Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

10th Science Guide தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு …………..
அ) மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது
ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
இ) வேர் உருவாதலை ஊக்குவிப்பது
ஈ) இளம் இலைகள் மஞ்சளாவது
விடை:
ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது

Question 2.
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
அ) சைட்டோகைனின்
ஆ) ஆக்சின்
இ ஜிப்ரல்லின்
ஈ) எத்திலின்
விடை:
ஆ) ஆக்சின்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
அ) 2, 4D
ஆ) GA 3
இ) ஜிப்ரல்லின்
ஈ) IAAI
விடை:
அ) 2, 4D

Question 4.
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ……………. என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
அ) டார்வின்
ஆ) N. ஸ்மித்
இ) பால்
ஈ) F.W. வெண்ட்
விடை:
ஈ) F.W. வெண்ட்

Question 5.
கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ………… தெளிக்கப்படுகிறது.
அ) ஆக்சின்
ஆ) சைட்டோகைனின்
இ) ஜிப்ரல்லின்கள்
ஈ) எத்திலின்
விடை:
இ) ஜிப்ரல்லின்கள்

Question 6.
LH ஐ சுரப்பது ……………
அ) அட்ரினல் சுரப்பி
ஆ) தைராய்டு சுரப்பி
இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஈ) ஹைபோ தலாமஸ்
விடை:
இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு

Question 7.
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்:
அ) பிட்யூட்டரி சுரப்பி
ஆ) அட்ரினல் சுரப்பி
இ) உமிழ் நீர் சுரப்பி
ஈ) தைராய்டு சுரப்பி
விடை:
இ) உமிழ்நீர் சுரப்பி

Question 8.
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
அ) கணையம்
ஆ) சிறுநீரகம்
இ) கல்லீரல்
ஈ) நுரையீரல்
விடை:
அ) கணையம்

Question 9.
கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது? [PTA-2]
அ) பினியல் சுரப்பி
ஆ) பிட்யூட்டரி சுரப்பி
இ) தைராய்டு சுரப்பி
ஈ) அட்ரினல் சுரப்பி
விடை:
ஆ) பிட்யூட்டரி சுரப்பி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் …………… ஹார்மோன் ஆகும்.
விடை:
ஆக்சின்

Question 2.
தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் …………… ஆகும்.
விடை:
எத்திலின்

Question 3.
இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ……………
விடை:
அப்சிசிக் அமிலம்

Question 4.
ஜிப்ரல்லின்கள் ……………. தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
விடை:
நெருங்கிய இலையடுக்கம் கொண்ட

Question 5.
நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் …………… ஆகும்.
விடை:
சைட்டோகைனின்

Question 6.
உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது …………..
விடை:
பாராதார்மோன்

Question 7.
லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் …………..ஐச் சுரக்கிறது. (PTA-6)
விடை:
இன்சுலின்

Question 8.
தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை ……………. கட்டுப்படுத்துகிறது.
விடை:
தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)

Question 9.
குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக
விடை:
கிரிட்டினிசம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

III. பொருத்துக.

Question 1.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 60
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 61

Question 2.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 62
விடை:
அ – 3,
ஆ – 5,
இ – 2,
ஈ – 1,
உ – 4

IV. சரியா அல்லது தவறா என எழுதவும். தவறாயின் சரியான கூற்றினை எழுதவும்.

Question 1.
செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட ஆக்சின் இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர உறை ஆதிக்கம் ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும். எத்திலின் கனிகள் பழுத்தல்
விடை:
சரி.
அப்சிசிக் அமிலம் /பசுங்கணியம் உதிர்தல்

Question 2.
ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன. சைட்டோகைனின் தேங்காயின் செல் பகுப்பு
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 3.
எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது.
விடை:
தவறு.
சரியான கூற்று: எத்திலின் இலைகள், மலர்கள், கனிகள் மூப்படைவதை விரைவுப்படுத்துகிறது.

Question 4.
எக்சாப்தல்மிக் காய்டர், தைராக்சின் மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.
விடை:
சரி.

Question 5.
பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக பிரிந்துள்ளது.
விடை:
தவறு.
சரியான கூற்று: பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளாகப் பிரிந்துள்ளது.

Question 6.
கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது.
விடை: தவறு.
சரியான கூற்று: கிராஃபியன் செல்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சுரக்கின்றன.

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
(இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு, ஆனால், காரணம் சரி.

Question 1.
கூற்று: சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும். காரணம் : சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்தப்படுகின்றன.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 3.
கூற்று: டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
காரணம்: இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. குறிப்பு: இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால், டயாபடிஸ் மெலிடஸ் உண்டாகிறது என்பதுவே கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

VI. ஓரிரு வார்த்தையில் விடையளி.

Question 1.
வெள்ளரியில் ஆண்மலர்கள் உற்பத்தியாவதைத் தூண்டும் ஹார்மோன் எது?
விடை:
ஜிப்ரல்லின்கள்.

