Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Questions and Answers, Notes.
TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா
7th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
வட அமெரிக்காவையும் ஆசியாவையும் ………………. பிரிக்கிறது.
அ) பேரிங் நீர் சந்தி
ஆ) பாக் நீர் சந்தி
இ) மலாக்கா நீர் சந்தி
ஈ) ஜிப்ரால்டர் நீர் சந்தி
விடை:
அ) பேரிங் நீர் சந்தி
Question 2.
…………………… உலகின் சர்க்கரைக் கிண்ண ம் என அழைக்கப்படுகிறது.
அ) மெக்ஸிகோ
ஆ) அமெரிக்கா
இ) கனடா
ஈ) கியூபா
விடை:
ஈ) கியூபா
Question 3.
………………….. வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
ஆ) மெக்கென்ஸி ஆறு
இ) புனித லாரன்சு ஆறு
ஈ) கொலரடோ ஆறு
விடை:
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
Question 4.
உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ……………
அ) ஆன்டிஸ்
ஆ) ராக்கி
இ) இமயமலை
ஈ) ஆல்ப்ஸ்
விடை:
அ) ஆன்டிஸ்
Question 5.
பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் ………………… வடிநிலப்படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.
அ) மெக்கென்ஸி
ஆ) ஒரினாகோ
இ) அமேசான்
ஈ) பரானா
விடை:
இ) அமேசான்
II . கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ………………. கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
விடை:
மரண பள்ளத்தாக்கு
Question 2.
உலகின் தலை சிறந்த மீன்பிடித் தளமாக ……………….. விளங்குகிறது.
விடை:
கிராண்ட் பேங்க்
Question 3.
சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள …………………. ஆண்டிஸ் மலைத்தொடரின் உயரமான சிகரமாகும்.
விடை:
அகான்காகுவா சிகரம்
Question 4.
பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ……………………. உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
விடை:
அமேசான் காடுகள்
Question 5.
………………. ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.
விடை:
பிரேசிலி
III. பொருத்துக
விடை:
IV. காரணம் கூறுக
Question 1.
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
விடை:
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
ஏனெனில்
தெற்குப் பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளும் கோடைகாலங்களில் வீசும் வடகிழக்கு பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.
சூடான ஈரப்பதம் மிகுந்த தென்மேற்குப் பருவக்காற்றுகள் வட அமெரிக்காவின்வடமேற்குப் பகுதிகளுக்கு மழைப்பொழிவை தருவதோடு அல்லாமல் அப்பகுதி வெப்பமாக இருக்கவும் உதவுகிறது.
Question 2.
அமெரிக்கா “உருகும் பானை” என அழைக்கப்படுகிறது.
விடை:
அமெரிக்கா “உருகும் பானை என அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.
Question 3.
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
விடை:
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
ஏனெனில்
- அமேசான் வடிநிலப் பகுதியில் பூமத்தியரேகை செல்கிறது. இங்கு வெப்ப காலநிலை காணப்படுகிறது.
- அதே அட்சரேகையில் ஆன்டஸ் மலைகளின் மேல் அமைந்திருக்கும் கியுடோ 9350 அடி கடல் மட்டத்திற்கு மேல் அமைந்து மிதமான காலநிலையை கொண்டுள்ளது.
Question 4.
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
விடை:
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
ஏனெனில்
- ஹம்போல்ட் (பெரு) குளிர் நீரோட்டம் பிளாங்டன்களை (மீன்களின் முக்கிய உணவு) பெரு நாட்டிற்கு அருகில் கொண்டு சேர்க்கிறது.
- ஆழ்கடல் மீன் தொழில் பெரு கடற்கரையில் 3000 கி.மீ. வரை கடலுக்குள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- 50க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன.
- பெருவின் கடற்கரையில் 40க்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.
V. வேறுபடுத்துக
Question 1.
ராக்கி மலைகள் மற்றும் அப்பலேஷியன் மலைகள்
விடை:
Question 2.
பிரெய்ரி மற்றும் பாம்பாஸ் புல்வெளிகள்
விடை:
Question 3.
துந்திர பகுதி மற்றும் டைகா பகுதி
விடை:
VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்
Question 1.
கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது.
காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.
அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.
Question 2.
கூற்று (A) : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.
காரணம் (R) : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.
அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
இ) கூற்று தவறு. காரணம் சரி.
VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.
Question 1.
வட அமெரிக்காவின் எல்லைகளை கூறுக.
விடை:
வட அமெரிக்காவின் எல்லைகள்:
- வடக்கு – ஆர்க்டிக் பெருங்கடல்
- கிழக்கு – அட்லாண்டிக் பெருங்கடல்
- மேற்கு – பசிபிக் பெருங்கடல்
- தெற்கு – தென் அமெரிக்கா
Question 2.
மெக்கன்சி ஆறு பற்றி குறிப்பு வரைக.
விடை:
மெக்கன்சி ஆறு :
- மெக்கன்சி ஆறு வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருக்கிறது.
- இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
Question 3.
வட அமெரிக்காவில் விளையும் பழங்களின் வகைகள் யாவை? அவற்றில் சில பழங்களைப் பட்டியலிடுக.
விடை:
சிட்ரஸ் வகை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
பழங்களின் பட்டியல் :
- கிரான்பெரீஸ்
- ப்ளூபெர்ரி
- கான்கார்ட் திராட்சைகள்
- ஸ்ட்ராபெர்ரி
- நெல்லிக்கனி
Question 4.
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை பற்றி குறிப்பு வரைக.
விடை:
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை:
- எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் வாழ்கிறார்கள் (மீன்கள் அதிகம் கிடைக்குமிடங்கள்).
- விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்துகிறார்கள். இஃலூக்களில் வாழ்கிறார்கள்.
- இவர்களால் சுற்றுச்சூழலை பெரிதும் மாற்றி அமைக்க இயலாத நிலை. எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
Question 5.
வட அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் யாவை?
விடை:
வட அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள்:
- வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதி
- கிரேட் ஏரி பகுதி
- மெக்ஸிகோ
- மத்திய அமெரிக்கா
Question 6.
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகளை எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகள்:
- ஆன்டஸ் மலைத்தொடர்
- ஆற்றுப்படுகை (அல்லது) மத்திய சமவெளிகள்
- கிழக்கு உயர்நிலங்கள்
Question 7.
4 மணி ‘கடிகார மழை’ என்றால் என்ன?
விடை:
4 மணி ‘கடிகார மழை’:
- பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது.
- இந்நிகழ்வு பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது. எனவே இது 4 மணி ‘கடிகார மழை’ என்று அழைக்கப்படுகிறது.
Question 8.
தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பட்டியலிடுக.
விடை:
தென் அமெரிக்க வெப்ப மண்டலக் காடுகள் பூமத்திய ரேகை காடுகள்):
தாவரங்கள்:
- ரப்பர்
- சீமைத்தேக்கு
- கருங்காலி
- லாக்வுட்
- சிபா
- பிரேசில் கொட்டை
விலங்குகள்:
- அனகோண்டா
- ஆர்மாடில்லோஸ்
- பிரன்ஹா
- குரங்கு
- பாம்பு
- முதலை
- கிளிகள்
Question 9.
எஸ்டான்சியாஸ் என்றால் என்ன ?
விடை:
எஸ்டான்சியாஸ்:
கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்டான்சியாஸ் என அழைக்கப்படுகின்றன.
Question 10.
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளை கூறுக.
விடை:
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்:
- சர்க்கரை
- காபி
- கொக்கோ
- புகையிலை
- மாட்டிறைச்சி
- சோளம்
- கோதுமை
- பெட்ரோலியம்
- ஆளி விதை
- இயற்கை எரிவாயு
- பருத்தி
- இரும்புத்தாது
- தாமிரம்
VIII. பத்தியளவில் விடையளி
Question 1.
வட அமெரிக்காவின் கால நிலை பற்றி விளக்குக.
விடை:
வட அமெரிக்காவின் காலநிலை:
அட்சக்கோடுகளின் அடிப்படையில் வெப்பமண்டல பகுதி முதல் தந்திர பகுதி வரை வட அமெரிக்கக் கண்டம் பரவியுள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் ஆசியாவை போலவே பலதரப்பட்ட காலநிலைகள் காணப்படுகின்றன.
ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்காக அமைந்திருப்பதால், ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் கடுங்குளிர் காற்றினை தடுக்கும் அரணாக செயல்படவில்லை . மத்திய சமவெளிகளில் ஊடுருவும் குளிர் காற்றினால் நீண்ட கடுங்குளிரும் குறுகிய வெப்ப கோடையும் காணப்படுகிறது.
சூறாவளி புயல்களால் மழைப்பொழிவு உண்டாகிறது. மத்திய சமவெளிகளில் உறைபனியோடு கூடிய குளிர்காலமும் வெப்ப மண்டலம் போன்ற அதிக வெப்பமுடைய கோடை காலமும் காணப்படுகின்றது.
தெற்குப்பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி முகத்துவார பகுதிகள் மற்றும் வளைகுடா கடற்கரை பகுதிகளும் வடகிழக்குப் பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.
அலாஸ்கா வெப்ப நீரோட்டம் வடமேற்கு கடற்கரை பகுதியில் பனி உறையாமல் இருப்பதற்கு காரணமாகிறது. மத்திய தரைக்கடல் காலநிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படுகிறது.
Question 2.
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை பற்றி எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை:
- கனரக பொறியியல் தொழிற்சாலைகள் என்பவை
- கனமான மற்றும் பருமனான மூலப்பொருட்கள்
- பெருமளவிலான எரிபொருள்
- பெருமளவிலான மூலதனம்
- பெருமளவிலான போக்குவரத்து செலவினங்கள் பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
- இவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளை சார்ந்துள்ளன.
- ஆட்டோமொபைல் தொழிற்சாலை. வான்ஊர்தி தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரயில்பெட்டி தொழிற்சாலை, விவசாய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முக்கிய கனரக தொழிற்சாலைகள் ஆகும்.
- ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.
- முக்கிய கனரக தொழில் மையங்கள்: டெட்ராய்ட், சிக்காகோ, பஃபலோ, இண்டியானாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், செயின்ட் லூயிஸ், பிலடெல்பியா, நியூயார்க், பால்டிமோர் மற்றும் அட்லாண்டா மற்றும் கனடாவின் வின்ஸர்.
Question 3.
தென் அமெரிக்காவின் ஆறுகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
தென் அமெரிக்காவின் ஆறுகள்:
- இக்கண்டத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன.
- குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன. பெரு கடற்கரையோர ஆறுகள் சில நீர் பாசனத்திற்கும். நீர் மின்சார தயாரிப்பிற்கும் பயன்படுகின்றன.
- அமேசான் தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு மற்றும் உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும்.
- ஆயிரக்கணக்கான கிளை நதிகள் > ரியோ, நீக்ரோ, மதீரா மற்றும் தாபாஜோஸ் முக்கியமானவை.
- கிளை நதிகள் கடலில் கலக்கும் இடம் விரிவானது; வேகமானது (80 கி.மீ. தூரம் நன்னீர் )
- ஒரினாகோ ஆறு கயானா உயர் நிலங்களில் தொடங்குகிறது. வடக்கு நோக்கி பாய்ந்து கரீபியன் கடலில் கலக்கிறது.
- பராகுவே ஆறு இரு முக்கிய கிளை நதிகளைக் கொண்டது (பரானா மற்றும் உருகுவே). இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆற்றுப்படுகை என அழைக்கப்படுகிறது.
- அனைத்து ஆறுகளும் முகத்துவாரத்திலிருந்து உள்நோக்கி குறிப்பிட்ட தூரம் வரை போக்குவரத்திற்கு பயன்படுகின்றன.
Question 4.
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள் பற்றி எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள்:
தென் அமெரிக்கா உலகின் பலதரப்பட்ட கலவையான மக்கள்தொகையை கொண்டது. பெரும்பாலானோர் ஐரோப்பிய (ஸ்பானியர் மற்றும் போர்ச்சுக்கீசியர்) மற்றும் ஆப்பிரிக்க அடிமைகளாக கொண்டு வந்த ஆப்பிரிக்க வம்சாவளியினரும் ஆவர்.
