Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 3 Chapter 3 காற்று Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 3 Chapter 3 காற்று

5th Science Guide காற்று Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
குளோரோபுளுரோகார்பன் _______________ யில் உபயோகப்படுத்தப்படுகிறது.
அ. குளிர்சாதனப் பெட்டி
ஆ. ஏ.சி
இ. இரண்டிலும்
ஈ. எதிலும் இல்லை
விடை:
அ. குளிர்சாதனப் பெட்டி

Question 2.
மோட்டார் வாகனங்களால் வெளியேற்றப்படும் வாயு _______________
அ. கார்பன் மோனாக்சைடு
ஆ. ஆக்சிஜன்
இ. ஹைட்ரஜன்
ஈ. நைட்ரஜன்
விடை:
அ. கார்பன் மோனாக்சைடு

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Question 3.
காற்றாலையானது ______________ தயாரிக்கப் பயன்படுகிறது.
அ. வேதி ஆற்றல்
ஆ. இயந்திர ஆற்றல்
இ. மின் ஆற்றல்
ஈ. அனைத்தும்
விடை:
இ. மின் ஆற்றல்

Question 4.
குளிர் காய்ச்சல் _____________ ஆல் வருகிறது.
அ. பூஞ்சை
ஆ. பாக்டீரியா
இ. வைரஸ்
ஈ. புரோடோசோவா
விடை:
இ. வைரஸ்

Question 5.
படை மண்டலத்திற்கு அடுத்து காணப்படும் இடை மண்டலத்தின் உயரம் ______________
அ. 70 -75 கி.மீ
ஆ. 75-80 கி.மீ
இ. 80 -85 கி. மீ
ஈ . 85-90 கி.மீ
விடை:
ஆ. 75-80 கி.மீ

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
வளிமண்டலத்தின் இரண்டாவது பெரிய அடுக்கு _____________ ஆகும்.
விடை:
வெப்ப வளி மண்டலம்

Question 2.
வேதிச் சேர்மங்களை வளிமண்டலத்திற்குள் வெளியிடுவது _____________ எனப்படும்.
விடை:
மாசுபடுதல்

Question 3.
காற்றின் மூலம் பரவும் நோய்கள் ____________ தோன்றுகின்றன.
விடை:
பாக்டீரியாக்கள், வைரஸ்களால்

Question 4.
________________ வளிமண்டல அடுக்கானது நம்மை புறஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
விடை:
ஓசோன் அடுக்கு காணப்படும் படை மண்டல

Question 5.
______________ தாவரங்களால் நைட்ரேட்டுகளாக உபயோகப்படுத்தப்படுகிறது.
விடை:
காற்றில் உள்ள நைட்ரஜன்

III. பொருத்துக

1. அடி வளிமண்டலம் – செயற்கைக்கோள்
2. படைமண்டலம் – விண்கலம்
3. புற வளிமண்டலம் – ஓசோன் அடுக்கு
4. வெப்ப மண்டலம் – விண்கற்கள்
5. இடை மண்டலம் – காலநிலை மாற்றம்
விடை:
1. அடி வளிமண்டலம் – காலநிலை மாற்றம்
2. படைமண்டலம் – ஓசோன் அடுக்கு
3. புற வளிமண்டலம் – விண்கலம்
4. வெப்ப மண்டலம் – செயற்கைக்கோள்
5. இடை மண்டலம் – விண்கற்கள்

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
வளிமண்டலத்தின் அடுக்குகள் யாவை?
விடை:
வளிமண்டலம் ஐந்து வெவ்வேறு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழிருந்து மேலாக அவை: அடி வளிமண்டல அடுக்கு, படை மண்டலம், இடை மண்டலம், வெப்ப வளி மண்டலம் மற்றும் வெளி அடுக்கு ஆகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Question 2.
காற்று மாசுபாடு என்றால் என்ன?
விடை:
உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருள்கள் காற்றில் காணப்படுவதையே காற்று மாசுபடுதல் என்கிறோம். கார்பன் மோனாக்கைடு, சல்ஃபர் ஆக்ஸைடு போன்ற வாயுக்களும், தீங்கு விளைவிக்கும் சிறு துகள்கள், தூசுகள் மற்றும் வாயு அல்லது திரவத்துடன் கலந்துள்ள மிகச் சிறிய திண்மத் துகள்களும் காற்றில் கலக்கும் போது காற்று மாசுபாடு அடைகிறது.

Question 3.
காற்றின் மூலம் பரவும் சில நோய்களைக் கூறுக.
விடை:
காற்று மாசுபாடு அநேக சுவாச நோய்களையும், இதய நோய்களையும் உருவாக்குகிறது. காற்று மாசுபாட்டினால் அநேக மக்கள் இறந்துள்ளனர். காற்று மாசுபடுத்திகள் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் ஆஸ்த்மா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

Question 4.
புவி வெப்பமயமாதல் என்றால் என்ன?
விடை:
காற்று மாசுபாடு காரணமாக கார்பன் டைஆக்சைடின் அளவு – வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இது பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தைத் தடுத்து மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்புவதால் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

Question 5.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிகள் யாவை?
விடை:
மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் புகை படிவ எரிபொருள்கள் எரிப்பதைக் குறைத்தல்

V. விரிவாக விடையளி

Question 1.
காற்றின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:
நீர் சுழற்சி :
காற்றிலுள்ள நீராவியே நீர் சுழற்சி ஏற்படக் காரணமாகிறது. ஏரிகள் மற்றும் பெருங்கடல் போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியானது பின்னர் மேகங்களை உருவாக்குகின்றது. இந்த மேகங்கள் நிலத்தை நோக்கி நகர்ந்து, குளிர்வடைந்து நமக்கு மழைப் பொழிவைத் தருகின்றன. மேகங்களின் இந்த நகர்வு காற்றினால் ஏற்படுகிறது.

ஆற்றல்:
நாம் காற்றிலுள்ள ஆக்சிஜனை சுவாசிக்கிறோம். அது நமது உடலிலுள்ள திசுக்களுக்கு வழங்கப்படுகிறது. உடல் செல்கள் ஆக்சிஜனின் உதவியால் உணவு மூலக்கூறுகளை எரித்து நமக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. இந்த ஆற்றலின் உதவியால் நாம் பல்வேறு வேலைகளைச் செய்கிறோம்.

காற்றின் வழியே ஒலி பயணிக்கிறது
நாம் நமது சுற்றுப்புறத்திலிருந்து பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். மேலும், நாம் பேசுவதை பிறர் கேட்கின்றனர். இவை காற்றின் மூலமே நடைபெறுகின்றன.

தாவரங்களுக்குப் பயன்படுதல் :
காற்றிலுள்ள நைட்ரஜன் தாவரங்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது. நைட்ரஜனாக்கம் எனும் செயல்முறையின் மூலம் காற்றிலுள்ள நைட்ரஜன் நைட்ரேட்டுகளாக மாற்றமடைகிறது. இந்த நைட்ரேட்டுகள் தாவர வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மேலும் காற்றானது தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கும் உதவுகிறது. அயல் கரந்தச் சேர்க்கைக்கும் காற்று உதவுகிறது.

போக்குவரத்து :
வாயுக்களின் நகர்வு காற்று என்று அழைக்கப்படுகிறது. கப்பல் மற்றும் படகுகள் கடலில் பயணிக்க காற்று உதவுகிறது. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் காற்றிலேயே பயணிக்கின்றன.

விளையாட்டுகள் :
பாராகிளைடிங் என்பது பொழுதுபோக்கு மற்றும் சாகசம் செய்யும் விளையாட்டுப் போட்டி ஆகும். தொங்கு கிளைடிங் என்பதும் ஒரு வகை விளையாட்டு ஆகும். இந்த இரு விளையாட்டுகளுமே காற்றின் உதவியோடுதான் நடை பெறுகின்றன. மற்ற விளையாட்டுகளான கட்டைகளைக் கொண்டு கடல் அலைகளின் மீது சீறிப் பாய்தல், பட்டம் விடுதல் மற்றும் பாய்மரக் கப்பலில் பயணித்தல் போன்றவையும் காற்றின் உதவியோடுதான் நடைபெறுகின்றன.

பாராசூட்டுகளும் வெப்பக் காற்று பலூன்களும்
பாராசூட் மற்றும் வெப்பக் காற்று பலூன்கள் மேலிருந்து கீழே இறங்குவதற்கு உதவி புரிகின்றன. ஆபத்தான அவசர காலங்களில் மக்கள் பாராசூட்டைப் பயன்படுத்தி காற்றின் உதவியுடன் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் கீழே இறங்குகிறார்கள்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

காற்று ஆற்றல் :
வாயுக்கள் அழுத்தம் அதிகம் உள்ள இடத்திலிருந்து அழுத்தம் குறைந்த இடத்திற்குச் செல்கின்றன. இந்த ஓட்டத்திற்கு காற்று என்று பெயர். காற்றாலைகளின் உதவியுடன் மின்சாரம் தயாரிக்க காற்று உதவுகிறது.

Question 2.
காற்றின் மூலம் பரவும் நோய்கள் மூன்றை விளக்குக.
விடை:
காசநோய் (டிபி), வயிற்றுப்போக்கு மற்றும் குத்து இருமல் போன்றவை பாக்டீரியாக்களால் தோன்றி காற்றின் மூலம் பரவும் பொதுவான நோய்கள் ஆகும்.

காசநோய் (டிபி) :
காசநோயானது மைக்கோபாக்டீரியம் டியபூர்குலோசிஸ் என்னும் பாக்டீரியா மூலம் தோன்றுகிறது. நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள பாக்டீரியாக்கள் நமது நுரையீரலுக்குள் சென்று அதைப் பாதிக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை காசநோய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டை அடைப்பான் நோய் (டிப்தீரியா) :
இது கார்னி பாக்டீரியம் டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் உருவாகிறது. இது பொதுவாக மேல் சுவாசப் பாதையைப் (மூக்கு மற்றும் தொண்டை) பாதித்து காய்ச்சல், தொண்டைப் புண் மற்றும் மூச்சு அடைத்தல் போன்றவற்றை உருவாக்குகிறது.

கக்குவான் இருமல் :
இந்த வகை இருமல் போர்டெல்லா பெர்டுசிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதுவும் சுவாசப் பாதையைப் பாதித்து இலேசான காய்ச்சல் மற்றும் ஓசையுடன் கூடிய அதிகப்படியான இருமல் ஆகியவற்றை உண்டாக்குகிறது.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
வளிமண்டலம் இல்லாவிட்டால் நமது பூமியின் நிலை என்ன ?
விடை:

  1. சுவாசிப்பதற்கு காற்று இல்லாததால் எந்த உயிரினமும் பூமியின் மீது வாழமுடியாது.
  2. காற்று இல்லாவிட்டால் மேகம், மழை எதுவுமின்றி பூமி காய்ந்து கிடக்கும்.
  3. பூமியானது சரமாரியாக விழும் விண்கற்களால் இரவும் பகலும் தாக்கப்படும்.
  4. கதிரவன் வெளியிடும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்கி ஊறு விளைவிக்கும்.
  5. காற்று என்ற ஊடகம் இல்லாவிட்டால் ஒலி பரவாது. எனவே எந்த ஓசையையும் குரலையும், இசையையும் கேட்க முடியாது.

Question 2.
காற்று மாசுபாட்டைத் தவிர்க்க சில வழிமுறைகளைக் கூறுக.
விடை:
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நாம் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெருமளவு காற்று மாசுபடுத்திகள் மோட்டார் – வாகனங்களிலிருந்தே வெளியிடப்படுகின்றன. பொதுப் போக்குவரத்து வாகனங்களை உபயோகிப்பதன் மூலம் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைக்கலாம். நாம் உபயோகிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் உபயோகிக்க ஊக்கப்படுத்தவேண்டும்.

புதை படிவ எரிபொருள்களை எரிப்பதைக் குறைப்பதன் மூலம் நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். புதுப்பிக்க முடியாத ஆற்றலத் தவிர்த்து, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களாகிய சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம். நாம் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவேண்டும். சில பொருள்களை மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம் அல்லது மறுசுழற்சி செய்யலாம்.

உபயோகப்படுத்தாத நேரங்களில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை அணைத்து வைக்கலாம்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

ஸிஎஃப்எல் CFL விளக்குகளுக்கு மிகக் குறைந்த அளவு மின்சாரமே தேவை. எனவே அவற்றை உபயோகிப்பதன் மூலம் மின்னாற்றலைச் சேமிக்கலாம்.

அதிக அளவு மரங்களை நடுவதன் மூலம் நாம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடின் அளவைக் குறைக்கலாம்.

5th Science Guide காற்று Additional Important Questions and Answers

Question 1.
வளிமண்டலத்தின் அடுக்குகள் யாவை?
விடை:
அடி வளிமண்டல அடுக்கு, படை மண்டலம், இடை மண்டலம், வெப்ப வளி மண்டலம், வெளி அடுக்கு (அயனி அடுக்கு)

Question 2.
வானிலை மாற்றங்கள் வளிமண்டலத்தில் எங்கே ஏற்படுகின்றன?
விடை:
அடிவளி மண்டலத்தில்தான் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் மேகம், மழை, பனி ஆகியவை உருவாகின்றன.

Question 3.
ஓசோன் அடுக்கு எங்கே உள்ளது? இதன் பயன் யாது?
விடை:
ஓசோன் அடுக்கு படை மண்டலத்தில் உள்ளது. இது கதிரவனின் புற ஊதாக் கதிர்களை ஈர்த்து, அதனால் ஏற்படும் தீங்குகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Question 4.
நீர் சுழற்சிக்கு உதவுவது எது?
விடை:
காற்றில் உள்ள நீராவியே நீர் சுழற்சிக்கு உதவுகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Question 5.
ஒலியை நம்மால் எவ்வாறு கேட்க முடிகிறது?
விடை:
ஒலி பரவ ஓர் ஊடகம் தேவை. இதற்கு காற்று ஓர் ஊடகமாக அமைவதால் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது.

Question 6.
காற்றின் உதவியால் நடக்கும் விளையாட்டுகள் எவை?
விடை:
பாராகிளைடிங், தொங்கு கிளைடர், பட்டம் விடுதல், பாய்மரம் செலுத்துதல் ஆகியவை காற்றின் உதவியால் நடைபெறுகின்றன.

Question 7.
காற்று மாசுபாடு அடையக் காரணமானவை எவை?
விடை:
கார்பன் மோனாக்சைடு, சல்ஃபர் ஆக்சைடு, துகள்கள், தூசிகள்

Question 8.
உலக வெப்பமயமாதலின் முக்கிய காரணம் என்ன?
விடை:
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதால் அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது.

Question 9.
அமிலமழை எவ்வாறு உருவாகிறது?
விடை:
மழை பெய்யும்போது காற்றில் உள்ள நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆக்சைடுகள் மழைநீரில் கலந்து அமிலமாக மாறி பூமியில் விழுகின்றன.