Question 2.
செயற்கை ஹார்மோன் ஒன்றின் பெயரினை எழுதுக.
விடை:
2, 4D (2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்).

Question 3.
தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன் எது?
விடை:
ஜிப்ரல்லின்கள்.

Question 4.
குழந்தைப் பேற்றிற்குப்பின் பால் சுரக்க காரணமான ஹார்மோன் எது?
விடை:
புரோலாக்டின் (PRL).

Question 5.
மனிதரில் நீர் மற்றும் தாது உப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு. [PTA-5]
விடை:

  1. வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் – நீர் இழப்பை குறைக்கிறது.
  2. பாரா தார்மோன், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
  3. ஆல்டோஸ்டிரான், நீர்ம அளவை ஒழுங்குபடுத்துகிறது.

Question 6.
மனிதர்களில் அவசர கால நிலைகளை எதிர் கொள்ள சுரக்கும் ஹார்மோன் எது?
விடை:
எபிநெஃப்ரின் (அட்ரினலின்) மற்றும் நார்எபிநெஃப்ரின் (நார்அட்ரினலின்)

Question 7.
செரித்தலுக்குரிய நொதிகளையும், ஹார்மோன்களையும் எந்த சுரப்பி சுரக்கிறது?
விடை:
கணையம்.

Question 8.
சிறுநீரகத்தோடு தொடர்புடைய பணிகளைச் செய்யும் ஹார்மோன்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  1. ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன்
  2. ஆல்டோஸ்டிரான்
  3. பாராதார்மோன்

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா. தருக. [PTA-4]
விடை:
ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள், ‘செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: 2, 4D (2,4 டைக்ளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 2.
“போல்டிங்” என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்? (GMQP-2019)
விடை:
நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (Bolting) என்று பெயர்.

Question 3.
அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.
விடை:
அப்சிசிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுகள்

  1. ABA உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள், மற்றும் கனிகள் ஆகியவை கிளைகளிலிருந்து தனித்து உதிர்ந்து விடுவதை) ஊக்குவிக்கிறது.
  2. நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் ABA இலைத் துளையை மூடச் செய்கிறது.

Question 4.
தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடை செய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.
விடை:

  1. தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலை தடுக்க ஆக்சின் தெளிக்கப்பட வேண்டும்.
  2. ஏனெனில் ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாதலைத் தடை செய்கின்றன.

Question 5.
வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
விடை:

  1. நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹார்மோன்கள் வேதியியல் தூதுவர்கள் ஆவர். இவை மிகக் குறைவான அளவு சுரக்கும். இவை இரத்தத்தில் பரவுதல் மூலம் உடலின் தொலைதூர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
  2. இவை குறிப்பிட்ட உறுப்புகளில் செயல்படுகின்றன. இத்தகைய உறுப்புகள் இலக்கு உறுப்புகள் எனப்படுகின்றன.

Question 6.
நாளமுள்ளச் சுரப்பிக்கும் நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 70

Question 7.
பாராதார்மோனின் பணிகள் யாவை?
விடை:

  1. மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தினை ஒழுங்குபடுத்துகிறது.
  2. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.

Question 8.
பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல் செயல்படுகின்றன?
[PTA-2]
விடை:
சுரக்கப்படும் ஹார்மோன்:

  1. வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடை யூரிட்டிக் ஹார்மோன் (ADH)
  2. ஆக்ஸிடோசின்
  3. வாசோபிரஸ்ஸின் சிறுநீரக குழல்களில் உள்ள திசுக்களிலும், ஆக்சிடோசின் கருப்பையில் உள்ள திசுக்களிலும், பால் சுரப்பியிலும் தன்னுடைய செயல்களைச் செய்கின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 9.
தைராய்டு ஹார்மோன்கள் ஏன் ஆளுமை ஹார்மோன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன? [GMQP-2019]
விடை:
தைராய்டு ஹார்மோன்கள் உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுவதால், ஆளுமை ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 10.
எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அமிலமாகிறது.
  2. அயோடின் குறைவாக சுரப்பதால் தைராய்டு குறைபாடுகளாகிய எளிய காய்டர், கிரிட்டினிசம், மிக்ஸிடிமா போன்ற குறைபாட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

VIII. குறுகிய விடையளி.

Question 1.
அ. வாயு நிலையில் உள்ள தாவரஹார்மோன் எது? தாவரங்களில் அதன் மூன்று செயல்பாடுகளை எழுதுக.
ஆ. தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது? ஏன்?
விடை:
(அ) எத்திலின் வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் ஆகும்.

  1. கனிகள் பழுப்பதை எத்திலின் ஊக்குவிக்கின்றது. எ.கா. தக்காளி, ஆப்பிள், மா, வாழை.
  2. எத்திலின் இருவிதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடைசெய்கிறது.
  3. எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவு படுத்துகிறது.

