Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

6th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
_____ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல
அ) தங்க மோதிரம்
ஆ) இரும்பு ஆணி
இ) ஒளி
ஈ) எண்ணெய்த்துளி
விடை:
இ) ஒளி

Question 2.
400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ண த்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்.
அ) 400 மி.லி
ஆ) 600 மி.லி
இ) 200 மி.லி
ஈ) 800 மி.லி
விடை:
இ) 200 மி.லி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 3.
தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _____ முறையில் நீக்கலாம்
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
ஆ) வடிகட்டுதல் இ காந்தப்பிரிப்பு
ஈ) தெளிய வைத்து இறுத்தல்
விடை:
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்

Question 4.
அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை _____ முறையில் நீக்கலாம்
அ) வடிகட்டுதல்
ஆ) வண்டலாக்குதல்
இ) தெளிய வைத்து இறுத்தல்
ஈ) புடைத்தல்
விடை:
ஈ) புடைத்தல்

Question 5.
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்தபின்வருவனவற்றுள் _____ அவசியம் தேவைப்படுகிறது. அ) மழை
ஆ) மண்
ஆ) மண்
இ) நீர்
ஈ) காற்று
விடை:
ஈ) காற்று

Question 6.
_____ வகையான கலவையினை, வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
அ) திடப்பொருள் – திடப்பொருள்.
ஆ) திடப்பொருள் – நீர்மம்
இ) ‘நீர்மம் – நீர்மம்
ஈ) நீர்மம் – வாயு
விடை:
ஆ) திடப்பொருள் – நீர்மம்

Question 7.
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல
அ) பாலுடன் காபி
ஆ) எலுமிச்சை ஜூஸ்
இ) நீர்
ஈ) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரிம்.
விடை:
இ) நீர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

II. பின்வரும் கூற்று சரியா அல்லது தவறா எனக்கூறு. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

அ) காற்று அழுத்தத்திற்கு உட்படாது
விடை:
தவறு. காற்று அழுத்தத்திற்கு உட்படும்.

ஆ) திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு
விடை:
தவறு. திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட பருமன் உண்டு.

இ) திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகருகின்றன,
விடை:
தவறு. திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகருவதில்லை,

ஈ) சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை வடிகட்டுதல் மூலம் பிரித்தெடுக்கலாம்.
விடை:
தவறு. சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை தெளியவைத்து இறுத்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்.

உ) திடப்பொருள்களில் இருந்து நீர்மப்பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.
விடை:
தவறு. நீர்மப்பொருள்களிலிருந்து திண்மப் பொருட்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.

ஊ) தானியத்தையும் உமியையும் தூற்றுதல் மூலம் பிரிக்கலாம்.
விடை:
சரி.

ஏ) காற்று ஒரு தூய பொருளாகும்
விடை:
தவறு காற்று ஒரு கலவை ஆகும் (அல்லது) காற்று ஒரு தூயபொருள் அல்ல.

ஏ) தயிரிலிருந்து வெண்ணெய் வண்டலாக்குதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
விடை:
தவறு. தயிரிலிருந்து வெண்ணெய் கடைதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

III. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 40

ஆ)
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 41
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 42

IV. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பருப்பொருள் என்பது ………. ஆல் ஆனவை
விடை:
அணுக்களால்

Question 2.
திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ……. ஐ விடக் குறைவு
விடை:
நீர்மத்தை

Question 3.
நெல் தாவரத்திலிருந்து தானியங்களை ……… முறை மூலம் பிரித்தெடுக்கலாம்
விடை:
கதிரடித்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 4.
உப்புமா வில் இருந்து …… முறையில் மிளகாயினை நீக்கலாம்
விடை:
கைகளால்
தெரிந்தெடுத்தல்

Question 5.
நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க ………. முறை பயன்படுத்தப்படுகிறது
விடை:
வடிகட்டுதல்

Question 6.
ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றில் ……. காந்தத்தால் கவரப்படும்.
விடை:
ஊசி

Question 7.
குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக …….. நீராக அமையும்
விடை:
தூய்மையற்ற

V. பின்வரும் ஒப்புமையைப் பூர்த்தி செய்க

Question 1.
திண்மம்: கடினத்தன்மை :: வாயு: _____
விடை:
அழுத்தத்திற்கு உட்படும் தன்மை

Question 2.
துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது: வாயு:: ____ : திண்மம்
விடை:
துகள்களுக்கு இடையே மிகக்குறைந்த இடைவெளி உடையது

Question 3.
பாயும் தன்மை : ____ மற்றும் _____ :: குறிப்பிட்ட பருமன் : ____ மற்றும் _____
விடை:
நீர்மம் மற்றும் வாயு; திண்மம் மற்றும் நீர்மம்

Question 4.
உமி – தானியங்கள்: தூற்றுதல் : மரத்தூள் – சுண்ணக்கட்டி: _____
விடை:
வண்டலாக்குதல் மற்றும் தெளியவைத்து இறுத்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 5.
சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் : ____ : காபியை வடிகட்டியபின் அடியில் தங்கும் காபித்தூள் : ____
விடை:
கைகளால் தெரிந்தெடுத்தல் ; வடிகட்டுதல்

Question 6.
இரும்பு – கந்தகம் கலவை : _____ :: உளுத்தம் பருப்பு – கடுகு கலவை: உருட்டுதல்
விடை:
காந்தப்பிரிப்பு முறை

VI. குறுவினா

Question 1.
பருப்பொருள் – வரையறு
விடை:
பருப்பொருள் என்பது, எடை உள்ளதும், இடத்தை அடைத்துக் கொள்வதும் ஆகும். திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளில் பருப்பொருள்கள் காணப்படுகின்றன.

Question 2.
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருட்கள் எவ்வாறு நீக்கப்படுகிறது?
விடை:
நாம் சமைக்கப் பயன்படுத்தும் அரிசியிலுள்ள உமி, தூசி போன்ற நுண்ணிய மாசுப்பொருட்கள் வண்டலாக்குதல் முறையில் நீக்கப்படுகின்றன, நீரில் அரிசியைக் கழுவும் போது இலேசான மாசுக்கள் நீரில் மிதக்கும், எடை அதிகமுள்ள அரிசி நீரில் மூழ்கி அடியில் தங்கும்.

Question 3.
கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும் ?
விடை:
ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக் கொண்ட தூய்மையற்ற பொருளாகும். எனவே, கலவைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.

Question 4.
கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது எவ்வாறு கலவை என்று அழைக்கப்படுகிறது, என்பதைக் காரணத்துடன் நியாயப்படுத்தவும்
விடை:
22 கேரட் கோல்டு என்பது கலவைக்கு ஒரு உதாரணம். ஏனெனில், 22 கேரட் கோல்டு என்பது தங்கம் மற்றும் காப்பர் அல்லது தங்கம் மற்றும் காட்மியம் கலவையாகும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 5.
படிய வைத்தல் – வரையறு
விடை:
கரையாத திண்மம் மற்றும் நீர்மம் கொண்ட கலவையிலிருந்து கனமான திண்மத்தை அடியில் வண்டலாகப் படியவைக்கும் முறையே படிய வைத்தல்’ எனப்படும்.

Question 6.
தூய பொருளுக்கும் தூய்மையற்ற பொருளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைக் கூறுக
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 60

VII. சிறுவினா

Question 1.
இரப்பர் பந்தை அழுத்தும் போது வடிவம் மாறுகிறது. அதை திண்மம் என அழைக்கலாமா?
விடை:
ஆம். ஒரு திண்மப் பொருள் குறிப்பிட்ட வடிவத்தையும், பருமனளவையும் கொண்டுள்ளது. பந்தை அழுத்தும் போது, இரப்பர் பந்தின் வடிவம் மட்டுமே மாற்றமடைகிறது,

Question 2.
வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை ஏன்?
விடை:
வாயுவின் துகள்களுக்கு இடையே, குறைவான ஈர்ப்பு விசை செயல்படுவதால், வாயுக்கள் குறிப்பிட்ட வடிவம் பெற்றிருப்பதில்லை. எனவே, அவை கொள்கலனின் வடிவத்தைப் பெறுகின்றன.

Question 3.
பாலில் இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்,
விடை:
கடைதல் மற்றும் திரியச் செய்தல் முறையில் பாலிலிருந்து பாலாடைக்கட்டி பெறலாம். 6 முக்கிய படி நிலைகளில் இது பெறப்படுகிறது.

  1. அமிலத்தன்மையாக்கல்
  2. திரியச் செய்தல்
  3. தயிர் மற்றும் மோர் இவற்றைப் பிரித்தல்
  4. உப்பு இடுதல்
  5. வடிவமைத்தல்
  6. பக்குவப்படுத்துதல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.
விடை:
கொடுக்கப்பட்டுள்ள படம் சலித்தல் முறையில் பிரித்தெடுத்தலைக் காட்டுகிறது. இது வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 65
உதாரணம் – மாவிலிருந்து தவிடு நீக்குதல், மணலிலிருந்து சரளைக் கல்லை நீக்குதல்.

Question 5.
பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய் ?
விடை:
பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றைத் தூற்றுதல்’ முறையில் நீக்கலாம்.
இலேசான காகிதத்துண்டுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு தனிக்குவியலாகச் சேரும். எடை அதிகமுள்ள பருப்பு, தூற்றுபவரின் அருகே சிறு குவியலாகச் சேரும்.

Question 6.
உணவுக் கலப்படம் என்றால் என்ன?
விடை:
கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருள்களுடன், தேவையற்ற பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களைச் சேர்க்கும் செயல்முறைக்கு உணவுக் கலப்படம்’ என்று பெயர்.

Question 7.
ஒரு வெப்பமான கோடை நாளில் வீட்டிற்கு திரும்பிய திரு.ரகு மோர் பருக விரும்பினார். திருமதி. ரகுவிடம் தயிர் மட்டுமே இருந்தது. அவர் எவ்வாறு தயிரிலிருந்து மோரைப் பெறுவார் ? விளக்கவும்.
விடை:
திருமதி.ரகு தன்னிடமுள்ள தயிரில் அரை குவளை எடுத்து, அதனுடன் அரை குவளை நீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது அவர் மோர் பரிமாறலாம்.

VIII. விரிவான விடையளி

Question 1.
மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைக்கான படங்களை வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 80

Question 2.
சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய், நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உமது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்? பிரித்தல் முறையினைப் படிநிலைகளில் விளக்கும் படத்தினை வரையவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 85

IX. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
மலரின் அம்மா இரவு உணவை சமைக்கத் தயாராகிறார்கள். தவறுதலாக வேர்க்கடலையுடன் உளுத்தம் பருப்பினை கலந்துவிட்டார். இவ்விரண்டையும் பிரித்தெடுக்க உரிய முறையைப் பரிந்துரைத்து மலருக்கு உண்பதற்கு வேர்க்கடலை கிடைக்க வழி செய்க.
விடை:
துணி சல்லடை கொண்டு சலித்தல் முறையில் வேர்க்கடலை மற்றும் உளுந்தம் பருப்பைப் பிரித்தெடுக்கலாம். ஏனெனில், இரு திடப்பொருட்களும் வெவ்வேறு அளவுடையவை.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 2.
ஒரு குவளை நீரில் புளித் தண்ணீ ரும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கலவையா? எதனால் என்று உங்களால் கூற முடியுமா? இந்த கரைசல் இனிப்பானதா? புளிப்பானதா? அல்லது புளிப்பும் இனிப்பும் சேர்ந்ததா?
விடை:

  • ஒரு குவளை நீரில் புளித் தண்ணீ ர், சர்க்கரை கலந்தது ஒரு கலவை ஆகும்.
  • ஏனெனில், கலவை என்பது எளிதில் பிரிக்கக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டது.
  • இக்கலவை இனிப்பும், புளிப்பும் கலந்தது.

Question 3.
மூன்று நிலைமைகளில் உள்ள துகள்களின் அமைப்பை கீழே காணலாம்.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 86
அ) படம் 1 பருப்பொருளின் எந்த நிலைமையைக் குறிக்கிறது?
விடை:
படம் – 1: பருப்பொருளின் வாயு நிலையைக் குறிக்கிறது.

ஆ) எப்படத்தில் துகள்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகம்?
விடை:
படம் – 3 : துகள்களுக்கு இடையினான ஈர்ப்பு விசை அதிகம் திண்மநிலை

இ) திறந்த கலனில் வைக்க முடியாதது எது?
விடை:
படம் – 1 : உள்ள வாயுக்களைத் திறந்த கலனில் வைக்க முடியாது.

ஈ) கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது எது?
விடை:
படம் – 2 : உள்ள திரவம் கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது.

6th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தெழுதுக

Question 1.
பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை ?
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
அ) (i) மற்றும் (iii)
ஆ) (ii) மற்றும் (iv)
இ) (i) மற்றும் (iv)
ஈ) (iii) மற்றும் (iv)
விடை:
இ) (i) மற்றும் (iv)

Question 2.
மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது
அ) திரவங்க ள்
ஆ) பிளாஸ்மா துகள்கள்
இ) திண்மங்கள்
ஈ) வாயுக்கள்
விடை:
இ திண்மங்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எது பருப்பொருள் அல்ல?
அ) எலக்ட்ரான்
ஆ) இரத்தம்
இ) நிலா பாறை
ஈ) ஈரப்பதம்
விடை:
அ) எலக்ட்ரான்

Question 4.
உருவளவு, நிறம் மற்றும் வடிவம் அடிப்படையிலான மாறுபட்ட பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
ஆ) தூற்றுதல்
இ) கதிரடித்தல்.
ஈ) சலித்தல்
விடை:
அ). கைகளால் தெரிந்தெடுத்தல்

Question 5.
கோதுமை மாவுடன் கலப்படம் செய்யப்பட்ட ரவையைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை
அ) சலித்தல்
ஆ) வடிகட்டுதல்
இ) தூற்றல்
ஈ) கதிரடித்தல்
விடை:
அ) சலித்தல்

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 80.3

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
______ துகள்கள் குறிப்பிட்ட வடிவமாக நெருங்கிப் பொதிந்துள்ளன.
விடை:
திண்மத்

Question 2.
கிடைக்கும் இடத்தை நிரப்ப, இடம் முழுவதும் பரவும் தன்மையே ______ எனப்படும்.
விடை:
விரவுதல்

Question 3.
மிகவும் தூய்மையான தங்கத்தைக் குறிப்பது _____
விடை:
24கேரட்

Question 4.
பால் ஒரு _____
விடை:
கலவை

Question 5.
துணி துவைக்கும் இயந்திரத்தின் செயல்படும் தத்துவம் _____
விடை:
மைய விலக்கல்

IV. குறுவினா

Question 1.
பருப்பொருள்களின் ஏதேனும் இரு சிறப்புப் பண்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. பருப்பொருள் துகள்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது,
  2. பருப்பொருள் துகள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை உள்ளது

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 2.
கண்ணாடி எவ்வகைப் பருப்பொருள்?
விடை:
கண்ணாடி ஒரு திடப்பொருள் போன்று இருப்பினும் அதுவன்று. கண்ணாடி ஒரு வழிந்தோடக்கூடிய நீர்மம்.

Question 3.
சேர்மம் என்பது என்ன ?
விடை:
சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும்.

Question 4.
மாவிலிருந்து தவிடுநீக்கப் பயன்படும் முறையைக் குறிப்பிட்டு விவரி.
விடை:
மாவிலிருந்து ‘சலித்தல்’ முறையில் தவிடு நீக்கப்படுகிறது. வெவ்வேறு அளவுடைய திடப்பொருள்களைப் பிரித்தெடுக்க இம்முறை ஏற்றதாகும்.

Question 5.
தெளியவைத்து இறுத்தல் என்றால் என்ன ?
விடை:
வண்டலாக்குதலுக்குப்பின், வண்டலைப் பாதிக்காதவாறு மேல் அடுக்கிலுள்ள நீரினைக் கவனமாக மற்றொரு கலனிற்கு மாற்றுதலே தெளியவைத்து இறுத்தல் ஆகும்.

V. விரிவாக விடையளி

Question 1.
வாயுக்கள் மற்றும் திரவங்களுக்கு இடையேயான சில ஒற்றுமைகள் யாவை?
விடை:

  1. வாயுக்களுக்கும், திரவங்களுக்கும் குறிப்பிட்ட வடிவம் கிடையாது.
  2. வாயு மற்றும் திரவத் துகள்கள் நகரும் தன்மையுடையன, இந்த இயக்கத்தை விரவுதல் என்கிறோம்.
  3. திரவங்களை வாயுக்களாக ஆவியாக்கவும், வாயுக்களை திரவங்களாக ஆவி சுருங்கவும் (குளிர்தல்) செய்யலாம்.

Question 2.
தெளியவைத்து இறுத்தலும், வடிகட்டுதலும் எவ்வாறு வேறுபடுகின்றன.? இவற்றுள் எது விரைவானது?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 95
குறிப்பு: பொதுவாக, வடிகட்டுதல் முறையே, தெளியவைத்து இறுத்தலை விட விரைவானதும், முழுமையான பிரித்தல் முறையாகவும் கருதப்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 98

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

7th Science Guide விசையும் இயக்கமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
அ) சுழி
ஆ) r
இ) 2r
ஈ) \(\frac{r}{2}\)
விடை:
இ) 2r

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 1
அ) சீரான இயக்கத்தில் உள்ளது.
ஆ) ஓய்வு நிலையில் உள்ளது.
இ) சீரற்ற இயக்கத்தில் உள்ளது.
ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
விடை:
ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 2
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 3

Question 4.
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
ஆ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.
இ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
விடை:
அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்

Question 5.
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
ஆ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
இ) பொருளின் உயரத்தினை அதிகரித்தல்.
ஈ) பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.
விடை:
அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை குறைத்தல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.
விடை:
இடப்பெயர்ச்சி

Question 2.
திசைவேகம் மாறுபடும் வீதம் ___________ ஆகும்.
விடை:
முடுக்கம்

Question 3.
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.
விடை:
நேர் முடுக்கம்

Question 4.
வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ____________ மதிப்பனைத் தருகிறது.
விடை:
முடுக்கம்

Question 5.
ஒரு பொருள் நகர்த்தப்படும்போது ______________ சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.
விடை:
நடுநிலை

III.பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 4
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 5

IV. ஒப்புமை தருக

Question 1.
திசைவேகம் : மீட்டர்/விநாடி :: முடுக்கம் : ____________
விடை:
மீட்டர்/விநாடி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 2.
அளவுகோலின் நீளம் : மீட்டர் :: வானூர்தியின் வேகம் : ___________
விடை:
நாட்

Question 3.
இடப்பெயர்ச்சி/காலம் : திசைவேகம் :: தொலைவு/காலம் : ___________
விடை:
வேகம்

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
சீரான இயக்கத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் சீரான திசைவேகத்தைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஆசேர் கூறுகிறான். காரணம் தருக.
விடை:
………….
………….
…………

Question 2.
சஃபைரா மாறாத திசையில் மாறாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள். அவளது இயக்கத்தை தொடர்புபடுத்தி எழுதவும்.
விடை:
அவள் சீரான திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறாள்.

Question 3.
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
விடை:
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு “திசை வேகம் மாறுகிறது.
. “திசைவேகம்” ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகம் மாறுகிறது என்பதனைப் பற்றிய கவலை நமக்கு அளிக்கிறது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
பின்வரும் நிகழ்வுகளுக்கு தொலைவு – காலம் வரைபடத்தினை வரையவும்.
அ) மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து
ஆ) சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்து
விடை:
அ) மாறாத திசைவேகத்தில் இயங்கும் பேருந்து ஒன்று சமமான கால இடைவெளியில் சம அளவு தொலைவைக் கடந்துள்ளது என்பதை கீழ்வரும் தொலைவு – காலம் வரைபடம் விளக்குகிறது.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 6

ஆ) சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் மகிழுந்தின் மாறாத தொலைவை பொருத்து அதன் நேரமானது அதிகரிக்கும் இதனை பின்வரும் படத்தின் – (தொலைவு – காலம்) மூலம் அறியலாம்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 7

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 2.
வேகம் மற்றும் திசைவேகம் இவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டினைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 8

Question 3.
சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது?
விடை:
ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினைப் பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைத்தல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.

Question 4.
ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
விடை:
ஈர்ப்பு மையம்- எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.

VII. விரிவாக விடையளி

Question 1.
சமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
சமநிலை மூன்று வகைப்படும்
அ) உறுதிச் சமநிலை:

  • கூம்பானது மிக அதிக கோணத்திற்குச் சாய்க்கப்பட்டுப், பின்னர் விடப்பட்டாலும் கவிழ்ந்து விடாமல் மீண்டும் பழைய நிலையை அடையும்.
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 9
  • கூம்பு சாய்க்கப்படும் போது அதன் ஈர்ப்பு மையம் உயர்கிறது.
  • ஈர்ப்பு மையத்தின் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது சாய்க்கப்பட்ட நிலையிலும் அதன் அடிப்பரப்பிற்கு உள்ளேயே விழுகிறது.
  • எனவே அதனால் மீண்டும் தனது பழைய நிலையை அடைய முடிகிறது.

