Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

6th Science Guide கணினி ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) மார்ட்டீன் லூதர் கிங்
ஆ) கிரகாம்பெல்
இ) சார்லி சாப்ளின்
ஈ) சார்லஸ் பாப்பேஜ்
விடை:
இ) சார்லஸ் பாப்பேஜ்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?
அ) கரும்பலகை
ஆ) கைப்பேசி
இ) வானொலி
விடை:
ஆ) கைப்பேசி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 3.
முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
அ) 1980
ஆ) 1947
இ) 1946
ஈ) 1985
விடை:
இ) 1946

Question 4.
கணினியின் முதல் நிரலர் யார்?
அ) லேடி வில்லிங்டன்
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்
இ) மேரி க்யூரி
ஈ) மேரிக்கோம்
விடை:
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

Question 5.
பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
அ) கணிப்பான்ஆ
ஆ) அபாகஸ்
இ) மின்அட்டை
ஈ) மடிக்கணினி
விடை:
இ) மின் அட்டை

II. கோழட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
தரவு என்பது……. விவரங்கள் ஆகும்.
விடை:
முறைப்படுத்த வேண்டிய

Question 2.
உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ………..
விடை:
மின்னணு எண்
ஒருங்கிணைப்பு மற்றும் கணினி

Question 3.
தகவல் என்பது ……. விவரங்கள் ஆகும்.
விடை:
தேவைக்கேற்ப
முறைப்படுத்தப்பட்ட

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 4.
ஐந்தாம் தலைமுறை ………… நுண்ணறிவு கொண்டது.
விடை:
செயற்கை

Question 5.
குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ……..
விடை:
அனலாக் கம்ப்யூட்டர்

III. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? எனக் கூறுக :

Question 1.
கணினி ஒரு மின்னணு இயந்திரம்.
விடை:
சரி

Question 2.
கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
விடை:
தவறு

Question 3.
கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்.
விடை:
சரி

IV. பொருத்துக .

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 90

V. ஒரிரு வரிகளில் பதிலளி

Question 1.
கணினி என்றால் என்ன?
விடை:
கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்ன ணு இயந்திரம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 2.
கணினியின் முன்னோடிகள் யாவை?
விடை:

  1. சார்லஸ் பாப்பேஜ் :
    சார்லஸ் பாப்பேஜ் கணிதப் பேராசிரியர். அவர்கள் பகுப்பாய்வுப் பொறியை வடிவமைத்தார். இவர் தான் கணினியின் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்.
  2. அகஸ்டா அடா லவ்லேஸ் :
    இவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் உலகின் முதல் கணினி நிரலர்’ எனப் போற்றப்படுகிறார்.

Question 3.
தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  1. தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் ஆகும்.
  2. இவை நேரடியாக நமக்கு பயன் தராது பொதுவாக எண், எழுத்து, படக்குறியீடுகளாக இருக்கும்.

Question 4.
ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறு.
விடை:
விசைப்பலகை, சுட்டி, பட்டைக் குறி படிப்பான், எண்ணியல் படக்கருவி போன்றவை.

Question 5.
மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 90.1

VI. விரிவான விடையளி :

Question 1.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
விடை:
கணினியின் பயன்பாடுகள் :

  1. கணினி துணிக்கடை, ரயில் நிலையம், வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களில் பயன்படுகிறது.
  2. கணினி படம் வரைய, கணக்கு போட, விளையாட பயன்படுகிறது.
  3. கணினி பொது அறிவு வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
  4. கணினி பல துறைகளில் பயன்படுகிறது. எ.கா. தொழில், கல்வி, மருத்துவம், அறிவியல், தகவல் தொடர்பு.
  5. கணினி தரவு மற்றும் தகவல்களைச் சேகரிக்க பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 95