Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

9th Social Science Guide இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2. அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு உண்டு.
3. பொதுத் துறைகள் என்பவை அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்களாகும்.
4. ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் குறைந்த கூலியே கொடுக்கப்படுகிறது.
5. இந்தியாவில் மிக அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவது விவசாயம் ஆகும்.

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு _____ வயது வரையிலான வயதை கணக்கிடலாம்.
அ) 12-60
ஆ) 15-60
இ) 21-65
ஈ) 5-14
விடை:
ஆ) 15-60

Question 2.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்கு வரிசை சரியானது?
அ) முதன்மை துறை, இரண்டாம் துறை, சார்புத்துறை
ஆ)முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை
இ) சார்புத் துறை, இரண்டாம் துறை, முதன்மைத் துறை
ஈ) இரண்டாம் துறை, சார்புத் துறை, முதன்மைத் துறை
விடை:
ஆ) முதன்மைத் துறை, சார்புத்துறை, இரண்டாம் துறை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 3.
பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) சார்புத்துறை
ஈ) பொதுத்துறை
விடை:
அ) முதன்மைத்துறை

Question 4.
பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?
அ) வேளாண்மை
ஆ) உற்பத்தி
இ) சுரங்கத் தொழில்
ஈ) மீன்பிடித் தொழில்
விடை:
ஆ) உற்பத்தி

Question 5.
பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?
அ) கட்டுமானம்
ஆ) உற்பத்தி
இ) சிறு தொழில்
ஈ) காடுகள்
விடை:
ஈ) காடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 6.
மூன்றாம் துறையில் அடங்குவது.
அ) போக்குவரத்து
ஆ) காப்பீடு
இ) வங்கியல்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்

Question 7.
எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) சார்புத் துறை
ஈ) தனியார் துறை
விடை:
ஈ) தனியார் துறை

Question 8.
பட்டியல் – II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 65
விடை :
ஆ) 4 3 2 1

Question 9.
எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க “வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்?
அ) முகமது பின் துக்ளக்
ஆ) அலாவுதீன் கில்ஜி
இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்
ஈ) பால்பன்
விடை:
இ) ஃபெரோஷ் ஷா துக்ளக்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 10.
_____ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.
அ) வேளாண்மை
ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட
இ) ஒழுங்கமைக்கப்படாத
ஈ) தனியார்
விடை:
ஆ) ஒழுங்கமைக்கப்பட்ட

Question 11.
______ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.
அ) பொதுத் துறை
ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை
இ) ஒழுங்கமைக்கப்படாத துறை
ஈ) தனியார் துறை
விடை:
ஆ) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

Question 12.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) வங்கியியல
ஆ) ரயில்வே
இ) காப்பீடு
ஈ) சிறு தொழில்
விடை:
ஈ) சிறு தொழில்

Question 13.
பொதுத் துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
அ) பணியாளர்களின் எண்ணிக்கை
ஆ) இயற்கை வளங்கள்/பொருளாதார செயல்முறை
இ) நிறுவனங்களின் உரிமை
ஈ) வேலைவாய்ப்பின் நிலை
விடை:
அ) பணியாளர்களின் எண்ணிக்கை

Question 14.
கூற்று (A) – ஒழுங்குபடுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும்.
காரணம் (R) – இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் சரி
ஆ)கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று (A) சரி காரணம் (R) தவறு.
ஈ) கூற்று (A) தவறு காரணம் (R) சரி.
விடை:
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. (R), (A) வை விளக்கவில்லை.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 15.
தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும், அவர்கள் பணிக்கான வெகுமதிகளைச் செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள்
அ) ஊழியர்
ஆ) முதலாளி
இ) உழைப்பாளி
ஈ) பாதுகாவலர்
விடை:
ஆ) முதலாளி தமிழ்நாட்டில்

Question 16.
துறையில் ____ அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அ) வேளாண்மை
ஆ) உற்பத்தி
இ) வங்கியல்
ஈ) சிறுதொழில்
விடை:
அ) வேளாண்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
______ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல.
விடை:
ஒழுங்கமைக்கப்படாத

Question 2.
பொருளாதார நடவடிக்கைகள் _____ மற்றும் _____ துறைகளாக வகைப்படுத்துகின்றன.
விடை:
பொது, தனியார்

Question 3.
______ எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கையில் ஒரு முக்கிய உறுப்பாக இடம் பெற்றுள்ளது.
விடை:
வேலை வாய்ப்பு

Question 4.
வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் _____
விடை:
மக்களின் வாழ்க்கை முறை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 5.
இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை _____
விடை:
பல பரிமாணங்களைக் கொண்டது

Question 6.
_____ -ன் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை, உழைக்கும் மற்றும் உழைக்கும் திறன் பெற்றவர்களைக் குறிக்கும்.
விடை:
உழைப்போர் குழு

Question 7.
பொதுத்துறை என்பது _____
விடை:
அரசு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் ஆகும்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 66

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?
விடை:
தொழிலாளர் சக்தி என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறன் பெற்ற நபர்களும் ஆவர்.

Question 2.
குழந்தைகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களையும் ஏன் பணிக் குழுக்களாகக் கருதக்கூடாது?
விடை:

  • 15 வயதுக்குக் குறைந்தவர்கள் குழந்தைகளாகக் கருதப்படுகின்றனர்.
  • 60 வயதைக் கடந்தவர்கள் உற்பத்தி சார்ந்த வேலையை மேற்கொள்வதற்கு உடல் ரீதியாகத் தகுதியானவர்கள் அல்ல.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 3.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?
விடை:
(1) முதன்மைத்துறை – விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு
(2) இரண்டாம் துறை – உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம்
(3) சார்புத் துறை – போக்குவரத்து, காப்பீடு, வங்கி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
விவரி
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை,
இ) சார்புத் துறை
விடை:
அ) முதன்மைத்துறை:

  • விவசாயம், காடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை , மீன் வளர்ப்பு போன்றவை இதில் அடங்கும்.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் பெரும்பகுதி முதன்மைத் துறையில் ஈடுபட்டுள்ளது.
  • முதன்மைத்துறை விவசாயத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆ) இரண்டாம் துறை:

  • உற்பத்தி, சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை இதில் அடங்கும்.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழுவின் சிறுபகுதியினரே இரண்டாம் துறைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் இரண்டாம் துறை ஊழியர்கள் அதிக அளவில் இருப்பர்.

இ) சார்புத்துறை:

  • போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத் தொடர்பு, வீட்டுமனை விற்பனை அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் இதில் அடங்கும்.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவான அளவினரே சார்புத் துறையில் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்த நாடுகளில் அதிக அளவில் இருப்பர். இத்துறை சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது.

Question 2.
இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பைப் பற்றி விளக்குக.
விடை:

  • இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது. சிலருக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு ஓராண்டில் சில மாதங்களுக்கே வேலை கிடைக்கும்.
  • வேலையமைப்பை முதன்மைத்துறை அல்லது விவசாயத் துறை, இரண்டாம் துறை அல்லது தொழில் துறை, மூன்றாம் துறை அல்லது சார்புத்துறை அல்லது சேவைத்துறை என மூன்றாக வகைப்படுத்தலாம்.
    முதன்மைத்துறை : விவசாயம், காடுகள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை ,
    மீன் வளர்ப்பு போன்றவை
    இரண்டாம்துறை : உற்பத்தி, சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை
    சார்புத்துறை : போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத் தொடர்பு, வீட்டுமனை விற்பனை, அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்
  • 1972-73 ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி சராசரியாக 2% அளவுக்கு உயர்ந்துள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 3.
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலை வாய்ப்பை ஒப்பிடுக
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 69
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 70

Question 4.
பொதுத் துறையையும் தனியார் துறையையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 71

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உங்களை சுற்றி பெரியவர்கள் செய்யும் அனைத்து வகையான வேலைகளையும் நீண்ட பட்டியலிடுக. நீங்கள் அவைகளை எவ்வாறு வகைப்படுத்துவீர்கள்.
2. ஒரு ஆராய்ச்சி அறிஞர் சென்னையிலுள்ள உழைக்கும் மக்களைப் பார்த்து என்னவெல்லாம் கண்டறிந்தார்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 75

Question 3.
பின்வரும் தொழில்களை முதன்மை , இரண்டாம் மற்றும் சார்புத் துறைகளின் கீழ் பட்டியலிடுக.
விடை:
பால் விற்பனையாளர், தையல்காரர், ஆசிரியர், மருத்துவர், விவசாயி, தபால்காரர், பொறியாளர், குயவர், மீனவர், கைவினைஞர்கள், காவலர், வங்கியாளர், ஓட்டுநர், தச்சர்.
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 76

VII. சிந்தனை வினா.

Question 1.
தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. காரணம் கூறுக.
விடை:
தற்போது மூன்றாம் துறை உலகத்தில் முதலிடத்தில் உள்ளது. ஏனெனில்,

  • மூன்றாம் துறையான சார்புத்துறை சேவைத்துறை பொதுமக்களுக்கும், வணிகத்துறைக்கும் சேவைகளை வழங்குகிறது.
  • காப்பீடு, வங்கித்துறை, உடல்நலம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சில்லரை மற்றும் மொத்த வியாபாரம், கேளிக்கை ஆகியவை இத்துறையைச் சார்ந்தவை.
  • நம்நாட்டில் சேவைத்துறையில் கவர்ந்திழுக்கும் வகையில் வேலை வாய்ப்பு விரிவாக்கம் உள்ளது.
  • பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அதிக சதவிகித தொழிலாளர்கள் சார்புத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் 80 சதவிகித மக்கள் சார்புத்துறை தொழிலாளர்கள்.

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்கள் செய்ய வேண்டியது)

1. உங்களுடைய கிராம பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கவும்.

9th Social Science Guide இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
1972-73 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் சராசரியாக ____ பெருகி உள்ளது.
விடை:
2 %

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 2.
அரசு நிறுவனம் செய்யும் நிறுவனங்கள் ____ துறைகள் எனப்படுகின்றன.
விடை:
பொது

II. சுருக்கமான விடை தருக

Question 1.
மக்களின் அடிப்படைத் தேவைகள் யாவை?
விடை:

  • உணவு
  • உடை
  • இருப்பிடம்
  • வேலை வாய்ப்பு

Question 2.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின் போக்கு பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் தமிழகத்தில் விவசாயமே அதிகம் பேருக்கு வேலையளித்துக் கொண்டிருக்கிறது.
  • இதற்குக் காரணம் விவசாயமல்லாத துறைகள் மக்களுக்குப் போதுமான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.
  • தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பு வளர்ச்சியின் பெரும்பகுதி, குறைந்த வருமானங்களை அளிக்கின்ற முறை சாரா துறைகளின் பங்களிப்பாகவே உள்ளது.

Question 3.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து விவசாயத்தில் அதிகமாக ஈடுபடுவதன் காரணத்தைக் கூறுக?
விடை:
தமிழ்நாட்டில் விவசாயமல்லாத துறைகள், உழைப்பாளர்கள் குழு தொழில்களை மாற்றிக் கொள்வதற்குப் போதுமான அளவு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. எனவே தொடர்ந்து விவசாயத்தில் அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 80
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 2 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 81

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

10th Social Science Guide தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ………. முதல் ……………….. வரை உள்ளது.
அ) 8°4’வ முதல் 13°35’வ வரை
ஆ) 8°5’தெ முதல் 13°35’தெ வரை
இ) 8°0’வ முதல் 13°05’வ வரை
ஈ) 8°0’தெ முதல் 13°05’தெ வரை
விடை:
அ) 8°4’வ முதல் 13°35’வ வரை

Question 2.
தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் …………………….. முதல் ………………… வரை உள்ளது.
அ) 76°18’கி முதல் 80°20’கி வரை
ஆ) 76°18’மே முதல் 80°20’மே வரை
இ) 10°20’கி முதல் 86°18’கி வரை
ஈ) 10°20’மே முதல் 86°18’மே வரை
விடை:
அ) 76°18’கி முதல் 80°20’கி வரை

Question 3.
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் …………….. ஆகும்.
அ) ஆனைமுடி
ஆ) தொட்டபெட்டா
இ) மகேந்திரகிரி
ஈ) சேர்வராயன்
விடை:
ஆ) தொட்டபெட்டா

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 4.
கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
அ) பாலக்காடு
ஆ) செங்கோட்டை
இ) போர்காட்
ஈ) அச்சன்கோவில்
விடை:
இ) போர்காட்

Question 5.
கீழ்க்க ண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?
அ) பெரியார்
ஆ) காவிரி
இ) சித்தார்
ஈ) பவானி
விடை:
அ) பெரியார்

Question 6.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
அ) இராமநாதபுரம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கடலூர்
ஈ) தேனி
விடை:
இ கடலூர்

Question 7.
பின்னடையும் பருவக்காற்று ……………… லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
அ) அரபிக்கடல்
ஆ) வங்கக் கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) தைமுர்க்கடல்
விடை:
ஆ வங்கக் கடல்

Question 8.
கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..
அ) தேனி
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) இராமநாதபுரம்
விடை:
அ) தேனி

Question 9.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ………………
அ) தர்மபுரி
ஆ) வேலூர்
இ) திண்டுக்கல்
ஈ) ஈரோடு
விடை:
அ) தர்மபுரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி ……………. ஆகும்.
விடை:
கோயம்புத்தூர் பீடபூமி

Question 2.
கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் …………….. ஆகும்.
விடை:
சோலைக்கரடு

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 3.
ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ……………. மற்றும் ……………. ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
விடை:
கொள்ளிடம், காவிரி

Question 4.
………………. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
விடை:
நீலகிரி வரையாடு

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 2

IV. கூற்று வகை வினா.

Question 1.
கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை
காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே கேரளாவும், வடக்கே ஆந்திர பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன.
  • மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும், இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 2.
‘தேரீ” – என்றால் என்ன?
விடை:
இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ‘தேரி’ என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது?
விடை:
ஆறுகளின் படிவு, கடல் அலைகளின் அரிப்பு மற்றும் படிதல் ஆகியவற்றால் கடற்கரை சமவெளி உருவாகிறது.

Question 4.
தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.
விடை:
பாம்பன், முயல்தீவு, குருசடை, நல்லதண்ணி தீவு, பள்ளி வாசல், ஸ்ரீரங்கம், உப்புதண்ணித் தீவு, தீவுத்திடல், காட்டுப்பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.

Question 5.
தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமந்தி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

Question 6.
பேரிடர் அபாய நேர்வு – வரையறு.
விடை:

  • உயிர்களுக்கும், உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின், கூற்றுப்படி அபாய குறைப்பு என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.

Question 7.
புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?
விடை:

  • மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் (பேட்டரிகள்) ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.
  • இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து, படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

VI. வேறுபடுத்துக.

Question 1.
தாமிரபரணி மற்றும் காவிரி
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 3
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 4

VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
விடை:
வங்காள விரிகுடாவிலிருந்து பிரியும் ஆறுகளால் பல இடங்களில் பிரிக்கப்படுகிறது. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் இதைப் பிரிப்பதால் இவை தொடர்ச்சியற்றவை.

Question 2.
தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது.
விடை:
அரபிக் கடலிலிருந்து வீசும் காற்றின் மழைமறைவுப் பகுதியில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் குறைந்த மழையைப் பெறுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 3.
கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.
விடை:
வெள்ளம், சூறாவளி போன்ற பல பாதிப்புகளுக்கு கடலூர் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே கடலூர் பல்வழி பேரழிவு மண்டலம் எனப்படுகிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.
விடை:

  • தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.
  • ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இதன் உயரம் கிழக்கிலிருந்து மேற்காக உயர்ந்து செல்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் உயரம் வரை வேறுபட்டு காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாரமஹால் பீடபூமியானது மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும்.
  • இதன் உயரம் சுமார் 350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை காணப்படுகிறது. இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.
  • கோயம்புத்தூர் பீடபூமி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது.
  • இப்பீடபூமி சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
  • மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூரிலிருந்து இருந்து பிரிக்கிறது.
  • மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீட பூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன.
  • நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • மதுரை பீடபூமி, மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது.
  • வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

Question 2.
காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
விடை:
காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.

தமிழ்நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.

ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

பவானி ஆறு இதன் துணையாறாக வலதுகரையில் காவிரியுடன் இணைகிறது.

பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது,

கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன.

இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது அகன்ற காவிரி என அழைக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.

இவ்விரு கிளைகள் இணைந்து “ஸ்ரீரங்கம் தீவை” உருவாக்குகின்றன. கிராண்ட் அணைகட் என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ‘தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது.

Question 3.
தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்.
விடை:
குளிர்காலம்:

  • ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
  • இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன.)
  • ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
  • தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது. இருந்தபோதிலும் மழைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°க்கும் குறைவாக உள்ளது.
  • நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது.

கோடைக்காலம்:
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக்கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.

பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம், கடக ரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது.

பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°C வரை வேறுபடுகிறது. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவ மழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் பற்றி விளக்குக.
விடை:
தமிழ்நாட்டின் மண் வகைகள்:

  • தமிழ்நாட்டில் காணப்படும் மண்களை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை
    1. வண்டல் மண்,
    2. கரிசல் மண்,
    3. செம்மண்,
    4. சரளை மற்றும்
    5. உவர் மண்.

வண்டல் மண்:
வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன. தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.

சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்போரிக் அமிலம் ஆகிய தாதுக்களைக் கொண்டுள்ளதால் வண்டல் மண் ஒரு வளம் மிகுந்த மண்ணாகும்.

இம்மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் குறைவாக உள்ளன. இது நுண்துளைகள் மற்றும் களிமண் கலந்த மண் ஆகும். நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் இம்மண்ணில் பயிரிடப்படுகின்றன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது.

கரிசல் மண்:

  • தீப்பாறகைள் சிதைவடைவதன் மூலம் கரிசல் மண் உருவாகிறது.
  • இது ரெகூர் மண் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகறிது.
  • கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.

செம்மண்:

  • தமிழ்நாட்டில் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது.
  • இவை குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
  • செம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

சரளை மண் :

  • சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது.
  • இவை வளமற்ற மண்ணாகும்.
  • காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகிறது.

உவர் மண்:

  • தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது.
  • சுனாமியினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன.
  • இதனால் கடற்கரையில் சில பகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை .

Question 5.
புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக.
விடை:
வதந்திகளை நம்பாமல் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருத்தல், அலைபேசிகள் மின்னூட்டம் செய்யப்பட்டதை உறுதி செய்து குறுஞ்செய்திகளை பெறுதல்.

வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டு தெரிந்து கொள்ளல்.

முக்கிய மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா கொள்கலன்களில் பாதுகாப்பாக வைத்திருத்தல், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரகால மூட்டைத்தொகுப்பை தயார் நிலையில் வைத்திருத்தல், குடியிருப்பு பாதுகாப்பாக இருப்பதையும் சரி செய்வதையும் உறுதி செய்தல், கூர்மையானப் பொருட்கள் வெளிப்பகுதிகளில் இல்லாமல், கால்நடைகள் செல்ல மற்றும் கால்நடை பாதுகாப்பிற்காக அவற்றை அவிழ்த்து விடுதல் வேண்டும்.

மீனவர்கள் கூடுதலான மின்சாதானங்களுடன் கூடிய பேட்டரிகள் ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.

