Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

5th Social Science Guide உலகில் உள்ள கண்டங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
உலகில் ______________ கண்டங்கள் உள்ளன.
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) ஒன்பது
விடை:
ஆ) ஏழு

Question 2.
மிகப்பெரிய கண்டம் ______________
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) வட அமெரிக்கா
விடை:
ஆ) ஆசியா

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
உலகின் நீளமான நதி ______________
அ) காவிரி
ஆ) கங்கை
இ) நைல்
விடை:
இ) நைல்

Question 4.
சுப்பீரியர் ஏரி (Lake Superior) அமைந்துள்ள இடம் _____________
அ) வட அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) ஐரோப்பா
விடை:
அ) வட அமெரிக்கா

Question 5.
பென்குவின்கள் காணப்படும் இடம் ______________
அ) ஆசியா
ஆ) அண்டார்டிகா
இ) ஆப்பிரிக்கா
விடை:
ஆ) அண்டார்டிகா

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 2

III. சரியா | தவறா எழுதுக.

Question 1.
ஆசியா உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும்.
விடை:
தவறு

Question 2.
உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
இந்தியாவில் உள்ளது. 3. பிரேசில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்று.
விடை:
சரி

Question 4.
பெருந் தடுப்புப் பவளப்பாறை இந்தியாவில் உள்ளது.
விடை:
தவறு

Question 5.
அண்டார்டிகாவில் அரைவருடம் சூரிய ஒளி காணப்படும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
கண்டங்களின் பெயர்களை எழுதவும்.

  1. ஆசியா
  2. ஆப்பிரிக்கா
  3. வட அமெரிக்கா
  4. தென் அமெரிக்கா
  5. அண்டார்டிகா
  6. ஐரோப்பா
  7. ஆஸ்திரேலியா

Question 2.
தாஜ்மஹால் எங்கு அமைந்துள்ளது?
விடை:
தாஜ்மஹால் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

Question 3.
வட அமெரிக்காவின் சிறப்பு அம்சங்களைப் பற்றி எழுதுக.
விடை:
வட அமெரிக்கா முழுவதும் வட கோளத்தில் உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து வட அமெரிக்கா மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரி இக்கண்டத்தில்தான் உள்ளது. மிசிசிப்பி – மிசௌரி நதி வட அமெரிக்காவில் நீளமான நதிகளுள் ஒன்று. அமெரிக்க ஐக்கிய நாடுகள் வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 4.
பெருந்தடுப்புப் பவளப்பாறை எங்கு அமைந்துள்ளது?
விடை:
பெருந்தடுப்புப் பவளப்பாறைத் திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. இது ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம்.

Question 5.
எக்கண்டம் உறை பனிக் கண்டம் என்று
விடை:
அழைக்கப்படுகிறது? அண்டார்டிகா, பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் ஆகும். இக்கண்டம் வெள்ளைக்கண்டம் அல்லது உறைந்த கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

V. விரிவாக விடையளிக்க.

Question 1.
ஏதேனும் இரு கண்டங்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
ஆசியா : உலகத்திலுள்ள கண்டங்களுள் ஆசியாதான் மிகப்பெரிய நிலப்பரப்பினையும், மிகுந்த மக்கள் தொகையினையும் கொண்டுள்ள கண்டமாகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஆசியாவில்தான் உள்ளன. பூமியின் மிக உயர்ந்த இடமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஆசியாவில்தான் உள்ளது. பண்டைய நாகரிகங்களான சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா – நாகரிகம் போன்றவை ஆசியாவில் தான் தோன்றியுள்ளன.

ஐரோப்பா : ஐரோப்பாவும், ஆசியாவும் பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாக உள்ளன. யூரல் மலைத்தொடர்களும், காஸ்பியன் கடலும் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைப் பிரிக்கின்றன. உலகின் மிகச் சிறிய நகரமான வாடிகன் நகரம் ஐரோப்பாவில்தான் உள்ளது. வோல்கா நதி ஐரோப்பாவின் மிக நீளமான நதிகளுள் ஒன்று ஆகும்.

Question 2.
இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் பற்றி எழுதுக.
விடை:
இந்தியாவில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. தாஜ்மஹால் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹால் வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அழகான நினைவுச் சின்னமானது உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மேலும் சில வரலாற்று நினைவுச் சின்னங்களாவன, புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயில், மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில், போபால் அருகே உள்ள சாஞ்சி ஸ்தூபி, தமிழ்நாட்டில் உள்ள புனித ஜார்ஜ்கோட்டை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
ஆஸ்திரேலியாவைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
ஆஸ்திரேலியா, ஒரு தீவுக் கண்டமாகும். இது தனித்துவம் பெற்ற இயற்கைக் காட்சிகளும் இயற்கை அதிசயங்களும் கொண்ட கண்டமாகும். பெருந் தடுப்புப் பவளப்பாறைத்திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம். ஆஸ்திரேலிய டாஸ்மேனியா மற்றும் பல தீவுகளை உள்ளடக்கியது.

5th Social Science Guide உலகில் உள்ள கண்டங்கள் InText Questions and Answers

பக்கம் 132 செயல்பாடு

நாட்டின் பெயர் மற்றும் அது எக்கண்டத்தில் இடம் பெற்றுள்ளது என்பதனைக் கீழுள்ள அட்டவணையில் எழுதுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 4

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 2 Chapter 2 நீர்க் கோளம் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 2 Chapter 2 நீர்க் கோளம்

5th Social Science Guide நீர்க் கோளம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
நீர்க்கோளம் என்பது, பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த _____________ அளவைக் குறிக்கும்.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) தாவரங்கள்
விடை:
ஆ) நீர்

Question 2.
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
அ) கங்கை
ஆ) அட்லாண்டிக்
இ) ஆர்டிக்
ஈ) பசிபிக்
விடை:
அ) கங்கை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 3.
நீர்ப்பரப்பின் அனைத்துப் பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டிருந்தால் ____________ என அழைக்கப்படுகிறது.
அ) ஆறு
ஆ) வளைகுடா
இ) ஏரி
ஈ) விரிகுடா
விடை:
ஆ) வளைகுடா

Question 4.
ஆவியாதல் என்பது, நீர்சுழற்சியின் ______________ படிநிலை.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
விடை:
அ) முதல்

Question 5.
ஒரு நீர்ப்பரப்பின் ஒரு பகுதியை நிலம் சூழ்ந்திருந்து, மற்றப் பகுதிகள் கடலை நோக்கி இருந்தால் _____________ எனப்படும்.
அ) கடல்
ஆ) நீர்ச்சந்தி
இ) விரிகுடா
ஈ) குளம்
விடை:
இ) விரிகுடா

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம் 2

III. சரியா | தவறா எழுதுக.

Question 1.
பூமியில் 97% நீர் உப்பாக உள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 2.
நமது அன்றாடத் தேவைகளுக்கு நீர் தேவை இல்லை.
விடை:
தவறு

Question 3.
கடல்நீர் இனிப்பாக இருக்கும்.
விடை:
தவறு

Question 4.
நாம் பாத்திரங்களைக் கழுவி முடிக்கும் வரையில் குழாயைத் திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
விடை:
தவறு

Question 5.
நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
நீர்க்கோளம் வரையறு.
விடை:
நீர்க்கோளம் என்பது, நமது புவிக்கோளில் அடங்கியுள்ள முழு நீர்ப்பரப்பினையும் குறிக்கும். மேற்பரப்பில் உள்ள நீர், நிலத்தடி நீர் மற்றும் காற்றில் கலந்துள்ள நீர் ஆகிய அனைத்தும் நீர்க்கோளத்தில் அடங்கும்.

Question 2.
நீர்க்கோளம் முக்கியமானது. ஏன்?
விடை:
நமது அன்றாட வாழ்வில் நீரின் தேவை மிகுதியாக உள்ளது. பருக, குளிக்க, சமைக்க போன்ற பல அன்றாட நடவடிக்கைகளுக்கு நீர் தேவைப்படுகிறது. விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர்வாழ நீர் தேவை. நீர் இல்லாவிடில், நீர் ஆவியாகி மேகங்களாக உருவாக முடியாது. அதனால் மழை இருக்காது. எனவே நீர்க்கோளம் பூமியில் ) உயிரினங்கள் உயிர்வாழ மிக முக்கியமானதாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 3.
பல்வேறு வகையான நீர்ப்பரப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை:
ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீரோடைகள், கடல்கள், பெருங்கடல்கள் ஆகியவை பல்வேறு வகையான நீர்ப்பரப்புகள் ஆகும்.

V. விரிவாக விடையளி.

Question 1.
நீர் சுழற்சியின் படிநிலைகள் யாவை?
விடை:
முதல் நிலை : ஆவியாதல் (Evaporation)
சூரிய ஒளி, நீர்ப்பரப்புகளான பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள் போன்றவற்றின் மேல் விழுவதால், நீர் மெதுவாக ஆவியாகிக் காற்றில் கலக்கிறது.

இரண்டாம் நிலை : ஆவி சுருங்குதல் (Condensation)
நீர் ஆவியாகி மேலே செல்லும்பொழுது குளிரான வெப்பநிலை, அவற்றை குளிர்வித்து மீண்டும் நீர்மமாக மாற்றுகிறது. இதுவே ஆவிசுருங்குதல் எனப்படுகிறது. காற்றானது இந்த நீர்மத்தைச் சுழற்றுவதால் மேகங்கள் உருவாகின்றன

மூன்றாம் நிலை : மழைப்பொழிவு (Precipitation)
காற்றின் இயக்கத்தால் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. அவை மழைபொழியும் மேகங்களாக மாறி மழையாக மீண்டும் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. இந்தச் செயல்முறை, மழைப்பொழிவு என்று கூறப்படுகிறது. இம் மழைப்பொழிவானது தட்ப வெப்ப நிலையைப் பொருத்து மழையாகவோ, ஆலங்கட்டி மழையாகவோ, பனிப்பொழிவாகவோ, பனித்துளியாகவோ இருக்கக்கூடும்.

நான்காம் நிலை : வழிந்தோடுதல் மற்றும் உறிஞ்சப்படுதல் (Runoff and infiltration)
நீரானது பெருங்கடல்கள், ஆறுகள் அல்லது நிலமேற்பரப்பில் வழிந்தோடுகிறது அல்லது மண்ணால் உறிஞ்சப்படுகிறது. இச் சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 2.
நீரைச் சேகரிக்க உதவும் வழிமுறைகளுள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  1. நாம் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
  2. நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
  3. சாக்கடை, கழிவுகளை நீரில் கலப்பதால் நீர் மாசடைந்து போய்விடுகிறது. நம்மால் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
  4. தூவாலைகளில் குளிப்பதை விட வாளியில் தண்ணீர் எடுத்துக் குளிப்பது சிறந்தது.
  5. தண்ணீர்க் குழாய்களைத் தேவையின்றி திறந்து வைத்து நீரை வீணாக்கக் கூடாது.
  6. குழாய்களில் நீர் கசியாமல், சொட்டிக் கொண்டிராமல் பாதுகாக்க வேண்டும்.
  7. பல் துலக்கும் போதும், துவைக்கும் போதும் தண்ணீ ரை வீணாக ஓடவிடக்கூடாது.
  8. மழை நீர் சேகரிப்பை ஒவ்வொரு வீட்டிலும் மேற்கொள்ள வேண்டும்.
  9. தோட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்து மழை பெய்யும் போது நீரை சேமித்து வைக்கலாம்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

5th Social Science Guide பண்டைய அகழ்வாராய்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
அகழ்வாராய்ச்சியின் மூலம் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய வரலாற்றினைப் படிப்பவர்கள் ______________
அ) தொல்பொருள் ஆய்வாளர்
ஆ) அறிவியலாளர்
இ) அகழ்வாராய்ச்சியாளர்
விடை:
அ) தொல்பொருள் ஆய்வாளர்

Question 2.
எகிப்தில் உள்ள சிறிய பிரமிடுகள் _____________ க்காக உருவாக்கப்பட்டன.
அ) இளவரசர்
ஆ) அரசர்
இ) அரசி
விடை:
இ) அரசி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 3.
சிந்துவெளி நாகரிகம் ______________ நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) எகிப்து
ஆ) ஹரப்பா
இ) அமெரிக்கா
விடை:
ஆ) ஹரப்பா

Question 4.
ஆதிச்சநல்லூர் ______________ இல் உள்ளது.
அ) தூத்துக்குடி
ஆ) சென்னை
இ) புதுச்சேரி
விடை:
அ) தூத்துக்குடி

Question 5.
கீழடி _____________ காலம் என்பதனைத் தெரிவிக்கிறது.
அ) நவீன
ஆ) சங்க
இ) இடைக்
விடை:
ஆ) சங்க

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி 2

III. சரியா தவறா?

Question 1.
அகழ்வாராய்ச்சியின் போது தொல்கைவினைப் பொருள்கள் கண்டறியப்பட்டன.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 2.
சிந்துவெளி நாகரிகம் ஹரப்பாவில் உள்ளது.
விடை:
சரி

Question 3.
ஆதிச்சநல்லூர் என்ற தொல்பொருள் ஆய்வு இடம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ளது.
விடை:
தவறு

Question 4.
கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி, கீழடி ஒரு வளர்ச்சியடைந்த நகரம் என்பதனைத் தெரிவிக்கிறது.
விடை:
சரி

Question 5.
ரோமன் விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், நவரத்தினக்கற்கள் போன்றவை அரிக்கமேடு என்ற இடத்தில் கண்டறியப்பட்டன.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
அகழ்வாராய்ச்சி என்றால் என்ன?
விடை:
அகழ்வாராய்ச்சி என்பது பூமியின் மேற்பரப்பின்கீழ் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்வதாகும். இந்த ஆய்வு, வரையறைக்குட்பட்டு நிகழ்த்தப்படுகிறது.

