Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Textbook Questions and Answers, Notes.
TN Board 10th Social Science Solutions History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
10th Social Science Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தெரிவு செய்க.
Question 1.
எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
அ) உட்ரோ வில்சன்
ஆ) ட்ரூமென்
இ) தியோடர் ரூஸ்வேல்ட்
ஈ) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
விடை:
ஆ) ட்ரூமென்
Question 2.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
அ) செப்டம்பர் 1959
ஆ) செப்டம்பர் 1949
இ) செப்டம்பர் 1954
ஈ) செப்டம்பர் 1944
விடை:
ஆ) செப்டம்பர் 1949
Question 3.
அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ………………… ஆகும்.
அ) சீட்டோ
ஆ) நேட்டோ
இ) சென்டோ
ஈ) வார்சா ஒப்பந்தம்
விடை:
ஆ) நேட்டோ
Question 4.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
அ) ஹபீஸ் அல் – ஆஸாத்
ஆ) யாசர் அராபத்
இ) நாசர்
ஈ) சதாம் உசேன்
விடை:
ஆ) யாசர் அராபத்
Question 5.
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
அ) 1975
ஆ) 1976
இ) 1973
ஈ) 1974
விடை:
ஆ) 1976
Question 6.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
அ) 1979
ஆ) 1989
இ) 1990
ஈ) 1991
விடை:
ஈ) 1991
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ………………. ஆவார்.
விடை:
டாக்டர் சன்-யாட்-சென்
Question 2.
1918இல் ………….. பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைவு நிறுவப்பட்டது.
விடை:
பீகிங்
Question 3.
டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் …………….. ஆவார்.
விடை:
சியாங்-கை-ஷேக்
Question 4.
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ……………… ஆகும்.
விடை:
சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்
Question 5.
துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ……………
விடை:
வெர்செய்ல்ஸ்
Question 6.
ஜெர்மனி நேட்டோவில் …………….ஆம் ஆண்டு இணைந்தது.
விடை:
1955
Question 7.
ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
ஸ்ட்ராஸ்பர்க்
Question 8.
ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ……………….. ஆகும்.
விடை:
மாஸ்டிரிக்ட்
III. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க.
Question 1.
i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1898) இளம் பேரரசர் துவக்கிய சீர்த்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறியப்படுகிறது.
ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.
iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.
அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) i) மற்றும் iv) சரி
விடை:
இ) i) மற்றும் iii) மட்டும் சரி
Question 2.
i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.
ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.
iii) சிட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.
iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.
அ) ii), iii) மற்றும் iv) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) மற்றும் iv) சரி
ஈ) i), ii) மற்றும் iii) சரி
விடை:
ஆ) i) மற்றும் ii) மட்டும் சரி
Question 3.
கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறு நிர்மானத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.
அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை
இ) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
இ கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
IV. பொருத்துக
விடை:
V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.
Question 1.
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
விடை:
1911ஆம் ஆண்டு சீனப்புரட்சி:
- மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேராசிரியர் தாவோகரின் மரணத்தோடு துவங்கியது.
- புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர்.
- உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது.
Question 2.
மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
- 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
- ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934-இல் கிளம்பினர்.
- அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது. இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களைக் கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
- அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன.
Question 3.
பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக.
விடை:
சென்டோ (CENTO) அல்லது பாக்தாத் ஒப்பந்தம்:
- துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் 1955இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.
- 1958இல் இணைந்ததோடு, இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு என்று அறியப்பட்டது.
- இவ்வொப்பந்தம் 1979இல் கலைக்கப்பட்டது.
Question 4.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
விடை:
மார்ஷல் திட்டம் :
- மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
- இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலர், ஜார்ஜ், சி. மார்ஷல் ஐரோப்பாவின் சுய முன்னேற்ற முயற்சிக்குத் தம் நாடு பண உதவி செய்யுமென்று அறிவித்தார்.
- நிதியுதவி வழங்கும் மார்ஷலின் திட்டமானது 1951-இல் முடிவுக்கு வந்தது.
