Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Questions and Answers, Notes.
TN Board 6th Science Solutions Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
Question 1.
பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்
அ) இட மாற்றம்
ஆ) நிற மாற்றம்
இ) நிலை மாற்றம்
ஈ) இயைபு மாற்றம்
விடை:
இ) நிலை மாற்றம்
Question 2.
ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.
அ) வேதியியல் மாற்றம்
ஆ) விரும்பத்தகாத மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) இயற்பியல் மாற்றம்
விடை:
ஈ) இயற்பியல் மாற்றம்
Question 3.
பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
இ) மீளா மாற்றம்
Question 4.
கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
அ) துருப்பிடித்தல்
ஆ) பருவநிலை மாற்றம்
இ) நில அதிர்வு
ஈ) வெள்ளப்பெருக்கு
விடை:
ஆ) பருவநிலை மாற்றம்
Question 5.
காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விடை:
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம். (மீள் / மீளா)
விடை:
மீள்
Question 2.
முட்டையை வேகவைக்கும் போது _____ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)
விடை:
மீளா
Question 3.
நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ______ மாற்றங்கள். (விரும்பத்தக்க / விரும்பத்தகாத)
விடை:
விரும்பத்தகாத
Question 4.
தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _____ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.
விடை:
இயற்கையான
Question 5.
பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ____ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ____ மாற்றம். (மெதுவான / வேகமான)
விடை:
வேகமான,
மெதுவான
III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.
விடை:
சரி
Question 2.
தீக்குச்சி எரிவது மீளா மாற்றம்.
தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.
விடை:
தவறு
Question 3.
அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் தவறு. ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
சரியான விடை : அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையான மாற்றம்.
விடை:
தவறு
Question 4.
உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.
சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் வேதியியல் மாற்றம்.
விடை:
தவறு.
Question 5.
உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு. கரைபொருள் ஆகும்.
சரியான
சரியான விடை : உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ‘ஒரு கரைப்பான் ஆகும்.
விடை :
தவறு
IV. ஒப்புமை தருக.
Question 1.
பால் தயிராதல்: மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :- _____ மாற்றம்.
விடை:
மீள்
Question 2.
ஒளிச்சேர்க்கை : _____ மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
விடை:
இயற்கையான
Question 3.
குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் : ____ மாற்றம்
விடை:
மீளா
Question 4.
உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : _____ மாற்றம்.
விடை:
விரும்பத்தகாத
Question 5.
தீக்குச்சி எரிதல்: ____ மாற்றம் :: பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.
விடை:
வேகமான
V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Question 1.
குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதை முளைத்தல்.
விடை:
கண் சிமிட்டுதல் (வேகமான மாற்றம்)
Question 2.
மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபி குவளை உடைதல், பால் தயிராதல்.
விடை:
பால் தயிராதல் (வேதியியல் மாற்றம்)
Question 3.
முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.
விடை:
முடி வெட்டுதல் (மனிதனால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்)
Question 4.
பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.
விடை:
மண்ணெண்ணெய் எரிதல் (வேதியியல் மாற்றம்)
VI. மிகக் குறுகிய விடையளி :
Question 1.
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
விடை:
மெதுவான, வேதியியல் மாற்றம்
Question 2.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
விடை:
ஆம், இயற்பியல் மீள் மாற்றம்
Question 3.
மெதுவான மாற்றத்தை வரையறு.
விடை:
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. (மணிகள் /நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் எனப்படும்.
(எ.கா.) நகம் / முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.
Question 4.
கரும்புச் சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.
விடை:
- சர்க்கரை என்பது சுக்ரோஸ் ஆகும்.
- சுக்ரோஸின் மூலக்கூறு வாய்ப்பாடு C12H22O11 (அ) C12 (H2O)11
- கரும்புச்சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து கார்பனாக சிதைவடைகிறது.
- இச்செயல்முறையின் மாற்றங்கள்
- வேதியியல் மாற்றம்
- மீளா மாற்றம்
Question 5.
கரைசல் என்றால் என்ன?
விடை:
கரைபொருள் கரைப்பானில் கரையும் போது கரைசல் உண்டாகிறது. கரைபொருள் + கரைப்பான் → கரைசல்
VII. குறுகிய விடையளி:
Question 1.
காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
விடை:
- காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றம் வேகமான மாற்றம் ஆகும்.
- ஏனெனில் இம்மாற்றம் நிகழ குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன.
Question 2.
காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.
விடை:
இல்லை, காடுகளை அழித்தல் விரும்பத்தகாத மாற்றம் ஆகும். ஏனெனில், சுற்றுச்சுழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் ஆகும்.
Question 3.
விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
விடை:
விதையிலிருந்து செடி முளைத்தல் ஒரு மெதுவான மாற்றம் ஆகும். இம்மாற்றம் நிகழ் அதிக நேரத்தை (மணிகள் / நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) எடுத்துக் கொள்கின்றன.
VIII. விரிவான விடையளி:
Question 1.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
அ) மெதுவான / வேகமான மாற்றம்
ஆ) மீள் / மீளா மாற்றம்
இ) இயற்பியல் / வேதியல் மாற்றம்
ஈ) இயற்கையான / செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ) விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றம்.
IX. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி.
Question 1.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
ஈ) உருகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
உ) மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்?
உமது பதிலை நியாயப்படுத்துக.