பூர்வகுடி மக்கள் மலைகளிலும், மழைக்காடுகளிலும் தங்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர் என மூன்று முக்கிய இனங்கள் காணப்படுகின்றன.
பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் ”மெஸ்டிஜோ” என அழைக்கப்படுகின்றது.
ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் முலாடோ என அழைக்கப்படுகிறது.
பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் ஸாம்போ என அழைக்கப்படுகின்றது.
முக்கிய இனங்கள்: அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள், கருப்பர்கள். கலப்பினங்கள்: மெஸ்டிஜோ, முலாடோ, ஸாம்போ)
IX. வரைபட திறன்
Question 1.
பாடப்புத்தகம் மற்றும் நிலவரை படம் உதவிக்கொண்டு வட அமெரிக்காவை சுற்றியுள்ள கடல்கள், வளைகுடாக்கள் மற்றும் விரிகுடாகளை பெயரிடுக.
விடை:
கடல்கள் : (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)
- பசிபிக் பெருங்கடல்
- அட்லாண்டிக் பெருங்கடல்
- ஆர்க்டிக் பெருங்கடல்
- கரீபியன் பெருங்கடல்
- பியுபோர்ட் கடல்
- லாப்ரடார் கடல்
- சலிக்கும் கடல்
விரிகுடாக்கள் :
- பேஃபின் விரிகுடா
- ஹட்சன் விரிகுடா
- உங்காங் விரிகுடா
- ஃபன்டி விரிகுடா
- சீஸ்பெக் விரிகுடா
வளைகுடாக்கள்:
- பனாமா வளைகுடா
- கலிபோர்னியா வளைகுடா
- அலாஸ்கா வளைகுடா
- மெக்சிகோ வளைகுடா
Question 2.
கொடுக்கப்பட்டுள்ள தென் அமெரிக்க வரைபடத்தில் அமேசான், ஒரினாகோ, நீக்ரோ, பராகுவே, உருகுவே ஆறுகளை குறிக்கவும். (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)
X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)
Question 1.
சில முக்கிய நகரங்களும் சில தொழிற்சாலைகளும் அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) பிட்ஸ்பர்க் (ஜவுளி, இரும்பு எஃகு, கப்பல் கட்டும் தொழில்)
விடை:
இரும்பு எஃகு
ஆ) சிகாகோ (வாகனங்கள், காகிதம், சிமெண்ட்)
விடை:
காகதம்
இ) சிலி (எண்ணை சுத்திகரிப்பு, சர்க்கரை, பருத்தி ஆடை)
விடை:
எண்ணை சுத்திகரிப்பு
ஈ) உருகுவே (தோல் பதனிடுதல், தாமிரம் உருக்குதல், பால் பொருட்கள்)
விடை:
பால் பொருட்கள்
Question 2.
வினாக்களுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுக்குள் எழுதவும்.
அ) தென் அமெரிக்காவின் உயரமான சிகரம்.
விடை:
ஆ)
தென் அமெரிக்காவிலுள்ள இயங்கும் எரிமலை.
விடை:
இ) பரானா மற்றும் பராகுவே ஆறுகள் இணைந்து அழைக்கப்படுவது.
விடை:
ஈ) உலகின் உயரமான நீர்வீழ்ச்சி.
விடை:
உ) உலகின் மிகப்பெரிய நதி.
விடை:
Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களை ஒட்டி ஒரு தொகுப்பை உருவாக்கவும்.
7th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
வட அமெரிக்கா ………………….. பெரிய கண்டமாகத் திகழ்கிறது.
அ) இரண்டாவது
ஆ) மூன்றாவது
இ) நான்காவது
ஈ) ஐந்தாவது
விடை:
ஆ) மூன்றாவது
Question 2.
வட அமெரிக்கக் கண்டத்தின் மிக ஆழமான பகுதி …………………….
அ) மரண பள்ளத்தாக்கு
ஆ) சியார் நிவாரா
இ) சியாரர் மாட்ரே
ஈ) கலிபோர்னியா பள்ளத்தாக்கு
விடை:
அ) மரண பள்ளத்தாக்கு
Question 3.