Question 2.
தொல்பொருள் ஆய்வாளர் என்பவர் யார்?
விடை:
மனிதர்கள் மற்றும் இடங்களின் வரலாற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆய்வு செய்பவர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் தொல்கைவினைப் பொருள்களையும் பகுப்பாய்வு செய்வார்கள்.

Question 3.
பிரமிடுகள் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
விடை:
பிரமிடுகள் என்பன எகிப்தில் உள்ள அரச குடும்பத்தினரின் கல்லறைகள் ஆகும். பிரமிடுகள் பற்றி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்ட மிகப் பெரிய கல்லறைகள் அரச குடும்பத்திற்காக கட்டப்பட்டன என்பதனைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். பிரமிடுகளிலிருந்து கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள், மக்களின் சராசரி உயரம் மற்றும் வயது பற்றிய தகவல்களைக் கொடுத்தன.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 4.
ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்ட தொல்கைவினைப் பொருள்கள் யாவை?
விடை:
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.

Question 5.
கீழடி எங்கு அமைந்துள்ளது?
விடை:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தாலுகாவில் கீழடி அமைந்துள்ளது.

V. விரிவான விடையளிக்க.

Question 1.
சிந்துவெளி நாகரிகம் பற்றி விவரி.
விடை:
சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் இதுவாகும். அங்கு சுட் செங்கற்கள் நிலத்தடியில் காணப்பட்டன. நகரமானது நன்கு திட்டமிட்டும், சரியான வடிகால் அமைப்புகளுடனும், கிணறுகளுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மூடிய வடிகால்களுக்கு கழிவு நீரை அனுப்பும் வழி இருந்தது. மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பெரிய குளம் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் இருந்தன. நகரமும் அதன் நாகரிகமும் அவர்களின் காலத்தை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தன என்பது கண்டறியப்பட்டது.

Question 2.
கீழடி பற்றி விவரி.
விடை:
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை திருபுவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்ககாலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன.

மேலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல்படிகம், முத்துகள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருள்கள் , சங்குவளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்காலத் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. இவை இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வாணிகத்தொடர்பை உறுதி செய்கின்றன.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 3.
அரிக்கமேடு பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
அரிக்கமேடு, புதுச்சேரி அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். கடற்கரை கிராமமாக இருந்த அரிக்கமேடு, ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதனை அகழ்வாராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.

அங்கு ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள், விலை உயர்ந்த கற்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மதுக்குடுவைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆய்வாளர் கண்டறிந்தார். அவர், மேலும் அக்கிராமத்திலுள்ள மீனவர்களுக்கு அந்தத் தொல்கைவினைப் பொருள்கள் யாவும் புதியனாக இருந்தன என்பதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 10 வேதிவினைகளின் வகைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

10th Science Guide வேதிவினைகளின் வகைகள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
H2 + Cl2(g) → 2HCl(g) என்ப து
அ) சிதைவுறுதல் வினை
ஆ) சேர்க்கை வினை
இ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
ஈ) இரட்டை இடப்பெயர்ச்சி வினை
விடை:
இ) சேர்க்கை வினை

Question 2.
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
அ) வெப்பம்
ஆ) மின்னாற்றல்
இ) ஒளி
ஈ) எந்திர ஆற்றல்
விடை:
இ) ஒளி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 3.
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(5) + O2(g) → CO2(g).
இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது?
(i) சேர்க்கை வினை
(ii) எரிதல் வினை
(iii) சிதைவுறுதல் வினை
(iv) மீளா வினை
அ) (i) மற்றும் (ii)
ஆ) (i) மற்றும் (iv)
இ) (i), (ii) மற்றும் (iii)
ஈ) (i), (ii) மற்றும் (iv)
விடை:
ஈ) (i), (ii) மற்றும் (iv)

Question 4.
Na2SO4(aq) + BaCl2(aq) – BaSO4(s) ↓+ 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?
அ) நடுநிலையாக்கல் வினை
ஆ) எரிதல் வினை
இ) வீழ்படிவாதல் வினை
ஈ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
விடை:
இ) வீழ்படிவாதல் வினை

Question 5.
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இயக்கத்தன்மை உடையது.
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.
அ) (i), (ii) மற்றும் (iii)
ஆ) (i), (ii), மற்றும் (iv)
இ) (ii), (iii) மற்றும் (iv)
ஈ) (i), (iii) மற்றும் (iv)
விடை:
அ) (i), (ii) மற்றும் (iii)

Question 6.
X5 + 2HCl(aq) → Cl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது?
(i) Zn
(ii) Ag
(iii) Cu
(iv) Mg
சரியான இணையைத் தேர்ந்தெடு.
அ) (i) மற்றும் (ii)
ஆ) (ii) மற்றும் (iii)
இ) (iii) மற்றும் (iv)
ஈ) (i) மற்றும் (iv)
விடை:
ஈ) (i) மற்றும் (iv)

Question 7.
பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்” வகை அல்ல? [PTA-3]
அ) C(s) + O2(g) → CO2(g)
ஆ) 2K(s) + Br2(l) → 2KBr(s)
இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)
ஈ) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)
விடை:
இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 8.
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது?
அ) A(s) + B(s) → C(s) + D(s)
ஆ) A(s) + B(s) → C(s) + D(aq)
இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)
ஈ) A(aq) + B(s) → C(aq) + D(l)
விடை:
இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)

Question 9.
ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில் அதன் (OH) ஹைட்ராக்ஸைடு அயனி செறிவு என்ன?
அ) 1 × 10-3M
ஆ) 3M
இ) 1 × 10-11M
ஈ) 11 M
விடை:
இ) 1 × 10-11M

Question 10.
தூளாக்கப்பட்ட CaCO, கட்டியான CaCO, விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
அ) அதிக புறப்பரப்பளவு
ஆ) அதிக அழுத்தம்
இ) அதிக செறிவினால்
ஈ) அதிக வெப்பநிலை
விடை:
அ) அதிக புறப்பரப்பளவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ……………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
நடுநிலையாக்கல் வினை

Question2.
ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும்போது …………………. வாயு வெளியேறுகிறது.
விடை:
ஹைட்ரஜன்

Question 3.
பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
இயற்பியல் சமநிலை

Question 4.
ஒரு பழச்சாறின் pH மதிப்பு 5.6 இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு …………….. (அதிகமாகிறது / குறைகிறது).
விடை:
அதிகமாகிறது

Question 5.
25°C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு ……….
விடை:
1.00 × 10-14 மோல்’டெசிமீ-6

Question 6.
மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு.
விடை:
7.35-7.45

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 7.
மின்னாற்பகுப்பு என்பது ……………. வகை வினையாகும்.
விடை:
சிதைவடைதல்

Question 8.
தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்கள் எண்ணிக்கை ……
விடை:
ஒன்று

Question 9.
வேதி எரிமலை என்பது …………… வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
சிதைவடைதல்

Question 10.
ஹைடிரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ………… என்று அழைக்கப் படுகிறது.
விடை:
ஹைட்ரோனியம் அயனி

III. பொருத்துக.

Question 1.
வினையின் வகைகளை அடையாளம் காண்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 60
விடை:
1-இ,
2-அ,
3-ஈ,
4-ஆ

IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது.
விடை:
தவறு.
சரியான கூற்று: சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்துடன் ஹைட்ரஜனை வெளியேற்றாது.

Question 2.
SO3, CO2, NO2; போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும்.
விடை:
சரி.

Question 3.
ஒரு மீள்வினையின் சமநிலையில் வினை விளை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.
விடை:
தவறு
சரியான கூற்று: மீள்வினையில் சமநிலையில் செறிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

Question 4.
ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினை விளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும்பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.
விடை:
சரி.

Question 5.
pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.
விடை:
தவறு.
சரியான விடை: pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது.

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும்பொழுது வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச்சமன்பாட்டைத் தருக. (PTA-6)
விடை:
KCl + AgNO3 → KNO3 + AgCl ↓

Question 2.
வெப்பநிலை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
விடை:
வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கின்றது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 3.
சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு. வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:

  1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை ஆகும்.
  2. இதனை தொகுப்பு வினை அல்லது இயைபு வினை என்றும் அழைக்கலாம்.
    எ.கா: 2Mg(s) + O2(g) → 2MgOs

Question 4.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 70

VI. விரிவாக விடையளி.

Question 1.
வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?
விடை:

  1. இவ்வகை வினைகளில் வினைபடு பொருள் வெப்பத்தினால் சிதைவுறுகிறது.
  2. உதாரணமாக மெர்குரி (II) ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாறுகிறது.
  3. வெப்பத்தை எடுத்துக்கொண்டு இவ்வினை நிகழ்வதால் இது வெப்பச் சிதைவு வினை எனப்படுகிறது.
  4. மேலும், இவ்வினை சேர்மத்திலிருந்து தனிமம் / தனிமம் சிதைவடைதல் என்ற வகையைச் சார்ந்தது.
  5. அதாவது மெர்குரிக் ஆக்சைடு, மெர்குரி மற்றும் ஆக்ஸிஜன் என்ற தனிமங்களாகச் சிதைவடைகிறது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 71
  6. இதுபோன்று, கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் போது அது சிதைவுற்று கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன்-டை- ஆக்சைடாக மாறுகிறது. இவ்வினை சேர்மத்திலிருந்து சேர்மம் / சேர்மம் என்ற வகையைச் சார்ந்தது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 72

Question 2.
இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.(Sep.20)
விடை:
இரு வகையான இடப்பெயர்ச்சி வினைகள் உள்ளன. அவையாவன
(1) வீழ்படிவாக்கல் வினை
(2) நடுநிலையாக்கல் வினை

1. வீழ்படிவாக்கல் வினை:

  1. இரு சேர்மங்களின் நீர்க்கரைசல்களை கலக்கும் பொழுது, அவை வினைபுரிந்து நீரில் கரையாத ஒரு விளைபொருளும், நீரில் கரையும் ஒரு விளைபொருளும் தோன்றினால் அவ்வினை வீழ்படிவாக்கல் வினை எனப்படும்.
  2. எடுத்துக்காட்டாக பொட்டாசியம் அயோடைடு மற்றும் லெட் நைட்ரேட்டின் தெளிவான நீர்க்கரைசல்களைக் கலக்கும் பொழுது ஒரு இரட்டை இடப்பெயர்ச்சி வினை நடக்கிறது.
    Pb(NO3)2(aq) + 2 KI(aq) → PbI2(s) + 2 KNO3(aq)
  3. இங்கு பொட்டாசியமும் லெட் உலோகமும் ஒன்றையொன்று இடப்பெயர்ச்சி செய்துகொண்டு மஞ்சள் நிற லெட் அயோடைடு வீழ்படிவைத் தருகிறது.

2. நடுநிலையாக்கல் வினை:

  1. ஒரு அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பும் நீரும் கிடைக்கின்றன. இவ்வினை நடுநிலையாக்கல் வினை எனப்படுகிறது.
  2. எடுத்துக்காட்டாக சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்திற்கு இடையேயான வினையை கருதுவோம்.
  3. இங்கு சோடியம், ஹைட்ரஜனை ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது.
  4. இதன் விளைவாக சோடியம் குளோரைடு என்ற நடுநிலையான நீரில் கரையும் உப்பு கிடைக்கிறது.
    NaOH(aq) + HCl(aq) → NaCl(aq) + H2O(l)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 3.
ஒரு வினையின் வினை வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
விடை:
வினையின் வேகத்தை பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன:
1. வினைபடு பொருளின் தன்மை
2. வினைபடுபொருளின் செறிவு
3. வெப்பநிலை
4. அழுத்தம்
5. வினையூக்கி
6. வினைபடுபொருளின் புறப்பரப்பளவு

1. வினைபடு பொருளின் தன்மை:

  1. சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால் அசிட்டிக் அமிலத்துடன் மெதுவாக வினைபுரிகிறது.
  2. ஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலத்தை விட வினைதிறன் மிக்கது.
  3. எனவே, வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தை பாதிக்கிறது.
    2Na(s) + 2HCl(aq) → 2NaCl(aq) + H2(g) (வேகமாக)
    2Na(s) + 2CH3COOH(aq) → 2CH3COONa(aq) + H2(g) (மெதுவாக)

2. வினைபடுபொருளின் செறிவு :

  1. வினைபடுபொருளின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது.
  2. செறிவு அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும்.

3. வெப்பநிலை :

  1. வெப்பநிலை உயரும்போது வினையின் வேகமும் அதிகரிக்கும்.
  2. ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும்போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.