(ஆ)

  1. இறுக்க நிலை ஹார்மோன் என்று அப்சிசிக் அமிலம்.
  2. இவை பல்வேறு வகையான இறுக்க நிலைக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. எனவே, இது இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.

Question 2.
வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் முளைக் குருத்து உறையின் நுனியில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஆய்வினை விவரி.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 80

  1. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் (1903 – 1990) என்ற டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கினார். அவர் அவினா முளைக்குருத்து உறையில் வரிசைக்கிரமமான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
  2. இவர் தனது முதல் ஆய்வில் அவினா தாவரத்தின் முளைக்குருத்து உறையின் நுனியை நீக்கினார். நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறை வளரவில்லை. இது வளர்ச்சிக்குத் தேவையான ஏதோ ஒரு பொருள் முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டியது.
  3. அவர் தனது இரண்டாவது ஆய்வில் அகார் துண்டை , நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். முளைக்குருத்து உறைநுனி எவ்வித பதில் விளைவையும் காட்டவில்லை.
  4. அவர் தனது அடுத்த ஆய்வில் முளைக்குருத்து உறையின் நுனியை வெட்டி எடுத்து, அதனை அகார் துண்டத்தின் மீது வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நுனியை நீக்கிவிட்டு, அகார் துண்டத்தை நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். அது நேராக வளர்ந்தது.
  5. இந்த ஆய்வானது முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து அகார் துண்டத்துள் ஊடுருவி சென்ற ஏதோ ஒரு வேதிப்பொருள் தான் வளர்ச்சியைத் தூண்டியது என்பதைக் காட்டியது.
  6. தன்னுடைய ஆய்வுகளில் இருந்து முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து ஊடுருவிய வேதிப்பொருளே வளர்ச்சிக்குக் காரணம் என்று வெண்ட் முடிவு செய்தார். அந்த வேதிபொருளுக்கு ஆக்சின்’ என்று பெயரிட்டார். அதன் பொருள் வளர்ச்சி’ என்பது ஆகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 3.
ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
விடை:

  1. தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது, அது கணுவிடைப் பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது. (எ.கா) மக்காச்சோளம் மற்றும் பட்டாணி.
  2. நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (Bolting) என்று பெயர்.
  3. ஜிப்ரல்லின்கள் இருபாலிணைந்த தாவரங்களில் ஓரில்லத் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன (வெள்ளரி).
  4. ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
  5. விதைகளற்ற கனிகளைத் (கருவுறாக் கனிகள் – கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆக்சின்களைவிட ஜிப்ரல்லின்கள் திறம் மிக்கவை (எ.கா) தக்காளி.

Question 4.
ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
விடை:
ஈஸ்ட்ரோஜன் அண்டத்திலுள்ள கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றது. ஈஸ்ட்ரோஜனின் பணிகள்:

  1. இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
  2. அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது.
  3. அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடை வதைத் தூண்டுகிறது.
  4. இரண்டாம் நிலை பால் பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.

Question 5.
ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது.
விடை:
(அ) ஆன்டி டையூட்ரிக் ஹார்மோன் (ADH) குறைவாக சுரப்பதால், நீர் மீள உறிஞ்சப்படுவது குறைகிறது. இதனால் அதிகப்படியான சிறுநீர் வெளியேறும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.

(ஆ) இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால், டயாபடீஸ் மெலிடஸ் உண்டாகிறது. இதனால்,

  1. இரத்த சர்க்கரை அதிகரித்தல் (ஹைபர்கிளைசீமியா)
  2. சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா)
  3. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா)
  4. அடிக்கடி தாகம் எடுத்தல் (பாலிடிப்சியா)
  5. அடிக்கடி பசி எடுத்தல் (பாலிஃபேஜியா) போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. (ADH) குறைவாக சுரப்பதால் டயாபடிஸ் இன்சிபிடஸ் ஏற்படும். இன்சுலின் குறைவாக சுரப்பதால் டயாபடிஸ் மெலிடஸ் ஏற்படுகிறது.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் :

Question 1.
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லின்னை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
விடை:
(அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளின் மீது தெளித்தால் நெல்லின் கணுவிடைப் பகுதியின் அசாதாரண நீட்சியினைத் தூண்டி தண்டு நீட்சியடைகிறது.
(ஆ) அழுகிய பழம் அதிக எத்திலின் வாயுவினை உருவாக்குகிறது. இந்த எத்திலின் வாயு பழுக்காத பழங்களை பழுக்க வைக்க ஊக்குவிக்கிறது.
(இ) வளர்ப்பு ஊடகங்களில் சைட்டோகைனின் சேர்க்கப்படாவிட்டால் செல் பகுப்பு நடைபெறாமல் திசுக்களின் வளர்ச்சி பாதிப்படைகிறது. புதிதாக வளர்ச்சி ஏற்படாமல் இருக்கிறது.

