Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 13 நீர் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 13 நீர்

8th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எந்த வெப்பநிலையில் நீர் பனிக்கட்டியாக மாற்றமடையும்?
அ) 0°C
ஆ) 100°C
இ) 102°C
ஈ) 98°C
விடை:
அ) 0°C

Question 2.
நீரில் கார்பன் டை ஆக்சைடின் கரைதிறன் அதிகமாவது.
அ) குறைவான அழுத்தத்தில்
ஆ) அதிகமான அழுத்தத்தில்
இ) வெப்பநிலை உயர்வால்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) அதிகமான அழுத்தத்தில்

Question 3.
நீரினை மின்னாற்பகுக்கும் போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு.
அ) ஆக்சிஜன்
ஆ) ஹைட்ரஜன்
இ) நைட்ரஜன்
ஈ) கார்பன்-டை-ஆக்சைடு
விடை:
ஆ) ஹைட்ரஜன்

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்?
அ) ஈயம்
ஆ) படிகாரம்
இ) ஆக்சிஜன்
ஈ) குளோரின்
விடை:
அ) ஈயம்

Question 5.
நீரின் நிரந்திர கடினத்தன்மைக்குக் காரணமாக இருப்பவை ………………………
அ) சல்பேட்டுகள்
ஆ) தூசுக்கள்
இ) கார்பனேட் மற்றும் பைகார்பனேட்
ஈ) கரைந்துள்ள பிற பொருள்கள்
விடை:
அ) சல்பேட்டுகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் ……………………….
விடை:
சுவையற்றது

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 2.
நீரின் கொதிநிலை …………………………
விடை:
100°C

Question 3.
நீரின் தற்காலிகக் கடினத்தன்மை ……………………… முறையில் நீக்கப்படுகிறது.
விடை:
கொதிக்க வைத்தல்

Question 4.
நீர் ……………………………. வெப்பநிலையில் அதிக அடர்த்தியினைப் பெற்றிருக்கும்.
விடை:
14°C

Question 5.
ஏற்றம் ……………………… செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்
விடை:
வீழ்படிதல்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்துக.

Question 1.
கழிவுநீரினை நன்கு சுத்திகரித்த பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
விடை:
சரி

Question 2.
கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் அதனை விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
தவறு
சரியான விடை :
கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாது.

Question 3.
வேதி உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் குறைந்து நீர் மாசுபடுகிறது.
விடை : சரி

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 4.
நீரின் அடர்த்தியானது அனைத்து வெப்பநிலையிலும் மாறாமல் இருக்கும்.
விடை:

Question 5.
கடின நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்.
விடை:
தவறு
சரியான விடை:
மென் நீரில் சோப்பு நன்கு நுரையினை தரும் (அல்லது) கடின நீரில் சோப்பு நன்கு நுரையினை தராது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 1

V. கீழ்க்காணும் கூற்றுகளுக்கு காரணம் கூறுக.

Question 1.
வீழ்படிவுத் தொட்டியில் நீருடன் படிகாரம் சேர்த்தல்.
விடை:
பொட்டாஷ் படிகாரமானது நீரில் உள்ள மாசுடன் சேர்ந்து வீழ்படிதலை துரிதப்படுத்துகிறது.

Question 2.
நீர் ஒரு சர்வ கரைப்பான்.
விடை:
கிட்டத்தட்ட எல்லா பொருள்களையுமே கரைக்கும் தன்மையினை பெற்றுள்ளதால் நீர் ஒரு சர்வ கரைப்பான் ஆகும்.

Question 3.
பனிக்கட்டி நீரில் மிதத்தல்.
விடை:
பனிக்கட்டியின் அடர்த்தி நீரை விடக் குறைவு எனவே நீரில் மிதக்கிறது.

Question 4.
நீர்வாழ் விலங்கினங்கள் நீரினுள் சுவாசித்தல்.
விடை:
நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் நீர்வாழ் விலங்கினங்கள் நீரினுள் சுவாசிக்க உதவுகின்றது.

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 5.
கடல் நீர் குடிப்பதற்கு உகந்த நீரல்ல.
விடை:
ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் 35கி சோடியம் குளோரைடு உப்பு கலந்துள்ளது. இது உப்பு நீர் எனப்படும். இது குடிப்பதற்கு உகந்த நீரல்ல.

Question 6.
பாத்திரங்களைத் தூய்மையாக்க கடின நீர் உகந்தது அல்ல.
விடை:
கடின நீரில் உப்பு மற்றும் தாதுக்கள் அதிகளவில் கரைந்துள்ளன. இவை தூய்மையாக்கிகளுடன் வீழ்படிவை ஏற்படுத்துவதால், அழுக்கு நீக்குதலை கடின நீர் கடினமான செயலாக மாற்றுகிறது.

VI. கீழ்க்காண்பவற்றை வரையறு.

Question 1.
உருகுநிலை
விடை:
ஒரு திரவம் அதன் திண்ம வடிவாக உறையும் வெப்பநிலை அதன் உருகுநிலை எனப்படும்.

Question 2.
கொதிநிலை
விடை:
ஒரு திரவம் அதன் ஆவி வடிவாக மாறும் வெப்பநிலை அதன் கொதிநிலை எனப்படும்.

Question 3.
தன் வெப்ப ஏற்புத்திறன்
விடை:
ஒரு அலகு நிறை கொண்ட ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C ஆக உயர்த்த தேவையான
வெப்பத்தின் அளவு அப்பொருளின் தன் வெப்ப ஏற்புத் திறன் எனப்படும்.

Question 4.
ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
விடை:
ஒரு திரவத்தினை அதன் கொதிநிலையில் ஆவியாக மாற்ற கொடுக்கப்படும் வெப்பஆற்றல்
அதன் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

5. பருக உகந்த நீர்
விடை:
1 முதல் 2 கி உப்பு கலந்துள்ள குடிக்க உகந்த நீரே குடிக்க தகுந்த நீர் எனப்படும்.

VII. சுருக்கமாக விடையளி

Question 1.
நீரினை மின்னாற்பகுக்கும் போது நேர்மின் மற்றும் எதிர்மின்வாயில் வெளியேறும்
வாயுக்களின் பெயர் மற்றும் விகிதம் என்ன?
விடை:
எதிர்மின்வாயில் வெளிப்படும் வாயு : ஹைட்ரஜன் நேர்மின்வாயில் வெளிப்படும் வாயு : ஆக்சிஜன்
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் விகிதம் 2 : 1

Question 2.
நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் முக்கியத்துவத்தைக் கூறுக.
விடை:
நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் உயிரினங்கள் உயிர்வாழ இன்றியமையாததாகிறது.

மீன் நீரிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து, செவுள்கள் வழியாக நீரை வெளியேற்றுகிறது. நீரில் கரைந்த ஆக்சிஜன் இருப்பதாலேயே மீன்களால் நீரில் வாழ முடிகிறது.

ஒளிச்சேர்க்கைக்கு நீர் வாழ் தாவரங்கள் நீரில் கரைந்த கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்துகின்றன.

நீரில் கரைந்த கார்பன் டை ஆக்சைடு சுண்ணாம்புடன் வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட்டை உருவாக்குகிறது. நத்தைகள், சிப்பிகள் போன்ற உயிரினங்கள் கால்சியம் பை கார்பனேட்டிலிருந்து கால்சியம் கார்பனேட்டை பிரித்தெடுத்து அவற்றின் கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.

Question 3.
நீரின் தற்காலிக மற்றும் நிரந்திர கடினத்தன்மைக்கான காரணிகள் யாவை?
விடை:

நீரின் தற்காலிக கடினத்தன்மை நீரின் நிரந்தர கடினத் தன்மை
இது கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பை கார்பனேட் உப்புகளால் ஏற்படுகிறது. இது கால்சியம், மெக்னீசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால் ஏற்படுகிறது.

Question 4.
நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் – விவரி.
விடை:

  • நீரானது 100°C வெப்பநிலையை அடையும்போது அதன் திரவநிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகிறது.
  • எனினும் நீரின் வெப்பநிலை 100°C க்கு மேல் உயராது.
  • ஏனெனில் கொடுக்கப்படும் வெப்ப ஆற்றல் கொதிக்கும் நீரின் நிலையை மட்டுமே மாற்றுகிறது.
  • இந்த வெப்ப ஆற்றல் நீராவியினுள் சேமிக்கப்படுகிறது.
  • இது நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.

Question 5.
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறைகள் யாவை?
விடை:
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறைகள்

  1. கொதிக்க வைத்தல்
  2. சலவைச் சோடாவை சேர்த்தல்
  3. அயனி பரிமாற்ற முறை
  4. வாலை வடித்தல்

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

VIII. விரிவாக விடையளி

Question 1.
சுத்திகரிப்பு ஆலைகளில் நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது?
விடை:
நீர் சுத்திகரிப்பு முறையில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. அவையாவன :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 2

1. வீழ்படிவாக்குதல்:
ஆறு மற்றும் ஏரிகளிலிருந்து பெறப்படும் நீரானது பெரிய கலன்களில் சேகரிக்கப்பட்டு, கழிவுகளை வீழ்படிவாக்க எவ்வித அசைவுமின்றி அப்படியே நிலை நிறுத்தப்படுகிறது. இதனால் மாசுகள் கொள்கலனின் அடிப்பகுதியில் படிகிறது.

சில நேரங்களில் வீழ்படிதலை துரிதப்படுத்தி பொட்டாஷ் படிகாரம் நீருடன் சேர்க்கப்படுகிறது. இதனை ஏற்றம் என்கிறோம். பொட்டாஷ் படிகாரம் மாசுடன் சேர்ந்து வீழ்படிதலை
துரிதப்படுத்துகிறது.

2. வடிகட்டுதல் :

  • வீழ்படிவு கொள்கலனிலிருந்து நீரானது வடிகட்டுதல் கலனுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. வடிகட்டுதல் கலனின் அமைப்பானது மணல், கூழாங்கல், கல்கரி மற்றும் கான்கிரிட் அடுக்குகளால் ஆனது.
  • நீரானது இந்த அடுக்குகளின் வழியாக உள்ளிறங்கும் போது, முற்றிலும் மாசுகள் நீக்கப்பட்ட நிலையில் பெறப்படுகிறது.

3. நுண்ணுயிர் நீக்கம்:

  • வடிகட்டி பெறப்பட்ட நீரிலிருந்து கிருமிகள் மற்றும் பாக்டீரியா நீக்கம் செய்யப்படுவதற்காக வேதிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
  • இதற்காக குளோரின் மற்றும் ஓசோன் பயன்படுத்தப்படுகிறது.
  • போதுமான அளவு குளோரின் சேர்க்கப்படும் நிகழ்வு குளோரினேற்றம் எனப்படுகிறது.
  • வடிகட்டுதல் கலனிலிருந்து பெறப்பட்ட நீரானது குளோரின் கலனில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட அனுப்பப்படுகிறது. மேலும் கிருமிகளை அழிப்பதற்காக ஓசோனேற்ற முறைக்கு உட்படுத்தப்படுகிறது.

Question 2.
நீரின் நிரந்திர கடினத்தன்மை என்றால் என்ன? இத்தன்மை எவ்வாறு நீக்கப்படுகிறது?
விடை:

  • கால்சியம், மெக்னீசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகள் நீரில் கரைந்திருந்தால் அந்த நீர் நிரந்தர கடின நீர் எனப்படும்.
  • நீரின் நிரந்தர கடினத்தன்மையை நீக்குதல்.

1. சலவைச் சோடாவை சேர்த்தல்:

  • சலவைச் சோடாவானது குளோரைடு மற்றும் சல்பேட்டுகளை கரையாத கார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது.
  • வடிகட்டிகள் மூலம் இவற்றை எளிதில் நீக்கி விடலாம்.

2. வாலை வடித்தல்:

  • தற்காலிக மற்றும் நிரந்தர கடினத்தன்மை இரண்டையும் வாலை வடித்தல் முறையால் அகற்றலாம்.
  • இம்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின் பெறப்படும் காய்ச்சிய நீர் வாலைவடிநீர் எனப்படும்.
  • இது மிகவும் தூய்மையான நீராகும்.

Question 3.
மின்னாற்பகுத்தல் என்றால் என்ன? நீரை மின்னாற்பகுக்கும் முறையை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 3

  • மின்னாற்றலை செலுத்தி ஒரு பொருளினை அதன் கூறுகளாக பிரிக்கும் செயல்முறை மின்னாற் பகுத்தல் எனப்படும்.
  • ஒரு கண்ணாடி குடுவையினுள் இரண்டு கார்பன் தண்டுகள் பொருத்தப்பட்டு மூன்றில் ஒரு பங்கு நீர் நிரப்பப்படுகிறது.
  • நேர்மறை கார்பன் தண்டு ஆனோடு ஆகும்.
  • எதிர்மறை கார்பன் தண்டு கேத்தோடு ஆகும்.
  • இரண்டு சோதனை குழாய்கள் படத்தில் காட்டியவாறு கார்பன் தண்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
  • சோதனைக் குழாய்கள் ஒரு குறிப்பிட்ட வாயுவால் நிரப்பப்படும் வரை மின் தண்டுகளை மின்கலனுடன் இணைத்து மின்னாற்றல் செலுத்தப்படுகிறது.
  • நிரப்பப்பட்ட வாயுக்களை எரியும் தீக்குச்சி கொண்டு சோதிக்கும்போது கேத்தோடில் உள்ள வாயு “பாப்” என்ற ஒலியுடன் அணைகிறது. எனவே இவ்வாயு ஹைட்ரஜன் ஆகும்.
  • ஆனோடில் உள்ள வாயு தீக்குச்சியை மேலும் பிரகாசமாக எரியச் செய்கிறது. எனவே இவ்வாயு ஆக்சிஜன் ஆகும்.
  • ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுவின் விகிதம் 2 : 1 ஆகும்.
  • எனவே கேத்தோடில் சேகரிக்கப்படும் ஒவ்வொரு இரண்டு பங்கு ஹைட்ரஜன் வாயுவிற்கும் ஆனோடில் ஒரு பங்கு ஆக்சிஜன் வாயு சேகரிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 4

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 4.
பல்வேறு நிலைகளில் நீர் மாசுபடுதலை விளக்குக.
விடை:
1. வீட்டு உபயோக டிடர்ஜெண்டுகள்:

  • வீட்டு உபயோக டிடர்ஜெண்டு, சில ஷாம்பு, ஃபேஸ்வாஷ், ஷவர் ஜெல் மற்றும் பற்பசையில் நுண் நெகிழித் துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இவை மைக்ரோபீட்ஸ் எனப்படுகின்றன.
  • அவை அழுத்தித் தேய்த்தல் மற்றும் சருமத்தை சுத்தம் செய்தல், பற்களை மெருகூட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சேர்க்கப்படுகின்றன.
  • இந்த மைக்ரோபீட்கள் நம் வடிகாலில் சென்று நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன.
  • மீன் மற்றும் பிற விலங்குகள் அவற்றை தற்செயலாக உண்ணுகின்றன.

2. கழிவு நீர்:

  • சுத்திகரிக்கப்படாத கழிவு நீரில் உணவுக்கழிவுகளிலிருக்கும், கரிமப் பொருட்கள், வீட்டுப் பொருட்களிலிருக்கும் வேதிப்பொருட்கள் போன்ற அசுத்தங்கள் உள்ளன.
  • மேலும் இது நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளையும் கொண்டிருக்கக் கூடும்.

3. வீட்டு உபயோக திட மற்றும் நெகிழி கழிவுகள்:

  • நெகிழி உள்ளிட்ட திடக்கழிவுகள் ஏரி, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் சேருகிறது.
  • நெகிழிகள் வடிகாலை அடைத்து மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை பரப்புகிறது.
  • நீர் நிலைகளில் உள்ள கழிவுகள் நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கின்றன.

4. விவசாயம்:

  • உரங்கள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் மழைநீரில் கரைந்து ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் பாயும்.
  • இது நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட் போன்ற ஊட்டச் சத்துக்களோடு சில நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களையும் நீர் நிலைகளில் சேர்க்கின்றன.
  • அவை நீர் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

5. தொழிற்சாலை கழிவு :

  • பல தொழிற்சாலைகள் ஈயம், பாதரசம், சயனைடுகள், காட்மியம் போன்ற நச்சுக் கழிவுகளை வெளியிடுகின்றன.
  • இவை சுத்திகரிக்கப்படாமல் நீர் நிலைகளில் வெளியிடப்படும் போது மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கிறது.

6. எண்ணெய் கசிவுகள்:

  • பெருங்கடல்களில் கச்சா எண்ணெயை பெற துளையிடுவதிலும், கொண்டு செல்வதிலும் விபத்துகள் அதிகரித்துள்ளன.
  • எண்ணெய் கசிவுகள் நீர் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
  • இது நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • நீர் மேற்பரப்பில் மிதக்கும் எண்ணெய் சூரிய ஒளியை தடுக்கிறது.
  • நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனைக் குறைத்து கடல் உயிரினங்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

7. வெப்ப மாசுபாடு :

  • அனல் மற்றும் அணு மின் நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகளில் குளிரூட்டும் நோக்கங்களுக்காக அதிக அளவு நீர் பயன்படுத்தப்படுகிறது.
  • பயன்படுத்தப்பட்ட நீர் அதிக வெப்பநிலை மற்றும் வேதிப்பொருட்களுடன் மீண்டும் நீர் ஆதாரங்களில் வெளியேற்றப்படுகிறது.
  • இந்த உயர்வெப்பநிலை நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்களை மோசமாக பாதிக்கிறது.

செயல்பாடுகள்

செயல்பாடு 1
சிறிதளவு நீரற்ற தாமிர (II) சல்பேட் தூளை காட்சிக் கண்ணாடியில் எடுத்துக் கொண்டு அதனுடன் நீரினை சிறிதுசிறிதாகச் சேர்க்கவும். தூளின் நிறத்தில் மாற்றம் உள்ளதா? நிறமற்ற தூள் நீல நிறமாக மாறுகிறது. இது நீரினை கண்டறிவதற்கான சோதனை ஆகும்.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 5
வெண்மை நிற நீரற்ற தாமிர (II) சல்பேட் நீரை உறிஞ்சி
நீரற்ற தாமிர (II) நீலநிற படிக தாமிர (II) சல்பேட்டாக மாறுகிறது.

செயல்பாடு 2
ஒரு குடுவையினை நீரால் நிரப்பவும், கத்தியால் சோடியத்தை சிறு துண்டுகளாக வெட்டி நீரினுள் போடவும். சோடியம் நீருடன் வினைபுரிந்து நீரின் மேற்பரப்பு முழுவதும் நகருகிறது. மேலும் நீரின் மேற்பரப்பில் சுடர் எரிவதையும் காணலாம்.
விடை:
சோடியம் நீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயு மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியவற்றை உருவாக்குகிறது. வெப்பம் வெளிப்படும். இவ்வினையில் ஹைட்ரஜன் வாயு தீப்பற்றி எரிகிறது.
2Na + 2H2O → 2NaOH + H2

செயல்பாடு 3
சிறிதளவுகுழாய் நீரினை ஒருசுத்தமானகாட்சிகண்ணாடியில் எடுத்து படத்தில் காட்டியுள்ளவாறு தண்ணீரைக் கொண்ட ஒரு குடுவையின் மீது வைத்து வெப்பப்படுத்தவும். காட்சி கண்ணாடியிலிருக்கும் எல்லா நீரும் ஆவியானதும் அதனை எரிப்பானிலிருந்து அகற்றி குளிர வைக்கவும். காட்சி கண்ணாடியில் நீங்கள் காண்பது என்ன?.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 6
விடை:
காட்சி கண்ணாடியின் மீது பல பொது மைய வளையங்கள் காணப்படுகிறது. நீரில் கரைந்துள்ள உப்புகள், தாதுக்கள் படிவதே இதற்கு காரணம் ஆகும்.

செயல்பாடு 4
ஒரு குடுவையில் பாதியளவு நீரினை நிரப்பி சூடாக்கவும். நீர் அதன் கொதிநிலையை அடைவதற்கு முன்பே குடுவையின் ஓரங்களில் சிறிய குமிழ்கள் தோன்றுவதை நீங்கள் காண்பீர்கள். இந்த குமிழ்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் வாயுக்கள் ஆகும்.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 7

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

செயல்பாடு 5
இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளவும். ஒரு தொட்டிச்செடிக்கு குழாய் நீரையும், மறுதொட்டிச்செடிக்கு கடல்நீரையும் ஊற்றவும். சில நாட்கள் கழித்து தாவரங்களின் வளர்ச்சியை கவனிக்கவும்.
விடை:

  • குழாய் நீரை ஊற்றிய தொட்டியிலுள்ள செடி நன்கு வளர்கிறது.
  • கடல் நீரை ஊற்றிய தொட்டியிலுள்ள செடி நன்கு வளரவில்லை. காரணம் உப்புகள் கரைந்துள்ள கடல் நீர். தாவரங்கள் வளர்ச்சிக்கு துணை புரிவதில்லை

செயல்பாடு 6
குழாய் நீர் மென்நீராகும். ஏனெனில் அது திரவ சோப்புடன் அதிக அளவு நுரையை உருவாக்குகிறது. காரணம் அதில் கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பை கார்பனேட் உப்புகள் இல்லை.

கிணற்று நீர் கடின நீராகும். ஏனெனில் அது திரவ சோப்புடன் குறைந்த அளவு நுரையை உருவாக்குகிறது. காரணம் அதில் கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பை கார்பனேட்
உப்புகள் கரைந்துள்ளன.

நீர் மாதிரி நுரையின் உயரம்
குழாய் நீர் 4 செ.மீ.
கிணற்று நீர் 1 செ.மீ
குளத்து நீர் 2 செ.மீ
ஆற்று நீர் 3 செ.மீ

8th Science Guide நீர் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
1781 ஆம் ஆண்டில் நீரை முதன்முதலில் தயாரித்தவர்.
அ) ரூதர்போர்டு
ஆ) ஹென்றி கேவென்டிஷ்
இ) J.J.தாம்சன்
ஈ) மைக்கேல் ஃபாரடே
விடை:
ஆ) ஹென்றி கேவென்டிஷ்

Question 2.
அழுத்தம் அதிகரிக்கும் போது நீரின் கொதிநிலை
அ) குறைகிறது
ஆ) முதலில் குறைந்து பின் அதிகரிக்கிறது
இ) அதிகரிக்கிறது
ஈ) முதலில் அதிகரித்து பின் குறைகிறது
விடை:
இ) அதிகரிக்கிறது

Question 3.
நீரின் நிரந்தர கடினத்தன்மையை நீக்க பயன்படுவது
அ) எரிசோடா
ஆ) சலவை சோடா
இ) சோடா சுண்ணாம்பு
ஈ) எரி பொட்டாஷ்
விடை:
ஆ) சலவை சோடா

Question 4.
கடல் நீரின் உப்புத் தன்மைக்குக் காரணம்
அ) கால்சியம் குளோரைடு
ஆ) சோடியம் குளோரைடு
இ) கால்சியம் சல்பேட்
ஈ) சோடியம் சல்பேட்
விடை:
ஆ) சோடியம் குளோரைடு

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 5.
நீரின் வேதிப்பெயர்
அ) ஹைட்ரஜன் மோனாக்சைடு
ஆ) ஹைட்ரஜன் டையாக்சைடு
இ) டைஹைட்ரஜன் மோனாக்சைடு
ஈ) டைஹைட்ரஜன் டையாக்சைடு
விடை:
இ) டைஹைட்ரஜன் மோனாக்சைடு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் விகிதம் ………………………..
விடை:
2 : 1

Question 2.
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாசம் மூலமாக வெளியேற்றப்படுவது …………………………
விடை:
நீர்

Question 3.
அழுத்தம் அதிகரிக்கும் போது நீரின் உறைநிலை ………………………..
விடை:
குறைகிறது

Question 4.
சில ஷாம்பு, ஃபேஸ்வாஷ், ஷவர் ஜெல் மற்றும் பற்பசையில் காணப்படும் நுண் நெகிழித் துண்டுகள் …………………….. எனப்படுகின்றன.
விடை:
மைக்ரோ பீட்ஸ்

Question 5.
அதிகப்படியான உரங்கள் நீர் நிலைகளில் சேர்வதால் ஆல்காக்கள் வேகமாக வளர்வது ………………………. எனப்படும்.
விடை:
யூட்ரோபிகேசன்

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

III. சரியா? தவறா? தவறு எனில் சரியான கூற்றைத் தருக.

Question 1.
நீரின் மின்னாற் பகுத்தலின் போது ஹைட்ரஜன் வாயு ஆனோடிலும், ஆக்சிஜன் வாயு, கேத்தோடிலும் வெளிப்படுகிறது.
விடை:
தவறு
சரியான விடை : நீரின் மின்னாற் பகுத்தலின் போது போது ஹைட்ரஜன் வாயு கேத்தோடிலும், ஆக்சிஜன் வாயு ஆனோடிலும் வெளிப்படுகிறது

Question 2.
தூய நீரானது ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற ஒளி ஊடுருவக்கூடிய திரவமாகும்.
விடை:
சரி

Question 3.
பனிக்கட்டியானது மிகவும் அதிக உருகுதலின் உள்ளுறை வெப்பத்தையும், நீராவியானது மிகவும் அதிக ஆவியாதலின் உள்ளுறை வெப்பத்தையும் கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 4.
தூய நீரானது அமிலத் தன்மையுடையது, மேலும் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது.
விடை:
தவறு
சரியான விடை:
தூய நீரானது நடுநிலையானது, மேலும் லிட்மஸ் தாளை எவ்வித மாற்றமும் செய்யாது

Question 5.
நீர் நிலைகளில் கரைந்துள்ள பாஸ்பேட்டுகள் ஆல்காக்களை மெதுவாக வளர்ச்சி அடையச் செய்கின்றன. மேலும் அவை நீரில் கரைந்துள்ள அனைத்து ஆக்சிஜனையும் பயன்படுத்துவதில்லை
விடை:
தவறு
சரியான விடை: நீர் நிலைகளில் கரைந்துள்ள பாஸ்பேட்டுகள் ஆல்காக்களை வேகமாக வளர்ச்சி அடையச் செய்கின்றன. மேலும் அவை நீரில் கரைந்துள்ள அனைத்து ஆக்சிஜனையும் பயன்படுத்துகின்றன.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 8

V. மிகக் குறுகிய விடையளி.

Question 1.
அதிவேக உலோகங்கள் கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து வெளிவிடும் வாயு எது?
விடை:
ஹைட்ரஜன் வாயு.

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 2.
துரு எனப்படுவது யாது?
விடை:
இரும்பு ஆக்சைடு

Question 3.
பிற பொருட்களை கரைக்கும் இயல்புடைய பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கரைப்பான்

Question 4.
நீர் வாழ் தாவரங்கள் எவ்வாறு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன?
விடை:
நீரில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடை பயன்படுத்தி நீர்வாழ் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

Question 5.
தூய நீர் சுவையற்றது, ஆனால் குடிக்க உகந்த நீர் சுவையுடையது
விடை:
குடிக்க உகந்த நீரில் உப்புகள், தாதுக்கள் மற்றும் சில வாயுக்கள் கரைந்துள்ளதால் அது சுவையுடையது.

VI. குறுகிய விடையளி

Question 1.
உயர் அழுத்த சமையற்கலனில் (Pressure Cooker) உணவு விரைவாக சமைக்கப்படுகிறது.
ஏன்?
விடை:

  • உயர் அழுத்த சமையற்கலனில் வெப்பநிலை அதிகரிக்கப்படும் போது அதன் உள்ளே உயர் அழுத்தம் உருவாகிறது.
  • இவ்வுயர் அழுத்தம் நீரின் கொதிநிலையை அதிகரிக்கிறது.
  • எனவே கலனின் உள்ளே நீரானது 100°C க்கு மேலும் திரவ நிலையிலேயே உள்ளது.
  • ஆதலால் உணவு விரைவாக சமைக்கப்படுகிறது.

Question 2.
நீர் ஒரு உலகளாவிய கரைப்பான் என ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:

  • மற்ற திரவங்களை ஒப்பிடுகையில் நீருக்கு மட்டுமே அனேக பொருள்களை கரைக்கும் தனித்துவமான பண்பு உள்ளது.
  • நீர் உப்பு, சர்க்கரை போன்ற திடப்பொருள்களையும், தேன், பால் போன்ற திரவங்களையும் மற்றும் ஆக்சிஜன், கார்பன் – டை – ஆக்சைடு போன்ற வாயுக்களையும் கரைக்கும் வல்லமை பெற்றது.
  • கிட்டத்தட்ட எல்லா பொருள்களையுமே கரைக்கும் தன்மையினை பெற்றுள்ளதால் நீர் உலகளாவிய கரைப்பான் அல்லது சர்வ கரைப்பான் என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 3.
மீன்கள் எவ்வாறு நீரில் உயிர் வாழ்கின்றன?
விடை:

  • மீன்கள் நீரிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து, செவள்கள் வழியாக நீரை வெளியேற்றுகிறது.
  • நீரில் கரைந்த ஆக்சிஜன் இருப்பதாலேயே மீன்களால் நீரில் உயிர் வாழ முடிகிறது.

Question 4.
அயனி பரிமாற்ற முறையில் நீரின் கடினத் தன்மையை எவ்வாறு நீக்கலாம்?
விடை:

  • கடினநீரினை அயனி பரிமாற்றம் செய்யும் பிசின்களுள் அனுப்பும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் சோடியம் அயனிகளாக மாற்றப்படுகின்றன.
  • இது கடின நீரை மென் நீராக மாற்றுகிறது.

Question 5.
நீர் மாசுபடுதல் என்றால் என்ன?
விடை:

  • மனித செயல்களின் விளைவாக நீர்நிலைகளில் ஏற்படும் கலப்படத்தை நீர் மாசுபடுதல் என்கிறோம்.
  • தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள், கழிவுநீர் மற்றும் திடகழிவுகள் நீரில் சேர்க்கப்படுவதால் நீர் கலப்படம் அடைகிறது.

Question 6.
குளிர்காலங்களில் நீர் செல்லும் குழாய்களில் வெடிப்பு ஏற்படுவது ஏன்?
விடை:

  • குளிர்காலங்களில் வெப்பநிலை O°C க்கும் கீழே குறையக்கூடும்.
  • இந்த வெப்பநிலையில் குழாய்களில் உள்ள நீர் பனிக்கட்டியாக உறைந்து விடும்.
  • இது நீரின் கன அளவில் விரிவாக்கத்தை ஏற்படுத்தும்.
  • குழாய்கள் வலுவாக இல்லாவிட்டால் விரிசல், கசிவு அல்லது வெடிப்பு ஏற்படலாம்.