4. அழுத்தம் :

  1. வாயுநிலையிலுள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கும்.
  2. ஏனெனில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.

5. வினையூக்கி :
வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடாது. ஆனால், அவ்வினையில் வேகத்தை அதிகரிக்கும்.

6. வினைபடு பொருள்களின் புறப்பரப்பளவு:
வேதிவினையில் கட்டியான வினைபடுபொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைபடுபொருள்கள் விரைவாக வினைபுரியும்.

Question 4.
அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது?
விடை:
அன்றாட வாழ்வின் pH-ன் பங்கு:

(1) தாவரங்களும், விலங்குகளும் pH சார்ந்த உணர்வுள்ளவையா?

  1. நமது உடலானது 7.0 முதல் 7.8 வரை உள்ள pH எல்லை சார்ந்து வேலை செய்கிறது.
  2. உயிரினங்கள் ஒரு குறுகிய pH எல்லைக்குள் மட்டுமே உயிர் வாழ இயலும்.
  3. நம் உடலில் உள்ள திரவங்கள் வெவ்வேறு pH மதிப்புகளைக் கொண்டவை.
  4. எடுத்துக்காட்டாக மனித ரத்தத்தின் pH மதிப்பு 7.35 லிருந்து 7.45 ஆகும். இந்த மதிப்பிலிருந்து
    குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, அது நோயை உண்டாக்கும்.

(2) மனித செரிமான மண்டலத்தில் pH மதிப்பு

  1. நமது இரைப்பை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தியாகும்.
  2. இந்த அமிலம் இரைப்பையை பாதிக்காமல் உணவைச் செரிக்க உதவுகிறது.
  3. சரியான செரிமானம் இல்லாத போது, இரைப்பையானது கூடுதலான அமிலத்தைச் சுரந்து வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
  4. இரைப்பையில் உள்ள திரவத்தின் தோராயமான pH மதிப்பு 2.0 ஆகும்.

(3) pH மாற்றம் – பற்சிதைவுக்குக் காரணம்

  1. மனித உமிழ்நீரின் pH மதிப்பு 6.5 – 7.5 வரை உள்ளது.
  2. நமது பற்களின் மேற்பரப்பு படலமானது கால்சியம் பாஸ்பேட் என்ற மிகக் கடினமான பொருளினால் ஆனது.
  3. ஏனெனில் உமிழ்நீரின் pH 5.5-க்கும் கீழே குறையும் பொழுது, பற்களின் மேற்பரப்பு படலம் (எனாமல்) பாதிக்கப்படுகிறது. இது பற்சிதைவு எனப்படுகிறது.
  4. பொதுவாக நாம் பயன்படுத்தப்படும் பற்பசைகள் காரத்தன்மை கொண்டவை. இவை கூடுதல் அமிலத்தன்மையை நடுநிலையாக்கம் செய்து பற்சிதைவைத் தடுக்கின்றன.

(4) மண்ணின் pH

  1. விவசாயத்திற்கு மண்ணின் pH மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  2. சிட்ரிக் அமிலம் கொண்ட பழங்கள் சற்று காரத்தன்மை உள்ள மண்ணிலும், நெல் அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும், கரும்பு நடுநிலைத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.

(5) மழை நீரின் pH

  1. மழை நீரின் pH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும். இது, மழைநீர் நடுநிலைத் தன்மையானது மற்றும் தூய்மையானது என்பதைக் குறிக்கிறது.
  2. வளிமண்டலக் காற்று சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்களால் மாசுபடும் பொழுது அவை மழைநீரில் கரைந்து pH மதிப்பைப்பை 7ஐ விடக் குறையச் செய்கின்றன.
  3. இவ்வாறு மழைநீரின் pH 7ஐ விட குறையும் பொழுது அம்மழை அமிலமழை எனப்படுகிறது.
  4. இந்த அமிலமழை நீர் ஆறுகளில் சேரும் பொழுது அவற்றின் pH ஐ குறைக்கின்றன.
  5. இதனால் நீர்வாழ் உயிரிகளின் வாழ்வு பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 5.
வேதிச் சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?
விடை:
(1) வேதிச்சமநிலை :

  1. வேதிச்சமநிலை என்பது ஒரு மீள் வேதிவினையின் வினைபடு பொருள் மற்றும் வினை விளைபொருளின் செறிவில் எந்த மாற்றமும் நிகழாத நிலை ஆகும்.
  2. சமநிலையில், முன்னோக்கு வினையின் வேகம்
    = பின்னோக்கு வினையின் வேகம்.

(2) பண்புகள்: [PTA-3]

  1. வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமம்.
  2. நேரத்தை பொருத்து அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறாது.
  3. வேதிச்சமநிலை என்பது ஒரு இயங்குச் சமநிலை. ஏனெனில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு வினையும் தொடர்ந்து நிலையாக நடந்து கொண்டிருக்கும்.
  4. இயற்பியல் சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனஅளவைப் பெறுகின்றன.

VII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும்போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 55
A CaCO3 கால்சியம் கார்பனேட்
B CaO கால்சியம் ஆக்சைடு
C CO2 கார்பன் டை ஆக்சைடு

Question 2.
காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.
விடை:

  1. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தக்கூடாது.
  2. ஏனெனில், நிக்கல், காப்பர் சல்பேட்டில் உள்ள காப்பரை இடமாற்றம் செய்கிறது.
  3. மேலும் காப்பரானது நிக்கல் கரண்டியில் வீழ்படிவாக சேகரிக்கப்படுகிறது.
    Nis + CuSO4(aq) → NiSO4(aq) + Cu(s)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

VIII. கணக்கீடுகள்

Question 1.
எலுமிச்சை சாறின் pH மதிப்பு 2 எனில், ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு என்ன?
விடை:
எலுமிச்சை சாறின் pH மதிப்பு = 2
[H+] = ?
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 65

Question 2.
1.0 × 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.(PTA-1; GMQP-2019)
விடை:
[H+] = 1.0 × 10-4
pH = – log10 [H+] = -log10 [1 × 10-4]
pH = – (log10 1 – 4 log10 10)
= (0) + (4 × log10 10) = 0 + 4 × 1 = 4

Question 3.
1.0 × 10-5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பைக் காண்க. (PTA-6)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 66
[OH] = 1 × 10-5 மோல் லி-1
pOH = – log10[OH] = – log10 [10-5]
= – (-5 × log10 10)
= – (-5) = 5
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 75
pH = 14 – pOH
pH = 14 – 5
pH = 9

Question 4.
ஒரு கரைசலில் ஹைடிராக்சைடு அயனிச் செறிவு 1.0 × 10-11 மோல் எனில் அதன் pH மதிப்பு என்ன? (PTA-5) விடை:
[OH] = 1 × 10-11 M
pOH = -log10 [OH]
= -log10 [10-11]
= -(-11 × log10 10)
= – (-11) = 11
pH + pOH = 14
pH = 14 – pOH = 14 – 11
pH = 3

கருத்துச் சிந்தனை

Question 1.
அனைத்து – எரிதல் வினைகளும் ஆக்ஸிஜனேற்ற வினைகள்; ஆனால் அனைத்து ஆக்சிஜனேற்ற வினைகளும் எரிதல் வினைகள் அல்ல; ஏன்?
விடை:
எரிதல் வினைகள், வெப்பம் மற்றும் ஒளியுடன் தொடர்புடையவை. அனைத்து எரிதல் வினைகளும், வினை நடைபெற வேண்டி, ஆக்சிஜனை உட்கிரகித்துக் கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றன. ஆனால், ஆக்சிஜனேற்ற வினை என்பது, வெப்பத்தை உள்ளடக்கியதல்ல. ஆக்ஸிஜனேற்ற வினையில் ஆக்சிஜன் அணு சேர்க்கப்படும் அல்லது ஹைட்ரஜன் அணு குறைக்கப்படும். ஆகவே, அனைத்து ஆக்ஸிஜனேற்ற வினைகளும் எளிதில் வினைகள் அல்ல.

Question 2.
அறை வெப்பநிலையில் தூய நீரின் pH மதிப்பு 7. ஏன்?
விடை:
தூய நீரைப் பொறுத்தவரை, ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கையும், ஹைட்ராக்சில் அயனிகளின் எண்ணிக்கையும் எப்போதும் சம அளவிலேயே இருக்கும். இதனால், தூய நீர் நடுநிலைத் தன்மையுடன் இருக்கும். மேலும், ஹைட்ரஜன் அயனியின் செறிவு 10-7 மோல்ஸ்/லி என்பதால், தூய நீரின் pH மதிப்பு 7 ஆகும்.

செயல்பாடு 10.1

* ஒரு பீக்கரில் சுமார் 50 மிலி கழிவறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தை எடுத்துக் கொள்.
* ஒரு சிறிய இரும்பு ஆணியை அதில் வைக்கவும்.
* 10 நிமிடங்களுக்கு பின்பு பீக்கரில் என்ன நிகழ்கிறது என்பதை கவனி.
* ஏதேனும் மாற்றத்தை உன்னால் கவனிக்க முடிகிறதா?
* காண்பனவற்றை தொகுத்து வேதிவினைகளுடன் எழுதுக.
விடை:

  1. கழிவறையைச் சுத்தம் செய்யும் அமிலம் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகும்.
  2. அதில் ஒரு சிறிய இரும்பு ஆணியை வைக்கும்போது ஹைட்ரஜன் வாயுவை குமிழிகளாக இரும்பு இடப்பெயர்ச்சி செய்கிறது.
  3. இது ஒற்றை இடப்பெயர்ச்சி வினை ஆகும்.
  4. காரணம். ஹைட்ரஜனைவிட இரும்பு அதிக வினைதிறன் மிக்கது.
  5. வேதிவினை
    Fe(s) + 2HCl(aq) → FeCl2(aq) + H2(g)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

செயல்பாடு 10.2

* சிறிதளவு சில்வர் நைட்ரேட் படிகங்களை ஒரு சோதனைக் குழாயில் எடுத்துக்கொள்.
* சுமார் 5 மிலி குழாய் நீரை சோதனைக் குழாயில் சேர்க்கவும்.
* சில்வர் நைட்ரேட் படிகங்களை நீரில் சேர்த்து கலக்கவும்.
* மாற்றங்களை கவனித்து உன்னுடைய உற்றுநோக்கலை எழுதுக. இதிலிருந்து என்ன உணர்கிறாய்?
விடை:

  1. 5 மிலி குழாய் நீரில் உள்ள குளோரைடு அயனிகளுடன் சில்வர் நைட்ரேட் வினைபுரிந்து வெண்மை நிற சில்வர் குளோரைடு வீழ்படிவாகிறது.
  2. இது வீழ்படிவாக்கல் வினை ஆகும்.
  3. NaCl(aq) + AgNO3(aq) → AgCl ↓+ NaNO3(aq)

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ஓர் எரிதல் வினையில் [PTA-2]
அ) ஆக்சிஜன் வாயு வெளிவிடப்படுகிறது
ஆ) நைட்ரஜன் வாயு வெளியிடப்படுகிறது
இ) ஆக்சிஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது
ஈ) நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது
விடை:
இ) ஆக்சிஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது

Question 2.
ஒரு வேதிச்சமநிலையில் வினைபடு, வினைவிளை பொருட்களின் செறிவுகள் ………. [PTA-5]
அ) வேறுபட்டு இருக்கின்றன
ஆ) ஒரே மாதிரியாக இருக்கின்றன
இ) கணிக்க முடியாதவை
ஈ) சமமாக இராது
விடை:
அ) வேறுபட்டு இருக்கின்றன)

2 மதிப்பெண்கள் 

Question 1.
ஒரு கரைசலின் pH மதிப்பு சுழியாக இருந்தால் அக்கரைசலின் தன்மை யாது? காரணம் தருக.
விடை:
pH மதிப்பு 0-14. 0-7 அமிலப்பண்பு . [PTA-3)
7 நடுநிலை, 7-14 காரத்தன்மை கொண்டது.
pH மதிப்பு குறையும்போது அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
– log [H+] = 0
[H+] = 1
ஹைட்ரஜன் அயனியின் செறிவு 1. எனவே அதிக அமிலத்தன்மை கொண்டதாகும்.

Question 2.
நம் அன்றாட வாழ்வில் சில நேரங்களில் வேகமாக நடைபெறும் வேதிவினைகளும் சில நேரங்களில் மெதுவாக நடைபெறும் வேதி வினைகளும் தேவை. இவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுத் தருக. (7 Marks) (PTA-3)
விடை:

  1. வேகமாக நடைபெறும் வினை – உணவு செரித்தல்.
  2. மெதுவாக நடைபெறும் வினை – இரும்பு துருப்பிடித்தல்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

4 மதிப்பெண்கள்

Question 1.
பின்வரும் வேதிவினைகளை அணுக்கள் இடம் மாறி அமைவதின் அடிப்படையில் வகைப்படுத்தி உமது விடையை நியாயப்படுத்துக.
[PTA-1]
2 KClO3 → 2KCl + 3O2
Zn + CuSO4 → ZnSO4 + Cu
2Mg + O2 → 2MgO
NaSO4 + BaCl2 → BaSO4 + 2NaCl
விடை:
(i) சிதைவு வினை:
2 KClO3 → 2KCl + 3O2
பொட்டாசியம் குளோரேட் சேர்மமானது பொட்டாசியம் குளோரைடு மற்றும் மூலக்கூறுகளாக சிதைவடைகிறது.

