Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Textbook Questions and Answers, Notes.
TN Board 10th Social Science Solutions History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வேலுநாச்சியார்
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை:
ஆ) பூலித்தேவர்
Question 2.
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
அ) வேலுநாச்சியார்
ஆ) கட்டபொம்மன்
இ) பூலித்தேவர்
ஈ) ஊமைத்துரை
விடை:
இ) பூலித்தேவர்
Question 3.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
அ) கயத்தாறு
ஆ) நாகலாபுரம்
இ) விருப்பாட்சி
ஈ) பாஞ்சாலங்குறிச்சி
விடை:
ஆ) நாகலாபுரம்
Question 4.
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ) கோபால நாயக்கர்
விடை:
அ) மருது சகோதரர்கள்
Question 5.
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
அ) 1805 மே 24
ஆ) 1805 ஜூலை 10
இ) 1806 ஜூலை 10
ஈ) 1806 செப்டம்பர் 10
விடை:
இ 1806 ஜூலை 10
Question 6.
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
அ) கர்னல் பேன்கோர்ட்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) சர் ஜான் கிரடாக்
ஈ) கர்னல் அக்னியூ
விடை:
இ சர் ஜான் கிரடாக்
Question 7.
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
அ) கல்கத்தா
ஆ) மும்பை
இ) டெல்லி
ஈ) மைசூர்
விடை:
அ) கல்கத்தா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
விஸ்வநாத நாயக்கர்
Question 2.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.
விடை:
கோபால நாயக்கர்
Question 3.
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் என்பவரை அனுப்பிவைத்தார்.
விடை:
இராமலிங்க முதலியார்
Question 4.
கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
விடை:
கயத்தார்
Question 5.
மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை:
2ம் பாளையக்காரர் போர்
Question 6.
…………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
விடை:
ஃபதேக் ஹைதர்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
Question 1.
(i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழி நடத்தினார்.
அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி.
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.
இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி.
ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி.
விடை:
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.
Question 2.
(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799ல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
ஈ) (i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
Question 3.
கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
IV. பொருத்துக.
விடை:
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
Question 1.
பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
விடை:
- பாளையக்காரர்கள் வரிவசூலிப்பதிலும், நிலப்பகுதிகளை நிர்வகிப்பதிலும், வழக்குகளை விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் தன்னிச்சையாகச் செயல்பட முடிந்தது.
- அவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது.
Question 2.
கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.
விடை:
கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள்:
சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியனவாகும்.
மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் :
ஊத்துமலை, தலைவன் கோட்டை நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியனவாகும்.
Question 3.
களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
விடை:
- நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குக் செல்லும் படையை பலப்படுத்தினார்.
- மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600 க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
- மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
- களக்காட்டில் நடைப்பெற்ற போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. cooooooooo பிரிலியண்ட் ’ஸ்
Question 4.
கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?
விடை:
- வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
- பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது,
- அனைத்து பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
- ஆட்சியர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
- இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.
Question 5.
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
விடை:
- பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
- இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
- ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்ட னர்.
- உத்தி விரைவில் பாளையக்காரர்களின் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
VI. விரிவாக விடையளிக்கவும்.
Question 1.
கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
வீரபாண்டிய கட்டபொம்மன் :
- பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
- தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.
- ளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
- ஆட்சியர்கள் பாளையக்காரர்களிடம் வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
- இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும்பகை ஏற்பட அடிப்படையானது.
ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல்:
- 1798 ஆகஸ்ட் 19இல் இராமநாதபுத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு, கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார்.
- ஆனால் கட்டபொம்மன் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததோடு ஜாக்சன் அவரைச் சந்திக்க மறுத்தார்.
- ஊமைத்துரை கட்டபொம்மன் தப்ப உதவினார்.
- சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை:
- மே 1799இல் மதராஸில் இருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
- பானெர்மென் செப்டம்பர் 5 அன்று முழுப் படைகளையும் பாஞ்சாலங்குறிச்சியில் கொண்டுவந்து நிறுத்தினார்.
- பானெர்மென் இராமலிங்கரை தூதனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.
- கட்டபொம்மன் மறுத்தார்.
- கள்ளர்பட்டியில் நடைபெற்ற மோதலில் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்படல் :
- கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார்.
- எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகமிழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்.
- திருநெல்வேலிக்கு மிக அருகேயுள்ள கயத்தாறில் பாளையங்கோட்டைக்கு முன்பாக இருந்த புளியமரத்தில் சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
Question 2.
சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆராய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.
விடை:
- மருது சகோதரர்கள் இருவரும் சிவகங்கையின் முத்துவடுகநாதரின் திறமையான படைத்தளபதிகளாவார்.
- மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்கத் திட்டமிட்டனர்.
- 1800இல் மீண்டும் கலகம் வெடித்தது.
- இது இரண்டாம் பாளையக்காரர் போர் எனப்பட்டது.
சிவகங்கையின் வீழ்ச்சி:
- ஆங்கிலேயர்கள் மே 1801இல் தஞ்சாவூரிலும், திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களைத் தாக்கினார்கள்.
- கலகக்காரர்கள், பிரான்மலையிலும், காளையார் கோவிலும் தஞ்சம் புகுந்தனர்.
- அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டனர்.
- இறுதியாக வலுவான இராணுவமும், சிறப்பான தலைமையும் கொண்ட ஆங்கிலேய கம்பெனியே விஞ்சி நின்றது.
- கலகம் தோற்றதால் 1801இல் சிவகங்கை இணைக்கப்பட்டது.
- ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16இல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.
- கலகக்காரர்களில் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேசியாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
- மருது சகோதரர்களின் கலகம் தென்னிந்தியப் புரட்சி என்று அழைக்கப்படுவதோடு தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.
கர்நாடக உடன்படிக்கை:
- 1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.
- பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.
Question 3.
வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
விடை:
புரட்சி வெடித்தல்:
- 1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.
- கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார்.
- இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
- கோட்டையைக் கடந்து சென்று கொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்டார்.
- சூழலை விசாரித்தறிய முற்பட்ட அவரது உடல் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது.
- ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்.
- அவர்களின் லெப்டினென்ட் எல்லியும், லெப்டினென்ட் பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.
ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை:
- கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.
- புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.
புரட்சியின் பின்விளைவுகள் :
- திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
- கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
- புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.
10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
பரம்பரை பரம்பரையாக ………………… பாளையக்காரர்கள் இருக்கிறார்கள்.
அ) 72
ஆ) 52
இ) 62)
ஈ) 27
விடை:
அ) 72
Question 2.
…………… இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது.
அ) சமஸ்கிருதம்
ஆ) ஹிந்தி
இ) தமிழ்
ஈ) பெங்காலி
விடை:
இ தமிழ்
Question 3.
எந்த ஆண்டில் பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?
அ) 16 மார்ச் 1761
ஆ) 18 மே 1961
இ) 16 மே 1761
ஈ) 18 மார்ச் 1761
விடை:
இ 16 மே 1761
Question 4.
யூசுப்கான் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
அ) 1764
ஆ) 1876
இ) 1766
ஈ) 1876
விடை:
அ) 1764
Question 5.
ஹைதர் அலி தனது ……………… கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
இ திண்டுக்கல்
Question 6.
பிரிட்டிஷ் படைகளால் கோபால நாயக்கர் ……………. வெற்றிகொள்ளப்பட்டார்.
அ) 1872
ஆ) 1901
இ) 1801
ஈ) 1972
விடை:
இ 1801
Question 7.
கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் …………………. பகோடாக்களாக இருந்தது.
அ) 2510
ஆ) 3310
இ) 6310
ஈ) 3301
விடை:
ஆ) 3310
Question 8.
1798 ஆகஸ்ட் 18ல் …………… வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஜாக்சன் ஆணை பிறப்பித்தார்.
அ) திருச்சி
ஆ) இராமநாதபுரம்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
ஆ) இராமநாதபுரம்
Question 9.
மருது சகோதரர்களும், கட்டபொம்மனும் இணைந்து …………….ஐ எதிர்ப்பது என்று முடிவெடுத்தனர்.
அ) துருக்கியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) ஆங்கிலேயர்கள்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை:
இ ஆங்கிலேயர்கள்
Question 10.
சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் ………………. அன்று தூக்கிலிடப்பட்டார்.
அ) 13 செப்டம்பர்
ஆ) 31 செப்டம்பர்
இ) 13 அக்டோபர்
ஈ) 30 அக்டோபர்
விடை:
அ) 13 செப்டம்பர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
நாடுபிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை ……………… பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்த பூலித்தேவரிடமிருந்து வெளிப்பட்டது.
விடை:
திருநெல்வேலி
Question 2.
பூலித்தேவர் மைசூரின் …………….. மற்றும் பிரெஞ்சுகாரர்களது ஆதரவினைப் பெற முயன்றது.
விடை:
உடையாள்
Question 3.