Question 10.
வைரஸ்களால் தோன்றும் நோய்கள் எவை?
விடை:
சாதாரண சளி, குளிர் காய்ச்சல் (ஃபுளு), அம்மைக் கட்டு, தட்டம்மை, மணல்வாரி அம்மை.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 3 Chapter 2 விலங்குகள் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 3 Chapter 2 விலங்குகள்

5th Science Guide விலங்குகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
பிரிதல் என்பது ____________ வகை இனப்பெருக்கம்.
அ. பாலிலா
ஆ. பால்
இ. குஞ்சு பொரித்தல்
ஈ. குட்டி ஈனுதல்
விடை:
அ. பாலிலா

Question 2.
______________ ஒரு முட்டையிடும் விலங்கு.
அ. பசுமாடு
ஆ. மான்
இ. ஆடு
ஈ. வாத்து
விடை:
ஈ. வாத்து

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Question 3.
அழியும் நிலையில் உள்ள விலங்குகள் ______________ இல் பாதுகாக்கப்படுகின்றன.
அ. அருங்காட்சியகம்
ஆ. சர்க்கஸ்
இ. பண்ணை
ஈ. சரணாலயம்
விடை:
ஈ. சரணாலயம்

Question 4.
முண்டந்துறை சரணாலயம் ______________ மாவட்டத்தில் உள்ளது.
அ. திருப்பூர்
ஆ. திருவாரூர்
இ. திருநெல்வேலி
ஈ. திருவள்ளூர்
விடை:
இ. திருநெல்வேலி

Question 5.
நீலச் சங்கத்தின் முக்கிய நோக்கம் விலங்குகளை _______________
அ. துன்புறுத்தல்
ஆ. சிறைபிடித்தல்
இ. காப்பாற்றுதல்
ஈ. புறக்கணித்தல்
விடை:
இ. காப்பாற்றுதல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நேரடியாக குட்டிகளை ஈனும் விலங்குகள் ____________ என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
குட்டி ஈனும் விலங்குகள்

Question 2.
விலங்குகளை _______________, அவற்றை அழியும் நிலைக்கு கொண்டு செல்லும்.
விடை:
வேட்டையாடுதல்

Question 3.
கிர் தேசியப் பூங்கா ____________ க்கு பெயர் பெற்றது.
விடை:
ஆசிய சிங்கத்துக்கு

Question 4.
நீலச் சிலுவை சங்கம் என்பது ஒரு ______________ நல அமைப்பாகும்.
விடை:
விலங்குகளின்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Question 5.
நீலகிரி வரையாடு ஒரு ____________ இனமாகும்.
விடை:
அழியும் நிலையில் உள்ள

III. பொருத்துக

1. கரு – பாலிலா இனப் பெருக்கம்
2. குட்டியீனும் விலங்கு – யானை
3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் – பூனை
4. முதுமலை – கருமுட்டை
5. துண்டாதல் – காண்டாமிருகம்
விடை:
1. கரு – கருமுட்டை
2. குட்டியீனும் விலங்கு – -பூனை
3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் – காண்டாமிருகம்
4. முதுமலை – யானை
5. துண்டாதல் – பாலிலா இனப் பெருக்கம்

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
கருவுறுதல் என்றால் என்ன?
விடை:
ஆண் உயிரணுக்கள் பெண் உயிரணுக்களைச் சென்றடையும் போது அவை ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த உயிரணுக்களின் இணைவு கருவுறுதல் எனப்படும்.

Question 2.
பாலினப் பெருக்கத்தின் நிலைகள் யாவை?
விடை:
பால் இனப்பெருக்கம் கீழ்க்காணும் நிலைகளைக் கொண்டது. அ. கருவுறுதலுக்கு முன் ஆ. கருவுறுதல் இ. கருவுற்றபின்

Question 3.
பாலிலா இனப்பெருக்கத்தின் பல்வேறு வகைகளைக் கூறுக.
விடை:
பிளவிப் பெருக்கம், மொட்டு விடுதல், துண்டாதல், சிதறல்கள் (ஸ்போர்கள்) ஆகியவை பாலிலா இனப்பெருக்கத்தின் பல்வேறு வகைகள் ஆகும்.

Question 4.
குட்டியீ னும் விலங்குகளுக்கும், முட்டையிடும் விலங்குகளுக்கும், உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள் 1

Question 5.
நீலச் சிலுவை சங்கம் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
நீலச் சிலுவை சங்கம் என்பது இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள விலங்குகளின் நலனிற்காக பதிவு – செய்யப்பட்ட அமைப்பு ஆகும். ஒவ்வொரு செல்லப் பிராணியும் ஆரோக்கிய வாழ்வை, மகிழ்ச்சியான இல்லத்தில் ) அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 1897ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

தங்களின் செல்லப் பிராணிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க முடியாத நபர்களுக்கு இது உதவுவது, புறக்கணிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஒரு இல்லம் கண்டுபிடித்துக் கொடுப்பது மற்றும் விலங்குகளை வைத்திருப்போருக்கு பொறுப்புணர்வைக் கற்றுக் கொடுப்பது ஆகிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

V. விரிவாக விடையளி.

Question 1.
பாலிலா இனப்பெருக்க முறைகளை விளக்குக.
விடை:
பிளவிப் பெருக்கம் : பிளவிப் பெருக்கம் முதுகெலும்பற்ற பல செல்களுடைய உயிரிகளில் நடைபெறுகிறது. இம்முறையில் ஒரு உயிரினம் தானாகவே இரண்டு உயிரினங்களாகப் பிரிவடைகிறது. எடுத்துக்காட்டாக, தட்டைப்புழு, கடற்பஞ்சு, கடல் வெள்ளரி போன்ற உயிரினங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிவடைந்து ஒவ்வொன்றும் இரு புது உயிரிகளாக வளர்ச்சியுறுகின்றன.

மொட்டு விடுதல் : மொட்டு விடுதல் என்பது ஒரு வகை பாலிலா இனப் பெருக்கமாகும். உடல் உறுப்புகள் புறவளர்ச்சி பெறுவதன் மூலம் இவ்வகை இனப்பெருக்கம் நடை பெறுகிறது. இம்மொட்டுக்கள் பின்னர் தாய் உடலிலிருந்து பிரிந்து புதிய உயிரினம் உருவாகின்றது. மொட்டு விடுதல் பொதுவாக முதுகெலும்பற்ற விலங்குகளாகிய ஹைட்ரா மற்றும் பவளப் பாறைகளில் நடைபெறுகிறது.

துண்டாதல் : உயிரிகளின் உடல் சிறு சிறு துண்டுகளாகப் பிளவு பட்டு பின்னர் அவை புதிய உயிரியாக வளர்ச்சியடைவது துண்டாதல் எனப்படும். இவ்வகையான இனப்பெருக்கம் கடற்பஞ்சு மற்றும் நட்சத்திர மீன்களில் – காணப்படுகிறது. இது விபத்தின் மூலமோ அல்லது எதிரிகளின் தாக்குதல் மூலமோ அல்லது இயற்கையாகவோ நடைபெறலாம்.

சிதறல்கள்: ஒரு சில புரோட்டாசோவாக்கள், பாக்டீரியாக்கள், தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள் ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. ஸ்போர்கள் என்பவை ஒரு உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாக ) இயற்கையாக வளரக்கூடியவை. இவை உடலத்திலிருந்து பிரிந்து, சிதறலடைந்து காற்று அல்லது நீர் மூலமாகப்

பரவுகின்றன. பின்னர் ஏற்ற சூழலில் முழுமையான உயிரினமாக வளர்ச்சியடைகின்றன.

Question 2.
விலங்குகள் அழிந்து போவதற்கான காரணங்கள் யாவை?
விடை:
ஒரு தாவரம் அல்லது விலங்கு அழியும் நிலையில் இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.

  • அநேக விலங்குகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்கக்கூடிய காடுகள் மனிதத் தேவைகளுக்காக அழிக்கப்படுகின்றன.
  • அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் அவற்றின் கொம்பு, தோல், பல் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருள்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.
  • நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை விலங்குகளைப் பாதிக்கின்றன.
  • சில நேரங்களில் சில விலங்குகள் மனிதர்களால் அவற்றின் இயற்கை வாழிடத்தை விட்டு வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவை அங்கு வாழமுடியாமல் அழிந்துவிடுகின்றன.
  • பூச்சிகள், புழுக்கள் மற்றும் களைச் செடிகளை அழிப்பதற்காக உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கின்றன.
  • இயற்கைப் பேரழிவுகளான வெள்ளம், புயல், மற்றும் தீ விபத்துகளாலும் இவை அழிகின்றன.

Question 3.
தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயம் குறித்து விவரிக்க.
விடை:
தேசியப் பூங்கா என்பது வன உயிரிகளின் நலனைப் பேணுவதற்கான பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.

இப்பகுதிகளில் பல்வேறு தேவைகளுக்காக காடுகளைப் பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்த நிலப்பகுதிகளை தனிநபர் எவரும் தனது உடைமையாக்கிக் கொள்ளமுடியாது. இந்த தேசியப் பூங்காக்களின் பரப்பளவு 100 முதல் 500 சதுர கிலோமீட்டர் வரை இருக்கும்.

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா : ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் என்னும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புலிகளே இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

காஸிராங்கா தேசியப்பூங்கா: வன விலங்குகளான காண்டாமிருகம், புலி, யானை, காட்டெருமை மற்றும் கடமான் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

கிர் வன தேசியப் பூங்கா : இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆசிய சிங்கங்களை அவற்றின் இயற்கை வாழிடத்திலேயே காணலாம்.

சுந்தர்பான் தேசியப் பூங்கா : மேற்கு வங்கத்திலுள்ள சுந்தர்பான் தேசியப் பூங்காவானது புலிகளின் காப்பகமாகவும், கங்கை நதியின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள உயிர்கோளக் காப்பமாகவும் உள்ளது.

கன்ஹா தேசியப் பூங்கா : மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கன்ஹா தேசியப் பூங்காவானது புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

பெரியார் தேசியப் பூங்கா : பெரியார் தேசியப் பூங்கா கேரளாவில் உள்ள தேக்கடியில் அமைந்துள்ளது. பல்வேறு வகையான உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. அவற்றுள் கம்பீரமான யானைகள், ராஜரீகமான புலிகள் மற்றும் மீன்கள், ஊர்வன மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

கிண்டி தேசியப் பூங்கா : இந்தப் பூங்காவானது சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. புள்ளிமான், புல்வாய் மான், நதிநீர் நாய், கழுதைப்புலி, குல்லாய் குரங்கு, புனுகுப்பூனை, குள்ளநரி, எறும்பு உண்ணி , முள்ளெலி மற்றும் சாதாரண கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளின் வசிப்பிடமாக இந்தப் பூங்கா உள்ளது.

சரணாலயம் என்பது விலங்குகளின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்ட பகுதி ஆகும். மரம் வெட்டுதல், காடு சார்ந்த பொருள்களைச் சேகரித்தல் மற்றும் தனிநபர் உரிமை கோருதல் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி உண்டு. சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு அனுமதி உண்டு.

களக்காடு வனவிலங்குகள் சரணாலயம் : இந்த சரணாலயம் புலிகளுக்குப் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் : இந்த சரணாலயம் ஊட்டியில் அமைந்துள்ளது. வங்கப்புலி, யானை மற்றும் சிறுத்தைப் புலி போன்றவை இங்கு காணப்படுகின்றன.

முண்டந்துறை வனவிலங்குகள் சரணாலயம் : இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு காணப்படும் முக்கிய விலங்கு புலி ஆகும்.

ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் : இது இந்திராகாந்தி வன விலங்கு சரணாலயம் என்றும் வழங்கப்படுகிறது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. செந்நாய், காட்டு நாய் மற்றும் இராட்சச அணில் ஆகியவை இங்கு உள்ளன.

வேடந்தாங்கல் வனவிலங்குகள் சரணாலயம் : இது தமிழ்நாட்டின் மிகப் பழமையான சரணாலயம் ஆகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கரண்டிவாயன், நத்தைக் கொத்தி நாரை மற்றும் பெலிகான் போன்ற அநேக வலசை போகும் பறவைகள் காணப்படுகின்றன.

சரணாலயங்களின் பயன்கள் :

  • விலங்கினங்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்ள இயலும்.
  • வேறுபட்ட இனங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளமுடியும்.
  • விலங்குகளின் இயற்கை வாழிடம் பாதுகாக்கப்படுகிறது.
  • இவற்றைப் பராமரிக்கும் செலவு குறைவு. மேலும் இவற்றை எளிதில் கையாளவும் முடியும்.

5th Science Guide விலங்குகள் Additional Important Questions and Answers

Question 1.
இனப்பெருக்கத்தின் இருவகைகள் யாவை?
விடை:
பால் இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம்

Question 2.
கருவுறுதல் என்றால் என்ன?
விடை:
ஆண் உயிரணுக்கள் பெண் உயிரணுக்களைச் சென்றடைந்து இணைவது கருவுறுதல் எனப்படும்.

Question 3.
வளர் உருமாற்றம் என்றால் என்ன?
விடை:
இனப்பெருக்கத்தில் முட்டை, லார்வா, பியூபா, முழுவளர்ச்சி அடைந்த பூச்சி என்ற நான்கு நிலைகளில் புதிய உயிரினம் உருவாதல் வளர் உருமாற்றம் எனப்படும். எ.கா. பட்டுப்பூச்சி

Question 4.
பிளவிப் பெருக்கம் என்றால் என்ன?
விடை:
தட்டைப் புழு, கடற்பஞ்சு, கடல் வெள்ளரி ஆகிய உயிரினங்கள் தங்கள் உடலை இரண்டு உயிரினங்களாகப் பிரித்துக் கொண்டு வளர்வது பிளவிப் பெருக்கம் எனப்படுகிறது.

Question 5.
அழியும் நிலையில் உள்ள சில விலங்குகளைக் குறிப்பிடு.
விடை:
சிங்கவால் குரங்கு, ஆசிய சிங்கம், நீலகிரி வரையாடு, பனிச்சிறுத்தை

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Question 6.
சிவப்பு விவர புத்தகம் என்பது என்ன?
விடை:
அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகம் சிவப்பு விவர புத்தகம் எனப்படுகிறது.

Question 7.
நீலகிரியில் உள்ள தேசிய பூங்காக்கள் எவை?
விடை:
முதுமலை தேசியப்பூங்கா, முக்கூர்த்தி தேசியப்பூங்கா

Question 8.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சரணாலயம் பற்றிக் குறிப்பிடுக.
விடை:
முண்டந்துறை வன விலங்குகள் சரணாலயம் திருநெல்வேலியில் உள்ளது. இங்கு காணப்படும் முக்கிய விலங்கு புலி ஆகும்.

