழிகளில் பிரச்சினைகளைத் தீர்த்தல்.
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு.
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்.
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு.

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டது.
அ) 1953
ஆ) 1986
இ) 1954
ஈ) 1964
விடை:
ஆ) 1986

Question 2.
………………. இந்தோனேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அ) வெளியுறவு கொள்கை
ஆ) பஞ்சசீலக் கொள்கை
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவும் இல்லை
விடை:
ஆ) பஞ்சசீலக் கொள்கை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
………………. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளை எதிர்த்தார்.
அ) V. கிருஷ்ண மேனன்
ஆ) நாகா
இ) ஜவகர்லால் நேரு
ஈ) சுகர்னோ
விடை:
இ ஜவகர்லால் நேரு

Question 4.
அணிசேரா இயக்கமானது ……………… உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
அ) 120
ஆ) 105
இ) 98
ஈ) 110
விடை:
அ) 120

Question 5.
சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் ………….. இல் அமைக்கப்பட்டுள்ளது.
அ) புதுடெல்லி
ஆ) மஹாராஷ்டிரா
இ) ராஜஸ்தான்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுடெல்லி

Question 6.
……… ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அ) அணிசேரா இயக்கம்
ஆ) உள்நாட்டு கொள்கை
இ) வெளியுறவு கொள்கை
ஈ) சார்க் இயக்கம்
விடை:
அ) அணிசேரா இயக்கம்

Question 7.
இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் ……………… பாலமாக உள்ள து.
அ) ஸ்ரீலங்கா
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மியான்மர்

Question 8.
………………. அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அ) இந்தியா – பசிபிக்
ஆ) இந்திய – அமெரிக்க
இ) அ) மற்றும் ஆ) இரண்டும்
ஈ) ஆசியா
விடை:
ஆ) இந்திய – அமெரிக்க

Question 9.
ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற ஆண்டு ……………..
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1995
விடை:
இ 1955

Question 10.
…………… உலகளவில் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கிய குரலாக உள்ளது.
ஆ) இலங்கை
ஆ) நேபாள்
இ) பூடான்
ஈ) இந்தியா
விடை:
இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 2.
……………… என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
விடை:
அணிசேராமை

Question 3.
அணிசேராமை இயக்கமானது …………….. பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
விடை:
120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளையும்

Question 4.
……………… என்பது நடுநிலையாக இருப்பது என்பது பொருள் அல்ல.
விடை:
அணிசேராமை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 5.
இரண்டாவது அணு சோதனை ……………… உள்ள பொக்ரான் என்னும் இடத்தில் நடைபெற்றது.
விடை:
ராஜஸ்தானில்

Question 6.
சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ………….. நாடுகளுக்கு கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகும்.
விடை:
தெற்காசிய

Question 7.
சார்க் செயற்கைக்கோளை ……………… மற்றும் …………….. செலுத்தியது.
விடை:
செய்தித் தொடர்பு, வானிலை ஆய்விற்காக

Question 8.
வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை கொண்ட ………………. என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக இருக்கிறது.
விடை:
அண்டைநாடு

Question 9.
…………….. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 10.
…………….. என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 11.
……………… வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
விடை:
இந்தியா

Question 12.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகளைக் கொண்டது ………………. ஆகும்.
விடை:
பன்மைகோட்பாடு

Question 13.
………………….. காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகிறது.
விடை:
பொருளாதார முன்னேற்றம்

Question 14.
………………. நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
விடை:
ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையில்

Question 15.
……………… எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும்.
விடை:
தீவிரவாதத்திற்கு

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 – 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறிக்கோளாக இருந்தது.
ii) இது V. கிருஷ்ண மேனன் வழிகாட்டுதலின்படி அமைந்திருந்தது.
iii) அணிசேராமை இயக்கம் 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகள் மற்றும் 10 சர்வதேச நிறுவனங்களை கொண்டுள்ளது.
iv) நேரு ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

அ) i), ii) சரி
ஆ) i), iv) சரி
இ) iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
இ iii), iv) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சார்க் குறிப்பு வரைக.
விடை:
சார்க் என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவி அரசியல் அமைப்பாகும்.

சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத் தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியனவாகும்.

Question 2.
இராஜதந்திரம் – வரையறு.
விடை:
ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

Question 3.
உலகப் பாதுகாப்பு இந்தியாவில் எவற்றில் பிரதிப்பலிக்கிறது?
விடை:

  • இராணுவ நவீனமயமாக்கல்
  • கடல்சார் பாதுகாப்பு
  • அணுசக்தி

Question 4.
வெளியுறவு அமைச்சகம் என்றால் என்ன?
விடை:
வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது.

1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுப் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

Question 5.
அணிசேரா இயக்கம் பற்றி ஜவகர்லால் நேரு கூறியது யாது?
விடை:
“பரந்த அளிவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல.

அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்”.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
உள்நாட்டுக் கொள்கை வரையறு.
விடை:
உள்நாட்டுக் கொள்கை :
உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.

இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பஞ்சசீலம் – விவரி.
விடை:
(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 6

  • இந்தியா (பிரதமர் – ஜவகர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் – சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது.
  • இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
  • இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க – ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Question 2.
தற்கால சூழலில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வழிகாட்டும் சக்தியாக இந்தியா எவ்வாறு மாற்றமடைந்துள்ளது?
விடை:
பொருளாதார வளர்ச்சி :

  • தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
  • பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன.
  • விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
  • நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • இதனை அடைவதற்குத் தேவையானவை பொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.

வழிகாட்டும் சக்தியாக இந்தியா:

  • ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் ஆகியவற்றால் உறுப்புநாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும்.
  • ஐ.நா சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
  • இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

9th Social Science Guide தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. இந்திய தேர்தல் முறை இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2. இந்தியத் தேர்தல் ஆணையம் நியாயமான பாரபட்சமற்ற தேர்தலை நடத்துகிறது.
3. இந்தியத் தேர்தல் ஆணையம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
4. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் தலைமைத் தேர்தல் அதிகாரி.
5. வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுவது ஜனவரி, 25

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) கனடா
ஈ) ரஷ்யா
விடை:
ஆ) இங்கிலாந்து

Question 2.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
அ) சுதந்திரமான அமைப்பு
ஆ) சட்டபூர்வ அமைப்பு
இ) தனியார் அமைப்பு
ஈ) பொது நிறுவனம்
விடை:
அ) சுதந்திரமான அமைப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 3.
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு
அ) பிரிவு 280
ஆ) பிரிவு 315
இ) பிரிவு 324
ஈ) பிரிவு 325
விடை:
இ) பிரிவு 324

Question 4.
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?
அ) பகுதி III
ஆ) பகுதி XV
இ) பகுதி XX
ஈ) பகுதி XXII
விடை:
ஆ) பகுதி XV

Question 5.
பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் /அங்கீகரிப்பது.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தேர்தல் ஆணையம்
இ) நாடாளுமன்றம்
ஈ) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) தேர்தல் ஆணையம்

Question 6.
கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.
காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 7.
நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 2012
ஆ) 2013
இ) 2014
ஈ) 2015
விடை:
இ) 2014

Question 8.
அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) முன்னாள் சோவியத் யூனியன்
ஈ) இந்தியா
விடை:
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 9.
கூற்று (A) : இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன. காரணம் (R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய தேர்தல் ஆணையம் …………….. உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
விடை:
மூன்று

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ……….
விடை:
ஜனவரி 25

Question 3.
இந்தியாவில் ……………… கட்சி முறை பின்பற்றப்படுகிறது.
விடை:
பல

Question 4.
2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை …..
விடை:
7

Question 5.
நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு …….
விடை:
அழுத்தக்குழு

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 58

IV. பின்வரும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி.
விடை:

  • நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது.
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்ற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
  • மாநில சட்டசபைத் தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு தேவையான மாற்றங்களை மாநில சட்ட சபை சட்டங்களை இயற்றலாம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
அரசியல் கட்சி என்பதன் பொருளை விளக்குக.
விடை:
ஓர் அரசியல் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்ட கொள்கைகளையும் கொண்ட, மக்கள் குழுவின் அமைப்பாகக் காணப்படும்.

Question 3.
இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 66

Question 4.
அழுத்தக் குழுக்கள் என்றால் என்ன?
விடை:
பொது நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக்குழு என்று அழைக்கப்படுகிறது.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி
விடை:
நிறைகள் :

  • வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், நேரடித் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
  • அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது. மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது

குறைகள் :

  • நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
  • எழுத்தறிவற்ற வாக்காளர்கள், சாதி, மதம் மற்றும் பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
  • சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது மற்றொரு சவாலாகும்.
  • தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும், திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர்.
  • நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்களிப்புச்செய்கின்றன. நாடாளுமன்றங்களிலும்,
    சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
  • அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துகின்றன.
  • தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்கட்சியாக அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கின்றன, விமர்சனம் செய்கின்றன. மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

Question 3.
இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?
Answer:
பிரதிநிதித்துவப்படுத்துதல், அரசியல் பங்கேற்பு, கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் போன்ற பல செயல்பாடுகளை அழுத்தக் குழுக்கள் மேற்கொள்கின்றன.

அரசியல் பங்கேற்பு :
மனுக்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவைத்
திரட்டி தங்கள் செல்வாக்கினை அழுத்தக் குழுக்கள் விரிவுபடுத்துகின்றன.

கல்வி :
பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, இணையத்தளம் பராமரிப்பு, அரசுக் கொள்கைகள் மீது கருத்துகள் வெளியிடுவது மற்றும் உயர்நிலைக் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்களிடமிருந்தும் கருத்துகளைத் திரட்டி வல்லுநர்களின் ஆதரவினைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கொள்கை உருவாக்கம் :
அரசுக்குத் தகவல் அளிப்பதிலும், ஆலோசனைகளை வழங்குவதிலும் இந்த அழுத்தக் குழுவினர் வலுவான பங்களிப்புச் செய்து வருகின்றனர். கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை தருகின்றனர்.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. தேசியக் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை ஒப்பிடுக.

VII. சிந்தனை வினா

Question 1.
தேர்தல்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் முக்கியத்துவமாகக் கருதப்படுகின்றது.ஏன்?
விடை:

  • மக்களாட்சி என்பதற்கு ‘நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளது’ என்பது பொருளாகும்.
  • மக்களாட்சி முறையில் மக்கள் தங்களை ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
  • தேர்தல் என்பது ஆட்சியிலிருப்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை ஆகும். இதில் மக்களே அதிகாரம் படைத்தவர்களாக
  • இருக்கின்றனர். மக்கள் நேரடித் தேர்தல் மூலமாகவோ அல்லது மறைமுகத் தேர்தல் மூலமாகவோ தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மக்களாட்சியின் வெற்றி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு நடத்தப்படும் தேர்தலைப் பொறுத்து அமைந்துள்ளது.
  • தேர்தல் மூலமாகவே அரசின் செயல்பாடுகள் பற்றிய தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். எனவே மக்களாட்சியில் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • ஜனநாயக நாடுகளில் வயது வந்தோர் வாக்குரிமை முறை நடைமுறையில் உள்ளது.
  • இந்தியாவில் பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
  • சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்விதப் பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.
  • குடிமக்கள் அனைவருக்கும் நிர்வாகத்தில் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே வயது
    வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

Question 3.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.
விடை:
நிறைகள் :

  • பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கங்கள்.
  • சமத்துவம் சகோதரத்துவம்.
  • மக்களிடையே பொறுப்புணர்ச்சி.
  • தலசுய ஆட்சி.
  • அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்.
  • மக்கள் இறையாண்மை.
  • சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு.

குறைகள் :

  • மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி.
  • வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை.
  • குறைந்த வாக்குப்பதிவு.
  • சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது.
  • மக்களாட்சியில் கையூட்டுகளையும் அதிகாரிகளின் சட்ட மீறல்களையும் தடுக்க முடிவதில்லை.
  • முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 4.
பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.
விடை:

  • இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது பலகட்சி முறை ஆகும். இந்தியா, இலங்கை, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல கட்சி முறை உள்ளது.
  • இந்தியா போன்ற பெரியநாடுகளில் பல இன, மத, மொழி மக்கள் இருப்பதனால் பல கட்சிகள் தோன்ற வழி வகுக்கிறது.
  • பல கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் நல்ல திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த முடியும்.
  • இரண்டு கட்சிகளில் உள்ள தலைவர்களை மட்டுமே நம்பியிராமல், புதிய கருத்துக்களையும், புதிய கோணத்தில் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியுள்ள புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய முடியும். ஆயினும் பல கட்சி முறையில் ஊழல், பிராந்திய உணர்வு
  • ஆகியவை ஊக்கப்படுத்தப்படும். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுகின்ற கட்சித்தாவல் மூலம் அரசின் நிலைத்தன்மைக்கு ஊறு ஏற்படும்.

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

1. உங்களுடைய வகுப்பறையில் மாதிரி வாக்குப் பதிவை நடத்துக.

