Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

6th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை:
ஈ) MOUSE

Question 2.
கீழ்வருவனவற்றுள் எவை சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:
ஈ) கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்

Question 4.
கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிமை மென் பொருள்?
அ) WINDOWS
ஆ) MACOS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 5.
______ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை:
அ) ANDROID

II. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 80

III. சிறுவினா

Question 1.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 81

Question 2.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக.
விடை:
கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென் பொருளை, இயக்க மென்பொருள் என்கிறோம். இயங்கு தளமின்றி கணினியைப் பயன்படுத்த முடியாது. (எ.கா.) Linux, Windows, Mac, Android.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 85

Question 3.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.
விடை:
கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. (எ.கா.) :

  1. லினக்ஸ்,
  2. ஜியோ ஜீப்ரா

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

6th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை:
இ) மின்னஞ்சல்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) கட்டற்ற மற்றும் திற மூல

Question 3.
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை:
ஈ). பயன்பாட்டு மென்பொருள்

Question 4.
Windos என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்
விடை:
அ) கட்டண மென்பொருள்

Question 5.
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) pendrive
விடை:
ஆ) Linux

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

II. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 86

III. சிறுவினா

Question 1.
மென்பொருள் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
மென்பொருளைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. இயக்க மென்பொருள்
  2. பயன்பாட்டு மென்பொருள்

Question 2.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
விடை:
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.

Question 3.
Open Source Initiative என்றால் என்ன ?
விடை:
திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் Open Source Initiative.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 95

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

6th Science Guide கணினியின் பாகங்கள் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?
அ) சுட்டி
ஆ) விசைப்பலகை
இ) ஒலிபெருக்கி
ஈ) விரலி
விடை:
இ) ஒலிபெருக்கி

Question 2.
மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?
அ) ஈதர்நெட் (Ethernet)
ஆ) வி.ஜி.ஏ. (VGA)
இ) எச்.டி.எம்.ஐ (HDMI)
ஈ) யு.எஸ்.பி (USB)
விடை:
இ) எச்.டி.எம்.ஐ (HDMI)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Question 3.
கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?
அ) ஒலிபெருக்கி
ஆ) சுட்டி
இ) திரையகம்
ஈ) அச்சுப்பொறி
விடை:
ஆ) சுட்டி

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
அ) ஊடலை
ஆ) மின்னலை
இ) வி.ஜி.ஏ. (VGA)
ஈ) யு.எஸ்.பி. (USB)
விடை:
அ) ஊடலை

Question 5.
விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
அ) வெளியீட்டுக்கருவி
ஆ) உள்ளீட்டுக்கருவி
இ) சேமிப்புக்கருவி
ஈ) இணைப்புக்கருவி
விடை:
இ) சேமிப்புக்கருவி

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 40

III. குறுகிய விடையளி:

Question 1.
கணினியின் கூறுகள் யாவை?
விடை:

  1. உள்ளீட்டகம் (Input Unit)
  2. மையச்செயலகம் (CPU)
  3. வெளியீட்டகம் (Output Unit)
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 45

Question 2.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 50

Question 3.
பல்வேறு இணைப்பு வடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
விடை:
இணைப்புவடங்களின் வகைகள்:

  1. Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 52 (VGA – Video Graphics Array)
  2. எச்டிஎம்ஐ (HDMI – High Definition Multimedia Interface)
  3. யுஎஸ்பி (USB – Universal Serial Bus)
  4. தரவுக்கம்பி (Data Cable)
  5. ஒலி வடம் (Audio Cable)
  6. மின் இணைப்புக்கம்பி (Power cord)
  7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic Cable)
  8. ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet Cable)

1. யுஎஸ்பி (USB) இணைப்பு வடம்:
அச்சுப்பொறி (Printer), வருடி (Scanner), விரலி (Pen drive), சுட்டி (Mouse), விசைப்பலகை (Key Board), இணையப்படக்கருவி (Web Camera), திறன்பேசி (Smart Phone) போன்றவற்றைக் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.

2. தரவுக்கம்பி (Data cable) இணைப்பு வடம் :
கணினியின் மையச்செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க தரவுக்கம்பி பயன்படுகிறது.

3. மின் இணைப்பு வடம் (Power card) :
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின்இணைப்பை வழங்குகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

செயல்பாடு (மாணவர்களுக்கானது)

4-3-2-1 எனும் சூத்திரத்தைக் கொண்டு கணினியை இணைக்கும் செயல்பாடு
விடை:
கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4-3-2-1. எனும் சூத்திரத்தை பயன்படுத்தி கணினியின் பாகங்களை இணைக்கவும். அதாவது 4 கருவிகளான. மையச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக் கம்பிகளைக் கொண்டு இணைத்தல். மேலும் மையச்செயலகம் கணினித்திரை ஆகிய 2-ற்கும் மின் இணைப்பு கொடுத்து 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல்.

ஒரு முழுமையான கணினியைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பாகங்கள். சுட்டி, விசைப்பலகை, கணினித்திரை, மையச் செயலகம் மற்றும் இவைகளை இணைப்பதற்குத் தேவையான இணைப்பு மற்றும் மின்கம்பிகள்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 95

6th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடு:1. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
அ) உள்ளீட்டகம்
ஆ) வெளியீட்டகம்
இ) சுட்டி
ஈ) மையச் செயலகம்
விடை:
இ) சுட்டி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Question 2.
கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்.
அ) நகர்த்தும் உருளை
ஆ) இடது பொத்தான்
இ) வலது பொத்தான்
விடை:
அ) நகர்த்தும் உருளை

Question 3.
ஒலிவடம் ______ ஐ இணைக்க பயன்படுகிறது.
அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்
ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
விடை:
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
அ) யு.எஸ்.பி.
ஆ) மின் இணைப்பு வடம்
இ) எச்.டி.எம்.ஐ
ஈ) அருகலை
விடை:
ஈ) அருகலை

Question 5.
நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.
அ) மேசைக்கணினி
ஆ) தனியாள் கணினி
இ) மடிக்கணினி
ஈ) பலகைக் கணினி
விடை:
ஆ) தனியாள் கணினி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
____, _____, விடைகள் , கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
விடை:
எண்ணையும்,
எழுத்தையும்

Question 2.
கணினியின் எல்லாப்பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப் படுத்துவது _____ ஆகும்.
விடை:
கட்டுப்பாட்டகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Question 3.
கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்.
விடை:
இரண்டாக

Question 4.
தரவுகளை ______ என்ற அலகால் அளக்கலாம்.
விடை:
பிட்

Question 5.
சுட்டியை கணினியுடன் இணைக்கும் வடம் ______
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 96

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 96.2

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

6th Science Guide மனித உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள் _______
அ) ஆக்சிஜன்
ஆ) சத்துப் பொருட்கள்
இ) ஹார்மோன்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு ______
அ) இரைப்பை
ஆ) மண்ணீ ரல்
இ) இதயம்
ஈ) நுரையீரல்கள்
விடை:
ஈ) நுரையீரல்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 3.
நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) தசைச் சுருக்கம்
ஆ) சுவாசம்
இ) செரிமானம்
ஈ) கழிவுநீக்கம்
விடை:
இ) செரிமானம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது _____ மண்டலம் ஆகும்.
விடை:
உறுப்பு

Question 2.
மனித மூளையை பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _____ ஆகும்.
விடை:
மண்டையோடு

Question 3.
மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______ என்று பெயர்.
விடை:
கழிவு நீக்கம்

Question 4.
மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு _____ ஆகும்.
விடை:
தோல்

Question 5.
நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருட்களுக்கு ______ என்று பெயர்.
விடை:
ஹார்மோன்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.
விடை:
தவறு – இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.

Question 2.
இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
விடை:
தவறு – இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை கடத்துகிறது.

Question 3.
உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.
விடை:
தவறு – உணவுக் குழாயின் இன்னொரு பெயர் உணவுப் பாதை.

Question 4.
இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச்சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.
விடை:
சரி

Question 5.
மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 80

V. கீழுள்ளவற்றை முறைப்படுத்தி எழுதுக.

Question 1.
இரைப்பை → பெருங்குடல் → உணவுக்குழல் → தொண்டை → வாய் → சிறுகுடல் → மலக்குடல் → மலவாய்
விடை:
வாய் → தொண்டை → உணவுக்குழல் → இரைப்பை → சிறுகுடல் → பெருங்குடல் → மலக்குடல் → மலவாய்

Question 2.
சிறுநீர்ப் புறவழி → சிறுநீர்நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீரகம்
விடை:
சிறுநீரகம் → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீர்ப் புறவழி

VI. ஒப்புமை தருக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 85

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
எலும்பு மண்டலம் என்றால் என்ன ?
விடை:

  1. எலும்பு மண்டலமானது எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
  2. தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக திகழ்கின்றது.
  3. நடத்தல், ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு இது உதவுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 2.
எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?
விடை:
மூச்சுக்குழலின் மேற்பகுதியிலுள்ள குரல்வளை மூடி (எப்பி கிளாட்டிஸ் என்ற அமைப்பு சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கிறது.

Question 3.
மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.
விடை:
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகும்.

Question 4.
விளக்குக – மூச்சுக்குழல்
விடை:

  1. பொதுவாக காற்றுக் குழாய் என்றழைக்கப்படும் மூச்சுக் குழலானது குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது.
  2. இது குரல்வளை மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

Question 5.
செரிமான மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.
விடை:

  1. சிக்கலான உணவுப் பொருட்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
  2. செரிக்கப்பட்ட உணவை உட்கிரகித்தல் போன்ற செயல்களைச் செய்கிறது.

Question 6.
கண்ணின் முக்கிய பாகங்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. கண் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
  2. அவை கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்)

Question 7.
முக்கியமான ஐந்து உணர் உறுப்புக்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. கண்கள்
  2. செவிகள்
  3. மூக்கு
  4. நாக்கு
  5. தோல்

VIII. குறுகிய விடையளி:

Question 1.
விலா எலும்புக்கூடு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  1. விலா எலும்புக்கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
  2. இது மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 2.
மனித எலும்பு மண்டலத்தின் பணிகளை எழுதுக.
விடை:

  1. எலும்பு . மண்டலம் உடலுக்கு வடிவம் கொடுக்கிறது.
  2. தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன.
  3. நடத்தல், ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.
  4. உடலில் உள்ள மிருதுவான உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது.

Question 3.
கட்டுப்படாத இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 86
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 87

IX. விரிவான விடையளி

Question 1.
நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக.
விடை:
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் பணிகள் :

  1. உடலின் பல்வேறு செயல்களை ஒழுங்குபடுத்தி இது நமது உடலின் உட்புற சூழலைப் பராமரிக்கின்றது.
  2. திசுக்களுக்கு “ஹார்மோன்கள்” எனப்படும் வேதித் தூதுவர் மூலம் செய்தி அனுப்பி செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. (எ.கா.) வளர்ச்சி ஹார்மோன் – வளர்ச்சியை தூண்டுகிறது. அட்ரீனலின் ஹார்மோன் – கோபம், பயம் போன்ற நேரங்களில் செயல்படுகிறது.