ஆ) உறுதியற்ற சமநிலை:

  • கூம்பானது சிறிது சாய்க்கப்பட்டாலும் கவிழ்ந்து விடும்.
  • கூம்பினைச் சாய்க்கும் போது ஈர்ப்பு மையம் அதன் நிலையிலிருந்து உயர்கிறது.
  • ஈர்ப்பு மையம் வழியாக வரையப்படும் செங்குத்துக் கோடானது அதன் அடிப்பரப்பிற்கு வெளியே விழுகிறது எனவே கூம்பானது கீழே கவிழ்கிறது.
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 10

இ) நடுநிலை சமநிலை:

  • கூம்பானது உருள்கிறது.
  • ஆனால் அது கீழே கவிழ்க்கப்படுவதில்லை .
  • கூம்பினை நகர்த்தும் போது அதன் மையத்தின் உயரம் மாறுவதில்லை
  • கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருக்கிறது.
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 11

Question 2.
ஒழுங்கற்ற ஒரு தகட்டின் ஈர்ப்பு மையத்தினைக் காணும் சோதனையை விவரி.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 12

  • தேவையான பொருள்கள்: ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டை நூல், ஊசல் குண்டு, தாங்கி
  • ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையில் மூன்று துளைகளை இடவும்.
  • படத்தில் காட்டியவாறு ஒரு துளையினைத் தாங்கியில் பொருத்தி அட்டையினைத் தொங்க விடவும்.
  • தாங்கியில் இருந்து அட்டையின் மேற்புறமாக அமையுமாறு குண்டு நூலினை தொங்க விடவும்.
  • அட்டையின் மேல் குண்டு நூலின் நிலையினை ஒரு கோடாக வரைந்து கொள்ளவும்.
  • மேற்கூறியவாறு மற்ற இருதுளைகளையும் தாங்கியில் இருந்து தொங்கவிட்டுக் கோடுகள் வரைந்து கொள்ளவும்.
  • மூன்று கோடுகளும் வெட்டும் புள்ளியின் நிலையினை X எனக் குறித்துக் கொள்ளவும்.
  • X. என்ற பள்ளியே ஒழுங்கற்ற வடிவமுடைய அட்டையின் ஈர்ப்பு மையம் ஆகும்.
  • மீட்டர் அளவு கோலின் ஈர்ப்பு மையம்: அளவு கோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தம்படும் போது சமநிலையில் நிற்கிறது.
  • ஒழுங்கான வடிவமுடைய பொருளான அளவுகோல் போன்ற பொருள்களுக்கு அதன் வடிவியல் மையமே ஈர்ப்பு மையம் ஆகும்.
  • ஈர்ப்பு மையம் தவிர வேறு புள்ளியில் தாங்கியின் மீது வைக்கப்படும் போது அளவுகோலானது கவிழ்ந்துவிடுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

VIII. கணக்கீடுகள்

Question 1.
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு மிதிவண்டியில் 15 நிமிடங்களில் சென்றடைகிறாள். சென்றடைகிற மிதிவண்டியின் வேகம் 2மீ/வி எனில் அவளது வீட்டிற்கும் பள்ளிக்கும் உள்ள தொலைவினைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
மிதிவண்டியின் வேகம் : 2 மீ/வி
கீதா தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு அடைய
எடுத்துக் கொண்ட நேரம் : 15 நிமிடம்

தீர்வு:
நிமிடம் = 15 × 60M = 900வி
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 13
தொலைவு = வேகம் × காலம்
= 2மீ/வி × 900வி = 1800மீ
= 1.8 கிலோ மீட்டர்
கீதாவின் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு
= 1.8 கி. மீட்டர்

Question 2.
ஒரு மகிழுந்து ஓய்வு நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர்/விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது?
விடை:
கொடுக்கப்பட்டவை :
திசைவேகம் = 20 மீட்டர்/விநாடி
காலம் = 10 விநாடி

தீர்வு :
தொடக்க திசைவேகம் μ = மீ/விநாடி
= முடிவு திசைவேகம் (v) = 20மீ/வி
= எடுத்துக் கொண்ட காலம் =10 விநாடி
= முடுக்கம் (a) = (v – μ)/t
= (20 – 0)/10
= 2மீ/விநாடி2

Question 3.
ஒரு பேருந்தின் முடுக்கம் 1மீ/வி2 எனில் அப்பேருந்தானது 50 கிமீ/வி என்ற வேகத்தில் இருந்து 100 கிமீ /வி
என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொள்ளும் காலத்தினைக் கணக்கிடுக.
விடை:
a = 1 மீ/வி2
V = 100)
μ = 50
\(\mathrm{a}=\frac{\mathrm{v}-\mu}{\mathrm{t}}\)
\(1=\frac{100-50}{t}\)
t = 50 விநாடி

ஃபேருந்து 50கிமீ/வி என்ற வேகத்தில் இருந்து 100கிமீ/வி என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொண்ட காலம்
t = 50 விநாடி

IX. பின்வரும் அட்டவணையை நிரப்புக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 14
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 15

7th Science Guide விசையும் இயக்கமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவற்றின் SI அலகு.
அ) மீட்டர்/விநாடி
ஆ) மீட்டர்
இ) மீட்டர்/விநாடி
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) மீட்டர்

Question 2.
ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ___________ ஆகும்
அ) 1.952 கி.மீ
ஆ) 1.752 கி.மீ
இ) 1.852 கி.மீ
ஈ) 1.652 கி.மீ
விடை:
இ) 1.852 கி.மீ

Question 3.
இரயில் நிலையத்திற்கு வரும் தொடர்வண்டியின் இயக்கம்
அ) சீரான திசைவேகம்
ஆ) சீரான வேகம்
இ) சீரற்ற திசைவேகம்
ஈ) சீரற்ற வேகம்
விடை:
இ) சீரற்ற திசைவேகம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 4.
கூம்பினை எவ்வாறு நகர்த்தினாலும் அதே நிலையிலேயே நீடித்து இருப்பது
அ) உறுதியற்ற சமநிலை
ஆ) நடுநிலை சமநிலை
இ) உறுதிச் சமநிலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) நடுநிலை சமநிலை

Question 5.
உசைன் போல்ட் 100 மீ தூரத்தினை _____________ எவ்வளவு விநாடிகளில் கடந்தார்.
அ) 8.58 விநாடி
ஆ) 9.58 விநாடி
இ) 9.78 விநாடி
ஈ) 10.78 விநாடி
விடை:
ஆ) 9.58 விநாடி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இரு புள்ளிகளுக்கிடையேயான ___________ பாதையில் மிகக் குறைந்த தொலைவு அமைகிறது.
விடை:
நேர்கோட்டுப்

Question 2.
வான் மற்றும் கடல் வழி போக்குவரத்துகளில் தொலைவினை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகு ____________ ஆகும்.
விடை:
நாட்டிக்கல் மைல்

Question 3.
இடப்பெயர்ச்சியில் ஏற்படும் மாறுபடும் வீதத்திற்கு ___________ என்று பெயர்.
விடை:
திசைவேகம்

Question 4.
ஒழுங்கான வடிவம் கொண்ட பொருள்களின் ஈர்ப்பு மையமானது பொதுவாக அதன் ____________ அமைகிறது.
விடை:
வடிவியல் மையத்தில்

Question 5.
பொம்மையின் ___________ அதன் மொத்த எடையும் பொம்மையின் மிகக் கீழான அடிப்பகுதியில் அமைந்து இதன் காரணமாகப் பொம்மையானது மிக மெல்லிய அலைவுடன் நடனம் போன்ற தொடர்ச்சியான இயக்கத்தினைத் தோற்றுவிக்கிறது.
விடை:
ஈர்ப்பு மையம்

III. சரியா? தவறா? தவறெனில் சரி செய்து எழுதுக

Question 1.
ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு கடக்கத் தேவைப்படும் வேகம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவினைக் கடந்தால் அப்பொருள் சீரான வேகத்தில் செல்கிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்.
விடை:
தவறு – காரணம்: தொலைவு மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்

Question 4.
ஒரு பொருள் ஒவ்வொரு விநாடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபாடு அடைவது இல்லை இதற்கு சீரற்ற முடுக்கம் ஆகும்.
விடை:
தவறு காரணம்: ஒரு பொருள் ஒவ்வொரு விநாடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபடுகின்றன இதற்கு சீரற்ற முடுக்கம் ஆகும்.

Question 5.
அளவு கோலானது ஒரு தாங்கியின் மீது அதன் ஈர்ப்பு மையத்தில் நிறுத்தப்படும் போது சமநிலையில் நிற்கிறது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 16

V. சரியான வார்த்தைகளை வரிசைப்படுத்துக.

Question 1.
20-20, 60-20, 100-20, 40-20, 80-20
விடை:
100-20, 80-20, 60-20, 40-20, 20-20

Question 2.
விழும் மழைத்துளியின் வேகம். பந்து எறியும் வேகம், சிறுத்தையின் வேகம், மனிதர்களின் நடையின் வேகம் .
விடை:
மனிதர்களின் நடையின் வேகம் → விழும் மழைத்துளியின் வேகம் → சிறுத்தையின் வேகம் → பந்து எறியும் வேகம்.

VI. ஒப்புமை தருக

Question 1.
சராசரி வேகம்; கடந்த மொத்தத் தொலைவு / எடுத்துக் கொண்ட மொத்தக் காலம் சராசரி திசைவேகம் ; ____________
விடை:
மொத்த இடப்பெயர்ச்சி/எடுத்துக் கொண்ட காலம்.

Question 2.
மகிழுந்து ஓய்வு நிலையில் இருத்தல், ஒவ்வொரு விநாடி காலத்திற்கும் தொலைவானது
மாறாமல் உள்ளது.
மகிழுந்து சீரான வேகத்தில் செல்லும்; ____________
விடை:
‘ஒவ்வொரு விநாடி காலத்திற்கும் 10 மீட்டர் அளவில் உள்ளது.

VII. காரணம் மற்றும் கூற்று கேள்விகள்

Question 1.
கூற்று : ஒரு பேருந்தானது தஞ்சையிலிருந்து திருச்சியை நோக்கி செல்கிறது.
காரணம் : வேகம் மற்றும் காலத்தின் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டு வரைப்படமானது வரையப்படுகிறது.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 2.
கூற்று : ஒவ்வொரு விநாடிக்கும் பஸ்ஸின் வேகமானது கணக்கிடப்படுவதில்லை.
காரணம் : பந்தயக் கார்கள் உயரம் குறைவாகவும் அகலமானதாகவும் தயாரிக்கப்படுவதால் அதன் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
ஒரு பொருளானது சூழி இடப்பெயர்ச்சியுடன் குறிப்பிட்டத் தொலைவில் நகர இயலுமா?
விடை:
முடியமெனில் உனது பதிலை உதாரணத்துடன் எழுதுக.

  • ஆம் ஒரு பொருளானது சூழி இடப்பெயர்ச்சியுடன் குறிப்பிட்ட தொலைவில் நகர இயலும்.
  • எ.கா ஒரு பொருளானது A என்ற புள்ளியில் புறப்பட்டு மீண்டும் அதே A என்ற புள்ளியை அடையும் எனில் அதன் இடப்பெயர்ச்சி சூழி ஆகும்.

Question 2.
சீரான இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளின் பாதை எவ்வாறு அமைந்து இருக்கும்?
விடை:
சீரான இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளின் பாதை ஒரு நேரான பாதையாக அமையும்.

Question 3.
சீரான மற்றும் சீரற்ற இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் தொலைவு காலம் வரைபடத்தின் தன்மை என்ன?
விடை:

  • சீரான இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் தொலைவு – காலம் வரைபடமானது “நேரான பாதையைக் கொண்ட ஒரு மாறாத சாய்வு ஆகும்.
  • சீரற்ற இயக்கத்திலுள்ள ஒரு பொருளின் தொலைவு – காலம் வரைபடமானது அதிகரித்தோ (அ) குறைந்துக் கொண்டோ செல்லும் சாய்வைக் கொண்ட ஒரு வளைவு பாதை ஆகும்.

IX. குறுகிய விடையளி

Question 1.
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 17

Question 2.
முக்கோணத்தின் பயன்களை எழுதுக.
விடை:
முக்கோணமானது முறையானது திசைவேகம் (V), இடப்பெயர்ச்சி (d), மற்றும் காலம் (t) இவற்றுக்கிடையே உள்ள தொடர்பினை எளிதாகப் புரிந்துக் கொள்ள உதவுகிறது.

v = d/t, t = d/v, d = vxt = கட்டம்.

Question 3.
எதிர்முடுக்கம் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து குறைந்து வந்தால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் எதிர் முடுக்கம் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 4.
தொலைவு – காலம், வேகம் – காலம், இரண்டு வரைபடத்தையும் ஒப்பிடுக.
விடை:
தொலைவு – காலம் வரைபடமும் வேகம் – காலம் வரைபடமும் ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவை நமக்குப் பொருளின் பயணம் பற்றிய வெவ்வேறு தகவல்களை அளிக்கின்றன.

Question 5.
சம நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் ஆரம்பநிலையினைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்.

X. விரிவான விடையளி

Question 1.
திசைவேகம் மற்றும் அதன் வகைகளை சரியான உதாரணத்துடன் விளக்குக.
விடை:

  • இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம் எனப்படும்.
  • சைவேகம் Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 18
  • திசைவேகத்தின் SI அலகு மீட்டர்/வினாடி
  • வகைகள்: –
    1. சீரான திசைவேகம்
    2. சீரற்ற திசைவேகம்.

1) சீரான திசைவேகம்

  • ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது தனது திசையினை மாற்றாமல் சீரான கால இடைவெளியில் சீரான இடப்பெயர்ச்சினை மேற்கொண்டால் அது சீரான திசைவேகத்தில்
  • இயங்குகிறது எனப்படும். – எ.கா. : வெற்றிடத்தில் பயணம் செய்யும் ஒளி.

2) சீரற்ற திசைவேகம்.

  • ஒரு பொருளானது தனது திசையையோ அல்லது வேகத்தினையோ மாற்றிக் கொண்டால் அப்பொருள் சீரற்ற திசைவேகத்தில் உள்ளது எனப்படும்.
  • எ.கா. : இரயில் நிலையத்திற்கு வரும் தொடர் வண்டியின் இயக்கம்.

Question 2.
முடுக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக?
விடை:
1) சீரான முடுக்கம் :
ஒரு பொருளில் சீரான கால இடைவெளியில் காலத்தினை பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் (அதிகரித்தல் (அ) குறைத்தல்) சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.

2) சீரற்ற முடுக்கம் :
ஒரு பொருளின் திசைவேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கமானது சீரற்ற முடுக்கம் எனப்படும்.

உதாரணம்
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 19
இங்கு ஒவ்வொரு நொடிக்கும் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் மாறுபடுவதைக் காணலாம். எனவே இம்முடுக்கம் சீரற்ற முடுக்கம் எனப்படும்.

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 20

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

6th Science Guide விசையும் இயக்கமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
வேகத்தின் அலகு _____அமீ
அ) மீ
ஆ) விநாடி
இ) கிலோகிராம்
ஈ) மீ/வி
விடை:
ஈ) மீ/வி

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்
ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்
இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ)அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு
அ) வேகம்=தொலைவு × காலம்
ஆ) வேகம்= தொலைவு / காலம்
இ) வேகம் = காலம் /தொலைவு
ஈ) வேகம் = 1/ (தொலைவு × காலம்)
விடை:
ஆ) வேகம் தொலைவு / காலம்

Question 4.
கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 : கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
அ) கூற்று 1 மட்டும் சரி
ஆ) கூற்று 2 மட்டும் சரி
இ) இரண்டு கூற்றுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ)கூற்று 1 மட்டும் சரி

II. கீழ்க்க ண்ட கூற்றுகள் சரியா/தவறா எனக் கூறு.தவறு எனில் சரியான விடைகள் விடையை எழுதுக.

Question 1.
மையப் புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 3.
மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.
சரியான விடை : இது சீரற்ற இயக்கம்
விடை:
தவறு

Question 4.
வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக ரோபாட்டுகள் செயல்படும். அக உணர்வு நிலையில் இருக்காது
விடை:
தவறு

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் _____
விடை:
நேர்க்கோட்டு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 2.
புவிஈர்ப்பு விசை _____ விசையாகும்.
விடை:
தொடா விசை

Question 3.
மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______ இயக்கமாகும்.
விடை:
தற்சுழற்சி இயக்கம்

Question 4.
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் ______
விடை:
சீரான இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 51
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 52

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல்: _____
விடை:
தொடா விசை

Question 2.
தொலைவு : மீட்டர் :: வேகம் : _____?
விடை:
மீ/வி

Question 3.
சுழற்சி இயக்கம்: பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : ___?
விடை:
தனிஊசல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒருயானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையை பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60.1

VII. வலை அட்டவனையைப் பூர்த்தி செய்க:

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 61

VIII. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.

Question 1.
தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் ___
விடை:
தொடா விசை

Question 2.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது _____
விடை:
இயக்கம்

Question 3.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் _____ எனப்படும்.
விடை:
அலைவு இயக்கம்

Question 4.
சம கால இடைவெளியில், சமதொலைவை கடக்கும் பொருளின் இயக்கம் _____
விடை:
சீரான இயக்கம்

Question 5.
நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் _____
விடை:
செயற்கை நுண்ணறிவு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

IX. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
விசை – வரையறு.
விடை:
விசை என்பது பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.

Question 2.
பொருள் நகரும் பாதையைப் பொறுத்து இயக்கங்களை எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:

  1. நேர்க்கோட்டு இயக்கம்
  2. வளைவுப்பாதை இயக்கம்
  3. வட்டப்பாதை இயக்கம்
  4. தற்சுழற்சி இயக்கம்
  5. அலைவு இயக்கம்
  6. ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
நீ இயங்கும் மகிழுந்தினுள் உட்கார்ந்திருக்கும் போது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப்பொறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?
விடை:
இயங்கும் மகிழுந்தினுள் நானும் என் நண்பனும் உட்கார்ந்திருக்கும் போது, என் நண்பனும், நானும் ஓய்வு நிலையில் இருப்போம் என கருதுகிறேன்.

Question 4.
பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் – விவரி
விடை:
ஒரு குறிப்பிட்டட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். எனவே, புவியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்.

Question 5.
சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 65

X. கணக்கிடுக.

Question 1.
ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
தீர்வு :
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 66
விடை:
80 கிலோ மீட்டர்/ மணி

XI. விரிவான விடையளி.

Question 1.
இயக்கம் என்றால் என்ன?
விடை:
இயக்கம்:

  • இயக்கம் என்பது காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் என்கிறோம்.
  • இயங்கும் பாதையின் அடிப்படையில் இயக்கத்தை வகைப்படுத்தலாம்:
  1. நேர்க்கோட்டு இயக்கம்
    பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (உம்) நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாகக் கீழே விழும் பொருள்.
  2. வளைவுப்பாதை இயக்கம்
    பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.(உ.ம்) பந்தினை வீசுதல்
  3. வட்டப்பாதை இயக்கம்
    ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் (உம்) கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.
  4. தற்சுழற்சி இயக்கம்
    ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் (உம்): பம்பரத்தின் இயக்கம்.
  5. அலைவு இயக்கம்
    ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் – (உ.ம்) தனிஊசல்.
  6. ஒழுங்கற்ற இயக்கம் ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.

Question 2.
பொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம்?
விடை:
எடுத்துக்காட்டுடன் விளக்குக. பொருளின் இயக்கத்தை நாம் காலம் மற்றும் வேகத்தைப் பொறுத்து வகைப் படுத்தலாம். கால இடைவெளி அடிப்படையில்:
1. கால ஒழுங்கு இயக்கம்
2. கால ஒழுங்கற்ற இயக்கம்

1. கால ஒழுங்கு இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை நாம் கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். (எ.கா) புவியை சுற்றிய நிலவின் இயக்கம்.

2. கால ஒழுங்கற்ற இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாது. இவ்வியக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம். சீரான வேகத்தின் அடிப்படையில்
1. சீரான இயக்கம்
2. சீரற்ற இயக்கம்

1. சீரான இயக்கம்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை சீரான இயக்கம் என்கிறோம். (எ.கா) தொடர்வண்டியின் இயக்கம்.
2. சீரற்ற இயக்கம்.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்கிறோம். (எ.கா) வாகன இயக்கம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 80
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81

6th Science Guide விசையும் இயக்கமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பூமி சுழல்வது
அ) மேற்கிலிருந்து கிழக்காக
ஆ) கிழக்கிலிருந்து மேற்காக
இ) வடக்கிலிருந்து தெற்காக
ஈ) தெற்கிலிருந்து வடக்காக
விடை:
அ) மேற்கிலிருந்து கிழக்காக

Question 2.
ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை
அ) கால ஒழுங்கு இயக்கம்
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்
இ) வளைவுப் பாதை இயக்கம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
சராசரி வேகத்திற்கான SI அலகு.
அ) மீட்டர்/வினாடி
ஆ) கிலோமீட்டர்/வினாடி
இ) கிலோமீட்டர் / நேரம்
ஈ) மீட்டர்/நேரம்
விடை:
அ) மீட்டர்/வினாடி

Question 4.
தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக ____ வேகத்தில் ஒடும் மிக வேகமான விலங்காகும்.
அ) 100 கி.மீ/மணி
ஆ) 200 கி.மீ/மணி
இ) 112கி.மீ/மணி
ஈ) 10கி.மீ/மணி
விடை:
இ 112கி.மீ/மணி

Question 5.
புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் _____
அ) அலைவு இயக்கம்
ஆ) கால ஒழுங்கு இயக்கம்
இ) வளைவு இயக்கம்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஆ) கால ஒழுங்கு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

II. சரியா?தவறா? என எழுதுக தவறு எனில் சரியான விடையை எழுதுக.

Question 1.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக்கொள்வது இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல் தற்சுழற்சி இயக்கம் ஆகும்.
சரியான விடை : வட்டப்பாதை இயக்கமாகும்
விடை:
தவறு.

Question 3.
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 4.
அலைவு இயக்கம் அனைத்தும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 5.
தொலைவின் SI அலகு கிலோமீட்டர்
தவறு சரியான விடை : தொலைவின் SI அலகு மீட்டர் (அ)
விடை:
தவறு

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கூட்டம் மிகுந்த கடைத்தெருவில் மக்களின் இயக்கம் _____
விடை:
ஒழுங்கற்ற இயக்கம்

Question 2.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம் ____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 3.
பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவளுடைய சராரரி வேகம் _____
விடை:
20 கிலோமீட்டர்/மணி

Question 4.
இயக்கம் _____ வகைப்படும்.
விடை:
நான்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 5.
ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் _____
விடை:
தற்சுழற்சி இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81.1

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
தொடர் வண்டியின் இயக்கம் : சீரான இயக்கம் வாகனங்களின் இயக்கம் : _____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 2.
கால ஒழுங்கு இயக்கம் : புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் அலைவு இயக்கம் : _____
விடை:
தனி ஊசலின் இயக்கம்

VI. விடுபட்ட இடங்களை நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 85

VII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86

VIII. குறுகிய விடையளி.

Question 1.
ஓய்வு நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் காலத்தைப் பொறுத்து தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பதை ஓய்வு நிலை என்கிறோம்.

Question 2.
விசையின் இரண்டு வகைகள் யாவை?
விடை:

  1. தொடு விசை
  2. தொடா விசை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
தொடு விசை என்றால் என்ன?
விடை:
விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது.

Question 4.
சராசரி வேகம் என்றால் என்ன?
விடை:
ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும்.

Question 5.
ஒருபேருந்தானது மணிக்கு 40 கி.மீவேகத்தில் பயணம் செய்து 200கி.மீ தொலைவினைக் கடந்தால் அப்பேருந்து பயணம் செய்ய எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
விடை:
காலம் (t) = கடந்த தொலைவு (d) / சராசரி வேகம்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86.2
= 5 மணி.