9th Social Science Guide தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எதிர் கட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதி
அ) ஆளுநர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ சபா நாயகர்
ஈ) தலைமை நீதிபதி
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

Question 2.
தமிழ்நாட்டில் குட வோலை முறை …………. காலத்தில் இருந்தது.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை:
ஆ) சோழர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 3.
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர்
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ குடியரசு துணைத் தலைவர்
ஈ) சபா நாயகர்
விடை:
அ) பிரதமர்

Question 4.
பின்வருவனவற்றுள் எந்த நாட்டில் பல கட்சி ஆட்சிமுறை நடைபெற வில்லை
அ) இந்தியா
ஆ) இலங்கை
இ இத்தாலி
ஈ) சீனா
விடை:
சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பிரதமர் ……….. உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
விடை:
லோக்சபா

Question 2.
VVPTA முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ………
விடை:
2014

Question 3.
அழுத்தக் குழுக்கள் ………. என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை:
நலக்குழுக்கள்

Question 4.
மாநிலக் கட்சிகள் …………. எனவும் குறிப்பிடப்படுகின்றன.
விடை:
பிராந்தியக் கட்சிகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 5.
அரசியலின் மற்றொரு முகம் என்று கருதப்படுபவை ………
விடை:
அழுத்தக்குழுக்கள்

Question 6.
அதிக அளவிலான அழுத்தக் குழுக்கள் உள்ள நாடு ……..
விடை:
இந்தியா

III. குறுகிய விடை தருக

Question 1.
தேர்தல் என்றால் என்ன?
விடை:
தேர்தல் என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும்.

Question 2.
மறைமுகத் தேர்தல் என்றால் என்ன?
விடை:

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையே மறைமுகத் தேர்தல் ஆகும்.
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் இத்தகைய முறையானது கடைபிடிக்கப்படுகிறது.

Question 3.
அரசியல் கட்சிகளின் மூன்று அங்கங்கள் யாவை?
விடை:
தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எனும் மூன்று அங்கங்களை ஓர் அரசியல் கட்சி பெற்றுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 4.
இந்திய பிரதமர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை:
இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவை (லோக்சபா) உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

IV. விரிவான விடை தருக

Question 1.
மறைமுகத் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளைப் பட்டியலிடுக.
விடை:
நிறைகள் :-

  • மறைமுகத் தேர்தல்கள் நடத்த செலவு குறைவானதாகும்.
  • மறைமுக தேர்தல் முறையானது பெரிய நாடுகளுக்கு உகந்தது.

குறைகள் :-

  • வாக்காளர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் ஊழல், கையூட்டு, குதிரை பேரம் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும்.
  • மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேரடியாக பங்கு பெறாமல், மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளே இம்முறையில் பங்குபெறுவதால், மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்த மக்களாட்சி முறையாக காணப்படுகிறது. மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்காமல் இருக்க நேரிடுகிறது.

Question 2.
இந்தியாவில் செயல்படும் அழுத்தக்குழுக்களை வகைப்படுத்துக.
விடை:

  • வணிகக்குழுக்கள்
  • தொழிற்சங்கங்கள்
  • மாணவர் அமைப்புகள்
  • பழங்குடி அமைப்புகள்
  • கோட்பாட்டு அடிப்படைக் குழுக்கள்
  • விவசாயக் குழுக்கள்
  • தொழில் முறைக் குழுக்கள்.
  • மத அமைப்புகள்
  • மொழிக் குழுக்கள்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 91

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 3 மாநில அரசு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 3 மாநில அரசு

10th Social Science Guide மாநில அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மாநில ஆளுநரை நியமிப்பவர் ……………..
அ) பிரதமர்
ஆ) முதலமைச்சர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) தலைமை நீதிபதி
விடை:
இ குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில சபாநாயகர் ஒரு ……………..
அ) மாநிலத் தலைவர்
ஆ) அரசின் தலைவர்
இ) குடியரசுத் தலைவரின் முகவர்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

Question 3.
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல ……………….
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதித்துறை ஈ) தூதரகம்
விடை:
ஈ) தூதரகம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 4.
ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) ஆளுநர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற சபாநாயகர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 5.
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை …………………
அ) முதலமைச்சர்
ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
இ) மாநில தலைமை வழக்குரைஞர்
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்
விடை:
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Question 6.
அமைச்சரவையின் தலைவர் ………………..
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) சபாநாயகர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 7.
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது ………………..
அ) 25 வயது
ஆ) 21 வயது
இ) 30 வயது
ஈ) 35 வயது
விடை:
இ 30 வயது

Question 8.
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை.
அ) ஆந்திரப் பிரதேசம்
ஆ) தெலுங்கானா
இ) தமிழ்நாடு
ஈ) உத்திரப் பிரதேசம்
விடை:
இ) தமிழ்நாடு

Question 9.
இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை
ஆ) டெல்லி மற்றும் கொல்கத்தா
இ) டெல்லி, கொல்கத்தா, சென்னை
ஈ) கொல்கத்தா, சென்னை, டெல்லி
விடை:
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை

Question 10.
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ஆ) கேரளா மற்றும் தெலுங்கானா
இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடை:
இ பஞ்சாப் மற்றும் ஹரியானா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ………………. இடம் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 2.
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ……………… ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
மக்களால்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
………………. மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
விடை:
ஆளுநர்

Question 4.
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ……………..ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
விடை:
குடியரசுத் தலைவர்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 2

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம் : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

V. சுருக்கமான விடையளி.

Question 1.
மாநில ஆளுநரின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.
  • மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது.
  • ஆளுநர், மாநில நிர்வாகத்தின் தலைவராக செயல்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
விடை:

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவர் இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

Question 3.
உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?
விடை:
சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.

மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

Question 4.
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
விடை:
உயர்நீதி மன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.

நாட்டின், இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

VI. விரிவான விடையளி.

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
விடை:
1. அமைச்சரவை தொடர்பானவை:

  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். – தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
  • அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
  • அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

2. ஆளுநர் தொடர்பானவை:

  • கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
  • மாநில அரசு வழக்குரைஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

3. சட்டமன்றம் தொடர்பானவை:

  • சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
  • சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
  • எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

Question 2.
ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள் :

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
  • ஆனால் அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
  • ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
  • ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
  • தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத்தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றனர்.
  • நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
  • சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
  • ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும்.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
விடை:
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

  • மாநில அரசின் கொள்கைகளை உருவாக்கி அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்துகிறது.
  • சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
  • நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்காக வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
  • முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
  • மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
  • மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
  • ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
  • அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
  • ஆண்டு வரவு- செலவு திட்டம் அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

10th Social Science Guide மாநில அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் …………….. ஆவார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசு தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 2.
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும் ……………. ஆகும்.
அ) சட்டப்பிரிவு 157
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 154
ஈ) சட்டப்பிரிவு 158
விடை:
இ சட்டப்பிரிவு 154

Question 3.
ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் ………………. மரபுகள் பின்பற்றப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை:
அ) இரண்டு

Question 4.
……………… மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 5.
ஆண்டு வரவு செலவு திட்டம் ……………… ஆல் இறுதி செய்யப்படுகிறது.
அ) சட்டமேலவை
ஆ) சட்டமன்ற பேரவை
இ) அமைச்சரவை
ஈ) எதுவும் இல்லை
விடை:
இ அமைச்சரவை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 6.
……………இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை மசோதா மூலம் சட்டமேலவை நீக்கப்பட்டது.
அ) 1956
ஆ) 1986
இ) 1862
ஈ) 1950
விடை:
ஆ) 1986

Question 7.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே ………………க்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
அ) பாம்பே
ஆ) கொல்கத்தா
இ) சண்டிகர்
ஈ) லண்டன்
விடை:
ஈ) லண்டன்

Question 8.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை ……………… தீர்மானிக்கப்படுகிறது.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) ஆளுநா
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Question 9.
……………… ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) ஹைதராபாத்
இ) டெல்லி
ஈ) கொல்கத்தா
விடை:
இ டெல்லி

Question 10.
1862இல் ……………. கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன.
அ) உயர் நீதிமன்றங்கள்
ஆ) உச்ச நீதிமன்றங்கள்
இ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஈ) எதுவும் இல்லை
விடை:
அ) உயர் நீதிமன்றங்கள்

Question 11.
சட்டமேலவை தேர்தலில் …… ……….. பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அ) 1/3
ஆ) 1/12
இ) 1/6
ஈ) 1/10
விடை:
1/12

Question 12.
சட்டமேலவை உறுப்பினர்களின் பதவி காலம் ……………. ஆகும்.
அ) 5 ஆண்டுகள்
ஆ) 6 ஆண்டுகள்
இ) 4 ஆண்டுகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 13.
சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ……………. பங்கிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அ) 1/3
ஆ) 2/3
இ) 1/4
ஈ) 2/4
விடை:
அ) 1/3

Question 14.
அமைச்சரவையானது ……………… க்கு பொறுப்பானது.
அ) சட்டமேலவை
ஆ) நிர்வாகத்துறை
இ) சட்டமன்றம்
ஈ) இரண்டும் (ஆ) மற்றும் (இ)
விடை:
இ சட்டமன்றம்

Question 15.
…………….. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதை கூறுகிறது.
அ) சட்டப்பிரிவு 164 (1A)
ஆ) சட்டப்பிரிவு 164 (1)
இ) சட்டப்பிரிவு 163
ஈ) சட்டப்பிரிவு 361
விடை:
ஆ) சட்டப்பிரிவு 1640

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய அரசியலமைப்பு ……………… அரசாங்கத்தை வழங்குகிறது.
விடை:
கூட்டாச்சி

Question 2.
…………… மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
விடை:
ஆளுநர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் ………………. சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
விடை:
பண மசோதாவை

Question 4.
மாநில அரசின் …………… நீதித்துறை அதிகாரங்கள் மூலம் ஆளுநர் நியமனம் செய்கிறார்.
விடை:
தலைமை வழக்குரைஞரை

Question 5.
ஆளுநர் மாநிலத்தின் …………… ஆவார்.
விடை:
பெயரளவு நிர்வாகி

Question 6.
அரசியலமைப்பு ………………. ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்கிறது.
விடை:
சட்டப்பிரிவு 163

Question 7.
……………… என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
விடை:
அமைச்சரவை

Question 8.
சட்டமன்ற உறுப்பினர்களிடையே ……………… மற்றும் ………………. தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
விடை:
சபாநாயகர், துணை சபாநாயகர்

Question 9.
……………… இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது.
விடை:
சட்டமேலவை

Question 10.
முதலமைச்சர் …………….. ஆவார்.
விடை:
உண்மையான நிர்வாகி

Question 11.
சட்ட மேலவை ………………. கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.
விடை:
சட்டப்பிரிவு 169

Question 12.
முதலமைச்சர் என்பவர் ……………… ஆவார்.
விடை:
அரசாங்கத்தின் தலைவர்

Question 13.
பொதுப்பட்டியலிலும் ……………… சட்டம் இயற்றலாம்.
விடை:
சட்டமன்றம்

Question 14.
சட்டமன்றம் மாநிலத்தின் …………….. கட்டுப்படுத்துகிறது.
விடை:
நிதி நிலையைக்

Question 15.
………….ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச் சட்டம் அங்கிகரிக்கப்பட்டது.
விடை:
1956

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 4

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும்.
காரணம் : சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 500 இருக்க வேண்டும்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
கூற்று : இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது.
காரணம் : கூட்டாச்சியில் தேசியத் தலைநகரான டெல்லியுடன் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

V. சுருக்கமான விடையளி.

Question 1.
சட்ட மேலவை குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற மேலவை சட்டமேலவை என்றும் அழைக்கப்படுகிறது.
  • சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது.
  • 1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

Question 2.
அமைச்சரவை மற்றும் அமைச்சரவை குழுக்கள் என்றால் என்ன?
விடை:

  • அமைச்சரவை என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
  • இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது.
  • இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.
  • அமைச்சரவை குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம்.
  • சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.

Question 4.
சபாநாயகர் குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார்.
  • சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 5.
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம் வரையறு.
விடை:

  • உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன.
  • எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன.
  • இதனால் உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.

VI. விரிவான விடையளி.

Question 1.
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் பற்றி விவரி.
விடை:
நிர்வாக அதிகாரங்கள் :

  • மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.
  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.
  • ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்..

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள்:

  • அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம்.
  • பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்.
  • ஆனால் அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும்பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.
  •  மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது.

நிதி அதிகாரங்கள்:

  • சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
  • சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
  • பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
  • சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.

நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்:

  • அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
  • அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.

Question 3.
ஆளுநரின் நீதித்துறை மற்றும் விருப்புரிமை அதிகாரங்களை விவரி.
விடை:
நீதித்துறை அதிகாரங்கள்:

  • மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.
  • உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.
  • ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
  • குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். (மரண தண்டனையைப் பெற்ற குற்றவாளியைத் தவிர)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

விருப்புரிமை அதிகாரங்கள்:

  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
  • மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
  • சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

9th Social Science Guide அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா
2. இந்தியாவில் வாக்களிக்கத் தகுதியான வயது 18
3. தேர்தலில் போட்டியிடத் தகுதியான வயது 25
4. இந்தியாவில் தேர்தல் ஆணையம் பாரபட்ச மற்ற தேர்தல்களை நடத்துகிறது
5. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952 ல் நடைபெற்றது.

