Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் Questions and Answers, Notes.
TN Board 6th Science Solutions Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்
6th Science Guide உடல் நலமும் சுகாதாரமும் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ……… தேவைப்படுகிறது.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) நீர்
விடை:
இ) புரதம்
Question 2.
ஸ்கர்வி …….. குறைபாட்டினால் உண்டாகிறது
அ) வைட்டமின் A
ஆ) வைட்டமின் B
இ வைட்டமின்
ஈ) வைட்டமின் D
விடை:
இ) வைட்டமின் C
Question 3.
கால்சியம் _____ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) தாது உப்புகள்
விடை:
ஈ) தாது உப்புகள்
Question 4.
நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில்
அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
இ அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.
விடை:
இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
Question 5.
பாக்டீரியா, ஒரு சிறிய ———– நுண்ணுயிரி
அ) புரோகேரியோட்டிக்
ஆ) யூகேரியோட்டிக்
இ) புரோட்டோசோவா
ஈ) செல்லற்ற
விடை:
அ) புரோகேரியோட்டிக்
II. சரியா? தவறா?
Question 1.
நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
விடை:
தவறு
Question 2.
நம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.
விடை:
சரி
Question 3.
அனைத்து பாக்டீரியாக்களும் நீளிழைகளை பெற்றுள்ளன.
விடை:
தவறு
Question 4.
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.
விடை:
சரி
Question 5.
ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்
விடை:
தவறு
III. கோழட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
ஊட்டச்சத்து குறைபாடு….. நோய்களுக்கு வழிவகுக்கிறது.
விடை:
குறைபாட்டு
Question 2.
பெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு……. நோயை ஏற்படுத்துகிறது.
விடை:
காய்ட்டர்
Question 3.
வைட்டமின் D குறைபாடு …… நோயை ஏற்படுத்துகிறது.
விடை:
ரிக்கெட்ஸ்
Question 4.
டைபாய்டு நோய், ……. மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.
விடை:
உணவு
Question 5.
குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா)……….. நுண்ணுயிரியால் ஏற்படுகிறது
விடை:
வைரஸ்
IV. பின்வரும் ஒப்புமைகளை பூர்த்தி செய்க.
V. பொருத்துக.
VI. நிரப்புக
விடை:
VII. சிறுவினாக்கள்
Question 1.
கீழ்க் கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக
விடை:
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருள்கள் – நெய், பால்
அ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள் : வைட்டமின் C – ஸ்கர்வி, வைட்டமின் D-ரிக்கெட்ஸ்
Question 2.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.
விடை:
Question 3.
சரிவிகித உணவு வரையறு
விடை:
அனைத்துச் சத்துக்களும் போதுமான அளவில் உணவில் இருந்தால் அதற்கு சரிவிகித உணவு என்று பெயர்.
Question 4.
பழங்களையும் காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவக்கூடாது ஏன்?
விடை:
வைட்டமின்கள் இரு வகைப்படும்
- கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ADEK
- நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C
நீரில் கரையும் வைட்டமின்கள் B, மற்றும் C காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவும் போது கரைந்து விடும்.
Question 5.
வைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.
விடை:
1 – எய்ட்ஸ்
2 – ஹிபாட்டிட்டிஸ்
Question 6.
நுண்ணுயிரிகளின் முக்கிய பண்பு என்ன?
விடை:
- நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கலாம்
- பாக்டீரியாக்கள் – புரோகேரியாட்டிக் நுண்ணுயிரிகள்
- பாக்டீரியாக்கள் – ஒட்டுண்ணியாகவோ அல்லது தனியாக வாழும்.
- வைரஸ்கள் செல்லற்ற உயிரியாகும்.
- இவை உயிருள்ள செல்களில் மட்டுமே வாழும்
VIII. விரிவான விடையளி
Question 1.
வைட்டமின்களையும் அவற்றின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
6th Science Guide உடல் நலமும் சுகாதாரமும் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
சூரிய ஒளி வைட்டமின் என்பது
அ) A
ஆ) D
இ) C
ஈ) K
விடை:
ஆ) D
Question 2.
நெல்லிக்கனியில் அதிக அளவு காணப்படும் வைட்டமின்
அ) C
ஆ) E
இ) MI
ஈ) D
விடை:
அ) C
Question 3.
தாது உப்புகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) ஆற்றல் தரும் உணவு
ஆ) சரிவிகித உணவு
இ) உடல் வளர்ச்சிக்கான உணவு
ஈ) பாதுகாப்பு உணவு
விடை:
ஈ) பாதுகாப்பு உணவு
Question 4.
முருங்கை இலையில் உள்ள வைட்டமின்கள்
அ) A மற்றும் B
ஆ) C மற்றும் D
இ) K மற்றும் A
ஈ) A மற்றும் C
விடை:
ஈ) A மற்றும் C
Question 5.
ஒரு நாளைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நீரின் அளவு
அ) 2 லிட்டர்
ஆ) 3 லிட்டர்
இ) 1.5 லிட்டர்
ஈ) 1 லிட்டர்
விடை:
அ) 2 லிட்டர்
II. குறுகிய விடையளி
Question 1.
ஹோமியோஸ்டஸிஸ் வரையறு
விடை:
சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடலின் சமநிலையைப் பேணும் நிலையாகும்.
Question 2.
ஆறுவகையான பெரிய ஊட்டச்சத்துக்களை கூறுக.
விடை:
- கார்போஹைட்ரேட்
- கொழுப்புகள்
- புரதங்கள்
- தாது உப்புகள்
- வைட்டமின்கள்
- நீர்
Question 3.
ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?
விடை:
ஊட்டச்சத்து குறைபாடு என்பது நாம் உண்ணும் உணவில், நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருத்தல்
Question 4.
குவாஷியோர் மராஸ்மஸ் வேறுபடுத்துக. குவாஷியோர்
விடை:
Question 5.
கோழட்ட இடத்தை நிரப்புக
A – கால்சியம் , ரிக்கெட்ஸ், பாஸ்பரஸ் ………….
விடை:
A ஆஸ்டியோமலேசியா
B – அயோடின், கிரிட்டினிசம், இரும்பு ……….
விடை:
B இரத்த சோகை
III. விரிவான விடையளி.
Question 1.
அட்டவணையில் விடுபட்டுள்ள ABCDE மற்றும் F இடங்களை நிரப்புக.
விடை:
A – ஆற்றல் தருதல் B, வெண்ணெய், நெய், பால், மாமிசம்
C – முட்டை, மீன், பால், சோயாபீன்ஸ்.
D – உடல் வளர்ச்சி, செல் பழுது பார்த்தல்.
E- உடலில் பல்வேறு உயிர்வேதி வினைகள் நடைபெற உதவுதல்.
F – கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை பழங்கள்
Question 2.
உடற் பயிற்சியினால் நடைபெறும் நன்மைகளைக் கூறு,
விடை:
- வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை அதிகப்படுத்துதல்.
- வயது முதிர்ச்சியைத் தவிர்த்தல்.
- தசைகள் மற்றும் இதய இரத்த ஓட்ட மண்டலத்தை வலுப்படுத்துதல்.
- தடகள விளையாட்டு திறனை மேம்படுத்துதல் எடையைக் குறைத்தல்.
- உடற்பயிற்சியானது குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் உடல் பருமன் விளைவுகளை குறைக்கும்.
மனவரைபடம்