நரம்பு மண்டலத்தின் பணிகள் :

  1. உணர்ச்சி, உள்ளீடு : உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை கடத்தப்படுதல்
  2. ஒருங்கிணைப்பு : உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைந்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும் பதில்களை உருவாக்குதல்.
  3. ஒருவர் வாழ்நாளில் மூளையில் 100 மில்லியனுக்கும் அதிகமான தகவல்கள் சேமித்து வைக்க முடியும்.
  4. செயல் வெளிப்பாடு : மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய தசை மற்றும் சுரப்பி செல்களுக்குக் கடத்துதல்.

Question 2.
கீழ்கண்ட மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான நான்கு பாகங்களை எழுதுக. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
அ. மேற்கண்ட கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பாகம் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
ஆ. சிறுநீர் எங்கு சேமிக்கப்படுகிறது?
இ. மனித உடலிலிருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது?
ஈ. சிறு நீரகத்திலுள்ள சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது?
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 88
விடை:
அ. சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு நெப்ரான்களாகும். சிறுநீர்ப்பை இவை இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
சிறுநீர்ப் புறவழி
ஆ. சிறுநீர் சிறுநீர்ப்பையில் சேமிக்கப்படுகிறது.
இ. சிறுநீர்ப் புறவழி எனப்படும் யூரித்ரா சிறுநீரை வெளி யேற்றுகிறது.
ஈ. சிறுநீர்க்குழாய் சிறுநீரை சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
உதரவிதானத்தில் அசைவுகள் இல்லையெனில் என்ன நடக்கும்?
விடை:

  1. சுவாசத்தில் பங்கு கொள்ளும் ஒரு முக்கியமான தசை உதரவிதானம் ஆகும்.
  2. உதரவிதானம் சுருங்கி விரியும் தன்மையால் நுரையீரல் விரிவடைந்து ஒரு வெற்றிடம் உருவாகிறது.
  3. இதனால் காற்று உள்ளிழுக்கப்படுகிறது.
  4. உதரவிதானம் ஏதேனும் காரணத்தால் செயல்படாவிட்டால் சுவாசம் நடைபெற முடியாது.
  5. இதனால் மனிதன் இறக்க நேரிடும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 2.
இதயத்தின் இரு பாகங்கள் தடித்த தசைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. ஏன்?
விடை:

  1. இதயத்தின் வென்ட்ரிகுலார் சுவர்கள் ஆரிக்கிள் சுவர்களை விட தடித்துக் காணப்படுகின்றன.
  2. இடது வென்ட்ரிக்களின் சுவர்கள் வலது வென்ட்ரிக்கிள் சுவர்களை விட தடித்துக் காணப்படும்.
  3. ஏனெனில் இரத்தம் மகா தமனி அல்லது பெருந்தமனிக்குள் செலுத்தப்பட அதிக விசை தேவைப்படுகிறது.
  4. எனவே வென்ட்ரிக்கிள் சுவர்கள் தடித்துக் காணப்படுகிறது.

Question 3.
கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?
விடை:

  1. வியர்வை சுரத்தல் அல்லது வியர்த்தல் என்பது நம் உடலின் வெப்ப நிலையை ஒரே சீராக வைத்திருக்க உதவும் ஒரு முக்கியச் செயலாகும்.
  2. கோடை காலங்களில் வெப்பம் அதிகமாகும் போது நமது உடலில் வியர்த்தல் ஏற்படுகிறது.
  3. அந்த வியர்வை அதிக வெப்பத்தை எடுத்து ஆவியாகி உடலை குளிர்விக்கிறது. இதனால் உடல் வெப்பநிலை உயராமல் சீராக்கப்படுகிறது.

Question 4.
உணவை விழுங்கும் போது சில சமயங்களில் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுவது ஏன்?
விடை:
காரணங்கள் :

  1. வேகமாக சாப்பிடுவதாலும் உணவுடன் அதிக அளவு காற்று சேர்த்து விழுங்கப்படுவதாலும்.
  2. அதிக கொழுப்பு சத்துள்ள மற்றும் வாசனைப் பொருட்கள் உள்ள உணவு சேர்த்துக் கொள்ளப்படுவதாலும்.’
  3. அதிக அளவு கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் அல்லது ஆல்கஹால், குடிக்கும் பொழுது இரைப்பை விரிவடைந்து, உதரவிதானத்தை உரசுவதால் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுகிறது.

6th Science Guide மனித உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பிறந்த குழந்தைகள் _____ எலும்புகள் கொண்டுள்ளன.
அ) 206
ஆ) 200க்கும் மேற்பட்ட
இ) 300க்கும் அதிகமான
ஈ) 210
விடை:
இ) 300க்கும் அதிகமான

Question 2.
மனிதர்களின் முகத்திலேயே _____ தான் மிகப் பெரியது மற்றும் உறுதியானது.
அ) ஹயாய்டு எலும்பு
ஆ) அங்கவடி எலும்பு
இ) மண்டை ஓட்டு எலும்பு,
ஈ) கீழ்த்தாடை எலும்பு
விடை:
ஈ) கீழ்த்தாடை எலும்பு

Question 3.
இதயத்தின் சுவர் _____ ஆனது
அ) மென்தசைகள்
ஆ) இதயத்தசை
இ) எலும்புத்தசைகள்
ஈ) இருதலைத்தசை
விடை:
ஆ) இதயத்தசை

Question 4.
இதயம் இரு சுவர்களைக் கொண்ட எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது?
அ) புளூரா
ஆ) நுண்காற்றுப்பை சுவர்
இ) பெரிகார்டியம்
ஈ) ஐரிஸ்
விடை:
இ) பெரிகார்டியம்

Question 5.
மூச்சுக்கிளைக்குழல் பல நுண் குழல்களாகப் பிரிந்து இவற்றில் முடிவடைகின்றன?
அ) செரிப்ரம்
ஆ) தைமஸ்
இ) நுண்காற்றுப்பைகள்
ஈ) செவிமடல்
விடை:
இ) நுண்காற்றுப்பைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகள், சில _____, _______, ______ ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
விடை:
குறுத்தெலும்புகள், இணைப்பு இழைகள், தசைநார்கள்

Question 2.
மூளை மூன்று உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது அவற்றிற்கு _____ என்று பெயர்.
விடை:
மூளை உறைகள்.

Question 3.
நாம் நடக்கும் போதும் ஓடும் போதும் மலையில் ஏறும்போதும் _____ நமது உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
விடை:
செவிகள்

Question 4.
மார்புக் கூட்டில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ______
விடை:
தைமஸ்

Question 5.
ஆக்ஸிஜன் மற்றும் யூரியா உள்ள இரத்தத்தினை சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்வது _____
விடை:
சிறுநீரகத்தமனி

Question 6.
______ மூளையை உடலில் உள்ள பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக் கூடியது.
விடை:
தண்டுவடம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 90

IV. மிகக்குறுகிய விடையளி

Question 1.
எலும்பு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
விடை:

  1. அச்சுச் சட்டகம்
  2. இணையுறுப்புச் சட்டகம்

Question 2.
செவி சிற்றெலும்புகளின் பெயர்களைக் கூறுக?
விடை:

  1. சுத்தி எலும்பு
  2. பட்டடை எலும்பு
  3. அங்கவடி எலும்பு

Question 3.
நமது உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது?
விடை:
தொடை எலும்பு.

Question 4.
இதயத்தை உருவாக்கும் தசைகள் யாவை?
விடை:
இதயத்தசை

Question 5.
உணவுக் குழாயின் நீளம் என்ன?
விடை:
உணவுக்குழாய் சுமார் 9 மீட்டர் நீளமுடையது.

V. விரிவான விடையளி

Question 1.
அ) தசைகள் எவ்வாறு இயங்குகிறது?
ஆ) இரத்த ஓட்ட மண்டலம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விடை:
அ) தசைகள் இயங்கும் விதம் :

  1. தசைகளால் தள்ள இயலாது. இழுத்துக் கொள்ள மட்டுமே இயலும்.
  2. மூட்டுக்களில் எலும்புகளில் அசைவிக்க இரு தசைகள் தேவைப்படுகிறது.
  3. ஒரு தசை சுருங்கும் பொழுது மற்றொன்று விரிவடைகிறது.
  4. எ.கா. முன்னங்கையை மேலும் கீழும் அசைவிக்க இருதலைத் தசை, முத்தலைத் தசை என இருவகைத் தசைகள் தேவைப்படுகின்றன.
  5. முன்னங்கையை தூக்கி உயர்த்தும் பொழுது இருதலைத்தசை சுருங்கி சிறியதாகிறது அதே சமயம் முத்தலைத் தசை விரிந்து கையை மேலே உயர்த்த உதவுகிறது.
  6. முன்னங்கையை கீழிறக்கும் பொழுது முத்தலைத் தசை சுருங்கி இருதலைத்தசை விரிவடைந்து கையை கீழே இறக்க உதவுகிறது.

ஆ. மனிதனில் இரத்த ஓட்ட மண்டலத்தின் முக்கியத்துவம்

  1. மனித இரத்த ஓட்ட மண்டலம் இதயம், இரத்தக்குழாய்கள், இரத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  2. இது நமது உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவுச் சத்துப் பொருட்கள், ஹார்மோன்கள், கழிவுப் பொருள்கள் போன்றவற்றைக் கடத்துகிறது.
  3. இது தீங்கு விளைவிக்கக்கூடிய நோய்க் கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றது.
  4. உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கவும் உதவி செய்கின்றது.
  5. நமது இதயம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இரத்தத்தை உந்தி அனுப்புகிறது.

Question 2.
தமனியை சிரையினின்று வேறுபடுத்தி அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 96

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 97

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 5 செல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 5 செல்

6th Science Guide செல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு
அ) சென்டி மீட்டர்
ஆ) மில்லி மீட்டர்
இ) மைக்ரோ மீட்டர்
ஈ) மீட்டர்
விடை:
இ) மைக்ரோ மீட்டர்

Question 2.
நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.
அ) தாவர செல்
ஆ) விலங்கு செல்
இ) நரம்பு செல்
ஈ) மீட்டர்
விடை:
அ) தாவர செல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.
அ) செல் சுவர்
ஆ) நியூக்ளியஸ்
இ) நுண்குமிழ்கள்
ஈ) பசுங்கணிகம்
விடை:
ஆ) நியூக்ளியஸ்

Question 4.
கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
அ) ஈஸ்ட்
ஆ) அமீபா
இ) ஸ்பைரோ கைரா
ஈ) பாக்டீரியா
விடை:
இ) ஸ்பைரோகைரா

Question 5.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.
அ) செல்சுவர்
ஆ) சைட்டோபிளாசம்
இ) உட்கரு (நியூக்ளியஸ்)
ஈ) நுண்குமிழ்கள்
விடை:
ஆ) சைட்டோபிளாசம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
செல்களைக் காண உதவும் உபகரணம் ______
விடை:
மைக்ரோஸ்கோப் (அ)
நுண்ணோக்கி

Question 2.
நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ______
விடை:
பசுங்கணிகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?____
விடை:
செல் சவ்வ

Question 4.
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _____
விடை:
ராபர்ட் ஹூக்

Question 5.
நெருப்புக் கோழியின் முட்டை ____ தனி செல் ஆகும்.
விடை:
மிகப் பெரிய

III. சரியா? (அ) தவறா? என கூறுக. தவறாக இருப்பின் சரியான விடையை எழுதவும்.

Question 1.
உயிரினங்களின் மிகச் சிறிய அலகு’ செல்.
விடை:
சரி

Question 2.
மிக நீளமான செல் நரம்பு செல்.
விடை:
சரி

Question 3.
பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.
விடை:
சரி

Question 4.
தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.
விடை:
தவறு
சரியான விடை : நுண்ணுறுப்புகள் – செல்லினுள் காணப்படுகின்றன.