(ii) ஒற்றை இடப்பெயர்ச்சி:
Zn + CuSO4 → ZnSO4 + Cu
ஜிங்க்தனிமம்காப்பர்சல்ஃபேட்டிலிருந்து காப்பரை இடப்பெயர்ச்சி செய்து ஜிங்க் சல்பேட் மற்றும் காப்பர் தனிமத்தை உருவாக்குகிறது.

(iii) சேர்க்கை வினை:
2Mg + O2 → 2MgO
மெக்னீசியம், ஆக்ஸிஜனுடன் இணைந்து மெக்னீசியம் ஆக்ஸைடைத் தருகிறது.

(iv) இரட்டை இடப்பெயர்ச்சி:
NaSO4 + BaCl2 → BaSO4 + 2NaCl
சோடியம் மற்றும் பேரியம் அயனிகள் இடபெயர்ச்சியாவதால் பேரியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உருவாகிறது.

Question 2.
பின்வரும் வேதிவினைகளில் எவ்வினை நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது? உமது விடையை ஆதாரத்துடன் தருக[PTA-3]
a) 2NaCl + F2 → 2NaF + Cl2
b) NaF + Cl2 → NaCl + F2
விடை:
2NaCl(aq) + F2(g) → 2NaF(aq) + Cl2(g)
2NaF(aq) + Cl2(g) → 2NaCl + F2(g)

  1. முதல் வினையில் சோடியம் குளோரைடிலிருந்து குளோரின் புளூரினால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.
  2. இரண்டாவது வினையில் குளோரின், புளூரினை சோடியம் புளூரைடிலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது.
  3. மேற்கண்ட இரண்டு வினைகளில் இரண்டாம் வினை நடக்க இயலாது. ஏனெனில் குளோரினைவிட புளூரின் வினைதிறன் மிக்கது. மேலும் தனிம வரிசை அட்டவணையில் குளோரினுக்கு மேலே உள்ளது.
  4. எனவே இடப்பெயர்ச்சி வினைகளில், தனிமங்களின் வினைதிறன் மற்றும் தனிம வரிசை அட்டவணையில் அவற்றின் இடம் ஆகியவை வினை நடைபெறுவதை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

Question 3.
கீழ்க்காணும் வேதி வினைகளில் எது நடுநிலையாக்கல் வினை? காரணம் தருக.
NaOH(aq) + HCl(aq) → 3CO2(g) + 4H2O(g) + வெப்பம் (7 Marks) (PTA-4)
விடை:
NaOH(aq) + HCl(aq) → 3CO2(g) + 4H2O(g) + வெப்பம் மேற்கண்ட வினை நடுநிலையாக்கல் வினையாகும்.

காரணம்: சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திற்கு இடையேயான வினை நடுநிலையாக்கல் வினையாகும். இங்கு சோடியம், ஹைட்ரஜனை ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது. இதன் விளைவாக சோடியம் குளோரைடு என்ற நடுநிலையான நீரில் கரையும் உப்பு கிடைக்கிறது.

Question 4.
வினைபடு பொருட்களின் இயல்பு மற்றும் செறிவு எவ்வாறு ஒரு வேதிவினையின் வேகத்தைப் பாதிக்கின்றன என்பதை விளக்குக.
(7 Marks) (PTA-5)
விடை:
சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால், அசிட்டிக் அமிலத்துடன் மெதுவாக வினைபுரிகிறது. ஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலத்தைவிட வினைதிறன் மிக்கது. எனவே வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தைப் பாதிக்கிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 90

வினைபடு பொருள்களின் செறிவு
அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட கன அளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு செறிவு ஆகும். செறிவு அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும்.

துத்தநாக துகள்கள், 1M ஹைட்ரோகுளோரிகக் அமிலத்தைவிட 2M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வேகமாக வினைபுரிகின்றது.

Question 5.
வெப்பநிலையை உயர்த்தும் போது பொதுவாக ஒரு வேதிவினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்? (4 Marks) [PTA-6 & GMQP-2019]
விடை:
வெப்பநிலையை உயர்த்தும் போது வேதிவினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கின்றது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

அரசு தேர்வு வினா-விடை

7 மதிப்பெண்கள்

Question 1.
ஒற்றை இடப்பெயர்ச்சி வினையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக. (Sep.20)
விடை:
ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகள் :

  1. இவ்வகை வினை ஒரு தனிமம் மற்றும் சேர்மத்திற்கிடையே நிகழ்வதாகும் அவை வினைபடும் பொழுது நிகழ்வதாகும். அவை வினைபடும்பொழுது சேர்மத்திலுள்ள ஒரு தனிமம் மற்றொரு தனிமத்தால் இடப்பெயர்ச்சி அடைந்து புதிய சேர்மத்தையும், தனிமத்தையும் தருகிறது.
  2. ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகளின் பொதுவான வடிவம் வருமாறு.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 95
  3. தனிமம் ‘A’ ஆனது ‘B’ என்ற தனிமத்தை அதனுடைய சேர்மமான ‘BC’ யிலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது. எனவே இது ஒற்றை இடப்பெயர்ச்சி வினை எனப்படுகிறது.
  4. துத்தநாக உலோகத்தை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வைக்கும்பொழுது ஹைட்ரஜன் வாயு வெளிவருகிறது.
  5. இங்கு ஹைட்ரஜன் துத்தநாகத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு துத்தநாக குளோரைடு உருவாகிறது.
    Zn(s) + 2HCl(aq) → ZnCl2(aq) + H2(g)
    Feo + CuSO4(aq) → FeSO4(aq) + Cu(s)
  6. காப்பர் (II) சல்பேட்டின் நீர்க்கரைசலில் ஒரு இரும்பு ஆணியை வைக்கும் பொழுது இரும்பு, காப்பரை இடப்பெயர்ச்சி செய்கிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 4 வளிமண்டலம் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 4 வளிமண்டலம்

5th Social Science Guide வளிமண்டலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வளிமண்டலம் ___________ அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
விடை:
ஆ) ஐந்து

Question 2.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு ___________ ஆகும்.
ஆ) 3%
அ) 0.03%
இ) 1%
ஈ) 0.00003%
விடை:
அ) 0.03%

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 3.
உலக வானிலை தினம்
அ) மார்ச்-20
இ) மார்ச்-22
ஆ) மார்ச்-21
ஈ) மார்ச்-23
விடை:
ஈ) மார்ச்-23

Question 4.
இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிடும் தீர்க்கரேகை _______________ வழியாகச் செல்கிறது.
அ) அலகாபாத்
ஆ) அகமதாபாத்
இ) ஹைதராபாத்
ஈ) செகதீய
விடை:
அ) அலகாபாத்

Question 5.
கடகரேகைக்கும் மகரரேகைக்கும், இடையேயும் அமைந்துள்ள மண்டலம் _____________
அ) மிதவெப்ப
ஆ) துணை வெப்பமண்டலம்
இ) குளிர்
ஈ) வெப்ப மண்டலம்
விடை:
ஈ) வெப்ப மண்டலம்

Question 6.
___________ காற்றின் அழுத்தத்தை அளவிட பயன்படுகிறது.
அ) பாரமானி
இ) அனிமோமீட்டர்
ஆ) வெப்பமானி
ஈ) காற்று வேக அளவி
விடை:
அ) பாரமானி

Question 7.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 1
மேற்கண்ட படம் ____________ வீசும் திசையைக் காட்டுகிறது.
அ) தென்மேற்கு பருவக்காற்று
ஆ) வட கிழக்கு பருவக்காற்று
இ) சூறாவளிமழை
ஈ) மலைத்தடை மழை
விடை:
ஆ) வட கிழக்கு பருவக்காற்று

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 8.
பருவ காலம் என்பது _____________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
அ) கிரேக்கம்
ஆ) அரேபியன்
இ) ஆங்கிலம்
ஈ) லத்தீன்
விடை:
ஆ) அரேபியன்

Question 9.
செங்குத்து மேகம் _____________
அ) கீற்று மேகம்
ஆ) படைமேகம்
இ) திறள் மேகம்
ஈ) கார்மேகம்
விடை:
ஈ) கார்மேகம்

Question 10.
_____________ மேகம் மழைப் பொழிவைத் தருகிறது.
அ) வெள்ளி
ஆ) சாம்பல்
இ) வெண்பஞ்சு
ஈ) திரள்
விடை:
ஆ) சாம்பல்

Question 11.
கூற்று1-காற்றின் திசையை அளவிட பயன்படும் கருவி காற்று வேக அளவி. கூற்று II-ஒளியானது ஒலியை விட வேகமாகச் செல்கிறது.
அ) I மட்டும் சரி
ஆ) I தவறு II சரி
இ) I சரி II தவறு
ஈ) இரண்டும் சரி
விடை:
ஆ) I தவறு II சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வானிலையை பற்றி படிக்கும் அறிவியல் _______________ எனப்படும்.
விடை:
வானிலையியல்

Question 2.
வெப்பத்தை அளவிட உதவும் கருவி _____________
விடை:
வெப்பநிலை மானி

Question 3.
புவியின் மேற்பரப்பிற்கு இணையாக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ___________ ஆகும்.
விடை:
அட்ச ரேகை

Question 4.
______________ மழை மேகம் என அழைக்கப்படுகிறது.
விடை:
கார்மேகம்

III. பொருத்துக.

1. கீற்று மேகம் – சாம்பல் நிற விரிப்பு
2. படைமேகம் – புயல் மேகம்
3. திறள் மேகம் – மழை கொடுக்காது
4. கார்மேகம் – பருத்தி
விடை:
1. கீற்று மேகம் – மழை கொடுக்காது
2. படைமேகம் – சாம்பல் நிற விரிப்பு
3. திறள் மேகம் – பருத்தி
4. கார்மேகம் – புயல் மேகம்

IV. சரியா/தவறா.

Question 1.
அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகள் நேர மண்டலத்தை கணக்கிட பயன்படுகின்றன.
விடை:
தவறு

Question 2.
அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகள், ஒரு நாட்டை கண்டறிய நமக்கு உதவுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 3.
வளிமண்டலமானது கடத்தல் முறையைவிட கதிர்வீச்சு முறையினால் அதிக வெப்பமடைகிறது.
விடை:
சரி

Question 4.
காற்றின் திசை மாற்றத்திற்கு பூமியின் சுழற்சியே காரணமாகும்.
விடை:
சரி

Question 5.
கடிகார திசைக்கு எதிர் திசையில் சூறாவளி நகர்கிறது.
விடை:
சரி

V. சிறு குறிப்பு வரைக.

Question 1.
வானிலை என்றால் என்ன?
விடை:
வானிலை என்பது மிதவெப்ப நிலை, ஈரப்பதம், மேகமூட்டம், அழுத்தம் ஆகியவற்றின் குறுகிய கால நிலையாகும்.

Question 2.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
விடை:
வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகள் உள்ளன. அவையாவன – ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மீஸோஸ்பியர், தெர்மோஸ்பியர் மற்றும் எக்சோஸ்பியர்.

Question 3.
கார்மேகங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
இது அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். பலத்த மழை தருகிறது. இது செங்குத்து மேகங்கள் மற்றும் புயல் அல்லது மழை மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
மழைத்தடை மழையை வரைபடத்துடன் விவரி.
விடை:
பருவக்காற்று மலைச்சரிவின் ஒரு பக்கத்தில் மோதும் போது மேலெழும்புகிறது. இதன் காரணமாக காற்றானது குளிர்ந்து அதிக மழைப்பொழிவை கொடுக்கிறது. மலையின் அடுத்த பக்கம் மழை மறைவுப்பகுதி எனப்படுகிறது. இது குறைவான மழையையே பெறுகிறது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 2

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
ஜெட் காற்றோட்டம் பற்றி எழுதுக.
விடை:
ஜெட் காற்றோட்டம் : வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 2.
காற்றின் வகைகளை விளக்குக.
விடை:
காற்று : லூ என்பது இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வீசும் ஒரு வலிமையான, புழுதி படிந்த, வெப்பமான, வறண்ட கோடைக்காற்று ஆகும். இக்காற்று குறிப்பாக மே, ஜுன் மாதங்களில் வலுவாக வீசும். அதிக வெப்பநிலையால், இக்காற்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

கோள் காற்று :
பூமியின் சுழற்சிக்கேற்றவாறு ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்று கோள்காற்று எனப்படும்.

பருவக்காற்று :
மான்சூன் என்ற வார்த்தை மௌசிம்’ என்ற அரேபியச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதற்கு பருவகாலம் என்று பொருள்.

பருவக்காற்றின் வகைகள் : * தென்மேற்கு பருவக் காற்று * வட கிழக்கு பருவக் காற்று

கடல் காற்று:
இது. மாலைப்பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.

நிலக் காற்று:
இது காலைப் பொழுதில் நிலத்தில் இருந்து கடலை நோக்கி வீசுகிறது.