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
அ) தனி நபராட்சி
ஆ) முடியாட்சி
இ) மக்களாட்சி
ஈ) குடியரசு
விடை:
ஆ) முடியாட்சி

Question 2.
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
அ) சிறுகுழு ஆட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) மக்களாட்சி
ஈ) தனிநபராட்சி
விடை:
ஈ) தனிநபராட்சி

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 3.
முன்னாள் சோவியத் யூனியன் …………….. க்கு எடுத்துக்காட்டு
அ) உயர்குடியாட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) சிறுகுழு ஆட்சி
ஈ) குடியரசு
விடை:
இ) சிறுகுழு ஆட்சி

Question 4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) வாட்டிகன்
விடை:
ஈ) வாட்டிகன்

Question 5.
ஆபிரகாம் லிங்கன் ………… நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) சோவியத் ரஷ்யா
ஈ) இந்தியா
விடை:
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 6.
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை:
இ) சோழர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 7.
பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி
அ) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
ஆ) அமெரிக்கா
இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
ஈ) பிரிட்டன்
விடை:
இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்

Question 8.
எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தை பெறப்பட்டது?
அ) கிரேக்கம்
ஆ) லத்தீன்
இ) பாரசீகம்
ஈ) அரபு
விடை:
அ) கிரேக்கம்

Question 9.
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
அ) நாடாளுமன்றம்
ஆ) மக்கள்
இ) அமைச்சர் அவை
ஈ) குடியரசு தலைவர்
விடை:
ஆ) மக்கள்

Question 10.
கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
அ) இந்தியா
ஆ) பிரிட்டன்
இ) கனடா
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை:
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 11.
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு
அ) கனடா
ஆ) இந்தியா
இ) அமெரிக்க ஐக்கிய
ஈ) சீனா
விடை:
ஆ) இந்தியா

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 12.
கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 13.
கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 14.
வாக்குரிமையின் பொருள் :
அ) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஆ) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
இ) வாக்களிக்கும் உரிமை
ஈ) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
விடை:
இ) வாக்களிக்கும் உரிமை

Question 15.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
அ) சமூகச் சமத்துவம்
ஆ) பொருளாதார சமத்துவம்
இ) அரசியல் சமத்துவம்
ஈ) சட்ட சமத்துவம்
விடை:
அ) சமூகச் சமத்துவம்

Question 16.
பிரதமரை நியமிப்பவர் /நியமிப்பது
அ) மக்களவை
ஆ) மாநிலங்களவை
இ) சபாநாயகர்
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஈ) குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 17.
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
அ) லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஆ) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஈ) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
விடை:
இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்

Question 18.
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு
அ) 1948 – 49
ஆ) 1951 – 52
இ) 1957 – 58
ஈ) 1947 – 48
விடை:
ஆ) 1951-52

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு …….
விடை:
1949

Question 2.
இரண்டு வகையான மக்களாட்சி ……… மற்றும் …….. ஆகும்,
விடை:
நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி

Question 3.
நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ………
விடை:
சுவிட்சர்லாந்து

Question 4.
இந்தியா …….. மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
விடை:
மறைமுக

Question 5.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ……… ஆவார்.
விடை:
ஜவஹர்லால் நேரு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 6.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு ………
விடை:
1920

Question 7.
இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் …….. மற்றும்…….. ஆவர்.
விடை:
எட்வின் லுட்டியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 55

IV. பின்வரும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக.
விடை:
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார்.

Question 2.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினைப் பற்றிக் கூறுக.
விடை:

  • மக்களாட்சி அரசாங்க அமைப்பு.
    • நாடாளுமற்ற அரசாங்க அமைப்பு (இந்தியா, இங்கிலாந்து)
    • அதிபர் அரசாங்க அமைப்பு (அமெரிக்கா, பிரான்சு) என இருவகைப்படும்.

Question 3.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 60

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?
விடை:

  • நவீன உலகில் மக்களாட்சி அரசாங்கங்கள் தழைத்தோங்கி, மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக உள்ளது. இதுசரை கடுமையான சவாலோ, போட்டியோ எதிர்கொள்ளப்படாத நிலையில் உலகெங்கும் மக்களாட்சி கடந்த நூறு ஆண்டுகளில் வளர்ந்து வருகிறது.
    இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்:

    • கல்வியறிவின்மை
    • வறுமை
    • பாலினப்பாகுபாடு
    • பிராந்திய வாதம் (வட்டாரப் பாகுபாடு)
    • சாதி, வகுப்பு, சமயப்பண்பாடு
    • ஊழல்
    • அரசியல் குற்றமயமாதல்
    • அரசியல் வன்முறை.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 2.
இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிபந்தனைகளை விளக்குக.
விடை:

  • ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின்பலன்களைக் கிடைக்கச்செய்ய அதிகாரம் அளித்தல்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும், பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
  • மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.
  • மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமைமிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.
  • பொதுமக்களின் கருத்து வலுவாக இருத்தல்.
  • மக்களிடையே சகிப்புத்தன்மையும், மத நல்லிணக்கமும் நிலவுதல்.
  • அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
  • வலுவான பொறுப்புமிக்க எதிர்க்கட்சி இருத்தல்.

Question 3.
இந்தியாவில் மக்களாட்சி பற்றிய உங்களது கருத்து என்ன?
விடை:

  • இந்தியாவின் மக்களாட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சி முறையாகும்.
  • நாட்டிற்குத் தேவையான கூட்டங்களை உருவாக்குகின்ற இந்திய நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகள்.
    1. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்குபெறுதல்,
    2. ஒப்பிதல் அளித்தல்.
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி , குடியரசு ஆகிய 5 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
  • சாதி, சமய, சினம், பால், கல்வித்தகுதி பாகுபாடு இன்று 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் சமமான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை வகுப்பறையில் கலந்துரையாடு.
2. மக்களாட்சி என்பது “சிறுபான்மையினரை மதிக்கும் பெரும்பான்மையினரின் ஆட்சி” – கலந்துரையாடு.
3. உங்கள் வகுப்பறையில் மாதிரி தேர்தலை நடத்துக.
4. இந்தியாவில் மக்களாட்சியின் நிறை, குறைகளைப் பற்றி வகுப்பறையில் குழு விவாதம் செய்க.
5. தற்போதைய தேர்தல் ஆணையர்களின் பெயர் மற்றும் படங்களைச் சேகரி.
6. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் படங்களை கி.பி. 1947 முதல் தற்பொழுது வரை சேகரித்து துணுக்குப் புத்தகம் தயாரிக்க.

VII. சிந்தனை வினா

Question 1.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அத்தகைய நாட்டில் பொது மக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
விடை:

  • ஓர் அரசியல் தலைவர் முழு அதிகாரத்தையும் கைக்கொண்டு கடுமையாகப் பயன்படுத்தும் நிலை.
  • இவ்வகை ஆட்சியில் பொதுக்கருத்துக்கு இடமில்லை. கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒருவர் தன் குரலை எழுப்ப உரிமை, சுதந்திரம் கிடையாது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 2.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழி வகுக்கிறது? விளக்குக.
விடை:

  • அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் ஆளுமை வளர்ச்சியில் முன்னேற்றம் காண அடிப்படை சுதந்திர உரிமை உண்டு.
  • அனைவரும் சமம் என்ற நிலையில் இணக்கமான வாழ்வுக்கு அடித்தளமாகிறது.
  • அடிப்படை உரிமைகள் இருப்பதால் அமைதியாக வாழ முடியாது.

VIII. வாழ்வியல் திறன்

குறிப்பிட்ட நாடுகளை தேர்வு செய். ஒவ்வொரு நாட்டையும் ஆராய்ந்து அந்நாட்டின் அரசாங்கம் – உயர்குடியாட்சி, முடியாட்சி, தனிநபராட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி குடியரசு – இவற்றில் எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கூறவும் : பின்னர் அரசாங்க வகைகளைத் தீர்மானிக்க உதவும் பண்புகளை விவரி.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 70

9th Social Science Guide அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
முடியாட்சி நடைபெறும் நாடு
அ) சீனா
ஆ) பிரான்சு
இ) பூடான்
ஈ) ஆஸ்திரேலியா
விடை:
இ) பூடான்

Question 2.
நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு
அ) சுவிட்சர்லாந்து
ஆ) இந்தியா
இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) சுவிட்சர்லாந்து 3

Question 3.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள்

Question 4.
இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான வயது
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 30
விடை:
அ) 18

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 5.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கு ………… உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
அ) 2
ஆ) 7
இ) 12
ஈ) 15
விடை:
இ) 12

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 75

III. சுருக்கமான விடை தருக

Question 1.
மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?
விடை:
ஒரு நாட்டின் மக்கள் உயர்ந்த அதிகாரங்களை பெற்று அமைக்கும் ஆட்சி முறையே ‘மக்களாட்சி’. இதன் பொருள் “நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம்” உள்ளது என்பதாகும். (குறிப்பிட்ட காலத்திற்கு பிரதிநிதிகளை சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக மக்கள் தேர்ந்தெடுப்பார்).

Question 2.
வயது வந்தோர் வாக்குரிமை என்றால் என்ன?
விடை:
சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றிபதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு
இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

Question 3.
நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
விடை:

  • மேலவை உறுப்பினர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மேலும் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 12 பேரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

IV. விரிவான விடையளி

Question 1.
அரசாங்க அமைப்பு முறைகளை விளக்குக.
விடை:
உயர் குடியாட்சி, முடியாட்சி, தனிநபர் ஆட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி மற்றும் குடியரசு என அரசாங்க அமைப்பு முறைகள் பல வகைப்படும்.

உயர் குடியாட்சி :
உயர் குடியினரால் நடத்தப்பட்டு அமைக்கப்படும் அரசாங்கம் ஆகும். எ.கா இங்கிலாந்து, ஸ்பெயின்.

முடியாட்சி :
ஒரு நபர் (வழக்கமாக அரசர்) – அமைக்கும் அரசாங்கமே முடியாட்சி எனப்படும். (எ.கா.) பூடான், ஓமன், கத்தார்

தனிநபர் ஆட்சி :
முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே தனிநபர் ஆட்சி ஆகும். எ.கா. வட கொரியா, சவுதி அரேபியா

சிறு குழு ஆட்சி :
மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ (அ) அமைப்பையோ கட்டுப்படுத்துவதே “சிறு குழு ஆட்சி” எ னப்படும். எ.கா முன்னாள் சோவியத் யூனியன், சீனா, வெனிசுலா

மதகுருமார்களின் ஆட்சி :
மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ (அ) கடவுளின் பெயரால், மதகுருமார்களே அமைக்கும் அரசாங்கமே “மதகுருமார்கள் ஆட்சி”. எ.கா. வாட்டிகன்

மக்களாட்சி :
ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கமே “மக்களாட்சி” எனப்படும். எ.கா. இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 2.
மக்களாட்சியின் சிறப்புக் கூறுகள் யாவை?
விடை:

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
  • சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்.
  • வயது வந்த அனைவருக்கும் சம மதிப்புடைய வாக்குரிமை.
  • அடிப்படை உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்.

Question 3.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை எழுதுக.
விடை:
நிறைகள் :

  • பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்
  • சமத்துவமும் சகோதரத்துவமும்
  • மக்களிடையே பொறுப்புணர்ச்சி
  • தல சுய ஆட்சி
  • அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்
  • மக்கள் இறையாண்மை சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு

குறைகள் :

  • மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி
  • வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை மற்றும் குறைந்த வாக்குப்பதிவு
  • சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுத்தல்.
  • முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 9

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 2 நடுவண் அரசு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 2 நடுவண் அரசு

10th Social Science Guide நடுவண் அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ……………… ஆவார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தலைமை நீதிபதி
இ) பிரதம அமைச்சர்
ஈ) அமைச்சர்கள் குழு
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்
விடை:
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

Question 3.
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) மக்களவை
இ) பிரதம அமைச்சர்
ஈ) மாநிலங்களவை
விடை:
ஆ) மக்களவை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 4.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது …………………….
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை:
இ 25 வயது

Question 5.
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு .
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) மாநில அரசாங்கம்
ஈ) நாடாளுமன்றம்
விடை:
ஈ) நாடாளுமன்றம்

Question 6.
கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்.
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ) சட்டப்பிரிவு 365
விடை:
ஆ) சட்டப்பிரிவு 360

Question 7.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) ஆளுநர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
……………………… மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.
விடை:
நிதி

Question 2.
……………… நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
விடை:
பிரதம அமைச்சர்

Question 3.
…………….. அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.
விடை:
துணைக் குடியரசுத் தலைவர்

Question 4.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ……………….
விடை:
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது …………………
விடை:
65

Question 6.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ………………. ஆகும்.
விடை:
உச்ச நீதிமன்றம்

Question 7.
தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ……………………
விடை:
28

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i& iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை
விடை:
ஈ) i, ii & iii சரியானவை

Question 2.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i & ii சரியானவை
விடை:
அ) ii & iv சரியானவை

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை:

  • குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
  • அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.