Question 7.
தாமிரக் குழாய்கள் மற்றும் கொதிகலன்கள் செய்ய பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  • தாமிரம் எந்த வெப்பநிலையிலும் நீருடன் வினைபுரியாது.
  • எனவே தாமிரம் குழாய்கள் மற்றும் கொதிகலன்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
விடை:
உலோகங்களுடன் வினை:

  • சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற உலோகங்களுடன் நீர் அதிவேகமாக வினைபுரிந்து
  • ஹைட்ரஜன் வாயு மற்றும் உலோக ஹைட்ராக்சைடுகளைத் தருகிறது.
    2Na + 2H2O → 2NaOH + H2
  • மெக்னீசியம் சூடான நீருடன் வினைபுரிகிறது.
    Mg + 2H2O → Mg(OH)2 + H2
  • பல உலோகங்கள் நீருடன் வினைபுரிந்து ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகளை உருவாக்குகின்றன.
  • இரும்பு நீருடன் வினைபுரிந்து துரு எனப்படும் இரும்பு ஆக்சைடைத் தருகிறது.

அலோகங்களுடன் வினை:
செஞ்சூடான கார்பன் (கல்கரி) நீராவியுடன்வினைபுரிந்து நீர்வாயுவை (கார்பன் சோனாக்சைடு + ஹைட்ரஜன்) உருவாக்குகிறது.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 9
> குளோரின் வாயு நீரில் கரைந்து ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை தருகிறது.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 10

Samacheer Kalvi 9th Science Guide Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர்

Question 2.
குடிக்க உகந்த நீரின் தன்மைகள் யாவை?
விடை:

  • நிறமற்றது மற்றும் மணமற்றது.
  • தெளிந்த நிலையில் இருக்க வேண்டும்.
  • பாக்டீரியா, வைரஸ் மற்றும் புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிர்கள் நீக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
  • மாசுகளற்றதாய் இருத்தல் வேண்டும்.
  • நமது உடலுக்கு தேவையான உப்புகள் மற்றும் தாதுக்கள் இருத்தல் அவசியம்.
  • நீரில் கலந்துள்ள வாயுக்களும் நீருக்கு சுவையூட்டுகின்றன.

Question 3.
பொதுவான மாசுப்படுத்திகளின் வகைகள், ஆதாரங்கள் மற்றும் விளைவுகளை எழுது.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 11
Samacheer Kalvi 8th Science Guide Chapter 13 நீர் 12

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 12 அணு அமைப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 12 அணு அமைப்பு

8th Science Guide அணு அமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கேதோடு கதிர்கள் ……………… ஆல் உருவாக்கப்பட்டவை.
அ) மின்சுமையற்ற துகள்கள்
ஆ) நேர்மின்சுமை பெற்ற துகள்கள்
இ) எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
இ) எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 2.
கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் மாறாதிருப்பது ………………  விதியை நிரூபிக்கிறது.
அ) தலைகீழ் விகித விதி
ஆ) மாறா விகித விதி
இ) பெருக்கல் விதி
ஈ) பொருண்மை அழியா விதி
விடை :
ஆ) மாறா விகித விதி

Question 3.
நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ……………… நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.
அ) 1:8
ஆ) 8:1
இ) 2:3
ஈ) 1:3
விடை :
அ) 1:8

Question 4.
டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?
அ) அணுவைப் பிளக்க முடியாது
ஆ) அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.
இ) தனிமங்கள் அணுக்களால் ஆனவை.
ஈ) ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை
விடை:
இ) தனிமங்கள் அணுக்களால் ஆனவை.

Question 5.
ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்
அ) ஒரே அணு எண்ணையும், நிறை எண்ணையும் பெற்றுள்ளன.
ஆ) ஒரே நிறை எண்ணையும், வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன.
இ) ஒரே அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
ஈ) அணு எண் மற்றும் நிறை எண் ஆகிய இரண்டும் வேறுபடுகின்றன.
விடை:
இ) ஒரே அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
……………. என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள்.
விடை:
அணு

Question 2.
ஒரு தனிமமானது ……………… மாதிரியான அணுக்களால் உருவாக்கப்பட்டது.
விடை:
ஒரே

Question 3.
ஒரு அணுவானது ……………… , ……………… மற்றும் ……………… ஆகிய துகள்களால் ஆனது.
விடை:
புரோட்டான், எலக்ட்ரான்,
நியூட்ரான்

Question 4.
எதிர்மின்சுமை கொண்ட அயனி ……………… எனப்படும், நேர் மின்சுமை கொண்ட அயனி_ எனப்படும்.
விடை:
எதிரயனி, நேரயனி

Question 5.
(எலக்ட்ரான் / புரோட்டான்) ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்.
விடை:
எலக்ட்ரான்

Question 6.
புரோட்டான்கள், – (நேர் /எதிர்) மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
விடை:
எதிர்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 1

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
பொருண்மை அழியா விதி – வரையறு
விடை:
ஒரு வேதி வினை நிகழும்போது உருவாகும் வினை விளைபொருள்களின் மொத்த நிறையானது வினைபடுபொருள்களின் மொத்த நிறைக்குச் சமம்.

Question 2.
மாறா விகித விதி – வரையறு
விடை:
ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் ஒன்றிணைந்து தூய சேர்மத்தை உருவாக்குகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 3.
ஆனோடு கதிர்களின் பண்புகளை எழுதுக.
விடை:

  1. நேர் கோட்டில் செல்கின்றன.
  2. துகள்களால் ஆனவை.
  3. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தால் விலக்கமடைகின்றன.
  4. நேர்மின்னூட்டம் பெற்றுள்ளதால் எதிர்மின் வாயை நோக்கி விலக்கமடைகின்றன.
  5. நேர் மின்வாய்க் கதிர்களின் பண்புகள் மின்னிறக்கக் குழாயினுள் இருக்கும் வாயுவின் தன்மையைச் சார்ந்து அமையும்.
  6. துகளின் நிறை மின்னிறக்கக் குழாயிலுள்ள வாயுவின் அணு நிறைக்குச் சமமாக இருக்கும்.

Question 4.
ஹைட்ரஜனைப் பொருத்து இணை திறனைக் கணக்கிடும் முறையைக் கூறுக.
விடை:

  • ஹைட்ரஜனின் இணைதிறன் ஒன்று ஆகும்.
  • ஒரு தனிமத்தின் ஒரு அணுவுடன் இணையக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையே இதன் இணைத்திறன் எனப்படும்.
  • (எ.கா) ஹைட்ரஜன் குளோரைடு மூலக்கூறில் ஒரு ஹைட்ரஜன் அணு ஒரு குளோரின் அணுவுடன் இணைகிறது. எனவே குளோரினின் இணைதிறன் 1.

Question 5.
அயனி, அயனித் தொகுப்பு – வரையறு.|
விடை:

  1. நேர்மின்சுமை அல்லது எதிர்மின்சுமை பெற்ற அணுக்களே அயனிகள் எனப்படுகின்றன.
  2. ஒன்றிற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்றாக இணைந்து எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது ஏற்றோ முறையே உருவாகும் நேர்மின் அல்லது எதிர்மின் சுமையுடைய தொகுப்பே அயனித் தொகுப்பு எனப்படும்.

Question 6.
வேதிச்சமன்பாடு என்றால் என்ன?
விடை:
வேதிச் சமன்பாடு என்பது ஒரு வேதி வினையை குறியீடுகள் மற்றும் வாய்பாடுகள் வடிவத்தில் எடுத்துக்கூறும் குறியீட்டு முறையாகும்.

Question 7.
கீழ்காணும் சேர்மங்களின் பெயர்களை எழுதுக.
அ) CO ஆ) N2O இ) NO ஈ) PCl5
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 2

V. விரிவாக விடையளி

Question 1.
அடிக் கோடிடப்பட்ட தனிமங்களின் இணைதிறனைக் காண்க.
அ) NaCl ஆ) CO2 இ) AIPO4 ஈ) Ba(NO3)2 உ) CaCl2
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 3

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 2.
கீழ்காண்பவற்றின் வேதி வாய்பாட்டினை எழுதுக.
அ. அலுமினியம் சல்பேட்
ஆ. பேரியம் குளோரைடு
இ. சில்வர் நைட்ரேட்
ஈ. மெக்னீசியம் ஆக்சைடு
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 4

Question 3.
கீழ்கண்ட வினைகளுக்கான முற்றுப்பெறா வாய்பாட்டினை எழுதி அதனை சமன் செய்க.
அ. கார்பன் + ஆக்சிஜன் → கார்பன் டை ஆக்சைடு
ஆ. பாஸ்பரஸ் + குளோரின் → பாஸ்பரஸ் பென்டாகுளோரைடு
இ. சல்பர் + ஆக்சிஜன் → சல்பர் டைஆக்சைடு
ஈ. மெக்னீசியம் + ஹைட்ரஜன் குளோரைடு → மெக்னீசியம் குளோரைடு + ஹைட்ரஜன்
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 5

Question 4.
கீழ்க்காணும் சமன்பாடுகளைச் சமன் செய்க.
அ) Na + O2 → Na2O
ஆ) Ca + N2 → Ca3N2
இ) N2 + H2 → NH3
ஈ) CaCO3 + HCl → CaCl2 + CO2 + H2O
உ) Pb(NO3)2 → PbO + NO2 + O2
விடை:
அ) i) ஆக்சிஜனை சமன் செய்தல் : Na + O2 → 2Na2O
ii) சோடியத்தை சமன் செய்தல் : 4Na + O2 →  2Na2O
ஆ) i) கால்சியத்தை சமன் செய்தல் : 3Ca + N2 → Ca3N2
இ) i) நைட்ரஜனை சமன் செய்தல் : N2 + H2 →  2NH3
ii) ஹைட்ரஜனை சமன் செய்தல் : N2 + 3H2 → 2NH3
ஈ) i) குளோரினை சமன் செய்தல் : CaCO3 + 2HCl → CaCl2 + CO2 + H2O
உ) i) நைட்ரஜனை சமன் செய்தல் : Pb(NO3)2 → PbO + 2NO2 + O2
ii) ஆக்சிஜனை சமன் செய்ய, ஆக்சிஜனைத் தவிர மற்றவைகளை 2 ஆல் பெருக்கவும்.
2Pb(NO3)2 → 2PbO + 4NO2 + O2

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஓர் எடை குறைந்த சக்கரத்தை, எதிர்மின்வாய்க் கதிர்கள் வரும் பாதையில் வைக்கும்போது சக்கரம் சுழல்கிறது. ஏன்?
விடை:

  • கேதோடு கதிர்கள் துகள்களால் உருவாக்கப்பட்டவை.
  • இவை நிறை மற்றும் இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன
  • எனவே ஓர் எடை குறைந்த சக்கரத்தை எதிர்மின்வாய்க் கதிர்கள் வரும் பாதையில் வைக்கும்போது சக்கரம் சுழல்கிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 2.
எலக்ட்ரான்கள் எதிர்மின்னூட்டம் கொண்டவை என்பதை எவ்வாறு நிரூபிப்பாய்?
விடை:

  • கேதோடு கதிர்கள் மின்புலம் வழியாக செலுத்தப்படுகின்றன.
  • அப்போது அவை நேர்மின்வாயை நோக்கி விலக்கமடைகின்றன.
  • எனவே அவை எதிர்மின் சுமையுடையவை.
  • கேதோடு கதிர்கள் எலக்ட்ரான்களால் ஆனவை.
  • எனவே எலக்ட்ரான்கள் எதிர் மின்னூட்டம் கொண்டவை.

Question 3.
ருத்ரேஷ், ஹரி, கனிஷ்கா மற்றும் தாஹிரா முறையே கிணறு, குளம், ஆறு, மற்றும் நிலத்தடி நீரைச் சேகரித்து அந்த நீர் மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினர். அவற்றின் ஆய்வு முடிவுகளின்படி அவை அனைத்திலும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் 1:8 என்ற விகிதத்தில் இருந்தன.
விடை:
அ) மேற்கண்ட சோதனையிலிருந்து நீங்கள் என்ன அறிகிறீர்கள்?
பல்வேறு மூலங்களான கிணறு, குளம், ஆறு மற்றும் நிலத்தடி ஆகியவற்றிலிருந்து நீரைப் பெற்றாலும் அதிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறை எப்பொழுதும் 1: 8 என்ற விகிதத்தில் இருக்கும்.

ஆ) இது எந்த வேதிச்சேர்க்கை விதிக்கு உட்பட்டது? இது மாறா விகித விதிக்கு உட்பட்டது.

8th Science Guide காற்று Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இயற்கையில் கிடைக்கக்கூடிய தனிமங்களின் எண்ணிக்கை ……………..
அ) 108
ஆ) 118
இ) 92
ஈ) 98
விடை :
இ) 92

Question 2.
எலக்ட்ரான்களைக் கண்டறிந்தவர் ……………………
அ) கோல்டுஸ்டீன்
ஆ) சர். வில்லியம் குரூக்ஸ்
இ) சரட்விக்
ஈ) சர். ஜே.ஜே.தாம்சன்
விடை :
ஈ) சர். ஜே.ஜே. தாம்சன்

Question 3.
புரோட்டானின் நிறை………………..
அ) 1.6 x 10-24 கி
ஆ) 1.6 x 10-26 கி.கி
இ) 9.1 x 10-28 கி
ஈ) 9.1 x 10-28 கி.கி
விடை :
அ) 1.6 x 10-24 கி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 4.
குப்ரஸ் ஆக்சைடில் (Cu2O), காப்பரின் இணைதிறன் ……………………
அ) 2
ஆ)1
இ) 4
ஈ) O
விடை :
ஆ) 1

Question 5.
N2 + 3H2 → 2NH3 ; இவ்வினையில் பொருண்மை அழியா விதியின்படி 14கி நைட்ரஜன் 3கி ஹைட்ரஜனுடன் வினைபடும் போது உருவாகும் அம்மோனியாவின் நிறை
அ) 34A
ஆ) 28கி
இ) 17கி
ஈ) 14A
விடை :
இ) 17A

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
அட்டாமஸ் எனும் கிரோக்கச் சொல்லின் பொருள் ……………..
விடை :
உடைக்கக்கூடிய
மிகச் சிறிய துகள்

Question 2.
வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ள ஒரே தனிமத்தின் அணுக்கள் ……………… எனப்படும்.
விடை :
ஐசோடோப்புகள்

Question 3.
தாம்சன், அணுவின் வடிவத்தினை ………………. ஆரமுடைய கோளத்தை ஒத்துள்ளது எனக் கருதினார்.
விடை :
10-10மீ

Question 4.
அணுவின் நடுப்பகுதியில் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் காணப்படும் பகுதி ……………… எனப்படுகிறது.
விடை :
உட்கரு

Question 5.
ஒரு அணு வேறொரு அணுவுடன் இணையக்கூடிய திறனே அவ்வணுவின் ………………………. எனப்படும்.
விடை :
இணைதிறன்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 6

IV. கூற்று, காரணம்

அ) (A) மற்றும் (R) சரி, (R) ஆனது (A) யினை விளக்குகிறது
ஆ) (A) மற்றும் (R) சரி, (R) ஆனது (A) யினை விளக்கவில்லை
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

Question 1.
கூற்று (A) : சில தனிமங்களின் அணுக்கள் மாறக்கூடிய இணைதிறன்களைப் பெற்றுள்ளன.
காரணம் (R) : சிலதனிமங்களின் அணுக்கள் ஒன்றிணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை
உருவாக்கும்போது, அவற்றின் இணையக்கூடிய திறன்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை .
விடை:
அ) (A) மற்றும் (R) சரி, (R) ஆனது (A) யினை விளக்குகிறது

Question 2.
கூற்று (A) : ஒரு வேதிவினை நிகழும் போது உருவாகும் வினை விளை பொருள்களின் மொத்த நிறையானது வினைபடு பொருள்களின் மொத்த நிறைக்குச் சமமல்ல.
காரணம் (R) : ஒரு வேதி வினையின் மூலம் நிறையை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
விடை :
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
சரியான கூற்று:
ஒரு வேதிவினை நிகழும் போது உருவாகும் வினை விளை பொருள்களின் மொத்த நிறையானது வினைபடு பொருள்களின் மொத்த நிறைக்குச் சமம்.

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
ஓர் அணுவில் உள்ள அடிப்படைத் துகள்கள் யாவை?
விடை :
புரோட்டான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்கள்

Question 2.
அணுக்களின் இணைதிறன் எதனைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது?
விடை :
ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் குளோரின்

Question 3.
பின்வரும் அயனிகளின் பெயர் மற்றும் இணைதிறனை எழுதுக. i) Fe2+ ii) Sn4+
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 7

Question 4.
M மற்றும் X என்ற தனிமங்களின் இணைதிறன்கள் முறையே 3 மற்றும் 2 எனில் அவை உருவாக்கும் சேர்மத்தின் வாய்பாடு யாது?
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 8

Question 5.
ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கும் போது கிடைக்கும் துகள் என்ன?
விடை :
ஒரு புரோட்டான்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 6.
நியூட்ரான் இல்லாத ஒரே தனிமம் எது?
விடை :
ஹைட்ரஜன்

VI. குறுகிய விடையளி

Question 1.
டால்டன் அணுக்கொள்கையின் சிறப்புகள் யாவை?
விடை :

  • பெரும்பாலான திரவங்கள் மற்றும் வாயுக்களின் பண்புகளை விவரிக்கின்றது.
  • வேதிச் சேர்க்கை விதி மற்றும் பொருண்மை அழிவின்மை விதியினை விளக்குகிறது.
  • தனிமங்களின் மூலக்கூறுகள் மற்றும் சேர்மங்களின் மூலக்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துரைக்கிறது.

Question 2.
ஒளிரும் பொருள்கள் என்றால் என்ன?
விடை :
கண்ணிற்குப் புலப்படாத கதிர்கள் ஜிங்க் சல்பைடு பூசப்பட்ட திரையில் விழும் போது கண்ணிற்குப் புலப்படும் ஒளியை உமிழ்கின்றன. இப்பொருள்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படுகின்றன.

Question 3.
நியூட்ரானின் பண்புகளை எழுதுக.
விடை :

  • நியூட்ரான் மின் சுமையற்ற, நடுநிலைத்தன்மையுடைய துகள்.
  • இதன் நிறை ஒரு புரோட்டானின் நிறைக்குச் சமம்.
  • நியூட்ரானின் நிறை 1.6 x 10-24 கி.

Question 4.
தாம்சனின் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?
விடை :

  • நேர்மின்னூட்டம் பெற்ற கோளம் எவ்வாறு எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களை ஈர்த்து மின் நடுநிலைத் தன்மை அடைவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்பதை விளக்க முடியவில்லை .
  • புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைப் பற்றி மட்டும் விவரிக்கிறது.
  • நியூட்ரான்களைப் பற்றிக் கூறவில்லை

Question 5.
நேரயனிகள் என்றால் என்ன?
விடை :

  • வேதி வினையின் போது ஒரு அணுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழப்பதால் நேர் மின்சுமையைப் பெறுகின்றது.
  • இவையே நேரயனி அல்லது நேரயனித் தொகுப்பு எனப்படும்.

Question 6.
எதிரயனிகள் என்றால் என்ன?
விடை :

  • திவினையின் போது ஒரு அணுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை ஏற்பதால் எதிர் மின்சுமையைப் பெறுகின்றது.
  • இவையே எதிரயனி அல்லது எதிரயனித் தொகுப்பு எனப்படும்.

Question 7.
வேதியியல் வாய்பாடு அல்லது மூலக்கூறு வாய்பாடு என்றால் என்ன?
விடை :

  • வேதியியல் வாய்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வேதிச் சேர்மம் அல்லது மூலக்கூறைக் குறிக்கும் எளிய வழிமுறையாகும்.
  • இது, ஒரு சேர்மத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மூலக்கூறிலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
டால்டன் அணுக்கொள்கையின் கருதுகோள்களை எழுதுக.
விடை :

  • பொருள்கள் அனைத்தும் அணு எனப்படும் மிகச்சிறிய துகள்களால் ஆனவை.
  • ஒரே தனிமத்தின் அணுக்கள் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்கின்றன (அளவு, வடிவம், நிறை மற்றும் பண்புகள்).
  • வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் அவற்றின் வடிவம், நிறை மற்றும் பண்புகளில் வேறுபட்டிருக்கின்றன.
  • அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதாவது அணுவானது அழிக்கமுடியாத துகள்.
  • வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் ஒன்றிணைந்து
    மூலக்கூறுகள் மற்றும் சேர்மங்களை உருவாக்குகின்றன.
  • அணு என்பது வேதிவினையில் ஈடுபடக்கூடிய மிகச்சிறிய துகள்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 2.
எலக்ட்ரானின் கண்டுபிடிப்பு பற்றி விளக்குக.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 9

  • கேதோடு கதிர் குழாய் என்பது வாயு நிரப்பப்பட்ட, இருபுறமும் மூடப்பட்ட ஒரு நீண்ட கண்ணாடிக் குழாயாகும்.
  • இதன் இரு முனைகளிலும் இரு உலோகத் தகடுகள் அதிக மின்னழுத்த வேறுபாடு தரும் மின்கலனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • எதிர்மின் முனையுடன் இணைக்கப்படும் தகடு எதிர்மின்வாய் (கேதோடு) எனவும், நேர்மின் முனையுடன் இணைக்கப்படும் தகடு நேர்மின்வாய் (ஆனோடு) எனவும் அழைக்கப்படுகின்றன.
  • மின்னிறக்கக் குழாயினுள் உள்ள அழுத்தத்தைக் குறைக்க, அதன் பக்கக்குழாயுடன் இறைப்பான் இணைக்கப்பட்டுள்ளது.
  • 0.001 மிமீ அளவிலான மிகக் குறைந்த அழுத்தத்தில் நிரப்பப்பட்டிருக்கும் வாயுவின் வழியே 10,000 வோல்ட் அளவிலான உயர் அழுத்த மின்சாரம் செலுத்தப்படுகிறது.
  • குழாயின் மறுமுனையில் ஒளிர்தல் ஏற்படுகிறது.
  • இக்கதிர்கள் எதிர்மின்வாயிலிருந்து வெளிவருவதால் கேதோடு கதிர்கள் (எதிர்மின்வாய்க் கதிர்கள்) எனப்பட்டன. இக்கதிர்கள் நேர்மின் வாயை நோக்கி விலக்கமடைவதால், இவை எதிர்மின்சுமையுடைய
    துகள்களால் ஆனது என அறியப்பட்டது.
  • பின்னர் ஜே.ஜே.தாம்சன் இவற்றை எலக்ட்ரான்கள் என பெயரிட்டார்.

Question 3.
கேதோடு கதிர்களின் பண்புகள் யாவை?
விடை :

  • எதிர்மின் முனையிலிருந்து நேர்மின் முனையை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கின்றன.
  • கேதோடு கதிர்கள் நிறை மற்றும் இயக்க ஆற்றலைப் பெற்றுள்ள துகள்களால் உருவாக்கப்பட்டவை.
  • மின்புலம் மற்றும் காந்தப் புலத்தால் விலக்கமடைகின்றன.
  • நேர்மின் வாயை நோக்கி விலக்கமடைவதால், இவை எதிர்மின் சுமையைப் பெற்றுள்ளன.
  • இவற்றின் பண்புகள் மின்னிறக்கக் குழாயில் நிரப்பப்படும் வாயுக்களைப் பொறுத்து மாறுபடுவதில்லை

Question 4.
தாம்சனின் அணு மாதிரியை விளக்குக.
விடை :

  • தாம்சனின் கூற்றுப்படி அணுவின் வடிவமானது, 10-10மீ ஆரமுடைய நேர்மின் சுமையினாலான கோளம் ஆகும்.
  • இந்நேர்மின் கோளத்தில் எதிர்மின் சுமையுடைய துகள்கள் புதைந்து காணப்படுகின்றன.
  • தர்பூசணிப் பழத்திலுள்ள சிவப்பு நிற சதைப்பகுதிப் போல நேர்மின் சுமையுடைய புரோட்டான்களும், அதிலுள்ள விதைகள் போல எதிர்மின் சுமையுடைய எலக்ட்ரான்களும் கருதப்படுகின்றன.
  • எனவே தாம்சனின் அணு மாதிரி பிளம் புட்டிங் மாதிரி அல்லது தர்பூசணிப்பழமாதிரி என அழைக்கப்படுகிறது.
  • மேலும் அணுவின் நிறையானது அணு முழுவதும் சமமாகப் பரவியிருப்பதாகக் கருதப்பட்டது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 10

Question 5.
சமன் செய்யப்பட்ட சமன்பாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய தகவல்கள் யாவை?
விடை :

  • எண்ணிக்கை அடிப்படையிலான மற்றும் தனிக்கூறு சார்ந்த விபரங்களைப் பெற முடியும். வினைபடு பொருள்கள்,
  • விளைபொருள்களின் பெயர், குறியீடு மற்றும் மூலக்கூறு வாய்பாடு போன்ற தனிக்கூறு சார்ந்த தகவல்களை பெறமுடியும்.
  • வினைபடு பொருள்கள் மற்றும் விளை பொருள்களின் மூலக்கூறு எண்ணிக்கை போன்ற எண்ணிக்கை தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.

செயல்பாடுகள்

Question 1.
அடிப்படைத் துகள்களின் பண்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரித்து, விளக்கப்படம் தயார் செய்க.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 11

Question 2.
கீழ்க்கண்ட அயனிகளை ஒற்றை மின்சுமை கொண்டவை, இரட்டை மின்சுமை
கொண்டவை மற்றும் மூன்று மின்சுமை கொண்டவை என வகைப்படுத்துக.
Ni2+, Fe3+, Cu2+, Ba2+, Cs+, Zn2+, Cd2+, Hg2+, Pb2+, Mn2+, Fe2+ , Co2+, Sr2+, Cr2+, Li+, Ca2+, Al3+
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 12

Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு

Question 3.
சேர்மங்களின் வேதியியல் வாய்பாட்டினை எழுது.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 13

Question 4.
வேதிச் சேர்மங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 12 அணு அமைப்பு 14

Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

8th Science Guide அமிலங்கள் மற்றும் காரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அமிலங்கள் ………………………. சுவையை உடையவை.
அ) புளிப்பு
ஆ) இனிப்பு
இ) கசப்பு
ஈ) உப்பு
விடை:
அ) புளிப்பு

Question 2.
கீழ்க்காண்பவற்றுள் நீர்க் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது ………………………..
அ) அமிலம்
ஆ) காரம்
இ) அமிலம் மற்றும் காரம்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை:
இ) அமிலம் மற்றும் காரம்

Question 3.
நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ………………………… நிறமாக மாறுகிறது
அ) நீல
ஆ) பச்சை
இ) சிவப்பு
ஈ) வெள்ளை
விடை:
இ) சிவப்பு

Question 4.
காரத்தை நீரில் கரைக்கும்போது அது …………………………….. அயனிகளைத் தருகிறது.
அ) OH
ஆ) H+
இ) OH
ஈ) H
விடை:
அ) OH

Question 5.
சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு ………………………… ஆகும்.
அ) அமிலம்
ஆ) காரம்
இ) ஆக்ஸைடு
ஈ) உப்பு
விடை:
ஆ) காரம்

Question 6.
சிவப்பு எறும்பின் கொடுக்கில் ……………………….. அமிலம் உள்ளது.
அ) அசிட்டிக் அமிலம்
ஆ) சல்பியூரிக் அமிலம்
இ) ஆக்ஸாலிக் அமிலம்
ஈ) ஃபார்மிக் அமிலம்
விடை:
ஈ) ஃபார்மிக் அமிலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 7.
மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு …………………… ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.
அ) அமிலத்தன்மை
ஆ) தலைவலி
இ) பற்சிதைவு
ஈ) இவற்றில் ஏதும் இல்லை
விடை:
அ) அமிலத்தன்மை

Question 8.
அமிலமும் காரமும் சேர்ந்து ………………………. உருவாகிறது.
அ) உப்பு மற்றும் நீர்
ஆ) உப்பு
இ) நீர்
ஈ) இவற்றில் ஏதும் இல்லை
விடை:
அ) உப்பு மற்றும் நீர்

Question 9.
நாம் பல் துலக்குவதற்கு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது ………………………. தன்மை கொண்டது.
அ) காரம்
ஆ) அமிலம்
இ) காரம் மற்றும் அமிலம்
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) காரம்

Question 10.
மஞ்சள் தூள் நிறங்காட்டியானது கார கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து ………………………. நிறமாக
மாறுகிறது.
அ) நீலம்
ஆ) பச்சை
இ) மஞ்சள்
ஈ) சிவப்பு
விடை:
ஈ) சிவப்பு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பென்சாயிக் அமிலம் ……………………. ஆக பயன்படுகிறது.
விடை:
உணவு பாதுகாப்பானாக

Question 2.
புளிப்புச் சுவை’ என்பது இலத்தின் மொழியில் ……………………….. என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.
விடை:
‘அசிடஸ்’

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 3.
காரங்கள் ……………………… சுவையைக் கொண்டவை.
விடை:
கசப்பு

Question 4.
கால்சியம் ஆக்சைடின் வேதிவாய்ப்பாடு ……………………..
விடை:
Cao

Question 5.
குளவியின் கொடுக்கில் …………………………. அமிலம் உள்ளது.
விடை:
அல்கலி என்ற காரப்பொருள்

Question 6.
உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது …………………… ஆக பயன்படுகிறது.
விடை:
இயற்கை நிறங்காட்டி

Question 7.
செம்பருத்திப் பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் …………………….. நிறத்தைத் தருகிறது
விடை:
இளஞ்சிவப்பு

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றை திருத்தி எழுதுக.

Question 1.
பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைவதில்லை .
விடை:
தவறு
சரியான விடை : பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 2.
அமிலங்கள் கசப்புச் சுவை உடையவை.
விடை:
தவறு
சரியான விடை: அமிலங்கள் புளிப்புச் சுவை உடையவை

Question 3.
உலர்ந்த நிலையில் உள்ள காரங்களைத் தொடும்போது அவை வளவளப்புத் தன்மையுடன் காணப்படும். விடை:
தவறு
சரியான விடை: நீர்க் கரைசலில் காரங்களை தொடும்போது வளவளப்புத் தன்மையுடன் காணப்படும்.

Question 4.
அமிலங்கள் அரிக்கும் தன்மையைக் கொண்டவை.
விடை:
சரி

Question 5.
அனைத்துக் காரங்களும் அல்கலிகள் ஆகும்.
விடை:
தவறு
சரியான விடை: நீரில் கரையும் காரங்களே அல்கலிகள் ஆகும்.

Question 6.
செம்பருத்திப்பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.
விடை:
சரி

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
அமிலம் – வரையறு.
விடை:

  • புளிப்புச் சுவை கொண்ட வேதிச் சேர்மங்கள் அமிலங்கள் எனப்படுகின்றன.
  • அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பெயர்ச்சி செய்யத்தக்க ஹைட்ரஜன் அணுக்களைப் பெற்றுள்ளன.
  • நீரில் கரைக்கும் போது ஹைட்ரஜன் (H+) அயனிகளை வெளியிடுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 2.
அமிலங்களின் ஏதேனும் நான்கு இயற்பியல் பண்புகளை எழுதுக.
விடை:

  • புளிப்புச் சுவை கொண்டவை.
  • அரிக்கும் தன்மை கொண்டவை.
  • நிறமற்றவை.
  • நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது.

