Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 5 ஒலியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 5 ஒலியியல்

10th Science Guide ஒலியியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
அ. அலையின் திசையில் அதிர்வுறும்.
ஆ. அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை.
இ. அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
ஈ. அதிர்வுறுவதில்லை.
விடை:
(அ) அலையின் திசையில் அதிர்வுறும்

Question 2.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
அ. 330 மீவி-1
ஆ. 660 மீவி-1
இ. 156 மீவி-1
ஈ. 990 மீவி-1
விடை:
(அ) 330 மீவி-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 3.
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் (PTA-6)
அ. 50 kHz
ஆ. 20 kHz
இ. 15000 kHz
ஈ. 10000 kHz
விடை:
(ஆ) 20 kHz

Question 4.
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்ப நிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
அ. 330 மீவி-1
ஆ. 165 மீவி-1
இ. 330 × \(\sqrt{2}\) மீவி-1
ஈ. 320 × \(\sqrt{2}\) மீவி-1
விடை:
இ. 330 × \(\sqrt{2}\) மீவி-1

Question 5.
1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
அ. 27.52 மீ
ஆ. 275.2 மீ
இ. 0.02752 மீ
ஈ. 2.752 மீ
விடை:
இ 0.02752 மீ

Question 6.
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும் ?
அ. வேகம்
ஆ. அதிர்வெண்
இ. அலைநீளம்
ஈ. எதுவுமில்லை
விடை:
ஈ எதுவுமில்லை

Question 7.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி – எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன ?
அ. 17 மீ
ஆ. 20 மீ
இ. 25 மீ
ஈ. 50 மீ
விடை:
இ 25

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது _____ ஆகும்.
விடை:
அதிர்வுகள்

Question 2.
ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _____ லிருந்து _____ நோக்கி அதிர்வடைகிறது.
விடை:
வடக்கு, தெற்கு

Question 3.
450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒலியானது 33 மீவி | வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ______ (ஒலியின் திசைவேகம் = 330 மீவி-1).
விடை:
500 Hz

Question 4.
ஒரு ஒலி மூலமானது 40 கிமீ/மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கிமீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்
விடை:
2068 Hz

III. சரியா, தவறா? தவறு எனில் காரணம் தருக.

Question 1.
ஒலியானது திட, திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலி அலைகள் வெற்றிடத்தில் பரவாது.

Question 2.
நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
விடை:
சரி.

Question 3.
ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 4.
ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம்.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.

IV. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 10
விடை:
1-c,
2-d,
3-b,
4-a

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ, அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம்: ஏனெனில், ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
விடை:
கூற்று, காரணம் – இரண்டும் தவறு.

Question 2.
கூற்று: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.
காரணம்: திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

VI. குறு வினாக்கள்.

Question 1.
நெட்டலை என்றால் என்ன?
விடை:
ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அது நெட்டலை எனப்படும்.

Question 2.
செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
விடை:
20 Hz முதல் 20,000 Hz-க்கு இடைப்பட்ட அதிர்வெண் செவியுணர் ஒலியின் அதிர்வெண்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 3.
எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன? (GMQP-2019)
விடை:
எதிரொலி கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு 17.2 மீ ஆகும்.

Question 4.
அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி – வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?
விடை:
ஒலியின் அதிர்வெண் = n
அலைநீளம் λ = 0.20 மீ
ஒலியின் வேகம் V = nλ
∴ அதிர்வெண், n = \(\frac{\mathrm{V}}{\lambda}\)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 50

Question 5.
மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
விடை:
கொசு, டால்பின், வௌவால், நாய்.

VII. சிறு வினாக்கள்: –

Question 1.
ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்? [PTA-6]
விடை:

  1. மழைக்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
  2. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது.
  3. எனவே ஒலியானது கோடை காலங்களைவிட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுகிறது.

Question 2.
இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C-ஐ அடைய இயலும். அந்த வெப்ப நிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (V = 331 மீவி-1).
விடை:
வாயுவில் ஒலியின் திசைவேகம் (0°C யில்)
V0 = 331 மீவி-1
ராஜஸ்தானில் காற்றின் வெப்பநிலை
T = 46° C
VT = V0 + (0.61 × T) = 331 + (0.61 × 46) = 359.06 மீவி-1

Question 3.
இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்? [PTA-6]
விடை:

  1. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பதினால், குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  2. பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  3. இதனால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவிகளையும் ஒலித் தெளிவாக சென்றடையும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 4.
டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக. [GMQP-2019; Sep.20]
விடை:

  1. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது.
  2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெடைவெளியில் நகரும்போது.

VIII. கணக்கீடுகள்:

Question 1.
ஒரு ஊடகத்தில் 200 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 400 மீவி 1 வேகத்தில் பரவுகிறது. ஒலி அலையின் அலைநீளம்
காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
அலையின் அதிர்வெண், n = 200 Hz
ஒலியின் வேகம், V = 400 மீவி-1
கண்டறிய :
அலைநீளம் λ = ?
தீர்வு :
ஒளியின் திசைவேகம் V = nλ
∴ அலைநீளம், λ = \(\frac{\mathrm{V}}{n}\) = \(\frac{\mathrm{400}}{200}\) = 2 மீ.

Question 2.
வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 300 மீவி-1 எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில் உள்ளது?
விடை:
கொடுக்கப்பட்டவை :
நேரம், t = 9.8 விநாடிகள்
ஒலியின் திசைவேகம் = 300 மீவி-1
கண்ட றிய :
மேகக் கூட்டங்களின் உயரம், d = ?
தீர்வு :
v = \(\frac{d}{t}\)
∴ d = V × t
= 300 × 9.8
மேகக் கூட்டங்களின் உயரம் = 2940 மீ.

Question 3.
ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
அதிர்வெண், n = 600 Hz
கண்டறிய :
அலைவு நேரம், T = ?
தீர்வு :
T = \(\frac{1}{n}\) = \(\frac{1}{600}\) = 0.0017 விநாடிகள்
அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரம், T = 0.0017 விநாடிகள்.

Question 4.
ஒரு கப்பலிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கி மீயொலிக் கதிர்கள் செலுத்தப்படுகிறது. கடலின் ஆழத்தை அடைந்து எதிரொலித்து 1.6 விநாடிகளுக்குப் பிறகு ஏற்பியை அடைகிறது எனில் கடலின் ஆழம் என்ன? (கடல் நீரில் ஒலியின்
திசைவேகம் 1400 மீவி-1)
விடை:
கொடுக்கப்பட்டவை :
ஒலியின் திசைவேகம்,
V = 1400 மீவி-1
காலம், t = 1.6 விநாடி
கண்ட றிய : கடலின் ஆழம் d = ?
தூரம் (ஆழம்) = தூரம் × காலம்
தீர்வு :
2d = V × t
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 30

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 5.
ஒருவர் 680 மீ இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு செங்குத்தானச் சுவர்களுக்கு இடையே நிற்கிறார். அவர் தனது கைகளைத் தட்டும் ஓசையானது எதிரொளித்து முறையே 0.9 விநாடி மற்றும் 1.1 விநாடி இடைவெளியில் கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன?
விடை:
கொடுக்கப்பட்டவை :
முதல் எதிரொலியின் நேரம், t1 = 0.9 விநாடி
இரண்டாம் எதிரொலியின் நேரம்,
t2 = 1.1 விநாடி
மனிதனுக்கும் சுவருக்கும்
இடையிலான தூரம், d = 680 மீ
கண்டறிய :
காற்றில் ஒலியின் திசைவேகம்,
V = ?
தீர்வு :
V = \(\frac{2 d}{t}\)
V = \(\frac{2 d}{t_{1}+t_{2}}\)
V = \(\frac{2 \times 680}{(0.9+1.1)}\) = \(\frac{2 \times 680}{2}\) = 680 மீவி-1
காற்றில் ஒலியின் திசைவேகம் = 680 மீவி-1

Question 6.
இரண்டு கேட்குநர்கள் 4.5 கி.மீ இடைவெளியில் இரண்டு படகுகளை நிறுத்தியுள்ளனர். ஒரு படகிலிருந்து, நீரின் மூலம் செலுத்தப்படும் ஒலியானது 3 விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு படகை அடைகிறது. நீரில் ஒலியின் திசைவேகம் என்ன ?
விடை:
கொடுக்கப்பட்டவை :
இரண்டு கேட்குநர்களின் இடைவெளி,
d = 4.5 கி.மீ
நேரம், t = 3 விநாடிகள்
கண்டறிய : நீரில் ஒலியின் திசைவேகம் = ?
தீர்வு :
ஒலியின் திசைவேகம்,
V = \(\frac{d}{t}\)
d = 4.5 கி.மீ
d = (4.5 × 1000)
= 4500 மீ
V = \(\frac{4500}{3}\) = 1550 மீவி-1

Question 7.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன ?
விடை:
கொடுக்கப்பட்டவை :
மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய எடுக்கும் காலம் = \(\frac{1}{2}\)s
நீரில் ஒலியின் வேகம் = V = 1450 மீவி-1
கண்டறிய : கடலின் ஆழம் = ?
கடலின் ஆழம் (அ) ஒலி சைகை கடந்த தொலைவு
(d) = வேகம் × காலம்
= V × t
= 1450 × \(\frac{1}{2}\) = 725 மீ.

IX. நெடு வினாக்கள்

Question 1.
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
விடை:
ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்:
(i) அடர்த்தியின் விளைவு : வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும். எனவே, வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
v ∝ \(\sqrt{\frac{1}{d}}\)

(ii) வெப்பநிலையின் விளைவு : வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்ப நிலையின் இருமடி மூலத்திற்கு நேர் தகவில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது.
v ∝ \(\sqrt{\mathrm{T}}\)
வெப்பநிலை T°C-ல் திசைவேகமானது.
VT = (V0 + 0.61 T) ms-1
இங்கு V0 என்பது 0° C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு V0 = 331 மீவ-1!. எனவே ஒவ்வொருடிகிரி செல்சியஸ்வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீவி-1 அதிகரிக்கிறது.

(iii) ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு: காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 2.
ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி.
அ) அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு.
ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு.
இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு.
விடை:
ஒலி எதிரொலித்தல் : ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதுவே ஒலி எதிரொலித்தல் ஆகும்.
(அ)

  1. திடப்பொருளில் பயணிக்கும் ஒலி அலையின் இறுக்கங்கள் காற்று ஊடகத்தின் விளிம்பை அடைவதாகக் கொள்வோம்.
  2. அப்போது இறுக்கங்களானது, காற்று ஊடகத்தின் பரப்பில் F என்ற விசையைச் செலுத்தும்.
  3. அடர்குறை ஊடகம் (காற்று) குறைந்த அளவு உருக்குலைக்கும் பண்பை பெற்றுள்ளதால்
    இரண்டையும் பிரிக்கும் மேற்பரப்பு பின்னோக்கித் தள்ளப்படுகிறது.
  4. இதனால் அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
  5. இடமிருந்து வலமாக பயணித்த இறுக்கங்கள் எதிரொலிக்கப்பட்ட பின் தளர்ச்சிகளாக மாறி வலது புறத்திலிருந்து இடது புறமாகப் பரவுகிறது.

(ஆ)

  1. ஒரு நெட்டலையானது ஊடகத்தில் பரவும் போது இறுக்கங்களாகவும், தளர்ச்சிகளாகவும் பரவும். ஒலி அலையின் இறுக்கங்கள் இடமிருந்து வலமாக பரவி ஒரு சுவரில் மோதிக் கொள்வதாக கருதிக் கொள்வோம்.
  2. அவ்வாறு மோதிக்கொள்ளும் போது இறுக்கங்கள் சுவரினை நோக்கி F என்ற ஒரு விசையை செயல்படுத்தும்.
  3. அதே வேளையில் சுவரானது அதற்கு சமமான மற்றும் எதிர் திசையில் R = -F என்ற விசையை திரும்பச் செலுத்தும். இதனால் சுவற்றின் அருகில் மீண்டும் இறுக்கங்கள் ஏற்படும்.
  4. இவ்வாறு இறுக்கங்கள் சுவரில் மோதி மீண்டும் இறுக்கங்களாகவே எதிரொலிக்கிறது. அதன் திசை மட்டும் மாறியிருக்கும்.

(இ)

  1. வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு மாறுகிறது.
  2. குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் குறைகிறது. அதேபோல குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  3. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப் படுகிறது.
  4. ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்கவேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவான எதிரொலிக்கும் பகுதிகள் பயன்படுத்தப் படுகிறது.
  5. பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளையத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  6. இதனால், இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும், மீண்டும் மீண்டும் எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும் அடையும்.

Question 3.
அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன? (அல்லது) மீயொலி அலைகள் என்றால் என்ன?
ஆ) மியொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
விடை:
(அ) மீயொலி அதிர்வுறுதல் : (Sep.20)
மீயொலி அலைகள் 20,000 Hz-க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

  1. மனிதர்களால் கேட்க இயலாத அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள்.
  2. மீயொலி அலைகள் 2,000 Hz-க்கும் அதிகம்.
  3. எ.கா. வௌவால் ஏற்படுத்தும் ஒலி.

(ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் :

  1. கடலின் அடியில் நீர்மூழ்கிக் கப்பல்களின் தொலைவு மற்றும் ஏதேனும் பாறைகள் உள்ளதா என அறியவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் பயன்படுகிறது.
  2. மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனாகிராபி கருவியில் பயன்படுகிறது.
  3. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய பயன்படுகிறது.
  4. பாலில் வேண்டிய அளவு கொழுப்பு இவற்றை கலக்க உதவுகிறது.
  5. மீயொலி அதிர்வுகள் SONOR ல் பயன்படுத்தப்படுகிறது.
  6. விலங்குகளுக்கு இது தொடர்பு கொள்ள பயன்படுகிறது.
  7. மீயொலி தூய்மைப்படுத்துதல்.
  8. மீயொலி உருக்கி ஒட்டுதல் (Welding)

(இ) மீயொலி அதிர்வுகளை உணரும் மூன்று விலங்குகள் :

  1. நாய்கள், டால்பின்கள் – 40,000 Hz அதிர்வெண் கேட்கும் திறன்.
  2. வௌவால்கள் – 1,20,000 Hz அதிர்வெண் கேட்கும் திறன்.

Question 4.
எதிரொலி என்றால் என்ன?
அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக. (PTA-1)
ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக. (PTA-1; Sep.20)
இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க.
விடை:
ஒலி அலைகள் சுவர்கள், மேற்கூரைகள், மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே எதிரொலி ஆகும். (அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகள்

  1. எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையே 0.1 விநாடிகள் இருக்க வேண்டும்.
  2. எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தபட்சத் தொலைவானது காற்றில் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் 1/20 பகுதியாக இருக்க வேண்டும்.

(ஆ) மருத்துவ பயன்கள் :

  1. மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது.
  2. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.
  3. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது, இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

(இ) ஒலியின் திசைவேகத்தைக் கண்டறிதல் :
தேவையான கருவிகள்:
ஒலி மூலம், அளவு நாடா, ஒலி ஏற்பி மற்றும் நிறுத்துக் கடிகாரம்

செய்முறை:

  1. ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையேயானத் தொலைவை (d) அளவு நாடாவைப் பயன்படுத்தி அளந்து கொள்ளவும்.
  2. ஒலி ஏற்பியை ஒலி மூலத்திற்கு அருகில் வைக்கவும். தற்போது ஒலி சமிக்ஞைகள் ஒலி மூ லத்திலிருந்து வெளிப்படும்.
  3. நிறுத்துக் கடிகாரத்தைப் பயன்படுத்தி ஒலிமூலத்திலிருந்து வெளிப்பட்ட ஒலி சமிக்ஞைகளுக்கும், எதிரொலித்து வந்த ஒலி சமிக்ஞைகளுக்கும் இடையேயான கால இடைவெளியை’ எனக் குறித்துக் கொள்ளவும்.
  4. இந்த சோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து பார்க்கவும். சராசரி கால இடைவெளியைக் கணக்கிடவும்.

ஒலியின் திசைவேகம் கணக்கிடல் :
ஒலி மூலத்திலிருந்து வெளியான ஒலித்துடிப்பு ஒலி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒலி மூலம் வரையுள்ள 2d தொலைவை t நேரத்தில் கடந்து செல்கிறது. எனவே,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 55

கருத்துரு வினா

Question 1.
நிலவில் எழுப்பப்படும் ஒலியை கேட்க இயலுமா? எவ்வாறு கேட்கலாம்?
விடை:
கேட்க இயலாது. ஒலி பரவ ஊடகம் தேவை. நிலவில் வளிமண்டலம் இல்லை . ஆனால் மைக்ரோபோன் கொண்டு குறுக்கலையாக மாற்றப்படும் போது ஒலியை கேட்கலாம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ஒலி ஊடகத்தில் செல்லும் திசைவேகம் சார்ந்து கீழ்க்காணும் ஊடகங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. (PTA-1)
அ) காற்று > கண்ணாடி > நீர்
ஆ) நீர் > காற்று > கண்ணாடி
இ) கண்ணாடி <நீர் > காற்று
ஈ) கண்ணாடி > நீர் > காற்று
விடை:
(இ) கண்ணாடி < நீர் > காற்று

Question 2.
தகுந்த காரணங்களோடு தொடர்புப்படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்புக. (PTA-3)
அ) வௌவால்கள்: மீயொலி ; புவி அதிர்வு : குற்றொலி
ஆ) மெதுவாகப் பேசும் கூடம்: எதிரொலியின் பயன்பாடு; செயற்கைக்கோள் இருப்பிடம் அறிதல் : டாப்ளர் விளைவின் பயன்பாடு

2 மதிப்பெண்கள்

Question 1.
90 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூ லமானது ஒலியின் திசைவேகத்தில் (1/10) மடங்கு வேகத்தில், நிலையான இடத்தில் உள்ள கேட்குநரை அடைகிறது எனில் அவரால் உணரப்படும் அதிர்வெண் என்ன? (PTA-4)
விடை:
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி, ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 70
n’ = 100 Hz

Question 2.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன ? (PTA-5)
விடை:
மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய
எடுக்கும் காலம் = \(\frac{1}{2}\)s
நீரில் ஒலியின் வேகம் = V = 1450 மீவி-1
கடலின் ஆழம் (அ) ஒலி சைகை கடந்த தொலைவு (d) = வேகம் × காலம்
= V × t
= 1450 × \(\frac{1}{2}\) = 725 மீ.

Question 3.
500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது. 30 மீவி-1 வேகத்தில் ஓய்வில் உள்ள கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
(PTA-2)
விடை:
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி, ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 75

Question 3.
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்ணானது உண்மையான அதிர்வெண்ணில் பாதியாக இருக்க வேண்டுமெனில் ஒலி மூலம் எவ்வளவு வேகத்தில் கேட்குநரைவிட்டு விலகிச் செல்லவேண்டும்? (7 Marks) (PTA-5)
விடை:
ஒலி மூலமானது, ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும்போது, தோற்ற அதிர்வெண்ணிற்கான சமன்பாடு,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 78

4 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து ஒலி எதிரொலிப்புக் கோணத்தைக் கணக்கிடுக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 79
விடை:
படுகோணம் ∠i = ∠90° – ∠50°
∠i = 40°
எதிரொலிப்பு விதியின்படி,
∠i = ∠r
∠i = 40°
∴ எதிரொலிப்புக் கோணம்,
∠r = 40°

அரசு தேர்வு வினா-விடை

7 மதிப்பெண்கள்

Question 1.
ஒரு ஒலி மூலமானது 50 மீவி திசைவேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி நகருகிறது கேட்குநரால் உணரப்படும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணானது 1000 Hz ஆகும். அந்த ஒலிமூலமானது ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது உணரப்படும் தோற்ற அதிர்வெண் என்ன? (ஒலியின் திசைவேகம் 330 மீவி-1). (GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 90
ஒலி மூலத்தின் உண்மையான அதிர்வெண் 848.48 Hz. ஆகும். ஒலி மூலமானது கேட்குநரை விட்டு விலகிச் செல்லும்போது உள்ள தோற்ற அதிர்வெண்ணிற்கானச் சமன்பாடு.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 95
= 736.84 Hz.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

10th Science Guide அணுக்களும் மூலக்கூறுகளும் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
அ) 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
ஆ) 1ஹீலியம் அணு
இ) 2 கி ஹீலியம் அணு
ஈ) 1 மோல் ஹீலியம் அணு
விடை:
ஆ) 1 ஹீலியம் அணு

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
அ) குளுகோஸ்
ஆ) ஹீலியம்
இ) கார்பன்டை ஆக்சைடு
ஈ) ஹைட்ரஜன்
விடை:
இ) கார்பன்டை ஆக்சைடு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 3.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2-ன் பருமன்
அ) 22.4 லிட்டர்
ஆ) 2.24 லிட்டர்
இ) 0.24 லிட்டர்
ஈ) 0.1 லிட்டர்
விடை:
ஆ) 2.24 லிட்டர்

Question 4.
1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை
அ) 28 amu
ஆ) 14 amu
இ) 28 கி
ஈ) 14 கி
விடை:
ஈ) 14 கி

Question 5.
1 amu என்பது
அ) C-12ன் அணுநிறை
ஆ) ஹைட்ரஜனின் நிறை
இ) ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
ஈ) 0-16ன் அணு நிறை
விடை:
இ) ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை

Question 6.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) 12 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஆ) ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஈ) ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
விடை:
இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.