Question 2.
நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
விடை:
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராசாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்

Question 3.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
  • அவர் பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.

Question 4.
நிதி மசோதா குறிப்பு வரைக.
விடை:

  • நிதி மசோதா என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாவை குறிக்கிறது.
  • இது பொதுவாக பணம் பெறுதல், பணம் செலவழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • எ.டு. வரிச் சட்டங்கள், கறுப்புப் பணம் தடுப்பு போன்றவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.
விடை:

  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.
விடை:
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்: சட்டமன்ற அதிகாரங்கள்:

  • பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
  • மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
  • குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
  • அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
  • நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
  • மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.

நீதி அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் :
பிரிவு 361(1)ன் படி குடியரசுத் தலைவர் மற்றும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்யவேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

Question 2.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
விடை:
தனக்கேயுரிய நீதி வரையறை:
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டவை ஆகும். அவைகள்,

  • இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.

மேல்முறையீட்டு நீதிவரையறை:
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.

ஆலோசனை நீதிவரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

இதர நீதிவரையறை:
உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 3.
இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
விடை:

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நாள், நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்வார்.
  • காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
  • பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
  • நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
  • பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
  • பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.

Question 4.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
விடை:
இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. > மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு.

10th Social Science Guide நடுவண் அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………. நாட்டின் இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றமாகும்.
அ) உயர் நீதிமன்றம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றம்
ஈ) குற்றவியல் நீதிமன்றம்
விடை:
ஆ) உச்ச நீதிமன்றம்

Question 2.
இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள் ………………..
அ) ஆலோசனை
ஆ) தனக்கேயுரிய வரையறை
இ) இதர நீதிவரையறை
ஈ) மேல்முறையீட்டு நீதிவரையறை
விடை:
ஆ) தனக்கேயுரிய வரையறை

Question 3.
நடுவண் அரசாங்கத்தின் ………………. அங்கம் நீதித்துறை ஆகும்.
அ) முதலாவது
ஆ) மூன்றாவது
இ) ஐந்தாவது
ஈ) இரண்டாவது
விடை:
ஆ) மூன்றாவது

Question 4.
ஒருங்கிணைந்த நீதித்துறையானது ……………… அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளது.
அ) இரட்டை
ஆ) ஒற்றை
இ) இரண்டும்
ஈ) பல
விடை:
ஆ) ஒற்றை

Question 5.
இந்திய உச்சநீதிமன்றம் ……………..ஆம் நாள் துவங்கப்பட்டது.
அ) ஜீன் 28, 1950
ஆ) ஜனவரி 28, 1950
இ) ஜீன் 20, 1940
ஈ) ஜனவரி 20, 1940
விடை:
ஆ) ஜனவரி 28, 1950

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 6.
உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட ………………. நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
அ) 65
ஆ) 34
இ) 43
ஈ) 25
விடை:
ஆ) 34

Question 7.
உச்சநீதிமன்றத்தின் நிரந்தரத் தலைமையிடம் ………….. ஆகும்.
அ) புதுதில்லி
ஆ சென்னை
இ) ஹைதராபாத்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுதில்லி

Question 8.
இந்திய அரசியலமைப்புச் …………………….. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 25
ஆ) சட்டப்பிரிவு 26
இ) சட்டப்பிரிவு 76
ஈ) சட்டப்பிரிவு 14
விடை:
இ சட்டப்பிரிவு 76

Question 9.
இந்திய நாடாளுமன்றத்தில் . ……. …. பகுதிகள் உள்ளன.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஐந்து
விடை:
ஆ) மூன்று

Question 10.
மக்களவை இந்திய நாடாளுமன்றத்தின் ………………. ஆகும்.
அ) நிரந்தர அவை
ஆ) புகழ்மிக்க அவை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புகழ்மிக்க அவை

Question 11.
நடுவண் அமைச்சர்களில் கடைசி தரநிலையில் ……………… உள்ள னர்.
அ) காபினெட் அமைச்சர்கள்
ஆ) இராசங்க அமைச்சர்கள்
இ) இணை அமைச்சர்கள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இணை அமைச்சர்கள்

Question 12.
……………… என்பவர் குடியரசு தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
அ) பிரதம அமைச்சர்
ஆ) காபினெட் அமைச்சர்
இ) இணை அமைச்சர்
ஈ) கவர்னர்
விடை:
அ) பிரதம அமைச்சர்

Question 13.
………………. நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது.
அ) புதுதில்லி
ஆ) சீனா
இ) இங்கிலாந்து
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இங்கிலாந்து

Question 14.
63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் ……………… வகிக்கிறார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) கவர்னர்
இ) துணை குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
இ துணை குடியரசுத் தலைவர்

Question 15.
குடியரசுத் தலைவர் ஆண்டிற்கு …………….. முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஒரு
விடை:
இ இரண்டு

Question 16.
நடுவண் ……………… ஆனது நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது.
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதிமன்றம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சட்டமன்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நடுவண் அரசு தலைமையகம் ……………. உள்ளது.
விடை:
புதுதில்லி

Question 2.
நடுவண் அரசு ………………. அம்சங்களைக் கொண்டது.
விடை:
மூன்று

Question 3.
……………… நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 4.
……………… பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கக் கூடாது.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 5.
புதுதில்லியிலுள்ள ………………. குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும்.
விடை:
ராஷ்டிரபதி பவன்

Question 6.
இந்திய அரசியலமைப்பு …………. வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டணை பெற்ற ஒருவரின் தண்டணையை குறைக்கவும் அதிகாரம் வழங்குகிறது.
விடை:
சட்டத்தின 72

Question 7.
……………… அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும் இரகசியகாப்பும் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 8.
நிர்வாகத்தின் மையக் கரு ………………. ஆகும்.
விடை:
காபினெட்

Question 9.
இந்திய நாடாளுமன்றதில் மேலவை மற்றும் கீழவை கொண்டுள்ளதால் …………… ஆகும்.
விடை:
ஈரவை சட்டமன்றம்

Question 10.
மாநிலங்களவையின் ………………. அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விடை:
துணைத் தலைவர்

Question 11.
மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ………………. ஆவார்.
விடை:
552

Question 12.
மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட ……………… அதிகாரம் உண்டு .
விடை:
நாடாளுமன்றத்திற்கே

Question 13.
மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் ……………. பின்பற்றப்படுகிறது.
விடை:
வயது வந்தோர் வாக்குரிமை

Question 14.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் …………………. ஆவார்.
விடை:
சபாநாயகர்

Question 15.
ஒரு சட்டத்திணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் ……………. ஆகும்.
விடை:
நீதிப்புனராய்வு

Question 16.
…………….. எதிர்பாரா நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி .
விடை:
எதிர்பாரா செலவு நிதி

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மக்களவையானது நாடாளுமன்றத்தின் நிரந்தர அவை ஆகும்.
(ii) தற்சமயம் மக்களவை 543 உறுப்பினர்களை நியமிக்கப்படுகிறது.
(iii) ஆங்கிலோ – இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
(iv) தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
ஆ) iii) மற்றும் iv) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 2.
(i) நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அமைதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
(ii) அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியும்.
(iii) எதிர்பார்த்த செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
(iv) ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
இ i) மற்றும் iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 4

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
முடிவு வாக்கு என்றால் என்ன?
விடை:
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம்.

இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது.

அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

Question 2.
மாநிலங்களவை குறிப்பு எழுதுக.
விடை:
ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களை கொண்டது.

இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

12 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அணுமூலம் கொள்ளலாம்.

Question 3.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

Question 4.
இராணுவ அதிகாரங்கள் குறிப்பு வரைக.
விடை:

  • நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
  • அவர் சட்டத்தின்படி ராணுவத்தை வழிநடத்துகிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
  • மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
  • மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
  • இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  • இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
  • உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்.
  • எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:

  • இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.
  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

Question 2.
இந்திய குடியரசுத் தலைவரின் நிதி மற்றும் இராஜதந்திர அதிகாரங்களை விவரி.
விடை:

  • நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது.
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
  • ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

இராஜதந்திர அதிகாரங்கள்:
வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார்.

வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 5 இடம்பெயர்தல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Economics Chapter 5 இடம்பெயர்தல்

9th Social Science Guide இடம்பெயர்தல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
அ) 121 கோடி
ஆ) 221 கோடி
இ) 102 கோடி
ஈ) 100 கோடி
விடை:
அ) 121 கோடி

Question 2.
வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
அ) இராமநாதபுரம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) வேலூர்
விடை:
இ) சென்னை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 3.
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
அ) 7%
ஆ) 75%
இ 23 %
ஈ) 9%
விடை:
அ) 7%

Question 4.
ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
அ) வாழ்வாதாரத்திற்காக
ஆ) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
இ சேவைக்காக
ஈ) அனுபவத்தைப் பெறுவதற்காக
விடை:
அ) வாழ்வாதாரத்திற்காக

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
____ மற்றும் _____ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.
விடை:
பிறப்பிடம், வாழிடம்

Question 2.
மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ____ காணப்படுகின்றன.
விடை:
அதிகமாக

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 3.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிராமப்புற இந்தியாவில் _____ சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
விடை:
37

Question 4.
பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் _____
விடை:
திருமணம்

Question 5.
இடம்பெயர்வு நகர்வு என்பது _____ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.
விடை:
பல்வேறு வகைப்பட்ட

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல் 50

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • வியாபாரம்
  • வணிகம்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • திருமணம்

Question 2.
இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
விடை:

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • திருமணம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 3.
மிகக் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • கடலூர்
  • கரூர்
  • நாமக்கல்
  • சேலம்

Question 4.
ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
விடை:

  • ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்கின்றனர்.
  • வசதி வாய்ப்புடையவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இடம் பெயர்கின்றனர்.

Question 5.
தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல் 65

Question 6.
இடப்பெயர்ந்தோர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழில்களைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துவது யாது?
விடை:

  • இடம் பெயர்ந்தோர் மூன்று விதமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • அவை
    • மிகவும் திறமை வாய்ந்த வேலைகள்
    • சாதாரணமாகச் செய்யக் கூடிய வேலைகள்
    • நடுத்தரமான வேலைகள்

V. விரிவான விடையளி

Question 1.
இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?
விடை:

  1. இடம் பெயர்தலின் அளவைக் குறைத்தல் :
    • கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் கிராமப் புறங்களில் அதிக அளவிலான இடப் பெயர்தல் காணப்படுகிறது.
    • எனவே கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.
    • ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமாக அதிக அளவிலான கிராம வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
  2. இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல் :
    • பெருநகரங்களை நோக்கி குவியும் இடப் பெயர்தலை திசை மாற்றி அமைக்கும் கொள்கைகள் விரும்பத்தக்கவைகளாகும்.
    • குடிப் பெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமானதாக உத்திகளாக அமைகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 2.
இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக.
விடை:
இந்தியாவில் மக்களின் இடம் பெயர்தலின் முறைகள் சிக்கலான பலதரப்பட்ட நகர்வுகளை உள்ளடக்கியதாகும்.

  • கிராமப்புறத்தில் இருந்து கிராமத்திற்கு, கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி, நகர் புறத்திலிருந்து கிராமம் நோக்கி, நகர் புறத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வுகள்.
  • குறுகிய, நடுத்தரமான மற்றும் நீண்ட தூர இடப்பெயர்தல் நகர்வுகள்.
  • நீண்டகால நிரந்தர இடப்பெயர்வு மற்றும் குறுகிய கால சுழற்சி முறையிலான நகர்வுகள்

ஒவ்வொரு இடப்பெயர்வு நகர்வும் வெவ்வேறு வகையான வகுப்பு சார்ந்த குடியேறுபவர்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் சொந்தக் காரணங்கள் இருக்கும். இடப்பெயர்தலின் அளவு மற்றும் தன்மை ஆகியவை கீழ்க்கண்டவற்றைச் சார்ந்துள்ளன.

  • இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றும் விருப்பங்கள்.
  • இடப்பெயர்தல் துவங்குமிடத்தில் மக்களின் நகர்வு மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்.
  • சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.
  • குடியேற்றச் செலவு.

Question 3.
தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக.
விடை:

  • தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 35% பேர் நம்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
  • குடியேற்றப்பதிவில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
  • வெளிநாடுகளில் குடியேறியுள்ளவர்களில் 20%பேர் சிங்கப்பூரிலும், 18%பேர் ஐக்கிய அரபு எமிரேட்டிலும், 16% பேர் சவுதி அரேபியாவிலும், 13% பேர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.
  • மேலும் மலேசியா, குவைத், ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.
  • குடியேறுபவர்களில் 15% பெண்கள் மற்றும் 85% பேர் ஆண்களாவர்
  • கல்வித் தகுதியைப் பொருத்த வரையில் 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள், 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 10% பேர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள், 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள், 12% தொழிற்கல்வி முடித்தவர்கள் மற்றும் 11% பேர் முதுகலை பட்டதாரிகளும் ஆவார்கள்.

