Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 5 செல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 5 செல்

6th Science Guide செல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு
அ) சென்டி மீட்டர்
ஆ) மில்லி மீட்டர்
இ) மைக்ரோ மீட்டர்
ஈ) மீட்டர்
விடை:
இ) மைக்ரோ மீட்டர்

Question 2.
நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.
அ) தாவர செல்
ஆ) விலங்கு செல்
இ) நரம்பு செல்
ஈ) மீட்டர்
விடை:
அ) தாவர செல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.
அ) செல் சுவர்
ஆ) நியூக்ளியஸ்
இ) நுண்குமிழ்கள்
ஈ) பசுங்கணிகம்
விடை:
ஆ) நியூக்ளியஸ்

Question 4.
கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
அ) ஈஸ்ட்
ஆ) அமீபா
இ) ஸ்பைரோ கைரா
ஈ) பாக்டீரியா
விடை:
இ) ஸ்பைரோகைரா

Question 5.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.
அ) செல்சுவர்
ஆ) சைட்டோபிளாசம்
இ) உட்கரு (நியூக்ளியஸ்)
ஈ) நுண்குமிழ்கள்
விடை:
ஆ) சைட்டோபிளாசம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
செல்களைக் காண உதவும் உபகரணம் ______
விடை:
மைக்ரோஸ்கோப் (அ)
நுண்ணோக்கி

Question 2.
நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ______
விடை:
பசுங்கணிகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?____
விடை:
செல் சவ்வ

Question 4.
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _____
விடை:
ராபர்ட் ஹூக்

Question 5.
நெருப்புக் கோழியின் முட்டை ____ தனி செல் ஆகும்.
விடை:
மிகப் பெரிய

III. சரியா? (அ) தவறா? என கூறுக. தவறாக இருப்பின் சரியான விடையை எழுதவும்.

Question 1.
உயிரினங்களின் மிகச் சிறிய அலகு’ செல்.
விடை:
சரி

Question 2.
மிக நீளமான செல் நரம்பு செல்.
விடை:
சரி

Question 3.
பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.
விடை:
சரி

Question 4.
தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.
விடை:
தவறு
சரியான விடை : நுண்ணுறுப்புகள் – செல்லினுள் காணப்படுகின்றன.

Question 5.
ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல் உருவாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 60

V. சரியான முறையில் வரிசைப்படுத்துக்

Question 1.
யானை, பசு, பாக்டீரியா, மாமரம், ரோஜாச் செடி
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 61

Question 2.
கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை.
விடை:
பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.

VI. ஒப்புமை தருக.

Question 1. புரோகேரியோட்: பாக்டீரியா :: யூகேரியோட் : _____
விடை:
தாவர செல்கள் / விலங்கு செல்கள்

Question 2.
ஸ்பைரோகைரா: தாவர செல்:: அமீபா : _____
விடை:
விலங்கு செல்

Question 3.
உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : _____
விடை:
மைட்டோகான்டிரியா

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆங்கில அறிவியலாளர் ராபர்ட் ஹீக் , 1665 ஆம் ஆண்டு மெல்லிய கார்க் (மரத் தக்கை) கை நுண்ணோக்கியைக் கொண்டு கண்டபோது செல்களைக் கண்டறிந்தார்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?
விடை:
யூகேரியாட்டிக் வகை செல்கள் ஆகும்.

Question 3.
செல்லின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:

  1. செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு
  2. திரவநிலை சைட்டோபிளாசம்
  3. உட்கரு

Question 4.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்புகள் எது?
விடை:

  1. செல் சுவர்
  2. பசுங்கணிகம்

Question 5.
யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக?
விடை:

  1. தாவர செல்கள்
  2. விலங்கு செல்கள்
  3. பெரும்பான்மையான பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள்

Question 6.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
விடை:
சைட்டோபிளாசம் நகரும் மையப்பகுதியாகும்.

Question 7.
சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன” என்கிறான். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?
விடை:
மறுக்கிறேன் – ஏனெனில் செல்லின் அளவிற்கும், உயிரினத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை.
(எ.கா) சுண்டெலியின் செல்லைவிட யானையின் செல் பெரியதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வாறே சிறிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காய செல்கள் பெரிதாக இருப்பதில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

VIII. குறுகிய விடையளி:

Question 1.
உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் – செல் எனப்படுகிறது ஏன்?
விடை:

  • ஒரு செங்கல் கட்டிடத்தின் அடிப்படை அலகாக இருப்பது போலவே, ஒரு செல் மனித, விலங்கு, தாவர உடலின் அடிப்படை அலகாக உள்ளது.
  • எனவே உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் செல் எனப்படுகிறது.

Question 2.
பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் நான்கு பாகங்களைக் குறி :
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 80

Question 3.
புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 85

Question 4.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 86

  • சென்டிரியோல் – தாவர செல்லில் காணப்படாது
  • செல்சுவர், பசுங்கணிகம் – விலங்கு செல்லில் காணப்படாது.

