Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Economics Chapter 1 உற்பத்தி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Economics Chapter 1 உற்பத்தி

7th Social  Science Guide உற்பத்தி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
உற்பத்தி என்பது
அ) பயன்பாட்டை அழித்தல்
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்
இ) மாற்று மதிப்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்

Question 2.
பயன்பாட்டின் வகைகளாவன
அ) வடிவப் பயன்பாடு
ஆ) காலப் பயன்பாடு
இ) இடப் பயன்பாடு –
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
முதன்மைக் காரணிகள் என்பன _____________
அ) நிலம், மூலதனம்
ஆ) மூலதனம், உழைப்பு
இ) நிலம், உழைப்பு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மூலதனம், உழைப்பு

Question 4.
தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
அ) பரிமாற்றம் செய்பவர்
ஆ) முகவர்
இ) அமைப்பாளர்
ஈ) தொடர்பாளர்
விடை:
இ) அமைப்பாளர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.
விடை:
பயன்பாடு

Question 2.
பெறப்பட்ட காரணிகள் என்பது ___________ மற்றும் __________ ஆகும்.
விடை:
முதலீடு, அமைப்பு

Question 3.
____________ என்பது நிலையான அளிப்பினை உடையது.
விடை:
நிலம்

Question 4.
____________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.
விடை:
உழைப்பு

Question 5.
____________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
விடை:
மூலதனம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 2

IV. குறுகிய விடையளி

Question 1.
உற்பத்தி என்றால் என்ன?
விடை:
உற்பத்தி
நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
பயன்பாடு என்றால் என்ன?
விடை:
பயன்பாடு:
ம் பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.

Question 3.
பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
விடை:
பயன்பாட்டின் வகைகள்:

  • வடிவப் பயன்பாடு
  • இடப் பயன்பாடு
  • காலப் பயன்பாடு

Question 4.
உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
விடை:
உற்பத்திக் காரணிகள்:
முதல் நிலை உற்பத்திக் காரணிகள்:

  • நிலம்
    உமைப்பு

மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள்:

  • முதலீடு
  • அமைப்பு

Question 5.
உழைப்பு வரையறு.
விடை:
உழைப்பு:
“வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு”. – ஆல்பிரட் மார்ஷல்.

Question 6.
வேலை பகுப்பு முறை – வரையறு.
விடை:
வேலை பகுப்பு முறை:
ஓர் உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும்.

Question 7.
மூலதனத்தின் வடிவங்கள் யாவை?
விடை:
மூலதனத்தின் வடிவங்கள்:
பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம் :
இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்

பணி மூலதனம் (அல்லது) பணவியல் வளங்கள் :
வங்கி வைப்புகள், பங்குகள், பத்திரங்கள்

மனித மூலதனம் (அல்லது) மனிதத் திறன் வளங்கள்
கல்வி, பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 8.
தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக.
விடை:
தொழில் முனைவோரின் பண்புகள்:

  • இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்
  • உற்பத்தி அலகின் இருப்பிடத்தை தீர்மானித்தல்
  • புதுமைகளை உருவாக்குதல்

V. விரிவான விடையளி

Question 1.
உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக.
விடை:
உற்பத்தியின் வகைகள்:
உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை

  1. முதன்மை நிலை உற்பத்தி:
    • இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாட்டு நிலை முதன்மை நிலை உற்பத்தி எனப்படும். இதில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் வேளாண்மைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வேளாண் தொடர்புடைய செயல்கள், வனப்பாதுகாப்பு, மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய் வளம் பிரித்தெடுத்தல் ஆகியவை முதன்மை நிலை உற்பத்தி ஆகும்.
  2. இரண்டாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை நிலையின் உற்பத்திப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தி, புதிய உற்பத்திப் பொருட்களை உருவாக்கும் செயல்பாடு இரண்டாம் நிலை உற்பத்தி எனப்படும். இதை ‘தொழில்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • நான்கு சக்கர வாகனங்கள், ஆடைகள், இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு, பொறியியல் மற்றும் கட்டடப் பணிகள் இரண்டாம் நிலை உற்பத்தி ஆகும்.
  3. மூன்றாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை மற்றும் இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருட்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் ‘சேவைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம், நிர்வாகம், கல்வி, உடல்நலம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை நிறுவனங்கள்.

Question 2.
நிலம் என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகளை விவரிக்க?
விடை:
நிலம் :
‘நிலம்’ என்ற உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும்.

நிலத்தின் சிறப்பியல்புகள்:
நிலம் இயற்கையின் கொடை:
நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும்.

நிலத்தின் அளிப்பு நிலையானது:
நிலத்தின் அளவை மாற்ற முடியாது. நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

நிலம் அழிவில்லாதது:
மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிந்து போகக்கூடியது. ஆனால் நிலம் அழிவில்லாதது.

நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி:
எந்த உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படை. தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள், பயிர்கள் விளைவிக்க உதவுகிறது.

நிலம் இடம் பெயரக் கூடியதன்று:
நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

நிலம் ஆற்றல் வாய்ந்தது:
மனிதனால் அழிக்க முடியாத ஆற்றல்களை, நிலம் கொண்டுள்ளது. இயற்கை மாற்றங்களால் செழிப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படலாம். நிலத்தை முழுமையாக அழிக்க இயலாது.

நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்:
ஓரிடத்தில் அதிக உற்பத்தி, மற்றொரு இடத்தில் குறைவான உற்பத்தி என வேறுபாடு உள்ளது.

Question 3.
வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.
விடை:
வேலை பகுப்பு முறையின் நன்மைகள்: –

  • ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் ஒருவர் அந்த வேலையில் திறன் 15 மிக்கவராக மாறுகிறார்.
  • நவீன இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது.
  • காலமும் மூலப்பொருட்களும் திறமையாகப் பயன்படுத்தப் படுகின்றன.

வேலை பகுப்பு முறையின் தீமைகள்:

  • ஒரே வேலையைத் திரும்ப திரும்பச் செய்வதால் வேலை சுவையற்றதாகவும், களிப்பற்றதாகவும் மாறுகிறது. மனிதத் தன்மையை அழிக்கிறது.
  • ஒரு பகுதி வேலையை மட்டும் மேற்கொள்வதால் குறுகிய தேர்ச்சி மட்டுமே கிடைக்கும்.
  • கைவினைப் பொருட்களின் வளர்ச்சி பாதிக்கும். ஒரு பொருளை முழுமையாக உருவாக்கிய மனநிறைவு கிடைப்பதில்லை.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 4.
மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
விடை:
மூலதனத்தின் சிறப்பியல்புகள்:

  • மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது.
  • மூலதனமின்றியும் உற்பத்தி நடைபெறும்.
  • மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது.
  • மூலதனம் ஆக்கமுடையது. மூலதனம் பலகாலம் (ஆண்டுகள்) நீடிக்கும்.
  • மூலதனத்தை பயன்படுத்துவதன் நோக்கம் எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதே.

VI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்களை முதன்மை , இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தித் தொடர்புடைய மாதிரிப் படங்களைச் சேகரித்துவரச் செய்து, ஒட்டச் செய்தல்.

Question 2.
மாணவர்களைத் தங்கள் வீட்டின் அருகிலுள்ள வேளாண்மை செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடி நிலம் மற்றும் அதன் தொடர்புடையவற்றை புகைப்படங்கள் எடுத்துத் தாளில் ஒட்டச் செய்தல்.

VII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் தொழில் முனைவோர் பற்றி அறிந்து கொள்ள வகுப்பறையை ஒரு நிறுவனம் போல் அமைத்தல். மாணவர்கள் சிலரைத் தொழில் முனைவோர் போலவும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவது போலவும் நடிக்கச் செய்தல். ஆசிரியரும், மாணவர்களும் சமுதாய முன்னேற்றத்திற்குத் தொழில் முனைவோரின் பங்கு பற்றிக் கலந்துரையாடுதல்.

7th Social  Science Guide உற்பத்தி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை __________ உற்பத்தி .
அ) முதன்மை நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
விடை:
இ) மூன்றாம் நிலை

Question 2.
மற்ற உற்பத்திக் காரணிகளோடு ஒப்பிடும்போது ____________ அழியக்கூடியதாக உள்ளது.
அ) மூலதனம்
ஆ) உழைப்பு
இ) நிலம்
விடை:
ஆ) உழைப்பு

Question 3.
விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது _____________ பயன்பாடு ஆகும்.
அ) காலப்
ஆ) இடப்
இ) வடிவப்
விடை:
இ) வடிவப்

Question 4.
__________ செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி.
அ) மூலதனம்
ஆ) நிலம்
இ) உழைப்பு
விடை:
அ) மூலதனம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 5.
சமுதாய மாற்றம் காணும் முகவர்
அ) தொழில் முனைவோர்
ஆ) உற்பத்தியாளர்
இ) நுகர்வோர்
விடை:
அ) தொழில் முனைவோர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பொருளாதாரத்தில் ___________ மற்றும் ____________ இரண்டும் இன்றியமையாத செயல்கள்.
விடை:
உற்பத்தி, நுகர்வு

Question 2.
_____________ பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகும்.
விடை:
இந்தியப்

Question 3.
உள்ளீட்டுப் பொருள்கள் _____________ காரணியாகும்.
விடை:
உற்பத்திக்

Question 4.
____________ பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
ஆடம் ஸ்மித்

Question 5.
முதன்மை நிலை உற்பத்தி ___________ துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
வேளாண்மை

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 3

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
தொழில் முனைவோர் பல உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.
விடை:
சரி

Question 2.
நிலத்தின் மேற்பரப்பில் மாற்றம் செய்ய இயலும்.
விடை:
தவறு
சரியான கூற்று : நிலத்தின் மேற்பரப்பில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

Question 3.
உழைப்பு ஒரே சீரானது.
விடை:
தவறு
சரியான கூற்று: உழைப்பு ஒரே சீரானதல்ல.

Question 4.
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வத்தைக் குறிக்கும்.
விடை:
சரி

Question 5.
வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
விடை:
தவறு
சரியான கூற்று: வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கிறது.

V. பின்வரும் கூற்றுக்களை ஆய்ந்து சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
கூற்று : நிலம் இயற்கையின் கொடை
காரணம் : நிலம் மனிதனால் உருவாக்கப்படாத பொருட்களை உள்ளடக்கியது.

அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
விடை:
இ) கூற்றும் காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
கூற்று : உற்பத்தியில் உழைப்பு என்பது ஒரு செயல்படு காரணியாகும்.
காரணம் : நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலும்.

அ) கூற்று தவறு, காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு

VI. தவறான இணையைக் கண்டுபிடி.

Question 1.
1. பொறியியல் மற்றும் கட்டடம் – இரண்டாம் நிலை உற்பத்தி
2. எதிர்காலத்தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு
3. நாடுகளின் செல்வம் – 1776
4. பணமூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள்
விடை:
2. எதிர்காலத் தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
வங்கி, போக்குவரத்து, பொறியியல், தகவல் தொடர்பு
விடை:
பொறியியல்

Question 2.
காற்று, நீர், மலை, ஆடை
விடை:
ஆடை

VIII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
பொருளாதாரத்தில் உற்பத்தி’ என்ற சொல் எதைக் குறிக்கின்றது?
விடை:
உற்பத்தி:
பொருளாதாரத்தில் உற்பத்தி என்ற சொல், மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கிறது.

Question 2.
கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
விடை:
கலப்பு பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது கலப்பு பொருளாதாரம் ஆகும். எடுத்துக்காட்டு: இந்தியா

Question 3.
உற்பத்திக்கு உதவுகின்ற உள்ளீட்டுப் பொருட்கள் யாவை?
விடை:
உள்ளீட்டுப் பொருட்கள்:

  • நிலம்
  • உழைப்பு
    முதலீடு

Question 4.
மார்ஷலின் கூற்றுப்படி ‘மூலதனம்’ என்றால் என்ன?
விடை:
“இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்” – மார்ஷல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

IX. விரிவான விடையளி

Question 1.
‘மூலதனம்’ குறித்த சிறு குறிப்பு வரைக.
விடை:
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வம். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம்.
வகைகள் :

  1. பருப்பொருள் மூலதனம் – இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்
  2. பண மூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள், பத்திரங்கள்
  3. மனித மூலதனம் – கல்வி, பயிற்சி, சுகாதார முதலீடுகள்

சிறப்பியல்புகள் :

  • செயலற்ற உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுவது
  • அதிக இயங்கும் தன்மையுடையது
  • அளிப்பு நெகிழுந்தன்மையுடையது
  • ஆக்கமுடையது
  • பல ஆண்டுகள் நீடுக்கும் .