Question 3.
அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் யாவை?
விடை:

  • இரண்டும் அரிக்கும் தன்மை கொண்டவை.
  • இரண்டும் பொதுவாக நிறமற்றவை.
  • நீர்க் கரைசலில் இரண்டுமே மின்சாரத்தை கடத்துபவை.
  • நீர்க் கரைசலில் இரண்டுமே அயனிகளைத் தருபவை.

Question 4.
அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான வேற்றுமைகள் யாவை?
விடை:
அமிலங்கள்
1. நீர்க்கரைசலில் H+ அயனிகளைத் தருபவை.
2. பொதுவாக திரவ நிலையில் காணப்படுபவை
3. புளிப்புச் சுவை உடையவை
4. நீலலிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுபவை
5. மெத்தில் ஆரஞ்சை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுபவை
6 ஃபீனால்ப்தலீன் நிறமற்று காணப்படும்

காரங்கள்
– நீர்க்கரைசலில் OH அயனிகளைத் தருபவை.
– பொதுவாக திண்ம நிலையில் காணப்படுபவை
– கசப்புச் சுவை உடையவை.
– சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுபவை
– மெத்தில் ஆரஞ்சை மஞ்சள் நிறமாக மாற்றுபவை
– ஃபீனால்ப்தலீன் இளஞ்சிவப்பு நிறமாக காணப்படும்.

Question 5.
நிறங்காட்டி என்றால் என்ன?
விடை:

  • ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை உடையதா அல்லது காரத்தன்மை உடையதா என்பதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் அறிய உதவும் வேதிப்பொருள் நிறங்காட்டி எனப்படும்.
  • ஒரு வேதிவினை முடிவுற்றதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் அறிய உதவும் வேதிப்பொருளும் நிறங்காட்டி எனப்படும்.

Question 6.
நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன?
விடை:
ஒரு அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் உருவாக்கும் வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும்.

Question 7.
காரங்களின் ஏதேனும் நான்கு வேதிப்பண்புகளை எழுதுக.
விடை:

  • அலுமினியம் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் அலுமினேட் மற்றும் ஹைட்ரஜன் வாயுவைத் தருகிறது.
    2Al + 2NaOH + 2H2O – 2NaAlO2 + 3H2
  • சோடியம் ஹைட்ராக்சைடு கார்பன் – டை – ஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம்
    கார்பனேட்டைத் தருகிறது.
    2NaOH + CO2 – Na2CO3 + H2O அம்மோனியம் உப்புகள் சோடியம்
  • ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து அம்மோனியா வாயுவைத் தருகிறது. NH4Cl + NaOH + NaCl + NH3 + H2O

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

V. விரிவாக விடையளி

Question 1.
அமிலங்களின் பயன்கள் யாவை?
விடை:

அமிலம் பயன்கள்
1. ஹைட்ரோ குளோரிக் அமிலம் நம் வயிற்றில் உணவுப் பொருட்களின் செரிமானம்
2 வினிகர் (அசிட்டிக் அமிலம்) உணவுப்பொருட்களை பாதுகாக்க
3 பென்சாயிக் அமிலம் ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களை பாதுகாக்க
4 உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகள் சலவை சோப்புகள்
5 உயர் கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்புகள் குளியல் சோப்புகள்
6 வேதிப்பொருட்களின் அரசன் எனப்படும் சல்பியூரிக் அமிலம் நீர் நீக்கி, சலவை சோப்புகள், வண்ண ப்பூச்சுகள், உரங்கள், பல வேதிப்பொருட்கள் தயாரிக்க
7 ஹைட்ரோகுளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் ஆய்வகக் கரணி
8 நியூக்ளிக் அமிலம் உயிரினங்களின் அடிப்படை

Question 2.
காரங்களின் பயன்கள் யாவை?
விடை:

காரம் பயன்கள்
1 பொட்டாசியம் ஹைட்ராக்சைடு குளியல் சோப்புகள்
2 சோடியம் ஹைட்ராக்சைடு சலவை சோப்புகள், காகித தொழிற்சாலைகள், ஆடைகள்,
3 கால்சியம் ஹைட்ராக்சைடு வெள்ளை அடிக்க
4 அலுமினியம் மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றில் உருவாகும் அமிலத் தன்மையை நடுநிலையாக்க
5 அம்மோனியம் ஹைட்ராக்சைடு மருந்துகள் தயாரிக்க

Question 3.
நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நடுநிலையாக்கல் வினைகளை விளக்குக.
விடை:
தேனீ கொட்டுதல்:
தேனீ அல்லது எறும்பு கடிக்கும் போது தோலினுள் ஃபார்மிக் அமிலம் உட்செலுத்தப்படுகிறது. இது எரிச்சல் உணர்வு மற்றும் வலியினை உண்டாக்குகிறது. வலி மற்றும் எரிச்சல் உணர்வுள்ள இடத்தில் கால்சியம் ஹைட்ராக்சைடை (சுண்ணாம்பு) தேய்த்து ஃபார்மிக் அமிலம் நடுநிலையாக்கப்படுகிறது.

குளவி கொட்டுதல்:
குளவி கொட்டும் போது ஏற்படும் எரிச்சல், வலிக்கு காரணம் உட்செலுத்தப்படும் அல்கலி என்ற காரப்பொருள் ஆகும். இதனை நடுநிலையாக்க அமிலத்தன்மை கொண்ட வினிகர் பயன்படுத்தப்படுகிறது.

பற்சிதைவு:
நம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பற்களின் இடைவெளியில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை சிதைத்து அமிலத்தை உருவாக்குகிறது. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கிறது. இதனை தடுக்க வலிமை குறைந்த காரங்களைக் கொண்ட பல்பொடி அல்லது பற்பசையை கொண்டு துலக்கும் போது அமிலம் நடுநிலையாக்கப்படுகிறது.

அமிலத்தன்மை:
நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகப்படியான சுரப்பின் காரணமாகவும், உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையிலும், அதிகப்படியான எண்ணெய் மற்றும் மசாலாக்கள் உண்ணும் போது சுரக்கும் அமிலத்தாலும் உணவுக் குழாய் மற்றும் மார்புப் பகுதிகளில் எரிச்சல் உணர்வினை ஏற்படுத்துகிறது. இது மீண்டும், மீண்டும் நடந்தால் வயிறு மற்றும் உணவுக் குழாய்களில் புண் உருவாகி நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதனை நடுநிலையாக்க வலிமை குறைந்த காரங்கள் அலுமினியம் மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை அமில நீக்கியாக பயன்படுகிறது.

வேளாண்மை:
அதிக அமிலத்தன்மை உடைய மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதல்ல, இதனை சரி செய்ய விவசாயிகள் சுண்ணாம்பு, சுண்ணாம்பு கற்கள் அல்லது மரங்களை எரித்துக் கிடைத்த சாம்பல் உரங்களை சேர்த்து மண்ணை நடுநிலையாக்குகின்றனர்.

தொழில்துறை:
ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெளியேறும் தொழிற்சாலை கழிவுகளில் உள்ள சல்பியூரிக் அமிலம் சுண்ணாம்பு சேர்ப்பதால் நடுநிலையாக்கப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்கள் எரிக்கப்படும் போது வெளியாகும் அமில வாயு சல்பர் டை ஆக்சைடை நடுநிலையாக்க சுண்ணாம்புத்தூள் அல்லது சுண்ணாம்பு கற்கள் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 4.
மஞ்சள் தூளிலிருந்து எவ்வாறு இயற்கை நிறங்காட்டியைத் தயாரிப்பாய்?
விடை:

  • மஞ்சள் தூளில் சிறிது நீர் சேர்க்கப்பட்டு மஞ்சள் தூள் பசை தயாரிக்கப்படுகிறது.
  • இதனை மை உறிஞ்சும் தாள் அல்லது வடிதாளின் மீது பூசி பின்பு உலர்த்தி நிறங்காட்டி தயாரிக்கப்படுகிறது.
  • கரைசலின் அமில, கார தன்மையை கண்டறிய மஞ்சள் தூள் நிறங்காட்டி பயன்படுகிறது.
  • அமிலக்கரைசல் – மஞ்சள் நிறம்
  • காரக்கரைசல் – சிவப்பு நிறம்

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
விணுபாலன் மற்றும் ப்ரியன் பள்ளியில் மதிய உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். விணுபாலன் எலுமிச்சை சோறும், பிரியன் தயிர் சோறும் சாப்பிடுகிறார்கள். எலுமிச்சை சோறு மற்றும் தயிர் சோறு இரண்டும் என்ன தன்மை உடையவை. அந்த சுவைக்குக்காரணம் என்ன?
விடை:

  • இரண்டும் அமிலத்தன்மை உடையது.
  • இரண்டும் புளிப்புச் சுவை உடையது.
  • காரணம் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலமும், தயிரில் லாக்டிக் அமிலமும் உள்ளது. அமிலங்கள் புளிப்பு சுவை உடையது.

Question 2.
ஹேஸ்னாவும், கீர்த்தியும் நண்பர்கள். கீர்த்தியின் பற்களில் பற்சிதைவு இல்லை. ஆனால், ஹேஸ்னாவின் பற்களில் பற்சிதைவு உள்ளது. ஏன்? எதனால் பற்சிதைவு ஏற்படுகிறது?
விடை:

  • ஹேஸ்னா தன்னுடைய பற்களை சரியாக சுத்தம் செய்யாத காரணத்தால் பற்சிதைவு உள்ளது.
  • வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பற்களிடையே உள்ள உணவுத் துகள்களை சிதைத்து அமிலத்தை உருவாக்குவதால் பற்சிதைவு ஏற்படுகிறது.

செயல்பாடுகள்

செயல்பாடு 1
ஒரு சோதனைக் குழாயினை தாங்கியில் எடுத்துக்கொண்டு சிறிதளவு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஊற்று. சில மெக்னீசியம் நாடாத்துண்டுகளை மெதுவாகச் சேர். நீ என்ன காண்கிறாய்? இப்பொழுது ஒரு எரியும் தீக்குச்சியை சோதனைக்குழாயின் வாய்ப்பகுதியில் காட்டு. ஏதாவது ஒலியைக் கேட்கிறாயா? இவ்வினையில் உருவாகும் ஒரு வாயு ‘பாப் ‘ என்ற ஒலியுடன் எரிவதைக் காண்கிறாய் அல்லவா? நீ செய்த வேதிவினையில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மெக்னீசியம் உலோகம் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயு வெளியிடப்படுகிறது.
விடை:

  • கரைசலின் வழியாக வாயுக் குமிழிகள் வெளியேறுகின்றன.
  • வாயு ‘பாப்’ என்ற ஒலியுடன் எரிகிறது.
  • எனவே அவ்வாயு ஹைட்ரஜன் ஆகும்.
  • வேதிவினை Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் 1

செயல்பாடு 2
ஒரு முகவையில் எலுமிச்சைச் சாற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு சமையல் சோடாவை மெதுவாகச் சேர்க்கவும். என்ன காண்கிறாய்? இதிலிருந்து நீ என்ன அறிகிறாய்?
விடை:

  • கரைசல் வழியாக நுரைத்துப் பொங்குதலுடன் வாயு வெளியேறுகிறது.
  • எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் அமிலம் சமையல் சோடா (சோடியம் பை கார்பனேட்)
    உடன் வினைபட்டு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

செயல்பாடு 3
கீழ்கண்ட பொருள்களை வகைப்படுத்துக
சோடியம் ஆக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு, அம்மோனியம் ஹைட்ராக்சைடு, பெர்ரிக் ஹைட்ராக்சைடு, ஜிங்க் ஆக்சைடு.
விடை:

காரம் அல்கலி ஆக்சைடு
பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சோடியம் ஆக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு கால்சியம் ஹைட்ராக்சைடு ஜிங்க் ஆக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு அம்மோனியம் ஹைட்ராக்சைடு
பெர்ரிக் ஹைட்ராக்சைடு அல்கலி

செயல்பாடு 4
வெள்ளைத் துணியை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள மஞ்சளை எடுத்து நீரில் தேய்த்து வெள்ளைத்துணியில் கரை ஒன்றை உண்டாக்கு. பிறகு நீ வீட்டில் பயன்படுத்தும் சலவை சோப்பைக் கொண்டு துணியைத் துவைக்கவும். நிறத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா? ஏன் இந்த மாற்றம் ஏற்படுகிறது?
விடை :

  • கறையின் மஞ்சள் நிறம் சிவப்பாக மாறுகிறது.
  • ஏனெனில் சோப்பு காரத்தன்மை உடையது.
  • மஞ்சள் நிறங்காட்டி காரக்கரைசலில் சிவப்பாக மாறுகிறது.

செயல்பாடு 5
சிறிய பீட்ரூட் ஒன்றை எடுத்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டவும். அவற்றை சூடான நீரில் கொதிக்க வைத்து சாற்றை வடிகட்டவும். இரண்டு சோதனைக் குழாயினை எடுத்துக்கொள்ளவும். ஒரு சோதனைக்குழாயில் சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசலையும் மற்றொரு சோதனைக்குழாயில் வினிகர் அல்லது எலுமிச்சைசாறையும் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் இரண்டு ஆய்வுக்குழாய்களிலும் பீட்ரூட் சாறினை சிறிதளவு சேர்க்கவும். நிகழும் நிறமாற்றத்தை கூர்ந்து கவனியுங்கள். இதிலிருந்து நீங்கள் என்ன அறிந்து கொள்கிறீர்கள்? முடிவுகளை அட்டவணைப்படுத்தவும்.
விடை:

நிறங்காட்டி சோடியம் ஹைட்ராக்சைடு (காரக்கரைசல்) வினிகர் (அல்லது) எலுமிச்சை சாறு (அமிலக்கரைசல்)
பீட்ரூட் சாறு மஞ்சள் நிறமாக மாறுகிறது நிறமாற்றம் இல்லை

 

 

செயல்பாடு 6:
கரைசல்களின் தன்மையை கண்டறிக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் 2

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

8th Science Guide அமிலங்கள் மற்றும் காரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அமிலங்கள் நீரில் கரைக்கப்படும் போது வழங்குவது ……………………..
அ) H+ அயனிகள்
ஆ) H3O+ அயனிகள்
இ) OH அயனிகள்
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஈ) (அ) மற்றும் (ஆ)

Question 2.
இயற்கையில் உள்ள பழங்கள், காய்கறிகளில் காணப்படும் அமிலங்கள்
அ) கனிம அமிலங்கள்
ஆ) கரிம அமிலங்கள்
இ) தாது அமிலங்கள்
ஈ) மேற்கண்ட எதுவுமல்ல
விடை:
ஆ) கரிம அமிலங்கள்

Question 3.
வேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது
அ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஆ) நைட்ரிக் அமிலம்
இ) சல்பியூரிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்
விடை:
இ) சல்பியூரிக் அமிலம்

Question 4.
அல்கலி என்பது எதில் கரையக்கூடிய காரங்கள்?
அ) ஆல்கஹால்
ஆ) நீர்
இ) அமிலங்கள்
ஈ) ஈதர்
விடை:
ஆ) நீர்

Question 5.
உணவுப் பொருட்களை பாதுகாக்க பயன்படுவது …………………………..
அ) சோடியம் ஹைட்ராக்சைடு
ஆ) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
இ) அசிட்டிக் அமிலம்
ஈ) சல்பியூரிக் அமிலம்
விடை:
இ) அசிட்டிக் அமிலம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
எறும்பு கடிக்கும்போது அல்லது தேனீ கொட்டும் போது நம் உடலில் ………………………… உட்செலுத்தப்படும் அமிலம்
விடை:
ஃபார்மிக் அமிலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 2.
பீனால்ஃப்தலீன் ஓரு ……………………….. நிறங்காட்டி
விடை:
செயற்கை

Question 3.
லிட்மஸ் என்பது ………………………….. இருந்து பிரித்தெடுக்கப் படும் இயற்கையான நிறங்காட்டி,
விடை:
லைக்கன்களில்

Question 4.
வயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்க அலுமினியம் மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை ……………………… ஆக பயன்படுகிறது.
விடை:
அமில நீக்கி

Question 5.
உயிரினங்களின் செல்களின் அடிப்படையாக ………………………… உள்ளது,
விடை:
நியூக்ளிக் அமிலம்

III. சரியா? தவறா? (தவறெனில் சரியான கூற்றைத் தருக)

Question 1.
நம் வயிற்றில் உணவுப் பொருட்களின் செரிமானத்திற்கு நைட்ரிக் அமிலம் உதவுகிறது
விடை:
தவறு
சரியான விடை: நம் வயிற்றில் உணவுப் பொருட்களின் செரிமானத்திற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது

Question 2.
கார்பனேட் மற்றும் பை கார்பனேட் ஆகியன நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரைத் தருகின்றன.
விடை:
சரி

Question 3.
அம்மோனியம் உப்புகள், காரங்களுடன் வினைபுரிந்து நைட்ரஜன் மற்றும் நீரைத் தருகின்றன.
விடை:
தவறு
சரியான விடை: அம்மோனியம் உப்புகள் காரங்களுடன் வினைபுரிந்து அம்மோனியா மற்றும் நீரைத் தருகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 4.
அனைத்து காரங்களும் அல்கலிகள் ஆகும் ஆனால் அனைத்து அல்கலிகளும் காரங்கள் அல்ல.
விடை:
தவறு
சரியான விடை: அனைத்து அல்கலிகளும் காரங்கள் ஆகும் ஆனால் அனைத்து காரங்களும் அல்கலிகள் அல்ல

Question 5.
நிறங்காட்டி என்பது தகுந்த நிறமாற்றத்தின் மூலம் ஒரு வினை முடிவடைந்ததைக் காட்டும் வேதிப்பொருள் ஆகும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் 3

V. மிகக் குறுகிய விடையளி

Question 1.
அமிலம் என்ற சொல் இலத்தீன் மொழி சொல் எதிலிருந்து வருவிக்கப்பட்டது?
விடை:
‘அசிடஸ்’

Question 2.
டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகியவற்றின் விரிவாக்கம் என்ன?
விடை:

  • டி.என்.ஏ – டிஆக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலம்
  • ஆர்.என்.ஏ – ரிபோ நியூக்ளிக் அமிலம்

Question 3.
சலவை சோடா என்பது என்ன?
விடை:
சோடியம் கார்பனேட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 4.
அமில நீக்கிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:
அலுமினியம் ஹைட்ராக்சைடு மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு. இயற்கை நிறங்காட்டிகள் சிலவற்றை குறிப்பிடுக. லிட்மஸ், மஞ்சள் சாறு, செம்பருத்திப்பூ மற்றும் பீட்ரூட் சாறு

VI. குறுகிய விடையளி

Question 1.
செயற்கை நிறங்காட்டி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • செயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் நிறங்காட்டி செயற்கை நிறங்காட்டி எனப்படும்.
  • (எ.கா) பீனால்ஃப்தலீன், மெத்தில் ஆரஞ்சு

Question 2.
அமிலங்கள் மற்றும் காரங்கள் அரிக்கும் தன்மையுடையவை. ஏன்?
விடை:

  • வலிமையான அமிலங்கள் மனிதத் தோல்களை மிகவும் பாதிக்கிறது.
  • காரங்கள் தோல்களில் படும்போது வலி மிகுந்த கொப்புளங்கள் ஏற்படும்.
  • எனவே அமிலங்கள் மற்றும் காரங்கள் அரிக்கும் தன்மையுடையவை.

Question 3.
காரங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • நீரில் ஹைட்ராக்சைடு அயனிகளைத் தரவல்ல வேதிப்பொருட்கள் காரங்கள் எனப்படும்.
  • (எ.கா) சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (NaOH)

Question 4.
ஹைட்ராக்சைடு அயனிகளைத் தராத காரங்கள் உள்ளனவா?
விடை:

  • ஆம், நீரில் கரைக்கும் போது ஹைட்ராக்சைடு அயனிகளைத் தராத காரங்கள் உள்ளன.
  • (எ.கா) சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், கால்சியம் கார்பனேட்

Question 5.
நடுநிலையாக்கல் வினைமூலம் உருவாகும் உப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

அமிலம் காரம் உப்பு
1. ஹைட்ரோகுளோரிக் அமிலம் HCl சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) சோடியம் குளோரைடு (NaCl)
2 சல்பியூரிக் அமிலம் (H2SO4,) சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) சோடியம் சல்பேட் (Na2SO4 )
3. நைட்ரிக் அமிலம் (HNO3) சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) சோடியம் நைட்ரேட் (NaNO3)
4. அசிட்டிக் அமிலம் (CH3COOH) சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) சோடியம் அசிட்டேட் (CH3COONa)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

VII. விரிவான விடையளி

Question 1.
அமிலங்களின் வகைபாட்டினை விளக்குக.
விடை:
அமிலங்கள் அவற்றின் மூலங்களைப் பொறுத்து இருவகைப்படும். அவை
(i) கரிம அமிலங்கள்
(ii) கனிம அமிலங்கள்

(i) கரிம அமிலங்கள்:இவை இயற்கையில் உள்ள பழங்கள், காய்கறிகளில்காணப்படுகின்றன.
(எ.கா) சிட்ரிக் அமிலம் – எலுமிச்சை , டார்டாரிக் அமிலம் – புளி

(ii) கனிம அமிலங்கள் : இவை மனிதனால் தொழிற்சாலைகளில் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
(எ.கா) ஹைட்ரோகுளோரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம்

Question 2.
அமிலங்கள் பின்வருவனவற்றுடன் எவ்வாறு வினைபுரிகிறது?
விடை:
(i) உலோகங்கள்
(ii) உலோக கார்பனேட்
(iii) உலோக ஆக்சைடு

(i) உலோகங்களுடன் வினை:
துத்தநாகம், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்களுடன் அமிலங்கள் வினைப்பட்டு உலோக உப்புகளையும், ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் 4

(ii) உலோக கார்பனேட் மற்றும் பை கார்பனேட்டுகளுடன் வினை :
நீர்த்த அமிலங்களுடன் உலோக கார்பனேட் மற்றும் பை கார்பனேட்டுகள் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவும், நீரும் உருவாகின்றன.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் 5

(iii) உலோக ஆக்சைடுகளுடன் வினை :
பல்வேறு உலோக ஆக்சைடுகள் நீர்த்த அமிலங்களுடன் வினைபுரிந்து உலோக உப்புகள் மற்றும் நீரைத் தருகின்றன.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் 6

Samacheer Kalvi 9th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள்

Question 3.
நிறங்காட்டிகளை பற்றி விவரி.
விடை:

  • ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை உடையதா அல்லது காரத்தன்மை உடையதா என்பதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் அறிய உதவும் வேதிப்பொருள் நிறங்காட்டி எனப்படும்.
  • ஒரு வேதிவினை முடிவுற்றதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் அறிய உதவும் வேதிப்பொருளும் நிறங்காட்டி எனப்படும்.
  • நிறங்காட்டி இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ இருக்கலாம்.

இயற்கை நிறங்காட்டி:

  • இவை இயற்கையில் காணப்படும் பொருட்களில் இருந்து பெறப்படுகிறது.
  • (எ.கா) லிட்மஸ், மஞ்சள்சாறு, செம்பருத்திப்பூ மற்றும் பீட்ரூட் சாறு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 14 அமிலங்கள் மற்றும் காரங்கள் 7

செயற்கை நிறங்காட்டி :

  • இவை செயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
  • (எ.கா) பீனால்ஃப்தலீன், மெத்தில் ஆரஞ்சு
நிறங்காட்டி அமிலக் கரைசல் காரக் கரைசல்
(i) பீனால்ஃப்தலீன் நிறமற்றது இளஞ்சிவப்பு
(ii) மெத்தில் ஆரஞ்சு இளஞ்சிவப்பு மஞ்சள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

8th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………………………..
அ) மெத்தனால்
ஆ) எத்தனால்
இ) கற்பூரம்
ஈ) மெர்காப்டன்
விடை:
ஈ) மெர்காப்டன்

Question 2.
தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?
அ) சதுப்பு நில வாயு
ஆ) நீர்வாயு
இ) உற்பத்தி வாயு
ஈ) நிலக்கரி வாயு
விடை:
ஆ) நீர்வாயு

Question 3.
ஒரு எரிபொருளின் கலோரி மதிப்பின் அலகு …………………………..
அ) கிலோ ஜுல்/மோல்
ஆ) கிலோ ஜுல்/கிராம்
இ) கிலோ ஜூல்/கிலோ கிராம்
ஈ) ஜுல்/கிலோ கிராம்
விடை:
இ) கிலோ ஜூல்/கிலோ கிராம்

Question 4.
………………………. என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.
அ) பீட்
ஆ) லிக்னைட்
இ) பிட்டுமினஸ்
ஈ) ஆந்த்ரசைட்
விடை:
ஈ) ஆந்த்ரசைட்

Question 5.
இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ……………………
அ) மீத்தேன்
ஆ) ஈத்தேன்
இ) புரோப்பேன்
ஈ) பியூட்டேன்
விடை:
அ) மீத்தேன்

II. கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.

Question 1.
உற்பத்தி வாயு என்பது, ………………………. மற்றும் ……………………….. ஆகியவற்றின் கலவையாகும்.
விடை:
கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
………………………. சதுப்பு நில வாயு எனப்படுகிறது.
விடை:
மீத்தேன்

Question 3.
பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது …………………………
விடை:
பாறை எண்ணெய்

Question 4.
காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது …………………….. எனப்படும்.
விடை:
சிதைத்து வடித்தல்

Question 5.
படிம எரிபொருளுக்கு ஒரு உதாரணம் ………………………..
விடை:
நிலக்கரி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல் 1
Samacheer Kalvi 8th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல் 2

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன?
விடை:
ஹைட்ரோ கார்பன்களின் கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கி பெரிய எண்ணிக்கையிலான சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்குவது சங்கிலி தொடராக்கம் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
இயற்கை வாயுவின் நிறைகள் யாவை?
விடை:
இயற்கை வாயு,

  • எளிதில் எரியக்கூடியது.
  • பெருமளவில் வெப்பத்தை வெளிவிடக்கூடியது.
  • எரியும்போது புகையை வெளிவிடாததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.
  • குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச்சென்று சேர்க்க முடியும்.
  • நேரடியாக எரிபொருளாக வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தமுடியும்.

Question 3.
CNG என்பதை விரிவு படுத்தி எழுதுக. அதன் இரு பயன்களை எழுதுக.
விடை:

  • CNG -அழுத்தப்பட்ட இயற்கை வாயு.
  • எரிபொருள்
  • தானியங்கி வாகன எரிபொருள்.

Question 4.
தொகுப்பு வாயு என்று அறியப்படும் வாயுவைக் கண்டறிந்து எழுது. அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:

  • தொகுப்பு வாயு – கார்பன்மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவை.
  • மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்ய பயன்படுவதால் இது தொகுப்பு வாயு எனப்படுகிறது.

Question 5.
ஏன் ஆந்த்ரசைட் வகை நிலக்கரி மிகவும் உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது? அதற்கான காரணம் தருக.
விடை:

  • ஆந்த்ரசைட்டில் கார்பனின் சதவீதம் 86-97% ஆகும்.
  • இது பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது.
  • ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான தூசியினையும் தருகிறது.
  • எனவே ஆந்த்ரசைட் நிலக்கரி உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது.

Question 6.
ஆக்டேன் எண் – சீட்டேன் எண் – வேறுப்படுத்துக.
விடை:
ஆக்டேன் எண்
1 இம்மதிப்பு பெட்ரோலுக்கு பயன்படுத்தப்படுகிறது
2. பெட்ரோலிலுள்ள ஆக்டேனின் அளவை குறைக்கிறது.
3. பென்சீன் அல்லது டொலுவீனை சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
4. உயர்ந்த ஆக்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் சீட்டேன் எண் குறைவாக இருக்கும்.

சீட்டேன் எண்
– இம்மதிப்பு டீசலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
– டீசல் எஞ்சினிலுள்ள பற்றவைப்பு எரிபொருளின் நேரத்தைக் குறிக்கிறது.
– அசிட்டோனை சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.
– உயர்ந்த சீட்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் குறைவாக இருக்கும்.

Question 7.
தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களை எழுதுக.
விடை:
கயத்தாறு, ஆரல்வாய்மொழி, பல்லடம் மற்றும் குடிமங்களம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 8.
சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும். இக்கூற்றை நியாயப்படுத்துக.
விடை:

  • சூரிய ஆற்றல் முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும்.
  • இது இயற்கையில் தீர்ந்து விடாத ஆற்றல் மூலமாகும்.
  • இது விலையில்லா மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும்.
  • இது சுற்றுச்சூழலை பாதிக்காதது.
  • படிம எரிபொருட்களை பதிலீடு செய்யக்கூடிய ஆற்றல் வளமாகும்.
  • இது பயன்படுத்த எளிதாகவும், ஆற்றல் சார்ந்த இன்றைய பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் உள்ளது.
  • சூரிய ஆற்றல் ஒரு பரிசுத்தமான ஆற்றலாகும்.

V. விரிவாக விடையளி

Question 1.
நிலக்கரியின் பல்வேறு வகைகளைப் பற்றி விளக்குக.
விடை:
I. லிக்னைட்:

  • இது பழுப்பு நிறமுடைய மிகவும் தரம் குறைந்த நிலக்கரியாகும்.
  • கார்பனின் சதவீதம் 25 – 35%
  • அதிக அளவு நீரைக் கொண்டது.
  • மொத்த நிலக்கரி இருப்பில் ஏறக்குறைய பாதியளவினை கொண்டுள்ளது.
  • மின்சார உற்பத்தி, தொகுப்பு முறையிலான இயற்கை வாயு, உரப்பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

II. துணை – பிட்டுமினஸ்:

  • லிக்னைட் அடர்நிறமாகவும் கடினமாகவும் ஆகும்பொழுது துணை-பிட்டுமினஸ் நிலக்கரி உருவாகிறது.
  • இது கருமை நிறமுடைய குன்றிய நிலக்கரி வகை.
  • லிக்னைட்டை விட உயர் வெப்ப மதிப்பைக் கொண்டது.
  • கார்பனின் சதவீதம் 35 – 44%
  • மற்ற நிலக்கரிகளைவிட குறைந்த அளவு சல்பர் உள்ளது.
  • தூய்மையாக எரியக்கூடியது.
  • முதன்மையாக மின்சார உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுகிறது.