Question 5.
ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல் உருவாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 60

V. சரியான முறையில் வரிசைப்படுத்துக்

Question 1.
யானை, பசு, பாக்டீரியா, மாமரம், ரோஜாச் செடி
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 61

Question 2.
கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை.
விடை:
பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.

VI. ஒப்புமை தருக.

Question 1. புரோகேரியோட்: பாக்டீரியா :: யூகேரியோட் : _____
விடை:
தாவர செல்கள் / விலங்கு செல்கள்

Question 2.
ஸ்பைரோகைரா: தாவர செல்:: அமீபா : _____
விடை:
விலங்கு செல்

Question 3.
உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : _____
விடை:
மைட்டோகான்டிரியா

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆங்கில அறிவியலாளர் ராபர்ட் ஹீக் , 1665 ஆம் ஆண்டு மெல்லிய கார்க் (மரத் தக்கை) கை நுண்ணோக்கியைக் கொண்டு கண்டபோது செல்களைக் கண்டறிந்தார்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?
விடை:
யூகேரியாட்டிக் வகை செல்கள் ஆகும்.

Question 3.
செல்லின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:

  1. செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு
  2. திரவநிலை சைட்டோபிளாசம்
  3. உட்கரு

Question 4.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்புகள் எது?
விடை:

  1. செல் சுவர்
  2. பசுங்கணிகம்

Question 5.
யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக?
விடை:

  1. தாவர செல்கள்
  2. விலங்கு செல்கள்
  3. பெரும்பான்மையான பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள்

Question 6.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
விடை:
சைட்டோபிளாசம் நகரும் மையப்பகுதியாகும்.

Question 7.
சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன” என்கிறான். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?
விடை:
மறுக்கிறேன் – ஏனெனில் செல்லின் அளவிற்கும், உயிரினத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை.
(எ.கா) சுண்டெலியின் செல்லைவிட யானையின் செல் பெரியதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வாறே சிறிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காய செல்கள் பெரிதாக இருப்பதில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

VIII. குறுகிய விடையளி:

Question 1.
உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் – செல் எனப்படுகிறது ஏன்?
விடை:

  • ஒரு செங்கல் கட்டிடத்தின் அடிப்படை அலகாக இருப்பது போலவே, ஒரு செல் மனித, விலங்கு, தாவர உடலின் அடிப்படை அலகாக உள்ளது.
  • எனவே உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் செல் எனப்படுகிறது.

Question 2.
பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் நான்கு பாகங்களைக் குறி :
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 80

Question 3.
புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 85

Question 4.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 86

  • சென்டிரியோல் – தாவர செல்லில் காணப்படாது
  • செல்சுவர், பசுங்கணிகம் – விலங்கு செல்லில் காணப்படாது.

Question 5.
செல் உயிரியலில் இராபர்ட் ஹூக்கின் பங்களிப்பு பற்றி விளக்குக.
இராபர்ட் ஹூக் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்.
விடை:

  • அவர் அக்கால நுண்ணோக்கியை மேம்படுத்தி, கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.
  • அவர் நீர் லென்சைக் கொண்டு நுண்ணோக்கியின் கீழ் வைக்கப்பட்ட பொருளை கண்டறிந்தார்.
  • மரத்தக்கையின் சிறிய மெல்லிய பகுதியை, நுண்ணோக்கியிலிருந்து பார்த்து செல்களைக் கண்டறிந்தார்.
  • அதனடிப்படையில் 1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலில் ‘செல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
  • செல்லைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IX. விரிவான விடையளி :

Question 1.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 90

Question 2.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 91

X. செயல் திட்டம் (மாணவர்களுக்கானது)

1. உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி உங்களால் தாவர செல்லின் முப்பரிமாண படத்தை வரைக.
2. ஜெல்லி, கேக் போன்ற உணவு பொருட்களைப் பயன்படுத்தி செல்லை உருவாக்குக. அச்செல்லின் நுண்ணுறுப்புகளைக் குறிக்க கொட்டைகள் உலர் பழங்கள் போன்றவற்றை பயன்படுத்துக. இந்த மாதிரியை உங்கள் வகுப்பறையில் காட்சிப் பொருளாக வைத்து ஆசிரியர்களையும் மற்ற வகுப்பு மாணவர்களையும் அழைத்து அதைப் பார்க்கச் செய்க. அதைப் பற்றி அவர்களைக் கேள்விகள் கேட்கச் சொல்லி அதற்குரிய பதில்களை நீங்கள் கூறுங்கள்.

6th Science Guide செல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இப்புவியில் முதல் முதலில் உருவான செல்.
அ) யூகேரியாட்டிக் செல்
ஆ) ஆல்காக்களின் செல்
இ) பூஞ்சைகளின் செல்
ஈ) புரோகேரியாட்டிக் செல்
விடை:
ஈ) புரோகேரியாட்டிக் செல்

Question 2.
எஸ்ஸெரிச்சியா கோலை பாக்டீரியாவின் வாழிடம்.
அ) மண் வாழும் பாக்டீரியா
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா
இ) நீர் வாழும் பாக்டீரியா
ஈ) வாயு மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா
விடை:
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
இவை ஒளியை ஈர்க்க பயன்படும் நிறமி.
அ) பச்சையம்
ஆ) பசுங்க ணிகம்
இ) குரோமோபிளாஸ்ட்
ஈ) லூகோ பிளாஸ்ட்
விடை:
அ) பச்சையம்

Question 4.
கோழி முட்டையின் மையத்திலுள்ள மஞ்சள் நிறப்பகுதி.
அ) சைட்டோபிளாசம்
ஆ) செல் உறை
இ) சேமிப்பு உணவு
ஈ) உட்கரு
விடை:
ஈ) உட்கரு

II. உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம்:

Question 1.
உறுதிப்படுத்துதல் (A) : பசுங்கணிகம் ஒரு செல் நுண்ணுறுப்பு
காரணம் (R) : நுண்ணுறுப்பு என்பது தனிப்பட்ட அமைப்பு, பணி செய்யும் செல்லின் தனிப் பகுதி.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
அ) உறுதிப்படுத்துதல் – A மற்றும் காரணம் R சரியானது. R – Aஐ சரியாக விளக்குகிறது.

Question 2.
உறுதிப்படுத்துதல் (A) : மைட்டோகாண்டிரியா செல்லின் முக்கிய நுண்ணுறுப்பு ஆகும்.
காரணம் (R) : மைட்டோகாண்டிரியா உணவு தயாரித்தலில் ஈடுபடுகிறது.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
இ) A சரியானது ஆனால் R தவறானது.

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 95

IV. மிகக் குறுகிய விடையளி

Question 1.
பின்வரும் செல்களை அவற்றின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அ) பாக்டீரிய செல்
ஆ) தவளையின் முட்டை
இ) கோழியின் முட்டை
ஈ) மனித – அண்டம் (அ) முட்டை
விடை:
அ) பாக்டீரிய செல்
ஆ) மனித – அண்டம் (அ) முட்டை
இ) தவளையின் முட்டை
ஈ) கோழியின் முட்டை

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
உயிருள்ள செல்லை இறந்த செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுத்து வாய்.
விடை:

  • உயிருள்ள செல்களில் உட்கரு காணப்படும்.
    (எ.கா) வெங்காய சதைப்பற்றுள்ள இலையின் உட்புறசவ்வு
  • உயிரற்ற செல்களில் உட்கரு காணப்படாது. (எ.கா) மரத்தக்கை செல்கள்.

Question 3.
மிகப்பெரிய ஆஞ்சியோஸ்பெர்ம் தாவர செல் யாது?
விடை:
ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரப்பிரிவின் மிகப்பெரிய செல் சிட்ரஸ் ரெட்டிக்குலேட்டா (ஆரஞ்சு தசையில் தெளிவாகத் தெரியும்) சிட்ரஸ் மேக்ஸிமா.

Question 4.
செல்லின் நுண்ணுறுப்புகளில் உறையற்ற நுண்ணுறுப்பு?
விடை:
ரிபோசோம்களில் உறை காணப்படுவதில்லை.

Question 5.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C, D, என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 96

Question 6.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 97

Question 7.
பின்வரும் வரைபடத்தில் A, B, C, D என்னவென்று காண்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 98

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 99

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 4 காற்று Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 4 காற்று

6th Science Guide காற்று Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
காற்றில் நைட்ரஜனின் சதவீதம்
அ) 78%
ஆ) 21%
இ) 0.03%
ஈ) 1%
விடை:
அ) 78%

Question 2.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ____ ஆகும்.
அ) இலைத்துளை
ஆ) பச்சையம்
இ) இலைகள்
ஈ) மலர்கள்
விடை:
அ) இலைத்துளை

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 3.
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.
அ) நைட்ரஜன்
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு
இ) ஆக்சிஜன்
ஈ) நீராவி
விடை:
இ) ஆக்சிஜன்

Question 4.
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் ______
அ) உணவிற்கு நிறம் அளிக்கிறது.
ஆ) உணவிற்கு சுவை அளிக்கிறது.
இ) உணவிற்கு புரதத்தையும், தாது உப்புகளையும் அளிக்கிறது.
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
விடை:
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது

Question 5.
காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
i) நைட்ரஜன்
ii) கார்பன்-டை-ஆக்ஸைடு
iii) மந்த வாயுக்கள்
iv) ஆக்சிஜன்
அ) i மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
விடை:
ஈ மற்றும் iv

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)

Question 2.
ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _____ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)

Question 3.
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______
விடை:
ஆக்சிஜன்(O2)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 4.
இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் _____ காணமுடியும்.
விடை:
தூசுப் பொருட்களைக்

Question 5.
_____ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல ______ மாற்றும்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு(CO2)

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது.
விடை:
தவறு. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளது.

Question 2.
புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.
விடை:
சரி

Question 3.
காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.
விடை:
தவறு.
காற்றின் இயைபு இடத்திற்கு இடமும், காலநிலையைப் பொருத்தும் மாறுபாடு அடைகிறது.

