Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
அ) ஆங்கிலம்
ஆ) தேவநாகரி
இ) தமிழ்-பிராமி
ஈ) கிரந்தம்
விடை:
இ) தமிழ் – பிராமி

Question 2.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
அ) தீபவம்சம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மகாவம்சம்
ஈ) இண்டிகா
விடை:
இ) மகாவம்சம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 3.
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
அ) கரிகாலன்
ஆ) முதலாம் இராஜராஜன்
இ) குலோத்துங்கன்
ஈ) முதலாம் இராஜேந்திரன்
விடை:
அ) கரிகாலன்

Question 4.
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
அ) புகளூர்
ஆ) கிர்நார்
இ) புலிமான்கோம்பை
ஈ) மதுரை
விடை:
அ) புகளூர்

Question 5.
(i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
(ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.
(iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது.
(iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக்குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும்
(ii) சரி
ஈ) (iii) மற்றும்
(iv) சரி
விடை:
இ) (i) மற்றும்
(ii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 6.
(i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள். (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.
அ) (i) சரி
ஆ) (ii) மற்றும்
(iii) சரி
இ) (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
இ) (iii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ______ ஆகும்.
விடை:
கல்வெட்டியல்

Question 2.
கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் _____ ஆகும்.
விடை:
தொல்லியல்

Question 3.
மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் _____ ஆகும்.
விடை:
அர்த்தசாஸ்த்ரா

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 4.
______ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.
விடை:
திணை

Question 5.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____ என்னும் சொல் குறிக்கிறது.
விடை:
யவனம்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளூஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.
இ) இந்தியாவில்தொடக்ககாலத்தில்பயன்படுத்தப்பட்டநாணயங்களில் உருவங்கள்பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.
விடை:
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

Question 2.
அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.
விடை:
இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 1

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
விடை:
வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாக சங்ககால மக்களின் வாழ்க்கை முறை குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன.

அகழாய்வு நிகழ்விடங்கள்: அரிக்கமேடு, அழகன் குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம்,கொற்கை, வசவ சமுத்திரம் மற்றும் கேரளத்தின் பட்டணம்.

சங்ககாலத் துறைமுகப்பட்டிணமான புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டில் அகழ்வாய்வு நடந்தது. இவ்வாய்வில் சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறை கிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
விடை:

  • சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியன சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் சான்றாகும். சங்ககாலத்தின் முதன்முதலாக செலவாணிக்குரிய பொருளாக நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • முத்திரை பொறித்த நாணயங்கள் கொடுமணல், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களிலும், ரோமானிய நாணயங்கள் கோயம்புத்தூர் மண்டலத்திலும் கிடைத்துள்ளன.

Question 3.
சங்ககாலத்தில் விவசாயம் ஒருமுக்கியமானவாழ்வாதாரமாக இருந்தது. இதற்கானகாரணங்களைக் கூறுக.
விடை:

  • சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. ஏனெனில், நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. ஆற்று வடிநீர்ப் பகுதிகளிலும், குளம், ஏரி போன்ற நீர்ப்பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது. புன்செய் நிலத்தில் தானியங்கள் பயிரிடப்பட்டன.
  • செந்நெல், வெண்ணெல், ஐவனநெல் என நெல் வகைககள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆதிச்சநல்லூர், பொருந்தல் ஆய்வுகளில் தாழிகளுடன் நெல்லும் கிடைத்துள்ளது. காடுகளில் இடம் விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை புனம் எனப்பட்டது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 4.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
விடை:
தமிழகமும் வெளிநாட்டுத் தொடர்புகளும்

  • அயல் நாடுகளுடனான தமிழகத் தொடர்புக்கான சான்றுகள்:
  • ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று காலத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
  • கிரேக்க ரோமானிய, மேற்கு ஆசிய மக்களான யவனர்களோடு வாணிபத் தொடர்பு இருந்தது. (யவனர் – கிரேக்க அயோனியா பகுதி சொல்)
    செங்கடல் பகுதியில் உள்ள பெர்னிகே, குசேர் அல் காதிம், தாய்லாந்து நாட்டில் உள்ள குவான் லுக் பாட் ஆகிய இடங்களில் கிடைத்த அகழாய்வுப் பொருட்கள்.
  • தமிழ் இலக்கியங்கள் தென்கிழக்கு ஆசியாவை சுவர்ணபூமி என குறிப்பிடுகின்றன.
    (ஏற்றுமதி : மிளகு போன்ற நறுமணம் பொருட்கள், நவமணிகள், யானைத் தந்தம். இறக்குமதி : தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்கள்).