Question 9.
நீலச் சிலுவைச் சங்கத்தின் பணி யாது?
விடை:
புறக்கணிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஓர் இல்லம் கண்டு பிடித்துக் கொடுப்பது, விலங்குகளை வைத்திருப்போருக்கு பொறுப்புணர்வைக் கற்றுக் கொடுப்பது ஆகியவை இதன் பணிகளாகும்

Question 10.
இந்தியாவின் நீலச்சிலுவை சங்கம் யாரால் உருவாக்கப்பட்டது?
விடை:
இந்தியாவின் நீலச் சிலுவைச் சங்கம் சென்னையைச் சேர்ந்த கேப்டன் வி.சுந்தரம் என்பவரால் உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

5th Science Guide நமது சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்காண்பவற்றுள் அதிக அளவில் பால் கொடுக்கும் கால்நடை எது?
அ. பசுமாடு
ஆ. யாக் எருமை
இ. எருமை மாடு
ஈ. ஆடு
விடை:
இ. எருமை மாடு

Question 2.
பறவைப் பண்ணைகளில் ______________ உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
அ. கோழிகள்
ஆ. பசுமாடுகள்
இ. பறவை இனங்கள்
ஈ. ஆடுகள்
விடை:
இ. பறவை இனங்கள்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
_____________ ஒரு மிகச் சிறந்த உரம்.
அ. மண்புழு உரம்
ஆ. பழங்க ள்
இ. செயற்கை உரம்
ஈ. யூரியா
விடை:
அ. மண்புழு உரம்

Question 4.
________________ வேளாண்மையை விட இலாபகரமானது.
அ. பால் பண்ணை
ஆ. பண்ணைத்தொழில்
இ. பறவைப் பண்ணை
ஈ.. வேளாண்மை
விடை:
ஆ. பண்ணைத்தொழில்

Question 5.
பறவைப் பண்ணைத் தொழிலில் தமிழ்நாட்டின் _______________ மாவட்டம் சிறந்து விளங்குகிறது.
அ. அரியலூர்
ஆ. சேலம்
இ. நாமக்கல்
ஈ. தஞ்சாவூர்
விடை:
இ. நாமக்கல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் ______________ வகையான இனங்கள் உள்ளன.
விடை:
26

Question 2.
____________ பால் பசுமாட்டின் பாலை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது.
விடை:
எருமை மாட்டின்

Question 3.
______________ இல் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
விடை:
சக்கை

Question 4.
பறவைப் பண்ணைகளில் உள்ள பறவைகளின் எச்சம் ______________ ஆகப் பயன்படுகிறது.
விடை:
உரம்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 5.
மண்புழு உரமாக்கல் என்பது ___________ சத்து நிறைந்த உரமாக மாற்றுவதாகும்.
விடை:
கரிமக் கழிவுகளை

III. பொருத்துக

1. ஸ்ருதி – முட்டை
2. வெள்ளிப் புரட்சி – போக்குவரத்து
3. முட்டைக்கோழி – பருப்பு வகைத் தாவரங்கள்
4. பசுமை உரம் – எருமை மாடு
5. கால்நடைகள் – பால்
விடை:
1. ஸ்ருதி – எருமை மாடு
2. வெள்ளிப் புரட்சி – பால்
3. முட்டைக்கோழி – முட்டை
4. பசுமை உரம் – பருப்பு வகைத் தாவரங்கள்
5. கால்நடைகள் – போக்குவரத்து

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

Question 1.
பண்ணைத் தொழில் வியாபார நோக்கில் செய்யப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
மண்புழு உரத்தை கழிவுநீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
சரி

Question 3.
பருப்பு வகைத் தாவரங்கள் தாவர இலையில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.
விடை:
தவறு.
பருப்பு வகைத் தாவரங்கள் வேர் முண்டுகளில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.

Question 4.
நாமக்கல் மாவட்டம் பால் பண்ணைக்குப் பெயர் பெற்றது.
விடை:
தவறு
நாமக்கல் மாவட்டம் கோழிப் பண்ணைக்குப் பெயர் பெற்றது.

Question 5.
முர்ரா என்பது எருமை மாட்டின் ஒரு இனம்.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி

Question 1.
பண்ணை வளர்ப்பு என்றால் என்ன?
விடை:
பண்ணை வளர்ப்பு என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்க்கும் முறையாகும்.

Question 2.
பண்ணை வளர்ப்பின் வகைகளை எழுதுக.
விடை:
விவசாயம் செய்வது, பலவிதமான பயிர்களையும் விலங்குகளையும் வளர்ப்பது, பால்பண்ணை , பறவைப் பண்ணை , தேனீ வளப்பு ஆகியவை பண்ணை வளர்ப்பின் வகைகள் ஆகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
பறவைப் பண்ணை குறித்து எழுதுக.
விடை:
பறவைப் பண்ணையில் பறவை இனங்கள் அவற்றின் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி, வாத்து, தாரா, வான்கோழி மற்றும் சில வகை புறாக்கள் பொதுவாக இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் 90% கோழிகளே அதிகம் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக் கோழிகள் (பிராய்லர்) எனவும், முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் முட்டைக் கோழிகள் (லேயர்ஸ்) எனவும் அழைக்கப்படுகின்றன.

Question 4.
விலங்கு எரு என்றால் என்ன?
விடை:
விலங்குப் பண்ணைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளே பொதுவான விலங்கு எரு ஆகும். இது பொதுவாக பன்றி, ஆடு, மாடுகள், செம்மறி ஆடு, குதிரை, கோழி, வான்கோழி, முயல் போன்ற விலங்குகளின் கழிவுகளாகிய சாணம் மற்றும் சிறுநீரைக் கொண்டுள்ளது. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துப் பொருள்கள் இதில் அதிகம் உள்ளன.

Question 5.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
மண்புழுக்கள் கரிமக் கழிவுகளை உண்டு அதன் எச்சங்களை சிறு உருண்டைகளாக வெளியேற்றுகின்றன. இது மண்புழு உரம் எனப்படும்.

VI. விரிவாக விடையளி

Question 1.
விலங்குகளின் பயன்கள் யாவை?
விடை:

  • பசு நமக்கு பால் தருகிறது. பசுவின் பாலில் நமக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.
  • எருதுகள் நிலத்தை உழவும், அறுவடை செய்யவும், போர் அடிக்கவும் உதவி செய்கின்றன.
  • கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றன.
  • மாட்டுச் சாணம் ஒரு சிறந்த இயற்கை உரம். அது எரிபொருளாகவும். உயிரி வாயு தயாரிப்பதற்கும் பேயன்படுகிறது.
  • பஞ்சகவ்யம் என்பது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இது பூச்சிகளையும். பூஞ்சைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர், கறந்த பால், தயிர், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஆகும்.
    * கால்நடைகளின் தோலில் இருந்து தோல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

Question 2.
பறவைப் பண்ணையை எவ்வாறு நிர்வகிப்பாய்?
விடை:
பண்ணைகளில் வளரும் பறவைகளுக்கு மிகவும் தூய்மையான காற்றோட்டம் தேவை. நோய் வராமல் தடுப்பதற்கு கீழ்கண்ட முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

பண்ணைகளில் உள்ள பறவைக்கூடுகள் சுத்தமாகவும் பூச்சிகள் இல்லாதவாறும் பாதுகாக்கப்படவேண்டும். நல்ல காற்றோட்டம் இருப்பதற்கு ஏற்றவாறு ஜன்னல்கள் இருக்கவேண்டும்.

அதிக முட்டைகள் இடுவதற்கு நல்ல வெளிச்சம் அவசியம். பறவைகளுக்கு தூய்மையான நீர் கொடுக்கப்படவேண்டும். ஏற்ற காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இது நோய் வராமல் தடுக்கும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
மண்புழு உரத்தின் நன்மைகள் யாவை?
விடை:

  • மண்புழு உரம் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்ச்சத்துக்களை அளிக்கிறது. நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளை இது அதிக அளவு கொண்டுள்ளது.
  • நீர் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தி மண் அரிமானம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • தாவர வளர்ச்சியை ஊக்குவித்து தாவரங்களில் நோய் வராமல் தடுக்கிறது; மற்றும் மண்ணில் காற்று இடைவெளியை அதிகரித்து நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையையும், காற்றோட்டத்தையும் அதிகரிக்கின்றது.
  • செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது
  • கழிவு நீர் சுத்திகரிப்பிலும் இது பயன்படுகிறது.

5th Science Guide நமது சுற்றுச்சூழல் Additional Important Questions and Answers

Question 1.
சுற்றுச் சூழலின் இருவகைகள் யாவை?
விடை:
இயற்பியல் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சுற்றுச்சூழல் ஆகியவை இருவகை சுற்றுச்சூழல்கள் ஆகும்.

Question 2.
பண்ணை என்பது யாது?
விடை:
பயிர்ச் சாகுபடிக்கும், விலங்குகளை வளர்ப்பதற்கும் உதவும் நிலப்பரப்பே பண்ணை என அழைக்கப்படுகிறது.

Question 3.
பாலுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் யாவை?
விடை:
பசு, எருமை மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் ஒட்டகம் போன்றவை பாலுக்காக வளர்க்கப்படுகின்றன.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை இனம் எது?
விடை:
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை இனம் காங்கேயம் ஆகும்.

Question 5.
பஞ்சகவ்யம் என்பது யாது?
விடை:
மாட்டின் சாணம், சிறுநீர், பால், தயிர், வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து ( பஞ்சகவ்யம் ஆகும். இது பூச்சிகள், பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த விவசாயத்தில் பயன்படுகிறது.

Question 6.
தமிழ்நாட்டில் எங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன?
விடை:
தமிழ்நாட்டில் நாமக்கல், பல்லடம், சென்னை ஆகிய இடங்களில் கோழிப் பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 7.
பறவைகள் மூலம் கிடைக்கும் முக்கியப் பொருள்கள் எவை?
விடை:
முட்டை, இறைச்சி, உரம் ஆகியவை பறவைகளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியப் பொருள்கள் ஆகும்.

Question 8.
பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள் எவை?
விடை:
வைரஸ் தாக்குதலால் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பாக்டீரியாக்களால் பறவைக் காலரா தோன்றுகிறது.

Question 9.
தேன் நமக்கு எவ்வாறு பயன்படுகிறது?
விடை:
தேன் ஒரு கிருமி நாசினி. இது ஓர் எதிர் உயிரியும் ஆகும். இது – செரிமானம் மற்றும் பசியைத் தூண்டுகிறது. இருமல், காய்ச்சல், சளித் தொல்லையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Question 10.
பருப்பு வகைத் தாவரங்கள் எவ்வாறு சிறந்த உரமாகின்றன?
விடை:
பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முண்டுகளில் நைட்ரஜன் சேமித்து வைக்கப்படுகிறது. இத்தாவரங்கள் மண்ணுடன் சேர்த்து உழப்படும்போது பயிர்களுக்கு சிறந்த உரமாகின்றன.

5th Science Guide நமது சுற்றுச்சூழல் InText Questions and Answers

பக்கம் 76 செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
(எண்ணெய் வித்துக்கள், முட்டை, தேன், உணவு தானியங்கள், மீன்)
பசுமைப்புரட்சி : ________________
நீலப்புரட்சி M : ________________
வெள்ளிப்புரட்சி : ________________
தங்கப்புரட்சி : ________________
மஞ்சள் புரட்சி : ________________
விடை:
பசுமைப்புரட்சி : உணவு தானியங்கள்
நீலப்புரட்சி M : மீன்
வெள்ளிப்புரட்சி : முட்டை
தங்கப்புரட்சி : தேன்
மஞ்சள் புரட்சி : எண்ணெய் வித்துக்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 5 ஒலியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 5 ஒலியியல்

10th Science Guide ஒலியியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
அ. அலையின் திசையில் அதிர்வுறும்.
ஆ. அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை.
இ. அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
ஈ. அதிர்வுறுவதில்லை.
விடை:
(அ) அலையின் திசையில் அதிர்வுறும்

Question 2.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
அ. 330 மீவி-1
ஆ. 660 மீவி-1
இ. 156 மீவி-1
ஈ. 990 மீவி-1
விடை:
(அ) 330 மீவி-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 3.
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் (PTA-6)
அ. 50 kHz
ஆ. 20 kHz
இ. 15000 kHz
ஈ. 10000 kHz
விடை:
(ஆ) 20 kHz

Question 4.
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்ப நிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
அ. 330 மீவி-1
ஆ. 165 மீவி-1
இ. 330 × \(\sqrt{2}\) மீவி-1
ஈ. 320 × \(\sqrt{2}\) மீவி-1
விடை:
இ. 330 × \(\sqrt{2}\) மீவி-1

Question 5.
1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
அ. 27.52 மீ
ஆ. 275.2 மீ
இ. 0.02752 மீ
ஈ. 2.752 மீ
விடை:
இ 0.02752 மீ

Question 6.
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும் ?
அ. வேகம்
ஆ. அதிர்வெண்
இ. அலைநீளம்
ஈ. எதுவுமில்லை
விடை:
ஈ எதுவுமில்லை

Question 7.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி – எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன ?
அ. 17 மீ
ஆ. 20 மீ
இ. 25 மீ
ஈ. 50 மீ
விடை:
இ 25

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது _____ ஆகும்.
விடை:
அதிர்வுகள்

Question 2.
ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _____ லிருந்து _____ நோக்கி அதிர்வடைகிறது.
விடை:
வடக்கு, தெற்கு

Question 3.
450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒலியானது 33 மீவி | வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ______ (ஒலியின் திசைவேகம் = 330 மீவி-1).
விடை:
500 Hz

Question 4.
ஒரு ஒலி மூலமானது 40 கிமீ/மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கிமீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்
விடை:
2068 Hz

III. சரியா, தவறா? தவறு எனில் காரணம் தருக.

Question 1.
ஒலியானது திட, திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலி அலைகள் வெற்றிடத்தில் பரவாது.

Question 2.
நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
விடை:
சரி.

Question 3.
ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 4.
ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம்.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.

IV. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 10
விடை:
1-c,
2-d,
3-b,
4-a

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ, அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம்: ஏனெனில், ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
விடை:
கூற்று, காரணம் – இரண்டும் தவறு.

Question 2.
கூற்று: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.
காரணம்: திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

VI. குறு வினாக்கள்.

Question 1.
நெட்டலை என்றால் என்ன?
விடை:
ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அது நெட்டலை எனப்படும்.

Question 2.
செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
விடை:
20 Hz முதல் 20,000 Hz-க்கு இடைப்பட்ட அதிர்வெண் செவியுணர் ஒலியின் அதிர்வெண்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 3.
எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன? (GMQP-2019)
விடை:
எதிரொலி கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு 17.2 மீ ஆகும்.

Question 4.
அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி – வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?
விடை:
ஒலியின் அதிர்வெண் = n
அலைநீளம் λ = 0.20 மீ
ஒலியின் வேகம் V = nλ
∴ அதிர்வெண், n = \(\frac{\mathrm{V}}{\lambda}\)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 50

Question 5.
மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
விடை:
கொசு, டால்பின், வௌவால், நாய்.

VII. சிறு வினாக்கள்: –

Question 1.
ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்? [PTA-6]
விடை:

  1. மழைக்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
  2. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது.
  3. எனவே ஒலியானது கோடை காலங்களைவிட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுகிறது.