IX. விரிவான விடையளி.

Question 1.
விசை என்றால் என்ன ? விசையின் வகைகளை விளக்குக.
விடை:
விசை: பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது. விசையின் வகைகள் :

1. தொடு விசை
2. தொடா விசை

தொடு விசை: விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது. எ.கா. கால்பந்தை உதைத்தல்.
தொடா விசை: விசையானது பொருளினைத் தொடாமல் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசைகள் தொடா விசைகள் என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 95

பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசையானது

  • பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
  • இயங்கும் பொருளின் வேகத்தினையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமோ மாற்றும்.
  • பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 96

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 1 அளவீட்டியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 1 அளவீட்டியல்

7th Science Guide அளவீட்டியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
அ) நிறை
ஆ) நேரம்
இ) பரப்பு
ஈ) நீளம்
விடை:
இ) பரப்பு

Question 2.
பின்வருவனவற்றுள் எது சரி?
அ) 1L = 1cc
ஆ) 1L = 10cc
இ) 1L = 100cc
ஈ) 1L = 1000cc
விடை:
ஈ) 1L = 1000cc

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 3.
அடர்த்தியின் SI அலகு
அ) கிகி/மீ2
ஆ) கிகி/மீ3
இ) கிகி/மீ
ஈ) கி/மீ3
விடை:
ஆ) கிகி/மீ3

Question 4.
சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்
அ) 1:2
ஆ) 2:1
இ) 4:1
ஈ) 1:4
விடை:
அ) 1:2

Question 5.
ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
அ) தொலைவு
ஆ) நேரம்
இ) அடர்த்தி
ஈ) நீளம் மற்றும் நேரம்
விடை:
அ) தொலைவு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை அளக்க___________ விதி பயன்படுகிறது.
விடை:
நீர் இடப்பெயர்ச்சி

Question 2.
ஒரு கன மீட்டர் என்பது ___________ கன சென்டிமீட்டர்
விடை:
1,000,000 cm3 (or) (100 cm3)

Question 3.
பாதரசத்தின் அடர்த்தி ____________
விடை:
13.6 gkm3 (or) 13.600 kg/m3

Question 4.
ஒரு வானியல் அலகு என்பது ____________.
விடை:
1.496 × 1011m

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 5.
ஓர் இலையின் பரப்பை ____________ பயன்படுத்தி கணக்கிடலாம்.
விடை:
வரைபடத் தாள்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
ஒரு பொருளின் எல்லை அடைத்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் பரப்பளவு ஆகும்.
விடை:
தவறு – காரணம் : ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும்

Question 2.
திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
விடை:
சரி

Question 3.
நீர் மண்ணெண்ணெயை விட அதிக அடர்த்தி கொண்டது.
விடை:
சரி

Question 4.
இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதக்கும்.
விடை:
சரி

Question 5.
ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும்.
விடை:
தவறு – காரணம் : ஓரலகு பருமனின் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்வு குறைவுடைய பொருள் எனப்படும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 2

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 3
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 4

V. பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்

Question 1.
1L, 100cc, 10 L, 10 cc
விடை:
10cc, 100cc, 11, 10L

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு
விடை:
அலுமினியம், இரும்பு, தாமிரம், தங்கம்.

VI. ஒப்புமையைக் கொண்டு நிரப்புக.

Question 1.
பரப்பு: மீ : கன அளவு:
விடை:
மீ3

Question 2.
திரவம்: லிட்டர்: திடப்பொருள் :
விடை:
கிலோகிராம்

Question 3.
நீர்:: மண்ணெண்ணெய்:: : அலுமினியம்.
விடை:
இரும்பு

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

Question 1.
கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.
காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

Question 2.
கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.
காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 3.
கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும்.
காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

VIII. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
ஒருசில வழி அளவுகளைக் கூறுக.
விடை:

  • பரப்பு
  • கன அளவு (அ) பருமன்
  • வேகம்
  • மின்னூட்டம்
  • அடர்த்தி

Question 2.
ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.
விடை:
ஒரு ஒளி ஆண்டு = 9.46 × 1015மீ.

Question 3.
ஓர் உருளையின் கன அளவைக் காண. உதவும் சூத்திரத்தை எழுதுக.
விடை:
ஓர் உருளையின் கன அளவை கண்டறிய
பயன்படும் சூத்திரம்
= π × r2 × h
(h என்பது உயரம்)
= πr2h

Question 4.
பொருள்களின் அடர்த்தியைக் காண்பதற்கான வாய்ப்பாட்டைத் தருக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 5

Question 5.
எந்தத் திரவத்தில் இரும்பு மூழ்கும்?
விடை:
நீரில் இரும்பு குண்டு மூழ்கும்.

Question 6.
வானியல் பொருள்களின் கொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.
விடை:

  • வானியல் அலகு
  • ஒளி ஆண்டு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 7.
தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?
விடை:
தங்கத்தின் அடர்த்தி : 19,300கிகி/மீ3.

IX. சுருக்கமாக விடையளி காம்

Question 1.
வழி அளவுகள் என்றால் என்ன?
விடை:

  • அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.
  • எ.கா : பரப்பு, கன அளவு
  • வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.

Question 2.
ஒரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 6

Question 3.
பொருள்களின் அடர்த்தியை வரையறு.
விடை:

  • ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும்.
  • SI அலகு கிகி/மீ3

Question 4.
ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?
விடை:

  • ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவே ஆகும்.
  • ஒளி ஆண்டு = 9.46 × 1015m.

Question 5.
ஒரு வானியல் அலகு – வரையறு.
விடை:

  • ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
  • வானியல் அலகு = 149.6 × 106 கிமீ ‘
    =1.496 × 1011மீ.

X. விரிவாக விடையளி

Question 1.
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத்தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரிபாப்
விடை:

  • உன் வீட்டின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக் கொள்க.
  • அந்த இலையை ஒரு வரைபடத் தாளின் மீது வைத்து அதன் எல்லைக் கோடுகளை ஒரு பென்சில்லைக் கொண்டு வரைந்து கொள்க.
  • இலையை நீக்கினால் அதன் எல்லைக் கோட்டை வரைபடத்தாளின் மீது காணலாம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருளின் பரப்பு :

  • இப்போது இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கைளை M எனக்
  • பிறகு பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை N எனக் கொள்க.
  • அடுத்து பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை A எனக் கொள்க.
  • இறுதியாக பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை Q எனக் கொள்க
  • M = 51செ.மீ
    N = 11 செ.மீ
    P = 8 செ.மீ
    Q =  9 செ.மீ.
  • இலையின் தோரயமான பரப்பு
    = M+(\(\frac{3}{4}\)) N + (\(\frac{1}{2}\)) P+ (\(\frac{1}{4}\)) Q சதுர. செ.மீ.
    = 51 + (0.75) 11 + (0.5) 8 + (0.25) 9
    = 51 + 8.25 + 4 + 2.25
    = 65.5மீ2
    இலையின் பரப்பு = 65.5மீ2

Question 2.
ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?
விடை:

  • ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும்.
  • நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும் அதனை V எனக்குறிக்கவும்.
  • இப்போது ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அதை ஒரு நூலினால் கட்டவும்.
  • நூலைப் பிடித்துக் கொண்டு கல்லை நீரினுள் மூழ்கச் செய்யும். இவ்வாறு மூழ்கச் செய்யும் போது கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது குவளையில் நீரின் மட்டம் : உயர்ந்து இருக்கும்.

  • நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும்.
  • அதனை V2 எனக் குறிக்கவும்.
  • கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம்.
  •  V1 = 30மீ’, V2 = 40 மீ3
    கல்லின் கனஅளவு = V2 – V1
    = 40 – 30 = 10 மீ3
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 7

XI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கீழே காட்டப்பட்டுள்ளவாறு மூன்று கோளங்கள் உள்ளன.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 8
கோளங்கள் ‘A’ மற்றும் ‘B’ ஒரே பொருளால் செய்யப்பட்டவை. கோளம் – ‘A’ வேறு ஒரு பொருளால் செய்யப்பட்டது. கோளங்கள் ‘A’ மற்றும் ‘C’ ஒரே ஆரம் கொண்டவை. கோளம் – B’-இன் ஆரம் கோளம் ‘A’-ன் ஆரத்தில் பாதியாக இருக்கும். கோளம் கோளங்கள் ‘A’ மற்றும் B’ ஒரே Aன் அடர்த்தி கோளம் -ஐ விட இரு மடங்காக உள்ளது. இப்போது, பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. கோளங்கள் ‘A’ மற்றும் ‘B’ இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.
2. கோளங்கள் ‘A’ மற்றும் ‘B’ இன் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
3. கோளங்கள் ‘A’ மற்றும் ‘C’ இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க.
விடை:
‘A’ மற்றும் ‘B’ சமம்
RA = RC
RB = \(\frac{1}{2}\) RA
ρA = 2ρC
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 9
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 10
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 11

XII. கணக்கிடுக

Question 1.
ஒரு வட்ட வடிவத் தட்டின் ஆரம் 10 செ.மீ எனில், அதன் பரப்பை சதுர மீட்டரில் காண்க (π = \(\frac{22}{7}\) எனக் கொள்க).
விடை:

  • கொடுக்கப்பட்டுள்ள ஆரம் = 10 செ.மீ (அ) 0.1 மீ
  • தீர்வு
  • தட்டின் பரப்பு = πr2
    = 3.14 × 0.1 × 0.1
    = 0.0314 மீ2

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
ஒரு பள்ளியின் விளையாட்டுத் திடலின் பரிமாணம் 800மீ × 500 மீ அத்திடலின் பரப்பைக் காண்க.
விடை:

  • கொடுக்கப்பட்டவை l = 800 மீ : b = 500மீ
  • அத்திடலின் பரப்பு = l × b
    = 800 × 500
    = 4000 மீ2

Question 3.
ஒரே அளவுடைய இரு கோளங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நிறைகளின் விகிதத்தைக் காண்க (தாமிரம் மற்றும் இரும்பின் அடர்த்தி முறையே 8900 கிகி/மீ3 மற்றும் 7800 கிகி/மீ3).
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 12
\(\mathrm{d}_{1}=\frac{\mathrm{M}_{1}}{\mathrm{~V}}\)
\(\frac{\mathrm{M}_{\mathrm{C}}}{\mathrm{M}_{1}}=\frac{\mathrm{d}_{\mathrm{C}}}{\mathrm{d}_{1}}=\frac{8900}{7800}\)
= \(=\frac{1.14}{1}\)
M<sub<C : M1 = 1 : 1

Question 4.
250கி நிறையுள்ள ஒரு திரவம் 1000 கன செ.மீ இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தியைக் காண்க.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 13

Question 5.
1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க (π = \(\frac{22}{7}\) எனக் கொள்க)
விடை:
நிறை = 33கி
1கிகி = 1000
33 × 10-3
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 14

XIII . குறுக்கெழுத்துப் புதிர்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 15
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 16
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 17

7th Science Guide அளவீட்டியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் ஆகும்.
அ) அடிப்படை அளவுகள்
ஆ) வழி அளவுகள்
இ) பரப்பளவு
ஈ) கன அளவு
விடை:
இ) பரப்பளவு

Question 2.
கன அளவின் SI அலகு
அ) கன மீட்டர்
ஆ) சதுர மீட்டர்
இ) கூலும்
ஈ) கிகி மீ-3
விடை:
அ) கன மீட்டர்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 3.
தாமிரத்தின் அடர்த்தி எவ்வளவு
அ) 7800 கிகி/மீ3
ஆ) 8900 கிகி/மீ3
இ) 10.500 கிகி/மீ3
ஈ) 2700 கிகி/மீ3
விடை:
ஆ) 8900 கிகி/மீ3

Question 4.
சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு அடர்த்தி மிகுந்தவைகளாக இருந்தாலும் அதை விட அதிக அடர்த்தி உடையது எது.
அ) மண்ணெண்ணெய்,
ஆ) நீர்
இ) மெர்குரி
ஈ) இரும்பு
விடை:
ஆ) நீர்

Question 5.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு எவ்வளவு?
அ) 145.1 மில்லியன் கிலோமீட்டர்
ஆ) 143.1 மில்லியன் கிலோமீட்டர்
இ) 147.1 டமில்லியன் கிலோமீட்டர்
ஈ) 148.1 மில்லியன் கிலோமீட்டர்
விடை:
இ) 147.1 மில்லியன் கிலோமீட்டர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
அளந்தறிய எண் மதிப்புகளும். அலகுகளும் பயன்படுகின்றன.
விடை:
இயற்பியல் அளவுகள்

Question 2.
ஒரு சதுர மீட்டர் என்பது _____________ பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைப்படும் பரப்பு ஆகும்.
விடை:
ஒரு மீட்டர்

Question 3.
குறைந்த அடர்த்தியைக் கொண்ட பொருள் ___________ எனப்படும்
விடை:
தளர்வான பொருள்

Question 4.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ____________ ஆகும்.
விடை:
149.6 மில்லியன் கிலோமீட்டர்

Question 5.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ____________ என்பதை நாம்
விடை:
3 × 108 மீ/வி அறிவோம்.

III.சரியா, தவறா என்பதை கண்டறிக

Question 1.
அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் ஆகும்.
விடை:
சரி

Question 2.
இரண்டு லிட்டர் (1) என்பது 1000 CC ஆகும்.
விடை:
தவறு – காரணம் : ஒரு லிட்டர் என்பது 1000 cc ஆகும்

Question 3.
கல்லின் கன அளவு குறைந்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம்.
விடை:
தவறு – காரணம்: அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 4.
அடர்த்தியின் SI அலகு கிகி/மி3 அதன் CG3 அலகு கி/செ.மீ3
விடை:
சரி

Question 5.
விளக்கெண்ணெயின் அடர்த்தி 961கிகி/மீ2.
விடை:
தவறு – காரணம் : விளக்கெண்ணெயின் அடர்த்தி 961கிகி/மீ3

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 18
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 19

V. ஒப்புமை தருக

Question 1.
நேரம் ; வினாடி (வி) : : வெப்பநிலை; ____________
விடை:
கெல்வின் (k)

Question 2.
பொருளின் அளவு, மோல் : : ஒளிச் செறிவு; ____________
விடை:
கேண்டிலா

VI. கூற்று மற்றும் காரணம்.

Question 1.
கூற்று : வீட்டு மனை ஒன்றின் பரப்பளவை காண அதன் நீளம் மற்றும் அகலத்தை பெருக்க வேண்டும்.
காரணம் : பரப்பளவின் அலகு : அடிப்பரப்பு X உயரம்
விடை:
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு .

Question 2.
கூற்று : நெப்டியூன் சூரியனிலிருந்து 40 வானியல் அலகு தொலைவில் உள்ளது. காரணம் : ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

VII. வாக்கியத்தை சரியாக வரிசைப்படுத்துக

Question 1.
மண்ணெண்ணெய், மரம், மெர்குரி, நீர்
விடை:
மரம், மண்ணெண்ணெய், நீர் மெர்குரி
காரணம் : அடர்த்தி, மரம் 770, மண்ணெண்ணெய் 800, நீர் 1000, மெர்குரி 13600.

Question 2.
1000 மிலி, 250 மிலி, 100 மிலி, 500 மிலி
விடை:
100 மிலி, 250 மிலி, 500 மிலி, 1000 மிலி

VIII. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சில இயற்பியல் அளவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • நிறை
  • எடை
  • தொலைவு
  • வெப்பநிலை
  • கன அளவு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
திரவங்களின் பருமனை அளக்க பயன்படும் வேறு சில அலகுகள் யாவை?
விடை:

  • கேலன் [1 கேலன் = 3785மிலி]
  • அவுன்ஸ் [1 அவுன்ஸ் = 30IL]
  • குவார்ட் (1 குவார்ட் = 1L]

Question 3.
அடர்வுமிகு பொருள் என்பது?
விடை:
அதிக அடர்த்தியைக் கொண்ட பொருள்களுக்கு அடர்வான (அ) அடர்வுமிகு பொருள் என்று பெயர்.

Question 4.
அடர்த்தி, நிறை, மற்றும் கன அளவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை எழுதுக.
விடை:

  • அடர்த்தி= நிறை/கன அளவு
  • நிறை = அடர்த்தி × கன அளவு
  • கன அளவு = நிறை/அடர்த்தி

IX. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
அடிப்படை அளவுகள் என்பது யாது?
விடை:

  • வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
  • எ.கா: நீளம், நிறை

Question 2.
ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் கன அளவு பெயர்களை எழுதுக
விடை:

  • கன சதுரம் (a × a × a = a3)
  • கன செவ்வ கம் (l × b × h)
  • கோளம் (\(\frac{4}{3}\) × π × r3)
  • உருளை (πr2h)

Question 3.
கொள்ளவு என்றால் என்ன?
விடை:
ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கலனின் கொள்ளவு எனப்படும்.

Question 4.
அடர்த்தி வரையறு? சூத்திரம் தருக?
விடை:

  • ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1மீ) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும்.
  • சூத்திரம்
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 20

Question 5.
எடை மிகுந்த பொருள் நீரில் மூழ்கும், மற்றும் எடை குறைந்த பொருட்கள் நீரில் மிதக்கும் என்பதை காரணத்துடன் கூறுக.
விடை:

  • ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட அதிகமானால் அது திரவத்தில் மூழ்கும்.
  • ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட குறைவானால் அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கும்.

X. விரிவான வினாக்களுக்கு விடையளி

Question 1.
இயற்பியல் அளவுகள் மற்றும் அதன் வகைகளை விளக்குக.
விடை:

  • நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை போன்ற அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படும்.
  • இயற்பியல் அளவுகள் இரண்டு வகைப்படும்
    1. அடிப்படை அளவுகள்
    2. வழி அளவுகள்

அடிப்படை அளவுகள் :

  • வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத – இயற்பியல் அளவுகள். எ.கா : நீளம், நிறை
  • அடிப்படை அளவுகளை அளந்தறியப் பயன்படும் அளவுகள் அடிப்படை அலகுகள் எனப்படும்.

வழி அளவுகள் :

  • அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா. பரப்பு, கன அளவு
  • வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல்

Question 2.
வானியல் அலகு பற்றி விளக்குக?
விடை:

  1. பூமியானது சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது.
  2. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.
  3. பூமி அதன் அண்மை நிலையில் உள்ள போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு சுமார் 147.1 மில்லியன் கிலோமீட்டர்.
  4. பூமியானது சூரியனிலிருந்து மிக அதிக தொலைவில் உள்ள போது (இது சேய்மை நிலை) அவற்றிக்கிடையேயான தொலைவு சுமார் 152.1 மில்லியன் கிலோமீட்டர்.
  5. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு 149.6 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும் இத்தொலைவே வானியல் அலகு எனப்படுகிறது.
  6. நெப்டியூன் சூரியனிலிருந்து 30 வானியல் அலகு தொலைவில் உள்ளது.
  7. அதாவது நெப்டியூன் சூரியனிடலிருந்து பூமி இருக்கும் தொலைவில் 30 மடங்கு தொலைவில் உள்ளது.
  8. ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.
  9. 1 வானியல் அலகு 149.6 மில்லியன் கிமீ
    = 149.6 × 106 கிமீ = 1.496 × 1011 மீ.
    Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 21

மனவரைபடம்
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 1 அளவீட்டியல் 22

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 1 அளவீடுகள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 1 அளவீடுகள்

6th Science Guide அளவீடுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.
அ) மீட்டர் அளவு கோல்
ஆ) மீட்டர் கம்பி
இ) பிளாஸ்டிக் அளவுகோல்
ஈ) அளவு நாடா
விடை:
ஈ) அளவு நாடா

Question 2.
7மீ என்பது செ.மீ -ல்
அ) 70 செ.மீ
ஆ) 7 செ.மீ
இ) 700 செ.மீ
ஈ) 7000 செ.மீ
விடை:
இ) 700 செ.மீ

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 3.
ஒரு அளவை அளவிடும் முறைக்கு என்று பெயர்
அ) இயல் அளவீடு
ஆ) அளவீடு
இ) அலகு
ஈ) இயக்கம்
விடை:
ஆ) அளவீடு

Question 4.
சரியானதைத் தேர்ந்தெடு
அ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
ஆ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
ஈ) கி.மீ > செ.மீ > மீ > மி.மீ
விடை:
இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ

Question 5.
அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும் போது, உனது கண்ணின் நிலை _____ இருக்க வேண்டும்.
அ) அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக
ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
இ) புள்ளிக்கு வலது புறமாக
ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்
விடை:
ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

II. சரியா தவறா என எழுதுக.

Question 1.
நிறையை 126 கிகி எனக் கூறுவது சரியே.
விடை:
சரி

Question 2.
ஒருவரின் மார்பளவை அளவுகோல் பயன்படுத்தி அளவிட முடியும்.
விடை:
தவறு

Question 3.
10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.
விடை:
சரி

Question 4.
முழம் என்பது நீளத்தை அளவிடும் நம்பத் தகுந்த முறையாகும்.
விடை:
தவறு

Question 5.
SI அலகு முறை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அலகு முறையாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
SI அலகு முறையில் நீளத்தின் அலகு _______
விடை:
மீட்டர்

Question 2.
500 கிராம் = _____ கிலோகிராம்.
விடை:
0.5.

Question 3.
டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு _____ என்ற அலகால் அளக்கப்படுகிறது
விடை:
கிலோ மீட்டர்

Question 4.
1மீ = _____ செ.மீ என அளவிடப்படுகிறது.
விடை:
100

Question 5.
5 கி.மீ = ______ மீ.
விடை:
5000

IV. ஒப்புமை தருக.

Question 1.
சர்க்கரை : பொதுத்தராசு; எலுமிச்சை சாறு : ______ ?
விடை:
அளவுசாடி.

Question 2.
மனிதனின் உயரம் : செ.மீ; கூர்மையான பென்சிலின் முனையின் நீளம் : ______?
விடை:
மி.மீட்டர்

Question 3.
பால் : பருமன்; காய்கறிகள் : _____
விடை:
எடை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 60

VI. அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 41
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 42

VII. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.

Question 1.
மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
விடை:
1 மில்லிமீட்டர், 1 சென்டிமீட்டர், 1 மீட்டர், 1 கிலோ மீட்டர்.

VIII. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக

Question 1.
10-3 என்பது
விடை:
மில்லிமீட்டர்

Question 2.
காலத்தின் அலகு
விடை:
விநாடி

Question 3.
சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 10

Question 4.
கடிகாரம் காட்டுவது
விடை:
நேரம்

Question 5.
ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
விடை:
நிறை

Question 6.
பல மாணவர்களின் பதிவுகளிலிருந்து கடைசியாக எடுக்கப்படும் ஒரு தனி அளவீடு
விடை:
சராசரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 7.
_____ என்பது ஒரு அடிப்படை அளவு
விடை:
நீளம்

Question 8.
வாகனங்கள் கடக்கும் தொலைவைக் காட்டுவது
விடை:
ஒடோமீட்டர்

Question 9.
தையல்காரர் துணியைத் தைக்க அளவிடப் பயன்படுத்துவது.
விடை:
நாடா

Question 10.
நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு.
விடை:
லிட்டர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 50
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 51

IX. ஓரிரு வார்த்தைகளில் விடை தருக.

Question 1.
SI என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை:
பன்னாட்டு அலகு முறை [International System of units]

Question 2.
நிறையை அளவிடப் பயன்படும் ஒரு கருவி.
விடை:
பொதுத்தராசு.