Question 2.
உழைப்பின் சிறப்பியல்புகள் யாவை?
விடை:

  • உழைப்பு என்பது செயற்படு காரணியாகும்.
  • ஒரே சீரானதல்ல, ஆளுக்கு ஆள் மாறுபடும்.
  • உழைப்பை உழைப்பவரிடமிருந்து பிரிக்க இயலாது.
  • உழைப்பு இடம் பெயரக் கூடியது.
  • தனியாக உழைப்பவரிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு. சங்கம் மூலம் பேரம் பேசும் நாம் ஆற்றல் அதிகம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
பயன்பாட்டின் வகைகளை விவரி.
விடை:
வடிவப் பயன்பாடு:
விளை பொருளின் வடிவம் மாற்றப்படும் பொழுது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளை பொருளாகிய பருத்தி ஆடையாக மாறும்போது தேவையும், பயன்பாடும் மிகுதியாகிறது.

இடப் பயன்பாடு :
ஒரு விளைபொருள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் போது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளைபொருளான அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பொழுது தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

காலப் பயன்பாடு:
ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும் போது அதன் பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: ஆண்டு முழுவதும் பயன்படும் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்படுவதால் தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 4
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 5

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
இரு கட்சி முறை என்பது
அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

Question 2.
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பல கட்சி முறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
அ) தேர்தல் ஆணையம்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) ஒரு குழு
விடை:
அ) தேர்தல் ஆணையம்

Question 4.
அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
அ) சமயக் கொள்கைகள்
ஆ) பொது நலன்
இ) பொருளாதார கோட்பாடுகள்
ஈ) சாதி
விடை:
ஆ) பொது நலன்

Question 5.
ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது __________.
விடை:
அரசியல் கட்சிகள்

Question 2.
நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் __________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
விடை:
தேர்தல் ஆணையம்

Question 3.
அரசியல் கட்சிகள் ____________ மற்றும் ___________ இடையே பாலமாக செயல்படுகின்றன.
விடை:
குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்

Question 4.
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் __________ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
விடை:
அங்கீகரிக்கப்படாத

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தில் இருப்பார்.
விடை:
கேபினட் அமைச்சர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 2

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.
அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக

Question 1.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:
ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைக் கூறுகள் :

  • தலைவர்
  • செயல் உறுப்பினர்கள்
  • தொண்டர்கள்

Question 2.
மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
கட்சி முறைகள் :

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

Question 3.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இரு கட்சி முறை காணப்படும் நாடுகள் :

  • பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி)
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சி)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.
விடை:
கூட்டணி அரசாங்கம் :

  • பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை .
  • இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.

VI. பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும்

Question 1.
அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:
அரசியல் கட்சியின் செயல்பாடுகள் :

  • வழங்குதல்
  • பரிந்துரைத்தல்
  • ஏற்பாடு செய்தல்
  • ஊக்குவித்தல்
  • ஒருங்கிணைத்தல்
  • ஆட்சி அமைத்தல் ஆகியன

ஏற்பாடு செய்தல் :
அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல் ஆகியன ஓர் அரசியல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பரிந்துரைத்தல் :
அரசியல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரை செய்கிறது.

ஊக்குவித்தல் :
அரசியல் கட்சி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன் வைக்கிறது.

ஆட்சி அமைத்தல் :
அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

Question 2.
ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுதல் :
இந்தியாவில் அரசியல் கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

  1. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  3. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 % தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

VI. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?
விடை:
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியம். ஏனெனில்,
அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பாகும். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில்லை. அவை குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 2.
தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:
தேசிய கட்சி : > காங்கிரஸ்

  • பாரதிய ஜனதா கட்சி
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநிலக் கட்சி :

  • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
  • அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
  • ஆம் ஆத்மி கட்சி
    அசாம் கன பரிஷத்

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி :

  • அம்ரா பங்ளி (மேற்கு வங்களாம்)
  • மக்கள் ஜனநாயக முன்னணி (திரிபுரா)
  • இந்திய ஜனநாயக கட்சி (தமிழ்நாடு)
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (தமிழ்நாடு)

VIII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக. (election manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக இருந்தால்)

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்தியா __________ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.
அ) 1947
ஆ) 1949
இ) 1950
ஈ) 1952)
விடை:
இ) 1950

Question 2.
ஓர் அரசியல் கட்சி _____________ அடிப்படை ககொண்ட
அ) 3
இ) 5
ஈ) 6
பொன்
விடை:
அ) 3

Question 3.
அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________
அ) தொழிலாளர் கட்சி
ஆ) காங்கிரஸ் கட்சி
இ) பழமை வாதக் கட்சி
ஈ) ஜனநாயகக் கட்சி
விடை:
ஈ) ஜனநாயகக் கட்சி

Question 4.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிக்க அக்கட்சி குறைந்தபட்சம் __________ உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
அ) 50
ஆ) 100
இ) 500
ஈ) 1000
விடை:
ஆ) 100

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் ___________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
அ) முதலமைச்சர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ) பிரதமர்
ஈ) துணை அமைச்சர்
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
துடிப்பான ____________ நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி அவசியம்.
விடை:
மக்களாட்சி

Question 2.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் ___________ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுதில்லி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
____________ ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அல்லது ஒதுக்கப்படாத சின்னங்கள் என இருவகை உண்டு.
விடை:
1968

Question 4.
_____________ சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.
விடை:
விலங்குகளின்

Question 5.
___________ மற்றும் ___________ தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும்.
விடை:
சுதந்திரமான, நியாயமான

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
மக்களாட்சியில் மக்கள் எந்த விஷயங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.
விடை:
சரி

Question 2.
பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது.
விடை:
சரி

Question 3.
விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

Question 4.
சிவசேனா மகராஷ்மரத்தில் ஒரு மாநிலக் கட்சி
விடை:
சரி

Question 5.
ஸ்வீடன் இரு கட்சி முறை கொண்டது.
விடை:
தவறு
சரியான கூற்று : ஸ்வீடன் பலகட்சி முறை கொண்டது

V. தவறான இணையைக் கண்டுபிடி

1. ஒதுக்கப்பட்ட சின்னங்கள் – அங்கீகரிக்கப்பட்ட கட்சி
3. தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்
விடை:
3) தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
பிரான்ஸ், கொரியா, ஸ்வீடன், நார்வே
விடை:
கொரியா

Question 2.
திமுக, அதிமுக, பிஜேபி, மதிமுக
விடை:
பிஜேபி

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
எது/ எவை சரியான கூற்று கூற்றுகள்.
அ) கூட்டாட்சி அமைப்பை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.
ஆ) கியூபாவில் ஒரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது.
இ) நார்வே பல கட்சி முறையைப் பின்பற்றுகிறது.
ஈ) தேர்தல் குழு சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுகிறது.
விடை:
அனைத்தும் சரி

Question 2.
கூற்று : சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன.
காரணம் : பலகட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் குறுகிய விடையளி

Question 1.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி?
விடை:
அரசியல் கட்சியை தோற்றுவித்தல் : ஓர் அரசியல் கட்சி

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும்.
  • கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

Question 2.
தேர்தல் ஆணையம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
தேர்தல் ஆணையம் :

  1. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு ஆகும்.
  2. இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Question 3.
‘சுயேட்சை வேட்பாளர்’ – விளக்குக.
விடை:
சுயேட்சை வேட்பாளர் : சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
‘தேர்தல் குழு சின்னங்கள்’ – சிறுகுறிப்பு வரைக.
விடை:
தேர்தல் குழு சின்னங்கள் :
1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை உள்ளது.

ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும்.

ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
எப்பொழுது ஓர் அரசியல் கட்சி பிராந்திய / மாநிலக் கட்சி என அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
ஓர் அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுதல் :

  • இந்திய தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சியை மாநில (பிராந்திய) கட்சியாக அங்கீகரிப்பதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Question 2.
‘ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு குறித்து விளக்குக.
விடை:
எதிர்க்கட்சி :

  • தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது.
  • மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
  • அது அரசாங்கத்தின் கொள்கைகள், அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும்.
  • எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும்.
  • எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.

Question 3.
வேறுபடுத்துக: தேசியக்கட்சி மற்றும் பிராந்தியக் கட்சி. தேசியக் கட்சி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 4

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 5

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

6th Social Science Guide வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆரியர்கள் முதலில் ………………… பகுதியில் குடியமர்ந்த னர்.
அ) பஞ்சாப்
ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
இ) காஷ்மீர்
ஈ) வடகிழக்கு
விடை:
அ) பஞ்சாப்

Question 2.
ஆரியர்கள் ………… லிருந்து வந்தனர்.
அ) சீனா
ஆ) வடக்கு ஆசியா
இ) மத்திய ஆசியா
ஈ) ஐரோப்பா
விடை:
இ) மத்திய ஆசியா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 3.
நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” …………. லிருந்து எடுக்கப்பட்டது.
அ) பிராமணா
ஆ) ஆரண்யகா
இ) வேதம்
ஈ) உபநிடதம்
விடை:
ஈ) உபநிடதம்

Question 4.
வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
அ) 1/3
ஆ) 1/6
இ) 1/8
ஈ) 19
விடை:
ஆ) 1/6

II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகளும் கிடைத்துள்ளன. காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ; காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு; காரணம் சரி

Question 2.
கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிகப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்
கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
அ) கூற்று 1 தவறானது
ஆ) கூற்று 2 தவறானது
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை.
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

Question 3.
வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அ) ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளலாம்.
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.
இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்
ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.
விடை:
ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது

Question 4.
கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
அ) கிராமா < குலா விஷ் < ராஸ்டிரா < ஜனா
ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்
ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஸ்டிரா
விடை:
ஆ) குலா < கிராமா விஷ் < ஜனா < ராஸ்டிரா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வேதப்பண்பாடு ……………. இயல்பைக் கொண்டிருந்தது.
விடை:
செம்புகால பண்பாடு

Question 2.
வேதகாலத்தில் மக்களிடமிருந்து ………… என்ற வரி வசூலிக்கப்பட்டது.
விடை:
பாலி

Question 3.
………… முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
விடை:
குருகுலக்கல்வி

Question 4.
ஆதிச்சநல்லூர் ……………… மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விடை:
தூத்துக்குடி

IV. சரியா? தவறா?

Question 1.
பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய – ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
விடை:
சரி

Question 2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
விடை:
சரி

Question 3. படைத்தளபதி கிராமணி’ என அழைக்கப்பட்டார்.
விடை:
தவறு

Question 4.
கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
விடை:
சரி

Question 5.
பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
விடை:
சரி

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 1
விடை:
1 2 3 4

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரிக்
  • யஜூர்
  • சாம
  • அதர்வ

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?
விடை:

  • யானைகள்
  • பசு
  • வெள்ளாடு
  • செம்மறியாடு
  • குதிரை

Question 3.
‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.

Question 4.
‘கற்திட்டைகள்’ என்பது என்ன?
விடை:

  • கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம்
  • இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.

Question 5.
முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?
விடை:
இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள் தாழிகள் ஆகும்.

Question 6.
வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • நிஷ்கா
  • சத்மனா (தங்கம்)
  • கிருஷ்ணாலா (வெள்ளி)

Question 7.
தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • முதுமக்கள் தாழிகள்
  • கற்திட்டைகள்
  • நினைவு கற்கள்
  • நடுகற்கள்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
விடை:

  • கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.
  • பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.
  • தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • நூல் சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
விடை:

  • ரிக் வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.
  • பெண்கள் தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
  • குழந்தைத் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.
  • விதவை மறுமணத்திற்கு தடை இல்லை.
  • சொத்துரிமையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.
  • பின் வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:

  • நவீன கால கல்வி முறையை ஒப்பீடு செய்யும் பொழுது குருகுலக் கல்வி முறை என்பது பழங்காலக் கற்றல் முறை.
  • மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்து அதே வேளையில் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.
  • வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். அனைத்தையும் மனப்பாடம் செய்தனர்.
  • நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறி முறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.
  • இரு பிறப்பாளர்கள் மட்டுமே மாணவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஒழுக்கமான வாழ்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

IX. பெருமிதமும் மகிழ்ச்சியும் – உண்மைகளை நாம் கண்டறிவோம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 80
விடை :

  • இந்தோ – ரோமானிய வணிகத் தொடர்புக்கு சான்று.
  • இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்று
  • மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்ததற்கான சான்று
  • நெசவுத் தொழில் நடைபெற்றதற்கான சான்று

X. மாணவர் செயல்பாடு

Question 1.
புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குதல்.
சுருதி, கிராமணி, ராஷ்ட்ரா, இரும்புக்காலம் , நாடோடிகள், பண்டமாற்று
விடை:

  • வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டவை சுருதி ஆகும்.
  • கிராமத்திற்கு கிராமணி தலைவர் ஆவார்.
  • பல ஜனாக்கள் இணைந்து ராஷ்ட்ரா உருவாயின.
  • வட இந்தியாவின் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவின் இரும்புக்காலமும் சம காலத்தைச் சேர்ந்தவை.
  • ரிக்வேத காலத்தில் பண்டமாற்று முறை பரவலாகக் காணப்பட்டது.