Question 2.
இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C-ஐ அடைய இயலும். அந்த வெப்ப நிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (V = 331 மீவி-1).
விடை:
வாயுவில் ஒலியின் திசைவேகம் (0°C யில்)
V0 = 331 மீவி-1
ராஜஸ்தானில் காற்றின் வெப்பநிலை
T = 46° C
VT = V0 + (0.61 × T) = 331 + (0.61 × 46) = 359.06 மீவி-1

Question 3.
இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்? [PTA-6]
விடை:

  1. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பதினால், குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  2. பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  3. இதனால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவிகளையும் ஒலித் தெளிவாக சென்றடையும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 4.
டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக. [GMQP-2019; Sep.20]
விடை:

  1. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது.
  2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெடைவெளியில் நகரும்போது.

VIII. கணக்கீடுகள்:

Question 1.
ஒரு ஊடகத்தில் 200 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 400 மீவி 1 வேகத்தில் பரவுகிறது. ஒலி அலையின் அலைநீளம்
காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
அலையின் அதிர்வெண், n = 200 Hz
ஒலியின் வேகம், V = 400 மீவி-1
கண்டறிய :
அலைநீளம் λ = ?
தீர்வு :
ஒளியின் திசைவேகம் V = nλ
∴ அலைநீளம், λ = \(\frac{\mathrm{V}}{n}\) = \(\frac{\mathrm{400}}{200}\) = 2 மீ.

Question 2.
வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 300 மீவி-1 எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில் உள்ளது?
விடை:
கொடுக்கப்பட்டவை :
நேரம், t = 9.8 விநாடிகள்
ஒலியின் திசைவேகம் = 300 மீவி-1
கண்ட றிய :
மேகக் கூட்டங்களின் உயரம், d = ?
தீர்வு :
v = \(\frac{d}{t}\)
∴ d = V × t
= 300 × 9.8
மேகக் கூட்டங்களின் உயரம் = 2940 மீ.

Question 3.
ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
அதிர்வெண், n = 600 Hz
கண்டறிய :
அலைவு நேரம், T = ?
தீர்வு :
T = \(\frac{1}{n}\) = \(\frac{1}{600}\) = 0.0017 விநாடிகள்
அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரம், T = 0.0017 விநாடிகள்.

Question 4.
ஒரு கப்பலிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கி மீயொலிக் கதிர்கள் செலுத்தப்படுகிறது. கடலின் ஆழத்தை அடைந்து எதிரொலித்து 1.6 விநாடிகளுக்குப் பிறகு ஏற்பியை அடைகிறது எனில் கடலின் ஆழம் என்ன? (கடல் நீரில் ஒலியின்
திசைவேகம் 1400 மீவி-1)
விடை:
கொடுக்கப்பட்டவை :
ஒலியின் திசைவேகம்,
V = 1400 மீவி-1
காலம், t = 1.6 விநாடி
கண்ட றிய : கடலின் ஆழம் d = ?
தூரம் (ஆழம்) = தூரம் × காலம்
தீர்வு :
2d = V × t
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 30

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 5.
ஒருவர் 680 மீ இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு செங்குத்தானச் சுவர்களுக்கு இடையே நிற்கிறார். அவர் தனது கைகளைத் தட்டும் ஓசையானது எதிரொளித்து முறையே 0.9 விநாடி மற்றும் 1.1 விநாடி இடைவெளியில் கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன?
விடை:
கொடுக்கப்பட்டவை :
முதல் எதிரொலியின் நேரம், t1 = 0.9 விநாடி
இரண்டாம் எதிரொலியின் நேரம்,
t2 = 1.1 விநாடி
மனிதனுக்கும் சுவருக்கும்
இடையிலான தூரம், d = 680 மீ
கண்டறிய :
காற்றில் ஒலியின் திசைவேகம்,
V = ?
தீர்வு :
V = \(\frac{2 d}{t}\)
V = \(\frac{2 d}{t_{1}+t_{2}}\)
V = \(\frac{2 \times 680}{(0.9+1.1)}\) = \(\frac{2 \times 680}{2}\) = 680 மீவி-1
காற்றில் ஒலியின் திசைவேகம் = 680 மீவி-1

Question 6.
இரண்டு கேட்குநர்கள் 4.5 கி.மீ இடைவெளியில் இரண்டு படகுகளை நிறுத்தியுள்ளனர். ஒரு படகிலிருந்து, நீரின் மூலம் செலுத்தப்படும் ஒலியானது 3 விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு படகை அடைகிறது. நீரில் ஒலியின் திசைவேகம் என்ன ?
விடை:
கொடுக்கப்பட்டவை :
இரண்டு கேட்குநர்களின் இடைவெளி,
d = 4.5 கி.மீ
நேரம், t = 3 விநாடிகள்
கண்டறிய : நீரில் ஒலியின் திசைவேகம் = ?
தீர்வு :
ஒலியின் திசைவேகம்,
V = \(\frac{d}{t}\)
d = 4.5 கி.மீ
d = (4.5 × 1000)
= 4500 மீ
V = \(\frac{4500}{3}\) = 1550 மீவி-1

Question 7.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன ?
விடை:
கொடுக்கப்பட்டவை :
மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய எடுக்கும் காலம் = \(\frac{1}{2}\)s
நீரில் ஒலியின் வேகம் = V = 1450 மீவி-1
கண்டறிய : கடலின் ஆழம் = ?
கடலின் ஆழம் (அ) ஒலி சைகை கடந்த தொலைவு
(d) = வேகம் × காலம்
= V × t
= 1450 × \(\frac{1}{2}\) = 725 மீ.

IX. நெடு வினாக்கள்

Question 1.
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
விடை:
ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்:
(i) அடர்த்தியின் விளைவு : வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும். எனவே, வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
v ∝ \(\sqrt{\frac{1}{d}}\)

(ii) வெப்பநிலையின் விளைவு : வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்ப நிலையின் இருமடி மூலத்திற்கு நேர் தகவில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது.
v ∝ \(\sqrt{\mathrm{T}}\)
வெப்பநிலை T°C-ல் திசைவேகமானது.
VT = (V0 + 0.61 T) ms-1
இங்கு V0 என்பது 0° C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு V0 = 331 மீவ-1!. எனவே ஒவ்வொருடிகிரி செல்சியஸ்வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீவி-1 அதிகரிக்கிறது.

(iii) ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு: காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 2.
ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி.
அ) அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு.
ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு.
இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு.
விடை:
ஒலி எதிரொலித்தல் : ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதுவே ஒலி எதிரொலித்தல் ஆகும்.
(அ)

  1. திடப்பொருளில் பயணிக்கும் ஒலி அலையின் இறுக்கங்கள் காற்று ஊடகத்தின் விளிம்பை அடைவதாகக் கொள்வோம்.
  2. அப்போது இறுக்கங்களானது, காற்று ஊடகத்தின் பரப்பில் F என்ற விசையைச் செலுத்தும்.
  3. அடர்குறை ஊடகம் (காற்று) குறைந்த அளவு உருக்குலைக்கும் பண்பை பெற்றுள்ளதால்
    இரண்டையும் பிரிக்கும் மேற்பரப்பு பின்னோக்கித் தள்ளப்படுகிறது.
  4. இதனால் அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
  5. இடமிருந்து வலமாக பயணித்த இறுக்கங்கள் எதிரொலிக்கப்பட்ட பின் தளர்ச்சிகளாக மாறி வலது புறத்திலிருந்து இடது புறமாகப் பரவுகிறது.

(ஆ)

  1. ஒரு நெட்டலையானது ஊடகத்தில் பரவும் போது இறுக்கங்களாகவும், தளர்ச்சிகளாகவும் பரவும். ஒலி அலையின் இறுக்கங்கள் இடமிருந்து வலமாக பரவி ஒரு சுவரில் மோதிக் கொள்வதாக கருதிக் கொள்வோம்.
  2. அவ்வாறு மோதிக்கொள்ளும் போது இறுக்கங்கள் சுவரினை நோக்கி F என்ற ஒரு விசையை செயல்படுத்தும்.
  3. அதே வேளையில் சுவரானது அதற்கு சமமான மற்றும் எதிர் திசையில் R = -F என்ற விசையை திரும்பச் செலுத்தும். இதனால் சுவற்றின் அருகில் மீண்டும் இறுக்கங்கள் ஏற்படும்.
  4. இவ்வாறு இறுக்கங்கள் சுவரில் மோதி மீண்டும் இறுக்கங்களாகவே எதிரொலிக்கிறது. அதன் திசை மட்டும் மாறியிருக்கும்.

(இ)

  1. வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு மாறுகிறது.
  2. குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் குறைகிறது. அதேபோல குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  3. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப் படுகிறது.
  4. ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்கவேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவான எதிரொலிக்கும் பகுதிகள் பயன்படுத்தப் படுகிறது.
  5. பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளையத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  6. இதனால், இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும், மீண்டும் மீண்டும் எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும் அடையும்.

Question 3.
அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன? (அல்லது) மீயொலி அலைகள் என்றால் என்ன?
ஆ) மியொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
விடை:
(அ) மீயொலி அதிர்வுறுதல் : (Sep.20)
மீயொலி அலைகள் 20,000 Hz-க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

  1. மனிதர்களால் கேட்க இயலாத அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள்.
  2. மீயொலி அலைகள் 2,000 Hz-க்கும் அதிகம்.
  3. எ.கா. வௌவால் ஏற்படுத்தும் ஒலி.

(ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் :

  1. கடலின் அடியில் நீர்மூழ்கிக் கப்பல்களின் தொலைவு மற்றும் ஏதேனும் பாறைகள் உள்ளதா என அறியவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் பயன்படுகிறது.
  2. மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனாகிராபி கருவியில் பயன்படுகிறது.
  3. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய பயன்படுகிறது.
  4. பாலில் வேண்டிய அளவு கொழுப்பு இவற்றை கலக்க உதவுகிறது.
  5. மீயொலி அதிர்வுகள் SONOR ல் பயன்படுத்தப்படுகிறது.
  6. விலங்குகளுக்கு இது தொடர்பு கொள்ள பயன்படுகிறது.
  7. மீயொலி தூய்மைப்படுத்துதல்.
  8. மீயொலி உருக்கி ஒட்டுதல் (Welding)

(இ) மீயொலி அதிர்வுகளை உணரும் மூன்று விலங்குகள் :

  1. நாய்கள், டால்பின்கள் – 40,000 Hz அதிர்வெண் கேட்கும் திறன்.
  2. வௌவால்கள் – 1,20,000 Hz அதிர்வெண் கேட்கும் திறன்.

Question 4.
எதிரொலி என்றால் என்ன?
அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக. (PTA-1)
ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக. (PTA-1; Sep.20)
இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க.
விடை:
ஒலி அலைகள் சுவர்கள், மேற்கூரைகள், மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே எதிரொலி ஆகும். (அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகள்

  1. எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையே 0.1 விநாடிகள் இருக்க வேண்டும்.
  2. எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தபட்சத் தொலைவானது காற்றில் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் 1/20 பகுதியாக இருக்க வேண்டும்.

(ஆ) மருத்துவ பயன்கள் :

  1. மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது.
  2. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.
  3. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது, இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

(இ) ஒலியின் திசைவேகத்தைக் கண்டறிதல் :
தேவையான கருவிகள்:
ஒலி மூலம், அளவு நாடா, ஒலி ஏற்பி மற்றும் நிறுத்துக் கடிகாரம்

செய்முறை:

  1. ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையேயானத் தொலைவை (d) அளவு நாடாவைப் பயன்படுத்தி அளந்து கொள்ளவும்.
  2. ஒலி ஏற்பியை ஒலி மூலத்திற்கு அருகில் வைக்கவும். தற்போது ஒலி சமிக்ஞைகள் ஒலி மூ லத்திலிருந்து வெளிப்படும்.
  3. நிறுத்துக் கடிகாரத்தைப் பயன்படுத்தி ஒலிமூலத்திலிருந்து வெளிப்பட்ட ஒலி சமிக்ஞைகளுக்கும், எதிரொலித்து வந்த ஒலி சமிக்ஞைகளுக்கும் இடையேயான கால இடைவெளியை’ எனக் குறித்துக் கொள்ளவும்.
  4. இந்த சோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து பார்க்கவும். சராசரி கால இடைவெளியைக் கணக்கிடவும்.

ஒலியின் திசைவேகம் கணக்கிடல் :
ஒலி மூலத்திலிருந்து வெளியான ஒலித்துடிப்பு ஒலி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒலி மூலம் வரையுள்ள 2d தொலைவை t நேரத்தில் கடந்து செல்கிறது. எனவே,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 55

கருத்துரு வினா

Question 1.
நிலவில் எழுப்பப்படும் ஒலியை கேட்க இயலுமா? எவ்வாறு கேட்கலாம்?
விடை:
கேட்க இயலாது. ஒலி பரவ ஊடகம் தேவை. நிலவில் வளிமண்டலம் இல்லை . ஆனால் மைக்ரோபோன் கொண்டு குறுக்கலையாக மாற்றப்படும் போது ஒலியை கேட்கலாம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ஒலி ஊடகத்தில் செல்லும் திசைவேகம் சார்ந்து கீழ்க்காணும் ஊடகங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. (PTA-1)
அ) காற்று > கண்ணாடி > நீர்
ஆ) நீர் > காற்று > கண்ணாடி
இ) கண்ணாடி <நீர் > காற்று
ஈ) கண்ணாடி > நீர் > காற்று
விடை:
(இ) கண்ணாடி < நீர் > காற்று

Question 2.
தகுந்த காரணங்களோடு தொடர்புப்படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்புக. (PTA-3)
அ) வௌவால்கள்: மீயொலி ; புவி அதிர்வு : குற்றொலி
ஆ) மெதுவாகப் பேசும் கூடம்: எதிரொலியின் பயன்பாடு; செயற்கைக்கோள் இருப்பிடம் அறிதல் : டாப்ளர் விளைவின் பயன்பாடு

2 மதிப்பெண்கள்

Question 1.
90 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூ லமானது ஒலியின் திசைவேகத்தில் (1/10) மடங்கு வேகத்தில், நிலையான இடத்தில் உள்ள கேட்குநரை அடைகிறது எனில் அவரால் உணரப்படும் அதிர்வெண் என்ன? (PTA-4)
விடை:
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி, ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 70
n’ = 100 Hz

Question 2.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன ? (PTA-5)
விடை:
மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய
எடுக்கும் காலம் = \(\frac{1}{2}\)s
நீரில் ஒலியின் வேகம் = V = 1450 மீவி-1
கடலின் ஆழம் (அ) ஒலி சைகை கடந்த தொலைவு (d) = வேகம் × காலம்
= V × t
= 1450 × \(\frac{1}{2}\) = 725 மீ.

