Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
அ) 1827
ஆ) 1829
இ) 1826
ஈ) 1927
விடை:
ஆ) 1829

Question 2.
தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்
விடை:
அ) ஆரிய சமாஜம்

Question 3.
யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை
விடை:
அ) பார்சி இயக்கம்

Question 5.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
ஆ) பாபா ராம்சிங்

Question 6.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
விடை:
அ) M.G. ரானடே

Question 7.
‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா
விடை:
அ) தயானந்த சரஸ்வதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
விடை:
இராமலிங்க சுவாமிகள்

Question 2.
புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………
விடை:
மகாதேவ் கோவிந்த் ரானடே

Question 3.
குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..
விடை:
ஜோதிபா பூலே

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.
விடை:
சுவாமி விவேகானந்தர்

Question 5.
………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
விடை:
சிங்சபா

Question 6.
‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.
விடை:
அயோத்தி தாசர்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) இராஜா ராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி
ஆ) i), ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி
விடை:
ஈ) i), iv) ஆகியன சரி

Question 2.
i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபாபூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

அ) i) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி
விடை:
இ) i), ii) ஆகியன சரி

Question 3.
i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
விடை:
ஆ) i) மற்றும் ii) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
விடை:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
விடை:

  • நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக் கூறுகளை முன் வைத்தார்.
  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  • அவர் ஒருவரே உண்மையின் எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின் சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை.
  • நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  • அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

Question 2.
சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
விடை:

  • சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம் விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவார்.
  • மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.
  • அன்பையும், இரக்கத்தையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்டினர். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

Question 4.
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
விடை:
சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள், விதவைப் பெண்கள் மறுமணம், பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 5.
ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
விடை:
ஜோதிபா பூலே :

  • 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
விடை:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியா சதி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பலதார மறுமணம் மற்றும் பல சமூக தீமைகளால் பிடிக்கப்பட்டிருந்தது.
  • பெண்களுக்கு கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை.
  • பெண்கள் ஆண்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நிலை பரிதாபகரமாக இருந்தது.
  • பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு தடை விதிக்கப்பட்டது.
  • ஆகவே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வியில்லை.
  • மூடநம்பிக்கை, மத நம்பிக்கை மற்றும் விலங்குகளை பலி கொடுப்பது போன்ற தீய நடைமுறைகள் இந்திய சமுதாயத்தில் இருந்தன.
  • குழந்தை திருமண முறை இருந்ததால் குழந்தை விதவைகளுக்கு வழிவகுத்தது.
  • இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
விடை:
இராமகிருஷ்ண பரமஹம்சர் :

  • இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவார்.
  • அவர் கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
  • அவருடைய கருத்தினப்டி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார்.
  • மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

சுவாமி விவேகாநந்தர்:

  • பின்னாளில் நரேந்திரநாத் தத்தா என்றழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர் (1863-1902).
  • இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார்.
  • மரபு சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
  • இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
  • 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.

Question 3.
பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
விடை:
ராஜாராம் மோகன்ராய்:

  • விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.
  • பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.
  • மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
  • பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை வலுவாக முன் வைத்தார்.

தயானந்த சரஸ்வதி:
குழந்தை திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற நடைமுறைகளை அவர் அறிவித்தார்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்:

  • இவர் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினார்.
  • இவர் விதவை மறுமணத்தை ஆதரித்தார் மற்றும் பலதார மணம் (ம) குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.

ஜோதிபாபூலே:

  • இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
  • விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபாபூலேவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
நவீன இந்தியாவின் முன்னோடி …………
அ) ஜோதிபாய் பூலே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) விவேகானந்தர்
ஈ) இராஜாராம் மோகன்ராய்
விடை:
ஈ) இராஜாராம் மோகன் ராய்

Question 2.
மகரிஷி …………….. கொள்கைக் கூறுகளை முன்வைத்தார்.
அ) 4
ஆ) 5
இ) 8
ஈ) 6
விடை:
அ) 4

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
தேவேந்திரநாத் ……………… சீர்திருத்தவாதியாவார்.
அ) மிதவாத
ஆ) தீவிரவாத
இ) கம்யூனிச
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) மிதவாத

Question 4.
அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் ………….
அ) யாசர் அரபாத்
ஆ) கமால் பாட்சா
இ) ஆசாத்
ஈ) சர் சையது அகமது கான்
விடை:
ஈ) சர் சையது அகமது கான்

Question 5.
ஜோதிபா பூலேவின் ……………. சாவித்திரி பாய் ஆவார்.
அ) மகள்
ஆ) தாய்
இ) சகோதரி
ஈ) மனைவி
விடை:
ஈ) மனைவி

Question 6.
வங்காளத்தை சேர்ந்த முதன்மையான சீர்திருத்தவாதி ……………
அ) அஹமது கான்
ஆ) M.G. ரானடே
இ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஈ) அய்யன்காளி
விடை:
இ ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Question 7.
……………… நூல்கள் முற்போக்கானவை.
அ) சீக்கியம்
ஆ) இந்து
இ) கிறித்துவ
ஈ) இஸ்லாமிய
விடை:
ஆ) இந்து

Question 8.
தியோபந்த் இயக்கம் ஒரு ……………… இயக்கம் ஆகும்.
அ) அரசியல்
ஆ) சமூக
இ) கலாச்சார
ஈ) மீட்பு
விடை:
ஈ) மீட்பு