Question 7.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
அ) 11.2 லிட்ட ர்
ஆ) 5.6 லிட்டர்
இ) 22.4 லிட்டர்
ஈ) 44.8 லிட்டர்
விடை:
இ) 22.4 லிட்டர்

Question 8.
20Ca40 தனிமத்தின் உட்கருவில்
அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
விடை:
ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 9.
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
அ) 16 கி
ஆ) 18 கி
இ) 32 கி
ஈ) 17 கி
விடை:
இ) 32 கி

Question 10.
1 மோல் எந்த ஒரு பொருளும் …. மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்
அ) 6.023 × 1023
ஆ) 6.023 × 10-23
இ) 3.0115 × 1023
ஈ) 12.046 × 1023
விடை:
அ) 6.023 × 1023

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
இரு வேறு தனிமங்களின் அணுக்கள் ………….. நிறை எண்ணையும் ……………. அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.
விடை:
ஒத்த, மாறுபட்ட

Question 2.
ஒரே ………………….. எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
விடை:
நியூட்ரான்) (PTA-4)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 3.
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக …………….. முறையில் மாற்றலாம்.
விடை:
செயற்கை தனிமமாக்கல்

Question 4.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ……………. எனப்படும்.
விடை:
நிறை எண்

Question 5.
ஒப்பு அணுநிறை என்பது ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
திட்ட அணு நிறை

Question 6.
ஹைட்ரஜனின் சராசரி அணு நிறை = ………
விடை:
1.008 amu

Question 7.
ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை ……….. எனப்படும்.
விடை:
ஒத்த அணு மூலக்கூறுகள்

Question 8.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் …………….. ஆகும். (PTA-4)
விடை:
அணுக்கட்டு எண்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 9.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ……………. மி.லி. இடத்தை அடைத்துக்கொள்ளக்கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
விடை:
22400

Question 10.
பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ……….
விடை:
4

III. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 56
விடை:
1-ஆ,
2-இ,
3-உ,
4-அ,
5-ஈ

IV. சரியா? தவறா?
(தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்
விடை:
சரி.

Question 2.
மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மந்த வாயுக்கள் ஓரணு தனிமங்கள்.

Question 3.
தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு இல்லை.
விடை:
தவறு.
சரியான கூற்று : தனிமங்களின் கிராம் அணு நிறையை கிராமில் குறிப்பிடலாம்.

Question 4.
1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.
விடை:
சரி.

Question 5.
CO2ன் மூலக்கூறு நிறை 42 கி.
விடை:
தவறு
சரியான விடை: CO2-ன் மோலார் நிறை 44 கி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ள பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) A மற்றும் R சரி. R, A ஐ விளக்குகிறது
ஆ) A சரி R தவறு.
இ) A தவறு R சரி.
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.

Question 1.
கூற்று A: அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.
காரணம் R: ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன்-12ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்.
விடை:
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.

Question 2.
கூற்று A: குளோரினின் ஒப்பு மூலக்கூறு நிறை 35.5 amu.
காரணம் R: குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
விடை:
இ) A தவறு R சரி.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒப்பு அணுநிறை – வரையறு.
விடை:

  1. ஒரு தனிமத்தின் ஒப்பு அணுநிறை என்பது அத்தனிமத்தின் சராசரி அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
  2. இது ‘Ar’ என்று குறிப்பிடப்படுகிறது.
  3.  இதனை திட்ட அணு எடை’ எனவும் அழைப்பர்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 59

Question 2.
ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.
விடை:
ஆக்ஸிஜனின் ஐசோடோப்புகள்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 60

Question 2.
அணுக்கட்டு எண் – வரையறு.
விடை:

  1. மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் ” அணுக்கட்டு எண்’ ஆகும்.
  2. இவை இரண்டு வகைப்படும். அவை
    1. ஓரணு மூலக்கூறு,
    2. ஈரணு மூலக்கூறு,
    3. மூவணு மூலக்கூறு,
    4. பல அணு மூலக்கூறு.

Question 3.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டு கொடு.
விடை:

  1. HCl (ஹைட்ரஜன் குளோரைடு)
  2. CO (கார்பன் மோனாக்சைடு)

Question 4.
வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
விடை:

  1. திட்ட வெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மி.லி. பருமனை ஆக்கிரமிக்கும்.
  2. இது மோலார் பருமன் எனப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 5.
அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.
விடை:
அம்மோனியாவின் மூலக்கூறு வாய்ப்பாடு = NH3
NH3ன் கிராம் மூலக்கூறு நிறை
= [(14) + (3 × 1)] = 17 கி
அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 61
அம்மோனியாவின் மூலக்கூறு நிறை அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபு = 82.35%

VII. விரிவாக விடையளி

Question 1.
0.18கிநீர்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
நீரின் நிறை = 0.18கி
தீர்வு:
மூலக்கூறுகளின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 61.1

Question 2.
N2 + 3H2 → 2 NH3(N = 14, H = 1)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 62
விடை:
28, 6, 34.

Question 3.
மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக.
அ) 27 கி அலுமினியம்
ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
விடை:
அ) 27 கி அலுமினியம்
மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 63

ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 64

Question 4.
நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக. (Sep.20)
விடை:

  1. அணு என்பது பிளக்கக்கூடிய துகள்
  2. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன.
  3. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறைகளைப் பெற்றுள்ளன.
  4. அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்ற முடியும்.
  5. அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
  6. அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்
  7. ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலை கணக்கிட முடியும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 5.
ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
விடை:
ஒப்பு மூலக்கூறு நிறை:
ஒரு வாயு அல்லது ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறு வாயு அல்லது ஆவியின் நிறைக்கும், ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
ஆவி அடர்த்தி:
(i) மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.
(ii) Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 66
(iii) அவகாட்ரோ விதிப்படி சம பருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
(iv) Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 67
(v) n = 1 எனக் கொண்டால்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 68
(vi) ஹைட்ரஜன் ஈரணு மூலக்கூறு ஆதலால்,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 69
(vii) நாம் ஆவி அடர்த்தியை மூலக்கூறு நிறையுடன் கீழ்கண்டவாறு தொடர்புபடுத்தலாம்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 70
(viii) சமன்பாடு 2-ஐ 1-ல் பிரதியிட,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 71
(ix) குறுக்கே பெருக்க, 2 × ஆவி அடர்த்தி = வாயு (அ) ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை (அ) ஒப்பு மூலக்கூறு நிறை = 2 × ஆவி அடர்த்தி

VII. உயர் சிந்தனைக்கான வினாச்

Question 1.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும்போது கீழ்க்கண்டவாறு சிதைவடைகிறது.
CaCO3 → CaO + CO2
அ) இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது?
ஆ) கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடு.
இ) இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன்டை ஆக்சைடு வெளிவருகிறது?
விடை:
அ) இவ்வினையில் 1 மோல் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ) கால்சியத்தின் மோலார் நிறை = 40
கார்பனின் மோலார் நிறை = 12
ஆக்சிஜனின் மோலார் நிறை = 16
கால்சியம் கார்பனேட் (CaCO3)ன் கிராம் மூலக்கூறு நிறை = கால்சியத்தின் மோலார் நிறை + கார்பனின் மோலார் நிறை + ஆக்ஸிஜனின் மோலார் நிறை
= 40 + 12 + (16 × 3) = 100 கி/மோல்
இ) இவ்வினையில் 1 மோல் கார்பன்டை ஆக்சைடு வெளிவருகிறது.

IX. கணக்கீடுகள்

Question 1.
கீழ்க்கண்டவற்றின் நிறையைக் காண்க
அ) 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு
ஆ) 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு
இ) 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு
ஈ) 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு
விடை:
அ) 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு
H2ன் மூலக்கூறு நிறை = 2
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 2 × 2 = 4 கி

ஆ) 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு Cl2ன் மூலக்கூறு நிறை = 70.9
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை = 3 × 70.9 = 212.7கி

இ) 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு சல்பர் மூலக்கூறின் மூலக்கூறு நிறை = 32 × 8 = 256
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 5 × 256 = 1280 கி

ஈ) 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு பாஸ்பரஸ் மூலக்கூறின் மூலக்கூறு நிறை = 31 × 4 = 124
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 4 × 124 = 496 கி

Question 2.
கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க. (Ca = 40, C = 12, O = 16)
விடை:
CaCO3, ன் மோலார் நிறை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 69.2
CaCO3ல் உள்ள O-ன் சதவீதம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 69.3

Question 3.
Al2(SO4)3 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).
விடை:
Al2(SO4)3 ன் மோலார் நிறை
= (27 × 2) + (32 × 3) + (16 × 12) = 342 கி
Al2(SO4)3ல் உள்ள O-ன் சதவீதம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 70.5

Question 4.
போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B-10 மற்றும் B-11 சதவீத பரவலைக் காண்க.
விடை:
B-10ன் சதவீத பரவல் = x
B-11ன் சதவீத பரவல்
B-11 = (100 – x)
போரானின் சராசரி அணுநிறை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 72
10.804 × 100 = 1100 – x
1080.4 = 1100 – x
x = 1100 – 1080.4
x = 19.6%
B-10ன் சதவீத பரவல் = 19.6%
B-11ன் சதவீத பரவல்
B – 11 = (100 – x)
= 100 – 19.6
= 80.4%

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

செயல்பாடு 7.1

Question 1.
கீழ்க்கண்ட அட்டவணையை தகுந்த காரணிகளைக் கொண்டு நிரப்புக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 90

செயல்பாடு 7.2

Question 1.
கீழ்க்கண்ட மூலக்கூறுகளை அணுக்கட்டு எண்களின்படி வகைப்படுத்தி, அட்டவணைப்படுத்துக. ஃப்ளூரின் (F2), கார்பன் டை ஆக்சைடு (CO2), பாஸ்பரஸ் (P4), சல்பர் (S8), அம்மோனியா (NH3), ஹைட்ரஜன் அயோடைடு (HI), சல்ப்யூரிக் அமிலம் (H2SO4), மீத்தேன் (CH4), குளுக்கோஸ் (C6H12O6), கார்பன் மோனாக்சைடு (CO).
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 91

செயல்பாடு 7.3

Question 1.
ஒரே வெப்ப அழுத்த நிலையில் 3 லி O2, 5 லி Cl2, மற்றும் 6 லி H2ஐ எடுத்துக்கொண்டால்
(i) அதிக எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பது எது?
(ii) குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பது எது?
விடை:
(i) 6 லிட்டர் H2
(ii) 3 லிட்டர் O2

கருத்தியல் சிந்தனை

Question 1.
அனைத்து சேர்மங்களும் மூலக்கூறுகளே, ஆனால் அனைத்து மூலக்கூறுகளும் சேர்மங்கள் அல்ல, ஏன்?
விடை:

  1. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சேர்ந்து வினைபுரிந்தால், அவை சேர்மமாகிறது. எ.கா. கார்பன் அணு, ஆக்சிஜன் அணுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு என்ற சேர்மம் கிடைக்கிறது. இது CO என்ற ஒரு மூலக்கூறு ஆகும்.
  2. ஆகவே அனைத்து சேர்மங்களும் மூலக்கூறுகளே.
  3. ஆனால், அனைத்து மூலக்கூறுகளும் சேர்மங்கள் ஆகாது. ஏனெனில், ஒரே தனிமத்தின் அணுக்கள் ஒன்றாக சேர்ந்தால், அது சேர்மம் ஆகாது. அவை மூலக்கூறாகும். எ.கா. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தால், O2 என்ற மூலக்கூறுதான் உருவாகும். இது ஒரு சேர்மம் அல்ல.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
கீழ்க்கண்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. [PTA-4)
விடை:
(i) எலக்ட்ரான் குறிப்பிடத்தக்க நிறையை கொண்டவை
(ii) ஒரு வேற்றணு மூலக்கூறு வெவ்வேறு வகை அணுக்களால் உருவாகிறது.
(iii) ஒரு தனிமத்தின் நிறை எண்ணும் அணு எண்ணும் சமம்.
(அ) i, ii, iii சரி
(ஆ) மற்றும் iii சரி
(இ) ii மட்டும் சரி
(ஈ) iii மட்டும் சரி
விடை:
இ) ii மட்டும் சரி

Question 2.
ஓரலகு மூலக்கூறு ஒரே வகை அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பின் அது …… என அழைக்கப்படுகிறது.
(அ) ஓரணு மூலக்கூறு [PTA-6]
(ஆ) வேற்று அணுமூலக்கூறு
(இ) ஒத்த அணு மூலக்கூறு
(ஈ) பல அணுமூலக்கூறு
விடை:
இ) ஒத்த அணு மூலக்கூறு

அரசு தேர்வு வினா-விடை

Question 1.
(i) 1.51 × 1023 மூலக்கூறு நீரின் (H2O) நிறையைக் காண்க. (GMQP-2019)
(ii) 46 கி சோடியத்தின் மோல்களைக் காண்க.
(iii) 36 கி நீரில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை காண்க.
விடை:
(i) 1.51 × 1023 மூலக்கூறு நீர்
நீரின் மூலக்கூறு நிறை = 18 கி
மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 92
நிறை = மோல் × மூலக்கூறு
நிறை = 0.25 × 18 = 4.5 கி

(ii) மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 93

(iii) மூலக்கூறுகளின் எடை H2O = 18
மேலும், 18 கிராம் H2O = 1 மோல் H2O
36 கிராமுடன் H2O = 2 மோலுடன் H2O
1 மோலுடன் of H2O = 6.023 × 1023
மூலக்கூறுகளுடன் H2O = 1.204 × 1024 மூலக்கூறு H2O.

7 மதிப்பெண்கள்

Question 1.
அவகாட்ரோ விதியின் பயன்பாடுகள் ஏதேனும் இரண்டு கூறுக. (Sep.20)
விடை:

  1. கே லூசாக் விதியினை விவரிக்கிறது
  2. வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.
  3. வாயுக்களின் மூலக்கூறு வாய்பாட்டை கணக்கிடலாம்.
  4. மூலக்கூறு நிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை வருவிக்க உதவுகிறது.
  5. அனைத்து வாயுக்களின் கிராம் மோலார் பருமனை (22.4 லிட்டர் திட்டவெப்ப அழுத்த நிலையில்) கணக்கிடுவதில் பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 6 அணுக்கரு இயற்பியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 6 அணுக்கரு இயற்பியல்

10th Science Guide அணுக்கரு இயற்பியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் ………… எனக் கருதப்படுகிறது.
அ) தூண்டப்பட்ட கதிரியக்கம்
ஆ) தன்னிச்சையான கதிரியக்கம்
இ) செயற்கைக் கதிரியக்கம்
ஈ) அ மற்றும் இ
விடை:
(ஈ) அ மற்றும் இ

Question 2.
கதிரியக்கத்தின் அலகு
அ) ராண்ட்ஜ ன்
ஆ) கியூரி
இ) பெக்கொரல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
(ஈ) இவை அனைத்தும்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 3.
செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
அ) பெக்கொரல்
ஆ) ஐரின் கியூரி
இ) ராண்ட்ஜ ன்
ஈ) நீல்ஸ் போர்
விடை:
(ஆ) ஐரின் கியூரி

Question 4.
கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்?
(i) α – சிதைவு
(ii) β – சிதைவு
(iii) γ – சிதைவு
(iv) நியூட்ரான் சிதைவு
அ) (i) மட்டும் சரி
ஆ) (ii) மற்றும்
(iii) சரி
இ) (i) மற்றும்
(iv) சரி
ஈ) (ii) மற்றும்
(iv) சரி
விடை:
(ஆ) (ii) மற்றும்
(iii) சரி)

Question 5.
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு
அ) ரேடியோ அயோடின்
ஆ) ரேடியோ கார்பன்
இ) ரேடியோ கோபால்ட்
ஈ) ரேடியோ நிக்கல்
விடை:
(இ) ரேடியோ கோபால்ட்

Question 6.
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
அ) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
ஆ) திசுக்களைப் பாதிக்கும்
இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
ஈ) அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
விடை:
(இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்

Question 7.
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க …………… உறைகள் பயன்படுகின்றன. [PTA-3]
அ) காரீய ஆக்சைடு
ஆ) இரும்பு
இ) காரீயம்
ஈ) அலுமினியம்
விடை:
(இ) காரீயம்

Question 8.
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்
அ) (i) மற்றும் (ii) சரி
ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (iv) மட்டும் சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
விடை:
(ஈ) (iii) மற்றும் (iv) சரி!

Question 9.
புரோட்டான் – புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு.
அ) அணுக்கரு பிளவு
ஆ) ஆல்பாச் சிதைவு
இ) அணுக்கரு இணைவு
ஈ) பீட்டாச் சிதைவு
விடை:
இ) அணுக்கரு இணைவு

Question 10.
அணுக்கரு சிதைவு வினையில்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 40
அ) 8,6
ஆ) 8, 4
இ) 4, 8
ஈ) கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து காண இயலாது.
விடை:
(ஆ) 8, 4

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 11.
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
அ) கல்பாக்கம்
ஆ) கூடங்குளம்
இ) மும்பை
ஈ) இராஜஸ்தான்
விடை:
(அ) கல்பாக்கம்

Question 12.
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர்வினை நிகழும்.
(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்.
(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்.
(iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது.
அ) (i) மட்டும் சரி
ஆ) (i) மற்றும் (ii) சரி
இ) (iv) மட்டும் சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
விடை:
(ஆ) (i) மற்றும் (ii) சரி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 1

Question 1.
ஒரு ராண்ட்ஜ ன் என்பது ஒரு வினாடியில் நிகழும் ____ சிதைவுக்குச் சமமாகும்.
விடை:
2.58 × 10-4 கூலும்/கிகி

Question 2.
பாசிட்ரான் என்பது ஓர் ______
விடை:
எலக்ட்ரானின் எதிர்த்துகள்

Question 3.
இரத்தசோகையைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு ______
விடை:
இரும்பு-59

Question 4.
ICRP என்பதன் விரிவாக்கம் _____
விடை:
International Commission on Radiological Protection

Question 5.
மனித உடலின் மேல்படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவுவது _______
விடை:
டோசி மீட்டர்

Question 6.
_____ அதிக ஊடுறுவு திறன் கொண்டவை.
விடை:
காமா கதிர்கள்

Question 7.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 43
விடை:
பீட்டா துகள்

Question 8.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 44 இந்த வினை ____ சிதைவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
விடை:
காமா

Question 9.
ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் _____ ஜுல்.
விடை:
3.814 × 10-12

Question 10.
அணுக்கரு இணைவு வினை நடைபெறும் உயர் வெப்பநிலையானது ______ K என்ற அளவில் இருக்கும்.
விடை:
107 முதல் 107

Question 11.
வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு ______
விடை:
பாஸ்பரஸ் (P-32)

Question 12.
கதிரியக்கப் பாதிப்பின் அளவானது 100R என்ற அளவில் உள்ள போது, அது____ஐ உண்டாக்கும்.
விடை:
ரத்தப் புற்றுநோய்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 5

Question 1.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 50
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 52

Question 2.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 53
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 54

Question 3.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 55
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 56

Question 4.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 57
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 58

Question 5.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 59
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60

IV. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
புளுட்டோனியம் 239 பிளவுக்கு உட்படும் பொருளாகும்.
விடை:
சரி.

Question 2.
அணு எண் 83க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் அணுக்கரு இணைவிற்கு உட்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணு எண் 83க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை.

Question 3.
அணுக்கரு இணைவு என்பது அணுக்கரு பிளவினை விட அபாயகரமானது ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 4.
அணுக்கரு உலையில் எரிபொருளாக இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்-238 எரிபொருளாகப் பயன்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணுக்கரு உலையில் எரிபொருளாக இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்-235 எரிபொருளாகப் பயன்படுகிறது.

Question 5.
அணுக்கரு உலையில் தணிப்பான்கள் இல்லை எனில் அது அணுகுண்டாகச் செயல்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணுக்கரு உலையில் தணிப்பான்கள் இல்லை எனில், அது அணுகுண்டாகச் செயல்படாது.

Question 6.
அணுக்கரு பிளவின் போது, ஒரு பிளவில் சராசரியாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் உற்பத்தியாகும்.
விடை:
சரி

Question 7.
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாடு அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவு ஆகியவற்றில் பயன்படுகிறது.
விடை:
சரி.

V. கீழ்க்கண்டவற்றைச் சரியான வரிசையில் எழுதுக.

Question 1.
ஊடுருவு திறனின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக.
ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள்
விடை:
காமாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், ஆல்பாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள்

Question 2.
கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அணுக்கரு உலை, கதிரியக்கம், செயற்கைக் கதிரியக்கம், ரேடியம் கண்டுபிடிப்பு
விடை:
கதிரியக்கம் (1896), ரேடியம் கண்டுபிடிப்பு (1898), செயற்கைக் கதிரியக்கம் (1934), அணுக்கரு உலை (1942).

VI. தொடர்புபடுத்தி விடைக் காண்க.

Question 1.
தன்னிச்சையான உமிழ்வு: இயற்கைக் கதிரியக்கம் : : தூண்டப்பட்ட உமிழ்வு : ______
விடை:
செயற்கை கதிரியக்கம்

Question 2.
அணுக்கரு இணைவு: உயர் வெப்பநிலை : : அணுக்கரு பிளவு: _____
விடை:
அறை வெப்பநிலை

Question 3.
வேளாண்விளைச்சல் அதிகரிப்பு: ரேடியோ பாஸ்பரஸ் : : இதயத்தின் சீரான செயல்பாடு :______
விடை:
ரேடியோ சோடியம்

Question 4.
மின்புலத்தால் விலக்கம்: α- கதிர் : : சுழி விலக்கம் : _____
விடை:
γ கதிர் (காமா)

VII. கணக்கீடுகள் :

Question 1.
88Ra226 என்ற தனிமம் 3 ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 52.1
(அணு எண் 82, நிறை எண் 214)
∴ நியூட்ரான்களின் எண்ணிக்கை
= நிறை எண் – அணு எண்
= 214 – 82 = 132

Question 2.
கோபால்ட் மாதிரி, ஒரு வினாடியில் 75.6 மில்லி கியூரி என்ற அளவில் தூண்டப்பட்ட கதிரியக்கச்சிதைவினை வெளியிடுகிறது எனில் இச்சிதைவினைப் பெக்கொரல் அலகிற்கு மாற்றுக. (ஒரு கியூரி என்பது 3.7 × 1010 பெக்கொரல்).
விடை:
1 கியூரி = 3.7 × 1010
பெக்கொரெல் சிதைவு / விநாடி
75.6 மில்லி கியூரி = 75.6 × 10-3 × 1 கியூரி
∴ 75.6 × 10-3 × 3.7 × 1010
= 279.7 × 107 பெக்கொரல்

VIII.பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க. .