புனித லாரன்ஸ் ஆறு ……………….. ஏரியில் தன் பயணத்தை துவங்குகிறது.
அ) சுப்பீரியர்
ஆ) வின்னிபெக்
இ) அதபாஸ்கா
ஈ) ஒன்டேரியோ
விடை:
ஈ) ஒன்டேரியோ
Question 4.
கீரிப்பிள்ளை , முயல்கள் …………………….. காடுகளில் காணப்படுகின்றன.
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்
ஆ) வெப்ப மண்டல மழை
இ) தூந்திர
ஈ) டைகா
விடை:
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்
Question 5.
உலகின் முக்கிய இறைச்சி ஏற்றுமதியாளராகத் திகழும் நாடு ……………….
அ) பிரேசில்
ஆ) சிலி
இ) பெரு
ஈ) அர்ஜென்டினா
விடை:
ஈ) அர்ஜென்டினா
Question 6.
தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் …………………. மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
அ) கப்பல்கள்
ஆ) சாலைகள்
இ) இருப்புப்பாதைகள்
ஈ) வான்வழி
விடை:
அ) கப்பல்கள்
Question 7.
ஆப்பிரிக்கர்களை …………………… அடிமைகளாகக் கொண்டு வந்ததன் மூலம் ஆப்பிரிக்க வம்சாவழியினர் தென் அமெரிக்காவில் உருவாயினர்.
அ) பூர்வகுடி இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) கருப்பர்கள்
ஈ) லத்தீன் அமெரிக்கர்கள்
விடை:
ஆ) ஐரோப்பியர்கள்
Question 8.
உலகில் இரண்டாவதாக அதிகப்படியான இரும்புத்தாது இருப்பைக் கொண்டுள்ள நாடு …………………
அ) இந்தியா
ஆ) ரஷ்யா
இ) பிரேசில்
ஈ) அர்ஜென்டினா
விடை:
இ) பிரேசில்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
…………… மற்றும் …….. விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
விடை:
பார்லி, ஓட்ஸ்
Question 2.
……………….. தொழிலில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னிலை வகிக்கிறது.
விடை:
இரும்பு எஃகு
Question 3.
மெக்ஸிகோவின் மக்கள் அடர்த்தி ……………………..
விடை:
51 நபர்கள்
Question 4.
உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் ………………….. ல் உள்ளது.
விடை:
சிகாகோ
Question 5.
அமேசான் நதியில் காணப்படும் பிரன்ஹா எனும் வகை மீன் கடுமையான ………………… ஆகும்.
விடை:
மாமிசஉண்ணி
Question 6.
உரத்தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான ………………….. படிவுகள் கிடைக்கும் ஒரே இடம் தென் அமெரிக்கா.
விடை:
சோடியம் நைட்ரேட்
Question 7.
சோளம் என்பது ………………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
மக்காச்சோளம்
Question 8.
……………….. நெடுஞ்சாலை அமைப்போடு இணைந்து சாலைகளின் மிகப்பெரிய வலைப்பின்னலை பிரேசில் கொண்டுள்ளது.
விடை:
பான் அமெரிக்கன்
III. பொருத்துக
IV. காரணம் கூறுக
Question 1.
மிஸிஸிப்பி ஆறு “பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
விடை:
மிஸிஸிப்பி ஆறு ” பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
மிஸிஸிப்பி ஆறு மலைகளின் கீழே பாய்ந்து வரும்போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருகிறது.
Question 2.
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
விடை:
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
ஏனெனில்
- கிராண்ட் பேங்க் பகுதியில் கல்ப் வெப்ப நீரோட்டமும் லாபரடார் குளிர் நீரோட்டமும் சந்தித்து கொள்வதால் மீன்கள் வளர்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்குகிறது.
- லாபரடார் நீரோட்டம் மீன்களுக்கு உணவாகும் பிளாங்டன்கள் எனப்படும் கடல்பாசிகளை அதிக அளவில் எடுத்து வருகிறது.
Question 3.