Question 4.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.
விடை:

  • 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள்
  • 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள்
  • 10% பேர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள்
  • 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள்
  • 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள்
  • 12% பேர் தொழிற்கல்வி முடித்தவர்கள்
  • 11% பேர் முதுகலை பட்டதாரிகள்

VI. சரியான தொடரை எழுதுக.

1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.
2. தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்புறங்களில் அதிகம்.
3. இடம்பெயர்வின் நகர்வானது, ஒரே மாதிரியான உள்நகர்வினைக் கொண்டதாகும்.
4. பத்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.
விடை:
1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.

VII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பு மற்றும் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடி எத்தனை மாணவர்களின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைப் பற்றி ஒரு புள்ளி விவரத்தரவைத் தயார் செய்க
2. கிராமப்புறத்திலிருந்து கிராமம், கிராமப்புறத்திலிருந்து நகரம் நகரத்திலிருந்து கிராமம் மற்றும் நகரத்திலிருந்து நகரம் போன்ற இடப்பெயர்வு தொடர்பான படங்களைச் சேகரித்து படத்தொகுப்பைத் தயார் செய்க.

VIII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசும் பல மொழிகள் பற்றிய தரவுகளைச் சேகரித்து வட்ட விளக்கப்படம் தயார் செய்க.

9th Social Science Guide இடம்பெயர்தல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஆண்கள் இடம் பெயர்வதற்கான முக்கியக் காரணம்
அ) கல்வி
ஆ) வேலை
இ திருமணம்
ஈ) வணிகம்
விடை:
ஆ) வேலை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 2.
தமிழ்நாட்டிலிருந்து _____ பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
அ) 65%
ஆ) 35%
இ) 26%
ஈ) 53 %
விடை:
ஆ) 35 %

Question 3.
பின்வருவனவற்றுள் குறைந்த அளவிலான வெளி குடியேற்ற எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள மாவட்டம் ______
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ இராமநாதபுரம்
ஈ) நீலகிரி
விடை:
ஈ) நீலகிரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____ ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்படுகிறது.
விடை:
பத்து

Question 2.
2011 கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஐந்து பேரில் _____ பேர் இடம் பெயர்ந்தவராக உள்ள னர்.
விடை:
இரண்டு

Question 3.
உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை ____ ஆகும்.
விடை:
ஆர்டிக் டெர்ன்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 4.
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் மிக அதிகமானோர் தேர்வு செய்யும் நாடு ______
விடை:
சிங்கப்பூர்

III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
i) ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.
ii) சர்வதேச குடியேறுபவர்களில் 15% ஆண்களாகவும், 85% பெண்களாகவும் உள்ளனர்.
iii) இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடை பெற்ற ஆண்டு 2015.
iv) மக்கள் ஒருபோதும் கிராமப் புறங்களுக்கு இடப் பெயர்ச்சி செய்வதில்லை .
விடை:
ii) ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படக் காரணங்கள் யாவை?
விடை:

  • பிறப்பு
  • இறப்பு
  • இடப்பெயர்வு

Question 2.
இடப்பெயர்வு எந்த அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.
விடை:

  • பிறப்பிடம் அடிப்படையில் கணக்கெடுப்பின் போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டிருந்தால் அது வாழ்நாள் இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.
  • வாழிடம் அடிப்படையில் : கணக் கெடுப்பின்போது இருக்கும் இடமும் கடைசியாக வாழ்ந்த இடமும் வேறுபட்டிருந்தால் இது வாழிட அடிப்படையிலான இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல் 90

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

10th Social Science Guide இந்திய அரசியலமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்காணும் வரிசையில் ‘முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம இறையாண்மை .
ஆ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை , குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக , குடியரசு.
விடை:
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.

Question 2.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழுதும் இல்லை
விடை:
அ) ஒரு முறை

Question 3.
ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ இயல்புரிமை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 4.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை:
இ) சொத்துரிமை

Question 5.
கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.
இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.
விடை:
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.

Question 6.
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
விடை:
இ அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

Question 7.
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்

Question 8.
நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
விடை:
இ ரஷ்யா அரசியலமைப்பு

Question 9.
எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
விடை:
இ சட்டப்பிரிவு 360

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 10.
எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

அ) 1, 2 &3
ஆ) 1 & 2
இ) 1 &3
ஈ) 2 & 3
விடை:
ஆ) 1 & 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ……………… தோன்றியது.
விடை:
அமெரிக்க ஐக்கிய நாடுகளில்

Question 2.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
Dr. சச்சிதானந்த சின்கா

Question 3.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ……….
விடை:
26 நவம்பர் 1949

Question 4.
………………… பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.
விடை:
ஐந்து வகையான

Question 5.
இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் …………… பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடை:
51A

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 2

IV. கறுதிய விடை தருக

Question 1.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:

  • ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.
  • அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும்.
  • அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
விடை:

  • ‘சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ‘சிவிஸ்’ (Civis) எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
  • இதன் பொருள் ஒரு ‘நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி || சட்டப்பிரிவுகள் 5லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.

Question 3.
இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.
விடை:

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கெதிரான உரிமை
  • சமயச் சார்பு உரிமை
  • கல்வி, கலாச்சார உரிமை
  • அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

Question 4.
நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
விடை:

  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
  • இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.

Question 5.
இந்தியாவின் செம்மொழிகள் எவை?
விடை:
தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஓடியா.

Question 6.
தேசிய அவசரநிலை என்றால் என்ன?
விடை:
தேசிய அவசரநிலை (பிரிவு 352):

  • போர், அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.
  • ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘உள்நாட்டு அவசரநிலை’ எனப்படுகிறது.

Question 7.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
விடை:

  • சட்டமன்ற உறவுகள்
  • நிர்வாக உறவுகள்
  • நிதி உறவுகள்

V. விரிவான விடை தருக.

Question 1.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
விடை:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்புக் கூறுகள் :

  • உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை,
  • இது நெகிழாத் தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
  • சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
  • உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
  • இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது.

சமத்துவ உரிமை:

  • பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
  • பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.
  • பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்றப் பட்டங்களை நீக்குதல்.

சுதந்திர உரிமை :

  • பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை.
  • பிரிவு 21 A – தொடக்கக் கல்வி பெறும் உரிமை.
  • பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

சுரண்டலுக்கெதிரான உரிமை:

  • பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
  • பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

சமய சார்பு உரிமை:

  • பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.
  • பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
  • பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
  • பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.

கல்வி கலாச்சார உரிமை:

  • பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
  • பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை:
பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

Question 3.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமையைப் பற்றி எழுதுக.
விடை:
அரசியல் சட்ட மேல் முறையீட்டு உரிமைகள் (சட்டப்பிரிவு – 32):

  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
  • இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
  • Dr. B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு-32 இந்திய அரசியலமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா ‘ ஆகும்.

அ. ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

ஆ. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறைகளிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இ. தடையுறுத்தும் நீதிப்பேராணை:
ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.

ஈ. ஆவணக் கேட்பு பேராணை:
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.

உ. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை:
இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 4.
அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 3

10th Social Science Guide இந்திய அரசியலமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அமைச்சரவை தூதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு …………….
அ) 1964
ஆ) 1946
இ) 1856
ஈ) 1846
விடை:
ஆ) 1946

Question 2.
……………….. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவரானார்.
அ) Dr. A.P.J. அப்துல் கலாம்
ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்
இ) Dr. சச்சிதானந்த சின்கா
ஈ) V.T. கிருஷ்ணமாச்சாரி
விடை:
ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்

Question 3.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு …………………
அ) 15 ஆகஸ்ட் 1947
ஆ) 26 ஆகஸ்ட் 1949
இ) 26 நவம்பர் 1949
ஈ) 26 ஜனவரி 1950
விடை:
ஈ) 26 ஜனவரி 1950

Question 4.
ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் ………………………. செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
அ) வம்சாவளி
ஆ) பிறப்பு
இ) பதிவு
ஈ) இயல்புரிமை
விடை:
இ பதிவு

Question 5.
ஒருவர் தன் குடியுரிமையை ……………. வழிகளில் இழப்பார்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) இரண்டு
விடை:
அ) மூன்று

Question 6.
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு உரிய அதிகாரிக்கு அனுப்பச் செய்ய கீழ்மன்றங்களுக்கு இடும் ஆணை ……………………
அ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) ஆவணக் கேட்பு பேராணை
இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ஆவணக் கேட்பு பேராணை

Question 7.
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து ………….. பாதுகாக்கிறது.
அ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
இ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை
ஈ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
விடை:
இ ஆட்கொணர்வு நீதிப்பேராணை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 8.
மற்ற அடிப்படை உரிமைகளையும் …………. சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) ஆளுநர்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Question 9.
இந்திய அரசியலமைப்பின் ……………… இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது.
அ) பகுதி IV
ஆ) பகுதி II
இ) பகுதி III
ஈ) (ஆ) மற்றும் (இ) இரண்டும்
விடை:
இ பகுதி

Question 10.
1946 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்க ளின் ……………… ஆகும்.
அ) நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
ஆ) அடிப்படைக் கடமைகள்
இ) அடிப்படை உரிமைகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) அடிப்படைக் கடமைகள்

Question 11.
அடிப்படைக் கடமைகளின் புதிய பகுதி ………… என்ற ஒரேயொரு பிரிவைக் கொண்டது.
அ) சட்டதிருத்தம் 21 A
ஆ) சட்டதிருத்தம் 45A
இ) சட்டதிருத்தம் 51A
ஈ) சட்டதிருத்தம் 20 A
விடை:
இ சட்டதிருத்தம் 51 A

Question 12.
1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து ……………… துறைகளை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை:
ஆ) 5

Question 13.
ஒரு மாநில அரசின் …………….. அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே உள்ளது.
அ) நிர்வாக அதிகாரம்
ஆ) நிதி அதிகாரம்
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) நிர்வாக அதிகாரம்

Question 14.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி சேர்காரிய கமிஷனில் நியமிக்கப்பட்ட ஆண்டு …………………
அ) 1938
ஆ) 1983
இ) 1883
ஈ) 1838
விடை:
ஆ) 1983

Question 15.
அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII இல் …………….. பற்றி விவரிக்கிறது.
அ) அலுவலக மொழிகள்
ஆ) அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
இ) செம்மொழிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அலுவலக மொழிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நிர்ணய சபையில் ……………… உறுப்பினர்கள் இருந்தனர்.
விடை:
389

Question 2.
………………. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
டாக்டர் B.R. அம்பேத்கர்

Question 3.
………………. என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்திடப்பட்டது.
விடை:
பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா

Question 4.
முகவுரை ………………. என குறிப்பிடப்பட்டது.
விடை:
அரசியலமைப்பின் திறவுகோல்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 5.
………………… குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு முகவுரை அமைந்துள்ளது.
விடை:
ஜவகர்லால் நேருவின்

Question 6.
இந்தியா ஒரு …………., …………….., …………….., ………………., ………………… என தமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
விடை:
இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயசார்ப்பற்ற, ஜனநாயக , குடியரசு

Question 7.
குடிமகன் என்பதன் பொருள் ………………
விடை:
நகர அரசியல் வசிப்பவர்

Question 8.
…………….. நடைமுறைக்கு கொண்டு வந்த ஆண்டு 1955 ஆகும்.
விடை:
குடியுரிமைச் சட்டம்

Question 9.
தற்போது ……………… அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
விடை:
ஆறு

Question 10.
……………….. அரசியலமைப்பின் பாதுகவாலன் என அழைக்கப்படுகிறது.
விடை:
உச்ச நீதிமன்றம்

Question 11.
…………. நீதிமன்ற சட்டத்தால் செயல்படுத்த முடியும்.
விடை:
அடிப்படை உரிமைகள்

Question 12.
…………….. உறவுகளை விவரிக்க இந்திரா காந்தி சர்காரியா கமிஷணாக நியமிக்கப்பட்டார்.
விடை:
மத்திய, மாநில

Question 13.
மிக முக்கியமான உள்மாநில சபை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு …………….
விடை:
1990

Question 14.
உள்நாட்டு அவசர நிலை …………. ஆண்டுகளில் அறிவிக்கப்படுகிறது.
விடை:
மூன்று

Question 15.
அதிகபட்சம் அவசர நிலையின் காலம் ………………. ஆண்டுகள் ஆகும்.
விடை:
3

Question 16.
அரசியலமைப்பு செயல்பாடு ……………… தலைமையில் செயல்படுத்தப்பட்டது.
விடை:
M.N. வெங்கடாசலய்யா

Question 17.
டாக்டர் B.R. அம்பேத்கர் கூற்றுப்படி அரசியலமைப்பு ……………… இதயம் மற்றும் ஆன்மா ஆகும்.
விடை:
சட்டப்பிரிவு 32

Question 18.
இந்திய அரசியலமைப்பு சட்டம் …………. எழுதப்பட்டது.
விடை:
இத்தாலிய பாணியில்

Question 19.
…………….. செம்மொழி தகுதியை பெற்றுள்ளன.
விடை:
6 மொழிகள்

Question 20.
……………… அரசு எல்லா சமயமும் சமம் என பாதுகாக்கிறது.
விடை:
சமயசார்பற்ற அரசு

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 5

IV. குறுகிய விடை தருக.

Question 1.
அரசியலமைப்பின் அவசியம் யாது?
விடை:

  • அனைத்து மக்களாட்சி நாடுகளும் தங்களை நிர்வகித்துக்கொள்ள ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுள்ளன.
  • ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் சில அடிப்படைக் கொள்கைகளை அரசியலமைப்பு வகுத்துக் கொடுக்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
குடியுரிமைச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது.
  • இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது.