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஒரு நியூட்ரான் U235 மீது மோதி பேரியம் மற்றும் கிரிப்டான் என இரண்டுத் துகள்களை உருவாக்குகிறது.
காரணம்: U235 பிளவுக்குட்படும் பொருளாகும்.
விடை:
அகூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 2.
கூற்று : β – சிதைவின்போது நியூட்ரான் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது.
காரணம் : β சிதைவின் போது, அணு எண் ஒன்று அதிகரிக்கிறது.
விடை:
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.

Question 3.
கூற்று : அணுக்கரு இணைவிற்கு உயர் வெப்பநிலை தேவை.
காரணம் : அணுக்கரு இணைவில் அணுக்கருக்கள் இணையும் போது ஆற்றலை உமிழ்கிறது.
விடை:
அ) அகூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Question 4.
கூற்று: கட்டுப்படுத்தும் கழிகள் என்பவை நியூட்ரான்களை உட்கவரும் கழிகள் ஆகும்.
காரணம்: அணுக்கரு பிளவு வினையினை நிலை நிறுத்துவதற்காகக் கட்டுப்படுத்தும் கழிகள் பயன்படுகின்றன.
விடை:
அ) அகூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

IX. சுருக்கமான விடையளி.

Question 1.
இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஹென்றி பெக்கொரல்.

Question 2.
பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?
விடை:
யுரேனியம்

Question 3.
கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
போரான், அலுமினியம்.

Question 4.
இயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளியாகும் மின்காந்த கதிரின் பெயரை எழுதுக.
விடை:
காமா கதிர்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 5.
A – என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். இது α-துகளை வெளியிட்டு 104R259 என்ற தனிமத்தை
உருவாக்குகிறது எனில் A – தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண்ணைக் கண்டறிக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 55.1
A- தனிமத்தின் அணு எண்: 106
A – தனிமத்தின் நிறை எண்: 263

Question 6.
அணுக்கரு பிளவு வினையில் உருவாகும் சராசரி ஆற்றலை எழுதுக.
விடை:
3.2 × 10-11J

Question 7.
மரபியல் குறைபாட்டை உருவாக்கும் அபாயகரமான கதிரியக்கப் பொருள் எது?
விடை:
காமா.

Question 8.
ஒரு மனிதனில் இறப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ள கதிரியக்கப் பாதிப்பின் அளவு என்ன ?
விடை:
600 R.

Question 9.
எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?
விடை:
1942 சிகாகோ, USA.

Question 10.
கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.
விடை:
பெக்கொரல் (Bq).

Question 11.
எந்தெந்தப் பொருள்கள் கதிரியக்கப் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?
விடை:
காரீயத்திலான கையுறைகள், காரீயத்திலான மேலாடைகள்.

X. சிறு வினாக்கள்.

Question 1.
இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக. (PTA-1)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 55.5

Question 2.
வரையறு : மாறுநிலை நிறை
விடை:
தொடர்வினையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின், குறைந்த அளவு நிறை ‘மாறுநிலை நிறை’ எனப்படும்.

Question 3.
வரையறு : ராண்ட்ஜ ன்
விடை:

  1. ராண்ட்ஜ ன் என்பது காமா (γ) மற்றும் X கதிர்களால் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகு.
  2. ஒரு ராண்ட்ஜ ன் என்பது நிலையான அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோகிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது 2.58 x 10- கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும்.

Question 4.
சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடம்பெயர்வு விதியைக் கூறுக.
விடை:

  1. கதிரியக்கத் தனிமம் ஒன்று ஒரு – துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அணுஎண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
  2. கதிரியக்கத் தனிமம் ஒன்று B – துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 5.
அணுக்கரு உலையில் உள்ள கட்டுப்படுத்தும் கழிகளின் செயல்பாடுகளைத் தருக.
விடை:

  1. தொடர் வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைத் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுகிறது.
  2. போரான் மற்றும் காட்மியம் கழிகளே பெரும்பாலும் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நியூட்ரான்களை உட்கவரும் திறன் பெற்றவை.

Question 6.
ஜப்பானில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு புதிதாகப் பிறக்கும் சில குழந்தைகளுக்குப் பிறவிக்குறைபாடுகள் காணப்படுவது ஏன்?
விடை:

  1. 1945ல் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டின் கதிரியக்க பாதிப்பினால் பிறவிக் குறைபாடுகள் காணப்படுகின்றன.
  2. அனைத்துவித உயிர்களுக்கும் தீங்கிழைக்கக்கூடிய காமாக் கதிர்களை போன்ற கதிர்வீச்சுக்களும் இத்துடன் வெளியாகி இக்குறைபாடுகளை ஏற்படுத்தின.

Question 7.
ஒரு மருத்துவமனையில் திரு. ராமு என்பவர் X-கதிர் தொழில்நுட்பவியலாளராக உள்ளார். அவர் காரீயத்தாலான மேலாடையை அணியாமல் பணி செய்கிறார். அவருக்கு நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?
விடை:

  1. மருத்துவமனைகளில் X-கதிர்வீச்சு நிகழும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோசி மீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்கவர் அளவினை அறிந்து கொள்ள இயலும்.
  2. காரீயத்திலான மேலாடையை அணிந்து கொள்வது இன்றியமையாதது.

Question 8.
விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?
விடை:
சூரியனைப் போன்ற விண்மீன்கள், அதிக அளவு ஆற்றலை ஒளி மற்றும் வெப்ப வடிவில் உமிழ்கின்றன. இந்த ஆற்றலானது விண்மீன் ஆற்றல் எனப்படும்.

Question 9.
வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
விடை:

  1. கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
  2. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள் கெட்டுப் போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க பயன்படுகின்றன.
  3. சேமிக்கப்படும் சிலவகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி, அவைகளை நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையோடு பயன்படுத்திட இயலும்.
  4. சிறிதளவு கதிர்வீச்சின் மூலம் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அழுகிப் போகாமல் இருக்கச் செய்ய பயன்படுகிறது.
  5. பருப்பு வகைத் தானியங்களைச் சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பாதுகாக்கவும் இயலும்.

XI. விரிவாக விடையளி :

Question 1.
கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற தொடர் வினையை விளக்குக.
விடை:
தொடர்வினையினைக் கட்டுப்பாடான தொடர் வினை மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

அ) கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை
இவ்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று’ என்ற அளவில் உள்ளது. அதாவது, உட்கவரும் பொருட்களைக் கொண்டு வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதித்து, மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகின்றன. இத்தொடர் வினையின் மூலம் வெளியேற்றப்படும் ஆற்றல் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க
கட்டுப்பாடான தொடர்வினையே பயன்படுத்தப்படுகிறது.

ஆ) கட்டுப்பாடாற்ற தொடர்வினை
இவ்வினையில் எண்ணற்ற நியூட்ரான்கள் பெருக்கமும், அதன் காரணமாகப் பிளவும் அதிகமாக பிளவுப் பொருள்களும் உருவாகின்றன. இதன் முடிவில் ஒரு விநாடிக்குள் அதிகமாக ஆற்றல் வெளியேறுகின்றது.
இவ்வகை தொடர்வினையைப் பயன்படுத்தி அணு குண்டு வெடித்தல் நிகழ்த்தப்படுகிறது.

Question 2.
ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக. [PTA-3]
விடை:
இந்த மூன்று கதிர்களின் பண்புகளில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றன.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60.1
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60.2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60.3

Question 3.
அணுக்கரு உலை என்றால் என்ன? அதன் இன்றியமையாத பாகங்களின் செயல்பாடுகளை விவரிக்க.
விடை:
அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு பிளவு வினை நடைபெற்று மின் உற்பத்திச் செய்யும் இடமாகும். அணுக்கரு உலையின் இன்றியமையாத பாகங்களின் செயல்பாடுகள் எரிபொருள் :

  1. பிளவுக்குட்படும் பொருளே எரிபொருளாகும்.
  2. அணுக்கரு உலையில் பொதுவாகப் பயன்படும் எரிபொருள் யுரேனியம் ஆகும்.

தணிப்பான் :

  1. உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான்களைக் குறைந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான்களாகக் குறைப்பதற்குத் தணிப்பான் பயன்படுகிறது.
  2. எ.கா. கிராஃபைட் மற்றும் கனநீர்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 70

கட்டுப்படுத்தும் கழி :

  1. தொடர்வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுவது கட்டுப்படுத்தும் கழியாகும்.
  2. எ.கா. போரான் மற்றும் காட்மியம் கழிகளே பெரும்பாலும் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நியூட்ரான்களை உட்கவரும் திறன் பெற்றவை.

குளிர்விப்பான் :

  1. அணுக்கரு உலையினுள் உருவாகும் வெப்பத்தை நீக்குவதற்காகக் குளிர்விப்பான் பயன்படுகிறது.
  2. இதில் உருவாகும் நீராவியைக் கொண்டு விசையாழியை இயக்கி மின் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
  3. நீர், காற்று மற்றும் ஹீலியம் ஆகியவை சில குளிர்விப்பான்களாகும்.

XII. உயர் சிந்தனைக்கானவனாககள.

Question 1.
அணுக்கரு வினைக்குட்படும் கதிரியக்கத் தனிமம் ஒன்றின் நிறை எண்: 232, அணு எண் : 90 எனில் கதிரியக்கத்திற்குப் பின் காரீய ஐசோடோப்பாக மாறுகிறது. காரீய ஐசோடோப்பின் நிறை எண் 208 மற்றும் அணு எண் 82 எனில் இவ்வினையில் நிகழ்ந்துள்ள ஆல்பா மற்றும் பீட்டாச் சிதைவுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 70.2

Question 2.
X-கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக் கூடாது. காரணங்களை எழுதுக. [PTA-5]
விடை:
X- கதிர்கள் உடலை ஊடுருவிச் செல்லும் தன்மை உடையவை. எனவே, சில நுட்பமான பாகங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க காரீய உடை அணிவது நல்லது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 3.
அலை பேசி கோபுரங்கள் மனித வாழிடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட வேண்டும் – ஏன்?
விடை:
அலைபேசி கோபுரங்கள் உயர் அதிர்வெண் உடைய அலை அல்லது மைக்ரோ அலைகளை வெளியிடுகிறது. இம்மாதிரியான மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. புற்றுநோய், குழந்தைப் பிறப்பு கோளாறுகள், ஞாபகமறதி போன்றவற்றை ஏற்படுத்தும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
தகுந்த காரணங்களோடு தொடர்புபடுத்தி கோடிட்ட இடங்களை நிரப்புக. (PTA-6)
(அ) அணுக்கரு பிளவு : அணுகுண்டு அணுக்கரு இணைவு : ………
விடை:
ஹைட்ரஜன் குண்டு

(ஆ) கதிரியக்க அயோடின் : முன்கழுத்துக்கழலை கதிரியக்க சோடியம் :..
விடை:
இதயம் சீராக செயல்பட

2 மதிப்பெண்கள்

Question 1.
92U235 என்ற அணுக்கருவானது ஓர் ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் புதிதாக உருவாகும் சேய் உட்கருவின் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. (7 Marks) (PTA-1)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 80
நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண்- அணு எண்
= 231 – 91 = 140

Question 2.
கதிரியக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள் ஏதேனும் நான்கினை எழுதுக. (7 Marks)[PTA 2)]
விடை:
ரத்தச் சுழற்சியில் உள்ள குறைபாடுகளை அறியவும், எலும்புகளில் வளர்சிதை மாற்றக் குறைபாட்டினை அறியவும், மூ ளையில் உள்ள கட்டிகளை அறியவும் கதிரியக்க ஐசேடோப்புகள் பயன்படுகின்றன. ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், சல்பர் போன்ற சில கதிரியக்க ஐசோடோப்புகள் நோய்களைக் கண்டறியப் பயன்படுகின்றன.

Question 3.
U235 தனிமத்தின் அணுக்கரு பிளவு கீழ்க்கண்டவாறு நிகழ்கிறது. (4Marks) [PTA-4]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 86 வினையில் வெளியாகும் சேய் உட்கரு தனிமங்கள் X மற்றும் Yயினைக் காண்க.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 90

4 மதிப்பெண்கள்

Question 1.
(i) காமா கதிரியக்கத்தின் ஏதேனும் இரு பண்புகளை எழுதுக. [PTA-3]
விடை:

  1. காமா கதிர்கள் ஃபோட்டான்கள் எனப்படும் மின்காந்த அலைகளாகும்.
  2. இவை மின்சுமையற்றவை (அ) நடுநிலைத்துக்கள். காமாத்துகளின் மின்சுமை = சுழி.
  3. ஒளியின் திசைவேகத்தில் செல்லும்.

(ii) கட்டுப்படுத்தும் கழிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  1. தொடர்வினையை நிலைநிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுவது கட்டுப்படுத்தும் கழியாகும்.
  2. போரான் மற்றும் காட்மியம் கழிகளே பெரும்பாலும் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நியூட்ரான்களை உட்கவரும் திறன் பெற்றவை.

Question 2.
(i) கீழ்க்காண் அணுக்கரு வினையில் X எனும் உட்கரு Y எனும் உட்கருவாக மாறுகிறது. உட்கரு இன் அணு எண் மற்றும் நிறை எண்ணைக் காண்க. [PTA-5]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 92

(ii) 1 கிகி நிறை வழுவுடைய ஒரு கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின் போது வெளியாகும் மொத்த ஆற்றலைக் கணக்கிடுக.
விடை:
வினையின்போது நிறைவழு (m) = 1 kg
ஒளியின் திசைவேகம் (c) = 3 × 108 ms-1
ஐன்ஸ்டீ னின் நிறை ஆற்றல் சமன்பாடு,
E = mc2
= 1 × (3 × 108)2
E = 0.9 × 1017 J

Question 3.
தொழில் துறையில் கதிரியக்க! ஐசோடோப்புகளின் பயன்களை தருக. (PTA-4)
விடை:

  1. தொழிற்சாலைகளில் தயாரிப்பின்போது ஏற்படும் உற்பத்திக் குறைபாடுகளான விரிசல்கள் மற்றும் கசிவுகளைக் கண்டறிய கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
  2. பல்வேறுதொழிற்சாலைகளில் வாயுக்கள், திரவங்கள் மற்றும் திண்மங்களின் அளவுகளைக் கண்டறிய கதிரியக்க மூலங்கள் பயன்படுகின்றன.

7 மதிப்பெண்கள்

Question 1.
கதிரியக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள் ஏதேனும் நான்கினை எழுதுக. (PTA-2)
விடை:

  1. கதிரியக்க ஐசோடோப்புகள் – மருத்துவத் துறையில் இரண்டு : வகைகளில் வகைப்படுத்தப்பட்டு – பயன்படுத்தப்படுகிறது. அவை: 1
    நோயறிதல் 2) கதிரியக்கச் சிகிச்சை.
  2. ரத்தச் சுழற்சியில் உள்ள குறைபாடுகளை அறியவும், எலும்புகளில் வளர்சிதை மாற்றக் குறைபாட்டினை அறியவும், மூளையில் உள்ள கட்டிகளை அறியவும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
  3. ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், சல்பர் போன்ற சில கதிரியக்க ஐசோடோப்புகள் நோய்களைக் கண்டறியப்
    பயன்படுகின்றன.
  4. கதிரியக்க சோடியம் – 24 (Na24) இதயத்தைச் சீராக செயல்பட வைக்க உதவுகிறது.
  5. கதிரியக்க அயோடின் – 131 (I131) முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவுகிறது.
  6. கதிரியக்கப் பாஸ்பரஸ் – 32 (P32) தோல் நோய்ச் சிகிச்சையில் பயன்படுகிறது.

Question 2.
கதிரியக்க ஐசோடோப்புக்கள் தொழிற் சாலைகளில் எவ்வாறு பயன்படுகின்றன? [PTA-4]
விடை:

  1. தொழிற்சாலைகளில் தயாரிப்பின் போது ஏற்படும் உற்பத்திக் குறைபாடுகளான விரிசல்கள் மற்றும் கசிவுகளைக் கண்டறிய கதிரியக்க ஐசோடோப்புகள்
    பயன்படுகின்றன: பல்வேறு தொழிற்சாலைகளில் வாயுக்கள், திரவங்கள் மற்றும் திண்மங்களின் அளவுகளைக் கண்டறிய கதிரியக்க மூலங்கள் பயன்படுகின்றன.
  2. வானூர்திகளில் எடுத்துச் செல்லப்படும் சுமைகளில் வெடி – பொருள்கள் உள்ளனவா? என்பதனைக் கண்டறிய கலிபோர்னியம்-252(Cf252)பயன்படுகிறது.
  3. பல்வேறு தொழிற்சாலைகளில் புகையை உணரும் கண்டுணர்வியாக அமர்சியம்-241 (Am241)
    ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.

அரசு தேர்வு வினா-விடை

I மதிப்பெண்

Question 1.
தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்ற தனிமம் (GMQP-2019)
(அ) Ni
(ஆ) Pd
(இ) Pt
(ஈ) U
விடை:
(ஈ) U

4 மதிப்பெண்கள்

Question 2.
அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் தன்மைகளை எழுதுக. (PTA-6; GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 95

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 4 மின்னோட்டவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 4 மின்னோட்டவியல்

10th Science Guide மின்னோட்டவியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
(a) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
(c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
(d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
விடை:
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

Question 2.
மின்தடையின் SI அலகு (Qy-2019)
(a) மோ
(b) ஜூல்
(c) ஓம்
(d) ஓம் மீட்டர்
விடை:
(c) ஓம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 3.
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
(a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
(c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
(d) மின்விளக்கு மின்னேற்றமடையும்.
விடை:
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

Question 4.
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு? (GMQP-2019)
(a) மின்தடை எண்
(b) மின் கடத்து திறன்
(c) மின் ஆற்றல்
(d) மின் திறன்
விடை:
(c) மின் ஆற்றல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _____ பாய்ந்து செல்லாது.
விடை:
மின்னோட்டம்

Question 2.
மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத் திற்கும் இடையே உள்ள விகிதம் ______
விடை:
மின்தடை

Question 3.
வீடுகளில் ____ மின்சுற்று பயன்படுத்தப் படுகிறது.
விடை:
பக்க இணைப்பு

Question 4.
___ மற்றும் _____ ஆகியவைகளின் பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.
விடை:
மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 5.
LED என்பதன் விரிவாக்கம் _____.
விடை:
Light Emitting Diode

III. கீழ்கண்ட கூற்றுகள் சரியா? அல்லது தவறா? எனக் கூறு. தவறெனில் சரியானக் கூற்றை எழுதுக.

Question 1.
திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

Question 2.
வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி.
விடை:
சரி.

Question 3.
மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும்.

Question 4.
ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று : ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1 கிலோ வாட் மணிக்கு சமமாக இருக்கும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 5.
மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின் தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பைவிட குறைவாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும்போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.

IV. பொருத்துக. [PTA-5]

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 66
விடை:
i – உ,
ii – அ,
iii – ஆ,
iv – இ,
v – ஈ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: உலோகப்பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்
பட்டிருக்கும்.
காரணம்: இந்த இணைப்பினால் அதனோடு இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது தடுக்கப்படும்.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Question 2.
கூற்று: மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர் மின்வாய் பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.
காரணம்: உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Question 3.
கூற்று: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.
காரணம் : LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

VI. குறு வினாக்கள்

Question 1.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
விடை:
மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் – பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. எனவே
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 79

Question 2.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
விடை:
R ∝ \(\frac{\mathrm{L}}{\mathrm{A}}\) எனில் A என்பது குறுக்கு வெட்டு பரப்பு. இது R உடன் எதிர்விகிதத் தொடர்புடையது. எனவே Aன் மதிப்பு அதிகமாக இருக்கும் போது மின்தடையின் மதிப்பு குறையும்.

Question 3.
மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?
விடை:

  1. மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்டபொருள்களால் செய்யப்படுகிறது.
  2. ஏனெனில் சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது மின் உருகு இழை உருகி மின் சுற்று துண்டிக்கப்பட வேண்டும். ஆனால் டங்ஸ்டன் உயர் உருகுநிலையை உடையது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.
விடை:
மின்னோட்டத்தின் வெப்பநிலையை பயன்படுத்தி செயல்படும் இரு சாதனங்கள்:

  1. மின் சூடேற்றி (Electric heater)
  2. மின் அடுப்பு (Electric oven)

VII. சிறுவினாக்கள்

Question 1.
மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.
விடை:

  1. மின்னழுத்தம் : ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
  2. மின்னழுத்த வேறுபாடு: இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னூட்டத்தை மின் விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 70

Question 2.
வீட்டிலுள்ள மின்சுற்றில் புவித் தொடுப்புக் கம்பியின் பங்கு என்ன?
விடை:

  1. வீடுகளுக்கான மின்சுற்றில் பச்சை காப்புறை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பார்கள்.
  2. புவித் தொடுப்புக் கம்பியின் மறுமுனையானது பூமியில் புதைக்கப்பட்ட உலோக குழாய் அல்லது உலோக தகடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
  3. இந்த கம்பியானது மின்னோட்டத்திற்கு குறைந்த மின்தடையை தருகிறது. உலோகப் பரப்புடைய மின்சலவைப் பெட்டி, மேஜை மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்கருவிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும்.
  4. மின்கசிவினால் உருவாகும் ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்புக் கம்பி வழியாக புவிக்கு செல்கிறது. எனவே, புவித்தொடுப்புக் கம்பி இணைப்பானது ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்து மின்கசிவினால் உண்டாகும் மின்னதிர்ச்சியைத் தவிர்க்கிறது.