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
விடை:
இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களின் தலைவர்கள் தங்கள் நிலப்பகுதியை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். இவர்களிடமிருந்தே வேந்தர்கள் தோன்றினார்கள். இவ்வாறு சங்காலத்திற்கான அடித்தளம் வேர்கொண்டது.

சேரர்:
சேரர் ஆட்சிப்பகுதி தற்கால கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி, தலைநகர் வஞ்சி, துறைமுகங்கள் முசிறி மற்றும் தொண்டி, பதிற்றுப்பத்து சேரர்கள் குறித்து குறிப்பிடுகிறது. மாலைபனம்பூ, இலச்சிளை வில் அம்பு. (சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம்)

சோழர்:
சோழரின் ஆட்சிப்பகுதி காவிரி வடிநிலம் மற்றும் தமிழ்நாட்டின் வடபகுதி. தலைநகர் உறையூர், துறைமுகம் பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) பட்டினப்பாலை காவிரிப்பூம்பட்டினம் குறித்து குறிப்பிடுகிறது. இலச்சிளை புலி. (கரிகால் சோழன் கல்லணை கட்டினார்).

பாண்டியர்:
பாண்டியரின் ஆட்சிப்பகுதி தென் தமிழகம். தலைநகர் மதுரை, துறைமுகம் கொற்கை, தமிழ் இலக்கியங்கள், தமிழ்ச்சங்கங்கள் குறித்து குறிப்பிடுகின்றன. மாலை வேப்பம்பூ, இலச்சிளை மீன். (பாண்டியன் நெடுஞ்செழியன் குறித்து மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கூறுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?
விடை:
சங்ககாலப் பொருளாதார மேம்பாட்டுக்கு தொழில்கள் மற்றும் கைவினைக் கலைகளின் பங்கு.

  • வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, வணிகம், பணப்பரிமாற்றம், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்ப தொழில்களும் அவை சார்ந்த பொருளாதாரமும் இருந்தன. வணிகம் கடல் கடந்து பல நாடுகளுடன் நடைபெற்றது.
  • உயிர் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மை முதலிடத்தில் இருந்தது. நன்செய், புன்செய் நிலங்களில் நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. மாடுகள், ஆடுகள் வளர்த்தல் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர்.
  • பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர். பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகளாக தொழிற்கூடங்கள் இருந்தன.
    • அன்றாட வாழ்வுக்குத் தேவையான பலவித மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன. (கரிய நிறம், செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள், கருப்பு-சிவப்பு நிறத்தவை)
    • இரும்பை உருக்கும் உலைகள் இருந்தன (உழக்கருவிகள், வாள், ஈட்டி, கத்தி தயாரிக்கப்பட்டன)
    • பலவித அணிகலன்கள், தங்க ஆபரணங்கள் செய்யப்பட்டன. (சுட்ட களிமண், செம்பு, தங்கம், வெள்ளி, நவமணிகள், செவ்வந்திக் கல், செம்மணிக்கல் ஆகியவற்றில் ஆபரணங்கள் செய்யப்பட்டன.
    • கண்ணாடி மணிகள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டன.
    • சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும், முத்துக் குளித்தலும் நடைபெற்றள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. சங்க காலத் தமிழகம் மற்றும் அன்றைய தமிழ் அரசுகளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளையும் தென்னிந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
2. அருங்காட்சியகத்துக்குச் சென்று, பழங்காலத் தமிழர்கள் குறித்த கல்வெட்டுச் செய்திகள், அவர்கள் பயன்படுத்திய நாணயங்கள், கருவிகளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க.
3. வரலாற்றின் தொடக்க காலத்தில் மக்கள் வாழ்ந்த அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், கீழடி போன்ற இடங்களுக்குச் சென்று பார்வையிடுக.
4. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஆய்வுக்களங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பொருட்கள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்து முறை குறித்து ஓர் ஆய்வை மேற்கொள்க.