Question 5.
மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரசியலில் முதலாம் உலக நாடுகள் என்றும் சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன.
- இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
Question 6.
கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?
விடை:
- சோவியத்நாடு கியூபாவில் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை இரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
- இறுதியாக சோவியத் நாட்டின் குடியரசுத் தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப்பெற உறுதியளித்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
VI. விரிவான விடை தருக.
Question 1.
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
விடை:
கோமிங்டாங்கும் ஷியாங்கே-ஷேக்கும்
- சன்யாட் சென் இறந்தபின் கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங்கே-ஷேக்கும்.
- பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ-யென்-லாயும் மாசே துங்கும் விளங்கினர்.
- பொதுவுடைமைவாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமைவாதிகளை முக்கிய பொறுப்புகளிலிருந்து விடுவித்தார்.
- வெற்றிகரமாக அவர் 1928ஆம் ஆண்டு பீகிங் நகரைக் கைப்பற்றினார்.
- மீண்டும் சீனாவில் ஒரு நடுவண் அரசு உருவானது.
விவசாயிகளை வழி நடத்திய மாவோ:
- கோமிங்டாங்கின் கட்டுப்பாடு நகரங்களின் மீது கடுமையாக இருந்ததை மாவோ (மா சே துங்) உணர்ந்தார்.
அதனால் அவர் விவசாயிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். - மாவோவின் தலைமையில் சில நூறு கம்யூனிஸ்டுகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்தனர்.
- கோமிங்டாங்கால் அக்காட்டு மலைப்பகுதிகளில் நுழைய முடியாத அதே வேளையில் மாவோவின் படை பெருகிக் கொண்டே சென்றது.
1934இல் நீண்ட பயணம்:
- 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக்கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
- 1934இல் 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் நீண்ட பயணத்தை மேற்கொண்டனர்.
- அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
- இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களை கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
- அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன. 1937ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.
Question 2.
ஐரேப்பியக்குழு எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.
விடை:
ஐரோப்பிய குழுமம்:
- ஐரோப்பியர்களுக்கிடையே மூண்ட போர்களைத் தவிர்க்கவும் அதிலும் குறிப்பாக பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த பகைமையை ஒடுக்கவும்
- ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கொண்ட சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும்.
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளுக்கும் சோவியத் நாட்டின் படைகளுக்கும் சமமாக ஒரு படை பலத்தை நிறுவவும்.
- கண்டங்களிடையே அல்லது கண்டங்களில் பொருளாதார மற்றும் இராணுவ வளங்களையும் திறன்களையும் முழுதாகப் பயன்படுத்தவும் முடியும் என்று கருதப்பட்டது.
ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்:
- ஐரோப்பியப் பாதுகாப்பு சமூகமும் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகமும் துவங்கப்பட்டன.
- ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
- ஐரோப்பியப் பொருளாதார, சமூகம் பிரெஸெல்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஏற்படுத்தியது.
ஐரோப்பியப் பொருளாதார சமூகம்:
- இச்சமூகம் பண்டங்கள், சேவைகள், முதலீடு, தொழிலாளர்கள் போன்றவற்றின் நகர்வை எல்லைகள் கொண்டு நிறுத்துவதை மாற்றியது.
- சந்தைப்போட்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது.
- ஐரோப்பிய பொதுச்சந்தை என்பது ஒரு வெற்றிகரமான முயற்சியாகும்.
ஒற்றை ஐரோப்பியச் சட்டம்:
- ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1 ஜுலை 1987இல் நடைமுறைக்கு வந்தது.
- ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்டவடிவம் கொடுத்தது.
- ஒரு சட்ட நிறைவேற்றத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என நிலை நிறுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம்:
- 1992 பிப்ரவரி 7இல் கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிகட் (நெதர்லாந்து) ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது.
- ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. பிரெஸெல்ஸ் (பெல்ஜியம்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
10th Social Science Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
………………. சீனாவில் ஒரு கம்யூனிச அரசை நிறுவியது.