Question 3.
ஓம் விதி வரையறு.
விடை:
மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின்
முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
1 ∝ V. எனவே, \(\frac{1}{\mathrm{V}}\) = மாறிலி, இந்த மாறிலி மதிப்பு \(\frac{1}{\mathrm{R}}\) ஆகும்.
எனவே, 1 = (\(\frac{1}{\mathrm{R}}\))V
V = IR

Question 4.
மின் தடை எண் மற்றும் மின் கடத்து எண் ஆகியவற்றை வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 80

Question 5.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றில் எந்த வகை மின்சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:

  1. வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுகின்றன.
  2. ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது.
  3. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின் சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.

VIII .நெடு வினாக்கள்

Question 1.
மூன்று மின் தடைகளை
(அ) தொடர் இணைப்பு
(ஆ) பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைக்கான கோவையை தகுந்த மின்சுற்றுப் படம் வரைந்து கணக்கிடு.
விடை:
(அ)

  1. மின் தடையாக்கிகள் தொடர் இணைப்பு: ஒரு மின்சுற்றில் தொடர் இணைப்பு என்பது மின்கூறுகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து ஒரு மூடிய சுற்றை உருவாக்குவது ஆகும். தொடர் சுற்றில் மின்னோட்டமானது ஒரே ஒரு மூடிய சுற்றின் வழியாக பாயும்.
  2. இந்த மூடிய சுற்றில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைப்பட்டால் மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயாது.
  3. எனவே சுற்றில் இணைக்கப் பட்டுள்ள மின் சாதனங்கள் வேலை செய்யாது. விழாக்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் தொடர் விளக்குகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
  4. எனவே, மின் தடையாக்கிகள் தொடராக உள்ள போது ஒவ்வொரு மின் தடையாக்கியின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 86
  5. இங்கு மூன்று மின்தடையாக்கிகள் R1, R2, மற்றும் R3, தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. படத்தில் I என்ற மின்னோட்டம் இந்த மின்தடையாக்கிகள் வழியே செல்கிறது. மின்தடையாக்கிகள் R1, R2, மற்றும் R3, யின் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் முறையே V1, V2, மற்றும் V3, ஆகும்.
  6. ஓம் விதியின்படி
    V1 = IR1 …. (1)
    V2 = IR2 …. (2)
    V3 = IR3
    ஒவ்வொரு மின்தடைக்கும் எதிராக உள்ள மின்னழுத்த வேறுபாட்டின் கூடுதலை V எனலாம்.
    V = V1 + V2 +V3
    சமன்பாடுகள் (1), (2), மற்றும் (2)-யிலிருந்து
    V = IR1 + IR2 + IR3 …. (4)
  7. தொகுபயன் மின்தடை என்பது அனைத்து மின்தடையாக்கி களுக்கு பதிலாக அதே அளவு மின்னோட்டம் சுற்றின் வழியே செல்ல அனுமதிக்கும் ஒரு மின் தடையாக்கியின் மின்தடை ஆகும். இந்த தொகுபயன் மின்தடை Rs எனப்படும். எனவே,
    V = IRS ….. (5)
    சமன்பாடுகள் (4) மற்றும் (5), லிருந்து,
    IRS = I[R1 + R2 + R3]
    எனவே, RS = R1 + R2 + R3
  8. எனவே பல மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பில் இணைக்கப் படும் போது தொகுபயன் மின்தடை தனித்தனி மின் தடையாக்கிகளின் மின் தடைகளின் கூடுதலுக்கு சமம் என புரிந்துக் கொள்ளலாம். சம மதிப்பு உடைய ‘n’ மின்தடைகள் தொடரிணைபில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை ‘nR’ ஆகும். அதாவது, RS = nR மின்தடைகள்தொடரிணைப்பில் இணைக்கப்படும் போதுதொகுபயன்மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.

(ஆ) பக்க இணைப்பு :

  1. பக்க இணைப்பு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டமூடிய சுற்று இருக்கும்.
  2. ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுக்களின் வழியாக மின்னோட்டம் பாயும். நமது மின்தடையாக்கிகள் பக்க இணைப்பு வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 68
  3. மூன்று மின்தடையாக்கிகள் R1,R2 மற்றும் R3 யானது A மற்றும் B புள்ளிகளுக்கிடையே பக்க இணைப்பில் இணைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மின்தடையாக்கிக்கும் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடானது சமமாக இருக்கும். இது A மற்றும் B புள்ளிகளுக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு சமமாக இருக்கும்.
  4. ஒரு வோல்ட் மீட்டர் மூலமாக இந்த மின்னழுத்த வேறுபாடு அளவிடப்படுகிறது. புள்ளி A யை அடையும் மின்னோட்டம் | ஆனது I1, I2, மற்றும் I3, என பிரிந்து முறையே R1, R2, மற்றும் R3 வழியே செல்கிறது.
  5. ஓம் விதியின்படி
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 77
    மின் சுற்றிலுள்ள மொத்த மின்னோட்டம்
    I = I1 + I2 + I3
    சமன்பாடுகள் (6), (7) மற்றும் (8)-லிருந்து
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 78
    மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை Rp. என்க. எனவே
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 79.1
  6. எனவே பல மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப் படும் போது தனித்தனி மின்தடையாக்கிகளின் மின் தடையின் தலைகீழிகளின் கூடுதல் தொகுப்யன் மின்தடையின் தலைகீழிகளுக்கு சமம். சம மதிப்புடைய ‘n’ மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்பப்படும் போது அதன் தொகுபயன் மின்தடை \(\frac{\mathrm{R}}{\mathrm{n}}\) ஆகும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 82
  7. மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.

Question 2.
(அ) மின்னோட்டம் என்றால் என்ன? (PTA-1)
ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு. [PTA-1]
இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் – எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்? [PTA-1 &5]
விடை:
(அ)

  1. மின்னோட்டம் i என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
  2. அதாவது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும்.
  3. ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதி வழியாக Q அளவு மின்னூட்டம் ‘t’ காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டமானது I = \(\frac{\mathrm{Q}}{t}\)
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 87

(ஆ) மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில்
கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. எனவே,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89
(இ) மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி அம்மீட்டர். ஒரு அம்மீட்டரானது மின்சுற்றில் எப்பொழுதும் தொடரிணைப்பில் இணைக்கப்பட வேண்டும். அம்மீட்டர் மிகக் குறைந்த மின்தடையை உடையது. அதனை பக்க இணைப்பில் இணைத்தால் கருவி பழுதுபடும். அம்மீட்டரை இணைக்கும் மாதிரி சுற்றுப்படம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89.2

Question 3.
அ) ஜூல் வெப்ப விதி வரையறு.
ஆ) நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த உலோகக் கலவை மின்சார வெப்பமேற்றும் சாதனமாக
பயன்படுத்தப்படுவது ஏன்?
இ) ஒரு மின் உருகு இழை எவ்வாறு மின்சாதனங்களை பாதுகாக்கிறது?
விடை:
(அ) (i) R மின்தடையுள்ள மின்தடை யாக்கியின் வழியாக பாயும் மின்னோட்டம் I என்க. மின்தடையாக்கியின் முனை களுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு V என்க. t விநாடிகளில் மின்தடை வழியே பாயும் மின்னூட்டம் Q என்க.

(ii) Q மின்னூட்டத்தை மின்தடை யாக்கியின் முனை களுக்கிடையே உள்ள V மின்னழுத்த வேறுபாட்டில் இயக்க செய்யப்படும் வேலையானது VQ ஆகும். இந்த வேலை மின்தடையில் வெப்ப ஆற்றலாக மாறி வெளிப்படுகிறது. எனவே உருவாக்கப்பட்ட வெப்பம்
H = W = VQ
Q = It. என நமக்கு தெரியும்.
H = VIt ……. (1)

(iii) ஓம் விதியிலிருந்து, V= IR. எனவே H = I2 Rt ….. (2)
இது ஜூல் வெப்ப விதி எனப்படும். இவ்விதியின் படி ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது

  • அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்விகிதத்திலும்
  • மின்தடைக்கு நேர் விகிதத்திலும்
  • மின்னோட்டம் பாயும் காலத்திற்கு நேர் விகிதத்திலும் இருக்கும்.

(ஆ) மின் சலவைப் பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் வெப்பத்தினை உண்டாக்க நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நிக்ரோம் என்ற உலோக கலவையினால் ஆன சுருள் வெப்பமேற்றும் சாதனமாக பயன்படுகிறது. ஏனெனில் இப்பொருள்

  1. அதிக மின்தடையை கொண்டது,
  2. அதிக உருகுநிலை கொண்டது,
  3. விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது.

(இ) மின் உருகு இழை மின் சுற்றோடு தொடராக இணைக்கப்படும். சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது ஜூல் வெப்பவிளைவு காரணமாக மின் உருகு இழை உருகி மின்சுற்று துண்டிக்கப்படுகிறது. எனவே, மின்சுற்றும், மின்சாதனங்களும் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப் படுகிறது. மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருள்களால் செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும். (Sep.20).
விடை:
(i) மின் நிலையங்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமானது வீடுகள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட கம்பிவடங்கள் அல்லது மின்கம்பங்களின் மீது வரும் கம்பிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

(ii) நமது வீடுகளில் மின்னியல் வல்லுநர்களால் உருவாக்கப்படும் மின்சுற்றுக்கள் மூலமாக மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மின்மாற்றி போன்ற மின் பகிர்மான செய்யும் இடத்திலிருந்து மின்னோட்டமானது முதன்மைமின்னளவி பெட்டிக்கு கொண்டுவரப்பப்படுகிறது. முதன்மை மின்னளவிப் பெட்டியில் இரண்டு முக்கிய பாகங்கள் இருக்கும்.
(i) மின் உருகு இழை
(ii) மின்னளவிப் பெட்டி.
(iii) மின்னளவிப் பெட்டி எவ்வளவு மின்னாற்றல் பயன்படுத்தபடுகிறது என்பதனை அளவிடுகிறது. மின் உருகு இழை என்பது ஒரு சிறிய கம்பி இழை அல்லது ஒரு சிறிய மின்சுற்று உடைப்பி (MCB). வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாப்பதே மின் உருகு இழை அல்லது மின்சுற்று உடைப்பியின் பணி ஆகும்.

(iv) மின்சுற்று உடைப்பி என்பது தானாகவோ அல்லது கைமுறை உள்ளீடு மூலமாகவோ செயல்படுத்தக் கூடிய ஒரு சாவி ஆகும். இந்த சாவியைச் சுற்றி சிறிய கம்பிச் சுருள் சுற்றியிருக்கும். மின் சுற்றில் அதிகப்படியாக மின்னோட்டம் செல்லும் போது சுற்றியுள்ள கம்பி சுருளானது மின்காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது. எனவே, மின் சுற்று உடைக்கப்பட்டு மின் சாதனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

(v) வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின் காப்பிடப்பப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை கொண்ட கம்பி. அது மின்னோட்ட கம்பி எனப்படும். கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி எனப்படும்.

(vi) நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது 220 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறு திசை மின்னோட்டமாகும். இவ்விரு கம்பிகளும் வாட்-மணி மீட்டருடன் (மின்னளவிப் பெட்டி) இணைக்கப்பட்டுள்ளன. மின்னோட்ட கம்பி மின்உருகு இழை வழியாக மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நடுநிலை கம்பி நேரடியாக மின்னளவிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ளது.

(vii) மின்னளவிப் பெட்டியிலிருந்து வரும் கம்பியானது முதன்மைச் சாவியுடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த சாவியானது தேவைப்படும் போது மின்னோட்டத்தை நிறுத்துவதற்கு பயன்படுகிறது.

(viii) முதன்மை சுற்றியிலிருந்து வரும் மின்னோட்ட கம்பிகள் வீட்டினுள் அமைக்கப்பட்டிருக்கும் தனித் தனிச் சுற்றுகளுக்குத் திறனை வழங்கும். இரு வகையான மின்சுற்றுகள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின் பல்புகள், மின் விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 5 A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

(ix) குளிர்சாதன பெட்டிகள், நீர் சூடேற்றிகள், மின் சலவை பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அடங்கிய மின்திறன் சுற்றுகளுக்கு 15A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

(x) வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுவதால் ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின்சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.

Question 5.
அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LEDதொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை? (PTA-6)
ஆ) LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக. [PTA-1]
விடை:
(அ) LED தொலைகாட்சியின் நன்மைகள்

  1. இதன் வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
  2. இது மெல்லிய அளவுடையதாக இருக்கும்.
  3. குறைவான சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைவான ஆற்றலை நுகர்கிறது.
  4. இதன் ஆயுட்காலம் அதிகம்.
  5. இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.

(ஆ)LED விளக்கின் நன்மைகள்

  1. LED-ல் மின் இழையில்லாத காரணத்தினால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. மின் இழை மின் விளக்கைவிட குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.
  2. ஒளிரும் மின் இழை பல்புடன் ஒப்பிடும் போது இது குறைந்த திறனை நுகரும்.
  3. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
  4. பல நிறங்களில் வெளியீட்டினை பெற்றுக் கொள்ள சாத்தியமாகிறது.
  5. மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையது.
  6. பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் பயன்படுத்தப்படு வதில்லை.
  7.  மின்னாற்றல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழி களில் ஒன்று அதிக எண்ணிக்கையிலான LED மின் விளக்குகளை பயன்படுத்துதல் ஆகும்.

IX. கணக்குகள்

Question 1.
ஒரு மின் சலவைப் பெட்டி அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 420 வாட் மின்திறனை நுகர்கிறது. குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 180 வாட் மின் திறனை நுகர்கிறது. அதற்கு 220 , வோல்ட் மின்னழுத்தம் கொடுக்கப்பட்டால் இரு நிலைகளிலும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவுகளை கணக்கிடு.
விடை:
கொடுக்கப்பட்டவை: மின்சலவைப் பெட்டி நுகரும் மின்திறன் = 420 வாட்
மின்னழுத்த வேறுபாடு
v = 220V
கண்டறிய:
மின்னோட்டம் I = ? ஒவ்வொரு நிகழ்விலும்
தீர்வு :
P = VI.
∴ I = \(\frac{\mathrm{P}}{\mathrm{V}}\) = \(\frac{\mathrm{420}}{\mathrm{220}}\) = \(\frac{21}{11}\)
அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது மின்னோட்டம் I = 1.909 A
குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது
P = 180 வாட்
கொடுக்கப்பட்ட மின்னழுத்தம் = 220 V
I = \(\frac{P}{V}\)
குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது, மின்னோட்டம் –
= \(\frac{180}{220}\) = \(\frac{99}{11}\) = 0.818 A

Question 2.
100 வாட் மின் திறனுள்ள ஒரு மின் விளக்கு தினமும் 5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இது போல நான்கு 60 வாட் மின் விளக்கு தினமும் 5 மணி ! நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றலை கிலோ வாட் மணி அலகில் கணக்கிடு.
விடை:
கொடுக்கப்பட்டவை:
ஒரு 100 வாட் மின்விளக்கினால் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் = 100 வாட் காலம் = 5 மணிநேரம் (தினசரி).
ஜனவரி மாதத்தில் நுகர்வு = 31 நாட்கள் நான்கு 60 வாட் மின்விளக்குகளின் மின்னோட்டம் பயன்பாடு = தினசரி 5 மணிநேரம். கண்டறிய :
ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றல் =? (கிலோ வாட் மணி அலகில்)
தீர்வு :
100 வாட் மின்விளக்கால் நுகரப்பட்ட ஆற்றல்
= பல்பின் திறன் × காலம்
= 100 × 31 × 5 = 15500
100 வாட் மின்விளக்கால் பயன்படுத்தப்பட்ட
ஆற்றல் = 15.5 கிலோவாட் மணி
60 வாட் மின்விளக்கு நான்கால் நுகரப்பட்ட ஆற்றல் = 4 × 60 × 5 × 31
= 37,200 கிலோவாட் மணி
நான்கு 60 w மின்விளக்கு
= 37.2 கிலோ வாட் மணி
ஜனவரியில் நுகரப்பட்ட மொத்த ஆற்றல்
= 15.5 + 37.2
= 52.7 கிலோ வாட் மணி

Question 3.
மூன்று வோல்ட் மின்னழுத்தம் மற்றும் 600 மில்லி ஆம்பியர் மின்னோட்டமும் பாயும் ஒரு டார்ச் விளக்கினால் உருவாகும்
அ) மின் திறன்
ஆ) மின்தடை மற்றும்
இ) நான்கு மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் ஆகியவைகளை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
டார்ச் விளக்கின் மின்னழுத்தம் V = 3V
மின்னோட்டம் I = 600 மில்லி ஆம்பியர்
= 600 × 10-3 = 0.6A
கண்ட றிய:
அ) மின்திறன் P = ?
ஆ) மின்த டை R = ?
இ) நான்கு மணி நேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் = ?
தீர்வு:
அ) P = VI = 3 × 0.6 = 1.8 வாட்
v = IR ∴ R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\)
ஆ) மின்தடை R = \(\frac{\mathrm{R}}{\mathrm{0.6}}\) = 5Ω
இ) 4 மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல்
= பல்பின் திறன் × காலம்
= 1.8 × 4
ஆற்றல் E = 7.2 வாட் மணி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
R மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சம நீளமுடைய கம்பிகளாக வெட்டப் படுகிறது.
அ) வெட்டப்பட்ட கம்பியின் மின்தடை வெட்டப்படாத அசல் கம்பியின் மின் தடையோடு ஒப்பிடுகையில் எவ்வாறு மாற்றமடைகிறது?
ஆ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன்மின்தடையை கணக்கிடுக. இ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின் தடைகளின் விகிதத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
ஒரு கம்பியின் மின்தடை = R
கம்பியின் நீளம் =5 சமநீளமுள்ள துண்டுகள்
தீர்வு :
அ) வெட்டப்பட்ட கம்பிகள் ஒவ்வொன்றும் சமமான நீளம் எனில் ஒவ்வொரு துண்டிற்குமான மின்தடை = \(\frac{\mathrm{R}}{5}\)
ஆ) எல்லா துண்டுகளும் பக்க இணைப்பில் இணைக்கும்போது தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 866

இ) தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும் போது தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 88
Rs மற்றும் Rp களின் விகிதம் = 25 : 1
Rs : Rp = 25 : 1

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 20. தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 92. இரு மின்
தடைகளின் மதிப்புக்களையும் கணக்கிடு. விடை: பக்க இணைப்பில் தொகுபயன்மின்தடை
Rp = 2Ω
தொடர் இணைப்பில் தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 82.3
R1 = 3Ω அல்லது 6Ω
R1 = 6Ω எனில், R2 = (9 – 3) = 6Ω
R1 = 6Ω எனில், R2 = (9 – 6) = 3Ω

Question 2.
ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடு. (GMQP-2019)
விடை:
கொடுக்கப்பட்டவை:
மின்னோட்டம் = 5 ஆம்பியர்
கண்டறிய:
ஒருவினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை n = ?
தீர்வு:
I = \(\frac{\mathrm{Q}}{t}\)
ஒரு எலக்ட்ரானின் மின்சுமை
e = 1.6 × 10-19 கூலூம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90
1 கூலூம் = 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
1 ஆம்பியர் மின்னோட்டத்தில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
= 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
∴ 5 ஆம்பியர் மின்னோட்டத்தில்
= 5 × 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
= 3.125 × 1019 எலக்ட்ரான்கள்
மாற்றுமுறையில் தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 92
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
n = 3.125 × 1019 எலக்ட்ரான்கள்

Question 3.
10Ω மின்தடையுள்ள ஒரு கம்பித் துண்டின் நீளத்தை அதன் அசல் நீளத்திலிருந்து மூன்று மடங்கு நீட்டித்தால் அதன் புதிய மின் தடையின் மதிப்பு எவ்வளவு?
விடை:
கொடுக்கப்பட்டவை:
கம்பியின் மின்தடை R = 10Ω
நீளம் 3 மடங்கு நீட்டப்படும்போது = 3L(அசல் நீளத்திலிருந்து)
கண்டறிய: புதிய மின்தடை = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 87.5
நீளமானது மூன்று மடங்கு நீட்டப்படும்போது
பரப்பு 3 மடங்கிற்கு குறைக்கப்படும் \(\left(\frac{\mathrm{A}}{3}\right)\)
புதிய நீளம் = 3L
புதிய பரப்பு = \(\frac{\mathrm{A}}{3}\)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 99

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் AC முனைகளுக்கிடையே உள்ள தொகுபயன் மின் தடையைக் காண்க. (PTA-2)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89.3
இரண்டு 5Ω மின்தடைகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டு பின், 10Ω மின்தடையுடன் இணையாக இணைக்கப்பட்டுள்ளது.
Rs = 5 + 5 = 10
Rp = \(\frac{1}{10}\) + \(\frac{1}{10}\) = \(\frac{2}{10}\)
Rp = 5 ஓம்.

Question 2.
5 ஓம் மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சம பாகங்களாக வெட்டப் படுகிறது. வெட்டப்பட்ட ஐந்து கம்பித் துண்டுகளையும் பக்க இணைப்பில் இணைக்கும்போது அவற்றின் தொகுபயன் மின்தடையினைக் கணக்கிடுக. (PTA-3)
விடை:
ஒரு கம்பியின் மின்தடை = 5Ω
கம்பி 5 பாகங்களாக வெட்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு துண்டு கம்பியின் மின்தடை,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90.2
தொகுபயன் மின்தடை Rp = 0.2Ω

Question 3.
மின்னாற்றல் நுகர்வின் அலகினைவரையறு. (PTA-5)
விடை:
மின்னாற்றல் நுகர்வின் SI அலகு வாட் விநாடி. இதன் பெரிய அலகு கிலோ வாட் மணி (kWh).
ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு யூனிட் மின்னாற்றல் ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது 1000 வாட் மின்சாரம் ஒரு மணி
நேரத்தில் நுகரப்படுவதாகும்.