Question 3.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
விடை:
விடை:
கிலோகிராம், மில்லி மீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்.

Question 4.
நிறையின் SI அலகு என்ன?
விடை:
கிலோகிராம்.

Question 5.
ஒரு அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் என்ன?
விடை:

  1. பன்மடங்கு
  2. துணைப் பன்மடங்குகள்.

X. ஓரிரு வரிகளில் விடையளி:

Question 1.
அளவீடு – வரையறு.
விடை:
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது ‘அளவீடு’ எனப்படும்.

Question 2.
நிறை வரையறு.
விடை:
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 3.
இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.
விடை:
தொலைவு = 43.65 கி.மீ (1 கி.மீ = 1000 மீட்டர்)
தொலைவு = 43650 மீட்டர் (1 மீட்டர் = 100 செ.மீ)
தொலைவு = 4365000 செ.மீ

Question 4.
அளவுகோலில் அளவிடும் போது, துல்லியமான அளவீடு பெறப் பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன?
விடை:

  1. இடமாறு தோற்றப் பிழையைத் தவிர்க்கவும்.
  2. அளவீட்டை கீழ்நோக்கி செங்குத்தாகப் பார்ப்பதன் மூலம் துல்லியமான அளவீட்டை பெறலாம்.

XI. கீழ்க்கண்டவைகளைத் தீர்க்க.

Question 1.
உனது வீட்டில் இருந்து உனது பள்ளிக்கு இடையே உள்ள தொலைவு 2250மீ. இந்தத் தொலைவினை கிலோமீட்டராக மாற்றுக.
விடை:
வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு = 2250 மீ
தொலைவு = 2.250 கிலோமீட்டர்.

Question 2.
கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும் போது அளவு கோலின் ஒரு முனை 2.0 செ.மீ மற்றும் அடுத்த முனை 12.1 செ.மீ என்ற இரு அளவுகளைக் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?
விடை:
அளவு கோலின் ஒரு முனை = 2.0 செ.மீ
அடுத்த முனை = 12.1 செ.மீ
பென்சிலின் நீளம் = 10.1 செ.மீ (அல்லது) 10 செ.மீ மற்றும் 1 மி.மீ

XII. விரிவாக எழுதுக.

Question 1.
வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
விடை:
1. ஆவது முறை:

  • ஒரு வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்கவும்
  • கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும் முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்க வேண்டும்.
  • கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிடவும்.
  • இதுவே வளைகோட்டின் நீளமாகும்.

2 ஆவது முறை :

  • கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து தொடங்கவும். மறுமுனை வரை அளந்து குறிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரிக்கவும். குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட வேண்டும்.
  • வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை × ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்.

Question 2.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 59
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 61
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 62

6th Science Guide அளவீடுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
7 மீ என்ப து மி.மீ ல்
அ) 0.7 மி.மீ
ஆ) 700 மி.மீ
இ 7000 மி.மீ
ஈ) 70 மி.மீ
விடை:
இ) 7000 மி.மீ

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 2.
SI அலகுமுறையில் மின்னோட்டத்தின் அலகு.
அ) கெல்வின்
ஆ) ஆம்பியர்
இ) வினாடி
ஈ) வோல்ட்
விடை:
ஆ) ஆம்பியர்

Question 3.
நீளத்தின் அலகு
அ) மீட்டர்
ஆ) லிட்டர்
இ) வினாடி
ஈ) கிலோகிராம்
விடை:
அ) மீட்டர்

Question 4.
திரவத்தின் பருமனை அளவிட உதவும் கருவிகள்
அ) குடுவைகள்
ஆ) Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 92
இ) பியூரெட்டுகள்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்

Question 5.
ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய ____ முறை பயன்படுகிறது.
அ) தராசு
ஆ) மின்னணுதராசு
இ) நீர் இடப்பெயர்ச்சி
ஈ) மணல் கடிகாரம்
விடை:
இ) நீர் இடப்பெயர்ச்சி

II. சரியா? தவறா? என எழுதுக.

Question 1.
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது நிறை எனப்படும்.
விடை:
தவறு

Question 2.
நீளம், அகலம் என இருவகையான நீளத்தைப் பயன்படுத்தி பரப்பளவை கணக்கிடலாம்.
விடை:
சரி

Question 3.
மின்னணுத்தராசைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக எடையை அளக்கலாம்.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
7875 செ.மீ = ____ மீ ____ செ.மீ
விடை:
78.மீ;75.செ.மீ

Question 2.
1195 மீ = ____ கி.மீ. _____ மீ.
விடை:
1 கி.மீ; 195 மீ

Question 3.
15 செ.மீ 10 மி.மீ = ____ மி.மீ
விடை:
160 மி.மீ

Question 4.
45 கி.மீ 33மீ = _____ மீ
விடை:
45033 மீ

Question 5.
மெட்ரிக் முறை அலகுகள் _____ ஆண்டு ஃபிரெஞ்சு காரர்களால் 1790
விடை:
உருவாக்கப்பட்டது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 65

V. பின்வரும் அலகினை ஏறுவரிசையில் எழுதுக.

Question 1.
டன் → கிராம் → கிலோகிராம் → மெட்ரிக் டன்.
விடை:
கிராம் → கிலோகிராம் → டன் → மெட்ரிக் டன்.

VI. மிகக் குறுகிய விடையளி (2 மதிப்பெண்கள்)

Question 1.
பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு என்றால் என்ன?
விடை:
ஒரே மாதிரியான அளவிடும் முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட அலகுகளுக்கு பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு என்று பெயர்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 2.
நிறை எடை வேறுபடுத்துக?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 70

Question 3.
மிகக் குறுகிய நீளங்களை அளக்க உதவும் அளவீடுகள் யாவை?
விடை:

  1. மில்லி மீட்டர்
  2. சென்டி மீட்டர்

Question 4.
அடிப்படை இயற்பியல் அளவுகள் யாவை?
விடை:
1- நீளம்;
2 – நிறை;
3 – காலம்,
4 – மின்னோட்டம்,
5 – வெப்பநிலை,
6 – ஒளிச்செறிவு,
7 – பொருளின் அளவு

Question 5.
முற்காலத்தில் மக்கள் பகல் நேரத்தை கணக்கிட பயன்படுத்திய கடிகாரங்கள் யாவை?
விடை:
1- மணல் கடிகாரம்;
2 – சூரியக் கடிகாரம்

Question 6.
நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் கடிகாரங்கள் யாவை?
விடை:
1 – மின்ன ணு கடிகாரம்;
2 – நிறுத்துக் கடிகாரம்

Question 7.
ஒடோமீட்டர் என்றால் என்ன?
விடை:
தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிட உதவும் கருவி.

VII. விரிவான விடை எழுதுக.

Question 1.
அளவு கோலைப் பயன்படுத்தி அளக்கும் போது ஏற்படும் கவனிக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறு?
விடை:

  1. அளக்க வேண்டிய பொருளை எப்போதும் அளவு கோலின் சுழியில் “O” பொருந்துமாறு வைக்க வேண்டும்.
  2. அளக்க வேண்டிய பொருளை அளவு கோலுக்கு இணையாக வைக்க வேண்டும்
  3. எப்போதும் சுழியிலிருந்து (‘O’) அளவிட வேண்டும்.
  4. முதலில் பெரிய பிரிவுகளையும் (செ.மீ) பிறகு சிறிய பிரிவு (மி.மீ) களையும் அளவிட வேண்டும்
  5. அளவுகளைக் குறிக்கும் போது பெரிய அளவுகளை முதலிலும், அதன் பின் புள்ளி வைத்த பின் சிறிய அளவுகளைக் குறிக்க வேண்டும்.
    எ.கா. ஒரு பென்சிலின் நீளம் 6 செ.மீ, 2 மி.மீ என்றால் (6.2 செ.மீ)

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 2.
ஒரு ஒழுங்கற்ற வடிவம் கொண்ட கல்லின் பருமனை எவ்வாறு காண்பாய்?
விடை:

  1. அளவுகள் குறிக்கப்பட்ட ஒரு உருளை வடிவ குவளையில் 50 மி.லி அளவு வரை நீரால் நிரப்பவும்.
  2. கன அளவு காண வேண்டிய கல்லை ஒரு நூலில் கட்டி ஜாடியில் உள்ள நீரினுள் அடிமட்டம் வரை மெதுவாக விடவும்.
  3. இப்போது ஜாடியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் நீர்மட்டம் 75 மி.லி.
  4. கல் நீரை இடப்பெயர்ச்சி செய்ததால், நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
  5. இடப்பெயர்ச்சி செய்த நீரின் அளவே கல்லின் பருமனாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 90

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

10th Science Guide உயிரின் தோற்றமும் பரிணாமமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி
அ) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.
ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.
இ) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.
ஈ) தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை.
விடை:
ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது

Question 2.
“பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன்மொழிந்தவர்.
அ) சார்லஸ் டார்வின்
ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்
இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
ஈ) கிரிகர் மெண்டல்
விடை:
இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 3.
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
அ) கருவியல் சான்றுகள்
ஆ) தொல் உயிரியல் சான்றுகள்
இ) எச்ச உறுப்பு சான்றுகள்
ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்
விடை:
ஆ) தொல் உயிரியல் சான்றுகள்

Question 4.
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை.
அ) ரேடியோ கார்பன் முறை
ஆ) யுரேனியம் காரீய முறை
இ) பொட்டாசியம் ஆர்கான் முறை
ஈ) அ மற்றும் இ
விடை:
அ) ரேடியோ கார்பன் முறை

Question 5.
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
அ) கொரானா
ஆ) J.W.கார்ஸ் பெர்கர்
இ) ரொனால்டு ராஸ்
ஈ) ஹியுகோ டி விரிஸ்
விடை:
ஆ) J.W. கார்ஸ் பெர்கர்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் …………….. என அழைக்கப்படுகின்றன.
விடை:
பெறப்பட்ட பண்புகள்

Question 2.
ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள் …………….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
எச்ச உறுப்புகள்

Question 3.
வௌவால்கள் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் …………… உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு.
விடை:
அமைப்பு ஒத்த

Question 4.
பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் ………….. (PTA-6)
விடை:
சார்லஸ் டார்வின்)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டைக் கூறியவர் சார்லஸ்டார்வின். [PTA-5]
விடை:
தவறு.
சரியான கூற்று: உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டைக் கூறியவர் ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 2.
செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.
விடை:
சரி.

Question 3.
பறவைகள் ஊர்வனவற்றிலிருந்து தோன்றியவை.
விடை:
சரி. [PTA-5]

IV. பொருத்துக: [PTA-5]

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 20
விடை:
அ – 3,
ஆ – 1,
இ – 4,
ஈ – 2,
உ – 6,
ஊ – 5

IV. ஓரிரு சொற்களில் விடையளி.

Question 1.
மனிதனின் கை, பூனையின் முன்னங்கால், திமிங்கலத்தின் முன் துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு என்ன பெயர்?
விடை:
அமைப்பு ஒத்த உறுப்புகள்

Question 2.
புதைபடிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் எது?
விடை:
ஆர்க்கியாப்டெரிக்ஸ்

Question 3.
புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
தொல்லுயிரியல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

VI. சுருக்கமாக விடையளி :

Question 1.
கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள், ஒரு பெறப்பட்ட பண்பு. ஏன் அது பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?
[PTA-3]
விடை:

  1. கிவி பறவை தன் இறக்கைகளை பறப்பதற்கு பயன்படுத்தியதில்லை.
  2. லாமர்க்கின் உறுப்புகளின் பயன்படுத்தாமைக் கோட்டிபாட்டின்படி, ஓர் உறுப்பை நீண்டகாலம் பயன்படுத்தாதபோது அது படிப்படியாகக் குன்றல் அடைகிறது.
  3. கிவி பறவையின் சிறப்பிழந்த இறக்கைகள் உறுப்பைப் பயளன்படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு.

Question 2.
ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?
விடை:

  1. ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது பழங்காலப் புதைபடிவப் பறவை.
  2. இது ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த முற்காலப் பறவை போன்ற உயிரினம். இது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது.
  3. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது. ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவப் பற்களையும் பெற்றிருந்தது.
    எனவே, ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது.

Question 3.
வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக. [PTA-2; Sep.20]
விடை:
வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழி வழியாக எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி அறிவதாகும்.

  1. பரம்பரை பரம்பரையாகத் தாவரங்களின் பயன்களை அறிய முடிகிறது.
  2. நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்களைப் பற்றிய தகவலை அளிக்கிறது.
  3. வட்டார இனத் தாவரவியலானது மருந்தாளுநர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவப் பயிற்சியாளர் முதலானோருக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறது.
  4. மலைவாழ் பழங்குடி மக்கள் மருத்துவ இன அறிவியல் மூலம் பலவகையான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துத் தாவரங்களை அறிந்து வைத்துள்ளனர்.
  5. எ.கா.: வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தலைவலி, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, பாம்பு கடி – மற்றும் தொழு நோய் முதலான நோய்களுக்கு தாவரங்களின் பட்டை, தண்டு, வேர், இலை, பூமொட்டு, பூ, கனி, விதை, எண்ணெய் மற்றும் பிசின் முதலானவற்றைப் பயன்படுத்திக் குணமாக்கினர்.

Question 4.
புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? (GMQP-2019; Sep.20)
விடை:

  1. படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமங்களால் கண்டு பிடிக்கலாம்.
  2. அத்தனிமங்கள் கார்பன், யுரேனியம், காரியம் மற்றும் பொட்டாசியமாக இருக்கலாம்.
  3. உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை.
  4. அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன் (C14)அளவைக் கொண்டு அந்தத் தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

VII. விரிவான விடையளி :

Question 1.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு? [PTA-6; GMQP-2019]
விடை:
சார்லஸ் டார்வின், தன்னுடைய பதிவுகளையும், முடிவுகளையும் ‘சிற்றினங்களின் தோற்றம் (Origin of Species) என்ற பெயரில் புத்தமாக 1859-ஆம் ஆண்டு வெளியிட்டார். இது பரிணாம மாற்றங்களுக்கான இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியது. டார்வினின் கொள்கைகள்

(i) அதிக இனப்பெருக்கத்திறன்
உயிரினங்கள், அதிக அளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை. அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை. இது இனப்பெருக்கத் திறனை அதிகரித்து அதிக உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

(ii) வாழ்க்கைக்கான போராட்டம்
அதிக உற்பத்தி காரணமாக, பெருக்க விகித முறையில் இனத்தொகை அதிகரிக்கிறது. உயிரினங்கள் வாழத் தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது. இது உயிரினங்களுக்கான உணவு மற்றும் இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு வழிவகுக்கிறது. இது மூன்று வகைப்படும்.
(அ) ஒரே சிற்றின உயிரினங்களுக்கு இடையேயான போராட்டம்: ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரிகளுக்கு இடையே யான போட்டி.
(ஆ) இரு வேறுபட்ட சிற்றினங்களுக்கு இடையேயான போராட்டம்: ஒன்றாக ஒரே இடத்தில் வாழக்கூடிய வெவ்வேறு சிற்றினத்தைச் சார்ந்த உயிரிகளுக்கு இடையேயான போட்டி.
இ) சூழ்நிலை போராட்டம்: அதிக வெப்பம் அல்லது குளிர், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சூழலும் உயிரினங்களின் வாழ்வியலை பாதிக்கின்றன.

(iii) வேறுபாடுகள்:
வேறுபாடுகளுடன் காணப்படுவது அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிறப்பு பண்பாகும். பரிணாமத்திற்கு சிறிய வேறுபாடுகள் முக்கியமானவையாக உள்ளன. டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள் உயிரினத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.

(iv) தக்கன உயிர் பிழைத்தல் அல்லது இயற்கைத் தேர்வு:
வாழ்க்கைக்கான போராட்டத்தின் போது, கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள், உயிர் பிழைத்து சூழலுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும். கடினமான சூழலை எதிர்கொள்ள முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்துவிடும். சாதகமான வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை, இயற்கைத் தேர்வு என அழைக்கப்படுகிறது.

(v) சிற்றினங்களின் தோற்றம்
டார்வின் கூற்றுப்படி, பல தலை முறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின்
தொகுப்பினால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 2.
அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 90

Question 3.
படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு நடைபெறுகிறது? [PTA-1]
விடை:
பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவதைப் படிவமாதல் என்கிறோம்.
புதை உயிர்ப் படிவமாதலின் வகைகள்:
பொதுவாகப் புதை உயிர்ப் படிவங்கள் கல்லாதல், அச்சு மற்றும் வார்ப்பு, கார்பனாதல், பதப்படுத்துதல், அழுத்தம் மற்றும் ஊடுருவல் ஆகிய வகைகளில் உருவாகின்றன.

(i) கல்லாதல்
சிலிக்கோ போன்ற கனிமங்கள், இறந்த உயிரியின் உள்ளே ஊடுருவி, திசுக்களை அழித்து ஒரு பாறை போன்ற புதைப் படிவத்தை உருவாக்குகிறது. இந்த வகைப் படிவமாதலில் கடின மற்றும் மென்மையான பாகங்கள் படிவம் ஆகின்றன. பெரும்பாலும் எலும்புகளும் மரக் கட்டைகளும் இம்முறையில் படிவம் ஆகின்றன.

(ii) அச்சு மற்றும் வார்ப்பு
தாவரம் அல்லது விலங்கு பாறைகளுக்கு இடையே அதே அமைப்பு மாறாமல் பதப்படுத்தப்படுகிறது. படிவுகளுக்கு இடையே உயிரிகள் புதைவுறும்போது நிலத்தடி நீரினால் அவ்வுயிரியின் உடல் சிதைக்கப்பட்டு ஓர் வெற்றிடம் உருவாகிறது. அந்த வெற்றிடத்தில் புதையுண்ட தாவரம் அல்லது விலங்கு போன்ற ஓர் அச்சு ஏற்படுகிறது. இதன் மூலம் நம்மால் அந்த உயிரியின் உள்ளமைப்பை அறிய இயலாது. பின்பு கனிமங்கள் அல்லது படிவங்கள் இந்த வெற்றிடத்தை நிரப்பும். இது வார்ப்பு எனப்படும்.

(iii) பதப்படுத்துதல்
பனிக்கட்டி அல்லது மரங்களின் தண்டுப் பகுதியில் கசியும் பிசின் போன்றவற்றில் பதியும் உயிரிகள் அழுகிப் போகாமல் பாதுகாக்கப்படுகின்றன. முழுத்தாவரம் அல்லது விலங்கு இம்முறையில் பதப்படுத்தப்படுகிறது.

(iv) அழுத்திய சின்னங்கள்
கடலுக்கு அடியில் உள்ள இறந்த உயிரினங்களின் கடின உறுப்புகள், படிவுகளால் மூ டப்படுகிறது. படிவு உருவாதல் தொடர்ச்சியாக நடைபெற்று, புதை உயிர்ப் படிவமாக மாறுகிறது.

(v) ஊடுருவுதல் அல்லது பதிலீட்டுதல்
சில வேளைகளில் கனிமப் படிவமானது செல் சுவரைத் தாண்டிச் செல்கிறது. இந்தக் கனிம ஊடுருவலானது சிலிகா, கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் கார்பனேட் போன்ற கனிமங்களால் நிரப்பப்படுகிறது. கடினப் பகுதிகள் கரைக்கப்பட்டு அப்பகுதி கனிமங்களால் நிரப்பப்படுகிறது.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைகளை உற்று நோக்கினான். காக்கையின் : இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக. [PTA-2]
விடை:
அவன் நினைத்தது தவறு.

(i) தும்பியின் இறக்கையும் காகத்தின் இறக்கையும் வேறுவேறாக உள்ளன. காகத்தின் அதன் முன்னங் கால்கள் மாறுபாடு அடைந்து இறக்கையாக மாறியுள்ளது. காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே வேலையைச் செய்கின்றன. அவை தோன்றிய இடங்கள் வேறு. அதாவது அவ்வுறுப்புகளுக்குப் பெயர் செயல் ஒத்த உறுப்புகள்.

(ii) செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும் ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.

(iii) எனவே தும்பியின் இறக்கையையும் காகத்தின் இறக்கையையும் ஒன்றாகக் கருத முடியாது.

Question 2.
புதை உயிர்ப் படிவங்களின் பதிவுகள் நமக்குப் பரிணாமம் பற்றித் தெரிவிக்கின்றன. எவ்வாறு?
விடை:
பெரும்பாலான முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவைகளின் பரிணாமப் பாதையைப் புரிந்து கொள்ள புதைபடிவங்கள் பற்றிய ஆய்வுகள் உதவுகின்றன. பரிணாம வளர்ச்சி என்பது எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது என்பதை புதைபடிவ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. தற்காலப் பறவைகளின் தோற்றத்தைத் தொல்லுயிரியல் படிவச் சான்றுகள் ஆதரிக்கின்றன.

(i) ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது பழங்காலப் புதைபடிவப் பறவை. இது ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த முற்காலப் பறவை போன்ற உயிரினம். இது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது. ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவப் பற்களையும் பெற்றிருந்தது.

(ii) தாவரப் புதை உயிர்ப் படிவம் என்பது முன்பு இறந்த தாவரங்களின் ஏதேனும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். புதைபடிவமானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணுக்குள் புதைந்து படிவம் ஆனது. பெரும்பாலும் தாவரப் புதை உயிர்ப் படிவங்கள், தாவரத்தின் ஏதேனும் ஒரு உடைந்த பகுதியாக இருக்கலாம். முழுமையாகக் கிடைப்பது அரிது.