9th Social Science Guide தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க. கல்வெட்டுகளைப் பற்றி படிப்பது

Question 1.
அ) கல்வெட்டு படிப்பு
ஆ)கல்வெட்டு ஆய்வு
இ) கல்வெட்டியல்
விடை:
இ) கல்வெட்டியல்

Question 2.
சுடுமண் களங்களில் காணப்படும் பெரும்பாலான பெயர்கள் எந்த மொழியில் உள்ளன
அ) பிராமி மற்றும் பிராகிருத மொழி
ஆ) பிராகிருத மற்றும் தமிழ்
இ) தமிழ் மற்றும் வடமொழி
ஈ) பிராமி மற்றும் தமிழ்
விடை:
ஆ) பிராகிருத மற்றும் தமிழ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 3.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் அகழாய்வு செய்த சங்ககால துறைமுகப்பட்டினம் எது?
அ) கீழடி
ஆ) அரிக்கமேடு
இ) காவிரிப்பூம்பட்டினம்
ஈ) கொடுமணல்
விடை:
ஆ) அரிக்கமேடு

Question 4.
இந்தியாவுடன் நடைப்பெற்ற மிளகு வணிகம் குறித்து குறிப்பிட்டவர் யார்?
அ) மூத்த பிளினி
ஆ) கௌடில்யர்
இ) தாலமி
ஈ) தொல்காப்பியர்
விடை:
அ) மூத்த பிளினி

Question 5.
பதிற்றுப்பத்து எந்த அரசர்களை குறித்தும், அந்த நாட்டின் எல்லைகள் குறித்தும் பேசுகின்றது
அ) சோழன்
ஆ) பாண்டியன்
இ) சேரன்
ஈ) பல்லவன்
விடை:
இ) சேரன்

Question 6.
சதுர வடிவிலான செப்பு நாணயம் யாரால் வெளியிடப்பட்டது?
அ) சேரர்
ஆ) சோழர்
இ) பாண்டியர்
விடை:
ஆ) சோழர்

Question 7.
சங்க இலக்கியங்களில் பெண்பாற் புலவராக கண்டெடுக்கப்பட்டவர்
அ) கண்ண கி
ஆ) மாதவி
இ) மணிமேகலை
ஈ) வெண்ணிக்குயத்தியார்
விடை:
ஈ) வெண்ணிக்குயத்தியார்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 8.
எந்த குல மகளிர் உப்பு விற்றது குறித்து சங்க செய்யுள் குறிப்பிடுகிறது
அ) சமணர்
ஆ) புத்த
இ) சைவ
ஈ) உமணர்
விடை:
ஈ) உமணர்

Question 9.
சங்க காலத்தில் தானியம் எந்த நிலத்தில் பயிரிடப்பட்டது?
அ) நன்செய்
ஆ) புன்செய்
இ) குறிஞ்சி நிலம்
ஈ) முல்லை நிலம்
விடை:
ஆ) புன்செய்

Question 10.
இரும்பு உருக்கு உலை அமைந்திருந்த இடம்
அ) கொடுமணல், கீழடி
ஆ) கீழடி, குட்டூர்
இ) அரிக்கமேடு, கொடுமணல்
ஈ) கொடுமணல், குட்டூர்
விடை:
ஈ) கொடுமணல், குட்டூர்

Question 11.
‘காயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்?
அ) வாஸ்கோடகாமா
ஆ) அல்பெருனி
இ) மார்கோபோலோ
ஈ) மெகஸ்தனிஸ்
விடை:
இ) மார்கோபோலோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ் மொழி முதன் முதலில் எந்த வரி வடிவத்தில் எழுதப்பட்டது?
விடை:
தமிழ் பிராமி

Question 2.
காலத்தால் பிந்தைய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை:
பதினெண்கீழ்க்கணக்கு நூல்

Question 3.
காப்பியம் என்பவை கவிதை நயமுடைய _____ வடிவிலான நீண்ட இலக்கியப் படைப்புகள்.
விடை:
செய்யுள்

Question 4.
கப்பல் உருவம் கொண்ட சுடுமண் கலம் கண்டெடுக்கப்பட்ட இடம் ______
விடை:
அழகன்குளம்

Question 5.
பிராகிருதம் வட இந்தியாவில் யார் காலத்தில் பேசப்பட்ட மொழி?
விடை:
மௌரியர்

Question 6.
பெரிப்ளஸ் என்பது _____
விடை:
கடல் வழிகாட்டி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 7.
கண்ணாடி மணி செய்யும் தொழிலகங்கள் இருந்த இடம் _______, _______
விடை:
அரிக்கமேடு, குடிக்காடு

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடிவத்திற்கு அசோகன் கல்வெட்டு என்று பெயர்.
ஆ) பாப்பிரஸ் என்பது பண்டைய எகிப்தில் பாப்பிரஸ் என்ற நாணயத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தாள் ஆகும்.
இ) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளவர்கள் சோழர்கள் ஆவர்.
ஈ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.
விடை:
(ஈ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் ஆகும்.