Question 3.
குடியுரிமைச் சட்டத்தின் படி ஒருவர் எந்தெந்த ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்?
விடை:

  1. பிறப்பின் மூலம்
  2. வம்சாவளி மூலம்
  3. பதிவின் மூலம்
  4. இயல்புரிமை மூலம்
  5. பிரதேச இணைவின் மூலம்

Question 4.
குறிப்பு வரைக. அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
விடை:
அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

Question 5.
அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல் பற்றி எழுதுக.
விடை:
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.

மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.

குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Question 6.
ஏழாவது அட்டவணையின் அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுக.
விடை:

  • மத்திய பட்டியல்
  • மாநில பட்டியல்
  • பொதுப்பட்டியல்
  • என மூன்று பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது.

V. விரிவான விடை தருக.

Question 1.
அவசரகால ஏற்பாட்டின் பிரிவுகள் என்னென்ன? அவற்றை விவரிக்கவும்.
விடை:
தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352):
போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.

போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘உள்நாட்டு அவசர நிலை’ எனப்படுகிறது.

இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.

மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356):
ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத்தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.

மாநிலமானது, குடியரசுத்தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது.

நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360):
இந்த வகையான அவசர நிலையில் மத்திய-மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத்தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பற்றி விவரிக்கவும்.
விடை:
‘அமெண்ட்மெண்ட்’ எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல், மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது.
அரசியலமைப்பின் சட்டம் பகுதி ல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கின்றது.

வழிமுறைகள் :
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து, வாக்களித்தவர்களில் 3ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின் மசோதா திருத்தப்பட்டச் சொற்களுடன் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரமுடியும்.

மாநில சட்ட மன்றத்தால் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது.

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள்:

  • அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
  • நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
  • நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

9th Social Science Guide தமிழகத்தில் வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
அ) 27%
ஆ) 57%
இ) 28 %
ஈ) 49%
விடை:
ஆ) 57 %

Question 2.
இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
அ) கம்பு
ஆ) கேழ்வரகு
இ) சோளம்
ஈ) தென்னை
விடை:
ஈ) தென்னை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Question 3.
2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித்திறன்
அ) 3,039 கி.கி
ஆ) 4,429 கி.கி
இ) 2,775 கி.கி
ஈ) 3,519 கி.கி
விடை:
ஆ) 4,429 கி.கி

Question 4.
தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
அ) குறைந்துள்ளது
ஆ) எதிர்மறையாக உள்ளது
இ) நிலையாக உள்ளது
ஈ) அதிகரித்துள்ளது
விடை:
ஈ) அதிகரித்துள்ளது

Question 5.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்
அ) ஆகஸ்டு – அக்டோபர்
ஆ) செப்டம்பர் – நவம்பர்
இ அக்டோபர் – டிசம்பர்
ஈ) நவம்பர் – ஜனவரி
விடை:
இ) அக்டோபர் – டிசம்பர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தமிழக மக்களில் பெரும்பான்மையினர் ____ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்
விடை:
வேளாண்

Question 2.
தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ____ பருவ மழையாகும்.
விடை:
வடகிழக்குப்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Question 3.
தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ____ ஹெக்டேர்கள் ஆகும்.
விடை:
ஒரு கோடியே முப்பது லட்சத்து முப்பத்து மூன்றாயிரம்

III. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை 25

IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.

Question 1.
உணவுப் பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.
விடை:

  • உணவுப் பயிர்கள் : 1. நெல், 2. சோளம்
  • உணவல்லாத பயிர்கள் : 1. தென்னை , 2. பருத்தி

Question 2.
பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?
விடை:

  • தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவு 4544000 ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும்.
  • மழைப்பொழிவு காலத்தில் போதுமான மழை இருந்தால் இப்பரப்பு கூடும்.
  • மழை பொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும், இவ்வாறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான முக்கியக் காரணி மழைப் பொழிவு ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Question 3.
நிலத்தடி நீரின் அளவையும், தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?
விடை:
நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்காணிக்கிறது.

Question 4.
பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?
விடை:

  • பயிரிடப்படும் நிலப்பரப்பு
  • நிலத்தடி நீர்
  • மழைப்பொழிவு
  • நீர் இருப்பு
  • காலநிலை
  • சந்தைவிலை
  • உற்பத்தித்திறன்

Question 5.
சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை 35

V. விரிவான விடையளி.

Question 1.
தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. எனவே தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றையே சார்ந்திருக்கிறது.
  • தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவக்காற்று மழையாகும்.
  • வடகிழக்குப் பருவமழைநீரை நீர்த் தேக்கங்களிலும், கண்மாய்கள், ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
  • வேளாண்மைக்கான நீரை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
  • தமிழகத்தில் லட்சக்கணக்கான திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.
  • தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் பல இன்னல்களும் ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Question 2.
வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  • தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்க வல்லது.
  • நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவை விட நிலத்திலிருந்து எடுக்கும் நீரின் அளவு கூடப் பிரச்சனை ஏற்படும்
  • அதாவது நீர் மட்டம் கீழே செல்லும். இதனால் நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறிவிடலாம்.
  • தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கதிகமாக நீரைப் பயன்படுத்துவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Question 3.
வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க
விடை:

  • தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. எனவே தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றையே சார்ந்திருக்கிறது.
  • தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவக்காற்று மழையாகும்.
  • இப்பருவமழையின் நீரை நீர்த்தேக்கங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் தேக்கி வேளாண்மையை
    மேற்கொள்கின்றனர்.
  • இந்நீர் வாய்க்கால்கள் மூலமாக நிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் 2239 வாய்க்கால்கள் உள்ளன.
  • ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும்.
  • தமிழகத்தில் ஆழ்த்துளைக் கிணறுகள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகளும் உள்ளன.
  • தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.

VI. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. கிராமம் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் விளையும் உணவுப் பயிர்களையும், உணவல்லாத பயிர்களையும் ஆராய்க.
2. தஞ்சாவூர் எந்தப் பயிருக்குப் பெயர் பெற்றது? ஏன்? ஆராய்க.
3. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாட்டத்தின் நெல் விளைச்சல் குறித்துத் தரவுகளை சேகரிக்கவும்.

9th Social Science Guide தமிழகத்தில் வேளாண்மை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
தமிழகத்தில் தரிசாகக் கிடக்கும் நிலத்தின் பகுதி
அ) \(\frac{1}{3}\)
ஆ) \(\frac{2}{3}\)
இ) \(\frac{1}{5}\)
ஈ) \(\frac{1}{10}\)
விடை:
ஈ) ஈ) \(\frac{1}{10}\)

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Question 2.
2011 ஆம் ஆண்டில் ஏறத்தாழ _____ விழுக்காடு பெண்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
அ) 25%
ஆ) 35%
இ 45%)
ஈ) 55%
விடை:
ஈ) 55%

Question 3.
தென்மேற்குப் பருவக் காற்று வீசும் காலம்
அ) ஜுன் – செப்டம்பர்
ஆ) அக்டோபர் – டிசம்பர்
இ ஜனவரி – மார்ச்
ஈ) ஏப்ரல் மற்றும் மே
விடை:
அ) ஜுன் – செப்டம்பர்

Question 4.
தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு
அ) நர்மதை
ஆ) தப்தி
இ) காவிரி
ஈ) கோதாவரி
விடை:
இ) காவிரி

Question 5.
உலக அளவில் மிக அதிகமான நன்னீர் பயன்பாட்டாளராக உள்ள நாடு
அ) ஸ்ரீலங்கா
ஆ) இந்தியா
இ) தென்ஆப்பிரிக்கா
ஈ) மலேசியா
விடை:
ஆ) இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மேட்டூர் அணை ____ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது,
விடை:
காவிரி

Question 2.
கல்லணையைக் கட்டியவர் _____
விடை:
கரிகாலன்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Question 3.
மறைநீர் எனும் பதத்தை அறிமுகப்படுத்தியவர் _____
விடை:
டோனி ஆலன்

Question 4.
மேட்டூர் அணை அமைந்துள்ள மாநிலம் _____
விடை:
தமிழ்நாடு

Question 5.
தமிழகத்தில் விவசாயத்திற்கான மிகப் பெரிய நீர் கொள்ளளவு கொண்ட அணை _____
விடை:
மேட்டூர் அணை

III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
i) தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகள் ஆவர்.
ii) சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது.
iii) இந்தியாவில் குறுவிவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
iv)தமிழகத்தில் குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
விடை:
ii) சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது

Question 2.
i) இந்தியாவில் வற்றாத நதிகள் இல்லை .
ii) தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது தென்மேற்குப் பருவக்காற்று ஆகும்.
iii) ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவானது.
iv) தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு ஆறுகளையே நம்பி இருக்கிறது.
விடை:
iii) ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவானது

Question 3.
i) காவிரி நதி மதுரையின் வழியாகப் பாய்கிறது.
ii) கல்லணை காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
iii) உலக அளவில் மறைநீர் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
iv) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 10% மட்டுமே விவசாயத்திற்குப் பயன்படுகிறது.
விடை:
ii) கல்லணை காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
இந்தியாவில் வீசும் பருவக்காற்றுகள் யாவை?
விடை:

  • தென்மேற்குப் பருவக்காற்று
  • வடகிழக்குப் பருவக்காற்று

Question 2.
மறைநீர் என்றால் என்ன?
விடை:
விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின் போது நுகரப்படும் நீர் மறைநீர் என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை

Question 3.
நுண்ணீ ர் பாசனத் தொழில் நுட்பம் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:

  • நுண்ணீர் பாசனத் தொழில்நுட்பம் பாசன நீர் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாக விளங்குகிறது.
  • இம்முறையில் சீரான கால இடைவெளியில் அளவாக நீர் பாய்ச்சப்படுகிறது.
  • இதனால் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.
  • பணி ஆட்களின் செலவைக் கணிசமாகக் குறைக்கிறது.
  • களை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.
  • நீர் வழி உரமிடுவதால் உரப் பயன்பாட்டுத் திறன் அதிகரிப்பதோடு தரமான விளை பொருளும் கிடைக்கிறது.

Question 4.
நெல் உற்பத்தித் திறனை 1965 முதல் 2015 வரை பட்டியலிடுக.
விடை:

  • தமிழகத்தில் பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பில் நெல் 30 விழுக்காடு பரப்பில் பயிரிடப்படுகிறது.
  • மொத்த உணவு தானிய உற்பத்தியை நெல்லின் பங்கு 62 விழுக்காடு ஆகும்.
  • நெல் உற்பத்தித் திறனை கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை 75

V. விரிவான விடையளி.

Question 1.
தமிழகத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.
விடை:

  • தமிழகத்தில் விளையும் பயிர்களை உணவுப்பயிர்கள் மற்றும் உணவல்லாத பயிர்கள் வகைப்படுத்தலாம்.
  • தமிழகத்தில் 2014-15 ஆம் ஆண்டில் மொத்தமாக பயிரிடப்பட்ட நிலப்பரப்பளவில் ஏறத்தாழ 76 விழுக்க பரப்பளவில் உணவுப்பயிர்களும் மற்ற இடங்களில் உண்பல்லாத பயிர்களும் பயிரிடப்பட்டன.
  • நெல், சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு போன்றவை உணவுப் பயிர்களாகும்.
  • தென்னை, பருத்தி, நிலக்கடலை போன்றவை உணவல்லாத பயிர்களாகும்.
  • தமிழகத்தில் நெல் சாகுபடி 30 விழுக்காடு நிலத்திலும், பிற தானியங்கள் 12 விழுக்காடு பரப்பளவிலும் பயிரிடப்படுகின்றன.
  • சிறுதானிய வகைகள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் காண்க. பயிர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை 80

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 4 தமிழகத்தில் வேளாண்மை 90

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 3 பணம் மற்றும் கடன் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

9th Social Science Guide பணம் மற்றும் கடன் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் ____. (தங்கம் / இரும்பு)
விடை:
தங்கம்

Question 2.
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் இருக்கும் இடம் _____. (சென்னை / மும்பை)
விடை:
மும்பை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 3.
சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை ____ (அமெரிக்க டாலர் / பவுண்டு)
விடை:
அமெரிக்க டாலர்

Question 4.
ஜப்பான் நாட்டின் பணம் _____ என்று அழைக்கப்படுகிறது. (யென்/ யுவான்)
விடை:
யென்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____ வணிகத்தின் முதல் வடிவம்.
விடை:
பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருட்களே

Question 2.
பண விநியோகம் ____ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
விடை:
நான்கு

Question 3.
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் அச்சகம் தொடங்கப்பட்ட இடம் _____.
விடை:
நாசிக்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 4.
பணப்பரிமாற்றத்தை முறைப்படுத்துகின்ற பொறுப்பு ____ க்கு உள்ளது.
விடை:
இந்திய ரிசர்வ் வங்கி

Question 5.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ______
விடை:
பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்

III. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 80

IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
பணம் கண்டுபிடித்தல்

  • காலப்போக்கில் பண்டமாற்றம் செய்வதிலும், பண்டமாற்றும் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதிலும் பிரச்சனைகள் இருந்தன.
  • பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் ஆகும்.