(iii) புதை உயிர்ப் படிவங்களின் முக்கியத்துவம்
(அ) முந்தைய தாவரங்களைப் பற்றிய வரலாறு மற்றும் பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது
(ஆ) தாவர புதை உயிர்ப் படிவங்கள் மூலம் தாவர உலகத்தைப் பற்றிய ஒரு வரலாற்று அணுகுமுறையை அறிய முடிகிறது.
(இ) தாவர வகைப்பாட்டியலுக்கு இது உதவுகிறது.
(ஈ) தாவரப் புதை உயிர்ப் படிவங்கள், தாவரங்களைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் உள்ளமைப்பையும் ஒப்பிட உதவுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 3.
ஆக்டோபஸ், கரப்பான்பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன. இவை பொதுவான பரிணாம தோற்றத்தைக் கொண்டுள்ளதால் ஒரே வகையாக கருத முடியுமா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக. [PTA-4]
விடை:

  1. முடியாது. பொதுவான பரிணாம தோற்றத்தை கொண்டுள்ளதால் ஒரே வகையாக கருத முடியாது.
  2. கண்கள் இருக்கும் காரணத்தைக் கொண்டு அவற்றை ஒரே வகையில் சேர்க்க முடியாது.
  3. உயிரியலின் பல்வேறு துறைகளிலிருந்து கிடைத்த சான்றுகளும், உயிரினங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஆதரிப்பதாக உள்ளன.
  4. ஆக்டோபஸ் மெல்லுடலி தொகுதியையும், கரப்பான் பூச்சிகளுக்கிடையேயான தொகுதியையும், கணுக்காலி தொகுதியையும், தவளை முதுகெலும்பு உள்ளவையாகவும், உள்ளது. ஒரு பண்பினைக் கொண்டு மட்டுமே இவற்றை நாம் ஒரே வகையாக கருத முடியாது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

10th Science Guide உடல் நலம் மற்றும் நோய்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
அ) நிக்கோட்டின்
ஆ) டானிக் அமிலம்
இ குர்குமின்
ஈ) லெப்டின்
விடை:
அ) நிக்கோட்டின்

Question 2.
உலக புகையிலை எதிர்ப்பு தினம். [PTA-1]
அ) மே 31
ஆ) ஜூன் 6
இ ஏப்ரல் 22
ஈ) அக்டோபர் 2
விடை:
அ) மே 31

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 3.
சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
அ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
ஆ) பிளவுக்கு உட்படுவதில்லை
இ திடீர் மாற்றமடைந்த செல்கள்
ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
விடை:
ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

Question 4.
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
அ) கார்சினோமா
ஆ) சார்க்கோமா
இ லுயூக்கேமியா
ஈ) லிம்போமா
விடை:
ஈ) லிம்போமா

Question 5.
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது [GMQP-2019]
அ) ஞாபக மறதி
ஆ) கல்லீரல் சிதைவு
இ மாயத் தோற்றம்
ஈ) மூளைச் செயல்பாடு குறைதல்
விடை:
ஆ) கல்லீரல் சிதைவு

Question 6.
இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
அ) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
ஆ) பெரிகார்டியத்தின் வீக்கம்
இ இதய வால்வுகள் வலுவிழப்பு
ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை
விடை:
ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

Question 7.
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு என்று பெயர். [PTA-6]
அ) லுயூக்கேமியா
ஆ) சார்க்கோமா
இ) கார்சினோமா
ஈ) லிம்போமா
விடை:
இ) கார்சினோமா

Question 8.
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.
அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
ஆ) தீங்கற்ற கட்டி
இ அ மற்றும் ஆ
ஈ) மகுடக் கழலை நோய்
விடை:
அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

Question 9.
பாலிபேஜியா என்ற நிலை _____________ல் காணப்படுகிறது.
அ) உடற்பருமன்
ஆ) டயாபடீஸ் மெல்லிடஸ்
இ டயாபடீஸ் இன்சிபிடஸ்
ஈ) எய்ட்ஸ்
விடை:
ஆ) டயாபடீஸ் மெல்லிடஸ்

Question 10.
மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
அ) கண்க ள்
ஆ) செவி உணர்வுப் பகுதி
இ) கல்லீரல்
ஈ) மைய நரம்பு மண்டலம்
விடை:
ஈ) மைய நரம்பு மண்டலம்

II. கீழ்க்கண்டவற்றை சரியா, தவறா எனக்கூறுக. தவறுகள் ஏதுமிருப்பின் திருத்தி எழுதுக.

Question 1.
எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்).
விடை:
தவறு.
சரியான கூற்று: எய்ட்ஸ் என்பது உலகம் முழுவதும் பரவலான ஒரு கொடிய நோய் (பாண்டமிக்).

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
விடை:
சரி.

Question 3.
உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: புற்றுநோயின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.

Question 4.
வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: வெள்ளையணுக்கள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

Question 5.
நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.
விடை:
சரி.

Question 6.
நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.
விடை:
சரி.

Question 7.
இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை – 2 உருவாகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை – 1 உருவாகிறது

Question 8.
கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.
விடை:
சரி.

Question 9.
நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து.
விடை:
தவறு.
சரியான கூற்று: நிக்கோட்டின் என்பது புகையிலிருந்து பெறப்படும் நச்சுப் பொருள்.

Question 10.
சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது.
விடை:
தவறு.
சரியான கூற்று: சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் கோளாறு நோயுடன் தொடர்புடையது.

III. கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக

Question 1.
IDDM
விடை:
Insulin Dependent Diabetes mellitus (இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
HIV
விடை:
Human Immuno-deficiency Virus (மனித தடைக்காப்பு குறைவு வைரஸ்)

Question 3.
BMIT
விடை:
Body Mass Index (உடற் பருமக் குறியீடு)

Question 4.
AIDS
விடை:
Acquired Immuno deficiency Syndrome (பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைவு நோய்)

Question 5.
CHD
விடை:
Coronary Heart Disease (கரோனரி இதய நோய்)

Question 6.
NIDDM
விடை:
Non-Insulin Dependent Diabetes Mellitus (இன்சுலின் சாராத நீரிழிவு நோய்)

IV. பொருத்துக :

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 1
விடை:
1 – உ
2 – அ
3 – ஆ
4 – இ
5 – ஈ

V. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
…………. அதிகப்படியாக பயன்படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.
விடை:
ஆல்கஹால்

Question 2.
புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் …………………..
விடை:
நிக்கோட்டின்

Question 3.
இரத்தப் புற்றுநோய்க்கு ………….. என்று பெயர். [PTA-4]
விடை:
லியூக்கேமியா

Question 4.
சிலவகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு ………….. எனப்படும்.
விடை:
மருந்து சகிப்புத் தன்மை

Question 5.
இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது …………. நீரிழிவு நோயின் நிலை.
விடை:
வகை – 2

VI. ஒப்புமை வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட இடத்தில் எழுதுக.

அ) தொற்று நோய் : எய்ட்ஸ் ; தொற்றா நோய்: ……………..
விடை:
நீரிழிவு நோய் / இதயக்குழல் நோய் / புற்றுநோய்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

ஆ) கீமோதெரபி : வேதிப்பொருள்கள் ; கதிர்வீச்சு:
விடை:
கதிரியக்கம்

இ உயர் இரத்த அழுத்தம் : ஹைபர் கொலஸ்டீரோலோமியா ; கிளைகோசூரியா: ……..
விடை:
அதிக குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றம்

VII. ஒரு வாக்கியத்தில் விடையளி :

Question 1.
மனோவியல் மருந்துகள் என்றால் என்ன? [PTA-2]
விடை:
மூளையின் மீது செயல்பட்டு அவற்றின் செயல்பாடுகளான நடத்தை, உணர்வறி நிலை, சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றியமைக்கும் மருந்துகள் மனோவியல் மருந்துகள் எனப்படும்.

இவை மனநிலை மாற்றும் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன.

Question 2.
புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:

  1. நுரையீரல் புற்றுநோய்
  2. மூச்சுக்குழல் அழற்சி
  3. நுரையீரல் காசநோய்
  4. எம்பைசீமா
  5. ஹைபாக்சியா
  6. அதிக இரத்த அழுத்தம்
  7. முன்சிறுகுடல் புண் (அல்சர்)
  8. வாய்ப் புற்றுநோய்.

Question 3.
உடற்பருமனுக்கு காரணமான காரணிகள் எவை? [PTA-5]
விடை:

  1. மரபியல் காரணிகள்
  2. உடல் உழைப்பின்மை
  3. உணவுப் பழக்கவழக்கங்கள் (அளவுக்கு அதிகமாக உண்ணுதல்)
  4. நாளமில்லா சுரப்பிக் காரணிகள் போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது.

Question 4.
வயது முதிர்ந்தோர் நீரிழிவு என்றால் என்ன?
விடை:
(i) வகை – 2: இன்சுலின் சாராத நீரிழிவு நோய், வயதானோரின் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும்.

(ii) 80% முதல் 90% வரை நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது.

(iii) பெரும்பாலும் வயது அதிகரித்தல் (நடுத்தர மற்றும் வயதானவர்களை பாதிக்கும்), உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கதிகமாக உண்ணுதல், உடல் செயல்பாடுகள் இல்லாமை போன்றவற்றால் ஏற்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 5.
மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?
விடை:
புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து, புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
இன்சுலின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது?
விடை:
(i) இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக, போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது (ஹைபர்கிளைசீமியா).

(ii) மரபணு மரபுவழி மற்றும் சுற்றுச்சுழல் காரணிகள் (வைரஸ் காரணமாக தொற்றுகள், கடுமையான மன அழுத்தம்) ஆகியவற்றாலும் இது ஏற்படுகிறது.

VII. குறுகிய விடையளி :

Question 1.
HIV பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை? [PTA-1]
விடை:
பொதுவாக HIV பரவும் முறைகள்:

  • பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்ளுதல்.
  • போதை மருந்து ஊசி பயன்படுத்துவோர் இடையே நோய்த் தொற்று ஊசிகள் மூலமாகப் பரவுதல்.
  • பாதிக்கப்பட்ட நபரின் நோய்த் தொற்றுடைய இரத்தம் மற்றும் இரத்தப் பொருள்களைப் பெறுவதன் மூலம் பரவுதல்.
  • பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு தாய்சேய் இணைப்புத்திசு மூலம் பரவுதல்.

Question 2.
புற்று செல் சாதாரண செல்லிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 2

Question 3.
வகை – 1 மற்றும் வகை – 2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக. [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 3

Question 4.
உடற்பருமன் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைப்பதன் அவசியம் என்ன?
விடை:
குறைந்த கலோரி, இயல்பான புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், கட்டுப்படுத்தப் பட்ட கார்போஹைட்ரேட், கொழுப்பு, அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் போன்றவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பவைகளாகும்.

எடை குறைப்பில் கலோரி கட்டுப்பாடு பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் ஆகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 5.
இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக. [GMQP-2019; Sep.20]
விடை:
திட்டமிட்ட உணவுமுறை:
(i) குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும்.

(ii) அதிகளவு நிறைவுறாத பல் கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும்.

(iii) நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.

உடல் செயல்பாடுகள்:
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும். அடிமைப்படுத்தும்

பொருள்களை தவிர்த்தல் :
ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

IX. விரிவான விடையளி :

Question 1.
மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.
விடை:
(i) ஆலோசனை பெறுதல்:
மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபடவும், வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் தகுந்த ஆலோசனைகள் உதவும்.

(ii) உடல் செயல்பாடுகள்:
மறுவாழ்வை மேற்கொள்ளும் நபர்கள், நூல்கள் வாசித்தல், இசை, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

(iii) பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடம் உதவியை நாடுதல்:
சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். தங்களது பதட்டமான உணர்வுகள், தவறான செயல்களைக் குறித்துப் பேசுவதன் மூலம் மேலும், அத்தவறுகளைச் செய்யாமல் தங்களை தடுத்துக் கொள்ள உதவும்.

(iv) மருத்துவ உதவி:
உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவிகள் பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். மதுவிலிருந்து மீட்பு (de-addiction) மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தனிநபருக்கு உதவிகரமாக உள்ளன. இதனால் அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, இயல்பான மற்றும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்,

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.
விடை:
(i) குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் – மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும்.

(ii) அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும்.

(iii) நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும்வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.

உடல் செயல்பாடுகள்:
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல் நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும்.

அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்:
ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள் :

Question 1.
ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் கொழுப்பின் பங்கு என்ன? [PTA-3]
விடை:

  1. கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது.
  2. இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம்.
  3. இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்கச் செய்வதன் மூலம், ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கிறது.

Question 2.
குப்பை உணவுகளை உண்பதாலும் மென்பானங்களைப் பருகுவதாலும் உடற்பருமன் போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் குழந்தைகள் அதனை விரும்புகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்கு நீங்கள் தரும் ஆலோசனைகளைக் கூறுக.
விடை:
(i) குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை கொடுக்க வேண்டும். மேலும் உடல் நலனுக்கு ஏற்ற தின்பண்டங்களை குழந்தைப் பருவத்திலிருந்தே கொடுக்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை கொடுத்து பழக்கக்கூடாது.

(ii) பழச்சாறு, கரும்புச்சாறு போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளையும் கொடுக்க வேண்டும். புட்டிகளில் அடைத்து விற்கப்படுகிற குளிர்பானங்களை கொடுக்கக்கூடாது.

(iii) இதனால் குழந்தைகள் வளர்ந்து வரும்போது அவர்களுக்கு குப்பை உணவு (Junk foods) மற்றும் குளிர்பானங்களின் மேல் ஈர்ப்பு வராமல் இருக்கும்.

(iv) ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பெற்றோரிடத்தில் குப்பை உணவு மற்றும் சிப்ஸ்கள் (Chips) கொடுத்து அனுப்ப வேண்டாம் என ஆலோசனை கூறலாம்.

(v) குழந்தைகளும் நண்பர்களின் ஆலோசனைகளையும், விளம்பரத் தினையும் பார்த்து குப்பை உணவு மேல் நாட்டம் ஏற்படாவண்ணம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

Question 3.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள் யாவை? [PTA-6]
விடை:
தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள்:

  • மிதமான உடற்பயிற்சியுடன் கூடிய குறைந்த கலோரி உணவு உடல் எடையைக் குறைப்பதில் திறன் மிக்கதாக விளங்குகிறது.
  • மன அழுத்தம் காரணமாக அதிகப்படியான உணவு உட்கொள்வதை தியானம் மற்றும் யோக மூலம் குறைக்க முடியும்.
  • உடல் பருமன் தினசரி உடற்பயிற்சியினால் குறைந்து விடும்.
  • மன அழுத்தம் குறைந்து விடும். அதாவது உடற்பயிற்சியின் மூலம் சில ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.
  • உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது.
  • உடலில் உள்ள எலும்பு மற்றும் தசைகளுக்கு நல்லது.
  • இவைகள் இதய நோய்க்கான காரணிகளை குறைத்து விடுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 4.
ஒரு முன்னணி வார இதழ் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மக்களிடையே எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு இன்னும் குறைவாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீ இந்த நாளிதழின் அறிக்கையை உன் வகுப்பிலும் உன் வகுப்பிலுள்ள குழுவினரிடமும் விவாதித்து இந்த அச்சமூட்டும் நோய்க்கு எதிராக செயல்படுதல் குறித்து மக்களுக்கு உதவுவது பற்றி முடிவெடுக்கவும்.

அ) உன்னுடைய பள்ளிக்கு அருகாமையிலுள்ள கிராம மக்களுக்கு நீ மேற்கூறியவற்றை தெரிவிக்கும் போது உனக்கு ஏற்படும் சிரமங்கள் யாவை?
ஆ) இச்சிக்கலுக்கு நீ எவ்வாறு தீர்வு காண்பாய்?
விடை :
அ)

  1. கிராமத்தில் உள்ள மக்களுக்கு அறிவியல் கருத்துக்களை புரிந்து கொள்ளக்கூடிய அளவில் படிப்பறிவு குறைந்து காணப்படலாம். ஆகவே அவர்களுடைய மொழியிலேயே இதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
  2. ஆரம்பத்தில் அவர்கள் இவற்றை அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம்.
  3. பாதுகாப்பான உடலுறவு பற்றி சொல்லித் தருவது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

ஆ)

  1. இந்த பிரச்சனைகளை சமாளிக்க கிராம பஞ்சாயத்து சபை உறுப்பினர்களைக் கொண்டு இதைப்பற்றி பேசச் செய்யலாம்.
  2. கிராமத்திற்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி ஆலோசனை மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கலாம்.
  3. திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

XI. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்:

Question 1.
போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால் அதிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை ஏன்?
விடை:
போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள் முழுவதுமாக மதுவை நம்பி இருக்கிறார்கள். மது இல்லாமல் அவர்களால் நிதானமாக இருக்க முடியாது என்ற மாயையில் இருக்கிறார்கள். தீயவிளைவுகளுக்கு உட்படுத்தி நிரந்தரமாக மதுவை சார்ந்திருப்பதற்கு அவர்களின் இந்த எண்ணம் இட்டுச் செல்கிறது.

(i) இயல்பான நல்ல நிலையில் தன்னுடைய உடற்செயலியல் நிலையைப் பராமரிக்க மற்றவர்களைச் சார்ந்திருத்தல் அவசியம்.

(ii) போதை மருந்துகள் அல்லது மது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன என்ற தவறான, உளவியல் உணர்விலிருந்து விடுபட, அவர்களிடம் மன உறுதி இல்லாததும் ஒரு காரணம்.

Question 2.
புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிக.
விடை:
(i) நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் (lung alveoli) ஏற்படும் வீக்கம் வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பைசீமா எனும் நோயை உண்டாக்குகிறது.

(ii) புகைப்பிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்-மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் திறனை குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைபாக்சியாவை உண்டாக்குகிறது.

இவையே புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 3.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று உணவு வகைகளைக் கூறுக. இதை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என விவரி.
விடை:
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

  1. முழுதானியங்கள், சிறுதானியங்கள்
  2. கீரை வகைகள்
  3. கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி

இந்த உணவு வகையில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் சற்று குறைவான அளவு உள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

  1. பழச்சாறு /இனிப்பு வகைகள்
  2. ஸ்டார்ச் அதிகமுள்ள காய்கறிகள்
  3. பால் பொருட்கள்

இவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து ஜீரணமாகி வேகமாக இரத்தத்துடன் கலக்கப்படுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.

எனவே புரதச்சத்து நார்ச்சத்து உள்ள உணவு வகையையே அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Question 4.
மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை, அவர்களின் தெரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது? [PTA-5]
விடை:
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எய்ட்ஸ் பற்றிய அறிவு பெற்றவர்களைக் கொண்டு பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம். இந்த நோய் சம்பந்தமாக அறிவியல்பூர்வமாக அதிலுள்ள ஆபத்துக்கள், விளைவுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எய்ட்ஸ் தடுப்பு :

  1. இரத்த வங்கியிலிருந்து இரத்தம் பெற்று ஏற்றுவதற்கு முன்னர் அக்குறிப்பிட்ட வகை இரத்தமானது HIV சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
  2. மருத்துமனைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  3. பாதுகாப்பான பாலுறவு மற்றும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

XII. கூற்று மற்றும் காரணம்:

கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
இ கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

Question 1.
கூற்று: அனைத்து மருந்துகளும் மூளையின் மீது செயல்படுகின்றன.
காரணம்: மருந்துகள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைக் குலைக்கின்றன.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
கூற்று: டயாபடீஸ் மெல்லிடஸ் நோயாளிகளின் சிறுநீரில் அதிகளவு குளுக்கோஸ் வெளியேறுவதைக் காணலாம்.
காரணம்: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதில்லை.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

அரசு தேர்வு வினா-விடை க
7 மதிப்பெண்கள்

Question 1.
தவறான பயன்பாட்டுக்கு உள்ளான குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறைகள் ஏதேனும் 2 கூறுக. [Sep.20]
விடை:
தவறான பயன்பாட்டுக்கு உள்ளான குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறைகள் :
குழந்தைகள் உதவிக்கரம் (Child Helpline) : குழந்தைகள் உதவிக்கரம் சமூகப் பணியாளர்களை நியமித்து குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உதவி புரிகிறது.

குடும்ப ஆதரவு :
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுடைய பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முறையான கவனத்துடன் கூடிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 18 மரபியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 18 மரபியல்

10th Science Guide மரபியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு,

Question 1.
மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.
அ) ஒரு ஜோடி ஜீன்கள்
ஆ) பண்புகளை நிர்ணயிப்பது
இ) மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது
ஈ) ஒடுங்கு காரணிகள்
விடை:
ஆ) பண்புகளை நிர்ணயிப்பது

Question 2.
எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
அ) பிரிதல்
ஆ) குறுக்கே கலத்தல்
இ சார்பின்றி ஒதுங்குதல்
ஈ) ஒடுங்கு தன்மை
விடை:
இ) சார்பின்றி ஒதுங்குதல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 3.
செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
அ) குரோமோமியர்
ஆ) சென்ட்ரோசோம்
இ) சென்ட்ரோமியர்
ஈ) குரோமோனீமா
விடை:
இ) சென்ட்ரோமியர்

Question 4.
சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது …………. வகை குரோமோசோம். [Qy-2019]
அ) டீலோ சென்ட்ரிக்
ஆ) மெட்டா சென்ட்ரிக்
இ) சப்-மெட்டா சென்ட்ரிக்
ஈ) அக்ரோ சென்ட்ரிக்
விடை:
ஆ) மெட்டா சென்ட்ரிக்

Question 5.
டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ………….. உள்ளது.
அ) டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை
ஆ) பாஸ்பேட்
இ) நைட்ரஜன் காரங்கள்
ஈ) சர்க்கரை பாஸ்பேட்
விடை:
ஈ) சர்க்கரை பாஸ்பேட்

Question 6.
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது …………
அ) ஹெலிகேஸ்
ஆ) டி.என்.ஏ பாலிமெரேஸ்
இ) ஆர்.என்.ஏ. பிரைமர்
ஈ) டி.என். ஏ. லிகேஸ்
விடை:
ஈ) டி.என்.ஏ. லிகேஸ்

Question 7.
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ……………
அ) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
ஆ) 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
இ) 46 ஆட்டோசோம்கள்
ஈ) 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
விடை:
அ) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

Question 8.
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ………… என அழைக்கப்படுகிறது.
அ) நான்மய நிலை
ஆ) அன்யூ பிளாய்டி
இ யூபிளாய்டி
ஈ) பல பன்மய நிலை
விடை:
ஆ) ஆன்யூ பிளாய்டி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக OUT

Question 1.
மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் ………………. என அழைக்கப்படுகின்றது.
விடை:
அல்லீல்கள்

Question 2.
ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் எனப்படும்.
விடை:
புறத்தோற்றம் (பீனோடைப்)

Question 3.
ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள்…. என அழைக்கப்படுகின்றன.
விடை:
குரோமோசோம்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 4.
ஒரு டி.என்.ஏ இரண்டு …………………. இழைகளால் ஆனது.
விடை:
பாலிநியுக்ளியோடைடு

Question 5.
ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் ……………… என அழைக்கப்படுகின்றன.
விடை:
சடுதி மாற்றம்

III. கீழ்க்கண்ட கூற்று சரியா? தவறா? எனக்கூறுக. தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 3:1 ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 9 : 3 : 3 : 1.

Question 2.
ஒடுங்கு பண்பானது ஒங்கு பண்பினால் மாற்றப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மறைக்கப்படுகிறது.

Question 3.
ஒவ்வொரு கேமீட்டும் ஜீனின் ஒரே ஒரு அல்லீலைக் கொண்டுள்ளது.
விடை:
சரி.