Question 3.
500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது. 30 மீவி-1 வேகத்தில் ஓய்வில் உள்ள கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
(PTA-2)
விடை:
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி, ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 75

Question 3.
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்ணானது உண்மையான அதிர்வெண்ணில் பாதியாக இருக்க வேண்டுமெனில் ஒலி மூலம் எவ்வளவு வேகத்தில் கேட்குநரைவிட்டு விலகிச் செல்லவேண்டும்? (7 Marks) (PTA-5)
விடை:
ஒலி மூலமானது, ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும்போது, தோற்ற அதிர்வெண்ணிற்கான சமன்பாடு,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 78

4 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து ஒலி எதிரொலிப்புக் கோணத்தைக் கணக்கிடுக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 79
விடை:
படுகோணம் ∠i = ∠90° – ∠50°
∠i = 40°
எதிரொலிப்பு விதியின்படி,
∠i = ∠r
∠i = 40°
∴ எதிரொலிப்புக் கோணம்,
∠r = 40°

அரசு தேர்வு வினா-விடை

7 மதிப்பெண்கள்

Question 1.
ஒரு ஒலி மூலமானது 50 மீவி திசைவேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி நகருகிறது கேட்குநரால் உணரப்படும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணானது 1000 Hz ஆகும். அந்த ஒலிமூலமானது ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது உணரப்படும் தோற்ற அதிர்வெண் என்ன? (ஒலியின் திசைவேகம் 330 மீவி-1). (GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 90
ஒலி மூலத்தின் உண்மையான அதிர்வெண் 848.48 Hz. ஆகும். ஒலி மூலமானது கேட்குநரை விட்டு விலகிச் செல்லும்போது உள்ள தோற்ற அதிர்வெண்ணிற்கானச் சமன்பாடு.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 95
= 736.84 Hz.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 2 Chapter 3 தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 2 Chapter 3 தாவரங்கள்

5th Science Guide தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு
அ) அல்லி இதழ்
ஆ) புல்லி இதழ்
இ) மகரந்தகம்
ஈ) சூலகம்
விடை:
இ) மகரந்தகம்

Question 2.
காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு _____________ என்று பெயர்.
அ) அனிமோஃபிலி
ஆ) ஹைட்ரோஃபிலி
இ) எண்டோமோஃபிலி
ஈ) ஆர்னிதோஃபிலி
விடை:
அ) அனிமோஃபிலி

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
நீர் மூலம் விதை பரவும் முறைக்கு ______________ என்று பெயர்.
அ) அனிமோகோரி
ஆ) ஹைட்ரோகோரி
இ) ஸூகோரி
ஈ) ஆட்டோகோரி
விடை:
ஆ) ஹைட்ரோகோரி

Question 4.
எண்டோமோஃபிலி என்பது
அ) பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை
ஆ) காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை
இ) நீர் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை
ஈ) விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை
விடை:
அ) பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை

Question 5.
எதில் காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?
அ) புல்
ஆ) வாலிஸ்னேரியா
இ) ஹைட்ரில்லா
ஈ) தாமரை
விடை:
அ) புல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
விதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவுவதற்கு ______________ என்று பெயர்.
விடை:
விதை பரவுதல்

Question 2.
தாவர விதை வெடித்துப் பரவுவதற்கு ________________ என்று பெயர்.
விடை:
சுயவழியில் விதைபரவுதல்

Question 3.
விதையானது கருத்தரித்த ___________ ஆகும்.
விடை:
சூல்

Question 4.
நெல்லானது ___________ மண்ணில் நன்கு வளரும்.
விடை:
களி

Question 5.
பெரிய அளவு மண் துகள்களைக் கொண்டது _____________ ஆகும்.
விடை:
மணல்

III. பொருத்துக.

1. மண்புழு – கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழிக்கின்றது.
2. பறவைகள் – தேன்
3. தேங்காய் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை
4. தேனீக்கள் – நீரின் மூலம் பரவுதல்
5. தட்டான் – மண்புழு உரமாதல்
விடை:
1. மண்புழு – மண்புழு உரமாதல்
2. பறவைகள் – பறவைகள் மூலம் மகரந்தசேர்க்கை
3. தேங்காய் – நீரின் மூலம் பரவுதல்
4. தேனீக்கள் – தேன்
5. தட்டான் – கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழிக்கின்றது

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
மகரந்தச் சேர்க்கை என்றால் என்ன?
விடை:
மகரந்தத்தூளானது மகரந்தத்தாள் முடியிலிருந்து சூலக முடியைச் சென்றடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 2.
விதை முளைத்தல் என்றால் என்ன?
விடை:
விதையானது ஒரு கருவுற்ற சூல் ஆகும். இதில் முளைக்கரு மற்றும் உணவுப் பொருள்கள் விதை உறையால் பாதுகாக்கப்பட்டிருக்கும். சாதமான சூழ்நிலை வரும்போது, விதை முளைத்து ஒரு புதிய செடியாக வளரும்.

Question 3.
மண் எவ்வாறு உருவாகிறது?
விடை:
பாறை, காற்று, மழை மற்றும் தட்பவெப்பநிலை ஆகியவற்றின் செயல்பாட்டினால் பாறைகள் உடைக்கப்படும்போது மண் உருவாகிறது.

Question 4.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
மக்கும் கழிவுப் பொருள்களை மண்புழுக்கள் உரமாக மாற்றும் நிகழ்விற்கு மண்புழு உரமாக்கல் என்று பெயர்.

Question 5.
விதைகள் எவ்வாறு நீர் மூலம் பரவுகின்றன?
விடை:
நீர் மூலம் பரவும் கனிகள் மிதந்து செல்வதற்கு ஏற்ற வெளியுறையைக் கொண்டுள்ளன. தேங்காயின் இடை அடுக்காது நாரினால் அமைந்துள்ளதால் அது எளிதில் – நீரினால் அடித்துச் செல்லப்படுகிறது. அது பல்வேறு இடங்களைச் சென்றடைந்து புதிய தாவரமாக வளர்கின்றது. எ.கா : தாமரை, தேங்காய்

V. விரிவாக விடையளி.

Question 1.
தாவர பாகங்கள் பற்றி குறிப்பெழுதுக,
விடை:
ஒரு தாவரம் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது. தரைக்கு மேலே வெளியே தெரியும் தாவரப் பகுதி தண்டுத் தொகுதி எனப்படுகிறது. தரைக்குக் கீழே உள்ள தாவரத்தின் பகுதி வேர்த் தொகுதி எனப்படும். தண்டுத் தொகுதியில் தண்டு, இலைகள், கிளைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவை காணப்படுகின்றன. வேர்த் தொகுதியில் ஆணி வேர், பக்க வேர் போன்ற வேர்கள் காணப்படுகின்றன. இரு வித்தலைத் தாவரங்களுக்கு நீளமான ஆணிவேர் உண்டு. ஒரு வித்திலைத் தாவரங்களுக்கு சல்லி வேர்கள் உண்டு.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 1

Question 2.
மகரந்தச்சேர்க்கையின் முறைகளை விவரி.
விடை:
மகரந்தத்தூளானது ஒரு மலரின் மகரந்ததாள் முடியிலிருந்து அதே மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும். மகரந்தத்தூளானது ஒரு மலரின் மகரந்த்தாள் முடியிலிருந்து அதே வகைத் தாவரத்தின் வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 2
தன் மகரந்தச் சேர்க்கையில் விதைகள் வீரியமற்ற . தாவரங்களை உருவாக்குகின்றன. அவை புதுவகைத் தாவரங்களை உருவாக்கமுடியாது. ஆனால், அயல்மகரந்தச் சேர்க்கையில் விதைகள் தரமான தாவரங்களை உருவாக்குகின்றன. மேலும், புதுவகைத் தாவரங்கள் அதிலிருந்து உருவாகின்றன. மகரந்தச் சேர்க்கை பலவிதங்களில் நடைபெறுகிறது. இம்முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 3

காற்று மூலம் மகரந்தச்சேர்க்கை (அனிமோஃபிலி)
காற்றுமூலம் மகரந்தச் சேர்க்கையுறும் மலர்கள் அளவில் சிறியதாக உள்ளன. அவை வண்ணமயமான நிறம், வாசனை மற்றும் மகரந்தத் தேன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதில்லை. இவற்றின் மகரந்தத் தூள்கள் ஒட்டும் தன்மையற்ற, காய்ந்த , இலேசான பொடி போன்று காணப்படும். எனவே, இவை , எளிதில் காற்றில் எடுத்துச் செல்லப்படுகின்றன. எ.கா: புல், சோளம், பைன்
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 4

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

நீர் மூலம் மகரந்தச்சேர்க்கை (ஹைட்ரோஃபிலி)
நீர்த்தாவரங்களின் மலர்கள் நிறமற்றவை. அவற்றில் மகரந்தத் தேன் காணப்படுவதில்லை. அவற்றின் மகரந்த தூள் – ஈரமடையாத வகையில் அவை ஒருவகை பிசினால் மூடப் பட்டுள்ளன. எ.கா:வாலிஸ்னேரியா, ஹைட்ரில்லா, சோஸ்டேரியா
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 5
பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை (எண்டோமோஃபிலி)
இது சூரியகாந்தி, வெண்டை , கத்தரி மற்றும் பூசணி போன்றவற்றில் நடைபெறும் பொதுவான மகரந்தசேர்க்கை – முறை ஆகும். ஒருசில மலர்கள் அளவில் பெரிதாகவும், இனிய நறுமணம் உடையவையாகவும் காணப்படுகின்றன. இவை ) வண்ணத்துப்பூச்சி மற்றும் தேனீக்கள் போன்ற பூச்சி இனங்களைக் கவர்கின்றன.

Question 3.
மலரின் படம் வரைந்து அதன் பாகங்களைக் குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 6

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

10th Science Guide அணுக்களும் மூலக்கூறுகளும் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
அ) 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
ஆ) 1ஹீலியம் அணு
இ) 2 கி ஹீலியம் அணு
ஈ) 1 மோல் ஹீலியம் அணு
விடை:
ஆ) 1 ஹீலியம் அணு

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
அ) குளுகோஸ்
ஆ) ஹீலியம்
இ) கார்பன்டை ஆக்சைடு
ஈ) ஹைட்ரஜன்
விடை:
இ) கார்பன்டை ஆக்சைடு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 3.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2-ன் பருமன்
அ) 22.4 லிட்டர்
ஆ) 2.24 லிட்டர்
இ) 0.24 லிட்டர்
ஈ) 0.1 லிட்டர்
விடை:
ஆ) 2.24 லிட்டர்

Question 4.
1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை
அ) 28 amu
ஆ) 14 amu
இ) 28 கி
ஈ) 14 கி
விடை:
ஈ) 14 கி

Question 5.
1 amu என்பது
அ) C-12ன் அணுநிறை
ஆ) ஹைட்ரஜனின் நிறை
இ) ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
ஈ) 0-16ன் அணு நிறை
விடை:
இ) ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை

Question 6.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) 12 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஆ) ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஈ) ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
விடை:
இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.

Question 7.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
அ) 11.2 லிட்ட ர்
ஆ) 5.6 லிட்டர்
இ) 22.4 லிட்டர்
ஈ) 44.8 லிட்டர்
விடை:
இ) 22.4 லிட்டர்

Question 8.
20Ca40 தனிமத்தின் உட்கருவில்
அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
விடை:
ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 9.
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
அ) 16 கி
ஆ) 18 கி
இ) 32 கி
ஈ) 17 கி
விடை:
இ) 32 கி

Question 10.
1 மோல் எந்த ஒரு பொருளும் …. மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்
அ) 6.023 × 1023
ஆ) 6.023 × 10-23
இ) 3.0115 × 1023
ஈ) 12.046 × 1023
விடை:
அ) 6.023 × 1023

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
இரு வேறு தனிமங்களின் அணுக்கள் ………….. நிறை எண்ணையும் ……………. அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.
விடை:
ஒத்த, மாறுபட்ட

Question 2.
ஒரே ………………….. எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
விடை:
நியூட்ரான்) (PTA-4)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 3.
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக …………….. முறையில் மாற்றலாம்.
விடை:
செயற்கை தனிமமாக்கல்

Question 4.
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ……………. எனப்படும்.
விடை:
நிறை எண்

Question 5.
ஒப்பு அணுநிறை என்பது ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
திட்ட அணு நிறை

Question 6.
ஹைட்ரஜனின் சராசரி அணு நிறை = ………
விடை:
1.008 amu

Question 7.
ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை ……….. எனப்படும்.
விடை:
ஒத்த அணு மூலக்கூறுகள்

Question 8.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் …………….. ஆகும். (PTA-4)
விடை:
அணுக்கட்டு எண்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 9.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ……………. மி.லி. இடத்தை அடைத்துக்கொள்ளக்கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
விடை:
22400

Question 10.
பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ……….
விடை:
4

III. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 56
விடை:
1-ஆ,
2-இ,
3-உ,
4-அ,
5-ஈ

IV. சரியா? தவறா?
(தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்
விடை:
சரி.

Question 2.
மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மந்த வாயுக்கள் ஓரணு தனிமங்கள்.

Question 3.
தனிமங்களின் கிராம் அணுநிறைக்கு அலகு இல்லை.
விடை:
தவறு.
சரியான கூற்று : தனிமங்களின் கிராம் அணு நிறையை கிராமில் குறிப்பிடலாம்.

Question 4.
1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும்.
விடை:
சரி.

Question 5.
CO2ன் மூலக்கூறு நிறை 42 கி.
விடை:
தவறு
சரியான விடை: CO2-ன் மோலார் நிறை 44 கி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ள பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) A மற்றும் R சரி. R, A ஐ விளக்குகிறது
ஆ) A சரி R தவறு.
இ) A தவறு R சரி.
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.

Question 1.
கூற்று A: அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.
காரணம் R: ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன்-12ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்.
விடை:
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.

Question 2.
கூற்று A: குளோரினின் ஒப்பு மூலக்கூறு நிறை 35.5 amu.
காரணம் R: குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
விடை:
இ) A தவறு R சரி.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒப்பு அணுநிறை – வரையறு.
விடை:

  1. ஒரு தனிமத்தின் ஒப்பு அணுநிறை என்பது அத்தனிமத்தின் சராசரி அணு நிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
  2. இது ‘Ar’ என்று குறிப்பிடப்படுகிறது.
  3.  இதனை திட்ட அணு எடை’ எனவும் அழைப்பர்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 59

Question 2.
ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.
விடை:
ஆக்ஸிஜனின் ஐசோடோப்புகள்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 60

Question 2.
அணுக்கட்டு எண் – வரையறு.
விடை:

  1. மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் ” அணுக்கட்டு எண்’ ஆகும்.
  2. இவை இரண்டு வகைப்படும். அவை
    1. ஓரணு மூலக்கூறு,
    2. ஈரணு மூலக்கூறு,
    3. மூவணு மூலக்கூறு,
    4. பல அணு மூலக்கூறு.