Question 2.
பண்டைய காலப் பணம் என்பது யாது?
விடை:
பண்டமாற்று முறைக்குப் பதிலாக தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவை பண்டய காலப் பணம் ஆகும். இவை புராதனப் பணம் என்றும் அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 3.
பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
பண்ட மாற்றுப் பொருள்கள்
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 60

Question 4.
நறுமணப்பாதை என்றால் என்ன? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
நறுமணப்பாதை :

  • தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு, நறுமணப் பொருட்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் பருத்தி ஆடைகள் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • ஏற்றுமதிப் பொருட்களில் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிகம் இடம் பெற்றதால் இந்த வணிகப்பாதை “நறுமணப் பாதை” என்று அழைக்கப்பட்டது.

Question 5.
இயற்கைப் பணம் என்றால் என்ன?
விடை:
இயற்கைப் பணம்.
உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஏற்கப்பட்டன. இதனால் இவை நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையே “இயற்கைப் பணம்” ஆகும்.

Question 6.
குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?
விடை:
குறைந்த மதிப்பிலான நாணயங்கள் அதிகளவு தயாரிக்கப்பட்டன. ஏனெனில்,

  • வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி, இருப்பு இருப்பதில்லை. இவை வரம்புக்குள் தான் இருந்தன.
  • சிறிய மதிப்பிலான பொருட்கள் வாங்கவும், விற்கவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் குறைந்த மதிப்பு உலோகங்களின் நாணயங்கள் பயன்பட்டன.

Question 7.
அந்நிய செலாவணி என்றால் என்ன?
விடை:
அந்நியச் செலாவணி.
ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி ‘ரூபாய்’ ஆகும். ஒருநாட்டில் வெளிநாட்டின் செலாவணி “அந்நியச் செலாவணி” ஆகும். உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இம்மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடும்.

V. விரிவான விடையளி

Question 1.
நவீன உலகில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விவரி.
விடை:
நவீன உலகின் (மின்ன்ணு உலகின்)பணப் பரிமாற்றம்.

  • சேமிப்பில் உள்ள பணத்தை நேரடியாக வங்கிக்குச் சென்று படிவத்தை நிரப்பி அல்லது காசோலை வழங்கி பெறுவதற்குப்பதிலாக பணம் எடுக்கும் இயந்திரத்தின் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது. இதே போல் வங்கிக்குச் செல்லாமல் நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது
  • முன்னதாகப் பணம் பெற்று பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை பயன்படுகிறது.
  • பணப்பரிமாற்றம் செய்ய காசோலை அல்லது கேட்பு வரைவோலை பயன்படுத்துவதற்கு மாற்றாக இணையவழி பரிமாற்றங்கள் நடைமுறையில் உள்ளன. உலகின் எந்த மூலையிலிருந்தும் நினைத்த நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
  • அலைபேசி மூலம் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில் நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 2.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
விடை:
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்:
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது.1937ல் இருந்து மும்பையில் நிரந்தரமாக இயங்கி வருகிறது. 1949ல் நாட்டுடமையாக்கப்பட்டது.

  • இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன (1969). இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்கு படுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்கிறது.
  • பணப் பரிமாற்றத்தை பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் அரசுக்கு உண்டு. வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் தொழில் வளர்ச்சிக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் முக்கியப் பங்களிப்பான விலைக்கட்டுப்பாட்டை இந்தியாவில் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
  • எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும், எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அச்சடித்து அனுப்பப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ரூபாய் மற்றும் வங்கிகள் தொடர்பான ஆவணங்கள் அச்சடிக்க அச்சகங்கள் உள்ளன.
  • அச்சடிக்கப்பட்ட பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.

Question 3.
பணத்தின் செயல்பாடுகளைப் பட்டியலிடுக.
விடை:
பணத்தின் செயல்பாடுகள்:
பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் ஏற்கப்படவேண்டும்.

பணம் – பரிமாற்ற ஊடகம்:
ஒருநாட்டில் அனைத்து நுகர்பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் தடையின்றி ஏற்கப்படவேண்டும்.

பணம் – கணக்கு அலகு:

  • ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட அலகாக இருக்க வேண்டும்.
  • நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.

பணம் – மதிப்பீட்டினைச் சேமித்தல் மற்றும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுதல்:
பணத்தினைச் சேமிப்பதின் மூலம் எதிர்காலத்துக்கான பொருளை வாங்கும் ஆற்றலைச் சேமிப்பதாகும்.

VI. சரியானக் கூற்றை எழுதுக.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 86

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 87

VII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உள்ளூர் அருங்காட்சியகத்திற்குச் சென்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நாணயங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரி
2. நீ வெளிநாட்டிற்குச் சென்று கட்டிடக்கலை வல்லுநருக்கான மேற்படிப்பைப் பயில கல்விக் கடன் பெறும் வகையில் வங்கி மேலாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக

VIII. வாழ்க்கை திறன்

Question 1.
ஒரு 20 ரூபாய் நோட்டை உற்றுநோக்கி, அதில் நீ காண்பவற்றை பட்டியலிடுக.
விடை:
20 ரூபாய் நோட்டு:

  • எண்கள் ஒரு பக்கத்தில் மேலும் கீழும் அச்சிடப்பட்டுள்ளது.
  • வலது புறம் காந்தி தலை அச்சிடப்பட்டுள்ளது
  • RESERVE BANK OF INDIA என்ற வார்த்தை மையத்தில் உள்ளது
  • கவர்னரின் உறுதிமொழியுடன் கூடிய கையொப்பம் இடம் பெற்றுள்ளன.
  • ₹ என்ற குறியீடு முன்னும் பின்னும் உள்ளது
  • அசோகரது நான்முகச்சிங்கம் இடம் பெற்றுள்ளது
  • சீர்க்கோடு இடம் பெற்றுள்ளது.
  • 15 மொழியில் மதிப்பு எழுதப்பட்டுள்ளது
  • இயற்கைக் காட்சி அச்சிடப்பட்டுள்ளது

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 2.
உன் வீட்டின் ஒரு மாதத்திற்கான வரவு செலவு திட்டத்தை தயார் செய்க.
விடை:
மாத வரவு செலவு:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 88

9th Social Science Guide பணம் மற்றும் கடன் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
_______ சரியான விடையைத் தேர்வு செய்க பன்னாட்டு வணிகத்தின் முதல் வடிவம். (பண்டமாற்று முறை / நாணயங்கள்)
விடை:
பண்டமாற்றுமுறை

Question 2.
ஷெர்ஷா சூரி வெளியிட்ட நாணயத்தின் எடை _____ (178 கிராம் /198 கிராம்)
விடை:
178 கிராம்

Question 3.
ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் ____ ல் உருவாக்கப்பட்டுள்ளது. (1924 /1934)
விடை:
1934

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 4.
இந்தியாவின் அனைத்து வங்கிகளும் ____ ல் நாட்டுடைமையாக்கப்பட்டது. (1969/1979)
விடை:
1969

Question 5.
ஆஸ்திரேலிய செவாணியின் பெயர் _____ (ரிங்கிட் / டாலர்)
விடை:
டாலர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
_____ கிரெடிட் கார்டை உருவாக்கினார்.
விடை:
ஜான் பிக்கின்ஸ்

Question 2.
தங்கம், வெள்ளி ___ என்று அழைக்கப் பட்டன.
விடை:
இயற்கையான பணம்

Question 3.
இந்திய ரிசர்வ் வங்கி ____ முதல் செயல்படத் தொடங்கியது.
விடை:
ஏப்ரல், 1935

Question 4.
______ என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
விடை:
வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 5.
கனடா நாட்டு நாணயத்தின் பெயர் ____
விடை:
டாலர்

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 89

IV. குறுகிய விடையளி.

Question 1.
ரிசர்வ் வங்கி பணம் அச்சடிக்கும் இடங்கள் யாவை?
விடை:

  • நாசிக் (மகாராஷ்டிரம்)
  • தேவாஸ் (மத்தியப் பிரதேசம்)
  • மைசூர் (கர்நாடகம்)
  • சல்பானி (மேற்கு வங்காளம்).

Question 2.
எந்த நாட்டுப் பணங்கள் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன?
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 90

Question 3.
கடன் கிடைக்கப் பெறும் நிறுவனங்கள் யாவை?
விடை:

  • நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள்.
  • முறை சாரா நிதி நிறுவனங்கள்
  • சுய உதவிக் குழுக்கள் மூலம் பெறப்படும் நுண் கடன்கள்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன்

Question 4.
சுய உதவிக் குழுக்கள் – விவரி?
விடை:
குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவர்கள் அல்லது குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் குழுவாக அமைத்து சிறு சேமிப்பில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சுய உதவிக் குழுக்கள் எனப்படுகின்றனர்.

Question 5.
பண விநியோக முளையைப் பற்றி எழுதுக.
விடை:
பண விநியோகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ப1 = மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணம் + அனைத்து வணிக கூட்டுறவு வங்கிகளில்
சேமிக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை + ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை

2 = ப1 + அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு வகை.
3 = ப1 + அனைத்து வணிக, கூட்டுறவு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கால வைப்புத் தொகை
4 = ப3 + அஞ்சல் அலுவலகங்களின் மொத்த வைப்புத் தொகை

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 3 பணம் மற்றும் கடன் 92

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

10th Social Science Guide தமிழ்நாடு – மானுடப் புவியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா …………..
அ) காவிரி டெல்டா
ஆ) மகாந்தி டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) கிருஷ்ணா டெல்டா
விடை:
அ) காவிரி டெல்டா

Question 2.
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ……………….
அ) பருப்பு வகைகள்
ஆ) சிறுதானியங்கள்
இ) எண்ணெய் வித்துக்கள்
ஈ) நெல்
விடை:
ஆ) சிறுதானியங்கள்

Question 3.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ……………….
அ) மேட்டூர்
ஆ) பாபநாசம்
இ) சாத்தனூர்
ஈ) துங்கபத்ரா
விடை:
அ) மேட்டூர்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 4.
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ………………
அ) 3 மற்றும் 15
ஆ) 4 மற்றும் 16
இ) 3 மற்றும் 16
ஈ) 4 மற்றும் 15
விடை:
அ) 3 மற்றும் 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ……………….. சதவீதத்தை வகிக்கிறது.
விடை:
21

Question 2.
சாத்தனூர் அணை …………….. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
விடை:
தென்பெண்னை

Question 3.
மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ………. ஆகும்.
விடை:
சென்னை பன்னாட்டு விமான நிலையம்

Question 4.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ………………. அழைக்கப்படுகிறது.
விடை:
வணிக சமநிலை

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 2

IV. சரியான கூற்றினை கண்டுபிடி.

Question 1.
கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 2.
கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.
காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 3

Question 2.
கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் ‘மான்செஸ்டர்’ என அழைக்கப்படுகிறது?
விடை:

  • பருத்தி நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதிகளில் செறிந்து காணப்படுகின்றன.
  • கோயம்புத்தூர் நெசவுத்தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
  • பருத்தி கோயம்புத்தூர் பீடபூமியில் பயிரிடப்பிடுகிறது. எனவே, கோயம்புத்தூர் ‘தமிழ்நாட்டின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அமராவதி அணை, கிருஷ்ணகிரி அணை, முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை

Question 4.
பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன ?
விடை:

  • சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
  • மெட்ரோ இரயில்வே அமைப்பு, இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 5.
தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை பட்டியலிடுக.
விடை:

  • விமானநிலையங்கள் : கோயம்புத்தூர், மதுரை, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமானநிலையங்கள் ஆகும். தூத்துக்குடி, மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமானநிலையங்கள் ஆகும்.
  • துறைமுகங்கள்: சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.

VI. வேறுபடுத்துக.

Question 1.
கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் பிடித்தல்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 4

Question 2.
உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 5

Question 3.
மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 6

VII. கீழ்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
விவசாயிகள் இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்.
விடை:

  • தற்போதைய மாறிவரும் சூழலில் மக்கள் பெரும்பாலும் கரிம வேளாண் பொருட்களை விரும்புகிறார்கள்.
  • வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பயிர் தூண்டுதல்கள் போன்ற கனிம விவசாயத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக விவசாயிகள் பூமியின் உரங்களைப் பயன்படுத்துகின்றன.