இக்காலங்களில் கடலுக்குப் செல்வதை தவிர்த்து படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

10th Social Science Guide தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் …………….. மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
அ) 13
ஆ) 23
இ) 31
ஈ) 27
விடை:
அ) 13

Question 2.
மேற்குதொடர்ச்சி மலை …………….. சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது.
அ) 1500
ஆ) 2500
இ) 5200
ஈ) 250
விடை:
ஆ) 2500

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 3.
……………… உயரமான சிகரம் அதனைத் தொடர்ந்து மற்றொரு சிகரம் முக்குருத்தி.
அ) தொட்டபெட்டா
ஆ) பகாசுரா
இ) வேம்படி சோலை
ஈ) கோட்டை மலை
விடை:
அ) தொட்டபெட்டா

Question 4.
……………… மலை ஏலமலைக் குன்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
அ) பொதிகை
ஆ) ஏலக்காய்
இ) பழனி
ஈ) நீலகிரி
விடை:
ஆ) ஏலக்காய்

Question 5.
……………. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
அ) கொடைக்கானல்
ஆ) ஏற்காடு
இ) மேல்பட்டு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ஏற்காடு

Question 6.
……………… குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளைபொருளாக உள்ளது.
அ) மாம்பழம்
ஆ) ஆப்பிள்
இ) பலாப்பழம்
ஈ) அன்னாச்சி
விடை:
இ பலாப்பழம்

Question 7.
……………. சமவெளி தமிழ்நாட்டிலுள்ள வளமான சமவெளிகளுள் ஒன்றாகும்.
அ) காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
விடை:
அ) காவிரி

Question 8.
பாலாறு ……………..வின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகா
இ) கேரளா
ஈ) ஆந்திரா
விடை:
ஆ) கர்நாடகா

Question 9.
………………. இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது.
அ) பெண்ணையாறு
ஆ) வைகை
இ) தாமிரபரணி
ஈ) போலார்
விடை:
அ) பெண்ணையாறு

Question 10.
மத்திய மற்றும் வடமேற்கு தமிழகம் ……………… செ.மீ வரை மழையைப் பெறுகின்றன.
அ) 20-60
ஆ) 50-100
இ) 60-90
ஈ) 100-150
விடை:
ஆ) 50-100

Question 11.
தேசிய வளக்கொள்கை செயல்படுத்தப்பட்ட ஆண்டு …………………
அ) 1999
ஆ) 1888
இ) 1989
ஈ) 1988
விடை:
ஈ) 1988

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 12.
வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் உள்ள மரங்கள் …………… மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.
அ) 25
ஆ) 30
இ) 63
ஈ) 90
விடை:
ஆ) 30

II. கோடிட்ட இட ங்களை நிரபுக.

Question 1.
……………… மற்றும் …………….. தமிழ்நாட்டையும் இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.
விடை:
மன்னார் வளைகுடா, பாக் நீர்ச்சந்தி

Question 2.
மேற்கு தொடர்ச்சி மலையின் உயரம் …….. வரை ஆகும்.
விடை:
2000 மீட்டர் – 3000 மீட்டர்

Question 3.
ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் …………….. மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன.
விடை:
ஆனைமலை

Question 4.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி ……….. மற்றும் ………. குன்றுகள் ஆகும்.
விடை:
வருசநாடு, ஆண்டிப்பட்டி

Question 5.
கல்வராயன் மலை தொடரின் உயரம் …………….. வரை காணப்படுகிறது.
விடை:
600 மீ முதல் 1220 மீ

Question 6.
கல்வராயன் என்ற சொல் ……………… என்ற சொல்லிருந்து பெறப்பட்டது.
விடை:
கரலர்

Question 7.
…………….. கொல்லிமலையில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலமாகும்.
விடை:
அரப்பளிஸ்வரர் கோவில்

Question 8.
காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள வலைப்பின்னல் அமைப்பு …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
தென்னிந்தியாவின் தோட்டம்

Question 9.
சூரியனின் செங்குத்துக் கதிர்கள் …………….. மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
விடை:
பூமத்திய ரேகைக்கும்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 10.
வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் இந்தியாவின் …………….. அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது.
விடை:
மூன்றாவது

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 5
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 6

IV. கூற்று வகை வினா.

Question 1.
கூற்று : குளிர்க்காலத்தில் சூரியனின் சாய்வுக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் இடையே விழுகிறது.
காரணம் : குளிர்கால வெப்பநிலையானது 30°C/ – 40°C வரை மாறுபடுகிறது.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 2.
கூற்று : தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டலத்திலுள்ள மாநிலம்.
காரணம் : கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படுகிறது.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் கடைக்கோடிப் பகுதிகள் யாவை?
விடை:

  • கிழக்கில் கோடியக்கரையும்
  • மேற்கில் ஆனைமலையும்
  • வடக்கில் பழவேற்காடு ஏரியும்
  • தெற்கில் குமரிமுனையும் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 2.
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பின் சிறப்பு அம்சங்கள் யாவை?
விடை:
தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது.

இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும். தமிழ்நாடானது நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சிமலை, கடற்கரைச் சமவெளிகள் மற்றும் நாட்டுச் சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Question 3.
தமிழ்நாட்டில் கடற்கரையின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • வங்காள விரிகுடாக் கடலையொட்டிய சோழமண்டலக் கடற்கரை பல அழகான மற்றும் சிறப்புவாய்ந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் தங்க மணல் கடற்கரை பகுதியில் பனை மரங்களும், சவுக்குத் தோப்புகளும் பரவலாகக் காணப்படுகின்றன.
  • சென்னையின் மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளும் கோவளம் (காஞ்சிபுரம்) மற்றும் வெள்ளி கடற்கரை (கடலூர்) ஆகியவை புகழ்பெற்ற தமிழக கடற்கரையாகும்.

Question 4.
தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோளப் பெட்டகங்கள் யாவை?
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 7

Question 5.
இயற்கைப் பேரிடர் என்றால் என்ன?
விடை:
உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிதான் பேரிடர் எனப்படுகிறது.

Question 6.
நிலச்சரிவு வரையறு.
விடை:

  • மலைகள் அல்லது குன்றுகள் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழ்தல் நிலச்சரிவு எனப்படுகிறது.
  • கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் நிலச்சரிவுக்கு உள்ளாகும் மற்ற பகுதிகளாகும்.

Question 7.
நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகள் யாவை?
விடை:
நீர் மாசுபடுதலைத் தடுத்தல், நீர் மறுசுழற்சி, சிக்கனமான நிலத்தடி நீர் பயன்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, மரபுவழி நீர்வளங்களைப் புதுப்பித்தல், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், பயிரிடும் முறைகளை மாற்றுதல், வெள்ளப்பெருக்கு மேலாண்மை, புவி வெப்ப நீர் பயன்பாடு ஆகியன நீர்வளத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள் ஆகும்.

VI. வேறுபடுத்துக.

Question 1.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 8

Question 2.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 9

VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நிலத் தாவரங்கள் முக்கிய பங்கு வக்கிறது.
விடை:
சதுப்பு நிலத் தாவரங்கள் புயலின் பாதிப்பிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், பவளப்பாறைகள், புல்வெளிகளை வேரின் மூலம் பாதுகாக்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 2.
வெப்பமண்டல முட்புதர்க்காடுகள் குறைந்த மழையைத் தருகின்றன.
விடை:
வெப்பமண்டல முட்புதர்க்காடுகள் 400 மீட்டர் உயரத்திற்கு மேலுள்ளதால் குறைந்த மழையைத் தருகின்றன.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
தமிழகத்தில் உள்ள காடுகள் ஏதேனும் மூன்றினைப் பற்றி விவரி?
விடை:
காடுகளின் வகைகள் :

  • வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
  • மிதவெப்பமண்டல மலைக்காடுகள்
  • வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள்

வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்

  • இவ்வகைக்காடுகள் அதிக மழைபெறும் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இவை அடர்ந்த மற்றும் மரக்கிளை அடுக்குகள் கொண்டதாக காணப்படுகின்றன.
  • திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளில் இவை காணப்படுகிறது.
  • இலவங்க மரம், மலபார், கருங்காலி மரம், பனாசமரம், ஜாவாபிளம், ஜமுன், பலா மருது, அயனி, கிராப் மிர்ட்டல் போன்றவை இக்காடுகளில் காணப்படும் முக்கிய மர வகைகளாகும்.
  • அரை பசுமைமாறாக் வகைக் காடுகளானது உப அயனமண்டலக் காலநிலை நிலவும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
  • சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை ஆகியன இவ்வகை காடுகள் காணப்படும் முக்கிய பகுதிகள் ஆகும்.
  • இந்திய மகோகனி, குரங்கு, தேக்கு, உல்லி காசியா, பலா மற்றும் மா மரங்கள் ஆகியன இப்பகுதியில் காணப்படும் முக்கிய மரங்களாகும்.

மித வெப்பமண்டல மாறாக் காடுகள்:

  • இவ்வகை காடுகள் ஆனைமலை, நீலகிரி மற்றும் பழனி மலைகளில் சுமார் 1,000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகின்றன.
  • இவ்வகை காடுகள் சோலாஸ் அழைக்கப்படுகிறது. இவ்வகை காடுகளில் மரங்கள் பொதுவாக குறைந்த உயரத்துடன் பசுமையாகக் காணப்படுகின்றன.
  • பொதுவாக நீலகிரி, சாம்பா, வெள்ளைலிட்சா, ரோஸ் ஆப்பிள் போன்ற மரங்கள் இக்காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள்:

  • இவ்வகைக்காடுகள் பசுமைமாறாக் காடுகள் மற்றும் அரை பசுமைமாறாக் காடுகளின் விளிம்புப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் கோடை பருவங்களில் தங்களது இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன.
  • பருத்திப் பட்டு மரம், இலவம், கடம்பா, டாகத், தேக்கு, வாகை, வெக்காளி மரம் மற்றும் சிரஸ் போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மர வகைகளாகும். மூங்கில்களும், இக்காடுகளில் காணப்படுகிறது.
  • இக்காடுகளில் காணப்படும் சில மரவகைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

10th Social Science Guide இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு …………………
அ) வரைபடவியல்
ஆ) மக்களியல்
இ) மானுடவியல்
ஈ) கல்வெட்டியல்
விடை:
ஆ) மக்களியல்

Question 2.
……………. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) இரயில்வே
ஆ) சாலை
இ) வான்வழி
ஈ) நீர்வழி
விடை:
ஆ) சாலை

Question 3.
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் …………………….
அ) 5846 கி.மீ
ஆ) 5847 கி.மீ
இ) 5849 கி.மீ
ஈ) 5800 கி.மீ
விடை:
அ) 5846 கி.மீ

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 4.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் …………………
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) புது டெல்லி
ஈ) ஹைதராபாத்
விடை:
ஈ) ஹைதராபாத்

Question 5.
எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து …………………
அ) சாலைப்போக்குவரத்து
ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து
ஈ) நீர்வழிப் போக்குவரத்து
விடை:
இ வான்வழிப் போக்குவரத்து

Question 6.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
அ) ஏர் இந்தியா
ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்
இ) வாயுதூத்
ஈ) பவன்ஹான்ஸ்
விடை:
ஈ) பவன்ஹான்ஸ்

Question 7.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ………………………
அ) சிமெண்ட்
ஆ) ஆபரணங்கள்
இ) தேயிலை
ஈ) பெட்ரோலியம்
விடை:
ஈ) பெட்ரோலியம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 2

III. குறுகிய விடையளி.

Question 1.
இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதாகும்.
  • இது உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள்) மற்றும் சர்வதேச இடப்பெயர்வு (நாடுகளுக்கு இடையே) என இருவகைப்படும்.

Question 2.
இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:

  • இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது.
  • இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
  • வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது.
  • மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கும் தயாரிக்கப்பட்ட தொழிலக பொருள்களைச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லும் இரயில்வேயின் பணி மதிப்பிட முடியாத ஒன்று ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
விடை:

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது
  • இவை நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.

Question 4.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்களைக் குறிப்பிடுக.
விடை:
1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 1:
இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ. நீளத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது. கங்கை -பாகிரதி ஹீக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

2. தேசிய நிர்வழிப்போக்குவரத்து எண். 2:
இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது.

Question 5.
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 3:
விடை:
இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது.

Question 6.
தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை:

  • தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம்.
  • கவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
    1. தனிமனித தகவல் தொடர்பு.
    2. பொதுத்தகவல் தொடர்பு.

Question 7.
பன்னாட்டு வணிகம் – வரையறு.
விடை:

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியன பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும்.

Question 8.
சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக.
விடை:

  • சாலை வழி உலகளாவிய போக்குவரத்து முறையாகும்.
  • சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது குறுகிய, மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு பொருத்தமானதாக உள்ளது.
  • சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும்பொழுது மலிவானதாகும்.
  • சாலைப் போக்குவரத்து அமைப்பு மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிற்கிடையில் எளிதில் தொடர்பை ஏற்படுத்த முடியும்.
  • இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்.

IV. வேறுபடுத்துக.

Question 1.
மக்களடர்த்தி மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 3

Question 2.
தனி நபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 5

Question 4.
சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழிபோக்குவரத்து.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 6

Question 5.
நீர்வழிப்போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 7

Question 6.
உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 8

V. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை.
விடை:
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.

இந்திய நகரமயமாக்கம்:
நகர்புற மக்கள் தொகை சதவிகிதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது.

நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
  • நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
  • குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
  • போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
  • குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
  • வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
  • திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்குகிறது.
  • குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

Question 2.
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக.
விடை:
செயற்கைக் கோளானது தொடர்ச்சியாக மிகப் பெரும் பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது.

செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு, இயற்கை பேரழிவு கண்காணிப்பு, எல்லைப்பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1929 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத் தொடர்பு பரிமாற்றத்தில் செய்ற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் செய்றைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

  1. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)
  2. இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு (IRS)

1983-ல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலைத்தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.

இன்சாட் வரிசை செய்றைக்கோள், கைபேசி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக் காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப பயன்படுகிறது. மேலும் இது வானிலையை கண்டறியவும், ராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1. ஹேம்சாட், எஜீசாட் (Edusat) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோளாகும்.

ஆகஸ்ட் 30, 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
விடை:

  • சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்.

தேசிய நெடுங்சாலைகள்:

  • தேசிய நெஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கியமான அமைப்பாகும்.
  • நாட்டின் எல்லைகளையும், மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள், தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
  • இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH44 ஆகும்.
  • குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47A ஆகும்.

மாநில நெடுஞ்சாலைகள்:
மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களை, மாநில தலைநகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும் அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.

இந்தச் சாலைகள் மாநில பொதுப்பணித் துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

மாவட்டச் சாலைகள்:

  • மாவட்டச் சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
  • மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 2016-இன்படி இந்தியாவில் மாவட்டச் சாலைகளின் நீளம் 5,61,940 கி.மீ. (16.81%) ஆகும்.

ஊரகப் பகுதி சாலைகள் (கிராமச் சாலைகள்)
இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. இவைகள் கிராம பஞ்சயாத்துகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.

எல்லைப்புறச் சாலைகள்:

  • எல்லைப் புறச் சாலைகள் நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலை வகைகளாகும்.
  • இவைகள் எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இவ்வமைப்பு 1960-இல் நிறுவப்பட்டது. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

தங்க நாற்கரச் சாலைகள்:
இது 5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

விரைவுச் சாலைகள்:

  • விரைவுச் சாலைகள் என்பன நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைப் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.
  • முக்கியமான சில விரைவுச் சாலைகள்
    1. மும்பை – பூனா விரைவுச் சாலை
    2. கொல்கத்தா – டம்டம் விமான நிலைய விரைவுச் சாலை
    3. துர்காப்பூர் – கொல்கத்தா விரைவுச்சாலை
    4. புதுடெல்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை

பன்னாட்டு நெடுஞ்சாலைகள்:

  • இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாலைகள் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
  • இச்சாலைகள் பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.

10th Social Science Guide இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ……………..ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
அ) 1972
ஆ) 1982
இ) 1872
ஈ) 1782
விடை:
இ) 1872

Question 2.
ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்வது …………..
அ) இடப்பெயர்வு
ஆ) நகரமயமாக்கல்
இ) உலகமயமாக்கல்
ஈ) மக்கள் தொகை
விடை:
அ) இடப்பெயர்வு

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
……………… மக்கள் தொகையில் 1000 ஆண்க ளுக்குள்ள பெண்களைக் குறிக்கும்.
அ) எழுத்தறிவு
ஆ) கட்டமைப்பு
இ) வயதுக்கலவை
ஈ) பாலின விகிதம்
விடை:
ஈ) பாலின விகிதம்

Question 4.
கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக மாற்றமடைவதை ………………. என்கிறோம்.
அ) போக்குவரத்து
ஆ) உலகமயமாக்கல்
இ) நகரமயமாக்கல்
ஈ) தொழில்மயமாக்கல்
விடை:
இ நகரமயமாக்கல்

Question 5.
நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ………………. இடத்திலுள்ளது.
அ) மூன்றாவது
ஆ) இரண்டாவது
இ) நான்காவது
ஈ) ஏழாவது
விடை:
ஆ) இரண்டாவது

Question 6.
போக்குவரத்து …………… வகைப்படும்.
அ) 7
ஆ) 8
இ) 4
ஈ) 3
விடை:
ஈ 3

Question 7.
இந்தியாவின் குறைந்த நீளமுடைய நெடுஞ்சாலை ………………………. ஆகும்.
அ) NH44
ஆ) NH47A
இ) NH34 B
ஈ) NH4
விடை:
இ NH47A

Question 8.
இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை ………………. ஆகும்.
அ) NH34
ஆ) NH74
இ) NH44
ஈ) NH47A
விடை:
இ) NH44

Question 9.
கிராமங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுவது …………..
அ) மாவட்ட சாலை
ஆ) கிராம சாலை
இ) நெடுஞ்சாலை
ஈ) எல்லைப்புற சாலை
விடை:
ஆ) கிராம சாலை

Question 10.
மாவட்ட சாலை …………… துறையால் பராமரிக்கப்படுகிறது.
அ) மாநில
ஆ) மாவட்ட
இ) கிராமம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) மாநில

Question 11.
தங்க நாற்கர சாலையின் நீளம் …………….. ஆகும்.
அ) 5432 கி.மீ
ஆ) 5846 கி.மீ
இ) 3216 கி.மீ
ஈ) 3015 கி.மீ
விடை:
5846 கி.மீ

Question 12.
வடக்கு இரயில்வேயின் தலைமையகம் ……………… ஆகும்.
அ) மும்பை
ஆ) ஜபல்பூர்
இ) சென்னை
ஈ) புதுடெல்லி
விடை:
ஈ) புதுடெல்லி

Question 13.
மத்திய இரயில்வேயின் தலைமையகம் …………….. ஆகும்.
அ) சென்னை
ஆ) ஜபல்பூர்
இ) மும்பை
ஈ) டெல்லி
விடை:
இ மும்பை

Question 14.
………………. போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக உள்ளது.
அ) சாலை
ஆ) இரயில்வே
இ) நீர்வழி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இரயில்வே

Question 15.
……………. மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை .
அ) பிலாஸ்பூர்
ஆ) ஹசிப்பூர்
இ) கௌஹாத்தி
ஈ) மேகாலயா
விடை:
ஈ) மேகாலயா

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 16.
இந்திய இரயில் சேவை முதன்முதலில் ……………… தொடங்கப்பட்டது.
அ) குஜராத்
ஆ) ஜம்மு
இ) லடாக்
ஈ) கொல்கத்தா
விடை:
ஈ) கொல்கத்தா

Question 17.
நீர்வழிப் போக்குவரத்து …………… வகைப்படும்.
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 5
விடை:
இ 2

Question 18.
இந்திய விமான நிலைய பொறுப்பாணையம் …………… ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அ) 1985
ஆ) 1995
இ) 1885
ஈ) 1895
விடை:
ஆ) 1995

Question 19.
இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் ……………… வணிகம் ஆகும்.
அ) இருதரப்பு
ஆ) பன்னாட்டு
இ) சர்வதேச
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இருதரப்பு

Question 20.
உள்நாட்டு வணிகம், ………………. வணிகம் எனப்படுகிறது.
அ) இருதரப்பு
ஆ) பன்னாட்டு
இ) சர்வதேச
ஈ) உள்ளூர்
விடை:
ஈ) உள்ளூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ……………. ஆகும்.
விடை:
இந்தியா

Question 2.
……………………… என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
விடை:
பிறப்பு விகிதம்

Question 3.
……………. என்பது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பது.
விடை:
இறப்பு விகிதம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 4.
மக்கள் தொகை மாற்றங்கள் பற்றி படிப்பது ……………… ஆய்வின் முக்கிய அம்சமாகும்.
விடை:
மக்கள்தொகை

Question 5.
போக்குவரத்து அமைப்பு நாட்டின் ………………… கருதப்படுகிறது.
விடை:
உயிர்நாடியாக

Question 6.
……………………… மலிவான போக்குவரத்து ஆகும்.
விடை:
சாலை வழி போக்குவரத்து

Question 7.
சாஹி (ராயல்) சாலை ……….. என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விடை:
கிராண்ட் ட்ரங்க்சாலை

Question 8.
………….. அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிவேக இரயில்வண்டி ஆகும்.
விடை:
காத்திமன்

Question 9.
…………….. மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை .
விடை:
மேகாலயா

Question 10.
………………. இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்தில் முக்கியமான ஒன்று.
விடை:
நீர்வழிப் போக்குவரத்து

Question 11.
………………. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
கடல்வழி போக்குவரத்து

Question 12.
இந்தியாவில் ……………. முக்கிய கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன.
விடை:
நான்கு

Question 13.
……………….. பயணசெலவு மிகுந்த போக்குவரத்து ஆகும்.
விடை:
வான்வழிப் போக்குவரத்து

Question 14.
இந்திய அரசாங்கம் ………….. என்ற விமான சேவையை வழங்குகிறது.
விடை:
ஏர் இந்தியா

Question 15.
………….. தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள்.
விடை:
இன்சாட் 1B

Question 16.
…………… என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணி ஆகும்.
விடை:
வணிகம்

Question 17.
இந்தியாவில் தொலைக்காட்சி வலையமைப்பு ………. என அழைக்கப்படுகிறது.
விடை:
தூர்தர்ஷன்

Question 18.
தொலைப்பேசி ………….. வளர்ச்சிக்கு உதவிக்கரமாக உள்ளது.
விடை:
வணிக

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 19.
வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள ………….. முறை பயன்படுகிறது.
விடை:
ISD

Question 20.
அகில இந்திய வானொலி ……………. எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
ஆகாச வாணி

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 9
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 10

IV. குறுகிய விடையளி.

Question 1.
மக்கள் தொகை வரையறு.
விடை:
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை என்றழைக்கப்படுகிறது.