Question 2.
வார்த்தை விளையாட்டு
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 90
1. ஒரு கணவாய்
2. மத போதனைக் கொண்ட நூல்
3. கிராமங்களின் தொகுதி
4. இனக்குழு மன்றம்
5. மக்கள் மன்றம்
6. அக்னி
7. தங்க நாணயம்
8. வேதகாலம்
9. இறந்தவர்களை புதைத்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னம்.
விடை:
1. கைபர்
2. ஸ்மிருதி
3. விஸ்
4. கானா
5. சமிதி
6. நெருப்பு
7. தங்க நாணயம்
8. இரும்புக்காலம்
9. கற்திட்டை

XI. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

ஆசிரியரின் உதவியோடு செய்தித் தாள்களிலிருந்து தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த செய்தி – களைச் சேகரிக்கவும்.
கல்விச் சுற்றுலா
நீங்கள் இருக்கும் இடத்திற்கே அருகேயுள்ள தொல்லியல் சார்ந்த ஓர் இடத்திற்கு சென்று வரவும்.

XII. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 92
விடை:

  • இராமாயணம், மகாபாரதம் / நினைவுகற்கள் / கீழடி
  • பையம்பள்ளி, பொருந்தல் /அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை/அயோத்தி, இந்திரப் பிரஸ்தம்

6th Social Science Guide வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆரியர்களின் முதன்மைத் தொழில் ……
அ) வேளாண்மை
ஆ) மீன் பிடித்தல்
இ) கால்நடை மேய்த்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
இ) கால்நடை மேய்த்தல்

Question 2.
சப்த சிந்து என்பது ………. ஆறுகள் ஓடும் நிலப்பகுதி
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) பத்து
விடை:
ஆ) ஏழு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 3.
…………… முதன்மை பயிர்
அ) பார்லி
ஆ) கோதுமை
இ) அரிசி
ஈ) பருத்தி
விடை:
அ) பார்லி

Question 4.
பையம்பள்ளி …………. மாவட்டத்திலுள்ளது.
அ) ஈரோடு
ஆ) வேலூர்
இ) தூத்துக்குடி
ஈ) திண்டுக்கல்
விடை:
ஆ) வேலூர்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் ………… பிரிவுகள் காணப்பட்டன.
விடை:
மூன்று

Question 2.
ஆரியர்கள் நிரந்தமாகக் குடியேறிய பின் அவர்கள் …………. செய்யத் தொடங்கினர்.
விடை:
வேளாண்மை

Question 3.
…………. தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன.
விடை:
திருமணம்

III. சரியா? தவறா?

Question 1.
ரிக்வேத ஆரியர்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுள்களை வழிபட்டனர்.
லிடை:
சரி

Question 2.
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
விடை:
சரி

Question 3.
பெருங்கல் என்ற Megalith’ வேர்ச்சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
விடை:
தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 96
விடை :
ஆ) 2 4 1 3

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் யாவை?
விடை:

  • தங்கம் (ஹிரண்யா)
  • இரும்பு (சியாமா)
  • தாமிரம் (அயாஸ்)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

Question 2.
என்ன பயிர்கள் பயிரிடப்பட்டன?
விடை:

  • கோதுமை
  • நெல்
  • பார்லி

Question 3.
ரிக் வேத ஆரியர்களின் தொழில்கள் யாவை?
விடை:

  • கால்நடை வளர்ப்பு
  • கை வினைஞர்கள்
  • நகை செய்வோர்
  • சாயத் தொழில் செய்வோர்
  • உலோகங்களை உருவாக்குவோர்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 1 சமத்துவம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 1 சமத்துவம்

7th Social  Science Guide சமத்துவம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை ?
அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை
இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
விடை:
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

Question 2.
கீழ்க்க ண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
விடை:
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்தியாவில் ளளககம் தான் னைத்து கடும் உரிமை வமங்கப்ப வயது ____________
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 31 –
விடை :
ஆ) 18

Question 4.
சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
அ) இயற்கை சமத்துவமின்மை
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
இ) பொருளாதார சமத்துவமின்மை
ஈ) பாலின சமத்துவமின்மை
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

Question 5.
சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1981
ஆ) 1971
இ) 1991
ஈ) 1961
விடை:
ஆ) 1971

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
குடிமை சமத்துவம் ______________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
விடை:
சட்டத்து

Question 2.
____________ முதல் ____________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
விடை:
14, 18

Question 3.
தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ____________ உரிமை ஆகும்.
விடை:
அரசியல்

Question 4.
சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
விடை:
சமூக அறிவியல்

III. குறுகிய விடையளி

Question 1.
சமத்துவம் என்றால் என்ன?
விடை:
சமத்துவம் :
சமத்துவம் என்பது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 2.
பாலின சமத்துவம் ஏன் தேவையானது?
விடை:
பாலின சமத்துவம் தேவையானது. ஏனெனில்:

பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்.

பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.

Question 3.
குடிமை சமத்துவம் என்றால் என்ன ?
விடை:
குடிமை சமத்துவம் :
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே எந்த பாகுபாடும் இருத்தல் கூடாது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.

IV. விரிவான விடையளி

Question 1.
சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சமத்துவத்தின் முக்கியத்துவம் :

  • சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும்.
  • சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது.
  • மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படும் போது மட்டுமே பொருளுடையதாக இருக்கும்.
  • குடிமை சமத்துவம், சமூக சமத்துவம், அரசியல் சமத்துவம், பாலின சமத்துவம் ஆகியவற்றைப் பெற வேண்டும்.
  • சமத்துவம் தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. மேலும் சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடாகும்.

Question 2.
அரசியல் சமத்துவம் என்றால் என்ன?
விடை:
அரசியல் சமத்துவம் :
இந்தியா தன்னுடைய குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கிறது. அரசியல்

உரிமைகள் :
வாக்களிக்கும் உரிமை – பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை – அரசை விமர்சனம் செய்யும் உரிமை குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 25 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
  • மக்கள் அரசை விமர்சிக்கலாம். மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம்.
  • நாட்டின் பிரதமரின் வாக்கும், ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் :
உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதே போன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14

  • 18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 15 – பாகுபாட்டை தடை செய்கிறது.
  • சட்டப்பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 17 – தீண்டாமையை ஒழிக்கிறது.
  • சட்டப்பிரிவு 18 – பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும்
  • சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 ல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்?
விடை:
பள்ளிகளில் சமத்துவமின்மையை அகற்றுதல் :
திறன் குழுக்கள் குறித்த மறு சிந்தனை; வகுப்பறையில் மாணவர்களின் பல்வேறு குழுக்கள் அமைத்தல் பற்றி முயற்சி செய்தல், முன்னரே கருத்துருவாக்கம் செய்யப்பட்ட திறன் அடிப்படையில் தனியான செயல்பாடுகளை உருவாக்குவதற்குப் பதில் மாணவர்கள் பல்வேறு பயிற்சிகள் மூலமாக பல நிலைகளிலான சவால்களை மேற்கொள்ளுதல்.

திறந்த முடிவுகளுடன் கூடிய அதிக செயல்பாடுகளை கொடுப்பதன் மூலம் பல்வேறு அளவிலான திறன்களை ஈர்த்து பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுதல்.

மாணவர்களை இணைந்து செயல்பட அனுமதித்தல். ஒரு மாணவன் எழுதுவதில் திறமை கொண்டிருக்கலாம். மற்றொரு மாணவன் அதிக படைப்பாற்றல் மிக்கவராய் இருக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி தங்களையே வியந்து நோக்க உதவுதல்.

மொழித்திறனை சரிபார்க்கவும். ஆசிரியர் மாணவர்களை விவரிக்கும் மற்றும் வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள்ளே பயன்படுத்தும் மொழியையும் கவனிக்கவும்.

ஏற்ற பாடச் செயல்பாடுகளை உருவாக்கவும், எல்லா நேரமும், எல்லா மாணவர்களுக்கும் ஏற்ற செயல்பாடுகளை உருவாக்குவது இயலாது. ஆனால் மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உடனடி தண்டனைகளை தவிர்க்கவும். தண்டனைகளுக்குப் பதிலாக எங்கே உரையாடல் மூ லம் தீர்வுகாண இயலும் என்பதைப் பரிசீலனை செய்யவும்.

உறவுகளைப் பலப்படுத்துவோம். வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு மற்றும் மாணவர்களுக்கிடையிலான உறவு மிகவும் அவசியம். இது மாணவர்களை, எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு நபராக, நடுநிலை திறன் கொண்ட ஒரு குழந்தையாக அனுமதிக்கிறது.

VI. வாழ்வியல் திறன்

Question 1.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 2

7th Social  Science Guide Chapter 1 சமத்துவம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
____________ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.
அ) பொருளாதாரம்
ஆ) நிறம்
இ) உயரம்
ஈ) திறன்
விடை:
அ) பொருளாதாரம்

Question 2.
ஏ.வி. டைசி ____________ சட்ட வல்லுநர்.
அ) இந்திய
ஆ) பிரிட்டிஷ்
இ) அமெரிக்க
ஈ) பிரெஞ்சு
விடை:
ஆ) பிரிட்டிஷ்

Question 3.
___________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.
அ) வாக்குரிமை
ஆ) பொது அலுவலில் பங்கேற்பு
இ) சுயமரியாதை
ஈ) அரசை விமர்சனம் செய்தல்
விடை:
இ) சுயமரியாதை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 4.
இந்தியாவில் ____________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 30
விடை:
இ) 25

Question 5.
____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 14
ஆ) சட்டப்பிரிவு 15
இ) சட்டப்பிரிவு 16
ஈ) சட்டப்பிரிவு 17
விடை:
ஆ) சட்டப்பிரிவு 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இயற்கை மனிதனை சமமாக __________
விடை:
உருவாக்கவில்லை

Question 2.
சமத்துவம் மனித சமூகத்தை வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த ___________ மற்றும் ___________ கோட்பாடாகும்.
விடை:
நீதி, அரசியல்

Question 3.
சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ.வி. டைசி என்ற ___________ சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
விடை:
பிரிட்டிஷ்

Question 4.
____________ ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
விடை:
1952

Question 5.
___________ மற்றும் ____________ என்பது மக்களாட்சியின் தூண்கள் ஆகும்.
விடை:
சமத்துவம், நீதி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
சுதந்திரம் மற்றும் சமத்துவம் மக்களாட்சிக் கோட்பாடுகளாகும்.
விடை:
சரி

Question 2.
குடிமை சமத்துவம் என்பது சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
விடை:
சரி

Question 3.
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
விடை:
சரி

Question 4.
மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 5.
பாலின சமத்துவம் என்பது ஐ.நா. நிறுவனத்தின் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் ஐந்தாவது ஆகும்.
விடை:
சரி

V. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1) சமத்துவம் – மரியாதை
2) சமத்துவம் – மனித மாண்பு
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல
விடை:
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
சமூகம், குடிமை, மதம் சார்ந்த, அரசியல்.
விடை:
மதம் சார்ந்த

Question 2.
ராம்மோகன் ராய், M.G. ரானடே, E.C. வித்யாசாகர், நேரு.
விடை:
நேரு

VII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
“சமத்துவம்” – வரையறு. (பேராசிரியர் லாஸ்கி கூற்றுப்படி)
விடை:
பேராசிரியர் லாஸ்கி அவர்களது கூற்றுப்படி “சமத்துவம்” :
“சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கம் வழங்கப்படுவதும் ஆகும்.”

Question 2.
இந்திய வாக்குரிமை குறித்து நீ என்ன அறிந்துள்ளாய்?
விடை:
இந்திய வாக்குரிமை :

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றிய சமூக செயல்பாட்டாளர்கள் சிலரைக் குறிப்பிடுக.
விடை:
பெண்கள் சம அந்தஸ்து பெற கடினமாகப் பணியாற்றியவர்கள் :

  • ராஜாராம் மோகன்ராய்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • தயானந்த சரஸ்வதி
  • M.G. ரானடே

VII. விடையளிக்கவும்

Question 1.
சமத்துவத்தை எவ்வாறு மேம்படுத்துவாய்?
விடை:
நாம் சமத்துவத்தை பின்வருமாறு மேம்படுத்தலாம்.

