Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

9th Social Science Guide அரசாங்கங்களின் வகைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
___, ____ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
விடை:
இங்கிலாந்து, பிரான்ஸ்

Question 2.
பாராளுமன்ற ஆட்சி முறை _____ என்றும் அழைக்கப்படுகின்றது.
விடை:
அமைச்சரவை அரசாங்கம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் _____ ஆவர்.
விடை:
பிரதமர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 30

III. வேறுபடுத்துக

Question 1.
ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 35

Question 2.
நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 40
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 41

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒற்றையாட்சி முறை.
விடை:

  • ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகவும்.
  • மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும். நிர்வாக அமைப்புகள் மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தும்.
  • இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
  • ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றன.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

Question 1.
அரசியலமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • எழுதப்பட்ட அரசியலமைப்பு
  • எழுதப்படாத அரசியலமைப்பு
  • நெகிழும் தன்மையுடைய அரசியலமைப்பு
  • நெகிழும் தன்மையற்ற அரசியலமைப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 2.
கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
விடை:

  • உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.
  • மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
  • அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது.
  • பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.

Question 3.
ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 45

VI. விரிவான விடையளி

Question 1.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
விடை:

  • சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
  • அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
  • ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
  • ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.
  • அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
  • ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

Question 2.
அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:

  • அதிபர் மக்களாட்சி முறையில் நிர்வாகத்துறை தன் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் சட்ட மன்றத்திற்குப் பொறுப்புடையது அல்ல.
  • நிர்வாகத்துறையில் செயல்பாடுகளில் சட்ட மன்றத்தின் தலையீடு இருக்காது.
  • இது அதிகாரப்பகிர்வு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.
  • இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறை யில் உள்ளது.

அதிபர் மக்களாட்சி முறைக்கும், நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் :

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 80

9th Social Science Guide அரசாங்கங்களின் வகைகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அரசாங்கம் என்பது ஒரு அரசின் ____ செயல்பாடுகளைக் குறிப்பதாகும்.
விடை:
நிர்வாக

Question 2.
____, ____ ஆகியவை கூட்டாட்சி ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை:
அமெரிக்க ஐக்கிய
நாடுகள், சுவிட்சர்லாந்து

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
அதிபர் மக்களாட்சிமுறை என்பது ____ ஆட்சி முறை எனக் கருதப்படுகிறது.
விடை:
பொறுப்பில்லாத

Question 4.
அமெரிக்க அதிபர் _____ என்ற அமைச்சரவையின் உதவியோடு ஆட்சி செய்கிறார்.
விடை:
கிச்சன் கேபினட்

Question 5.
ஆங்கில முடியாட்சி என்பது _____ முடியாட்சி ஆகும்.
விடை:
அரசியலமைப்புக்கு உட்பட்ட

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஐக்கியப் பேரசில் காணப்பட்ட ____ அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும்.
அ) மக்களாட்சி
ஆ) முடியாட்சி
இ) சிறுபான்மையினர் ஆட்சி
ஈ) இரட்டை ஆட்சி
விடை:
ஆ) முடியாட்சி

Question 2.
ஒற்றை ஆட்சி அரசுக்கு உதாரணம்
அ) ஆஸ்திரேலியா
ஆ) கனடா
இ) ஜப்பான்
ஈ) இரஷ்யா
விடை:
இ) ஜப்பான்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
கூட்டாட்சி முறை அரசுக்கு உதாரணம்
அ) பிரேசில்
ஆ) ஸ்ரீலங்கா
இ) ஜப்பான்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) பிரேசில்

Question 4.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
ஆ) 4 ஆண்டுகள்

III. சுருக்கமாக விடையளி

Question 1.
அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  • சட்டமன்றம்
  • நிர்வாகத்துறை
  • நீதித்துறை

Question 2.
கூட்டாட்சி முறை ஆட்சி என்றால் என்ன?
விடை:
அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
நல் ஆட்சியின் பண்புகளைப் பட்டியிலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 75

V. விரிவான விடை தருக.

Question 1.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒற்றை ஆட்சி முறையின் அம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பலமான மத்திய அரசு
  • மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை
  • ஒற்றை அரசமைப்பு
  • அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை
  • மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம்
  • அவசரகால ஏற்பாடுகள்
  • ஒற்றைக் குடியுரிமை
  • ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை
  • அகில இந்தியச் சேவைகள்
  • ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல்.

Question 2.
நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் யாவை? நாடாளுமன்ற ஆட்சியின் நிறைகள் மற்றும் குறைகள் யாவை?
விடை:
நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள்

  • பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்
  • பெரும்பான்மை கட்சி ஆட்சி
  • கூட்டுப் பொறுப்புணர்வு
  • இரட்டை உறுப்பினர்
  • பிரதம மந்திரியின் தலைமை

நிறைகள்

  • சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம்
  • பொறுப்பான அரசாங்கம்
  • சர்வாதிகாரத்தைத் தடுக்கிறது.
  • பரவலான பிரதிநிதித்துவம்

குறைகள்

  • நிலையற்ற அரசாங்கம்
  • தொடர்ச்சியற்ற கொள்கைகள்
  • அமைச்சரவையின் சர்வாதிகாரம்
  • அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 90