Question 2.
மக்கள் தொகை மாற்றம் – வரையறு.
விடை:
ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து மற்றொரு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதையோ அல்லது குறைவதையோ மக்கள் தொகை மாற்றம் என்பதாகும்.

Question 3.
பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் – வரையறு.
விடை:
பிறப்பு விகிதம் : பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும்.

இறப்பு விகிதம்:
இறப்பு விகிதம் எனப்படுவது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.

Question 4.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை:
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.

Question 5.
இந்திய இரயில்வே துறை இரும்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
விடை:
இந்திய இரயில்வே துறை இரும்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்காலம். அவை,

  • அகலப்பாதை (1,676 மீ அகலம்]
  • மீட்டர் பாதை [1.00மீ அகலம்]
  • குறுகிய பாதை [0.762 மீ]
  • குறுகிய தூக்குப் பாதை [0.610 அகலம்]

Question 6.
செய்தித்தாள் ஊடகம் – வரையறு.
விடை:

  • செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.
  • இந்தியாவில் உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக்கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 7.
இந்தியாவில் முக்கிய கப்பல் தளங்கள் யாவை?
விடை:

  • இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம்
  • கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை – கொல்கத்தா
  • மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை – மும்பை
  • கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி

V. வேறுபடுத்துக.

Question 1.
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 11

VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
குறிப்பு வரைக. 1. மக்கள் தொகைக் கலவை 2. வயதுக் கலவை 3. பாலின விகிதம் 4. எழுத்தறிவு விகிதம் 5. மக்கள் தொகை
விடை:
1. மக்கள் தொகைக் கலவை:

  • மக்கள் தொகைக் கலவை என்பது பல்வேறு பண்புகளான வயது, பாலினம், திருமணநிலை, சாதி, மதம், மொழி, கல்வி, தொழில் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • மக்கள் தொகை கலவை பற்றி கற்பது சமூக – பொருளாதார மற்றும் மக்கள் தொகையின் அமைப்பை அறிய உதவுகிறது.

வயதுக் கலவை:

  • வயதுக் கலவை என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வயது பிரிவினர் எண்ணிக்கையை குறிக்கிறது.
  • நாட்டின் மக்கள் தொகை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுறிது.

பாலின விகிதம் :
பாலின விகிதம் என்பது மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.

எழுத்தறிவு விகிதம்:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7வயதிற்கு அதிகமான ஒருவர் ஏதாவதொரு மொழியைப் புரிந்துகொண்டு எழுதப் படிக்க தெரிந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்.

மக்கள் தொகை இயக்கவியல்:
மக்கள் தொகை இயக்கவியல் என்பது மக்கள் தொகை அளவு மற்றும் அதன் பண்பு மாற்றங்கள் தொடர்பான காரணிகள் குறித்து கற்கும் ஒரு துறையாகும்.

Question 2.
வணிகம் வரையறு. வணிகத்தின் வகைகளை விவரி.
விடை:

  • வணிகம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
  • வணிகம் என்பது பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்குவதும் விற்பதும் அல்லது பரிமாற்றம் செய்து கொள்ளும் செயலாகும்.

வணிக வகைகள் :
பொதுவாக வணிகம் இருவகைப்படும். அவை

  1. உள்நாட்டு வணிகம்
  2. பன்னாட்டு வணிகம்

1. உள்நாட்டு வணிகம்:

  • ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் உள்நாட்டு வணிகம் எனவும் உள்ளூர் வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • (எ.கா.) உள்நாட்டு வணிகத்தில் நிலவழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. (குறிப்பாக சாலை மற்றும் இரயில் வழி).

பன்னாட்டு வணிகம்:

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. பன்னாட்டு வணிகத்தில் நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

இருத்தரப்பு மற்றும் பலதரப்பு வணிகம்:
வணிகம் இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் அவை இருத்தரப்பு வணிகம் என்றும், வணிகம் இரண்டிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெற்றால் அது பல்தரப்பு வணிகம் என்றும் அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை

9th Social Science Guide மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. மேம்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
2. நிகர நாட்டு உற்பத்தி என்பது பொருளாதாரத்தின் முதன்மையான குறியீடு ஆகும்.
3. சராசரி வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
4. 1972 ஆம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டம் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.
5. அனல்மின் நிலையம் அதிக அளவு கார்பன் – டை- ஆக்சைடை வெளியேற்றுகிறது.

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
கூற்று (A) : மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது. காரணம் (R) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 2.
மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது.
அ) ஏழை மக்கள் மீதான முதலீடு
ஆ) வேளாண்மை மீதான செலவு
இ) சொத்துக்கள் மீதான முதலீடு
ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை
விடை:
ஈ) ஒட்டு மொத்த மக்களின் திறமை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 3.
நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது.
அ) வளர்ச்சி
ஆ) வருமானம்
இ செலவீனம்
ஈ) சேமிப்புகள்
விடை:
ஆ) வருமானம்

Question 4.
தேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்படுகிறது.
அ) மொத்த நிகர உற்பத்தி
ஆ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
இ) நிகர தேசிய உற்பத்தி
ஈ) நிகர உள்நாட்டு உற்பத்தி
விடை:
இ) நிகர தேசிய உற்பத்தி

Question 5.
……….. வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கிறோம்.
அ) சராசரி
ஆ) மொத்த
இ மக்கள்
ஈ) மாத
விடை:
அ) சராசரி

Question 6.
ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
அ) ஜப்பான்
ஆ) கனடா
இ ரஷ்யா
ஈ) இந்தியா
விடை:
ஈ) இந்தியா

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 7.
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
அ) இந்தியா
ஆ) பாகிஸ்தான்
இ சீனா
ஈ) பூடான்
விடை:
இ) சீனா

Question 8.
கூற்று (A) : நிகர தேசிய உற்பத்தி என்பது தேசிய உற்பத்தி அளவின் உண்மை மதிப்பீடாக கருதப்படுகிறது.
காரணம் (R) : இது தேசிய வருமானம் என்று அழைக்கப்படுகிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ (A) சரியானது மற்றும் (R) தவறானது. R) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 9.
கூற்று (A) : எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் மனித வளம் அத்தியாவசியமாக இருக்கிறது.
காரணம் (R) : கல்வி மற்றும் மக்கள் நலத்தில் முதலீடு செய்வதன் விளைவாக அவர்களின் எதிர்காலத்தில் அதிக அளவு பலன் கிடைக்கும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 10.
மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை?
அ) பாலினம்
ஆ) உடல்நலம்
இ) கல்வி
ஈ) வருமானம்
விடை:
அ) பாலினம்

Question 11.
பின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது?
அ) ஆந்திரப்பிரதேசம்
ஆ) உத்திரப்பிரதேசம்
இ தமிழ்நாடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) தமிழ்நாடு

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 12.
பாலின விகிதம் என்பது
அ) வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்
ஆ) ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்
இ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு
ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்
விடை:
ஈ) ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

Question 13.
பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?
அ) தொழிற்சாலை
ஆ) பொருளாதார மேம்பாடு
இ) நிலையான மேம்பாடு
ஈ) பொருளாதார வளர்ச்சி
விடை:
இ) நிலையான மேம்பாடு

Question 14.
பொருந்தாத ஒன்றை கண்டறி.
அ) சூரிய ஆற்றல்
ஆ) காற்று ஆற்றல் இகாகிதம்
ஈ) இயற்கை வாயு
விடை:
இ) காகிதம்

Question 15.
இந்தியாவில் அதிகபட்ச சூரிய ஆற்றல் உற்பத்தியைச் செய்யும் மாநிலம்
அ) தமிழ்நாடு
ஆ) மேற்கு வங்காளம்
இ கேரளா
ஈ) ஆந்திரப் பிரதேசம்
விடை:
அ) தமிழ்நாடு

Question 16.
பல ஆண்டுகளின் உபயோகத்திற்குப் பிறகு தீர்ந்து போகும் வளம்
அ) இயற்கை
ஆ) புதுப்பிக்க இ யலும் வளம்
இ) புதுப்பிக்க இயலாத வளம்
ஈ) புதியவை
விடை:
இ) புதுப்பிக்க இயலாத வளம்

Question 17.
அனல் மின் நிலையம் அதிக அளவிலான ………….. வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
அ) ஆக்சிஜன்
ஆ) நைட்ரஜன்
இ கார்பன்
ஈ) கார்பன்-டை-ஆக்சைடு
விடை:
ஈ) கார்பன்-டை-ஆக்சைடு

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு ……….. என்று அறியப்படும்.
விடை:
பொருளாதார மேம்பாடு

Question 2.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் ……………
விடை:
புது டெல்லியில் சாஸ்திரி பவன்

Question 3.
இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் ……….
விடை:
கேரளா

Question 4.
உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம் ………….
விடை:
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

Question 5.
நிலத்தடி நீர் என்பது ………. வளங்களின் ஓர் எடுத்துக்காட்டாகும்
விடை:
புதுப்பிக்கத் தகுந்த

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 6.
An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ………….
விடை:
அமர்த்தியா சென்

III. பொருத்துக
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 30

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?
விடை:
“மேம்பாடு” என்பது ஒரு குறிப்பிட்டத் துறையின் அல்லது குறிப்பிட்ட நபரின் மேம்பாட்டைக் குறிக்கிறது.

Question 2.
பொருளாதார மேம்பாட்டின் குறியீடுகள் என்ன?
விடை:

  • நிகர நாட்டு உற்பத்தி
  • தனி நபர் வருமானம்
  • வாங்கும் திறன் சமநிலை
  • மனிதவள மேம்பாட்டுக் குறியீடு

Question 3.
ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகர நாட்டு உற்பத்தி பயனுள்ள அளவீடாகக் கருதப்படாதது ஏன்?
விடை:

  • நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட மொத்த வருவாயைக் (நிகர நாட்டு உற்பத்தி கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது. ஏனெனில்,
  • ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்ல முடியாது.
  • ஒவ்வொரு நாட்டிலுள்ள மக்களைவிட வேறொரு நாட்டில் உள்ள மக்களிடையே நல்ல வருமானம் உள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 4.
எந்த ஒரு நாட்டினுடைய முதன்மை வளமாக மனிதவளம் கருதப்படுவது ஏன்?
விடை:

  • எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனிதவளம் அவசியமாகும். மனித வளத்தில் கல்வி மற்றும் உடல் நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம்.
  • உதாரணமாக ஒரு குழந்தையின் கல்விக்கு அளிக்கப்படும் முதலீடு, உற்பத்தியின் மூலம் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பைத் தந்து அதிக வருமானம் அளிக்க முடியும்.

Question 5.
பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.
1. PPP
2. HDI
விடை:
1. PPP = Purchasing Power Parity (வாங்கும் திறன் சமநிலை )
2. HDI = Human Development Index (மனித மேம்பாட்டு குறியீட்டெண்)

Question 6.
பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.
விடை:
1. NNP
2. PCI
1. NNP = Net National Product (நிகர நாட்டு உற்பத்தி)
2. PCI = Per Capita Income (Goon (ULDITOOTLD)

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 7.
சூரிய சக்தி என்றால் என்ன?
விடை:
சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளைப் பற்றி விவரி.
விடை:

  • தற்போதுள்ள சுற்றுச்சூழலை சேதப்படுத்தாமல், எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் மேம்பாடு அடைதலே நிலையான பொருளாதார மேம்பாடு ஆகும். நிலையான மேம்பாட்டை அடைய பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் தன்மையை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • இந்தியாவின் மின்தேவைக்கான அனல் மற்றும் புனல் மின் உற்பத்தி நிலையங்களும் பாதகமான சுற்றுச் சூழல் தாக்கத்தைக் கொண்டுள்ளன. எனவே மரபு சாரா வளங்களைப் பயன்படுத்துதல் நிலையான மேம்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியம்.
  • சூரிய ஒளி மூலம் மின் சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செயல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவது சூரிய சக்தி ஆகும். தமிழ் நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம் ஆகும்.

Question 2.
இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்.
விடை:

  • காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா தன் சுற்றுச் சூழல் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு உள்ளது.
  • நிலையற்ற காலநிலை, குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு, அணுகு முறைகளில் மாற்றம் கண்டு இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
  • இந்தியாவின் உச்சநீதி மன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப் படுத்த உத்தரவிட்டுள்ளது.
  • மக்களுக்கு அதிக வருமானம், திறன் மிக்க கல்வி, சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு, வறுமையற்ற நிலை சமவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதே இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகள் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 3.
புதுப்பிக்க தக்க வளங்கள் மற்றும் புதுப்பிக்க தகாத வளங்கள் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 50

Question 4.
ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழுல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 68

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்கள் செய்ய வேண்டியது)

1. உலகெங்கும் காணப்படும் குப்பை மற்றும் கழிவுகளின் பிரச்சனைகளை கண்டறிந்து பல்வேறு வழிமுறைகளை பட்டியலிடுக.

VII. சிந்தனை வினா

Question 1.
உனது பகுதியில் நீங்கள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி விவரி.
விடை:

  • குப்பைகளை சேமித்து வைக்கும் தொட்டிகளை நாள்தோறும் சுத்தம் செய்யவில்லை என்றால் நோய் பரவுகிறது.
  • வீட்டிற்கு அருகில் உள்ள நீரோடைகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. > அதிகப்படியான தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
  • சாக்கடை மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது.

VIII. வாழ்வியல் திறன்

Question 1.
தனிநபர் வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவாய்?
விடை:
நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும். இதுவே தலா வருமானம் எனப்படும்.
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 70

9th Social Science Guide மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை Additional Important Questions and Answers

Question 1.
சுருக்கமான விடை தருக. பொருளாதார மேம்பாடு என்றால் என்ன?
விடை:

  • பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், புதிய தொழில் நுட்பங்களையும் ஏற்றுக் கொள்வதாகும்.
  • பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

Question 2.
இந்தியாவில் சூரிய சக்தி பயன்பாடு பற்றி கூறுக.
விடை:

  • சூரியசக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.
  • இந்த சூரிய மின் ஆற்றல் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் மின் செலவைக் குறைக்க உதவுகிறது.
  • இந்தியாவில் சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். பெற்ற மின்திறன் 1697 மெகாவாட் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 80
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 1 மேம்பாட்டை அறிவோம் தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை 81

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

10th Social Science Guide இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
அ) சேமிப்பு மின்கலன்கள்
ஆ) எஃகு தயாரிப்பு
இ) செம்பு உருக்குதல்
ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு
விடை:
ஆ) எஃகு தயாரிப்பு

Question 2.
ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.
அ) 80% – 95%
ஆ) 70% க்கு மேல்
இ) 60% – 70%)
ஈ) 50% க்கும் குறைவு
விடை:
அ) 80% – 95%

Question 3.
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………
அ) ஆக்ஸிஜன்
ஆ) நீர்
இ) கார்பன்
ஈ) நைட்ரஜன்
விடை:
இ கார்பன்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 4.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ……………………..
அ) சேலம்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோயம்புத்தூர்
விடை:
ஈ) கோயம்புத்தூர்

Question 5.
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..
அ) குஜராத்
ஆ) இராஜஸ்தான்
இ) மகாராஷ்டிரம்
ஈ) தமிழ்நாடு
விடை:
இ மகாராஷ்டிரம்

Question 6.
மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..
அ) உயிரி சக்தி
ஆ) சூரியன்
இ) நிலக்கரி
ஈ) எண்ணெய்
விடை:
ஆ) சூரியன்

Question 7.
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..
அ) ஜார்கண்ட்
ஆ) பீகார்
இ) இராஜஸ்தான்
ஈ) அசாம்
விடை:
அ) ஜார்கண்ட்

Question 8.
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ………………..
அ) போக்குவரத்து
ஆ) கனிமப்படிவுகள்
இ) பெரும் தேவை
ஈ) மின்சக்தி கிடைப்பது
விடை:
ஆ) கனிமப்படிவுகள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 2

III. சுருக்கமான விடையளி.

Question 1.
வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
விடை:
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் “இயற்கை வளம்” என்று அழைக்கப்படுகிறது.

  1. புதுப்பிக்கக்கூடிய வளம் – சூரிய ஆற்றல்
  2. புதுப்பிக்க இயலாத வளம் – நிலக்கரி

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 2.
கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
விடை:

  • ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
  • கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை அ. உலோகக்கனிமங்கள், ஆ. அலோகக்கனிமங்கள்.

Question 3.
மெக்னீசியத்தின் பயன்களை குறிப்பீடுக.
விடை:

  • இது இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும்.
  • வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மெக்னீசியம் பயன்படுகின்றது.

Question 4.
இயற்கை எரிவாயு என்றால் என்ன?
விடை:

  • இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
  • இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்மகரிம வாயுவாகும்.
  • இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள உயர் அல்கேன்கள் கலந்த கலவைகளால் ஆனது.

Question 5.
நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
விடை:

  • ஆந்தரசைட்: 80 முதல் 90%
  • பிட்டுமினஸ் : 60 முதல் 80%
  • பழுப்பு நிலக்கரி: 40 முதல் 60%
  • மரக்கரி: 40% கும் குறைவு.

Question 6.
இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம், பீகார், அசாம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற மாநிலங்களாகும்.

Question 7.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் :

  • மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது)
  • குஜராத் கடற்கரை (2வது பெரியது)
  • அகமதாபாத் – கலோல்பகுதி

IV. வேறுபடுத்துக.

Question 1.
புதுப்பிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 3

Question 2.
உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 3.
வேளாண் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 5

Question 4.
சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 6

Question 5.
மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 7

V. ஒரு பத்தியில் விடையளி.

Question 1.
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
விடை:
பருத்தி நெசவாலைகள் :

  • இந்தியா இத்துறையில் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • பாரம்பரிய தொழில்களான கைவினைப்பொருள்கள், சிறிய விசைத்தறிகள் போன்றவை லட்சக்கணக்கிலான கிராமப்புற மற்றும் புறநகர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் ஆதாரங்களாக உள்ளன.
  • பருத்தி இழையிலிருந்து , விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர்.
  • மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பத காலநிலை மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி, சிறந்த போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு காரணங்களாக அமைகிறது.
  • மகாராஷ்டிரம், குஜராத் மேற்கு வங்காளம் உத்திரப்பிதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
  • ஈரோடு திருப்பூர், கரூர், சென்னை , திருநெல்வேலி, மதுரை தூத்துக்குடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும்.