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
விடை:
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
ஏனெனில்
இப்பகுதி பல இயங்கும் எரிமலைகளைக் கொண்டுள்ளது. மேலும் நில அதிர்வுகளையும் பார் அடிக்கடி எதிர்கொள்கிறது.
Question 4.
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
விடை:
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
ஏனெனில்
தொழில்மயமாதலுக்கு முக்கிய காரணியான உள்கட்டமைப்பு (குறிப்பாக போக்குவரத்து) போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை. தொழில்மயமாதலுக்கு போக்குவரத்து அத்தியாவசியமான தேவை.
கரடுமுரடான நிலப்பரப்பின் காரணமாக தென் அமெரிக்காவில் ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் போதிய அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை.
V. வேறுபடுத்துக
Question 1.
நிலச்சந்தி மற்றும் நீர்ச்சந்தி.
விடை:
Question 2.
வட அமெரிக்காவின் மத்திய தரைக்கடல் தாவர வகைகள் மற்றும் பாலைவனக்காடுகள்.
விடை:
Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடிகால் அமைப்பு.
விடை:
VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்
Question 1.
கூற்று (A) : வட அமெரிக்கா 1492 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
காரணம் (R) : 1507 ஆம் ஆண்டு இத்தாலிய ஆய்வுப்பணி அமெரிக்கோ வெஸ்புகி இந்நிலப்பகுதிக்கு வந்ததை அடுத்து “அமெரிக்கா” எனப் பெயரிடப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.
Question 2.
கூற்று (A) : மத்திய அமெரிக்காவுடன் இணைந்து, தென் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.
காரணம் (R) : குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு (லத்தீன்மொழி பேசுபவர்கள்) அவர்களின் காலனியாக ஆட்சிசெய்யப்பட்டது.
அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.
VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்
Question 1.
மத்திய அமெரிக்காவின் ஏழு சிறிய நாடுகளின் பெயர்களைக் கூறு.
விடை:
மத்திய அமெரிக்க நாடுகள் :
- நிகாராகுவா
- ஹாண்டுராஸ்
- குவாதமாலா
- பனாமா
- கோஸ்டாரிக்கா
- எல்சால்வடார்
- பெலிஸ்
Question 2.
வட அமெரிக்காவின் இயற்கையமைப்பு பிரிவுகளைக் குறிப்பிடு.
விடை:
வட அமெரிக்க இயற்கையமைப்பு பிரிவுகள் :
- ராக்கி மலைகள்
- பெரும் சமவெளிகள்
- அப்பலேஷியன் உயர்நிலம்
- கடற்கரை சமவெளிகள்
Question 3.
வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றனவா? விளக்குக.
விடை:
- ஆம். வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றன.
- குறிப்பாக மின்னசொட்டா பகுதியில் காணப்படுகின்றன. இவை மிகச்சிறியதாக இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
- ஐந்து முக்கிய ஏரிகளைக் கொண்ட முக்கிய தொகுப்பு கிரேட் ஏரிகள். மிகப்பெரியது சுப்பீரியர் ஏரி. இது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
- கனடாவில் காணப்படும் ஏரிகள் வின்னிபெக் ஏரி, கிரேட் பேர் ஏரி மற்றும் அதபாஸ்கா ஏரி
Question 4.
பனாமா கால்வாய் – சிறு குறிப்பு வரைக.
விடை:
பனாமா கால்வாய்:
- 80 கி.மீ. நீளமுள்ள பனாமா கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. பனாமா நிலச்சந்தியின் குறுக்கே இது 1914ல் வெட்டப்பட்டது.
- இக்கால்வாய் ஐரோப்பா மற்றும் வட, தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு இடையிலான தூரத்தை வெகுவாகக் குறைக்கின்றது.
Question 5.
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து குறித்து எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து:-
- வட அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களும், தொழில்துறை மையங்களும் விமான வழிகளால் இணைக்கப்பட்டுள்ளன.
- நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, டொராண்டோ, மாண்ட்ரீல் மற்றும் மெக்ஸிகோ நகரம் ஆகியவை சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.
Question 6.
சவானா புல்வெளி நிலம் குறித்து நீவிர் அறிவது என்ன?