Question 2.
அ) திணை என்ற கருத்து விவரிக்கப்பட்டுள்ளது பதினெண்கீழ்கணக்கு நூல்
ஆ) சங்க காலத்திற்கான அடித்தளம் தாமிர காலத்தில் வேர் கொண்டது.
இ) கண்ணகிக்குக் கோயில் எழுப்பியவன் நெடுஞ்சேரலாதன்.
ஈ) காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
விடை:
(ஈ) காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

Question 3.
அ) எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ் என்பது பண்டைய ரோமானிய நூலாகும்.
ஆ) இந்நூலின் ஆசிரியர் பெரிப்ளஸ்
இ) பெரிப்ளஸ் என்றால் திசை வழிகாட்டி என்று பொருள்.
ஈ) செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும்.
விடை:
(ஈ) செங்கடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பே எரித்திரியன் கடல் ஆகும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 2

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
சங்ககால பெண்கள், படிப்பறிவு, முதல் நிலை உற்பத்தியில் ஈடுபட்டனர் – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
விடை:

  • வெண்ணி என்ற ஊரைச் சார்ந்த வெண்ணிக்குயத்தியார் பெண்பாற் புலவராகக் கண்டறியப்படுகிறார். இதன் மூலம் சங்ககால பெண்கள் கல்வியில் மேம்பட்டு இருந்ததை அறியலாம்.
  • மகளிர் திணைப்புனம் காத்தல் குறித்தும், உமணர் குல மகளிர் உப்பு விற்றது குறித்தும் சங்கச் செய்யுள்கள் குறிப்பிடுகின்றன. இதன் மூலம் பெண்கள் முதல்நிலை உற்பத்தியில் ஈடுபட்டதை அறியலாம்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
நூல் நூற்கும் கதிர் என்றால் என்ன?
விடை:
பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.

Question 3.
தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகர்கள் பற்றிய குறிப்பு யாது?
விடை:

  • தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் ஆளப்படுகின்றன.
  • பொன் வணிகர்கள், துணி வணிகர்கள், உப்பு வணிகர்கள் என்று குறிப்பிட்ட பண்டத்தை மட்டும் வியாபாரம் செய்த வணிகர்களும் இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Question 4.
சுடுமண் களங்களில் மக்களின் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன – இதற்கான காரணம் மற்றும் சான்றுகளுடன் விளக்குக.
Answer:
காரணம்:

  • ஒரு பொருள் தமக்கு உரிமையானது என்பதைக் குறிப்பதற்காகவே அதன்மீது மக்கள் தம் பெயர்களைப் பொறித்து வைத்தனர்.
  • கப்பல்களில் அல்லது வண்டிகளில் தம் பொருள்களை அடையாளம் காண்பதற்கும் தங்களது பெயர்களை எழுதினர்.

சான்று:
தமிழ்நாட்டில் அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி, மேலும், எகிப்து நாட்டின் பெரேனிகே, குசேர் அல் காதிம் ஆகிய இடங்களிலும், ஓமன் நாட்டின் கோர் ரோரி என்ற இடத்திலும் தமிழ் பிராமி எழுத்துக்களில் மக்களின் பெயர் பொறித்த சுடுமண் கலங்களின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

VI. தலைப்பு வினாக்கள்.

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
பியூட்டிங்கேரியன் அட்டவணை
(அ) பியூட்டிங்கேரியன் அட்டவணை என்பது எதனை குறிக்கும்.
விடை:
நிலப்படம்

(ஆ) இந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் யாவை?
விடை:
பண்டைய தமிழகம் முசிறி துறைமுகம்

(இ) இந்த அட்டவணையில் இலங்கை தீவு எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
விடை:
இலங்கைத் தீவு Taprobane என குறிக்கப்பட்டுள்ளது.