III. பிட்டுமினஸ் நிலக்கரி:

  • நிறைய இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் துணை பிட்டுமினஸ் நிலக்கரி பிட்டுமினஸ் வகை நிலக்கரியாக மாற்றம் பெற்றுள்ளது.
  • இது அடர்கருமை நிறமும், கடினத் தன்மையும் கொண்டது
  • கார்பனின் சதவீதம் 45 – 86%
  • அதிக வெப்ப ஆற்றல் மதிப்பை பெற்றுள்ளது.
  • மின்சாரம் உற்பத்தி செய்ய, இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு கல்கரி வழங்குகிறது.

இவ்வகை நிலக்கரியிலிருந்து கிடைக்கும் உப விளைபொருட்கள் பெயிண்டுகள், நைலான் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன.

IV. ஆந்த்ர சைட்:

  • இது மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி வகையாகும்.
  • மிகுந்த கடினத்தன்மையும், அடர்கருமை நிறத்தையும் கொண்டது.
  • மிகவும் இலேசானது.
  • உயர்ந்த வெப்ப ஆற்றலை கொண்டது.
  • பளபளக்கும் தன்மை கொண்டது.
  • கார்பனின் சதவீதம் 86 – 97%
  • பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது.
  • நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும், குறைவான தூசியினையும் தருகிறது.

Question 2.
சிதைத்து வடித்தல் என்றால் என்ன? பெட்ரோலியத்தை பின்னக்காய்ச்சி வடிக்கும் போது
கிடைக்கும் பொருட்களைப் பற்றி எழுதுக.
விடை:

  • காற்றில்லா சூழலில் நிலக்ரியை வெப்பப்படுத்துவது சிதைத்து வடித்தல் எனப்படும்.
  • பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
பல்வேறு எரிபொருள் வாயுக்களைப் பற்றி எழுதுக.
விடை:
I. திட எரிபொருட்கள்:

  • திடநிலையில் உள்ள மரம் மற்றும் நிலக்கரி போன்றவை திட எரிபொருட்கள் எனப்படும்.
  • முதன்முதலில் மனிதனால் பயன்படுத்தப்பட்டது.
  • எளிதில் சேமிக்கவும், கொண்டு செல்லவும் முடியும்.
  • உற்பத்தி செலவுக் குறைவு.

II. திரவ எரிபொருட்கள்:

  • பெரும்பாலான திரவ எரிபொருட்கள் இறந்த தாவர விலங்குகளின் படிமங்களில் இருந்து பெறப்படுகின்றன.
  • எரியும் பொழுது அதிக ஆற்றலைத் தருகின்றன.
  • சாம்பலை தராமல் எரிகின்றன.
  • (எ.கா.) பெட்ரோலிய எண்ணெய், கரித்தார், ஆல்கஹால்.

III. வாயு எரிபொருட்கள்:

  • எளிதில் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லமுடியும்.
  • சுற்றுச்சுழலை மாசுபடுத்தாது.
  • (எ.கா.) நிலக்கரி வாயு, எண்ணெய் வாயு, உற்பத்தி வாயு, ஹைட்ரஜன் வாயு.

8th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
மீத்தேன் இவ்வாறும் அழைக்கப்படுகிறது.
அ) தொகுப்பு வாயு
ஆ) நீர்வாயு
இ) சதுப்பு நிலவாயு
ஈ) உற்பத்தி வாயு
விடை:
இ) சதுப்பு நிலவாயு

Question 2.
உயிரி வாயு என்பது எவற்றின் கலவை?
அ) கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன்
ஆ) மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்சைடு
இ) கார்பன்டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன்
ஈ) மீத்தேன் மற்றும் நைட்ரஜன்
விடை:
ஆ) மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்சைடு

Question 3.
பின்வருவனவற்றுள் எதில் கார்பனின் சதவீதம் அதிகம்?
அ) லிக்னைட்
ஆ) துணை பிட்டுமினஸ் நிலக்கரி
இ) பிட்டுமினஸ் நிலக்கரி
ஈ) ஆந்த்ரசைட்
விடை:
ஈ) ஆந்த்ரசைட்

Question 4.
மலையேறும் பைக்குகள், டென்னிஸ் ராக்கெட்டுகள் தயாரிக்க பயன்படுவது எது?
அ) கார்பன் இழைகள்
ஆ) கல்கரி
இ) நிலக்கரி
ஈ) செயல்மிகு கரி
விடை:
அ) கார்பன் இழைகள்

Question 5.
எதிர்காலத்தில் மிகச் சிறந்த மாற்று எரிபொருள் எது?
அ) பெட்ரோல்
ஆ) டீசல்
இ) ஹைட்ரஜன்
ஈ) மீத்தேன்
விடை:
இ) ஹைட்ரஜன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
மிகவும் எளிய ஹைட்ரோகார்பன் ……………………………..
விடை:
மீத்தேன்

Question 2.
LPG சிலிண்டர்களில் பயன்படும் வாயு ……………………..
விடை:
புரப்பேன்

Question 3.
நீர் மற்றும் காற்று சுத்தப்படுத்தும் வடிகட்டிகளிலும், சிறுநீரக சுத்திகரிப்பு கருவிகளிலும் பயன்படுவது ……………………………
விடை:
செயல்மிகு கரி

Question 4.
மிகத் தூய்மையான நிலக்கரி படிவம் …………………………………
விடை:
கல்கரி

Question 5.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவிலிருந்து பெறப்படும் பயன்தரும் பல பொருட்கள் ……………….. எனப்படுகின்றன.
விடை:
பெட்ரோ கெமிகல்ஸ்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல் 4

IV. மிகக் குறுகிய விடையளி

Question 1.
கார்பனாதல் என்றால் என்ன?
விடை:
இறந்த தாவரங்கள் வெப்பம் மற்றும் அழுத்தத்தினால் நிலக்கரியாக மாறும் மெதுவான
நிகழ்ச்சி கார்பனாதல் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
நிலக்கரி எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது?
விடை:
நிலக்கரி அதில் உள்ள கார்பன் அளவு மற்றும் வெளிவிடும் வெப்ப ஆற்றலைப் பொறுத்து நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.

Question 3.
பெட்ரோலியம் என்றால் என்ன?
விடை:
பெட்ரோலியம் பூமியில் காணப்படும் பல்வேறு திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படும் ஹைட்ரோ கார்பன்களின் கலவையாகும்.

Question 4.
பெட்ரோலியம் சுத்திகரிப்பு என்றால் என்ன?
விடை:
பயன்மிக்க உப விளைபொருட்களை பெட்ரோலியத்திலிருந்து பிரித்தெடுக்கவும், தேவையற்ற மாசுகளை நீக்கவும் செயல்படுத்தப்படும் முறை சுத்திகரிப்பு எனப்படும்.

Question 5.
எரிபொருள் என்றால் என்ன?
விடை:
எரியும்பொழுது வெப்ப ஆற்றலைத் தரும் எந்தப் பொருளும் எரிபொருள் எனப்படும்.

V. குறுகிய விடையளி

Question 1.
ஹைட்ரோ கார்பன்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:

  • ஹைட்ரோ கார்பன்கள் என்பவை ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களை கொண்ட கரிமச் சேர்மங்கள் ஆகும்.
  • அவை அல்கேன்கள், அல்கீன்கள், அல்கைன்கள் மற்றும் அரீன்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • (எ.கா.) மீத்தேன், ஈத்தேன், புரப்பேன், பியூட்டேன் மற்றும் பென்டேன்.

Question 2.
இந்தியாவில் இயற்கை எரிவாயு கிடைக்கும் இடங்கள் யாவை?
விடை:
திரிபுரா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேசம் (கிருஷ்ணா , கோதாவரி படுகைகள்) மற்றும் தமிழ்நாடு (காவேரி டெல்டா)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
உற்பத்தி வாயு என்றால் என்ன? அது எவ்வாறு பெறப்படுகிறது?
விடை:

  • உற்பத்தி வாயு என்பது கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் வாயுக்களின் கலவை ஆகும்.
  • செஞ்சூடாக்கப்பட்ட கல்கரியின் மீது 1100°C வெப்ப நிலையில் காற்றுடன் கலந்துள்ள நீராவியை செலுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
  • இது இரும்பு, எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுகிறது.

Question 4.
ஆக்டேன் எண் என்றால் என்ன?
விடை:

  • பெட்ரோலில் உள்ள ஆக்டேன் என்ற ஹைட்ரோ கார்பனின் அளவைக் குறிக்கும் எண் அதன் ஆக்டேன் எண் எனப்படும்.
  • உயர்ந்த ஆக்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருள் ஒரு நல்லியல்பு எரிபொருளாகும்.

Question 5.
சாண எரிவாயு என்றால் என்ன?
விடை:

  • காற்றில்லாச் சூழலில் மாட்டுச் சாணத்தை நொதிக்க வைத்து பெறப்படும் வாயு சாண எரிவாயு எனப்படும்.
  • இதில் மீத்தேனும், சிறிதளவு ஈத்தேனும் உள்ளது.
  • கிராமப்புறங்களில் சமைக்கவும், எந்திரங்கள் இயக்கவும் பயன்படுகிறது.

VI. விரிவான விடையளி

Question 1.
இயற்கை வாயு பற்றி விவரி.
விடை:

  • இயற்கை வாயு என்பது இயற்கையில் உருவாகும் மீத்தேன், உயர் ஆல்கேன்கள் மற்றும் சிறிதளவு கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன், ஹைட்ரஜன் சல்பைடு கொண்ட வாயுக்களின் கலவையாகும்.
  • இயற்கை வாயுவில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் என்ற கீழ்நிலை ஹைட்ரோகார்பன்கள் இருந்தால் அது உலர் வாயு எனப்படும்.
  • இயற்கை வாயுவில் புரப்பேன் மற்றும் பியூட்டேன் போன்ற உயர் ஹைட்ரோகார்பன்கள் இருந்தால் அது ஈரவாயு எனப்படும்.
  • இயற்கை வாயு எண்ணெய் கிணறுகளின் எண்ணெய் மட்டத்திற்கு மேலே எப்பொழுதும் காணப்படும்.
  • இந்த வாயு கடல் மட்டத்தில் கீழ் உள்ள பாறைகளுக்கு இடையேயான சிறிய துளைகளில் காணப்படுகின்றன. இவைகள் தேக்கங்கள் எனப்படும்.
  • வழக்கமான முறையில் எண்ணெய் கிணறுகள் தோண்டுவதன் மூலம் இவற்றை வெளிக்கொண்டு வரமுடியும்.
  • இயற்கை வாயு கடலின் அடியில் உள்ள பாறைகளுக்கு இடையே உள்ள எண்ணெயுடன் சேர்த்து வெளிக்கொண்டு வரப்படுகிறது.
  • மேலும் சதுப்பு நிலப்பகுதிகளிலும், கழிவு நீர்க் கால்வாய்களிலும் உள்ள சிதைவடையும் கரிம பொருள்களில் இருந்தும் இவை உருவாகின்றன. இந்த இயற்கைவாயுவில் மீத்தேன் முதன்மையாக இருக்கும்
  • இறக்கை வாயு வெப்பப்படுத்துவதற்கும், சமைப்பதற்கும், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் பயன்படும் படிம எரிபொருள் ஆற்றல் மூலமாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
குறிப்பு வரைக.
(i) நிலக்கரி வாயு
(ii) உயிரி வாயு
விடை:
(i) நிலக்கரி வாயு:

  • காற்றில்லா சூழ்நிலையில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது சிதைத்து வடித்தல் எனப்படும்.
  • இது நிலக்கரி வாயு எனப்படும் ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு கொண்ட கலவையைத் தருகிறது.
  • எஃகு உற்பத்தியில் பயன்படும் திறந்த வெப்ப உலையில் பயன்படுகிறது.
  • உலோகவியல் செயல்பாடுகளில் ஒடுக்கும் பொருளாக பயன்படுகிறது.

(ii) உயிரி வாயு:

  • தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் சிதைவடையும் பொழுது உருவாகும் மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்சைடு வாயுக்கலவை உயிரி வாயு எனப்படும்.
  • காற்றில்லா சூழ்நிலையில் கரிம பொருள்கள் சிதைவடையும் பொழுது உயிரி வாயு உருவாகிறது.
  • இது ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஆகும்.

Question 3.
பெட்ரோலியத்தின் பயன்களை எழுதுக.
விடை:

  • திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் எரிபொருளாக பயன்படுகிறது.
  • பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எரிபொருளாகவும், மின்சார ஜெனரேட்டர்களை இயக்கவும் பயன்படுகின்றது.
  • உலர் சலவை செய்வதற்கு ஒரு கரைப்பானாக பெட்ரோல் பயன்படுகிறது.
  • ஸ்டவ் அடுப்புகளிலும், ஜெட் விமானங்களிலும் மண்ணெண்ணெய் எரிபொருளாக பயன்படுகிறது.
  • உயவு எண்ணெய் எந்திர பாகங்களின் தேய்மானத்தை குறைக்கவும், எந்திரங்கள் துருப்பிடிக்காமலும் பாதுகாக்க உதவுகிறது.
  • பாரபின் மெழுகு, மெழுகுவர்த்திகள், களிம்பு மருந்துகள் எழுதப்பயன்படும் மை, வண்ண ம் தீட்டும் பென்சில்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • பிட்டுமன் அல்லது அஸ்பால்ட் சாலைகள் அமைக்கப்பயன்படுகிறது.

Question 4.
ஆய்வகத்தில் நிலக்கரியைச் சிதைத்து வடித்தலை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல் 5

  • ஒரு சோதனைக் குழாயில் நுண்ணிய தூளாக்கப்பட்ட நிலக்கரி எடுத்துக்கொள்ளப்பட்டு வெப்பப்படுத்தப் படுகிறது.
  • குறிப்பிட்ட வெப்பநிலையில் நிலக்கரி சிதைவுற்று கல்கரி, கரித்தார், அம்மோனியா மற்றும் நிலக்கரி வாயு ஆகியவை உருவாகின்றன.
  • இரண்டாவது சோதனைக்குழாயில் கரித்தார் படிகிறது.
  • கரிவாயு பக்கக்குழாயின் வழியே வெளியேறுகிறது.
  • இவ்வினையில் உருவாகும் அம்மோனியா நீரினால் உறிஞ்சப்பட்டு அம்மோனியம் ஹைட்ராக்சைடு உருவாகிறது.
  • இறுதியாக கருமைநிற படிவமாக கல்கரி சோதனைக் குழாயில் தங்கிவிடுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 5.
பெட்ரோலியம் சுத்திகரித்தலை விளக்குக.
விடை:

  • பெட்ரோலியம் பூமியில் காணப்படும் பல்வேறு திட, திரவ, வாயுநிலைகளில் காணப்படும் ஹைட்ரோ கார்பன்களின் கலவையாகும்.
  • பொதுவாக பெட்ரோலியம் என்பது திரவ நிலையில் காணப்படும் கச்சா எண்ணெயைக்குறிக்கும்.
  • எண்ணெய்க் கிணறுகளிலிருந்து கிடைக்கும் அடர்ந்த கருமை நிற வழுவழுப்பான தூய்மையற்ற பெட்ரோலியமானது நீர், திண்மத் துகள்கள், மீத்தேன், ஈத்தேன் போன்ற வாயுக்கள் ஆகியவற்றை மாசுகளாக கொண்டுள்ளது.
  • பல்வேறு பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு பெட்ரோலியம் அதன் பகுதிப்பொருட்களாக பிரிக்கப்பட வேண்டும்.
  • பயன்மிக்க உப விளைபொருட்களை பெட்ரோலியத்திலிருந்து பிரித்தெடுக்கவும், தேவையற்ற மாசுகளை நீக்கவும் செயல்படுத்தப்படும் முறை சுத்திகரிப்பு எனப்படும்.

நீரைப் பிரித்தெடுத்தல்:
முதல் படியாக கச்சா எண்ணெயில் உள்ள உப்பு நீர் பிரித்தெடுக்கப்படுகிறது.

சல்பர் சேர்மங்களைப் பிரித்தெடுத்தல்:
கச்சா எண்ணெயில் உள்ள தீங்குதரும்சல்பர்சேர்மங்கள் மாசுகளாகவெளியேற்றப்படுகின்றன.

பின்னக் காய்ச்சி வடித்தல்:

  • வெவ்வேறு கொதிநிலைகளை உடைய திரவங்கள் அடங்கிய கலவையை வெப்பப்படுத்தி தனித்தனியாகப் பிரித்து பின்பு குளிர்வித்தல் பின்னக்காய்ச்சி வடித்தல் எனப்படும்.
  • தூய்மையற்ற பெட்ரோலியம் முதலில் 400°C -ல் ஒரு உலையில் வெப்பப்படுத்தப்படுகிறது.
  • கச்சா எண்ணெய் ஆவி உலையின் மேற்பகுதியை வந்தடையும்போது பல்வேறு பகுதிகளாக அவற்றின் கொதிநிலையின் அடிப்படையில் பிரிகின்றன.
  • இப்பகுதி பொருட்கள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 16 நுண்ணியிரிகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 16 நுண்ணியிரிகள்

8th Science Guide நுண்ணியிரிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
நுண்ணுயிரிகள் ……………………….. இல் அளவிடப்படுகின்றன.
அ) செமீ
ஆ) மிமீ
இ) மைக்ரான்
ஈ) மீட்டர்
விடை:
இ) மைக்ரான்

Question 2.
உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ………………….
அ) புரோட்டோசோவா
ஆ) வைரஸ்
இ) பாக்டீரியா
ஈ) பூஞ்சை
விடை:
ஆ) வைரஸ்

Question 3.
……………………. ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.
அ) வைரஸ்
ஆ) ஆல்கா
இ) பூஞ்சை
ஈ) பாக்டீரியா
விடை:
ஈ) பாக்டீரியா

Question 4.
பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ………………………… பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை:
இ) 4

Question 5.
மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி ………………………. என அழைக்கப்படுகிறது
அ) பிளாஸ்மோடியம்
ஆ) இன்ஃபுளூயன்ஸா
இ) விப்ரியோ காலரே
ஈ) ஆப்தோவைரஸ்
விடை:
ஆ) இன்ஃபுளூயன்ஸா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
…………………….. பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது
விடை:
பெனிசிலியம் கிரைசோஜீனம்

Question 2.
………………….. என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்
விடை:
பிரியான்

Question 3.
செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் …………………….. எனப்படுகின்றன.
விடை:
விரியான்

Question 4.
நுண்ணுயிரிகளை ……………………. ன் உதவியுடன் காண முடியும்
விடை:
நுண்ணோக்கியின்

Question 5.
ஒரு முனையில் கசையிழைகளைப் பெற்ற பாக்டீரியாக்கள் …………………….. ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
விடை:
ஒருமுனை ஒற்றைக்கசையிழை

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக.

Question 1.
நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Question 2.
பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் கிருமிகளைப் பரப்புகின்றன.
விடை:
தவறு – பிளாஸ்மோடியத்தை

Question 3.
சின்னம்மை ஒரு தொற்று நோயாகும்
விடை:
சரி

Question 4.
சிட்ரஸ் கேன்கர் பூச்சிகளால் பரவுகிறது
விடை:
தவறு – காற்று, நீர் ஆகியவற்றால்

Question 5.
ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக. தொகுதி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள் 1

V. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தெரிவு செய்யவும்

Question 1.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Question 1.
கூற்று: மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது.
காரணம்: இந்நோய் கொசுவினால் பரவுகிறது
விடை:
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

Question 2.
கூற்று : ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்.
காரணம் : அவை பச்சையத்தைப் பெற்றிருப்பதில்லை.
விடை:
கூற்று, காரணம் – இரண்டும் தவறு

VI. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
விடை:
ரைசோபியம், சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்

Question 2.
வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
விடை:
அசெட்டோபாக்டர் அசிட்டை

Question 3.
ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • பாரமீசியம்
  • யூக்ளினா
  • அமீபா

Question 4.
பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்
விடை:
சர் அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்பவரால் 1926 இல் கண்டறியப்பட்டது.

Question 5.
தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயைத் தடுக்கலாம்?
விடை:
தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, காசநோய்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

VII. சுருக்கமாக விடையளி

Question 1.
வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக.
விடை:
அ) பேசில்லை – கோல்வடிவ பாக்டீரியா எ.டு. பேசில்லஸ்
ஆ) ஸ்பைரில்லா – சுருள்வடிவ பாக்டீரியா
எ.டு. ஹெலிகோ பாக்டர் பைலோரி
இ) காக்கை – கோள அல்லலது பத்து வடிவ பாக்டீரியா
எ.டு. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா
ஈ) விப்ரியோ – கமா வடிவ பாக்டீரியா எ.டு. விப்ரியோ காலரா

Question 2.
எதிர் உயிர்க்கொல்லி என்றால் என்ன?
விடை:
ஆன்டி என்ற வார்த்தை எதிராக என்று பொருள் ஆகும்.

  • எதிர் உயிர்க்கொல்லி பொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன.
  • இது மற்ற உயிரினங்களுக்கு நச்சாக உள்ளது.
    எ.டு. ஸ்ட்ரெப்டோமைசின்

Question 3.
நோய்க்கிருமிகள் என்றால் என்ன?
விடை:

  • சில நுண்ணுயிரிகள் மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
  • அவை நோய்களை உண்டாக்குவதால் நோய்க்கிருமிகள் என்றழைக்கப்படுகின்றன.

Question 4.
நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மனிதரில் எவ்வாறு நுழைகின்றன?
விடை:

  • நோய்க்கிருமிகள் உடலுக்குள் தோல், வாய் அல்லது மூக்கின் வழியாக உள்ளே நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன.
  • வைரஸினால் உண்டாகும் ஃப்ளூ காய்ச்சல் காற்றின் மூலம் பரவுகிறது.
  • நோயாளிகள் தும்மும்போது தெறிக்கும் திவலைகளிலுள்ள வைரஸ்கள் காற்றில் பரவி நலமான ஒருவரின் சுவாசத்தின் போது உள் நுழைகின்றன.

Question 5.
விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை ஏன்?
விடை:

  • நுண்ணுயிரிகள் கழிவுகளை மட்கச் செய்வதால், சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
  • இந்நிகழ்வின் போது நைட்ரேட்டுகள் மற்றும் கனிம ஊட்டப் பொருட்கள் மட்டும் கழிவுகளிலிருந்து வெளியேறி மண்ணை வளமுடையதாக்குகின்றன.
  • இந்த உரம் இயற்கை உரம் என்றழைக்கப்படுகிறது.
  • ரைசோபியம், சயனோ பாக்டீரியா, நாஸ்டாக் நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன.
  • பயிர்களுக்கு தீங்குயிர்களிடமிருந்து பாதுகாப்பதில் நுண்ணுயிரிகள் உதவுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

VIII. விரிவான விடையளி

Question 1.
பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:

  • பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள்
  • இவை வகைப்பாட்டியலில் மொனிரா என்பதன் கீழ் இடம் பெற்றுள்ளது.
  • பாக்டீரியா 1μm – 5μm அளவுடையது
  • அவை காற்று சுவாச பாக்டீரியா, காற்றில்லா சுவாச பாக்டீரியா என இருவகைப்படும்.

செல்லின் அமைப்பு :

  • பாக்டீரியாவின் வெளி அடுக்கு செல் சுவரினால் ஆனது.
  • உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனப்படும்.
  • இதில் உட்கரு சவ்வு காணப்படுவதில்லை.
  • சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏக்கள் பிளாஸ்மிட் என அழைக்கப்படுகின்றன.
  • புரதச் சேர்க்கையானது 70S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது.
  • சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் (மைட்டோ காண்ட்ரியா, கோல்கை உடலம், எண்டோபிளாச வலைப்பின்னல்) காணப்படுவதில்லை.
  • கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள் 2

Question 2.
மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன?
விடை:
நாம் நுண்ணுயிரிகளிலிருந்து எதிர் உயிர்க் கொல்லிகள் மற்றும் தடுப்பூசிகளைப் பெறலாம்

எதிர் உயிர்க் கொல்லிகள்:

  • ஆன்டி என்றவார்த்தை எதிராக என்று பொருள்படும் எதிர் உயிர்க் கொல்லிபொருள்கள் உயிருடன் உள்ள உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன.
  • இது மற்ற உயிரினங்களுக்கு நச்சாக உள்ளது.
  • சர் அலெக்ஸாண்டர் பிளம்மிங் 1928 இல் பென்சிலின் என்ற எதிர் உயிர்க்கொல்லியை பென்சிலியம் கிரைசோ ஜீனம் என்ற பூஞ்சையிலிருந்து உருவாக்கினார்.
  • இது டிப்தீரியா, டெட்டனஸ் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
  • ஸ்ரெப்டோமைசீன், ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்படுகிறது.

தடுப்பூசிகள்:

  • தடுப்பூசிகள் இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிர்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
  • எட்வர்ட் ஜென்னர் முதன் முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினை கண்டறிந்தார்.
  • நோயாளியின் உடலில் இத்தடுப்பூசி செலுத்தப்படும் போது உடலிலிருந்து நோய் எதிர்ப் பொருள்கள் உற்பத்தியாகி நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போரிடுகின்றன.
  • இந்த நோய் எதிர்ப்பொருள்கள் உடலில் தங்கியிருந்து எதிர்காலத்தில் அக்குறிப்பிட்ட நோய்க்கிருமிகளின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.
  • எனவே வாக்சினேஷன் நோய்தடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. எ.கா. தட்டம்மைக்கான MMR, காச நோய்க்கான BCG தடுப்பூசி

Question 3.
நுண்ணுயிரிகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Question 4.
மனிதரில் நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை நாம் எவ்வாறு மேம்படுத்தலாம்?
விடை:

  • காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் உண்ணுவதன் மூலமும்
  • நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் மூலமும்
  • பதப்படுத்தப்பட்ட உணவினை தவிர்த்தல் மூலமும்
  • ஒலிவ எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும்
  • எதிர் உயிர்க் கொல்லிகளை குறைத்துக் கொள்வதன் மூலம் (எதிர் உயிர்க் கொல்லிகள் சிலசமயம் நன்மை தரும் பாக்டீரியாவையும் அழித்துவிடுகிறது)
    நாம் நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

Question 5.
புரோபயாட்டிக் பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • தயிர் மற்றும் பிற நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட பால் பொருள்களில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் உயிருள்ள உணவுப் பொருள்கள் புரோபயாட்டிகள் ஆகும். எ.டு. லாக்டோபேசிலஸ் அசிட்டோபிலஸ்.
  • இந்த பாக்டீரியா குடல் பகுதியிலுள்ள நன்மை செய்யும் பல வகையான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இவை
  • குடல் புற்றுநோய் ஆபத்தினை குறைக்கின்றன.
  • கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைக் குறைக்கின்றன.
  • நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதால் வயிற்றுப்போக்கு நோய்களைத் தடுக்கின்றன.

8th Science Guide நுண்ணியிரிகள் Additional Important Questions and Answers

I. தெரிவு வகை வினாக்கள்

Question 1.
பந்து வடிவ பாக்டீரியா என்பது …………………….
அ) காக்கை
ஆ) பேசில்லை
இ) ஸ்பைரில்லா
ஈ) விப்ரியோ
விடை:
அ) காக்கை

Question 2.
ஒருமுனை கற்றைக் கசையிழைக்கு எடுத்துக்காட்டு …………………………
அ) விப்ரியோ
ஆ) சூடோமோனாஸ்
இ) எ.கோலை
ஈ) கோரினிபாக்டீரியம்
விடை:
ஆ) சூடோமோனாஸ்

Question 3.
ஈஸ்ட் செல்லில் ………………………. மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
அ) துண்டாதல்
ஆ) ஸ்போர்கள்
இ) மொட்டு விடுதல்
ஈ) பால் இனப்பெருக்கம்
விடை:
இ) மொட்டு விடுதல்

Question 4.
பிளாஸ்மோடியம் ………………………… வகை புரோட்டோசோவா ஆகும்.
அ) சிலியேட்டா
ஆ) பிளா ஜெல்லேட்டா
இ) சூடோபோடியா
ஈ) ஸ்போரோ சோவா
விடை:
ஈ) ஸ்போரோ சோவா

Question 5.
………………………… என்பது அமிலத்தை விரும்பும் பாக்டீரியாவாகும்.
அ) லாக்டோபேசில்லஸ் அசிட்டோபிலஸ்
ஆ) சூடோமோனாஸ்
இ) விப்ரியோ காலரா
ஈ) சாந்தோமோனாஸ்
விடை:
அ) லாக்டோபேசில்லஸ் அசிட்டோபிலஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………………………. தடுப்பூசி வாய் மற்றும் கால்க் குளம்பு குணப்படுத்தப்படுகிறது
விடை:
FMD தடுப்பூசி

Question 2.
………………………….. நுண்ணுயிரி ரேபிஸ் பரவ காரணமாகிறது
விடை:
ரேப்டோ விரிடி

Question 3.
குழந்தைப் பருவத்து மலக்சிக்கலைத் குணப்படுத்த பயன்படுவது
விடை:
பைபிடோ பாக்டீரியம் ஃபிரிவே

Question 4.
………………………. எனும் ஈக்கள் கடிப்பதன் மூலம் ஆப்பிரிக்க தூக்கவியாதி உண்டாகிறது.
விடை:
செட்சீ

Question 5.
……………………… நிறமி பழுப்பு நிறத்தைத் தருகிறது
விடை:
பியூகோசாந்தின்

III. சரியா? தவறா?

Question 1.
பாக்டீரியா 1μm – 5μm அளவுடையது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Question 2.
சர்காசம் என்பது செல்லால் ஆன ஆல்கா
விடை:
தவறு –
சர்காசம் என்பது பல செல்களால் ஆன ஆல்கா (அல்லது) கிளாமிடோமோனாஸ்
என்பது ஒரு செல்லால் ஆன ஆல்கா

Question 3.
டிரைக்கோடெர்மா வேர்களுக்குப் பாதுகாப்பளித்து தாவரங்களில் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது
விடை:
சரி

Question 4.
லினென் நூல் இழைகள் தயாரித்தலில் சூடோமோனாஸ் ஏருஜினோசா பயன்படுகிறது.
விடை:
சரி

Question 5.
ஹைபாக்கள் காளான்களின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களைக் கடத்துவதில் உதவுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள் 4

V. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : திரவ உணவுகளைப் பாதுகாக்கும் முறையே பதப்படுத்துதல் ஆகும்.
காரணம் : பாலை 70° செ. வெப்பநிலைக்கு சூடேற்றும் போதும், பின் 10 செ. வெப்ப நிலைக்கு குளிர்விக்கும் போதும் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.
விடை:
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான
விளக்கமாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Question 2.
கூற்று : காளானில் ஹைபாக்கள் சுவர்கள் புரதம் மற்றும் கொழுப்பினால் ஆனது.
காரணம் : மைசீலியம் நூல் போன்ற அமைப்புடைய ஹைபாக்களால் ஆனது.
விடை:
கூற்று தவறு; காரணம் சரி

VI. மிகக் குறுகிய விடையளி

Question 1.
நுண்ணுயிரிகளின் 5 பிரிவுகள் யாவை?
விடை:
வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா, புரோட்டோசோவா

Question 2.
வைரஸின் உயிருள்ள பண்புகள் இரண்டினை எழுதுக.
விடை:

  • வெப்பம், வேதிப்பொருள்கள் மற்றும் கதரியக்கத்திற்கு பதில் வினை புரிகின்றன.
  • எளிதில் மாற்றமடையும் பண்பைப் பெற்றவை.

