Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் Questions and Answers, Notes.
TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்
7th Social Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது …………………….
அ) புவியியல் (ஜியோகிராஃபி)
ஆ) கார்டோகிராஃப்ட்
இ) பிஸியோகிராபி
ஈ) பௌதீக புவியியல்
விடை:
ஆ) கார்டோகிராஃப்ட்
Question 2.
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் …………………. திசைகள் ஆகும்.
அ) முக்கியமான
ஆ) புவியியல்
இ) அட்சரேகை
ஈ) கோணங்கள்
விடை:
அ) முக்கியமான
Question 3.
கலாச்சார நிலவரை படங்கள் என்பன ……………………. அமைப்புகளைக் காட்டுகின்றன.
அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக …………………. அமைகிறது.
விடை:
நிலவரைபடம்
Question 2.
முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ………………… எனப்படும்.
விடை:
திசைகள்
Question 3.
நிலவரைபடத்தில் உள்ள …………………. வரைபடத்தில்பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.
விடை:
குறிப்பு
Question 4.
காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் …………………… என அழைக்கப்படுகின்றன
விடை:
கிராமம் (அல்லது) நகர்ப்புற நிலவரைபடம்
Question 5.
சிறிய அளவை நிலவரைபடங்கள் ……… மற்றும் ………. போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.
விடை:
கண்டங்கள், நாடுகள்
III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக
Question 1.
வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.
விடை:
அளவை
Question 2.
வெண்மை , பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.
விடை:
வெண்மை
Question 3.
நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.
விடை:
நிலவரைபட நூல்
Question 4.
வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.
விடை:
காலநிலை
IV. பொருத்துக
விடை:
V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க
Question 1.
i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட நகர் தொகுதி ஆகும்.
ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.
iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
அ) 1 மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி
Question 2.
கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.
கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.
அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு
VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக
Question 1.
தட்டையான பரப்பில் பூமியைக் குறிப்பது.
விடை:
நிலவரைபடம்
Question 2.
நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்.
விடை:
அளவை
Question 3.
தரைவழி மற்றும் சாலைவழி போக்குவரத்தினைக் காட்ட உதவும் குறியீடு.
விடை:
போக்குவரத்து நிலவரைபடம்
Question 4.
வேறுபட்ட நிலவரைபடங்களை உள்ளடங்கிய புத்தகம்.
விடை:
நிலவரைபட நூல்
Question 5.
நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைப்படம்.
விடை:
அரசியல் நிலவரைபடம்
VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க
Question 1.
நிலவரைப்படம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம் :
நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி அல்லது ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.
நிலவரைபடமானது கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.
Question 2.
கார்டோகிராஃபி என்றால் என்ன?
விடை:
கார்டோகிராஃபி:
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்பது கார்டோகிராஃபி என – அழைக்கப்படுகிறது. (கார்டே – நிலவரைபடம் ; கிராபிக் – வரைதல்)
Question 3.
முதன்மை திசைகள் யாவை?
விடை:
முதன்மை திசைகள்: –
- வடக்கு
- கிழக்கு
- மேற்கு
- தெற்கு
Question 4.
நிலவரைபட நூல் என்பது என்ன?
விடை:
நிலவரைபட நூல்:
- நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும்.
- நிலவரைபட நூல் படங்கள் அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது.
Question 5.
நிலவரைபட நூலின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவரைபட நூலின் வகைகள்:
- பள்ளி நிலவரைபட நூல்
- மேம்படுத்தப்பட்ட நிலவரைபட நூல்
- பிராந்திய நிலவரைபட நூல்
- தேசிய நிலவரைபட நூல்
Question 6.
நிலவரைபடத்தின் பயன்கள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் பயன்கள்:
- ஓர் இடத்தினை நேரில் சென்று பார்க்காமல் நிலத்தோற்றம் மற்றும் நில அமைப்புகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
- நிலவரைபடங்கள் இராணுவத்தின் திட்டமிடல் பணியில் மகத்தான செயல்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
- விமானங்கள் குறிப்பிட்ட இடத்தை சேரவும், கப்பல் கடலில் பாதுகாப்பாக செல்லவும் உதவுகின்றது.
- நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.
VIII. விரிவான விடையளிக்க
Question 1.
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள் யாவை? அவற்றைப் பற்றி எழுதுக?
விடை:
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள்:
- தலைப்பு
- திசை
- அளவை
- குறிப்பு (அல்லது) சின்னங்களின் விளக்கங்கள் போன்றவை நிலவரைபடத்தின் அடிப்படைக்கூறுகள் ஆகும்.