Question 3.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டு கொடு.
விடை:

  1. HCl (ஹைட்ரஜன் குளோரைடு)
  2. CO (கார்பன் மோனாக்சைடு)

Question 4.
வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
விடை:

  1. திட்ட வெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மி.லி. பருமனை ஆக்கிரமிக்கும்.
  2. இது மோலார் பருமன் எனப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 5.
அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.
விடை:
அம்மோனியாவின் மூலக்கூறு வாய்ப்பாடு = NH3
NH3ன் கிராம் மூலக்கூறு நிறை
= [(14) + (3 × 1)] = 17 கி
அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 61
அம்மோனியாவின் மூலக்கூறு நிறை அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபு = 82.35%

VII. விரிவாக விடையளி

Question 1.
0.18கிநீர்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
நீரின் நிறை = 0.18கி
தீர்வு:
மூலக்கூறுகளின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 61.1

Question 2.
N2 + 3H2 → 2 NH3(N = 14, H = 1)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 62
விடை:
28, 6, 34.

Question 3.
மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக.
அ) 27 கி அலுமினியம்
ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
விடை:
அ) 27 கி அலுமினியம்
மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 63

ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 64

Question 4.
நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக. (Sep.20)
விடை:

  1. அணு என்பது பிளக்கக்கூடிய துகள்
  2. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன.
  3. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறைகளைப் பெற்றுள்ளன.
  4. அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்ற முடியும்.
  5. அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
  6. அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்
  7. ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலை கணக்கிட முடியும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

Question 5.
ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
விடை:
ஒப்பு மூலக்கூறு நிறை:
ஒரு வாயு அல்லது ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறு வாயு அல்லது ஆவியின் நிறைக்கும், ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
ஆவி அடர்த்தி:
(i) மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.
(ii) Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 66
(iii) அவகாட்ரோ விதிப்படி சம பருமனுள்ள வாயுக்கள் அனைத்தும் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
(iv) Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 67
(v) n = 1 எனக் கொண்டால்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 68
(vi) ஹைட்ரஜன் ஈரணு மூலக்கூறு ஆதலால்,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 69
(vii) நாம் ஆவி அடர்த்தியை மூலக்கூறு நிறையுடன் கீழ்கண்டவாறு தொடர்புபடுத்தலாம்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 70
(viii) சமன்பாடு 2-ஐ 1-ல் பிரதியிட,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 71
(ix) குறுக்கே பெருக்க, 2 × ஆவி அடர்த்தி = வாயு (அ) ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை (அ) ஒப்பு மூலக்கூறு நிறை = 2 × ஆவி அடர்த்தி

VII. உயர் சிந்தனைக்கான வினாச்

Question 1.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும்போது கீழ்க்கண்டவாறு சிதைவடைகிறது.
CaCO3 → CaO + CO2
அ) இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது?
ஆ) கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடு.
இ) இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன்டை ஆக்சைடு வெளிவருகிறது?
விடை:
அ) இவ்வினையில் 1 மோல் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ) கால்சியத்தின் மோலார் நிறை = 40
கார்பனின் மோலார் நிறை = 12
ஆக்சிஜனின் மோலார் நிறை = 16
கால்சியம் கார்பனேட் (CaCO3)ன் கிராம் மூலக்கூறு நிறை = கால்சியத்தின் மோலார் நிறை + கார்பனின் மோலார் நிறை + ஆக்ஸிஜனின் மோலார் நிறை
= 40 + 12 + (16 × 3) = 100 கி/மோல்
இ) இவ்வினையில் 1 மோல் கார்பன்டை ஆக்சைடு வெளிவருகிறது.

IX. கணக்கீடுகள்

Question 1.
கீழ்க்கண்டவற்றின் நிறையைக் காண்க
அ) 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு
ஆ) 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு
இ) 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு
ஈ) 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு
விடை:
அ) 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு
H2ன் மூலக்கூறு நிறை = 2
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 2 × 2 = 4 கி

ஆ) 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு Cl2ன் மூலக்கூறு நிறை = 70.9
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை = 3 × 70.9 = 212.7கி

இ) 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு சல்பர் மூலக்கூறின் மூலக்கூறு நிறை = 32 × 8 = 256
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 5 × 256 = 1280 கி

ஈ) 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு பாஸ்பரஸ் மூலக்கூறின் மூலக்கூறு நிறை = 31 × 4 = 124
நிறை = மோல்களின் எண்ணிக்கை × மூலக்கூறு நிறை
= 4 × 124 = 496 கி

Question 2.
கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க. (Ca = 40, C = 12, O = 16)
விடை:
CaCO3, ன் மோலார் நிறை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 69.2
CaCO3ல் உள்ள O-ன் சதவீதம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 69.3

Question 3.
Al2(SO4)3 ல் உள்ள ஆக்சிஜனின் சதவீத இயைபைக் காண்க. (Al = 27, O = 16, S = 32).
விடை:
Al2(SO4)3 ன் மோலார் நிறை
= (27 × 2) + (32 × 3) + (16 × 12) = 342 கி
Al2(SO4)3ல் உள்ள O-ன் சதவீதம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 70.5

Question 4.
போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B-10 மற்றும் B-11 சதவீத பரவலைக் காண்க.
விடை:
B-10ன் சதவீத பரவல் = x
B-11ன் சதவீத பரவல்
B-11 = (100 – x)
போரானின் சராசரி அணுநிறை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 72
10.804 × 100 = 1100 – x
1080.4 = 1100 – x
x = 1100 – 1080.4
x = 19.6%
B-10ன் சதவீத பரவல் = 19.6%
B-11ன் சதவீத பரவல்
B – 11 = (100 – x)
= 100 – 19.6
= 80.4%

Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும்

செயல்பாடு 7.1

Question 1.
கீழ்க்கண்ட அட்டவணையை தகுந்த காரணிகளைக் கொண்டு நிரப்புக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 90

செயல்பாடு 7.2

Question 1.
கீழ்க்கண்ட மூலக்கூறுகளை அணுக்கட்டு எண்களின்படி வகைப்படுத்தி, அட்டவணைப்படுத்துக. ஃப்ளூரின் (F2), கார்பன் டை ஆக்சைடு (CO2), பாஸ்பரஸ் (P4), சல்பர் (S8), அம்மோனியா (NH3), ஹைட்ரஜன் அயோடைடு (HI), சல்ப்யூரிக் அமிலம் (H2SO4), மீத்தேன் (CH4), குளுக்கோஸ் (C6H12O6), கார்பன் மோனாக்சைடு (CO).
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 91

செயல்பாடு 7.3

Question 1.
ஒரே வெப்ப அழுத்த நிலையில் 3 லி O2, 5 லி Cl2, மற்றும் 6 லி H2ஐ எடுத்துக்கொண்டால்
(i) அதிக எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பது எது?
(ii) குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பது எது?
விடை:
(i) 6 லிட்டர் H2
(ii) 3 லிட்டர் O2

கருத்தியல் சிந்தனை

Question 1.
அனைத்து சேர்மங்களும் மூலக்கூறுகளே, ஆனால் அனைத்து மூலக்கூறுகளும் சேர்மங்கள் அல்ல, ஏன்?
விடை:

  1. வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சேர்ந்து வினைபுரிந்தால், அவை சேர்மமாகிறது. எ.கா. கார்பன் அணு, ஆக்சிஜன் அணுவுடன் சேர்ந்து கார்பன் மோனாக்சைடு என்ற சேர்மம் கிடைக்கிறது. இது CO என்ற ஒரு மூலக்கூறு ஆகும்.
  2. ஆகவே அனைத்து சேர்மங்களும் மூலக்கூறுகளே.
  3. ஆனால், அனைத்து மூலக்கூறுகளும் சேர்மங்கள் ஆகாது. ஏனெனில், ஒரே தனிமத்தின் அணுக்கள் ஒன்றாக சேர்ந்தால், அது சேர்மம் ஆகாது. அவை மூலக்கூறாகும். எ.கா. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தால், O2 என்ற மூலக்கூறுதான் உருவாகும். இது ஒரு சேர்மம் அல்ல.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
கீழ்க்கண்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. [PTA-4)
விடை:
(i) எலக்ட்ரான் குறிப்பிடத்தக்க நிறையை கொண்டவை
(ii) ஒரு வேற்றணு மூலக்கூறு வெவ்வேறு வகை அணுக்களால் உருவாகிறது.
(iii) ஒரு தனிமத்தின் நிறை எண்ணும் அணு எண்ணும் சமம்.
(அ) i, ii, iii சரி
(ஆ) மற்றும் iii சரி
(இ) ii மட்டும் சரி
(ஈ) iii மட்டும் சரி
விடை:
இ) ii மட்டும் சரி

Question 2.
ஓரலகு மூலக்கூறு ஒரே வகை அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பின் அது …… என அழைக்கப்படுகிறது.
(அ) ஓரணு மூலக்கூறு [PTA-6]
(ஆ) வேற்று அணுமூலக்கூறு
(இ) ஒத்த அணு மூலக்கூறு
(ஈ) பல அணுமூலக்கூறு
விடை:
இ) ஒத்த அணு மூலக்கூறு

அரசு தேர்வு வினா-விடை

Question 1.
(i) 1.51 × 1023 மூலக்கூறு நீரின் (H2O) நிறையைக் காண்க. (GMQP-2019)
(ii) 46 கி சோடியத்தின் மோல்களைக் காண்க.
(iii) 36 கி நீரில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையை காண்க.
விடை:
(i) 1.51 × 1023 மூலக்கூறு நீர்
நீரின் மூலக்கூறு நிறை = 18 கி
மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 92
நிறை = மோல் × மூலக்கூறு
நிறை = 0.25 × 18 = 4.5 கி

(ii) மோல்களின் எண்ணிக்கை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 93

(iii) மூலக்கூறுகளின் எடை H2O = 18
மேலும், 18 கிராம் H2O = 1 மோல் H2O
36 கிராமுடன் H2O = 2 மோலுடன் H2O
1 மோலுடன் of H2O = 6.023 × 1023
மூலக்கூறுகளுடன் H2O = 1.204 × 1024 மூலக்கூறு H2O.

7 மதிப்பெண்கள்

Question 1.
அவகாட்ரோ விதியின் பயன்பாடுகள் ஏதேனும் இரண்டு கூறுக. (Sep.20)
விடை:

  1. கே லூசாக் விதியினை விவரிக்கிறது
  2. வாயுக்களின் அணுக்கட்டு எண்ணைக் கணக்கிட உதவுகிறது.
  3. வாயுக்களின் மூலக்கூறு வாய்பாட்டை கணக்கிடலாம்.
  4. மூலக்கூறு நிறைக்கும், ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை வருவிக்க உதவுகிறது.
  5. அனைத்து வாயுக்களின் கிராம் மோலார் பருமனை (22.4 லிட்டர் திட்டவெப்ப அழுத்த நிலையில்) கணக்கிடுவதில் பயன்படுகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 2 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 2 Chapter 2 நீர்

5th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்கண்ட நுண்ணுயிரிகளில் எவை நீரால் பரவும் நோய்களைத் தோற்றுவிக்கின்றன?
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. புரோட்டோசோவா
ஈ. அனைத்தும்
விடை:
ஈ. அனைத்தும்

Question 2.
_____________ இல் நீரானது அதிக அளவில் நீராவியாகவும், மேகங்களாகவும் காணப்படுகிறது.
அ. வானம்
ஆ. பூமி
இ. வளி மண்டலம்
ஈ. மழை
விடை:
இ. வளி மண்டலம்

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
_____________ நீரில் மாசுக்கள் இருக்காது.
அ. கடல்
ஆ. கிணற்று
இ. ஆற்று
ஈ. நிலத்தடி
விடை:
ஈ. நிலத்தடி

Question 4.
____________ நீர் கடலிலும் பெருங்கடலிலும் காணப்படுகிறது.
அ. 97%
ஆ. 87%
இ. 47%
ஈ. 77.5%
விடை:
அ. 97%

Question 5.
___________ என்பது கடல் நீரை தூய நீராக மாற்றும் – செயற்கையான செயல்பாடாகும்.
அ. பின்னக் காய்ச்சி வடித்தல்
ஆ. தெளிய வைத்து இறுத்தல்
இ. தலைகீழ் சவ்வூடு பரவல்
ஈ. உப்புத் தன்மை நீக்குதல்
விடை:
ஈ. உப்புத் தன்மை நீக்குதல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
நிலத்தடி நீர் _______________ வடிவில் புவியின் மேற்பரப்பிற்கு வெளியே வரும்.
விடை:
ஊற்று நீர்

Question 2.
நீரானது சூரிய வெப்பத்தினால் ஆவியாக மாறுவதற்கு _______________ என்று பெயர்.
விடை:
ஆவியாதல்

Question 3.
மழை நீரால் உருவாக்கப்பட்ட நீரோடை மற்றும் _______________ ஆகியவை ஒன்றிணைந்து ஆறாக உருவாகின்றன.
விடை:
ஊற்று நீர்

Question 4.
மழை நீரைச் சேகரித்து அதைச் சேமிக்கும் முறைக்கு ________________ என்று பெயர்.
விடை:
மழைநீர் சேகரிப்பு

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 5.
காலரா நோயைத் தோற்றுவிப்பது ________________.
விடை:
விப்ரியோ காலரே பாக்டீரியா

III. பொருத்துக.

1. எண்ணெய்க்கசிவு – மேகம்
2. நீர்த் தேக்கம் – தாவர வளர்ச்சி
3. பின்னக்காய்ச்சி வடித்தல் – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
4. மழை நீர் சேகரிப்பு – இன்புளூயன்சா வைரஸ்
5. பன்றிக் காய்ச்சல் – அணைக்கட்டு
விடை:
1. எண்ணெய்க்கசிவு – கடல் வாழ் உயிரிகளை மாசுபடுத்துதல்
2. நீர்த் தேக்கம் – அணைக்கட்டு
3. பின்னக்காய்ச்சி வடித்தல் – மேகம்
4. மழை நீர் சேகரிப்பு – தாவர வளர்ச்சி
5. பன்றிக் காய்ச்சல் – இன்புளுயன்சா வைரஸ்

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீரின் மூலங்களை எழுதுக.
விடை:
ஆறுகள், ஓடைகள், நிலத்தடி நீர், மழைநீர், உருகிய , பனிப்பாறை ஆகியவை தனித்தோ அல்லது சேர்ந்தோ ஏரிகள், – நீர்த்தேக்கங்கள் மற்றும் குட்டையில் காணப்படும் நீரின் – ஆதாரங்களாக உள்ளன.