  • அனைவரையும் நியாயமாக நடத்துதல்.
  • அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
  • வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்.
  • முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • கல்வி .

Question 2.
விளக்குக :
அ) மனித மாண்பு
ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்.
விடை:
அ) மனித மாண்பு :

  • மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன.
  • மாண்பு என்பது கௌரவமான மேலான சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மதிப்பு மிக்க ஓர் உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும்.

ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் :

  • அனைத்து தனி மனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு வாய்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்களது ஆளுமையை மேம்படுத்த வாய்ப்புகள் பெற்றிருத்தல் வேண்டும்.
  • சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காக்கச இனத்தை _____________ என்றும் அழைக்கலாம்.
அ) ஐரோப்பியர்கள்
ஆ) நீக்ரோய்டுகள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
அ) ஐரோப்பியர்கள்

Question 2.
_____________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
அ) காக்கச இனம்
ஆ) நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
இ) மங்கோலியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
உலக மக்கள் தொகை தின ______________ ஆகும்.
அ) தொகை 1
ஆ) ஜூன் 1
இ) ஜூலை 11
ஈ) டிசம்பர் 2
விடை:
இ) ஜூலை 11

Question 4.
கிராமப்புறக் குடியிருப்புகள் ____________ அருகில் அமைந்துள்ளது.
அ) நீர்நிலைகள்
ஆ) மலைப் பகுதிகள்
இ) கடலோரப் பகுதிகள்
ஈ) பாலைவனப் பகுதிகள்
விடை:
அ) நீர்நிலைகள்

Question 5.
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்
4) இணைந்த நகரம்

அ) 4, 1, 3, 2
ஆ) 1, 3, 4, 2
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
விடை:
ஆ) 1, 3, 4, 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தென் ஆப்பிரிக்காவின் ___________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 2.
மொழியின் பங்கு என்பது __________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை:
மொழிக்

Question 3.
____________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
விடை:
நகர

Question 4.
_____________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.
விடை:
செயற்கைகோள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
______________ குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
விடை:
யாத்திரைக்

III. அ. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 2

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 4

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

V. பொருந்தாதை வட்டமிடுக.

Question 1.
மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை:
வங்கி அலுவல்

Question 2.
இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை:
கங்கை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை:
காஞ்சிபுரம்

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
இனங்களின் வகைகள்யாவை?
விடை:
இனங்களின் வகைகள் : > காக்க சாய்டு (ஐரோப்பியர்கள்) > நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்) > மங்கோலாய்டு (ஆசியர்கள்) > ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)

Question 2.
மொழி என்றால் என்ன?
விடை:
மொழி:
சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றாருவருடன் தொடர்பு கொள்வதற்கு (எழுத்து வடிவம் அல்லது ஒலி வடிவம்) பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
குடியிருப்பு வரையறு.
விடை:
குடியிருப்பு:
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம்மற்றும்பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர்.

Question 4.
நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
நகர்ப்புற குடியிருப்புகள் வகைப்படுத்தலின் அடிப்படை

  • மக்கள் தொகையின் அளவு
  • தொழில் அமைப்பு
  • நிர்வாகம்

Question 5.
பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
பொலிவுறு நகரம் :
நகர்ப்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுறு நகரமாகும்.

தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.

VII. காரணம் கூறுக

Question 1.
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
விடை:
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
ஏனெனில்

  • மும்பை 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மிகப்பெரிய நகரமாகும்.
  • மும்பை ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
விடை:
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
ஏனெனில்

  • இமயமலைப் பகுதியில் காலநிலை, மலைப்பாதை, அடர்ந்த காட்டுப் பகுதி, புல்வெளிகள், தீவிர சாகுபடி பிரதேசங்கள் காணப்படுகிறது.
  • வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுகிறது.

VIII. வேறுபடுத்துக.

Question 1.
மொழி மற்றும் மதம் – மொழி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 5

Question 2.
நீக்ரோ இனம் மற்றும் மங்கோலிய இனம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 6

Question 3.
பெருநகரம் மற்றும் நகரம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 7

Question 4.
நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 8

IX. பத்தியளவில் விடையளி

Question 1.
நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
நான்கு முக்கிய மனித இனங்கள்:
ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் மனித இனம் ஆகும்.

காக்கசாய்டு:

  • ஐரோப்பிய இனத்தவர்கள்
  • யூரேஷியாவில் காணப்படுகிறார்கள்.
  • வெள்ளை நிறத்தோல், அடர்பழுப்பு நிறக் கண்கள், அலை போன்ற முடி, நீளமான மூக்கு உடையவர்கள்.

நீக்ராய்டு:

  • ஆப்பிரிக்க இனத்தவர்கள்,
  • ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகிறார்கள்.
  • கருமை நிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்டவர்கள்.

மங்கோலாய்டு:

  • ஆசிய அமெரிக்க இனத்தவர்கள்
  • ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
  • வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல் , நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை, மத்திமமான மூக்கு உடையவர்கள்.

ஆஸ்ட்ரலாய்டு:

  • ஆஸ்திரேலிய இனத்தவர்கள்.
  • ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறார்கள்.
  • அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்கள், ‘குட்டையானவர்கள்.

Question 2.
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
விடை:
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள்:

  • இயற்கையான நிலத்தோற்றம்
  • உள்ளூர் தட்பவெப்பநிலை
  • மண்வளம் மற்றும் நீர்வளங்கள்
  • சமூக நிறுவனங்கள்
  • பொருளாதார நிலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்:
கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேர்கோட்டு குடியிருப்பு:
சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்கோட்டு குடியிருப்பு எனப்படும்.

எடுத்துக்காட்டு :
இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர்.

செவ்வக வடிவக் குடியிருப்பு:
இவ்வகைக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர்கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். செவ்வக வடிவக் குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள், மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டு : சட்லஜ்
வட்டவடிவக் குடியிருப்பு:
ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாகக் காணப்படும் குடியிருப்புகளை வட்டவடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இவை ஏரிகள், குளங்களைச் சுற்றிக் காணப்படும்.

X. செயல்முறைகள்

ஆராய்க
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 9
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 10

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
____________ பொதுவாக ஆசிய அமெரிக்க இனத்தவர்களாவார்.
அ) காக்கசாய்டு
ஆ) நீக்ராய்டு
இ) மங்கோலாய்டு
ஈ) ஆஸ்ட்ரலாய்டு
விடை:
இ) மங்கோலாய்டு

Question 2.
______________ ஒரு நாடோடிகள் மதம்.
அ) இந்து மதம்
ஆ) ஷாமானிஸம்
இ) இஸ்லாம்
ஈ) ஷிண்டோயிசம்
விடை:
ஆ) ஷாமானிஸம்

Question 3.
இந்திய அரசால் __________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அ) 18
ஆ) 20
இ) 22
ஈ) 24
விடை:
இ) 22

Question 4.
மிகப்பெரிய நகரம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டு ___________
அ) டோக்கியோ
ஆ) கோயம்புத்தூர்
இ) சூரத்
ஈ) பரிதாபாத்
விடை:
அ) டோக்கியோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
தமிழ்நாட்டில் _____________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
அ) 12

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது __________ எனப்படும்.
விடை:
புலம்பெயர்வு

Question 2.
_____________ அமைப்பிற்கு மொழி ஒரு பிரதான கருவியாகும்.
விடை:
சமுதாய

Question 3.
குழுமிய குடியிருப்பை ___________ எனவும் அழைக்கலாம்.
விடை:
மையக் குடியிருப்பு

Question 4.
_____________ தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள்
விடை:
விவசாய

Question 5.
ஹஜிப்பூர் ஒரு __________ நகரம்.
விடை:
செயற்கைக்கோள்

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 11
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 12

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள்.
விடை:
சரி

Question 2.
ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, கருப்புநிறத் தோல் உடையவர்கள்.
விடை:
சரி

Question 3.
மதம் ஒரு குழுவின் அடையாளம்.
விடை:
சரி

Question 4.
பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக்காற்றுப் பகுதிகள் இருந்தன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
கல்கத்தா ஒரு மீப்பெரு நகரமாகும்.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது.
காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

VI. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
சிறு கிராமம், கிராமம், இணைந்த நகரம், சிறு சந்தை
விடை:
இணைந்த நகரம்

Question 2.
பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, கன்னடா
விடை:
கன்னடா

VII. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

1. ஜுடாய்ஸம் – சினகாக்
2. சமணம் – அகியாரி
விடை:
2. சமணம் – அகியாரி

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
திராவிட அரசுகளையும், திராவிட மொழிகளையும் பெயரிடு.
விடை:
திராவிட அரசுகள் (மூவேந்தர்கள்):

  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்

திராவிட மொழிகள் :

  • தமிழ்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • மலையாளம்
  • துளு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
‘யாத்திரைக் குடியிருப்பு’ – சிறுகுறிப்பு வரைக..
விடை:
யாத்திரைக் குடியிருப்பு:
கதை யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும்.
எ.கா: தமிழ்நாட்டில் உள்ள பழனி – முருகன் கோயில்.

Question 3.
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் – விளக்குக.
விடை:
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
எ.கா: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகள்.

Question 4.
சிதறிய குடியிருப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
சிதறிய குடியிருப்புகள் :

  • கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதி
  • கங்கைச் சமவெளி
  • ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி
  • இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரம்.

Question 5.
‘மிகப்பெரிய நகரம்’ குறித்து குறிப்பு வரைக.
விடை:
மிகப்பெரிய நகரம் :

  • 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். மிகப்பெரிய நகரம் ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும்.
  • கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை மிகப்பெரு நகரங்களாகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
‘இந்திய மொழிகள் ‘ குறித்து எழுதுக.
விடை:

  1. இந்தியா பலவகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 97% மக்களால் இந்த அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் பேசப்படுகின்றன.
  3. தென்னிந்தியாவின் முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகின்றன.

Question 2.
“செயற்கைக் கோள் நகரம்” குறித்து எழுதுக.
விடை:
செயற்கைக் கோள் நகரம்:

  • அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில் நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும்.
  • பொதுவாக செயற்கைக் கோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவின் அநேக செயற்கைக் கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது.
  • செயற்கைக் கோள் நகரங்கள் சில நேரங்களில் பீகாரின், ரோஷ்டாஸ்மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் போல் இரட்டை நகரங்களாக காணப்படும்.
  • இந்நகரங்கள் சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
    எ.கா: பாட்னா, பரோவ்னி, வாரணாசி, ஹஜிப்து

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
விளக்குக: “நீர் நிலைக் குடியிருப்புகள் மற்றும் வறண்ட (அல்லது) உலர்நிலைக் குடியிருப்புகள்
விடை:
நீர் நிலைக் குடியிருப்புகள்:

  • இவ்வகையான குடியிருப்புகளை அவற்றின் பெயரைக் கொண்டே (நீர் நிலை) அறிந்து கொள்ள முடியும்.
  • நீர் நிலைகளான கிணறுகள், ஏரி, குளம், ஆறு, குட்டைகள் ஆகியவற்றை ஒட்டிய இடங்களின் அடைந்திருப்பதே நீர்நிலைக் குடியிருப்புகள் ஆகும்.