Question 3.
பாக்டீரியாவை சுவாசத்தின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்துவாய்?
விடை:

  • காற்றுசுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்ஸிஜன் தேவை)
  • காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்ஸிஜன் தேவையில்லை)

Question 4.
ஆல்காக்களில் காணப்படும் நிறமிகளை எழுதுக.
விடை:
சில வகையான ஆல்காக்கள் பிற ஒளிச்சேர்க்கை நிறமிகளான

  1. பியூகோசாந்தின் (பழுப்பு)
  2. சாந்தோஃபில் (மஞ்சள்)
  3. பைகோ எரித்ரின் (சிவப்பு)
  4. பைக்கோசயனின் (நீலம்) ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

Question 5.
நுண்ணுயிரிகளால் தாவரங்களில் உண்டாகும் 2 நோய்களை எழுதுக.
விடை:
சிட்ரஸ் கேன்கர் மற்றும் உருளைக்கிழங்கு பிளைட் நோய்

VII. குறுகிய விடையளி

Question 1.
வைரஸின் உயிரற்ற பண்புகளை எழுதுக.
விடை:

  • இவை தன்னிச்சையான சூழலில் செயலற்ற நிலையில் உள்ளன.
  • படிக வடிவமுடையதாக இருப்பதால் மற்ற உயிரற்ற பொருள்களைப் போல் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும்.
  • செல்சுவர், செல் நுண்ணுறுப்புகள், சைட்டோபிளாசம் போன்றவை இல்லை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Question 2.
பயிர்களுக்கு தீங்குயிரிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதில் நுண்ணுயிரிகள் உதவுகின்றன நியாயப்படுத்துக.
விடை:

  • பேசில்லஸ் துரின்ஞயன்ஸிஸ் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  • டிரைக்கோடெர்மா (பூஞ்சை) வேர்களுக்குப் பாதுகாப்பளித்து நோய்க்கிருமிகளை கட்டுப்படுத்துகிறது.
  • பாக்குலோ வைரஸ்கள் – பூச்சிகள் மற்ற கணுக்காலிகளைத் தாக்குகின்றன.

Question 3.
நொதித்தல் வரையறு.
விடை:
ஸ்டார்ச் மற்றும் சர்க்கரையானது நுண்ணுயிரிகளின் உதவியால் ஆல்கஹாலாக மாற்றமடைவது நொதித்தல் எனப்படும்.

Question 4.
வாய் மற்றும் கால்க்குளம்பு நோயின் அறிகுறிகள் மற்றும் அதை உண்டாக்கும் நுண்ணுயிரியின் பெயரையும் எழுதுக.
விடை:
நோயுண்டாக்கும் நுண்ணுயிரி : ஆப்ரோ வைரஸ்
அறிகுறிகள் : காய்ச்சல், வாய்க் கொப்பளங்கள், எடை இழப்பு, பால் உற்பத்தி குறைதல்

Question 5.
பதப்படுத்துதல் என்றால் என்ன?
விடை:

  • இது திரவ உணவுகளைப் பாதுகாக்கும் முறையாகும்.
  • லூயிஸ் பாஸ்டர் என்பவரால் 1862ல் கண்டறியப்பட்டது.
  • பாலை 70° செ. வெப்பநிலைக்கு சூடேற்றி பின் 10° செ. வெப்ப நிலைக்கு குளிர்விக்கும் போது நுண்ணுயிரிகள் கொல்லப்படுகின்றன.
  • பின் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்டு குளிர்ச்சியான இடங்களில் சேமிக்கப்படுகிறது.

VIII. விரிவான தருக  விடை

Question 1.
ஈஸ்ட் செல்லின் அமைப்பை விவரி
விடை:

  • இவை அனைத்து வகையான சர்க்கரை ஊடகங்களிலும் வளர்கின்றன.
  • இவற்றின் செல்கள் முட்டை வடிவமுடையவை.
  • சைட்டோபிளாசத்தில் துகள்கள், வாக்குவோல்கள், செல் நுண்ணுறுப்புகள், கிளைக்கோஜன், எண்ணெய்த் துளிகள் காணப்படுகின்றன.
  • ஈஸ்ட்டினால் உருவாக்கப்படும் சைமேஸ் எனும் நொதியின் உதவியால் நொதித்தல் நடைபெறுகிறது.
  • இவை காற்றில்லா நிலையில் சுவாசிக்கின்றன.
  • மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள் 5

Question 2.
அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகளின் பயன்பாடு பற்றி எழுது
விடை:
ரொட்டி தயாரிப்பு:

  • ஈஸ்டை மாவில் சேர்க்கும் போது உருவாகும் கார்பன்டை ஆக்ஸைடினல் மாவு பொங்கி, ரொட்டி மற்றும் கேக்குகள் மிருதுத் தன்மையடைகின்றன.
  • புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த குளோரெல்லா மாவுடன சேர்க்கப்படும் போது ரொட்டியின் சத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன.

தயிர் மற்றும் பன்னீர் தயாரிப்பு:

  • லேக்டோபேசிலஸ்பாக்டீரியாவினால் பாலில் உள்ள லாக்டோஸ்லாக்டிக் அமிலமாக மாறுகிறது.
  • இதனால் பால் கெட்டியாகி தயிர் ஆகிறது. தயிரைப் பதப்படுத்தும் போது பன்னீர் கிடைக்கிறது.

மனிதனின் குடலில்:

  • மனிதனின் குடலில் வாழும் லேக்டோபேசிலஸ் அசிட்டோஃபிலஸ் உணவு செரிமானத்தில் உதவுகிறது.
  • மேலும் தீங்கு தரும் நோய்க்கிருமிக்கு எதிராக செயல்படுகிறது.
  • மனிதக் குடலில் உள்ள எ.கோலைவைட்டமின்’K’ மற்றும் ‘B’ கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள்

Question 3.
ஒரு செல் உயிரி அமிபாவின் அமைப்பினை விவரி.
விடை:

  • இவை குளத்து நீரில் காணப்படுகின்றன.
  • ஒழுங்கற்ற வடிவம் உடையது.
  • செல்சவ்வு, சைட்டோபிளாசம் மற்றும் உட்கருவைக் கொண்டுள்ளன.
  • போலிக்கால்கள் மூலம் அமீபா இடம் பெயர்கின்றன.
  • போலிக்கால்கள் செல் சவ்வின் நீட்சியடைந்த பகுதியாகும்.
  • அவை இரையைப் பிடிக்க பயன்படுகிறது.
  • அமீபாவின் உடலானது உணவுத் துகள்களைச் சூழ்ந்து அவற்றை விழுங்குவதன் மூலம் உணவுக்குமிழ் உருவாகிறது.
  • சைட்டோபிளாசத்திலுள்ள சுருங்கும் நுண்குமிழ்கள் கழிவு நீக்கத்திற்கு உதவுகின்றன.
  • இதன் இனப்பெருக்கம் இணைவு மற்றும் ஸ்போர் உருவாதல் முறையில் நடைபெறுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 16 நுண்ணியிரிகள் 6

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 11 காற்று Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 11 காற்று

8th Science Guide காற்று Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?
அ) முழுமையாக எரியும் வாயு
ஆ) பகுதியளவு எரியும் வாயு
இ) எரிதலுக்குத் துணைபுரியாத வாயு
ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
விடை:
ஈ) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 2.
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் ……………………… உள்ளது.
அ) காற்று
ஆ) ஆக்சிஜன்
இ) கார்பன் டைஆக்சைடு
ஈ) நைட்ரஜன்
விடை:
இ) கார்பன் டை ஆக்சைடு

Question 3.
சால்வே முறை ……………….. உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
அ) சுண்ணாம்பு நீர்
ஆ) காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்
இ) வாலை வடி நீர்
ஈ) சோடியம் கார்பனேட்
விடை:
ஈ) சோடியம் கார்பனேட்

Question 4.
கார்பன் டைஆக்சைடு நீருடன் சேர்ந்து ……………………… மாற்றுகிறது.
அ) நீல லிட்மசை சிவப்பாக
ஆ) சிவப்பு லிட்மசை நீலமாக
இ) நீல லிட்மசை மஞ்சளாக
ஈ) லிட்மசுடன் வினைபுரிவதில்லை
விடை:
அ) நீல லிட்மசை சிவப்பாக

Question 5.
அசோட் எனப்படுவது எது?
அ) ஆக்சிஜன்
ஆ) நைட்ரஜன்
இ) சல்பர்
ஈ) கார்பன் டை ஆக்சைடு
விடை :
ஆ) நைட்ரஜன்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………. அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது.
விடை:
ஆக்சிஜன்

Question 2.
நைட்ரஜன் காற்றை விட………………..
விடை:
இலேசானது

Question 3.
………………….. உரமாகப் பயன்படுகிறது.
விடை:
அம்மோனியா

Question 4.
உலர்பனி…………………….. ஆகப் பயன்படுகிறது.
விடை:
குளிரூட்டி

Question 5.
இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு ………………… எனப்படும்.
விடை:
துருப்பிடித்தல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 1

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
ஆக்சிஜனின் இயற்பியல் பண்புகள் சிலவற்றை எழுதுக.
விடை:

  • வளிமண்டலம்
  • நீர்
  • தாவரங்கள் மற்றும் விலங்குகள்
  • சிலிக்கேட்டுகள், கார்பனேட்டுகள் மற்றும் ஆக்சைடுகள் ஆகியவடிவிலுள்ள தாதுக்கள்.

Question 2.
ஆக்சிஜனின் இயற்பண்புகள் யாவை?
விடை:

  1. நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.
  2. வெப்பத்தையும், மின்சாரத்தையும் கடத்தாது.
  3. குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும்.
  4. காற்றை விட கனமானது.
  5. அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் திரவமாகிறது.
  6. எரிதலுக்கு துணைபுரிகிறது.

Question 3.
நைட்ரஜனின் பயன்கள் யாவை?
விடை:

  1.  திரவ நைட்ரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுகிறது.
  2. சில வேதிவினைகள் நிகழத் தேவையான மந்தத் தன்மையை ஏற்படுத்த பயன்படுகிறது.
  3. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க பயன்படுகிறது.
  4. அம்மோனியா, உரங்கள் மற்றும் நைட்ரிக் அமிலம் தயாரிக்க பயன்படுகிறது.
  5. வாகனங்களின் டயர்களில் நிரப்பப் பயன்படுகிறது.
  6. வெப்பநிலைமானிகளிலுள்ள பாதரசம் ஆவியாகாமல் தடுக்க பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நிரப்பப் பயன்படுகிறது.
  7. வெடிபொருள்கள் TNT, நைட்ரோகிளிசரின் மற்றும் துப்பாக்கி வெடிமருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  8. உணவுப்பொருள்களைப் பதப்படுத்துதல், துருப்பிடிக்காத இரும்பு தயாரித்தல், தீ விபத்து சார்ந்த பேராபத்துகளைக் குறைத்தல், வெப்பத்தினால் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் பயன்படுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 4.
அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக.
விடை:
ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற அலோகங்களுடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து, நைட்ரஜன் சேர்மங்களைத் தருகிறது.
Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 2

Question 5.
உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?
விடை:

  • கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், CFC போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அளவு தொடர்ந்து வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து உயர்கிறது.
  • இதனால் புவியின் வாயு மண்டல வெப்பநிலை சராசரியாக உயர்ந்து கொண்டே வருகிறது.
  • இது உலக வெப்பமயமாதல் எனப்படும்.

Question 6.
உலர்பனி என்பது என்ன? அதன் பயன்களை எழுதுக.
விடை:
திட கார்பன் டை ஆக்சைடு உலர் பனிக்கட்டி எனப்படும்.

  • இது குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாக பயன்படுகிறது.
  • மேடை நிகழ்ச்சிகளிலும், சினிமாக் காட்சிகளிலும் வெண்ணிற புகைமூட்டம் போன்ற தோற்றத்தினை உருவாக்க பயன்படுகிறது.

V. விரிவாக விடையளி

Question 1.
தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்சைடு வாயுவைச் செலுத்தும் பொழுது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டைத் தருக.
விடை:

  • சுண்ணாம்பு நீரில் கார்பன் டை ஆக்சைடை செலுத்தும்போது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாகிறது.
  • இதனால் கரைசல் பால் போல் மாறுகிறது.
    Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 3
  • அதிகளவு கார்பன் டை ஆக்சைடை, சுண்ணாம்பு நீரில் செலுத்தும்போது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது.
  • கரையக் கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் Ca(HCO3)2, உருவாவதே இதற்கு காரணம்.

Question 2.
கீழ்க்கண்ட சேர்மங்கள் ஆக்சிஜனுடன் எரியும் போது உருவாகும் பொருட்களை எழுதுக.
அ) கார்பன் ஆ) சல்பர் இ) பாஸ்பரஸ் ஈ) மெக்னீசியம் உ) இரும்பு ஊ) சோடியம்
விடை:
அ) கார்பன் டை ஆக்சைடு (CO2)
ஆ) சல்பர் டை ஆக்சைடு (SO2)
இ) பாஸ்பரஸ் டிரைஆக்சைடு (P2O3) (அல்லது) பாஸ்பரஸ் பென்டாக்சைடு (P2O5)
ஈ) மெக்னீசியம் ஆக்சைடு (MgO)
உ) இரும்பு ஆக்சைடு (Fe3O4)
ஊ) சோடியம் ஆக்சைடு (Na2O)

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 3.
கீழ்க்காண்பவற்றுடன் கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு வினைபுரிகிறது?
அ) பொட்டாசியம் ஆ) சுண்ணாம்பு நீர் இ) சோடியம் ஹைட்ராக்சைடு
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 4

Question 4.
அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?
விடை:
அமில மழையின் விளைவுகள் :

  • மனிதர்களின் கண்களிலும், தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது.
  • விதை முளைத்தலையும், வளர்தலையும் தடை செய்கிறது.
  • மண்ணின் வளத்தை மாற்றுகிறது.
  • தாவரங்களையும் , நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது.
  • கட்டடங்கள் மற்றும் பாலங்களின் அரிப்பிற்கு காரணமாகிறது.

அமில மழையை தடுக்கும் வழிமுறைகள் :

  • பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.
  • அழுத்தப்பட்ட இயற்கை வாயுவைப் பயன்படுத்துதல்.
  • மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல்.
  • தொழிற்சாலைக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல்.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும்பொழுது அவை
வெடிப்பது ஏன்?
விடை:

  • கோடைக்காலங்களில் வெப்பநிலை அதிகம்.
  • அதிக வெப்பநிலையில் சோடாவில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக கரைசலை விட்டு வெளியேறும்.
  • இதனால் மூடியுள்ள சோடா பாட்டிலின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கும்.
  • எனவே கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும் பொழுது அவை வெடிக்கின்றன.

Question 2.
இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்குவது ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது. இதன் காரணம் என்ன?
விடை:

  • இரவுநேரங்களில் மரங்களின் இலைகள் கார்பன்டை ஆக்சைடுவாயுவை வெளியிடுகின்றன.
  • எனவே இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்கும்போது சுவாசிக்க தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம்.
  • இதனால் மூச்சுத்திணறல் போன்ற சுவாச கோளாறுகள் ஏற்படலாம்.

Question 3.
மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது. ஏன்?
விடை:

  • மீனின் வாய் வழியே நீர் நுழைந்து செவுள்கள் வழியாக வெளியேறும் போது, மீனின் செவுள்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.
  • இம்முறையில் மீன்கள் நீரினுள் சுவாசிக்கின்றன.
  • மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன், ஆக்சிஜன் பெறுவது நிறுத்தப்படுகிறது. ஏனெனில் காற்றில் உள்ள ஆக்சிஜனை மீனின் செவுள்களால் பிரிக்க இயலாது.
  • எனவே அவை இறந்து விடுகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 4.
பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக்கின்றனர்?
விடை:

  • பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் விண்வெளியில் காற்று இல்லை.
  • எனவே விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை, ஆக்சிஜன் உருளைகளில் எடுத்துச் செல்கின்றனர்

8th Science Guide அணு அமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
காற்றில் உள்ள ஆக்சிஜனின் சதவீதம் ……………………………..
அ) 78.09%
ஆ) 20.95%
இ) 0.93%
ஈ) 0.04%
விடை :
ஆ) 20.95%

Question 2.
உலர் பனிக்கட்டி என்பது ……………………………..
அ) திட நீர்
ஆ) திட நைட்ரஜன்
இ) திட கார்பன் டை ஆக்சைடு
ஈ) திட அம்மோனியா
விடை:
இ) திட கார்பன் டை ஆக்சைடு

Question 3.
பின்வருவனவற்றுள் பசுமை இல்ல வாயு எது?
அ) CO2
ஆ) N2O
இ) CH4
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 4.
மெக்னீசியம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற உலோகங்கள் ஆக்சிஜனில் எரிந்து தருவது …………………..
அ) அமில ஆக்சைடுகள்
ஆ) கார ஆக்சைடுகள்
இ) நடுநிலை ஆக்சைடுகள்
ஈ) ஈரியல்பு ஆக்சைடுகள்
விடை:
ஆ) கார ஆக்சைடுகள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 5.
துரு என்பது ………………….
அ) CaO
ஆ) Mgo
இ) Fe2O3, xH2O
ஈ) Ag2O
விடை :
இ) Fe2O3, xH2O

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கிரேக்க மொழியில் ஆக்சிஜென்ஸ் என்றால் ……………………………..என்று பொருள்.
விடை:
அமில உருவாக்கி

Question 2.
வளிமண்டலத்திற்கு அதிகப்படியான ஆக்சிஜனை தாவரங்கள் …………….. எனும் நிகழ்வின் போது வெளிவிடுகிறது.
விடை:
ஒளிச்சேர்க்கை

Question 3.
…………………… என்பவரால் முதன்முதலில் காற்றிலிருந்து நைட்ரஜன் பிரித்தெடுக்கப்பட்டது.
விடை:
கார்ல் வில்கம் ஷீலே

Question 4.
காற்றேற்றப்பட்ட குளிர்பானங்கள் அல்லது மென்பானங்கள் தயாரிக்க ……………….. வாயு பயன்படுகிறது.
விடை:
கார்பன் டை
ஆக்சைடு

Question 5.
துருவ பகுதிகளில் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் உருகுவதன் காரணம் ………………..
விடை:
புவி
வெப்பமயமாதல்

III. சரியா? தவறா? தவறெனில் சரியான கூற்றைத் தருக

Question 1.
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்திற்கு அடுத்தபடியாக இந்த அண்டத்தில் பரவலாக மூன்றாவதாகக் காணப்படும் தனிமம் ஆக்சிஜன் ஆகும்.
விடை:
சரி

Question 2.
விண்வெளியில் ஆக்சிஜன், ஓசோன் எனப்படும் மூவணு மூலக்கூறாக உள்ளது.
விடை :
தவறு. வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் ஆக்சிஜன், ஓசோன் எனப்படும் மூவணு மூலக்கூறாக உள்ளது.

Question 3.
ஆக்சிஜன் தானாகவே தீப்பற்றி எரியும் தன்மை உடைய வாயு ஆகும்.
விடை:
தவறு. ஆக்சிஜன் தானாகவே தீப்பற்றி எரியும் தன்மையற்ற வாயு ஆகும்.

Question 4.
சனிக்கோளின் துணைக்கோள்களுள் பெரிய துணைக் கோளான டைட்டனின் வாயு மண்டலத்தில் 98% நைட்ரஜன் உள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 5.
அனைத்துத் தாவரங்களும் வளர்வதற்கு ஆக்சிஜன் தேவை.
விடை:
தவறு. அனைத்துத் தாவரங்களும் வளர்வதற்கு நைட்ரஜன் தேவை.

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 5

V. கூற்று, காரணம்

Question 1.
கூற்று (A) : எரியும் தீக்குச்சி காற்றில் தொடர்ந்து எரிகிறது.
காரணம் (R) : கார்பன் டை ஆக்சைடு எரிதலுக்கு துணை புரியாது.
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யினை விளக்குகிறது
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யினை விளக்கவில்லை
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யினை விளக்கவில்லை
சரியான விளக்கம்: காற்றிலுள்ள ஆக்சிஜன் எரிதலுக்கு துணைபுரியும்.

Question 2.
கூற்று (A) : காற்று மற்றும் ஈரப்பதத்தின் முன்னிலையில் இரும்பில் துருப்பிடித்தல் நடைபெறுகிறது.
காரணம் (R): காற்று மற்றும் ஈரப்பதத்தின் முன்னிலையில் இரும்பு அதனுடைய நீரேறிய ஆக்சைடாக
மாறுகிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யினை விளக்குகிறது
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யினை விளக்கவில்லை
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யினை விளக்குகிறது

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
புவியின் மேற்பரப்பில் ஆக்சிஜன் எவ்வாறு காணப்படுகிறது?
விடை:
சிலிக்கேட்டுகள் மற்றும் உலோக ஆக்சைடுகளாக

Question 2.
துரு என்பதன் வாய்பாடு என்ன?
விடை:
Fe2O3. xH2O

Question 3.
குறைந்த வெப்பநிலையில் பார்ப்பதற்கு நீரைப் போல இருக்கும் வாயு எது?
விடை:
நைட்ரஜன்

Question 4.
ஹேபர் முறையில் தயாரிக்கப்படும் சேர்மம் எது?
விடை:
அம்மோனியா

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 5.
புவி வெப்பமயமாதலுக்கு காரணமான வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
பசுமை இல்ல வாயுக்கள்

VII. குறுகிய விடையளி

Question 1.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
விடை:
தாவரங்கள் குளோரோபில் மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரினை, குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜனாக மாற்றும் நிகழ்வு.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 6

Question 2.
ஆக்சிஜன் வாயு எரியும் தன்மையுடையதா?
விடை:

  • இல்லை, ஆக்சிஜன் எரியும் தன்மையுடைய வாயு அல்ல.
  • ஆக்சிஜன் தானாக எரிவதில்லை .
  • ஆக்சிஜன், பிற பொருள்களின் எரிதலுக்கு துணை புரியும்.

Question 3.
மரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியன எரிப்பொருளாக பயன்படுகின்றன. ஏன்?
விடை:

  • மரம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை ஹைட்ரோ கார்பன்களின் கலவையாகும்.
  • இவை ஆக்சிஜனுடன் எரியும்பொழுது வெப்பம் மற்றும் ஒளி ஆற்றலை உருவாக்குவதால் எரிபொருள்களாக பயன்படுகின்றன.
    ஹைட்ரோகார்பன் +O2 → CO2 + நீராவி + வெப்பஆற்றல் + ஒளி

Question 4.
பசுமை இல்ல விளைவு என்றால் என்ன?
விடை:

  • கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளுரோ கார்பன் (CFC) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் சூரியனிலிருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சி மீண்டும் அவற்றை அனைத்துத் திசைகளிலும் அனுப்புகின்றன.
  • இவ்வாறு இவை பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை தொடர்ந்து ஒரே நிலையில் தக்கவைக்கின்றன.
  • இந்நிகழ்வு பசுமை இல்ல விளைவு எனப்படும்.

Question 5.
அமில மழை என்றால் என்ன?
விடை:

  • தொழிற்சாலைகளில் கழிவு வெளியேற்றம், எரிப்பொருள்களை எரித்தல், எரிமலை வெடிப்பு போன்றவற்றால் காற்றில் கலக்கும் மாசுபடுத்திகளான நைட்ரஜன், சல்பர் ஆக்சைடுகள் போன்றவை மழை நீரில் கரைந்து நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலங்களை உருவாக்குகின்றன.
  • இது மழைநீரை அமிலத்தன்மை உடையதாக்குகின்றது. இதுவே அமில மழை எனப்படும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

VIII. விரிவான விடையளி

Question 1.
உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் ஆக்சிஜன் எவ்வாறு வினைபுரிகிறது?
விடை:
சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு போன்ற உலோகங்களுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து உலோக ஆக்சைடுகளைத் தருகிறது. பொதுவாக இவ்வுலோக ஆக்சைடுகள் காரத் தன்மை உடையவை.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 7

  • ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன், சல்பர், பாஸ்பரஸ் போன்ற அலோகங்களுடன் ஆக்சிஜன்
    வினைபுரிந்து அலோக ஆக்சைடுகளைத் தருகிறது.
  • பொதுவாக அலோக ஆக்சைடுகள் அமிலத் தன்மை உடையவை.
    Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று 8

Question 2.
நைட்ரஜனின் இயற்பியல் பண்புகளை குறிப்பிடுக.
விடை:

  • நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.
  • காற்றை விட லேசானது.
  • நீரில் சிறிதளவே கரையும்.
  • மிகக் குறைந்த வெப்பநிலையில் நைட்ரஜன் திரவமாக மாறுகிறது. இது பார்ப்பதற்கு நீரைப் போல இருக்கும்.
  • உறையும் போது வெண்மையான திண்மமாக மாறுகிறது. >
  • லிட்மஸுடன் நடுநிலைமைத் தன்மையை காட்டுகிறது.

Question 3.
கார்பன் டை ஆக்சைடின் பயன்களை எழுதுக.
விடை:

  • காற்றேற்றப்பட்ட குளிர்பானங்கள் அல்லது மென்பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • தீயணைப்பான்களில் பயன்படுகிறது.
  • சால்வே முறையில் சோடியம் பை கார்பனேட் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • திட கார்பன் டை ஆக்சைடு உலர் பனிக்கட்டி என்ற பெயரில் குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாகப் பயன்படுகிறது.
  • யூரியா போன்ற உரங்கள் தயாரிக்க அம்மோனியாவுடன் சேர்ந்து பயன்படுகிறது.
  • உணவு தானியங்கள், பழங்கள் போன்றவற்றைப் பதப்படுத்த பயன்படுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 11 காற்று

Question 4.
பூமியையும் அதன் மூலங்களையும் பாதுகாக்கும் பொருட்டு நாம் பின்பற்ற வேண்டிய
வழிமுறைகள் யாவை?
விடை:

  • படிம எரிபொருள்களை குறைவாகப் பயன்படுத்துதல்.
  • காடுகள் அழிவதைத் தடுத்தல்.
  • CFC பயன்பாட்டைக் குறைத்தல்.
  • அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுதல்.
  • மூலங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

8th Science Guide நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காகதிம் எரிதல் என்பது ஒரு ………………. மாற்றம்.
அ) இயற்பியல்
ஆ) வேதியியல்
இ) இயற்பியல் மற்றும் வேதியியல்
ஈ) நடுநிலையான
விடை:
ஆ) வேதியியல்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
தீக்குச்சி எரிதல் என்பது ……………… அடிப்படையிலான வேதிவினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
அ) இயல் நிலையில் சேர்தல்
ஆ) மின்சாரம்
இ) வினைவேக மாற்றி
ஈ) ஒளி
விடை:
அ) இயல் நிலையில் சேர்தல்

Question 3.
…………………… உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.
அ) வெள்ளீயம்
ஆ) சோடியம்
இ) காப்பர்
ஈ) இரும்பு
விடை:
ஈ) இரும்பு

Question 4.
வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி ………………….
அ) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு
ஆ) மெலனின்
இ) ஸ்டார்ச்
ஈ) ஓசோன்
விடை:
ஆ) மெலனின்

Question 5.
பிரைன் என்பது …………………….. இன் அடர் கரைசல் ஆகும்.
அ) சோடியம் சல்பேட்
ஆ) சோடியம் குளோரைடு
இ) கால்சியம் குளோரைடு
ஈ) சோடியம் புரோமைடு
விடை :
ஆ) சோடியம் குளோரைடு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 6.
சுண்ணாம்புக்கல் ………………………. ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.
அ) கால்சியம் குளோரைடு
ஆ) கால்சியம் கார்பனேட்
இ) கால்சியம் நைட்ரேட்
ஈ) கால்சியம் சல்பேட்
விடை:
ஆ) கால்சியம் கார்பனேட்

Question 7.
கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலைத் தூண்டுகிறது?
அ) வெப்பம்
ஆ) ஒளி
இ) மின்சாரம்
ஈ) வினைவேக மாற்றி
விடை:
இ) மின்சாரம்

Question 8.
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் …………………. வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
அ) நைட்ரஜன்
ஆ) ஹைட்ரஜன்
இ) இரும்பு
ஈ) நிக்கல்
விடை:
இ) இரும்பு

Question 9.
மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ……………………..ஐ உருவாக்குகின்றன.
அ) அமில மழை
ஆ) கார மழை
இ) அதிக மழை
ஈ) நடுநிலைமழை
விடை:
அ) அமில மழை

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 10.
……………………. புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகின்றன.
அ) கார்பன் டை ஆக்சைடு
ஆ) மீத்தேன்
இ) குளோரோ புளூரோ கார்பன்கள்
ஈ) கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன்கள்
விடை:
ஈ) கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்டன்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளிச்சேர்க்கை என்பது …………………… முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.
விடை:
ஒளி

Question 2.
இரும்பாலான பொருள்கள் …………………. மற்றும் உதவியுடன் துருப்பிடிக்கின்றன.
விடை:
நீர், ஆக்சிஜன்

Question 3.
……………………. தொழிற்சாலையில் யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.
விடை:
அம்மோனியா

Question 4.
பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் ……………………… வாயுக்களைத் தருகிறது.
விடை:
குளோரின், ஹைட்ரஜன்

Question 5.
……………………. என்பது ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் வேதிப்பொருள் எனப்படும்.
விடை:
வினைவேக
மாற்றி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 6.
வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் …………………… என்ற நொதியாகும்.
விடை:
பாலிபீனால்
ஆக்சிடேஸ் (அ)
டைரோசினேஸ்

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

Question 1.
ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.
விடை :
தவறு – ஒரு வேதிவினை என்பது நிரந்தர வினையாகும்

Question 2.
லெட் நைட்ரேட் சிதைவடைதல் ஒளியின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை :
தவறு – லெட் நைட்ரேட் சிதைவடைதல் வெப்பத்தின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.

Question 3.
சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பம் கொள் வினையாகும்.
விடை :
தவறு சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச் சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்ப உமிழ் வினையாகும்

Question 4.
CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.
விடை :
சரி

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 5.
வேதிவினைகள் நிகழும் பொழுது ஒளி ஆற்றல் வெளிப்படலாம்.
விடை :
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 1 Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 2

V. சுருக்கமாக விடையளி

Question 1.
வேதிவினை என்பதை வரையறு.
விடை :
வேதிவினை என்பது நிரந்தரமான, மீளாத்தன்மையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் (வினைபடு பொருள்கள்) வினைக்குட்பட்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை (வினை விளை பொருள்கள்) உருவாக்கக் கூடிய மாற்றமாகும்.