Question 2.
உப்பு நீக்கல் என்றால் என்ன?
விடை:
கடல்நீரைக் குடிநீராக்குதல் என்பது கடல்நீரில் உள்ள உப்பை’ அகற்றி தூய நீராக மாற்றும் செயற்கையான செயல்முறையாகும். கடல்நீரைக் குடிநீராக்குவதற்கு காய்ச்சி – வடித்தல், தலைகீழ் சவ்வூடு பரவல் ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

Question 3.
நீர்சுழற்சியின் படிநிலைகள் யாவை?
விடை:

  1. ஆவியாதல்
  2. ஆவி சுருங்குதல்
  3. வீழ்ப்படிவாதல்
  4. கடலை நோக்கிச் செல்லுதல்

Question 4.
நீர்த்தேக்கம் என்றால் என்ன?
விடை:
ஆற்றின் குறுக்காக அணை கட்டப்படுவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகள் தோன்றுகின்றன. இவை நீர்தேக்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

Question 5.
டெங்கு காய்ச்சலை எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:
→ வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
→ அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கதவைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்.
→ வீட்டைச்சுற்றிலும் கொசுக்களைத் தடுக்கும் திரவத்தைத் தெளிக்க வேண்டும்.
→ உடல் பகுதிகளை மூடியிருக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 2 நீர்

V. விரிவாக விடையளி.

Question 1.
மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் யாவை?
விடை:
மழை நீர் சேகரிப்பின் நன்மைகள் :
→ நகரங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
→ புவியின் மேற்புற மண் அரிக்கப்படுவதைத் தவிர்க்கிறது.
→ தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது.
→ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது.
→ நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது.

Question 2.
நீர் மூலம் பரவும் நோய்களை எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:
→ முறையான தன் சுத்தம் பேணுதல் வேண்டும். சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
→ குளோரின் கலந்த, கொதிக்க வைக்கப்பட்ட நீரையே பருக வேண்டும்.
→ நன்கு கொதிக்க வைத்த அல்லது பதப்படுத்தப்பட்ட பாலைக் குடிக்க வேண்டும்.
→ தொற்று நோய் பரப்பும் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 2 Chapter 1 உணவு

5th Science Guide உணவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
உணவுப் பொருள்களைக் கெட்டுப் போகச் செய்யும் உயிரிசார் காரணி _____________.
(அ) காய வைத்தல்
(ஆ) வெப்பநிலை
(இ) ஈரப்பதம்
(ஈ) பாக்டீரியா
விடை:
(ஈ) பாக்டீரியா

Question 2.
தானியங்கள் _____________ மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
(அ) காய வைத்தல்
(ஆ) உறைய வைத்தல்
(இ) சர்க்கரை சேர்த்தல்
(ஈ) உப்பு சேர்த்தல்
விடை:
(அ) காய வைத்தல்

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
_____________ குறைபாடு காரணமாக இரத்தசோகை நோய் தோன்றுகிறது.
(அ) வைட்டமின் ஏ
(ஆ) வைட்டமின் பி
(இ) இரும்பு
(ஈ) வைட்டமின் டி
விடை:
(இ) இரும்பு

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வது ______________ என அழைக்கப்படுகிறது.
(அ) உடல்பருமன்
(ஆ) தலைவலி
(இ) காய்ச்ச ல்
(ஈ) வயிற்று வலி
விடை:
(அ) உடல்பருமன்

Question 5.
கார்போஹைட்ரேட்டுகள் எதில் அதிகம் காணப்படுகின்றன?
(அ) நெய்
(ஆ) பழங்க ள்
(இ) அரிசி
(ஈ) எண்ணெய்
விடை:
(இ) அரிசி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
மாலைக்கண் நோய் ______________ ஏ சத்துக் குறைவினால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின்

Question 2.
மராஸ்மஸ் என்பது _______________ குறைபாட்டு நோய் ஆகும்.
விடை:
புரோட்டீன்

Question 3.
உணவில் ஏற்படும் கெட்ட வாசனைக்குக் காரணம் ______________.
விடை:
உணவு கெட்டுப்போதல்

Question 4.
காற்றில் காணப்படும் ஈரப்பதம் உணவு கெட்டுப்போவதற்கான ஓர் _____________ காரணி ஆகும்.
விடை:
உயிரற்ற

Question 5.
தரம் குறைந்த வாயுக்குழாய்களை உபயோகிப்பது ____________ கசிய முக்கியக் காரணம் ஆகும்.
விடை:
வாயு

III. பொருத்துக.

1. புரதக்குறைபாடு – வைட்டமின் டி
2. ரிக்கட்ஸ் – உடல் செயல்பாடு
3. உடல் பருமன் – தீப்பிடிக்கும் பொருள்கள்
4. மண்ணெண்ணெய் — பழங்கள்
5. உறைதல் – குவாஷியோர்கர்
விடை:
1. புரதக்குறைபாடு – குவாஷியோர்கர்
2. ரிக்கட்ஸ் – வைட்டமின் டி
3. உடல் பருமன் – உடல் செயல்பாடு
4. மண்ணெண்ணெய் – தீப்பிடிக்கும் பொருள்கள்
5. உறைதல் – பழங்கள்

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க வினிகர் அதனுடன் சேர்க்கப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
கதிர்வீச்சு பதனம் உணவுப் பொருள்களின் சுவையைப் பாதிக்கும்.
விடை:
தவறு

Question 3.
வாயுக்கசிவு ஏற்பட்டாலும் நாம் மின் சாதனங்களை உபயோகிக்கலாம்.
விடை:
தவறு

Question 4.
அயோடின் குறைவினால் பெரிபெரி நோய் தோன்றுகிறது.
விடை:
தவறு

Question 5.
வளரும் குழந்தைகளின் உணவில் புரதம் அதிக அளவு தேவை.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன?
விடை:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நம் உணவில் குறைவுபடுவதால் பல வித நோய்கள் தோன்றுகின்றன. இந்நோய்கள் குறைபாட்டு நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
சரிவிகித உணவு என்றால் என்ன?
விடை:
நாம் அன்றாடம் உண்ணும் உணவு திட்ட உணவு எனப்படுகிறது. நமது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் திட்ட உணவு சரியன விகிதத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்த திட்ட உணவே சரிவிகித உணவு என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
உடல் பருமனை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:

  1. துரித உணவு, பொரித்த உணவு வகைகள் மற்றும் அதிகக் கொழுப்புடைய இறைச்சி ஆகியவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
  2. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள் மற்றும் உலர் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  4. எப்பொழுதும் கணினி அல்லது அலைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கக்கூடாது.
  5. போதுமான அளவு தூக்கம் அவசியம்.

Question 4.
சிறிதான தீக்காயத்திற்கு நாம் என்ன செய்யலாம்?
விடை:
சிறிதான நெருப்புக் காயங்கள் ஏற்பட்டால் காயம் பட்ட பகுதியை குளிர்ந்த நீர் வரக்கூடிய குழாயின் கீழ் வைக்க வேண்டும் . முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 1

Question 5.
கெட்டுப் போன உணவு – வரையறு.
விடை:
உணவுகளின் மணம் மற்றும் சுவை போன்ற இயற்கையான . நிலைகளில் மாற்றம் ஏற்படும்போது சுவை கெட்டுப்போன உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 6.
உணவுப் பாதுகாப்பின் நோக்கம் என்ன?
விடை:
கீழ்க்காணும் காரணங்களுக்காக உணவு பாதுகாப்பு அவசியமாகும்.

  1. உணவின் நிறம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு மாறாமல் இருக்க.
  2. உணவுப் பொருள்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க.
  3. பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியினைத் தடுக்க.
  4. உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க.
  5. உணவைப் பாதுகாப்பதன் மூலம் நாம் நமது .. உடல்நலத்தைக் பேணுவதோடு, உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கவும் முடிகிறது.

VI. விரிவாக விடையளி.

Question 1.
உணவுப் பாதுகாப்பு முறைகள் பற்றி எழுதுக.
விடை:
உலர வைத்தல் : இது உணவுப் பொருள்களை சூரிய ஒளியில் உலர வைப்பதன்மூலம், அவற்றிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கும் முறையாகும். எ.கா. தானியங்கள்.

உப்பிடல் : உணவுப் பொருள்களுடன் உப்பு சேர்க்கப்படும்போது, அவற்றிலுள்ள நீர் அகற்றப்படுகிறது. எ.கா. மீன், ஊறுகாய்.

சர்க்கரை சேர்த்தல்: சர்க்கரையை உணவுப் பொருள்களுடன் சேர்க்கும் போது, அது அவற்றிலுள்ள நீரில் கரைந்து அவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. எ.கா. பழக்கூழ், பழரசம்.

உறைதல்: இம்முறையின் மூலம் உணவுப் பொருள்களின்மீது நடைபெறும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் நொதிகளின் செயல்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

கொதிக்க வைத்தல்: உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் கொதிக்க வைத்தல் மூலம் அழிக்கப்படுகின்றன. எ.கா. பால், தண்ணீ ர்

டப்பா மற்றும் புட்டிகளில் அடைத்தல்: இந்த முறையில் காற்றுப்புகாத டப்பா மற்றும் புட்டிகளில் உணவுப் பொருள்கள் அடைத்து வைக்கப்பட்டு, நுண்கிருமிகள் அவற்றைப் பாதிக்காவண்ணம் அவை காக்கப்படுகின்றன. எ.கா. பால்பொடி (Milk powder)

பாதுகாக்கும் வேதிப்பொருள்களைச் சேர்த்தல்: உணவுப் பொருள்களில் ஏற்படும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக சில வேதிப் பொருள்கள் அவற்றுடன் சேர்க்கப்படுகின்றன.

உதாரணமாக, சோடியம் பென்ஸோயெட் பழங்களோடும், சல்பர் டை ஆக்ஸைடு காய்ந்த பழங்களோடும், வினிகர் ஊறுகாயோடும் சேர்க்கப்படுகின்றது.

Question 2.
பல்வேறு உணவு வகைகளை விளக்குக.
விடை:
கீழே உள்ள அட்டவணையில் ஒருசில முக்கிய உணவுப் , பொருள்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 2
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 3

Question 3.
சமையலறை பாதுகாப்பு பற்றி எழுதுக.
விடை:
சமையல் எரிவாயு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. இது கசிய ஆரம்பித்தால் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வாயு உருளைகளைக் கையாளும் போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வாயு உருளையைக் கையாளும் போது நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் கீழே உள்ள அட்டவணையில் – கொடுக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 4
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 5
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 6

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

மின் சாதனங்கள்
மின் சாதனங்களை ஈரமான கைகளால் தொடக்கூடாது. ஏனெனில் இது சில வேளைகளில் மின் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

நெருப்பு

  • எளிதில் தீப்பற்ற க்கூடிய பொருள்களான மண்ணெண்ணெய் போன்றவற்றை எரியும் அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது.
  • ஒருவேளை ஒருவர் மீது தீப்பற்றிக்கொண்டால் அவர் மேல் கம்பளி அல்லது தடிமனான தரைவிரிப்பால் மூடவேண்டும்.
  • மண்ணெண்ணெய் அல்லது பிற எண்ணெய் மூலம் தீப்பிடித்தால் தீயை அணைக்க மணலைப் பயன்படுத்த வேண்டும்.
  • திடப் பொருள்களான மரம் போன்றவை தீப்பிடித்தால், தீயை அணைக்க நீரைப் பயன்படுத்த வேண்டும்.
  • மின் சாதனங்கள் தீப்பிடித்தால் அனைத்து மின் – சாதனங்களின் இணைப்பையும் அகற்றி, மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். – சரியான தீ அணைப்பானைப் பயன்படுத்தி தீயை அணைக்க – வேண்டும்.

5th Science Guide உணவு InText Questions and Answers

பக்கம் 60 செயல்பாடு 1

கீழ்க்காணும் உணவுப் பொருள்களை கெட்டுப்போகக் கூடியவை மற்றும் கெட்டுப்போகாதவை என வகைப்படுத்தவும்.

உப்பு, சர்க்கரை, ஆப்பிள், சோளம், ஆரஞ்சு, கோதுமை, பருப்பு வகைகள், தக்காளி, பப்பாளி, அரிசி, வெள்ளரிக்காய்.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 7

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

5th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஒளி ____________ அடைவதால், வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
அ) எதிரொளிப்பு
ஆ) ஒளிவிலகல்
இ) சிதறல்
ஈ) கலப்பு
விடை:
இ) சிதறல்

Question 2.
ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுபவர் யார்?
அ) சர். C.V. இராமன்
ஆ) முனைவர் A.P.J. அப்துல்கலாம்
இ) முனைவர் M.S. சுவாமிநாதன்
ஈ) இராமனுஜன்
விடை:
ஆ) முனைவர் A.P.J. அப்துல்கலாம்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
மீளக்கூடிய மாற்றத்திற்கான உதாரணம்
அ) பனிக்கட்டி உருகுதல்
ஆ) பலூன் வெடித்தல்
இ) காகிதத்தை எரித்தல்
ஈ) பால் தயிராதல்
விடை:
அ) பனிக்கட்டி உருகுதல்

Question 4.
வேதிவினைகள் எதற்கான உதாரணம்?
அ) மீளக்கூடிய மாற்றம்
ஆ) மீளா மாற்றம்
இ) இரண்டும்
ஈ) இரண்டுமல்ல
விடை:
ஆ) மீளா மாற்றம்

Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது உயிர்க்கழிவு அல்ல?
அ) மலர்கள்
ஆ) காய்கறிகள்
இ) பழங்கள்
ஈ) மின்கலங்கள்
விடை:
ஈ) மின்கலங்கள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தை எழுதியவர் ______________.
விடை:
முனைவர் A.P.J.அப்துல் கலாம்

Question 2.
நீட்சிப்பட்டை மீண்டும் தனது பழைய நிலைக்கே திரும்புகிறது. இது _____________ க்கான உதாரணம் ஆகும்.
விடை:
மீளக்கூடிய மாற்றத்திற்

Question 3.
பெரும்பாலான இயற்பியல் மாற்றங்கள் _____________ மாற்றங்கள் ஆகும்.
விடை:
மீளக் கூடிய

Question 4.
செய்தித் தாள் _____________ கழிவு ஆகும்.
விடை:
மறுசுழற்சிக்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 5.
வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெளியேற்றப்படும் கழிவுகள் _____________ கழிவுகள் எனப்படும்.
விடை:
வீட்டுக்

III. பொருத்துக.

1. மொட்டு மலராதல் – முனைவர் A.P.J.அப்துல்கலாம்
2. மீளக்கூடிய மாற்றம் – மறுசுழற்சிக் கழிவு
3. இலக்கு 2020 – உயிரிக் கழிவு
4. காகிதம் – பனிக்கட்டி உருகுதல்
5. காய்கறிகள் – மீளா மாற்றம்
விடை:
1. மொட்டு மலராதல் – மீளா மாற்றம்
2. மீளக்கூடிய மாற்றம் – பனிக்கட்டி உருகுதல்
3. இலக்கு 2020 – முனைவர் A.P.J.அப்துல்கலாம்
4. காகிதம் – மறுசுழற்சிக் கழிவு
5. காய்கறிகள் – உயிரிக் கழிவு

IV. தனித்த ஒன்றை வட்டமிடுக.

Question 1.
அ) உருகுதல்
ஆ) உறைதல்
இ) கொதித்தல்
ஈ) சமைத்தல்
விடை:
ஈ) சமைத்தல்

Question 2.
அ) கொதித்தல்
இ) சமைத்தல்
ஆ) எரிதல்
ஈ) துருப்பிடித்தல்
விடை:
அ) கொதித்தல்

Question 3.
அ) காய்கறிகள்
ஆ) மலர்கள்
இ) பழங்கள்
ஈ) வேதிப்பொருள்கள்
விடை:
ஈ) வேதிப்பொருள்கள்

Question 4.
அ) காகிதம்
இ) உலோகம்
ஆ) கண்ணாடி
ஈ) வண்ண ங்கள்
விடை:
ஈ) வண்ண ங்கள்

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
வானம் நீல நிறமாகத் தோன்றுவது ஏன்?
விடை:
நாம் காணக்கூடிய ஒளி நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு (VIBGYOR) போன்ற பல்வேறு வண்ணங்களால் ஆனது. இந்த நிறங்களுள், ஊதா நிற மே அதிகளவு சி த ற லடை கிறது . இக்காரணத்தினால்தான் அநேக நேரங்களில் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

Question 2.
மீளக்கூடிய மாற்றம் என்றால் என்ன?
விடை:
மறுதலையாக நிகழக்கூடிய மாற்றங்கள் மீளக்கூடிய மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா: தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதும், பனிக்கட்டி நீராக உருகுவதும் மீளக்கூடிய மாற்றம் ஆகும்.