Question 4.
ஜீன் அமைப்பில் வேறுபட்ட இரண்டு தாவரங்களைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட சந்ததி கலப்புயிரி ஆகும்.
விடை:
சரி.

Question 5.
சில குரோமோசோம்களில் டீலோமியர் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: சில குரோமோசோம்களில் சாட்டிலைட் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.

Question 6.
டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது. விடை:
சரி

Question 7.
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.
விடை:
தவறு
சரியான கூற்று: டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 30
விடை:
1 – இ,
2 – ஈ,
3 – உ,
4 – அ,
5 – ஆ

V. ஒரு வாக்கியத்தில் விடையளி.

Question 1.
ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்ட உயிரிகளில் கலப்பினம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
இரு பண்புக் கலப்பு.

Question 2.
எந்தச் சூழ்நிலையில் இரண்டு அல்லீல்களும் ஒத்த நிலையில் இருக்கும்?
விடை:
ஹோமோசைகஸ் நிலை (ஒத்த கருநிலை TT, tt)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 3.
ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்?
விடை:
இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கும் பட்டாணிச் செடி ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்.

Question 4.
மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ.வின் பகுதிக்கு என்ன பெயர்?
விடை:
ஜீன்.

Question 5.
டி.என்.ஏவில் நியூக்ளியோடைடுகளை இணைக்கும் பிணைப்பின் பெயரை எழுதுக.
விடை:
ஹைட்ரஜன் பிணைப்பு.

VI. குறுகிய விடையளி :

Question 1.
மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்?
விடை:
பட்டாணிச் செடியில் இயற்கையாகவே தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், தூய தாவரங்களைப் பெருக்கம் செய்வது எளிது.

Question 2.
பீனோடைப், ஜீனோடைப் பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
பீனோடைப்: ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித்தோற்றத்தினை புறத்தோற்றம் (பீனோடைப்) என்கிறோம். புறத்தோற்ற விகிதம் 3 : 1.
ஜீனோடைப்: தாவரங்களின் ஜீனாக்கம் ஜீனோடைப் எனப்படும். ஜீனாக்க விகிதம் 1 : 2 : 1.

Question 3.
அல்லோசோம்கள் என்றால் என்ன? [PTA-2; Qy-2019]
விடை:

  1. ஓர் உயிரியின் பாலினத்தை நிர்ணயிக்கின்ற குரோமோசோம்கள் அல்லோசோம்கள் எனப்படும்.
  2. இவை பால் குரோமோசோம்கள் அல்லது ஹெட்டிரோ குரோமோசோம்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  3. இவற்றில் X குரோமோசோம்கள் மற்றும் Y குரோமோசோம்கள் என இரு வகைகள் உள்ளன.

Question 4.
ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன? (PTA-4)
விடை:

  1. இரண்டு டி.என்.ஏ இரட்டிப்பாதலின் போது ஓர் இழையில் சேய் இழை தொடர்ச்சியான இழையாக உருவாக்கப்படுகிறது.
  2. மற்றோர் இழையில் டி.என்.ஏவின் சிறிய பகுதிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த இழையில் சிறிய பகுதியே ஒகசாகி துண்டுகள் என அழைக்கப்படுகின்றன.
  3. இந்தத் துண்டுகள் டி.என்.ஏ லிகேஸ் நொதியால் ஒன்றிணைக்கப்படுகின்றன.

Question 5.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?
விடை:

  1. மும்மயத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பொதுவாக மலட்டுத்தன்மையுடையவை.
  2. நான்மய நிலைத் தாவரங்கள் நன்மை பயக்கக்கூடியவை. ஏனெனில், நான்மய நிலை, பெரும்பாலும் அளவில் பெரிய பழம் மற்றும் பூக்களை விளைவிக்கும்.
  3. எனவே யூபிளாய்டி நிலைத் தாவரங்கள் சாதகமாகக் கருதப்படுகிறது.

Question 6.
ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூய குட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது. இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை தாவரங்கள் எவ்வகை தன்மையுடையன என்பதை விளக்குக. [PTA-5]
விடை:
ஒரு பண்பின் இரு மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களைக் கலப்புறச் செய்வது ஒரு பண்பு கலப்பு.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 80

  1. F1 தலைமுறையின் ஒரு பண்பு கலப்பு உயிர்களை கலப்பு செய்யும்போது, நெட்டை, குட்டை தாவரங்கள் 3 :1 என்ற விகிதத்தில் தோன்றின.
  2. F2 தலைமுறையில், 3 வகையான தாவரங்கள் தோன்றின.
    தூய நெட்டை (TT)- 1
    கலப்பின நெட்டை (Tt) – 2
    தூய குட்டை (Tt)- 1

Question 7.
குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும். (PTA-6)
விடை:
(i) சகோதரி குரோமேட்டிடுகள் என்று குரோமோசோம் அழைக்கப்படும் இரண்டு ஒத்த இழைகளை உள்ளடக்கியமெல்லிய, நீண்ட மற்றும் நூல் போன்ற அமைப்புகள், குரோமோசோம்கள் எனப்படும். சென்ட்ரோமியர், இரண்டு குரோமேட்டிடுகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒன்றாக இணைக்கிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 85

(ii) ஒவ்வொரு குரோமேட்டிடும், திருகு போல் சுருக்கம் சுருட்டப்பட்ட மெல்லிய குரோமோனீமா என்ற அமைப்பால் ஆனது. குரோமோனீமா தன் முழு நீளத்திற்கும் எண்ணற்ற மணி போன்ற குரோமோமியர்களைக் கொண்டுள்ளது.

(iii) குரோமோசோம்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, குரோமோசோம் புரதங்கள் (ஹிஸ்டோன் மற்றும் ஹிஸ்டோன் அல்லாதவை) மற்றும் சில உலோக அயனிகள் ஆகியவற்றைக் கொண்டது.

(iv) இந்தப் புரதங்கள் குரோமோசோம் கட்டமைப்பிற்கு ஆதாரமாக விளங்குகின்றன. ஒரு குரோமோசோம் கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது.

(v) முதன்மைச் சுருக்கம் :
குரோமோசோமின் இரண்டு கரங்களும் இணையும் புள்ளி, முதன்மைச் சுருக்கம் அல்லது சென்ட்ரோமியர் ஆகும். செல் பிரிதலின் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோம்களுடன் இணையும் பகுதி சென்ட்ரோமியர் ஆகும்.

(vi) இரண்டாம் நிலைச் சுருக்கம் :
சில குரோமோசோம்கள் ஏதேனும் சில பகுதிகளில் இரண்டாம் நிலைச் சுருக்கங்களையும் பெற்றிருக்கும். இந்தப் பகுதி உட்கருப் பகுதி அல்லது உட்கருமணி உருவாக்கும் பகுதி (உட்கருவில் உட்கருமணி உருவாக்கம்) என அழைக்கப்படுகிறது.

(vii) டீலோமியர் :
குரோமோசோமின் இறுதிப் பகுதி டீலோமியர் என அழைக்கப்படுகிறது. குரோமோசோமின் இரண்டு நுனிகளும் எதிரெதிர்த் தன்மை உடையன. இது அருகில் உள்ள குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதைத் தடுக்கிறது. டீலோமியர் குரோமோசோம்களுக்கு நிலைப்புத் தன்மையை அளித்துப் பராமரிக்கிறது

(viii) சாட்டிலைட்
சில குரோமோசோம்களின் ஒரு முனையில் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது. இந்த இணையுறுப்பு சாட்டிலைட் என அழைக்கப்படுகிறது. சாட்டிலைட்டைப் பெற்றுள்ள

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் டி.என்.ஏவின் பாகங்களைக் குறிக்கவும் அதன் அமைப்பை பா சுருக்கமாக விவரிக்கவும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 88
விடை:
டி.என்.ஏ மூலக்கூறின் வேதி இயைபு
டி.என்.ஏ என்பது மில்லியன் கணக்கான நியூக்ளியோடைடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மூலக்கூறு ஆகும். எனவே இது பாலி நியூக்ளியோடைடு எனவும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு / நியூக்ளியோடைடுகளும் மூன்று கூறுகளை உள்ளடக்கியது.

  1. ஒரு சர்க்கரை மூலக்கூறு – டீ ஆக்சிரை போஸ் சர்க்கரை
  2. ஒரு நைட்ரஜன் காரம்
    டி.என்.ஏ வில் உள்ள நைட்ரஜன் காரங்கள் இரு வகைப்படும். அவை
    (அ) பியூரின்கள் (அடினைன் மற்றும் குவானைன்)
    (ஆ) பிரிமிடின்கள் (சைட்டோசின் மற்றும் தைமின்)
  3. ஒரு பாஸ்பேட் தொகுதி
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 89

VII. விரிவான விடையளி :

Question 1.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?
விடை:
(i) இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு இருபண்பு கலப்பு எனப்படும். மெண்டல், விதையின் நிறம் மற்றும் வடிவத்தைத் தன் ஆய்வுக்குத் தோந்தெடுத்தார். (விதையின் நிறம் – மஞ்சள் மற்றும் பச்சை விதையின் வடிவம் – உருண்டை மற்றும் சுருங்கியது.

(ii) மெண்டல் உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பினம் செய்து கீழ்க்கண்ட முடிவுகளைக் கண்டறிந்தார்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 89.1
(1) மெண்டல், முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பு செய்யும் போது F1 சந்ததியில் கிடைத்த அனைத்துத் தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன. சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் F1ல் தோன்றவில்லை. இதிலிருந்து அவர் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்கள் ஓங்கு பண்புத் தாவரங்கள் எனவும், சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் ஒடுங்கு பண்புத் தாவரங்கள் எனவும் கண்டறிந்தார்.

(2) முதல் சந்ததியில் தோன்றிய இரு பண்புக் கலப்புயிரியான உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளைத் தன் மகரந்தச் சேர்க்கைக்குட்படுத்தும் போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவை முறையே உருண்டை மஞ்சள் (9, உருண்டை பச்சை (3), சுரங்கிய மஞ்சள் (3), சுருங்கிய பச்சை 1 நிற விதைகளுடைய தாவரங்கள். எனவே இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகும்.

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில் பண்புகளுக்கான காரணிகள் தனித்தன்மையுடனும் சார்பின்றியும் கேமீட்டுகளில் காணப்படுகின்றன. இக்காரணிகள் ஒவ்வொன்றும் சார்பின்றி தனித்தன்மை இழக்காமல் அடுத்த சந்ததிக்குச் செல்லும். இரு பண்புக் கலப்பின் முடிவுகள்

இரு பண்புக் கலப்பின்
இறுதியில் மெண்டல் கீழ்க்காணும் முடிவுகளைக் கண்டறிந்தார்.

(1) நான்கு வகைத் தாவரங்கள் இரு பண்புக் கலப்பின் முடிவில் F2 சந்ததியில் நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவற்றில் 9 தாவரங்கள் ஓங்கு பண்புடனும் 3 தாவரங்கள் ஓர் ஓங்கு பண்பு மற்றும் ஒடுங்கு பண்புடனும் அடுத்த மூன்று தாவரங்கள் மற்றொரு ஓங்கு மற்றும் ஒடுங்கு பண்புடனும், ஒரே ஒரு தாவரம் மட்டும் இரண்டு ஒடுங்கு பண்புடனும் தோன்றின.

(2) புதிய தாவரங்கள்
இரண்டு புதிய பண்புகளுடைய தாவரங்கள் தோன்றின. அவை உருண்டை வடிவப் பச்சை நிற விதைகள், சுருங்கிய மஞ்சள் நிற விதைகள், இவை இரண்டாம் சந்ததியில் தோன்றிய தாவரங்கள் ஆகும்.

வேறுபாடு
ஒரு பண்பு கலப்பில் இரு நிற மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாக பெற்ற இரு தாவரங்களைக் கொண்டு கலப்படம் செய்வதாகும். இரு பண்பு கலப்பில் இரண்டு இணை பண்புகளைக் கொண்ட தாவரங்களை கலப்பினம் செய்வதாகும்.

Question 2.
டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏ.வின் உயிரியல் முக்கியத்துவம் யாது? [Qy-2019]
விடை:
I. வாட்சன் மற்றும் கிரிக்கின் டி.என்.ஏ. மாதிரி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 89.5

  1. டி.என்.ஏ மூலக்கூறு இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.
  2. இந்த இழைகள் இரட்டைச் சுருள் அமைப்பை உருவாக்குகின்றன. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிர் இணை இயல்புடன் எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
  3. மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள், சர்க்கரை – பாஸ்பேட் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் டி.என்.ஏ.வின் முதுகெலும்பாக உள்ளன.
  4. நைட்ரஜன் காரங்கள் இணைவுறுதல், எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட விதத்திலேயே அமைகிறது. அவை எப்பொழுதும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன.
    1. அடினைன் (A) தைமினுடன் (T) இரண்டு ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப் பட்டுள்ளது. (A = T)
    2. சைட்டோசின்(C) குவானைனுடன் (G) மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப் பட்டுள்ளது.(C = G)
      இத்தகைய இணைவுறுதல் நிரப்பு கார இணைவுறுதல் என்ற அழைக்கப்படுகிறது.
  5. நைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏ விற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.
  6. இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34 A° (3.4nm) அளவிலானது. ஒரு முழு சுற்றில் பத்து கார இணைகள் உள்ளன.
  7. இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போடை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

II. உயிரியல் முக்கியத்துவம்

  1. இது மரபியல் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.
  2. இது புரதங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுள்ளது.
  3. ஒரு உயிரினத்தின் வளர்ச்சி சார் மற்றும் வாழ்வியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

Question 3.
புதிதாகப் பிறந்த குழந்தையின் பாலின நிர்ணயம் ஒரு தற்செயல் நிகழ்வு. தாயோ தந்தையோ இதற்குப் பொறுப்பாக கருத முடியாது. குழந்தையின் பாலினத்தை எத்தகைய இன செல் இணைவு முடிவு செய்கிறது?
விடை:
மனிதனில் பாலின நிர்ணயம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 90

  1. மனிதனில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி (23வது ஜோடி) பால் குரோமோசோம்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண் கேமீட்டுகள் அல்லது அண்ட செல்கள் ஒரே மாதிரியான குரோமோசோம் அமைப்பைப் (22 + x) பெற்றுள்ளன. ஆகவே, மனித இனத்தின் பெண் உயிரிகள் ஹோமோகேமீட்டிக் ஆகும்.
  2. ஆண் கேமீட்டுகள் அல்லது விந்தணுக்கள் இரண்டு வகைப்படும். இரண்டு வகைகளும் சம விகிதத்தில் உருவாகின்றன. அவை (22 + X) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள் மற்றும் (22 + Y) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள். மனித இனத்தில் ஆண்கள் ஹெட்டிரோகேமீட்டிக் என அழைக்கப்படுகின்றனர்.
  3. அண்டம் (X), X – குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால், XX உயிரி (பெண்) உருவாகிறது. அண்டம் (X), Y – குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால் XY – உயிரி (ஆண்) உருவாகிறது. தந்தை உருவாக்கும் விந்தணுவே, குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்விதப் பங்கும் இல்லை.
  4. எவ்வாறு குரோமோசோம்கள் பாலின நிர்ணயித்தலில் பங்கு கொள்கின்றன என்பதைப் பார்ப்போம். (22 + X) அண்டம் (22 + X) விந்தணுவுடன் கருவுறும் பொழுது பெண் குழந்தை (44 + XX) உருவாகிறது. (22 + X) அண்டம், (22 + Y) விந்தணுவுடன் கருவுறும் பொழுது ஆண் குழந்தை (44 + XY) உருவாகிறது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

Question 1.
தோட்டப் பட்டாணிச் செடியிலுள்ள மலர்கள் அனைத்தும் தன் மகரந்த சேர்க்கை நடைபெறும் இரு பால் மலர்கள். ஆகவே அவற்றில் குறுக்கே கலத்தல் மூலம் கலப்பினம் செய்வது கடினம். இவ்வகைப் பட்டாணிச் செடியில் எவ்வாறு ஒரு பண்பு மற்றும் இருபண்பு கலப்பை மெண்டல் மேற்கொண்டார்?
விடை:

  1. மெண்டல் தோட்டப் பட்டாணி செடியினை ஆண், பெண் பெற்றோர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
  2. சில தாவரங்களில் பூக்களில் உள்ள மகரந்தத்தினை நீக்கிவிட்டார். அந்த தாவரங்களை பெண் தாவரங்களாக எடுத்துக்கொண்டார்.
  3. சில தாவரங்களின் சூல் முடியை வேறு மகரந்த தூள் வந்தடையாமல் மறைத்து வைத்துவிட்டார்.

Question 2.
இதனால் 40% தன்மகரந்த சேர்க்கை நடைபெறுவதைக் கொண்டு ஒரு பண்பு மற்றும் இரு பண்பு கலப்பினை மேற்கொண்டார். தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூய குட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம் செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 (முதல் சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2 (இரண்டாம் சந்ததி) தாவரங்களை உருவாக்கியது.
[GMQP-2019]
அ. F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?
ஆ. F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?
இ. எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2 சந்ததியில் மீண்டும் உருவானது?
விடை:
அ) F1 தாவரங்கள் தங்கள் பெற்றோரைப் போல் ஓங்கு பண்பான நெட்டைத் தாவரங்களாக காணப்பட்டன.
ஆ) F2 சந்ததியில் 3 நெட்டைத் தாவரங்களும் ஒரு குட்டைத் தாவரமும் கிடைத்தது.
புறத்தோற்ற விகிதம் 3 : 1
ஜீனாக்க விகிதம் 1 : 2 : 1
இ) F1ல் குட்டை தாவரம் மறைக்கப்பட்டு F2ல் சந்ததியில் மீண்டும் உருவானது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 3.
கவிதா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரின் குடும்ப மரபினால் அவர் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க முடியும்’ என அவர் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். அவரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்று உண்மையா? உங்கள் விடையை நியாயப்படுத்துக.
விடை:

  1. கவிதாவின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றில் உண்மையில்லை. தவறானது.
  2. ஏனெனில் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதும் நாம் தீர்மானிப்பதல்ல.
  3. ஆண்கள் ஒரு X குரோமோசோம்கள் மற்றும் ஒரு Y குரோமோசோம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் இரண்டு X குரோமோசோம்களையே பெற்றிருக்கிறார்கள்.
  4. அண்டமானது x + x என இணைந்தால் XX உயிரி (பெண்) உண்டாகிறது. அண்டமானது x + y என இணைந்தால் ஓங்கு உயிரி (ஆண்) உருவாகிறது.
  5. தந்தை உருவாக்கும் விந்தணுவே குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்வித பங்கும் இல்லை.

IX விழுமிய அடிப்படையிலான வினாக்கள்.

Question 1.
எச்சூழலில் சார்பின்றி ஒதுங்குதல் விதியானது நல்ல முடிவைத் தரும்? ஏன்?
விடை:

  1. சார்பின்றி ஓங்குதல் விதியானது இரு பண்பு கலப்பு விதியினை ஆதாரமாகக் கொண்டது.
  2. இரு பண்புகளைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட தாவரங்களை அடிப்படையாக இந்த விதியில் எடுத்துக் கொண்டால்,
  3. ஒவ்வொரு பண்பும் நிர்ணயம் செய்வது ஒரு ஜோடி அல்லீல்கள் அதாவது ஓங்கு பண்பு மற்றும் ஒடுங்கு பண்பு.
  4. ஒவ்வொரு அல்லீல்களின் பண்பு சேய்த்தாவரங்களுக்கு கடத்தப்படுகிறது.
  5. இரு பண்பு கலப்பில் கிடைத்த ஜீனாக்க விகிதம் 9:3:3:1
  6. ஒவ்வொரு காரணிகளையும் அதன் ஜீன்களிலிருந்து நாம் காணலாம்.
  7. மேலும் பெற்றோர்களின் பண்புகள் இரண்டாம் தலைமுறையிலும் வெளிக்கொணரப்படுகிறது.
  8. ஒவ்வொரு பண்புகளும் அல்லீல்களாக நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே சார்பின்றி – ஒதுங்குதல் நல்ல முடிவைத் தரும்.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
பீனோடைப் மற்றும் ஜீனோடைப்பை வேறுபடுத்துக. [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 91

4 மதிப்பெண்கள்

Question 1.
Tt × tt என்ற காரணிகளைக் கொண்ட இரு பெற்றோர்களிடையே கலப்பு செய்யும் போது அதன் F1 தலைமுறையில் உருவாகும் ஜீனாக்க விகிதம் என்ன? (PTA-4)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 95

Question 2.
அ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் நிகழ்வில் டி.என்.ஏ.வின் இரண்டு இழைகளையும் பிரிக்கும் நொதி …………
ஆ) இரட்டிப்பாதல் கவையின் மேலே உள்ள இரட்டைச் சுருளைப் பிரித்து, முறுக்கல்களை நீக்கும் நொதி …………
இ) நியூளியோடைடுகளை சேர்க்கும் நொதி ……….
ஈ) டி.என்.ஏ.வின் துண்டுகளை ஒன்றிணைக்கப் பயன்படும் நொதி ……….
உ) இரட்டிப்பாதல் கவையின் இரு பக்கங்களும் …….. என்ற இடத்தில் சந்திக்கும்போது இரட்டிப்பாதல் முடிவடைகிறது.
விடை:
அ) ஹெலிகேஸ்
ஆ) டோபோஐசோமெரெஸ்
இ) டி.என்.ஏ. பாலிமெரேஸ்
ஈ) டி.என்.ஏ லிகேஸ்
உ) டெர்மினஸ்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
சரியான இணையைக் காண்க:. [Sep.20]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 1
விடை :
(அ) – (iv),
(ஆ) – (i),
(இ) – (iii),
(ஈ) – (ii)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

10th Science Guide தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு,

Question 1.
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
அ) வெங்காயம்
ஆ) வேம்பு
இ) இஞ்சி
ஈ) பிரையோஃபில்லம்
விடை:
ஈ) பிரையோஃபில்லம்

Question 2.
பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் _____
அ) அமீபா
ஆ) ஈஸ்ட்
இ) பிளாஸ்மோடியம்
ஈ) பாக்டீரியா
விடை:
ஆ) ஈஸ்ட்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 3.
சின்கேமியின் விளைவால் உருவாவது
அ) சூஸ்போர்கள்
ஆ) கொனிடியா
இ) சைகோட் கருமுட்டை
ஈ) கிளாமிடோஸ்போர்கள்
விடை:
இ) சைகோட் (கருமுட்டை)

Question 4.
மலரின் இன்றியமையாத பாகங்கள்
அ) புல்லிவட்டம், அல்லிவட்டம்
ஆ) புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம்
இ) அல்லிவட்டம், சூலக வட்டம்
ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
விடை:
ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

Question 5.
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
அ) காம்பற்ற சூல்முடி
ஆ) சிறிய மென்மையான சூல்முடி
இ) வண்ண மலர்கள்
ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி
விடை:
ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி

Question 6.
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
அ) உற்பத்தி செல்
ஆ) உடல செல்
இ) மகரந்தத்தூள் தாய் செல்
ஈ) மைக்ரோஸ்போர்
விடை:
அ) உற்பத்தி செல்

Question 7.
இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?
அ) இருமயம் கண்டவை
ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை
இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன
விடை:
ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன

Question 8.
விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) எபிடிடைமிஸ்
ஆ) விந்து நுண்நாளங்கள்
இ) விந்து குழல்கள்
ஈ) விந்துப்பை நாளங்கள்
விடை:
அ) எபிடிடைமிஸ்

Question 9.
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
அ) முதல்நிலை விந்து வளர் உயிரணு
ஆ) செர்டோலி செல்கள்
இ) லீடிக் செல்கள்
ஈ) ஸ்பெர்மட்டோ கோனியா
விடை:
ஆ) செர்டோலி செல்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 10.
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு
ஆ) முதன்மை பாலிக்கிள்கள்
இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்
ஈ) கார்பஸ் லூட்டியம்
விடை:
இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்

Question 11.
கீழ்க்க ண்டவற்றுள் எது IUCD?
அ) காப்பர் – டி
ஆ) மாத்திரைகள் (Oral Pills)
இ) கருத்தடை திரைச் சவ்வு
ஈ) அண்டநாளத் துண்டிப்பு
விடை:
அ) காப்பர்-டி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை _______
விடை:
ஏழு

Question 2.
கருவுறுதலுக்குப் பின் சூற்பை ஆக மாறுகிறது.
விடை:
கனி

Question 3.
பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் – ஆகும்.
விடை:
இழப்பு மீட்டல்

Question 4.
மனிதரில் கருவுறுதல் ____ ஆகும்.
விடை:
அகக்கருவுறுதல்

Question 5.
கருவுறுதலுக்குப் பின் _____ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.
விடை:
6 முதல் 7

Question 6.
குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு _____ எனப்படும்.
விடை:
கொலஸ்ட்ரம்

Question 7.
புரோலாக்டின் _____ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை:
முன்பிட்யூட்டரி சுரப்பி!