தலைப்பு:
- ஒவ்வொரு நிலவரைபடமும் அப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிக்கும் தலைப்பினை கொண்டிருக்கும்.
- இந்திய நதிகள் என்ற தலைப்பு கொண்ட நிலவரைபடம் இந்திய நதிகளைப் பற்றி விளக்குவதாகும்.
திசைகள் :
வரைபடங்கள் பொதுவாக வடக்கு நோக்கிய நிலையில் வரையப்படுகிறது. வடக்கு என்பது ‘எனும் எழுத்தால் அம்புக்குறியீட்டுடன் குறிக்கப்படுகிறது. அது நிலவரைபடத்தில் மற்ற திசைகளை (கிழக்கு, மேற்கு, தெற்கு) கண்டறிய உதவுகிறது.
அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகள் விளிம்புகளில் வரையப்படுகிறது.
அளவை:
- நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் நிலவரைபடத்தின் அளவை எனப்படும்.
- 1 செ.மீ. = 10 கி.மீ நிலவரைபடத்தில் 1 செ.மீ. = நிலத்தில் 10 கி.மீ.)
குறிப்பு:
- நிலவரைபடத்தில் வேறுபட்ட இயற்கை மற்றும் கலாச்சார அம்சங்களைக் காட்ட பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் குறியீடுகளைக் குறித்து விளக்குவது.
- தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.
Question 2.
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் யாவை?
விடை:
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் :
- நிலவரைப்படம் என்பது புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.
- அவை கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் உட்பட சில குறிப்பிட்ட விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.
- நிலவரைபடங்கள் அமைப்புகள் குறித்து புரிந்து கொள்ள வழி வகுக்கின்றது.
- இயற்கை அமைப்புகள் (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்)
- நீர்நிலை அமைப்புகள் (ஆறு, ஏரி, கடல்)
- கலாச்சார அமைப்புகள் (சாலைகள், குடியிருப்புகள்)
Question 3.
கருத்தின் அடிப்படையில் வரைபடத்தை வகைப்படுத்தவும்?
விடை:
- நிலவரைபடம் புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரையப்பட்டதாகும்.
- ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் தனித்துவமுடையது.
- பொதுவான சில அமைப்புகளின் அடிப்படையில் நிலவரைபடங்கள் பலவகைப்படும். (அளவை, கருத்து)
கருத்தின் அடிப்படையிலான நிலவரைபடங்கள் :
- நிலத்தோற்ற வரைபடம்
- புவியியல் வரைபடம்
- காலநிலை வரைபடம்
- மண் நிலவரைபடம்
- கலாச்சார நிலவரைபடம்
- அரசியல் நிலவரைபடம்
- மக்கள் தொகை நிலவரைபடம்
- பொருளாதார நிலவரைபடம்
- போக்குவரத்து நிலவரைபடம்
- கருத்து நிலவரைபடம்
Question 4.
நில வரைபடம் மற்றும் புவி மாதிரிகளை வேறுபடுத்தி எழுதுக?
விடை:
Question 5.
அளவையின் அடிப்படையில் நில வரைப்படத்தின் வகைகளை விரிவாக எழுது?
விடை:
நிலவரைபடத்தின் அளவை = நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம் : நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம்.
அளவையின் அடிப்படையில் நிலவரைபடங்கள் :
- பெரிய அளவை நிலவரைபடம்
- நிலஅளவைப் படங்கள்
- தலவரைபடம்
- சிறிய அளவை வரைபடங்கள்
- சுவர் வரைபடங்கள்
- நிலவரைபட நூல்
பெரிய அளவை நில வரைபடம் :
- குறைந்த பரப்பு இடங்கள் குறித்த அதிக விவரங்கள்.
- ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.
நிலஅளவைப் படங்கள் :
கிராமம் மற்றும் நகர்ப்புற நிலம் மற்றும் வீடு இருப்பிடம் குறித்து விளக்கம்.
தல வரைபடம்:
சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்கள் தருவன. இந்திய நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. (அமைப்புகள் – குன்றுகள், பள்ளத்தாக்குகள், கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள்).
சிறிய அளவை வரைபடங்கள்:
- பெரிய அளவிலான பகுதிகள் (கண்டங்கள் அல்லது நாடுகள்)
- அளவை : 1 செ.மீ = 1000 கி.மீ.