(ஈ) இதில் முசிறி துறைமுகம் எவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது?
விடை:
முசிறிஸ் என குறிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

Question 2.
நடுகற்கள்
(அ) மேய்ச்சல் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பொதுவான நடைமுறை என்ன?
விடை:
கால்நடைகளைக் கவர்ந்து தமதாக்கிக் கொள்ள ஒரு குழுவினர் மற்ற குழுவினருடன் சண்டையிட்டனர்.

(ஆ) பகைவர்களின் கால்நடைச் செல்வத்தைக் கவர்ந்தவர்கள் யாவர்?
விடை:
முல்லைநில மக்களின் தலைவர்கள்.

(இ) இறந்த வீரர்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர்ந்தனர்?
விடை:
இறந்தவர் தியாகத்தை நினைவுகூர்ந்து நடுகற்களை நிறுவினர்.

(ஈ) நடுகற்களை நிறுவுவதற்கான வழிமுறைகளை விளக்கும் தமிழ் நூல் எது?
விடை:
தொல்காப்பியம்.

Question 3.
தமிழ் அல்லாத சான்றுகள் (வெளிநாட்டவர் குறிப்புகள்)

(அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன?
விடை:
பண்டைத் தமிழ்ச் சமூகம் உலகெங்கும் கொண்டிருந்த விரிந்த தொடர்புகள்.

(ஆ) பாண்டிய நாட்டிலிருந்து முத்தும் சங்கும் வந்ததைக் கூறும் மௌரியர் காலச்
விடை:
செவ்வியல் நூல் யாது? சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் உள்ள “பாண்டிய காவாடகா என்ற குறிப்பு.

(இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?
விடை:
முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் காலவரிசையில் விவரிக்கும் குறிப்பு.

(ஈ) இந்தியாவுக்கும் ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் யார்?
விடை:
மூத்த பிளினி

Question 4.
இந்தியத் தொழில்துறைகள் மற்றும் சங்க காலக் கைவினைகள்
(அ) நகர மயமாக்கத்தின் முக்கியமான கூறுகளைக் கூறுக.
விடை:
கைவினைத் தயாரிப்புகள், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்கள்.

(ஆ)மட்கலம் செய்பவருக்கான இன்னொரு தமிழ் பெயர் என்ன?
விடை:
பானை செய்வோர்.

(இ) பானை செய்தலின் வெவ்வேறு வகைகள் யாவை?
விடை:
கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை, கருப்பு-சிவப்பு நிறத்தவை.

(ஈ) விவசாயத்திலும் போரிலும் இரும்பின் பயன்பாடுகள் என்ன?
விடை:
உழுகருவிகளும், வாள், ஈட்டி, கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.

VII. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சங்க கால சமுதாயத்தைப் பற்றி ஆராய்க.
விடை:
சமூகப் பிரிவுகள்:

  • சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் பாணர், பரதவர், எயினர், உழவர், கானவர், வேட்டுவர், மறவர் போன்ற சமூக பிரிவுகள் இருந்தன.
  • வட இந்தியாவில் காணப்பட்ட சாதி அமைப்பு தமிழகத்தில் வேரூன்றவில்லை. மாறாக செய்தொழில் அடிப்படையில் சமூகக் குழுக்களாகக் காணப்பட்டனர்.
  • அரசர்களும், குலத்தலைவர்களும், வணிகர்களும் செழிப்பான வாழ்வில் திளைத்தனர். அந்தணர்கள் என்று அறிப்பட்ட பூசாரிகளும் இருந்தனர்.
  • சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியில் வறுமை நிலவியது. இசைவாணர்களாகிய பாணர்கள், செல்வம் படைத்தோரைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்க்கை நடத்தினர்.

பெண்கள்:

  • சங்க இலக்கியங்களில் தாய், தலைவி, செவிலித்தாய், தோழி என்று பற்பல இடங்களில் மகளிர் குறித்த செய்திகள் பலவாறு கூறப்படுகின்றன
  • பாணர் குலப்பெண்கள், நாட்டிய மகளிர், பெண்பாற் புலவர்கள், அரச மகளிர் ஆகியோர் குறித்தும் ஐவகை (நிலப்பகுதி சார்ந்த பெண்கள்) குறித்தும் குறிப்பிடுகின்றன
  • பெண்கள் தங்கள் கணவரோடு உயிர்துறக்க முன் வந்ததை அக்கால இலக்கியங்களில் சில இடங்களில் காணலாம்.

மனவரைபடம்

தொடக்க காலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 3 தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும் 60