Question 4.
திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.
விடை:
சரி

Question 5.
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.
விடை:
தவறு
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் சுவாசம் மூலமும் சமன் செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 70

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
  3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
  4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலதிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
  5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
  6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

விடை:

  1. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
  2. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
  3. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
  4. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
  5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
  6. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத் திலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

VI. ஒப்புமை தருக.

Question 1.
ஒளிச்சேர்க்கை : _____ :: சுவாசம் : ஆக்சிஜன்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு

Question 2.
காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _____
____ : எரிதலுக்கு துணை புரிகிறது.
விடை:
காற்றின் 21%

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

VII. கொடுக்கப்பட்டுள்ள படத்தை கூர்ந்து கவனித்து, கேள்விக்கு பதிலளிக்கவும்.

Question 1.
மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?
விடை:

  • மீன்களிடமிருந்து வெளியேறும் கழிவுகளை தாவரங்கள் உறிஞ்சி அகற்றும். தாவரங்கள் இல்லையென்றால் கழிவுகளினால் தொட்டியில் உள்ள நீரின் நிறம் மாறுபட்டு துர்நாற்றம் ஏற்படும்.
  • தாவரங்கள் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதுடன், CO2 மற்றும் NH3ன் அளவை குறைக்கின்றன.
  • மீன்களுக்கு மறைவிடமாகவும் இருப்பதால் மீன்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணரக்கூடும்.
  • நீர்ப்பாசிகளின் அளவு அதிகமாகும்.

Question 2.
மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின் தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?
விடை:

  • பொதுவாக தாவரங்கள் (நீர் வாழ் மற்றும் நிலம் வாழ்) தங்களது உணவை ‘ஒளிச்சேர்க்கை ‘ மூலம் தயாரித்துக் கொள்கின்றன.
  • நீர் வாழ் தாவரங்கள், நீரில் கரைந்துள்ள (CO2) மற்றும் கிடைக்கும் சிறிதளவு சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றன.
  • மீன்களை (CO2 வெளியிடுபவை) நீக்கிய பின், தாவரங்களுடன் இருண்ட அறையில் தொட்டியை வைக்கும் போது, அவைகளால் ‘ஒளிச்சேர்க்கை ‘ செய்ய இயலாது.
  • எனவே சில நாட்களில் அத்தாவரங்கள் மடிந்து போகின்றன.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 80

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளின் பெயர்களை தருக.
விடை:
நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் எனப்படும்.
வளிமண்டலத்தின் 5 அடுக்குகள்.

  1. அடி வளி மண்ட லம் (Troposphere)
  2. அடுக்கு வளி மண்ட லம் (Stratosphere)
  3. இடைவளி மண்ட லம் (Mesosphere)
  4. அயனி மண்ட லம் (Ionosphere)
  5. புறவளி மண்ட லம் (Exosphere)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 2.
நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனை எவ்வாறு பெறுகின்றன?
விடை:

  • மண்ணிலுள்ள காற்று இடைவெளிகளில் ஆக்ஸிஜன் உள்ளது.
  • இந்த ஆக்ஸிஜன் வேர்நுனி மூடிகளின் வழியாகப் பரவல் முறையில் தாவரத்தின் பிறபாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Question 3.
ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
விடை:

  • கம்பளி (அல்லது) ஈரச்சாக்கு கொண்டு தீயினை முழுவதும் மூட வேண்டும்.
  • பின்பு தரையில் உருட்ட வேண்டும்.
  • ஏனெனில் பொருட்கள் எரிவதற்கு ஆக்சிஜன் (O2) தேவை. இவ்வாறு செய்யும் போது எரிவதற்கு வேண்டிய O2 இல்லாது போக தீ அணைந்து விடுகின்றது. தகுந்த தீயணைப்பானைப் பயன்படுத்துவதும் மிகச்சிறந்தது.

Question 4.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நிகழும் ?
விடை:
பல சுகாதார நிலைமைகள் மற்றும் ஆபத்து காரணிகள் வாய் வழி சுவாசித்தலினால் ஏற்படக்கூடும்.

  • குறட்டை
  • உலர்ந்தவாய்
  • நாள்பட்ட சோர்வு
  • பல் ஆரோக்கியக் குறைவு.

IX. குறுகிய விடையளி

Question 1.
மழைக் காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும் பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
விடை:
மழைக்காலங்களில் காற்றில் அதிகமான ஈரப்பதம் காணப்படும். இதனால் பிஸ்கட் தனது மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது.

Question 2.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
விடை:

  • வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் மாசுக்கள் கலந்துள்ளன. இந்த மாசு நிறைந்த காற்றினை பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் சுவாசிக்க நேர்ந்தால் சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
  • இவற்றை தடுப்பதற்காக போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிகின்றனர்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

X. விரிவான விடையளி:

Question 1.
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
விடை:

  • தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடும் ஆக்ஸிஜனை விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன.
  • தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
  • இந்த ஆக்ஸிஜனை, விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்கு எடுத்துக்கொண்டு CO2யை வெளியேற்றுகின்றன.
  • இவ்வாறு வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் (O2) மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) சமநிலை, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாசம் மூலமும், தாவரங்களின் ஒளிச் சேர்க்கை மூலமும் பாதுகாக்கப்படுகிறது.

Question 2.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
விடை:

  • உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழக் காரணமாக இருக்கும் மிக முக்கியமான தனிமமான ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் (காற்றில்) உள்ளது.
  • சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சுகள் புவியின் மேற்பரப்பிற்கு வருவதை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம் தடுக்கின்றது.
  • புவியில் தகுந்த வெப்பநிலை இருக்கக் காரணம் வளிமண்டலமே, இதன் காரணமாகவே புவியில் உயிரினங்கள் வாழ முடிகிறது.
  • வளிமண்டலத்தில் உள்ள நீராவி, நம் சுற்றுப் புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

XI. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி:

Question 1.
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளி யிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?
விடை:

  • CO2 வாயு எரிதலுக்குத் துணைபுரிவதில்லை.
  • எரியும் பொருள்களின் மீது இது தெளிக்கப்படும் போது. ஆக்ஸிஜன் துணைபுரிவது தடுக்கப்படுகிறது. எனவே தீ கட்டுக்குள் வருகிறது.

6th Science Guide காற்று Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மேகங்கள் உருவாகக் காரணமான நீராவியைக் கொண்டுள்ள அடுக்கு எது?
அ) அடுக்கு வளிமண்டலம்
ஆ) இடைவளி மண்டலம்
இ) அடிவளிமண்ட லம்
ஈ) புறவளி மண்ட லம்
விடை:
இ) அடிவளிமண்டலம் பருவம்

Question 2.
பசுமைத்தாவரங்கள் உணவுத் தயாரிக்கப் பயன்படும் காற்றின் பகுதிப்பொருள்
அ) N2
ஆ) O2
இ) H2
ஈ) CO2
விடை:
ஈ) CO2

Question 3.
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வின் பெயரென்ன?
அ) உள்ளெரிதல்
ஆ) எரிதல்
இ) கருகுதல்
ஈ) உருகுதல்
விடை:
அ) உள்ளெரிதல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 4.
சுவாசித்தலின் போது நாம் வெளியேற்றும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் சதவீதம்
அ) 78%
ஆ) 16%
இ) 4%
ஈ) 21%
விடை:
ஆ) 16%

Question 5.
இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படுவது
அ) திரவ அம்மோனியா
ஆ) திரவ நைட்ரஜன்
இ) திண்ம CO2
ஈ) ஹீலியம்
விடை:
இ) திண்ம CO2

II. சரியா ? தவறா ? எனக்கூறுக. தவறு எனில் சரியாக எழுதவும்

Question 1.
புரத உற்பத்திக்கும், உரங்கள் தயாரிக்கவும் ஆக்ஸிஜன் பயன்படுகிறது.
விடை:
தவறு – புரத உற்பத்திக்கும், உரங்கள் தயாரிக்கவும் நைட்ரஜன் பயன்படுகிறது.

Question 2.
கால்சியம் ஹைட்ராக்ஸைடு கரைசலினுள் CO2யை செலுத்தினால் பால் போல் மாறுகிறது.
விடை:
சரி

Question 3.
கடலோர பகுதிகளிலுள்ள காற்றில் அதிகளவு ஆக்ஸிஜன் காணப்படும்.
விடை:
தவறு – கடலோர பகுதிகளிலுள்ள காற்றில் அதிகளவு நீராவி காணப்படும்.

Question 4.
சூரியனிடமிருந்து ஒளி ஆற்றலைப் பெறுவதே குளோரோஃபில்லின் பணி ஆகும்.
விடை:
சரி

Question 5.
கார்பன் டை ஆக்ஸைடு வாயு – 57°C ல் திரவநிலைக்கு மாறுகிறது.
விடை:
தவறு – கார்பன் டை ஆக்ஸைடு வாயு – 57°C திண்மநிலைக்கு மாறுகிறது.

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 77

IV. மிகக்குறுகிய விடையளி

Question 1.
ஒசோன் படலம் எங்குள்ளது?
விடை:
அடிவளி மண்டலத்திற்கு மேலே உள்ள அடுக்கு வளி மண்டலத்தில் ஓசோன் படலம் உள்ளது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 2.
“காற்று ஒரு அடிப்படைப் பொருளல்ல, அது ஒரு கலவை”? ஏன்?
விடை:
காற்று என்பது N2, O2, CO2 மற்றும் பல வாயுக்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு கலவை ஆகும்.

Question 3.
காற்றின் சதவீத இயைபை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 85

Question 4.
எரிதல் என்றால் என்ன?
விடை:
ஆக்ஸிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது ஒளியையும், வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு எரிதல் எனப்படும்.

Question 5.
உள்ளெரிதலை வரையறு. ஒரு உதாரணம் கொடு?
விடை:
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் எரிதல் நிகழ்வு உள்ளெரிதல் எனப்படும். (எ.கா.) இராக்கெட் உந்திகள் (எரிபொருள், ஆக்ஸிஜன் கலவை)

V. விரிவான விடையளி

Question 1.
நைட்ரஜன் கண்டுபிடிப்பை விவரி.
விடை:

  • டேனியல் ரூதர்ஃபோர்டு நைட்ரஜனைக் கண்டறிந்தார்.
  • முதலில் எரியும் மெழுகுவர்த்தி கொண்ட மணிஜாடியைப் பயன்படுத்தி O2 யை CO2 ஆக மாற்றினார்.
  • பின்பு அக்காற்றினை, சுண்ணாம்பு நீரில் செலுத்தி CO2யை நீக்கினார்.
  • இப்போது, இக்காற்று எரிதலுக்குத் துணைபுரியவில்லை, தாவரம் சுவாசிக்கவும் பயன்படவில்லை.
  • ‘ஏனெனில், காற்றில் O2 மற்றும் CO2 வாயுக்கள் இல்லை.
  • இவ்வாயுவின் பண்புகள் அறிந்து, நைட்ரஜன்’ எனப்பெயரிட்டார்.