……………… என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
விடை:
ஹைதர் அலி
Question 4.
வசூலிக்கப்பட்ட வரியில் ……………… நவாபிற்கும் குடும்ப பராமரிப்பிற்கும் ஒதுக்கப்பட்டது.
விடை:
ஆறில் ஒரு பங்கு
Question 5.
கட்டபொம்மனும் நிலுவைத் தொகையில் ………………. பகோடாக்கள் நீங்கலாக பிற நிலுவைத் தொகையினை செலுத்தி இருந்தனர். விடை:
1080
Question 6.
.கட்டபொம்மணின் ………………. மேஜர் பானர்மென் செப்டம்பர் 5 அன்று கோட்டையைத் தாக்கினார்.
விடை:
பிடிகொடுக்கா பதிலால்
Question 7.
………………. கோட்டை மிக குறைந்த காலத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது.
விடை:
பாஞ்சாலங்குறிச்சி
Question 8.
மருது சகோதரர்கள் …………….. நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.
விடை:
ஜீன் 1801
Question 9.
ஆங்கிலேயரின் ………………. என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களில் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
விடை:
பிரித்தாளும் கொள்கை
Question 10.
கலகக்காரர்களில் ……………… பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
விடை:
73 பேர்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
Question 1.
கூற்று : நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பினார்.
காரணம் : மாபூஸ்கான் வெற்றி பெற்றார்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
Question 2.
கூற்று : நாயக்க மன்னர்களால் 75 பாளையங்கள் உருவாக்கப்பட்டது.
காரணம் : இவை இரு தொகுதியைக் கொண்டது .
அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
IV. பொருத்துக.
விடை:
V. சுருக்கமான விடையளிக்கவும்.
Question 1.
ஏன் யூசுப்கான் பூலித்தேவருடன் போர் தொடுக்க ஆயத்தமாகவில்லை?
விடை:
கம்பெனியாரால் அனுப்பப்பட்ட யூசுப்கான் (கான்சாகிப் என்றும் தமது மதமாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர்) திருச்சிராப்பள்ளியில் இருந்து தான் எதிர்பார்த்த பெரும்பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வந்துசேரும் வரை பூலித்தேவர் மீது தாக்குதல் தொடுக்க அவர் ஆயுத்தமாகவில்லை.
Question 2.
பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யாவை?
விடை:
- நெற்கட்டும்செவல்
- வாசுதேவநல்லூர்
- பனையூர்
Question 3.
ஒண்டிவீரன் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
- ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் தலைமையேற்றிருந்தார்.
- பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.
Question 4.
குயிலி பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
- வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
- உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
- குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.
Question 5.
கர்நாடக உடன்படிக்கை வரையறு.
விடை:
1799 மற்றும் 1800-1801ஆம் ஆண்டு பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டதன் விளைவு தமிழகத்திலிருந்த அனைத்து உள்ளூர் குடித்தலைமையினரின் எண்ணங்களையும் நீர்த்துப்போகச்செய்தது.
1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி, பிரிட்டிஷார் நேரயாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.
VI. விரிவாக விடையளிக்கவும்.
Question 1.
வேலூர்ப் புரட்சியைப் பற்றி மதிப்பிடுக.
விடை:
புரட்சியைப் பற்றிய மதிப்பீடு:
வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்காத காரணத்தினாலேயே வேலூர் புரட்சி தோல்வியுற்றது.
புரட்சிக்கான ஏற்பாடுகளை 23ஆம் படைப்பிரிவின் 2ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும், ஜமேதாரான ஷேக் ஹீஸைனும், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதார்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது.
1857ஆம் ஆண்டு பெரும்கலகத்திற்கான அனைத்து முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது.
ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை .
1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்துவிடவில்லை.
பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது எதிரொலித்தது.
Question 2.
வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
தனது தந்தையாரான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
கம்பெனி நிர்வாகிகளான ஜேம்ஸ் லண்டன் மற்றும் காலின் ஜாக்சன் என்போர் இவரை அமைதியை விரும்பும் மனம் கொண்டவராகவே கருதினார்.
எனினும் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.
1781இல் கம்பெனியாருடன் நவாப் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, மைசூரின் திப்பு சுல்தானுடன் ஆற்காட்டு நவாப் போர்புரிந்து கொண்டிருந்தபோது, கர்நாடகப்பகுதியில் வரி மேலாண்மையும், நிர்வாகமும் கம்பெனியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்நிலை ஏற்பட்டது.
வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது.
அனைத்துப் பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
ஆட்சியர்கள் பாளையக்கரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.