சுவர் வரைப்படங்கள் :
வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுகிறது. குறைந்த அளவு விவரங்களுடன் அதிக பரப்பளவு இடங்கள்.
நிலவரைபட நூல்:
பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம்.
IX. உயர் சிந்தனை வினா
Question 1.
பயணிகளின் முதன்மை கருவி நிலவரைபடம் ஏன்?
விடை:
பயணிகள் முதன்மை கருவி நிலவரைபடம்
ஏனெனில்
நிலவரைபடத்தினை வாசித்தல் என்பது புவியியல் ரீதியான இருப்பிடம், இயற்கை அமைப்புகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது. வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை காட்டுகின்றன.
நிலவரைபடம் கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள் மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் பற்றிய விவரங்களைக் காட்டுகிறது.
போக்குவரத்து நிலவரைபடங்கள் சாலைகள், இருப்புப்பாதை, இரயில்வே நிலையம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றைக் காட்டுகின்றன.
மின்னணு வரைபடங்கள் உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்குகிறது.
X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)
Question 1.
இந்திய நிலவரைபடத்தில் பின்வரும் அமைப்புகளை உரிய சின்னங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு குறித்துக் காட்டுக.
அ) ஏதேனும் இரண்டு மாவட்டத் தலைநகரங்களைக் குறித்துக்காட்டுக.
ஆ) ஏதேனும் ஒரு ஆற்று வழிப்பாதையை வரைந்திடுக.
இ) ஏதேனும் ஒரு மலையைக் குறித்துக்காட்டு. – (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )
Question 2.
கொடுக்கப்பட்டவற்றிற்கு மரபுச் சின்னங்கள் மற்றும் குறியீடுகளை வரைந்திடுக.
அ) பாலம்
ஆ) கால்வாய்
இ) அணைக்கட்டு
ஈ) கோவில்
உ) காடு
ஊ) இரயில்வே நிலையம்
விடை:
7th Social Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
நிலவரைபடம் ……………….. ஒரு முக்கிய கருவியாக அமைகிறது.
அ) புவியியலாளர்
ஆ) மண்ணியலாளர்
இ) சுற்றுலா பயணி
ஈ) பயணி
விடை:
அ) புவியியலாளர்
Question 2.
நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் ……………………
அ) கார்டோகிராஃபர்
ஆ) கார்டியாலஜிஸ்ட்
இ) ஆர்க்கிடெக்ட்
ஈ) ஆர்ட்டிஸ்ட்
விடை:
அ) கார்டோகிராஃபர்
Question 3.
நிலவரைபடத்தின் தேவையான அடிப்படைக்கூறு …………………
அ) திசை
ஆ) வண்ண ம்
இ) குறியீடு
ஈ) எழுத்துக்கள்
விடை:
அ) திசை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் …………………….
விடை:
தனித்துவமுடையது
Question 2.
மின்ன ணு வரைபடங்கள் என்பது …………………… சேவைப்பகுதி .
விடை:
வலைதள
Question 3.
…………………… என்பது புவியின் முப்பரிமாண அமைப்பு.
விடை:
புவிமாதிரி
Question 4.
……………………. நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
விடை:
இந்திய நிலஅளவைத்துறை .
Question 5.
…………………… என்பது புவியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரைவதாகும்.
விடை:
நிலவரைபடம்
III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக
Question 1.
விலங்குகளின் தோல், மின்னணு, ஈரநிலம், களிமண் பலகைகள்.
விடை:
மின்னணு
Question 2.
பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பீடபூமிகள், தொழிற்சாலைகள்.
விடை:
தொழிற்சாலைகள்
Question 3.
ஆறு, ஏரி, கடல், மலை .
விடை:
மலை
Question 4.
கட்டடங்கள், பயிர் வகைகள், சாலைகள், கால்வாய்கள்.
விடை:
பயிர்வகைகள்
IV. பொருத்துக
V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க
Question 1.
i) நிலவரைபடங்கள் நமக்கு அதிக விவரங்களைக் கொடுக்கக்கூடியது.
ii) ஒவ்வொரு நிலவரைபடத்திற்கும் குறிப்பு உண்டு.
iii) நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.
அ) i மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி
Question 2.
கூற்று 1: நிலவரைபடங்கள் வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாகக் காட்டுகின்றன.
கூற்று 2 : நிலவரைபடங்கள் இராணுவத்தினருக்கு முக்கியமல்ல
அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு
VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக
Question 1.
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல்.
விடை:
கார்டோகிராஃபி
Question 2.