Question 2.
தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை நிகழ்வினை விரிவாக விளக்குக.
விடை:

  • தாவரங்கள் தனது உணவினை ‘ஒளிச்சேர்க்கை’ மூலம் உற்பத்தி செய்கின்றன.
  • காற்றிலுள்ள CO2ம் மண்ணிலுள்ள நீரும் சூரிய ஒளி துணையுடன் வினைபுரிந்து உணவு உற்பத்தி செய்கின்றன.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 95
  • இவ்வினையில், குளோரோபில் என்ற பச்சை நிற நிறமி சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகிறது.
  • சுவாசித்தலின் போது எடுத்துக் கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை, ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடுகின்றன.

Question 3.
காற்றின் பயன்களைக் குறிப்பிடுக.
விடை:

  1. தாவர மற்றும் விலங்குகளின் சுவாசத்திற்குப் பயன்படுகிறது.
  2. மரக்கட்டை, நிலக்கரி, மண்ணெண்ணெய், LPG போன்றவற்றை எரிக்க உதவுகிறது.
  3. அழுத்தப்பட்ட காற்று, வாகன டயர்களில் நிரப்பப்படுகிறது.
  4. இயற்கையின் நீர்சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  5. சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை ஓசோன் படலம் தடுக்கிறது.
  6. மருத்துவமனை நோயாளிகளுக்கும், மலைச்சிகரம் ஏறுபவர்களுக்கும், ஆழ்கடல் நீந்துபவர்களுக்கும் சுவாசிக்க O2வாயு பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 98

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்
அ) இட மாற்றம்
ஆ) நிற மாற்றம்
இ) நிலை மாற்றம்
ஈ) இயைபு மாற்றம்
விடை:
இ) நிலை மாற்றம்

Question 2.
ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.
அ) வேதியியல் மாற்றம்
ஆ) விரும்பத்தகாத மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) இயற்பியல் மாற்றம்
விடை:
ஈ) இயற்பியல் மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
இ) மீளா மாற்றம்

Question 4.
கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
அ) துருப்பிடித்தல்
ஆ) பருவநிலை மாற்றம்
இ) நில அதிர்வு
ஈ) வெள்ளப்பெருக்கு
விடை:
ஆ) பருவநிலை மாற்றம்

Question 5.
காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விடை:
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம். (மீள் / மீளா)
விடை:
மீள்

Question 2.
முட்டையை வேகவைக்கும் போது _____ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)
விடை:
மீளா

Question 3.
நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ______ மாற்றங்கள். (விரும்பத்தக்க / விரும்பத்தகாத)
விடை:
விரும்பத்தகாத

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _____ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.
விடை:
இயற்கையான

Question 5.
பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ____ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ____ மாற்றம். (மெதுவான / வேகமான)
விடை:
வேகமான,
மெதுவான

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.
விடை:
சரி

Question 2.
தீக்குச்சி எரிவது மீளா மாற்றம்.
தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.
விடை:
தவறு

Question 3.
அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் தவறு. ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
சரியான விடை : அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையான மாற்றம்.
விடை:
தவறு

Question 4.
உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.
சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் வேதியியல் மாற்றம்.
விடை:
தவறு.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 5.
உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு. கரைபொருள் ஆகும்.
சரியான
சரியான விடை : உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ‘ஒரு கரைப்பான் ஆகும்.
விடை :
தவறு

IV. ஒப்புமை தருக.

Question 1.
பால் தயிராதல்: மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :- _____ மாற்றம்.
விடை:
மீள்

Question 2.
ஒளிச்சேர்க்கை : _____ மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
விடை:
இயற்கையான

Question 3.
குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் : ____ மாற்றம்
விடை:
மீளா

Question 4.
உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : _____ மாற்றம்.
விடை:
விரும்பத்தகாத

Question 5.
தீக்குச்சி எரிதல்: ____ மாற்றம் :: பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.
விடை:
வேகமான

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.

Question 1.
குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதை முளைத்தல்.
விடை:
கண் சிமிட்டுதல் (வேகமான மாற்றம்)

Question 2.
மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபி குவளை உடைதல், பால் தயிராதல்.
விடை:
பால் தயிராதல் (வேதியியல் மாற்றம்)

Question 3.
முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.
விடை:
முடி வெட்டுதல் (மனிதனால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்)

Question 4.
பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.
விடை:
மண்ணெண்ணெய் எரிதல் (வேதியியல் மாற்றம்)

VI. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
விடை:
மெதுவான, வேதியியல் மாற்றம்

Question 2.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
விடை:
ஆம், இயற்பியல் மீள் மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
மெதுவான மாற்றத்தை வரையறு.
விடை:
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. (மணிகள் /நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் எனப்படும்.
(எ.கா.) நகம் / முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.

Question 4.
கரும்புச் சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • சர்க்கரை என்பது சுக்ரோஸ் ஆகும்.
  • சுக்ரோஸின் மூலக்கூறு வாய்ப்பாடு C12H22O11 (அ) C12 (H2O)11
  • கரும்புச்சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து கார்பனாக சிதைவடைகிறது.
  • இச்செயல்முறையின் மாற்றங்கள்
    1. வேதியியல் மாற்றம்
    2. மீளா மாற்றம்

Question 5.
கரைசல் என்றால் என்ன?
விடை:
கரைபொருள் கரைப்பானில் கரையும் போது கரைசல் உண்டாகிறது. கரைபொருள் + கரைப்பான் → கரைசல்

VII. குறுகிய விடையளி:

Question 1.
காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
விடை:

  • காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றம் வேகமான மாற்றம் ஆகும்.
  • ஏனெனில் இம்மாற்றம் நிகழ குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன.

Question 2.
காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.
விடை:
இல்லை, காடுகளை அழித்தல் விரும்பத்தகாத மாற்றம் ஆகும். ஏனெனில், சுற்றுச்சுழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் ஆகும்.

Question 3.
விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
விடை:
விதையிலிருந்து செடி முளைத்தல் ஒரு மெதுவான மாற்றம் ஆகும். இம்மாற்றம் நிகழ் அதிக நேரத்தை (மணிகள் / நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) எடுத்துக் கொள்கின்றன.

VIII. விரிவான விடையளி:

Question 1.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
அ) மெதுவான / வேகமான மாற்றம்
ஆ) மீள் / மீளா மாற்றம்
இ) இயற்பியல் / வேதியல் மாற்றம்
ஈ) இயற்கையான / செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ) விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 60

IX. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
ஈ) உருகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
உ) மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்?
உமது பதிலை நியாயப்படுத்துக.

  • மெழுகுவர்த்தி எரியும் போது உருவாகும் வெப்பத்தினால் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மெழுகு உருகுகிறது. இது ஒரு மீள் (அ) இயற்பியல் மாற்றம் ஆகும்.
  • மேலும் மெழுகு உருகும் போது மெழுகு அளவும் குறைகிறது. உருகிய மெழுகுவை குளிர்விக்கும் போது அதனைத் திண்மமாக மாற்றலாம்.

6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
நீரைக் குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் ______
அ) உருகுதல்
ஆ) ஆவியாதல்
இ) ஆவி சுருங்குதல்
ஈ) உறைதல்
விடை:
ஈ) உறைதல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
சமைக்கும் போது காய்கறிகள் மென்மையாக மாறுதல் ஒரு.
அ) வேகமான மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) செயற்கையான மாற்றம்
ஈ) மீள் மாற்றம்
விடை:
இ) செயற்கையான மாற்றம்

Question 3.
ஏரிகள் மற்றும் ஆறுகளிலிருந்து நீர் ஆவியாதல் வினை ஒரு
அ) மெதுவான மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
விடை:
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்

Question 4.
அயோடின் பதங்கமாதல் ஒரு
அ) வேதியியல் மாற்றம்
ஆ) இயற்பியல் மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
ஆ) இயற்பியல் மாற்றம்

Question 5.
வெள்ளி கொலுசு கருமையடைதல் ஒரு
அ) மீளா மாற்றம்
ஆ) தற்காலிக மாற்றம்
இ) குறைந்த நேர மாற்றம்
ஈ) தொடர்ச்சியான மாற்றம்
விடை:
அ) மீளா மாற்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
புதிய பொருட்களை உருவாக்கும் மாற்றம் ______
விடை:
வேதியியல் மாற்றம்

Question 2.
நிலக்கரி உருவாதல் _____ வகை மாற்றம்.
விடை:
மெதுவான மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
இயற்கையாக நிகழும், விரும்பத்தகாத மாற்றத்திற்கு ஓர் உதாரணம் ________
விடை:
நில அதிர்வு

Question 4.
_____ ஒரு பொதுக்கரைப்பான்.
விடை:
நீர்

Question 5.
சுற்றுச்சூழல் நண்பனான மாற்றம் ______
விடை:
விரும்பத்தக்க மாற்றம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 70

IV. ஒப்புமை தருக.

Question 1.
இரும்பு துருப்பிடித்தல் : விரும்பத்தகாத மாற்றம் :: இறந்த விரும்பத்தக்க மாற்றம் தாவரங்கள் உரமாதல் : ———-

Question 2.
தொட்டால் சிணுங்கி தாவரம் : ____ :: உணவு ஜீரணித்தல் : மீளா மாற்றம்
விடை:
மீள் மாற்றம்

Question 3.
பருவநிலை மாற்றம் : மெதுவான மாற்றம் :: கண்ணாடி உடைதல் : ______
விடை:
வேகமான மாற்றம்

Question 4.
நில அதிர்வு : விரும்பத்தகாத மாற்றம் :: இதயத்துடிப்பு : _____
விடை:
விரும்பத்தக்க மாற்றம்

Question 5.
வெள்ளி ஆபரணங்கள் கருமை அடைதல் : ____ நீர் கொதித்தல் : இயற்பியல் மாற்றம்
விடை:
வேதியியல் மாற்றம்

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வேகமான மாற்றத்திற்கு மூன்று உதாரணங்கள் தருக.
விடை:

  1. பலூன் வெடித்தல்
  2. கண்ணாடி உடைதல்
  3. காகிதம் எரிதல்

Question 2.
மீள் மாற்றம் என்றால் என்ன ?
விடை:
மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை மீள்மாற்றம் எனப்படுகின்றன.