Question 5.
செல் உயிரியலில் இராபர்ட் ஹூக்கின் பங்களிப்பு பற்றி விளக்குக.
இராபர்ட் ஹூக் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்.
விடை:

  • அவர் அக்கால நுண்ணோக்கியை மேம்படுத்தி, கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.
  • அவர் நீர் லென்சைக் கொண்டு நுண்ணோக்கியின் கீழ் வைக்கப்பட்ட பொருளை கண்டறிந்தார்.
  • மரத்தக்கையின் சிறிய மெல்லிய பகுதியை, நுண்ணோக்கியிலிருந்து பார்த்து செல்களைக் கண்டறிந்தார்.
  • அதனடிப்படையில் 1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலில் ‘செல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
  • செல்லைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IX. விரிவான விடையளி :

Question 1.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 90

Question 2.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 91

X. செயல் திட்டம் (மாணவர்களுக்கானது)

1. உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி உங்களால் தாவர செல்லின் முப்பரிமாண படத்தை வரைக.
2. ஜெல்லி, கேக் போன்ற உணவு பொருட்களைப் பயன்படுத்தி செல்லை உருவாக்குக. அச்செல்லின் நுண்ணுறுப்புகளைக் குறிக்க கொட்டைகள் உலர் பழங்கள் போன்றவற்றை பயன்படுத்துக. இந்த மாதிரியை உங்கள் வகுப்பறையில் காட்சிப் பொருளாக வைத்து ஆசிரியர்களையும் மற்ற வகுப்பு மாணவர்களையும் அழைத்து அதைப் பார்க்கச் செய்க. அதைப் பற்றி அவர்களைக் கேள்விகள் கேட்கச் சொல்லி அதற்குரிய பதில்களை நீங்கள் கூறுங்கள்.

6th Science Guide செல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இப்புவியில் முதல் முதலில் உருவான செல்.
அ) யூகேரியாட்டிக் செல்
ஆ) ஆல்காக்களின் செல்
இ) பூஞ்சைகளின் செல்
ஈ) புரோகேரியாட்டிக் செல்
விடை:
ஈ) புரோகேரியாட்டிக் செல்

Question 2.
எஸ்ஸெரிச்சியா கோலை பாக்டீரியாவின் வாழிடம்.
அ) மண் வாழும் பாக்டீரியா
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா
இ) நீர் வாழும் பாக்டீரியா
ஈ) வாயு மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா
விடை:
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
இவை ஒளியை ஈர்க்க பயன்படும் நிறமி.
அ) பச்சையம்
ஆ) பசுங்க ணிகம்
இ) குரோமோபிளாஸ்ட்
ஈ) லூகோ பிளாஸ்ட்
விடை:
அ) பச்சையம்

Question 4.
கோழி முட்டையின் மையத்திலுள்ள மஞ்சள் நிறப்பகுதி.
அ) சைட்டோபிளாசம்
ஆ) செல் உறை
இ) சேமிப்பு உணவு
ஈ) உட்கரு
விடை:
ஈ) உட்கரு

II. உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம்:

Question 1.
உறுதிப்படுத்துதல் (A) : பசுங்கணிகம் ஒரு செல் நுண்ணுறுப்பு
காரணம் (R) : நுண்ணுறுப்பு என்பது தனிப்பட்ட அமைப்பு, பணி செய்யும் செல்லின் தனிப் பகுதி.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
அ) உறுதிப்படுத்துதல் – A மற்றும் காரணம் R சரியானது. R – Aஐ சரியாக விளக்குகிறது.

Question 2.
உறுதிப்படுத்துதல் (A) : மைட்டோகாண்டிரியா செல்லின் முக்கிய நுண்ணுறுப்பு ஆகும்.
காரணம் (R) : மைட்டோகாண்டிரியா உணவு தயாரித்தலில் ஈடுபடுகிறது.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
இ) A சரியானது ஆனால் R தவறானது.

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 95

IV. மிகக் குறுகிய விடையளி

Question 1.
பின்வரும் செல்களை அவற்றின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அ) பாக்டீரிய செல்
ஆ) தவளையின் முட்டை
இ) கோழியின் முட்டை
ஈ) மனித – அண்டம் (அ) முட்டை
விடை:
அ) பாக்டீரிய செல்
ஆ) மனித – அண்டம் (அ) முட்டை
இ) தவளையின் முட்டை
ஈ) கோழியின் முட்டை

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
உயிருள்ள செல்லை இறந்த செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுத்து வாய்.
விடை:

  • உயிருள்ள செல்களில் உட்கரு காணப்படும்.
    (எ.கா) வெங்காய சதைப்பற்றுள்ள இலையின் உட்புறசவ்வு
  • உயிரற்ற செல்களில் உட்கரு காணப்படாது. (எ.கா) மரத்தக்கை செல்கள்.

Question 3.
மிகப்பெரிய ஆஞ்சியோஸ்பெர்ம் தாவர செல் யாது?
விடை:
ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரப்பிரிவின் மிகப்பெரிய செல் சிட்ரஸ் ரெட்டிக்குலேட்டா (ஆரஞ்சு தசையில் தெளிவாகத் தெரியும்) சிட்ரஸ் மேக்ஸிமா.

Question 4.
செல்லின் நுண்ணுறுப்புகளில் உறையற்ற நுண்ணுறுப்பு?
விடை:
ரிபோசோம்களில் உறை காணப்படுவதில்லை.

Question 5.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C, D, என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 96

Question 6.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 97

Question 7.
பின்வரும் வரைபடத்தில் A, B, C, D என்னவென்று காண்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 98

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 99