Question 3.
மீளக்கூடிய மற்றும் மீளா மாற்றத்தை வேறுபடுத்துக.
விடை:
மறுதலையாக நிகழக்கூடிய மாற்றங்கள் மீளக்கூடிய மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. நீரைப் பனிக்கட்டியாகவும், பனிக்கட்டியை நீராகவும் மாற்றிவிடலாம். இது மீளக்கூடிய மாற்றமாகும். சிலவகை மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது. இது மீளாமாற்றம் ஆகும். ஒரு காகிதத் துண்டை எரிக்கும் போது, அது சாம்பலாக மாறிவிடுகிறது. அது மீண்டும் காகிதமாக’ மாற முடியாது. இது ஒரு மீளா மாற்றமாகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 4.
கழிவுகளின் வகைகள் யாவை?
விடை:
ஒரு முறை பயன்படுத்திய பிறகு கைவிடப்படக் கூடிய பொருள்களே கழிவுப் பொருள்கள் எனப்படும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 1

Question 5.
மின்ன ணுக் கழிவுகள் பற்றி எழுதுக.
விடை:
கணினிப் பாகங்கள், மின்னணு சாதனங்கள், அலைபேசி பாகங்கள், CFL பல்புகள்.

Question 6.
தமிழ்நாட்டு அறிவியலாளர்களைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 2

VI. விரிவாக விடையளி.

Question 1.
பல்வேறு வகையான வீட்டுக் கழிவுகளைப் பற்றி எழுதுக.
விடை:
வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் வீட்டுக்கழிவுகள் எனப்படும். வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுள் குப்பை மற்றும் கூளங்கள் (பாட்டில்கள், குவளைகள், துணிகள், மக்கிய பொருள்கள், கழிக்கப்பட்ட பொருள்கள், பொட்டலங்கள், செய்தித் தாள்கள், பத்திரிக்கைகள் மற்றும் கட்டப்பட்ட பொருள்கள்) ஆகியவை அடங்கும். வீட்டுக்கழிவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

உயிரியல் கழிவுகள் : சமையலறைக் கழிவுகள், காய்கறிகள், மலர்கள், இலைகள், பழங்கள்,

நச்சுச்கழிவுகள் : பழையமருந்துகள், வண்ணங்கள், வேதிப்பொருள்கள், பல்புகள், தெளிக்கும் குவளைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிக் கலன்கள், மின்கலன்கள், காலணிகளுக்கான பாலிஷ்கள்.

மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் : காகிதம், கண்ணாடி, உலோகங்கள், நெகிழிகள்.

திண்மக் கழிவுகள் : இரத்தக்கறை மற்றும் பிற உடல் திரவங்கள் படிந்த துணிகள்.

மின்னணுக் கழிவுகள் : கணினிப் பாகங்கள், மின்னணு சாதனங்கள், அலைபேசி பாகங்கள், CFL பல்புகள்)

Question 2.
வீட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கான தேவையை விளக்குக.
விடை:
மாசுபாட்டைத் தடுக்க : நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் நில மாசுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். இயற்கை

வளங்களைப் பாதுகாக்க : காடுகள், கனிமங்கள் மற்றும் நீர் ஆகிய சுற்றுப்புற ஆதாரங்களைப் பாதுகாக்க முறையான கழிவு நீக்கம் அவசியமாகும்.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் : தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

பிற தேவைகளுக்காக மறுசுழற்சி செய்தல் : கழிவுகளை மறுசுழற்சி செய்து, நமக்குத் தேவையான பிற பொருள்களைப் பெற முடியும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
உனது பள்ளி வளாகத்தில் காணப்படும் கழிவுகளை நீ எவ்வாறு அகற்றுவாய்?
விடை:

  1. ஒவ்வொரு வகுப்பறையிலும் குப்பைக் கூடை வைக்கப்பட வேண்டும்.
  2. வகுப்பு மாணவர்களை அணிகளாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அணி வகுப்பறைச் சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
  3. குப்பைகள் மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய குப்பைத் தொட்டிகளில் இடப்படவேண்டும். .
  4. பள்ளித் தோட்டத்தின் மூலையில் கம்போஸ்ட் குழி அமைத்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றலாம்.
  5. மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி குப்பைகளைக் குப்பைக் கூடைகளில் மட்டுமே போடும்படி கண்காணிக்க வேண்டும்.

5th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் InText Questions and Answers

பக்கம் 134 செயல்பாடு 3 :

கீழ்க்காணும் பொதுவான மாற்றங்களுள் எவை மீளக் கூடியவை என்று நீ நினைக்கிறாய்?
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 3
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 4

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 3 ஆற்றல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 3 ஆற்றல்

5th Science Guide ஆற்றல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
டீசல் எரியும்போது வேதி ஆற்றல் ________________ ஆற்றலாக மாற்றப்படுகிறது.
அ) காற்று ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) சூரிய ஆற்றல்
ஈ) ஒலி ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
ஓடும் நீர் ________________ ஆற்றலைப் பெற்றுள்ளது.
அ) நிலை
ஆ) வேதி
இ) இயக்க
ஈ) ஒலி
விடை:
இ) இயக்க

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 3.
ஆற்றலின் அலகு
அ) கிலோகிராம்
ஆ) நியூட்டன்
இ) கெல்வின்
ஈ) ஜுல்
விடை:
ஈ) ஜுல்

Question 4.
கீழ்க்கண்டவற்றுள் எதற்கு காற்றாற்றல் தேவை?
அ) மிதிவண்டி
ஆ) ஒளிச்சேர்க்கை
இ) பாராசூட்
ஈ) வாகனங்கள் 250
விடை:
இ) பாராசூட்

Question 5.
மாட்டுச் சாணத்தில் _____________ ஆற்றல் உள்ளது.
அ) இயக்க
ஆ) வேதி
இ) சூரிய
ஈ) வெப்ப
விடை:
ஈ) வெப்ப

II. கீழ்க்கண்டவற்றுள் நடைபெறும் ஆற்றல் மாற்றங்களைக் கண்டுபிடி.

Question 1.
சலவைப்பெட்டி : வேதி ஆற்றல் → வெப்ப ஆற்றல்

Question 2.
மின்சலவைப்பெட்டி: _____________ → _________
விடை:
மின் ஆற்றல், வெப்ப ஆற்றல்

Question 3.
மின் காற்றாடி : _____________ → __________
விடை:
மின் ஆற்றல், இயந்திர ஆற்றல்

Question 4.
ஒலி பெருக்கி : ______________ → _________
விடை:
மின் ஆற்றல், ஒலி ஆற்றல்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 5.
மின்னியற்றி : ______________ → _________
விடை:
வெப்ப ஆற்றல், மின் ஆற்றல்

III. கீழ்க்கண்டவை பெற்றுள்ள ஆற்றலைக் கண்டுபிடி.

1. மலை உச்சியின் மீது உள்ள கல்
2. உருண்டோடும் பந்து
3. கரி
4. நீர் வீழ்ச்சி
5. மின்கலம்
விடை:
1. மலை உச்சியின் மீது உள்ள கல் – நிலை ஆற்றல்
2. உருண்டோடும் பந்து – இயக்க ஆற்றல்
3. கரி – நிலை ஆற்றல்
4. நீர் வீழ்ச்சி – இயக்க ஆற்றல்
5. மின்கலம் – மின் ஆற்றல்

IV. பொருத்துக.

1. மின்சார மணி – வெப்ப ஆற்றல்
2. நீர்த்தேக்கத்திலுள்ள நீர் – ஒளி ஆற்றல்
3. சூரிய ஆற்றல் – மின்னாற்றல் .
4. காற்றாலை – நிலையாற்றல்
5. டார்ச் விளக்கு – ஒலி ஆற்றல்
விடை:
1. மின்சார மணி – ஒலி ஆற்றல்
2. நீர்த்தேக்கத்திலுள்ள நீர் – நிலையாற்றல்
3. சூரிய ஆற்றல் – வெப்ப ஆற்றல் .
4. காற்றாலை – மின்னாற்றல்
5. டார்ச் விளக்கு – ஒளி ஆற்றல்

V. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
மரத்திலிருந்து விழும் ஆப்பிள், இயக்க ஆற்றலுக்கான எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
சரி

Question 2.
மின்சார தொடர் வண்டிகளை இயக்க மின்னாற்றல் பயன்படுகிறது.
விடை:
சரி

Question 3.
உராய்வின் மூலம் வெப்ப ஆற்றலை உண்டாக்க – முடியாது.
விடை:
தவறு
உராய்வின் மூலம் வெப்ப ஆற்றலை உண்டாக்க முடியும்.

Question 4.
நிலை ஆற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் இரண்டும் இயந்திர ஆற்றலின் இரு வகைகளாகும்.
விடை:
தவறு
நிலை ஆற்றல் மற்றும் இயக்க ஆற்றல் இரண்டும் – இயந்திர ஆற்றலின் இரு வகைகளாகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 5.
ஆற்றலின் அலகு ஜுல்.
விடை:
சரி

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
ஆற்றல் என்றால் என்ன?
விடை:
அறிவியலில், வேலை செய்யத் தேவையான திறனே ஆற்றல் எனப்படுகிறது.

Question 2.
ஆற்றலின் பல்வேறு வகைகள் யாவை?
விடை:
இயந்திர ஆற்றல், வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காற்று ஆற்றல் ஆகியவை ஆற்றலின் பலவகைகள் ஆகும்.

Question 3.
இயந்திர ஆற்றலின் பயன்கள் யாவை?
விடை:

  1. நீர் மின் நிலையங்களில், நீரின் இயக்க ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  2. காற்றாலைகள், காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன.
  3. சுத்தியின் இயக்க ஆற்றலைக் கொண்டு ஆணியை சுவற்றில் அடிக்க முடியும்.
  4. இயக்க ஆற்றலைக் கொண்டு ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்கத்திற்கோ அல்லது இயக்கத்திலுள்ள பொருளை ஓய்வு நிலைக்கோ கொண்டுவர முடியும்.

Question 4.
ஆற்றல் மாறா விதியைக் கூறு.
விடை:
ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றல் வேறொரு வகை ஆற்றலாக மாறுகிறது. இதுவே ஆற்றல் அழிவின்மை விதி. இதனைக் கூறியவர் ஜூலியஸ் ராபெர்ட் மேயர்.

Question 5.
ஒளியாற்றலின் பயன்கள் யாவை?
விடை:

  1. ஒளி ஆற்றலின் உதவியால், நம்மால் பொருள்களைக் காண முடிகிறது.
  2. தாவரங்கள் ஒளியாற்றலைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.
  3. ஒளி ஆற்றலின் உதவியால், நமது தோல் வைட்டமின் – D ஐ உற்பத்தி செய்கிறது.
  4. ஒளி ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

VII. விரிவாக விடையளி.

Question 1.
இயந்திர ஆற்றலின் வகைகளை விளக்குக.
விடை:
ஒரு பொருள் தனது நிலையைப் பொறுத்து பெற்றிருக்கும் – ஆற்றல் இயந்திர ஆற்றல் எனப்படும். இயந்திர ஆற்றலை இரண்டாக வகைப்படுத்தலாம்.
→ இயக்க ஆற்றல்
→ நிலை ஆற்றல்

இயக்க ஆற்றல் : நகரும் பொருள் ஒன்று பெற்றிருக்கும் ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும். இது நகர்வு ஆற்றல் எனவும் வழங்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 1

உதாரணம் : நகரும் வாகனம், கிரிக்கெட் விளையாட்டில் வீசப்படும் பந்து, துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டு .
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 2

நிலை ஆற்றல் : ஓய்வு நிலையிலிருக்கும் பொருள் ஒன்று பெற்றிருக்கும் ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும். இது தேக்கி வைக்கப்பட்ட ஆற்றல் எனவும் வழங்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 3

உதாரணம் : தரை மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட பொருள், இழுக்கப்பட்ட ரப்பரில் வைக்கப்பட்ட கல் , அணையிலுள்ள நீர்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 4

Question 2.
ஆற்றல் அழிவின்மையை விளக்குக.
விடை:
ஆற்றலை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. – இது ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு மாற்றப்படுகிறது. அல்லது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு கடத்தப்படுகின்றது. ஆற்றல் அழிவின்மைக்கு நமது அன்றாட வாழ்வில் பல உதாரணங்களைக் கூறமுடியும்.

1. நீர்த்தேக்கம் : நீர்த்தேக்கங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீர் நிலையாற்றலைப் பெற்றுள்ளது. நீர் கீழே விழும்போது, நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது. நீரின் இயக்க ஆற்றல் சக்கரங்களைச் சுழலச் செய்வதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2. மின்சார சாதனங்கள் : மின் அடுப்பு, மின் சலவைப்பெட்டி மற்றும் காற்றாடிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னாற்றல் பயன்படுகிறது. ) அச்சாதனங்களிலுள்ள கம்பிகளில் மின்சாரம் பாய்கிறது. அவ்வாறு மின்சாரம் பாயும்பொழுது அந்தக் கம்பி ) வெப்பமடைகின்றது. இந்த வெப்பத்தின் மூலம் பல்வேறு உபயோகமான வேலைகளைச் செய்ய முடியும். இவ்வாறு, மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

3. வாகனங்களை ஓட்டுதல் : வாகனங்களை இயக்குவதற்கு பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துகிறோம். எஞ்சின்களில் இந்த எரிபொருள்கள் எரியும்போது வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது. எரியும் பொருள்கள் மூலம் உருவாகும் வெப்பக்காற்று எஞ்சினிலுள்ள பிஸ்டனை நகர்த்தி வாகனத்தை நகர்த்துகின்றது. இவ்வாறு, வெப்ப ஆற்றல், இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 5
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 6

5th Science Guide ஆற்றல் InText Questions and Answers

பக்கம் 122 செயல்பாடு 1:

பின்வரும் செயல்களுக்கு என்ன தேவை எனக் கண்டுபிடி.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 7
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 8