அ) முதல் உலகப் போர்
ஆ) இரண்டாம் உலகப் போர்
இ) அ (மற்றும்) ஆ
ஈ) பனிப்போர்.
விடை:
ஆ) இரண்டாம் உலகப் போர்
Question 2.
மார்ஷல் திட்டத்தின் மூலம் அமெரிக்கா ………………………ன் நம்பிக்கையை வென்றது.
அ) ஜெர்மனி
ஆ) ஐரோப்பா
இ) ஜப்பான்
ஈ) இத்தாலி
விடை:
ஆ) ஐரோப்பா
Question 3.
……………… சுவர் உடைக்கப்பட்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது.
அ) சீனா
ஆ) பெர்லின்
இ) ஐரோப்பா
ஈ) எதுமில்லை
விடை:
ஆ) பெர்லின்
Question 4.
நீண்ட வரலாற்றைக் கொண்ட ……………… நாகரிகம் ஐரோப்பாவை விட மேம்பட்டதாகும்.
அ) ரஷ்யா
ஆ) சீன
இ) பிரெஞ்சு
ஈ) அ (மற்றும்) ஆ
விடை:
ஆ) சீன
Question 5.
மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசியார் தாவேகரின் மரணத்தோடு …………………..ல் துவங்கியது.
அ) 1917
ஆ) 1929
இ) 1908
ஈ) 1999
விடை:
இ 1908
Question 6.
இராணுவக் கிளர்ச்சி ……………………….. ல் ஏற்பட்டது.
அ) 1911 அக்டோபர்
ஆ) 1929 அக்டோபர் .
இ) 1909 அக்டோபர்
ஈ) 1999 அக்டோபர்
விடை:
1911 அக்டோபர்
Question 7.
சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராக …………….. தேர்வு செய்யப்பட்டார்.
அ) ஷியாங் கைஷேக்
ஆ) சோ என் லாய்
இ) Dr. சன்யாட் சென்
ஈ) மாசே துங்
விடை:
இ Dr. சன்யாட் சென்
Question 8.
யுவான் ஷி கேயின் கீழ் ………………. வருடம் சீனா ஒருமைப்பாட்டுடன் விளங்கியது.
அ) 2
ஆ) 3
இ) 6
ஈ) 4
விடை:
ஈ) 4
Question 9.
பீகிங் பல்கலைக் கழகத்தில் ……………… கற்கும் அமைப்பு உருவானது.
அ) பாசிசம்
ஆ) நாசிசம்
இ) மார்க்ஸியம்
ஈ) சீக்கியம்
விடை:
இ மார்க்ஸியம்
Question 10.
பொதுவுடைமை (மற்றும்) செல்வாக்கின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………… ஆவார்.
அ) ஷியாங் கை ஷேக்
ஆ) கோமிங்டாங்
இ) சன்யாட் சென்
ஈ) மா சே துங்
விடை:
ஆ) கோமிங்டாங்
Question 11.
1928ல் கோமிங்டாங் …………………….. யைக் கைப்பற்றினார்.
அ) நான்கிங்
ஆ) பீகிங்
இ) ஹாங்கிங்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பீகிங்
Question 12.
………………. முழு சீன பொதுவுடைமையும் மாவே வசம் வந்தது.
அ) 1933
ஆ) 1928
இ) 1954
ஈ) 1952
விடை:
அ) 1933
Question 13.
பீகிங்கை சுற்றியிருந்த பகுதி …………….. கட்டுப்பாட்டின் கீழிருந்தது.
அ) மார்ஷல்
ஆ) ஷியாங் கை ஷேக்
இ) யுவான் கே ஷேக்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஷியாங் கை ஷேக்
Question 14.
……………. வர்க்கத்தின் ஆதரவைப் பெற மாவோ முயற்சித்தார்.
அ) முதல்தர
ஆ) நடுத்தர
இ) கீழ்த்தர
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) நடுத்தர
Question 15.
தற்போதைய உலகில் …………….. வல்லரசுகள் உள்ள ன.