வறண்ட /உலர்நிலைக் குடியிருப்புகள் :

  • வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும்.
  • நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும் உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.
  • இந்நிலையில் கேரளக் கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 13

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

6th Social Science Guide சமத்துவம் பெறுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
அ) சமூகமயமாக்கல்
ஆ) பொருளாதார நன்மைகள்
இ) அதிகாரத்துவ ஆளுமை
ஈ) புவியியல்
விடை:
ஈ) புவியியல்

Question 2.
பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
அ) பாலின பாகுபாடு
ஆ) சாதி பாகுபாடு
இ) மத பாகுபாடு
ஈ) சமத்துவமின்மை
விடை:
அ) பாலின பாகுபாடு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 3.
பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
அ) திரைப்படங்கள்
ஆ) விளம்பரங்கள்
இ) தொலைக்காட்சி தொடர்கள்’
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 4.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம்/கள்
அ) இந்தியா 2020
ஆ) அக்கினிச்சிறகுகள்
இ) எழுச்சி தீபங்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 5.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1997
ஆ) 1996
இ) 1995
ஈ) 1994
விடை:
அ) 1997

Question 6.
விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
அ) 1985
ஆ) 1986
இ) 1987
ஈ) 1988
விடை:
ஈ) 1988

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 7.
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
அ) செஸ்
ஆ) மல்யுத்தம்
இ) கேரம்
ஈ) டென்னிஸ்
விடை:
இ) கேரம்

Question 8.
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது எனக் கூறுகிறது?
அ) 14(1)
ஆ) 15 (1)
இ) 16 (1)
ஈ) 17 (1)
விடை:
அ) 15 (1)

Question 9.
பி.ஆர்.அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1989
இ) 1988
ஈ) 1987
விடை:
அ) 1990

Question 10.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) சேலம்
இ) கன்னியாகுமரி
ஈ) சிவகங்கை
விடை:
இ) கன்னியாகுமரி

II. பொருத்துக பாரபட்சம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் 60
விடை:
1 – ஆ;
2 – ஈ;
3 – உ;
4 – இ;
5 – அ

III. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
______ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
விடை:
பாரபட்சம்

Question 2.
_____ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தார்.
விடை:
1931

Question 3.
இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் _____
விடை:
விஸ்வநாதன் ஆனந்த்

Question 4.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____.
விடை:
டாக்டர் B.R. அம்பேத்கார்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 5.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் _____
விடை:
தருமபுரி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பாரபட்சம் என்றால் என்ன?
விடை:

  • பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவது ஆகும்.
  • அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறான முன் முடிவு எடுப்பதாகும்.
  • மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருக்கும் போது பாரபட்சம் ஏற்படுகிறது.

Question 2.
ஒத்தக் கருத்து என்றால் என்ன ?
விடை:

  • ஒத்தக் கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.
  • (எ.கா) பெண்கள் விளையாட்டிற்கு உகந்தவர்கள் அல்ல என முன் முடிவு கொள்வது.
  • முன்முடிவு வலுவாக இருக்கும் போது ஒத்தக் கருத்து உருவாகிறது.

Question 3.
பாகுபாடு என்றால் என்ன?
விடை:

  • மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

Question 4.
இந்திய அரசியலமைப்பின் படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு மற்றும் பிரிவு 15(1) ஆகியவை சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றன.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.
விடை:
பாரபட்சம் உருவாவதற்கு பொதுவான சமூக காரணிகள்.

  • சமூகமயமாக்கல்
  • நிர்ணயிக்கப்பட்ட நடத்தை
  • பொருளாதார பயன்கள்
  • சர்வாதிகார ஆளுமை
  • இன மையக் கொள்கை
  • கட்டுப்பாடான குழு அமைப்பு
  • முரண்பாடுகள்

Question 2.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
விடை:
சாதி பாகுபாடு

  • இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.
  • ஆரம்ப காலங்களில் சமுதாயம் என்பது தொழில் அடிப்படையில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்ததையே வர்ணாசிரமமுறை என அறியப்பட்டது.
  • இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஆவார்.
  • இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலினப் பாகுபாடு

  • பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
  • எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப்படிப்பை முடித்தபின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
  • அநேக பெண்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப் படுவதில்லை.
  • இன்னும் சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் ஆண் பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர்.

Question 3.
இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.
விடை:

  • அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.
  • தற்போதைய பாலின பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.
  • பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொது வாழ்வில் மற்றும் நிறுவனத்தில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.
  • மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.
  • வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்தவித பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றாக இணைக்கச்செய்தல்.
  • பல தரப்பட்ட மக்களிடமும் பேசுதல்.
  • சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வகுப்பறையை சிறு குழுக்களாகப் பிரித்து, பாகுபாடு ஏற்படுத்துவதற்கான காரணங்களைப்பற்றி கலந்துரையாடி, அறிக்கை ஒன்றினை எழுதவும்.
2. பாரபட்சம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொண்ட நபர்கள் பற்றி தகவல்களை சேகரிக்கவும்.

VII. உயர் சிந்தனை வினா.

Question 1.
இந்தியாவில் நிகழும் பல்வேறு பாகுபாட்டினை விவரி.
விடை:

  • மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும்.
  • சாதி ஏற்றத்தாழ்வு, மதச்சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.
  • இந்தியாவில் நிகழும் பாகுபாடுகளின் மூன்று வகைகள்.
    1. சாதி பாகுபாடு
    2. பாலின பாகுபாடு
    3. மத பாகுபாடு

சாதி பாகுபாடு

  • இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதிமுறை ஆகும்.
  • இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக முன்னோடியாகத் திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்.
  • இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.

பாலின பாகுபாடு

  • பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றை குறிக்கிறது.
  • எடுத்துக்காட்டாக, சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுவதில்லை.
  • ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாலின பாகுபாடு ஆகும்.

மத பாகுபாடு

  • மதம் சார்ந்த பாகுபாடு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தனிநபரின் மீதோ அல்லது குழுவினர் மீதோ சமத்துவமின்றி நடத்துவது ஆகும்.
  • சில மக்கள் வேற்று மதத்தவர்களாக இருப்பதால் பொது இடங்களில், மத வழிபாட்டு தலங்களில் நுழைய அனுமதி இல்லை.
  • சில மதத்தவர்கள் தங்கள் சடங்குகள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர்.

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது).

1. உங்கள் கிராமத்தில் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக நீங்கள் எவ்வாறு போராடுவீர்?

6th Social Science Guide சமத்துவம் பெறுதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு.
அ) ஜெர்மனி
ஆ) ஆஸ்திரேலியா
இ) தென் ஆப்பிரிக்கா
ஈ) இந்தியா
விடை:
இ) தென் ஆப்பிரிக்கா

Question 2.
இன வெறிக் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு.
அ) 1885
ஆ) 1990
இ) 1995
ஈ) 2005
விடை:
ஆ) 1990

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல்

Question 3.
நமது அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவர்
அ) நேரு
ஆ) டாக்டர். அம்பேத்கார்
இ) மவுண்ட்பேட்டன்
ஈ) டாக்டர். அப்துல் கலாம்
விடை:
ஆ) டாக்டர். அம்பேத்கார்

Question 4.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மிகக் குறைந்த கல்வி அறிவு பெற்றுள்ள மாவட்டம்.
அ) சென்னை
ஆ) தூத்துக்குடி
இ) நீலகிரி
ஈ) தர்மபுரி
விடை:
ஈ) தர்மபுரி

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பாரபட்சமான எவ்வகைகளில் காணப்படுகிறது.
விடை:

  • பாலின ரீதி
  • இன ரீதி
  • வர்க்க ரீதி
  • மாற்றுத் திறனாளிகளின் மீதும் காணப்படுகிறது.

Question 2.
பாகுபாடு எவ்வகைகளில் நிலவுகிறது.
விடை:

  • சாதிபாகுபாடு
  • பாலினப் பாகுபாடு
  • மத பாகுபாடு

Question 3.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:
அரசியலமைப்பு என்பது நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிமுறைகளின் தொகுப்பு ஆகும்

Question 4.
பாகுபாடு பற்றி இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 15(1) என்ன கூறுகிறது?
விடை:
எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகிறது

Question 5.
சமத்துவம் பற்றி இந்திய அரசியலமைப்பின் 14 வது சட்டப்பிரிவு என்ன கூறுகிறது?
விடை:
சட்டத்திற்குமுன் அனைவரும் சமம். மேலும் நாட்டிற்குள் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பினை அளித்து, தேவையற்ற பாகுபாட்டினை தடை செய்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 2 சமத்துவம் பெறுதல் 90

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
அ) உட்பாயத் தேக்கம்
ஆ) வண்டல் விசிறி
இ) வெள்ளச் சமவெளி
ஈ) டெல்டா
விடை:
ஆ) வண்டல் விசிறி

Question 2.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) பெண்ணாறு
இ) சிற்றாறு
ஈ) வைகை
விடை:
இ) சிற்றாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ______________ ஆகும்.
அ) சர்க்
ஆ) அரெட்டுகள்
இ) மொரைன்
ஈ) டார்ன் ஏரி
விடை:
இ) மொரைன்

Question 4.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரேசில்
விடை:
இ) சீனா

Question 5.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ___________
அ) கடல் ஓங்கல்கள்
ஆ) கடல் வளைவுகள்
இ) கடல் தூண்க ள்
ஈ) கடற்கரைகள்
விடை:
ஈ) கடற்கரைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
விடை:
பாறை சிதைவடைதல்

Question 2.
ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் _____________ எனப்படுகிறது.
விடை:
ஆற்று முகத்துவாரம்

Question 3.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ___________ பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 4.
ஜெர்மனியில் காணப்படும் சர்க் ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கார் சர்க்

Question 5.
உலகின் மிக நீண்ட கடற்கரை __________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 2

IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை (✓) குறியிடுக.

Question 1.
கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
அரித்தல் வரையறு.
விடை:
அரித்தல் :
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.

Question 2.
உட்பாயத் தேக்கம் என்றால் என்ன?
விடை:
உட்பாய்த் தேக்கம் :
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்த் தேக்கம் எனப்படும்.

Question 3.
குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
விடை:
குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake):

  • ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன.
  • நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.

Question 4.
பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை குறிப்பிடவும்.
விடை:
பனியாற்று அரித்தலால் ஏற்படும் முதன்மை நிலத் தோற்றங்கள்:

  • சர்க்
  • அரட்டுகள்
  • ‘U’வடிவ பள்ளத்தாக்கு

Question 5.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
காளான் பாறைகள்:
பாலைவனத்தில் வேகமான செயல்முறைக் காரணியான காற்று, பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 6.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
விடை:
காயல்கள் :
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் எனப்படும்.

உதாரணம்:
கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி தமிழ்நாட்டிலுள்ள பழவற்ேகாடு ஏரி, ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி

VI. கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக.

Question 1.
கிளையாறு மற்றும் துணையாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 3

Question 2.
‘V’ வடிவ பள்ளத்தாக்கு மற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 4

Question 3.
கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 5

VII. காரணம் தருக.

Question 1.
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
விடை:
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
ஏனெனில்
மியான்டர் ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் செயல்களுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் குறைந்து (நெருக்கமாக) வருகின்றன.

Question 2.
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
விடை:
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
ஏனெனில்
ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்ற போது ஆற்றின் அண்டைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

இவ்வெள்ளப் பெருக்கு மென்மையான மண் மற்றும் இதர பொருட்களை அடுக்குகளாக படியவைக்கின்றது. இவை வண்டல் படிவுகள் ஆகும். இதனால் வளமான சமதள வெள்ளச் சமவெளி உண்டாகிறது.

Question 3.
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
விடை:
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
ஏனெனில்

  • கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை தோற்றுவிக்கின்றது.
  • மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் எனப்படும்.

VIII. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.
விடை:
ஆற்றின் அரிப்பில் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்கள் :
‘V’ வடிவ பள்ளத்தாக்கு :
ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’ வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’ வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்.

நீர் வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

ஆற்று வளைவுகள் :
ஆறானது சமவெளிப்பகுதியை அடையும்போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்றுவளைவுகள் எனப்படும்.

குதிரைக் குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் தொடர்ந்து இருபக்கங்களிலும் அரித்தலுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில் – ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.
விடை:
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்: காளான் பாறைகள்:
பாலைவனத்தில் காற்றின் வேகமான செயல்பாடு, பாறையின் மேற்பகுதியை விட கீழப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படும்.

காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்:
ஒரு தனித்துவிடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண்போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் எனப்படும்.

மணல் குன்றுகள்:
காற்று வீசும்போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்று வீசுவது நிற்கும்போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படிய வைக்கின்றது. இப்படிவுகள் மணல்குன்றுகள் எனப்படும்.

பிறைவடிவ மணல் குன்றுகள் :
பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படும்.

காற்றடி வண்டல் படிவுகள்:
மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்கிறோம்.

Question 3.
அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
விடை:
அரெட்டுகள் தோற்றம் :
பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப் பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்தடுத்த இரண்டு சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.

IX.

