Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள் ………………………….
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
ஆ) மைய, மாநில மற்றும் கிராம
இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

Question 2.
இந்தியாவில் உள்ள வரிகள் ………………… .
அ) நேர்முக வரிகள்
ஆ) மறைமுக வரிகள்
இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
ஈ) ஏதுமில்லை
விடை:
இ இரண்டும் (அ) மற்றும் (ஆ)

Question 3.
வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
அ) பாதுகாப்பு
ஆ) வெளிநாட்டுக் கொள்கை
இ) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி ………………..
அ) சேவை வரி
ஆ) கலால் வரி
இ) விற்பனை வரி
ஈ) மத்திய விற்பனை வரி
விடை:
இ விற்பனை வரி

Question 5.
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
அ) மதிப்புக் கூட்டு வரி (VAT)
ஆ) வருமான வரி
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) விற்பனை வரி
விடை:
இ பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Question 6.
இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில் …..ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) 1860
ஆ) 1870
இ) 1880
ஈ) 1850
விடை:
அ) 1860

Question 7.
சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ……………. வரி விதிக்கப்படுகிறது.
அ) வருமான வரி
ஆ) சொத்து வரி
இ) நிறுவன வரி
ஈ) கலால் வரி
விடை:
ஆ) சொத்து வரி

Question 8.
கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
அ) பண்டங்களின் பற்றாக்குறை
ஆ) அதிக வரி விகிதம்
இ) கடத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
விடை:
வரி

Question 2.
“வரி” என்ற வார்த்தை ……………. சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
வரிவிதிப்பு

Question 3.
……………… வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
விடை:
நேர்முக

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி …………………… ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
விடை:
1 ஜூலை 2017

Question 5.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்பு பணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
i) GST ‘ஒரு முனைவரி’
ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

அ) (1) மற்றும் (ii) சரி
ஆ) (ii), (iii) மற்றும் (iv) சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரியானவை.
விடை:
இ (ii), (iii) மற்றும் (iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி வரையறுக்க.
விடை:

  • வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்.
  • அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி.

Question 2.
அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
விடை:

  • நாட்டின் நிதி நிர்வாகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நாம் வரி செலுத்த வேண்டும்.
  • வரிவிதிப்பு மூலம் வழங்கப்படுகின்ற பணத்தை பல செயல்பாடுகளைச் செய்ய மாநிலங்கள் பயன்படுத்துகின்றன.

Question 3.
வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
விடை:
வரிகளின் வகைகள் :
நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள்.

நேர்முக வரிகள் :

  • வருமான வரி
  • நிறுவன வரி
  • சொத்து வரி (அ) செல்வ வரி

மறைமுக வரிகள்:

  • முத்திரைத்தாள் வரி
  • பொழுபோக்கு வரி
  • கலால் வரி (அ) சுங்கத்தீர்வை
  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக.
விடை:

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Question 5.
வளர்வீத வரி என்றால் என்ன?
விடை:

  • வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும் போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
  • அதாவது வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கும்.

Question 6.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
விடை:

  • கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
  • வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
வரி ஏய்ப்பு என்றால் என்ன?
விடை:

  • தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
  • வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
    1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
    2. விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
    3. மறைக்கப்பட்ட பணம்.
    4. கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

Question 8.
வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 3

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
விடை:
வரிகளின் வகைகள்: அ) நேர்முக வரிகள் ஆ) மறைமுக வரிகள்
அ) நேர்முக வரிகள் :
நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி :

  • வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
  • இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.

நிறுவன வரி:

  • இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
  • இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

சொத்து வரி (அ) செல்வ வரி:

  • சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
  • இந்த வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

ஆ) மறைமுக வரிகள்:

  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
  • சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி:
முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி :

  • எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
  • உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை (அ) கலால் வரி:
சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி: (GST)
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.