Question 2.
இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
விடை:

  • இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியப் பிரச்சினைகள் கீழே பட்டியிலிடப்பட்டுள்ளன.
  • மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
  • தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு இல்லாமை.
  • கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.
  • கடனுக்கான அதிக வட்டி விகிதம்.
  • மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
  • ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை.
  • தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.

10th Social Science Guide இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
வளங்கள் தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் ……………… வகைப்படும்.
அ) 3
ஆ) 2
இ) 4
ஈ) 6
விடை:
ஆ) 2

Question 2.
……………… புதுப்பிக்க இயலா வளங்களுள் ஒன்று.
அ) உயிரி வாயு
ஆ) காற்றாற்றல்
இ) நிலக்கரி
ஈ) ஒத சக்தி
விடை:
இ நிலக்கரி

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 3.
…………….. தனித்த நிலையில் அரிதாக காணப்படுகிறது.
அ) காப்பர்
ஆ) மாங்கனீசு
இ) இரும்புத்தாது
ஈ) பாக்சைட்
விடை:
இ இரும்புத்தாது

Question 4.
லைமனைட் இரும்பு தாது படிவில் ……………… இரும்புள்ளது.
அ) 72.4%
ஆ) 55%
இ) 69.9%
ஈ) 48.2%
விடை:
ஆ) 55%

Question 5.
இந்தியர்கள்…………….. வளங்கள் ஹேமடைட் வகையையும், மேக்னடைட் வகையையும் சார்ந்தது.
அ) பாக்சைட்
ஆ) இரும்புத்தாது
இ) தாமிரம்
ஈ) மாங்கனீசு
விடை:
இரும்புத்தாது

Question 6.
இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் …………… ஆகும்.
அ) அசாம்
ஆ) பீகார்
இ) ஜார்கண்ட்
ஈ) ராஜஸ்தான்
விடை:
இ ஜார்கண்ட்

Question 7.
………………. ஒரு வெளிர் சாம்பல் நிறம் உடையது.
அ) ஜிப்சம்
ஆ) பாக்சைட்
இ) மைக்கா
ஈ) மாங்கனீசு
விடை:
ஈ) மாங்கனீசு

Question 8.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் ……………….. ஆகும்.
அ) தாமிரம்
ஆ) இரும்பு தாது
இ) சுண்ணாம்புகல்
ஈ) மைக்கா
விடை:
அ) தாமிரம்

Question 9.
அலுமினியத்தின் முக்கிய தாது ……………. ஆகும்.
அ) மேக்னடைட்
ஆ) ஹோமடைட்
இ) லிக்னைட்
ஈ) பாக்சைட்
விடை:
ஈ) பாக்சைட்

Question 10.
…………….. மின்கடத்தா தன்மையுடையவை.
அ) தாமிரம்
ஆ) மைக்கா
இ) பாக்சைட்
ஈ) மாங்கனீசு
விடை:
ஆ) மைக்கா

Question 11.
ஜிப்சம் என்பது …………………….. சல்ஃபேட்டின் நீர்ம கனிமமாகும்.
அ) கால்சியம்
ஆ) பொட்டாசியம்
இ) பாஸ்பரஸ்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) கால்சியம்

Question 12.
நிலக்கரி ……………… வகைப்படும்.
அ) 6
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஈ) 4

Question 13.
……………… கருப்புத் தங்கம் எனப்படுகிறது.
அ) மைக்கா
ஆ) ஜிப்சம்
இ) நிலக்கரி
ஈ) எதுவுமில்லை
விடை:
இ நிலக்கரி

Question 14.
……………… தாது எண்ணெய் எனப்படுகிறது.
அ) நிலக்கரி
ஆ) பெட்ரோலியம்
இ) இயற்கை வாயு
ஈ) உயிரி வாயு
விடை:
ஆ) பெட்ரோலியம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 15.
GAILன் தலைமையகம் ……………… உள்ள து.
அ) மும்பை
ஆ) சீனா
இ) புதுடெல்லி
ஈ) குஜராத்
விடை:
இ புதுடெல்லி

Question 16.
தேசிய அனல் மின் சக்தி நிலையம் ………………ஆண்டில் தொடங்கப்பட்டது.
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1985
விடை:
ஆ) 1975

Question 17.
……………… சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படும்.
அ) காற்றாற்றல்
ஆ) ஓதசக்தி
இ) நீர்மின்சக்தி
ஈ) சூரிய சக்தி
விடை:
இ நீர்மின்சக்தி

Question 18.
இந்திய தேசிய நீர்மின் சக்தி நிறுவனம் ……………… இல் உள்ளது.
அ) அலகாபாத்
ஆ) பரிதாபாத்
இ) அகமதாபாத்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பரிதாபாத்

Question 19.
…………….. இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) ஆந்திரம்
விடை:
ஆ) தமிழ்நாடு

Question 20.
உயிரின கழிவிலிருந்து ……………… பெறப்படுகிறது.
அ) உயிரி சக்தி
ஆ) காற்றாற்றல்
இ) ஓதசக்தி
ஈ) நீராற்றல்
விடை:
அ) உயிரி சக்தி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கனிம வளங்கள் …………. வகைப்படும்.
விடை:
இரண்டு

Question 2.
வளங்கள் ………… வகைப்படும்.
விடை:
இரண்டு

Question 3.
புவிமேலோட்டில் அதிகம் காணப்படுவது
விடை:
இரும்புத்தாது

Question 3.
மாங்கனீசு ……….. நிறமுடையது.
விடை:
வெளிர்

Question 4.
…………… மனிதனால் கண்டறியப்பட்ட முதல் உலோகம்.
விடை:
தாமிரம்

Question 5.
………….. பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
விடை:
அலுமினியம்

Question 7.
…………….. ஒளிபுகும் தன்மையுடையது.
விடை:
மைக்கா

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 8.
………………….. என்பது கால்சியம் சல்பேட்டின் நீர்மக்கனிமம்.
விடை:
ஜிப்சம்

Question 9.
……………… எளிதில் எரியக்கூடியது.
விடை:
நிலக்கரி

Question 10.
…………… என்ற சொல் பெட்ரோ மற்றும் ஒலியம் எனப் பிரிக்கலாம்.
விடை:
பெட்ரோலியம்

Question 11.
…………… எண்ணெய் வயல் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
விடை:
மும்பை ஹை

Question 12.
இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம் …………..
விடை:
GAIL

Question 13.
……………………. தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்களாகும்.
விடை:
தூத்துக்குடி (ம) எண்ணூர்

Question 14.
…………… ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
விடை:
நீர்மின்சக்தி

Question 15.
அணுக்கரு பிளவின் மூலம் ……………….. பெறப்படுகிறது.
விடை:
அணுசக்தி

Question 16.
இந்தியாவின் சூரியசக்தி நிறுவனத்தின் தலைமையிடம்
விடை:
புதுதில்லி

Question 17.
பருத்தி இழையிலிருந்து, விதையைப் பிரித்தெடுக்கும் முறை ………….
விடை:
ஜின்னிங்

Question 18.
தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள மாநிலம் ………………… ஆகும்.
விடை:
கொல்கத்தா

Question 19.
…………….. என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இழைநார் ஆகும்.
விடை:
சணல்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 8
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 9

IV. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) மைக்கா
ஆ) சுண்ணாம்புக்கல்
இ) ஜிப்சம்
ஈ) இரும்பு
விடை:
ஈ) இரும்பு

Question 2.
அ) கோலோரிஸ்
ஆ) ஆந்திரசைட்
இ) பிட்டுமினஸ்
ஈ) லிக்னைட்
விடை:
அ) கோலோரிஸ்

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள் யாவை?
விடை:

  • இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் கொல்கத்தா.
  • இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 2.
இரும்புத் தாது படிவு மற்றும் இரும்பின் அளவை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 10
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 11

Question 3.
பாக்சைட்டின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
  • விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுகிறது. சிமெண்ட் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது.

Question 4.
புதுப்பிக்க இயலா வளங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • நிலக்கரி
  • பெட்ரோலியம் / கச்சா எண்ணெய்
  • இயற்கை எரிவாயு.

Question 5.
மத்தியப் பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் – குறிப்பு வரைக.
விடை:

  • பட்டு வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
  • இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

Question 6.
வனவளம் சார்ந்த தொழிற்சாலைகள் யாவை?
விடை:

  • காடுகள், காகித தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள்.
  • அரக்கு விளையாட்டு பொருள்கள்
  • ஏட்டுப் பலகை போன்ற பொருள்களைத் தருகின்றன.

VI. வேறுபடுத்துக.

Question 1.
நீர்மின் சக்தி மற்றும் காற்று சக்தி
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 12

Question 2.
இரும்பு எஃகு தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிற்சாலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 13

VII. ஒரு பத்தியில் விடையளி.

Question 1.
மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் – கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 14

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 2.
புதுப்பிக்கக் கூடிய வளங்களைப் பற்றி விவரி.
விடை:
அ. நீர்மின்சக்தி:

  • நீர்மின்சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
  • இம்மின்சக்தி மாசற்ற மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மின் ஆற்றலாக கருதப்படுகிறது.
  • இந்தியாவானது நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான மிக அதிக திறனை பெற்றுள்ள ஒரு மிகச் சிறந்த ஒரு நாடாக உள்ளது.

ஆ. சூரிய ஆற்றல் / சக்தி:

  • சூரிய ஆற்றல் சூரிய ஒளியை நேரடியாகவோ மின் அழுத்திக் கொண்டோ அல்லது செறிவூட்டம் கொண்ட சூரிய ஆற்றல் மூலம் மின்னாற்றலாக மாற்றப்படுதலாகும்.
  • மின் அழுத்திகள், ஒளிமின் விளைவு செயல்பாட்டின் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன.
  • ஆந்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

இ. காற்று சக்தி :

  • காற்று வீச்சு அல்லது உந்துதலால் ஏற்படும் ஆற்றலை காற்று விசைச்சுற்று கலன்களின் உதவியோடு மின்னாற்றலாக மாற்றப்பட்டு காற்றாலை மின்சாரம் பெறப்படுகிறது.
  • இது ஒரு மலிவான மற்றும் மாசற்ற ஆற்றல் வளமாகும்.
  • காற்றாலை மின்சாரமானது நீர் ஏற்றுவதற்கும், கப்பல்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஈ. உயிரி சக்தி :

  • விலங்குகளின் கழிவுகள், சமையல் கழிவுகள், ஆகாய தாமரை கழிவுகள், வேளாண்கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகள் போன்ற உயிரின கழிவுகளிலிருந்து உயிரி சக்தி பெறப்படுகிறது.
  • இது மாசற்ற மற்றும் மலிவான ஒரு எரிசக்தி வளமாகும்.
  • உயிரி எரிசக்தி பெரும்பாலும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

உ. ஓத மற்றும் அலை சக்தி:

  • கடல் ஒதங்கள் மற்றும் கடல் அலைகள் என இரண்டு வள ஆதாரங்களிலிருந்து மின் ஆற்றல் பெறப்படுகிறது.
  • காம்பே வளைகுடா ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

9th Social Science Guide ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

Question 1.
பிரான்ஸிஸ் லைட் ……. பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அ) நறுமணத் தீவுகள்
ஆ) ஜாவா தீவு
இ) பினாங்குத் தீவு
ஈ) மலாக்கா
விடை:
இ) பினாங்குத் தீவு

Question 2.
1896 இல் …… நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஆறு
விடை:
அ) நான்கு

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 3.
இந்தோ – சீனாவில் …… மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.
அ) ஆனம்
ஆ) டோங்கிங்
இ) கம்போடியா
ஈ) கொச்சின் – சீனா
விடை:
ஈ) கொச்சின் – சீனா

Question 4.
……… பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ் பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.
அ) டிரான்ஸ்வால்
ஆ) ஆரஞ்சு சுதந்திர நாடு
இ) கேப் காலனி
ஈ) ரொடீஷியா
விடை:
அ) டிரான்ஸ்வால்

Question 5.
இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர்………..
அ) போர்த்துகீசியர்
ஆ) பிரெஞ்சுக்காரர்
இ) டேனிஷார்
ஈ) டச்சுக்காரர்
விடை:
அ) போர்த்துகீசியர்

Question 6.
எத்தியோப்பியா இத்தாலியை …….. போரில் தோற்கடித்தது.
அ) அடோவா
ஆ) டஹோமி
இ) டோங்கிங்
ஈ) டிரான்ஸ்வால்
விடை:
அ) அடோவா

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 7.
ஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ……
அ) ஒப்பந்தத் தொழிலாளர் முறை
ஆ) அடிமைத்தனம்
இ) கடனுக்கான அடிமை ஒப்பந்தம்
ஈ) கொத்தடிமை
விடை:
இ) கடனுக்கான அழமை ஒப்பந்தம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
………….. மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.
விடை:
பெர்லின் குடியேற்ற

Question 2.
வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு …… என்றழைக்கப் படுகிறது.
விடை:
நிரந்தர நிலவரித்திட்டம்

Question 3.
ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது …………. ஆகும்.
விடை:
நிலவரி

Question 4.
தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் ………… வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.
விடை:
நாட்டுக் கோட்டைச் செட்டியார்

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.
ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.
iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.
iv) ஒடிசா பஞ்சம் 1878 – 76 இல் நடைபெற்றது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும்
iii) சரி
ஈ) iv) சரி
விடை:
அ) i) சரி

Question 2.
i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைப்பற்றினர்.
ii) மலாக்காவைக் கைப்பற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.
iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.
iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.
அ) i) சரி
ஆ) i) மற்றும்
ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
விடை:
இ) iii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 3.
கூற்று : சென்னை மகாணத்தில் 1876 – 1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.
காரணம் : காலனியரசு உணவு தானிய வணிகத்தில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Question 4.
கூற்று : பெர்லின் மாநாடு இரண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
காரணம் : பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் 30

V. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் 31

Question 2.
ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள்.
  • தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜூலு மக்களுக்கென ஒரு பெரிய நாட்டை உருவாக்குவதில் சாக்கா ஜூலு முக்கியப் பங்காற்றினார்.
  • ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைக் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர்.
  • ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை.
  • அவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஆழமாக நிலை கொண்டுவிட்ட இனப்பாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.

Question 3.
இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.
விடை:
அ. முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்
ஆ. இரண்டாம் கட்டம் : தொழில்துறை முதலாளித்துவம்.
இ. மூன்றாம் கட்டம் : நிதி மூலதன முதலாளித்துவம்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 4.
கர்னல் பென்னிகுயிக்
விடை:

  • கர்னல் பென்னிகுயிக் : பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளர், குடிமைப்பணியாளர், சென்னை மாகாணச் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆவார்.
  • மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்ப முடிவு செய்தார். கிழக்கு நோக்கித் திருப்பினாள் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார்.
  • பென்னி குயிக்கும் மற்றும் ஆங்கிலேய பொறியாளர்களும் அணையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போது இடைவிடாத மழையால் இடையூறுகள் ஏற்பட்டன.
  • ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான நிதியைப் பெறமுடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு 1895ல் அணையைக் கட்டி முடித்தார்.

Question 5.
தாயகக் கட்டணங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.
விடை:

  • தாயகக் கட்டணங்கள் : என்னும் பெயரால் பெருமளவு பணத்தை இங்கிலாந்திற்கு அனுப்பியது. தாயகக் கட்டணங்கள் – கம்பெனி பங்குதாரர்களுக்கு சேரவேண்டிய லாபத்தில் பங்கு.
    • வாங்கிய கடனின் மீதான வட்டி
    • ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு
    • அதிகாரிகளுக்கான ஓய்வூதியம்
    • லண்டனின் இந்திய அலுவலகத்திற்கான செலவுகள்.
    • போக்குவரத்து செலவு
      (காலப்போக்கில் தாயகக் கட்டணங்கள் ஆண்டொன்றுக்கு 16 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது. இது தவிர தனி நபர்கள் அனுப்பிய பணம் 10 மில்லியன் பவுண்டுகள்)

VI. விரிவாக விடையளிக்கவும்

Question 1.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
விடை:
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார தாக்கம் வேளாண்மைச் சூழல் :
அ) நிரந்தர நிலவரித் திட்டம் :

  • காரன்வாலிஸ் பிரபு
  • இந்தியாவில் முதன் முறையாக ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் என்னும் வர்க்கத்தார் உருவாக்கப்பட்டனர். இவர்கள் நில உரிமையாளர்களாக சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்க, வாரிசாக நிலங்களைப்பெற உரிமை பெற்றனர். விவசாயகிள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
  • வங்காளம், பீகார், ஓடிசா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.

ஆ) ரயத்துவாரி முறை :

  • தென்னிந்தியாவில் அறிமுக செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறை ரயத்துவாரி முறை எனப்பட்டது.
  • தனி நபருக்குச் சொந்தமான நிலங்கள் பதிவு செய்யப்பட்டன. நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார். நிலவரி செலுத்தத் தவறினால் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதோடு, அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும், பிற உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.

நிலவரி வருவாயும், விவசாயிகள் வறுமைக்கு ஆளாக்கப்படுதலும்

அ) நிலவரி :
ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த நிலவரி பலவந்தமான முறைகளில் வசூல் செய்யப்பட்டது.

ஆ) வட்டிக்கடைக்காரர்கள் :
அரசாங்கம் கடன் வசதிகள் செய்து தராததால் விவசாயிகள் வட்டிக்கடைக்காரர்களையே சார்ந்திருந்தனர். வறட்சி, வெள்ளம், பஞ்சம் போன்ற காலங்களில் வட்டிக்குக் கடன் வழங்குவோரின் தயவையே நம்பியிருந்தனர்.

இ) வேளாண்மை வணிகமயமாக்கல் :
காலனியரசு “வேளாண்மையை வணிகமயமாக்கும்” கொள்கையைப் பின்பற்றியது. வணிகப் பயிர்களான பருத்தி, சணல், வேர்க்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, புகையிலை ஆகியன சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப லாபகரமான விலையைப் பெற்றிருந்தன. விவசாயி சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியது.

நீர்பாசனம் :
ஆங்கிலேயர்கள் 19ம் நூற்றாண்டின் முதல் பாதி காலப்பகுதியில் நீர்ப்பாசனத்தைப் புறக்கணித்தனர்.

பஞ்சங்கள் :
ஆங்கிலேயரின் சுதந்திர வணிகக் கொள்கையும், கடுமையான வள வசூல் முறையும் பஞ்சங்கள் தோன்றுவதற்கு
வழியமைத்துக் கொடுத்தன. (ஓடிசா பஞ்சம் – 1866 – 67, மிகப்பெரும் பஞ்சம் – 1876 – 78)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 2.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்பட்டதை விவரி.
விடை:
ஆப்பிரிக்கா காலனியாதல் :

  • ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றியக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது (1881-1914) ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
  • 1875க்கு முன்னர் சகாராவிற்கு தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறிப்படாமலே இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா :

  • ஆங்கிலேயர் பகுதிகள் – நேட்டால், கேப் காலனி,
    டச்சுக்காரர் (உள்நாட்டில் போயர்) பகுதிகள் – டிரான்ஸ்வால், சுதந்திர ஆரஞ்சு நாடு.
  • 1886ல் டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் பிரிட்டிஷ் சுரங்க வல்லுனர்கள் பெரும் எண்ணிக்கையில் ஜோகன்னஸ் பார்க் மற்றும் அதன் சுற்றப்புறங்களில் குடியேறத் தொடங்கினர். போயர் அவர்களைக் கண்டு அச்சம் கொண்டு அவர்களை வெறுத்தனர். அந்நியர் என்றே அழைத்தனர்.
  • கேப் காலனியின் பிரதமர் டிரான்ஸ்வாலுக்கு வடக்கே ஆங்கிலேயரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தனர். இது ஆங்கிலேயருக்கும் போலருக்கும் இடையிலான உறவை சீர்குலைத்தது. இதனால் போயர் போர்கள் நடைபெற்றன. 26000 போயர் மக்கள் உணவு, படுக்கை, மருத்துவ வசதி, சுகாதார வசதி பற்றாக்குறை காரணமாக மரணமடைந்தனர்.
  • 1909ல் நான்கு நாடுகளும் ஒன்றாக இணைவதற்கு ஒப்புக்கொண்டதால் தென்னாப்பிரிக்கா என்ற நாடு உதயமானது.