Question 9.
ராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் ……………. ஆவார்.
அ) ஜோதிபா பூலே
ஆ) அய்யன்காளி
இ) விவேகானந்தர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ விவேகானந்தர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 10.
ஜோதிபா பூலே எழுதிய நூல் …………… ஆகும்.
அ) சுதேசி
ஆ) குலாம்கிரி
இ) இண்டிகா
ஈ) வெனிஸ் நகர வணிகர்
விடை:
ஆ) குலாம்கிரி

Question 11.
……………….. நாராயணகுருவால் கவரப்பட்டார்.
அ) பூலே
ஆ) அய்யன்காளி
இ) ராமலிங்க அடிகள்
ஈ) அயோத்தி தாசர்
விடை:
ஆ) அய்யன்காளி

Question 12.
இராமகிருஷ்ணரின் போதனைகளை பரப்பும் பெரும்பணியின் பின்புலமாய் …………………… இருந்தார்.
அ) பரமஹம்சர்
ஆ) விவேகானந்தர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) அய்யன்காளி
விடை:
ஆ) விவேகானந்தர்

Question 13.
மௌலானா முகமத் உல்-ஹசன் ……………… புதிய தலைவரானார்.
அ) தியோபந்தின்
ஆ) புதிய தியோபந்த்
இ) அலிகார்
ஈ) அஹமது கான்
விடை:
அ) தியோபந்தின்

Question 14.
விவேகானந்தரின் இயற்பெயர் …………………………
அ) நரேந்திரநாத் தத்தா
ஆ) இராமலிங்க அடிகள்
இ) அயோத்தி தாசர்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
விடை:
நரேந்திரநாத் தத்தா

Question 15.
மேற்கத்திய கருத்துக்களின் சிந்தனைகளின் தாக்கங்களுக்குள்ளானது ……………………… வர்க்க ம் ஆகும்.
அ) இஸ்லாம்
ஆ) இந்து
இ) நடுத்தர
ஈ) எதுவுமில்லை
விடை:
இ நடுத்தர

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இராஜா ராம் மோகன் ராய் …………….., ……………… பெற்றிருந்தார்.
விடை:
ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிர்ப்பு

Question 2.
இராஜராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை …………….. நிறுவினார்.
விடை:
20 ஆகஸ்ட் 1808

Question 3.
தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ……………… எனப்பட்டது.
விடை:
ஆதி பிரம்ம சமாஜம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் ……………… முக்கியப் பங்காற்றியது.
விடை:
பிரம்ம ஞான சபை

Question 5.
அன்னிபெசன்டின் நாளிதழ்கள் … ………………….. ஆகியன ஆகும்.
விடை:
நியூ இண்டியா, காமன் வீல்

Question 6.
ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ……………… பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
விடை:
1920

Question 7.
……………… அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்.
விடை:
சிங்சபா

Question 8.
அயோத்தி தாசர் ………………. எனும் அமைப்பை உருவாக்கினார்.
விடை:
திராவிடர் கழகம்

Question 9.
………………. எனும் ஊரில் பெரிய கோவிலைக் கட்டியவர் நாராயணகுரு.
விடை:
அருவிபுரம்

Question 10 .
……………… மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது.
விடை:
1856

Question 11.
தக்காணக் கல்விக் கழகத்தை நிறுவியவர் …………………..
விடை:
M.G. ரானடே

Question 12.
வேதங்களுக்கு திரும்புவோம் என்பது ………………. சமாஜத்தின் முழக்கமாகும்.
விடை:
ஆசிய

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 13.
ஆணும், பெண்ணும் சமம் என்று ………………. கூறியது.
விடை:
சீக்கிய சீர்திருத்த இயக்கம்

Question 14.
சுத்தி இயக்கத்தை நிறுவியவர் ………………. ஆவார்.
விடை:
தயானந்த சரஸ்வதி

Question 15.
உலக சமய மாநாடு ……………….. நடந்தது.
விடை:
1893

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) அய்யன்காளி 1863ல் பிறந்தார்.
ii) “ஜீவன்” என்பதே “சிவன்” என பரமஹம்சர் கூறினார்.
iii) பரமஹம்சரின் சீடர் ஜோதிபா பூலே.
iv) 1999ல் பிரம்மஞான சபை தொடங்கப்பட்டது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iv சரி
ஈ) iii சரி
விடை:
அ) i, ii சரி

Question 2.
கூற்று : சர்சையது அஹமது கான், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
காரணம் : இஸ்லாமியர்கள் மேலை நாட்டு அறிவியலை கற்க வேண்டும் என்பதற்காக.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 4

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்து புத்தெழுச்சி இயக்கத்திற்கு வித்திட்டவர்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • சுவாமி தயானந்த சரஸ்வதி
  • இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • சுவாமி விவேகானந்தர்
  • அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இராமகிருஷ்ண மிஷனின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது.
  • மருத்துவ உதவி
  • இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது.

Question 3.
பிரம்மஞான சபையின் முக்கியப் பங்கு யாது?
விடை:

  • பிரம்மஞான சபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
  • இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றுகிறது.

Question 4.
அலிகார் இயக்கம் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
  • ‘அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
  • இந்திய முஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
  • 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 5.
தியோபந்த் இயக்கம் பற்றி எழுதுக. தியோபந்த் இயக்கம்:
விடை:

  • தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.
  • இவ்வியக்கம் பழமைவாய்ந்த முஸ்லீம் உலகமக்களால், தொடங்கப்பெற்றது.
  • இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர்.
  • இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் பற்றி விவரிக்க.
விடை:
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்):

  • பஞ்சாப் சீக்கியச் சமூகத்திலும் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
  • சிலைவழிபாடு, சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
  • ஆரியசமாஜம் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது. சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
  • ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. > சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

Question 2.
இராமலிங்க சுவாமிகள் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட, இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் (1823 – 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார்.
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்” எனும் கருத்தினை முன்வைத்தார்.
  • அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.