Question 4.
தூயநீர் மின்சாரத்தை கடத்துமா? உனது பதிலை நியாயப்படுத்து. (PTA-5)
விடை:
தூய நீர் மின்சாரத்தை கடத்துவதில்லை. இதில் அயனிகள் இல்லாததே இதற்குக் காரணம். நாம் ஒரு சிட்டிகை உப்பை , சேர்க்கும்போது அது மின்சாரத்தை கடத்த முடியும்.

4 மதிப்பெண்கள்

1. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 92.6
விடை:
அ) (iii)
ஆ) (i)
இ) (iv)
ஈ) (ii)

Question 2.
5Ω மின்தடை கொண்ட மின்சூடேற்றி ஒரு மின்மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது, இந்த சூடேற்றி வழியாகப் பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவை காண்க. (PTA-4)
விடை:
மின்தடை R = 5Ω
மின்னோட்டம் I = 6A
நேரம் t = 5 நிமிடங்கள்
= 5 × 60 = 300 நிமிடங்கள்
5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு
H = I2Rt
H = (6)2 × 5 × 300
ஆகவே, H = 54000 J

4 மதிப்பெண்கள்

Question 1.
ஏதாவது ஓர் ஆங்கில எழுத்து மற்றும் ஓர் எண்ணை , ஏழு துண்டு காட்சிப் பதிவில் வெளிப்படுத்துக. (7 Marks) (PTA-3)
விடை:
(i) ஓர் ஆங்கில எழுத்து: a, f, e, d ஆகிய 4 உமிழ் டையோடுகளுக்கு மின்னழுத்தம் கொடுக்கும்போது, கீழ்க்கண்டவாறு ‘C’ என்ற ஆங்கில எழுத்து காட்சியளிக்கும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90.9
(ii)ஓர் எண் : a, b, c, d, e, f மற்றும் g ஆகிய ஏழு உமிழ்டையோடுகளுக்கும், மின்னழுத்தம் கொடுக்கும்போது, துண்டுகள் ஒளியினை உமிழ்ந்து, 8 என்ற எண் காட்சியளிக்கும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 93

7 மதிப்பெண்கள்

Question 1.
படத்தில் காட்டியுள்ளவாறு 6 வோல்ட் மின் கலத்தோடு 20 ஓம் மின்தடை கொண்ட மின்விளக்கு மற்றும் 4 ஓம் மின்தடை கொண்ட மின்தடையாக்கி தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. எனில், (PTA-6)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 94
(அ) தொடரிணைப்பில் மொத்த மின்தடையைக் காண்க.
(ஆ) மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தினைக் காண்க.
(இ) மின்தடையாக்கிகள் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டினைக் காண்க.
விடை:
a) தொடரிணைப்பில் மொத்த மின்தடை
Rs = R1 + R2
= 20Ω + 4Ω = 24Ω

b) மின்சுற்றில் பாயும் மின்னோட்டம் ஓம் விதியின்படி,
V = IR
இங்கு, V = 6V,
மொத்த மின்தடை = 24Ω
I = \(\frac{\mathrm{V}}{\mathrm{R}}\) = \(\frac{\mathrm{6}}{\mathrm{24}}\) = 0.25 A

c) மின்தடையாக்கிகள் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு = IR
I = 0.25 A
R = \(\frac{\mathrm{24}}{\mathrm{6}}\) = 4Ω
IR = 0.25 × 4 = 1V.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
5Ω மின்தடை கொண்ட மின் சூடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6 A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு: (Sep.20)
(அ) 48000
(ஆ) 54000
(இ) 45000
(ஈ) 84000
விடை:
(ஆ) 54000 J

2 மதிப்பெண்கள்

Question 1.
30 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடையே 2 ஆம்பியர் மின்னோட்டம் செல்கிறது எனில் அதன் மின்தடையைக் காண்க. [Qy-2019]
விடை:
கடத்தியின் முனைகளுக்கு இடையே பாயும்
மின்னோட்டம் = 2 A
மின்னழுத்த வேறுபாடு
V = 30V
ஓம் விதியின் படி: R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\)
R = \(\frac{\mathrm{30}}{\mathrm{2}}\) = 15Ω

Question 2.
10 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு மின் விளக்கின் வழியாக பாய்கிறது எனில் அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவு என்ன? (GMQP-2019)
விடை:
மின்னூட்டம் Q = 10 கூலும்.
காலம் t = 5 விநாடி
எனவே, மின்னோட்டம்
I = \(\frac{\mathrm{Q}}{\mathrm{t}}\) = \(\frac{\mathrm{10}}{\mathrm{5}}\) = 2A

Question 3.
ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட்டுள்ள 100W, 200V மின்விளக்கின் பாயும் மின்னோட்டம் மற்றும் மின் தடையை கணக்கிடு. (Qy-2019)
விடை:
மின்திறன் P = 100W
மின் அழுத்தம் V = 200V
மின்திறன் P = V I
∴ மின்னோட்டம், I = \(\frac{\mathrm{P}}{\mathrm{V}}\) = \(\frac{\mathrm{100}}{\mathrm{20}}\) = 0.5A
மின்தடை, R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\) = \(\frac{\mathrm{200}}{\mathrm{0.5}}\) = 400Ω

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 3 வெப்ப இயற்பியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 3 வெப்ப இயற்பியல்

10th Science Guide வெப்ப இயற்பியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 Jமோல்-1 K-1
ஆ) 8.03 Jமோல்-1 K-1
இ) 1.38 Jமோல்-1 K-1
ஈ) 8.31 Jமோல்-1 K-1
விடை:
ஈ) 8.31 Jமோல்-1 K-1

Question 2.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் [PTA-1; Qy-2019)
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) சுழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) சுழி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 3.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்ல து – X
ஆ) Y அல்ல து -Y
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) (அ) அல்ல து (ஆ)
விடை:
இ) (அ) மற்றும் (ஆ)

Question 4.
மூலக்கூறுகளின் சராசரி _____ வெப்பநிலை ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக் கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக் கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
விடை:
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

Question 5.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
அ) A ← B, A ← C, B ← C
ஆ) A → B, A → C, B → C
இ) A → B, A ← C, B → C
ஈ) A ← B, A → C, B ← C
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 45
விடை:
அ) A ← B, A → C, B ← C

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ………
விடை:
6.023 × 1023/மோல்) (Sep.20)

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது ………….. அளவுகள். (PTA-2)
விடை:
ஸ்கேலர்

Question 3.
……………. நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ………… உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
விடை:
ஒரு கிராம், 1° C

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 4.
பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ………… எதிர்த்தகவில் அமையும்.
விடை:
பருமனுக்கு)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம். விடை:
தவறு.
சரியான கூற்று: திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் இயல்பு விரிவு என்பது தோற்ற விரிவைவிட அதிகம்.

Question 2.
ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் உயர் வெப்பநிலை பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை பகுதிக்குப் பரவும். விடை:
சரி.

Question 3.
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில் அமையும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.

IV. பொருத்துக. 
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 69

விடை:
1-ஈ,
2-உ,
3-அ,
4-ஆ,
5-இ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
காரணம் : வெப்ப ஆற்றலானது வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும். விடை:
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 2.
கூற்று: திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும். (PTA2)
காரணம் : அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
விடை: (அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒரு கலோரி வரையறு. [GMQP-2019]
விடை:
ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

Question 2.
நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 65

Question 3.
பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன? [PTA-6]
விடை:
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 70 SI அலகு செல்வின்-1

Question 4.
பாயில் விதியைக் கூறுக. [GMQP-2019]
விடை:
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடையவாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P ∝ 1/V

Question 5.
பரும விதியைக் கூறுக.
விடை:
மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும். இது சார்லஸ் விதி என்றும் அழைக்கப்படும்.
v ∝ T அல்லது \(\frac{\mathrm{V}}{\mathrm{T}}\) = மாறிலி

Question 6.
இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 75

Question 7.
உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன? உண்மை வெப்ப விரிவு குணகம் வரையறுக்கவும். மேலும் அதன் அலகினை எழுதுக, (Sep:20)
விடை:

  1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு, உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
  2. இதன் SI அதை கெல்வின்-1 ஆரும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 8.
தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
விடை:

  1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்தகவு நோற்ற விரிவு குணகம் என அழைக்கப்படும்.
  2. இதன் SI அலகு கெல்வின்’ ஆகும்.

VII கணக்கங்கள்

Question 1.
காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10மீ2 லிருந்து ! 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
விடை:
கொடுக்கப்பட்டவை :
காப்பர் தண்டின் பரப்பு A = 10 m2
பரப்பு நீட்சிக்குப்பின் A2 = 11 m2
தொடக்க வெப்பநிலை T1 = 90K
காப்பரின் வெப்பவிரிவு குணகம் = 0.0021 K-1
கண்டறிய : இறுதி வெப்பநிலை = T2=?
தீர்வு :
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 66
இறுதி வெப்பநிலை.
T2 = 137.6K

Question 2.
துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும்போது, அதனுடைய பருமன் 0.25மீ3 விருந்து 0.3 மீ3 ஆக உமருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் படிம வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
துத்தநாகத்தகட்டின் பருமன்
V0 = 0.25 மீ3
பருமனில் மாற்றம் ∆V = 0.3 மீ3 – 10.25 மீ3
= 1.05 மீ3
வெப்பநிலை மாறுபாடு
∆T = 50K
கண்டறிய : பரும வெப்ப விரிவு குணகம் = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 78
∴ பரும வெப்ப விரிவு குணகம் = 0.0004 K-1

VIII. விரிவாக விடையணி

Question 1.
நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி. [Qy-2019]
விடை:
நல்லியல்பு வாயுக்களின் பண்புகளை (அழுத்தம், பருமன், வெப்பநிலை மற்றும் அணுக்களின் எண்ணிக்கை) தொடர்புபடுத்தும்
சமன்பாடு அவ்வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு ஆகும். ஒரு நல்லியல்பு வாயுவானது பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படும்.
பாயில் விதிப்படி, PV – மாறிலி ….. (1)
சார்லஸ் விதிப்படி, V/T= மாறிலி …. (2)
அவகேட்ரோ விதிப்படி, V/N = மாறிலி …. (3)
(1), (2) மற்றும் (3) சமன்பாடுகளிலிருந்து, PV/nT= மாறிலி ….. (4)
மேற்கண்ட இந்த சமன்பாடு வாயு இணை சமன்பாடு என அழைக்கப்படும்.
μ மோல், அளவுள்ள வாயுவினைக் கொண்டிருக்கும் வாயுக்களில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவகேட்ரோ எண்ணின் (NA) μ மடங்கிற்கு சமமாகும்.
இந்த மதிப்பானது சமன்பாடு (4ல்) பிரதியிட, அதாவது n = μNA ……. (5)
PV/μNAT= மாறிலி
இந்த மாறிலி போல்ட்ஸ்மேன் மாறிலி
(kB = 1 381 × 10-23JK-1) என அழைக்கப்படுகிறது.
சமன்பாடு (5)-5 சமன்பாடு (4)ல் பிரதியிட
PV/μNAT = kB
PV = μNA kB T
இங்கு μNA kB = R, இது பொது வாயு மாறிலி என அழைக்கப்படும்.
இதன் மதிப்பு 8.31 J mol-1K-1
PV = RT ….. (6)

  • இந்த நல்லியல்பு வாயுச் சமன்பாடு, குறிப்பிட்ட நிலையில் உள்ள வாயுவின் பல்வேறு காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பினை அளிப்பதால் இது வாயுக்களின் நிலைச்சமன்பாடு எனவும் அழைக்கப்படும்.
  • மேலும் இச்சமன்பாடு எந்தவொரு வாயுக்களின் நிலையினையும் விவரிக்கப் பயன்படுகிறது.

Question 2.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் ! தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
(GMQP-2019)
விடை:
உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற
வெப்ப விரிவினை கணக்கிடுவதற்கான சோதனை.

  1. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு கணக்கிட வேண்டிய திரவத்தினை கொள்கலனில் நிரப்பி சோதனையை தொடங்கலாம்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 95
  2. இப்பொழுது கொள்கலனில் உள்ள திரவத்தின் நிலையை L1 என குறித்துக்கொள்ளலாம்.
  3. பிறகு கொள்கலன் மற்றும் திரவம் வெப்பப்படுத்தப்படுகிறது.
  4. தொடக்கத்தில் கொள்கலனானது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும். அப்போது திரவத்தின் பருமன் குறைவதாகத் தோன்றும்,
  5. இந்த நிலையை L2 எனக் குறித்துக் கொள்ளலாம்.
  6. மேலும் வெப்பப்படுத்தும் போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையை L3, எனக் குறித்துக்கொள்ளலாம்.
  7. நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L2 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
  8. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
    உண்மை வெப்ப விரிவு = L3 – L2,
    தோற்ற வெப்ப விரிவு = L3 – L1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
விடை:
0°C வெப்பநிலையில் பனிக்கட்டியால் எடுத்துக் கொள்ளப்பட்ட உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு அதிகம். ஏனெனில், பனிக்கட்டி என்பது நீரின் திண்ம வடிவம். அதற்கு நீரைவிட அடர்த்தி அதிகம். – எனவே, பனிக்கட்டி உள்ள கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்.

PTA மாதிரி வினா-விடை

I மதிப்பெண்

Question 1.
வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் ……………… என அழைக்கப்படுகிறது. [PTA-5]
அ) வெப்ப விரிவு
ஆ) வெப்பமாற்றம்
இ) வெப்பச்சலனம்
ஈ) ஆவியாதல்
விடை:
(அ) வெப்ப விரிவு

Question 2.
ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயு …………… என அழைக்கப்படுகிறது. (PTA-5)
அ) இயல்பு வாயு
ஆ) நல்லியல்பு வாயு
இ) உயரிய வாயு
ஈ) அரிதான வாயு
விடை:
(ஆ) நல்லியல்பு வாயு

2 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள கூற்று சரியா? தவறா? எனக் கூறி உமது விடையினை நியாயப்படுத்துக. (PTA-4)
வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருள் குளிர்விக்கப்படுகிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:
தவறு.
வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பொருள் குளிர்விக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 2.
கொடுக்கப்பட்டக் கூற்றினையும், காரணத்தினையும் நன்றாக ஆராய்ந்து சரியான விடையினை தேர்வு செய்க. [PTA-5]
விடை:
கூற்று: வெப்பம் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளுக்குப் பரவும். காரணம்: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ பொருளின் நிறையில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.)

Question 3.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில், 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தின் நிலை கொள்கலனில் 50 மிலியிலிருந்து 48.5 மிலி ஆகக் குறைகிறது. மேலும், ! வெப்பப்படுத்தும்போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயர்கிறது. எனில் திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு மற்றும் உண்மை வெப்ப விரிவைக் கணக்கிடுக.
விடை:
திரவத்தின் ஆரம்ப நிலை, [PTA-6]
L1 = 50 மிலி
கொள்கலனில் விரிவால் திரவத்தின் நிலை,
L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை,
L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு
= L3 – L1
= 51.2 – 50 மிலி
= 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு
= L3 – L1
= 51.2 – 48.5 மிலி
= 2.7 மிலி

Question 4.
80°F பாரன்ஹீட் வெப்பநிலையை கெல்வின் வெப்பநிலைக்கு மாற்றுக? (7 Marks) (PTA-6)
விடை:
பாரன்ஹீட் மற்றும் கெல்வின்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 96

Question 5.
மின்கம்பங்களின் கம்பிகள் கோடைக் காலங்களில் தாழ்வாகத் தொங்குவது ஏன்?
விடை:
உலோகங்களால் ஆன மின்கம்பிகள் கோடைக்காலங்களில் வெப்பமாதலின் காரணமாக விரிவடைவதால் தாழ்வாகத் தொங்குகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 6.
நீர்விரிவுக் குணகம் வரையறு. [PTA-1]
விடை:
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு நீள் வெப்ப விரிவு குணகம் ஆகும்.

4 மதிப்பெண்கள்

Question 1.
கீழ்க்கண்ட கூற்றின் தன்மையை சரியா? அல்லது தவறா? என அறிந்து தவறை சரிசெய்து எழுதுக.
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவின் வெப்பநிலை அதன் பரும அளவிற்கு எதிர் தகளில் அமையும். (PTA-2) விடை:
தவறு, சார்லஸ் விதிப்படி மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.
V ∝ T
அல்லது \(\frac{\mathrm{V}}{\mathrm{T}}\) – மாறிலி

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
வாயுக்களின் அடிப்படை விதிகள் யாவை? [Qy – 2019]
விடை:
வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அவை

  1. பாயில் விதி
  2. சார்லஸ் விதி
  3. அவகேட்ரோ விதி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 2 ஒளியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 2 ஒளியியல்

10th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
விடை:
அ) A

Question 2.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f|
ஈ) f க்கும் 21 க்கும் இடையில்
விடை:
இ) 2f

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
விடை:
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்)

Question 4.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி
(அ) எதிர்க்குறி
ஈ) சுழி
விடை:
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி

Question 5.
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) fக்கும் 2f க்கும் இடையில்
விடை:
ஆ) ஈறிலாத் தொலைவு

Question 6.
ஒரு லென்சின் திறன் – 4D எனில் அதன் குவியத் தொலைவு
அ) 4 மீ
ஆ) – 40 மீ
இ) -0.25 மீ)
ஈ) -2.5 மீ.
விடை:
இ) – 0.25 மீ

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 7.
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது.
அ) விழித்திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித்திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விடை:
இ) விழித்திரைக்கு முன்பாக

Question 8.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது (PTA-2, Sep.20)
அ) குவி லென்சு
ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி
ஈ) இரு குவிய லென்சு
விடை:
ஈ) இரு குவிய லென்சு

Question 9.
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
விடை:
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

Question 10.
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB,VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
அ) VB = VG = VR
ஆ) vB > VG > VR
இ) VB < VG < VR
ஈ) vB < VG > VR
விடை:
இ) VB < vG < VR]

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளி செல்லும் பாதை _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ஒளிக்கதிர்

Question 2.
ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____
விடை:
அதிகம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _____ சிதறல் எனப்படும்.
விடை:
மீட்சிச்

Question 4.
ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின்ன் _____ ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
விடை:
அலை நீளத்தின்

Question 5.
_____ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
விடை:
ஐரிஸ் (Iris)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.

Question 2.
லென்சின் திறனானது லென்சின் குவிய தொலைவைச் சார்ந்தது.
விடை:
சரி.

Question 3.
விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: விழிலென்சின் குவிக்கும் திறன் குறைவதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
குவிலென்சானது, எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: குழிலென்சானது எப்போதும் சிறிய மாயபிம்பத்தை தரும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 20

விடை:
1-ஈ,
2-அ,
3-உ,
4-ஆ,
5-இ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
(இ கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று. ரு கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வுமிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

Question 2.
கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
விடை:
காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (c), மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (v) இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (µ) எனப்படும்.
µ = \(\frac{c}{v}\)

Question 2.
ஸ்நெல் விதியைக் கூறுக. [Qy-2019]
விடை:
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகோணத்தின்
சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவ்விதி ‘ஸ்நெல் விதி என்று அழைக்கப்படுகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 46

Question 3.
குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக. (GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 47

Question 4.
நிறப்பிரிகை வரையறு.
விடை:
வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாகப் பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு ‘நிறப்பிரிகை’ எனப்படும்.

Question 5.
ராலே சிதறல் விதியைக் கூறுக. [PTA-3]
விடை:
ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும். சிதறல் அளவு ∝ \(\frac{1}{\lambda^{4}}\)
இவ்விதியின் படி, குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.

Question 6.
குவிலென்சு மற்றும் குழிலென்சு – வேறுபடுத்துக. [PTA-3; Qy-2019]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 70

Question 7.
விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
விடை:
அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை, விழி ஏற்பமைவுத் திறன்’ எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 8.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை? (GMQP-2019)
விடை:

  1. விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும்
  2. விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும்
  3. விழிக்கோளம் நீண்டு விடுவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.

Question 9.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது? (PTA-1)
விடை:
சூரிய ஒளியானது, வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது, குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

Question 10.
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன? (PTA-4)
விடை:

  1. சிவப்பு நிறம் அதிக அலைநீளம் உடையது.
  2. எனவே, குறைவாக சிதறல் அடையும் சிவப்புநிற ஒளி மூடுபனி, புகை போன்றவற்றிலும் எளிதாக ஊடுருவி நமது கண்ணை அடைகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக. [Qy-2019]
விடை:

  1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
  2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
  3. ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
  4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 × 108 மீ வி-1.
  5. ஒளியானது அலை வடிவில் செல்வதால், அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = vλ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.