1 செ.மீ = 1000 கி.மீ. வகை வரைபடம்.
விடை:
சிறிய அளவை வரைபடம்
Question 3.
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள்.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்
Question 4.
நிலம் மற்றும் வீட்டின் இருப்பிடம் குறித்து விளக்கும் நிலவரைபடம்.
விடை:
நிலஅளவைப் படங்கள்
Question 5.
வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படும் நிலவரைபடங்கள்
விடை:
சுவர் வரைபடங்கள்
VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க
Question 1.
ஆரம்பகாலங்களில் நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் யாவை?
விடை:
நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் :
- காகிதத்தோல் – விலங்குகளின் தோல்
- பாப்பிரஸ் துணிகள்
- ஈரநிலம்
- களிமண் பலகைகள்
Question 2.
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள் யாவை?
விடை:
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள்:
- நிலத்தோற்றம் (மலை)
- பாறையியல்
- மண்
- மண்
- வடிகால்
- வானிலை கூறுகள்
- தாவரங்கள்
Question 3.
தலவரைபடம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தலவரைபடம்:
தலவரைபடம் சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தருவன. இவை இந்தியாவின் நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது.
இவை பெரிய அளவை நிலவரைபடங்கள். இவை இயற்கை அமைப்புகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை விளக்குகின்றன.
Question 4.
நிலவரைபடத்திற்குத் தேவையான அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
தேவையான அடிப்படைக் கூறுகள்:
- தலைப்பு
- திசைகள்
- அளவை
- குறிப்பு
Question 5.
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது ஏன் கடினம்?
விடை:
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது கடினம், ஏனெனில்
உண்மையான அளவில் அவற்றை வரைய போதுமான இடமில்லை.
உண்மை வடிவங்கள்:
- குடியிருப்புகள்
- பாலங்கள்
- தபால் நிலையங்கள்
- இரயில்வே பாதைகள்
- காடுகள்
Question 6.
நிலவரைபடத்தில் பயன்படும் ஏதேனும் நான்கு நிறங்களையும் அவை குறிக்கும் அமைப்புகளையும் எழுது?
விடை:
நிறங்கள் – அமைப்புகள்
- வெள்ளை – பனி
- பச்சை – காடுகள்
- நீலம் – நீர்நிலைகள்
- பழுப்பு – மலை, குன்று
VIII. விரிவான விடையளி
Question 1.
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் (அல்லது) முறைக்குறிகளும் குறியீடுகளும் – விளக்குக.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்:
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நிலவரைபடத்தின் புவிக்கூறுகள், முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளாக காட்டப்படுகின்றன. இவை கோட்டுக்குறியீடுகள் (அல்லது) நிறங்கள் போன்றவற்றால் காட்டப்படுகின்றன.
வெள்ளை → பனி
மஞ்சள் → விவசாயம்
பச்சை → காடுகள்
நீலம் → நீர்நிலைகள்
பழுப்பு → மலை, குன்று
சிவப்பு → குடியிருப்பு, சாலை
கருப்பு → இரயில்பாதை
இந்திய நில அளவைத் துறையானது (சர்வே ஆப் இந்தியா) நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
எ.கா:
Question 2.
சிறு குறிப்பு வரைக.
அ) காலநிலை வரைபடங்கள்
ஆ) அரசியல் நிலவரைபடங்கள்
இ) பொருளாதார நிலவரைபடங்கள்
விடை:
அ) காலநிலை வரைபடங்கள்:
வெப்பநிலை பரவல், மழையளவு, மேகமூட்டம், ஒப்பு ஈரப்பதம், காற்று வீசும் திசை, வேகம் மற்றும் சில வானிலை கூறுகளைக் குறித்து காட்டுகின்றன.
ஆ) அரசியல் நிலவரைபடங்கள்:
- ஒரு நாட்டின், மாநிலத்தின் அல்லது மாவட்டத்தின் நிர்வாக பிரிவுகளைக் காட்டுவதாகும்.
- தொடர்புடைய நிர்வாகப் பிரிவுகளில் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை எளிதாக்க இந்த வரைபடம் உதவுகிறது.
இ) பொருளாதார நிலவரைபடங்கள் :
- வெவ்வேறு வகைப்பட்ட பயிர்வகைகள்
- தாதுக்கள்
- தொழிற்சாலை அமைவிடங்கள்
- வாணிப வழிகள்
- பொருள்களை எடுத்துச் செல்லும் வழிகள் குறித்து விளக்கும் படங்கள்
மனவரைபடம்