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை தொடர்புடைய கட்டங்களில் நிரப்பவும்
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 6
(பர்கான் , V’ வடிவ பள்ளத்தாக்கு , ஓங்கல், அரெட், தனிக்குன்றுகள், மொரைன், வண்டல் விசிறி மற்றும் காயல்)
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 7

Question 2.
உன் வீட்டு அருகே கீழ்க்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை கண்டறிந்து குறிப்பு எழுதுக.
விடை:

  1. குன்று
  2. நீர்வீழ்ச்சி
  3. ஆறு அல்லது ஓடை
  4. கடற்கரை

2. நீர்வீழ்ச்சி – குற்றாலம் நீர்வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _____________
அ) ஆற்று வளைவு
ஆ) காயல்
இ) கழிமுகம்
ஈ) முகத்துவாரம்
விடை:
ஈ) முகத்துவாரம்

Question 2.
டார்ன் ஏரி என்பது ___________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) ஆறு
ஆ) பனியாறு
இ) கடல்
ஈ) காற்று
விடை:
ஆ) பனியாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு
அ) குற்றாலம்
ஆ) வேம்பநாடு
இ) கார்ரி
ஈ) மியாமி
விடை:
ஆ) வேம்பநாடு

Question 4.
வடசீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _____________
அ) கோபி
ஆ) கலஹாரி
இ) தார்
ஈ) சஹாரா
விடை:
அ) கோபி

Question 5.
மிசிசிபி என்பது ஒரு ____________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) மலை
ஆ) நீர்வீழ்ச்சி
இ) ஆறு
ஈ) கடற்கரை
விடை:
இ) ஆறு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுதல் ___________ எனப்படும்.
விடை:
சமப்படுத்துதல்

Question 2.
சேத்தியாத்தோப்பு ______________ மாவட்டத்தில் உள்ளது.
விடை:
கடலூர்

Question 3.
___________ டெல்டா தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
விடை:
காவேரி

Question 4.
உலகிலேயே மிக நீளமான கடற்கரை _____________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

Question 5.
மலைச் சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ____________ ஆகும்
விடை:
பனியாறு

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 8

IV. சரியா / தவறா எனக் கூறுக.

Question 1.
பொதுவாக ஆறுகள் ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ உற்பத்தியாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
தென் அமெரிக்காவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச்சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
விடை:
சரி

Question 4.
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை ஆகும்.
விடை:
சரி

Question 5.
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் எனப்படுகின்றன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : ஆறு கடலை அடையும் போது பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை கிளையாறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் : ஆறு கடலை அடையும்போது ஆற்று நீரின் வேகம் குறைந்து விடுகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : மணல் துகள்கள் எடை அதிகமாக இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது.
காரணம் : காற்று வீசுவது நிற்கும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

VI. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1. வேம்பநாடு – கேரளா
2. புலிகாட் – கர்நாடகம்
விடை:
2. புலிகாட் – கர்நாடகம்

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
ஆற்றுவளைவு, கழிமுகம், கத்திமுனைக் குன்றுகள், உயர் அணை
விடை:
கத்தி முனைக் குன்றுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காவேரி, கலஹாரி, கங்கை , மிசிசிபி
விடை:
கலஹாரி

VIII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
‘சமப்படுத்துதல்’ என்றால் என்ன?
விடை:
சமப்படுத்துதல் :
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூ லம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர்.

Question 2.
புவிமேற்பரப்பில் காணப்படும் எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களில் சிலவற்றை பெயரிடு.
விடை:
எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்கள் :

  • மலைகள்
  • பீடபூமிகள்
  • பள்ளத்தாக்குகள்

Question 3.
பிரசித்த பெற்ற உலகத்தின் சில நீர்வீழ்ச்சிகளைப் பெயரிடுக.
விடை:
உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள்:

  • ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா, தென் அமெரிக்கா)
  • நயாகரா நீர்வீழ்ச்சி (கனடா, அமெரிக்க எல்லை, வடஅமெரிக்கா)
  • விக்டோரியா நீர்வீழ்ச்சி (ஜாம்பியா, ஜிம்பாப்வே எல்லை, ஆப்பிரிக்கா)
  • குற்றாலம் நீர்வீழ்ச்சி (தமிழ்நாடு, இந்தியா)

Question 4.
கழிமுகம் (டெல்டா) என்றால் என்ன? சில கழிமுகங்களின் பெயர்களைக் கூறு.
விடை:
கழிமுகம்:

  • அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து டெல்டா எனப்படும். கழிமுகப்பகுதியை ஏற்படுத்துகின்றன. கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச் சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
  • காவேரி டெல்டா
  • கங்கை டெல்டா
  • மிசிசிபி டெல்டா

Question 5.
கடற்கரை எவ்வாறு உருவாகிறது?
விடை:
கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை எனப்படும். எ.கா: மியாமி கடற்கரை, மெரினா கடற்கரை

IX. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
கடற்குகைகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:
கடற்குகைகள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புகள் உருவாகின்றன. கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
விடை:
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:

  • நீர் :’V’ வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு ஏரி.
  • காற்று : காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்
  • பனி : பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரட்டுகள்),’U’ வடிவ பள்ளத்தாக்கு
  • கடல் அலை : கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.

Question 3.
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புக்கள் உருவாகின்றன.

கடல் ஓங்கல் :
கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடற்குகைகள்:
கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்ககள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படும்.

கடல் வளைவுகள் :
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை (Sea Arches) தோற்றுவிக்கின்றது.

கடல் தூண்கள் :
கடல் அலைகள் மேற்கூரையை மேலும் அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் (Sea Stacks) எனப்படும்.

கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும்.

மணல் திட்டுகள் :
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் (Sand Bars) எனப்படும்.

காயல்கள் (அல்லது) உப்பங்கழிகள்:
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 9

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

6th Social Science Guide பன்முகத் தன்மையினை அறிவோம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்வு செய்க:

Question 1.
இந்தியாவில் மாநிலங்களும், 4. யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
அ) 27, 9
ஆ) 29, 7
இ) 28, 7
ஈ) 28, 9
விடை:
ஆ) 29, 7

Question 2.
இந்தியா ஒரு _____ என்று அழைக்கப்படுகிறது.
அ) கண்டம்
ஆ) துணைக்கண்டம்
இ) தீவு
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை:
ஆ) துணைக்கண்டம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 3.
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ____ மாநிலத்தில் உள்ளது.
அ) மணிப்பூர்
ஆ) சிக்கிம்
இ) நாகலாந்து
ஈ) மேகாலயா
விடை:
ஈ) மேகாலயா

Question 4.
கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை ?
அ) சீக்கிய மதம்
ஆ) இஸ்லாமிய மதம்
இ) ஜொராஸ்ட்ரிய மதம்
ஈ) கன்ஃபூசிய மதம்
விடை:
ஈ) கன்ஃபூசிய மதம்

Question 5.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ______ அ) 25
ஆ) 23
இ) 22
ஈ) 26
விடை:
இ) 22

Question 6.
______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) பஞ்சாப்
ஈ) கர்நாடகா
விடை:
அ) கேரளா மோகினியாட்டம்

Question 7.
மாநிலத்தின் _____ செவ்வியல் நடனம் ஆகும்.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) மணிப்பூர்
ஈ) கர்நாடகா
விடை:
அ) கேரளா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 8.
“டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற நூலினை எழுதியவர் _____
அ) இராஜாஜி
ஆ) வ.உ.சி
இ) நேதாஜி
ஈ) ஜவகர்லால் நேரு.
விடை:
ஈ) ஜவகர்லால் நேரு

Question 9.
‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _______
அ) ஜவகர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) அம்பேத்கார்
ஈ) இராஜாஜி
விடை:
அ) ஜவகர்லால் நேரு

Question 10.
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _____ என்று அழைத்தார்.
அ) பெரிய ஜனநாயகம்
ஆ) தனித்துவமான பன்முகத்தன்னை கொண்ட நிலம்
இ) இனங்களின் அருங்காட்சியம்
ஈ) மதச்சார்பற்ற நாடு
விடை:
இ) இனங்களின் அருங்காட்சியகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
விடை:
பொருளாதார

Question 2.
மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ______ மாநிலத்தில் உள்ளது.
விடை:
ராஜஸ்தான்

Question 3.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______
விடை:
2004

Question 4.
பிஹு திருவிழா _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
விடை:
அசாம்

III. பொருத்துக:

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 1

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பன்முகத்தன்மையினை வரையறு.
விடை:
இந்தியர்களாகிய நாம் பல்வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகளைச் சார்ந்து வாழ்கிறோம். இதுவே பன்முகத் தன்மை எனப்படும்.

Question 2.
பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?
விடை:

  • நில அமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத் தன்மை
  • சமூக பன்முகத்தன்மை
  • சமய பன்முகத்தன்மை
  • மொழி சார். பன்முகத் தன்மை
  • பண்பாடு பன்முகத் தன்மை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 3.
இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
விடை:
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு ஆகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றைப் பற்றி எழுதுக.
விடை:
தீபாவளி – இந்துக்கள்
கிறிஸ்துமஸ் – கிறிஸ்தவர்கள்
ரம்ஜான் – இஸ்லாமியர்கள்
சில விழாக்களை பல்வேறு மதத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகக் கொண்டாடுகின்றனர்.

Question 5.
இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 70

Question 6.
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன் அழைக்கப் – படுகிறது?
விடை:

  • இந்தியா மாறுபட்ட புவியியல் அமைப்பு, தட்ப வெப்பநிலை, தாவரங்கள், விலங்குகள், பலவகைப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கொண்டுள்ளது.
  • இவ்வாறு இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி:

Question 1.
மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத் தன்மையினை விவரி.
விடை:

  • இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
  • தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
  • இந்தியா ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது.
  • இதனால் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக எழுச்சி பெற்றது.
  • பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும், ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

பண்பாட்டு பன்முகத்தன்மை:

  • பண்பாடு என்பது மக்களின் மொழி, உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள், இசை, கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
  • ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.
  • இது சமூக வடிவமைப்புகளால் முன்னிறுத்தப்படும் குழு அடையாளத்தின் வளர்ச்சி நிலை ஆகும்.
  • கலை மற்றும் கட்டிடக்கலை ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபையும் நுண்ணிய கலைவெளிப்பாட்டு வடிவங்களையும் பெற்றிருக்கின்றன.

Question 2.
இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் – கலந்துரையாடுக.
விடை:

  • இந்தியாபன்முகத்தன்மை நிறைந்த நாடு நாட்டுப்பற்று” என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம்.
  • தேசியக்கொடி, தேசிய கீதம் தாய்நாட்டில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.
  • தேசிய விழாக்கள் கொண்டாடப்படுவதால் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துகின்றன.
  • நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒரே தேசத்தால் ஒன்றுபட்டுள்ளோம்.
  • விடுதலைப் போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்கின்றன.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள். (மாணவர்கள் செய்ய வேண்டியவை)

1. ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.
2. ஏதேனும் ஒரு மாநிலம் பற்றிய தகவல்களை அறிந்து, அம்மாநில மக்களின் பாரம்பரியம், பண்பாடு குறித்த தகவல்களை ஒரு புகைப்படத் தொகுப்பாக தயார் செய்க.
3. தமிழ் நாட்டின் கலை மற்றும் கட்டிடக்கலை சார்ந்த புகைப்படங்களை தொகுக்க.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

VII. சிந்தனை வினா:

Question 1.
நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக. மாநிலங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 80

VIII. வாழ்வியல் திறன்.

1. உனது பள்ளியில் ஒற்றுமையை நிலை நிறுத்த மேற்கொள்ளும் பரிந்துரைகள் யாவை?

1. பள்ளியில் சீருடை அணிதல்
2. மதம் சார்ந்த விழாக்களை கொண்டாடுவது
அ. – தீபாவளி
ஆ. – பொங்கல் விழா
இ. – ரம்ஜான் விழா
ஈ. – ஹோலிபண்டிகை
3. சர்வசமய பிரார்த்தனை நடத்துதல்
4. சமபந்தி உணவு ஏற்பாடு செய்தல்.
5. பள்ளி விளையாட்டு விழா, ஆண்டுவிழா, நடத்துதல்.
6. மாணவர்களின் திறனை வெளிக்கொணர கலைவார விழா நடத்துதல்

6th Social Science Guide பன்முகத் தன்மையினை அறிவோம் Additional Important Questions and Answers

I . சரியான விடையளித் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
திராவிட மொழிகளில் பழமையானது.
அ) இந்தி
ஆ) தமிழ்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
விடை:
ஆ) தமிழ்

Question 2.
அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
அ) 13
ஆ) 18
இ) 22
ஈ) 25
விடை:
இ) 22

Question 3.
தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு.
அ) 2002
ஆ) 2004
இ) 2012
ஈ) 2008
விடை:
ஆ) 2004

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குருநானக் ஜெயந்தியைக் கொண்டாடுபவர்கள் _______
விடை:
சீக்கியர்கள்

Question 2.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு ______
விடை:
1947

Question 3.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் _____
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 4.
சமூகத்தின் அடிப்படை அலகு _____
விடை:
குடும்பம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம்

Question 5.
பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற நடனம் ______
விடை:
பங்க்ரா

III. சுருக்கமான விடை தருக.

Question 1.
குடும்பம் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறுக.
விடை:
ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குடும்பம் என்பது இரு வகைப்படும்.