Question 2.
ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரல்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
அ. இந்த செயல்முறையில் சம்மந்தப்பட்ட ஹார்மோனை அடையாளம் காண்க.
ஆ. இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை விளைவித்தது?
இ. இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக.
விடை:
(அ) ஜிப்ரல்லின் அமிலம்
(ஆ) கணுவிடைப்பகுதியின் அசாதரண நீட்சி என்ற பண்பின் காரணமாக இந்த நோய் ஏற்பட்டது.
(இ) இரண்டு பணிகள்:

  1. கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சி.
  2. மலர்கள் மலர்தல்.
  3. ஆண் மலர்களை அதிகப்படியாக தோற்றுவிப்பது.

Question 3.
செந்திலுக்கு, அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்ப நிலை உள்ளது. இந்நிலைக்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன், இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக. விடை:

  1. நாளமில்லா சுரப்பி – தைராய்டு சுரப்பி
  2. சுரக்கப்படும் ஹார்மோன் – தைராக்ஸின்
  3. தைராக்சின் ஹார்மோனின் அதிகரித்த சுரப்பின் காரணமாக இந்த நிலை உண்டாகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 4.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான். தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்ததால் வினாத்தாளை மனதில் கொண்டதால் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி வசப்பட்டான். இதற்கு காரணம் அட்ரீனல் சுரப்பியின் அட்ரீனல் மெடுல்லாவினால் சுரக்கப்படும் அட்ரீனலின் (எபிநெஃப்ரின்) என்ற ஹார்மோன் ஆகும். இதனால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது. இதற்கு
காரணம் மன அழுத்தமே ஆகும்.

Question 5.
சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.
விடை:
சூசனின் தகப்பனார் டயாபடீஸ் மெலிடஸ் என் நோயினால் பாதிப்படைந்துள்ளார். இந்நிலை ஏற்படக் காரணம் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டதால் இந்நோய் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது பாலியூரியா எனப்படும். மேலும் சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுகிறது. தடுக்கும் முறை:

  1. புரதச் சத்துள்ள உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். மாவுச் சத்துள்ள பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.
  2. உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்
  3. சரியான நேரத்தில் உணவருந்துதல் மிகவும் அவசியம்.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
படத்தில் உள்ள நபரைப் பாதித்துள்ள குறைபாட்டினை அடையாளம் காண்க. இது ஏன் ஏற்படுகிறது? [PTA-1]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 90
விடை:
படத்தில் உள்ள நபரைப் பாதித்துள்ள குறைபாடு எளிய காய்டர். உணவில் தேவையான அளவு அயோடின் இல்லாததால் இந்நோய் ஏற்படுகிறது.

Question 2.
கருவுறாக் கனி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக. (7 Marks) [PTA-6]
விடை:

  1. கருவுறாக்கனிகள் – ஆக்சின்களைத் தெளிப்பதால் கருவுறுதல் நடைபெறாமலேயே விதையிலாக் கனிகள் உருவாதல் தூண்டப்படுகிறது. இம்முறையில் உருவாகும் கனிகள் கருவுறாக் கனிகள் எனப்படும்.
  2. எ.கா. தர்பூசணி, தக்காளி.

Question 3.
கார்ப்பஸ்லூட்டியம் எவ்வாறு உருவாகிறது? அது சுரக்கும் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக. (7 Marks) [PTA-2]
விடை:

  1. பெண்களின் அண்டம் விடுபடும்போது பிரியும் முதிர்ந்த ஃபாலிக்கிள்கள், கார்ப்பஸ்லூட்டியத்தை உருவாக்குகின்றன.
  2. அது சுரக்கும் ஹார்மோன்: புரொஜெஸ்டிரான்.

4 மதிப்பெண்கள்

Question 1.
எத்திலீனின் வாழ்வியல் விளைவுகளுள் ஏதேனும் இரண்டினை எழுதுக. (7 Marks) [PTA-3]
விடை:

  1. எத்திலீன் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது. எ.கா. தக்காளி, ஆப்பிள், மா, வாழை.
  2. எத்திலீன் இருவிதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடை செய்கிறது.
  3. எத்திலீன் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது.
  4. எத்திலீன் இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதைத் தூண்டுகிறது. இதனால் இவை முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்துவிடுகின்றன.
  5. எத்திலீன் மொட்டுகள், விதைகளின் உறக்கத்தை நீக்குகிறது.