Question 2.
குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 40

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக. [PTA-6]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 45
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 48

Question 4.
கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக. (Qy-2019)
விடை:
அமைப்பு: கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது.
1) பொருளருகு லென்சு (அ) பொருளருகு வில்லை.
2) கண்ணருகு லென்சு (அ) கண்ணருகு வில்லை.
பொருளருகு லென்சு: பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவியதூரம் கொண்டு குவிலென்சு
கண்ணருகு லென்சு: கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும் கொண்ட குவிலென்சு.
இந்த இரண்டு லென்சுகளும் முன்னும் பின்னும் நகரக்கூடிய வகையில் குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 50
செயல்படும் விதம்:

  1. பொருள் (AB)-யானது, பொருளருகு லென்சின் குவியதூரத்தை விடச் சற்றுக் கூடுதலான தொலைவில் வைக்கப்படுகிறது.
  2. பொருளருகு லென்சின் மறுபுறத்தில் பெரிய, தலைகீழான, மெய்ப் மெய்ப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
  3. இந்த பிம்பமானது கண்ணருகு லென்சிற்குப் பொருளாகச் செயல்படுகிறது.
  4. மேலும், இப்பிம்பமானது (A’B’) கண்ணருகு லென்சின் முதன்மைக் குவியத்திற்குள் அமையுமாறு கண்ணருகு லென்சு சரிசெய்யப்படுகிறது. கண்ணருகு லென்சு, அளவில் பெரிய நேரான மாயபிம்பத்தைப் (A”B”) பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

VIII. கணக்கீடுகள்.

Question 1.
10 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
பொருளின் தொலைவு U = -20 செ.மீ
குவிலென்சின் குவியதூரம் f = 10 செ.மீ
கண்டறிய :
பிம்பத்தின் தொலைவு v=?
பிம்பத்தின் தன்மை யாது?
தீர்வு :
பொருளானது லென்சின் இடது பக்கத்தில் வைக்கப்படும்போது f = 10 செ.மீ
u = – 20 செ.மீ
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 52
பிம்பத்தின் தொலைவு v = 20 செ.மீ
பெரிதாக்கப்பட்ட தலைகீழான பிம்பம் 20 செ.மீ தொலைவில் லென்சின் வலப்பக்கத்தில் உருவாகிறது.
உருப்பெருக்கம் m = \(\frac{v}{u}\) = \(\frac{20}{-20}\) = -1
(-ve குறி பிம்பத்தின் தன்மையை குறிக்கிறது. தலைகீழான பிம்பம்)

Question 2.
3 செ.மீ உயரமுள்ள பொருளொன்று 15 செ.மீ குவிய தொலைவு கொண்ட குழிலென்சிற்கு முன்பாக 10 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது எனில் – லென்சினால் உருவாக்கப்படும் பிம்பத்தின் உயரத்தைக் கண்டுபிடி.
விடை:
கொடுக்கப்பட்டவை:
பொருளின் தொலைவு u = -10 செ.மீ
(பொருளானது இடப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது)
குவிய தொலைவு f = -15 செ.மீ
(∵ குவிலென்சு)
கண்ட றிய:
பிம்பத்தின் தொலைவு v = ?
பொருளின் உயரம் h = 3 செ.மீ
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 53
உருப்பெருக்கம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 54
∴ பிம்பத்தின் அளவு,
h’ = 1.8 செ.மீ

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத் தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது ! தவறுதலாக கீழே விழுந்து, இருசம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர். அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
விடை:

  1. மாணவர் தொடர்ந்து சோதனையை செய்ய முடியும். குவிலென்சு உடைவதற்கு முன்னால் எவ்வித பிம்பம் கிடைக்குமோ அதே அளவுள்ள பிம்பம் கிடைக்கும்.
  2. ஆம். அவருக்கு பிம்பங்கள் கிடைக்கும். ஆனால், உருவாக்கப்படும் பிம்பத்தின் செறிவு குறைவாக இருக்கும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 2.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
விடை:
(i) ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரிதாக உள்ளதெனில் அதன் பார்வைப்புலம் மற்றும் ரெட்டினாவின் பரப்பும் அதிகமாக இருக்கும். இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

(ii) இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ராமன் ஒளிச்சிதறலில் சிதறலடைந்த ஒளியானது …………………… வரிகளை உள்ளடக்கியது. (PTA-5)
அ) ஸ்டோக்ஸ்
ஆ) ஆண்டிஸ்டோக்ஸ்
இ) ராலே
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

2 மதிப்பெண்கள்

Question 1.
கீழ்காணும் கதிர் வரைபடத்தை நிறைவு செய்க.
[PTA-6]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49.2

Question 2.
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு என்ன ? [PTA-6]
விடை:
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு 25 செமீ.

4 மதிப்பெண்கள்

Question 1.
வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. ஆனால் அவரை கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள இக்குறைபாட்டின் பெயர், காரணம் மற்றும் சரிசெய்யும் முறையினைத் தருக. (7 Marks) (PTA-1)
விடை:
குறைபாட்டின் பெயர்: கிட்டப்பார்வை (மையோபியா)
காரணம்: விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும், விழிலென்சிற்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. அதனால் தான் வகுப்பறையில் உள்ள மாணவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. தொலைவில் கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை.
சரி செய்யும் முறை: தகுந்த குவியத் தொலைவு கொண்ட குழிலென்சைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டை சரிசெய்யலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியில் பிம்பம் உருவாதலுக்கான கதிர் வரைபடம் வரைக. (PTA-2)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 60

Question 3.
எளிய நுண்ணோக்கியில் உருவாகும் பிம்பத்தின் நிலை, தன்மை மற்றும் அளவினைக் காண்க. (PTA-2)
விடை:
எளிய நுண்ணோக்கி:
(i) குவிலென்சைக் கண்களுக்கு அருகில் வைத்து, பொருள்களைப்பார்க்கும் போது பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
(ii) AB என்ற பொருளை, குவி லென்சின் முக்கிய குவியத்திற்குள் (u < f) வைத்து லென்சின் மறுபுறத்தின் வழியாகப் பொருளைக் காண வேண்டும். குவிலென்சின் முக்கிய குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே பொருள் வைக்கப்படும்போது, லென்சானது நேரான, பெரிதாக்கப்பட்ட மாயப் பிம்பத்தை பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
மாறாத வெப்பநிலையில் ஒரு கலனில் உள்ள வாயுவின் ஆரம்ப அழுத்தத்தை, நான்கு மடங்கு அதிகரிக்கும் போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc)-லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், இறுதி பருமன் V2 cc-வைக் கணக்கிடுக. [PTA-3]
விடை:
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செமீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின்படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 65
v2 = 5 செமீ3

Question 5.
ஒரு லென்சின் திறன்-2 டையாப்டர் எனில், லென்சின் குவியதூரத்தைக் காண்க.(PTA-4)
விடை:
கொடுக்கப்பட்டவை: லென்சின் திறன் = -2
கண்டறிய: லென்சின் குவியதூரம் f = ?
தீர்வு:
P = \(\frac{1}{f}\) (or) f = \(\frac{1}{P}\)
f = \(\frac{1}{-2}\) = -0.5m
f = -0.5m

Question 6.
3 செமீ உயரமுள்ள பொருளொன்று 10 செமீ தூரத்தில் குவிலென்சின் முன் வைக்கப்படுகிறது. லென்சின் மையத்திலிருந்து 20 செமீ தொலைவில் பிம்பம் உருவாகிறது எனில் பிம்பத்தின் உருப்பெருக்கம் மற்றும் உயரத்தைக் கணக்கிடுக. (PTA-5)
விடை:
கொடுக்கப்பட்டவை:
உயரம் h = 3cm, u = 10 cm, v = 20 cm !
கண்ட றிய:
உருப்பெருக்கம் m = ?
பிம்பத்தின் உயரம் h’ = ?
தீர்வு: m = –\(\frac{v}{u}\) = \(\frac{-20}{10}\) = -2
உருப்பெருக்கம், m = -2
m = \(\frac{h’}{h}\)
-2 = \(\frac{h’}{3}\)
பிம்பத்தின் உயரம் h’ = -6 cm

7 மதிப்பெண்கள்

Question 1.
வெற்றிடத்தில் பயணிக்கும் 3000A அலைநீளமுள்ள கண்ணுறு ஒளியின் அதிர்வெண்ணைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை: [PTA-5)
அலைநீளம் λ = 3000 A [∵1A = 10-10m]
= 3000 × 10-10m
ஒலியின் திசைவேகம்,
c = 3 × 108 ms-1
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 692

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக்கற்றையானது 0.3 மீ. குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ. என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்து கிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.? (Sep.20)
விடை:
f = -0.3 மீ, v = -0.2 மீ
லென்சு சமன்பாட்டிலிருந்து
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 90

4 மதிப்பெண்கள்

Question 1.
தொலைநோக்கிகளின் நன்மைகள் யாவை? [Qy-2019]
விடை:

  1. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
  2. தொலைநோக்கியுடன் ஒளிப்படக் கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
  3. குறைவான செறிவுடைய ஒளியிலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் யாவை? (Sep.20)
விடை:
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள்:

  1. இது கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆபரணங்கள் செய்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
  2. சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவுகிறது.
  3. பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்றுநோக்கப் பயன்படுகிறது.
  4. தடய அறிவியல் துறையில், கைரேகை களைப் பகுத்தறியப் பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 1 இயக்க விதிகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 1 இயக்க விதிகள்

10th Science Guide இயக்க விதிகள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
அ) பொருளின் எடை
ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
விடை:
இ) பொருளின் நிறை

Question 2.
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
அ) உந்த மாற்று வீதம்
ஆ) விசை மற்றும் காலமாற்ற வீதம்
இ) உந்த மாற்றம்
ஈ) நிறை வீத மாற்றம்
விடை:
இ) உந்த மாற்றம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
விடை:
இ) அ மற்றும் ஆ)

Question 4.
உந்த மதிப்பைy அச்சிலும் காலத்தினை அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்கு விசை
ஆ) முடுக்கம்
இ) விசை
ஈ) விசை மாற்ற வீதம்
விடை:
இ) விசை

Question 5.
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
அ) நீச்சல் போட்டி
ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம்
ஈ) ஹாக்கி
விடை:
இ) சைக்கிள் பந்தயம்

Question 6.
புவிஈர்ப்பு முடுக்கம் -ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்?
அ) cms-1
ஆ) Nkg-1
இ) Nm2 kg-1
ஈ) cm2s-2
விடை:
ஆ) Nkg-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 7.
ஒரு கிலோ கிராம் எடை என்பது ………… ற்கு சமமாகும்.
அ) 9.8 டைன்
ஆ) 9.8 × 104 N
இ) 98 × 104 டைன்
ஈ) 980 டைன்
விடை:
இ) 98 × 104 டைன்

Question 8.
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
அ) 4M
ஆ) 2M
இ) M/4.
ஈ) M
விடை:
ஈ) M
குறிப்பு: நிறை மதிப்பு, எங்கும் மாறாது. ஆனால் எடையின் மதிப்பு, புவிஈர்ப்பு முடுக்க (g) மதிப்பைப் பொறுத்து இடத்திற்கு இடம் மாறும்.

Question 9.
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
அ) 50% குறையும்
ஆ) 50% அதிகரிக்கும்
இ) 25% குறையும்
ஈ) 300% அதிகரிக்கும்
விடை:
ஈ) 300% அதிகரிக்கும்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 30

Question 10.
ராக்கெட் ஏவுதலில் _____ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது. (GMQP-2019)
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
ஈ) அ மற்றும் இ
விடை:
ஈ) அ மற்றும் இ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு _____ தேவை.
விடை:
விசை

Question 2.
நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன் நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு _____ மூலம் விளக்கப்படுகிறது.
விடை:
இயக்கத்தில் நிலைமம்

Question 3.
மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் _____ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் குறியிலும் குறிக்கப்படுகிறது.
விடை:
எதிர், நேர்

Question 4.
மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்றி வேகத்தினை மாற்ற _____ பயன்படுகிறது.
விடை:
பற்சக்கரம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 5.
100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் _____ அளவாக இருக்கும்.
விடை:
980 N

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்.
விடை:
தவறு. சரியான கூற்று : புற விசை செயல்படாத போது ஒரு அமைப்பின் நேர்க்கோட்டு உந்தம் மாறிலியாக இருக்கும்.

Question 2.
பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.
விடை:
தவறு. சரியான கூற்று: பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்காது.

Question 3.
பொருட்களின் எடை நில நடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
விடை:
தவறு. சரியான கூற்று : பொருட்களின் எடை நில நடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும், துருவப் பகுதியில் பெருமமாகவும் இருக்கும்.

Question 4.
திருகுமறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக் குறடு (Spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்துத் திருகுதலை விட எளிதானதாகும்.
விடை:
தவறு. சரியான கூற்று: திருகுமறை (Screw) ஒன்றினை நீளமான கைப்பிடி உள்ள திருகுக் குறடு (Spanner) வைத்து திருகுதல், குறைந்த கைப்பிடி கொண்ட திருகுக் குறடினை வைத்துத் திருகுதலை விட எளிதானதாகும்.

Question 5.
புவியினை சுற்றி வரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார். விடை:
தவறு. சரியான கூற்று: புவியினை சுற்றி வரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரரின் புவி ஈர்ப்பு முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் எடையிழப்பை உணர்கிறார்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 35
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 36

V. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

Question 1.
கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும். காரணம்: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்.
விடை:
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
கூற்று: ‘g’ ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்.
காரணம்: ‘g’ மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.
விடை:
(இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
விடை:
ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன் செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை நிலைமம்’ என்றழைக்கப்படுகிறது.

Question 8.
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  1. விசையின் திருப்புத்திறன், திருகுக்குறடின் கைப்பிடி நீளத்தைப் பொறுத்து அதிகரிக்கிறது. ஆகவே திருகுக்குறடின் கைப்பிடி நீளமாக இருக்கிறது.
  2. விசையின் திருப்புத்திறன் Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 40

Question 9.
கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும் போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
விடை:
விளையாட்டு வீரர் தன் கையை பின்னோக்கி இழுப்பதற்கு காரணம்

  1. மோதும் காலம் சற்று அதிகரிக்கிறது.
  2. தன் கையில் பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை இது குறைக்கிறது.

Question 10.
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
விடை:

  1. விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை.
  2. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
  3. அவரது முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், அவர் தடையின்றி விழும் நிலையில் (free fall) உள்ளார்.
  4. அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும். (R = 0). எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.

VII. கணக்கீடுகள்

Question 1.
இருபொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?
விடை:
கொடுக்கப்பட்டவை:
இரு பொருட்களின் நிறை விகிதம் 3 : 4
சிறிய பொருளின் நிறை = m1 = 3 kg எனவும்,
பெரிய பொருளின் நிறை = m2 = 4 kg எனவும் கருதுக.
அதிக நிறையுடைய பெரிய பொருள் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் முடுக்கம், a2 = 12 ms-2 கண்டறிய: சிறிய பொருளின் மீதான குறைந்த விசை a1 = ?
தீர்வு:
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 45
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிப்படி,
F1 = -F2,
3a1 = -48 ∴ a1 = –\(\frac{48}{3}\) = -16 ms-2
சிறிய பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் : 16 ms-2

Question 2.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச்செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
நிறை (m) = 1 கிகி
தொடக்க திசைவேகம் u = 10 மீவி-1
இறுதி திசைவேகம் v = -10 மீவி-1
கண்டறிய: பந்தில் ஏற்படும் உந்தமாற்றம்
= ?
தீர்வு: மோதலுக்கு முன் உந்தம்
= mu = 1 × 10
= 10 கிகி மீவி-1
மோதலுக்கு பின் உந்தம்
= mv = -(1 × 10)
= – 10 கிகி மீவி-1
உந்த மாற்றம் = mv- mu
= – 10 – 10 கிகி மீவி-1
= – 20 கிகி மீவி-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?
விடை:
கொடுக்கப்பட்டவை:
விசை F1 = 140 N
நீளம் L1 = 40 cm = 40 × 10-2m
விசை F2 = 40N
நீளம் L2 = ?
கண்ட றிய: F1 × L2 = F2 × L2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 46
நீளம் L2 = 1.4 m

Question 4.
இரு கோள்களின் நிறை விகிதம் முரையே 2:5, அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம்
விகிதத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
இரு கோள்களின் நிறை விகிதம் 2 : 5
m1 : m2 = 2 : 5
ஆரவிகிதம் = 4 : 7
r1 : r2 = 4 : 7
சிறிய பொருளின் நிறை m1 = 2 kg
பெரிய பொருளின் நிறை m2 = 5 kg
கண்ட றிய:
புவி ஈர்ப்பு முடுக்க விகிதம் g1 : g2 = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 50

VIII. விரிவாக விடையளி.

Question 1.
நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. (PTA-3)
விடை:
நிலைமத்தின் வகைகள்:

(i) ஓய்வில் நிலைமம்
(ii) இயக்கத்தில் நிலைமம்
(iii) திசையில் நிலைமம்

(i) ஓய்வில் நிலைமம்: நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு, ஓய்வில் நிலைமம் எனப்படும். (எ.கா) கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழங்கள்.

(ii) இயக்கத்தில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலை மாற்றத்தை
எதிர்க்கும் பண்பு, இயக்கத்தில் நிலைமம் எனப்படும். (எ.கா) நீளம் தாண்டுதல் போட்டியில் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவது.

(iii) திசையில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு திசையில் நிலைமம் எனப்படும். (எ.கா) ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர் ஒருபக்கமாக சாய்தல்.

Question 2.
நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.
விடை:
நியூட்டனின் முதல்விதி:

  1. ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
  2. இவ்விதி விசையினை வரையறுக்கிறது. பொருட்களின் நிலைமத்தையும் விளக்குகிறது.

நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதி:

  1. பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும், இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
  2. இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. இதை ‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
    F = ma

நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதி:

  1. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர் விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
  2. (எ.கா) பறவைகள் தமது சிறகுகளின் விசை (விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை (எதிர்விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதிமூலம் தருவி.
விடை:
நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும், இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.

விசைக்கான சமன்பாடு:
m நிறை மதிப்புடைய பொருள் ஒன்று u என்ற ஆரம்ப திசைவேகத்தில் நேர்க்கோட்டு இயக்கத்தில் உள்ளதெனக் கொள்வோம்.

‘t’ என்ற கால இடைவெளியில் F என்ற சமன் செயப்படாத புற விசையின் தாக்கத்தால், அதன் வேகம் V என்று மாற்றமடைகிறது.
பொருளின் ஆரம்ப உந்தம் Pi = mu
இறுதி உந்தம் Pf = mv
உந்தமாறுபாடு ∆ p = Pf – Pi
= mv – mu
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி,
விசை F ∝ உந்த மாற்றம்/ காலம்
F ∝ (mv – mu) / t
F = Km (v-u)/t
K என்பது விகித மாறிலி; K = 1 (அனைத்து அலகு முறைகளிலும்).
எனவே F = m(v – u) / t
முடுக்கம் = திசை வேகமாற்றம் /காலம் ;
a = (v – u) /t
எனவே, F = m × a
விசை = நிறை × முடுக்கம்

Question 4.
உந்த மாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க. GMQP-2019
விடை:
உந்த மாறாக் கோட்பாடு:
புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும். மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும். நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை கீழ்கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் நிரூபிக்கலாம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 52

  1. A மற்றும் B என்ற இரு பொருட்களின் நிறைகள் முறையே m1 மற்றும் m2 என்க. அவை
    நேர்க்கோட்டில் பயணிப்பதாக கொள்வோம்.
  2. u1 மற்றும் u2 என்பவை அவற்றின் ஆரம்ப திசை வேகங்களாக கொள்வோம்.
  3. பொருள் A-ஆனது, B-ஐ விட அதிக திசைவேகத்தில் செல்வதாக கருதுவோம். (u1 > u2).
  4. ‘t’ என்ற கால இடைவெளியில் பொருள் A – னது, B மீது மோதலை ஏற்படுத்துகிறது.
  5. மோதலுக்குப் பிறகு அப்பொருள்கள் அதே நேர்க்கோட்டில் v1 மற்றும் v2 திசைவேகத்தில் பயணிப்பதாக கொள்வோம்.
  6. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி,
    B-யின் மீது A-ன் விசை
    FA = m2 (v2 – u2) /t
    அதே போல் A யின் மீது B-ன் விசை
    FB = m1(v1 – u1) /t
  7. நியூட்டனின் மூன்றாம் விதிப்படி,
    A-ன் மீது செயல்படும் விசையானது B-ன் மீது செயல்படும் எதிர்விசைக்கு சமம்.
    FB = – FA
    m1 (v1 – u1)/t = -m2(v2 – u2) /t
    m1v1 + m2v2 = m1u1 + m2u2
  8. மேற்காண் சமன்பாடு, இந்நிகழ்வில் வெளிவிசையின் தாக்கம் எதும் இல்லாத போது, மோதலுக்கு பின் உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது.
  9. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.

Question 5.
ராக்கெட் ஏவுதலை விளக்குக. (PTA-4; Sep.20)
விடை:

  1. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி பயன்படுகின்றன.
  2. ராக்கெட்டுகளில் உள்ள கலனில் திரவ அல்லது திட எரிபொருள்கள் நிரப்பப்படுகின்றன.
  3. அவை எரியூட்டப்பட்டதும், வெப்ப வாயுக்கள் ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன.
  4. அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன.
  5. இந்த உந்தத்தை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்துவிசை எரிகூடத்தில் (Combustion Chamber) உருவாகி, ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது.
  6. ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது.
  7. உந்த அழிவின்மை விதியின் படி, நிறை குறையக் குறைய, அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.
  8. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது விடுபடுவேகம் (Escape Speed) எனப்படுகிறது.

