Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 6 சாலை பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

9th Social Science Guide சாலை பாதுகாப்பு Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சுருக்கமான விடையளி

Question 1.
இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  • இருக்கை பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவதால் 51% இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க முடியும்.
  • தலைக்கவசம் அணிவதால் தலையில் காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Question 2.
சாலை விபத்துக்கான காரணிகளை குறிப்பிடுக.
விடை:

  • ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு.
  • சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடப்பது.
  • தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 3.
சாலை சமிக்ஞையில் (road signal) எந்த நிறம் ‘நில்’ என்பதை உணர்த்துகிறது?
விடை:

  • சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு நிறம் நில்’ என்பதை உணர்த்துகிறது.
  • கவனி – கேள்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்.

Question 4.
சாலை பாதுகாப்பு விதி ஏதேனும் மூன்றினை கூறுக.
விடை:

  • நில்! கவனி!
  • செல் கவனி – கேள்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்.

II. விரிவான விடையளி

Question 1.
சாலை விபத்துக்கான காரணிகளை விவரி.
விடை:
ஒட்டுநர் :
அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குவது, சாலைவிதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.

பாதசாரிகள் :
கவனக்குறைவு, கல்வியறிவின்மை , தவறான இடங்களில் சாலையைக் கடப்பது. பயணிகள் : கரம், சிரம், புறம் நீட்டுவது, ஓட்டுநரிடம் பேசுவது, தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது, இறங்குவது, படியில் பயணம் செய்வது, ஓடுகிறவண்டியில் ஏறுவது.

வாகனங்கள்:
வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்து, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.

சாலையின் நிலை :
குழிகள், தேசமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புறம்பான வேகத்தடைகள்.

வானிலை:
மூடுபனி, பனி, கனமழை, புயல், ஆலங்கட்டி மழை.

Question 2.
சாலை பாதுகாப்பு விதிகளைப் பற்றி விவரி.
விடை:
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் :

  • நில்! கவனி! செல்
  • வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்!
  • கவனி – கேள்!
  • அவசரப்படாதீர்!
  • சாலையில் ஓடாதீர்!
  • இடதுபுறம் செல்லவும்
  • எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்!
  • பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சாலையை கடக்கவும்.

9th Social Science Guide சாலை பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சாலை விபத்துக்களில் முதலிடம் வகிக்கும் நகரம்.
அ) சென்னை
ஆ) டெல்லி
இ) மும்பை
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 2.
சாலை விபத்துக்களில் மிக அதிகமாக இறப்போர் செல்லும் வாகனம்.
அ) பேருந்துகள்
ஆ) இருசக்கரவாகனம்
இ மிதிவண்டி
ஈ) நடந்து செல்பவர்கள்
விடை:
ஆ) இரு சக்கர வாகனம்

Question 3.
சாலை விபத்துக்களில் மிக அதிகமாக இறப்போர் வயது.
அ) 15 – 29
ஆ) 30 – 44
இ 45 – 59
ஈ) 60 +
விடை:
அ) 15 — 29

II. சுருக்கமான விடை தருக.

Question 1.
சாலை விபத்து – வரையறு.
விடை:
சாலை விபத்து என்பது திறந்த வெளி சாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்த பட்சம் ஒரு நபர் காயமடைவதையோ அல்லது இறப்பதையோ குறிக்கும்.

Question 2.
சாலை விபத்துக்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:

  • கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது
  • அதிவேகம்
  • முறையற்ற ஓட்டுனர் பயிற்சி
  • நிறுத்தமில்லா தொலைதூரம் வாகனம் ஓட்டுவது
  • பிறவாகனங்களைப் பார்ப்பது.
  • வாகன எண்ணிக்கை அதிகரிப்பு
  • சட்டத்தை முறைப்படுத்துவதில் மெத்தனம்
  • தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டையைக் குறைவாக பயன்படுத்துவது.
  • ஓட்டுனருக்கு ஏற்படும் கவனச்சிதைவு
  • சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது.
  • தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 3.
சாலை விபத்துக்களின் நேரடியான விளைவுகள் யாவை?
விடை:
மரணம்

  • காயம்
  • பொருட்
  • சேரம்

Question 4.
சாலை விபத்தைத் தடுக்கும் முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு.
சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்.
தொழில்நுட்பம் : வாகன வடிவமைப்பு மற்றும் சாலைகட்டமைப்பு.

Question 5.
எந்த வயதுக் குழுவைச் சார்ந்தோர் உலகளவில் சாலை விபத்தில் இருப்போரில் அணையை உள்ள னர்?
விடை:
15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் சாலை விபத்தில் அதிகளவில் இறக்கின்றனர்.

அதற்குக் காரணங்கள் :

  • சரியான பயிற்சி இன்றி வாகம் ஓட்டுதல்
  • ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல்
  • சாலை விதிகளைப் பற்றிய அறிவின்மை
  • மிக வேகம்
  • அதிக திறன் கொண்ட வாகனங்கள்
  • கவனக்குறைவு
  • வயதின் காரணமாக பயமின்மை
  • இந்த வயது இளைஞர்களில் சிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவர்

Question 6.
சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கையில் இருபாலகிடையே காணப்படும் விகம் இடைவெளிக்குச் சில காரணங்கள் தருக.
விடை:
சாலை விபத்துக்களில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறக்கின்றனர். அதற்குக் காரணங்கள்
பின்வருமாறு.

  • ஆண்களை விட பெண்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே வாகனங்கள் ஓட்டுகின்றனர்.
  • பெண்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டுகின்றனர்.
  • அவர்கள் பெரும்பாலும் குறைந்த திறன் கொண்ட வாகனங்களையே ஓட்டுகின்றனர்.
  • பொதுவாக பெண்கள் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுவர்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு 90