  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி – ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 2.
GST யின் அமைப்பை எழுதுக.
விடை:
பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்):
மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்):
மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம், (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)
நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

Question 3.
கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
விடை:
கருப்பு பணம் (Black Money) என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்:
கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை

  1. பண்டங்கள் பற்றாக்குறை
  2. உரிமம் பெறும் முறை
  3. தொழில் துறையின் பங்கு
  4. கடத்தல்
  5. வரியின் அமைப்பு

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.
அ) விகித வரி விதிப்பு வரி
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை

Question 2.
ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித …………………. .
அ) வளர்வீத வரி விதிப்பு முறை
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) கலால் வரி
ஈ) (ஆ) மற்றும் (அ)
விடை:
இ கலால் வரி

Question 3.
வருமானம் அதிகரிக்கும் போது வரி விகிதமும் ……………………
அ) குறைகிறது
ஆ) அதிகரிக்கிறது
இ) சற்று அதிகரிக்கிறது
ஈ) சற்று குறைகிறது
விடை:
ஆ) அதிகரிக்கிறது

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ………………ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அ) மார்ச் 10, 2019
ஆ) மார்ச் 29, 2018
இ) மார்ச் 29, 2017
ஈ) மார்ச் 20, 2017
விடை:
இ) மார்ச் 29, 2017

Question 5.
………………. பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
அ) முத்திரைத்தாள் வரி
ஆ) சுங்கத் தீர்வை
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) பொழுதுபோக்கு வரி
விடை:
ஆ) சுங்கத் தீர்வை

Question 6.
திரைப்பட கட்டணம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை பார்ப்பதற்காக விதிக்க ப்படுகிற வரி …………………
அ) சுங்கத்தீர்வை
ஆ) பொழுதுபோக்கு வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) வருமான வரி
விடை:
ஆ) பொழுதுபோக்கு வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 7.
சொத்துத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவை மீது விதிக்கப்படும் வரி ………………….
அ) சொத்து வரி
ஆ) வருமான வரி
இ முத்திரைத்தாள் வரி
ஈ) கலால் வரி
விடை:
இ முத்திரைத்தாள் வரி

Question 8.
சொத்துக்களுக்கான வரி ………………. அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது.
அ) ஒன்றியம்
ஆ) உள்ளூர்
இ) பஞ்சாயத்து
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஆ) உள்ளூர்

Question 9.
இந்தியாவில் அரசாங்கத்தினால் …………… வரி வசூலிக்கப்படுகிறது.
அ) இரண்டு அடுக்கு
ஆ) நான்கு அடுக்கு
இ) மூன்று அடுக்கு
ஈ) ஆறு அடுக்கு
விடை:
இ) மூன்று அடுக்கு

Question 10.
தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரி …………….. ஆகும்.
அ) வருமான வரி
ஆ) நிறுவன வரி
இ) செல்வ வரி
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
இ செல்வ வரி

Question 11.
தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஈவு தொகைக்கானக் கட்டணம் போன்றவை வசூலிக்கப்படும் வரி ………………….
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) சுங்கத்தீர்வை
விடை:
ஆ) நிறுவன வரி

Question 12.
நேர்முக வரிகளுள் …………….. ஒன்று.
அ) GST
ஆ) சுங்கத்தீர்வை
இ) பொழுதுபோக்கு
ஈ) செல்வ வரி
விடை:
ஈ) செல்வ வரி

Question 13.
அரசாங்கம் மக்களின் நலனிற்கும் ……………… வரிகளைப் பயன்படுத்தலாம்.
அ) தனியார் சேவை
ஆ) பொது சேவை
இ) நிறுவன சேவை
ஈ) அ) மற்றும் ஆ) இரண்டும்
விடை:
ஆ) பொது சேவை

Question 14.
வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வரி ………..
அ) உறுதி விதி
ஆ) சமத்துவ விதி
இ) உற்பத்தி திறன்
ஈ) நெகிழ்ச்சி வரி
விடை:
ஈ) நெகிழ்ச்சி வரி

Question 15.
……………. சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
அ) பாதுகாப்பு
ஆ) அயல்நாட்டு கொள்கை
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
ஈ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
விடை:
ஆ) அயல்நாட்டு கொள்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது ……………… அத்தியாவசியப் பணியாக உள்ளது.
விடை:
ராணுவத்தின்

Question 2.
………………. அரசாங்கத்தில் துடிப்பான நீதித்துறை உள்ளது.
விடை:
மத்திய

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 3.
வரிவிதிப்பு முறை ……………. என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
விடை:
நல அரசு

Question 4.
……………. என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணம்.
விடை:
வரிகள்

Question 5.
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் ………… என கூறப்படுகிறது.
விடை:
நிதித்துறை

Question 6.
தற்கால இந்திய வரி முறையானது ………………. முறையை அடிப்படையாக கொண்டது.
விடை:
பண்டைய கால வரி

Question 7.
இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி ………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சர் ஜேம்ஸ் வில்சன்

Question 8.
………………. இந்தியாவில் உள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துகளில் விற்பனையில் இருந்து வரும் வட்டி லாபங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
விடை:
நிறுவன வரி

Question 9.
…………….. சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் வரி.
விடை:
செல்வ வரி

Question 10.
இந்தியாவின் சில முக்கிய மறைமுக வரி, சுங்க வரி மற்றும் ……………………. ஆகும்.
விடை:
பண்டங்கள் பணிகள் வரி

Question 11.
………………. அரசாங்க ஆவணத்திற்கு விதிக்கப்படுவதாகும்.
விடை:
முத்திரைத்தாள் வரி

Question 12.
……………… உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரி ஆகும்.
விடை:
சுங்கத்தீர்வை

Question 13.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ……………… முதல் செயல்பட்டு வருகிறது.
விடை:
ஜூலை 1, 2017

Question 14.
……………. என்பது செலுத்தப்படாத வரி பணமாகும்.
விடை:
கருப்பு பணம்

Question 15.
……………… அபாரதங்களில் 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் அதிக அபராதமும் அடங்கும்.
விடை:
வரி விதிப்பு

Question 16.
…………….. கருப்பு பணத்திற்கான காரணங்களில் ஒன்று.
விடை:
கடத்தல்

Question 17.
வரி விதிப்பு ……………… உருவாக்குகிறது.
விடை:
சமூக நலனை

Question 18.
………………. வரி விதிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
வட்டார வளர்ச்சியில்

Question 19.
…………… என்பது பணவீகிதத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுகிறது.
விடை:
வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 20.
……………… என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
விடை:
கட்டணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) கருப்பு பணம் என்பது செலுத்தப்படும் வரிப் பணமாகும்.
ii) வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட பணம் ஆகும்.
iii) வரி அமைப்பு கருப்பு பணத்திற்கான காரணங்களுள் ஒன்று.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ii) மற்றும் iii) சரி

Question 2.
i) வருமான வரி 1866ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ii) இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
iii) இது ஒரு நேர்முக வரி ஆகும்.
iv) வருமான வரி வளர்வீத வரியின் எடுத்துக்காட்டாகும்.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) iii) iv) சரி
இ) i), iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
ஆ) ii), iii), iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 5

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி ஏய்ப்பின் அபராதங்களைப் பற்றி எழுதுக.
விடை:

  • ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபராதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
  • பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
  • வரி ஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.

Question 2.
பொழுதுபோக்கு வரி வரையறு.
விடை:
எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.

உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

Question 3.
பாதுகாப்பு (அ) இராணுவம் வரையறு.
விடை:

  • எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது.
  • பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
விகித வரி விதிப்பு முறை வரையறு.
விடை:

  • ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு முறை எனப்படுகிறது.
  • அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
வரி அமைப்பு பற்றி விவரி.
விடை:

  • ஒவ்வொரு வகையான வரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன.
  • நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும்.
  • ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர்.
  • அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.
  1. சமத்து விதி :
    • வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
    • பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.
  2. உறுதி விதி:
    ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
  3. சிக்கன மற்றும் வசதி விதி:
    • வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும்.
    • மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும்.
    • இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும்
      செலவை குறைக்கிறது.
  4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி:
    • அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
    • நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
    • இது உற்பத்தித் திறன் வரியாகும். > மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள்.
    • எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.
    • இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.

Question 2.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரிவிதிப்பின் பங்கினை விவரி.
விடை:
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரி விதிப்பின் பங்கு பின்வருமாறு.

  1. வளங்களைத் திரட்டுதல்:
    • வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது.
    • குறிப்பாக நேர்முக வரிகளான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.
  2. வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்:
    • வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம்.
    • குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது.
    • அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப் பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்டையுடையதாகும்.
  3.  சமூக நலன் :
    • வரி விதிப்பு சமூக நலனை உருவாக்குகிறது.
    • சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.
  4. அந்நியச் செலாவணி:
    • வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.
  5. வட்டார முன்னேற்றம்:
    • வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
    • பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரிச் சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களைத் தூண்டுகிறது.
  6. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் :
    • வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.
    • அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.