அ) 4
ஆ) 5
இ) 2
ஈ) 3
விடை:
இ 2
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
…………….. என்பது வடக்கு அட்லாண்டிக் சாசனம் ஆகும்.
விடை:
நேட்டோ
Question 2.
…………….. சீனப் புரட்சியில் ஒரு முக்கிய எழுச்சியாகும்.
விடை:
தைபிங் கலகம்
Question 3.
…………… என்பது இராணுவக் கூட்டுகளின் ஒப்பந்தமாகும்.
விடை:
NATO
Question 4.
நேட்டோ போல எந்தவொரு அமைப்பையும், ……………… கொண்டிருக்கவில்லை .
விடை:
சீட்டோ
Question 5.
……………. 1991ல் முடிவுக்கு வந்தது.
விடை:
வார்சா ஒப்பந்தம்
Question 6.
சீட்டோ ……………….ல் கலைக்கப்பட்டது.
விடை:
1979
Question 7.
1958ல் அமெரிக்கா சீட்டோவில் இணைந்ததோடு இவ்வொப்பந்தம் ……………… எனப் பெயர் மாற்றப்பட்டது.
விடை:
மத்திய உடன்படிக்கை அமைவு
Question 8.
யூதர்களின் பூர்வீகப்பகுதி …………….. ஆகும்.
விடை:
பாலஸ்தீனம்
Question 9.
உலக சீயோனிய இயக்கம் ……………… உருவானது.
விடை:
1897
Question 10.
பெர்லின் சுவர் ………………. தகர்க்க ப்பட்டது.
விடை:
1961
Question 11.
…………….. கிழக்கு, மேற்கு ஜெர்மனியை இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.
விடை:
ஹெல்மட்கோல்
Question 12.
பெரிட்ஸ்ரோய்கா என்பதன் பொருள் …………….. என்பதாகும்.
விடை:
மறுகட்டமைப்பு
Question 13.
மாஸ்கோ நகரின் மேயர் ……………. ஆவார்.
விடை:
எல்சின்
Question 14.
செர்னோபில் பேரழிவு. ……………… நடந்தது.
விடை:
உக்ரைனில்
Question 15.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ……………… உறுப்பு நாடுகள் உள்ளன.
விடை:
28
III. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க.
Question 1.
i) ஒற்றை ஐரோப்பிய சட்டம் 1992 பிப்ரவரி 7ல் கையெழுத்தானது.
ii) ஒற்றை ஐரோப்பியா வெளியுறவுக் கொள்கையின் ஒத்துழைப்பை நாடியது.
iii) ஐரோப்பிய ஒன்றியத்தில் 29 நாடுகள் உள்ளது.
iv) மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவானது.
அ) i, iii சரி
ஆ) ii, iv சரி
இ) ii, iii சரி
ஈ) iv சரி
விடை:
ஆ) ii, iv சரி
Question 2.
கூற்று : இஸ்ரேல் என்ற தேசம் 1948ல் உருவானது.
காரணம் : பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர் “யாசர் அராபத்” ஆவார்.
அ) கூற்று, காரணம் சரி
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
ஈ) கூற்று, காரணம் தவறு, காரணம் கூற்றுக்கு பொருத்தமானது.
விடை:
இ கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
IV. பொருத்துக.
விடை:
V. சுருக்கமான விடையளிக்கவும்.
Question 1.
பனிப்போர் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
- இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் இந்நாடுகளின் நட்பு நாடுகளுக்குமிடையே மூண்ட விரோதம், பரபரப்பையே பனிப்போர் என்கின்றனர்.
- அவை நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தவில்லை.
- மாறாக அவர்கள் அரசியல் பொருளாதார சிந்தனைத் தளங்களைத் தேர்வு செய்து கொண்டனர்.
Question 2.
அணிசேரா இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை?
விடை:
- அமைதியோடு இணைந்திருத்தல்.
- அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல்.
- எந்த அணியோடும் ராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல்.
- எந்த வல்லரசுக்கும் நாட்டிற்குள் ராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல்.
Question 3.
புலம்பெயர் சமூகம் பற்றி எழுதுக.