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

III. பொருத்தும்

Question 1.
கீழ்கண்ட வார்த்தைகளை அதற்குரிய பொருளோடு பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 30
விடை:
1 – ஆ,
2 – இ,
3 – அ

Question 2.
கீழ்கண்ட வார்த்தைகளை அதற்குரிய பொருளோடு பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 45
விடை:
அ – 3,
ஆ – 1,
இ – 4,
ஈ – 2

IV. கீழ்க்கண்ட கூற்று சரியா, தவறா எனக் கூறுக. தவறை திருத்தி எழுதுக.

Question 1.
சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: சூலின் காம்புப் பகுதிசூல்காம்பு எனப்படும்.

Question 2.
விதைகள் பாலின் இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.
விடை:
சரி.

Question 3.
ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான செல்பிரிதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

Question 4.
மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி சூல்தண்டாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மகரந்த தூள்களை ஏற்கக் கூடிய சூலகத்தின் பகுதி சூலகமுடி.

Question 5.
பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக்
காணப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று : காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்ததூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்.

Question 6.
இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் இரட்டைமயத் தன்மையுடையவை.
விடை:
தவறு.
சரியான கூற்று: இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் ஒற்றைமய தன்மையுடையவை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 7.
பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH-ஐச் சுரக்கிறது.
விடை:
தவறு.
பிட்யூட்டரியின் முன்கதுப்பு LH-ஐச் சுரக்கிறது.

Question 8.
கருவுற்றிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.
விடை:
சரி.

Question 9.
இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: கரு உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.

Question 10.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் மிகை சுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைசுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.

V. ஒரு வார்த்தையில் விடையளி :

Question 1.
ஒரு மகரந்தத்தூளிலிருந்து இரண்டு ஆண் கேமீட்டுகள் மட்டும் உருவாகிறது எனில், பத்து சூல்களை கருவுறச் செய்ய எத்தனை மகரந்தத் தூள்கள் தேவைப்படும்?
விடை:
10 மகரந்த தூள்கள்.

Question 2.
சூலகத்தின் எப்பகுதியில் மகரந்தத்தூள் முளைத்தல் நடைபெறுகிறது?
விடை:
சூல்முடி.

Question 3.
மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இரண்டு உயிரிகளைக் குறிப்பிடவும்.
விடை:
ஈஸ்ட், ஹைட்ரா.

Question 4.
ஒரு விதையில் உள்ள கருவூணின் வேலை என்ன?
விடை:
உருவாகும் கருவிற்கு ஊட்டமளிக்கும்.

Question 5.
கருப்பையின் அதி தீவிர தசைச் சுருக்குதலுக்கு காரணமான ஹார்மோனின் பெயரைக் கூறுக.
விடை:
ஆக்ஸிடோசின்.

Question 6.
விந்து செல்லின் அக்ரோசோமில் காணப்படக்கூடிய நொதியின் பெயரென்ன?
விடை:
ஹயலு ரானிடேஸ்

Question 7.
உலக மாதவிடாய் சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை:
மே 28.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 8.
கருத்தடையின் தேவை என்ன?
விடை:
குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துதல்.

Question 9.
கீழ்க்கண்ட நிகழ்வுகள் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது?
அ) கருவுறுதல்
ஆ) பதித்தல்
விடை:
அ. கருவுறுதல் – அண்ட நாளத்தின் ஆம்புல்லா பகுதி.
ஆ. பதித்தல் – கருப்பை

VI. குறுவினாக்கள்.

Question 1.
பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் என்ன நிகழும்?
விடை:

  1. பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தைத் தோற்றுவிக்கிறது.
  2. இழந்த பாகங்களை மீண்டும் உருவாக்கி புதிய உயிரியைத் தோற்றுவித்தல் இழப்பு மீட்டல் எனப்படும்.

Question 2.
உடல இனப்பெருக்கம் ஏன் குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் நடைபெறுகிறது? (PTA-1)
விடை:

  1. சில தாவரங்கள் விதைகளை தோற்றுவிப்பதில்லை. அந்த தாவரங்களில் மட்டும் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  2. மேலும் தாய் தாவரத்திலுள்ள வேர், தண்டு, இலை அல்லது மொட்டு முதலான ஏதேனும் ஓர் உறுப்பிலிருந்து இளம் தாவரம் தோன்றி அது தனித்தாவரமாக வளர்கிறது.
  3. மேலும் குன்றாப்பகுப்பு மட்டும் நடைபெறுவதால் இளந்தாவரங்கள் தாய்த்தாவரங்களைப் போன்றே காணப்படுகின்றன.
  4. எனவே குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

Question 3.
இரண்டாகப் பிளத்தல் பல்கூட்டுப் பிளத்தலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 50

Question 4.
மூவிணைவு – வரையறு. (GMQP-2019; Qy-2019)
விடை:

  1. கருவுறுதலின்போது உடல் செல்லானது இரண்டு விந்தணுக்களை உருவாக்குகிறது.
  2. இந்த இனச்செல்கள் சூல்பையை அடைந்தவுடன் ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய சைகோட்டைத் தோற்றுவிக்கிறது.
  3. மற்றோர் ஆணினசெல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவினை தோற்றுவிக்கிறது.
  4. இது மும்மய உட்கரு ஆகும். இவ்விளைவு மூவிணைவு எனப்படும்.

Question 5.
பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள் யாவை? [PTA-6]
விடை:

  1. பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்டமோஃபிலி என்று பெயர்.
  2. பூச்சிகளைக் கவர்வதற்கு ஏற்றாற்போல பல ‘நிறம், மணம், தேன் சுரக்கும் தன்மை ஆகியவற்றுடன் இவ்வகை மலர்கள் காணப்படும்.
  3. இவ்வகை மலர்களில் மகரந்தத்தூள் பெரியதாகவும் வெளியுறையானது துளைகளுடனும் – வெளிப்பக்கத்தில் முட்களுடனும் காணப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 6.
ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளைக் கூறுக.
விடை:
விந்துக்குழல், எபிடிடைமிஸ் (விந்தணு முதிர்ச்சிப்பை), விந்துப்பை (செமினல் வெசிக்கிள்), புராஸ்டேட் சுரப்பி (முன்னிலைச் சுரப்பி), ஆண்குறி (பீனிஸ்) போன்றவை ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளாகும்.

Question 7.
கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது? (PTA-2) விடை:

  1. குழந்தை பிறப்பிற்குப் பிறகு பால் சுரப்பியிலிருந்து முதன் முதலில் வெளிவரும் பால் கொலஸ்ட்ரம் (சீம்பால்) எனப்படும்.
  2. முன் பிட்யூட்டரி சுரக்கும் புரோலாக்டின் என்னும் ஹார்மோன் பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியாதலைத் தூண்டுகிறது.
  3. பின் பிட்யூட்டரியின் ஹார்மோன்னான ஆக்சிடோசின் பால் வெளியேறுவதைத் தூண்டுகிறது.

Question 8.
மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது? [PTA-4]
விடை:

  1. நாப்கின்களை முறையாக, குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றுவதன் மூலமாக கலவிக் கால்வாயில் நுண்ணுயிர்கள் மூலமாக ஏற்படும் தொற்றினையும், பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையினையும் தடுக்கலாம்.
  2. பிறப்புறுப்புகளை வெந்நீரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நாள்களில் ஏற்படும் தசைப் பிடிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
  3. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவதால், பிறப்புறுப்புகளில் காற்றோட்டத்தை பெறுவதன் மூலம் வியர்வை உருவாதல் தடுக்கப்படுகிறது.

Question 9.
தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவானது எவ்வாறு ஊட்டம் பெறுகிறது? [PTA-6]
விடை:
தாய் சேய் இணைப்புத்திசு உருவாக்கம்:

  1. தாய் சேய் இணைப்புத் திசுவானது தட்டு வடிவமான, கருப்பைச் சுவருடன் இணைந்த, வளரும் கருவிற்கும் தாய்க்கும் இடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
  2. இது உணவுப் பொருள்களின் பரிமாற்றம், ஆக்ஸிஜன் பரவல், நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றுவது மற்றும் கார்பன் டை ஆக்சைடை நீக்குதல் போன்றவற்றை அனுமதிக்கிறது.
  3. சேயுடன் தாய் சேய் இணைப்புத் திசுவை இணைக்கின்ற இரத்த நாளங்களைக் கொண்ட கொடி தொப்புள்கொடி என்றழைக்கப்படுகிறது.

Question 10.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும். (GMQP-2019)
விடை:
A – எக்ஸைன்
B – இன்டைன்
C – உற்பத்தி செல்
D – உடல் உட்கரு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 70

Question 11.
பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பால் இனப்பெருக்கத்தின் நிகழ்வுகளை எழுதுக.
அ) முதல் நிகழ்வின் வகைகளைக் கூறுக.
ஆ) அந்நிகழ்வின் நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக.
விடை:
தாவரங்களின் பால் இனப்பெருக்கம் :
பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்கம் இரண்டு படிநிலைகளில் நடைபெறுகிறது.
1. மகரந்தச்சேர்க்கை
2. கருவுறுதல்
அ) பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

மகரந்தச்சேர்க்கையின் வகைகள்:
(1) தன் மகரந்தச்சேர்க்கை
(2) அயல் மகரந்தச்சேர்க்கை.

(1) தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி):
ஒரு மலரிலுள்ள மகரந்தத் தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
எ.கா. ஹைபிஸ்கஸ்.

ஆ) தன் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்:

  1. இருபால் மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
  2. மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
  3. மகரந்தத்தூள்கள் வீணடிக்கப் படுவதில்லை

தன் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்:

  1. விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.
  2. கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவடைந்த தாவரங்களை உருவாக்கும்.
  3. புதிய வகைத் தாவரம் உருவாகாது.

2. அயல் மகரந்தச்சேர்க்கை (அல்லோகேமி) :
ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரில் உள்ள சூலக முடியைச் சென்று அடைவது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும். எ.கா: ஆப்பிள், திராட்சை, பிளம் முதலியன.

அயல் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்:

  1. அயல் மகரந்தச் சேர்க்கையின் மூலம் உருவாகும் விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்கும். இதன் மூலம் புதிய வகைத் தாவரங்கள் உருவாகின்றன.
  2. நன்கு முளைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.

அயல் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்:

  1. அயல்மகரந்தச்சேர்க்கை , புறக் காரணிகளை நம்பி இருப்பதால் மகரந்தச் சேர்க்கை தடைபடுகிறது.
  2. அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.
  3. சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.
  4. மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 12.
விந்தகம் மனிதனில் வயிற்றுக்குழிக்கு வெளிப்புறத்தில் அமைந்திருப்பதன் காரணம் என்ன? அவற்றைக் கொண்டிருக்கும் பையின் பெயரென்ன?
விடை:
விந்தகத்தை கொண்டிருக்கும் பையின் பெயர் விதைப்பை. விந்தணுவானது. நம் உடல் வெப்பநிலையை விட குறைவான வெப்பநிலையில் உருவாவதால் உடலின் வெப்பநிலை பாதிக்காத வண்ணம் உடலின் வெளியே அமைந்திருக்கிறது.

Question 13.
மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்புநிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன ?
விடை:
கருவுறுதல் நிகழாத நிலையில், கார்பஸ்லூட்டியம் சிதைந்து கருப்பையின் சுவர் உரிந்து கருவுறாத முட்டை இரத்தத்துடன் வெளியேறும். மேலும் கார்பஸ் லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜெஸ்டிரான் அளவு குறைந்து, மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே சுரப்பு நிலை என அழைக்கப்படுகிறது.

Question 14.
நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன?
விடை:

  1. படிப்பின்மை, புரிதலின்மை, விழிப்புணர்வின்மை போன்ற காரணங்களால் நம் நாட்டில் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
  2. மேலும் தன் குடும்பத்திற்கு அதிக பிள்ளைகள் இருந்தால், சொந்த தொழில் வேலை மூலம், குடும்பத்திற்கு அதிக வருமானம் ஈட்டலாம் என்ற தவறான கருத்துக்களுடனும் பெரும்பாலான மக்கள் இருப்பதும் ஒரு காரணமாகும்.

VII. விரிவான விடையளி.

Question 1.
பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.
விடை:
சூலின் அமைப்பு

  1. சூலின் முக்கியமான பகுதி சூல் திசு ஆகும்.
  2. இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது.
  3. மேல் பகுதியில் சூல் உறை இணையாமல் அமைந்த இடைவெளியானது சூல்துளை ஆகும்.
  4. சூலானது சூல் அறையினுள் சிறிய காம்பின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்கு சூல் காம்பு என்று பெயர்.
  5. சூலின் அடிப்பகுதி சூல் அடி எனப்படும். கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.
  6. சூல் துளையின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதனத்தை உருவாக்குகின்றன.
  7. அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிர்த் துருவ செல்களாக உள்ளன.
  8. மையத்தில் உள்ள ஒரு செல் துருவ செல்லாகவும் உள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 75
  9. அண்ட சாதனமானது ஓர் அண்ட செல்லையும் இரண்டு பக்கவாட்டு செல்களையும் கொண்டுள்ளது.
  10. இந்த பக்கவாட்டு செல்கள் சினையாற்றியம் (Synergids) என அழைக்கப்படுகின்றன.

Question 2.
மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிடுக. (PTA-3)
விடை:
மாதவிடாய் சுழற்சியின் நிலைகள்

  1. மாதவிடாய் அல்லது அழிவுநிலை
  2. பாலிக்குலார் அல்லது பெருக்கநிலை
  3. அண்டம் விடுபடும் நிலை
  4. லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 76

VIII. உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச்செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது?
விடை:

  1. முதல் ஆண் கேமிட் அண்ட செல்லுடன் இணைந்து கருவுறுதல் ஏற்படுகிறது.
  2. இரண்டாம் ஆண் கேமிட் இரட்டையே உட்கருவுடன் இணைந்து கருவூண் உட்கருவினை தோற்றுவிக்கிறது.
  3. இது மும்மய உட்கரு ஆகும். இந்த கருவூண் கருவிற்கு ஊட்டமளிக்கிறது.
  4. இந்த ஊட்டம் விதை முளைத்து இளம் செடியாக வளர்ந்து வருவதற்கு தேவையான கருவூண் இதில் சேமித்து வைக்கப்படுகிறது.
  5. எனவே இரண்டு ஆண் கேமிட் எடுத்துச் செல்லப்படுகிறது.

Question 2.
பருவமடைமடைதலுக்கு முன்னரும், கர்ப்பத்தின் போதும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வதில்லை ஏன்?
விடை:

  1. பெண்கள் 11 லிருந்து 13 வயதிற்குள் பருவமடைகின்றனர்.
  2. இந்த வயதிற்கு முன் அண்டம் உருவாவதற்கும் அண்டம் விடுபடுவதற்கும் உள்ள ஹார்மோன் சுரப்பதில்லை.
  3. எனவே பருவமடைதல் நடைபெறாததால் மாதவிடாய் சுழற்சி நடைபெறுதில்லை.
  4. மேலும் பருவமடைந்த பின் கருவுறுதல் நடைபெற்று கருபதிவு நடைபெற்ற பின்னர், LH மற்றும் FSH சுரப்பு அதிகமாகி, கார்பஸ் லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜெஸ்டிரான் அளவு அதிகமாவதினால், மாதவிடாய் ஏற்படுவதில்லை.
  5. மேலும் எண்டோமெட்ரியம் கருபதிவுக்கு தயார் ஆகிறது.
  6. எனவே கருவுறுதல் நடைபெற்ற பின்னர் மாதவிடாய் ஏற்படுவதில்லை.

Question 3.
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி. ராகினியும் அவளது பெற்றோரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நாப்கின்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடனே, ராகினியின் பெற்றோர்கள் அந்த சேனலை மாற்றினர். ஆனால் ராகினி அதற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த விளம்பரத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்கினாள்.
அ) முதல் மாதவிடாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அது எப்போது நிகழ்கிறது?
ஆ) மாதவிடாயின் போது மேற்கொள்ள வேண்டிய நாப்கின் சுகாதாரத்தை வரிசைப்படுத்துக.
இ) தன் பெற்றோரின் இச்செயலுக்கு ராகினி தனது எதிர்ப்பைத் தெரிவித்தது சரியா? சரி எனில் விளக்கம் கூறுக.
விடை:
அ) முதல் மாதவிடாய் பூப்படைதல் என்று அழைக்கப்படுகிறது. அது 11 வயதிலிருந்து 13 வயதிற்குள் நடைபெறுகிறது.

ஆ)

  1. நாப்கின்கள் மற்றும் டாம்பூன்ஸ் (உறிபஞ்சுகள்) களைப் பயன்படுத்திய பிறகு, மூடப்பட்ட நிலையில் (தாள்களைக் கொண்டு) அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவை மூலம் நோய் பரவும்.
  2. பயன்படுத்திய நாப்கின்கள் மற்றும் டாம்பூன்களை கழிவறை சாதனங்களுக்குள் போடக்கூடாது.
  3. பயன்படுத்திய நாப்கின்களை எரியூட்டிகளைப் (Incinerator) பயன்படுத்தி முறையாக அகற்ற வேண்டும்.

இ) சரி. மறுப்பு தெரிவித்தது சரிதான். ஏனெனில் சில விளம்பரங்கள் நமக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும். மேலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். மேலும், அதன் தேவையையும், முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
முதிர்ந்த மகரந்தத் தூளின் உற்பத்தி செல்லில் நடைபெறும் செல்பிரிதல் வகை [PTA-1]
அ) மைட்டாசிஸ்
ஆ) மியாசிஸ்
இ) ஏமைட்டாசிஸ்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
அ) மைட்டாசிஸ்

Question 2
மனிதரில் ஓர் ஆண் கேமீட்டும் ஒரு பெண் கேமீட்டும் இணைந்து கருமுட்டை உருவாகிறது. கருமுட்டையின் நிலை ……….. [PTA-4] அ) ஒருமையம்
ஆ) இருமயம்
இ) மும்மயம்
ஈ) நான்மயம்
விடை:
ஆ) இருமயம்

2 மதிப்பெண்கள்

Question 1.
தாவரங்களில் கருவுறுதலின் முக்கியத்தை எழுதுக. [PTA-2]
விடை:
சூற்பையைத் தூண்டி, கனியை உருவாக்குகிறது. புதிய பண்புகள் தோன்றக் காரணமாகிறது.

அரசு தேர்வு வினா-விடை

7 மதிப்பெண்கள்

Question 1.
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று (UTI)- ன் விளைவுகளைக் கூறுக. [Sep.20]
விடை:
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று (UTI) : ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் பல நோய்கள் தாக்குகின்றன. ஆனால்
பெண்கள் அதிக அளவில் சில நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தோல், மலக்குடல் அல்லது கலவிக்கால்வாயில் உள்ள பாக்டீரியாக்களின் மூலமாக பெண்கள் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இது சிறுநீர்ப்புற வழியின் மூலமாக மேலே செல்கிறது. சிறுநீர் பாதை தொற்று நோயின் வகைகள்.

  1. சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) அல்லது சிறுநீர்ப்பை தொற்று : பாக்டீரியங்கள் சிறுநீர்ப்பையில் தங்கி பல்கிப் பெருகி வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக இது 20 முதல் 50 வயதுடையோரைப் பாதிக்கிறது.
  2. சிறுநீரகத் தொற்று : பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் நாளத்தின் வழியாக மேல்நோக்கிச் சென்று ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தில் தொற்றினை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
  3. நோய் அறிகுறியற்ற பாக்டீரியூரியா (Asymptomatic Bacteriuria) : சிறுநீர்ப்பையில் காணப்படும் இப்பாக்டீரியா எந்த நோய் அறிகுறியினையும் வெளிப்படுத்துவதில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

10th Science Guide சுற்றுச்சூழல் மேலாண்மை Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காடுகள் அழிப்பினால் மழை பொழிவு …………………
விடை:
குறைகிறது.

Question 2.
மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது ……………………
விடை:
மண் அரிப்பு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 3.
சிப்கோ இயக்கம் ………எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
விடை:
காடுகளை அழிப்பதற்கு

Question 4.
…………………… என்பது தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும்.
விடை:
நீலகிரி

Question 5.
ஓத ஆற்றல் ………… வகை ஆற்றலாகும்.
விடை:
புதுப்பிக்கத்தக்க

Question 6.
கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை ………… எரிபொருட்கள் ஆகும்.
விடை:
புதைபடிவ

Question 7.
மின்சார உற்பத்திக்கு மிகவும் அதிக அளவில் பயன்படுத்துப்படும் எரிபொருள் ……….. ஆகும்.
விடை:
நிலக்கரி)

II. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: பெட்ரோலியம் / நிலக்கரி / இயற்கை வாயு – ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.