Question 3.
இயற்பியல் மாற்றத்திற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:

  1. பனிக்கட்டி உருகுதல்
  2. உப்பு (அல்லது) சர்க்கரை நீரில் கரைதல்
  3. இரப்பர் வளையம் நீளுதல்

Question 4.
நீர் ஒரு பொதுக்கரைப்பான் ஏன்?
விடை:
நீர் பெரும்பாலான பொருட்களைக் கரைக்கப் பயன்படுவதால் ‘பொது கரைப்பான்’ என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

VI. விரிவான விடையளி

Question 1.
இயற்பியல் மாற்றம் மற்றும் வேதியியல் மாற்றத்தை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 80

Question 2.
இயற்கையான மற்றும் செயற்கையான மாற்றங்களைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
இயற்கையான மாற்றம் :

  • இயற்கையில் தானாகவே நிகழும் மாற்றம்
  • மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றம்
  • எ.கா. புவி சுழற்சி, மழைபெய்தல், நிலவின் பல்வேறு நிலைகள்
    செயற்கையான மாற்றம் மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றம்) :
  • இயற்கையில் தன்னிச்சையாக நிகழாத மாற்றம்
  • மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்திய மாற்றங்கள்
    எ.கா. சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடம் கட்டுதல்

Question 3.
நமது உடலில் நிகழும் பல்வேறு மாற்றங்களையும் அவற்றின் வகைகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 85

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 86

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

6th Science Guide உடல் நலமும் சுகாதாரமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ……… தேவைப்படுகிறது.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) நீர்
விடை:
இ) புரதம்

Question 2.
ஸ்கர்வி …….. குறைபாட்டினால் உண்டாகிறது
அ) வைட்டமின் A
ஆ) வைட்டமின் B
இ வைட்டமின்
ஈ) வைட்டமின் D
விடை:
இ) வைட்டமின் C

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 3.
கால்சியம் _____ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) தாது உப்புகள்
விடை:
ஈ) தாது உப்புகள்

Question 4.
நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில்
அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
இ அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.
விடை:
இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

Question 5.
பாக்டீரியா, ஒரு சிறிய ———– நுண்ணுயிரி
அ) புரோகேரியோட்டிக்
ஆ) யூகேரியோட்டிக்
இ) புரோட்டோசோவா
ஈ) செல்லற்ற
விடை:
அ) புரோகேரியோட்டிக்

II. சரியா? தவறா?

Question 1.
நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
விடை:
தவறு

Question 2.
நம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.
விடை:
சரி

Question 3.
அனைத்து பாக்டீரியாக்களும் நீளிழைகளை பெற்றுள்ளன.
விடை:
தவறு

Question 4.
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 5.
ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்
விடை:
தவறு

III. கோழட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
ஊட்டச்சத்து குறைபாடு….. நோய்களுக்கு வழிவகுக்கிறது.
விடை:
குறைபாட்டு

Question 2.
பெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு……. நோயை ஏற்படுத்துகிறது.
விடை:
காய்ட்டர்

Question 3.
வைட்டமின் D குறைபாடு …… நோயை ஏற்படுத்துகிறது.
விடை:
ரிக்கெட்ஸ்

Question 4.
டைபாய்டு நோய், ……. மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.
விடை:
உணவு

Question 5.
குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா)……….. நுண்ணுயிரியால் ஏற்படுகிறது
விடை:
வைரஸ்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

IV. பின்வரும் ஒப்புமைகளை பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 80

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 81

VI. நிரப்புக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 82
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 82.1

VII. சிறுவினாக்கள்

Question 1.
கீழ்க் கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக
விடை:
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருள்கள் – நெய், பால்
அ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள் : வைட்டமின் C – ஸ்கர்வி, வைட்டமின் D-ரிக்கெட்ஸ்

Question 2.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 83

Question 3.
சரிவிகித உணவு வரையறு
விடை:
அனைத்துச் சத்துக்களும் போதுமான அளவில் உணவில் இருந்தால் அதற்கு சரிவிகித உணவு என்று பெயர்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 4.
பழங்களையும் காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவக்கூடாது ஏன்?
விடை:
வைட்டமின்கள் இரு வகைப்படும்

  1. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ADEK
  2. நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C

நீரில் கரையும் வைட்டமின்கள் B, மற்றும் C காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவும் போது கரைந்து விடும்.

Question 5.
வைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.
விடை:
1 – எய்ட்ஸ்
2 – ஹிபாட்டிட்டிஸ்

Question 6.
நுண்ணுயிரிகளின் முக்கிய பண்பு என்ன?
விடை:

  • நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கலாம்
  • பாக்டீரியாக்கள் – புரோகேரியாட்டிக் நுண்ணுயிரிகள்
  • பாக்டீரியாக்கள் – ஒட்டுண்ணியாகவோ அல்லது தனியாக வாழும்.
  • வைரஸ்கள் செல்லற்ற உயிரியாகும்.
  • இவை உயிருள்ள செல்களில் மட்டுமே வாழும்

VIII. விரிவான விடையளி

Question 1.
வைட்டமின்களையும் அவற்றின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 86

6th Science Guide உடல் நலமும் சுகாதாரமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சூரிய ஒளி வைட்டமின் என்பது
அ) A
ஆ) D
இ) C
ஈ) K
விடை:
ஆ) D

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 2.
நெல்லிக்கனியில் அதிக அளவு காணப்படும் வைட்டமின்
அ) C
ஆ) E
இ) MI
ஈ) D
விடை:
அ) C

Question 3.
தாது உப்புகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) ஆற்றல் தரும் உணவு
ஆ) சரிவிகித உணவு
இ) உடல் வளர்ச்சிக்கான உணவு
ஈ) பாதுகாப்பு உணவு
விடை:
ஈ) பாதுகாப்பு உணவு

Question 4.
முருங்கை இலையில் உள்ள வைட்டமின்கள்
அ) A மற்றும் B
ஆ) C மற்றும் D
இ) K மற்றும் A
ஈ) A மற்றும் C
விடை:
ஈ) A மற்றும் C

Question 5.
ஒரு நாளைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நீரின் அளவு
அ) 2 லிட்டர்
ஆ) 3 லிட்டர்
இ) 1.5 லிட்டர்
ஈ) 1 லிட்டர்
விடை:
அ) 2 லிட்டர்

II. குறுகிய விடையளி

Question 1.
ஹோமியோஸ்டஸிஸ் வரையறு
விடை:
சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடலின் சமநிலையைப் பேணும் நிலையாகும்.

Question 2.
ஆறுவகையான பெரிய ஊட்டச்சத்துக்களை கூறுக.
விடை:

  1. கார்போஹைட்ரேட்
  2. கொழுப்புகள்
  3. புரதங்கள்
  4. தாது உப்புகள்
  5. வைட்டமின்கள்
  6. நீர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 3.
ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?
விடை:
ஊட்டச்சத்து குறைபாடு என்பது நாம் உண்ணும் உணவில், நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருத்தல்

Question 4.
குவாஷியோர் மராஸ்மஸ் வேறுபடுத்துக. குவாஷியோர்
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 86.2

Question 5.
கோழட்ட இடத்தை நிரப்புக
A – கால்சியம் , ரிக்கெட்ஸ், பாஸ்பரஸ் ………….
விடை:
A ஆஸ்டியோமலேசியா

B – அயோடின், கிரிட்டினிசம், இரும்பு ……….
விடை:
B இரத்த சோகை

III. விரிவான விடையளி.

Question 1.
அட்டவணையில் விடுபட்டுள்ள ABCDE மற்றும் F இடங்களை நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 99
விடை:
A – ஆற்றல் தருதல் B, வெண்ணெய், நெய், பால், மாமிசம்
C – முட்டை, மீன், பால், சோயாபீன்ஸ்.
D – உடல் வளர்ச்சி, செல் பழுது பார்த்தல்.
E- உடலில் பல்வேறு உயிர்வேதி வினைகள் நடைபெற உதவுதல்.
F – கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை பழங்கள்

Question 2.
உடற் பயிற்சியினால் நடைபெறும் நன்மைகளைக் கூறு,
விடை:

  1. வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை அதிகப்படுத்துதல்.
  2. வயது முதிர்ச்சியைத் தவிர்த்தல்.
  3. தசைகள் மற்றும் இதய இரத்த ஓட்ட மண்டலத்தை வலுப்படுத்துதல்.
  4. தடகள விளையாட்டு திறனை மேம்படுத்துதல் எடையைக் குறைத்தல்.
  5. உடற்பயிற்சியானது குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் உடல் பருமன் விளைவுகளை குறைக்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 99.1

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

6th Science Guide கணினி ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) மார்ட்டீன் லூதர் கிங்
ஆ) கிரகாம்பெல்
இ) சார்லி சாப்ளின்
ஈ) சார்லஸ் பாப்பேஜ்
விடை:
இ) சார்லஸ் பாப்பேஜ்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?
அ) கரும்பலகை
ஆ) கைப்பேசி
இ) வானொலி
விடை:
ஆ) கைப்பேசி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 3.
முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
அ) 1980
ஆ) 1947
இ) 1946
ஈ) 1985
விடை:
இ) 1946

Question 4.
கணினியின் முதல் நிரலர் யார்?
அ) லேடி வில்லிங்டன்
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்
இ) மேரி க்யூரி
ஈ) மேரிக்கோம்
விடை:
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

Question 5.
பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
அ) கணிப்பான்ஆ
ஆ) அபாகஸ்
இ) மின்அட்டை
ஈ) மடிக்கணினி
விடை:
இ) மின் அட்டை

II. கோழட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
தரவு என்பது……. விவரங்கள் ஆகும்.
விடை:
முறைப்படுத்த வேண்டிய

Question 2.
உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ………..
விடை:
மின்னணு எண்
ஒருங்கிணைப்பு மற்றும் கணினி

Question 3.
தகவல் என்பது ……. விவரங்கள் ஆகும்.
விடை:
தேவைக்கேற்ப
முறைப்படுத்தப்பட்ட

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 4.
ஐந்தாம் தலைமுறை ………… நுண்ணறிவு கொண்டது.
விடை:
செயற்கை

Question 5.
குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ……..
விடை:
அனலாக் கம்ப்யூட்டர்

III. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? எனக் கூறுக :

Question 1.
கணினி ஒரு மின்னணு இயந்திரம்.
விடை:
சரி

Question 2.
கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
விடை:
தவறு

Question 3.
கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்.
விடை:
சரி

IV. பொருத்துக .

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 90

V. ஒரிரு வரிகளில் பதிலளி

Question 1.
கணினி என்றால் என்ன?
விடை:
கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்ன ணு இயந்திரம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 2.
கணினியின் முன்னோடிகள் யாவை?
விடை:

  1. சார்லஸ் பாப்பேஜ் :
    சார்லஸ் பாப்பேஜ் கணிதப் பேராசிரியர். அவர்கள் பகுப்பாய்வுப் பொறியை வடிவமைத்தார். இவர் தான் கணினியின் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்.
  2. அகஸ்டா அடா லவ்லேஸ் :
    இவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் உலகின் முதல் கணினி நிரலர்’ எனப் போற்றப்படுகிறார்.

Question 3.
தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  1. தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் ஆகும்.
  2. இவை நேரடியாக நமக்கு பயன் தராது பொதுவாக எண், எழுத்து, படக்குறியீடுகளாக இருக்கும்.

Question 4.
ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறு.
விடை:
விசைப்பலகை, சுட்டி, பட்டைக் குறி படிப்பான், எண்ணியல் படக்கருவி போன்றவை.