Question 2.
ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.
விடை :
வேதிவினை நிகழத் தேவையான நிபந்தனைகள்:

  • இயல்நிலையில் சேர்தல்
  • கரைசல் நிலையில் உள்ள வினைபடுபொருள்கள்
  • மின்சாரம் – வெப்பம்
  • ஒளி
  • வினைவேக மாற்றி

Question 3.
வினைவேக மாற்றம் என்பதை வரையறு.
விடை :

  • வேதிவினைக்கு உட்படாமல் வினையின் வேகத்தை மாற்ற உதவும் வேதிப்பொருட்கள் வினைவேக மாற்றிகள் எனப்படும்.
  • வினைவேகமாற்றியினால் வினையின் வேகம் மாறுபடுகின்ற வேதிவினைகள் வினைவேக மாற்ற வினைகள் எனப்படும்.

Question 4.
ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் போது என்ன நிகழ்கிறது?
விடை :

  • ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் மெதுவாக பச்சை நிறமாக மாறுகிறது.
  • காரணம், இரும்பு, காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதி வினைக்கு உட்படுகிறது.

Question 5.
மாசுபடுதல் என்றால் என்ன?
விடை :
சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத் தகாத மாற்றங்கள் மாசுபடுதல் எனப்படும்.

Question 6.
மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை :
பளபளப்பான உலோகங்கள் மற்றும் பாத்திரங்களின் மேற்பரப்பு, வேதி வினைகளின் காரணமாக பளபளப்புத் தன்மையை இழப்பது மங்குதல் எனப்படும். (எ.கா.) வெள்ளிப் பொருட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புக்கு வரும்போது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.

Question 7.
பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?
விடை :
பிரைசன் கரைசலை மின்னாற் பகுக்கும் பொழுது குளோரின், ஹைட்ரஜன் வாயுக்கள் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியன உருவாகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 8.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது வெப்ப உமிழ்வினையா அல்லது வெப்பம் கொள்வினையா?
விடை :
கால்சியம் கார்பனேட் Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 8 கால்சியம் ஆக்சைடு + கார்பன் டை ஆக்சைடு மேற்கண்ட வினையில் வெப்பம் செலுத்தப்படுவதால் அது வெப்பம் கொள்வினையாகும்.

Question 9.
ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?
விடை :
பொதுவாக வினைவேக மாற்றி ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும்.

Question 10.
ஒளிச்சேர்க்கை ஏன் ஒரு வேதிவினையாகும்?
விடை :
ஒளிச்சேர்க்கை :

  • கார்பன்டை ஆக்சைடு + நீர் → ஸ்டார்ச் + ஆக்சிஜன்
  • வினைபடுபொருள்கள் = கார்பன் டை ஆக்சைடு, நீர்
  • வினை விளை பொருள்கள் = ஸ்டார்ச், ஆக்சிஜன்
  • வினையூக்கி = சூரிய ஒளி
  • வினைபடுபொருள்கள் ஒளி வினையூக்கி முன்னிலையில் வினைபுரிந்து வினைவிளை பொருள்களைத் தருவதால் ஒளிச்சேர்க்கை ஒரு வேதி வினையாகும்.

VI. விரிவான விடையளி

Question 1.
வேதிவினை மூலம் சுற்று சூழல் மீது ஏற்படும் விளைவுகளை விளக்குக.
விடை :
அ) மாசுபடுதல் :

  • தொழிற்சாலை செயல்முறைகள் மற்றும் பெருகிவரும் வாகனங்களால் சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் மாசுபடுதல் எனப்படும்.
  • இம்மாற்றங்களுக்குக் காரணமான பொருட்கள் மாசுபடுத்தி எனப்படும்.
  • காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுதல் என மூன்று வகைகள் உள்ளன.
  • செயற்கையாக தயாரிக்கப்படும் ஏராளமான வேதிப்பொருள்கள், உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
  • அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 3Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 4

ஆ) துருப்பிடித்தல்:

  • நீர் மற்றும் ஆக்சிஜனுடன் இரும்பு உலோகம் புரியும் வேதிவினை துருப்பிடித்தல் எனப்படும்.
  • துருப்பிடித்தல் இரும்பு பொருட்களை வலு இழக்கச் செய்கிறது.

இ) உலோகப் பொருட்களின் நிறம் மங்குதல் (கறுத்து போதல்):

  • காற்றுடன் புரியும் வேதி வினைகளால் பளபளப்பான உலோக பொருட்களின் நிறம் மங்கி பளபளப்புத் தன்மை குறைகிறது.
  • இதனை கறுத்துப் போதல் என்கிறோம்.
  • (எ.கா) வெள்ளிப் பொருட்கள் காற்றுடன் வினைபுரிந்து கருமை நிறமாக மாறுகிறது.
  • காப்பர் உலோகத்தைக் கொண்ட பித்தளை காற்றில் நீண்ட காலம் வைக்கப்படும் போது காப்பர் கார்பனேட் மற்றும் காப்பர் ஹைட்ராக்சைடின் பச்சை நிற படலத்தை உருவாக்குகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
உணவுப்பொருள்கள் எவ்வாறு வேதிவினைகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குக.
விடை :

  • மனிதன் உண்ணத் தகுதியற்றதாக உணவை மாற்றும் எந்த செயல்முறையும் உணவுக் கெட்டுப் போதல் எனப்படும்.
  • நொதிகள் மூலம் நடைபெறும் வேதி வினைகளால் உணவு தரம் குறைகிறது. அதாவது கெட்ட சுவை, துர்நாற்றம், சத்துப் பொருள்கள் குறைதல் ஆகியன.
  • (எ.கா) ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் அழுகிய முட்டை துர்நாற்றம் வீசுகிறது.
  • காய்கறிகள், பழங்கள் நுண்ணியிரிகளால் கெட்டுப் போதல். மீன் மற்றும் இறைச்சி ஊசிப்போதல்.
  • மீன் மற்றும் இறைச்சியில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு கெட்டுப்போகும் நிகழ்வு ஊசிப்போதல் எனப்படும்.

Question 3.
ஒரு வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 5Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 6

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை
விளக்குக.
விடை :

  • ஈஸ்ட் பெரிய ஸ்டார்ச் மூலக்கூறுகளை, சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
  • கேக் மாவில் உள்ள சர்க்கரையை ஈஸ்ட் நொதிக்க செய்து கார்பன்டைஆக்சைடை வெளியேற்றுகிறது
  • இது மாவினை துளைகளுடன் உப்பி போகும்படி செய்கிறது. > எனவே கேக் மிருதுவாக மாறுகிறது

Question 2.
புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருள்களை எரித்ததே காரணம் என்பதை நியாயப்படுத்துக.
விடை :

  • படிம எரிபொருட்களான கரி, பெட்ரோல், டீசல் அனைத்தும் கார்பன் சேர்மங்களாகும்.
  • படிம எரிபொருட்களை எரிக்கும்போது கார்பன்டை ஆக்சைடு உருவாகின்றது.
  • புவி வெப்பமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணம். –
  • எனவே புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருட்களின் பயன்பாடு காரணமாகின்றது.

Question 3.
கொடுக்கப்பட்டுள்ள அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை வேதிவினை நிகழத் தேவைப்படும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.
அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்
ஆ) வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல்.
இ) கோழி முட்டைகளைச் சமைத்தல்.
ஈ) பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல்
விடை:
அ) வெப்பம்
ஆ) வெப்பம், ஒளி
இ) வெப்பம்
ஈ) மின்சாரம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதைக் குறித்து விவாதிக்க.
விடை :

  • படிம எரிபொருட்களான பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் வாகனங்கள் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்களை வெளிவிடுகின்றன.
  • கரியை எரிக்கும் தொழிற்சாலைகள் கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயுக்களை வெளிவிடுகின்றன.
  • மேலும் தொழிற்சாலைகள் சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளையும் வெளிவிடுகின்றன.
  • இந்த கார்பன், சல்பர், நைட்ரஜனின் ஆக்சைடுகள் அனைத்தும் மழைநீரில் கரைந்து கார்பன், சல்பர், நைட்ரஜனின் ஆக்சி அமிலங்களாக மாறுகின்றன.
  • இந்த அமிலங்கள் மழைநீரில் கரைந்து அமில மழையாக பூமியை அடைகின்றன.
  • அமில மழையால் புவியில் தாவரங்கள், விலங்குகள், கட்டிடங்கள் ஆகியன பாதிப்படைகின்றன.

Question 5.
துருப்பிடித்தல் இரும்புப் பொருட்களுக்கு நல்லதா?
விடை :

  • துருப்பிடித்தல் இரும்புப் பொருட்களுக்கு நல்லது அல்ல.
  • துருப்பிடித்தல் என்பது இரும்பின் ஆக்சிஜனேற்ற வினை ஆகும்.
  • துரு என்பது நீரேறிய இரும்பு ஆக்சைடு.
  • இரும்பு உலோகம் வலிமையானது மற்றும் கடினமானது.
  • ஆனால் துரு என்பது வலிமை குறைந்தது மற்றும் மென்மையானது.
  • எனவே இரும்பு பொருட்கள் துரு பிடிக்கும்போது அதன் வலிமை குறைகிறது மேலும் அது மென்மையாகிறது.
  • எனவே துருப்பிடித்தல் நல்லதல்ல.

Question 6.
அனைத்துப் பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா?
விளக்குக.
விடை :

  • அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாவதில்லை.
  • ஆப்பிள்களும், வேறு சில பழங்களும் பழுப்பாதலுக்கு உள்ளாகின்றன.
  • ஆப்பிள்களும் வேறு சில பழங்களும் நறுக்கி வைத்த பிறகு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதி வினையில் ஈடுபட்டு பழுப்பு நிறத்தை அடைகின்றன. இந்நிகழ்வு பழுப்பாதல் எனப்படும்.
  • இப்பழங்களின் செல்களில் உள்ள பாலிபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைம் ஆக்சிஜனுடன் சேர்ந்து உயிர் வேதிவினைக்கு உட்படுகின்றது
  • இவ்வுயிர் வேதிவினையில் பழங்களில் உள்ள பீனாலிக் சேர்மங்கள், பழுப்பு நிறமிகளான மெலனின் ஆக மாற்றப்படுகின்றன.

VIII. நற்பண்பு அடிப்படை வினாக்கள்:

Question 1.
குமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட்டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக, நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாக இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல சலுகை தருவதாகக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
அ) ரமேஷின் அறிவுரை சரியானதா?
ஆ) ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
விடை :
அ) ரமேஷின் அறிவுரை சரியானது.
ஆ) துருப்பிடித்தல் காரணமாக பழைய இரும்பு கம்பிகள் பழுப்பு நிறமாக உள்ளன.
துருப்பிடித்தல் இரும்பினை மென்மையானதாகவும், வலிமையற்ற தாகவும் செய்கிறது.
எனவே பழைய துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வீடு கட்ட ஏற்றதல்ல.
இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்பு, தனது நண்பர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது
காட்டும் அக்கறை.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
பழனிக்குமார் ஒரு வழக்கறிஞர். அவர் வாடகை அதிகமாக உள்ள ஒரு வீட்டில்
குடியிருக்கிறார். அதிகமான வாடகை தர இயலாமல் அருகில் வேதித் தொழிற்சாலை உள்ள ஒரு இடத்தில் குடியேற விரும்புகிறார். அங்கு வாடகை மிகவும் குறைவு. மேலும் மக்கள் நெருக்கமும் குறைவு, 8-வது படிக்கும் அவரது மகன் ராஜசேகருக்கு அப்பாவின் முடிவு பிடிக்கவில்லை. தொழிற்சாலையில்லாத வேறொரு இடத்திற்குச் செல்லலாம் என்று கூறுகிறான்.
அ) ராஜசேகர் கூற்று சரியானதா?
ஆ) ராஜசேகர் தொழிற்சாலை நிறைந்த பகுதிக்குச் செல்ல மறுத்தது ஏன்?
இ) ராஜசேகர் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
விடை :
அ) ஆம், ராஜசேகர் கூற்று சரியானது.
ஆ) தொழிற்சாலை நிறைந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம்.
அப்பகுதியில் குடியேறுவதால் அநேக உடற்கோளாறுகளும், நோய்களும் ஏற்படலாம்.
இது பற்றி ராஜசேகர் அறிந்துள்ளதால், அப்பகுதியில் குடியேற மறுக்கிறார்.
இ) ராஜசேகர் அவரது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டுள்ளது, அவர் வெளிப்படுத்திய நற்பண்பு.

8th Science Guide நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இரும்பு துருப்பிடித்தல் ஒரு ……………. மாற்றம்.
அ) இயற்பியல்
ஆ) வேதியியல்
இ) இயற்பியல் & வேதியியல்
ஈ) நடுநிலை
விடை:
ஆ) வேதியியல்

Question 2.
சுண்ணாம்புக்கல் சிதைவடையும் வினையின் நிபந்தனை
அ) இயல்நிலையில் கலத்தல்
ஆ) மின்சாரம்
இ) ஒளி
ஈ) வெப்பம்
விடை:
ஈ) வெப்பம்

Question 3.
மின்சாரத்தை செலுத்தி நடைபெறும் வேதிவினை
அ) துருப்பிடித்தல்
ஆ) வெப்பச்சிதைவு வினை
இ) மின்னாற்பகுத்தல் வினை
ஈ) ஒளி வேதி வினை
விடை:
இ) மின்னாற் பகுத்தல் வினை

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள்
அ) வினைவேக மாற்றிகள்
ஆ) உயிரி வினைவேக மாற்றிகள்
இ) வேதி வினைவேக மாற்றிகள்
ஈ) இயற்வினைவேக மாற்றிகள்
விடை:
ஆ) உயிரி வினைவேக மாற்றிகள்

Question 5.
நறுக்கிய ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுதல்
அ) துருப்பிடித்தல்
ஆ) ஊசிப்போதல்
இ) பழுப்பாதல்
ஈ) நொதித்தல்
விடை:
இ) பழுப்பாதல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
சுட்ட சுண்ணாம்பு நீருடன் தொடர்பு கொள்ளும்போது …………………. உருவாகிறது
விடை :
நீற்றுச் சுண்ணாம்பு

Question 2.
தீப்பெட்டியின் பக்கவாட்டில் ……………………… உள்ளது
விடை :
சிவப்பு பாஸ்பரஸ்

Question 3.
மின்னாற் பகுத்தல் என்ற சொல் ……………………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை :
மைக்கேல் பாரடே

Question 4.
வெப்பத்தின் மூலமே நிகழக்கூடிய வினைகள் ……………………….எனப்படும்.
விடை :
வெப்ப வேதி வினைகள் அல்லது வெப்பச் சிதைவு வினைகள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 5.
நறுக்கிய ஆப்பிளில் காணப்படும் பழுப்பு நிறமி ………………….
விடை :
மெலனின்

III. சரியா? தவறா? என எழுதுக.

Question 1.
‘பிரைன்’ கரைசல் ஒளிவேதி வினைக்கு உட்பட்டு ஹைட்ரஜன், குளோரின் வாயுக்கள் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியவற்றை தருகின்றது.
விடை :
தவறு – ‘பிரைன்’ கரைசல் மின்னாற்பகுத்தல் வினைக்கு உட்பட்டு ஹைட்ரஜன், குளோரின் வாயுக்கள் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியவற்றை தருகின்றது

Question 2.
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஸ்ட்ரட்டோஸ்பியர் என்னும் வளிமண்டலத்தின் இரண்டாம் அடுக்கில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து மூலக்கூறு ஆக்சிஜனையும், அணு ஆக்சிஜனையும் தருகிறது.
விடை :
சரி

Question 3.
வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் நன்கு தூளாக்கப்பட்ட பிளாட்டினம் வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
விடை :
தவறு – வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் வினைவேக மாற்றியாக செயல்படுகிறது

Question 4.
முட்டைகள் அழுகும் போது ஹைட்ரஜன் குளோரைடு வரயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.
விடை :
தவறு – முட்டைகள் அழுகும்போது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 5.
வெள்ளிப் பொருட்கள் வளி மண்டலக் காற்றுடன் தொடர்புக்கு வரும் போது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.
விடை :
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 7

V. கூற்று மற்றும் காரணம்

i) A மற்றும் R சரி, R ஆனது A ஐ விளக்குகிறது
ii) A சரி ஆனால் R தவறு
iii) A தவறு ஆனால் R சரி
iv) A மற்றும் R சரி, ஆனால் R ஆனது Aஐ விளக்கவில்லை

Question 1.
கூற்று (A) : லெட்நைட்ரேட் சிதைவடைதல் வினை ஒரு வெப்ப கொள் வினை ஆகும். காரணம் (R) : நைட்ரஜன் டை ஆக்சைடு ஒரு செம்பழுப்பு நிற வாயு.
விடை:
iv) A மற்றும் R சரி, ஆனால் R ஆனது Aஐ விளக்கவில்லை

Question 2.
கூற்று (A) : ஆப்பிள்களும், வேறு சில பழங்களும் நறுக்கியபின் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து பழுப்பு நிறத்தை அடைகின்றன.
காரணம் (R) : இப்பழங்களிலுள்ள பீனாலிக் சேர்மங்கள் பழுப்பு நிற மெலனினாக ஆக்சிஜனேற்றம் அடைகின்றன.
விடை:
i) A மற்றும் சரி, R ஆனது A ஐ விளக்குகிறது

VI. குறுகிய விடையளி

Question 1.
வினைபடு பொருள்கள் கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும் ஒரு வேதி வினை பற்றி எழுதுக.
விடை :

  • சோடியம் குளோரைடு கரைசலுடன், சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது ஒரு வேதி வினை நிகழ்ந்து சில்வர் குளோரைடு வெண்மை நிற வீழ்படிவாகிறது.
  • சோடியம் குளோரைடு + சில்வர் நைட்ரேட்  → சில்வர் குளோரைடு + சோடியம் நைட்ரேட்

Question 2.
வெப்பம் மூலம் நிகழும் ஒரு வேதி வினை பற்றி எழுதுக.
விடை :

  • வெப்பத்தின் மூலமே நிகழக்கூடிய வேதிவினைகள் வெப்ப வேதி வினைகள் அல்லது வெப்பச் சிதைவு வினைகள் எனப்படுகின்றன.
  • லெட்நைட்ரேட் உப்பினை வெப்பப்படுத்தும்போது சிதைவடைந்து செம்பழுப்பு நிற வாயு நைட்ரஜன் டை ஆக்சைடு உருவாகிறது.

Question 3.
ஒளியைக் கொண்டு நிகழும் ஒரு வேதிவினை பற்றி எழுது.
விடை :

  • ஒளியைக் கொண்டு தூண்டப்படும் வேதி வினைகள் ஒளி வேதி வினைகள் எனப்படும்.
  • சூரிய ஒளி முன்னிலையில் தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடு, நீரினை எடுத்துக் கொள்கின்றன.
  • அவை இரண்டும் வேதி வினைக்கு உட்பட்டு ஸ்டார்ச் மற்றும் ஆக்சிஜனை உருவாக்கின்றன.
  • இவ்வினை ஒளிச்சேர்க்கை எனப்படும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
புவி வெப்பமயமாதல் என்றால் என்ன?
விடை :
மனிதனின் நடவடிக்கைகள் காரணமாக புவியின் சராசரி வெப்பநிலை அபாயகரமான அளவை
நோக்கி உயர்வது புவி வெப்பமயமாதல் எனப்படும்

Question 5.
காற்று மாசுபாடுக்குக் காரணமான வேதிப்பொருள்கள் யாவை?\
விடை :
கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள், குளோரோ புளூரோ கார்பன்கள், மீத்தேன் போன்றவை.

VII. விரிவான விடையளி

Question 1.
வேதிவினையின் போது ஏற்படும் பல்வேறு விளைவுகளை விளக்குக.
விடை :
அ) வெப்பம் உருவாதல் :

  • வேதி வினைகள் வெப்ப ஆற்றலை உருவாக்குகின்றன.
  • (எ.கா.) சுட்ட சுண்ணாம்புடன் நீரைச் சேர்க்கும் போது அதிக வெப்பம் வெளிப்பட்டு நீற்றுச் சுண்ணாம்பு உருவாகிறது.

ஆ) ஒளி உருவாதல் :

  • சில வேதி வினைகள் ஒளியை உருவாக்குகின்றன.
  • (எ.கா.) மெக்னீசியம் நாடாவை எரிக்கும் போது கண்ணைக் கூசும் ஒளி உருவாகிறது.
  • மத்தாப்புகள், பட்டாசுகள் பல்வேறு வண்ணங்களில் ஒளியை உமிழ்கின்றன.

இ) ஒலி உருவாதல் :

  • சில வேதி வினைகள் ஒலியை உருவாக்குகின்றன.
  • (எ.கா.) பட்டாசுகள் வெடிக்கும்போது ஒலி உருவாகிறது. ஹைட்ரஜன் வாயு ‘பாப்’ என்ற ஒலியுடன் எரியும் குச்சியை தொடர்ந்து எரியச் செய்கிறது.

ஈ) அழுத்தம் உருவாதல் :

  • சில வேதி வினைகள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
  • சில வேதி வினைகளில் மூடிய கலனில் அதிக அளவு வாயுக்கள் உருவாகி அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அழுத்தம் குறிப்பிட்ட அளவை மிஞ்சும்போது கலன் வெடிக்கிறது.
  • (எ.கா.) வெடிப்பொருள்கள், பட்டாசுகள் பற்ற வைக்கும்போது வேதிவினை நிகழ்ந்து அதிக அளவில் வாயுக்களை உருவாக்குவதால் அழுத்தம் அதிகரித்து வெடிக்கின்றன.

உ) வாயு உருவாதல் :

  • சில வேதி வினைகளில் வாயுக்கள் உருவாகின்றன.
  • (எ.கா.) நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை, சோடியம் கார்பனேட் கரைசலுடன் சேர்க்கும்போது கார்பன் டை ஆக்சைடு வாயு உருவாகிறது.

ஊ) நிறம் மாறுதல் :

  • சில வேதி வினைகளில் நிறமாற்றம் நிகழ்கிறது.
  • (எ.கா.) ஒரு இரும்பு ஆணியை நீல நிற காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்போது, மெதுவாக கரைசலின் நிறம் பச்சையாக மாறுகிறது.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 17 தாவர உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 17 தாவர உலகம்

8th Science Guide தாவர உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் “சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
அ) சிற்றினம்
ஆ) பேரினம்
இ) வகுப்பு
ஈ) துறைகள்
விடை:
ஆ) பேரினம்

Question 2.
புளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக் காணப்படும் பிரிவு.
அ) குளோரோஃபைசி
ஆ) பியோஃபைசி
இ) ரோடோஃபைசி
ஈ) சயனோஃபைசி
விடை:
இ) ரோடோஃபைசி

Question 3.
கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி
அ) ஆசில்லடோரியா
ஆ) நாஸ்டாக்
இ) வால்வாக்ஸ்
ஈ) குளோரல்லா
விடை:
இ) வால்வாக்ஸ்

Question 4.
உண்ணத் தகுந்த காளான்
அ) பாலிபோரஸ்
ஆ) அகாரிகஸ்
இ) பெனிசிலியம்
ஈ)அஸ்பர்ஜில்லஸ்
விடை:
ஆ) அகாரிகஸ்

Question 5.
மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்.
அ) பாசிகள்
ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை:
இ) பிரையோஃபைட்டுகள்

Question 6.
முதலாவது நிலத் தாவரங்கள்.
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை:
ஆ) டெரிடோஃபைட்டுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 7.
நன்கு வளர்ச்சியடைந்தவாஸ்குலார்திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது.
அ) பிரையோஃபைட்டுகள்
ஆ) டெரிடோஃபைட்டுகள்
இ) ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஈ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
விடை:
ஆ) டெரிடோஃபைட்டுகள்

Question 8.
இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1970
ஆ) 1975
இ) 1978
ஈ) 1623
விடை:
ஈ) 1623

Question 9.
பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
அ) பாசிகள்
ஆ) பூஞ்சைகள்
இ) பிரையோஃபைட்டுகள்
ஈ) டெரிடோஃபைட்டுகள்
விடை:
ஆ) பூஞ்சைகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
“வகைப்பாட்டியல்” என்ற சொல் ………………………. மொழியிலிருந்து பெறப்பட்டது.
விடை:
கிரேக்கச்

Question 2.
இரு சொற்பெயரிடு முறை முதன்முதலில் ……………………….. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
காஸ்பர்டு பாகின்

Question 3.
“ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலை வெளியிட்டவர்கள் ………………………….. மற்றும் ……………………..
விடை:
பெந்தம் மற்றும் ஹீக்கர்

Question 4.
ஒரு விதையிலைத் தாவரங்கள் …………………………………… விதையிலையினை மட்டுமே கொண்டுள்ளன.
விடை:
ஒரு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 5.
பழுப்பு பாசி …………………… வகுப்பைச் சார்ந்தது.
விடை:
ஃபேயோபைசியே

Question 6.
அகார் அகார் ………………………… என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
விடை:
ஜெலீடியம்

Question 7.
பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் …………………… மற்றும் ……………………….. ஆகும்.
விடை:
கிளைக்கோஜன் எண்ணெய்

Question 8.
முதலாவது உண்மையான நிலத்தாவரம்.
விடை:
டெரிடோஃபைட்டு

Question 9.
………………………… தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
விடை:
பிரையோஃபைட்டு

Question 10.
…………………………. தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
விடை:
இரு விதையிலைத்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக.

Question 1.
பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.
விடை:
சரி

Question 2.
இரு சொல்பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.
விடை:
தவறு

Question 3.
செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
விடை:
சரி

Question 4.
பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
விடை:
சரி

Question 5.
பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்
விடை:
தவறு

Question 6.
பிரையோஃபைட்டா தாவரங்கள் அனைத்தும் நீர் வாழ்த் தாவரங்களாகும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 7.
இரு விதையிலைத் தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களை விட நன்கு வளர்ச்சியடைந்த பண்புகளை கொண்டுள்ளன.
விடை:
சரி

Question 8.
பிரையோஃபைட்டுகளில் மாஸ்கள் நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களாகும்.
விடை:
சரி

Question 9.
பிரையோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் தாவர நிலை ஓங்கியது.
விடை:
தவறு

Question 10.
டெரிடோஃபைட்டுகளில் ஸ்போரோபைட் நிலை ஓங்கியது.
விடை:
சரி

VI. பொருத்துக

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
தாலஸ் – வரையறு.
விடை:

  • பாசிகளின் தாவர உடலானது தாலஸ் (தாள் போன்றது) என அழைக்கப்படுகிறது.
  • இந்த தாவர உடலை வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
இருசொற் பெயரிடு முறை என்பது என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • ஓர் உயிரினத்தை இரண்டு சொற்களால் பெயரிட்டு அழைப்பது இரு சொல் பெயரிடுதல் எனப்படும்.
  • மாஞ்சிஃபெரா இன்டிகா என்பது மாமரத்தின் தாவரவியல் பெயராகும்.

Question 3.
இரு விதையிலைத் தாவரங்களின் இரு பண்புகளை எழுதுக.
விடை:

  • விதைகள் இரண்டு விதையிலைகளைக் கொண்டிருக்கும்.
  • மலர்கள் 4 அல்லது 5 அங்கங்களைக் கொண்டிருக்கும்.

Question 4.
ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் விதைகள் திறந்தவை ஏன்?
விடை:
ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள், ஏனெனில் அவற்றின் சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை.

Question 5.
பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ போன்ற பூஞ்சைகள் வைட்டமின் B, வை உருவாக்குகின்றன.
  • ஈஸ்ட்டில் உள்ள இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகள் சர்க்கரைக் கழிவிலிருந்து நொதித்தல் மூலம் ஆல்கஹாலை உருவாக்குகிறது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இயற்கை வகைப்பாட்டு முறை பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:

  • பெந்தம் மற்றும் ஹீக்கள் ஆகியோர் இயற்கை வகைப்பாட்டு முறையைத் தங்கள் ஜெனிரா பிளான்டாரம் என்ற 3 தொகுதிகள் கொண்ட புத்தகத்தில் விளக்கியுள்ளனர்.
  • விதைத் தாவரங்கள் 3 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகுப்பு 1: இருவிதையிலைத் தாவரம்:

  • இரண்டு விதையிலைகள் இருக்கும்.
  • இலைகளில் வலைப்பின்னல் நரம்பமைவு உள்ளது.
  • ஆணி வேர் இருக்கும்.

வகுப்பு 2 – ஜிம்னோஸ்பெர்ம்:

  • இதில் கனிகள் உருவாவதில்லை
  • 3 குடும்பங்களை உள்ளடக்கியது
  • சைக்கடேசி
  • கோனிஃபேரே
  • நீட்டேசி

வகுப்பு 3 – ஒரு விதையிலைத் தாவரம்:

  • ஒரு விதையிலையைக் கொண்டுள்ளன.
  • இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு உள்ளன.
  • சல்லி வேர்கள் உள்ளன.
  • மலர்கள் 3 அங்கங்களைக் கொண்டிருக்கும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவங்களை எழுதுக.
விடை:

  • வேளாண்மை: சில நீல பச்சைப்பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. இவை மண்ணின் வளத்தை அதிகரிக்கின்றன. எ.கா. நாஸ்டாக், அன்பீனா.
  • அயோடின் : பழுப்புப் பாசிகளிலிருந்து அயோடின் பெறப்படுகிறது. எ.கா. லேமினேரியா
  • தனிசெல் புரதம்: சில செல் பாசிகள் மற்றும் நீலப்பச்சை பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன. எ.கா. குளோரெல்லா

Question 3.
பாசிகளுக்கும், பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
பாசிகள்
1. பாசிகளில் நிறமிகள் உண்டு.
2. எனவே இவை தற்சார்பு உயிரிகள் எனப்படும்.
3. சேமிப்புப் பொருள் ஸ்டார்ச்
4. இதன் தாவர உடலம் தாலஸ் (தாள் போன்றது) என அழைக்கப்படுகிறது.
5. சில பாசிகள் புரோகேரியாட்டிக் செல் அமைப்பைக் கொண்டுள்ளது. எ.கா. சயனோ பாக்டீரியா

புஞ்சைகள்
– புஞ்சைகளில் நிறமிகள் இல்லை
– இவை பிறச்சார்பு உயிரிகள் எனப்படும்.
– சேமிப்புப் பொருள் கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்
– இதன் தாவர உடலம் பூஞ்சை இழைகளால் (ஹைபா) ஆனது.
– அனைத்தும் யூகேரியாட்டிக் செல் அமைப்பைக்கொண்டுள்ளன. எ.கா. அகாரிகஸ்.