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
______ தேங்காயின் இளநீரில் அதிகமாகக் காணப்படுகிறது. [Sep.20]
அ) ஆக்சின்
ஆ) சைட்டோகைனின்
இ) ஜிப்ரல்லின்கள்
ஈ) எத்திலின்
விடை:
ஆ) சைட்டோகைனின்

2 மதிப்பெண்கள்

Question 1.
“தலைமை சுரப்பி” என அழைக்கப்படும் சுரப்பி எது? காரணம் கூறு. [Qy-2019]
விடை:
“தலைமை சுரப்பி” என அழைக்கப்படும் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி ஆகும். இது பிற நாளமில்லாச் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதால் இது “தலைமைச்சுரப்பி” என்று அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C, D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும். [Sep.20]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 95
விடை:
A : தைராய்டு குருத்தெலும்பு
B : தைராய்டு சுரப்பி
C : மூச்சுக்குழல்
D : திரளை

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 15 நரம்பு மண்டலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 15 நரம்பு மண்டலம்

10th Science Guide நரம்பு மண்டலம் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் [Qy-2019]
அ) கண் விழித்திரை
ஆ) பெருமூளைப் புறணி
இ) வளர் கரு
ஈ) சுவாச எபிதீலியம்
விடை:
அ) கண் விழித்திரை

Question 2.
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
அ) சிறுநீரகம்
ஆ) காது
இ) மூளை
ஈ) நுரையீரல்
விடை:
இ) மூளை

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 3.
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
அ) மூளை, தண்டுவடம், தசைகள்
ஆ) உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்
இ) தசைகள், உணர்வேற்பி, மூளை
ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
விடை:
ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்

Question 4.
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____ தூண்டலையும் கடத்துகின்றன.
அ) வெளியே / வெளியே
ஆ) நோக்கி வெளியே
இ) நோக்கி / நோக்கி
ஈ) வெளியே / நோக்கி
விடை:
ஆ) நோக்கி / வெளியே

Question 5.
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
அ) அரக்னாய்டு சவ்வு
ஆ) பையா மேட்டர்
இ) டியூரா மேட்டர்
ஈ) மையலின் உறை
விடை:
இ) டியூரா மேட்டர்

Question 6.
_____ இணைமூளை நரம்புகளும் ______ இணைதண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
அ) 12, 31
ஆ) 31, 12
இ) 12, 13
ஈ) 12, 21
விடை:
அ) 12, 31

Question 7.
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
அ) உட்செல் நியூரான்கள்
ஆ) கடத்து நரம்பு செல்கள்
இ) வெளிச்செல் நரம்பு செல்கள்
ஈ) ஒரு முனை நியூரான்கள்
விடை:
இ) வெளிச்செல் நரம்பு செல்கள்

Question 8.
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது? – [PTA-5]
அ) தலாமஸ்
ஆ) ஹைபோதலாமஸ்
இ) பான்ஸ்
ஈ) கார்பஸ் கலோசம்
விடை:
ஈ) கார்பஸ் கலோசம்

Question 9.
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம் [Sep.20]
அ) தசைகள்
ஆ) ஆக்சான்கள்
இ) டெண்ட்ரைட்டுகள்
ஈ) சைட்டான்
விடை:
ஆ) ஆக்சான்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 10.
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
அ) முகுளம்
ஆ) வயிறு
இ) மூளை
ஈ) ஹைப்போதலாமஸ்
விடை:
அ) முகுளம்

Question 11.
கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
அ) நியூரிலெம்மா
ஆ) சார்கோலெம்மா
இ) ஆக்ஸான்
ஈ) டெண்டிரான்கள்
விடை:
ஆ) சார்கோலெம்மா

Question 12.
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
அ) முகுளம்
ஆ) பெருமூளை
இ) பான்ஸ்
ஈ) ஹைபோதலாமஸ்
விடை:
ஈ) ஹைபோதலாமஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நமது உடலில் உள்ளவற்றுள் _____ என்பது மிக நீளமான செல்லாகும்.
விடை:
நரம்பு செல் (அ) நியூரான்

Question 2.
_____ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.
விடை:
பலமுனை

Question 3.
புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு _____ எனப்படும்.
விடை:
துலங்கல்

Question 4.
செல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை ______.
விடை:
டெண்ட்ரைட்டுகள்

Question 5.
தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள _____ மற்றும் ______ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
விடை:
பரிவு நரம்புகளும், எதிர் பரிவு நரம்புகளும்

Question 6.
நியூரானில் ______ என்னும் நுண்ணுறுப்பு மட்டும் காணப்படுவதில்லை.
விடை:
சென்ட்ரியோல்

Question 7.
மூளைப் பெட்டகத்தினுள் நிலையான அழுத்தத்தை _______ பேணுகிறது.
விடை:
மூளை தண்டுவடத் திரவம்

Question 8.
பெருமூளையின் புறப்பரப்பு ______ மற்றும் ____ ஆகியவற்றால் அதிகரிக்கிறது.
விடை:
கைரி, சல்சி

Question 9.
மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி _______
விடை:
தலாமஸ்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

III. சரியா தவறா எனக் கண்டறிந்து தவற்றினை திருத்தி எழுதவும்.

Question 1.
டெண்ட்ரான்கள் என்பவை செல் உடலத்திலிருந்து தூண்டல்களை வெளிப்புறமாக கடத்தும் நீளமான நரம்பு நாரிழைகள்.
விடை:
தவறு.
சரியான கூற்று: டெண்ட்ரான்கள் என்பவை தூண்டல்களை உடலத்தை நோக்கி கடத்தும் நீளமான நரம்பு நாரிழைகள்.