உள்ளுர் காற்று: இது வானிலையை பாதிக்கிறது. * வட மேற்கு இந்தியாவில் வீசும் வெப்பக்காற்று. * வட கிழக்கு இந்தியாவில் வீசும் குளிர்காற்று.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 3
ஜெட் காற்றோட்டம் :
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும் அது ) முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

சூறாவளி (புயல்) :
சூறாவளி தனது நிலையையும் திசையையும் அவ்வப்போது மாற்றுகிறது. காற்றுவேகமும் அவ்வப்போது மாறுபடுகிறது.

Question 3.
‘வானிலைத் தொழிற்சாலை’ பற்றி எழுதுக.
விடை:
நேர் மற்றும் எதிர் (+, -) மின்னூட்டங்கள் ஒன்றையொன்று தாக்கும் போது , மின்னல் , இடி ஆகியவை உற்பத்தியாகின்றன. ஒளி ஒலியை விட வேகமாகச் செல்கிறது. எனவே இடி மின்னலைத் தொடர்ந்து பெரும் சப்தமாக நமக்கு ஒலிக்கிறது. இவ்வாறு வானின் அனைத்து பண்புகளும் ஒன்றாக ஒரே நேரத்தில் செயல்படும் போது அது வானிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 4

5th Social Science Guide வளிமண்டலம் InText Questions and Answers

பக்கம் 167 செயல்முறைகள் :

வாயுக்களின் முக்கியத்துவத்தை எழுது.
ஆக்சிஜன் : _______________
கார்பன் டை ஆக்சைடு : _______________
ஓசோன் : _______________
விடை:
ஆக்சிஜன் : உயிரினங்கள் உயிர் வாழ
கார்பன் டை ஆக்சைடு : தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க
ஓசோன் : சூரியனின் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நம்மைப் பாதுகாக்க

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 3 நல்ல குடிமகன் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

5th Social Science Guide நல்ல குடிமகன் Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் ______________ பற்றியதாகும்.
விடை:
குடிமக்கள்

Question 2.
ஒரு நபரை ______________ மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
விடை:
மதிப்பு மிக்க மனிதனாக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 3.
மனிதன் ஒரு _____________
விடை:
சமூக விலங்கு

Question 4.
தன் பணியில் ________________ தவறாமல் இருக்க வேண்டும்.
விடை:
கடமை

II. பொருத்துக.

1. இயல்பான குணம் – சகிப்புத்தன்மை
2. கலாச்சாரம் – பாதிக்கும் காரணி
3. சமுதாயம் – நேரந்தவறாமை
4. கடமை – மொழி
5. வேலையின்மை – நன்மதிப்பு
விடை:
1. இயல்பான குணம் – நன்மதிப்பு
2. கலாச்சாரம் – மொழி
3. சமுதாயம் – சகிப்புத்தன்மை
4. கடமை – நேரந்தவறாமை
5. வேலையின்மை – பாதிக்கும் காரணி

III. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
குடிமகன் என்ற சொல்லை வரையறு.
விடை:
ஒரு குடிமகன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து, தனது

கடமைகளை நிறைவேற்றுகிறார். ஒரு இறைமை பெற்ற அரசு தனது மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தேசத்தில் வாழும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, வேலை செய்யும் உரிமை, நாட்டில் எங்கும் குடியிருக்க உரிமை வழங்கப்படுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 2.
ஐந்து தனிப்பட்ட ஒழுக்க நெறிகள் எவை?
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 1

Question 3.
சமூக நெறிமுறைகள் யாவை?
விடை:

  • மக்களுடன் நல்லுறவை எப்போதும் பேணுவது
  • பெரியோர்களை மதிப்பது
  • இயற்கையை மதித்து நடப்பது
  • சகிப்புத் தன்மையுடன் இருப்பது
  • நட்பை பேணி வளர்ப்பது

Question 4.
நற்பண்பு நெறிமுறைகள் என்றால் என்ன?
விடை:
கால நேரம் தவறாமை, ஈடுபாடு, அனைவரையும் சமமாக நடத்துதல், சரியான நேரத்தில் வேலைகளைச் செய்தல், ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், தவறாமல் கடமைகளைச் செய்தல், ஆகியன நற்பண்பு நெறிமுறைகள் ஆகும்.

IV. விரிவாக விடையளி.

Question 1.
நல்ல மதிப்புகளை வளர்க்கும் ஐந்து காரணிகளை எழுதுக.
விடை:

நற்பண்புகளை வளப்படுத்தக் கூடிய காரணிகள்:

  • எழுத்தறிவு
  • விழிப்புணர்வு மற்றும் நலன்களை உருவாக்குதல்
  • வெற்றி பெறும் வரை கடினமாக முயற்சி செய்தல்
  • தன் தனித் தன்மையை அறிதல்
  • ஏற்றுக் கொள்ளுதல்
  • தன்னம்பிக்கை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 2.
அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றி எழுதுக.
விடை:

  1. பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல்.
  2. தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்தல்.
  3. விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.
  4. இயற்கை வளங்களை பாதுகாத்தல்.
  5. சுற்றுச்சூழலை பராமரித்தல்.
  6. தேசிய சின்னங்களை கௌரவித்தல்.
  7. தியாகிகளுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் மதிப்பளித்தல்,
  8. நமது கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தைக் காத்தல்.
  9. நாட்டுப்பற்றை வளர்த்துக் கொள்ளுதல்.

5th Social Science Guide நல்ல குடிமகன் InText Questions and Answers

பக்கம் 159 இவற்றை முயற்சிக்கவும் :

அன்பு, கருணை, பெருந்தன்மை, நேர்மை, உண்மை , நட்பு, விருந்தோம்பல், அமைதி, சகிப்புத்தன்மை, நம்பிக்கை போன்றவை தனிப்பட்ட ‘விழுமங்கள். மேற்கூறிய இந்த மதிப்புகள் உதவியுடன் கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அனைத்து உயிர்களிடத்தும் ___________ காட்ட வேண்டும்.
விடை:
அன்பு

Question 2.
_______________ யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
விடை:
பெருந்தன்மை

Question 3.
________________ ஒரு சிறந்த கொள்கை.
விடை:
நேர்மை

Question 4.
மிகச் சிறந்த உறவாகக் கருதப்படுவது _________________.
விடை:
நட்பு

Question 5.
விருந்தினர்களை உபசரிப்பது _________________ ஆகும்.
விடை:
விருந்தோம்பல்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 6.
துன்புறுபவர்களுக்கு நாம் ______________ காட்டவேண்டும்.
விடை:
கருணை

Question 7.
எப்பொழுதும் _______________ பேசவேண்டும்.
விடை:
உண்மை

Question 8.
பொது இடங்களில் ______________யுடன் நடந்து கொள்ள
விடை:
சகிப்புத்தன்மை

இவற்றை முயற்சிக்கவும் :

Question 1.
உன் தாய்மொழி என்ன?
விடை:
தமிழ்

Question 2.
நமது அலுவல் மொழி எது?
விடை:
நமது அலுவலக மொழி ஆங்கிலம் ஆகும். (அத்துடன் இந்தி, வங்காள மொழி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம், மலையாளம், குஜராத்தி, உருது ஆகியவையும் நமது அலுவலக மொழிகளாகும்).

Question 3.
வட இந்தியாவின் முக்கிய உணவு என்பது ____________
விடை:
கோதுமை

Question 4.
__________ தென்னிந்தியாவின் முக்கிய உணவு
விடை:
அரிசி

Question 5.
உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்? _________
விடை:
இரண்டு

பண்பாட்டு நெறிமுறைகள் :
நற்பண்பு, பண்படுத்தப்பட்ட நன்நடத்தை ஒரு சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.

பக்கம் 161 சிந்தனை செய் :

Question 1.
____________ பெற மரங்கள் வளர்க்க வேண்டும்.
விடை:
மழை

Question 2.
_____________ வாழ்ந்தால் லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள்
விடை:
ஒன்று சேர்ந்து

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 3.
சேர்ந்தால் ____________ பிரிந்தால் வீழ்வோம்.
விடை:
வாழ்வோம்

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் நல்ல மதிப்புகள் வட்டம் இடுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 2
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 3

பக்கம் 162 பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 4
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 5

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

5th Social Science Guide வரலாற்றை நோக்கி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பழங்கற்கால மனிதர்கள்.
அ) பருத்தி ஆடைகள் அணிந்திருந்தனர்.
ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.
இ) கம்பளி ஆடைகள் அணிந்திருந்தனர்.
விடை:
ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.

Question 2.
பழங்கால மனிதரால் வளர்க்கப்பட்ட விலங்கு
அ) பசு
ஆ) குதிரை
இ) நாய்
விடை:
இ) நாய்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 3.
பழங்கால மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம்.
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) தங்கம்
விடை:
ஆ) செம்பு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பழங்கால மனிதன் வாழ்ந்த இடம் _____________
விடை:
குகைகள்

Question 2.
எழுத்துக்கள் கண்டுபிடிப்புகளுக்கு முந்திய காலம் _______________
விடை:
வரலாற்றுக்கு முந்தையக் காலம்

Question 3.
இரும்புக் கருவிகளை பயன் படுத்திய காலம் ______________
விடை:
இரும்புக் காலம்

Question 4.
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு ________________
விடை:
கல்சக்கரங்கள்

Question 5.
வரலாற்று ஆராய்ச்சி நடைபெறும் ஒரு தமிழக இடம் _____________
விடை:
கீழடி

III. விரிவாக விடையளி

Question 1.
கற்காலம் என்றால் என்ன?
விடை:
கற்காலம் என்பது கற்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு காலமாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 2.
புதுக்கற்காலக் காலம் வரையறு.
விடை:
கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.

எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன. வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.

Question 3.
எந்தக்காலத்தில் கல்லும் தாமிரமும் பயன்படுத்தப் பட்டன?
விடை:
கற்காலத்தில் கல் பயன்படுத்தப்பட்டது. புதிய கற்காலத்தின் இறுதியில் செம்புக்காலத்தில் கல்லுடன் தாமிரம் பயன்படுத்தப்பட்டது.

Question 4.
வரலாற்றை நாம் கற்க உதவும் மூலங்கள் யாவை?
விடை:
கைவினைப் பொருள்கள், மண்பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் எழுதப்பட்ட ஆவணங்கள் போன்றவை வரலாற்றைக் கட்டமைக்க உதவும் – மதிப்புமிக்க ஆதாரங்களாகும்.

Question 5.
அருங்காட்சியகம் என்றால் என்ன?
விடை:
அருங்காட்சியகம் என்பது அரிய மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இடம். இவை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. எனவே, கடந்த காலத்தின் எச்சங்களைப் பாதுகாப்பது முக்கியமாகும். எச்சங்கள் என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய பூமியில் புதையுண்ட பொருள்கள் ஆகும்.

Question 6.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 1

Question 7.
பழங்கற்காலக் கருவிகளை வகைப்படுத்துக.
விடை:
பண்டைய மனிதர்கள் விலங்குகளோடு சேர்ந்து காடுகளில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகளை விரட்டவும், வேர்கள், குருத்துகள் முதலியவைகளை தோண்டவும் கற்கருவிகளைப் பயன்படுத்தினர்,

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.

எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் – ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன, வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.
1. பழங்காலத்தில் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
2. குவார்ட்சைட் என்ற கல்லிலிருந்து ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.
3. நெருப்பை உருவாக்க சிக்கி முக்கி கற்கள் பயன்படுத்தப்பட்டன.

5th Social Science Guide வரலாற்றை நோக்கி InText Questions and Answers

பக்கம் 150 செயல்பாடு :

Question 1.
பழைய கற்கால மனிதர்களால் உண்ணப்பட்ட உணவு எது?
விடை:
வேர்கள், குருத்துகள், மாமிசம், தானியம்

Question 2.
குகைகளில் பழைய மனிதர்கள் ஏன் வாழ்ந்தார்கள்?
விடை:
பழங்கால மனிதர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வீடு கட்டத் தெரியாது. எனவே அவர்கள் குகைகளில் வாழ்ந்து வந்தனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 3.
ஏன் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்?
விடை:
கற்கால மனிதர்களுக்கு நெருப்பை உருவாக்கவும் சமைக்கவும் தெரியாது. எனவே அவர்கள் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்.

செயல்பாடு :

வரலாற்று காலத்தின் வயதைக் கண்டுபிடி.

பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், இரும்புக் காலம்
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 2
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 4
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 5

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 9 கரைசல்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 9 கரைசல்கள்

10th Science Guide கரைசல்கள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ………….. கலவை
அ) ஒருபடித்தான
ஆ) பலபடித்தான
இ) ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை
ஈ) ஒருபடித்தானவை அல்லாதவை
விடை:
அ) ஒருபடித்தான

Question 2.
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ……..
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை:
அ) 2

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 3.
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ……
அ) அசிட்டோன்
ஆ) பென்சீன்
இ) நீர்
ஈ) ஆல்கஹால்
விடை:
இ) நீர்

Question 4.
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் …
எனப்படும்.
அ) தெவிட்டிய கரைசல்
ஆ) தெவிட்டாத கரைசல்
இ) அதி தெவிட்டிய கரைசல்
ஈ) நீர்த்த கரைசல்
விடை:
அ) தெவிட்டிய கரைசல்

Question 5.
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க [Sep.20]
அ) நீரில் கரைக்கப்பட்ட உப்பு
ஆ) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
இ) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
ஈ) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
விடை:
ஈ) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

Question 6.
குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ……………………….. .
அ) மாற்றமில்லை
ஆ) அதிகரிக்கிறது
இ) குறைகிறது
ஈ) வினை இல்லை
விடை:
ஆ) அதிகரிக்கிறது

Question 7.
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி. நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்?
அ) 12 கி
ஆ) 11 கி
இ) 16 கி
ஈ) 20 கி
விடை:
ஆ) 11 கி

Question 8.
25% ஆல்க ஹால் கரைசல் என்பது ……………
அ) 100 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
ஆ) 25 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
இ) 75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
ஈ) 25 மி.லி. நீரில் 75 மி.லி. ஆல்க ஹால்
விடை:
இ) 75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்கஹால்

Question 9.
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் …. [PTA-5]
அ) ஈரம் மீது அதிக நாட்டம்
ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம்
இ) ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை
விடை:
அ) ஈரம் மீது அதிக நாட்டம்

Question 10.
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ………….
அ) ஃபெரிக் குளோரைடு
ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
இ) சிலிக்கா ஜெல்
ஈ) இவற்றுள் எதுமில்லை
விடை:
இ) சிலிக்கா ஜெல்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை …………….. என அழைக்கிறோம். (GMQP-2019)
விடை:
கரைபொருள்

Question 2.
திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ………….
விடை:
பாதரசத்துடன் கலந்த சோடியம் (இரசக் கலவை)

Question 3.
கரைதிறன் என்பது ……………….. கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.
விடை:
100

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 4.
முனைவுறும் சேர்மங்கள் ………… கரைப்பானில் கரைகிறது.
விடை:
முனைவுறு

Question 5.
வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது ஏனெனில் …….
விடை:
திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும்

III. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 50
விடை:
1-இ,
2- அ,
3-ஈ,
4-ஆ

IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.
விடை:
தவறு.
சரியான விடை: இருமடிக்கரைசல் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது.

Question 2.
ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர். [PTA-4)
விடை:
தவறு.
சரியான விடை: ஒரு கரைசலில் குறைந்த அளவு எடை கொண்ட கூறுக்கு கரைபொருள் என்று பெயர்.

Question 3.
சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும். [PTA-4]
விடை:
தவறு.
சரியான விடை: சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீர்க்கரைசல் ஆகும்.

Question 4.
பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்பாடு MgSO4.7H2O
விடை:
தவறு.
சரியான விடை: பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்பாடு FeSO4.7H2O

Question 5.
சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
கரைசல் – வரையறு:
விடை:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் ஒரு படித்தான கலவை கரைசல் எனப்படும்.

Question 2.
இருமடிக்கரைசல் என்றால் என்ன?
விடை:
ஒரு கரைபொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் இருமடிக்கரைசல் எனப்படும்.

Question 3.
கீழ்க்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக.

  1. திரவத்தில் வாயு (PTA-1)
  2. திரவத்தில் திண்ம ம் (PTA-1)
  3. திண்மத்தில் திண்மம்
  4. வாயுவில் வாயு

விடை:

  1. நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு (சோடா நீர்)
  2. நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு
  3. தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர் (உலோகக் கலவைகள்)
  4. ஆக்ஸிஜன் – ஹீலியம் வாயுக்கலவை

Question 4.
நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  1. நீர்க்கரைசல் : எந்தவொரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க் கரைசல் எனப்படும்.
  2. நீரற்ற கரைசல் : எந்த ஒரு கரைசலில் நீரைத்தவிர, பிற திரவங்கள் கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் நீரற்ற கரைசல் என அழைக்கப்படுகிறது.

Question 5.
கன அளவு சதவீதம் – வரையறு.
விடை:
(i) ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் கன அளவை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு சதவீதம் என வரையறுக்கப்படுகிறது.
(ii)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 58

Question 6.
குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்? [PTA-5]
விடை:

  1. குளிர் பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு ஆக்ஸிஜன் கரைந்துள்ளது.
  2. ஏனெனில், வெப்பநிலை குறையும் போது ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது. எனவே நீர்வாழ் உயிரினங்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வாழ்கின்றன.

Question 7.
நீரேறிய உப்பு – வரையறு.
விடை:

  1. அயனிச் சேர்மங்கள் அவற்றின் தெவிட்டிய கரைசலில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நீர் மூலக்கூறுகளுடன் சேர்ந்து படிகமாகிறது.
  2. இந்தப் படிகங்களுடன் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையே படிகமாக்கல் நீர் எனப்படும்.
  3. அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 8.
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும்போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?
விடை:

  1. நிறமற்ற, நீரற்ற காப்பர் சல்பேட் உப்பில் சில துளி நீரினைச் சேர்க்கும்போது அல்லது குளிர்விக்கும்போது கரைசலில் உள்ள மூலக்கூறுகள் நெருங்கி அமைகின்றன.
  2. எனவே, அவை நீரேறிய உப்பாக அல்லது படிகங்களாக மாறுகின்றன.

Question 9.
ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க.
(அ) அடர் சல்பியூரிக் அமிலம்
(ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட்
(இ) சிலிக்கா ஜெல்
(ஈ) கால்சியம் குளோரைடு
(உ) எப்சம் உப்பு
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 60

VI. விரிவாக விடையளி

Question 1.
குறிப்பு வரைக: அ) தெவிட்டிய கரைசல் ஆ) தெவிட்டாத கரைசல்.
விடை:
(அ) தெவிட்டிய கரைசல் :
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசல் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் தெவிட்டிய கரைசல். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது. மேலும் கரைபொருளைச் சேர்க்கும்போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது. –

(ஆ)தெவிட்டாத கரைசல்:
குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 10 கி அல்லது 20 கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.

Question 2.
கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக. . (GMQP-2019)
விடை:
ஒரு கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவைகளாவன:

(i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை
(ii) வெப்பநிலை
(iii) அழுத்த ம்

(i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை:

  • கரைதிறனில், கரைப்பான் மற்றும் கரைபொருளின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நீர் பெரும்பான்மையான பொருட்களை கரைக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், சில பொருள்கள் நீரில் கரைவதில்லை.
  • இதனையே ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது என்கிறோம்.
  • கரை பொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் போதுதான் கரைதல் நிகழ்கிறது.
  • முனைவுறும் சேர்மங்கள் *முனைவுறும் கரைப்பானான நீரில் எளிதில் கரைகிறது.
  • முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறாக் கரைப்பானில் எளிதில் கரைகிறது.
  • ஆனால் முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறு கரைப்பானிலும், முனைவுறுச் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானிலும் கரைவதில்லை.

(ii) வெப்பநிலை:
திரவத்தில் திண்மங்களின் கரைதிறன்:

  • பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது.
  • வெப்பக்கொள் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும்போது கரைதிறன் அதிகரிக்கிறது.
  • வெப்ப உமிழ் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது.

திரவத்தில் வாயுக்களின் கரைதிறன்:

  • திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் குறைகிறது.
  • திரவத்தின் வெப்பநிலை குறையும் போது வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.

(iii) அழுத்த ம் :

  • வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டுமே அழுத்தத்தின் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
  • திரவ அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 3.
(i) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது? [PTA-4]
(ii) கரைதிறன் – வரையறு.
விடை:
(i) MgSO4.7H2O வெப்ப விளைவு:
மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் படிகத்தை வெப்பப்படுத்தும் போது ஏழு நீர் மூலக்கூறுகளை இழந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 65
(ii) கரைதிறன்
கரைதிறன் என்பது எவ்வளவு கரைபொருள் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையும் என்பதற்கான அளவீடாகும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 66

Question 4.
ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை? (PTA-2; Qy-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 70

Question 5.
180 கி நீரில் 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 71

Question 6.
15லி எத்தனால் நீர்க்கரைசலில் 3.5லி எத்தனால் கலந்துள்ளது. எத்தனால் கரைசலின் கன அளவு சதவீதத்தை கண்டறிக. [PTA-2] விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 72

VII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி. சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதே வகை சர்க்கரையை 250 மி.லி. குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்? [PTA-6]
விடை:

  1. விணு சர்க்கரையை வேகமாக கரைப்பார். ஏனெனில், குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை, சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
  2. ஏனெனில், வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது.

Question 2.
‘A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. ‘B’-இல் நீரைச் சேர்க்கப்படும்போது ‘B’ மீண்டும் ‘A’ ஆக மாறுகிறது. ‘A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க. [Qy-2019]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 79

Question 3.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக.
விடை:

  1. குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குகின்றன.
  2. ஏனெனில், மலை உச்சியில் அழுத்தம் குறைவதால் கரைதிறனும் குறைகிறது.
  3. இதனால் CO2 வாயு குமிழ்களாக வெளியேறுகிறது.

கருத்தியல் சிந்தனை

Question 1.
அனைத்து கரைசல்களும் கலவைகளே. ஆனால், அனைத்து கலவைகளும் கரைசல்கள் அல்ல; ஏன்?
விடை:

  1. கரைசல்கள் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் கலந்த கலவையாகும். இது ஒருபடித்தான கலவை. எ.கா. உப்பு + நீர்
  2. ஆனால், கலவையில் காணப்படும் பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயற்பியல் நிலைகளில் காணப்படும். இது ஒருபடித்தானதாகவோ. பலபடித்தானதாகவோ இருக்கலாம்.
    எ.கா. உப்பு + நீர் (ஒருபடித்தான கலவை) மணல் + நீர் (பலபடித்தான கலவை)
    ஆகவே அனைத்து கலவைகளும் கரைசல்கள் ஆகாது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 2.
உங்களிடம் சோடியம் குளோரைடு மாதிரி கரைசல்கள் இரண்டு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், எது தெவிட்டிய கரைசல் என்று அடையாளம் காண முடியுமா? ஆம் எனில் எவ்வாறு அடையாளம் காண்பாய்?
விடை:

  1. ஆம். அடையாளம் காண முடியும்.
  2. எக்கரைசலில் சோடியம் குளோரைடை மேலும் கரைக்க முடியாதோ அது தெவிட்டிய கரைசல் ஆகும். எக்கரைசலில் சோடியம் குளோரைடை மேலும் கரைக்க முடியுமோ அது தெவிட்டாத கரைசல் ஆகும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
கரைசல்களின் கன அளவு சதவீதம் வெப்பநிலை அதிகரிக்கும்போது குறைவதற்கான காரணம் [PTA-2]
(அ) திரவங்களின் வெப்ப விரிவு
(ஆ) திரவங்களின் குளிர் விளைவு
(இ) கரைசலின் செறிவு அதிகமாதல்
(ஈ) கரைசலின் செறிவு குறைதல்
விடை:
அ) திரவங்களின் வெப்ப விரிவு

Question 2.
25 விழுக்காடு (25%) எத்தனால் கரைசல் என்பது [PTA-4]
(அ) 25 மிலி எத்தனால் 100 மிலி நீரில் உள்ளது
(ஆ) 25 மிலி எத்தனால் 25 மிலி நீரில் உள்ளது
(இ) 25 மிலி எத்தனால் 75 மிலி நீரில் உள்ளது
(ஈ) 75 மிலி எத்தனால் 25 மிலி நீரில் உள்ளது
விடை:
இ) 25 மிலி எத்தனால் 75 மிலி நீரில் உள்ளது

2 மதிப்பெண்கள்

Question 1.
சேர்மம் A என்பது நிறமற்ற, படிக வடிவமுடைய, நீரேறிய மெக்னீசியதின் உப்பு ஆகும். இதை வெப்பப்படுத்தும் போது நீரற்ற உப்பாக மாறுகிறது. வெப்பப்படுத்தும்போது சேர்மம் A இழந்த நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை, பச்சை விட்ரியாலில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்குச் சமமானது.
(அ) சேர்மம் A-யை அடையாளம் காண்க.
(ஆ) இந்த வெப்பப்படுத்தும் வினைக்கான வேதிச் சமன்பாட்டைத் தருக.
விடை:
சேர்மம் A-மெக்னீசியம் சல்பேட் ஹெப்போஹைட்ரேட்வெப்பப்படுத்தும்போது 7 நீர்மூலக்கூறுகளை இழந்து MgSO4 என்ற நீரற்ற உப்பாக மாறுகிறது. பச்சை விட்ரியரிலில் உள்ள – (FeSO47H2O) 7 நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சேர்மம் A இழந்த நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சமம்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 75

Question 2.
300 கெல்வின் வெப்பநிலையில் 50 கிராம் நீரில் 10 கிராம் கரைபொருளைக் கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது எனில் கரைபொருளின் கரைதிறனைக் கணக்கிடுக.
விடை:
கரைபொருளின் நிறை = 10 கி
கரைப்பானின் நிறை = 50 கி
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 76

7 மதிப்பெண்கள்

Question 1.
கரைசல்கள் உருவாதல் தொடர்பான கீழ்காணும் கூற்றை ஆராய்ந்து ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக. “ஒத்த கரைப்பான்கள் ஒத்த கரை பொருளைக் கரைக்கின்றன.”
விடை:
“ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது”