Question 4.
பிரையோஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளன? அவை யாவை?
விடை:
பிரையோஃபைட்டுகளில் மூன்று வகுப்புகள் உள்ளது. அவை

  • ஹிப்பாட்டிக்கே (ரிக்ஸியா)
  • ஆந்தோசெரட்டே (ஆந்தோசெரஸ்)
  • மாசஸ் (பியூனேரியா)

Question 5.
டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.
விடை:

  • இவை முதன் முதலில் தோன்றிய உண்மையான நிலத் தாவரங்கள்.
  • கடத்துத் திசுக்களான சைலம் மற்றும் ஃபுளோயம் உள்ளன. எனவே டெரிடோஃபைட்டுகளை கடத்துத் திசு பூவாத் தாவரம் என அழைக்கிறோம்.
  • தாவர உடலமான ஸ்போரோஃபைட் ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
  • ஸ்போர் முளைத்து புரோதாலஸ் எனப்படும் கேமிட்டோஃபைட் சந்ததியை உருவாக்குகிறது.
    இது தன்னிச்சையாகக் குறுகிய நாள் வாழக் கூடியது.

VII. விரிவாக விடையளி

Question 1.
பெந்தம் ஹீக்கர் வகைப்பாட்டின் சுருக்க அட்டவணையை வரைக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 2

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
இரு விதையிலை மற்றும் ஒரு விதையிலைத் தாவரங்களுக்கு இடையே உள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
விடை:
ஒரு விதையிலைத் தாவரம்
1. விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது.
2 இத்தாவரங்கள் சல்லிவேர்த் தொகுப்புடன் உள்ளன.
3 இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன் காணப்படுகின்றன.
4 மலர்கள் மூன்று அடுக்கு உடையவை
5 மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்றின் மூலம் நடைபெறும். எ.கா. புல்.

இரு விதையிலைத் தாவரம்
– விதை இரண்டு விதையிலைகளைக்கொண்டுள்ளது.
– இவை ஆணி வேர்த் தொகுப்புடன் உள்ளன.
– இலைகள் வலைப்பின்னல் நரம்பமைவுடன் காணப்படுகின்றன.
– மலர்கள் நான்கு அல்லது ஐந்து அங்கங்களைக் கொண்டிருக்கும்.
– மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் பூச்சிகள் மூலம் நடைபெறும். எ.கா. அவரை.

Question 3.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக.
விடை:
ஜிம்னோஸ்பெர்ம்
1. சைலம் டிரக்கீடுகளை மட்டும் கொண்டுள்ளது.
2. துணை செல்கள் புளோடத்தில் கிடையாது. ஆனால். உணவைக் கடத்த சல்லடை செல்கள் பயன்படுகிறது.
3. ஸ்போர்கள் கூம்பு வடிவ விந்தகத்தினுள் உருவாகிறது.
4. இவை திறந்தவிதைத்தாவரங்கள். சூலானது சூற்பையால் சூழப்பட்டிருப்பதில்லை.
5. சூற்பை இல்லாததால் கனிகள் உருவாவதில்லை.

ஆஞ்சியோஸ்பெர்ம்
– சைலமானது சைலக் குழாய்கள் டிரக்கீடு, சைலம் பாரன்கைமா மற்றும் சைலம் நார்கள் என நான்கு வகைச் செல்களைக்கொண்டுள்ளது.
– துணை செல்கள், கல்லடைக் குழாய் புளோயம் பாரன்கைமா, புளோயம் நார்கள் என நான்க வகை செல்கள் புளோயத்தில் உள்ளது.
– ஸ்போர்கள் பூக்களில் இருந்து உருவாகிறது.
– ஆஞ்சியோஸ்பெர்மில் விதைகள் மூடப்பட்டிருக்கும்.
– கருவுறுதலுக்கும் பின் சூற்பை கனியாக மாறும்.

Question 4.
ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • ஊசியிலைத் தாவரங்களின் மரக்கட்டையானது தாள் தொழிற்சாலைகளில் தாள் உற்பத்திக்கும் பயன்படுகிறது. எ.கா. பைனஸ்.
  • ஊசியிலைத் தாவரங்களின் மென்கட்டைகள் கட்டுமானத் தொழிலுக்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப் பலகைத் தயாரிப்பிற்கம் பயன்படுகிறது. எ.கா. செட்ரஸ், அகாதிஸ்.
  • பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்படும் டர்பன்டைன், வண்ணப்பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுகிறது. மேலும் இது மூட்டுவலி மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.
  • பைனஸ் ஜெரார்டியானா என்னும் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படும்.
  • எஃபிடிரின் என்னும் அல்கலாய்டு எஃபிட்ரா எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமாவிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
  • அராவ்கேரியா பிட்வில்லீ என்னும் தாவரம் அழகுத் தாவரமாகப் பயன்படுகிறது

Question 5.
மருத்துவத் தாவரங்களின் பெயர்களை எழுதி அவற்றின் பயன்களை விவரிக்கவும்.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி):
விடை:

  • இலையை அரைத்துப் பெறப்படும் பசை தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றுகிறது.
  • இலைச் சாற்றை எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப்புழுக்கள் அழியும்.

ஏகில் மார்மிலோஸ் (வில்வம்):

  • இதன் காயானது செரிமானத்தைச் சரிசெய்கிறது.
  • இது தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

ஃபில்லாந்தல் அமாரஸ் (கீழாநெல்லி )

  • முழுத் தாவரமும் மஞ்சள் காமாலை நோய்க்க மருந்தாகப் பயன்படுகிறது.
  • இது கல்லீரலுக்கு வலிமையை கொடுத்து கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை):
இதன் இலை, கனி, இருமல், சளி, காசநோய், ஆஸ்துமாவுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

அலோவெரா (சோற்றுக் கற்றாழை):
இதன் இலைகள் மூலநோய் மற்றும் தோலில் தோன்றும் அழற்சியை குணப்படுத்துகிறது. இது வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகவும் பயன்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

8th Science Guide தாவர உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஏறத்தாழ ……………………….. மில்லியன் உயிரினங்கள் இந்த உலகத்தில் உள்ளன.
அ) 10
ஆ) 20
இ) 8.7
ஈ) 5
விடை:
இ) 8.7

Question 2.
மிகவும் பழமையான வகைப்பாட்டுமுறை …………………………
அ) செயற்கை வகைப்பாட்டுமுறை
ஆ) இயற்கை வகைப்பாட்டுமுறை
இ) மரபுவழி வகைப்பாட்டுமுறை
ஈ) நவீன வகைப்பாட்டுமுறை
விடை:
அ) செயற்கை வகைப்பாட்டுமுறை

Question 3.
பெரிய இலைகள் கொண்ட பாசி …………………………
அ) மேக்ரோசிஸ்டிஸ்
ஆ) வால்வாக்ஸ்
இ) ஸ்பைரோகைரா
ஈ) குளோரெல்லா
விடை:
அ) மேக்ரோசிஸ்டிஸ்

Question 4.
………………………. பாசி வீட்டு விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.
அ) ஜெலிடியம்
ஆ) லேமினேரியா
இ) குளோரல்லா
ஈ) ஸ்பைருலினா
விடை:
ஆ) லேமினேரியா

Question 5.
செர்க்கோஸ்போரா பெர்சொனேட்டா ஏற்படுத்துவது
அ) டிக்கா நோய்
ஆ) அழுகல் நோய்
இ) வாடல் நோய்
ஈ) வெண்புள்ளி நோய்
விடை:
அ) டிக்கா நோய்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இளைஞர்களிடத்தில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் பூஞ்சை ………………………
விடை:
கிளாவிசெப்ஸ் பர்பூரியா

Question 2.
பெனிசிலின் …………………. பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
விடை:
பெனிசிலியம் நொட்டேட்டம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 3.
ஸ்பேக்னம் எனும் தாவரத்திலிருந்து கிடைக்கும் நிலக்கரியைப் போன்ற எரிப்பொருள் …………………………….
விடை:
பீட்

Question 4.
வயிற்றுப் புண்ணுக்குரிய மருந்தாகப் பயன்படுவது ……………………….
விடை:
அலோவெரா

Question 5.
சில பூஞ்சைகள் கூட்டுயிரிகளாக உயர் தாவரங்களின் வேர்களுடன் இணைந்து வளர்வது ………………………
விடை:
வேர்ப் பூஞ்சைகள்

III. சரியா? தவறா?

Question 1.
ஜிம்னோஸ்பெர்ம் திறந்த விதைத் தாவரங்கள்
விடை:
சரி

Question 2.
அலோவெரா, சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
விடை:
தவறு
சரியான விடை:
லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

Question 3.
கோனிஃபெரேல்ஸ்க்கு எடுத்துக்காட்டு பைனஸ்
விடை:
சரி

Question 4.
லைக்கோபோடியம் குதிரைவால் என அழைக்கப்படுகிறது.
விடை:
தவறு
சரியான விடை: லைக்கோபோடியம் கிளப் பாசி எனப்படும் அல்லது ஈக்விசிட்டம் குதிரைவால் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 5.
ஸ்பேக்னம் நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 3

V. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று (A) : சில பாசிகள் குழுவாகச் சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை.
காரணம் (R) : பாசிகள் உடலமானது ஒரு செல் அல்லது பல செல்களால் ஆனது
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி. காரணம் தவறு
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Question 2.
கூற்று (A) : ஜிம்னோஸ்பெர்மில் நன்கு வளர்ச்சி அடைந்த கடத்தும் திசுக்கள் உள்ளன.
காரணம் (R) : நீரைக் கடத்தக்கூடிய திசு ட்ராக்கீடுகளாகும். உணவைக் கடத்தக் கூடியது சல்லடை செல்லாகும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

VI. ஓரிரு வரிகளில் விடையளி

Question 1.
தாவரங்களின் 4 வகையான வகைப்பாட்டு முறைகளை எழுதுக.
விடை:

  • செயற்கை வகைப்பாட்டுமுறை
  • இயற்கை வகைப்பாட்டுமுறை
  • மரபு வழி வகைப்பாட்டுமுறை
  • நவீன வகைப்பாட்டுமுறை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
தனிசெல் புரதம் (SCP) என்றால் என்ன?
விடை:

  • சில ஒரு செல் பாசிகள் மற்றும் நீலப் பச்சைப் பாசிகள் புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
  • எ.கா. குளோரெல்லா

Question 3.
ஸீனோசைட்டிக் மைசீலியம் என்றால் என்ன?
விடை:
குறுக்குச் சுவரற்ற பூஞ்சை இழைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை ஸீனோசைட்டிக் மைசீலியம் எனப்படும்.

Question 4.
தாவர உலகத்தின் இருவாழ்விகள் என்பது எது?
விடை:
பிரையோஃபைட்டுகளின் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்வதற்கு நீர் மிக முக்கியம், எனவே இவை தாவர உலகின் இருவாழ்விகள் எனப்படும்.

Question 5.
பூஞ்சையால் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் யாவை?
விடை:
படர் தாமரை, பொடுகு, சேற்றுப்புண்

VII. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒட்டுண்ணிகள் என்றால் என்ன?
விடை:

  • ஒட்டுண்ணிகள் உறிஞ்சி உறுப்புகள் மூலம் உயிருள்ள பொருள்களிலிருந்து உணவைப் பெறுகின்றன.
  • எ.கா. செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா. இது வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை உருவாக்குகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

Question 2.
கிளாவிசெப்ஸ் பர்பூரியா என்பது என்ன?
விடை:

  • இரு ஒரு பூஞ்சை. இந்த பூஞ்சை இளந்தலைமுறையினரை அதிக அளவு பாதிப்படைய செய்கிறது.
  • ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Question 3.
பிரையோஃபைட்டின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • இவை மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
  • ஸ்பேக்னம் எனும் பூஞ்சை நீரை உறிஞ்சுவதால் இது நாற்றங்கால்களில் பயன்படுகிறது.
  • பீட் எனும் நிலக்கரியைப் போல் விலைமதிப்புள்ள எரிபொருள் ஸ்பேக்னம் எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.

Question 4.
ஒரு விதையிலைத் தாவரங்களின் பொதுப் பண்புகளை எழுதுக.
விடை:

  • விதை, ஒரு விதையிலையைக் கொண்டுள்ளது.
  • சல்லிவேர்த் தொகுப்பும், இலைகள் இணைப்போக்கு நரம்பமைவுடன் உள்ளன.
  • மலர்கள் மூன்று அடுக்கு உடையவை.
  • சல்லி மற்றும் புல்லி இதழ்கள் பிரியாமல் ஒரே வட்டத்தில் இருக்கும்.
  • மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் காற்று மூலம் நடைபெறும்.

Question 5.
வகைப்பாட்டியல் – வரையறு.
விடை:
உயிரினங்களை அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், அவற்றைப் பற்றி விளக்குதல், பெயரிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது வகைப்பாட்டியல் ஆகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 தாவர உலகம்

VIII. விரிவாக விடையளி

Question 1.
பூஞ்சைகளின் உடல் அமைப்பை விவரி.
விடை:

  • பூஞ்சைகளின் தாவர உடலம் வேர், தண்டு, இலை என பிரிக்கப்பட்டிருப்பதில்லை.
  • இதன் உடலம் பூஞ்சை இழைகளால் ஆனது.
  • ஒன்றிக்கும் மேற்பட்ட பூஞ்சை இழைப் பின்னைல (மைசீலியம்) உருவாக்குகிறது
  • செல்களுக்கு இடையே குறுக்குச்சுவர் இருந்தால் குறுக்குச்சுவர் பூஞ்சை எனவும், குறுக்குச்சுவர் இல்லையெனில் குறுக்குச்சுவரற்ற பூஞ்சை எனவும் அழைக்கப்படும்.
  • குறுக்குச் சுவரற்ற பூஞ்சைகளில் உட்கருக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதை ஸினோசைட்டிக் மைசீலியம் என்கிறோம்.
  • சில பூஞ்சைகள் ஒரு செல்லால் ஆனதும் வேறு சில பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியாட் செல் அமைப்பைக் கொண்டவை.
  • செல் சுவர் கைட்டின் எனும் வேதிப் பொருளால் ஆனது.
  • பூஞ்சையின் உணவுப் பொருள் கிளைக்கோஜன் மற்றும் எண்ணெயாக சேமிக்கப்படுகிறது.
  • பூஞ்சைகளில் பச்சையம் கிடையாது.

Question 2.
பிரையோஃபைட்டோ மற்றும் டெரிடோஃபைட்டா வேறுபடுத்துக.
விடை:
பிரையோஃபைட்டா
– தாவர உடலமானது வேர், தண்டு, இலை எனப் பிரிக்க இயலாது.
– இவை இருவாழ்விகள்.
– கடத்தும் திசுக்கள் காணப்படாது.
– தாவர உடலின் ஓங்கு நிலையானது கேமீட்டோஃபைட்.
– ஸ்போரோஃபைட் தலைமுறை யானது கேமீட்டோஃபைட் தலைமுறையைச்சார்ந்துள்ளது. எ.கா. ரிக்சியா.

டெரிடோஃபைட்டா
– தாவர உடலானது வேர், தண்டு, இலை எனப்பிரிக்கப்படும்
– இவை நிலத் தாவரங்கள்.
– கடத்தும் திசுக்கள் காணப்படும்.
– தாவர உடலின் ஓங்கு நிலையானது ஸ்போரோபைட்
– கேமீட்டோஃபைட் தலைமுறை ஸ்போரோஃபைட் தலைமுறையை சார்ந்திருப்பதில்லை. எ.கா. செலாஜினெல்லா.

Question 3.
நிறமிகளின் அடிப்படையில் பாசிகளை எவ்வாறு வகைப்படுத்துவாய்?
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 4
Samacheer Kalvi 8th Science Guide Chapter 17 தாவர உலகம் 5

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

8th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்
அ) தாமிரம்
ஆ) பாதரசம்
இ) வெள்ளி
ஈ) தங்கம்
விடை :
ஆ) பாரதரசம்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 2.
இரசவாதிகள் நீரைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய படக்குறியீடு
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 1
விடை :
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 2

Question 3.
எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை ?
அ) புளூட்டோனியம்
ஆ) நெப்டியூனியம்
இ) யுரேனியம்
ஈ) பாதரசம்
விடை:
ஈ) பாதரசம்

Question 4.
பாதரசத்தின் குறியீடு
அ) Ag
ஆ) Hg
இ) Au
ஈ) Pb
விடை :
ஆ) Hg

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 5.
கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
அ) நைட்ரஜன்
ஆ) ஆக்ஸிஜன்
இ) குளோரின்
ஈ) கார்பன்
விடை:
ஈ) கார்பன்

Question 6.
உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?
அ) கம்பியாக நீளும் பண்பு
ஆ) தகடாக விரியும் பண்பு
இ) தகடாக விரியும் பண்பு
ஈ) பளபளப்புத் தன்மை
விடை:
ஆ) தகடாக விரியும் பண்பு

Question 7.
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
அ) கார்பன்
ஆ) ஆக்ஸிஜன்
இ) அலுமினியம் ஈ) சல்ஃபர்
விடை:
அ) கார்பன்

Question 8.
கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
அ) கிராஃபைட்
ஆ) வைரம்
இ) அலுமினியம்
ஈ) கந்தகம்
விடை:
அ) கிராஃபைட்

Question 9.
மூலக்கூறுகளின் அமைப்பைக் கொண்டு பின்வரும் பொருள்களின் இயற்பியல் நிலைகளைக் அடையாளம் காண்க.
அ) A – வாயு, B – திண்ம ம், C – திரவம்
ஆ) A – திரவம், B -திண்ம ம், C- வாயு
இ) A – வாயு, B – திண்ம ம், C – திரவம் A
ஈ) A – திரவம், B – வாயு, C – திண்ம ம்
விடை:
அ) A – வாயு, B – திண்மம், C – திரவம்
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 3

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் – என அழைக்கப்படுகின்றன.
விடை:
உலோகப்போலிகள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 2.
டங்ஸ்ட னின் குறியீடு
விடை:
W

Question 3.
பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு நிலையைவிட
விடை:
அதிகம்

Question 4.
நீரில் உள்ள தனிமங்கள் ……………… மற்றும் ………………….
விடை:
ஹைட்ரஜன், ஆக்சிஜன்

Question 5.
……………….. குறை கடத்தியாகப் பயன்படுகிறது.
விடை:
சிலிக்கன் அல்லது ஜெர்மானியம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 4

IV. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?
விடை:
உலோகங்களை இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றும் பண்பிற்கு கம்பியாக நீளும் தன்மை என்று பெயர்.

Question 2.
பின்வரும் சேர்மங்களில் உள்ள தனிமங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
அ) கார்பன் மோனாக்சைடு
ஆ) சலவை சோடா
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 5

Question 3.
பின்வரும் தனிமங்களின் குறியீடுகளை எழுதுக.
அ) ஆக்ஸிஜன்
ஆ) தங்கம்
இ) கால்சியம்
ஈ) காட்மியம்
உ) இரும்பு
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 6

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 4.
நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் போது உள்ளிழுத்துக் கொள்வதுமான அலோகம் எது?
விடை:
நாம் உயிர்வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் போது உள்ளிழுத்துக்கொள்வதுமான அலோகம் ஆக்சிஜன் ஆகும்.

Question 5.
ஏன் ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?
விடை:
உலோகங்கள் தட்டப்படும்போது தனித்துவமான ஒலி எழுப்பும் பண்பைப் பெற்றுள்ளதால், ஆலய மணிகள் செய்ய பயன்படுகின்றன.

Question 6.
வேதிக்குறியீடுகள் தரும் தகவல்கள் யாவை?
விடை:
வேதிக்குறியிடுகள் தனிமங்களின் பெயர்களை சுருக்க வடிவில் குறிக்கின்றன.

Question 7.
உலோகப் போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
உலோகப் போலிகள் : > சிலிக்கன் – போரான்

Question 8.
திரவ நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பிடுக.
விடை:
திரவ நிலையில் உள்ள மூன்று சேர்மங்கள்

  • நீர்
  • கந்தக அமிலம்
  • அசிட்டிக் அமிலம் (வினிகர்)

Question 9.
உலோகப் போலிகளின் ஏதேனும் மூன்றைக் குறிப்பிடுக.
விடை:
உலோகப் போலிகளின் பண்புகள்:

  • அறை வெப்பநிலையில் உலோகப் போலிகள் அனைத்தும் திண்மங்கள்.
  • உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள் உலோகங்களை ஒத்திருக்கின்றன.
  • உலோகப்போலிகளின் வேதியியல் பண்புகள் அலோகங்களை ஒத்திருக்கின்றன.
  • உலோகப்போலிகள், உலோகங்களுடன் சேர்ந்து உலோகக் கலவைகளை ஏற்படுத்துகின்றன.

V. சுருக்கமாக விடையளி

Question 1.
ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கலாமா? காரணம் கூறுக.
விடை:

  • ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கக்கூடாது.
  • ஏனெனில் ஊறுகாயில் உள்ள அமிலங்கள், உலோக அலுமினியத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளிப்படுத்தும்.
  • இதனால் ஊறுகாய் கெட்டுப் போய்விடும்.

Question 2.
உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் ஏதேனும்
நான்கினை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 7

Question 3.
சமையல் பாத்திரங்கள் ஏன் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன?
விடை:

  • அலுமினியம் மற்றும் பித்தளை சிறந்த வெப்பக் கடத்திகள்.
  • அலுமினியம் மற்றும் பித்தளை பாத்திரங்களின் உட்பகுதியில் வெள்ளீயம் பூசப்படுவதால், உணவுப் பொருட்களுடன் அவ் உலோகங்கள் வினைபுரிவது தடுக்கப்படுகிறது.
  • எனவே சமையல் பாத்திரங்கள் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 4.
இரசவாதம் வரையறு.
விடை:
குறைந்த மதிப்புடைய உலோகங்களை தங்கமாக மாற்றும் செயலுக்கு இரசவாதம் என்று பெயர்.

Question 5.
பின்வரும் குறியீடுகளால் குறிக்கப் பெறும் தனிமங்களின் பெயர்களை எழுதுக.
அ) Na
ஆ) Ba
இ) W
ஈ) Al
உ) U
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 8

Question 6.
ஏதேனும் ஆறு அலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 9

Question 7.
ஏதேனும் நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 10

Question 8.
அலங்கார நகை தயாரிப்பில் பயன்படும் உலோகங்களைக் குறிப்பிடுக.
விடை:
அலங்கார நகைத் தயாரிப்பில் பயன்படும் உலோகங்கள்

  • தங்கம்
  • வெள்ளி
  • பிளாட்டினம்
  • தாமிரம்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 9.
பின்வரும் சேர்மங்களின் பயன்களைக் குறிப்பிடுக.
அ. ரொட்டிசோடா
ஆ. சலவைத்தூள்
இ. சுட்ட சுண்ணாம்பு
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 11

VI. காரணம் கூறுக

Question 1.
பின்வருவனவற்றிற்கான காரணங்களை எழுதுக.
அ) உணவுப் பொருள்களை உறையீடு செய்வதற்கு அலுமினியத் தகடுகள் பயன்படுகின்றன.

  • அலுமினியம் உலோகமாதலால் மெல்லிய தகடாக அடித்து உணவுப் பொருள்களை கட்ட உதவும் உறைகள் செய்யப் பயன்படுகின்றன.
  • மேலும் அலுமினியம் பொதுவாக உணவுப்பொருள்களுடன் வினை புரியாது.

ஆ) திரவங்களை சூடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன.

  • உலோகங்கள் சிறந்த வெப்பக் கடத்திகள், எனவே திரவங்களை சூடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் செய்யப் பயன்படுகின்றன.

இ) சோடியம், பொட்டாசியம் ஆகிய இரண்டும் மண்ணெண்ணெயின் உள்ளே வைக்கப்படுகின்றன.

சோடியம் மற்றும் பொட்டாசியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு மற்றும் கார்பனேட் படலங்களை உருவாக்குவதால் அவற்றின் நிறம் மங்குகிறது. எனவே காற்றுடன் வினைபுரிவதை தடுக்க சோடியமும், பொட்டாசியமும் மண்ணெண்ணெயினுள் வைக்கப்படுகிறது. நீருடன் இவை வினைபுரிவதால் நீரினுள் வைக்க இயலாது.

ஈ) வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்த காரணம்

  • அதன் அதிக அடர்த்தி
  • வெப்பத்தினால் சீராக விரிவடையும் அதன் தன்மை

Question 2.
கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளைத் தயாரிக்க முடியவில்லை , ஏன்?
Answer:
கல் அல்லது மரம் போன்ற பொருள்கள் இழுக்கப்படும் போது மெல்லிய கம்பியாக நீளும் பண்பினை பெறவில்லை. எனவே கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளை தயாரிக்க முடியவில்லை.

8th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு தனிமத்தில் உள்ள மிகச் சிறிய துகள்
அ) அணு
ஆ) மூலக்கூறு
இ) சேர்மம்
ஈ) கலவை
விடை:
அ) அணு

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 2.
பின்வரும் எத்தனிமத்தின் பெயர் அறிவியல் அறிஞரின் பெயரிலிருந்து பெறப்பட்டது?
அ) அமெர்சியம்
ஆ) மெர்க்குரி
இ) நொபிலியம்
ஈ) நெப்டியூனியம்
விடை:
இ) நொபிலியம்

Question 3.
பின்வருவனவற்றுள் எது உலோக பளபளப்பு அற்றது?
அ) தாமிரம்
ஆ) கால்சியம்
இ) அலுமினியம்
ஈ) தங்கம
விடை:
ஆ) கால்சியம்

Question 4.
தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்
அ) கனிமச் சேர்மங்கள்
ஆ) கரிமச் சேர்மங்கள்
இ) தொகுப்பு சேர்மங்கள்
ஈ) செயற்கை சேர்மங்கள்
விடை:
ஆ) கரிமச் சேர்மங்கள்

Question 5.
குடிநீர் சுத்திகரிப்பில் பயன்படும் சேர்மம்
அ) ரொட்டிச் சோடா
ஆ) சலவைச் சோடா
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) சலவைத் தூள்
விடை:
ஈ) சலவைத் தூள்

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு குறிப்பிட்ட கன அளவு கொண்டு, ஒரு குறிப்பிட்ட வடிவமற்ற பொருள் …………… என அழைக்கப்படுகிறது
விடை:
திரவம்

Question 2.
சர்க்கரையின் வேதிப் பெயர் ………………
விடை:
சுக்ரோஸ்

Question 3.
துப்பாக்கித் தூள் தயாரிக்க மற்றும் ரப்பரை கெட்டிப்படுத்த (வல்கனைஸ் செய்ய) பயன்படும் அலோகம்
விடை:
கந்தகம்

Question 4.
………………………… கண்ணாடியில் சிராய்ப்பு ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் கடினமாகது.
விடை:
ஆஸ்மியம்

Question 5.
இயற்கையில் கிடைக்கும் பொருள்களில் மிகவும் கடினமானது.
விடை:
வைரம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 12

IV. காரணம் மற்றும் கூற்று

அ) A மற்றும் R சரி, R ஆனால் A ஐ விளக்குகிறது.
ஆ) A சரி ஆனால் R தவறு ]
இ) A தவறு ஆனால் R சரி
ஈ) A மற்றும் R சரி, R ஆனது A ஐ விளக்கவில்லை

Question 1.
கூற்று A : சிலிக்கான், ஜெர்மானியம் ஆகியன குறைகடத்திகள் என அழைக்கப்படுகின்றன்.
காரணம் R : சிலிக்கான், ஜெர்மானியம் ஆகியன குறிப்பிட்ட சூழ்நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன.
விடை:
அ) Aமற்றும் R சரி, R ஆனால் A ஐ விளக்குகிறது..

Question 2.
கூற்று A : கார்போஹைட்ரேட்கள் கனிமச் சேர்மங்களாகும்.
காரணம் R : தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கார்போஹைட்ரேட்களை தயாரிக்கின்றன.
விடை:
இ) A தவறு ஆனால் R சரி
சரியான கூற்று : கார்போஹைட்ரேட்கள் கரிமச் சேர்மங்களாகும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

V. மிகக் குறுகிய விடைத் தருக.

Question 1.
பருப் பொருள் என்றால் என்ன?
விடை:
இடத்தை அடைத்துக் கொள்ளும் பண்பும், நிறையையும் கொண்ட எந்த ஒன்றும் பருப்பொருள்
எனப்படும்.

Question 2.
ஒரு தனிமத்தின் குறியீடு என்றால் என்ன?
விடை:
ஒரு தனிமத்தின் பெயரை குறிப்பிடும் சுருக்க வடிவமே அதன் குறியீடு எனப்படும்.

Question 3.
உலோகங்கள் என்றால் என்ன?
விடை:
பளபளப்புத் தன்மை, கடினத் தன்மை, வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்கு கடத்தும் தன்மை கொண்ட தனிமங்கள் உலோகங்கள் எனப்படும்.

Question 4.
அலோகங்கள் என்றால் என்ன?
விடை:
பளபளபற்ற, அதிக கடின தன்மையோ, அதிக மென்மைத் தன்மையோ அற்ற, அரிதிற்கடத்தும் தன்மையுடைய தனிமங்கள் அலோகங்கள் எனப்படும்.

Question 5.
உலோகப் போலிகள் என்றால் என்ன?
விடை:
உலோகப் பண்புகளையும், அலோகப் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் உலோகப் போலிகள் எனப்படும்.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

VI. குறுகிய விடைத் தருக.

Question 1.
சேர்மம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதிச் சேர்க்கையின் மூ லம் இணைந்து உருவாகும் தூய பொருள் சேர்மம் எனப்படும்.
  • எ.கா CO2, H2O

Question 2.
குறை கடத்திகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • குறிப்பிட்ட சூழ்நிலையில் மின்சாரத்தைக் கடத்தும் உலோகப் போலிகள் குறை கடத்திகள் – எனப்படும்.
  • எ.கா சிலிக்கான், ஜெர்மானியம்.

Question 3.
கனிமச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • பாறைகள், தாதுக்கள் போன்ற உயிரற்ற பொருள்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் எனப்படும்.
  • (எ.கா) சுண்ணக் கட்டி, ரொட்டி சோடா.

Question 4.
உலோக பளபளப்பு என்றால் என்ன?
விடை:
கால்சியம் நீங்கலாக அனைத்து உலோகங்களும் ஒளியை எதிரொளிக்கும் பளபளப்பு தன்மை கொண்டவை. இப்பளபளப்பு உலோக பளபளப்பு எனப்படும்.

Question 5.
தகடாக விரியும் பண்பு என்றால் என்ன?
விடை:
உலோகங்களை சுத்தியால் அடித்து மிகவும் மெலிதான தகடாக மாற்றும் தன்மை தகடாக விரியும் பண்பு எனப்படுகிறது.