Question 2.
பரிவு நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகின்றது. (PTA-3)
விடை:
தவறு.
சரியான கூற்று பரிவு நரம்பு மண்டலம் தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

Question 3.
மனித உடலில் உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் மையமாக ஹைபோதலாமஸ் உள்ளது.
விடை:
சரி.

Question 4.
பெருமூளை உடலின் தன்னிச்சையான செயல்படும் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
விடை:
தவறு.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 5.
மைய நரம்பு மண்டலத்தின் வெண்மை நிற பகுதிகள் மையலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழைகளால் உருவாகின்றது.
விடை:
சரி.

Question 6.
உடலின் அனைத்து நரம்புகளும், மெனிஞ்சஸ் என்னும் உறையால் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. (PTA-3)
விடை:
தவறு
சரியான கூற்று: மூளை மெனிஞ்சஸ் என்னும் உறையால் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

Question 7.
மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மூளைத் தண்டுவடத் திரவம் அளிக்கிறது.
விடை:
சரி.

Question 8.
உடலில் ஒரு தூண்டப்படக்கூடிய மிக துரிதமான பதில் விளைவை உண்டாக்குவது அனிச்சை வில் ஆகும்.
விடை:
சரி.

Question 9.
சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதில் முகுளம் முக்கிய பங்காற்றுகிறது.
விடை:
சரி.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 60
விடை:
அ – 3,
ஆ – 1,
இ – 4,
ஈ – 2

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
(இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

Question 1.
கூற்று (A): மைய நரம்பு மண்டலம் முழுமையும், மூளைத் தண்டு வடத் திரவத்தால் நிரம்பியுள்ளது.
காரணம் (R) : மூளைத் தண்டுவடத் திரவத்திற்கு இத்தகைய பணிகள் கிடையாது.
விடை:
(இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 2.
கூற்று (A): டியூரா மேட்டர் மற்றும் பையா மேட்டர்களுக்கிடைப்பட்ட இடைவெளியில் கார்பஸ் கலோசம் அமைந்துள்ளது.
காரணம் (R): இது மூளைப் பெட்டகத்தினுள் நிலையான உள் அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
விடை:
(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

VI. ஒரு வார்த்தையில் விடையளி.

Question 1.
தாண்டல் என்பதை வரையறு.
விடை:
புறச்சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம்.

Question 2.
பின் மூளையின் பாகங்கள் யாவை? [PTA-2]
விடை:

  1. சிறுமூளை
  2. பான்ஸ்
  3. முகுளம்

Question 3.
மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை? [PTA-4]
விடை:
மூன்று பாதுகாப்பான உறைகளால் மூளை சூழப்பட்டுள்ளது. அவை –

  1. டியூரா மேட்டர்
  2. அரக்னாய்டு உறை
  3. பையா மேட்டர்

Question 4.
கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை:
ஹார்மோனியம் வாசித்தலின்போது இசை குறிப்புகளுக்கேற்ப சரியான கட்டையை அழுத்துவதும், விடுவிப்பதும் ஆகும்.

Question 5.
நரம்பு மண்டலத்திற்கும், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்குமிடையே இணைப்பாகச் செயல்படும் உறுப்பு எது?
விடை:
ஹைப்போதலாமஸ்.

Question 6.
அனிச்சை வில் என்பதை வரையறு. [PTA-4]
விடை:
நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல் துவங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை வில் எனப்படும்.

VII. வேறுபடுத்துக.

Question 1.
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல். [PTA-5]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 62

Question 2.
மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள். (4 Marks) [PTA-3]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 63

VIII. விரிவான விடையளி :

Question 1.
நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி. [GMQP-2019; Qy-2019]
விடை:
நியூரான் என்பது கீழ்க்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டது.
(1) சைட்டான்
(2) டெண்ட்ரைட்டுகள் மற்றும்
(3) ஆக்சான்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 66

(1) சைட்டான் :

  1. சைட்டான் என்பது செல் உடலம் அல்லது பெரிகேரியோன் என்றும் அழைக்கப்படும். இதன் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி நியூரோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது. இதனுள் அளவில் பெரிய துகள்கள் நிரம்பியுள்ளன. இத்துகள்கள் நிசில்
    துகள்கள் எனப்படுகின்றன.
  2. மேலும் மற்ற செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்ட்ரியா, ரிபோசோம்கள், லைசோசோம்கள் மற்றும் எண்டோபிளாச வலைப்பின்னல் ஆகியவையும் சைட்டோபிளாசத்தில் உள்ளன.
  3. நியூரான்கள் பகுப்படையும் தன்மையற்றவை. சைட்டோபிளாசத்தினுள்ளே பல நுண் இழைகள் காணப்படுகின்றன. அவை செல் உடலத்தின் வழியாக நரம்பு தூண்டல்களை முன்னும் பின்னும் கடத்துவதற்கு உதவுகின்றன.