  1. கூட்டுக் குடும்பம்
  2. தனிக்குடும்பம்

Question 2.
சமுதாயம் என்றால் என்ன?
விடை:

  • சமூகம் என்பது ஒரு பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழும் இடமாகும்.
  • சமுதாயம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், கைவினைஞர்கள், பெற்றோர்கள், ‘ஆசிரியர்கள், மாணாக்கர் போன்ற பலரையும் உள்ளடக்கியது.

Question 3.
கண்டம் எனப்படுவது யாது?
விடை:
கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கை பிரிவுகள் மற்றும் கால நிலைகளை கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பாகும்.

Question 4.
இந்தியாவில் பின்பற்றப்படும் மதங்களைக் குறிப்பிடுக.
விடை:
இந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவமதம், சீக்கிய மதம், புத்த மதம், சமணமதம், ஜொராஸ்டிரியமதம் போன்ற மதங்கள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Civics Chapter 1 பன்முகத் தன்மையினை அறிவோம் 90

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

6th Social Science Guide பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Text Book Back Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ______
விடை:
பெருவெடிப்பு

Question 2.
இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு _____ ஆகும்.
விடை:
ஒளியாண்டு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 3.
சூரியக் குடும்பத்தின் மையம் _____
விடை:
சூரியன்

Question 4.
கோள் என்ற வார்த்தையின் பொருள் _____
விடை:
சுற்றி வருபவர்

Question 5.
அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _____
விடை:
வியாழன்

Question 6.
நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _____
விடை:
சந்திராயன் – 1

Question 7.
புவியின் சாய்வுக் கோணம் _____
விடை:
23\(\frac{1}{2}\)°

Question 8.
நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் ____ மற்றும் _____
விடை:
மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

Question 9.
சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு _____ ல் காணப்படும்.
விடை:
மிக அருகில்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 10.
புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு – என்றுபெயர்.
விடை:
ஒளிர்வு வட்டம்

ஆ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்.
அ) சுற்றுதல்
ஆ) பருவகாலங்கள்
இ) சுழல்தல்
ஈ) ஓட்டம்
விடை:
இ) சுழல்தல்

Question 2.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்.
அ) மார்ச் 21
ஆ) ஜூன் 21
இ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
விடை:
ஈ) டிசம்பர் 22

Question 3.
சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்.
அ) ஆண்டிரோமெடா
ஆ) மெகலனிக்கிளவுட்
இ) பால்வெளி
ஈ) ஸ்டார்பர்ஸ்ட்
விடை:
இ) பால்வெளி

Question 4.
மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
அ) செவ்வாய்
ஆ) சந்திரன்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) சந்திரன்

Question 5.
எந்த கோளால் தண்ணீ ரில் மிதக்க இயலும்?
அ) வியாழன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெப்டியூன்
விடை:
ஆ) சனி

இ. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
வெள்ளி வியாழன், நெப்டியூன், சனி
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 80

Question 2.
சிரியஸ் ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 81

Question 3.
புளூட்டோ , ஏரிஸ், செரஸ், அயோ
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 82

Question 4.
வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 83

Question 5.
தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி விண்கலம்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 84

ஈ. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 85

உ. (i). கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2. ஜுன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2 மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
அ) 1 மற்றும் 2

ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, கூற்று 2 தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

ஊ. பெயரிடுக.

Question 1.
விண்மீன்களின் தொகுப்பு ______
விடை:
விண்மீன் திரள்

Question 2.
சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் _______
விடை:
பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்

Question 3.
பிரகாசமான கோள் _____
விடை:
வெள்ளி

Question 4.
உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் _______
விடை:
உயிர்க்கோளம்

Question 5.
366 நாட்களை உடைய ஆண்டு ______
விடை:
லீப் ஆண்டு

எ. இரு வார்த்தைகளுக்கு மிகாமல் விடை தருக.

Question 1.
உட்புறக்கோள்களைப் பெயரிடுக.
விடை:

  1. புதன்
  2. வெள்ளி
  3. புவி
  4. செவ்வாய்

Question 2.
புளூட்டோ ஒரு கோளாக தற்சமயம் கருதப்படவில்லை. காரணம் தருக.
விடை:
புளூட்டோ கிரகத்தின் பாதை நெப்டியூன் கிரகத்தின் வளையத்திற்குள் வருவதால், புளூட்டோவை தனி கிரகமாக கருத முடியாது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 3.
சூரிய அண்மை என்றால் என்ன?
விடை:
சூரிய அண்மை ‘ என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.

Question 4.
ஒருவர் 20° வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?
விடை:
இரண்டு முறை

Question 5.
எந்த விண்பொருள் தன் சுற்றுப்பாதையை பிறவிண்பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது? உதாரணம் தருக.
விடை:
குறுங்கோள்கள் தன்
சுற்றுப்பாதையை பிறவிண் பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
உதாரணம் : புளூட்டோ, செரஸ், மேக்மேக் மற்றும் ஹௌமிய

ஏ. காரணம் கூறுக.

Question 1.
யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது?
விடை:

  • வெள்ளிக் கோளைப் போன்றே இக்கோளும் தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றுகிறது.
  • இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.

Question 2.
நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக
விடை:

  • நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது.
  • இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் இதன் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.

Question 3.
புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.
விடை:
புவி கோள வடிவமாக இருப்பதால் சுழலும் வேகம் துருவப்பகுதிகளில் சுழியாக உள்ளது.

ஐ. விரிவான விடை தருக.

Question 1.
உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 95

Question 2.
புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
சுழலுதல் :

  1. புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவது சுழலுதல் எனப்படும்.
  2. புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது.
  3. புவி கோள வடிவமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டும் படும் அப்பகுதி பகல் பொழுது எனப்படும்.
  4. புவி ஒளிபடாத பகுதி இரவாகவும் இருக்கும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

சுற்றுதல் :

  1. புவி தன் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றிவரும் நகர்வு சுற்றுதல் எனப்படும்.
  2. புவி சூரியனை சுற்றி வருவதால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.
  3. புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  4. இதனால் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாள்கள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும்.
  5. இதன் காரணமாக புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும்.
  6. டிசம்பர் 22ம் தேதி மகரரேகையின் மீது சூரியனின் செங்குத்துக்கதிர்கள் விழுவதால் தென் அரைக்கோளத்தில் பகல்பொழுது அதிகமாகவும் வட அரைக்கோளம் நீண்ட இரவையும் கொண்டிருக்கும்.

Question 3.
புவிக் கோளங்களின் தன்மைகள் பற்றி விவரி.
விடை:

  1. உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
  2. புவியின் மூன்று தொகுதிகள் உள்ளன. அவைபாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகும்.
  3. உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் ‘உயிர்க்கோளம்’ ஆகும்.

பாறைக் கோளம்:

  1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் பாறைக் கோளம் எனப்படும்.
  2. இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.

நீர்க் கோளம்:

1. “‘ஹைட்ரோ” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர். 2. கடல்கள், ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள், வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

வளி மண்டலம்:

  1. புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படும்.
  2. வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்ஸிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும்.
  3. கார்பன் – டை – ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோன் வாயுக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

உயிர்க் கோளம்:

  1. பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு பகுதி உயிர்க்கோளம்’ எனப்படும்.
  2. உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  3. ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை, தாவரங்கள், விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.

ஓ.. அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளிக்கவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 96
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 96.2

Question 1.
சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
விடை:
புதன்

Question 2.
பெரிதான கோள் எது?
விடை:
வியாழன்

Question 3.
சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
விடை:
நெப்டியூன்

Question 4.
செந்நிறக் கோள் எது?
விடை:
செவ்வாய்

ஆ. படத்தைப் பார்த்து பதிலளி

Question 1.
படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
விடை:
யுரேனஸ்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 97

Question 2.
கோளின் நிறம் என்ன?
விடை:
பச்சை

Question 3.
இந்நிறத்திற்கான காரணம் என்ன?
விடை:
மீத்தேன் வாயு இக்கோளில் உள்ளதால் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.

இ. குறுக்கெழுத்து புதிர் இடமிருந்து வலம்

Question 1.
இரவும் பகலும் சமமாக காணப்படும்
விடை:
சமப்பகலிரவு

Question 5.
குருளைக் கோள்
விடை:
புளூட்டோ

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 7.
சூரியனிடமிருந்து மிகத் தொலைவில் உள்ள கோள்
விடை:
நெப்டியூன்

Question 8.
சூரியனில் உள்ள வாயு
விடை:
ஹைட்ரஜன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99.8
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99.9

மேலிருந்து கீழ்

Question 4.
நான் காலையில் தென்படுவேன்
விடை:
விடிவெள்ளி

Question 2.
நிலவை ஆராய இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம்
விடை:
சந்திராயன்

Question 3.
நான் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுவேன்
விடை:
ஹேலி

Question 6.
பூமியின் நடுவில் செல்லும் ஓர் கற்பனைக் கோடு
விடை:
அச்சு

Question 7.
எனக்கு இரண்டு துணைக் கோள்கள் உண்டு
விடை:
செவ்வாய் பகுதி

6th Social Science Guide பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு ____ என்று பெயர்.
விடை.:
அண்டவியல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 2.
நட்சத்திரங்களின் தொகுப்பு ____ என்றழைக்கப்படுகிறது.
விடை:
விண்மீன் திரள் மண்டலம்

Question 3.
Sol என்ற இலத்தீன் வார்த்தைக்கு ____ என்று பொருள்
விடை:
சூரியக் கடவுள்

Question 4.
சூரியக் குடும்பத்தின் மையத்தில் _____ அமைந்துள்ளது.
விடை:
சூரியன்

Question 5.
கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை _____ எனப்படுகிறது.
விடை:
சுற்றுப்பாதை

Question 6.
மிக வெப்பமான கோள்
விடை:
வெள்ளி

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்.
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) யுரேனஸ்
ஈ) சனி
விடை:
அ) புதன்

Question 2.
உருளும் கோள்.
அ) வெள்ளி
ஆ) செவ்வாய்
இ) நெப்டியூன்
ஈ) யுரேனஸ்
விடை:
ஈ) யுரேனஸ்

Question 3.
வளையங்களைக் கொண்ட கோள்.
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) சனி
ஈ) புதன்
விடை:
இ) சனி

Question 4.
ஹேலி விண்மீன் இனி தோன்றும் ஆண்டு.
அ) 2051
ஆ) 2041
இ) 2061
ஈ) 2031
விடை:
இ) 2061

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 5.
கடகரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
அ) மார்ச் 21
ஆ) ஜுன் 21
ஆ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
விடை:
ஈ) டிசம்பர் 22

III. i) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சூரியன் குடும்பத்தின் மூன்றாவது கோள் புவி.
2. சூரியன் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனது.

Question 3.
புதன் கோளுக்கு துணைக் கோள்கள் எதுவுமில்லை. சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
இ) 1 மற்றும் 3

ii) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சூரியன் புவியைச் சுற்றி வருகிறது.
2. ரோமானிய போர்க் கடவுள் பெயரால் செவ்வாய் கோள் அழைக்கப்படுகிறது.
3. யுரேனஸ் பச்சை நிறமாகக் காணப்படுகிறது.
சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 3
ஈ) 3 மட்டும்
விடை:
ஆ) 2 மற்றும்

iii) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 – சூரியக் குடும்பத்தில் வேகமாகச் சுழழும் கோள் வியாழன்
கூற்று 2 – நெப்டியூன் மிகக் குளிர்ந்த கோள் ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரி

iv) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 – புவி தன் அச்சில் 32 1/2° சாய்ந்து கொண்டு சுற்றுகிறது.
கூற்று 2 – சனிக்கோளின் ஈர்ப்புத்திறன் நீரை விட அதிகமானது சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் சரி

IV. குறுகிய விடையளி :

Question 1.
ஒளியாண்டு என்றால் என்ன?
விடை:

  1. ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.
  2. ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 300000 கி.மீ ஆகும்.

Question 2.
பேரண்டத்தின் படிநிலைகள் யாவை?
விடை:

  1. பேரண்டம்
  2. விண்மீன்திரள் மண்டலம்.
  3. சூரியக் குடும்பம்.
  4. கோள்கள்
  5. துணைக்கோள்கள்.