Question 6.
உலோகப் போலிகளின் பயன்கள் யாது?
விடை:

  • சிலிக்கான் மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறது.
  • போரான் பட்டாசுத் தொழிற்சாலையில் பயன்படுகிறது.
  • போரான் ராக்கெட் எரிபொருளை பற்றவைக்கும் பொருளாக பயன்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
உலோகங்களின் இயற்பியல் பண்புகளை விவரி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 13
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 14

Question 2.
சில அலோகங்களின் பயன்களைத் தருக.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 15

Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Question 3.
சில சேர்மங்களின் வேதிப்பெயர், பகுதிப்பொருள்கள் பயன்களை கூறு.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 16 Samacheer Kalvi 8th Science Guide Chapter 9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் 17

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Science Solutions Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

8th Science Guide உயிரினங்களின் ஒருங்கமைவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
…………………… என்பது உறுதியான தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.
அ) ஸ்கிளிரா
ஆ) கண்ஜங்டிவா
இ) கார்னியா
ஈ) ஐரிஸ்
விடை:
அ) ஸ்கிளிரா

Question 2.
……………………. செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். இவை உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற இயலும்.
அ) நரம்பு
ஆ) மூல
இ) இதய
ஈ) எலும்பு
விடை:
ஆ) மூல

Question 3.
உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் ………………………….. எனப்படும்.
அ) தன்னிலை காத்தல்
ஆ) ஹோமியோபைட்ஸ்
இ) ஹோமியோஹைனசிஸ்
ஈ) ஹோமியோவிலிக்ஸ்
விடை:
அ) ஹோமியோஸ்டாசிஸ்

Question 4.
காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ……………………….. க்கொடுக்கும்.
அ) லாக்டிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) அசிட்டிக் அமிலம்
ஈ) நைட்ரிக் அமிலம்
விடை:
அ) லாக்டிக் அமிலம்

Question 5.
நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு ……………………….. என்று பெயர்.
அ) உட்சுவாசம்
ஆ) வெளிச்சுவாசம்
இ) சுவாசம்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) சுவாசம்

Question 6.
சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி ………………………….
அ) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்.
ஆ) செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.
இ) இரு நிகழ்வும் நடைபெறும்.
ஈ) இவற்றில் ஏதுமில்லை .
விடை:
அ) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 7.
சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள …………………………… கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
அ) குறை செறிவு கரைசல்
ஆ) மிகை செறிவு கரைசல்
இ) நடுநிலைக்கரைசல்
ஈ) அமிலக் கரைசல்
விடை:
அ) குறை செறிவு கரைசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………………………… என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
விடை:
செல்

Question 2.
மிகப்பெரிய செல் ………………………… இன் முட்டை ஆகும்.
விடை:
நெருப்புக் கோழி

Question 3.
………………………….. என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
விடை:
ஈஸ்ட்

Question 4.
கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ……………………… நரம்பு அமைந்துள்ளது.
விடை:
பார்வை

Question 5.
செல்லானது ………………….. என்ற அலகால் அளக்கப்படுகிறது.
விடை:
மைக்ரான்

III. சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக.

Question 1.
குறை செறிவுக் கரைசலில், செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலில் செறிவும் சமம்.
விடை :
தவறு –
குறை செறிவு கரைசலில் செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவு செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம்.

Question 2.
குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.
விடை:
தவறு –
மூலக்கூறுகள் அதிக செறிவுடைய பகுதியிலிருந்து குறைந்த செறிவுடைய பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
மனிதன் ஒரு வெப்ப இரத்தப் பிராணி
விடை:
சரி

Question 4.
தசை மடிப்புக்களாலான குரல்வளையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.
விடை:
சரி

Question 5.
முன் கண்ணறை திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
தவறு –
விட்ரியஸ் திரவம் கண் வடிவத்தைப் பராமரிக்கிறது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 1

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
செல் மாறுபாடு அடைதல் என்றால் என்ன?
விடை:

  • கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது.
  • கருச் செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும், மாற்றங்கள் அடைகின்றன. இந்நிகழ்விற்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.

Question 2.
வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.
விடை:
எபிதீலியல் திசு, தசை திசு, இணைப்புத் திசு, நரம்புத் திசு.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.
விடை:

  • காற்று நுண்ணறைகள் காற்றை உள்ளிழுக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு உடலை இயங்கச் செய்கின்றன.
  • காற்று நுண்ணறைகள் ஆக்ஸிஜன் மற்றும் CO2 வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.

Question 4.
நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின்
பெயரைக் குறிப்பிடு.
விடை:
உட்சுவாசம் – வெளி சுவாசம்

Question 5.
ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்களை வேறுபடுத்துக.
விடை:

ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள்
இத்தகைய உயிரினங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக்கொள்வன ஆகும். எ.டு: கடல் வாழ் உயிரினங்கள் இத்தகைய உயிரினங்கள் புறச்சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் உடல் செயலியல் நிகழ்வுகள் மூலம் தங்களது ஊடுபரவல் செறிவு தமது உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையான அளவுடன் பராமரித்துக் கொள்கின்றன.

Question 6.
வளர்சிதை மாற்றம் – வரையறு.
விடை:
வளர்சிதை மாற்றம் என்பது உணவுப் பொருட்களை உடைத்து ஆற்றலாக மாற்றும் நிகழ்ச்சி என்பதாகும். இது வளர் மாற்றம் மற்றும் சிதை மாற்றம் என்ற இரு நிகழ்ச்சிகளைக் கொண்டது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
புரோகேரியாடிக் செல் – வரையறு.
விடை:
பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற உயிரினங்களில் உட்கரு காணப்படுவதில்லை. எனவே இவை புரோகேடியாடிக் செல் எனப்படும்.

Question 2.
காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
விடை:

காற்றுள்ள சுவாசம் காற்றில்லா சுவாசம்
1. ஆக்ஸிஜன் உள்ள சூழலில் நடைபெறுகிறது. ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் நடைபெறுகிறது.
2. CO2 மற்றும் நீர் ஆகியவை விளை பொருட்களாக கிடைக்கின்றன CO2 எத்தனால் அல்லது லாக்டிக் அமிலம் விளை பொருட்களாக கிடைக்கின்றன.
3. அனைத்து உயர்நிலை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகறது. சில நுண்ணியிரிகள் மற்றும் மனித தசைச்செல்களில் நடைபெறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
கண்ணை ஏன் புகைப்படக் கருவியுடன் ஒப்பிடுகிறோம்?
விடை:
மனிதக் கண்ணானது ஒளியை ஒருங்கிணைத்தல், குவித்தல் மற்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்குவதற்காக ஒளியை லென்சு வழியே செலுத்துதல் ஆகிய பணிகளைச் செய்வதன் மூலம் புகைப்படக் கருவியுடன் ஒப்பிடப்படுகிறது.

Question 4.
தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் யாவை?
விடை:
கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை (ஹைபோதலாமஸ்) தானியங்கு நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி மண்டலங்கள் சீரான உடல்நிலையை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.

VII. விரிவான விடையளி.

Question 1.
மனிதக் கண்ணின் உள்ளமைப்பின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 2

Question 2.
சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.
விடை:

  • நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வு கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி சவ்வூடு பரவல் எனப்படும்.
  • சவ்வின் இருபுறமும் செறிவு சமநிலையை அடையும் வரை இவ்வாறு கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன.
  • செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம்பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்ததாகும்.
  • இதைப் பொறுத்து சவ்வூடு பரவலின் நிலையை மூன்றாக வகைப்படுத்தலாம்.

1) ஒத்த செறிவு கரைசல்:
இங்கு செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புறக் கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.

2) குறை செறிவு கரைசல்:
இங்கு செல்லின் வெளியே உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு அதனால் வெளியிலிருந்து நீரானது செல்லின் உள்ளே செல்கிறது.

3) மிகை செறிவு கரைசல்:
இங்கு செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லை விட்டு வெளியேறுகிறது.

Question 3.
உட்சுவாசத்திற்கும், வெளிச்சுவாசத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:

உட்சுவாசம் வெளிச்சுவாசம்
1. உதரவிதானத் தசைகள் சுருங்குகின்றன. உதரவிதானத் தசைகள் மீட்சியடைகின்றன.
2. உதரவிதானம் கீழ்நோக்கி நகர்கிறது உதரவிதானம் மேல்நோக்கி நகர்கிறது
3. விலா எலும்புகள் மேல் நோக்கியும் வெளிப்புறமும் நகர்கின்றன. விலா எலும்புகள் கீழ்நோக்கி நகர்கின்றன.
4. மார்பறையின் கொள்ளளவு அதிகரிக்கிறது. மார்பறையின் கொள்ளளவு குறைகிறது.
5. காற்று மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழைகிறது. காற்று மூக்கின் வழியாக நுரையீரலிலிருந்து வெளியேறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 4.
வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.
விடை:

  • வளர்சிதை மாற்றம் என்பது உணவுப் பொருட்களை உடைத்து ஆற்றலாக மாற்றும் நிகழ்ச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
  • இது வளர் மாற்றம் மற்றும் சிதை மாற்றம் என்ற நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

வளர் மாற்றம்:

  • இது உருவாக்குதல் மற்றும் சேமித்தலைக் குறிக்கிறது.
  • வளர் மாற்றம் புதிய செல்களின் வளர்ச்சி, உடற்திசுக்களை பராமரித்தல் மற்றும் எதிர்காலத்தேவைக்காக ஆற்றலை சேமித்தல் ஆகியவற்றிற்கு காரணமாகிறது.
  • வளர் மாற்றத்தின் போது கார்போ ஹைட்ரேட் புரதம் மற்றும் கொழுப்பின் எளிய மூலக்கூறுகள் பெரிய சிக்கலான மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.

எ.டு. குளுக்கோள் → கிளைக்கோஜன் பிற சர்க்கரைகள்
அமினோ அமிலம் → நொதிகள், ஹார்மோன்கள் புரதங்கள்
கொழுப்பு அமிலம் → கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்

சிதை மாற்றம்:

  • சிதை மாற்றம் என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.
  • இந்த ஆற்றல் வளர்மாற்றத்திற்கான எரிபொருளாகவும், உடலை வெப்பப்படுத்தவும் தசை சுருக்கத்திற்கும், மற்றும் உடல் இயக்கத்திற்கும் பயன்படுகிறது.
  • சிக்கலான வேதி மூலக்கூறுகள் சிதைக்கப்படுவதால் கழிவுப் பொருட்கள் உருவாகி தோல், சிறுநீரகங்கள், நுரையீரல் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

எ.டு: கார்போ ஹைட்ரேட் → குளுக்கோஸ்
குளூக்கோஸ் → CO, + நீர் + வெப்பம்
புரதம் → அமினோ அமிலம்

  • தொடர்ச்சியான வளர்சிதை மாற்ற வினைகள் உயிரியின் தன்னிலை காத்தல் நிலையை தக்க வைக்கின்றன.
  • மேலும் உடலின் அயனிச் சமநிலையைப் பராமரிக்கவும், மனித உடலின் இயக்கம், வளர்ச்சி, செல்கள், திசுக்களின் பராமரிப்பு மற்றும் சரி செய்தலுக்கு காரணமாகிறது.

Question 5.
சுவாச செயலியல் நிகழ்வுகளை விளக்குக.
விடை:
உட்சுவாசம்:

  • காற்றை நுரையீரல்களினுள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு உட்சுவாசம் எனப்படும்.
  • உட்சுவாசத்தின் போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளி நோக்கியும் தள்ளப்படுவதோடு உதரவிதானம் கீழ் நோக்கியும் இழுக்கப்படுகிறது.
  • இதனால் மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து அழுத்தம் குறைகிறது.
  • நுரையீரல்களினுள் அழுத்தம் குறைந்து வெளிக்காற்றானது நுரையீரலில் நுழைகிறது.
  • இங்கு காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

வெளி சுவாசம்:

  • நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச் சுவாசம் எனப்படும்.
  • வெளிச் சுவாசத்தின் போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித் தள்ளுகின்றன.
  • விலா எலும்பிடைத் தசைகள் மீட்சியடைந்து, மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத் திரும்புகிறது.
  • உதரவிதானமும் மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கிறது.
  • இதனால் மார்பறையின் அழுத்தம் புறச் சூழலை ஒப்பிடும் போது அதிகரிக்கிறது.
  • மார்பறைக்கும் வளி மண்டலத்திற்கும் இடையே காணப்படும். அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன் வெளியேறுகிறது.

காற்று நுண்ணறைகளினுள் வாயுப் பரிமாற்றம்:

  • காற்று நுண்ணறைகளினுள் உள்ளிழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு அங்குள்ள இரத்தக் குழல்களினுள் உள்ள ஆக்ஸிஜனின் அளவை விட அதிகம்.
  • இதனால் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஆக்ஸிஹ மோகுளோபின் ஆக மாறுகிறது.
  • ஆக்ஸிஹீமோகுளோபின் இரத்தக் குழல்கள் வழியே இதயத்தை அடைகிறது.
  • இதயம் சுருங்கி ஆக்ஸிஜன் உள்ள இரத்தத்தை உடல் திசுக்களுக்கு அனுப்புகிறது.
  • திசுக்கள் வெளியேற்றும் CO2. இரத்தம் வழியாக காற்று நுண்ணறைகளுக்கு எடுத்து வரப்படுகிறது.
  • பரவல் முறையில் CO2 காற்று நுண்ணறையிலிருந்து வெளிச் சுவாசம் மூலம் உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
நமக்கு ஏன் உடனடியாக ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த ஆற்றலை வழங்கமுடியுமா? விளக்குக.
விடை:

  • செல்லில் நடக்கக்கூடிய அனைத்து பணிகளுக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது.
  • சிதை மாற்றத்தின் போது இந்த ஆற்றல் வெளிப்படுகிறது.
  • இந்த ஆற்றலானது வளர் மாற்றத்திற்கான எரிபொருளாகவும், உடலை வெப்பப்படுத்தவும், தசை சுருக்கத்திற்கும் மற்றும் உடல் இயக்கத்திற்கும் பயன்படுகிறது.
  • குளுக்கோஸால் அந்த ஆற்றலை நமக்கு வழங்க முடியும்.
  • உயிரினங்கள் குளுக்கோஸைப் பயன்படுத்தி ஆற்றலாக மாற்றும் செயலே செல் சுவாசம் எனப்படும்.
  • செல் சுவாசம் சைட்டோபிளாசம் அல்லது மைட்டோகாண்டிரியாவில் நடைபெறுகிறது.
  • இச்சுவாசத்தின் போது உணவுப் பொருள்கள் ஆக்ஸிகரணம் அடைந்து நீர் மற்றும் CO2 ஆக மாற்றப்பட்டு ஆற்றல் வெளிப்படுகிறது.
  • இதில் அதிக அளவு ஆற்றல் வெளியாகிறது.
    குளூக்கோஸ் + ஆக்ஸிஜன் → CO2 + நீர் +ஆற்றல்

Question 2.
ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதில் எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?
விடை:

  • ஊறுகாய் என்பது கெட்டுப் போகக் கூடிய உணவினை பதப்படுத்தும் முறையாகும்.
  • தேவையான காய் அல்லது பழங்களை உப்பு அல்லது வினிகரில் பதப்படுத்துதல் வேண்டும்.
  • காய் அல்லது பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி, தேவையான எண்ணெய், வத்தல், கடுகு, வெந்தயம் பொடியோடு சேர்க்க வேண்டும்.
  • ஊறுகாயில் சேர்க்கக்கூடிய உப்பு காய் அல்லது பழங்களிலுள்ள நீர்ச் சத்தை உறிஞ்சி நொதித்தலை ஆரம்பிக்கிறது.
  • காற்றில்லா நொதித்தல் முறை ஊறுகாய் பதப்படுத்தலில் நடைபெறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

IX. மதிப்புசார் வினாக்கள்

Question 1.
மருத்துவர் உஷா என்பவர் நுரையீரல் நிபுணர், ஒரு நாள் அர்ஜூன் என்ற மாணவனை
அவர் சந்தித்தார். அவனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருந்தது. அவனைப் பரிசோதித்த பின்பு, அவனை தினமும் விளையாட்டுத் திடலுக்குச் சென்று கால்பந்து அல்லது கூடைப்பந்து விளையாடுமாறு அறிவுரை கூறினார். மேலும் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்யுமாறும் அறிவுரை வழங்கினார்.
அ. மருத்துவர் ஏன் அந்த மாணவனை தினமும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல அறிவுரை வழங்கினார்?
ஆ. மூச்சுப் பயிற்சி செய்வதன் பயன்கள் யாவை?
விடை:

  • அர்ஜூனுக்கு நுரையீரல் தொற்று இருந்ததால் அவனால் சரியாக சுவாசிக்க முடிய வில்லை.
  • சிறிய அளவில் செய்யப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளால் சுவாசக் கோளாரை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
  • விளையாடும் போது அதிகமான அளவு ஆக்ஸிஜன் நுரையீரல் உள்ளே செல்வதால் அர்ஜூனால் எளிதாக சுவாசிக்க முடியும்.
  • அதனால் மருத்துவர் அவனை விளையாடுமாறு அறிவுரை கூறினார்.

மூச்சுப் பயிற்சி செய்வதன் பயன்கள்:

  • நமது இரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது.
  • சுவாசக் கோளாறை (ஆஸ்துமா) சரி செய்கிறது.
  • இதயம் சம்பந்தமான நோய்களை ஓரளவு கட்டுக்குள் வைக்கிறது.
  • மேலும் அது நம் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

Question 2.
நாம் மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக உள்ள பகுதிக்குச் சென்றால் மூச்சு விடுதலில் ஏன் சிரமம் ஏற்படுகிறது என்பதை விளக்குக.
விடை:

  • நாம் மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக உள்ள பகுதிக்குச் சென்றால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுகிறது.
  • ‘கிளாஸ்ரோபோபியா’ என்ற ஒரு நிலை நமக்கு வருகிறது.
  • கிளாஸ்ரோபோபியா என்றால் மூடிய அறை அல்லது கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இருப்போரிடத்தில் ஒரு வித பய உணர்வு உண்டாவது.

இதன் அறிகுறிகள் என்ன வென்றால்

  • வியர்த்துக் கொட்டுதல்
  • இரத்த அழுத்தம் அதிகமாவதால், இதயத் துடிப்பு சீராக இருக்காது.
  • உலர் தன்மையான வாய் மற்றும் மயக்கம்.

Question 3.
சைலேஷ் என்பவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனுக்கு அலைபேசியில்
காணொலி விளையாட்டு விளையாடுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான். சில மாதங்களுக்குப் பிறகு அவனது கண்கள் சிவந்து, வலியை உணர்ந்தான். அவனது அறிவியல் ஆசிரியர் அதற்கான காரணங்களைக் கேட்டறிந்து அவனது பெற்றோரை அழைத்து கண் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுமாறு கூறினார்.
அ. அதிக அளவு அலைபேசியைப் பயன்படுத்துவது எவ்வாறு நமது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது?
ஆ. ஆசிரியர் வெளிக்காட்டிய பண்புகளைக் கூறு.
விடை:
அதிக அளவு அலைபேசியை பயன்படுத்தினால் நமது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கண் வலி, மங்கலான பார்வை, உலர் தன்மையுள்ள கண்கள், தலைவலி, கண் சிவந்திருத்தல், கவனக்குறைவு, தூக்கமின்மை.

ஆசிரியரிடமிருந்து பெற்ற பண்புகள்

  • உடல் நலமில்லாதவர்களை புறக்கணித்தல் கூடாது.
  • பிறர் நலனில் அக்கறை காட்டுதல்
  • உடல் நலமில்லாதவர்களைச் சரியான முறையில் வழி நடத்துதல்
  • அனைத்திற்கும் மேலாக மனித நேயம்.

8th Science Guide உயிரினங்களின் ஒருங்கமைவு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பல திசுக்கள் ஒன்று சேர்ந்து உருவாவது ………………………..
அ) செல்
ஆ) உறுப்பு
இ) உறுப்பு மண்டலம்
ஈ) இவை ஏதுவுமில்லை
விடை:
ஆ) உறுப்பு

Question 2.
……………………………. உயிரினங்களின் அமைப்பு அலகுகள் எனப்படுகின்றன.
அ) செல்
ஆ) நியூக்ளியஸ்
இ) நுண்ணுறுப்புகள்
ஈ) திசுக்கள்
விடை:
அ) செல்

Question 3.
………………………….. திசுக்கள் நரம்புத் தூண்டல்களை கடத்துகிறது.
அ) இணைப்பு
ஆ) எபிதீலியத்
இ) நரம்பு
ஈ) தசைத்
விடை:
இ) நரம்பு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 4.
……………………….. விழிவெளிப் படலம் முழுவதும் மூடியுள்ள மெல்லிய ஒளி ஊடுறுவும் சவ்வாகும்.
அ) கண்ஜங்டிவா
ஆ) கார்னியா
இ) ஐரிஸ்
ஈ) விழித் திரை
விடை:
அ) கண்ஜங்டிவா

Question 5.
………………………….. மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன.
அ) 400
ஆ) 300
இ) 480
ஈ) 500
விடை:
அ) 400

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குரல்வளை என அழைக்கப்படுவது …………………………..
விடை:
லாரிங்ஸ்

Question 2.
ஆற்றலானது …………………….. வடிவில் செல்களால் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
ATP

Question 3.
………………………….. என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும்.
விடை:
சிதை மாற்றம்

Question 4.
நுரையீரலை சுற்றியிருக்கும் உறை ………………………….
விடை:
புளூரல் சவ்வு

Question 5.
……………………… மற்றும் ………………………….. ஊடுகலப்பு ஒத்தமைவான்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
முதுகு நாணற்றவை, கடல் வாழ் உயிரினங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

III. சரியா? தவறா?

Question 1.
செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
விடை:
சரி

Question 2.
பல செல் விலங்குகளில் மிகப்பெரிய செல் நெருப்புக் கோழியின் முட்டை ஆகும்.
விடை:
சரி.

Question 3.
விழித்திரை உறுதியான தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப்
பாதுகாக்கிறது.
விடை:
தவறு – ஸ்கிளிரா உறுதியான தடித்த வெண்ணிற உறையாகும்.

Question 4.
அக்குவஸ் திரவம் லென்சுக்கும், விழிவெண் படலத்துக்கும் ஊட்டமளிக்கிறது.
விடை:
சரி

Question 5.
காற்றுள்ள சுவாசத்தில் CO2 மற்றும் எத்தனால் விளைபொருட்களாக கிடைக்கின்றன.
விடை:
தவறு – காற்றில்லா சுவாசத்தில் CO2 மற்றும் எத்தனால் விளை பொருட்களாக கிடைக்கிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

V. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துக.

Question 1.
(எளிய திசு, கூட்டுத் திசு , இணைப்புத் திசு , தசைத் திசு)
a) உடலின் பல்வேறு அமைப்புகளை இணைப்பது.
விடை:
இணைப்புத் திசு

b) ஒரே வகையான செல்களால் ஆனவை.
விடை:
எளிய திசு

c) அசைவு மற்றும் இடப்பெயர்ச்சிக்கு உதவுவது
விடை:
தசைத் திசு

d) பன்மயத் தன்மை கொண்டது.
விடை:
கூட்டுத் திசு

VI. இரண்டு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
செல் – வரையறு
விடை:
செல் என்பது உயிரினங்களில் குறிப்பிட்ட செயலைத் செய்யத் தகுந்த மிகச் சிறிய அமைப்பு
மற்றும் செயல் அலகு ஆகும்.

Question 2.
அக்குவஸ் திரவம் – விட்ரியஸ் திரவம் வேறுபடுத்துக.
விடை:

அக்குவஸ் திரவம் விட்ரியஸ் திரவம்
1. இது லென்சுக்கும், விழி வெண்படலத்துக்கும் இடையே நிரம்பியுள்ள நீர்ம திரவமாகும். இது லென்சுக்கும் விழித்திரைக்கு இடையே உள்ள அரைத் திண்ம ஒளி ஊடுறுவும் கொழ
கொழிப்பான பொருளாகும்.
2. இது லென்சுக்கும், விழிவெண்படலத்துக்கும் ஊட்டமளிக்கிறது. விட்ரியஸ் திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கிறது.

Question 3.
தன்னிலை காத்தல் என்றால் என்ன?
விடை:
உயிர் வாழ்வதற்கு ஏதுவாக மனித உடலியல் மண்டலம் சுயமாகத் தன்னைத் தானே ஒழுங்கு படுத்திக் கொண்டு சமநிலையைப் பராமரிப்பது தன்னிலை காத்தலின் முக்கியப் பண்பாகும்.

Question 4.
சீரான உடல் நிலையை ஒழுங்குப்படுத்த உதவும் உறுப்புகள் யாவை?
விடை:
கல்லீரல், சிறுநீரகம், மூளை (ஹைபோதலாமஸ்) தானியங்கு நரம்பு மண்டலம், மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலங்கள்.

Question 5.
ஊடுபரவல் ஒழுங்குபாடு என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரியானது அதன் உடலின் நீர்ச் சமநிலையை ஒழுங்குபடுத்தி அதன் தன்நிலை காத்தலைப் பராமரிக்கும் செயலே ஊடுபரவல் ஒழுங்குபாடு எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

VII. மூன்று மதிப்பெண் வினாக்கள்

Question 1.
சுவாசித்தல் என்றால் என்ன?
விடை:
சுவாசித்தல் என்பது உணவுப் பொருள் ஆக்ஸிகரணம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வு
ஆகும். இது உட்சுவாசம், வெளிச் சுவாசம் மற்றும் செல் சுவாசம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Question 2.
பரவலுக்கு சில எடுத்துக் காட்டு தருக.
விடை:

  • எரியும் ஊதுபத்தியின் மணம் அறை முழுவதும் பரவுதல்.
  • நீரில் ஒரு சொட்டு சிவப்பு மை விடுதல்.
  • தேநீர் பையானது சூடான நீரில் வைக்கப்படுதல்

Question 3.
கண்ஜங்டிவாவின் முக்கிய பணி என்ன?
விடை:
இச்சவ்வு சிறிய அளவில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்கிறது.

Question 4.
உறுப்பு – வரையறு.
விடை:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்களால் ஆக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக் கூடிய அமைப்பே உறுப்பு எனப்படும். எ.டு: மூளை, இதயம், நுரையீரல்

Question 5.
மூல செல்லின் முக்கியத்துவம் என்ன?
விடை:
மூல செல் என்பது ஒரு அடிப்படை செல் ஆகும். இது தோல் செல், நரம்பு செல் போன்ற எந்த வகை செல்லாகவும் மாறும் தன்மை உடையது. உடலின் பாதிப்படைந்த திசுக்களை குணப்படுத்த அல்லது மாற்றி அமைக்க உதவுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

VIII. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

Question 1.
மனிதக் கண்ணின் புற அமைப்பை விவரி.
விடை:
ஸ்கிளிரா:
இது உறுதியான தடித்த வெண் உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.

கண்ஜங்டிவா:

  • இது விழி வெளிப்படலம் முழவதும் மூடியுள்ள மெல்லிய ஒளி ஊடுறுவும் சவ்வாகும்.
  • இச்சவ்வு சிறிய அளவில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும் வைத்துக் கொள்கிறது.

கார்னியா:

  • இது கண் பார்வை மற்றும் கருவிழியின் மீது படர்ந்துள்ள ஒளி ஊடுறுவும் தோல்படலம் ஆகும்.
  • கண்ணுக்குள் நுழையும் ஒளியை விலகலடையச் செய்வதே இதன் பணியாகும்.

ஐரிஸ்:

  • இது கண்ணின் நிறமுள்ள பகுதியை உருவாக்கும் நிறமிகளாலான திசுப்படலம் ஆகும்.
  • கண்ணில் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பார்வையின் அளவைக்கட்டுப்படுத்துவதாகும்.

கண்பார்வை:
இது கருவிழியின் மையத்திலமைந்த சிறுதுளையாகும். இது ஒளியை கண்ணின் உள்ளே அனுப்புகிறது.

Question 2.
நுரையீரலின் அமைப்பை விவரி.
விடை:

  • நுரையீரல்கள் மார்பறையின் ஒவ்வொரு புறமும் காணப்படும் பஞ்சு போன்ற மீளும் பைகளாகும்.
  • மார்பறையானது முதுகுப்புறத்தில் முதுகெலும்பாலும் வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும், பக்கவாட்டில் விலா எலும்பாலும் அடிப்புறத்தில் குவிந்த உதரவிதானத்தாலும் சூழப்பட்டுள்ளது.
  • நுரையீரல்கள் மார்பறையின் இருபுறமும் அமைந்து மார்பறையின் உட்பகுதியை நிரப்புகின்றன.
  • இடது நுரையீரலானது இதயத்திற்கு இடமளிக்கும் வகையில் வலது நுரையீரலை விட சற்று சிறியதாக உள்ளது.

காற்று நுண்ணறைகள்:

  • இவை மிகவும் நுண்ணியவையாக இருந்த போதிலும் நமது சுவாச மண்டலத்தின் செயல்மிகு அமைப்புகளாக உள்ளன.
  • 480 மில்லியன் காற்று நுண்ணறைகள் சராசரியாக நமது நுரையீரலில் காணப்படுகின்றன.
  • நுரையீரல்களினுள் காணப்படும் காற்று நுண்ணறைகளின் மொத்தப்பரப்பு 2000 சதுர அடிக்கு மேல் அல்லது நமது உடற்பரப்பை போல 100 மடங்கு அதிகமாக இருக்கும்.
  • காற்று நுண்ணறைகள் O2 மற்றும் CO2 வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 4

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு

Question 3.
ஒரு விலங்கு செல்லின் அமைப்பை படத்துடன் விவரி.
விடை:
Samacheer Kalvi 8th Science Guide Chapter 18 உயிரினங்களின் ஒருங்கமைவு 5

  • செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.
  • செல்கள் பொதுவாக உயிரினங்களின் கட்டுமானக் கற்கள் எனப்படுகின்றன.
  • செல்கள் சவ்வினால் சூழப்பட்ட சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளன.
  • இந்த சைட்டோபிளாசமானது புரதங்கள், உட்கரு அமிலங்கள் போன்ற பல உயிரியல் மூலக்கூறுகளைப் பெற்றுள்ளன.
  • செல்லின் புரோட்டோ பிளாசம் என்பது மையத்திலமைந்த கோள வடிவ உட்கருவையும் சைட்டோபிளாசத்தில் அமைந்த அகப்பிளாச வலை, மைட்டோகாண்டிரியா, தோல் கை உடல்கள் சென்ட்ரியோல்கள், ரிபோசோம்கள் போன்ற பல செல் நுண்ணுறுப்புகளை உள்ளடக்கியது.
  • ஒவ்வொரு செல் நுண்ணுறுப்பும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.