(2) டெண்ட்ரைட்டுகள்:

  1. செல் உடலத்தின் வெளிப்புறமாக பல்வேறு கிளைத்த பகுதிகள் காணப்படுகின்றன. இவை நரம்புத் தூண்டல்களை சைட்டானை நோக்கிக் கடத்துகின்றன.
  2. பிற நரம்பு செல்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உள்வாங்கிக் கொள்ளும் பரப்பினை அதிகமாக்குகின்றன.

(3) ஆக்சான்:

  1. ஆக்சான் என்பது தனித்த, நீளமான, மெல்லிய அமைப்பு ஆகும். ஆக்சானின் முடிவுப்பகுதி நுண்ணிய கிளைகளாகப் பிரிந்து குமிழ் போன்ற “சினாப்டிக் குமிழ்” பகுதிகளாக முடிகின்றது.
  2. ஆக்சானின் பிளாஸ்மா சவ்வு, ஆக்ஸோலெம்மா என்றும், சைட்டோபிளாசம், ஆக்ஸோபிளாசம் என்றும் அழைக்கப்படும். இவை தூண்டல்களை சைட்டானில் இருந்து எடுத்துச் செல்கின்றன.
  3. ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையால் போர்த்தப்பட்டுள்ளது. இவ்வுறை மையலின் உறை எனப்படும். இவற்றின் மேற்புறம் ஸ்வான் செல்களால் ஆன உறையால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வுறை நியூரிலெம்மா எனப்படும்.
  4. மையலின் உறைதொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளிகளுடன் அமைந்திருக்கிறது. இந்த இடைவெளிகள் ரேன்வீரின் கணுக்கள் எனப்படுகின்றன. இக் கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி கணுவிடைப் பகுதி எனப்படுகிறது.
  5. மையலின் உறையானது ஒரு பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு நரம்பு தூண்டல்கள் மிக விரைவாக கடத்தப்பட உதவுகிறது.
    சினாப்ஸ் :
  6. ஒரு நியூரானின் சினாப்டிக் குமிழ் பகுதிக்கும் மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் இணையும் பகுதிக்கும் இடையிலுள்ள இடைவெளிப் பகுதி சினாப்டிக் இணைவுப் பகுதி எனப்படுகிறது.
  7. ஒரு நியூரானிலிருந்து தகவல்கள் மற்றொரு நியூரானுக்கு கடத்தப்படுவது சினாப்டிக் குமிழ் பகுதியில் வெளிப்படுத்தப்படும் வேதிப்பொருள் மூலமாக நடைபெறுகிறது. இவ்வேதிப்பொருட்கள் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் அல்லது நரம்புணர்வு கடத்திகள் எனப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 2.
மூளையின் அமைப்பையும் பணிகளையும் விளக்குக. [PTA-1; Qy-2019]
விடை:
மனித மூளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன :
(1) முன் மூளை
(2) நடு மூளை
(3) பின் மூளை
(1) முன் மூளை :

