Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 10 தொழிற்புரட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 10 தொழிற்புரட்சி

9th Social Science Guide தொழிற்புரட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?
(அ) ஆர்க்ரைட்
(ஆ) சாமுவேல் கிராம்ப்டன்
(இ) ராபர்ட் ஃபுல்டன்
(ஈ) ஜேம்ஸ் வாட்
விடை:
(இ) ராபர்ட்ஃபுல்டன்

Question 2.
மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?
(அ) நிலம் கிடைக்கப் பெற்றமை
(ஆ) மிகுந்த மனித வளம்
(இ) நல்ல வாழ்க்கைச் சூழல்
(ஈ) குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை
விடை:
(ஈ) குளிர்ச்சியான தட்பவெப்பநிலை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
(அ) எலியாஸ் ஹோவே
(ஆ) எலி-விட்னி
(இ) சாமுவேல் கிராம்டன்
(ஈ) ஹம்ப்ரி டேவி
விடை:
(அ) எலியாஸ் ஹோவே

Question 4.
நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?
(அ) டி வெண்டெல்
(ஆ) டி ஹிண்டல்
(இ) டி ஆர்மன்
(ஈ) டி ரினால்ட்
விடை:
(அ) டி வெண்டெல்

Question 5.
சிலேட்டரை அமெரிக்கக் தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?
(அ) எப்.டி. ரூஸ்வெல்ட்
(ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்
(இ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
(ஈ) உட்ரோ வில்சன்
விடை:
(ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?
(அ) சுதந்திர தினம்
(ஆ) உழவர் தினம்
(இ) உழைப்பாளர் தினம்
(ஈ) தியாகிகள் தினம்
விடை:
(இ) உழைப்பாளர் தினம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 7.
எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?
(அ) இங்கிலாந்து
(ஆ) ஜெர்மனி
(இ) பிரான்ஸ்
(ஈ) அமெரிக்கா
விடை:
(ஆ) ஜெர்மனி

Question 8.
பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?
(அ) லூயி ரெனால்ட்
(ஆ) ஆர்மாண்ட் பீயூகாட்
(இ) தாமஸ் ஆல்வா எடிசன்
(ஈ) மெக் ஆடம்
விடை:
(ஆ) ஆர்மாண்ட் பீயூகாட்

Question 9.
எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது?
(அ) உருட்டாலைகள்
(ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்
(இ) ஸ்பின்னிங் மியூல்
(ஈ) இயந்திர நூற்புக் கருவி
விடை:
(ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்

Question 10.
கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது?
(அ) கற்கரி
(ஆ) கரி
(இ) விறகு
(ஈ) காகிதம்
விடை:
(ஆ) கரி

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
………. இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.
விடை:
சாசன இயக்க வாதிகள்

Question 2.
………… உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது.
விடை:
ஜான் லவுடன் மெக் ஆடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ………. கண்டுபிடித்தார்.
விடை:
ஹென்றி பெஸ்ஸிமர்

Question 4.
விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ………. ஆவார்.
விடை:
கார்ல் மார்க்ஸ்

Question 5.
ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ………. ஆண்டில் இயக்கப்பட்டது
விடை:
டிசம்பர் 1835 ஆம் ஆண்டு

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
(i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர்.
(ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடையதாக இருக்கும்.
(iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார்.
(iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் பெறவேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.
அ) i) சரி
ஆ) ii) மற்றும்
iii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) iii) சரி
விடை:
இ) i) மற்றும்
iv) சரி

Question 2.
(i) தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டனர்.
(ii) ஜெர்மனியின் அரசியல் முறை தொழிற்புரட்சிக்குக், குறிப்பிடத்தக்க முக்கியச் சவாலாக அமைந்திருந்தது.
(iii) முதலாளிகளைப் பாதுகாப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை முன்வைத்தார்.
(iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள் ஏதுமில்லை.
அ) i) சரி
ஆ) ii) மற்றும்
iii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) iii) சரி
விடை:
எதுவும் இல்லை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
கூற்று : விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்.
காரணம் : பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ)கூற்று, காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
விடை:
ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு

Question 4.
கூற்று : சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
காரணம் : அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆ)கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி 40

V. கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதிலளிக்கவும்

Question 1.
தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்விடங்களின் நிலை எவ்வாறு இருந்தன?
விடை:

  • தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் விரும்பினாலும் கூடத் தமது சுற்றப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.
  • இதனால் டைஃபாயிடு , காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.

Question 2.
இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைக் கூறு.
விடை:

  • தொழிற்புரட்சியால் இங்கிலாந்து உலகின் தொழிற்பட்டறையாக மாறியது. வேளாண் உற்பத்தி பொதுவான வீழ்ச்சி கண்டது. இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
  • 1840ல் 20 இலட்சமாக இருந்த லண்டன் மக்கள் தொகை 40 ஆண்டுகளில் 50 இலட்சமாக உயர்ந்தது.
  • மான்செஸ்டர் ஜவுளி உற்பத்தி தொழிலின் தலைநகரமாக மாறியது, ஏராளமான மக்களை ஈர்த்தது. 1771ல் 22 ஆயிரம் மக்களுடன் மந்தமான நகராக இருந்த மான்செஸ்டர் அடுத்த 50 ஆண்டுகளில் 180 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாக மாறியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 3.
ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1886 மே மாதம் 4ஆம் தேதி, சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தொடங்கியது.
  • காவல் துறை பல சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தி பலரைச் சுட்டுக் கொன்றது. இந்நிகழ்வு “ஹே மார்க்கெட் படுகொலை” என அழைக்கப்படுகிறது.
  • ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1 ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
  • மே-1 சர்வதேச தொழிலாளர் நாள் (மே தினம்)

Question 4.
லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
1898 இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார்.

ரெனால்ட்:
(ரெனால்ட் சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.

Question 5.
தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.
விடை:

  • இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி வணிக விரிவாக்கம், உணவு உற்பத்தி அதிகரிப்பு, ஆலைத் தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம் உருவாதல், நகரமயமாக்கம் ஆகிய வளர்ச்சிப் போக்குகளுக்கு இட்டுச்சென்றது.
  • புதிய நகரங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி, அமைப்பாகத் திரண்ட தொழிலாளர் இயக்கம், தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோருதல், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்தக் கோருதல் ஆகிய சமூகநிலைகள் அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாக்கின.

VI. விரிவாக விடையளிக்கவும்

Question 1.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.
விடை:
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி :
உடலுழைப்பிலிருந்து தொழில்நுட்பம், இயந்திரம் சார்ந்த உற்பத்திக்கு மாறுதல்:

  • இங்கிலாந்தின் சாமுவேல் சிலேட்டர் ஓர் ஜவுளி ஆலையை நிர்வாகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார். புதிய தொழில் நுட்பங்களால் அமெரிக்கர்களின் ஆர்வத்தை கேள்விபட்டு 1789ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார்.
  • ரோட்ஸ் தீவின் மோசஸ் பிரேளன் ஜவுளி ஆலையில் வேலைவாய்ப்பு பெற்று 1793ல் ஆலையை இயக்க
    வைத்தார். அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை இதுவே. சிலேட்டரின் தொழில் நுட்பம் மேலும் மேலும் புகழடைந்து பல தொழில் முனைவோர்கள் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர். அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” எனப் புகழ்ந்தார்.

புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குதல்:

ராபர்ட் ஃபுல்டன் – நீராவிப் படகுப் போக்குவரத்து (ஹட்சன் நதியில்)
சாமுவேல் மோர்ஸ் – தந்தி
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் – தொலைபேசி
எலியாஸ் ஹோவே – தையல் இயந்திரம்
தாமஸ் ஆல்வா எடிசன் – மின் விளக்கு

கண்டங்களை இணைக்கும் இரயில் பாதை அமைதல் :
1869ல் கண்டங்களை இணைக்கும் முதல் இரயில் பாதை அமைக்கப்பட்டது. இது மக்கள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, மூலபபொருடகள எடுத்து வருதல் ஆகியவற்றுக்குப் பயன்பட்டது.

அமெரிக்க அரசின் ஆதரவு:
அமெரிக்க அரசு தொழில் வளர்ச்சியை ஆதரித்தது. ரயில் பாதைகள் அமைப்பதற்கான நிலங்கள் வழங்கியது.

ஏகபோகம்:

  • முதல் கனரக எஃகு உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆண்ட்ரு கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது. சுரங்கங்கள் உற்பத்தி ஆலைகள், வெப்ப உலைகள், ரயில் பாதைகள், கப்பல் போக்குவரத்து என ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கி, எஃகு உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்,
  • ஒரு கிராமப்புற சமூகமாகத் திகழ்ந்த அமெரிக்கா, நகர்புறப் படுத்தியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 2.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்டவிளைவுகள் யாவை?
விடை:
இந்தியாவில் தொழிற்புரட்சி தாக்கம்:

  • 18 ஆம் நுற்றாண்டின் இடைபகுதிவரை இந்தியா வேளாண்மைக்காக மட்டுமல்லாமல் அதன் மிகச்சிறந்த உற்பத்திப் பொருள்களுக்காகவும் அறியப்பட்டிருந்தது.
  • ஜான் கே என்பவரால் பறக்கும் நாடா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில் ஹர்கிரீவ்ஸ், ஆர்க்ரைட், கிராம்ப்டன் ஆகியோரின் கண்டுபிடிப்புகளினால் நூற்பு, நெசவுத் தொழில் ஆகியன பெரும் வளர்ச்சியடைந்தன. இதனால் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
  • வங்கத்து நெசவாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப்பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர்.
  • கைத்தறி நெசவு, பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்து மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மட்டுமே மாறியது.
  • டாக்கா மஸ்லின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. கச்சாப் பருத்தி ஏற்றுமதியும் படிப்படியாகச் சரிந்தது.
  • பிரிட்டன் உற்பத்தித் துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்களாயினர். பல லட்சம் மக்கள் பஞ்சத்தால் மடிந்தனர், பஞ்சத்தால் சாக விரும்பாத லட்சக்கணக்கானோர் (விவசாயிகள், கைவினைஞர்) தாய்நாட்டை விட்டு வெளியேறி, பிரிட்டிஷ் காலனி நாடுகளின் மலைத்தோட்டங்களில், மோசமான சூழல்களில் அடிமைகளாய், ஒப்பந்தக் கூலிகளாய் வாழ நேர்ந்தது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. தொழிற் புரட்சியின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஒரு பேச்சுப் போட்டி நடத்துக.
2. துணி இழைகள் வடிவமைப்புகள் ஆகியவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் பற்றிப் பட்டியல் தயார் செய்யவும்

9th Social Science Guide தொழிற்புரட்சி Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…….. நீராவி இயந்திரத்தினைச்சுழலும் நீராவி இயந்திரமாக வடிவமைத்தார்.
விடை:
ஜேம்ஸ்வாட்

Question 2.
1767 ல் …….. இயந்திர நுற்புக்கருவியைக் கண்டுபிடித்தார்
விடை:
ஜேம்ஸ் ஹார்கிரில்டும்

Question 3.
…………….. நீர்ச் சட்டகத்தைக் கண்டுபிடித்தவர்
விடை:
ரிச்சர்ட் ஆர்க்ரைட்

Question 4.
1793 ல் எலிவிட்டினி….. கருவியைக் கண்டுபிடித்தார்
விடை:
காட்டன் ஜின்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 5.
1856 ல் …………….. எஃகு தயாரிக்க விரைவான முறையைக் ஹென்றி பெஸ்ஸிமர்
விடை:
கண்டுபிடித்தார்

II. குறுகிய விடையளி

Question 1.
ஜவுளி ஆலைத்தொழில் வளர்ச்சியில் ஏதேனும் இரு சாதனைகளைக் கூறு.
விடை:

  • 1733 இல் ஜான் கே கண்டுபிடித்த கைகளால் இயக்கப்படும் ‘flying shuttle’ எனப்படும் பறக்கும் நாடா நூற்பின் வேகத்தை அதிகரித்தது.
  • 1767 இல் ஜேம்ஸ் ஹார்கீரீவ்ஸ் இயந்திர நூற்புக் கருவியைக் கண்டுபிடித்தார். இது ஒரே சமயத்தில் எட்டு நூல்களை ஒன்றாகப் பின்னி நூற்றது.
  • இரண்டாண்டுகளுக்குப் பிறகு ரிச்சர்ட் ஆர்க்ரைட் ‘நீர்ச்சட்டகத்தைக் கண்டுபிடித்தார்.

Question 2.
ஜவுளி ஆலைத் தொழிலின் முக்கிய மையங்கள் யாவை?
விடை:
டெர்பிஷையர், லங்காஷையர், செஷையர், ஸ்டாஃபோர்டுஷையர், நாட்டிங்காம்ஷையர், யார்க்க்ஷையர் ஆகியவை முக்கியத் தொழில் மையங்களாக மாறின. இதில் மிக முக்கியமானது மான்செஸ்டர் ஆகும்.

Question 3.
தொழிற்புரட்சிக்கு முன்புவரை இருந்த இருவகை சுரங்கங்கள் யாவை?
விடை:
டிரிஃபிட் மைனிங், பெல்பிட்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி

Question 4.
வட கடலின் பாதுகாப்பான துறைமுகங்கள் யாவை?
விடை:
பிரைமன், ஹாம்பர்க்

III. ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கு விடையளிக்கவும்

Question 1.
தொழிலாளர் இயக்கம்
அ) சீர்திருத்த மசோதா எப்பொழுது கொண்டுவரப்பட்டது?
விடை:
1832-ல்

ஆ) அச்சட்டம் யாருக்கு வாக்குரிமை அளித்தது?
விடை:
சொந்தமாகச் சொத்து வைத்திருந்த நடுத்தர மக்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளித்தது.

இ) ஏன் இதை சாசன இயக்கம் என்று அழைக்கிறோம்?
விடை:
இந்த சாசனம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான மக்கள் அவையில் (House of Common) தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளைத் தொழிலாளர் இயக்கம் வலியுறுத்தியதால் அது “சாசன இயக்கம” என்று அழைக்கப்படுகிறது.

ஈ) சாசனவாதிகளின் கோரிக்கைகள் யாவை?
விடை:

  • இருபத்தியோரு வயதான ஆண்களுக்கு வாக்குரிமை
  • ரகசிய வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்ற தேர்தல்
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தகுதியில் சொத்துரிமை நீக்குதல்.
  • ஆண்டு தோறும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்
  • சமமான பிரதிநிதித்துவம்.

Question 2.
போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அ) இங்கிலாந்தில் முதன்முதலாகத் திறக்கப்பட்ட இருப்புப்பாதை எது?
விடை:
ஸ்டாக்டன், டார்லிங்டன் நகரங்களுக்கிடையேயான இரும்புப்பாதை (1825)

ஆ) உற்பத்திப் பண்டங்கள் எவ்வாறு சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டன?
விடை:

  • புதிய கால்வாய்கள்
  • சாலைகள் – இரும்புப் பாதைகள்

இ) நீராவி இயந்திர ரயிலைக் கண்டு பிடித்தவர் யார்?
விடை:
ஜார்ஜ் ஸ்டீபன்கள்

ஈ) நியூயார்கிலிருந்து ஆல்பனி வரை சென்ற நீராவிப் படகின் பெயரினை எழுது?
விடை:
கிளர்மோண்ட்

IV. விரிவான விடையளி

Question 1.
தொழிற்புரட்சியின் பண்புகள் யாவை?
விடை:
தொழிற்புரட்சியின் முக்கியப் பண்புகள், தொழில் நுட்பம், சமூகப் பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலானவையாக இருந்தன. அதன் பின்பு பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள்.
புதிய தொழில்நுட்பங்கள்.

  • புதிய அடிப்படை மூலப்பொருட்களின் பயன்பாடு : இரும்பு, எஃகு
  • புதிய எரிபொருள் மூலங்களின் பயன்பாடு : நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம்
  • இயந்திர நூற்புக் கருவி விசைத்தறி போன்ற புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள், மனித ஆற்றலைக் குறைந்த அளவு பயன்படுத்தி உற்பத்தி அளவை அதிகரிக்க உதவின.
  • தொழிற்சாலை முறை எனப்படும் புதிய அமைப்பின் உருவாக்கமானது வேலைப்பங்கீடு, சிறப்புகவனத்துடனான தனித்திறன் வளர்ச்சி போன்றவற்றிற்கு வழிவகுத்தது.
  • போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வளர்ச்சி.
  • அறிவியலை அதிக அளவில் தொழில்துறைக்குப் பயன்படுத்துதல்.
  • புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 10 தொழிற்புரட்சி 81

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 9 புரட்சிகளின் காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 9 புரட்சிகளின் காலம்

9th Social Science Guide புரட்சிகளின் காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி ………… ஆகும்.
அ) நியூயார்க்
ஆ) பிலடெல்பியா
இ) ஜேம்ஸ்ட வுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்
விடை:
இ) ஜேம்ஸ்டவுன்

Question 2.
பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ………….
அ) மிரபு
ஆ) லஃபாயெட்
இ) நெப்போலியன்
ஈ) டான்டன்
விடை:
ஆ) லஃபாயெட்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
லஃபாயெட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் ………………. எழுதப்பட்டது.
அ) சுதந்திர பிரகடனம்
ஆ) பில்னிட்ஸ் பிரகடனம்
இ) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.
ஈ) மனித உரிமை சாசனம்
விடை:
இ) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்.

Question 4.
……….. இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.
அ) டிரன்டன்
ஆ) சாரடோகா
இ) பென்சில் வேனியா
ஈ) நியூயார்க்.
விடை:
ஆ) சாரடோகா

Question 5.
பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக …………… இருந்தது.
அ) வெர்செயில்ஸ்
ஆ) பாஸ்டைல் சிறைச்சாலை
இ) பாரிஸ் கம்யூன்
ஈ) ஸ்டேட்ஸ் ஜெனரல்
விடை:
அ) வெர்சே மாளிகை

Question 6.
ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ………… போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.
அ) வெர்ணா
ஆ) வெர்செயில்ஸ்
இ) பில்னிட்ஸ்
ஈ) வால்மி
விடை:
ஈ) வால்மி

Question 7.
‘கான்டீட்’ என்ற நூல் ………… ஆல் எழுதப்பட்டது
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) டாண்டன்
விடை:
அ) வால்டேர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 8.
பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் ……………
அ) ஜெரோண்டியர்
ஆ) ஜேக்கோபியர்
இ) குடியேறிகள்
ஈ) அரச விசுவாசிகள்
விடை:
அ) ஜெரோண்டியர்

Question 9.
……………. ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதிப் போர் முடிவுக்கு வந்தது.
அ) 1776
ஆ) 1779
இ) 1781
ஈ) 1783
விடை:
ஈ) 1783

Question 10.
தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ……… ஆகும்.
அ) இயல்பறிவு
ஆ) மனித உரிமைகள்
இ) உரிமைகள் மசோதா
ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்
விடை:
அ) இயல்பறிவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் …………..
விடை:
பெஞ்சமின் பிராங்கிளின்

Question 2.
பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு ……..
விடை:
1775

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
………… சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
விடை:
செலவாணி

Question 4.
பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் ……….. ஆவார்.
விடை:
மிரபு

Question 5.
சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும் விழா நடத்தியதால் …………… கில்லட்டினால் கொல்லப்பட்டார்.
விடை:
ஹொபாட

Question 6.
பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது ………. நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
விடை:
வெர்னே

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி

Question 1.
i) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவார்.
ii) பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது
iii) குகேவக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்.
iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.
அ) i)மற்றும்
ii) சரியானவை
ஆ) iii)சரி
இ)iv)சரி
ஈ) i)மற்றும்
iv) சரியானவை
விடை:
ஈ) i) மற்றும்
iv) சரியானவை

Question 2.
i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.
ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன.
iii) வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்.
iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது.
அ) i) மற்றும்
ii) சரியானவை
ஆ) iii)சரி
இ) iv)சரி
ஈ) i)மற்றும்
iv)சரியானவை
விடை:
அ) i) மற்றும்
ii) சரியானவை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
கூற்று (கூ) : ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.
காரணம் (கா) : ஆங்கிலேய நிதி அமைச்சர் அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினர்.
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Question 4.
கூற்று (கூ) : கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர்.
காரணம் (கா) : அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை
அ) கூற்றும் காரணமும் தவறானவை
ஆ) கூற்றும் காரணமும் சரியானவை
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம் 10

V. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சுருக்கமான விடையளி

Question 1.
பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?
விடை:

  • இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட மதச்சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகளே பியூரிட்டானியர் என்று அழைக்கப்பட்டனர்.
  • இங்கிலாந்து திருச்சபையை சீர்திருத்த இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் அரசர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
  • எனவே அவர்கள் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பியூரிட்டானியர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறினர்

Question 2.
குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?
விடை:

  • இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறிஸ்துவ மதக்குழுவின் உறுப்பினர்கள் குவேக்கபர் எனப்பட்டனர்.
  • இவர்கள் புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவமும் சடங்கு சம்பிரதாயங்களையும் சமயக்குருமார் அமைப்பையும்
    எதிர்த்த னர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 3.
‘பாஸ்டன் தேநீர் விருந்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
விடை:

  • 1773 ல் குடியேற்ற மக்கள் அமெரிக்கப் பூர்வீக குடிமக்களைக் போன்று மாறுவேடம் பூண்டு கப்பல்களில் ஏறி அதிலிருந்த தேயிலையைக் கடலில் வீசினர். இந்நிகழ்ச்சி பாஸ்டன் தேநீர் விருந்து’ எனப்படுகிறது.
  • இந்நிகழ்ச்சி இங்கிலாந்துக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குடியேற்ற நாடுகளுக்குமிடையே போர் ஏற்பட வழிகோலியது.

Question 4.
செப்டம்பர் படுகொலை பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • 1792ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரிஸ் கம்யூன் அரசருடைய அரண்மனையை தாக்க ஆணை பிறப்பித்தது.
  • எனவே அரசர் தன்னுடைய சுவிட்சர்லாந்து நாட்டுக் காவலர்களை, மக்களை நோக்கிச் சுடுமாறு ஆணை
    பிறப்பித்தார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சுவிட்சர்லாந்து காவலர்களின் செயல்களால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.
  • மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1500 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
  • விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி செப்டம்பர் படுகொலை என அழைக்கப்படுகிறது.

Question 5.
பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக.
விடை:
முதல் வர்க்கம் : மதகுருமார்
இரண்டாவது வர்க்கம் : பிரபுக்கள்
மூன்றாம் வர்க்கம் : வழக்கறிஞர்கள், பணம் படைத்த வர்த்தகர்கள், வணிகர்கள், வங்கியாளர்கள்,
நிலவுடையாளர்கள் ஆகியோர் அடங்கிய பொதுமக்கள். இவர்கள் மூன்றாவது வாக்கத்தினர் பிரபுக்களுக்குத் தலைவணங்கவும் அரசரின் ஆணைகளுக்கு பணியவும் மறுத்தனர்.

Question 6.
பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக.
விடை:

  • லஃபாயட் என்பவர் மக்களாட்சிக் கோட்பாடுகளோடு நாடு திரும்பி, பிரெஞ்சுப் படையில் முக்கியப்பங்கு வகித்தார்.
  • இவர் பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பரிவுக்கு தலைமையேற்றார்.
  • ஜெபர்சன் உதவியோடு இவர் ‘மனிதன் மற்றும் பிரகடனம்’ என்பதை எழுதினார்.

Question 7.
பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?
விடை:

  • அரசரால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடினர்.
    அவர்களைக் கலைக்க அரசர் தனது படை வீரர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர்கள் பணிய மறுத்தனர்.
  • மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் அயல் நாட்டுப் படையினரை அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • இதை அறிந்த மக்கள் கிளர்ச்சியில் இறங்கி, பாஸ்டில் சிறையைத்தகர்த்தி அங்கேசிறைவைக்கபட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 8.
பிரெஞ்சு புரட்சியின் போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?
விடை:

  • டித் (தசமபாகம்)
  • டெய்லே (நிலவரி)
  • காபெல்லே (உப்புவரி)

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
விடை:

  • ஏழாண்டுப் போரினால் இங்கிலாந்து பெருமளவு பணம் செலவு செய்ய நேர்ந்தது. செலவான தொகையில் ஒரு பகுதியை அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென இங்கிலாந்து விரும்பியது.
  • எனவே குடியேற்ற நாடுகள் மீது ஒன்றன்பின் ஒன்றாக பல வரிகள் விதிக்கப்பட்டன.
  • 1764 ஆம் ஆண்டின் சர்க்கரைச் சட்டத்தினை அமெரிக்கர்கள் எதிர்த்தனர். சர்க்கரைச் சட்டத்தின் முகவுரையே “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை ” எனும் முழக்கம் உருவாகக் காரணமாயிற்று.
  • தங்களின் கருத்துக்களைக் கேட்காமல் உருவாக்கப்படும் கொள்கைகளுக்கு வரி கட்டமுடியாது என்ற
    வாதத்தைக் குடியேற்ற மக்கள் எழுப்பினர்.
  • பல்வேறு புதிய சட்டங்கள் மூலம் பல புதிய வரிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டன. * தங்கள் விருப்பத்திற்கு எதிராக தங்கள் மீது வரி விதிக்கும் ஆங்கில நாடாளுமன்றத்தின் உரிமைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
  • “பிரதிநிதித்துவம் இல்லாமல் வரிவிதிப்பில்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது. இதுவே அமெரிக்க சுதந்திரப் போருக்கு முக்கியக் காரணமாயிற்று.

Question 2.
1789ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பினை விளக்கவும்.
விடை:

  • பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டில் பல தத்துவஞானிகளும், எழுத்தாளர்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் வால்டேர், ரூசோ, மாண்டெஸ்கியூ ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
  • வால்டேர் : வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார். வால்டேரின் புகழ் பெற்ற நூல் ‘கான்டீட்’ என்பதாகும்.
  • ரூசோ : இவருடைய அரசியல் கருத்துக்கள் பலரது மனங்களைக் கவர்ந்து புதிய முடிவுகளை எடுக்கச் செய்தன. பிரெஞ்சுப் புரட்சியில் இவரது சிந்தனைகள் முக்கியப் பங்காற்றின. சமூக ஒப்பந்தம் என்ற நூலில் மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • மாண்டெஸ்கியூ : இவர் ‘சட்டத்தின் சாரம்’, ‘பாரசீக மடல்கள்’ என்னும் நூல்களை எழுதினார். சுதந்திரத்திற்கு ஆதரவாக வாதாடினார். அவர் அதிகாரப் பிரிவினை என்னும் கோட்பாட்டை முன் வைத்தார். எந்த ஓர் அரசியலில் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அங்குதான் தனிமனிதனின் சுதந்திரம் சிறப்பாகப் பாதுகாக்கும் என்று எடுத்துரைத்தார்.

VIII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பதினாறாம் லூயியின் அரசாங்கத்தைப் போன்று எந்த ஓர் அரசாங்கமும் திவாலாகி விட்டால் அந்த நெருக்கடியைச் சமாளிக்க நீங்கள் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள்?
2. அமெரிக்கச் சுதந்திரப் போர் மற்றும் இந்திய சுதந்திர இயக்கம் ஆகியவற்றை ஒப்பிடுக.

9th Social Science Guide புரட்சிகளின் காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
நியூ ஆம்ஸ்டர்டாம் என்ற பெயரில் நகரத்தை உருவாக்கியவர்கள்
அ) அமெரிக்கர்கள்
ஆ) ஆங்கிலேயர்கள்
இ டச்சுக்காரர்கள்
ஈ) பிரெஞ்சுக்காரர்கள்
விடை:
இ) டச்சுக்காரர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 2.
1775 ஆம் ஆண்டு இரண்டாவது கண்டங்களின் மாநாடு கூடிய இடம்
அ) பிலடெல்பியா
ஆ) நியூயார்க்
இ) வாஷிங்டன்
ஈ) பாஸ்டன்
விடை:
அ) பிலடெல்பியா

Question 3.
செலவாணிச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ____
அ) 1773
ஆ) 1789
இ) 1767
ஈ) 1764
விடை:
ஈ) 1764

Question 4.
பிரெஞ்சுப் புரட்சி வெடித்த ஆண்டு
அ) 1679
ஆ) 1789
இ) 1879
ஈ) 1769
விடை:
ஆ) 1789

Question 5.
சமூக ஒப்பந்தம் என்ற நூலை எழுதியவர்
அ) வால்டேர்
ஆ) ரூசோ
இ) மாண்டெஸ்கியூ
ஈ) மிரபு
விடை:
ஆ) ரூசோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
“சுதந்திரப் பிரகடனத்தைப்” எழுதியவர் _____
விடை:
தாமஸ் ஜெபர்சன்

Question 2.
அமெரிக்கக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் _____
விடை:
ஜார்ஜ் வாஷிங்டன்

Question 3.
‘சட்டத்தின் சாரம்’ என்னும் நூலை எழுதியவர் ______
விடை:
மாண்டெஸ்கியூ

Question 4.
பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றம் ______ என்று அழைக்கப்பட்டது.
விடை:
ஸ்டேட்ஸ் ஜெனரல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 5.
பிரான்ஸ் நாட்டு விவசாயிகள் சாலை அமைத்தல் போன்ற பொதுப்பணிகளுக்கு _____ எனப்படும் இலவச உழைப்பை வழங்கினர்.
விடை:
கார்வி

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

Question 1.
i) ஏழாண்டுப் போரில் இங்கிலாந்து பிரான்சைத் தோற்கடித்தது.
ii) இங்கிலாந்தின் பூர்வீகக் குடிகள் செவ்விந்தியர்கள் என அழைக்கப்பட்டனர்.
iii) யார்க்டவுன் போரில் லஃபாயட் என்பவர் வாஷிங்டனுக்கு எதிராகப் போரிட்டார்.
iv) குடியேற்றவாதிகள் விடுதலை பெறுவதற் காகப் போரைத் தொடங்கவில்லை.
அ) i) மட்டும் சரி
ஆ) iii) மட்டும் சரி
இ i) மற்றும்
iv) சரி
ஈ) ii) மற்றும்
iii) சரி
விடை:
இ) i) மற்றும்
iv) சரி

Question 2.
கூற்று (கூ) : செலவாணிச் சட்டம் குடியேற்ற நாடுகளின் வரவேற்பைப் பெற்றது.
காரணம் (கா) : இச்சட்டம் குடியேற்ற நாட்டு மக்களின் கடன்களை தள்ளுபடி செய்தது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

IV. சுருக்கமான விடை தருக

Question 1.
செலவாணிச்சட்டம் – குறிப்பு வரைக.
விடை:

  • இச்சட்டம் 1764ல் இயற்றப்பட்டது.
  • இச்சட்டம் குடியேற்ற நாடுகள் இங்கிலாந்திடமிருந்து பெற்ற கடனைக் காகிதப் பணமாக அல்லாமல் தங்கமாகவும், வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.
  • குடியேற்ற நாடுகளின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையானது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 2.
தெய்வீக அரசுரிமைக் கோட்பாடு என்றால் என்ன?
விடை:

  • தெய்வீக அரசுரிமைக் கோட்பாட்டின் படி அரசர் இப்பூமியில் கடவுளின் பிரதிநிதி ஆவார்.
  • அவர் தனது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப் பட்டவர்.
  • வேறு யாருக்கும் அவர் விளக்கம் தர வேண்டியதில்லை.

Question 3.
ஜெரோண்டியர் மற்றும் ஜேக்கோபியர் என்பவர் யாவர்?
விடை:

  • தாராளவாதத் தன்மை கொண்ட மிதவாதிகள் குறைந்த பட்ச அதிகாரங்களைக் கொண்ட வரையறுக்கப்பட்ட முடியாட்சியை அமைக்க விரும்பியவர்கள் ஜெரோண்டியர்கள் என்றழைக்கப்பட்டனர்.
  • தீவரவாதத் தன்மை கொண்ட குடியரசு வாதிகள் ஜேக்கோபியர்கள் எனப்பட்டனர்.

Question 4.
எமிகிரஸ் என்பவர்கள் யாவர்?
விடை:
பிரான்ஸ் நாட்டில் முடியாட்சிக்கு ஆதரவாக இருந்த பல பிரபுக்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து தப்பியோடி வெளிநாடுகளில் வாழ்ந்தனர். இவர்கள் எமிகிரஸ் எனப்பட்டனர்.

V. ஒவ்வொரு தலைப்பின் கீழும் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி

Question 1.
டவுன்ஷெண்ட் சட்டம்
அ) இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை:
சார்லஸ் டவுன்ஷெண்ட்

ஆ) எந்த ஆண்டு இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?
விடை:
1767 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இ) குடியேற்ற மக்கள் இச்சட்டத்தை ஏன் எதிர்த்தனர்?
விடை:
இச்சட்டம் குடியேற்றங்கள் இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது வரிவசூலிக்க வகை செய்தது. மேலும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் நுழைந்து சோதனையிடும் அதிகாரத்தையும் அதகாரிகளுக்கு வழங்கியது.

ஈ) பாஸ்டன் வணிகர்கள் ஆங்கிலேய பொருட்களை ஏன் எதிர்த்தனர்?
விடை:
டவுன்ஷெண்ட் சட்டத்தை எதிர்க்கவும், இங்கிலாந்து பொருட்களைப் புறக்கணிக்கவும் முடிவு செய்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம்

Question 2.
பிரெஞ்சுப் புரட்சி
அ) பிரான்ஸில் திருச்சபை வசூலித்த வரியின் பெயர் என்ன?
விடை:
டித்

ஆ) டான்டன் என்பவர் யார்?
விடை:
தேசியப் பேரவையின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்

இ) பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸின் கலைக்களஞ்சியச் சிந்தனையாளர்கள் யாவர்?
விடை:
தீதரா மற்றும் ஜீன்-டி-ஆலம்பெர்ட்.

ஈ) பொதுச் சாலைகளின் கட்டுமானத்திற்கான இலவச உழைப்பை வழங்கியவர் யார்?
விடை:
விவசாயிகள்.

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கங்களை வெளிக் கொணர்.
விடை:

  • பிரெஞ்சுப் புரட்சி பல நீடித்த விளைவுகளை ஏற்படுத்தியது. அது பிரான்சில் வரம்பற்ற முடியாட்சி முடிவடைந்ததன் அடையாளமாயிற்று.
  • அனைத்து நிலப்பிரபுத்துவத் தனியுரிமைகளும் ஒழிக்கப்பட்டன.
  • மதகுருமார்களின் அதிகாரங்களும் ஒழிக்கப்பட்டன.
  • பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைத்த இப்புரட்சி அரசின் வலிமை பெருகுவதற்கு வழியமைத்துக் கொடுத்தது.
  • தேசியம் என்ற சிந்தனை வளர்வதற்கும், ஓர் உறுதியான நடுத்தர வர்க்கம் உதயமாவதற்கும் இப்புரட்சி வழிகோலியது…
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோட்பாடு உலகம் முழுவதும் சுதந்திரத்தை நேசிப்போரின் தாரக மந்திரமானது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 9 புரட்சிகளின் காலம் 40

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

9th Social Science Guide நவீன யுகத்தின் தொடக்கம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை எழுதுக

Question 1.
கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
அ) லியானார்டோ டாவின்சி
ஆ) பெட்ரார்க்
இ) ஏராஸ்மஸ்
ஈ) தாமஸ் மூர்
விடை:
ஆ) பெட்ரார்க்

Question 2.
‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்
அ) ரஃபேல்
ஆ) மைக்கேல் ஆஞ்சலோ
இ அல்புருட் டியரர்
ஈ) லியானார்டோ டாவின்சி
விடை:
அ) ரஃபேல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 3.
வில்லியம் ஹார்வி _____ கண்டுபிடித்தார்.
அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
ஆ) பூமியே பிரபஞ்சத்தின் மையம்
இ) புவியீர்ப்பு விசை
ஈ) இரத்தத்தின் சுழற்சி
விடை:
ஈ) இரத்தத்தின் சுழற்சி

Question 4.
“தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஐான் கால்வின்
ஈ) தாமஸ்மூர்
விடை:
அ) மார்ட்டின் லூதர்

Question 5.
‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் _____
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஜான் கால்வின்
ஈ) செர்வாண்டிஸ்
விடை:
இ) ஜான் கால்வின்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 6.
பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
அ) மாலுமி ஹென்றி
ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்
இ பார்த்தலோமியோ டயஸ்
ஈ) கொலம்பஸ்
விடை:
ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்

Question 7.
பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்
அ) கொலம்பஸ் ______
ஆ) அமெரிகோ வெஸ்புகி
இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்
ஈ) வாஸ்கோடகாமா
விடை:
இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்

Question 8.
அமெரிக்க கண்டம் ____ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
அ) அமெரிகோ வெஸ்புகி
ஆ) கொலம்பஸ்
இ) வாஸ்கோடகாமா
-ஈ) ஹெர்நாண்டோ கார்டஸ்
விடை:
அ) அமெரிகோ வெஸ்புகி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 9.
கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக _____ இருந்தது.
அ) மணிலா
ஆ) பம்பாய்
இ பாண்டிச்சேரி
ஈ) கோவா
விடை:
ஈ) கோவா

Question 10.
கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) கரும்பு
ஆ) சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இ அரிசி
ஈ) கோதுமை
விடை:
ஆ) சர்க்கரைவள்ளிக் கிழங்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கி.பி. 1453ல் கான்ஸ்டாண்டி நோபிளை _____ கைப்பற்றினர்.
விடை:
உதுமானியத் துருக்கியர்

Question 2.
______ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.
விடை:
எராஸ்மஸ்

Question 3.
_____ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.
விடை:
மைக்கேல் ஆஞ்சலோ

Question 4.
கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _____ ஆகும்.
விடை:
எதிர்மத சீர்திருத்தம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 5.
வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் _____, _______ மற்றும் _____ ஆகும்.
விடை:
வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

Question 1.
அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர் அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்
ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.
இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.
ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.
விடை:
(ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

Question 2.
அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.
ஆ) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.
இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.
ஈ) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விடை:
(அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 40

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமான விடையளி

Question 1.
அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரி.
விடை:
மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கம் :

  • 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக்
    கண்டுபிடித்தார். இது நவீன மயமாதலை வேகப்படுத்தியது.
  • இத்தாலியிலிருந்த கல்வியறிஞர்கள் கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தின் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்தனர். பின்னர் அவற்றை அச்சிட்டு வெளியிட்டனர். இது மறுமலர்ச்சியின் புத்தாங்கக்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
  • மதச்சீர்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டுகாட்டும் பிரசுரங்களை விநியோகித்தனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர். மார்ட்டின்லூதரின் “95 கொள்கைகள்”
  • தாலமியின் ‘ஜியாகரபி (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்கு கொண்டுவரப்பட்டது. அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகள் அச்சிடப்பட்டு பரந்த அளவில் சுற்றுக்கு விடப்பட்டன. அதனால் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அறிவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 2.
மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
விடை:
மறுமலர்ச்சியின் விளைவுகள் :

  • ‘மனிதநேயம்’ என்றகருத்து மறுமலர்ச்சியின்மிகமுக்கியத்துவம் வாய்ந்தபங்களிப்பாகும். தனிநபர்வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசியவாதம் நோக்கிய திடமான நகர்வை அடையாளப்படுத்தியது.
  • வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. தேசிய அரசுகளின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தது.
  • திருச்சபையின் ஊழல் நடைமுறைகள் விமர்சிக்கப்பட்டன. மதச் சீர்திருத்தவாத இயக்கம் உற்சாகப் படுத்தப்பட்டது.
  • புதிய நிலவழிப்பாதைகள் கண்டுபிடிப்பு, உலக வரைபட மாற்றியமைப்பு, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிறவற்றுக்கு மறுமலர்ச்சி இட்டுச் சென்றது.

Question 3.
கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துகளை விவரி.
விடை:
மார்ட்டின் லூதரின் மாற்றுக் கருத்துக்கள் :

  • சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்மவிடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்தார். ‘நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை முடிவை முன்வைத்தார்.
  • தெய்வீக பற்றுறுதியினால் மட்டுமே கடவுளின் கருணை மனிதர்களுக்கு அருளப்படுமே அல்லாமல் மனிதர்களின் செயல்களினால் அல்ல.
  • பைபிள் அனைத்து மக்களாலும் படிக்கப்பட்டு விவாதிக்கக்கூடியதே அல்லாமல் திருச்சபையால் மட்டுமே வாசித்து விளக்கமளிக்கக்கூடிய ஒன்றல்ல.
  • கடவுளுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே திருச்சபை ஓர் இணைப்புப்பாலம் என்பதையும் நிராகரித்தார்.

Question 4.
மத எதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:
மதஎதிர் சீர்திருத்தம் :

  • கத்தோலிக்க திருச்சபைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்தின் சவாலை எதிர்கொள்வதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவர் வழி வந்தவர்கள் பல தீவிரமான சீர்திருத்தங்களை அறிவித்தார்கள். இது “எதிர்மத சீர்திருத்தம்” என அறியப்பட்டது.
  • ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
  • கூட்டு வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது.
  • புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியும் என்று அறிவித்தது.
  • திருச்சபைக்கு எதிரான முயற்சிகளைக் கையாளுவதற்கு மத நீதிமன்றத்திற்கு புத்துயிர் அளித்தது.
  • இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 5.
கொலம்பியப் பரிமாற்றம்’ என்றால் என்ன?
விடை:
கொலம்பியப் பரிமாற்றம் :
அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பரிமாற்றம் எனப்படும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின – விவாதி.
விடை:
மறுமலர்ச்சி:

  • செவ்வியல் இலக்கியத்தையும் கலையையும் ஆராய்வதில் பேரார்வமும் உத்வேகமும் தோன்றியது. படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டமானம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது.
  • செவ்வியில் இலக்கியப் பிரதிகள் சேகரிக்கப்ப்டடு, அச்சிட்டு வெளியிடப்பட்டது மறுமலர்ச்சி புத்தாக்கங்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தது.
  • கலை, அறிவியல் சார் படிப்புகள் இத்தாலிய பல்கலைக்கழகங்களில் புகழ்பெற்றுவிளங்கியதால் ஐரோப்பா
    முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரண்டு சென்றனர். மனித நேய சிந்தனைகளை அறிமுகமானது. பல மனித நேய இலக்கியங்கள் தோன்றின. கலைத்தன்மை மிளிரும் படைப்புகளை உருவாக்கினர்.

மதச் சீர்திருத்தம்:

  • மறுமலர்ச்சிகால மனித நேயத்தின் தீவிர புத்தார்வ தன்மையும், விமர்சனப்பூர்வமான சிந்தனையும் மக்கள் திருச்சபையின் நடைமுறைகளைக் கேள்வி கேட்பதற்கு உதவின.
  • எராஸ்மஸ், கர்தாமஸ் மூர் திருச்சபையையும் அதன் ஊழல் மிக்க நடைமுறைகளையும் விமர்சித்து வந்தனர்.
  • மதச் சீர்த்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டு காட்டும் பிரசுரங்களை விநியோகிதிதனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
  • 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக திருச்சபையை சீர்திருத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றாலும், பகுத்தறிவின் யுகத்தில் சீர்திருத்தவாதிகளின் முயற்சிகள் தேசிய அரசுகளின் ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டன.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் :

  • மாலுமிகளுக்குப் பயிற்சியளிக்க கடற்பயணப் பள்ளியை, போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி என்ற கடலோடி நிறுவினர்.
  • நெடுந் தொலைவுக் கடற்பயணத்திற்கான ஆர்வம், புதிய கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம் புத்தார்வத்தினால் தூண்டப்பட்டன.
  • மார்க்கோபோலே, இபின் பதூரா பயணக் குறிப்புகள், இறைப்பணியாளர்களின் மதம் பரப்பும் எண்ணத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
  • கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே அமைந்த நிலவழிப்பாதையை உதுமானிய துருக்கியர்கள் மூடியதால் ஐரோப்பிய வர்த்தகர்களின் பொருளாதார பாதிப்புக்குள்ளாயிற்று. ஆசியாவுக்கு புதிய கடல்வழிப்பாதை கண்டுபிடிக்க உந்துதலை ஏற்படுத்தியது.

Question 2.
புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.
விடை:
புவியியல் சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் :

  • புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை மாற்றியமைத்தன. உலக வரைபடத்தின் மீள் வரைவுக்கு இட்டுச் சென்றது.
  • ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
  • ஸ்பானியர்கள் மெக்ஸிகோவையும், தென் அமெரிக்காவையும் வெற்றி கொள்ளவும், கூடுதலான ஆய்வுத் தேடல் பயணங்களைத் தொடரவும், வெற்றி கொண்ட பகுதிகளை குடியேற்றங்களாக மாற்றவும் வழி செய்தது.
  • மரண ஆபத்துமிக்க நோய்கள் ஏற்றுமதியால் அமெரிக்காவின் உள்ளூர் மக்களின் பெருந்திரளான அழிவுக்கு காரணமாய் அமைந்தது.
  • ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகள் ஐரோப்பிய நாடுகளால் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் முக்கோண வர்த்தகமானது. இவ்வணிகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் லாபம் ஈட்டினர்.
  • வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன. இப்புரட்சியின் சிறப்பு அம்சங்கள் வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகும்.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய மாலுமிகளின் படங்களை சேகரி.
2. திசைகாட்டும் கருவியின் மாதிரி ஒன்றைத் தயார் செய்.
3. இடைக்கால ஐரோப்பியர் உருவாக்கிய கப்பலின் மாதிரியை தயார் செய்.

9th Social Science Guide நவீன யுகத்தின் தொடக்கம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
______ என்பவர் ஜெர்மனில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
விடை:
ஜோஹன்னஸ் கூட்டென்பர்க்

Question 2.
______ மனித நேயத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
பெட்ரார்க்

Question 3.
தாந்தே _____ என்ற நூலை எழுதினார்.
விடை:
டிவைன் காமெடி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 4.
______ இளவரசன் என்ற தலைப்பில் ஆய்வொன்றை எழுதினார்.
விடை:
மாக்கியவெல்லி

Question 5.
பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை ______ நிருபித்தார்.
விடை:
கோப்பர்னிகஸ்

Question 6.
மார்ட்டின் லூதர் ____ மரபொழுங்கு வழிவந்த துறவியாவார்.
விடை:
அகஸ்தினியன்

Question 7.
கள்ளிக்கோட்டையின் அரசர் ______.
விடை:
சாமெரின்

II. சுருக்கமான விடையளி.

Question 1.
மைக்கேல் ஆஞ்சலோ பற்றிக் குறிப்பு வரைக?
விடை:

  • ஓர் ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் மற்றும் ஒரு கவிஞர். அவர் உருவாக்கிய சலவைக்கல் சிற்பமான டேவிட் சிலை. இச்சிலை மாபெரும் கொலையாளியின் இளமை ததும்பும் வலிமையையும், ஆற்றலையும் காட்சிப் படுத்துகிறது.
  • ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரை ஓவியங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளார்.

Question 2.
லியானர்டோ டாவின்சி பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
லியானர்டோ டாவின்சி:
பல்துறைகளில் திறன்மிகுந்த ஒரு மேதை. ஓவியர், சிற்பி, கட்டட வடிவமைப்பாளர், ராணுவப்பொறியியலாளர், உடற்கூறியல் வல்லுநர் மற்றும் கவிஞர்.

அவரது ஒப்பற்ற படைப்புகள்:
“மோனாலிசா”, “கடைசி இரவு விருந்து”, “பாறைகளின் மீதொரு கன்னிப் பெண்”.

Question 3.
ரஃபேல் பற்றிக் குறிப்பு வரைக?
விடை:
ரஃபேல்:

  • அழகு நிறைந்த “மடோன்னா” (கன்னிப் பெண்ணும் குழந்தையும்) சித்திரத்தைத் தீட்டியவர்.
  • ஆன்மீகத்துக்கும், மனித நேயத்துக்கு மிடையே அவர் வாழ்ந்த காலங்களில் நிலவிய தத்துவார்த்த விவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் தீட்டிய மற்றோர் ஓவியம் “தி ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்”.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 4.
இயேசு சபையை நிறுவிய புனித இக்னேஷியஸ் லயோலா பற்றி விவரி.
விடை:
புனித இக்னேஷியஸ் லயோலாவும், இயேசு சபையும்:

  • கிறித்தவ மதத்தைப் பரப்புரை செய்வதற்காக புனித இக்னேஷியஸ்லயோலா “ இயேசு சபையை” நிறுவினார். எதிர்மத சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்றுவதற்காக இச்சபைக்கு கத்தோலிக்க திருச்சபை அதிகாரபூர்வமான அனுமதியை வழங்கியது.
  • ஆதரவற்றோருக்குக் கல்விச் சேவை என்பதே இயேசு சபையின் முக்கியப் பணி. உறைவிடங்கள், அனாதை இல்லங்கள், கல்வி நிலையங்கள் போன்ற எண்ணற்ற அமைப்புகளை இயேசு சபை தொடங்கியது. உலகின் எல்லாப் பாகங்களிலும் இயேசு சபைப்பணியாளர்கள் இறைப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

III. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சி
அ) இத்தாலிய நகர அரசுகளில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
பண்பாட்டு நடவடிக்கைளின் மையங்களாக விளங்கிய இத்தாலிய கலைஞர்கள் வருகை புரிந்தனர். கிரேக்கர்கள், ரோமானியர்களின் செவ்வியல் இலக்கியத்தையும், கலையையும் ஆராய்வதில் பேரார்வமும், உத்வேகமும் தோன்றியது. இப்படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டுமானத் தொழில் நுட்பம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது. பெட்ரார்க் – கான்ஸோனியர்

ஆ) மனித நேயர்கள் சிலரையும், அவர்களது படைப்புகளையும் குறிப்பிடுக.
விடை:
தாந்தே – டிவைன் காமெடி
மாக்கியவெல்லி – இளவரசன்
ஏராஸ்மஸ் – மடமையின் புகழ்ச்சி
சர்தாமஸ்மூர் – உட்டோப்பியா
செர்வான்டிஸ் – டான் கிவிக்ஸோட்.

இ) மறுமலர்ச்சி காலக்கலைக்கும் இடைக்காலக் கலைக்கும் உள்ள வேறுபாடுகளை வரிசைப்படுத்துக.
விடை:
மறுமலர்ச்சி காலக்கலை :

  • ஓவியங்களும் சிற்பங்களும் எதார்த்தப் பண்பு, இயல்பு சார்ந்த இயற்கை தன்மை கொண்டவை.
  • இடைக்கால ஓவியங்கள், சிற்பங்களின் அமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்டவை.

இடைக்காலக்கலை :
இடைக்கால படைப்புகள் அழகியப் பாணியில் ஏதார்த்தமற்றவை, இரட்டைப் பரிமாணம் கொண்டவை.

ஈ) மனிதநேயம் பற்றி விளக்குக.
விடை:
மறுமலர்ச்சியின் மையக்கூறு மனிதநேயம். மனிதநேயம் மனித கண்ணியத்தையும், இயல்பையும் வலியுறுத்தியது.

Question 2.
மத சீர்திருத்தம்.

அ) மார்ட்டின் லூதர் தேவாலயத்தை ஏன் எதிர்த்தார்?
விடை:
திருச்சபையின் ஆடம்பர வாழ்க்கை , திருச்சபை பதவிகள் ஏல்ம், பாலமன்னிப்புச் சீட்டு விற்பனை, திருச்சபையின் ஊழல்கள் மார்டின் லூதரின் எதிர்ப்புக்கான காரணங்கள்

ஆ) நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை குறித்து எழுது.
விடை:
சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்து, முழுமையான நம்பிக்கையினால் மட்டுமே ஆன்ம விடுதலை பெற முடியும் என வாதிட்டார். இதுவே ‘நம்பிக்கையினால் நியாப்படுத்தப்படுதல்’ கொள்கையாகும்.

இ) எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை ஏன் நிறுவினார்?
விடை:
இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி தனக்குப்பின் முடிசூட்டிக் கொள்ள ஒரு மகன் வேண்டி மறு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். மனைவி கேத்ரினுடனான திருமணத்தை ரத்து செய்ய போப்பிடம் விண்ணப்பித்தார். போப்பிடமிருந்து அனுமதி கிடைக்காததால் பொறுமை இழந்த எட்டாம் ஹென்றி அரசாணைகள் மூலம் ஆங்கிலிக்கன் திருச்சபையை நிறுவினார்.

ஈ) இக்னேஷியஸ் லயோலாவின் பங்களிப்பு குறித்து எழுதுக.
விடை:
இக்னேஷியஸ் லயோலா கிறிஸ்துவ மத பரப்பிற்காக இயேசு சபையை நிறுவினார். கல்வி நிலையங்கள், அனாதை இல்லங்கள், உறைவிடங்கள் போன்றவற்றை தொடங்கினார்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 3.
புவியியல்சார் கண்டுபிடிப்புகள்.
அ) மாலுமி ஹென்றி என்பவர் யார்?
விடை:
மாலுமி ஹென்றி, நீண்ட நெடுந்தூர கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிய போர்ச்சுகல் இளவரசர்.

ஆ) புவியியல்சார் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை வரிசைப்படுத்து.
விடை:

  • நெடுந்தெலைவு கடற்பயணத்துக்கான ஆர்வம்.
  • இதுவரை பயனப்படாத கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம்.
  • பயணக்குறிப்புகள் தூண்டிய ஆர்வம் மற்றும் மதம் பரப்பும் எண்ணம் அடிப்படையான பொருளாதார அம்சம்.

இ) அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் அழித்தொழிப்புக்கு இட்டுச் சென்றது எது?
விடை:
உயிர் ஆபத்து விளைவிக்கும் நோய்களின் பரவல் (சின்னம்மை, அம்மை, தட்டம்மை, மலேரியா, விஷக்காய்ச்சல்)

ஈ) முக்கோண வர்த்தகம் என்றால் என்ன?
விடை:
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலைக்கு வாங்கின. அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகமாக ஆகியது.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 51 Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 53

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

10th Social Science Guide இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ………………..
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) பஞ்சாப்
ஈ) மத்தியப் பிரதேசம்
விடை:
இ) பஞ்சாப்

Question 2.
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு …………….. காற்றுகள் உதவுகின்றன.
அ) லூ
ஆ) நார்வெஸ்டர்ஸ்
இ) மாஞ்சாரல்
ஈ) ஜெட் காற்றோட்டம்
விடை:
இ மாஞ்சாரல்

Question 3.
ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ………………. ஆகும்.
அ) சமவெப்ப கோடுகள்
ஆ) சம மழைக்கோடுகள்
இ) சம அழுத்தக்கோடுகள்
ஈ) அட்சக் கோடுகள்
விடை:
அ) சமவெப்ப கோடுகள்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 4.
இந்தியாவின் காலநிலை ……………… ஆக பெயரிடப்பட்டுள்ளது.
அ) அயன மண்டல ஈரக் காலநிலை
ஆ) நிலநடுக் கோட்டுக் காலநிலை
இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
ஈ) மித அயனமண்டலக் காலநிலை
விடை:
இ அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

Question 5.
பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
ஆ) இலையுதிர்க் காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்
விடை:
ஆ) இலையுதிர்க் காடுகள்

Question 6.
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ………………..
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
ஈ) கர்நாடகா
விடை:
ஆ) ஆந்திரப் பிரதேசம்

Question 7.
யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது …………………
அ) நீலகிரி
ஆ) அகத்திய மலை
இ) பெரிய நிக்கோபார்
ஈ) கட்ச்
விடை:
ஈ) கட்ச்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 2

III. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

IV. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

Question 1.
ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
அ) பாலைவனம்
ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) மகாநதி டெல்டா
விடை:
அ) பாலைவனம்

Question 2.
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
அ) அட்ச பரவல்
ஆ) உயரம்
இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
ஈ) மண்
விடை:
ஈ) மண்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
காலநிலை பாதிக்கும் காரணிகளை பட்டியலிக.
விடை:

  • அட்சப் பரவல்
  • கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • பருவக்காற்று
  • நிலத்தோற்றம்
  • ஜெட் காற்றுகள்

Question 2.
“வெப்ப குறைவு விகிதம்” என்றால் என்ன?
விடை:

  • புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
  • இதற்கு ‘வெப்ப குறைவு விகிதம்’ என்று பெயர்.

Question 3.
“ஜெட் காற்றோட்டங்கள்” என்றால் என்ன?
விடை:
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட் காற்றுகள்” என்கிறோம்.

Question 4.
பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
  • பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
  • இந்தியா ஒரு ஆண்டின் கணிசமான காலத்தில் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 5.
இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை
  • கோடைக்காலம்: மார்ச் முதல் மே வரை
  • தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம்: ஜீன் முதல் செப்டம்பர் வரை
  • வடகிழக்கு பருவக் காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை.

Question 6.
‘பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?
விடை:

  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு எனப்படுகிறது.

Question 7.
அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • மேற்கு கடற்கரை,
  • அசாம்,
  • மேகாலயாவின் தென்பகுதி,
  • திரிபுரா,
  • நாகலாந்து,
  • அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன.

Question 8.
இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
  • மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
  • இவை “மாங்குரோவ் காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 9.
இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
விடை:

  • மன்னார் வளைகுடா
  • நீலகிரி
  • சுந்தரவனம்
  • அகத்தியமலை
  • கஞ்சன்ஜங்கா

VI. வேறுபடுத்துக.

Question 1.
வானிலை மற்றும் காலநிலை. வ.எண் வானிலை
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 3

Question 2.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 4

Question 3.
வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 5

VII. காரணம் கண்டறிக.

Question 1.
மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.
விடை:
மேற்கு கடலோர சமவெளி குறுகலானது. சராசரியாக 65 கி.மீ பரப்பு கொண்டது. எனவே குறுகலானது.

Question 2.
இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.
விடை:
இந்தியா வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பருவமழை என்பது இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணியாகும்.

Question 3.
மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.
விடை:
கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளதால் தாவரங்கள் குளிர்ச்சியாக உள்ளது.

VIII. விரிவான விடையளி.

Question 1.
தென்மேற்கு பருவக் காற்று குறித்து எழுதுக.
விடை:
தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் அல்லது மழைக்காலம்:

  • இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவக்காற்று விளங்குகிறது.
  • பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
  • உலகளாவிய காலநிலை நிகழ்வான எல்நினோ தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு எனப்படுகிறது.
  • இக்காற்று இந்தியாவின் தென்முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
  • வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. மேகாலாயாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழையைத் தருகிறது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.

Question 2.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்:

  • ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டர் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
  • மேற்குதொடர்ச்சி மலை கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
  • இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை , மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

அயன மண்டல இலையுதிர்க்காடுகள்:

  • இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இதனை ‘பருவக்காலக் காடுகள்’ என்றும் அழைக்கலாம்.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  • தேக்கு மற்றும் சால் மிக முக்கிய மரங்களாகும்.

அயன மண்டல வறண்ட காடுகள்:
ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் :

  • இக்காடுகளை ‘முட்புதர் காடுகள்’ என்றும் அழைப்பர்.
  • கருவேலம், சீமை கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.

அல்பைன்/இமயமலைக்காடுகள்:
உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இக்காடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு இமயமலைக்காடுகள், மேற்கு இமயமலைக்காடுகள்:
அல்பைன் காடுகள்:

  • இவ்வகைக்காடுகள் ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன.
  • ஓக், சில்வர், பீர், பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள் இக்காட்டின் முக்கிய மரவகைகளாகும்.

அலையாத்திக் காடுகள்:

  • கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
  • மகாந்தி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
  • இவை “மாங்குரோவ் காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

10th Social Science Guide இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சமச்சீர் காலநிலை ………………. காலநிலை எனப்படுகிறது.
அ) பிரிட்டிஷ்
ஆ) பிரெஞ்சு
இ) ரஷ்ய
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) பிரிட்டிஷ்

Question 2.
சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் ………….. இருக்கும்.
அ) வெப்பமாக
ஆ) குளிராக
இ) மிதமாக
ஈ) மித குளிராக
விடை:
ஆ) குளிராக

Question 3.
வானிலை நிபுணர்களை ……………… பிரிவாக பிரித்துள்ளனர்.
அ) 3
ஆ) 4
இ) 2
ஈ) 5
விடை:
ஆ) 4

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 4.
தென்னிந்தியாவில் காற்றின் திசையானது ……………… ஆக உள்ள து.
அ) கிழக்கு-மேற்கு
ஆ) மேற்கு-கிழக்கு
இ) வடக்கு-தெற்கு
ஈ) தெற்கு-வடக்கு
விடை:
அ) கிழக்கு-மேற்கு

Question 5.
இந்திய காலநிலை முக்கிய அம்சமாக ………………. விளங்குகிறது.
அ) வடமேற்கு
ஆ) தென்மேற்கு
இ) தென்கிழக்கு
ஈ) வடகிழக்கு
விடை:
இ) தென்மேற்கு

Question 6.
……………… மழைப்பொழிவை இந்தியா தென்மேற்கு பருவக்காற்று மூலம் பெறுகிறது.
அ) 25%
ஆ) 75%
இ) 57%
ஈ) 52%
விடை:
ஆ) 75%

Question 7.
இந்தியாவின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு …………………….. ஆகும்.
அ) 181 செ.மீ
ஆ) 118 செ.மீ
இ) 150 செ.மீ
ஈ) 105 செ.மீ
விடை:
ஆ) 118 செ.மீ

Question 8.
இலையுதிர்க்காடுகள் ………………….. வெப்பத்தைக் கொண்டுள்ளது.
அ) 22°C
ஆ) 27°C
இ) 25°C
ஈ) 42°C
விடை:
ஆ) 27°C

Question 9.
பாலைவனக் காடுகளை ………… என்பர்.
அ) முட்புதர்க் காடுகள்
ஆ) வறண்ட காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்
விடை:
அ) முட்புதர்க் காடுகள்

Question 10.
…………….. காடுகளை மாங்குரோவ் காடுகள் என்பர்.
அ) அல்பைன்
ஆ) மலைக் காடுகள்
இ) அலையாத்தி
ஈ) வறண்ட காடுகள்
விடை:
இ அலையாத்தி

Question 11.
IBWL ………………ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
அ) 1972
ஆ) 1960
இ) 1952
ஈ) 1925
விடை:
இ 1952

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 12.
இந்தியா …………….. தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளது.
அ) 120
ஆ) 102
இ) 140
ஈ) 104
விடை:
ஆ) 102

Question 13.
இந்தியா ………….. உயிர்க்கோள காப்பகங்களை கொண்டுள்ளது…
அ) 18
ஆ) 81
இ) 8
ஈ) 14
விடை:
அ) 18

Question 14.
புலிகள் பாதுகாப்பு திட்டம் …………. ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) April 1973
ஆ) Sep 1937
இ) Nov 1793
ஈ) Oct 1903
விடை:
அ) April 1973

Question 15.
உலகளாவிய காலநிலை நிகழ்வு …………………. எனப்படுகிறது.
அ) எல்நினோ
ஆ) பருவமழை வெடிப்பு
இ) மாஞ்சஹல்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) எல்நினோ

Question 16.
இந்திய காலநிலையை பாதிக்கும் முக்கிய காரணி ……………… ஆகும்.
அ) நிலத்தோற்றம்
ஆ) வனஉயரி
இ) பருவகால காற்று
ஈ) ஜெட் காற்று
விடை:
இ) பருவகால காற்று

Question 17.
யுனெஸ்கோவின் கீழுள்ள உயிர்க்கோள காப்பகங்கள் …………….. ஆகும்.
அ) 18)
ஆ) 11
இ) 17
ஈ) 12
விடை:
ஆ) 11

Question 18.
பருத்தி ஆடைகளை ……………… காலத்தில் அணிகிறோம்.
அ) குளிர்
ஆ) கோடை
இ) இலையுதிர்க் காலம்
ஈ) பனிக்காலம்
விடை:
ஆ) கோடை

Question 19.
இந்தியா ……………… வனவிலங்கு சரணாலயங்களைக் கொண்டுள்ளது.
அ) 551
ஆ) 515
இ) 505
ஈ) 102
விடை:
ஆ) 515

Question 20.
…………… என்பது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டலத் தன்மையைக் குறிக்கும்.
அ) காலநிலை
ஆ) வானிலை
இ) மான்சூன்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) வானிலை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. இந்தியாவை இருசம பாகங்களாகப் பிரிக்கிறது.
விடை:
கடகரேகை

Question 2.
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் முக்கிய காரணி …………….. ஆகும்.
விடை:
பருவக்காற்று

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 3.
ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டல தன்மையைக் குறிப்பது ……………….
விடை:
வானிலை

Question 4.
ஒரு குறிப்பிட்ட பகுதியின் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பது …………………..
விடை:
காலநிலை

Question 5.
வளிமண்டல குறுகிய பகுதியில் வேகமாக நகரும் காற்றுகள் …………………….. எனப்படும்.
விடை:
ஜெட்காற்றுகள்

Question 6.
மான்சூன் என்ற சொல் ……………. என்ற அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
மௌசிம்

Question 7.
மௌசிம் என்பதன் பொருள் ……………… ஆகும்.
விடை:
பருவகாலம்

Question 8.
இந்தியக் காலநிலை ……………. பருவங்களைக் கொண்டுள்ளது.
விடை:
4

Question 9.
…………….க் காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது.
விடை:
கோடை

Question 10.
தென்மேற்கு பருவக் காற்றுக் காலத்தின் மற்றொரு பெயர் ……………….
விடை:
மழைக்காலம்

Question 11.
உலகின் மிக அதிகளவு மழை பெறும்பகுதி ……………
விடை:
மௌசின்ராம்

Question 12.
மௌசின்ராம் ……………. அமைந்துள்ளது.
விடை:
மேகாலயாவில்

Question 13.
இயற்கைச்சூழ்நிலை அல்லது காடுகளை வாழிடமடாகக் கொண்டு வாழும் விலங்குகள் …………….. எனப்படுகின்றன.
விடை:
வன உயிரினங்கள்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 14.
………………. என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
விடை:
உயிர்க்கோள பெட்டகம்

Question 15.
சுமார் …………………… மேல் உள்ள இமயமலைகளில் காணப்படும் காடுகள் அல்பைன்.
விடை:
2400மீ

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 6
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 7

IV. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : ஜெட் காற்றுகள் குறுகிய பகுதியில் பொதுவாக நகரும்.
காரணம் : வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை ஜெட் காற்றுகள் உருவாக்கும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு காரணம் சரி

V. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

Question 1.
வடகிழக்கு பருவக்காற்று மூலம் நல்ல மழைப்பொழிவு பெறும் மாநிலம் ஆகும்.
அ) அஸ்ஸாம்
ஆ) பீகார்
இ) ஒரிசா
ஈ) மேற்கு வங்காளம்
விடை:
இ ஒரிசா

Question 2.
வங்கக் கடலில் உருவாகும் புயலால் மழை பெறும் மாநிலம்
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரா
இ) கர்நாடகம்
ஈ) மத்தியப்பிரதேசம்
விடை:
ஈ) மத்தியப் பிரதேசம்

VI. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
வானிலை, காலநிலை என்றால் என்ன?
விடை:
வானிலை :
வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.

காலநிலை:
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 2.
பருவக்காற்று – வரையறு.
விடை:

  • “மான்சூன்” என்ற சொல் “மௌசிம்” என்ற அரபு சொல்லிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம் ஆகும்.
  • பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
  • இக்காற்று கோடைக்காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கியும், குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் விசுகிறது.

Question 3.
நார்வெஸ்டர் என்றால் என்ன?
விடை:

  • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் (அல்லது) கால்பைசாகி என்றழைக்கப்படுகிறது.
  • இக்காற்று கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளான பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது.

Question 4.
இயற்கைத் தாவரங்கள் குறிப்பு வரைக.
விடை:

  • இயற்கைத் தாவரம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது.
  • இவை இயற்கையான சூழலில் காணப்படுகின்றன.
  • ஒரு பகுதியில் இயல்பாகவே நீண்ட காலமாக மனிதர்களின் தலையீடு இன்றி இயற்கையாக வளரும் மரங்கள், புதர்கள், செடிகள், கொடிகள் போன்ற அனைத்து தாவர உயிரினங்களையும் இயற்கைத் தாவரங்கள் என்கிறோம்.

Question 5.
இந்திய வனவிலங்கு வாரியம் – குறிப்பு வரைக.
விடை:

  • 1952ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பாகும்.
  • இந்திய வனவிலங்கின் செழுமைத் தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க 102 தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.

VII. வேறுபடுத்துக.

Question 1.
காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப் பக்கம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 8

Question 2.
குளிர்காலம் மற்றும் கோடைக்காலம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 9

VIII. காரணம் கண்ட றிக.

Question 1.
தமிழ்நாடு தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் குறைந்த மழையைப் பெறுகிறது.
விடை:
மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ளதால் குறைந்த மழையைப் பெறுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 2.
சமச்சீர் காலநிலை – பிரிட்டிஷ் காலநிலை
விடை:
சமச்சீர் காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ (அ) மிகக் குளிராகவோ இல்லாததால் பிரிட்டிஷ் காலநிலை எனப்படுகிறது.

IX. விரிவான விடையளி.

Question 1.
இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:
அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

அட்சங்கள் :

  • இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரை அமைந்துள்ளது.
  • 23°30′ வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சமபாகங்களாக பிரிக்கிறது.
  • கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது.
  • கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.

உயரம்:

  • புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
  • இதற்கு “வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.
  • எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கும்.
  • உதகை தென்னிந்தியாவின் இதர மலை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளைவிட மிகவும் குளிராக உள்ளது.

கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு:

  • இந்தியாவில் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை.
  • இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.
  • இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

பருவக்கால காற்று:

  • இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
  • இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
  • தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது. இதேபோல் தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.

ஜெட் காற்றோட்டங்கள்:

  • வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட்காற்றுகள்” என்கிறோம்.
  • கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 2.
வடக்கிழக்கு பருவக்காற்று காலம் விவரி.
விடை:

  • செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியிலிருந்து வங்காளவிரிகுடா நோக்கி வீசுகிறது.
  • பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ் விசை) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது.
  • எனவே இக்காற்று வடகிழக்கு பருவக்காற்று என அழைக்கப்படுகிறது.
  • இப்பருவக்காலம் இந்திய துணைக்கண்ட பகுதியில் வட கீழைக் காற்றுத் தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது எனலாம்.
  • வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன.
  • கடற்கரைப் பிரதேசங்களில் கனமழையுடன் கூடிய பலத்த புயல் காற்று, பெரும் உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
  • இப்பருவத்தில் நாடு முழுவதும் பகல் நேர வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

9th Social Science Guide இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம்
அ) தௌலதாபாத்
ஆ) டெல்லி
இ மதுரை
ஈ) பிடார்
விடை:
அ) தௌலதாபாத்

Question 2.
தக்காண சுல்தானியங்கள் ______ ஆல் கைப்பற்றப்பட்டன.
அ) அலாவுதீன் கில்ஜி
ஆ) அலாவுதீன் பாமன்ஷா
இ ஒளரங்கசீப்
ஈ) மாலிக்காபூர்
விடை:
இ) ஔரங்கசீப்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 3.
______ பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.
அ) பாமினி
ஆ) விஜயநகர்
இ) மொகலாயர்
ஈ) நாயக்கர்
விடை:
ஆ) விஜயநகர்

Question 4.
கிருஷ்ணதேவராயர் ______ ன் சமகாலத்தவர்.
அ) பாபர்
ஆ) ஹுமாயுன்
இ) அக்பர்
ஈ) ஷெர்ஷா
விடை:
இ) பாபர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கு வந்த ஐரோப்பியர் ______
விடை:
போர்ச்சுக்கீசியர்கள்

Question 2.
கி.பி.(பொ.ஆ) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை ______ போரில் தோற்கடித்தது.
விடை:
தலைக்கோட்டைப்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 3.
விஜயநகரம் ஓர் _____ அரசாக உருவானது.
விடை:
ராணுவத்தன்மை கொண்ட

Question 4.
நகரமயமாதலின் போக்கு ______ காலத்தில் அதிகரித்தது.
விடை:
விஜயநகர அரசர்

Question 5.
______ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.
விடை:
மொகலாயர்

III. சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்.

Question 1.
அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
ஈ) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும், அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
விடை:
அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்

Question 2.
அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.
ஆ) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் பாகம் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.
இ) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.
ஈ) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.
விடை:
அ) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.

Question 3.
அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
ஆ) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.
இ மகமுத் கவான் அலாவுதின் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.
ஈ) போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினார்.
விடை:
அ) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 4.
கூற்று (கூ) : கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.
காரணம் (கா) : இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு ; காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் தவறானவை
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
அ) கூற்று சரி ; காரணம் கூற்றை விளக்குகிறது

Question 5.
i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைக் சோழர்கள் வடித்தனர்.
ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.
அ) (i) சரி (ii) தவறு
ஆ) (i), (ii) ஆகிய இரண்டும் சரி
இ) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு
ஈ) (i) தவறு (ii) சரி.
விடை:
இ) (i), (ii) ஆகிய இரண்டும் தவறு

IV. கீழ்க்கண்டவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 30

V. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி

Question 1.
மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.
Answer:
மாலிக்காபூரின் படையெடுப்புகள்:

  • கி.பி. 1296 – 1316ல் நடைபெற்ற அலாவுதீன் கில்ஜி ஆட்சியின்போது முஸ்லீம் ஆட்சியின் தாக்கம் உணரப்பட்டது. கி.பி. 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும் படைத்தளபதியுமான மாலிக்காபூர் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் தென்பகுதி வடஇந்திய முஸ்லிம் அரசர்களின் சுற்றுவட்டத்துக்குள் வர நேர்ந்தது.
  • செல்வங்களைக் கவரும் நோக்கில் பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. ‘தௌலதாபாத்’ என மறுபெயர் சூட்டப் பெற்ற தேவகிரி கைப்பற்றப்பட்டது. நாட்டின் இரண்டாவது வலிமைமிகு தளமாயிற்று.

Question 2.
விஜயநகர அரசை உருவாக்கியது யார்? அவ்வரசை ஆண்டவம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • சங்கம் வம்சத்தின் ஹரிகரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு உருவாக்கப்பட்டது.
  • சங்கம் வம்சம், சாளுவ வம்சம், துளுவ, ஆர வீடு வம்சாவளிகள்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 3.
பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:

  • பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால், அடிப்படையான மூ லப் பொருள் எளிதாகக் கிடைத்தது.
  • தாவரச்சாயங்களைப் பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிந்திருந்தது.

Question 4.
நகரமயமாக்கலுக்கு உதவிய காரணிகள் யாவை?
Answer:

  • பெரிய நகரங்களும், சிறிய நகரங்களும் தங்களின் வெவ்வேறான பொருளாதாரப் பங்கினை பூர்த்தி செய்தன. பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கிச் சேவைகள் ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன. விரிவான வலைப்பின்னல் போன்ற சாலைகள் நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைத்தன.
  • சிறு நகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாகச் செயல்பட்டு அருகேயுள்ள கிராம உட்பகுதிகளை இணைத்தன.
  • பக்தர்களின் தொடர் வருகையால் புனித தலங்கள் நகரங்களாக வளர்ச்சியடைந்தன. சந்தை உருவாகி உற்பத்தியையும் வணிகத்தையும் ஊக்குவித்தது. பொருளாதார மையங்களாயின.

Question 5.
பட்டு வளர்ப்பு என்றால் என்ன?
Answer:

  • பட்டு வளர்ப்பு என்பது மல்பெரி பட்டுப் பூச்சிகளை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யும் முறையாகும். 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.
  • ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக வங்காளம் திகழ்ந்துள்ளது.

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி

Question 1.
கி.பி.(பொ.ஆ) 1526 முதல் 1707 வரையிலான அரசியல் மாற்றங்களை விவாதி.
Answer:
மொகலாயர்கள் – கி.பி.(பொ.ஆ) 1526 – 1707:

  • கி.பி.பொ.ஆ) 1526ல் முதலாம் பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி கொண்டு மொகலாயப் பேரரசை பாபர் நிறுவினார். மாபெரும் மொகலாயர்கள்’ எனக் குறிப்பிடப்படும் அறுவரில் அக்பரும், ஒளரங்கசீப்பும் அடங்குவர்.
  • அக்பர் நாடுகளைக் கைப்பற்றுதல், ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணுதல் மூலம் தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார்.
  • மாபெரும் கடைசி மொகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் காலத்தில் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தது. இந்தியத்துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. அவருக்குப்பின் பேரரசு பலவாறாகப் பிரிந்தாலும் ஐரோப்பியர் வருகையால் முடிவு பெற்றது.
  • 17ஆம் நூற்றாண்டில் சிவாஜி தலைமையில் எழுச்சி பெற்ற மராத்திய அரசராக மையம் மொகலாயர் அதிகாரத்தை மேற்கு இந்தியப் பகுதிகளில் மதிப்பிழக்கச் செய்தது.
  • மொகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகளாக கேரளத்தின் தென்மேற்குப் பகுதி, தென் தமிழகப் பகுதிகள் மட்டுமே இருந்தன.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 2.
இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சிகளை விளக்குக.
Answer:
இடைக்கால இந்தியாவின் வணிக வளர்ச்சி :

  • இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது. கிராமமே பொருள் உற்பத்தியின் அடிப்படை பிழைப்புக்கான பொருளாதார நிலையில் செலவாணி என்பது பண்டமாற்று, உற்பத்தியாளர் உபரியை உற்பத்தி செய்து அவரே வாழ்விடப் பகுதி வாரச் சந்தையில் விற்பனை செய்தல், உற்பத்தியாளரிடமிருந்து விற்பனை செய்வதை இடைத்தரகர்கள் மேற்கொள்ளுதல்.
  • கடைகளோடும், கடைவீதிகளோடும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்ட நகரங்கள், நாட்டின் பிறபகுதிகளோடு சாலைகளால் இணைக்கப்பட்டதால் பிராந்திய வணிகத்தின் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன.
  • இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதி வணிகத்தில் சிறுகப்பல்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டன. முக்கிய துறைமுகங்கள் (சூரத், மசூலிப் பட்டினம், கோழிக்கோடு
  • இந்தியப் பெருங்கடலின் குறுக்கே கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்காவரை கடல் வணிகம்
    செழித்தோங்கியது. நிலவியல் ரீதியாக இந்தியப் பெருங்கடலின் நடுவே இந்தியா அமைந்திருப்பது இப்பிராந்திய வணிகத்தில் ஒரு சிறப்பு.
  • ஏற்றுமதிப் பொருட்கள்: துணி, மிளகு, நவரத்தினக்கற்கள், இந்திய வைரம், இரும்பு, எஃகு.
  • இறக்குமதிப் பொருட்கள்: பட்டு, செராமிக் ஓடுகள், தங்கம், நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள், கற்பூரம்.

Question 3.
“தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” விளக்கவும். ”
Answer:
தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” ஏனெனில்,

  • தமிழ்க வரலாற்றின் செழிப்புமிக்க இக்காலத்தில் வணிகமும், பொருளாதாரமும் விரிவடைந்தன.
  • நிர்வாக இயந்திரம் மறு சீரமைக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் கிராமம் (ஊர்) ஆகும், நாடு, கோட்டம் (மாவட்டம்) என அமைந்தது. மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் ‘பிரம்மதேயம்’. சந்தை கூடுமிடங்கள், சிறுநகரங்கள் ‘நகரம்’. இவை தனக்கென ஒரு மன்றத்தையும் (சபை) கொண்டிருந்தன.

மன்றங்களின் பொறுப்புகள் :

    • நிலங்கள், நீர்நிலைகள், கோவில்கள் பராமரிப்பு, மேலாண்மை செய்தல்.
    • உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல்.
    • அரசுக்கு சேரவேண்டிய வரிகளை வசூல் செய்தல்
  • சோழர்கள் காலத்தில் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
  • முதல் பரிமாணம்: புதிய கோவில்கள் கட்டப்படுதல்.
  • இரண்டாவது பரிமாணம்: பழைய கோவில்கள் பன்முனைச் சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாறுதல்.

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் இடைக்கால இந்தியாவின் முக்கிய இடங்களைக் குறிக்கவும்.
2. சோழர்கள் காலத்து முக்கியக் கட்டங்களை பற்றிய படங்களைச் சேகரிக்கவும். கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைப்படத்தில் இடைக்கால இந்தியாவின் முக்கிய இடங்களை குறிக்கவும்.

9th Social Science Guide இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குப்தர்கள் காலத்தை விவரிப்பதற்கு செவ்வியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர் _____
விடை:
பர்ட்டன் ஸ்டெய்ன்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 2.
____ ஆட்சியின் போது, தௌலதாபாத்தில் கலகம் வெடித்தது.
விடை:
முகமதுபின் துக்ளக்

Question 3.
தேவகிரியில் _____ ஆட்சி புரிந்தனர்.
விடை:
யாதவர்கள்

Question 4.
கடைசி மாபெரும் மொகலாயப் பேரரசர் ______
விடை:
ஔரங்கசீப்

Question 5.
தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் ______ என்றழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.
விடை:
நாயக்

Question 6.
மகாராஷ்டிராவில் விதோவின் பக்தர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் ______
விடை:
வர்க்கரி சம்பிரதயர்

Question 7.
வட இந்தியாவில் கிணறுகளில் இருந்து நீர் இறைக்க ______ பயன்படுத்தப்பட்டது.
விடை:
பாரசீகச் சக்கரம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 8.
_______ இந்தியாவில் பயிரிடப்பட்ட முக்கியமான சாயப்பயிராகும்.
விடை:
அவுரி

II. சுருக்கமான விடையளி

Question 1.
பாமினி சுல்தானியம் பற்றி விவரி.
Answer:

  • அலாவுதீன் பாமான்ஷா கி.பி. 347இல் பாமினி சுல்தானியத்தை உருவாக்கினார். பிடார் அவ்வரசின் தலைநகரமானது.
  • பாமினி சுல்தானியம் சுமார் நூற்றைம்பது ஆண்டு காலம் நிலைத்திருந்தது.
  • அதற்குக் காரணம் அரசியல் மேதையும் விசுவாசமிக்க அமைச்சருமான மகமுத் கவான் என்பவரின் சிறந்த நிர்வாகமாகும்.

Question 2.
தக்காணத்தில் தோன்றிய ஐந்து சுல்தானியங்கள் யாவை?
Answer:

  • பீஜப்பூர்
  • அகமது நகர்
  • கோல்கொண்டா
  • பிரார்
  • பிடார்.

Question 3.
முதலாம் ராஜேந்திரனின் சிறப்புப் பெயர்கள் யாவை?
Answer:

  • கங்கை கொண்ட சோழன்
  • கடாரம் கொண்ட சோழன்

Question 4.
இடைக்கால இந்தியாவின் சிறந்த வரலாற்று அறிஞர்கள் யாவர்?
Answer:

  • இபின்பாதூதா
  • அல்பரூனி
  • பெரிஷ்டா.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

Question 5.
இந்தியத்துணி மீது மயக்கம்’ – விவரி
Answer:

  • நறுமணப் பொருட்களைத் தேடியே இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள், ஆசிய நாடுகளிடையே நடைபெறும் வணிகத்தில், குறிப்பாகத் துணி உற்பத்தியில் இந்தியா வகித்த முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டனர்.
  • ஐரோப்பியச் சந்தையில் இந்தியத் துணிகளுக்கு எதிர்பாராத மிகப்பெருந் தேவை ஏற்பட்டது. இம்மனோநிலை அடிக்கடி “இந்தியத் துணி மீது மயக்கம்” என குறிக்கப்பட்டது.

III. ஒவ்வொரு தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.

Question 1.
ஐரோப்பியரின் வருகை

அ) இந்தியாவிலிருந்து நடைபெற்ற நறுமணப் பொருட்கள் வணிகத்தை கட்டுப்படுத்தியது யார்?
Answer:
முஸ்லீம்கள்

ஆ) அனைத்துப் பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது எவ்வாறு?
Answer:
கப்பற்படை வலிமையால்

இ) இந்தியாவில் ஐரோப்பியரின் வணிக நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன?
Answer:
கிழக்கிந்தியக் கம்பெனிகள்.

ஈ) இந்தியாவில் டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டேனியர் ஆகியோரின் இடங்கள் எவை?
Answer:
டச்சுக்காரர்கள் – புலிகாட் (பழவேற்காடு) நாகப்பட்டிணம்
ஆங்கிலேயர் – சென்னை
பிரெஞ்சுக்காரர் – பாண்டிச்சேரி
டேனியர் – தரங்கம்பாடி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 7 இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 83

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

10th Social Science Guide இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……..
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
விடை:
இ) 3214கி.மீ

Question 2.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
விடை:
இ கோசி

Question 3.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
விடை:
ஆ) தீபகற்பம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 4.
பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
விடை:
இ இலங்கை

Question 5.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
விடை:
ஆ) ஆனை முடி

Question 6.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………
அ) பாபர்
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
விடை:
இ பாங்கர்

Question 7.
பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
விடை:
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 2

III. காரணம் கூறுக.

Question 1.
இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:

  • இமயமலைகள் ஒரு இளம் மடிப்பு மலை.
  • வடக்கே இருந்த யுரேசியா, தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதிகள் ஒன்றை நோக்கி இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவிமேலோடு ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மடிப்பு இமயமலை உருவானது

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.
விடை:

  • வடஇந்திய ஆறுகள் இமயமலையில் உற்பத்தியாகின்றன.
  • எனவே ஆண்டு முழுவதும் நதிகளில் நீர் கிடைக்கிறது.
  • தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன.

Question 3.
தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப்பாயும் நதிகள்.
விடை:

  • இந்நதிகள் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகின்றன.
  • இந்த ஆறுகள் பள்ளத்தாக்கில் செங்குத்து சாய்வுடன் பாய்கிறது.

Question 4.
மேற்கு நோக்கிப்பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை.
விடை:

  • மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மிக முக்கிய தூரமே ஓடி கடலில் கலக்கின்றன.
  • பள்ளத்தாக்குகள் வழிப் பாய்வதால் டெல்டாவை உருவாக்க முடிவதில்லை.

IV. வேறுபடுத்துக.

Question 1.
இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 3

Question 2.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 4

Question 3.
மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 5

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
விடை:
வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும், வடக்கில் சீனா, நேபாளம், பூடானுடனும், கிழக்கில் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும்
தெற்கில் இலங்கையுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

Question 2.
இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
விடை:

  • மத்திய தீர்க்கரேகையான 82°30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. கிழக்கு தீர்க்க ரேகையின் தலநேரம், இந்திய திட்ட நேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 3.
தக்காண பீடபூமி – குறிப்பு வரைக.
விடை:

  • தக்காணபீடபூமி, தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டதாகும்.
  • இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.
  • சுமார் 7 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது.
  • கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.

Question 4.
இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
விடை:
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை
ஆ) தபதி
இ) மாகி
ஈ) சபர்மதி

Question 5.
இலடச்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
விடை:
இலட்சத்தீவுகள் :

  • இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
  • இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும்.
  • இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.

VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
விடை:
இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. ட்ரான்ஸ் இமயமலைகள்
  2. இமயமலைகள்
  3. கிழக்கு இமயமலை/பூர்வாஞ்சல் குன்றுகள்

1. டிரான்ஸ் இமயமலைகள் (மேற்கு இமயமலைகள்):

  • இம்மலைகள் ஜம்மு – காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. இவை ‘திபெத்தியன் இமயமலை’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
  • இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.

2. இமயமலை:

  • இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
  • இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
  • வடக்கே இருந்த யுரேசியா நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.
  • இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.
  • இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
    1. உள் இமயமலைகள் / இமாத்ரி
    2. மத்திய இமயமலை / இமாச்சல்
    3. வெளி இமயமலை / சிவாலிக்

3. பூர்வாஞ்சல் குன்றுகள் :

  • இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
  • இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
  • பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.

இமயமலையின் முக்கியத்துவம்:

  • வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. எ.கா. சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
விடை:
தீபகற்ப இந்திய ஆறுகள்:

  • தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன.
  • பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
  • இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும்.
  • தீபகற்ப ஆறுகளை அவை பாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
    1. கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
    2. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் :
அ. மகாநதி:

  • இந்நதி சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 85 கி.மீ நீளத்திலும் பாய்கிறது.
  • மகாநதி பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது.
  • இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஆ. கோதாவரி:

  • தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறாகும்.
  • நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
  • இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
  • கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு ஏரி அமைந்துள்ளது.

இ. கிருஷ்ணா :

  • மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகிறது.
  • இது தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும்.
  • கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு போன்றவை இவ்வாற்றின் முக்கிய துணை ஆறுகளாகும்.

ஈ. காவிரி:

  • காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகிறது.
  • இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
  • திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து, இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.

மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை :

  • மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் உற்பத்தியாகிறது.
  • இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
  • பர்னா, ஹலுன், ஹொன், பஞ்சர், தூதி, சக்கார், டவா மற்றும் கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.

ஆ) தபதி :

  • தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி 724 கி.மீ நீளத்தையும், 65145 ச.கி.மீ. பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
  • இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
  • வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.

Question 3.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
விடை:

  • வடிகாலமைப்பு என்பது முதன்மையாறுகளும், துணையாறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ, ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும் செயலாகும்.
  • முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால் கொப்பரை என்று அழைக்கப்படுகின்றது.

கங்கை நதி தொகுப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும். கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ. பரப்பளவில் பாய்கிறது. கங்கை சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகும் உள்ளன.

கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 7010மீ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.

இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ. ஆகும்.

வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டக், கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன. வங்கதேசத்தில், கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

10th Social Science Guide இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
ஆசிய கண்ட த்தில் இந்தியா …………….. பெரிய நாடு.
அ) ஏழாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இரண்டாவது

Question 2.
இந்தியா ……………… நாட்டுடன் தனது மிக நீண்ட எல்லையைப் பகிர்கிறது.
அ) ஆப்கானிஸ்தான்
ஆ) சீனா
இ) மூன்றாவது
ஈ) பங்களாதேஷ்
விடை:
ஈ) பங்களாதேஷ்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 3.
இந்தியக் கடற்கரை …………….. பகுதிகளைக் கொண்டது.
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஆறு
விடை:
ஆ) மூன்று

Question 4.
இந்திய நிலப்பகுதியின் தென்கோடி முனை ……………. ஆகும்.
அ) இந்திரா முனை
ஆ) குமரி முனை
இ) இந்திரா கோல்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) குமரி முனை

Question 5.
இந்தியா ஏறத்தாழ ……………… தீர்க்க கோடுகளை கொண்டுள்ளது.
அ) 40
ஆ) 30
இ) 20
ஈ) 10
விடை:
ஆ) 30

Question 6.
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ……………… ஆகும்.
அ) 8°4’வ
ஆ) 37°6’வ
இ) 85°30’கி
ஈ) 82°30’கி
விடை:
ஈ) 82°30’கி

Question 7.
மத்திய தீர்க்க ரேகை …………. வழியே செல்கிறது.
அ) லாகூர்
ஆ) மிர்சாபூர்
இ) சபர்மதி
ஈ) வேதாரண்யம்
விடை:
ஆ) மிர்சாபூர்

Question 8.
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் …………….. நகர்.
அ) டாமன் டையூ
ஆ) சண்டிகர்
இ) அமராவதி
ஈ) பாண்டிச்சேரி
விடை:
இ அமராவதி

Question 9.
இந்திய இயற்கையமைப்பு ……………. பெரும் பிரிவுகளைக் கொண்டது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை:
ஆ) 5

Question 10.
“இமாலயா” என்ற சொல்லுக்கு ……………. மொழியில் பனி உறைவிடம் எனப் பொருள்.
அ) கிரேக்கம்
ஆ) சமஸ்கிருதம்
இ) லத்தீன்
ஈ) பெங்காலி
விடை:
ஆ) சமஸ்கிருதம்

Question 11.
இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ……………
அ) நீலகிரி
ஆ) திபெத்தியன்
இ) ஆரவல்லி
ஈ) பெங்காலி
விடை:
இ) ஆரவல்லி

Question 12.
ட்ரான்ஸ் இமயமலையின் மற்றொரு பெயர் …………. இமயமலை.
அ) கிழக்கு
ஆ) சர்வாதிரி
இ) திபெத்தியன்
ஈ) சிவாலிக்
விடை:
இ திபெத்தியன்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 13.
…………….. என்பது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
அ) கிழக்கு
ஆ) இமயமலை
இ) ட்ரான்ஸ் இமயமலை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இமயமலை

Question 14.
உலகின் உயரமான சிகரங்கள் ………………….
அ) 12
ஆ) 14
இ) 41
ஈ) 21
விடை:
ஆ) 14

Question 15.
பூர்வாஞ்சல் குன்றுகள் ….. மாநிலங்களிடையே பரவியுள்ளது.
அ) வடகிழக்கு
ஆ) வடமேற்கு
இ) தென்மேற்கு
ஈ) தென்கிழக்கு
விடை:
அ) வடகிழக்கு

Question 16.
இமயமலை …………….ற்கு பெயர் பெற்றவை.
அ) சரணாலயம்
ஆ) உயிர்க்கோள காப்பகம்
இ) பல்லுயிர் மண்டலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பல்லுயிர் மண்டலம்

Question 17.
சிந்துவின் துணையாறுகள் …………………. ஆகும்.
அ) 4
ஆ) 5
இ) 6
ஈ) 7
விடை:
ஆ) 5

Question 18.
இந்தியாவின் மிகப்பெரிய வடிகாலமைப்பு ……………… ஆகும்.
அ) சிந்து
ஆ) பிரம்மபுத்திரா
இ) கங்கை
ஈ) வைகை
விடை:
இ கங்கை

Question 19.
…………….. விருத்தகங்கா எனப்படுகிறது.
அ) மகாந்தி
ஆ) கோதாவரி
இ) கிருஷ்ணா
ஈ) காவிரி
விடை:
ஆ) கோதாவரி

Question 20.
……………… இந்தியாவின் முக்கிய தீபகற்ப ஆறு.
அ) நர்மதை
ஆ) தபதி
இ) மாஹி
ஈ) ஸ்ரீரங்கம்
விடை:
ஆ) தபதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா பரப்பளவில் உலகின் ………… பெரிய நாடு.
விடை:
ஏழாவது

Question 2.
இந்தியாவின் நிலப்பரப்பு ………………… ச.கி.மீ.
விடை:
32,87,263

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 3.
……………. 15,200 கி.மீ. நில எல்லைகளைக் கொண்டுள்ளது.
விடை:
இந்தியா

Question 4.
இந்தியா ஒரு ………….. ஆகும்.
விடை:
தீபகற்பம்

Question 5.
இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் …………… ஆகும்.
விடை:
7,516.6 கி.மீ.

Question 6.
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் கடல் பகுதி ……….. ஆகும்.
விடை:
பாக்நீர்ச்சந்தி

Question 7.
இந்தியா ஒரு ………………. ஆகும்.
விடை:
துணைக்கண்டம்

Question 8.
இந்தியாவின் தென்கோடி முனை ……………. ஆகும்.
விடை:
இந்திரா முனை

Question 9.
இந்தியாவின் வடமுனை …………… என அழைக்கப்படுகின்றது.
விடை:
இந்திரா கோல்

Question 10.
…………… இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
விடை:
பூர்வாஞ்சல் குன்றுகள்

Question 11.
இமயமலையின் மத்திய மலைத்தொடர் ……………… ஆகும்.
விடை:
இமாச்சல்

Question 12.
இமயமலையின் வடக்கே ………………………. உள்ளது.
விடை:
இமாத்ரி

Question 13.
ஆறுகளால் கொண்டுவரப்படும் படியவைக்கப்படும் புதிய வண்டல்மண் ……….. எனப்படும்.
விடை:
காதர்

Question 14.
காதர் நிலத்தின் மற்றொரு பெயர் ……………… ஆகும்.
விடை:
பெட்நிலம்

Question 15.
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர். ……….. எனப்படுகிறது.
விடை:
பூர்வாதிரி

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 6
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 7

IV. காரணம் கூறுக.

Question 1.
இந்தியா ஒரு துணைக்கண்டம்.
விடை:
இயற்கை நில அமைப்பு, காலநிலை இயற்கைத் தாவரம் கனிமங்கள் மற்றும் மனிதவளத்தில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால், இந்தியா துணைக்கண்டம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
வடபெரும் சமவெளி = உலகிலேயே வளமான சமவெளி.
விடை:
துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்டுள்ளது.

V. வேறுபடுத்துக.

Question 1.
இமாத்ரி மற்றும் இமாச்சல்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 8

Question 2.
இராஜஸ்தான் சமவெளி மற்றும் பஞ்சாப் ஹரியானா சமவெளி
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 9

Question 3.
இந்திய திட்ட நேரம் மற்றும் உலகத் திட்ட நேரம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 10

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
பிரம்மபுத்திரா சமவெளி – குறிப்பு வரைக.
விடை:

  • பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி அஸ்ஸாமில் அமைந்துள்ளது.
  • பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
  • சுமார் 56,275 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.

Question 2.
ஏன் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது?
விடை:
பாகிஸ்தான், மியான்மர், வங்காள தேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

இயற்கை நில அமைப்பு, காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

Question 3.
இயற்கை அமைப்பின் பிரிவுகள் யாவை?
விடை:
இயற்கை அமைப்பை 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை,

  1. வடக்கு மலைகள்
  2. வடபெரும் சமவெளிகள்
  3. தீபகற்ப பீடபூமிகள்
  4. கடற்கரைச் சமவெளிகள்
  5. தீவுகள்

Question 4.
கடற்கரைச் சமவெளி – குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய தீபகற்ப பீடபூமி குறுகலான, வேறுபட்ட அகலத்தையுடைய வடக்கு தெற்காக அமைந்துள்ள கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.
  • இக்கடற்கரைச் சமவெளிகள் ஆறுகள், கடல் அலைகள் ஆகியவற்றின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் உருவானவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 5.
ஆறுகளின் வகைகள் யாவை?
விடை:
ஆறுகளை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
இமயமலை ஆறுகள் :
சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை

தீபகற்ப ஆறுகள் :
நர்மதை, கோதாவரி, தபதி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா.

Question 6.
இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் யாவை?
விடை:

  1. நீளமானவை மற்றும் அகலமானவை.
  2. வற்றாத நதிகள்
  3. நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
  4. ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.

Question 7.
தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகள் யாவை?
விடை:

  1. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
  2. குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
  3. வற்றும் ஆறுகள்
  4. நீர் மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.

VII. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
இமயமலையின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:
இமயமலையின் முக்கியத்துவம்:

  • தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
அந்தமான் நிக்கோபர் தீவுகள் பற்றி விவரி.
விடை:

  • இத்தீவுக் கூட்டங்கள் கடலடி மலைத்தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளன.
  • பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளதாலும், அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும் அடர்ந்த காடுகள் இங்கு காணப்படுகின்றன.
  • இத்தீவின் பரப்பளவு 8,249 ச.கி.மீ ஆகும்.
  • இத்தீவுக் கூட்டத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
  • அவை வட பகுதி தீவுகள் அந்தமான் எனவும் தென் பகுதி தீவுகள், நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • இத்தீவுக் கூட்டங்கள் நாட்டின் அமைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
  • இதன் நிர்வாகத் தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும்.
  • அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 100 கால்வாய் பிரிக்கிறது.

VIII. செயல்பாடுகள்

கங்கை ஆறு பாயும் மாநிலங்களை இந்திய நிலவரைபடத்தில் குறிக்கவும்.
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 11

கங்கை ஆறு பாயும் மாநிலங்கள்
1. உத்தரக்கண்ட்
2. உத்திரப்பிரதேசம்
3. பீகார்
4. மேற்கு வங்காளம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 6 இடைக்காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 6 இடைக்காலம்

9th Social Science Guide இடைக்காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
_______ ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.
அ) ஷின்டோ
ஆ) கன்பியூசியானிசம்
இ தாவோயிசம்
ஈ) அனிமிசம்
விடை:
அ) ஷின்டோ

Question 2.
_______ என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
அ) டய்ம்யாஸ்
ஆ) சோகன்
இ பியுஜிவாரா
ஈ) தொகுகவா
விடை:
அ) டய்ம்யாஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி ______
அ) தாரிக்
ஆ) அலாரிக்
இ சலாடின்
ஈ) முகமது என்னும் வெற்றியாளர்
விடை:
அ) தாரிக்

Question 4.
ஹருன்-அல் ரஷித் என்பவர் _____ ன் திறமையான அரசர்
அ) அப்பாசித்து வம்சம்
ஆ) உமையது வம்சம்
இ சசானிய வம்சம்
இ மங்கோலிய வம்சம்
விடை:
அ) அப்பாசித்து வம்சம்

Question 5.
நிலப்பிரபுத்துவம் _____ மையமாகக் கொண்டது.
அ) அண்டியிருத்தலை
ஆ) அடிமைத்தனத்தை
இ வேளாண் கொத்தடிமையை
ஈ) நிலத்தை
விடை:
அ) அண்டியிருத்தலை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1
_____ என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவார்.
விடை:
அய்னஸ்

Question 2.
_____ என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை:
யமட்டோ

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
______ என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை:
மதினாட்-உன்-நபி

Question 4.
வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு பண்பாட்டில் பின் தங்கிய ____ மக்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர்.
விடை:
நாடோடிப் பழங்குடியினர்

Question 5.
உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் _____ ஆவார்.
விடை:
இரண்டாம் முகமது.

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

Question 1.
i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்
iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன
iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iii) சரியானவை
ஈ) (iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 2.
i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர்.
ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது.
iii) ‘சிகப்புத் தலைப்பாகை’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ
iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும்
(iv) சரியானவை
ஈ) (iv) சரி
விடை:
இ) (ii) மற்றும்
(iv) சரியானவை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 4.
கூற்று : பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.
காரணம் : சீனாவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.
அ) கூற்று சரி ; காரணம் தவறு
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ கூற்றும் காரணமும் சரியானவை
ஈ) கூற்று தவறு ; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றது
விடை:
அ) கூற்று சரி ; காரணம் தவறு

Question 5.
கூற்று : ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது
காரணம் : ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரி ; காரணம் சரியான விளக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 56

V. சுருக்கமான விடையளி

Question 1.
சீனப் பெருஞ்சுவர்
விடை:
சீனப் பெருஞ்சுவர்:

  • தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கி.மு. 8 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் சுவர்களை எழுப்பிக் கொண்டன.
  • கிழக்கிலிருந்து மேற்காக, சின் அரசவம்சத்தின்காலத்தில் தனித்தனியாக இருந்த சுவர்கள் இணைக்கப்பட்டு சுமார் 5000 கி.மீ. நீளமுடைய உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெருஞ்சுவர் உருவானது. வலுவூட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.

Question 2.
சிலுவைப் போர்களின் தாக்கம்.
விடை:
சிலுவைப்போர்களின் தாக்கம் :

  • நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது. பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களை கட்டிப் போட்டிருந்த அடிமைக்கட்டுகளை உடைத்து வெளியேறினர்.
  • கீழை நாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது. வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாக உருவெடுத்தன. கிழக்கும் மேற்குமான கான்ஸ்டாண்டி நோபிளின் இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.
  • இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெற்றது. போப்பின் ஆட்சிமுறை செல்வாக்கையும் மரியாதையையும் இழந்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது? நிலப்பிரபுத்துவ முறை அண்டியிருத்தலை மையமாகக் கொண்டது.
விடை:

  • அரசர் – கவுளின் பிரதிநிதி. நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். நிலங்களைப் பிரித்து நிலப்பிரபுகளுக்கு கொடுத்தார்.
  • நிலப்பிரபுக்கள் – கோமகன்களாகக் கருதப்பட்ட டியூக்குகள் ‘கவுண்ட்டுகள், ‘யேல்’கள், அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக்கொண்டு அவருக்காக போரிட்டவர்கள். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களைப் பிப் (Fief) துண்டுகளாகப் பிரித்து வைஸ் கவுண்ட் என்போருக்கு விநியோகம் செய்தனர். அரசவை அண்டியிருந்தோர்.
  • வைஸ் கவுண்ட் – நிலப்பிரபுக்களிடம் பிப் துண்டு நிலங்களைப் பெற்று அவர்களை அண்டியிருந்தோர். நைட் (சிறப்புப்பணி வீரர்கள்) – தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்து தர முடியாது. பிரபுக்களை அண்டியிருந்தோர்.
  • பண்ணை அடிமைகள் – அனைவருக்கும் கீழ் அடி மட்டத்தில் இருந்தவர்கள். இவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் என அறியப்பட்டனர்.

Question 4.
இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
விடை:

  • திருச்சபையிலிருந்து விலக்கம்: தகுதியான கிறிஸ்தவனுக்குறிய உரிமைகள் மறுக்கப்படுதல். திருச்சபைக்குள் புனித சடங்குகளை நிறைவேற்ற முடியாது. இறந்தபின் உடலை திருச்சபைக் கல்லறையில் புதைக்க முடியாது.
  • மத விலக்கம்: ஓர் அரச குடிமகனுக்கு தகுதியான சமயம் சார்ந்த பயன்களை மறுத்தல். அரசனுக்கு எதிராக வெறுப்பு கொள்ளத் தூண்டுவது.

VI. விரிவான விடையளி

Question 1.
சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.
விடை:

  • தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ வெற்றி பெற்றார்.
  • கி.பி.(பொ.ஆ) 1192 இல் பேரரசர் இவருக்கு செ-ய்-தாய் சோகன் என்ற பட்டம் சூட்டினார்.
  • காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரான போது சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
  • யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினார். இது, முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
  • வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது.
  • நிலப்பிரபுத்துவ ராணுவத் தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப் பட்டது.
  • ஐரோப்பாவை பயமுறுத்திய மங்கோலியரை சோகுனேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.
  • கி.பி.(பொ.ஆ) 1338-ல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது. அதன்பின், அஷிக்காகா சோகுனேட்க் ஆட்சியைக் கைப்பற்றினர்.
  • இக்காலக்கட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
  • இறுதியில் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் மற்றும் தொகுகவா இய்யாசு ஆகியோர் ஜப்பானை உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 2.
மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
விடை:
மங்கோலியர் ஆட்சி :

  • வெளிநாட்டவர் படையெடுப்புகள் சீனாவில் சுங் அரச வம்ச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததைத் தொடர்ந்து யுவான் அரச வம்சம் என்ற பெயரில் மங்கோலியர்கள் ஆட்சியை நிறுவினர். பாரசீகத்தையும், ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் கைப்பற்றி கி,பி, 1252-இல் மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.
  • யூரேசியாவில் பரவியிருந்த மங்கோலிய ஆதிக்கம், சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்ப உதவியது. பெய்ஜிங் அரச சபை மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
  • விவசாயிகள் வறுமையில் வாடினர். மதம் சார்ந்த அமைப்புகளம், ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின.
  • சிகப்பு தலைப்பாகைகள் (Red Turbans) அமைப்பின் தலைவர் சூ யுவான் சங் கி.பி. 1369-ல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்
2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

9th Social Science Guide இடைக்காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சீனா _____ அரச வம்சத்தால் கிபி. 589ல் ஒன்றிணைக்கப்பட்டது.
அ) அப்பாசித்து
ஆ) உமையது
இ மங்கோலிய
ஈ) சூயி
விடை:
ஈ) சூயி

Question 2.
சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் ____ கிலோ மீட்டர் ஆகும்.
அ) 6100
ஆ) 6200
இ) 6700
ஈ) 7600
விடை:
இ) 6700

Question 3.
வெடி மருந்து _____ ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது.
அ) 1014
ஆ) 1044
இ 1440
ஈ) 1404
விடை:
ஆ) 1044

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 4.
கி.பி. _____ ல் நபிகள் இயற்கை எய்தினார்.
தன்
அ) 618
ஆ) 624
இ 632
ஈ) 652
விடை:
இ) 632

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பௌத்த மதம் ______ மூலம் ஜப்பானில் அறிமுகமாகியது.
விடை:
கொரியா

Question 2.
தாய்-நியா-புங்-காக் என்பதன் பொருள் ______
விடை:
மாபெரும் சூரியன் உதிக்கும் நாடு

Question 3.
சோகா குடும்பத்தின் தலைவர் ______
விடை:
சோடுகு தாய்சி

Question 4.
உமையது வம்சத்தின் தலைநகர் ______
விடை:
டமாஸ்கஸ்

Question 5.
நில பிரபுத்துவத்தில் இறுதி வரிசையில் இடம் பெற்றவர்கள் _____
விடை:
நைட்

III. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
தாங் அரச வம்சத்தின் இரு தலைநகரங்கள் யாவை?
விடை:
போயாங், சாங்-ஆன்.

Question 2.
ஹிஜிரா – வருவி
விடை:
நபிகளும் அவரைப் பின்பற்றுவோரும் இடர்பாடுகளின் காரணமாய் மெக்காவை விட்டு எத்ரிப் நகருக்கு இடம் பெயர்ந்த நிகழ்வு அராபிய மொழியில் ஹிஜிரா’ என அழைக்கப்படுகிறது எத்ரிப் நகர் மெரினா

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
சன்னி, ஷியா பிரிவினர் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
சன்னி பிரிவினர் :
“இஸ்லாமிய நாடுகளின் தலைமையும், நபிகளுக்குப் பின் அப்பொறுப்புக்கு வருவோரும் இஸ்லாத்தில் நம்பிக்கையுடைய மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்.

ஷியா பிரிவினர் :
“அரசியல், மத தலைமைப் பொறுப்புகளை ஏற்போர் நபிகள் நாயகத்துடன் ரத்த உறவு கொண்டவர்களாக அல்லது மண உறவு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்”. என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்.

Question 4.
சாராசென்ஸ் விவரி.
விடை:
சாராசென்ஸ் என்பவர்கள் பலைவனங்களில் நாடோடிகளாக வாழ்ந்து, வலிமை மிகுந்த ஒரு பேரரசின் ஆட்சியாளர்களாக ஆன அராபியர்கள்.
(சகாரா + நஸின் = சாரா சென்ஸ்)

Question 5.
பிப் – குறிப்பு வரைக.
விடை:
பிப் (Fief) என்பது ஒருவருக்கு அவரை விட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். நிலத்தைப் பெற்றவர் நிலம் கொடுத்தவருக்கு கைமாறாக சில சேவைகளைச் செய்வது கடமையாகும்.

IV. கீழ்க்கண்ட தலைப்புகளில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி

Question 1.
ஜப்பானின் சோகுனேட்கள்
அ) ஜப்பானில் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்ட டய்ம்யாஸ் குடும்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
விடை:
தாரா, மினமோட்டா

ஆ) இப்போரில் வெற்றி பெற்றவர் யார்?
விடை:
யோரிடோமோ

இ பேரரசர் வெற்றி பெற்றவருக்கு கொடுத்த பட்டம் என்ன?
விடை:
செ-ய்-தாய்-சோகன் (பண்பாடற்றவர்களை அடக்கிய மாபெரும் தளபதி)

ஈ) முதல் சோகுனேட்டின் தலைநகர் எங்கே நிறுவப்பட்டது?
விடை:
காமகுரா

Question 2.
அப்பாசித்துகளின் ஆட்சி
அ) அப்பாசித்துகள் என்போர் யார்?
விடை:
நபிகள் நாயகத்தின் மாமன் அப்பாஸ் என்பவரின் வழிவந்தவர்கள் அப்பாசித்துகள் என்றழைக்கப்பட்டனர்

ஆ) அப்பாசித்து காலிஃபா சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
விடை:
நம்பிக்கையாளர்களின் தளபதி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

இ அவர்களின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
விடை:
பாக்தாத்

ஈ) யாருடைய ஆட்சியில், அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை எட்டியது?
விடை:
ஹருன்-அல்-ரசீத்

V. விரிவான விடையளி.

Question 1.
திருச்சபை பற்றி விவரி?
விடை:
திருச்சபை :

  • பின் இடைக்காலத்தில் கிறிஸ்தவமதம் கோட்பாடுகள் மற்றும் மத நடைமுறைகள் சார்ந்தவற்றில்
    முக்கியமான வளர்ச்சி பெற்றிருந்தது.
  • கிறிஸ்தவ இறையியலில் சமயகுருமார் கோட்பாடு, புனிதச் சடங்குகள் பற்றிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவை சமய குருமார்களின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தன. இதனால் திருச்சபை படிப்பறிவில்லா தனது உறுப்பினர்கள் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.
  • திருச்சபை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக திருச்சபை விலக்கம், மதவிலக்கம் எனும் இரண்டு கருவிகளைப் பயன்படுத்தியது.
  • சமயம் சார்ந்த அதிகாரம் கொண்டவர்கள், சமயம் சாரா அதிகாரம் கொண்டவர்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அவர்களிடையே மோதல்களை ஏற்படுத்தியது. போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிக்கும் ‘மதவிலக்கம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பேரரசரை பதிவிவிலகச் செய்தார்.
  • போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரியின் நடைமுறையைப் பின்பற்றி போப் மூன்றாம் இன்னோசன் இங்கிலாந்தும் அயர்லாந்தும் திருச்சபைக்குச் சொந்தமானவை என அரசர் ஜானை அங்கீகரிக்க வைத்தார்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 60
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 61
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 62

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
அ) கால்டுவெல்
ஆ) F.W. எல்லிஸ்
இ) சீகன்பால்கு
ஈ) மீனாட்சி சுந்தரனார்
விடை:
இ சீகன்பால்கு

Question 2.
1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.
அ) இரட்டைமலை சீனிவாசன்
ஆ) B.R. அம்பேத்கார்
இ) ராஜாஜி
ஈ) எம்.சி. ராஜா
விடை:
அ) இரட்டைமலை சீனிவாசன்

Question 3.
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.
அ) 1918
ஆ) 1917
இ) 1916
ஈ) 1914
விடை:
அ) 1918

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 4.
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.
அ) பணியாளர் தேர்வு வாரியம்
ஆ) பொதுப் பணி ஆணையம்
இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
ஈ) பணியாளர் தேர்வாணையம்
விடை:
அ) பணியாளர் தேர்வு வாரியம்

Question 5.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அ) எம்.சி. ராஜா
ஆ) இரட்டை மலை சீனிவாசன்
இ) டி.எம். நாயர்
ஈ) பி. வரதராஜூலு
விடை:
அ) எம்.சி. ராஜா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.
விடை:
தமிழ்

Question 2.
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.
விடை:
F.W. எல்லிஸ்

Question 3.
……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
விடை:
மறைமலையடிகள்

Question 4.
தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.
விடை:
நீதிக்கட்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 5.
சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.
விடை:
பரிதிமாற்கலைஞர்

Question 6.
…………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
விடை:
ஆபிரகாம் பண்டிதர்

Question 7.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………
விடை:
டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

அ) (i), (ii) ஆகியன சரி
ஆ) (i), (iii) ஆகியன சரி
இ) (iv) சரி
ஈ) (ii), (iii) ஆகியன சரி
விடை:
ஆ) (i), (iii) ஆகியன சரி

Question 2.
கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு.
ஈ) கூற்று சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .
விடை:
அ) காரணம், கூற்று ஆகியவை சரி.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின.
  • அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 2.
தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பை நன்குப் புலப்படுத்துக.
விடை:

  • தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ – ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.
  • ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.
  • திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழன் தொன்மையையும் நிலைநாட்டினார்.

Question 3.
தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டிலிடவும்.
விடை:
சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், சுப்பிரமணிய பாரதி, ச. வையாபுரி, கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில் தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின்
புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

Question 4.
நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
விடை:

  • நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
  • அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

Question 5.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.

Question 6.
பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
விடை:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
விடை:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை.தாமோதரனார் உ.வே. சாமிநாதர் போன்றவர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர்.

சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.

திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர்.

தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது.

வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.

சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர் மறைமலையடிகள். சுப்பிரமணிய பாரதி. ச.வையாபுரி. கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில், தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

வி. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

பண்டிதர் அயோத்திதாசரும் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தனர்.

Question 2.
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்.
விடை:
1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்தனர்.

நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.

சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர்.

ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது.

இச்சமூகத் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது.

சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையம் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன.

நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது.

இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப்பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.

Question 3.
தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈவே.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
விடை:
பெரியார் ஈ.வெ.ரா:

  • பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
  • 1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது.
  • இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார்.

பெரியார் ஒரு பெண்ணியவாதி:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
  • குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன. என்றார்.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் “பெண் ஏன் அடிமையானாள்?” என்பதாகும்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Question 2.
……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அ) 1999
ஆ) 1909
இ) 1990
ஈ) 1899
விடை:
ஆ) 1909

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 3.
தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.
அ) பிரான்ஸ்
ஆ) சமஸ்கிருதம்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) சமஸ்கிருதம்

Question 4.
சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
அ) 1996
ஆ) 1932
இ) 1923
ஈ) 1899
விடை:
இ 1923

Question 5.
……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
அ) பெரியார்
ஆ) காமராஜ்
இ) காந்திஜி
ஈ) நேரு
விடை:
அ) பெரியார்

Question 6.
M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு
ஆ) கீழ் வகுப்பு
இ) மேல் வகுப்பு
ஈ) நடுத்தர வகுப்பு
விடை:
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

Question 7.
அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.
அ) ஆக்ரா
ஆ) கொல்கத்தா
இ) பம்பாய்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பம்பாய்

Question 8.
சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.
அ) M.C. ராஜா
ஆ) M. சிங்காரவேலர்
இ) அடிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) M. சிங்காரவேலர்

Question 9.
இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) இவையெல்லாம்
விடை:
ஆ) தமிழ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.
விடை:
கருத்தியல்

Question 2.
தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.
விடை:
தமிழ் மறுமலர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 3.
……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.
விடை:
பௌத்தம்

Question 4.
………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.
விடை:
மறைலை அடிகள்

Question 5.
நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.
விடை:
இந்து சமய அறநிலை

Question 6.
பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.
விடை:
ஆணாதிக்க

Question 7.
1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.
விடை:
ஆதிதிராவிட மகாஜன சபை

Question 8.
……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
விடை:
பெண்களின் விடுதலை

Question 9.
………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.
விடை:
மதராஸ் தேவதாசி சட்டம்

Question 10.
மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.
விடை:
15 ஆண்டுகள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும்.
காரணம் : பண்பாடு மற்றும் உணர்வுகளோடு இயைந்திருப்பதால்.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
இ காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 2.
கூற்று : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார். ‘மதராஸ் தேவதாசி’ சட்டத்தை இயற்றினார்.
காரணம் : 1949ல் இச்சட்டம் இயற்றப்பட்டது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ஆ) காரணம் சரி, கூற்று தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
எந்தெந்த துறைகளில் மனிதநேயம் படைப்பாற்றலைத் தூண்டியது?
விடை:
சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் படைபாற்றலைத் தூண்டி எழுப்பியது.

Question 2.
நீதிக்கட்சியின் செயல்பாடுகளைக் கூறு.
விடை:

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

Question 3.
இரட்டைமலை சீனிவாசன் பற்றிக் கூறு.
விடை:

  • இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக
  • ராவ்சாகிப் (1926),
  • ராவ் பகதூர் (1936),
  • திவான் பகதூர் (1936)
  • ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.

Question 4.
பெண்கள் இயக்கங்கள் யாவை?
விடை:

  • இந்தியப் பெண்கள் சங்கம் (WIA)
  • அகில இந்திய பெண்கள் மாநாடு (ALWC)

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 5.
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • முத்துலட்சுமி அம்மையார்,
  • நாகம்மை ,
  • கண்ணம்மா,
  • நீலாவதி,
  • மூவலூர் இராமாமிர்தம்,
  • ருக்மணி அம்மாள்,
  • அலமேலு மங்கை தாயாரம்மாள்,
  • நீலாம்பிகை மற்றும்
  • சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
பெண்களின் இயக்கங்களைப் பற்றி விவரிக்க.
விடை:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன.

அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம், அகில இந்தியப் பெண்கள் மாநாடு ஆகியவை முக்கியமானவையாகும்.

இந்தியப் பெண்கள் சங்கம் என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது.

இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டனர்.

பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினார்.

தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டு கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர்.
முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 5 செவ்வியல் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 5 செவ்வியல் உலகம்

9th Social Science Guide செவ்வியல் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
_____ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
அ) அக்ரோபொலிஸ்
ஆ) ஸ்பார்ட்டா
இ ஏதென்ஸ்
ஈ) ரோம்
விடை:
இ) ஏதென்ஸ்

Question 2.
கிரேக்கர்களின் மற்றொரு பெயர் _____ ஆகும்.
அ) ஹெலனிஸ்டுகள்
ஆ) ஹெலனியர்கள்
இ பீனிசியர்கள்
ஈ) ஸ்பார்ட்டன்கள்
விடை:
ஆ) ஹெலனியர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ______ ஆவார்.
அ) வு-தை
ஆ) ஹங் சோவ்
இ லீயு-பங்
ஈ) மங்கு கான்
விடை:
இ) லீயு-பங்

Question 4.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _____ ஆவார்.
அ) முதலாம் இன்னசென்ட்
ஆ) ஹில்ட்பிராண்டு
இ முதலாம் லியோ
ஈ) போன்டியஸ் பிலாத்து
விடை:
ஈ) போன்டியஸ் பிலாத்து

Question 5.
பெலப்பொனேஷியப் போர் ______ மற்றும் ______ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது.
அ) கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
ஆ) பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
இ ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
ஈ) கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
விடை:
இ) ஸ்பார்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கிரேக்கர்கள் _____ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
விடை:
மராத்தான்

Question 2.
ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் ______
விடை:
கிராக்கஸ் சகோதரர்கள் (டைபிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.
விடை:
ஹான்

Question 4.
_______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.
விடை:
புனித சோபியா ஆலயம்

Question 5.
_____ மற்றும் _____ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
விடை:
மாரியஸ், சுல்லா

III. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.
ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.
iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 2.
i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.
ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.
iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iv) சரி
ஈ) (iv) சரி
விடை:
ஆ) (ii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 3.
i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.
iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றவர்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iv) சரி
ஈ) (iii) சரி
விடை:
ஈ) (ifi) சரி

Question 4.
i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.
ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
iii) பேபியஸ் ஒரு புழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (ii) மற்றும்
(iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 5.
i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.
ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பினார்.
iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.
iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
இ) (iii) சரி

IV. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 30

V. சுருக்கமான விடையளி

Question 1.
ரோமானிய அடிமை முறையைப் பற்றி எழுதுக.
விடை:

  • ரோம் போர்க்கைதிகளை அடிமைகளாக ஆக்கியதன் மூலம் பணம் படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை உருவாக்கியது. பெரும் நிலப்பிரபுக்கள் அடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர்.
  • கி.மு. முதலாம் நூற்றாண்டில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன், அடிமைகளின் எண்ணிக்கை 2 மில்லியன் அடிமைகளால் சுதந்திர மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வறியவரானார்கள். வறியவர்களின் குழந்தைகள் இறுதியில் அடிமைச்சந்தையை வந்தடைந்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 2.
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
விடை:

  • ரோமில் பேரரசருடைய உருவச்சிலைக்கு கிறிஸ்தவர்கள் மரியாதை செய்ய மறுத்தது, அரச துரோகமாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். சிங்கங்களின் முன் வீசப்பட்டனர். ஆனாலும் ரோமப் பேரரசு கிறிஸ்தவர்களை ஒடுக்குவதில் வெற்றிபெறவில்லை.
  • ரோமானியப் பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மதம் மாறியதால் கிறிஸ்தவம் ரோமப் – பேரரசின் அரச மதம் ஆயிற்று.

Question 3.
கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?
விடை:
கார்த்தேஜ் ஹன்னிபால் :

  • இத்தாலியில் ரோம், வட ஆப்பிரிக்காவில் கார்த்தேஜ் ஆகிய இரு சக்திகளிடையே நடைபெற்ற மூன்று போர்களே ‘பியூனிக் போர்கள்’ ஆகும். கார்த்தேஜ் தளபதி ஹன்னிபால் ரோமின் படையைத் தோற்கடித்தது. இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்
  • இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட ரோமானிய படைத்தளபதி பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் ஹன்னிபாலை தோற்கடித்தார். ரோமானியர்களால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார். மூன்றாவது போரில் கார்த்தேஜ் அழிக்கப்பட்டது.

Question 4.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
விடை:

  • பட்டு வணிக வழித்தடத்தை ஹன் பேரரசு திறந்துவிட்டதால் ஏற்றுமதிப்பண்டங்கள் குறிப்பாக பட்டு ரோமப் பேரரசைச் சென்றடைந்தது.
  • பண்பாட்டில் பின்தங்கிய வடபகுதி ஆட்சியாளர்களின் கைவினைஞர்கள், கால்நடை மேய்ப்பர்கள், குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், அங்கவாடி போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல், மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றுக்கான தொழில் நுட்பங்களைக் கொண்டுவந்தனர். இப்புதிய தொழில்நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும், செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.

Question 5.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
விடை:
புனித சோபியா ஆலயம் :

  • ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான புனித சோபியா ஆலயம் கி.பி. 6-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டது. இது அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்கு பெயர்பெற்றது.
  • உதுமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிளை கைப்பற்றியபோது ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது.

VI. விரிவான விடையளி

Question 1.
ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.
விடை:
ஏதென்ஸ் எழுச்சி:

  • ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மக்களாட்சி முறை நிறுவப்பட்டது. சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
  • நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்தட்டு மக்கள் மக்களாட்சியை ‘கும்பலின் ஆட்சி’ எனக கருதினர்.

வளர்ச்சி:

  • பாரசீகப் படையெடுப்பின் அபாயன் கிரேக்கர்களை ஒற்றுமையுடன் இருக்கச் செய்தது. ஆபத்து நீங்கியவுடன் அவர்கள் மீண்டும் சண்டையினைத் தொடங்கினர். விதிவிலக்காக இருந்து ஏதென்ஸ் மட்டுமே அங்கு மக்களாட்சி முறை 200 ஆண்டுகள் நீடித்தது
  • 30 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பெரிகிளிஸ் என்றும் மாபெரும் தலைவரை ஏதென்ஸ் பெற்றிருந்தது, ஸ்பார்ட்டாவோடு பகைமை, இடையூறுகள் ஆகியவற்றையும் மீறி ஏதென்ஸ், பிரமிக்கச் செய்யும் கட்டடங்களை கொண்ட உன்னத நகராக மாறியது. மாபெரும் கலைஞர்களும். சிந்தனையாளர்களும் இருந்த இக்குறிப்பிட்ட காலட் ‘பெரிகிளிசின் காலம்’ எனப்படுகிறது.

கொடைகள்:

  • சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற சிந்தனையாளர்கள் உண்மையைக் கண்டடைவதற்கான புதிய பாரபட்சமற்ற அடிப்படை ஒன்றைக் கண்டறியும் முயற்சி மேற்கொண்டிருந்தனர்,
  • டெமோகிரைடஸ், எபிகியூரஸ் ஆகிய இரவரும் உலகம் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்தனர். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்சும், தூசிடைபிதம் இக்காலத்தவர்கள்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 2.
செவ்வியல் காலத்தில் இந்தியாவின் நிலை குறித்து எழுதுக.
விடை:
செவ்வியல் காலத்தில் இந்தியா:

  • குஷாணர்கள் காலம் ரோமானியப் பேரரசின் இறுதி காலகட்டமான ஜுலியஸ் சீசரின் ஆட்சி காலத்தின் சமகாலமாகும்.
  • ஜுலியஸ் சீசரின் காலத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த அகஸ்டஸ் சீசர் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
  • தென்னிந்தியாவில் களப்பிரர் காலம் செவ்வியல் காலத்தின் இறதிக்காலமாகும் (4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகள்)
  • தேக்கு, மிளகு, மணிகள், தந்தம் போன்றவை மலபார் கடற்கரை வழியாக பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின.
  • பதினெண்மேல்கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் தொகுக்கப்பட்டன. சங்ககாலம் செவ்வியல் காலத்தின் சமகாலமாகும் (கி.மி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை).

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய வரைபடத்தில் மேலை மற்றும் கீழை ரோமானிய பேரரசுகளின் எல்லைகளைக் குறிக்கவும்.
2. ஆசிரியரின் உதவியோடு மாணவர்கள் கூகுள் இணையத்தில் கிரேக்கம், ரோம் மற்றும் சீனாவின் சிறப்புமிக்க அழகினைப் பார்க்கவும்.

9th Social Science Guide செவ்வியல் உலகம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிளோட்டோ ______ ன் சீடராவார்.
விடை:
சாக்ரடீஸ்

Question 2.
வடிவயில் தொடர்பான அடிப்படைத் தோற்றங்களை _____ முறைப்படுத்தினார்.
விடை:
யூக்ளிட்

Question 3.
ரோமில் பிளபியன்ஸ் என்பவர்கள் _______
விடை:
சாதாரண மக்கள்

Question 4.
பிளினி _____ நூலை எழுதினார்.
விடை:
அறிவியல் கலைக் களஞ்சியம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

Question 5.
வெர்ஜில் எழுதிய நுல் ______
விடை:
ஏனேய்ட்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
எந்த நாடுகள் செவ்வியல் உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தின?
விடை:

  • கிரீஸ்
  • ரோம்
  • சீனா.

Question 2.
பெலப்போனேசியப் போர்கள் என்றால் என்ன?
விடை:
பெரிக்கிளிஸ் ஆட்சியின் போது ஏதென்சும், ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து போர் செய்தன. இப்போர்கள் “பெலப்போனேசியப் போர்கள்” ஆகும்.

Question 3.
பெரிகிளிசின் காலம் என்றால் என்ன?
விடை:
மாபெரும் கலைஞர்களும், சிந்தனையாளர்களும் ஏதென்ஸ் நகரில் இருந்த குறிப்பிட்ட காலத்தை ‘பெரிகிளிசின் காலம்’ என அழைக்கின்றனர்.

Question 4.
பட்டு வழித்தடம் என்றால் என்ன?
விடை:
பட்டு வழித்தடம் அல்லது பட்டுப்பாதை :

  • சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையிலான வணிக வழித்தடம், பட்டுப் பாதை (அ) பட்டுச் சாலை (அ) பட்டு வழித்தடம் என்று அறியப்படுகிறது. இது சீனாவை மேலை நாடுகளோடு இணைக்கின்றது.
  • இப்பாதை வழியாக இருபெரும் நாகரிகங்களான சீனா மற்றும் ரோம் ஆகியவற்றுக்கிடையே பண்டங்களும், கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பட்டு மேற்கு நோக்கிச் செல்ல, கம்பளி, தங்க, வெள்ளி ஆகியன கிழக்கு நோக்கிச் சென்றன.

III. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி

Question 1.
ரோம் ஒரு பேரரசாக உருவாதல்

அ) கிராக்கஸ் சகோதரர்கள் யார்?
விடை:
டைபிரியஸ் கிரோக்ஸ் காரியஸ் டோ கிராக்கஸ் (பாட்ரீசியப் பிரிவினர்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

ஆ) அவர்கள் ஆற்றிய பங்கு என்ன?
விடை:
பிளபியன்ஸ் பிரிவினரான ஏழைகளை ஆதரித்தனர்.

இ அவர்களின் உயிர்த் தியாகத்தின் வெளிப்பாடு என்ன?
விடை:
குடியரசு பேரரசாக மாற்றம் பெற்றது

ஈ) முதல் ரோமப் பேரரசர் யார்?
விடை:
அகஸ்டஸ்

Question 2.
ஹன் பேரரசு

அ) ஹன் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?
விடை:
லீயு-பங்

ஆ) ஹன் பேரரசின் தலைநகரம் எது?
விடை:
சாங்-அன்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம்

இ) ஹன் பேரரசின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
விடை:
சாங்-அன்

ஈ) ஹன் பேரரசின் புகழ்பெற்ற வலிமை வாய்ந்த அரசர் யார்?
விடை:
வு-தை

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 80
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 5 செவ்வியல் உலகம் 81

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
அ) T.M. நாயர்
ஆ) P. ரங்கையா
இ) G. சுப்பிரமணியம்
ஈ) G.A. நடேசன்
விடை:
ஆ) P. ரங்கையா

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
அ) மெரினா
ஆ) மைலாப்பூர்
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) ஆயிரம் விளக்கு
விடை:
ஈ) ஆயிரம் விளக்கு

Question 3.
“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
அ) அன்னிபெசன்ட்
ஆ) M. வீரராகவாச்சாரி
இ) B.P. வாடியா
ஈ) G.S. அருண்டேல்
விடை:
அ) அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 4.
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
அ) S. சத்தியமூர்த்தி
ஆ) கஸ்தூரிரங்கர்
இ) P. சுப்பராயன்
ஈ) பெரியார் ஈவெ.ரா
விடை:
அ) S. சத்தியமூர்த்தி

Question 5.
சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
அ) K. காமராஜ்
ஆ) C. இராஜாஜி
இ) K. சந்தானம்
ஈ) T. பிரகாசம்
விடை:
ஈ) T. பிரகாசம்

Question 6.
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
அ) ஈரோடு
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) மதுரை
விடை:
இ சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.
விடை:
T. முத்துச்சாமி

Question 2.
………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.
விடை:
பாரத மாதா சங்கம்

Question 3.
சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.
விடை:
B.P. வாடியா

Question 4.
சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..
விடை:
C. இராஜாஜி

Question 5.
……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.
விடை:
யாகுப் ஹசன்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 6.
1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
விடை:
ஆரியா (எ) பாஷ்யம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
iv) V.S சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (iii) மட்டும் சரி
இ) (iv) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

Question 2.
i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.
ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.
iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (i) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii) மட்டும் சரி
ஈ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
இ (ii) மட்டும் சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 2

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பை பட்டியலிடுக.
விடை:

  • தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.

Question 2.
திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.
  • தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
  • மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது. காவல்நிலைய, நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
  • காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
இந்தியாவின் விடுதலைப் பேராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
விடை:

  • 1916இல் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
  • அன்னி பெசன்ட் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது இந்தியா ஒரு தேசம் எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
  • நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
விடை:
சுதேசி இயக்கம் :

  • வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
  • வ.உ. சிதம்பரனார். V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர்.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
  • மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது.
    மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
  • சுதேசி கருத்துக்களைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின.
  • சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும்.
  • சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் தொடங்கப்பட்ட சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
விடை:
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்:

  • பிராமணரல்லாதோர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர்.
  • 1912இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
  • அதன் செயலராக (. நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார்.
  • 1916 ஜீன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கா ‘திராவிடர் சங்க தங்கும் விடுதி’யை நிறுவினர்.
  • 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், டாக்டர் T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் – சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடினர்.
  • பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.
விடை:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்:
காந்தியடிகள் முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.

ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார்.

1930 ஏப்ரல் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது.

இவ்வணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் புனைந்திருந்தார்.

காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அணிவகுத்துச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு பயணித்த பாதையெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் இராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர்.

T.S.S. ராஜன் திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C. சாமிநாதர் மற்றும் K. சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.

தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள்:

  • T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர்.
  • இராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார்.
  • 1932 ஜனவரி 26இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

திருப்பூர் குமரனின் வீரமரணம்:
1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.
அ) நவம்பர் 1884
ஆ) டிசம்பர் 1994
இ) டிசம்பர் 1884
ஈ) நவம்பர் 1994
விடை:
ஆ) டிசம்பர் 1994

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.
அ) 1886
ஆ) 1898
இ) 1868
ஈ) 1888
விடை:
அ) 1886

Question 3.
இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.
அ) 22
ஆ) 72
இ) 83
ஈ) 17
விடை:
ஆ) 72

Question 4.
மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.
அ) ஆங்கிலம்
ஆ) தமிழ்
இ) ஹிந்தி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 5.
புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.
அ) தமிழ்நாடு
ஆ) பாண்டிச்சேரி
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
ஆ) பாண்டிச்சேரி

Question 6.
…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
அ) 1912
ஆ) 1921
இ) 1812
ஈ) 1821
விடை:
அ) 1912

Question 7.
……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.
அ) சுப்பராயலு
ஆ) T.M. நாயர்
இ) சி. நடேசனார்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சுப்பராயலு

Question 8.
தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
அ) மே 17, 2000
ஆ) 17 ஏப்ரல் 1920
இ) 12 ஏப்ரல் 1922
ஈ) 25 ஏப்ரல் 1930
விடை:
ஆ) 17 ஏப்ரல் 1920

Question 9.
………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.
அ) 13 ஜனவரி 1922
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930)
ஈ) அக்டோபர் 1919
விடை:
அ) 13 ஜனவரி 1922

Question 10.
……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.
அ) காந்திஜி
ஆ) ராஜாஜி
இ) நேரு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ராஜாஜி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.
விடை:
G. சுப்ரமணியம்

Question 2.
தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.
விடை:
சென்னை மகாஜன சபை

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
………. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.
விடை:
சுதேசமித்ரன், தி ஹிந்து

Question 4.
…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
விடை:
சுதேசி

Question 5.
சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.
விடை:
பாண்டிச்சேரி

Question 6.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.
விடை:
ஆஷ்

Question 7.
……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.
விடை:
செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

Question 8.
…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.
விடை:
அன்னிபெசன்ட்

Question 9.
1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.
விடை:
பனகல் அரசர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 10.
1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.
விடை:
கருப்புச் சட்டத்தை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று: வங்கப்பிரிவினை சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்றது.
காரணம்: வங்கப் பிரிவினை 1905ஆம் ஆண்டு நடந்தது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி
விடை:
அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 2.
கூற்று: சைமன் குழு இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டது.
காரணம்: ஒரு இந்தியர்கள் கூட அக்குழுவில் இடம்பெறவில்லை என்பதால்

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
விடை:
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
ஜார்ஜ் ஜோசப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் பணி செய்தார்.
  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர் ஆற்றி சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை ‘ரோசாப்பு துரை’ என அன்புடன் அழைத்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
நீல் சிலை அகற்றும் போராட்டம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர்.
  • 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

Question 4.
திருப்பூர் குமரனின் வீரமரணம் குறித்து எழுதுக.
விடை:

  • 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்தியவண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.
  • பரவலாக திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R. குமாரசாமி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார்.
  • ஆகையால் இவர் கொடிகாத்த குமரன் என புகழ்ப்படுகிறார்.

Question 5.
முதல் காங்கிரஸ் அமைச்சரவை பற்றிக் கூறு.
விடை:

  • 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
  • நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
  • தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது, மக்களிடையே அது பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டிக்காட்டியது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சென்னை மகாஜன சபை மற்றும் மிதவாதக் கூட்டத்தை விவரி.
விடை:
சென்னை மகாஜன சபை:

  • தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
  • 1884 மே 16இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு , P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார்.
  • இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்காற்றினார்.
  • அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
  • குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
  • இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

மிதவாதக் கூட்டம் :

  • சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
  • அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் அடையாறு எனும் இடத்தில் உள்ள பிரம்மஞான சபையில் கூடியது.
  • தாதாபாய் நௌரோஜி, K.T. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G. சுப்பிரமணியம், P. ரங்கையா, P. அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

VII. செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் உள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 5