  1. கரைபொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் போதுதான் கரைதல் நிகழ்கிறது. முனைவுறும் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் எளிதில் கரைகிறது.
  2. எ.கா: சமையல் உப்பு முனைவுறும் சேர்மம். எனவே இது முனைவுறும் கரைப்பானான நீரில் எளிதில் கரைகிறது.
  3. முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் எளிதில் கரைகிறது.
  4. எ.கா. ஈதரில் கரைக்கப்பட்ட கொழுப்பு. ஆனால், முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் கரைவதில்லை. அதுபோல, முனைவுறும் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் கரைவதில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
காப்பர் (II) சல்பேட் பென்டாஹைட்ரேட்-ன் பொதுப் பெயர் ………. [Qy-2019]
அ) பச்சை விட்ரியால்
ஆ) நீல விட்ரியால்
இ) ஜிப்சம்
ஈ) எப்சம் உப்பு
விடை:
ஆ) நீல விட்ரியால்

2 மதிப்பெண்கள்

Question 1.
298 K வெப்பநிலையில் 15கி நீரில், 1.5கி கரைபொருளை கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதே வெப்பநிலையில் கரைப்பானின் கரைதிறனைக் கண்டறிக. [Qy-2019]
விடை:
கரைப்பானின் நிறை = 1.5 கி
கரைபொருளின் நிறை = 15 கி
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 80

4 மதிப்பெண்கள்

Question 1.
(அ) 100 கி. நீரில் 25 கி சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன் கரைபொருளின் நிறை சதவீதத்தைக் காண்க.
[Sep.2020)
(ஆ) சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினைத் திருத்துக)
(i) அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய திரவ மருந்துகள், வாய் கழுவும் திரவங்கள், புரைத் தடுப்பான்கள், கிருமிநாசினிகள் போன்ற கரைசல்களில் உள்ள கரைபொருளின் அளவுகள் w/w என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது.
(ii) களிம்புகள், அமிலநீக்கிகள், சோப்புகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செறிவுகள் v/v என்று குறிப்பிடப்படுகிறது.
விடை:
(அ) கரைபொருளின் நிறை = 25 கி
கரைப்பானின் நிறை = 100 கி
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 85

(ஆ) (i) தவறு. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய திரவ மருந்துகள், வாய் கழுவும் திரவங்கள், புரைத் தடுப்பான்கள், கிருமிநாசினிகள் போன்ற கரைசல்களில் உள்ள கரைபொருளின் அளவுகள் v/v என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது.
(ii) தவறு. களிம்புகள், அமிலநீக்கிகள், சோப்புகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செறிவுகள் W/W என்று குறிப்பிடப்படுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 1 நமது பூமி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 1 நமது பூமி

5th Social Science Guide நமது பூமி Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தொலைவு _____________ ஆகும்.
விடை:
150 மில்லியன் கிலோ மீட்டர்

Question 2.
பூமியின் சுழற்சியினால் _______________ ஏற்படுகிறது.
விடை:
பருவ காலங்கள்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 3.
பனியால் சூழப்பட்டுள்ள கண்டம் ______________ ஆகும்.
விடை:
அண்டார்டிக்கா

Question 4.
_______________ மிகப் பெரிய கண்டமாகும்.
விடை:
ஆசியா

Question 5.
செந்நிறக்கோள் என அழைக்கப்படுவது ______________
விடை:
செவ்வாய்

Question 6.
நம் பூமி _______________ சதவீதம் உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.
விடை:
71%

II. பொருத்துக.

1. மிகச்சிறிய கண்டம் – தொலைவான கோள்
2. நீலக்கோள் – ஆஸ்திரேலியா
3. நெப்டியூன் – பூமி
விடை:
1. மிகச்சிறிய கண்டம் – ஆஸ்திரேலியா
2. நீலக்கோள் – பூமி
3. நெப்டியூன் – தொலைவான கோள்

III. சுருக்கமான பதில் :

Question 1.
புவியின் தோற்றம் வரையறு.
விடை:
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெடிப்பு” என்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அதன் காரணமாக எண்ணிலடங்கா விண்மீன்களும் வான் பொருள்களும் தோன்றின. இவை அனைத்தும் பொதுவாக பேரண்டம் என அழைக்கப்பட்டது. இதனை அண்டம் என்று குறிப்பிடுகின்றனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 2.
சூரிய மண்டலத்தை வரையறு.
விடை:
சூரியக் குடும்பத்தில் சூரியன் உட்பட எட்டு கோள்கள், மற்றும் அதன் துணைக்கோள்கள், குறுங்கோள்கள், எரிகற்கள், வால்நட்சத்திரங்கள் ஆகியவை உள்ளன. இந்த பொருள்கள் அனைத்தும் அதன் வலுவான ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்டுள்ளன.

Question 3.
புவியில் எத்தனை பெருங்கடல்கள் உள்ளன?
விடை:
பூமியில் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் தெற்குக் கடல், ஆகிய ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.

Question 4.
வேறுபடுத்துக: சுற்றுதல் – சுழலுதல்
விடை:
பூமிக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன. பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணமாக இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனை சுற்றி வலம் வருவதினால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

IV. பத்தி விடையளி:

Question 1.
பேரண்டம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
பேரண்டம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்தவெளி ஆகும். இப்பேரண்டமானது கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள், எரிகற்கள் மற்றும் துணைக்கோள்களை உள்ளடக்கியுள்ளது. பிரபஞ்சத்தின் துல்லியமான அளவு இன்னும் முழுவதுமாக அறியப்படவில்லை. பிரபஞ்சம் இன்னும் வெளிப்புறமாக விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 2.
புவிக்கோளின் தன்மை பற்றி விவரி.
விடை:
பூமி சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள ஐந்தாவது பெரிய கோளாகும். பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் அதே வேளையில் சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டும் வலம் வருகிறது.

பூமிக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன. பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணமாக இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனை சுற்றி வலம் வருவதினால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

V. விரிவாக விடையளி

Question 1.
சூரிய குடும்பத்தின் படம் வரைந்து விளக்குக.
விடை:
நமது சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. வெளிக் கோள்கள் வாயுக்களால் ஆனவை. அவை வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன். உள்-பாறை கோள்கள் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் ஆகும். உறைந்திருக்கும் கோள்கள் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 1

VI. வசயல்யாகு

Question 1.
கண்டங்களைக் கண்டுபிடித்து அவற்றின் பெயரை எழுது.
விடை:
பூமியின் மேற்பரப்பில் நாம் வாழ்கிறோம். இது 7 கண்டங்களையும் 5 பெருங்கடல்களையும் உள்ளடக்கியது.

ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா – ஆகியவை ஏழு கண்டங்கள் ஆகும்.

நாம் வாழும் ஆசியக் கண்டம்தான் அனைத்திலும் மிகப் பெரியது. ஆஸ்திரேலியா, மிகச்சிறிய கண்டம். அண்டார்டிக்கா கண்டம் பனி நிறைந்தது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 2

Question 2.
வரைபடத்தில் ஐந்து பெரிய கடல்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 3

Question 3.
உலக வரைபடத்தில் பாலைவனங்கள் மற்றும் காடுகளை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 4

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

VII. வரைபடப்பயிற்சி:

Question 1.
உலக வரைபடத்தில் கண்டங்களின் பெயர்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 2

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

10th Science Guide தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ……..
அ) 6, 16
ஆ) 7, 17
இ) 8, 18
ஈ) 7, 18
விடை:
ஈ) 7, 18

Question 2.
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை …..
அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஐசோடோப்பின் நிறை
ஈ) நியூட்ரானிக் எண்ணிக்கை
விடை:
அ) அணு எண்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 3.
ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது? (PTA-1)
அ) 17வது
ஆ) 15வது
இ) 18வது
ஈ) 16வது
விடை:
அ) 17வது

Question 4.
………………. என்பது ஆவர்த்த ன பண்பு
அ) அணு ஆரம்
ஆ) அயனி ஆரம்
இ) எலக்ட்ரான் நாட்டம்
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை
விடை:
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை

Question 5.
துருவின் வாய்ப்பாடு [Qy-2019]
அ) FeO × H2O
ஆ) FeO4 × H2O
இ) Fe2O3 × H2O
ஈ) FeO
விடை:
இ) Fe2O3 × H2O

Question 6.
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
அ) ஆக்ஸிஜனேற்றி
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி
இ) ஹைட்ரஜனேற்றி
ஈ) சல்பர் ஏற்றி
விடை:
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி

Question 7.
மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு ……….. எனப்படும்.
அ) வர்ண ம் பூசுதல்
ஆ) நாகமுலாமிடல்
இ) மின்முலாம் பூசுதல்
ஈ) மெல்லியதாக்கல்
விடை:
ஆ) நாகமுலாமிடல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 8.
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களை கொண்டது?
அ) He
ஆ) Ne
இ) Ar
ஈ) Kr
விடை:
அ) He

Question 9.
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்
அ) நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
இ) குறைந்த உருவளவு
ஈ) அதிக அடர்த்தி
விடை:
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்ப

Question 10.
இரசக் கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் (GMQP-2019)
அ) Ag
ஆ) Hg
இ) Mg
ஈ) AI
விடை:
ஆ) Hg

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.7க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு ………… ஆகும்.
விடை:
அயனித்தன்மை [PTA-5]

Question 2.
நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை ………. ஆகும்.
விடை:
அணு எண்]

Question 3.
தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் …………… ஆகும்.
விடை:
6வது தொடர்

Question 4.
Cl2 மூலக்கூறில் உள்ள CI அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98A எனில் CI அணுவின் ஆரம்
விடை:
0.99A

Question 5.
A, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது …..
விடை:
A+

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 6.
நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் …………
விடை:
ஹென்றி மோஸ்லே

Question 7.
அயனி ஆரம், தொடரில் ……. (குறைகின்றது, அதிகரிக்கின்றது)
விடை:
குறைகின்றது

Question 8.
…………. மற்றும் ………….. ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.
விடை:
லாந்தனைடுகள், ஆக்டினைடுகள்

Question 9.
அலுமினியத்தின் முக்கியத்தாது………. ஆகும்.
விடை:
பாக்சைட்

Question 10.
துருவின் வேதிப்பெயர்………. ஆகும்.
விடை:
நீரேற்றமடைந்த பெர்ரிக் ஆக்சைடு

III. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 1
விடை:
1- ஆ,
2- உ,
3-ஈ,
4-இ,
5-அ

V. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணுநிறையைச் சார்ந்தது. [Qy-2019]
விடை:
தவறு.
சரியான கூற்று: மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு எண்ணைச் சார்ந்தது

Question 2.
இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில் அயனி ஆரமானது தொடரில் அதிகரிக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செல்கையில் அயனி ஆரம் குறைகிறது.

Question 3.
எல்லா தாதுக்களும் கனிமங்களே. ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 4.
அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன் படுவதன் காரணம் அதன் வெள்ளியைப் போன்ற நிறமே.
விடை:
தவறு.
சரியான கூற்று: அலுமினியக்கம்பிகள், மின் கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன் கடத்தும் திறனே.

Question 5.
உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும். [Qy-2019]
விடை:
தவறு.
சரியான விடை: உலோகக்கலவை என்பது உலோகங்களின் ஒருபடித்தான கலவை ஆகும்.

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

கீழ்க்கண்ட வினாக்களை, கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்கவும்.

(i) கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
(ii) கூற்று சரி, காரணம் தவறு.
(iii) கூற்று தவறு, காரணம் சரி.
(iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

Question 1.
கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு.
காரணம் : ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
விடை:
(iii) கூற்று தவறு, காரணம் சரி.
குறிப்பு: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு, முனைவுறும் சகப்பிணைப்பு (Polar Covalent bond) ஆகும்.

Question 2.
கூற்று: மெக்னீசியத்தை இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
காரணம்: மெக்னீசியம், இரும்பைவிட வினைபுரியும் தன்மைமிக்கது.
விடை:
(i) , கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.

Question 3.
கூற்று : சுத்தப்படுத்தப்படாத தாமிர பாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது
காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.
விடை:
(iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
A என்பது செம்பழுப்பு உலோகம் இது. ‘O2‘ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A-யானது சிவப்பு நிற C-ஐ உருவாக்கும் எனில் A, B, C என்னவென்று வினைகளுடன் விளக்குக. [PTA-1]
விடை:
செம்பழுப்பு உலோகம் A என்பது தாமிரம் (காப்பர்) ஆகும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 25
முடிவு:-
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 26

Question 2.
A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A-ஆனது ‘O2‘ உடன் 800°C-யில் வினைபுரிந்து B-யை உருவாக்கும். A-யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப் பயன்படும். A மற்றும் B என்ன?
விடை:
வெள்ளியின் வெண்மை கொண்ட A உலோகம் அலுமினியம் ஆகும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 27
முடிவு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 28

Question 3.
துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக. (PTA-4)
விடை:

  1. இரும்பானது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பழுப்பு நிற, நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்குகிறது.
  2. இச்சேர்மமே துரு எனப்படும். இந்நிகழ்ச்சி துருபிடித்தல் எனப்படும்.
    4Fe + 3O2 + x H2O → 2 Fe2O3.xH2O
    (துரு)

Question 4.
இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.
விடை:

  1. ஆக்ஸிஜன் (காற்று)
  2. நீர்

VII. விரிவாக விடையளி.

Question 1.
அ) பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தை சேர்ப்பதன் காரணம் என்ன?
விடை:

  1. பாக்சைட் தாதுவினை நன்கு தூளாக்கி, சலவை சோடாவுடன் 150°C வெப்பநிலையில், குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும்போது, சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது.
    Al2O3 + 2 NaOH → 2NaAlO2 + H2O
  2. இதனை நீரினால் நீர்க்கச் செய்து அலுமினியம் ஹைட்ராக்சைடு பெறப்படுகிறது.
  3. இதனை 1000°C வெப்பநிலையில் உலர்த்திட, அலுமினா உருவாகிறது.
  4. அலுமினாவை மின்னாற்பகுப்பு மூலம் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.
  5. ஆக்சைடை, ஹைட்ராக்சைடாக மாற்றி ஒடுக்குவதற்காக பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரம் சேர்க்கப்படுகிறது.