Question 6.
பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க. (Qy-2019)
விடை:
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி:
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர் விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும். இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
இதன் கணிதவியல் சூத்திரம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 75
m1 மற்றும் m2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம். இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி,
F ∝ m1 × m2
F ∝ 1/r2
இவை இரண்டையும் இணைத்து
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 78
G என்பது ஈர்ப்பியல் மாறிலி, இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 × 10-11 Nm2 kg-2

Question 7.
பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
விடை:
ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள்:

  1. அண்டத்தில் உள்ள விண் பொருட்களின் பரிமாணங்களை அளவிட பயன்படுகிறது.
  2. புவியின் நிறை, ஆரம், புவிஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவுகிறது.
  3. புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
  4. சில நேரங்களில் விண்மீன்களின் சீரற்ற நகர்வு (Wobble) அருகில் உள்ள கோள்களின் இயக்கத்தை பாதிக்கும். அப்போது அவ்விண்மீன்களின் நிறையினை அளவிட பயன்படுகிறது.
  5. தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது ‘புவிதிசை சார்பியக்கம்’ என்றழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை விளக்க இவ்விதி பயன்படுகிறது.
  6. விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு இவ்விதி பயன்படுகிறது.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
8 கிகி மற்றும் 2 கிகி நிறையுடைய இரு பொருள்கள் வழவழுப்பாக உள்ள பரப்பில் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. அவை 15N அளவிலான கிடைமட்ட விசை கொண்டு நகர்த்தப்படுகின்றன எனில், 2 கிகி நிறையுடைய பொருள் பெரும் விசையினை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1 = 8 கிகி
இரண்டாம் பொருளின் நிறை m2 = 2 கிகி
மொத்த நிறை m = m1 + m2
∴ m = 8 + 2 = 10 கிகி
விசை F1 = 15N
கண்டறிய: 2 கி.கி நிறையுடைய பொருள் பெறும் விசை F2=?
தீர்வு:விசை F1 = நிறை × முடுக்கம் = ma
F1 = 10 × a
∴ a = \(\frac{\mathrm{F}_{1}}{10}\) = \(\frac{15}{10}\) = 1.5 ms-2
2 கிகி நிறையுடைய பொருள் பெறும் விசை,
F2 = m2a = 2 × 1.5 = 3N
2 கிகி நிறையுடைய பொருள் பெறும் விசை = 3N

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தை
கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
கன உந்து (Truck) இயக்க ஆற்றல் = இருசக்கர வாகன (bike) இயக்க ஆற்றல்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 80
சமன்.(2) ஐ (1) ல் பிரதியிட
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 81
கண்டறிய: உந்தவீதம் = ?
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 82

Question 3.
பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாப்படுத்துக.
விடை:

  1. பயணத்தின்போது, திடீரென நிற்கும்போது, உடல் ஓய்வு நிலைக்கு வர முடியாமல் முன்னோக்கி செல்லும்.
  2. இங்கு நியூட்டனின் நிலைமம் விதி செயல்படு கிறது. முன்னோக்கி சாய்வதை தடுக்க இருக்கைப்பட்டை அணிவது அவசியம்.
  3. வாகனத்திலிருந்து திடீரென கீழே விழும்போது தலை தரையில் மோதுவதை தடுக்க தலைக்கவசம் அணிகிறோம். இங்கு நியூட்டனின் மூன்றாம் விதி பயன்படுகிறது.
  4. தலைக்கவசம் இல்லையெனில் விழும்போது எதிர்விசையில் தலையில் காயம் ஏற்படும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
இரு பொருள்கள் குறிப்பிட்ட இடை வெளியில் உள்ள போது அவற்றிற்கிடையேயுள்ள விசை F என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்புவிசை ……. ஆக இருக்கும்.
[PTA-5]
அ) 2F |
ஆ) F/2
இ) F/4
ஈ) 4F
விடை:
(இ) F/4

Question 2.
ஒரு கிராம் நிறையுள்ள பொருளை 1 செமீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை
அ) 1N
ஆ) 10N
இ) 10′ டைன்
ஈ) 1 டைன்
விடை:
(ஈ) 1 டைன்

2 மதிப்பெண்கள்

Question 1.
தகுந்த காரணங்களோடு இணைகளைத் தொடர்புபடுத்தி கோடிட்ட இடத்தினை நிரப்புக. (4 Marks) [PTA-4]
அ) கதவினைத் திறத்தல்: விசையின்
திருப்புத்திறன் ;
தண்ணீ ர் குழாயைத் திறத்தல்:
இரட்டைகளின் திருப்புத்திறன்
ஆ) பேருந்தினை ஒன்றுக்கு மேற்பட்டோர்
தள்ளுதல்: ஒத்த இணை விசைகள் ;
கயிறிழுக்கும் போட்டி:
எதிரெதிர் திசையில் செயல்படும்
சமமற்ற இணை விசைகள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
மின்தூக்கி ஒன்று 1.8 மீவி-2 முடுக்கத்துடன் கீழே நகர்கிறது எனில் 50 கிகி நிறை கொண்ட மனிதர் எவ்வளவு தோற்ற எடையினை உணர்வார்? [PTA-1]
விடை:
கொடுக்கப்பட்டவை:
முடுக்கம் = 1.8 மீவி-2
நிறை = 50 கிகி
கண்டறிய: தோற்ற எடை R =?
தீர்வு:
மின்தூக்கி ‘a’ என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது எனில்,
தோற்ற எடை, R = m(g-a)
= 50(9.8 – 1.8)
= 50 × 8
தோற்ற எடை = 400 N

Question 3.
கொடுக்கப்பட்டக் கூற்றினையும், காரணத்தினையும் நன்றாக ஆராய்ந்து சரியான விடையினை தேர்வு செய்க.(PTA-3)
கூற்று: நீந்தும் ஒருவர் நீரினை கையால் பின்னோக்கி தள்ளுகிறார். நீரானது அந்த நபரை முன்னோக்கி தள்ளுகிறது. காரணம்: ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு,
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Question 4.
நிலநடுக்கோட்டுப் பகுதியைவிட துருவப் பகுதியில் ஆப்பிள்களின் எடை அதிகம் ஏன்? (4 Marks) [PTA-3)
விடை:
புவிஈர்ப்பு முடுக்கமதிப்பு புவியில் இடத்திற்கு இடம் மாறுபடுவதால், எடையின் மதிப்பும் இடத்திற்கு இடம் மாறுபடும். பொருட்களின் எடை துருவப்பகுதியில் அதிகமாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும் இருக்கும். எனவே நிலநடுக்கோட்டுப் பகுதியைவிட துருவப் பகுதியில் ஆப்பிளின் எடை அதிகமாக இருக்கும்.

Question 5.
ஒரு பொருளின் மீது 5N விசை செயல்பட்டு, அப்பொருளை 5 செமீவி-2 என்ற அளவிற்கு முடுக்குவிக்கிறது எனில் அப்பொருளின் நிறையினைக் கணக்கிடுக. (4 Marks) [PTA-5]
விடை:
கொடுக்கப்பட்டவை:
F = 5N
a = 5cm s-2
= 0.05 ms-2
கண்டறிய: பொருளின் நிறை m =?
F = ma
m = \(\frac{F}{a}\) = \(\frac{5}{0.05}\)
m = 100 kg

Question 6.
புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்? (4 Marks) [PTA-6]
விடை:
புவிமேற்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g
புவி மையத்தில் இருந்து கணக்கீடு செய்ய வேண்டிய உயரம்
R’ = R + h
அவ்வுயரத்தில் புவிஈர்ப்பு முடுக்கம் –
g’ = g/4
தீர்வு;
R’ உயரத்தில் ஈர்ப்பு முடுக்கம்
g’ = GMm/R’2
புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம்
g = GMm/ R2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 86
கணக்கீடு செய்ய வேண்டிய உயரம்
R’ = R + h
h = R ஆதலால்
R’ = 2R
புவியின் மையத்தில் இருந்து, புவி ஆரத்தை போல் இருமடங்குதொலைவில், ஈர்ப்பு முடுக்க மதிப்பு புவிப்பரப்பின் முடுக்கத்தைப்போல் 1/4 மடங்காக அமையும்.

7 மதிப்பெண்கள்

Question 1.
(i) சொகுசுப் பேருந்துகளில் அதிர்வுறுஞ்சிகள் பயன்படுத்தப் படுகிறது. ஏன்? (PTA-2)
விடை:
சீரற்ற பரப்பில் பேருந்து பயணத்தின்போது கணத்தாக்கு விசை அதிர்வுகளை குறைப்பதற்கு அதிர்வுறுஞ்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. சொகுசுப் பேருந்துகளில் இவை தேவையற்ற அதிர்வுகளை உறிஞ்சிக்கொண்டு நம்மை பாதுகாக்கின்றன.

(ii) பூமியில் 686 N எடையுள்ள மனிதர் நிலவுக்குச் சென்றால் அங்கு அவரது எடை மதிப்பினைக் கணக்கிடுக. (நிலவின் ‘g’ மதிப்பு 1.625 மீவி-2).
தீர்வு:
w = mg = 686NT
m = \(\frac{w}{g}\) = \(\frac{686}{9.8}\) = 70 kg
W = mg = 70 × 1.625
W = 113.75 N

(ii) பறவை பறத்தலில் உள்ள இயக்க விதியினைக் கூறுக. அவ்விதிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
பறவை பறத்தலில் உள்ள இயக்க விதி, நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ஆகும். மேலும் ஓர் எடுத்துக்காட்டு: நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
m நிறை உடைய பொருள் ஒன்று u என்ற ஆரம்ப திசைவேகத்தில் நகர்கிறது. F என்ற விசை செயல்பட்டு t என்ற கால இடைவெளியில் v என்ற திசைவேகமாக மாற்றமடைந்து a என்ற அளவில் முடுக்கமடைகிறது. இத்தரவுகளைக் கொண்டு விசை, நிறை மற்றும் முடுக்கத்திற்கான தொடர்பைத் தருவிக்கவும். (PTA-5)
விடை:
பொருளின் ஆரம்ப திசைவேகம் = mu
பொருளின் இறுதி திசைவேகம் = mv
திசைவேக மாறுபாடு
= mv – mu
= m(v – u) …. (1)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 90
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி,
∴ செயல்படும் விசை,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 91
செயல்படும் விசை,
F ∝ ma
F ∝ k ma (k = 1)
∴ F = ma
ஆகவே, பொருளின் மீது செயல்படும் விசை
= நிறை × முடுக்கம்

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
5 கி.கி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2 கி.கி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
[GMQP-2019]
தரவுகள்:
நிறை (m) = 5 கிகி
நேர்க்கோட்டு உந்தம் (p) = 2 கிகி மீவி-1
சூத்திரம் :
நேர்க்கோட்டு உந்தம் (p)
= நிறை (m) × திசைவேகம் (v)
∴ திசைவேகம் (v)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 92

Question 2.
பற்சக்கரங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக. [Sep.20]
விடை:
பற்சக்கரங்கள் வட்டப்பரப்பின் விளிம்பு-களில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும். பற்சக்கரங்கள் மூலம் திருப்புவிசையினை மாற்றி இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை மாற்றலாம். மேலும் திறனை கடத்துவதற்கும் இவை உதவுகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

10th Social Science Guide தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..
அ) தூத்துக்குடி
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) மதுரை
விடை:
இ) சென்னை

Question 2.
குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ………………
அ) சேலம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) தருமபுரி
விடை:
ஆ) கோயம்புத்தூர்

Question 3.
……………….. என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
அ) வேளாண்மை
ஆ) தொழில்
இ) இரயில்வே
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) தொழில்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 4.
திருப்பூர் ………………. தொழிலுக்கு பெயர்பெற்றது.
அ) தோல் பதனிடுதல்
ஆ) பூட்டு தயாரித்தல்
இ) பின்னலாடை தயாரித்தல்
ஈ) வேளாண் பதப்படுத்துதல்
விடை:
இ பின்னலாடை தயாரித்தல்

Question 5.
…………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
அ) ஓசூர்
ஆ) திண்டுக்கல்
இ) கோவில்பட்டி
ஈ) திருநெல்வேலி
விடை:
அ) ஓசூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் …………………. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
விடை:
வேலூர்

Question 2.
சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ……………ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
ஏப்ரல் 2000

Question 3.
………. என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
விடை:
தொழில் முனைவோர்

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

Question 1.
பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) ஆம்பூர்
ஈ) வாணியம்பாடி
விடை:
ஆ) தர்மபுரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
பின்வருவனவற்றில் எது தொழில் துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
அ) TIDCO
ஆ) SIDCO
இ) MEPG
ஈ) SIPCOT
விடை:
இ MEPG

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
விடை:

  • நிலத்தின் உற்பத்தித்திறன் குறைந்து வருவதால் விவசாயத் துறையில் தொழிலாளர் ஊதியம் குறைவாக உள்ளது.
  • நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் விவசாயத் துறையில் நில உற்பத்தித்திறன் அதிகரிக்க முடியாது.

Question 2.
தொழில் துறை தொகுப்பு என்றால் என்ன?
விடை:
தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

Question 3.
தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
விடை:

  • தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
  • ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
  • கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
விடை:
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)
தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது (TANSI)
சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 5.
தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
விடை:

  • வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
  • இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
  • உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவதால் குறைகிறது.

Question 6.
தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
விடை:

  • ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
  • இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தலைமைக்குத் தேவையான பண்புகளும் இருக்கும்.

Question 7.
தொழில்முனைவு என்றால் என்ன?
விடை:

  • தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் qமுனைவு எனப்படும்.
  • இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
விடை:
வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.
  • துறை சார்ந்த சிறப்பு கவனம்.
  • நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.
  • புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
  • நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்.
  • பல்வேறு திறமையான தொழிலாளர்கள்.
  • சுய உதவி குழுக்கள் செயல்படுதல்.
  • வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

Question 2.
தமிழ்நாட்டின் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.
விடை:
இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.

காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.

நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.

ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.

இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.

இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது.

மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.

வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.

பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.

நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.

Question 3.
தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
கல்வி:

  • திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
  • நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

உள்கட்டமைப்பு:

  • மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
  • மின்சார விநியோகம் மட்டுமல்லாது தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
  • குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது.

தொழில்துறை ஊக்குவிப்பு:
சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 4.
தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.
விடை:
தொழில் முனைவோரின் பங்கு:

  • நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
  • தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறார்கள்.
  • இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தி மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
  • குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
  • தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
  • தொழில் முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர். இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

10th Social Science Guide தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தொழில்துறைத் தொகுப்பு ……………. வளர்ந்தது.
அ) 1915
ஆ) 1930
இ) 1920
ஈ) 1945
விடை:
இ 1920

Question 2.
…………….. தொழில் தொகுப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
அ) டெக்ஸ்டைல்ஸ்
ஆ) பில்டிங்
இ) கைத்தறி நெசவுத் தொழில்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) கைத்தறி நெசவுத் தொழில்

Question 3.
தோல் உற்பத்தி நடைபெறுமிடம் …………… ஆகும்.
அ) கோயம்புத்தூர்
ஆ) வேலூர்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
விடை:
ஆ) வேலூர்

Question 4.
திருச்சிராப்பள்ளியில் உள்ள BHEL நிறுவனம் ………….. தயாரிக்கிறது.
அ) தொட்டிகள்
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்
இ) ரயில் பெட்டிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்

Question 5.
…………………. சேலம் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
அ) 1920
ஆ) 1973
இ) 1937
ஈ) 1945
விடை:
ஆ) 1973

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 6.
1990ல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ………….. தொழில்மயமாதலின் இறுதி கட்டம்.
அ) முன் காலகட்டம்
ஆ) பிந்தைய காலகட்டம்
இ) நவீன காலகட்டம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பிந்தைய காலகட்டம்

Question 7.
தொழிற்சாலைகளை அதிகளவு கொண்ட மாநிலம் ……………….. ஆகும்.
அ) கேரளா
ஆ) கர்நாடகா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரப் பிரதேசம்
விடை:
இ தமிழ்நாடு

Question 8.
ஈரோடு (ம) சேலம் பகுதியில் அதிகளவு மின்தறி அலகுகள் இருப்பதால் ……………… பரவலாக உள்ளது.
அ) தீப்பெட்டி
ஆ) கட்டுமானம்
இ) மின்விசைத்தறித்தொழில்
ஈ) நெசவுத் தொழில்
விடை:
இ மின்விசைத் தறித்தொழில்

Question 9.
பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்திட்ட பங்கினை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினை ……………. கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருப்பூர்
ஈ) தஞ்சை
விடை:
இ திருப்பூர்

Question 10.
……………… அரைக்கோளத்திலுள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படுகின்றது.
அ) கிழக்கு
ஆ) மேற்கு
இ) வடக்கு
ஈ) தெற்கு
விடை:
ஈ) தெற்கு

Question 11.
வீட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையம் …………….. ஆகும்.
அ) ஈரோடு
ஆ) சேலம்
இ) கரூர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ கரூர்

Question 12.
வேலூர் ……………… ஏற்றுமதியின் சிறந்து விளங்குகிறது.
அ) வீட்டுப்பொருள்
ஆ) விசைத்தறி
இ) தோல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ தோல்

Question 13.
……………. போக்குவரத்திற்கு சிறந்தது.
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) தமிழ்நாடு

Question 14.
TIDCO ………………. தொடங்கப்பட்டது.
அ) 1949
ஆ) 1971
இ) 1965
ஈ) 1956
விடை:
இ 1965

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. என்பது புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைக்கும் புத்தாக்கம் புனைபைவர் ஆவார்.
விடை:
தொழில் முனைவோர்

Question 2.
……………… ஒன்றை உருவாக்குவதற்கும் பெரிதுபடுத்துவதற்கான திறனாகும்.
விடை:
தொழில் முனைவு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 3.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ……………. தொடங்கப்பட்டது.
விடை:
ஜனவரி 16, 2016

Question 4.
…………….. என்பது சென்னையில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
விடை:
MEPZ

Question 5.
MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த ……………. GST சாலையில் அமைந்துள்ளது.
விடை:
தாம்பரம்

Question 6.
திறமை வாய்ந்த மனிதவளங்கள் ………… தேவைப்படுகின்றன.
விடை:
தொழிற்சாலைக்கு

Question 7.
…………….. தொழிற்சாலையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
தோல் உற்பத்தி

Question 8.
50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு ………………. முக்கிய மையமாகத் திகழ்கிறது.
விடை:
கரூர்

Question 9.
மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையும் நிறைவேற்றுமிடம் ……………… எனப்படும்.
விடை:
தொழிற்சாலை

Question 10.
வருமானம் அதிகரிப்பு ………….. தேவைக்கு வழி வகுக்கிறது.
விடை:
பண்டங்கள் (ம) பணிகளின்

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

Question 1.
…………… தீப்பெட்டி தொழிற்சாலைக்கு பெயர் பெற்ற இடமாகும்.
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) சிவகாசி
ஈ) திருப்பூர்
விடை:
இ சிவகாசி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
…………. உள்நாட்டுப் போக்குவரத்துக்கு சிறந்த மாநிலமாகும்.
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
அ) தமிழ்நாடு

IV. பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 4

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – வரையறு.
விடை:

  • மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.
  • மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

Question 2.
தொழிற்சாலை வரையறு.
விடை:
பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?
விடை:

  • பயனர்கள்
  • பயன்Question படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை
  • நிறுவன உரிமையாளர்கள்
  • அளவு

Question 4.
தொழில்மயமாதல் வரையறு.
விடை:
நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.

Question 5.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் வரையறு.
விடை:

  • ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.
  • இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகளை விவரி.
விடை:
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்:
1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்:
1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்:
நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – வரையறுக்கப்பட்டது:
புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது:
சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
தமிழ்நாட்டின் முக்கிய தானியங்கி தொகுப்புகள் பற்றி விவரிக்க.
விடை:

  • சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது.
  • சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.
  • சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன.
  • பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட்
  • நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.
  • எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது.
  • பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
  • கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள் ………………………….
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
ஆ) மைய, மாநில மற்றும் கிராம
இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

Question 2.
இந்தியாவில் உள்ள வரிகள் ………………… .
அ) நேர்முக வரிகள்
ஆ) மறைமுக வரிகள்
இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
ஈ) ஏதுமில்லை
விடை:
இ இரண்டும் (அ) மற்றும் (ஆ)

Question 3.
வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
அ) பாதுகாப்பு
ஆ) வெளிநாட்டுக் கொள்கை
இ) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி ………………..
அ) சேவை வரி
ஆ) கலால் வரி
இ) விற்பனை வரி
ஈ) மத்திய விற்பனை வரி
விடை:
இ விற்பனை வரி

Question 5.
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
அ) மதிப்புக் கூட்டு வரி (VAT)
ஆ) வருமான வரி
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) விற்பனை வரி
விடை:
இ பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Question 6.
இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில் …..ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) 1860
ஆ) 1870
இ) 1880
ஈ) 1850
விடை:
அ) 1860

Question 7.
சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ……………. வரி விதிக்கப்படுகிறது.
அ) வருமான வரி
ஆ) சொத்து வரி
இ) நிறுவன வரி
ஈ) கலால் வரி
விடை:
ஆ) சொத்து வரி

Question 8.
கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
அ) பண்டங்களின் பற்றாக்குறை
ஆ) அதிக வரி விகிதம்
இ) கடத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
விடை:
வரி

Question 2.
“வரி” என்ற வார்த்தை ……………. சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
வரிவிதிப்பு

Question 3.
……………… வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
விடை:
நேர்முக

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி …………………… ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
விடை:
1 ஜூலை 2017

Question 5.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்பு பணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
i) GST ‘ஒரு முனைவரி’
ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

அ) (1) மற்றும் (ii) சரி
ஆ) (ii), (iii) மற்றும் (iv) சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரியானவை.
விடை:
இ (ii), (iii) மற்றும் (iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி வரையறுக்க.
விடை:

  • வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்.
  • அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி.

Question 2.
அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
விடை:

  • நாட்டின் நிதி நிர்வாகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நாம் வரி செலுத்த வேண்டும்.
  • வரிவிதிப்பு மூலம் வழங்கப்படுகின்ற பணத்தை பல செயல்பாடுகளைச் செய்ய மாநிலங்கள் பயன்படுத்துகின்றன.

Question 3.
வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
விடை:
வரிகளின் வகைகள் :
நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள்.

நேர்முக வரிகள் :

  • வருமான வரி
  • நிறுவன வரி
  • சொத்து வரி (அ) செல்வ வரி

மறைமுக வரிகள்:

  • முத்திரைத்தாள் வரி
  • பொழுபோக்கு வரி
  • கலால் வரி (அ) சுங்கத்தீர்வை
  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக.
விடை:

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Question 5.
வளர்வீத வரி என்றால் என்ன?
விடை:

  • வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும் போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
  • அதாவது வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கும்.