விடை:
சவானா புல்வெளி நிலம்:
- காலநிலை- வெப்பமான ஈரப்பதம் நிறைந்த கோடைகாலம். குளிர்ந்த ஈரப்பதமான குளிர்காலம்
- பகுதி – கயானா உயர்நிலங்கள், பிரேசிலியன் உயர்நிலம், வட அர்ஜென்டினா மற்றும் பராகுவே
- தாவரங்கள்- உயரமான ஒழுங்கற்ற புற்கள் மற்றும் கருவேல மரங்கள் –
- விலங்குகள்- கேபிபாரா, மார்ஷிமான், வெள்ளை வயிறு மற்றும் சிலந்தி குரங்கு
Question 7.
எஸ்டான்சியாஸ் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
எஸ்டான்சியாஸ்:
- எஸ்டான்சியாஸ் என்பவை கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் ஆகும். இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன.
- இச்சிறிய புல்வெளி தளங்கள் மேலும் பராமரிப்பு தளங்களாக பிரிக்கப்பட்டு கால்நடைகள் தரம் பிரித்து முத்திரை இடப்படுகின்றன.
- எஸ்டான்சியாரே என்பவர் எஸ்டான்சியாவின் பராமரிப்பாளர். அவரின் கீழ் கவ்சோ எனப்படும் வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.
Question 8.
தென் அமெரிக்காவின் முக்கிய இயற்கை தாவர பகுதிகள் யாவை?
விடை:
முக்கிய இயற்கை தாவர பகுதிகள்:
தென் அமெரிக்கா நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகளைக் கொண்டது. அவைகள்
- அமேசான் படுகை
- கிழக்கு உயர் நிலங்கள்
- கிராண்ட் சாக்கோ
- ஆன்டஸ் மலைச்சரிவுகள்
Question 9.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தென் அமெரிக்காவின் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகளை பெயரிடு.
விடை:
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகள்:
- இரண்டு நீர்வழிப்போக்குவரத்துகள் உள்ளன. அவை
- பராகுவே – உருகுவே வடிநிலப்பகுதி (நான்கு நாடுகளை உள்ளடக்கியது)
- அமேசான் வடிநிலப்பகுதி (ஆறு நாடுகளை உள்ளடக்கியது) (ஒவ்வொன்றும் பல ஆயிரம் மைல்கள் பயணிக்கும் நீர்வழியை கொண்டுள்ளன).
Question 10.
தென் அமெரிக்காவின் பல்வேறு இசைகள் குறித்து எழுதுக.
விடை:
தென் அமெரிக்க இசைகள்: தென் அமெரிக்க நாடுகளில் பல்வேறு வகையான இசைகள் உள்ளன. மிகவும் பிரபலமான இசை வகைகள்.
- பிரேசிலிருந்து சம்பா
- அர்ஜென்டினாவிலிருந்து டேங்கோ
- உருகுவே மற்றும் கொலம்பியாவிலிருந்து கும்பியா
Question 11.
தென் அமெரிக்காவில் ஆடு வளர்ப்பு – சிறு குறிப்பு தருக.
விடை:
ஆடு வளர்ப்பு:
- தென் அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
- டைரா டெல் பியுகோ மற்றும் ஃபாக்லாந்து தீவுகளின் மிதவெப்ப மண்டல புல்வெளிகள் ஆடுகள் வளர்க்க ஏற்றவை.
- முக்கிய ஆடு வளர்ப்பு நாடுகள்: அர்ஜென்டினா மற்றும் உருகுவே
Question 12.
வட அமெரிக்காவின் பண்ணை பராமரிப்பு குறித்து உனக்கு என்ன தெரியும்?
விடை:
பண்ணை பராமரிப்பு:
- பால் உற்பத்திக்காக கால்நடைகளை வளர்ப்பது, பண்ணை பராமரிப்பு என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கிய தொழிலாகும்.
- குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் மிகுந்த பிரெய்ரி, பெரும் ஏரிகள் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையின் வடகிழக்குப் பகுதிகளில் இத்தொழில் அதிகமாக உள்ளது. (உலகின் மொத்த பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் 25%)
VIII. பத்தியளவில் விடையளி
Question 1.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றின் மக்கள் தொகைப் பரவலை விவரி.