ஆ) அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?
விடை:

  1. அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன் சேர்க்கப்படும் மற்றொரு மின்பகுளி ஃப்ளூரஸ்பார் ஆகும்.
  2. இது மின்பகுளியின் உருக்கு வெப்ப நிலையைக் குறைக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 2.
ஒரு உலோகம் A-யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A-ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D ஐ உருவாக்கும். D யானது வாயுநிலை சேர்மம் எனில் A, B, C மற்றும் D எவை?
விடை:
உலோகம் A ஆனது காப்பர் ஆகும்.
2Cu + O2 + CO2 + H2O → CuCO3. Cu (OH)2
(B) (கார காப்பர் கார்பனேட்)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 50
முடிவு:-
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 51

Question 3.
ஊது உலையில் உருக்கிப் பிரிதலை விவரி.
விடை:
ஊது உலையில் உருக்கிப்பிரித்தல் : வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8 : 4 : 1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக் கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது. உலையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்) :

  1. இந்தப் பகுதியின் வெப்பநிலை 1500°C ஆகும் வெப்பக் காற்றுடன் தாதுக்கலவை சேரும்போது, ஆக்சிஜனுடன் எரிந்து CO2வாக மாறுகிறது.
  2. இவ்வினையிலிருந்து வெப்ப ஆற்றல் வெளியாவதால் வெப்ப உமிழ் வினை எனப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 53

நடுப்பகுதி அல்லது உருக்கு மண்டலம்

(i) இப்பகுதி 1000°C வெப்பவினையில் உள்ளது. இங்கு CO2 ஆனது CO ஆக ஒடுக்கமடைகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 52
(ii) சுண்ணாம்புக்கல் சிதைந்து, கால்சியம் ஆக்சைடையும் CO2– வையும் தரும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 53.2

(iii) மேற்கண்ட இருவினைகளில், வெப்பம் உட்கவரப்படுவதால் வெப்ப கொள்வினைகள் ஆகும். கால்சியம் ஆக்சைடு மணலுடன் சேர்ந்து கால்சியம் சிலிகேட் எனும் கசடாகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 54

மேற்பகுதி (ஒடுக்கு மண்டலம்)

(i) இப்பகுதியில் 400°C வெப்பநிலையில் ஃபெரிக் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மூலம் இரும்பாக ஒடுக்கம் அடைகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 55

(ii) கசடை நீக்கிய பிறகு, உருக்கிய இரும்பானது, உலையின் அடியில் சேகரிக்கப்படுகிறது. இவ்விரும்பு மீண்டும் உருக்கப்பட்டு விதவித அச்சுக்களில் வார்க்கப்படுதால், இது வார்ப்பிரும்பு எனப்படும்.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
A என்ற உலோகம் 3-ஆம் தொடரையும் 13ம் தொகுதியையும் சார்ந்தது. செஞ்சூடேறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A-யானது NaOH உடன் சேர்ந்து C-ஐ உருவாக்கும் எனில் A,B,C எவை எவை என வினைகளுடன் எழுதுக.
[PTA-1]
விடை:
3-ஆம் தொடரையும் 13ம் தொகுதியையும் சார்ந்த உலோகம் அலுமினியம் (A).
2 Al + 3H2O → Al2O3 + 3H2
(B)
(அலுமினியம் ஆக்சைடு)
2A1 + 2 NaOH + 2 H2O → 2 NaAlO2 + 3H2
(C)
(சோடியம் மெட்டா அலுமினேட்)
முடிவு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 58

Question 2.
எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும், ஏன்? [PTA-3; Qy-2019]
விடை:

  1. நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினிய உலோகத்துடன் வினைபுரியாது.
  2. மாறாக, அலுமினியத்தின் மேல் ஆக்சைடு படலம் உருவாவதால், அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.

Question 3.
(a) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
(b) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
(c) இப்பண்பு தொடரிலும் தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
விடை:
(a) முனைவுறும் சகப்பிணைப்பு (Polar covalent bond)
(b) எலக்ட்ரான் கவர்தன்மை
(c)

  1. தொடரில், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும்போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும். ஏனெனில் அணுக்கரு மின்சுமை அதிகரிக்கும் போது எலக்ட்ரான் கவர்ச்சி விசை அதிகமாகும்.
  2. தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது. ஏனெனில் ஆற்றல் மட்டத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
காப்பர் ஒரு செம்பழுப்பு நிற உலோகம், காப்பர், ஆக்ஸிஜனுடன் 1370K-ஐ விடக் குறைந்த வெப்பநிலையில் வினைபுரிந்து கருமைநிற A என்ற சேர்மத்தைத் தருகிறது. காப்பர், ஆக்சிஜனுடன், 1370K ஐ விட உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து சிவப்பு நிற சேர்மம் B-ஐத் தருகிறது. A, B உருவாகும் வினைகளுக்கான சமன் செய்யப்பட்ட வேதிச் சமன்பாடுகளை எழுதுக. [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 60

Question 2.
(i) ‘X’ என்ற தனிமம் நவீன தனிம வரிசை அட்டவணையில் 1-வது தொகுதியை சேர்ந்தது. X என்பது ஒரு வாயு மேலும் அதனுடைய சகபிணைப்பு ஆர மதிப்பு 0.37A°. Xஐக் கண்டறிந்து அதன் வேதிக் குறியீட்டை எழுதுக. [PTA-6]
விடை:
ஹைட்ரஜன் – 1வது தொகுதி தனிமம். சகப்பிணைப்பு ஆர மதிப்பு 0.37A° கொண்ட தனிமம். ஹைட்ரஜனின் வேதி குறியீடு – H. ஹைட்ரஜன் மூலக்கூறின் குறியீடு – H2.

(ii) A என்ற ஓர் உலோகம் நவீன தனிமவரிசை அட்டவணையில் போரான் குடும்பத்தை
சேர்ந்தது மற்றும் சிறந்த ஒடுக்கியாக செயல்படக் கூடியது. இது இரும்பு ஆக்சைடை இரும்பாக ஒடுக்குகிறது. மேலும் இது சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகிறது. A என்ற உலோகம் இரும்பு ஆக்சைடை ஒடுக்குவதற்கான சமன் செய்யப்பட்ட வேதிச் சமன்பாட்டை எழுதுக. [PTA-6]
விடை:
போரான் குடும்பத்தை சேர்ந்தது.
இரும்பு ஆக்சைடை இரும்பாக ஒடுக்குகிறது.
Fe2O2 + 2Al → 2Fe + Al2O3 + வெப்ப ஆற்றல்
அலுமினியம், சமையல் பாத்திரங்கள் செய்வதற்கு பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 3.
(i) பின்வரும் கூற்றுகளிலிருந்து தனிம வரிசை அட்டவணையில் அவை எந்த தொகுதியைச் சேர்ந்தவை எனவும், அத்தொகுதியைச் சேர்ந்த ஏதேனும் இரண்டு தனிமங்களின் பெயர்களைத் தருக. (PTA-1)
அ) இந்தத் தொகுதி தனிமங்களின் அணுக்கள் மிகவும் நிலையான எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டவை.
ஆ இந்தத் தொகுதி தனிமங்கள் பெரும்பாலும் வேதி வினைகளில் ஈடுபடுவது இல்லை.
விடை:
18வது தொகுதித் தனிமங்கள் (அல்லது) பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள் – He, Ne, Ar, Kr.

Question 4.
காப்பர் பைரைட்டுகள் காப்பரின் முதன்மையான தாது ஆகும். இது நுரைமிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. காரணங்கள் தருக.
[PTA-4]
விடை:
காப்பர் பைரைட்டுகள் காப்பரின் முதன்மையான தாதுவாகும். இது நுரைமிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
நுரைமிதப்பு முறை: பைன் ஆயிலின் மூலம் தாதுக்களையும், நீரின் மூலம் தாதுக்கூளங்களையும் எந்த அளவிற்கு எளிதில் ஈரப்பதம் ஏற்ற முடியுமோ, அதுவே, இம்முறையின் தத்துவமாகும். லேசான தாதுக்களான, சல்பைடு தாதுக்கள், இம்முறையில் அடர்ப்பிக்கப்படுகின்றன.

(ii) எ.கா ஜிங்க் ப்ளன்ட் ZnS முறை:
நன்கு தூளாக்கப்பட்ட தாதுவானது, எண்ணெயும், நீரும் கொண்ட ஒரு பெரிய தொட்டியில் இடப்பட்டு, அவற்றின் மேல் நன்கு அழுத்தப்பட்ட காற்று செலுத்தப்படுகின்றது. தாதுவானது எண்ணெயின் மூலம் ஈரப்படுத்தப்பட்டு நுரைவடிவில், தாதுக் கூளத்திலிருந்து பிரிக்கப்படுகின்றது. வெளிப்பரப்பிற்கு வந்துவிடும், மாசுக்கள் அடியில் தங்கிவிடும். எ.கா. ஜிங்க் ப்ளன்ட் (ZnS).
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 58.2

7 மதிப்பெண்கள்

Question 1.
தனிமங்களின் நவீன ஆவர்த்தன அட்டவணையில் காணப்படும் ஆவர்த்தன பண்புகள் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளுக்கான விளக்கங்களைத் தருக. [PTA-6]
(அ) ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரமதிப்புகள் குறைகின்றன. ஆனால் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும்போது அவை அதிகரிக்கின்றன.
(ஆ) எலக்ட்ரான் நாட்டத்தின் மதிப்புகள் ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும் போது அதிகரித்தும் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது குறைந்தும் காணப்படுகின்றன.
(இ) அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது அதிகரித்தும் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாகச்செல்லும் போது குறைந்தும் காணப்படுகின்றன.
விடை:
(அ) மேலிருந்து கீழாக அணு ஆரம் அதிகரிக்கிறது.
காரணம்: வெளிக்கூட்டு எண் அதிகரிப்பது.
இடமிருந்து வலமாக அணு ஆரம் குறைகிறது.
காரணம்: வெளிக்கூட்டு எண் மாறாது. எனினும், புரோட்டான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை அதிகரித்து, அணுவின் உருவளவு சுருங்குகிறது.

(ஆ) மேலிருந்து, கீழாக எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது.
காரணம் : அணு ஆரம் அதிகரிப்பதால், வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் இலகுவாக பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது.
இடமிருந்து, வலமாக எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கிறது.
காரணம் : அணு ஆரம் குறைவதால் எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கிறது.

(இ) இடமிருந்து வலமாக அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது.
காரணம் : இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரம் குறைவதால், எலக்ட்ரான்களை நீக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
காரணம் : அணு ஆரம் அதிகரிப்பதால், வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் இலகுவாக பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எலக்ட்ரான்களை நீக்குவதற்கு குறைவாக ஆற்றல் தேவைப்படுகிறது.

அரசு தேர்வு வினா-விடை

4 மதிப்பெண்கள்

Question 1.
அரிமானத்தை தடுக்கும் வழிமுறைகளை எழுது. [Hy-2019; Sep.20]
விடை:
1. உலோகக் கலவையாக்கல்:
உலோகங்களை ஒன்றோடொன்று கலந்து கலவையாக்கல் மூலம், அரிமானத்தை தடுக்கலாம்.
எ.கா. துருப்பிடிக்கா இரும்பு.
2. புறப்பரப்பை பூசுதல் :
உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இதன் வகைகளாவன
அ. நாகமுலாம் பூசுதல் : இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதற்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.
ஆ. மின்முலாம் பூசுதல் : ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல், மின்சாரத்தின் மூலம் பூசுதல் மின்முலாம் பூசுதல் ஆகும்.
இ. ஆனோட்டாக்கல் : உலோகத்தின் புறப் பரப்பை, மின் வேதிவினைகளின் மூலம், அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வு ஆனோடாக்கல் ஆகும். அலுமினியம் இந்த முறைக்கு பயன்படுகிறது.
ஈ. கேத்தோடு பாதுகாப்பு: எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும், பாதுகாக்க வேண்டிய உலோகத்தைக் கேத்தோடாகவும் கொண்டு, மின் வேதி வினைக்கு உட்படுத்தும் நிகழ்வு கேத்தோடு பாதுகாத்தல் ஆகும். இவ்வினையில் எளிதில் அரிபடும் உலோகம் தியாக உலோகம் எனப்படும்.