Question 6.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
விடை:

  • கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
  • வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
வரி ஏய்ப்பு என்றால் என்ன?
விடை:

  • தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
  • வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
    1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
    2. விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
    3. மறைக்கப்பட்ட பணம்.
    4. கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

Question 8.
வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 3

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
விடை:
வரிகளின் வகைகள்: அ) நேர்முக வரிகள் ஆ) மறைமுக வரிகள்
அ) நேர்முக வரிகள் :
நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி :

  • வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
  • இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.

நிறுவன வரி:

  • இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
  • இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

சொத்து வரி (அ) செல்வ வரி:

  • சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
  • இந்த வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

ஆ) மறைமுக வரிகள்:

  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
  • சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி:
முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி :

  • எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
  • உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை (அ) கலால் வரி:
சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி: (GST)
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.

  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி – ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 2.
GST யின் அமைப்பை எழுதுக.
விடை:
பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்):
மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்):
மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம், (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)
நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

Question 3.
கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
விடை:
கருப்பு பணம் (Black Money) என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்:
கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை

  1. பண்டங்கள் பற்றாக்குறை
  2. உரிமம் பெறும் முறை
  3. தொழில் துறையின் பங்கு
  4. கடத்தல்
  5. வரியின் அமைப்பு

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.
அ) விகித வரி விதிப்பு வரி
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை

Question 2.
ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித …………………. .
அ) வளர்வீத வரி விதிப்பு முறை
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) கலால் வரி
ஈ) (ஆ) மற்றும் (அ)
விடை:
இ கலால் வரி

Question 3.
வருமானம் அதிகரிக்கும் போது வரி விகிதமும் ……………………
அ) குறைகிறது
ஆ) அதிகரிக்கிறது
இ) சற்று அதிகரிக்கிறது
ஈ) சற்று குறைகிறது
விடை:
ஆ) அதிகரிக்கிறது

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ………………ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அ) மார்ச் 10, 2019
ஆ) மார்ச் 29, 2018
இ) மார்ச் 29, 2017
ஈ) மார்ச் 20, 2017
விடை:
இ) மார்ச் 29, 2017

Question 5.
………………. பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
அ) முத்திரைத்தாள் வரி
ஆ) சுங்கத் தீர்வை
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) பொழுதுபோக்கு வரி
விடை:
ஆ) சுங்கத் தீர்வை

Question 6.
திரைப்பட கட்டணம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை பார்ப்பதற்காக விதிக்க ப்படுகிற வரி …………………
அ) சுங்கத்தீர்வை
ஆ) பொழுதுபோக்கு வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) வருமான வரி
விடை:
ஆ) பொழுதுபோக்கு வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 7.
சொத்துத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவை மீது விதிக்கப்படும் வரி ………………….
அ) சொத்து வரி
ஆ) வருமான வரி
இ முத்திரைத்தாள் வரி
ஈ) கலால் வரி
விடை:
இ முத்திரைத்தாள் வரி

Question 8.
சொத்துக்களுக்கான வரி ………………. அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது.
அ) ஒன்றியம்
ஆ) உள்ளூர்
இ) பஞ்சாயத்து
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஆ) உள்ளூர்

Question 9.
இந்தியாவில் அரசாங்கத்தினால் …………… வரி வசூலிக்கப்படுகிறது.
அ) இரண்டு அடுக்கு
ஆ) நான்கு அடுக்கு
இ) மூன்று அடுக்கு
ஈ) ஆறு அடுக்கு
விடை:
இ) மூன்று அடுக்கு

Question 10.
தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரி …………….. ஆகும்.
அ) வருமான வரி
ஆ) நிறுவன வரி
இ) செல்வ வரி
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
இ செல்வ வரி

Question 11.
தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஈவு தொகைக்கானக் கட்டணம் போன்றவை வசூலிக்கப்படும் வரி ………………….
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) சுங்கத்தீர்வை
விடை:
ஆ) நிறுவன வரி

Question 12.
நேர்முக வரிகளுள் …………….. ஒன்று.
அ) GST
ஆ) சுங்கத்தீர்வை
இ) பொழுதுபோக்கு
ஈ) செல்வ வரி
விடை:
ஈ) செல்வ வரி

Question 13.
அரசாங்கம் மக்களின் நலனிற்கும் ……………… வரிகளைப் பயன்படுத்தலாம்.
அ) தனியார் சேவை
ஆ) பொது சேவை
இ) நிறுவன சேவை
ஈ) அ) மற்றும் ஆ) இரண்டும்
விடை:
ஆ) பொது சேவை

Question 14.
வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வரி ………..
அ) உறுதி விதி
ஆ) சமத்துவ விதி
இ) உற்பத்தி திறன்
ஈ) நெகிழ்ச்சி வரி
விடை:
ஈ) நெகிழ்ச்சி வரி

Question 15.
……………. சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
அ) பாதுகாப்பு
ஆ) அயல்நாட்டு கொள்கை
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
ஈ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
விடை:
ஆ) அயல்நாட்டு கொள்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது ……………… அத்தியாவசியப் பணியாக உள்ளது.
விடை:
ராணுவத்தின்

Question 2.
………………. அரசாங்கத்தில் துடிப்பான நீதித்துறை உள்ளது.
விடை:
மத்திய

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 3.
வரிவிதிப்பு முறை ……………. என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
விடை:
நல அரசு

Question 4.
……………. என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணம்.
விடை:
வரிகள்

Question 5.
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் ………… என கூறப்படுகிறது.
விடை:
நிதித்துறை

Question 6.
தற்கால இந்திய வரி முறையானது ………………. முறையை அடிப்படையாக கொண்டது.
விடை:
பண்டைய கால வரி

Question 7.
இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி ………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சர் ஜேம்ஸ் வில்சன்

Question 8.
………………. இந்தியாவில் உள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துகளில் விற்பனையில் இருந்து வரும் வட்டி லாபங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
விடை:
நிறுவன வரி

Question 9.
…………….. சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் வரி.
விடை:
செல்வ வரி

Question 10.
இந்தியாவின் சில முக்கிய மறைமுக வரி, சுங்க வரி மற்றும் ……………………. ஆகும்.
விடை:
பண்டங்கள் பணிகள் வரி

Question 11.
………………. அரசாங்க ஆவணத்திற்கு விதிக்கப்படுவதாகும்.
விடை:
முத்திரைத்தாள் வரி

Question 12.
……………… உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரி ஆகும்.
விடை:
சுங்கத்தீர்வை

Question 13.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ……………… முதல் செயல்பட்டு வருகிறது.
விடை:
ஜூலை 1, 2017

Question 14.
……………. என்பது செலுத்தப்படாத வரி பணமாகும்.
விடை:
கருப்பு பணம்

Question 15.
……………… அபாரதங்களில் 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் அதிக அபராதமும் அடங்கும்.
விடை:
வரி விதிப்பு

Question 16.
…………….. கருப்பு பணத்திற்கான காரணங்களில் ஒன்று.
விடை:
கடத்தல்

Question 17.
வரி விதிப்பு ……………… உருவாக்குகிறது.
விடை:
சமூக நலனை

Question 18.
………………. வரி விதிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
வட்டார வளர்ச்சியில்

Question 19.
…………… என்பது பணவீகிதத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுகிறது.
விடை:
வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 20.
……………… என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
விடை:
கட்டணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) கருப்பு பணம் என்பது செலுத்தப்படும் வரிப் பணமாகும்.
ii) வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட பணம் ஆகும்.
iii) வரி அமைப்பு கருப்பு பணத்திற்கான காரணங்களுள் ஒன்று.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ii) மற்றும் iii) சரி

Question 2.
i) வருமான வரி 1866ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ii) இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
iii) இது ஒரு நேர்முக வரி ஆகும்.
iv) வருமான வரி வளர்வீத வரியின் எடுத்துக்காட்டாகும்.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) iii) iv) சரி
இ) i), iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
ஆ) ii), iii), iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 5

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி ஏய்ப்பின் அபராதங்களைப் பற்றி எழுதுக.
விடை:

  • ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபராதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
  • பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
  • வரி ஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.

Question 2.
பொழுதுபோக்கு வரி வரையறு.
விடை:
எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.

உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

Question 3.
பாதுகாப்பு (அ) இராணுவம் வரையறு.
விடை:

  • எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது.
  • பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
விகித வரி விதிப்பு முறை வரையறு.
விடை:

  • ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு முறை எனப்படுகிறது.
  • அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
வரி அமைப்பு பற்றி விவரி.
விடை:

  • ஒவ்வொரு வகையான வரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன.
  • நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும்.
  • ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர்.
  • அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.
  1. சமத்து விதி :
    • வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
    • பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.
  2. உறுதி விதி:
    ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
  3. சிக்கன மற்றும் வசதி விதி:
    • வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும்.
    • மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும்.
    • இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும்
      செலவை குறைக்கிறது.
  4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி:
    • அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
    • நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
    • இது உற்பத்தித் திறன் வரியாகும். > மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள்.
    • எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.
    • இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.

Question 2.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரிவிதிப்பின் பங்கினை விவரி.
விடை:
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரி விதிப்பின் பங்கு பின்வருமாறு.

  1. வளங்களைத் திரட்டுதல்:
    • வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது.
    • குறிப்பாக நேர்முக வரிகளான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.
  2. வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்:
    • வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம்.
    • குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது.
    • அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப் பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்டையுடையதாகும்.
  3.  சமூக நலன் :
    • வரி விதிப்பு சமூக நலனை உருவாக்குகிறது.
    • சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.
  4. அந்நியச் செலாவணி:
    • வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.
  5. வட்டார முன்னேற்றம்:
    • வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
    • பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரிச் சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களைத் தூண்டுகிறது.
  6. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் :
    • வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.
    • அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
…………….. என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.
அ) உணவு கிடைத்தல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவின் முழு ஈடுபாடு
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
அ) உணவு கிடைத்தல்

Question 2.
தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை …………….. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
அ) FCI
ஆ) நுகர்வோர் கூட்டுறவு
இ) ICICI
ஈ) IFCI
விடை:
அ) FCI

Question 3.
எது சரியானது?
i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
iii) PDS – பொது விநியோக முறை
iv) FCI – இந்திய உணவுக் கழகம்

அ) i மற்றும் ii சரியானவை
ஆ) iii மற்றும் iv சரியானவை
இ) ii மற்றும் iii சரியானவை
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 4.
நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு …………
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சிங்கப்பூர்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) அமெரிக்கா

Question 5.
…………….. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
அ) நீலப் புரட்சி
ஆ) வெள்ளைப் புரட்சி
இ) பசுமைப் புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
விடை:
இ பசுமைப் புரட்சி

Question 6.
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் …………
அ) கேரளா
ஆ) ஆந்திரபிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகா
விடை:
இ தமிழ்நாடு

Question 7.
………………. என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
அ) ஆரோக்கியம்
ஆ) ஊட்டச்சத்து
இ) சுகாதாரம்
ஈ) பாதுகாப்பு
விடை:
ஆ) ஊட்டச்சத்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………… ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
விடை:
எடை குறைவாக இருப்பது

Question 2.
………………ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
விடை:
2013

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 3.
பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் ……………… முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
நுகர்வோர் கூட்டுறவு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 2

IV. சரியான கூற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் : பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்

V. குறுகிய விடையளிக்கவும்.

Question 1.
FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.
விடை:
“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவுப் பாதுகாப்பு இருக்கிறது.”

Question 2.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்: கிடைத்தல், அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.

Question 3.
பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI)யின் பங்கு என்ன?
விடை:

  • விவசாயிகளின் பயிர்களுக்கு விதைப்புப் பருவத்திற்கு முன்பே குறைந்தபட்ச விலை F(Minimum Support Price) யை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
  • உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது.
  • கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.

Question 4.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
விடை:

  • உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரித்தல்.
  • உணவு தானியங்களை இறக்குமதி செய்வதில் குறைப்பு.
  • அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை மற்றும் அரிசி கணிசமாக வளர்ந்தன.
  • இது ஏராளமான வேலைகளை உருவாக்கியது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 5.
தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
விடை:

  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
  • ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
  • பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்.
  • பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
  • மதிய உணவுத் திட்டம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
விடை:
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.

விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது.

இருப்பினும், அப்பொழுது இருந்த அற்றிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்.ை

பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது.

1960களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L.480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது.

எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது,

இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.

இவ்வாறு, பசுமைப் புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது.

Question 2.
குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
விடை:
குறைந்தபட்ச ஆதரவு நிலை:

  • குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும்,
  • அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளைப் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்க இயலும்.
  • மறுபுறம், திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் பெறுவார்கள்.

Question 3.
பொது விநியோக முறையை விவரிக்கவும்.
விடை:

  • தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
  • உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
  • இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருள்களுக்கு மானியம் அளிக்கின்றன.
  • மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது.
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.
  • 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
  • குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் என அழைக்கப்படுகின்றன.
  • இந்த முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பெறும் உரிமை உண்டு.
  • தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.

Question 4.
வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள்:
அதிக மக்கள் தொகை :
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1000க்கு 1.7 ஆக உள்ளது.

அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை.எனவே சாதாரண விலை நிலை, அதிகமாக இருக்கும். எனவே, இது குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.

அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்தல் :

  • அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  • விலைகளின் தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது.

பொருள்களுக்கான தேவை :
பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.

பொருள்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது:
விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது.

பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு:

  • பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
  • ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

வறுமை மற்றும் சமத்துவமின்மை :

  • இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.
  • இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
  • வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 5.
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?
விடை:
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு:

உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல் :
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கிய நோக்கமானது வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.

ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை:
வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.

ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல் :
ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றம் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.

விவசாயத் துறையை நவீனமயமாக்குதல் :
விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உயர் ரக விதைகள் (HYV) விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துல் ஆகியவை அடங்கும்.

சுற்றுச்சூழல் சீரழிவு:
இந்தியாவின் விவசாயக் கொள்கை இந்திய விவசாயத்தின் அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரி செய்யும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டுள்ளது.

அதிகாரத்துவ தடைகளை நீக்குதல் :

  • விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் பற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது.
  • இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் ………….. வகைகளாக உள்ள ன.
அ) ஐந்து
ஆ) மூன்று .
இ) நான்கு
ஈ) ஆறு
விடை:
ஆ) மூன்று

Question 2.
பல பரிமாண வறுமை குறியீடு ………………… ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) 2018
ஆ) 2010
இ) 2013
ஈ) 2016
விடை:
ஆ) 2010

Question 3.
புதிய விவசாயக் கொள்கை 2018ல் ………………. அரசால் அறிவிக்கப்பட்டது.
அ) மாநில
ஆ) மத்திய
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மத்திய

Question 4.
வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் ……………. மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ரஷ்யா
விடை:
இ சீனா

Question 5.
பொருள்களுக்கான தேவை அதிகரிக்க, பொருளின் விலையும் …………………
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மிக அதிகம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அதிகரிக்கும்

Question 6.
…………….. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
அ) வறுமை
ஆ) சமத்துவமின்மை
இ) பொருளின் உற்பத்தி
ஈ) அதிக மக்கள் தொகை
விடை:
ஈ) அதிக மக்கள் தொகை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 7.
தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி ……………….. மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
அ) கிராமப்புற
ஆ) நகர்புற
இ) ஏழை
ஈ) பணக்கார
விடை:
இ ஏழை

Question 8.
இந்தியாவில் ………………. அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது.
அ) நான்கு அடுக்கு
ஆ) மூன்று அடுக்கு
இ) எட்டு அடுக்கு
ஈ) இரண்டு அடுக்கு
விடை:
ஆ) மூன்று அடுக்கு

Question 9.
இந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ……………….யை நம்பியுள்ளது.
அ) இறக்குமதி
ஆ) ஏற்றுமதி
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இறக்குமதி

Question 10.
உணவு தானியங்களின் விளைச்சல் ……………. ஆக அதிகரித்துள்ளது.
அ) நான்கு மடங்கு
ஆ) எட்டு மடங்கு
இ) 20 மடங்கு
ஈ) 40 மடங்கு
விடை:
அ) நான்கு மடங்கு

Question 11.
………………. ஈட்டுதலுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்புடன் நெருக்கமாக உள்ளது.
அ) உணவை உறிஞ்சுதல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவு கிடைத்தல்
ஈ) ஆ) மற்றும் இ)
விடை:
ஆ) உணவுக்கான அணுகல்

Question 12.
மானியத்தின் நிலை மற்றும் அளவு ………………. இடையே வேறுபடுகிறது.
அ) மாவட்டம்
ஆ) நாடு
இ) மாநிலம்
ஈ) அ) மற்றும் இ)
விடை:
இ மாநிலம்

Question 13.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டில் ……………… ல் துவங்கப்பட்டது.
அ) நவம்பர் 1, 2016
ஆ) நவம்பர் 20, 2012
இ) அக்டோபர் 1, 2016
ஈ) நவம்பர் 1, 2010.
விடை:
அ) நவம்பர் 1, 2016

Question 14.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் …………… நகர்புற குடும்பங்களை கொண்டுள்ளது.
அ) 90%
ஆ) 40%
இ) 60%
ஈ) 50%
விடை:
ஈ) 50%

Question 15.
முதல் ஐந்து மாவட்டங்களில் …………….. உள்ளது.
அ) தருமபுரி
ஆ) அரியலூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) பெரம்பலூர்
விடை:
ஈ) கோயம்புத்தூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் ………………….
விடை:
எம்.எஸ். சுவாமிநாதன்

Question 2.
……………… உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
விடை:
உணவினை உறிஞ்சுதல்

Question 3.
மக்களின் …………………….. ஒரு நாட்டின் மொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையது.
விடை:
உணவு பாதுகாப்பு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 4.
……………. உணவு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.
விடை:
ஃபோர்டு அறக்கட்டளை

Question 5.
…………….. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
விடை:
தமிழ்நாடு

Question 6.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் குடும்பங்கள் ……………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
முன்னுரிமை குடும்பங்கள்

Question 7.
……………… இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஏறத்தாழ்வு உள்ளது.
விடை:
வறுமை மற்றும் சமத்துவமின்மை

Question 8.
………………. என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்தாகும்.
விடை:
வாங்கும் சக்தி சமநிலை

Question 9.
……………… வாங்கும் சக்தி சமநிலையில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
விடை:
இந்தியா

Question 10.
இந்தியாவின் விவசாய கொள்கை ………………. சரி செய்யும் மற்றொரு நோக்கமாகும்.
விடை:
சுற்றுச்சீரழிவை

Question 11.
பல பரிமாண வறுமை குறியீடு ஆனது ……………… மற்றும் ……………… ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
விடை:
UNDP, OPHUI

Question 12.
வறுமைக் குறைப்பில் ……………. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
விடை:
தமிழகம்

Question 13.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் மற்றொரு குறியீடாக எடை ……………… உள்ளது.
விடை:
குறைவு

Question 14.
……………. நலவாழ்விலும் ஊட்டசத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
மனித ஆரோக்கியத்திலும்

Question 15.
RCHP – ன் விரிவாக்கம் ………………………. ஆகும்.
விடை:
மதிய உணவு குழந்தைகள் சுகாதார திட்டங்கள்

Question 16.
………………. உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று.
விடை:
ICDS

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 4

IV. சரியான கூற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று (A) : தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
காரணம் (R) : உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை திசிமி வாங்குகிறது.

அ) A சரி R தவறு
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்கவில்லை .
ஈ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்குகிறது.
விடை:
அ) A சரி R தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

V. குறுகிய விடையளிக்கவும்.

Question 1.
உணவு கிடைத்தல் வரையறு.
விடை:
உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.

Question 2.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் யாவை?
விடை:

  • மதிய உணவுத் திட்டம்
  • குழந்தைகள் சுகாதர திட்டங்கள் (Reproductive and Child Health Programme)
  • தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி (National Rural Health Mission)

Question 3.
வறுமையின் பல பரிமாணத்தின் இயல்புகள் யாவை?
விடை:
உடல், நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், வருமானம், அதிகாரமளித்தல், பணியின் தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தப்படுதல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை இழக்கும் பல காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது.

Question 4.
தாங்கியிருப்பு வரையறு.
விடை:
தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி, இந்திய உணவுத் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.

Question 5.
வாங்கும் திறன் வரையறு.
விடை:

  • வாங்கும் திறன் என்பது ஒரு அலகு பணம் மூலம் வாங்கக் கூடிய பொருள்கள் அல்லது சேவைகளின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு ஆகும்.
  • விலை ஏறும் போது வாங்கும் திறன் குறைகிறது.
  • விலை குறையும் போது வாங்கம் திறன் அதிகரிக்கிறது.

Question 6.
உணவினை உறிஞ்சுதல் வரையறு.
விடை:
உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
உணவு பாதுகாப்பு பற்றி விவரிக்க.
விடை:
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு பாதுகாப்பினைப் பின்வருமாறு வரையறுக்கிறது.

“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆராக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.”

பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்துப்படி, “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பாகும்.

உணவின் அடிப்படைக் கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்:
உணவு கிடைத்தல், உணவு அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.

1. உணவு கிடைத்தல் :
என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.

2. உணவுக்கான அணுகல் :
என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, இது ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.

3. உணவினை உறிஞ்சுதல் :
என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். 2. தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்களை விவரி.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள்:

  1.  டாக்டர் முத்துலெட்சமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.
  2.  முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்.
  3.  தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை)
  4. பள்ளி சுகாதார திட்டம்’ விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.
  5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.