Question 5.
மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 90.1

VI. விரிவான விடையளி :

Question 1.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
விடை:
கணினியின் பயன்பாடுகள் :

  1. கணினி துணிக்கடை, ரயில் நிலையம், வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களில் பயன்படுகிறது.
  2. கணினி படம் வரைய, கணக்கு போட, விளையாட பயன்படுகிறது.
  3. கணினி பொது அறிவு வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
  4. கணினி பல துறைகளில் பயன்படுகிறது. எ.கா. தொழில், கல்வி, மருத்துவம், அறிவியல், தகவல் தொடர்பு.
  5. கணினி தரவு மற்றும் தகவல்களைச் சேகரிக்க பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 95

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 1 வெப்பம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம்

6th Science Guide வெப்பம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
அ) வேகமாக நகரத் தொடங்கும்
ஆ) ஆற்றலை இழக்கும்
இ) கடினமாக மாறும்
ஈ) லேசாக மாறும்
விடை:
அ) வேகமாக நகரத் தொடங்கும்

Question 2.
வெப்பத்தின் அலகு …………
அ) நியூட்டன்
ஆ) ஜில்
இ) வோல்ட்
ஈ) செல்சியஸ்
விடை:
ஆ) ஜூல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை.
அ) 80° C
ஆ) 50° Cக்கு மேல் 80Cக்குள்
இ) 20° C
ஈ) ஏறக்குறைய 40° C
விடை:
ஈ) ஏறக்குறைய 40°

Question 4.
50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.
அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
ஈ) இரண்டின் வெப்பநிலையும் உயரும்
விடை:
ஆ). இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
வெப்பம் பொருளிலிருந்து ……. பொருளுக்கு பரவும்.
விடை:
வெப்பநிலை
அதிகமான, குறைவான

Question 2.
பொருளின் சூடான நிலையானது ……… கொண்டு கணக்கிடப்படுகிறது.
விடை:
வெப்பநிலை

Question 3.
வெப்பநிலையின் SI அலகு ………..
விடை:
கெல்வின்

Question 4.
வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ………… மற்றும் குளிர்விக்கும் பொழுது ………..
விடை:
விரிவடையும், சுருங்கும்

Question 5.
இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
விடை:
வெப்பச் சமநிலையில்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.
விடை:
சரி.

Question 2.
நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும். தவறு.
சரியான விடை : வெப்பம் உட்கவரும் போது நீராவி உருவாகும்.
விடை:
தவறு.

Question 3.
வெப்பவிரிவு என்பது. பொதுவாக தீங்கானது.
சரியான விடை : வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது அல்ல.
விடை:
தவறு.

Question 4.
போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.
விடை:
சரி.

Question 5.
வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.
சரியான விடை : இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.
விடை:
தவறு.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

IV. கீழ்க்கண்டவற்றிற்கு காரணம் தருக.

Question 1.
கொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.
விடை:
போரோசில் கண்ணாடி வெப்பத்திற்கு மிகக் குறைவாகவே விரிவடையும். எனவே விரிசல் ஏற்படுவதில்லை.

Question 2.
மின்கம்பங்களில் உள்ள மின்சாரக்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும்.
விடை:
உலோகங்கள் (மின்சாரக்கம்பி) கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும் எனவே தொய்வாகவும், குளிர்காலத்தில் சுருங்குகின்றன எனவே நேராகவும் இருக்கும்.

Question 3.
இரு உலோகத் தகடுகளைப் பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:

  • கடையாணி வெப்பப்படுத்தப்படுவதால் விரிவடைகிறது.
  • ஆணியின் அடிப்பக்கத்தை வெப்பமாக உள்ள போது சுத்தியலால் அடித்து மறுபுறமும் புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும்.
  • குளிரும் போது சுருங்குவதால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும்.

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 30

VI. ஒப்புமை தருக.

Question 1.
வெப்பம் : ஜில் :: வெப்பநிலை : ______
விடை:
கெல்வின்

Question 2.
பனிக்கட்டி : 0° C :: கொதி நீர் : _____
விடை:
100° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : _____
விடை:
வெப்பநிலை

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
விடை:

  1. மின் இஸ்திரிப் பெட்டி
  2. மின் வெப்பக்கலன்
  3. மின் நீர் சூடேற்றி

Question 2.
வெப்ப நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவு வெப்பநிலை எனப்படும்.

Question 3.
வெப்பவிரிவு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவது அப்பொருளின் வெப்பவிரிவு எனப்படும்.

Question 4.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.
விடை:

  1. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருள்களின் வெப்பநிலை சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனலாம்.
  2. வெப்பச்சமநிலையில் ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
விடை:

  1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
  2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
  3. வெப்பநிலை அதிகரிக்கும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85

IX. விரிவான விடையளி:

Question 1.
வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படும் போது அது விரிவடைகிறது. இது வெப்ப விரிவு எனப்படும்.
உதாரணங்கள் :

  1. இரயில் தண்டவாளம் அமைக்கும் போது அதன் இரு இரும்புப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. காரணம் வெயில் காலத்தில் அது விரிவடையும்.
  2. மேம்பாலங்களில் கற்காரைப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. ஏனெனில் கோடைக்காலத்தில் வெப்பத்தால் அவை விரிவடையும்.
  3. மின்கம்பங்களுக்கிடையே மின்சாரக்கம்பி கோடைக்காலங் களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும். காரணம் வெப்பம் அதிகம் உள்ள போது உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் சுருங்குகின்றன.
  4. இரு உலோகத் தகடுகளை இணைக்க சூடான கடையாணியை துளைகளில் பொருத்தி சுத்தியலால் அடித்து புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும். கடையாணி குளிரும் போது சுருங்குவதால் தகடுகளை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சிரமமாக உணர்கிறாய். இதற்கு என்ன காரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் அல்லது வெளியே உள்ள குளிர்ச்சி அறைக் குள்ளே கடத்தப்படுவதால் இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.
விடை:

  1. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் குளிராக உணர்வேன்.
  2. குளிர்கால இரவில் வெளியே காற்றின் வெப்பநிலை குறைவு. அறையினுள் அதிகம்.
  3. ஜன்னல் திறக்கும் போது வெப்பமானது அதிக வெப்ப நிலையுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு கடத்தப்படும்.
  4. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படும். எனவே அறையினுள் வெப்பநிலை குறைந்து நமக்கு குளிர் ஏற்படும்.

Question 2.
ஒருவேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்ப நிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
விடை:

  1. நமது உடல் சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும்.
  2. ஏனெனில் வெப்பமானது அதிக வெப்பநிலை உள்ள சுற்றுச் சூழலிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள நம் உடலுக்குச் செல்லும். ஆகவே நாம் வெப்பமாக உணர்வோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
விடை:
தகடானது வெப்பத்தால் விரிவடையும். எனவே தகட்டின் துளையின் விட்டம் அதிகரிக்கும்.

6th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) வேதி ஆற்றல்
ஈ) இயக்க ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
வெப்பநிலையின் SI அலகு.
அ) கலோரி
ஆ) ஜில்
இ) செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை:
ஈ) கெல்வின்

Question 3.
நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
அ) 0°C
ஆ) 32°C
இ) 100°C
ஈ) 110°C
விடை:
இ) 100°C

Question 4.
A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C
அ) 100°C
ஆ) 0°C
இ) 50°C
ஈ) 0° க்கும் 100°C க்கும் இடையே
விடை:
இ) 50°C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 5.
திரவத்தை குளிர்விக்கும் போது – ஆக மாறுகிறது.
அ) வாயு
ஆ) திண்மம்
இ) நீராவி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஆ) திண்மம்

II. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.

Question 1.
வெப்பம் செல்சியஸ் (அ) சென்டிகிரேடில் அளக்கப்படுகின்றது.
விடை:
தவறு

Question 2.
வெப்பநிலை என்பது ஒருவகை ஆற்றல்.
விடை:
தவறு

Question 3.
நமது உடலின் சராசரி வெப்பநிலை 37°C.
விடை:
சரி

Question 4.
இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும் வரை வெப்பம் தொடர்ந்து பரிமாற்றம் நடைபெறும்.
விடை:
சரி

Question 5.
அதிர்வுகள் ஒரு மூலக்கூறிலிருந்து அடுத்த மூலக்கூறிற்கு பாய்வதால் வெப்பம் பரவுகிறது.
விடை:
சரி

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85.1

IV. ஒப்புமை தருக.

Question 1.
வெயில் காலம் : விரிவடைதல் :: குளிர்காலம்: _____
விடை:
சுருங்குதல்

Question 2.
ஆவியாதல் : 100° C :: உறைதல் : _____
விடை:
0° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

V. காரணம் கூறுக.

1. மேம்பாலங்களில் கற்காரைப் பாலங்களுக்கிடையே சிறு இடைவெளி விடப்படுகிறது
கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும்.
2. 80°C வெப்பநிலையிலுள்ள இரும்பு குண்டினை 80°C வெப்பநிலை உள்ள நீரில் போடும் போது அது சுருங்குவதில்லை.
ஏனெனில் இரண்டும் வெப்பச் சமநிலையில் உள்ளன.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வெப்ப மூலங்கள் யாவை?
விடை:

  1. முதன்மை வெப்ப ஆற்றல் மூலம் சூரியன் ஆகும்.
  2. எரிதல், உராய்வு மற்றும் மின்சாரம் மூலமும் வெப்ப ஆற்றலை பெறலாம்.

Question 2.
வெப்பம் என்றால் என்ன? அலகு யாது?
விடை:

  1. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் வெப்பம் எனப்படும்.
  2. SI அலகு ஜூல். மேலும் கலோரி என்ற அலகும் பயன்படுத்தப் படுகிறது.

Question 3.
இரு பொருட்கள் வெப்பச் சமநிலையிலுள்ளன என எவ்வாறு அறியலாம்?
விடை:
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன என அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 4.
ஒரு கலோரி வரையறு.
விடை:
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கலோரி எனப்படும்.

Question 5.
இரு பொருட்களுக்கிடையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிப்பது எது?
விடை:
பொருட்களின் வெப்பநிலையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிக்கின்றன.

VII. விரிவான விடையளி

Question 1.
வெப்பத்தால் பொருளின் நீளத்தில் விரிவடைகிறது என்பதை ஓர் ஆய்வின் மூலம் விளக்குக.
விடை:

  1. வெப்பத்தால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு வெப்ப நீள்விரிவு எனப்படும்.
  2. ஒரு சைக்கிள் கம்பியின் ஒரு முனையை இணைப்புக் கம்பியோடும் தொடர்ந்து மின்கலன் மற்றும் மின்விளக்கோடும் இணைக்க வேண்டும்.
  3. விளக்கின் மறுமுனையை வேறு இணைப்புக்கம்பியோடு இணைத்து இணைப்புக்கம்பியை ஒரு நாணயத்தில் இணைத்து வைக்க வேண்டும்.
  4. நாணயத்தை சைக்கிள் கம்பியில் மோதாதவாறு சிறு இடைவெளியில் மரக்கட்டை மீது வைக்க வேண்டும்.
  5. இப்போது மின்சுற்று திறந்த சுற்றாக உள்ளது மின்விளக்கு எரியாது.
  6. சைக்கிள் கம்பியை வெப்பப்படுத்தினால் நீளம் அதிகரிக்கும் எனவே நாணயத்தில் மோதி மின்சுற்று மூடிய மின்சுற்றாகி விடும்.
  7. எனவே மின்விளக்கு எரியும்.
  8. இந்த ஆய்வின் மூலம் வெப்பத்தால் நீளம் விரிவடைவதை அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 90

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 91

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers

I. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்க்கண்டவற்றை நிரப்புக

Question 1.
நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ……. என்று அழைக்கலாம்.
விடை:
வாழிடம்

Question 2.
செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை மற்றும்……… என வகைப்படுத்தலாம்.
விடை:
ஒரு செல் மற்றும் பல
செல் உயிரினம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ……… பறக்கும் திசையை உதவுகிறது.
விடை:
கட்டுப்படுத்த

Question 4.
அமீபா உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது,
விடை:
பொய்க்கால்கள்

II. சரியா அல்லது தவறா? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
விடை:
சரி

Question 2.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
விடை:
தவறு.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.