ரொடிசியா :
1889ல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்கா கம்பெனியின் வெள்ளையினக் குடியேறிகளுக்குப் பண்ணை நிலங்கள் வழங்கப்பட்டன. இருப்புப்பாதைப் போக்குவரத்தும் தந்தி முறையும் மேம்படுத்தப்பட்டன. இக்குடியேற்றம் பின்னர் சிசில் ரோட்ஸ் பெயரால் ரொடீசியா என அழைக்கப்பட்டது

மேற்கு ஆப்பிரிக்கா:
ஆங்கிலேயர் :
1854ல் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி அரசுகள் ஆங்கிலேயரின் காலனியானது நைஜீரியா அடிமைச் சந்தையாகப் பயன்பட்டது.
1886ல் உருவாக்கப்பட்ட ராயல் நைஜர் கம்பெனி 1900ல் ஆங்கிலேய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரெஞ்சுக்காரர்:
செனிகல் பிரான்சின் தளமாக இருந்து வந்தது
பின்னர் கினியா, ஜவரி கோஸ்ட், டகோமெஸ் ஆகிய சகாராவுக்கு தெற்கேயுள்ள பகுதிகளோடு இணைக்கப்பட்டன.

கிழக்கு ஆப்பிரிக்கா
ஆங்கிலேயர் :
ஜான்ஜிபார் சுல்தானுக்குச் சொந்தமான பகுதிகள் இங்கிலாந்தின் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிரிவகிக்கப்பட்டது.

ஜெர்மனியர் :
ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்கா என பின்னர் உருவான பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவினர். ஆப்பிரிக்ர்கள் ஜெர்மானியர்களால் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

போர்த்துகீசியரின் அங்கோலா மற்றும் மொசாம்பிக் :
போர்த்துகீசியர் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே கினியாவை பயன்படுத்தி வந்தனர்.1870க்குப் பின்னர் போர்த்தக்கீசியர் பெரும் எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்காவின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அமைந்திருந்த அங்கோலா, மொசாம்பிக் பகுதிகளில் குடியேறினர்.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இந்தியாவில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் போது பஞ்சங்களால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் பற்றிய புகைப்படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்றைத் தயார் செய்யவும்.
2. இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான கலாச்சார தொடர்புகள் பற்றி விவரிக்கவும்.

9th Social Science Guide ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கலோனஸ் என்ற லத்தீன் சொல்லின் பொருள் ……….
விடை:
விவசாயி

Question 2.
இம்பீரியம் என்ற சொல்லின் பொருள் ………
விடை:
ஆதிக்கம் செய்தல்

Question 3.
டச்சுக்காரர்கள் ……. ஆம் ஆண்டு மலாக்காவைக் கைப்பற்றினர்.
விடை:
1641

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 4.
1623ல் ……….. படுகொலை நடந்தது.
விடை:
அம்பாய்னா

Question 5.
டச்சுக்காரர் ……….. ஆண்டில் ஜாவாவையும், சுமத்ராவையும் கைப்பற்றினர்.
விடை:
1640

Question 6.
பிலிப்பைன்ஸ் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ………… ஆல் ஆளப்பட்டது.
விடை:
ஸ்பானியரால்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் 60
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் 61

III. குறுகிய விடையளி.

Question 1.
தென் கிழக்காசியாவின் பகுதிகள் யாவை?
விடை:
மலேயா, டச்சு கிழக்கிந்தியா, பர்மா, சயாம், பிரெஞ்சு, இந்தோ – சீனா, பிலிப்பைன்ஸ்

Question 2.
நீரிணைப் பகுதி குடியிருப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?
விடை:
1826 வாக்கில் சிங்கப்பூரும் – மலாக்காவும் பினாங்கோடு இணைக்கப்பட்டு நீரிணைப்பகுதி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.

Question 3.
இந்தோ – சீனா என்பதில் அடங்கிய பகுதிகள் யாவை?
விடை:
டோங்கிங், ஆனம், கம்போடியா, கொச்சின் – சீனா, லாவோஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 4.
இந்தியத்துணி வகைகள் எப்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது?
விடை:

  • இங்கிலாந்து
  • ஐரோப்பிய நாடுகள்
  • சீனா
  • ஜப்பான்
  • பர்மா
  • அரேபியா
  • பாரசீகம்
  • ஆப்பிரிக்காவின் சில பகுதிகள்

IV. ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும்

Question 1.
இந்தியாவில் காலனி ஆதிக்கம்

அ. கிழக்கிந்தியக் கம்பெனி எப்போது நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது?
விடை:
1765ல்

ஆ. ஆங்கிலேயர் எப்போது கூர்கர்களை வென்றனர்?
விடை:
1816 ல்

இ. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைமுறை எப்பொழுது ஒழிக்கப்பட்டது?
விடை:
1843ல்

ஈ. பர்மா எப்போது இந்தியாவின் ஒரு பகுதியானது?
விடை:
1886 முதல் 1937 வரை.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

Question 2.
தென்னாப்பிரிக்கா

அ. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான நாடுகள் எவை?
விடை:
நேட்டால், கேப் காலனி

ஆ. டச்சுக்காரர் கைவசமிருந்த பகுதிகள் எவை?
விடை:
டிரான்ஸ் வாலைச் சார்ந்த நாடுகள் சுதந்தர ஆரஞ்சு நாடு.

இ. கேப்காலனியின் பிரதம அமைச்சர் யார்?
விடை:
சிசில் ரோட்ஸ்

ஈ. போயர் போர்கள் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றன?
விடை:
1899 – 1902 – 3 ஆண்டுகள்

V. விரிவான விடையளி.

Question 1.
நிதிமூலதன முதலாளித்துவம் பற்றி விவரி.
விடை:
நிதிமூலதன முதலாளித்துவம்

  • மேலாண்மை முகவர் நிறுவனங்கள், ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனங்கள், நாணயமாற்று வங்கிகள் ஆகியவை செழித்தோங்கின.
  • கம்பெனி அரசு இருப்புப்பாதை அனத்தல், அஞ்சல் துறை, நீர்பாசனம், நவீன வங்கித்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் மிகப்பெருமளவிலான முதலீட்டினைச் செய்தது.
  • கொண்டு செல்லப்பட்ட நிதியின் கணிசமான பகுதி இருப்புப்பாதை அமைக்கும் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது. ரயில் போக்குவரத்து ஆங்கிலப்படைகள் நாட்டின் பல பகுதிகளுக்கு விரைவாகச் செல்வதற்கு உதவியது. இந்தியச் சந்தையின் பெரும்பகுதியைக் கைப்பற்றவும் உதவியது.
  • ஆங்கிலேய நாடாளுமன்றத்தால் ஆதரிக்கப்பட்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 5 விழுக்காடு ஆண்டு வட்டியை உத்தரவாதப்படுத்தியதன் மூலம் ரயில்வே துறையில் ஆங்கிலேயரின் முதலீட்டை ஊக்கப்படுத்தியது. சுரங்க நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் சரங்கங்கள் வழங்கப்பட்டன.
  • காப்பி, தேயிலை, ரப்பர், மிளகு ஆகியவற்றைப் பயிர் செய்வதற்காக மிகமிகக் குறைந்த விலையில் நிலம் வழங்கப்பட்டது.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 11 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் 68

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

10th Social Science Guide இந்தியா – வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
அ) வண்டல்
ஆ) கரிசல்
இ) செம்மண்
ஈ) உவர் மண்
விடை:
இ செம்மண்

Question 2.
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ) இந்திய வானியல் துறை
இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்
ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்
விடை:
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

Question 3.
ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ………….
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) பாலைமண்
ஈ) வண்டல் மண்
விடை:
ஈ) வண்டல் மண்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 4.
இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை …………………….
அ) ஹிராகுட் அணை
ஆ) பக்ராநங்கல் அணை
இ) மேட்டூர் அணை
ஈ) நாகர்ஜூனா சாகர் அணை
விடை:
ஆ) பக்ராநங்கல் அணை

Question 5.
………………. என்பது ஒரு வாணிபப்பயிர்.
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) அரிசி
ஈ) மக்காச் சோளம்
விடை:
அ) பருத்தி

Question 6.
கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
அ) வறண்ட மண்
ஆ) உவர் மண்
இ) மலை மண்
ஈ) பருத்தி மண்
விடை:
ஈ) பருத்தி மண்

Question 7.
உலகிலேயே மிக நீளமான அணை ………….
அ) மேட்டூர் அணை
ஆ) கோசி அணை
இ) ஹிராகுட் அணை
ஈ) பக்ராநங்கல் அணை
விடை:
இ ஹிராகுட் அணை

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 8.
இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ………………….
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) சணல்
ஈ) புகையிலை
விடை:
இ சணல்

II. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.

Question 1.
கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு.

Question 2.
கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்

III. பொருந்தாதைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) கோதுமை
ஆ) நெல்
இ) திணை வகைகள்
ஈ) காபி
விடை:
ஈ) காபி

Question 2.
அ) காதர்
ஆ) பாங்கர்
இ) வண்டல் மண்
ஈ) கரிசல் மண்
விடை:
ஈ) கரிசல் மண்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 3.
அ) வெள்ளப் பெருக்க கால்வாய்
ஆ) வற்றாத கால்வாய்
இ) ஏரிப்பாசனம்
ஈ) கால்வாய்
விடை:
இ ஏரிப்பாசனம்

IV. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 2

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
‘மண்’ – வரையறு
விடை:
மண் என்பது கனிமங்களின் கூட்டுப்பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.

Question 2.
இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
விடை:

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்புநில மண்

Question 3.
கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
விடை:
நிறம் :
டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.

மண்ணின் தன்மைகள் :
ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.

Question 4.
‘வேளாண்மை ‘ – வரையறு.
விடை:
வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.

Question 5.
இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
விடை:

  • தன்னிறைவு வேளாண்மை
  • இடப்பெயர்வு வேளாண்மை
  • தீவிர வேளாண்மை
  • வறண்ட நில வேளாண்மை
  • கலப்பு வேளாண்மை
  • படிக்கட்டு முறை வேளாண்மை

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 6.
இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • காரிஃப் பருவம் – ஜூன்- செப்டம்பர்
  • ராபி பருவம் – அக்டோபர் – மார்ச்
  • சையத் பருவம் – ஏப்ரல் – ஜூன்

Question 7.
இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
விடை:
தோட்டப்பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்

Question 8.
கால்நடைகள் என்றால் என்ன?
விடை:

  • கால்நடைகள் இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும். கால்நடைகளின் பல்வேறு வகைப் பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.
  • இவை சமூக, கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் தன் பங்களிப்பை தருகின்றது.
  • ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

Question 9.
இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.
விடை:
கடல் மீன்பிடிப்பு:

  • கண்டத்திட்டு பகுதிகளில் மீன்பிடித்தல் நடைபெறுகிறது.
  • கேரளா கடல்மீன் உற்பத்தியில் முதன்மையானதாகவே உள்ளது.

உள்நாட்டு மீன்பிடிப்பு:

  • நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும்.
  • ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

VI. காரணம் கூறுக.

Question 1.
வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.
விடை:
மக்கள் தொகையில் விவசாயம் 50% பங்கினையும், நாட்டு வருமானத்தில் 25% பங்கினையும் கொண்டுள்ளதால் வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 2.
மழைநீர் சேமிப்பு அவசியம்.
விடை:
இந்தியா அயனமண்டல பருவக்காற்று காலநிலையைப் பெற்றுள்ளதால் மழை ஒழுங்கற்று, சீராக கிடைப்பதில்லை. எனவே கிடைக்கும் நீரை சேமிப்பது அவசியம்.

VII. வேறுபடுத்துக.

Question 1.
ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 3

Question 2.
வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 4

Question 3.
கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 5

Question 4.
வண்டல் மண் மற்றும் கரிசல் மண்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 6

VIII. பத்தியளவில் விடையளி.

Question 1.
இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 7
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 8
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 9

Question 2.
‌பல்நோக்குத்‌ ‌திட்டம்‌ ‌என்றால்‌ ‌என்ன?‌ ‌ஏதேனும்‌ ‌ இரண்டு‌ ‌இந்திய‌ ‌பல்நோக்கு‌ ‌திட்டங்கள்‌ ‌பற்றி‌ ‌எழுதுக.‌
விடை:
‌பல்நோக்குத்‌ ‌திட்டம்:‌ ‌

  • இது‌ ‌ஒரு‌ ‌அறிவியல்‌ ‌ முறையிலான‌ ‌நீர்வள‌ ‌மேலாண்மை‌ ‌திட்டமாகும்.‌
  • ஆற்றின்‌ ‌ குறுக்கே‌ ‌பல்வேறு‌ ‌நோக்கங்களுக்காக‌ ‌அணைகளைக்‌ கட்டுவதால்‌ ‌இவை‌ ‌பல்நோக்கு‌ ‌ஆற்றுப்பள்ளத்தாக்குத்‌ ‌திட்டங்கள்‌ ‌என்று‌ ‌அழைக்கப்படுகிறது.‌
  •  ‌நீர்ப்பாசனம்,‌ ‌நீர்மின்‌ ‌உற்பத்தி,‌ ‌குடிநீர்‌ ‌மற்றும்‌ ‌தொழிற்சாலைக்கு‌ ‌நீர்‌ ‌வழங்குதல்,‌ ‌வெள்ளத்தடுப்பு,‌ ‌மீன்வள‌ ‌மேம்பாடு,‌ ‌நீர்‌ ‌வழிப்‌ ‌போக்குவரத்து‌ ‌போன்றவை‌ ‌இதன்‌ ‌பல்வேறு‌ ‌நோக்கங்களாகும்.‌
  • நீர்‌ ‌மின்‌ ‌சக்தி‌ ‌மற்றும்‌ ‌ நீர்ப்பாசனம்‌ ‌ஆகியவை‌ ‌பெரும்பாலான‌ ‌பல்நோக்கு‌‌ ஆற்றுப்‌ ‌பள்ளத்தாக்குத்‌ ‌திட்டத்தின்‌ ‌முக்கிய‌ ‌நோக்கங்களாகும்.‌ ‌

பல்நோக்குத்‌ ‌திட்டத்தின்‌ ‌பெயர்:‌
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 10

Question 3.
தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க .
விடை:
தீவிர வேளாண்மையின் பண்புகள் :

  • தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அறிமுகப்படுத்துவதாகும்.
  • சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் மற்றும் இரசாயான உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.

தோட்ட வேளாண்மையின் பண்புகள் :

  • தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
  • இவை மலைச் சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாக உள்ளது.
  • கடற்கரைப் பகுதிகளுக்கு அருகாமையில் பயிரிடுதல் இவற்றின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும்.
  • தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருட்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 4.
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.
விடை:
உணவுப்பயிர்கள்:
அதிக மக்கள் தொகை காரணமாக இந்திய வேளாண்மை பெரும்பாலும் உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நெல் :

  • நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
  • இது அயனமண்டலப் பயிராகும். 24°C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
  • வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது.
  • நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
  • இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகின்றது. விதைத் தூரல் முறை
  • ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை
  • நாற்று நடுதல் முறை

கோதுமை :

  • நெற்பயிருக்கு அடுத்தாற்போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும்.
  • சுமார் 85 சதவிகிதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
  • இதைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல்மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.

10th Social Science Guide இந்தியா – வேளாண்மை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… இடத்திற்கு இடம் மாறுபடும்.
அ) காலநிலை
ஆ) வானிலை
இ) மண்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மண்

Question 2.
மண்துகள்கள் ……………… வகைப்படும்.
அ) 4
ஆ) 3
இ) 5
ஈ) 7
விடை:
ஆ) 3

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 3.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ……………… ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) 1935
ஆ) 1953
இ) 1967
ஈ) 1992
விடை:
ஆ) 1953

Question 4.
மண் ……………. பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அ) 8
ஆ) 7
இ) 3
ஈ) 2
விடை:
அ) 8

Question 5.
வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை ……….
அ) வேளாண்மை
ஆ) நீர்ப்பாசனம்
இ) கால்வாய்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) நீர்ப்பாசனம்

Question 6.
……………… பாசனம் இந்தியாவின் 2வது முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாகும்.
அ) கால்வாய்
ஆ) கிணற்று
இ) ஏரிப்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) கால்வாய்

Question 7.
………………. பாசனம் இரண்டு வகைப்படும்.
அ) கால்வாய்ப்
ஆ) ஏரிப்
இ) கிணற்றுப்
ஈ) சொட்டுநீர்ப்
விடை:
அ) கால்வாய்ப்

Question 8.
சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ……………. நீர் சேமிக்கப்படுகிறது.
அ) 60%
ஆ) 70%
இ) 20%
ஈ) 80%
விடை:
ஆ) 70%

Question 9.
தண்ணீ ர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் …….
அ) ICAR
ஆ) PMKY
இ) IBWL
ஈ) எதுவுமில்லை
விடை:
PMKY

Question 10.
……………… வேளாண்மை வெட்டுதல் (ம) எரித்தல் வேளாண்மை எனப்படுகிறது.
அ) தன்னிறைவு
ஆ) இடப்பெயர்வு
இ) கலப்பு
ஈ) வறண்ட நில
விடை:
ஆ) இடப்பெயர்வு

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 11.
வேளாண் பருவம் ……………… வகைப்படும்.
அ) 4
ஆ) 7
இ) 3
ஈ) 5
விடை:
இ 3

Question 12.
கம்பு ………………ஐ பூர்வீகமாக கொண்ட பயிர்.
அ) ஆசியா
ஆ) இந்தியா
இ) ஆப்பிரிக்கா
ஈ) யூரேசியா
விடை:
இ ஆப்பிரிக்கா

Question 13.
இந்தியாவின் முக்கியப் பயிர் …………………….
அ) கோதுமை
ஆ) நெல்
இ) சோளம்
ஈ) பார்லி
விடை:
ஆ) நெல்

Question 14.
ஏற்றுமதி நோக்கத்திற்காக பயிரிடப்படுபவை ……………… பயிர்கள் ஆகும்.
அ) உணவு
ஆ) வாணிப
இ) முக்கிய
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) வாணிய

Question 15.
அசாமிகா எனும் தேயிலையின் பிறப்பிடம் ……………. ஆகும்.
அ) ஜப்பான்
ஆ) சீனா
இ) இத்தாலி
ஈ) இந்தியா
விடை:
ஈ) இந்தியா

Question 16.
கடல் மீன்பிடிப்பில் முதலிடம் பிடிக்கும் மாநிலம் ……………… ஆகும்.
அ) அசாம்
ஆ) தமிழ்நாடு
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
இ கேரளா

Question 17.
உள்நாட்டு மீன்பிடிப்பில் முதலிடம் ………….
அ) பீகார்
ஆ) குஜராத்
இ) ஆந்திரப் பிரதேசம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஆந்திரப் பிரதேசம்

Question 18.
காற்று (ம) நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் அளவு பாதிக்கப்படுகிறது ………..
அ) வளமற்ற மண்
ஆ) மண்ண ரிப்பு
இ) பற்றாக்குறை
ஈ) நீர்ப்பாசனம்
விடை:
ஆ) மண்ணரிப்பு

Question 19.
வேளாண்மை ……………… மூலதனம் தேவைப்படும் தொழிலில் ஒன்று.
அ) குறைவு
ஆ) அதிக
இ) நடுநிலைமை
ஈ) எதுமில்லை
விடை:
ஆ) அதிக

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 20.
உருளைக்கிழங்கால் ஏற்படும் புரட்சி ………………. புரட்சி.
அ) மஞ்சள்
ஆ) நீலம்
இ) பழுப்பு
ஈ) வட்ட
விடை:
ஈ) வட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வளங்களில் …………………….. மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
விடை:
மண்வளம்

Question 2.
இந்தியா …………….. மண் வகையைக் கொண்டது.
விடை:
8

Question 3.
……………………. என்பது தண்ணீ ர் பயன்பாட்டை ஏற்படுத்தப்பட்ட திட்டம்.
விடை:
PMKY

Question 4.
இந்திய உணவுப்பயிர்கள் ………… வகைப்படும்.
விடை:
ஆறு

Question 5.
நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப் பயிர் …………… ஆகும்.
விடை:
சோளம்

Question 6.
………….. நம் நாட்டின் முக்கிய தானியப்பயிர் ஆகும்.
விடை:
பார்லி

Question 7.
இந்தியா ……………………. உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
விடை:
கரும்பு

Question 8.
பருத்தி உற்பத்தியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ……….. இரண்டாவது இடத்திலுள்ளது.
விடை:
சீனா

Question 9.
காபி …………….. சூழலில் நன்கு வளரும்.
விடை:
நிழலில்

Question 10.
உலக காபி உற்பத்தியில் இந்தியா ……………. இடத்தை வகிக்கிறது.
விடை:
ஏழாவது

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 11.
இந்தியா மொத்த கால்நடைகளில் மாடுகள் ……………… ஆகும்.
விடை:
37.3%

Question 12.
பழங்காலம் தொட்டே நறுமணப் பொருட்களுக்கு ………… உலக புகழ்பெற்றது.
விடை:
இந்தியா

Question 13.
இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு ……………. தொடங்கியது.
விடை:
1919

Question 14.
………………… நறுமணப் பொருள் உற்பத்தியில் முதன்மையான மாநிலம்.
விடை:
கேரளா

Question 15.
………………… ஆற்றுப் பள்ளத்தாக்கு என்பது நீர்வள மேலாண்மையான திட்டமாகும்.
விடை:
பல்நோக்கு

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.