விடை:
மக்கள்தொகைப் பரவல்:
வட அமெரிக்கா:
வட அமெரிக்காவின் மக்கள் தொகை 364,446,736 (2018 ஆம் ஆண்டு ). இது உலக மக்கள் தொகையில் 4.77 சதவீதம். மக்கள் தொகை அடர்த்தி 20 நபர் / ச.கி.மீ.
அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (கிழக்கு), கிரேட் ஏரி பகுதி, மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா
மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (மத்திய பகுதி), மத்திய உயர் நிலங்கள், மெக்ஸிகோ உயர் நிலங்கள், கனடா (மத்திய மற்றும் மேற்கு பகுதிகள்)
குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கனடா (வடக்கு), அலாஸ்கா, ராக்கி மலைகள் மற்றும் பாலைவனப் பகுதிகள்
தென் அமெரிக்கா:
தென் அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 429,115,060. இது உலக மக்கள் தொகையில் ஐந்தாம் இடம். மக்கள் தொகை அடர்த்தி 21 நபர் / ச.கி.மீ.
அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கயானா, வெனிசுலா, சுரினாம், கொலம்பியா, பிரேசில் மற்றும் பெரு
மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
பராகுவே, சிலி, உருகுவே
குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் அமேசான் வடிநிலம்
Question 2.
வட மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் மொழி மற்றும் சமயம் குறித்து எழுதுக.
விடை:
மொழி மற்றும் சமயம்:
வட அமெரிக்கா:
மொழிகள்: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்
சமயங்கள்:
- பல்வேறு சமய நம்பிக்கைகள் கலாச்சாரம், தத்துவம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் தாக்கம் உண்டாக்குதல்.
- 80% கிறிஸ்தவத்தைப் பின்பற்றுதல்.
- ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருகும் பானை என அழைக்கப்படுதல்
(நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து புதிய கலாச்சாரம் உருவாதல்)
தென் அமெரிக்கா:
மொழிகள்:
- போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் (பிரதான மொழிகள்)
- டச்சு, பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ஹிந்தி (பயன்படுத்தும் பிற மொழிகள்)
சமயங்கள்:
- கிறிஸ்தவம் (பிரதான சமயம்) தக்கது
- இஸ்லாம் மற்றும் இந்து (பின்பற்றப்படும் பிற மதங்கள்)
Question 3.
அட்டவணைப்படுத்துக: வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களின்
அ) முக்கிய நாடுகள்
ஆ) சுற்றியுள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்
இ) முக்கிய பாலைவனங்கள்
ஈ) முக்கிய ஆறுகள்
விடை:
Question 4.
தென் அமெரிக்காவின் வேளாண்மை குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தென் அமெரிக்காவின் வேளாண்மை:
- தென் அமெரிக்காவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேளாண்மை தொழில் செய்து வருகிறார்கள். இங்கு தன்னிறைவு வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
- பெரும்பான்மையான பகுதி அமேசான் காடுகளைப் போன்ற காடுகளால் மூடப்பட்டுள்ளது.
- அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டுமே முன்னேறிய வேளாண்மை முறைகளை கொண்டுள்ளன. தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டினா, வேளாண் தொழிலில் முன்னேறிய நாடு ஆகும்.
- ஈரப்பதம் நிறைந்த பாம்பாஸ் பகுதியில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதியின் இயற்கை மற்றும் காலநிலை அமைப்பு வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கிறது.
- கோதுமை அர்ஜென்டினாவின் பாம்பாஸ் பகுதிகளில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றது.
- ஆன்டிஸ் மலைத்தொடரின் ஆறுகள் பாயும் பியட்மான் பள்ளத்தாக்குகளில் விவசாயிகள் திராட்சைத் தோட்டங்களையும் சிட்ரஸ் பழங்களையும் விளைவிக்கின்றனர்.
- காபி, கொக்கோ, கரும்பு, வாழை, பருத்தி போன்ற பணப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.
மனவரைபடம்
Question 1.
கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா
விடை:
Question 2.
கண்டங்களை ஆராய்தல் – தென் அமெரிக்கா
விடை: