Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை ஆகும்?
அ) பர்மா – இந்தியா
ஆ) இந்தியா – நேபாளம்
இ) இந்தியா – சீனா
ஈ) இந்தியா – பூடான்
விடை:
இ) இந்தியா – சீனா

Question 2.
இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
1) ஜி 20
2) ஏசியான் (ASEAN)
3) சார்க் (SAARC)
4) பிரிக்ஸ் (BRICS)

அ) 2 மட்டும்
ஆ) 2 மற்றும் 4
இ) 2, 4 மற்றும் 1
ஈ) 1, 2 மற்றும் 3
விடை:
அ) 2 மட்டும்

Question 3.
ஒபெக் (OPEC) என்பது ……………….
அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்
விடை:
இ எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
அ) வங்காளதேசம்
ஆ) மியான்மர்
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) சீனா
விடை:
அ) வங்காளதேசம்

Question 5.
பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) சல்மா அணை – 1. வங்காளதேசம்
ii) பராக்கா ஒப்பந்தம் – 2. நேபாளம்
iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் – 3. ஆப்கானிஸ்தான்
iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் – 4. பூடான்

அ) 3 1 4 2
ஆ) 3 1 2 4
இ) 3 4 1 2
ஈ) 4 3 2 1
விடை:
அ) 3 1 4 2

Question 6.
எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை:
இ 7

Question 7.
எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?
அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு
விடை:
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு

Question 8.
எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
அ) அருணாச்சலப்பிரதேசம்
ஆ) மேகாலயா
இ) மிசோரம்
ஈ) சிக்கிம்
விடை:
ஈ) சிக்கிம்

Question 9.
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
விடை:
அ) ஐந்து

Question 10.
சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
அ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
இ) கிளிமன்ட் அட்லி
ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை
விடை:
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ……….. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 2.
இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ……….. இருக்கிறது.
விடை:
மியான்மர்

Question 3.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ………………. ஆகும்.
விடை:
நேபாளம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவிற்குச் சொந்தமான …. ……… என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.
விடை:
டீன்பிகா

Question 5.
இடிமின்ன ல் நிலம் என்று அறியப்படும் நாடு ………………. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 6.
இந்தியாவும் இலங்கையும் ………………ஆல் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பாக் ஜலசந்தி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறையில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
1) சாலை
2) ரயில் வழி
3) கப்பல்
4) உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 1, 3 மற்றும் 4
இ) 2, 3 மற்றும் 4
ஈ) 1, 2, 3 மற்றும் 4
விடை:
ஆ) 1, 3 மற்றும் 4

Question 2.
கூற்று : இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International – Solar Alliance) தொடங்கியுள்ள ன.
காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 3.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.
3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.
4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.

அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2, 3 மற்றும் 4
இ) 1, 3 மற்றும் 4
ஈ) 1, 2 மற்றும் 4
விடை:
இ 1, 3 மற்றும் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
கூற்று : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.
காரணம் : தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ கூற்று காரணம் இரண்டும் சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மற்றும் மாலத்தீவு.

Question 2.
போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.
விடை:
இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.

Question 3.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா.

Question 4.
கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன ?
விடை:

  • கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காக சாலை – நதி – துறைமுகம் – சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது.
  • கொல்கத்தா நகரை ஹோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்ம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார மண்டலத்தை உருவாக்க மியான்மர், கம்போடியா, வியட்நாம் வழியே பணிகள் நடைபெறுகிறது.

Question 5.
சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
விடை:

  • சபஹார் ஒப்பந்தம் என்பது முக்கூட்டு ஒப்பந்தம் ஆகும்.
  • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Question 6.
இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.
விடை:

  • ஐ.பி.எஸ்.ஏ. (IBSA)
  • பிம்ஸ்டெக் (BIMSTEC)
  • பி.சி.ஐ.எம் (BCIM)
  • ஆர்.சி.இ.பி (RCEP)
  • எம்.ஜி.சி. (MGC)
  • ஈ.எ.எஸ் (EAS)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
விடை:

  • உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கிறது.
  • 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.
விடை:

  • பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
  • இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை அணிசேரா இயக்கம், சார்க்க ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 3

Question 2.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
விடை:
பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்:
உறுப்பு நாடுகளிடையே பெருளாதார வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

பிரிக்ஸின் நோக்கங்கள் :

  • பிராந்திய வளர்ச்சியை அடைவது.
  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது.
  • மனித மேம்பாட்டிற்கு மிகப் பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்.
  • அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
  • வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்.
  • உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.

Question 3.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.
விடை:
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு:
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கில் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.

இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்:

  • அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்.
  • எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்.
  • பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்.
  • ஒபெக் எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்தல்
  • பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். – இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
  • புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது.
  • மையம் பொது மக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் மூலம் வலிமை பெற்றது.
அ) இந்தோ பசிபிக்
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்
இ) இந்தியா ஆசியா
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்

Question 2.
இந்தியாவும் வங்காளதேசமும் …… நீளம் கொண்ட நிலப்பரப்பை எல்லையாக கொண்டுள்ளன.
அ) 4906.5 கி.மீ
ஆ) 4509.7 கி.மீ
இ) 4096.7 கி.மீ
ஈ) 4976.2 கி.மீ
விடை:
இ 4096.7 கி.மீ

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 3.
…………….. நீரைப் பகிர்ந்து கொள்ள 1977இல் கையெழுத்தான பராக்கா ஒரு வரலாற்று ஒப்பந்தம்.
அ) கங்கை
ஆ) காவிரி
இ) யமுனா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
அ) கங்கை

Question 4.
இந்திய-வங்காள தேசத்திற்கு பொதுவான 54 நதிகளிலிருந்து அதிகபட்ச நலனைப் பெறுவதற்காக ……………… நாட்டுக் கூட்டு நதி ஆணையம் செயல்படுகிறது.
அ) இரு
ஆ) மூன்று
இ) பல
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இரு

Question 5.
……………. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு எனப்படும் ‘இடி மின்னல் நிலம்’ ஆகும்.
அ) மியான்மர்
ஆ) சீனா
இ) பூடான்
ஈ) இந்தோனேசியா
விடை:
இ பூடான்

Question 6.
…………….. பாரத் முதல் பூடான் வரை என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அளித்தது.
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) இந்தியா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
இ இந்தியா

Question 7.
குரு பத்மசம்பவா எனும் ……………. இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
அ) சமண துறவி
ஆ) புத்த துறவி
இ) சீக்கிய துறவி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புத்த துறவி

Question 8.
இந்தியாவுடன் ஒப்பிடுவதற்கு தகுதி வாய்ந்த நாடு …………… ஆகும்.
அ) பூடான்
ஆ) அசாம்
இ) திரிபுரா
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

Question 9.
………………ஆம் ஆண்டு மக்மகான் எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டடது.
அ) 1925
ஆ) 1918
இ) 1914
ஈ) 1941
விடை:
இ) 1914

Question 10.
……………… இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.
அ) மியான்மர்
ஆ) மாலத்தீவு
இ) நேபாள்
ஈ) சீனா
விடை:
ஆ) மாலத்தீவு

Question 11.
எரிபொருள் தேவைகளான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் நமது பங்குதாரராக ………………. உள்ள து.
அ) பூடான்
ஆ) நேபாளம்
இ) சீனா
ஈ) மியான்மர்
விடை:
ஈ) மியான்மர்

Question 12.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படுநாடு …………… ஆகும்.
அ) வங்காள தேசம்
ஆ) கொல்கத்தா
இ) நேபாளம்
ஈ) பூடான்
விடை:
இ நேபாளம்

Question 13.
நேபாளத்தின் பெரிய முதலீட்டாளராக ……………… திகழ்கிறது.
அ) சீனா
ஆ) இந்தியா
இ) நேபாளம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா

Question 14.
………………..ம் ஆண்டு கட்டுப்பாடுக் கோடு தீர்மானிக்கப்பட்டது.
அ) 1947
ஆ) 1949
இ) 1972
ஈ) 1994
விடை:
ஆ) 1949

Question 15.
………….. படி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
அ) COMCASA
ஆ) ISRO
இ) AUSINDEX
ஈ) JIM
விடை:
அ) COMCASA

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவிற்குச் சொந்தமான ………………. என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையிலேயான எல்லையில் உள்ளது.
விடை:
டீன்பிகா

Question 2.
இந்தியா மற்றும் பூடான் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பிற்கு …………… ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
விடை:
நீர்மின்சக்தி துறை

Question 3.
இருதரப்பு வணிகம் ……………..யைக் கொண்டுள்ளது.
விடை:
மகத்தான வளர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் ……………… மனப்பான்மையுடனே இருந்து வருகிறது.
விடை:
விரோத

Question 5.
1972ஆம் ஆண்டின் ……………… ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லையாகும்.
விடை:
சிம்லா

Question 6.
……………… ஜப்பானிய ஒத்துழைப்பில் உருவான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.
விடை:
டெல்லி மெட்ரோ ரயில்

Question 7.
சபஹார் ஒப்பந்தம் எனப்படும் ………………. ஒப்பந்தம் ஆகும்.
விடை:
முக்கூட்டு

Question 8.
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக ……………… வரை அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
மெலுக்கா

Question 9.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
சீனாவின் ஷாங்காய்

Question 10.
பிரிக்ஸ் என்ற சொல் ……….. என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
விடை:
ஜிம் ஓ நீல்

Question 11.
………………… என்பது பல துறை வளர்ச்சி வங்கி.
விடை:
புதிய மேம்பாட்டு வங்கி

Question 12.
CRA என்பதன் விரிவாக்கம் ……………. ஆகும்.
விடை:
அவரச ஒதுக்கீடு ஏற்பாடு

Question 13.
கச்சா எண்ணெய் அதிக அளவில் நுகர்வு செய்யும் நாடுகளில் ……………… ஒன்று.
விடை:
இந்தியாவும்

Question 14.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ………….. கொண்டுள்ளது.
விடை:
ஓபெக்

Question 15.
…………… 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்பு போட்டியின் சின்னமாகும்.
விடை:
OPEC இலச்சினை

Question 16.
இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தில் …………….. ஒரு பங்குதாரர் ஆகும்..
விடை:
இலங்கை

Question 17.
தென்கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக கொல்கத்தா நகரை ………….. உடன் இணைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விடை:
ஹோசிமின்

Question 18.
இந்தியாவையும் காத்மண்டுவையும் இணைப்பதற்கான ……………… நீளமுள்ள மகேந்திர ராஜ் மார்க் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது.
விடை:
204 கி.மீ

Question 19.
இந்திய அரசாங்கம் ……………… நீர்மீன்சக்தி திட்டங்களை பூடானில் அமைந்துள்ளது.
விடை:
மூன்று

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 20.
அண்டை நாடுகளின் உறவை பொருத்தவரை இந்தியா ……………… நிலையை கொண்டுள்ளது.
விடை:
உன்னத

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) இந்தியாவும் பூடானும் இணக்கதன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ii) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
iii) இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கு அனுமதியளிக்கிறது.

அ) i), iii) சரி
ஆ) ii), iii) தவறு
இ) i) தவறு
ஈ) எல்லாம் சரி
விடை:
i) தவறு

Question 2.
கூற்று (A) : இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவு நட்பு ரீதியாக உள்ளது.
காரணம் (R) : தமிழ் இனப்பிரச்சினை தொடர்பான காலகட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

அ) A சரி R ஆனது A-யை விளக்குகிறது.
ஆ) A தவறு R சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
A சரி R ஆனது A-யை விளக்குகிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
கட்டுப்பாடுக் கோடு – வரையறு.
விடை:

  • 1949ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது.
  • இது 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும்.

Question 2.
பிரிக்ஸ் குறிப்பு வரைக.
விடை:

  • பிரிக்ஸ் என்ற சொல் ஜிம் ஓ’ நீல் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டில் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் கணித்தார்.

Question 3.
குரு பத்மசம்பவா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
  • அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்.

Question 4.
மெலுக்கா – வரையறு.
விடை:
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது.

Question 5.
ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவை எழுதுக.
விடை:

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களைப் பல ஆண்டுகளாக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுத்தி வருகின்றன.
  • ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து இந்திய ஆஸ்திரேலிய கடற்படை பயிற்சி ஒத்திகையின் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன.

Question 6.
டீன்பிகா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா என்ற பகுதி மேற்கு வங்களாம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது.
  • குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்களாதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
மக்மகான் எல்லைக் கோடு – வரையறு.
விடை:

  • இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும்.
  • இது 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி மக்மகான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பிரிக்ஸ் நிதி கட்டமைப்பு பற்றி விவரிக்க.
விடை:

  • புதிய மேம்பாட்டு வங்கி என்பது பல துறை வளர்ச்சி வங்கி ஆகும்.
  • அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதே இதன் முதன்மைச் செயலாகும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இது முன்னுரிமை வழங்குகிறது.
  • அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு நாணய விவகாரங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பண நெருக்கடியில் இருந்து பாதுகாத்திட அடிப்படைத் திட்டம் வழங்க வகை செய்கிறது.

பிரிக்ஸ் பணம் செலுத்தும் திட்டம்:

  • 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளைத் தொடங்கினர்.
  • இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி, செய்திப் பரிமாற்ற அமைப்பிற்கு மாற்றாக இருக்கும்.

Question 2.
இந்தியாவும் மாலத்தீவும் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.

இதன் அமைவிட முக்கியத்துவத்தினாலும் அருகாமையில் அமைந்திருப்பதாலும் மாலத்தீவினுடனான உறவு இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியாவும் மாலத்தீவும் இனம், மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வணிகத் தொடர்பு ஆகிய பல பரிமாணத் தொடர்புகளைப் பழங்காலத்திலிருந்தே சுமூகமாகப் பேணி வருகின்றன.

இரு நாடுகளுக்கிடையே வணிகம் மற்றும் சுற்றுலா மேம்பட்டு இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் வான்வழி கண்காணிப்புத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நல்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.