Question 1.
கூற்று : கரிசல் மண் தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளிலிருந்து உருவாகிறது.
காரணம் : பருத்தி, தினை கரிசல்மண்ணில் நன்கு வளரும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று : சொட்டு நீர்ப் பாசனத்தில் நீரானது குழாயிலுள்ள நுண்துளைகள் வழியே பயிருக்கு பாய்ச்சப்படுகிறது.
காரணம் : இப்பாசனம் மூலம் 70% நீர் வீணாகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு

IV. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) வண்ட ல் மண்
ஆ) செம்மண்
இ) கரிசல் மண்
ஈ) பாசனம்
விடை:
ஈ) பாசனம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 2.
அ) மாடு
ஆ) வெள்ளாடு
இ) எருமை
ஈ) மீன்
விடை:
ஈ) மீன்

V. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 11
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 12

VI. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
நீர்ப்பாசனம் குறிப்பு வரைக.
விடை:

  • வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால், வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

Question 2.
வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம் குறிப்பு வரைக.
விடை:

  • இவ்வகை நீர்ப்பாசனத்தில் நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படுகிறது. 4 மீட்டர் உயரம் வரையுள்ள பயிர் வகைகளுக்கும் இவற்றின் மூலம் நீர் பாசனம் செய்யலாம்.
  • எ.கா. கரும்பு மற்றும் சோளப் பயிர்கள்

Question 3.
தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
விடை:

  • தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத் துறை உதவியுடன் மேற்கொள்கிறது.
  • இக்கணக்கெடுப்புகள் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை , மீன்வளத் துறை போன்றவற்றின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படுகிறது.

Question 4.
பாசனத்தின் மூலங்கள் யாவை?
விடை:

  • கால்வாய் பாசனம்
  • கிணற்றுப் பாசனம்
  • ஏரிப் பாசனம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 5.
தோட்டக்கலை பயிர்கள் குறிப்பு வரைக.
விடை:

  • தோட்டக்கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள் மற்றும் காய்வகைப் பயிர்களைக் குறிக்கிறது.
  • பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

Question 6.
கலப்பு வேளாண்மை என்பது யாது?
விடை:
கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

VII. காரணம் கூறுக.

Question 1.
சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீரை சேமிக்கலாம்.
விடை:
நீர் சொட்டு சொட்டாக விடப்படுவால் நீர் சேமிக்கப்படுகிறது.
இந்நீர்ப்பாசனத்தின் மூலம் 70% நீர் சேர்க்கப்படுகிறது.

Question 2.
சணல் ஒரு வெப்பமண்டலப் பயிராகும்.
விடை:
வண்டல் மண்ணில் சணல் வளர்வதால் சணல் ஒரு வெப்பமண்டல இழைப் பயிராகும்.

VIII. வேறுபடுத்துக.

Question 1.
செம்மண் மற்றும் சரளை மண்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 13

Question 2.
கால்வாய்ப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 14

IX. பத்தியளவில் விடையளி.

Question 1.
கிணற்றுப் பாசனம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
கிணற்றுப் பாசனம்:

  • கிணறு என்பது புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியின் மேற்பரப்பிற்கு கொண்டுவருதல் ஆகும்.
  • இது நாட்டின் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது.
  • மழைப்பொழிவு குறைவான பகுதிகளிலும் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாத பகுதிகளிலும் கிணற்றுப் பாசனம் அவசியமாகிறது.
  • கிணறுகள் இரண்டு வகைப்படும். அவை,
    1. திறந்தவெளிக் கிணறுகள்
    2. ஆழ்துளைக் கிணறுகள்.

1 . திறந்த வெளிக் கிணறுகள்:

  • நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகிறது.
  • இப்பாசனம் கங்கை சமவெளி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா , காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

2. ஆழ்த்துளைக் கிணறுகள்:

  • ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின் மிகை பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
  • குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 2.
இந்தியாவின் முக்கிய பயிர்கள் மற்றும் அதில் வாணிபப் பயிர்கள் பற்றி விவரி.
விடை:
இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. உணவு பயிர்கள் – நெல், கோதுமை, மக்காச்சோளம், தினைப்பயிர்கள், பருப்பு வகைகள்.
  2. வாணிபப் பயிர்கள் – கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள்.
  3. தோட்டப்பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்
  4. தோட்டக்கலைப் பயிர்கள் – பழங்கள், மலர்கள், மற்றும் காய்கறிகள்

2. வாணிபப்பயிர்கள் :

  • வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வாணிபப்பயிர்கள் என அழைக்கிறோம்.
  • வாணிபப்பயிர்கள் கரும்பு, புகையிலை, இழைப்பயிர்கள் (பருத்தி மற்றும் சணல்) மற்றும் எண்ணெய் வித்துக்களை உள்ளடக்கியதாகும்.

கரும்பு:

  • இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகும்.
  • இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது.
  • இந்தியாவில் உத்தரப்பிரதேசம் கரும்பின் முதன்மை உற்பத்தியாளராகும்.
  • அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாகும்.

பருத்தி:

  • இது இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருள்களை அளிக்கிறது.
  • பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

சணல்:

  • சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிராகும்.
  • சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்காள மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
  • பீகார், அசாம் மற்றும் மேகாலயா சணல் பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.

எண்ணெய் வித்துக்கள்:

  • இந்தியர்களின் உணவில் கொழுப்பு சத்தை அதிகம் அளிப்பது எண்ணெய் வித்துக்கள் ஆகும்.
  • நிலக்கடலை, கடுகு, எள், ஆளி விதை, சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி விதைகள், நைஜர் விதைகள் போன்றவை முக்கியமான எண்ணெய் வித்துக்கள் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 10 தொழிற்புரட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 10 தொழிற்புரட்சி

9th Social Science Guide தொழிற்புரட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?
(அ) ஆர்க்ரைட்
(ஆ) சாமுவேல் கிராம்ப்டன்
(இ) ராபர்ட் ஃபுல்டன்
(ஈ) ஜேம்ஸ் வாட்
விடை:
(இ) ராபர்ட்ஃபுல்டன்

Question 2.
மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?
(அ) நிலம் கிடைக்கப் பெற்றமை
(ஆ) மிகுந்த மனித வளம்
(இ) நல்ல வாழ்க்கைச் சூழல்
(ஈ) குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை
விடை:
(ஈ) குளிர்ச்சியான தட்பவெப்பநிலை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
(அ) எலியாஸ் ஹோவே
(ஆ) எலி-விட்னி
(இ) சாமுவேல் கிராம்டன்
(ஈ) ஹம்ப்ரி டேவி
விடை:
(அ) எலியாஸ் ஹோவே

Question 4.
நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?
(அ) டி வெண்டெல்
(ஆ) டி ஹிண்டல்
(இ) டி ஆர்மன்
(ஈ) டி ரினால்ட்
விடை:
(அ) டி வெண்டெல்

Question 5.
சிலேட்டரை அமெரிக்கக் தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?
(அ) எப்.டி. ரூஸ்வெல்ட்
(ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்
(இ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
(ஈ) உட்ரோ வில்சன்
விடை:
(ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?
(அ) சுதந்திர தினம்
(ஆ) உழவர் தினம்
(இ) உழைப்பாளர் தினம்
(ஈ) தியாகிகள் தினம்
விடை:
(இ) உழைப்பாளர் தினம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 7.
எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?
(அ) இங்கிலாந்து
(ஆ) ஜெர்மனி
(இ) பிரான்ஸ்
(ஈ) அமெரிக்கா
விடை:
(ஆ) ஜெர்மனி

Question 8.
பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?
(அ) லூயி ரெனால்ட்
(ஆ) ஆர்மாண்ட் பீயூகாட்
(இ) தாமஸ் ஆல்வா எடிசன்
(ஈ) மெக் ஆடம்
விடை:
(ஆ) ஆர்மாண்ட் பீயூகாட்

Question 9.
எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது?
(அ) உருட்டாலைகள்
(ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்
(இ) ஸ்பின்னிங் மியூல்
(ஈ) இயந்திர நூற்புக் கருவி
விடை:
(ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்

Question 10.
கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது?
(அ) கற்கரி
(ஆ) கரி
(இ) விறகு
(ஈ) காகிதம்
விடை:
(ஆ) கரி

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
………. இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.
விடை:
சாசன இயக்க வாதிகள்

Question 2.
………… உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது.
விடை:
ஜான் லவுடன் மெக் ஆடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ………. கண்டுபிடித்தார்.
விடை:
ஹென்றி பெஸ்ஸிமர்

Question 4.
விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ………. ஆவார்.
விடை:
கார்ல் மார்க்ஸ்

Question 5.
ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ………. ஆண்டில் இயக்கப்பட்டது
விடை:
டிசம்பர் 1835 ஆம் ஆண்டு

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
(i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர்.
(ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடையதாக இருக்கும்.
(iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார்.
(iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் பெறவேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.
அ) i) சரி
ஆ) ii) மற்றும்
iii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) iii) சரி
விடை:
இ) i) மற்றும்
iv) சரி

Question 2.
(i) தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டனர்.
(ii) ஜெர்மனியின் அரசியல் முறை தொழிற்புரட்சிக்குக், குறிப்பிடத்தக்க முக்கியச் சவாலாக அமைந்திருந்தது.
(iii) முதலாளிகளைப் பாதுகாப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை முன்வைத்தார்.
(iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள் ஏதுமில்லை.
அ) i) சரி
ஆ) ii) மற்றும்
iii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) iii) சரி
விடை:
எதுவும் இல்லை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
கூற்று : விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்.
காரணம் : பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ)கூற்று, காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
விடை:
ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு

Question 4.
கூற்று : சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
காரணம் : அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆ)கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி 40

V. கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளிக்கவும்

Question 1.
தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்விடங்களின் நிலை எவ்வாறு இருந்தன?
விடை:

  • தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் விரும்பினாலும் கூடத் தமது சுற்றப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.
  • இதனால் டைஃபாயிடு , காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.

Question 2.
இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைக் கூறு.
விடை:

  • தொழிற்புரட்சியால் இங்கிலாந்து உலகின் தொழிற்பட்டறையாக மாறியது. வேளாண் உற்பத்தி பொதுவான வீழ்ச்சி கண்டது. இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
  • 1840ல் 20 இலட்சமாக இருந்த லண்டன் மக்கள் தொகை 40 ஆண்டுகளில் 50 இலட்சமாக உயர்ந்தது.
  • மான்செஸ்டர் ஜவுளி உற்பத்தி தொழிலின் தலைநகரமாக மாறியது, ஏராளமான மக்களை ஈர்த்தது. 1771ல் 22 ஆயிரம் மக்களுடன் மந்தமான நகராக இருந்த மான்செஸ்டர் அடுத்த 50 ஆண்டுகளில் 180 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாக மாறியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1886 மே மாதம் 4ஆம் தேதி, சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தொடங்கியது.
  • காவல் துறை பல சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தி பலரைச் சுட்டுக் கொன்றது. இந்நிகழ்வு “ஹே மார்க்கெட் படுகொலை” என அழைக்கப்படுகிறது.
  • ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1 ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
  • மே-1 சர்வதேச தொழிலாளர் நாள் (மே தினம்)

Question 4.
லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
1898 இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார்.

ரெனால்ட்:
(ரெனால்ட் சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.

Question 5.
தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.
விடை:

  • இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி வணிக விரிவாக்கம், உணவு உற்பத்தி அதிகரிப்பு, ஆலைத் தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம் உருவாதல், நகரமயமாக்கம் ஆகிய வளர்ச்சிப் போக்குகளுக்கு இட்டுச்சென்றது.
  • புதிய நகரங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி, அமைப்பாகத் திரண்ட தொழிலாளர் இயக்கம், தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோருதல், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்தக் கோருதல் ஆகிய சமூகநிலைகள் அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாக்கின.

VI. விரிவாக விடையளிக்கவும்

Question 1.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.
விடை:
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி :
உடலுழைப்பிலிருந்து தொழில்நுட்பம், இயந்திரம் சார்ந்த உற்பத்திக்கு மாறுதல்:

  • இங்கிலாந்தின் சாமுவேல் சிலேட்டர் ஓர் ஜவுளி ஆலையை நிர்வாகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார். புதிய தொழில் நுட்பங்களால் அமெரிக்கர்களின் ஆர்வத்தை கேள்விபட்டு 1789ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார்.
  • ரோட்ஸ் தீவின் மோசஸ் பிரேளன் ஜவுளி ஆலையில் வேலைவாய்ப்பு பெற்று 1793ல் ஆலையை இயக்க
    வைத்தார். அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை இதுவே. சிலேட்டரின் தொழில் நுட்பம் மேலும் மேலும் புகழடைந்து பல தொழில் முனைவோர்கள் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர். அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” எனப் புகழ்ந்தார்.

புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குதல்:

ராபர்ட் ஃபுல்டன் – நீராவிப் படகுப் போக்குவரத்து (ஹட்சன் நதியில்)
சாமுவேல் மோர்ஸ் – தந்தி
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் – தொலைபேசி
எலியாஸ் ஹோவே – தையல் இயந்திரம்
தாமஸ் ஆல்வா எடிசன் – மின் விளக்கு

கண்டங்களை இணைக்கும் இரயில் பாதை அமைதல் :
1869ல் கண்டங்களை இணைக்கும் முதல் இரயில் பாதை அமைக்கப்பட்டது. இது மக்கள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, மூலபபொருடகள எடுத்து வருதல் ஆகியவற்றுக்குப் பயன்பட்டது.

அமெரிக்க அரசின் ஆதரவு:
அமெரிக்க அரசு தொழில் வளர்ச்சியை ஆதரித்தது. ரயில் பாதைகள் அமைப்பதற்கான நிலங்கள் வழங்கியது.

ஏகபோகம்:

  • முதல் கனரக எஃகு உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆண்ட்ரு கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது. சுரங்கங்கள் உற்பத்தி ஆலைகள், வெப்ப உலைகள், ரயில் பாதைகள், கப்பல் போக்குவரத்து என ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கி, எஃகு உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்,
  • ஒரு கிராமப்புற சமூகமாகத் திகழ்ந்த அமெரிக்கா, நகர்புறப் படுத்தியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 2.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்டவிளைவுகள் யாவை?
விடை:
இந்தியாவில் தொழிற்புரட்சி தாக்கம்:

  • 18 ஆம் நுற்றாண்டின் இடைபகுதிவரை இந்தியா வேளாண்மைக்காக மட்டுமல்லாமல் அதன் மிகச்சிறந்த உற்பத்திப் பொருள்களுக்காகவும் அறியப்பட்டிருந்தது.
  • ஜான் கே என்பவரால் பறக்கும் நாடா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில் ஹர்கிரீவ்ஸ், ஆர்க்ரைட், கிராம்ப்டன் ஆகியோரின் கண்டுபிடிப்புகளினால் நூற்பு, நெசவுத் தொழில் ஆகியன பெரும் வளர்ச்சியடைந்தன. இதனால் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
  • வங்கத்து நெசவாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப்பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர்.
  • கைத்தறி நெசவு, பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்து மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மட்டுமே மாறியது.
  • டாக்கா மஸ்லின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. கச்சாப் பருத்தி ஏற்றுமதியும் படிப்படியாகச் சரிந்தது.
  • பிரிட்டன் உற்பத்தித் துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்களாயினர். பல லட்சம் மக்கள் பஞ்சத்தால் மடிந்தனர், பஞ்சத்தால் சாக விரும்பாத லட்சக்கணக்கானோர் (விவசாயிகள், கைவினைஞர்) தாய்நாட்டை விட்டு வெளியேறி, பிரிட்டிஷ் காலனி நாடுகளின் மலைத்தோட்டங்களில், மோசமான சூழல்களில் அடிமைகளாய், ஒப்பந்தக் கூலிகளாய் வாழ நேர்ந்தது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. தொழிற் புரட்சியின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஒரு பேச்சுப் போட்டி நடத்துக.
2. துணி இழைகள் வடிவமைப்புகள் ஆகியவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் பற்றிப் பட்டியல் தயார் செய்யவும்

9th Social Science Guide தொழிற்புரட்சி Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…….. நீராவி இயந்திரத்தினைச்சுழலும் நீராவி இயந்திரமாக வடிவமைத்தார்.
விடை:
ஜேம்ஸ்வாட்

Question 2.
1767 ல் …….. இயந்திர நுற்புக்கருவியைக் கண்டுபிடித்தார்
விடை:
ஜேம்ஸ் ஹார்கிரில்டும்

Question 3.
…………….. நீர்ச் சட்டகத்தைக் கண்டுபிடித்தவர்
விடை:
ரிச்சர்ட் ஆர்க்ரைட்

Question 4.
1793 ல் எலிவிட்டினி….. கருவியைக் கண்டுபிடித்தார்
விடை:
காட்டன் ஜின்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 5.
1856 ல் …………….. எஃகு தயாரிக்க விரைவான முறையைக் ஹென்றி பெஸ்ஸிமர்
விடை:
கண்டுபிடித்தார்

II. குறுகிய விடையளி

Question 1.
ஜவுளி ஆலைத்தொழில் வளர்ச்சியில் ஏதேனும் இரு சாதனைகளைக் கூறு.
விடை:

  • 1733 இல் ஜான் கே கண்டுபிடித்த கைகளால் இயக்கப்படும் ‘flying shuttle’ எனப்படும் பறக்கும் நாடா நூற்பின் வேகத்தை அதிகரித்தது.
  • 1767 இல் ஜேம்ஸ் ஹார்கீரீவ்ஸ் இயந்திர நூற்புக் கருவியைக் கண்டுபிடித்தார். இது ஒரே சமயத்தில் எட்டு நூல்களை ஒன்றாகப் பின்னி நூற்றது.
  • இரண்டாண்டுகளுக்குப் பிறகு ரிச்சர்ட் ஆர்க்ரைட் ‘நீர்ச்சட்டகத்தைக் கண்டுபிடித்தார்.

Question 2.
ஜவுளி ஆலைத் தொழிலின் முக்கிய மையங்கள் யாவை?
விடை:
டெர்பிஷையர், லங்காஷையர், செஷையர், ஸ்டாஃபோர்டுஷையர், நாட்டிங்காம்ஷையர், யார்க்க்ஷையர் ஆகியவை முக்கியத் தொழில் மையங்களாக மாறின. இதில் மிக முக்கியமானது மான்செஸ்டர் ஆகும்.