Question 2.
கிராமங்களை விட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்.
விடை:

  • வேளாண்மை, தொழிற்துறை வளர்ச்சி போன்றவை மக்கள் தொகை அதிகளவில் இருப்பதற்கான காரணங்கள் ஆகும்.
  • எ.கா. மதுரை, சென்னை , கோயம்புத்தூர்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 3.
தமிழ்நாட்டின் ‘நெசவாலை தலைநகர்’ என கரூர் அழைக்கப்படுகிறது.
விடை:
ஜவுளி ஆலைகள் கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ளன.
ஜவுளி மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கை கொடுத்துள்ளன.
எனவே, கரூர் ‘நெசவாலைத் தலைநகரம்’ எனப்படுகிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.
விடை:
தோட்டப்பயிர்கள் :

  • தேயிலை, காப்பி, இரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.
  • தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றம் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.
  • நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.
  • மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காப்பி பயிரிடப்படுகின்றது.
  • நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சரிவுகளில் காப்பி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.
  • திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச் சரிவுகளில் காப்பி பயிரிடப்படுகின்றது.
  • காப்பி உற்பத்தியில் கர்நாடக மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.
  • இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாக காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டிலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சிகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது.
  • கடலூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது.

Question 2.
தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
விடை:
தமிழ்நாட்டின் நீர் வளங்கள்:
மனித குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள்:
இந்தியப் பரப்பளவில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ளது தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் உள்ள நீர்வள ஆதாரங்கள்:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 7

  • பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண் நீர்பாசன மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர் மின்சக்தி உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Question 3.
தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 8
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 9

Question 4.
தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் பற்றி அதற்கான காரணங்களை எழுதுக.
விடை:

  • ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.
  • மக்கள் தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர, ஆய்வுகள் மக்கட்தொகையில் என அழைக்கப்படுகின்றது.

அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள்:
கோவை, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும்.

இம்மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம் விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 5.
தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.
விடை:
சாலைகளின் வகைகள்:

  • மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும். இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுங்சாலைகள் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.
  • தனியார் துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20% பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 10

இரயில்வே போக்குவரத்து :

  • தெற்கு இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.
  • தற்போது தெற்கு இரயில்வே வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்ப பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
  • மெட்ரோ இரயில்வே அமைப்பு மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன், இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

வான்வழி போக்குவரத்து :

  • தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
  • சென்னை சர்வதேச விமானநிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்தாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையாக உள்ளது.
  • கோயம்புத்தூர் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமான நிலையங்களின் ஆகும்.
  • துாத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமாநிலையங்கள் ஆகும்.

நீர்வழிப் போக்குவரத்து:

  • சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.
  • நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் இம்மாநிலத்தில் உள்ளன.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

Question 6.
சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.
விடை:

  • சாலை சமிக்கைகளை அறிதல்
  • நில், கவனி, செல்
  • ஒரு வாகனம் நெருங்குகிறதா என கவனியுங்கள்.
  • சாலையில் விரைந்து செல்ல வேண்டாம்.
  • பாதசாரிகளுக்கான பாதையில் சாலையைக் கடக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டும் போது கைகளை நீட்ட வேண்டாம்.
  • ஒரு போதும் வளைவுகளில் சாலையைக் கடக்காதீர் (மற்றும்) நகரும் வாகனத்தால் பாதுகாப்பாக இருங்கள்.

10th Social Science Guide தமிழ்நாடு – மானுடப் புவியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கோயம்புத்தூர் மாவட்டம் ……………. உற்பத்தியில் முதல்நிலை வகிக்கிறது.
அ) உளுந்து
ஆ) கொண்டக்கடலை
இ) பச்சப்பயிறு
ஈ) கொள்ளு
விடை:
ஆ) கொண்டக்கடலை

Question 2.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ……………. பயிரிடப்படுகிறது.
அ) உளுந்து
ஆ) கொண்டக்கடலை
இ) பச்சைப்பயிறு
ஈ) கொள்ளு
விடை:
ஆ) கொண்டக்கடலை

Question 3.
மலையடுக்குப் பகுதியில் ……………. அணை கட்டப்பட்டுள்ளது.
அ) பவானி
ஆ) மேட்டூர்
இ) அமராவதி
ஈ) சாத்தனூர்
விடை:
ஆ) மேட்டூர்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 4.
கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியிலிருந்து …………………. தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
அ) 17 கி.மீ
ஆ) 7 கி.மீ
இ) 12 கி.மீ
ஈ) 15 கி.மீ
விடை:
ஆ) 7 கி.மீ

Question 5.
…………………. நகரிலிருந்து ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) தூத்துக்குடி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) திருநெல்வேலி

Question 6.
வைகை அணை ………………. நாள் திறக்கப்பட்டது.
அ) 1995, ஜனவரி 22ஆம்
ஆ) 1959, ஜீன் 12ஆம்
இ) 1959, ஜனவரி 21ஆம்
ஈ) 1969, ஜனவரி 21ஆம்
விடை:
இ) 1959, ஜனவரி 21ஆம்

Question 7.
இந்தியாவில், தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு ……………. உற்பத்தியையும் அளிக்கிறது.
அ) 40%
ஆ) 60%
இ) 50%
ஈ) 65%
விடை:
ஆ) 60%

Question 8.
……………… உலகளவில் திறன்படைத்த அலைகளில் ஒன்றாகும்.
அ) காகித நிறுவனம்
ஆ) கீழ் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம்
இ) தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம்
ஈ) அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம்
விடை:
அ) காகித நிறுவனம்

Question 9.
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு ………………. பெரிய மாநிலமாக உள்ளது.
அ) நான்காவது
ஆ) மூன்றாவது
இ) இரண்டாவது
ஈ) ஏழாவது
விடை:
இ இரண்டாவது

Question 10.
……………… மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி பதிவாகியுள்ளது.
அ) நாகப்பட்டினம்
ஆ) நீலகிரி
இ) இராமநாதபுரம்
ஈ) புதுக்கோட்டை
விடை:
ஆ) நீலகிரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………… என்பது மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் ஆகும்.
விடை:
மானுடப் புவியியல்

Question 2.
அக்ரிகல்சரின் பொருள் ……………….
விடை:
நிலம் மற்றும் வளர்த்தல்

Question 3.
TRRI-ன் விரிவாக்கம் …………….
விடை:
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 4.
கோயம்புத்தூர் பீடபூமியிலும், கம்பம் பள்ளத்தாக்கிலும் ……………… பயிரிடப்படுகின்ற ன.
விடை:
சோளம்

Question 5.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் …………….. என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
ஆவின்

Question 6.
பரப்பலாறு திட்டம் ……………….. அருகே அமைந்துள்ளது.
விடை:
ஓட்டஞ்சத்திரம்

Question 7.
கரூர் ……………… என்றழைக்கப்படுகிறது.
விடை:
தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்

Question 8.
இராமநாதபுரத்தின் சில பகுதிகளில் ……………… உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை:
செயற்கைப் பட்டு துணிகள்

Question 9.
உற்பத்தித் தொழில் என்பது மாநிலப் பொருளாதாரத்தின் ………………. ஒன்றாகும்.
விடை:
துடிப்பான துறைகளில்

Question 10.
தமிழ்நாட்டில் சர்க்க ரைத் தொழிலகம் ஒரு ………………..
விடை:
வேளாண் சார்ந்த தொழிலகமாகும்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 11
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 12

IV. கூற்று வகை வினா.

Question 1.
கூற்று : நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 4வது இடத்தை வகிக்கிறது.
காரணம் : காஞ்சி புரம் பட்டு என்பது அதன் தனித்தன்மை , தரம் (ம) பாரம்பரிய பதிப்பால் உலகறியப்பட்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 2.
கூற்று : கைத்தறித் துறையானது மாநிலத்தின் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும்.
காரணம் : இது கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், வருவாயையும் அளிக்கின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
நீர்ப்பாசனம் வரையறு.
விடை:

  • மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது.
  • மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது.
  • எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும்.
  • வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

Question 2.
டான் டீ வரையறு.
விடை:

  • டான் டீ இந்நிறுவனம் இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் முன்னனி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும்.
  • (தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம்) இந்நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4,500 ஹெக்டேர் ஆகும்.

Question 3.
உள்நாட்டு மீன்பிடிப்பு பற்றிக் குறிப்பிடுக.
விடை:

  • ஏரிகள், ஆறுகள், குளங்கள், கழிமுகங்கள், காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடித்தல் நடைபெறுகிறது.
  • சிப்பிகள் மற்றும் இறால்கள் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
  • கட்டுமரம், டீசல் படகுகள் மற்றும் மீன் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் நடைபெறுகிறது.

Question 4.
தொழிலகங்கள் வரையறு.
விடை:

  • மூலப்பொருள்களை இயந்திரங்களின் மூலம் உற்பத்திப் பொருள்களாகவோ அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள்களாகவோ மாற்றப்படும் இடமே தொழிலகங்களாகும்.
  • பருத்தி நெசவாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை, தோல் தொழிலகம், சிமெண்ட் ஆலை, மின்சாதனப் பொருள்கள் உற்பத்தி ஆலை, வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தொழிலகங்கள் ஆகும்.

Question 5.
புவியியல் குறியீடு வரையறு.
விடை:

  • புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருள்களின் மீது பயன்படுத்தப்படும் குறிப்பாகும்.
  • இது உற்பத்தி செய்யும் உரிமையாளர்களுக்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. கோயம்புத்தூர் – மாவு இரைக்கும் இயந்திரம் கோரப்பட்டு சேலை சில முக்கிய புவியியல் குறியீடுகள்
    Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 13

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 6.
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் யாவை?
விடை:
டைடல் பூங்கா, அசெண்டாஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான மகேந்திரா உலக நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் – டைடல் பூங்கா II மற்றும் டைடல் பூங்கா III, கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம் – டைடல் பூங்கா ஆகியனவாகும்.

Question 7.
மக்கட்தொகையியல் – வரையறு.
விடை:

  • ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.
  • மக்கள் தொகைப் பண்புகள் பற்றி புள்ளிவிவர ஆய்வுகள் ‘மக்கட்தொகையியல்’ என அழைக்கப்படுகிறது.

VI. வேறுபடுத்துக.

Question 1.
காகித தொழிலகம் மற்றும் சிமெண்ட் தொழிலகம். காகித தொழிலகம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 14

Question 2.
பவானி சாகர் அணை மற்றும் வைகை அணை.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 15

VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
ஈரோடு தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு எனப்படுகிறது.
விடை:
கைத்தறி, விசைத்தறி மற்றும்) ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு ஏற்றதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

Question 2.
சுற்றுலாத் துறை ஒரு தொழிலகமாக கருதப்படுகிறது.
விடை:
ஏனெனில் இதில் ஏராளமான மக்களுக்கு வெலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகளை விவரிக்கவும்.
விடை:
நிலத்தோற்றம், காலநிலை, மண் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய புவியியல் காரணிகளாகும்.

நிலத்தோற்றம்:

  • தமிழ்நாடானது மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய பல்வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • மேற்கண்டவற்றுள் சமவெளிகள் வேளாண் உற்பத்திக்கு ஏற்ற வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளதால் சமவெளிப் பகுதிகள் வேளாண் தொழிலுக்கு ஏற்றதாக உள்ளது.
  • எ.கா. வண்டல் மண் நிறைந்துள்ள காவிரி சமவெளி தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க வேளாண் பகுதியாகும்.

காலநிலை:

  • தமிழ்நாடு பூமத்தியரேகைக்கு அருகிலும், வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் வெப்ப மண்டலக் காலநிலையைப் பெறுகிறது.
  • ஆகையால் தமிழ்நாட்டின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் அதிகமாக உள்ளது.
  • எனவே வெப்பமண்டலப் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.

மண்:

  • வேளாண்மையின் மிக முக்கியமான கூறுகளுள் ஒன்று மண் ஆகும்.
  • இது பயிர்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

நீர்ப்பாசனம்:

  • மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது.
  • மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது.
  • எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும்.
  • வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 2.
தமிழ்நாட்டின் கனிம வளங்களை விவரிக்க.
விடை:
வெர்மிகுலைட், மேக்னடைட், ரூடுனைட், ரூட்டைல், செம்மணிக்கல், மாலிப்படினம் மற்றும் இல்மனைட் ஆகிய வளங்களில் தமிழ்நாடு முன்னணி உற்பத்தியாளராக உள்ளது.

பழுப்பு நிலக்கரி 55% வெர்மிகுலைட் 75%, டுனைட் 59%, செம்மணிக்கல் 59%, மாலிப்டீனம் 52% மற்றும் டைட்டானியம் 30% தாதுக்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.

மாநிலத்தில் காணப்படும் முக்கியமான தாதுக்கள் பின்வருமாறு: நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது.

இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்றன.

காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையிலும் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன.

சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி, உதகமண்டலம், பழனிமலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் பாக்சைட் தாதுகள் காணப்படுகின்றன.

திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.

கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது.

கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கிடைக்கிறது.