- மெழுகுவர்த்தி எரியும் போது உருவாகும் வெப்பத்தினால் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மெழுகு உருகுகிறது. இது ஒரு மீள் (அ) இயற்பியல் மாற்றம் ஆகும்.
- மேலும் மெழுகு உருகும் போது மெழுகு அளவும் குறைகிறது. உருகிய மெழுகுவை குளிர்விக்கும் போது அதனைத் திண்மமாக மாற்றலாம்.
6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
Question 1.
நீரைக் குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் ______
அ) உருகுதல்
ஆ) ஆவியாதல்
இ) ஆவி சுருங்குதல்
ஈ) உறைதல்
விடை:
ஈ) உறைதல்
Question 2.
சமைக்கும் போது காய்கறிகள் மென்மையாக மாறுதல் ஒரு.
அ) வேகமான மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) செயற்கையான மாற்றம்
ஈ) மீள் மாற்றம்
விடை:
இ) செயற்கையான மாற்றம்
Question 3.
ஏரிகள் மற்றும் ஆறுகளிலிருந்து நீர் ஆவியாதல் வினை ஒரு
அ) மெதுவான மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
விடை:
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
Question 4.
அயோடின் பதங்கமாதல் ஒரு
அ) வேதியியல் மாற்றம்
ஆ) இயற்பியல் மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
ஆ) இயற்பியல் மாற்றம்
Question 5.
வெள்ளி கொலுசு கருமையடைதல் ஒரு
அ) மீளா மாற்றம்
ஆ) தற்காலிக மாற்றம்
இ) குறைந்த நேர மாற்றம்
ஈ) தொடர்ச்சியான மாற்றம்
விடை:
அ) மீளா மாற்றம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
Question 1.
புதிய பொருட்களை உருவாக்கும் மாற்றம் ______
விடை:
வேதியியல் மாற்றம்
Question 2.
நிலக்கரி உருவாதல் _____ வகை மாற்றம்.
விடை:
மெதுவான மாற்றம்
Question 3.
இயற்கையாக நிகழும், விரும்பத்தகாத மாற்றத்திற்கு ஓர் உதாரணம் ________
விடை:
நில அதிர்வு
Question 4.
_____ ஒரு பொதுக்கரைப்பான்.
விடை:
நீர்
Question 5.
சுற்றுச்சூழல் நண்பனான மாற்றம் ______
விடை:
விரும்பத்தக்க மாற்றம்
III. பொருத்துக.
IV. ஒப்புமை தருக.
Question 1.
இரும்பு துருப்பிடித்தல் : விரும்பத்தகாத மாற்றம் :: இறந்த விரும்பத்தக்க மாற்றம் தாவரங்கள் உரமாதல் : ———-
Question 2.
தொட்டால் சிணுங்கி தாவரம் : ____ :: உணவு ஜீரணித்தல் : மீளா மாற்றம்
விடை:
மீள் மாற்றம்
Question 3.
பருவநிலை மாற்றம் : மெதுவான மாற்றம் :: கண்ணாடி உடைதல் : ______
விடை:
வேகமான மாற்றம்
Question 4.
நில அதிர்வு : விரும்பத்தகாத மாற்றம் :: இதயத்துடிப்பு : _____
விடை:
விரும்பத்தக்க மாற்றம்
Question 5.
வெள்ளி ஆபரணங்கள் கருமை அடைதல் : ____ நீர் கொதித்தல் : இயற்பியல் மாற்றம்
விடை:
வேதியியல் மாற்றம்
V. மிகக்குறுகிய விடையளி
Question 1.
வேகமான மாற்றத்திற்கு மூன்று உதாரணங்கள் தருக.
விடை:
- பலூன் வெடித்தல்
- கண்ணாடி உடைதல்
- காகிதம் எரிதல்
Question 2.
மீள் மாற்றம் என்றால் என்ன ?
விடை:
மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை மீள்மாற்றம் எனப்படுகின்றன.
Question 3.
இயற்பியல் மாற்றத்திற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:
- பனிக்கட்டி உருகுதல்
- உப்பு (அல்லது) சர்க்கரை நீரில் கரைதல்
- இரப்பர் வளையம் நீளுதல்
Question 4.
நீர் ஒரு பொதுக்கரைப்பான் ஏன்?
விடை:
நீர் பெரும்பாலான பொருட்களைக் கரைக்கப் பயன்படுவதால் ‘பொது கரைப்பான்’ என அழைக்கப்படுகிறது.
VI. விரிவான விடையளி
Question 1.
இயற்பியல் மாற்றம் மற்றும் வேதியியல் மாற்றத்தை வேறுபடுத்துக.
விடை:
Question 2.
இயற்கையான மற்றும் செயற்கையான மாற்றங்களைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
இயற்கையான மாற்றம் :
- இயற்கையில் தானாகவே நிகழும் மாற்றம்
- மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றம்
- எ.கா. புவி சுழற்சி, மழைபெய்தல், நிலவின் பல்வேறு நிலைகள்
செயற்கையான மாற்றம் மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றம்) : - இயற்கையில் தன்னிச்சையாக நிகழாத மாற்றம்
- மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்திய மாற்றங்கள்
எ.கா. சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடம் கட்டுதல்
Question 3.
நமது உடலில் நிகழும் பல்வேறு மாற்றங்களையும் அவற்றின் வகைகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
மனவரைபடம்