Question 3.
தொழிற்புரட்சிக்கு முன்புவரை இருந்த இருவகை சுரங்கங்கள் யாவை?
விடை:
டிரிஃபிட் மைனிங், பெல்பிட்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 4.
வட கடலின் பாதுகாப்பான துறைமுகங்கள் யாவை?
விடை:
பிரைமன், ஹாம்பர்க்

III. ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கு விடையளிக்கவும்

Question 1.
தொழிலாளர் இயக்கம்
அ) சீர்திருத்த மசோதா எப்பொழுது கொண்டுவரப்பட்டது?
விடை:
1832-ல்

ஆ) அச்சட்டம் யாருக்கு வாக்குரிமை அளித்தது?
விடை:
சொந்தமாகச் சொத்து வைத்திருந்த நடுத்தர மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளித்தது.

இ) ஏன் இதை சாசன இயக்கம் என்று அழைக்கிறோம்?
விடை:
இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான மக்கள் அவையில் (House of Common) தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொழிலாளர் இயக்கம் வலியுறுத்தியதால் அது “சாசன இயக்கம” என்று அழைக்கப்படுகிறது.

ஈ) சாசனவாதிகளின் கோரிக்கைகள் யாவை?
விடை:

  • இருபத்தியோரு வயதான ஆண்களுக்கு வாக்குரிமை
  • ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற தேர்தல்
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமை நீக்குதல்.
  • ஆண்டு தோறும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்
  • சமமான பிரதிநிதித்துவம்.

Question 2.
போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அ) இங்கிலாந்தில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட இருப்புப்பாதை எது?
விடை:
ஸ்டாக்டன், டார்லிங்டன் நகரங்களுக்கிடையேயான இரும்புப்பாதை (1825)

ஆ) உற்பத்திப் பண்டங்கள் எவ்வாறு சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டன?
விடை:

  • புதிய கால்வாய்கள்
  • சாலைகள் – இரும்புப் பாதைகள்

இ) நீராவி இயந்திர ரயிலைக் கண்டு பிடித்தவர் யார்?
விடை:
ஜார்ஜ் ஸ்டீபன்கள்

ஈ) நியூயார்கிலிருந்து ஆல்பனி வரை சென்ற நீராவிப் படகின் பெயரினை எழுது?
விடை:
கிளர்மோண்ட்

IV. விரிவான விடையளி

Question 1.
தொழிற்புரட்சியின் பண்புகள் யாவை?
விடை:
தொழிற்புரட்சியின் முக்கியப் பண்புகள், தொழில் நுட்பம், சமூகப் பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலானவையாக இருந்தன. அதன் பின்பு பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்.
புதிய தொழில்நுட்பங்கள்.

  • புதிய அடிப்படை மூலப்பொருட்களின் பயன்பாடு : இரும்பு, எஃகு
  • புதிய எரிபொருள் மூலங்களின் பயன்பாடு : நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம்
  • இயந்திர நூற்புக் கருவி விசைத்தறி போன்ற புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள், மனித ஆற்றலைக் குறைந்த அளவு பயன்படுத்தி உற்பத்தி அளவை அதிகரிக்க உதவின.
  • தொழிற்சாலை முறை எனப்படும் புதிய அமைப்பின் உருவாக்கமானது வேலைப்பங்கீடு, சிறப்புகவனத்துடனான தனித்திறன் வளர்ச்சி போன்றவற்றிற்கு வழிவகுத்தது.
  • போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சி.
  • அறிவியலை அதிக அளவில் தொழில்துறைக்குப் பயன்படுத்துதல்.
  • புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி 81

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 9 புரட்சிகளின் காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 9 புரட்சிகளின் காலம்

9th Social Science Guide புரட்சிகளின் காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி ………… ஆகும்.
அ) நியூயார்க்
ஆ) பிலடெல்பியா
இ) ஜேம்ஸ்ட வுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்
விடை:
இ) ஜேம்ஸ்டவுன்

Question 2.
பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ………….
அ) மிரபு
ஆ) லஃபாயெட்
இ) நெப்போலியன்
ஈ) டான்டன்
விடை:
ஆ) லஃபாயெட்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
லஃபாயெட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் ………………. எழுதப்பட்டது.
அ) சுதந்திர பிரகடனம்
ஆ) பில்னிட்ஸ் பிரகடனம்
இ) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.
ஈ) மனித உரிமை சாசனம்
விடை:
இ) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.

Question 4.
……….. இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.
அ) டிரன்டன்
ஆ) சாரடோகா
இ) பென்சில் வேனியா
ஈ) நியூயார்க்.
விடை:
ஆ) சாரடோகா

Question 5.
பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக …………… இருந்தது.
அ) வெர்செயில்ஸ்
ஆ) பாஸ்டைல் சிறைச்சாலை
இ) பாரிஸ் கம்யூன்
ஈ) ஸ்டேட்ஸ் ஜெனரல்
விடை:
அ) வெர்சே மாளிகை

Question 6.
ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ………… போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.
அ) வெர்ணா
ஆ) வெர்செயில்ஸ்
இ) பில்னிட்ஸ்
ஈ) வால்மி
விடை:
ஈ) வால்மி

Question 7.
‘கான்டீட்’ என்ற நூல் ………… ஆல் எழுதப்பட்டது
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) டாண்டன்
விடை:
அ) வால்டேர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 8.
பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் ……………
அ) ஜெரோண்டியர்
ஆ) ஜேக்கோபியர்
இ) குடியேறிகள்
ஈ) அரச விசுவாசிகள்
விடை:
அ) ஜெரோண்டியர்

Question 9.
……………. ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதிப் போர் முடிவுக்கு வந்தது.
அ) 1776
ஆ) 1779
இ) 1781
ஈ) 1783
விடை:
ஈ) 1783

Question 10.
தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ……… ஆகும்.
அ) இயல்பறிவு
ஆ) மனித உரிமைகள்
இ) உரிமைகள் மசோதா
ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்
விடை:
அ) இயல்பறிவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் …………..
விடை:
பெஞ்சமின் பிராங்கிளின்

Question 2.
பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு ……..
விடை:
1775

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
………… சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
விடை:
செலவாணி

Question 4.
பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் ……….. ஆவார்.
விடை:
மிரபு

Question 5.
சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும் விழா நடத்தியதால் …………… கில்லட்டினால் கொல்லப்பட்டார்.
விடை:
ஹொபாட

Question 6.
பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது ………. நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
விடை:
வெர்னே

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி

Question 1.
i) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவார்.
ii) பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது
iii) குகேவக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்.
iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.
அ) i)மற்றும்
ii) சரியானவை
ஆ) iii)சரி
இ)iv)சரி
ஈ) i)மற்றும்
iv) சரியானவை
விடை:
ஈ) i) மற்றும்
iv) சரியானவை

Question 2.
i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.
ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன.
iii) வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்.
iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது.
அ) i) மற்றும்
ii) சரியானவை
ஆ) iii)சரி
இ) iv)சரி
ஈ) i)மற்றும்
iv)சரியானவை
விடை:
அ) i) மற்றும்
ii) சரியானவை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
கூற்று (கூ) : ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.
காரணம் (கா) : ஆங்கிலேய நிதி அமைச்சர் அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினர்.
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Question 4.
கூற்று (கூ) : கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர்.
காரணம் (கா) : அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை
அ) கூற்றும் காரணமும் தவறானவை
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம் 10

V. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமான விடையளி

Question 1.
பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?
விடை:

  • இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட மதச்சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகளே பியூரிட்டானியர் என்று அழைக்கப்பட்டனர்.
  • இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் அரசர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
  • எனவே அவர்கள் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பியூரிட்டானியர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறினர்

Question 2.
குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?
விடை:

  • இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறிஸ்துவ மதக்குழுவின் உறுப்பினர்கள் குவேக்கபர் எனப்பட்டனர்.
  • இவர்கள் புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவமும் சடங்கு சம்பிரதாயங்களையும் சமயக்குருமார் அமைப்பையும்
    எதிர்த்த னர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
‘பாஸ்டன் தேநீர் விருந்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
விடை:

  • 1773 ல் குடியேற்ற மக்கள் அமெரிக்கப் பூர்வீக குடிமக்களைக் போன்று மாறுவேடம் பூண்டு கப்பல்களில் ஏறி அதிலிருந்த தேயிலையைக் கடலில் வீசினர். இந்நிகழ்ச்சி பாஸ்டன் தேநீர் விருந்து’ எனப்படுகிறது.
  • இந்நிகழ்ச்சி இங்கிலாந்துக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட வழிகோலியது.

Question 4.
செப்டம்பர் படுகொலை பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • 1792ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரிஸ் கம்யூன் அரசருடைய அரண்மனையை தாக்க ஆணை பிறப்பித்தது.
  • எனவே அரசர் தன்னுடைய சுவிட்சர்லாந்து நாட்டுக் காவலர்களை, மக்களை நோக்கிச் சுடுமாறு ஆணை
    பிறப்பித்தார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சுவிட்சர்லாந்து காவலர்களின் செயல்களால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.
  • மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1500 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
  • விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி செப்டம்பர் படுகொலை என அழைக்கப்படுகிறது.

Question 5.
பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக.
விடை:
முதல் வர்க்கம் : மதகுருமார்
இரண்டாவது வர்க்கம் : பிரபுக்கள்
மூன்றாம் வர்க்கம் : வழக்கறிஞர்கள், பணம் படைத்த வர்த்தகர்கள், வணிகர்கள், வங்கியாளர்கள்,
நிலவுடையாளர்கள் ஆகியோர் அடங்கிய பொதுமக்கள். இவர்கள் மூன்றாவது வாக்கத்தினர் பிரபுக்களுக்குத் தலைவணங்கவும் அரசரின் ஆணைகளுக்கு பணியவும் மறுத்தனர்.

Question 6.
பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக.
விடை:

  • லஃபாயட் என்பவர் மக்களாட்சிக் கோட்பாடுகளோடு நாடு திரும்பி, பிரெஞ்சுப் படையில் முக்கியப்பங்கு வகித்தார்.
  • இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பரிவுக்கு தலைமையேற்றார்.
  • ஜெபர்சன் உதவியோடு இவர் ‘மனிதன் மற்றும் பிரகடனம்’ என்பதை எழுதினார்.

Question 7.
பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?
விடை:

  • அரசரால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர்.
    அவர்களைக் கலைக்க அரசர் தனது படை வீரர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர்கள் பணிய மறுத்தனர்.
  • மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் அயல் நாட்டுப் படையினரை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • இதை அறிந்த மக்கள் கிளர்ச்சியில் இறங்கி, பாஸ்டில் சிறையைத்தகர்த்தி அங்கேசிறைவைக்கபட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 8.
பிரெஞ்சு புரட்சியின் போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?
விடை:

  • டித் (தசமபாகம்)
  • டெய்லே (நிலவரி)
  • காபெல்லே (உப்புவரி)

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
விடை:

  • ஏழாண்டுப் போரினால் இங்கிலாந்து பெருமளவு பணம் செலவு செய்ய நேர்ந்தது. செலவான தொகையில் ஒரு பகுதியை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இங்கிலாந்து விரும்பியது.
  • எனவே குடியேற்ற நாடுகள் மீது ஒன்றன்பின் ஒன்றாக பல வரிகள் விதிக்கப்பட்டன.
  • 1764 ஆம் ஆண்டின் சர்க்கரைச் சட்டத்தினை அமெரிக்கர்கள் எதிர்த்தனர். சர்க்கரைச் சட்டத்தின் முகவுரையே “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை ” எனும் முழக்கம் உருவாகக் காரணமாயிற்று.
  • தங்களின் கருத்துக்களைக் கேட்காமல் உருவாக்கப்படும் கொள்கைகளுக்கு வரி கட்டமுடியாது என்ற
    வாதத்தைக் குடியேற்ற மக்கள் எழுப்பினர்.
  • பல்வேறு புதிய சட்டங்கள் மூலம் பல புதிய வரிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டன. * தங்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கள் மீது வரி விதிக்கும் ஆங்கில நாடாளுமன்றத்தின் உரிமைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
  • “பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பில்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது. இதுவே அமெரிக்க சுதந்திரப் போருக்கு முக்கியக் காரணமாயிற்று.

Question 2.
1789ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பினை விளக்கவும்.
விடை:

  • பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டில் பல தத்துவஞானிகளும், எழுத்தாளர்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
  • வால்டேர் : வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார். வால்டேரின் புகழ் பெற்ற நூல் ‘கான்டீட்’ என்பதாகும்.
  • ரூசோ : இவருடைய அரசியல் கருத்துக்கள் பலரது மனங்களைக் கவர்ந்து புதிய முடிவுகளை எடுக்கச் செய்தன. பிரெஞ்சுப் புரட்சியில் இவரது சிந்தனைகள் முக்கியப் பங்காற்றின. சமூக ஒப்பந்தம் என்ற நூலில் மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • மாண்டெஸ்கியூ : இவர் ‘சட்டத்தின் சாரம்’, ‘பாரசீக மடல்கள்’ என்னும் நூல்களை எழுதினார். சுதந்திரத்திற்கு ஆதரவாக வாதாடினார். அவர் அதிகாரப் பிரிவினை என்னும் கோட்பாட்டை முன் வைத்தார். எந்த ஓர் அரசியலில் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அங்குதான் தனிமனிதனின் சுதந்திரம் சிறப்பாகப் பாதுகாக்கும் என்று எடுத்துரைத்தார்.

VIII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பதினாறாம் லூயியின் அரசாங்கத்தைப் போன்று எந்த ஓர் அரசாங்கமும் திவாலாகி விட்டால் அந்த நெருக்கடியைச் சமாளிக்க நீங்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள்?
2. அமெரிக்கச் சுதந்திரப் போர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கம் ஆகியவற்றை ஒப்பிடுக.

9th Social Science Guide புரட்சிகளின் காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் நகரத்தை உருவாக்கியவர்கள்
அ) அமெரிக்கர்கள்
ஆ) ஆங்கிலேயர்கள்
இ டச்சுக்காரர்கள்
ஈ) பிரெஞ்சுக்காரர்கள்
விடை:
இ) டச்சுக்காரர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 2.
1775 ஆம் ஆண்டு இரண்டாவது கண்டங்களின் மாநாடு கூடிய இடம்
அ) பிலடெல்பியா
ஆ) நியூயார்க்
இ) வாஷிங்டன்
ஈ) பாஸ்டன்
விடை:
அ) பிலடெல்பியா

Question 3.
செலவாணிச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ____
அ) 1773
ஆ) 1789
இ) 1767
ஈ) 1764
விடை:
ஈ) 1764

Question 4.
பிரெஞ்சுப் புரட்சி வெடித்த ஆண்டு
அ) 1679
ஆ) 1789
இ) 1879
ஈ) 1769
விடை:
ஆ) 1789

Question 5.
சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) மிரபு
விடை:
ஆ) ரூசோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
“சுதந்திரப் பிரகடனத்தைப்” எழுதியவர் _____
விடை:
தாமஸ் ஜெபர்சன்

Question 2.
அமெரிக்கக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் _____
விடை:
ஜார்ஜ் வாஷிங்டன்

Question 3.
‘சட்டத்தின் சாரம்’ என்னும் நூலை எழுதியவர் ______
விடை:
மாண்டெஸ்கியூ

Question 4.
பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றம் ______ என்று அழைக்கப்பட்டது.
விடை:
ஸ்டேட்ஸ் ஜெனரல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 5.
பிரான்ஸ் நாட்டு விவசாயிகள் சாலை அமைத்தல் போன்ற பொதுப்பணிகளுக்கு _____ எனப்படும் இலவச உழைப்பை வழங்கினர்.
விடை:
கார்வி

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

Question 1.
i) ஏழாண்டுப் போரில் இங்கிலாந்து பிரான்சைத் தோற்கடித்தது.
ii) இங்கிலாந்தின் பூர்வீகக் குடிகள் செவ்விந்தியர்கள் என அழைக்கப்பட்டனர்.
iii) யார்க்டவுன் போரில் லஃபாயட் என்பவர் வாஷிங்டனுக்கு எதிராகப் போரிட்டார்.
iv) குடியேற்றவாதிகள் விடுதலை பெறுவதற் காகப் போரைத் தொடங்கவில்லை.
அ) i) மட்டும் சரி
ஆ) iii) மட்டும் சரி
இ i) மற்றும்
iv) சரி
ஈ) ii) மற்றும்
iii) சரி
விடை:
இ) i) மற்றும்
iv) சரி

Question 2.
கூற்று (கூ) : செலவாணிச் சட்டம் குடியேற்ற நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.
காரணம் (கா) : இச்சட்டம் குடியேற்ற நாட்டு மக்களின் கடன்களை தள்ளுபடி செய்தது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

IV. சுருக்கமான விடை தருக

Question 1.
செலவாணிச்சட்டம் – குறிப்பு வரைக.
விடை:

  • இச்சட்டம் 1764ல் இயற்றப்பட்டது.
  • இச்சட்டம் குடியேற்ற நாடுகள் இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனைக் காகிதப் பணமாக அல்லாமல் தங்கமாகவும், வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
  • குடியேற்ற நாடுகளின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையானது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 2.
தெய்வீக அரசுரிமைக் கோட்பாடு என்றால் என்ன?
விடை:

  • தெய்வீக அரசுரிமைக் கோட்பாட்டின் படி அரசர் இப்பூமியில் கடவுளின் பிரதிநிதி ஆவார்.
  • அவர் தனது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப் பட்டவர்.
  • வேறு யாருக்கும் அவர் விளக்கம் தர வேண்டியதில்லை.

Question 3.
ஜெரோண்டியர் மற்றும் ஜேக்கோபியர் என்பவர் யாவர்?
விடை:

  • தாராளவாதத் தன்மை கொண்ட மிதவாதிகள் குறைந்த பட்ச அதிகாரங்களைக் கொண்ட வரையறுக்கப்பட்ட முடியாட்சியை அமைக்க விரும்பியவர்கள் ஜெரோண்டியர்கள் என்றழைக்கப்பட்டனர்.
  • தீவரவாதத் தன்மை கொண்ட குடியரசு வாதிகள் ஜேக்கோபியர்கள் எனப்பட்டனர்.

Question 4.
எமிகிரஸ் என்பவர்கள் யாவர்?
விடை:
பிரான்ஸ் நாட்டில் முடியாட்சிக்கு ஆதரவாக இருந்த பல பிரபுக்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளில் வாழ்ந்தனர். இவர்கள் எமிகிரஸ் எனப்பட்டனர்.

V. ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி

Question 1.
டவுன்ஷெண்ட் சட்டம்
அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை:
சார்லஸ் டவுன்ஷெண்ட்

ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?
விடை:
1767 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?
விடை:
இச்சட்டம் குடியேற்றங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது வரிவசூலிக்க வகை செய்தது. மேலும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் நுழைந்து சோதனையிடும் அதிகாரத்தையும் அதகாரிகளுக்கு வழங்கியது.

ஈ) பாஸ்டன் வணிகர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்?
விடை:
டவுன்ஷெண்ட் சட்டத்தை எதிர்க்கவும், இங்கிலாந்து பொருட்களைப் புறக்கணிக்கவும் முடிவு செய்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 2.
பிரெஞ்சுப் புரட்சி
அ) பிரான்ஸில் திருச்சபை வசூலித்த வரியின் பெயர் என்ன?
விடை:
டித்

ஆ) டான்டன் என்பவர் யார்?
விடை:
தேசியப் பேரவையின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்

இ) பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸின் கலைக்களஞ்சியச் சிந்தனையாளர்கள் யாவர்?
விடை:
தீதரா மற்றும் ஜீன்-டி-ஆலம்பெர்ட்.

ஈ) பொதுச் சாலைகளின் கட்டுமானத்திற்கான இலவச உழைப்பை வழங்கியவர் யார்?
விடை:
விவசாயிகள்.