Question 3.
ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
விடை:
சரி

Question 4.
பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
விடை:
சரி

Question 5.
பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.
விடை:
தவறு.
பார்மீசியம் ஒரு ஒருசெல் உயிரி .

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
வெப்பமண்டல மழைக் காடுகள். புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை …… என்று அழைக்கிறோம்.
விடை:
வாழிடம்

Question 2.
ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஒரு செல் உயிரினம்

Question 3.
மீனின் சுவாச உறுப்பு ………… ஆகும்
விடை:
செவுள்கள்

Question 4.
கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ………
விடை:
நடக்கின்றன

Question 5.
ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ……… சேமிக்கின்றன.
விடை:
கொழுப்பு

IV. குறு வினாக்கள்

Question 1.
பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிழக்கின்றன?
விடை:
பறவைகளின் உணவு பிடிக்கும் விதம் அதன் இனத்தை பொறுத்தது.

  • நீரில் வாழும் பறவைகள் தலைகீழாகப் பாய்ந்து அதன் அலகு மூலம் நீரில் உள்ள மீன்களைப் பிடிக்கிறது.
  • வயல்வெளிகளில் வாழும் பறவைகள், புல் மற்றும் வயல்களில் பறக்கும் சிறிய பூச்சிகளை தன் அலகு மூலம் பிடிக்கிறது.
  • வானத்தில் பறக்கும் பறவைகள் தரையில் உள்ள விலங்குகளை அதனுடைய காலிலுள்ள கூர்மையான நகங்கள் மூலம் பிடிக்கிறது.

Question 2.
இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்
விடை:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களைக் காணலாம்
ஒட்டகம் வாழும் இடங்கள்

  • ஜோத்பூர்
  • பஸ்கர்
  • பிக்கானர்
  • ஜாஸ்சால்மர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
விடை:
அமீபா இடப்பெயர்ச்சியின் போது விரல் போன்ற போலி கால்களை உருவாக்குகிறது. இக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 4.
பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
விடை:
பாம்பின் உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். அவை தலை, உடல், வால். தலையில் உள்ள உறுப்புகள் – இருகண்கள், இரு நாசித்துளைகள், வாய்.

Question 5.
பறவைகள் காற்றில் பறக்கும் போது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன.
விடை:
பறவைகள் பறக்கும் போது அதன் வாலைப் பயன்படுத்தி திசையை மாற்றிக் கொள்கிறது.

V. சிறு வினாக்கள்

Question 1.
ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக்
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 80
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 81

Question 2.
துருவக் கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.
விடை:
துருவக்கரடிகள் :

  1. குட்டையான கால்களைப் பெற்றுள்ளது.
  2. வெப்பத்தை குறைப்பதற்கு குறைந்த உடல் பரப்பை பெற்றுள்ளது.
  3. தடித்த தோலைப் பெற்றுள்ளது.
  4. உடல் முழுவதும் மென்மையான அதிகமான ரோமங்களை பெற்றுள்ளது.
  5. தோலுக்கடியில் தடித்த கொழுப்பு திட்டுகளை பெற்றுள்ளது.
  6. கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவையே உண்ணுகிறது.

பென்குயின் :

  1. படகு போன்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது.
  2. இதன் இறகுகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது.
  3. கடினமான தோலை பெற்றுள்ளது.
  4. இதன் அடித்தோல் அதிக கொழுப்பு திட்டுகளைக் கொண்டது.
  5. இது நீருக்குள் பறப்பதற்கு குட்டையான இறகுகளை (துடுப்புகள்) பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?
விடை:

  1. பறவைகளின் படகு போன்ற உடலமைப்பு.
  2. பறவைகளின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறுபாடு அடைந்திருத்தல்.
  3. உள்ளீடற்ற, வெற்றிடத்தினால் ஆன இலேசான எலும்புகளைப் பெற்றிருத்தல்.
  4. பறவைகளின் உடல் இறகுகளால் மூடப்பட்டிருத்தல்.

Question 4.
முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
விடை:

  1. புரோட்டோசோவா (ஓரு செல் உயிரிகள்)
  2. பொரிஃபெரா (துளையுடலிகள்)
  3. சீலென்டிரேட்டா (குழியுடலிகள்)
  4. பிளாட்டிஹெல்மின்திஸ் (தட்டைபுழு இனம்)
  5. நிமட்டோடா (உருளைப்புழு இனம்)
  6. ஆர்த்ரோபோடா (கணுக்காலிகள்)
  7. மொலஸ்கா (மெல்லுடலிகள்)
  8. எக்கினோ டெர்மேட்டா (முட்தொலிகள்)

VI. விரிவான விடையளி

Question 1.
பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
விடை:

  1. பாலைவனத்தில் சூடான மணலிருந்து தனது உடலை பாதுகாக்க நீண்ட கால்களைப் பெற்றுள்ளது.
  2. நீர் கிடைக்கும் போது அதிக நீரை அருந்தி தன் உடலில் நீரை சேர்த்து வைக்கிறது.
  3. தன் உடலில் உள்ள நீர் இழப்பை குறைக்க குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை வெளியேற்றுவதில்லை.
  4. அதன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் போது கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகிறது.
  5. பாலைவன மிருதுவான மணலில் நடக்க பெரிய தட்டையான திண்டுகால்களைப் பெற்றுள்ளது.
  6. நீண்ட கண் இமைகள் மற்றும் நீண்ட தோல் கண்கள் மற்றும் காதுகளை புழுதிப்புயலிலிருந்து பாதுகாக்கிறது.
  7. நாசி துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுக்க மூடிய நிலையில் உள்ளது.

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ் உள்ளவையில் எது ஒரு செல் உயிரி
அ. மீன்
ஆ. தவளை
இ. யூக்ளினா
ஈ. பல்லி
விடை:
இ. யூக்ளினா

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 2.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
அ. போலிக் கால்கள்
ஆ. சிலியா
இ. கசையிழை
ஈ.ஏதுமில்லை
விடை:
அ. போலிக் கால்கள்

Question 3.
நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரி
அ. தவளை
ஆ. மீன்
இ. புறா
ஈ. ஒட்டகம்
விடை:
அ. தவளை

Question 4.
எப்போதும் நீர் அருந்தாத விலங்கு
அ. எலி
ஆ. பூனை
இ. நாய்
ஈ. பசு
விடை:
அ. எலி

Question 5.
வேடந்தாங்கல் ____ சரணாலயம்
அ. பறவைகள் சரணாலயம்
ஆ. புலிகள் சரணாலயம்
இ. யானை சரணாலயம்
ஈ. மான்கள் சரணாலயம்
விடை:
அ. பறவைகள் சரணாலயம்

II. சரியா அல்லது தவறா ? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளில் செல் பிரிதல் மூலம் வளர்ச்சியடைகிறது.
விடை:
தவறு
ஒரு செல் உயிரிகளில் செல்களின் அளவு அதிகரிப்பின் மூலம் வளர்ச்சி அடைகிறது.

Question 2.
மீனின் படகு போன்ற உடலமைப்பு நீரில் எளிதாக நீந்த உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
மீனின் வால், திசையை திருப்பவும் நீரில் அதன் உடல் சமநிலை பெறவும் உதவுகிறது.
விடை:
சரி

Question 4.
பறவையின் பின்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.
விடை:
தவறு
பறவையின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறியுள்ளது.

Question 5.
பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
விடை:
சரி

III. படத்தில் பாகம் குறி

Question 1.
கீழ் உள்ள அமீபா படத்தில் A மற்றும் B எதைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 30
விடை:
A போலிக்கால்கள்
B உட்கரு

Question 2.
கீழ் உள்ள பரமேசிய படத்தில் A மற்றும் B பாகங்களைக் குறி
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 31
விடை:
A குறுயிழை
B சுருங்கும் நுண் குமிழ்

Question 3.
கீழ் உள்ள யூக்ளினா ) படத்தில் A மற்றும் B எப்பாகத்தைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 32
விடை:
A- கசையிழை
B உட்கரு

IV. குறுவிடை எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளின் இடப்பெயர்ச்சி உறுப்புக்களை கூறு
விடை:
அ. புரோட்டோ சோவா – போலிக்கால்கள்
ஆ. பாரமீசியம் – குறு இழைகள்
இ. யூக்ளினா – கசையிழை

Question 2.
வலசை போதல் என்றால் என்ன?
Answer;
ஒரு விலங்கு பருவ மாறுபாட்டின் காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லுதல்.

Question 3.
கோடை உறக்கம் என்றால் என்ன ?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா – நத்தை

Question 4.
குளிர்கால உறக்கம் என்றால் என்ன?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான குளிரை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா- ஆமை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 5.
இருமைப்பார்வை என்றால் என்ன?
விடை:
பறவைகள் ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் வெவ்வேறு பொருள்களை காண முடியும் இதற்கு இருமைப்பார்வை என்று பெயர்.

Question 6.
பாலைவனக்கப்பல் என எதை ஏன் அழைக்கின்றோம்.
விடை:

  • ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.
  • ஒட்டகம் பெரிய தட்டையான திண்டு கால்களை பெற்றுள்ளது.
  • இக்கால்களின் உதவியால் பாலைவன மிருதுவான மணலில் நன்றாக நடக்கிறது.

V. விரிவான விடையளி

Question 1.
பறவைகள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு
விடை:

  1. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட உடலைப் பெற்றுள்ளதால் குறைந்த எடையுடன் பறக்க உதவுகிறது.
  2. பறவைகளின் வாய்கள் அலகுகளாக மாறியுள்ளது.
  3. நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது.
  4. முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளது
  5. வெற்றிடத்தாலான எலும்புகளைப் பெற்றுள்ளது
  6. பறவைகளின் கால்கள் கூர்மையான நகங்களைப் பெற்றுள்ளதால், நடக்கவும், மரங்களின் கிளைகளை பற்றிக் கொள்ளவும் உதவுகிறது.
  7. பறவையின் வால் பறக்கும் திசையை மாற்ற உதவுகிறது.
  8. பறவையின் கண்கள் ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு பொருள்களை பார்க்க உதவுகிறது.

விலங்குகள் வாழும் உலகம் – மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 90