Question 3.
சூரியக் குடும்பத்தில் எத்தனை கோள்கள் உள்ளன. அவை யாவை?
விடை:
சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. அவை

  1. புதன்
  2. வெள்ளி
  3. புவி
  4. செவ்வாய்
  5. வியாழன்
  6. சனி
  7. யுரேனஸ்
  8. நெப்டியூன் பருவம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
அ) ஈராக்
ஆ) சிந்துவெளி
இ) தமிழகம்
ஈ) தொண்டைமண்டலம்
விடை:
அ) ஈராக்

Question 2.
இவற்றுள் எது தமிழக நகரம்?
அ) ஈராக்
ஆ) ஹரப்பா
இ) மொகஞ்சதாரோ
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஈ) காஞ்சிபுரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 3.
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஆ) மதுரை

Question 4.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரிஆறு
இவற்றில் அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அ மற்றும் ஆ சரி
விடை:
ஈ) அ மற்றும் ஆசரி

Question 5.
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) சென்னை
விடை:
ஈ) சென்னை

Question 6.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) ஹரப்பா
விடை:
அ) மதுரை

II. கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும்
நடைபெற்றது. காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
அ) கூற்று சரி: காரணம் தவறு
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி.
இ) கூற்று தவறு: காரணம் சரி.
ஈ) கூற்று தவறு: காரணம் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
அ) ‘திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில்” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
இ) “நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்” என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஈ) அனைத்தும் சரி

Question 3.
சரியான தொடரைக் கண்டறிக
அ) நாளங்காடி என்பது இரவு நேர கடை.
ஆ) அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
இ) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
விடை:
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது

Question 4.
தவறான தொடரைக் கண்டறிக.
அ) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
இ) கோவலனும், கண்ண கியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
ஈ) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
இ) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்

Question 5.
சரியான இணையைக் கண்டறிக.
அ) கூடல் நகர் – பூம்புகார்
ஆ) தூங்கா நகரம் – ஹரப்பா
இ) கல்வி நகரம் – மதுரை
ஈ) கோயில் நகரம் – காஞ்சிபுரம்
விடை:
ஈ) கோயில் நகரம்- காஞ்சிபுரம்

Question 6.
தவறான இணையைக் கண்டறிக.
அ) வட மலை – தங்கம்
ஆ) மேற்கு மலை – சந்தனம்
இ) தென்கடல் – முத்து
ஈ) கீழ்கடல் – அகில்
விடை:
ஈ) கீழ்கடல் – அகில்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _______
விடை:
ராஜசிம்மன்

Question 2.
கோயில் நகரம் என அழைக்கப்படுவது _____
விடை:
காஞ்சி

Question 3.
மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ______
விடை:
பெருவணிகன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

IV. சரியா? தவறா?

1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.
விடை:
1. சரி
2. சரி
3. சரி
4. சரி

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
ஏற்றுமதி என்றால் என்ன?
விடை:
ஒரு நாடு தன்னிடம் உள்ள உபரிப் பொருள்களை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வது ஏற்றுமதியாகும்.

Question 2.
இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் மற்றும் சங்கப் பாட நூலைக் கூறு
விடை:
காப்பியம்: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
சங்கப்பாடநூல்: பட்டினப்பாலை

Question 3.
தொண்டைநாட்டின் தொன்மையான நகரம் எது?
விடை:
காஞ்சி

Question 4.
கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள ஏதேனும் ஒரு வேறுபாட்டைக் கூறு.
விடை:
கிராமத்தை விட நகரத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்.

Question 5.
லோத்தல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?
விடை:
சிந்து வெளி நாகரிகம்

Question 6.
உலகின் தொன்மையான நாகரிகம் எது?
விடை:
மெசபடோமிய நாகரிகம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

Question 1.
இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:
இந்தியாவில் பண்டைய நகரங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
ஜான்சி:

  • ஜான்சி நகரம் உத்திரப் பிரதேசத்தில் உள்ளது
  • இது ஜான்சி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்
  • இது உத்திரப் பிரதேசத்தின் அனைத்து நகரங்களோடும் சாலை மற்றும் இருப்புப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்நகரம் இந்திய அரசாங்கத்தினால் சிறந்த நகரங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்நகரம் ஜான்சிராணி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஜான்சி கோட்டை, அரசு .அருங்காட்சியகம், ராணிமஹால் ஆகியவை இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

பாடலிபுத்திரம்:

  • தற்போதைய பாட்னா நகரத்தை ஒட்டியுள்ளது.
  • மௌரியப் போரசு, நந்த போரசு போன்றவற்றின் தலைநகராக இந்நகரம் இருந்தது

தட்சசீலம்:

  • இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக இருந்தது.
  • தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது.
  • இது ஒரு கல்வி நகரம் ஆகும்.
  • உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று இங்கு இருந்தது.

லோத்தல்:

  • குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் கிளை நதியின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது.
  • இது பழங்கால இந்தியாவின் ஒரு முக்கிய வணிகமையம் ஆகும்.
  • இங்கு கப்பல் கட்டும் தளம் ஒன்று இருந்துள்ளது.
  • இது சிந்து வெளி மக்களின் கடல் கடந்த வணிகம் பற்றி எடுத்துக் காட்டுகிறது.

ஹரப்பா :

  • இந்நகரம் 1921 ஆம் ஆண்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஹரப்பா என்றால் இறந்தோர் மேடு என்று பொருள்.
  • சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுச்சின்னங்கள் இங்கு காணப்பட்டன.
  • இது ஒரு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் ஆகும்.
  • இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
தமிழகத்தின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பூம்புகார்
  • மதுரை
  • காஞ்சி
  • வஞ்சி
  • தொண்டி
  • உறையூர்
  • கரவூர்
  • மாமல்லபுரம்
  • தகடூர்
  • காயல்

Question 3.
தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை?
விடை:

  • சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பட்டினப்பாலை ஆகியவை பூம்புகாரைப் பற்றி அறிய உதவுகிறது.
  • கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்பு மற்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றில் மதுரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காளிதாசர், திருநாவுக்கரசர் ஆகியோர் தங்களது பாடல்களில் காஞ்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • மணிமேகலையிலும் காஞ்சியின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

Question 4.
மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • மதுரையை பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர்.
  • இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், அவர்களுக்குப் பின் நாயக்கர்களும் ஆட்சி செய்தனர்.

Question 5.
மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தூங்கா நகரம்
  • சங்கம் வளர்த்த நகரம்
  • கூடல் நகர்

Question 6.
நாளங்காடி, அல்லங்காடி-வேறுபடுத்துக.
விடை:

  • நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடி
  • அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.

Question 7.
காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?
விடை:

  • தர்மபாலர்
  • ஜோதிபாலர்
  • சுமதி
  • போதி தர்மர்

Question 8.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:

  • காஞ்சிபுரம் ஏரிகள் மாவட்டம் எனப்படுகிறது.
  • காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர்தேக்கி வைக்கப்பட்டிருந்தன. எனவே காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஈராக் – குறிப்பு தருக.
விடை:
தற்போதைய ஈராக் பழங்காலத்தில் மெசபடோமியா என்றழைக்கப்பட்டது. இப்பகுதிதான் சுமேரிய நாகரிகத்தின் பிறப்பிடம் ஆகும். இது யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் என்ற இரு நதிகளால் வளப்படுத்தப்படுகிறது. இது ஒரு முக்கிய வணிக மையமாகும். ஈராக்கிற்கும் பிற நாடுகளுக்குமிடையேயிருந்த வர்த்தகத் தொடர்பு பற்றி பட்டினப் பாலையில் கூறப்பட்டுள்ளது.

Question 2.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
விடை:

  • பூம்புகார் ஒரு துறைமுக நகரம்
  • பெருவணிகர்களும், பெருங்கடல் வணிகர்களும் நிறைந்த பகுதியாக பூம்புகார் விளங்கியது.
  • இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், ரோம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் இங்கு வந்தவண்ணம் இருந்தனர்.
  • வணிகத்தின் காரணமாக பலர் இந்நகரிலேயே தங்கியதால் இங்கு வெளிநாட்டவர் குடியிருப்புகள் தோன்றின.

Question 3.
காஞ்சியில் பிறந்த சான்றோர்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • கவிஞர் காளிதாசர் “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கூறுகிறார்.
  • திருநாவுக்கரசர், “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று கூறுகிறார்.
  • சீன வரலாற்றாசிரியரான யுவான்சுவாங் புத்தகயா, காஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்று கூறுகிறார்.

Question 4.
கோயில் நகரம் – குறிப்பு தருக.
விடை:

  • காஞ்சியிலுள்ள கைலாச நாதர் கோயில் புகழ் பெற்றது.
  • பல்லவர்கள் காலத்தில் ஏராளமான குடைவரைக் கோயில்களும் காஞ்சியில் கட்டப்பட்டுள்ளன. எனவே காஞ்சி கோயில் நகரம் எனப்படுகிறது.

Question 5.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதென்பதை நிரூபி.
விடை:

  • காஞ்சியில் ஏராளமான பள்ளிகளும், புத்த விகாரங்களும் இருந்தன.
  • சீன வரலாற்று ஆசிரியரான யுவான் சுவாங் காஞ்சியிலுள்ள கடிகைக்கு கல்வி கற்பதற்காக வந்தார்.
  • திருநாவுக்கரசர் காஞ்சியை கல்வியில் கரையில்லாத காஞ்சி என்று புகழ்ந்துள்ளார்.

VIII . மாணவர் செயல்பாடுகள்

1. கீழடி அகழாய்வுகள் குறித்த ஆல்பம் தயாரிக்கவும்.
2. பண்டைய தமிழகத்தின் வணிக சிறப்புமிக்க நகரம் பூம்புகார்….. கலந்துரையாடு.
3. பல்லவர்கள் காலக்கோயில்கள் பற்றிய புகைப்படங்களை சேகரி.
4. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகள் பற்றி ஒரு சிறு நூலினைத் தயாரிக்கவும்.
5. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நகரங்கள் குறித்து ஒரு சிறு நூலைத் தயாரிக்கவும்.
6. நூலகத்திற்குச் சென்று, உன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களைக் கண்டுபிடி.

IX. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95.2

X. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)
நீ வாழும் பகுதியின் முக்கியத்துவத்தைக் காட்டும் கையேடு ஒன்றினைத் தயாரி.

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்
அ) எகிப்திய நாகரிகம்
ஆ) சீன நாகரிகம்
இ) சிந்து வெளி நாகரிகம்
ஈ) மெசபடோமியா நாகரிகம்
விடை:
ஈ) மெசபடோமியா நாகரிகம்

Question 2.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
அ) உருத்திரங்கண்ண னார்
ஆ) சேக்கிழார்
இ) நக்கீரர்
ஈ) ஜெயங் கொண்டார்
விடை:
அ) உருத்திரங்கண்ணனார்

Question 3.
கைலாச நாதர் கோயிலைக்கட்டியவர்
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்மவர்மன்
இ) ராஜ சிம்மன்
ஈ) அபராஜிதர்
விடை:
இ) ராஜ சிம்மன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 4.
பின் வருவனவற்றுள் எது ஒரு கல்வி நகரம்?
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) காஞ்சி
ஈ) தஞ்சாவூர்
விடை:
இ) காஞ்சி

Question 5.
புகார் இவர்களின் துறைமுகம்
அ) சேர அரசு
ஆ) சோழ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) களப்பிரர்கள்
விடை:
ஆ) சோழ அரசு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பெருங்கடல் வணிகர் ______ என்று அழைக்கப்பட்டனர்.
விடை:
மாநாய்கன்

Question 2.
சாணக்கியர் என்பவர் சந்திர குப்தரின் _____ ஆவார்
விடை:
அமைச்சர்

Question 3.
பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தை _____ யில் கழித்தார்.
விடை:
காஞ்சி

III. சரியா, தவறா?

Question 1.
சிலப்பதிகாரத்தின் நாயகி மணிமேகலை ஆவார்.
விடை:
தவறு

Question 2.
தற்போதைய தஞ்சாவூர் முற்காலத்தில் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
விடை:
தவறு

Question 3.
பூம்புகார் சோழ அரசின் துறைமுகம்.
விடை:
சரி

Question 4.
சிலப்பதிகாரம் பூம்புகாரின் சிறப்பைக் கூறுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 5.
பல்லவர்கள் காலத்தில் பல குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன.
விடை:
சரி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பூம்புகார் நகர் மற்ற நகரங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது?
விடை:

  • பூம்புகாரில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி குடியிருப்பு இருந்தது.
  • நீண்ட, நேரான தெருக்களைக் கொண்டிருந்தது.
  • இங்கு கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்தது.

Question 2.
ஏரிகளின் மாவட்டம் எது? ஏன்?
விடை:
காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது. ஏனெனில் காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த ஏரிகள் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்தன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 99