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கங்களை வெளிக் கொணர்.
விடை:

  • பிரெஞ்சுப் புரட்சி பல நீடித்த விளைவுகளை ஏற்படுத்தியது. அது பிரான்சில் வரம்பற்ற முடியாட்சி முடிவடைந்ததன் அடையாளமாயிற்று.
  • அனைத்து நிலப்பிரபுத்துவத் தனியுரிமைகளும் ஒழிக்கப்பட்டன.
  • மதகுருமார்களின் அதிகாரங்களும் ஒழிக்கப்பட்டன.
  • பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்த இப்புரட்சி அரசின் வலிமை பெருகுவதற்கு வழியமைத்துக் கொடுத்தது.
  • தேசியம் என்ற சிந்தனை வளர்வதற்கும், ஓர் உறுதியான நடுத்தர வர்க்கம் உதயமாவதற்கும் இப்புரட்சி வழிகோலியது…
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோட்பாடு உலகம் முழுவதும் சுதந்திரத்தை நேசிப்போரின் தாரக மந்திரமானது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம் 40

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

9th Social Science Guide நவீன யுகத்தின் தொடக்கம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை எழுதுக

Question 1.
கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
அ) லியானார்டோ டாவின்சி
ஆ) பெட்ரார்க்
இ) ஏராஸ்மஸ்
ஈ) தாமஸ் மூர்
விடை:
ஆ) பெட்ரார்க்

Question 2.
‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்
அ) ரஃபேல்
ஆ) மைக்கேல் ஆஞ்சலோ
இ அல்புருட் டியரர்
ஈ) லியானார்டோ டாவின்சி
விடை:
அ) ரஃபேல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 3.
வில்லியம் ஹார்வி _____ கண்டுபிடித்தார்.
அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
ஆ) பூமியே பிரபஞ்சத்தின் மையம்
இ) புவியீர்ப்பு விசை
ஈ) இரத்தத்தின் சுழற்சி
விடை:
ஈ) இரத்தத்தின் சுழற்சி

Question 4.
“தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஐான் கால்வின்
ஈ) தாமஸ்மூர்
விடை:
அ) மார்ட்டின் லூதர்

Question 5.
‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் _____
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஜான் கால்வின்
ஈ) செர்வாண்டிஸ்
விடை:
இ) ஜான் கால்வின்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 6.
பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
அ) மாலுமி ஹென்றி
ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்
இ பார்த்தலோமியோ டயஸ்
ஈ) கொலம்பஸ்
விடை:
ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்

Question 7.
பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்
அ) கொலம்பஸ் ______
ஆ) அமெரிகோ வெஸ்புகி
இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்
ஈ) வாஸ்கோடகாமா
விடை:
இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்

Question 8.
அமெரிக்க கண்டம் ____ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
அ) அமெரிகோ வெஸ்புகி
ஆ) கொலம்பஸ்
இ) வாஸ்கோடகாமா
-ஈ) ஹெர்நாண்டோ கார்டஸ்
விடை:
அ) அமெரிகோ வெஸ்புகி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 9.
கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக _____ இருந்தது.
அ) மணிலா
ஆ) பம்பாய்
இ பாண்டிச்சேரி
ஈ) கோவா
விடை:
ஈ) கோவா

Question 10.
கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) கரும்பு
ஆ) சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இ அரிசி
ஈ) கோதுமை
விடை:
ஆ) சர்க்கரைவள்ளிக் கிழங்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கி.பி. 1453ல் கான்ஸ்டாண்டி நோபிளை _____ கைப்பற்றினர்.
விடை:
உதுமானியத் துருக்கியர்

Question 2.
______ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.
விடை:
எராஸ்மஸ்

Question 3.
_____ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.
விடை:
மைக்கேல் ஆஞ்சலோ

Question 4.
கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _____ ஆகும்.
விடை:
எதிர்மத சீர்திருத்தம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 5.
வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் _____, _______ மற்றும் _____ ஆகும்.
விடை:
வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

Question 1.
அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர் அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்
ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.
இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.
ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.
விடை:
(ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

Question 2.
அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.
ஆ) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.
இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.
ஈ) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விடை:
(அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 40

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமான விடையளி

Question 1.
அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரி.
விடை:
மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கம் :

  • 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக்
    கண்டுபிடித்தார். இது நவீன மயமாதலை வேகப்படுத்தியது.
  • இத்தாலியிலிருந்த கல்வியறிஞர்கள் கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தின் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்தனர். பின்னர் அவற்றை அச்சிட்டு வெளியிட்டனர். இது மறுமலர்ச்சியின் புத்தாங்கக்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
  • மதச்சீர்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டுகாட்டும் பிரசுரங்களை விநியோகித்தனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர். மார்ட்டின்லூதரின் “95 கொள்கைகள்”
  • தாலமியின் ‘ஜியாகரபி (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்கு கொண்டுவரப்பட்டது. அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகள் அச்சிடப்பட்டு பரந்த அளவில் சுற்றுக்கு விடப்பட்டன. அதனால் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அறிவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 2.
மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
விடை:
மறுமலர்ச்சியின் விளைவுகள் :

  • ‘மனிதநேயம்’ என்றகருத்து மறுமலர்ச்சியின்மிகமுக்கியத்துவம் வாய்ந்தபங்களிப்பாகும். தனிநபர்வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசியவாதம் நோக்கிய திடமான நகர்வை அடையாளப்படுத்தியது.
  • வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. தேசிய அரசுகளின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தது.
  • திருச்சபையின் ஊழல் நடைமுறைகள் விமர்சிக்கப்பட்டன. மதச் சீர்திருத்தவாத இயக்கம் உற்சாகப் படுத்தப்பட்டது.
  • புதிய நிலவழிப்பாதைகள் கண்டுபிடிப்பு, உலக வரைபட மாற்றியமைப்பு, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிறவற்றுக்கு மறுமலர்ச்சி இட்டுச் சென்றது.

Question 3.
கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துகளை விவரி.
விடை:
மார்ட்டின் லூதரின் மாற்றுக் கருத்துக்கள் :

  • சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்மவிடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்தார். ‘நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை முடிவை முன்வைத்தார்.
  • தெய்வீக பற்றுறுதியினால் மட்டுமே கடவுளின் கருணை மனிதர்களுக்கு அருளப்படுமே அல்லாமல் மனிதர்களின் செயல்களினால் அல்ல.
  • பைபிள் அனைத்து மக்களாலும் படிக்கப்பட்டு விவாதிக்கக்கூடியதே அல்லாமல் திருச்சபையால் மட்டுமே வாசித்து விளக்கமளிக்கக்கூடிய ஒன்றல்ல.
  • கடவுளுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே திருச்சபை ஓர் இணைப்புப்பாலம் என்பதையும் நிராகரித்தார்.

Question 4.
மத எதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:
மதஎதிர் சீர்திருத்தம் :

  • கத்தோலிக்க திருச்சபைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்தின் சவாலை எதிர்கொள்வதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவர் வழி வந்தவர்கள் பல தீவிரமான சீர்திருத்தங்களை அறிவித்தார்கள். இது “எதிர்மத சீர்திருத்தம்” என அறியப்பட்டது.
  • ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
  • கூட்டு வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது.
  • புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியும் என்று அறிவித்தது.
  • திருச்சபைக்கு எதிரான முயற்சிகளைக் கையாளுவதற்கு மத நீதிமன்றத்திற்கு புத்துயிர் அளித்தது.
  • இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 5.
கொலம்பியப் பரிமாற்றம்’ என்றால் என்ன?
விடை:
கொலம்பியப் பரிமாற்றம் :
அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பரிமாற்றம் எனப்படும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின – விவாதி.
விடை:
மறுமலர்ச்சி:

  • செவ்வியல் இலக்கியத்தையும் கலையையும் ஆராய்வதில் பேரார்வமும் உத்வேகமும் தோன்றியது. படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டமானம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது.
  • செவ்வியில் இலக்கியப் பிரதிகள் சேகரிக்கப்ப்டடு, அச்சிட்டு வெளியிடப்பட்டது மறுமலர்ச்சி புத்தாக்கங்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தது.
  • கலை, அறிவியல் சார் படிப்புகள் இத்தாலிய பல்கலைக்கழகங்களில் புகழ்பெற்றுவிளங்கியதால் ஐரோப்பா
    முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரண்டு சென்றனர். மனித நேய சிந்தனைகளை அறிமுகமானது. பல மனித நேய இலக்கியங்கள் தோன்றின. கலைத்தன்மை மிளிரும் படைப்புகளை உருவாக்கினர்.

மதச் சீர்திருத்தம்:

  • மறுமலர்ச்சிகால மனித நேயத்தின் தீவிர புத்தார்வ தன்மையும், விமர்சனப்பூர்வமான சிந்தனையும் மக்கள் திருச்சபையின் நடைமுறைகளைக் கேள்வி கேட்பதற்கு உதவின.
  • எராஸ்மஸ், கர்தாமஸ் மூர் திருச்சபையையும் அதன் ஊழல் மிக்க நடைமுறைகளையும் விமர்சித்து வந்தனர்.
  • மதச் சீர்த்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டு காட்டும் பிரசுரங்களை விநியோகிதிதனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
  • 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக திருச்சபையை சீர்திருத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றாலும், பகுத்தறிவின் யுகத்தில் சீர்திருத்தவாதிகளின் முயற்சிகள் தேசிய அரசுகளின் ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டன.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் :

  • மாலுமிகளுக்குப் பயிற்சியளிக்க கடற்பயணப் பள்ளியை, போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி என்ற கடலோடி நிறுவினர்.
  • நெடுந் தொலைவுக் கடற்பயணத்திற்கான ஆர்வம், புதிய கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம் புத்தார்வத்தினால் தூண்டப்பட்டன.
  • மார்க்கோபோலே, இபின் பதூரா பயணக் குறிப்புகள், இறைப்பணியாளர்களின் மதம் பரப்பும் எண்ணத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
  • கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே அமைந்த நிலவழிப்பாதையை உதுமானிய துருக்கியர்கள் மூடியதால் ஐரோப்பிய வர்த்தகர்களின் பொருளாதார பாதிப்புக்குள்ளாயிற்று. ஆசியாவுக்கு புதிய கடல்வழிப்பாதை கண்டுபிடிக்க உந்துதலை ஏற்படுத்தியது.

Question 2.
புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.
விடை:
புவியியல் சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் :

  • புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை மாற்றியமைத்தன. உலக வரைபடத்தின் மீள் வரைவுக்கு இட்டுச் சென்றது.
  • ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
  • ஸ்பானியர்கள் மெக்ஸிகோவையும், தென் அமெரிக்காவையும் வெற்றி கொள்ளவும், கூடுதலான ஆய்வுத் தேடல் பயணங்களைத் தொடரவும், வெற்றி கொண்ட பகுதிகளை குடியேற்றங்களாக மாற்றவும் வழி செய்தது.
  • மரண ஆபத்துமிக்க நோய்கள் ஏற்றுமதியால் அமெரிக்காவின் உள்ளூர் மக்களின் பெருந்திரளான அழிவுக்கு காரணமாய் அமைந்தது.
  • ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகள் ஐரோப்பிய நாடுகளால் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் முக்கோண வர்த்தகமானது. இவ்வணிகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் லாபம் ஈட்டினர்.
  • வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன. இப்புரட்சியின் சிறப்பு அம்சங்கள் வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகும்.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய மாலுமிகளின் படங்களை சேகரி.
2. திசைகாட்டும் கருவியின் மாதிரி ஒன்றைத் தயார் செய்.
3. இடைக்கால ஐரோப்பியர் உருவாக்கிய கப்பலின் மாதிரியை தயார் செய்.

9th Social Science Guide நவீன யுகத்தின் தொடக்கம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
______ என்பவர் ஜெர்மனில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
விடை:
ஜோஹன்னஸ் கூட்டென்பர்க்

Question 2.
______ மனித நேயத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
பெட்ரார்க்

Question 3.
தாந்தே _____ என்ற நூலை எழுதினார்.
விடை:
டிவைன் காமெடி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 4.
______ இளவரசன் என்ற தலைப்பில் ஆய்வொன்றை எழுதினார்.
விடை:
மாக்கியவெல்லி

Question 5.
பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை ______ நிருபித்தார்.
விடை:
கோப்பர்னிகஸ்

Question 6.
மார்ட்டின் லூதர் ____ மரபொழுங்கு வழிவந்த துறவியாவார்.
விடை:
அகஸ்தினியன்

Question 7.
கள்ளிக்கோட்டையின் அரசர் ______.
விடை:
சாமெரின்

II. சுருக்கமான விடையளி.

Question 1.
மைக்கேல் ஆஞ்சலோ பற்றிக் குறிப்பு வரைக?
விடை:

  • ஓர் ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் மற்றும் ஒரு கவிஞர். அவர் உருவாக்கிய சலவைக்கல் சிற்பமான டேவிட் சிலை. இச்சிலை மாபெரும் கொலையாளியின் இளமை ததும்பும் வலிமையையும், ஆற்றலையும் காட்சிப் படுத்துகிறது.
  • ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரை ஓவியங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளார்.

Question 2.
லியானர்டோ டாவின்சி பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
லியானர்டோ டாவின்சி:
பல்துறைகளில் திறன்மிகுந்த ஒரு மேதை. ஓவியர், சிற்பி, கட்டட வடிவமைப்பாளர், ராணுவப்பொறியியலாளர், உடற்கூறியல் வல்லுநர் மற்றும் கவிஞர்.

அவரது ஒப்பற்ற படைப்புகள்:
“மோனாலிசா”, “கடைசி இரவு விருந்து”, “பாறைகளின் மீதொரு கன்னிப் பெண்”.

Question 3.
ரஃபேல் பற்றிக் குறிப்பு வரைக?
விடை:
ரஃபேல்:

  • அழகு நிறைந்த “மடோன்னா” (கன்னிப் பெண்ணும் குழந்தையும்) சித்திரத்தைத் தீட்டியவர்.
  • ஆன்மீகத்துக்கும், மனித நேயத்துக்கு மிடையே அவர் வாழ்ந்த காலங்களில் நிலவிய தத்துவார்த்த விவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் தீட்டிய மற்றோர் ஓவியம் “தி ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்”.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 4.
இயேசு சபையை நிறுவிய புனித இக்னேஷியஸ் லயோலா பற்றி விவரி.
விடை:
புனித இக்னேஷியஸ் லயோலாவும், இயேசு சபையும்:

  • கிறித்தவ மதத்தைப் பரப்புரை செய்வதற்காக புனித இக்னேஷியஸ்லயோலா “ இயேசு சபையை” நிறுவினார். எதிர்மத சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்றுவதற்காக இச்சபைக்கு கத்தோலிக்க திருச்சபை அதிகாரபூர்வமான அனுமதியை வழங்கியது.
  • ஆதரவற்றோருக்குக் கல்விச் சேவை என்பதே இயேசு சபையின் முக்கியப் பணி. உறைவிடங்கள், அனாதை இல்லங்கள், கல்வி நிலையங்கள் போன்ற எண்ணற்ற அமைப்புகளை இயேசு சபை தொடங்கியது. உலகின் எல்லாப் பாகங்களிலும் இயேசு சபைப்பணியாளர்கள் இறைப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

III. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சி
அ) இத்தாலிய நகர அரசுகளில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
பண்பாட்டு நடவடிக்கைளின் மையங்களாக விளங்கிய இத்தாலிய கலைஞர்கள் வருகை புரிந்தனர். கிரேக்கர்கள், ரோமானியர்களின் செவ்வியல் இலக்கியத்தையும், கலையையும் ஆராய்வதில் பேரார்வமும், உத்வேகமும் தோன்றியது. இப்படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டுமானத் தொழில் நுட்பம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது. பெட்ரார்க் – கான்ஸோனியர்

ஆ) மனித நேயர்கள் சிலரையும், அவர்களது படைப்புகளையும் குறிப்பிடுக.
விடை:
தாந்தே – டிவைன் காமெடி
மாக்கியவெல்லி – இளவரசன்
ஏராஸ்மஸ் – மடமையின் புகழ்ச்சி
சர்தாமஸ்மூர் – உட்டோப்பியா
செர்வான்டிஸ் – டான் கிவிக்ஸோட்.

இ) மறுமலர்ச்சி காலக்கலைக்கும் இடைக்காலக் கலைக்கும் உள்ள வேறுபாடுகளை வரிசைப்படுத்துக.
விடை:
மறுமலர்ச்சி காலக்கலை :

  • ஓவியங்களும் சிற்பங்களும் எதார்த்தப் பண்பு, இயல்பு சார்ந்த இயற்கை தன்மை கொண்டவை.
  • இடைக்கால ஓவியங்கள், சிற்பங்களின் அமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்டவை.

இடைக்காலக்கலை :
இடைக்கால படைப்புகள் அழகியப் பாணியில் ஏதார்த்தமற்றவை, இரட்டைப் பரிமாணம் கொண்டவை.

ஈ) மனிதநேயம் பற்றி விளக்குக.
விடை:
மறுமலர்ச்சியின் மையக்கூறு மனிதநேயம். மனிதநேயம் மனித கண்ணியத்தையும், இயல்பையும் வலியுறுத்தியது.

Question 2.
மத சீர்திருத்தம்.

அ) மார்ட்டின் லூதர் தேவாலயத்தை ஏன் எதிர்த்தார்?
விடை:
திருச்சபையின் ஆடம்பர வாழ்க்கை , திருச்சபை பதவிகள் ஏல்ம், பாலமன்னிப்புச் சீட்டு விற்பனை, திருச்சபையின் ஊழல்கள் மார்டின் லூதரின் எதிர்ப்புக்கான காரணங்கள்

ஆ) நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை குறித்து எழுது.
விடை:
சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்து, முழுமையான நம்பிக்கையினால் மட்டுமே ஆன்ம விடுதலை பெற முடியும் என வாதிட்டார். இதுவே ‘நம்பிக்கையினால் நியாப்படுத்தப்படுதல்’ கொள்கையாகும்.

இ) எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை ஏன் நிறுவினார்?
விடை:
இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி தனக்குப்பின் முடிசூட்டிக் கொள்ள ஒரு மகன் வேண்டி மறு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். மனைவி கேத்ரினுடனான திருமணத்தை ரத்து செய்ய போப்பிடம் விண்ணப்பித்தார். போப்பிடமிருந்து அனுமதி கிடைக்காததால் பொறுமை இழந்த எட்டாம் ஹென்றி அரசாணைகள் மூலம் ஆங்கிலிக்கன் திருச்சபையை நிறுவினார்.

ஈ) இக்னேஷியஸ் லயோலாவின் பங்களிப்பு குறித்து எழுதுக.
விடை:
இக்னேஷியஸ் லயோலா கிறிஸ்துவ மத பரப்பிற்காக இயேசு சபையை நிறுவினார். கல்வி நிலையங்கள், அனாதை இல்லங்கள், உறைவிடங்கள் போன்றவற்றை தொடங்கினார்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 3.
புவியியல்சார் கண்டுபிடிப்புகள்.
அ) மாலுமி ஹென்றி என்பவர் யார்?
விடை:
மாலுமி ஹென்றி, நீண்ட நெடுந்தூர கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிய போர்ச்சுகல் இளவரசர்.

ஆ) புவியியல்சார் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை வரிசைப்படுத்து.
விடை:

  • நெடுந்தெலைவு கடற்பயணத்துக்கான ஆர்வம்.
  • இதுவரை பயனப்படாத கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம்.
  • பயணக்குறிப்புகள் தூண்டிய ஆர்வம் மற்றும் மதம் பரப்பும் எண்ணம் அடிப்படையான பொருளாதார அம்சம்.

இ) அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் அழித்தொழிப்புக்கு இட்டுச் சென்றது எது?
விடை:
உயிர் ஆபத்து விளைவிக்கும் நோய்களின் பரவல் (சின்னம்மை, அம்மை, தட்டம்மை, மலேரியா, விஷக்காய்ச்சல்)

ஈ) முக்கோண வர்த்தகம் என்றால் என்ன?
விடை:
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலைக்கு வாங்கின. அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகமாக ஆகியது.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 51 Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 53