Question 2.
மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
விடை:
சரி

Question 3.
வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும்.
விடை:
சரி.

Question 4.
அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்க இயலாத ஆற்றலாகும்

Question 5.
அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பைத் தடுக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அதிகப்படியான கால்நடை மேய்ச்சல் மண்ணரிப்பை ஏற்படுத்தும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 6.
வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டவிரோதமான செயலாகும்.

Question 7.
தேசியப்பூங்கா ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
விடை:
சரி.

Question 8.
வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விடை:
சரி.

III. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 1
விடை:
1 – இ,
2 – உ
3 – ஊ
4 – ஆ
5 – அ
6 – ஈ
7 – எ

IV. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்? [PTA-5]
(i) தார்
(ii) கரி
(iii) பெட்ரோலியம்

அ) i மட்டும்
ஆ) மற்றும் ii
இ ii மற்றும் iii)
ஈ) i, ii மற்றும் iii
விடை:
இ) ii மற்றும் ii

Question 2.
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவீர் பயன்படுத்துவீர்?
அ) கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.
ஆ) கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்
இ கழிவுகளை மறு சுழற்சி செய்தல்
ஈ) மேலே உள்ளவை அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ளவை அனைத்தும்

Question 3.
வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்
(i) கார்பன் மோனாக்சைடு
(ii) சல்பர் டை ஆக்சைடு
(iii) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

அ) மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ ii மற்றும் iii
ஈ) i,ii மற்றும் iii
விடை:
ஈ) i, ii மற்றும் iii

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 4.
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
அ) காடுகள் அழிப்பு
ஆ) காடுகள்/மரம் வளர்ப்பு
இ அதிகமாக வளர்த்தல்
ஈ) தாவரப் பரப்பு நீக்கம்
விடை:
ஆ) காடுகள்/மரம் வளர்ப்பு

Question 5.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
அ) பெட்ரோலியம்
ஆ) கரி
இ அணுக்கரு ஆற்றல்
ஈ) மரங்க ள்
விடை:
ஈ) மரங்கள்

Question 6.
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
அ) மழைப்பொழிவு இல்லாத இடம்
ஆ) குறைவான மழைப்பொழிவு உள்ள இடம்
இ அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்
ஈ). இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்

Question 7.
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்
அ) காற்றாற்றல்
ஆ) மண்வ ளம்
இ வன உயிரி
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
அ) காற்றாற்றல்

Question 8.
கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்
அ) மின்சாரம்
ஆ) கரி
இ உயிரி வாயு
ஈ) மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு
விடை:
ஈ) மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு

Question 8.
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
அ) பூமி குளிர்தல்
ஆ) புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்
இ தாவரங்கள் பயிர் செய்தல்
ஈ) பூமி வெப்பமாதல்
விடை:
ஈ) பூமி வெப்பமாதல்

Question 10.
மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம் (PTA-2)
அ) நீர் ஆற்றல்
ஆ) சூரிய ஆற்றல்
இ காற்றாற்றல்
ஈ) வெப்ப ஆற்றல்
விடை:
அ) நீர் ஆற்றல்

Question 11.
புவி வெப்பமாதலின் காரணமான ஏற்படக்கூடிய விளைவு
அ) கடல் மட்டம் உயர்தல்
ஆ) பனிப்பாறைகள் உருகுதல்
இ தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்
ஈ) மேலே கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேலே கூறிய அனைத்தும்

Question 12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
அ) காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
ஆ) காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.
இ காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஈ) காற்று ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.
விடை:
ஆ) காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன

V. ஒரு வாக்கியத்தில் விடையளி.

Question 1.
மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள் யாவை?
விடை:
காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு, அருகிவரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல், உயிர்புவி சுழற்சியில் சமமற்ற நிலை, பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உண்டாகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 2.
வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
வன உயிர்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் அவை உணவு, உறைவிடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Question 3.
மண்ணரிப்பிற்கான காரணிகள் யாவை?
விடை:
அதி வேகமாக வீசும் காற்று, பெரு வெள்ளம், நிலச்சரிவு, மனிதனின் நடவடிக்கைகள், (வேளாண்மை , காடழிப்பு, சுரங்கங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் கால்நடைகளின் அதிக மேய்ச்சல் ஆகியவை மண்ணரிப்பிற்கான முக்கிய காரணிகளாகும்.

Question 4.
புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்.
விடை:
புதை படிவ எரிபொருட்களை நாம் தொடர்ந்து அதிகமாக பயன்படுத்தினால் மிக விரைவாக தீர்ந்து போகக் கூடிய நிலை உருவாகும். மேலும் இவை உற்பத்தியாவதற்கு நீண்டகாலம் ஆவதோடு இவ்வினை மிக மெதுவாகவும் நடைபெறக்கூடியது. எனவே புதைபடிவ எரிபொருட்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

Question 5.
சூரிய ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது?
விடை:
சூரிய ஒளி இயற்கையில் மிக அதிக அளவில் கிடைக்கிறது. இத மிகக் குறைந்த அளவு நேரத்திலேயே புதுப்பிக்கக்கூடியது. தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தலாம். எனவே இவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது.

Question 6.
மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன? [PTA-6]
விடை:
மின்னணுக் கழிவுகள் பயன்படுத்த முடியாத, பழைய, மீண்டும் சரிப்படுத்தி உபயோகிக்க முடியாத, மின்சார மற்றும் மின்னணு சாதனங்களின் மூலம் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. வீட்டு உபயோக சாதனங்களான குளிர்ச் சாதன பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர், நீர் சூடேற்றி போன்றவற்றினை நாம் மீண்டும் பயன்படுத்த முடியாமல் போனால்
மின்னணுக் கழிவுகள் தோன்றுகின்றன.

VI. சுருக்கமாக விடையளி :

Question 1.
மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை? [PTA-4]
விடை:

  1. மழைநீர் சேகரிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
  2. பெருகிவரும் நீர்த் தேவைகளை சமாளிக்கப் பயன்படுகிறது.
  3. பெரு வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கப் பயன்படுகிறது.
  4. நிலத்தடியில் சேகரிக்கப்படும் நீர் மனித மற்றும் விலங்கு கழிவுகளால் மாசடைவதில்லை. எனவே, இதனை குடிநீராகப் பயன்படுத்த முடியும்.

Question 2.
உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை? [PTA-1]
விடை:

  • உயிரி வாயுக்கள் எரியும் போது புகையை வெளியிடுவதில்லை. எனவே இவை குறைந்த மாசினை உண்டாக்குகின்றன.
  • உயிரியக் கழிவுகள் மற்றும், கழிவுப் பொருட்கள் போன்ற கரிமப் பொருள்களை சிதைவடையச் செய்வதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
  • படியும் கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு மிகுந்திருப்பதால், அதனை சிறந்த உரமாக பயன்படுத்தலாம்.
  • இது பயன்படுத்த, பாதுகாப்பனதும் வசதியானதுமாகும்.
  • பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறும் அளவை பெருமளவு குறைக்கிறது.

Question 3.
கழிவுநீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?
விடை:

  1. கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுகிறது.
  2. சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது.
  3. பலவிதமான நோய்கள் உருவாக காரணமாகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 4.
காடழிப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
விடை:
காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு; அருகிவரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல், உயர்புவி சுழற்சியின் சமமற்ற நிலை பருவ நிலைகளின் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூழல் பிரச்சனைகள் உண்டாகின்றன.

VII. விரிவாக விடையவி

Question 1.
மழைநீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?
விடை:
(i) மேற்கூரைகளில் விழும் மழை நீரைச் சேமித்தல்:
மழைநீரை மிகச் சிறப்பான முறையில் மேற்கூரைகளிலிருந்து சேமிக்கலாம். வீட்டின் மேற்கூரை, அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், கோயில்கள் ஆகியவற்றில் பெய்யும் மழைநீரை, தொட்டிகளில் சேகரித்து, வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.

(ii) கசிவு நீர்க் குழிகள்:
இம்முறையில், மேற்கூரை மற்றும் திறந்த வெளிகளிலிருந்து பெறப்படும் மழைநீர் வடிகட்டும் தொட்டிகளுக்கு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர், கசிவு நீர் குழிகள் மூலம் மண்ணுக்குள் ஊடுருவி, நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.

Question 2.
மண்ணரிப்பை நீவீர் எவ்வாறு தடுப்பீர்? [PTA-3]
விடை:

  • தாவரப்பரப்பை நிலை நிறுத்திக் கொள்வதன் மூலம் மண்ணரிப்பைத் தடுக்கலாம்.
  • கால்நடைகளின் அதிகமான மேய்ச்சலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
  • பயிர் சுழற்சி மற்றும் மண்வள மேலாண்மை மூலம் மண்ணில் கரிமப் பொருள்களின் அளவை மேம்படுத்தலாம்.
  • நிலப்பரப்பில் ஓடும் நீரினை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சேமிப்பதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
  • காடுகள் உருவாக்கம், மலைகளில் நிலத்தை சமப்படுத்துதல், நீரோட்டத்திற்கு எதிர்திசையில் மண் உழுதல் ஆகியவை மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
  • காற்றின் வேகத்தை மட்டுப்படுத்த அதிக பரப்பில் மரங்களை நடுவதன் மூலம் (பாதுகாப்பு அடுக்கு மண் அரிப்பைத் தடுக்கலாம்.

Question 3.
திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?
விடை:
திடக்கழிவு என்பது நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பல்வேறு வகையான திடக்கழிவுகளை நிலத்தில் நிரப்புவதால் நிலம் வெகுவாக பாதிக்கப்பபட்டு சீர் குலைகிறது. திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கழிவுப் பொருட்களை சேகரித்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் முறையாக வெளியேற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

திடக்கழிவுகளை அகற்றும் முறை:
(i) தனித்துப் பிரித்தல்: பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும் தன்மையற்றவை என தனித்து பிரிப்பதாகும்.

(ii) நிலத்தில் நிரப்புதல் : தாழ்வான பகுதிகளில் திடக்கழிவுகளை நிரப்புவதாகும். கழிவுப் பொருட்களை நிரப்பிய பிறகு அதன் மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள் மூலம் அழுத்தச் செய்யலாம். 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள் நிலைப்படுத்தப்படுகின்றன. அதில் உள்ள கரிம பொருட்கள் சிதைவடைகின்றன.

(iii) எரித்து சாம்பலாக்கல் : எரியும் தன்மையுடைய கழிவுகளான மருத்துவ மனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட எரியூட்டிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.

(iv) உரமாக்குதல்: உயிரி சிதைவடையக் கூடிய கழிவுகளை மண்புழுக்களைப் பயன்படுத்தியும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தியும் சிதைவடையச் செய்து மட்கிய உரமாக மாற்றுவதாகும்.

கழிவு மறுசுழற்சி
(i) பழைய புத்தகங்கள் வாரப் பத்திரிகைகள் செய்தித் தாள்கள் ஆகியவற்றை மீண்டும் காகித ஆலைகளில் பயன்படுத்தி காகித உற்பத்தி செய்யலாம்.

(ii) வேளாண் கழிவுகள், தேங்காய், சணல், பருத்தியின் தண்டு, கரும்புச் சக்கை ஆகியவற்றைக் கொண்டு காகிதங்கள் மற்றும் அட்டைகள் தயாரிக்கலாம். நெல் தவிடைக் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தலாம்.

(iii) மாட்டுச் சாணம் மற்றும் பிற உயிரி கழிவுகளை கொண்டு கோபர் கேஸ் எனப்படும் உயிரி வாயு உற்பத்தி செய்வதோடு அதனை வயல்களில் உறமாகவும் பயன்படுத்தலாம்.

Question 4.
காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக. [GMQP-2019]
விடை:

  • காடுகள் நமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பவை. காடுகள் மனித வாழ்விற்கு இன்றியமையாதவை.
  • மேலும் பலதரப்பட்ட புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களின் ஆதாரமாகவும் விளங்குபவை.
  • காடுகள், மரம், உணவு தீவனம். நார்கள் மற்றும் மருந்துப் பொருட்களை அளிப்பவை.
  • காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவமுடைய பெரும் காரணிகளாகும்.
  • காடுகள் கார்பனை நிலைநிறுத்துவதால், அவைகார்பன்தொட்டி என்றும் அழைக்கப்படுகின்றன.
  • தட்பவெட்ப நிலையை ஒழுங்குபடுத்தி, மழைப்பொழிவை அதிகமாக்கி புவி வெப்பமாதலைக் குறைத்து, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களை தடுத்து வன உயிரிகளைப் பாதுகாத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளாக மாறி செயல் படுகின்றன.
  • சுற்றுச் சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Question 5.
மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை?
விடை:

  1. மண்ணின் மேலடுக்கு மட்கிய இலை தழைகள், மற்றும் தாது உப்புக்கள் முதலிய, தாவரங்கள் வளர்ச்சியடையத் தேவையான அவசிய பொருட்களைக் கொண்டுள்ளது.
  2. மேலடுக்கு மண், காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவது “மண்ணரிப்பு ” எனப்படும்.
  3. மண்ணரிப்பின் காரணமாக மண்ணின் மட்கு , ஊட்டப்பொருட்கள், வளம் ஆகியவை வெகுவாகக் குறைந்து மண்வளத்தைக் குறைக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 6.
வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?
விடை:
(i) மனிதர்களின் தேவை, மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ளது.

(ii) மனிதன் தன்னுடைய தேவைகளுக் காகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் மிக அதிகமாக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் அவை மிகவும் வேகமாக குறையத் தொடங்கியுள்ளன.

(iii) இயற்கை வளங்கள் அவற்றின் உயிரிய பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு மதிப்புகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன.

(iv) இயற்கை வளங்களின் அதிகமான மற்றும் திட்டமிடப்படாத பயன்பாடு சுற்றுச்சூழலில் ஒரு சமமற்ற நிலையை உருவாக்கிவிடும்.

(v) எனவே இயற்கை வளங்கள், அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கேற்ப, அவற்றினை பயன்படுத்துவதில் ஒரு முறையான சமநிலை பராமரிப்பு அவசியமாகிறது.

(vi) காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உடைய பெரும் காரணிகளாகும். காடுகள் தட்பவெட்ப நிலையை ஒழுங்குபடுத்தி, மழைப்பொழிவை அதிகமாக்கி புவி வெப்பமாதலைக் குறைத்து, வெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களை தடுத்து வன உயிரிகளை பாதுகாத்து நீர் பிடிப்பு பகுதிகளாக மாறி செயல்படுகின்றன. சுற்றுச் சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

(vii) வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக் கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன. காடுகள் பாதுகாப்பும், வன உயிரின பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை,

(viii) சமீப காலங்களில் மனித ஆக்கிரமிப்பின் காரணமாக இந்திய வன உயிரினங்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவைகளால் வனங்களை மேலாண்மை செய்வதும் வன உயிரினங்களை பாதுகாப்பதும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது.

VIII. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதை கீழ்க்காண் வரிசைகளின் உதவியுடன் தேர்வு செய்து எழுதுக.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.
இ கூற்று சரியானது. ஆனால், காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரை சேமித்து பாதுகாப்பதாகும்.
காரணம்: மழை நீரை நிலத்தடியில் கசிய விட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

Question 2.
கூற்று: CFL பல்புகள் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றலை சேமிக்க முடியும்.
காரணம் : CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை. எனவே சாதாரண பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம்.
விடை:
இ கூற்று சரியானது. ஆனால், காரணம் சரியல்ல.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
உயிர்ப்பொருண்மை சிதைவடைவதன் மூலம் நமக்கு கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் நாம் அவற்றைப் பாதுகாப்பது அவசியமாகிறது ஏன்?
விடை:

  1. நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் ஆகியவை இயற்கை வளங்களாகும்.
  2. இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த உயிரினங்கள் காற்றில்லா சூழலில் மட்குதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணமாக உருவானவையாகும்.
  3. நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எண்ணெய் இருப்புகள், நாம் தொடர்ந்து அதிகமாக பயன்படுத்தினால் மிக விரைவாகத் தீர்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளன.
  4. இவை மேலும் உற்பத்தியாவதற்கு நீண்டகாலம் ஆவதோடு இவ்வினை மிக மெதுவாகவும் நடைபெறக்கூடியது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 2.
மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை?
விடை:
(i) புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் அணுக்கரு ஆற்றல் போன்றவை மிகக் குறைந்த அளவே இயற்கையில் கிடைக்கிறது.

(ii) ஆனால் மக்களின் பயன்பாடுகள் அதிகமாகியுள்ளன. மேலும் இவை மிகப்பெரும் செலவில் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

(iii) புதுப்பிக்க இயலும் ஆற்றல் மூலங்கள் என்பவை உயிரி எரிபொருள், உயிரிடப் பேராண்மை ஆற்றல், புவிவெப்ப ஆற்றல், நீராற்றல், சூரிய ஆற்றல், காற்றாற்றல் போன்றவை.

(iv) இத்தகைய ஆற்றல் மூலங்கள் அதிக அளவில் கிடைக்கக் கூடியதும் இயற்கையாக தம்மை குறுகிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளக் கூடியதுமாகும். மேலும் மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக பெறலாம்.

(v) எனவே மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மரபுசார் ஆற்றல் மூ லங்கள் பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இதற்கான மாற்று முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கூறு. இந்தத் தடையின் காரணமாக சுற்றுச்சூழல் எவ்வாறு சீரடையும்?
விடை:

  1. நெகிழிப் பொருள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் நுண்ணுயிரிகள் சிதை வடையக் கூடியவை அல்ல.
  2. இவற்றை நாம் பயன்படுத்தினால் நிலம் மற்றம் நீர்நிலைகளில் குவிந்து கிடக்கும்.
  3. நிலங்களில் குவிந்து கிடந்தால் மண்வளத் தன்மை குறைந்து விடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதிப்படைகிறது.
  4. நீர் நிலைகளில் நீரின் புறப்பரப்பு முழுவதும் நெகிழிப்பைகளால் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் நீர்நிலைகளிலுள்ள உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது.
  5. நிலத்தில் வாழும் உயிரினங்களான மாடு போன்றவற்றின் உணவுப்பையில் சேகரமாகி உயிரின இழப்பு ஏற்படுகிறது.
  6. நெகிழியை எரிப்பதினால் டையாக்ஸின் என்னும் நச்சு உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியையும், இனப்பெருக்க மண்டலங்களையும் பாதிப்படையச் செய்கின்றன.

மாற்று முறைகள் :

  1. சுற்றுச் சூழ்நிலைகள் பாதிக்காத பொருட்களின் மூலமாக பைகள் தயாரித்து உபயோகப்படுத்தலாம்.
  2. நெகிழி தட்டுகள்/நெகிழி குவளைகளுக்குப் பதிலாக நுண்ணுயிரிகளை சிதைவடையக் கூடிய பொருட் களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நெகிழி தட்டுகள் / குவளைகள் பயன்படுத்தலாம்.
  3. பாத்திரங்கள், கொள்கலன்கள் போன்றவை எஃகு பொருட்களினால் செய்யப்பட்டவைகளை பயன்படுத்தலாம்
  4. கடைத்தெருவிற்கு செல்வதற்கு துணிப்பைகளை பயன்படுத்தலாம்.

X. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்.

Question 1.
சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களைக் கூறுக.
விடை:

  • சூரிய மின்கலன்களின் விலை அதிகம்.
  • அதிக ஆற்றல் தேவைப்படின் அதிகமான சூரிய மின்கலன்களை பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களால் இதனை பயன்படுத்த முடியாது.
  • சூரிய ஆற்றல் வருடம் முழுவதும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 2.
கீழ்க்காணும் கழிவுகளை எவ்வாறு கையாளுவாய்?
(அ) வீட்டுக் கழிவுகளான காய்கறிக் கழிவுகள்
(ஆ) தொழிற்சாலை கழிவுகளான கழிவு உருளைகள்.
இக்கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமா? ஆம் எனில் எவ்வாறு பாதுகாக்கும்?
விடை:
(அ) வீட்டுக்கழிவுகளான காய்கறிக் கழிவுகளை நாம் உரமாக பயன்படுத்தலாம். உரமாக நாம் தோட்டங்களின் பயன்படுத்தப்படும் போது அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மண்ணோடு கலக்கப்பட்டு மண்வளத் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனை மீண்டும் தாவரங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

(ஆ) கழிவு உருளைகளை மறு சுழற்சி செய்து வேறு ஏதேனும் எந்திர பாகங்களையே அல்லது வேறு உருளைகளையோ தயாரிக்கலாம்.

இக்கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். எவ்வாறு எனில், இக்கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, மறுபயன்பாட்டின் மூலம் உபயோகப் படுத்தப்படலாம்.

Question 3.
4-R முறையினைப் பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க ஏதேனும் மூன்று செயல்பாடுகளை கூறுக.
விடை:
குறைத்தல் (Reduce): நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எண்ணெய்ப் பயன்பாட்டினை குறைத்துக் கொள்ளலாம்.

மறுபயன்பாடு (Reuse): வீட்டில் உள்ள காய்கறிக்கழிவுகளை மறுபயன்பாட்டிற்கான உரமாக பயன்படுத்தலாம்.

மீட்டெடுத்தல் (Recovery): மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம், நாம் செலவினங்களை மீட்டெடுக்கலாம்.

மறுசுழற்சி (Recycle): கழிவு நீரினை மறுசுழற்சி செய்து தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சி பயன்படுத்தலாம்.

PTA மாதிரி வினா-விடை
1. மதிப்பெண்

Question 1.
கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் ஆற்றல் ……………. ஆகும். [PTA-6]
அ) ஓத ஆற்றல்
ஆ) காற்றாற்றல்
இ சூரிய ஆற்றல் ஈ) நீராற்றல்
விடை:
அ) ஓத ஆற்றல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

2. மதிப்பெண்கள்

Question 1.
3R முறை என்றால் என்ன? [PTA-1]
விடை:
கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு 3R முறை ஏற்றதாகும். Reduce – குறைத்தல், Reuse – மறுபயன்பாடு, Recycle – மறுசுழற்சி.

அரசு தேர்வு வினா-விடை 
1. மதிப்பெண்

Question 1.
பொருத்துக . [Sep.20]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 2
(அ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(ஆ) (1)-(ii), (2)-(i), (3)-(iii), (4)-(iv)
(இ) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(ஈ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
விடை:
(ஈ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)