விடை:
- யூதர்களின் பூர்வீகப்பகுதியான பாலஸ்தீனத்தில் 1900இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர்.
- இவ்வினத்தின் பதினைந்து மில்லியன் மக்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் பரவிக்கிடந்தனர்.
- இதுவே ‘புலம்பெயர்’ சமூகம் என்று குறிக்கப்படுகிறது.
Question 4.
பாலஸ்தீனிய விடுதலை அமைப்புப் பற்றி எழுதுக.
விடை:
- இஸ்ரேல் என்ற தேசம் 1948இல் உருவாவதற்கு முன் பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும்.
- இரகசியமாக செயல்பட்டு வந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964-இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
- இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.
Question 5.
பெரிஸ்ட்ரோய்கா என்றால் என்ன?
விடை:
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் முன்னேற்றத்திற்கு சோவியத்தின் பொருளாதாரம் ஈடுகொடுக்கும்படி அதற்குப் புத்துணர்வு ஊட்ட வெளிப்படைத்தன்மை கொள்கையோடு அறிமுகப்படுத்தப்பட்டதே பெரிஸ்ட்ரோய்கா ஆகும்.
VI. விரிவான விடை தருக.
Question 1.
கியூபாவின் புரட்சி பற்றி விவரிக்க.
விடை:
அமெரிக்க ஐக்கிய நாடு மத்திய அமெரிக்காவிலும் (ஹோண்டுரஸ், எல் சல்வதோ, நிகரகுவா, பனாமா, க்வாத்தமாலா) கரீபியப் பகுதியிலும் (கியூபா, டோமினியக் குடியரசு, ஹைதி) கிழக்கு ஆசியாவிலும் (பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தெற்கு வியட்நாம், தாய்லாந்து) தனக்கு துணைக் கோள்களாகச் சுற்றிச் செயல்படும் நாடுகளைக் கொண்டிருந்தது.
இந்நாடுகள் இராணுவ அதிகாரிகளாலும் பெரும் நிலச்சுவான்தாரர்களாலும் சில சூழ்நிலைகளில் பெருமுதலாளிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தன.
காஸ்ட்ரோ பதவியேற்ற பின் கியூபாவிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களைச் சுத்திகரிக்க மறுத்தன.
அதற்குப் பதிலடியாக அமெரிக்க ஐக்கிய நாடு அதுவரை கியூபாவிலிருந்து மொத்தமாக சர்க்கரைக் கொள்முதல் செய்து வந்ததை நிறுத்திக் கொண்டது.
காஸ்ட்ரோநாட்டிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் சர்க்கரை ஆலைகளை தேசியமயமாக்கியதன் மூலம் மின்சார விநியோகத்திலும் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்துவதிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கிருந்த ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
Question 2.
சூயஸ் கால்வாய் சிக்கல் பற்றி விவரிக்க.
விடை:
எகிப்தில் 1952இல் நிகழ்ந்த ஓர் இராணுவக் கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத்தலைவராக ஆக்கப்பட்டார்.
- அவர் 1956ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
- இது பிரிட்டிஷாரின் நல்லெண்ணெத்திற்கு விரோதமாகத் தெரிந்தது.
- இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தன.
- இஸ்ரேலியப் படைகள் அக்டோபர் 29இல் எகிப்து மீது படையெடுத்தன.
- இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரிட்டன் தனது படைகளைக் கால்வாயைக் காப்பாற்றும் வகையில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது.
- இதற்கு எகிப்து மறுத்ததால் அக்டோபர் 31இல் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து அந்நாட்டின் விமானத்தளங்கள் மீதும் இன்னபிற முக்கியத்தளங்கள் மீதும் சூயஸ்கால்வாய்ப் பகுதியிலும் குண்டுவீசின.
- எனினும் உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் நவம்பர் 6ஆம் தேதி பிரான்சும் பிரிட்டனும் தங்கள் எதிர்ப்பை நிறுத்திக்கொண்டன.
- இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நேரு இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட சீரிய பங்காற்றினார்.