  1. முன் மூளையானது பெருமூளை (செரிப்ரம்) மற்றும் டயன்செஃப்லான் என்பவைகளால் ஆனது. டயன்செஃப்லான் மேற்புற தலாமஸ் மற்றும் கீழ்ப்புற ஹைப்போதலாமஸ் கொண்டுள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 70
  2. பெருமூளை :
    மூளையின் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பான்மையாக இப்பகுதி அமைந்துள்ளது. பெரு மூளையானது நீள் வாட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு எனப்படும்.
  3. இப்பிரிவுகள் செரிப்ரல் ஹெமிஸ்பியர்/பெருமூளை அரைக் கோளங்கள் என்று அழைக்கப்படும். இப்பிரிவுகள் மூளையின் அடிப்பகுதியில் கார்பஸ் கலோசம் என்னும் அடர்த்தியான நரம்புத் திசுக்கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன.
  4. பெருமூளையின் வெளிப்புற பகுதி, சாம்பல் நிறப் பகுதியால் ஆனது. இது பெருமூளைப் புறணி எனப்படும்.
  5. பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி வெண்மை நிறப் பொருளால் ஆனது. பெருமூளைப் புறணி அதிகமான மடிப்புகளுடன் பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும்.
  6. இவற்றின் மேடு “கைரி” என்றும், பள்ளங்கள் “சல்சி” என்றும் அழைக்கப்படும்.
  7. ஒவ்வொரு பெரு மூளை அரைக்கோளமும், முன்புறக் கதுப்பு, பக்கவாட்டுக் கதுப்பு, மேற்புறக் கதுப்பு மற்றும் பின்புறக் கதுப்பு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெருமூளை கதுப்புகள் என அழைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பானவை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கதுப்பில் ஏற்படும் சேதம் அந்தப் பகுதிக்கான செயல்களை பாதிக்கும்.
  8. பெரு மூளையானது சிந்தித்தல், நுண்ண றிவு, விழிப்புணர்வு நிலை, நினைவுத் திறன், கற்பனைத்திறன், காரணகாரியம் ஆராய்தல் மற்றும் மன உறுதி ஆகியவற்றுக்கு காரணமானதாகும்.
  9. தலாமஸ் :
    பெருமூளையின் உட்புற ஆழமான பகுதியான மெடுல்லாவைச் சூழ்ந்து தலாமஸ் அமைந்துள்ளது. உணர்வு மற்றும் இயக்க தூண்டல்களைக் கடத்தும் முக்கியமான கடத்து மையமாக தலாமஸ் செயல்படுகிறது.
  10. ஹைபோதலாமஸ் :
    ஹைபோ என்பதற்கு கீழாக என்று பொருள். இப்பொருளுக்கேற்ப இது தலாமஸின் கீழ்ப்பகுதியில் உள்ளது.
    இது உள்ளார்ந்த உணர்வுகளான பசி, தாகம், தூக்கம், வியர்வை, பாலுறவுக் கிளர்ச்சி, கோபம், பயம், ரத்த அழுத்தம், உடலின் நீர் சமநிலை பேணுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது.
  11. மேலும் இது பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. தலாமஸ் நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுகிறது.

(2) நடுமூளை :

  1. இது தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது. நடுமூளையின் பின்புறத்தில் நான்கு கோள வடிவிலான பகுதிகள் உள்ளன. இவை கார்ப்போரா குவாட்ரிஜெமினா என அழைக்கப்படும்.
  2. இவை பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்துகிறது.

(3) பின் மூளை :
பின் மூளையானது சிறுமூளை, பான்ஸ் மற்றும் முகுளம் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியது.

  1. சிறுமூளை : மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி சிறு மூளை ஆகும். சிறு மூளையானது மையப் பகுதியில் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளுடன் காணப்படும். இது இயக்கு தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
  2. பான்ஸ் : “பான்ஸ்” என்னும் இலத்தின் மொழி சொல்லுக்கு “இணைப்பு” என்று பொருள். இது சிறு மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக செயல்படுகிறது. இது சிறுமூளை, தண்டுவடம், நடுமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக செயல்படுகிறது. இது சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  3. முகுளம் : மூளையின் கீழ்ப்பகுதியான முகுளம் தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. இது இதயத் துடிப்பினை கட்டுப்படுத்தும் மையம், சுவாசத்தினை கட்டுப்படுத்தும் சுவாச மையம், இரத்தக் குழாய்களின் சுருக்கத்தினை கட்டுப்படுத்தும் மையம் ஆகிய மையங்களை உள்ளடக்கியது. மேலும் உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

Question 3.
உனது கையை யாராவது சிறு ஊசி மூலம் குத்தும்போது நீ என்ன செய்வாய்? என்பதனையும் இந்த நரம்புத் தூண்டல் செல்லக்கூடிய பாதையை படம் வரைந்து பாகங்களுடன் விளக்குக.
விடை:

  1. என் கையை யாராவது சிறு ஊசி மூலம் குத்தும்போது, நான் உடனடியாக என்னுடைய கையை பாதுகாப்பாக விலக்கிக் கொள்வேன். இதற்குப் பெயர் அனிச்சை செயல்.
  2. பெரும்பாலான அனிச்சைச் செயல்கள் தண்டுவடத்தினால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இவை தண்டுவட அனிச்சைச் செயல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  3. நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல் துலங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை வில் எனப்படும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 77
  4. ஊசி நம் கையை குத்தும்போது வலி என்னும் தூண்டல் உணர்வு அமைப்புகள், வலி உணர்வேற்பிகள் எனப்படும்.
  5. இந்த வலியானது உணர் நரம்பு செல்களில் தூண்டல்களை ஏற்படுத்துகிறது.
  6. தண்டுவடத்திற்கு இத்தகவல்கள் உணர்வு நரம்பு செல்கள் மூலம் கடத்தப்படுகிறது.
  7. தண்டுவடமானது இத்தூண்டல்களை பகுத்தறிந்து, உரிய துலங்கலை கடத்தும் மையத்தின் நரம்பு செல்கள் மூலமாக இயக்க நரம்பு செல்களுக்கு கடத்துகிறது.
  8. தண்டுவடம் பிறப்பிக்கும் கட்டளைகளை இயக்க நரம்பு செல்கள் நமது கைகளுக்கு எடுத்துச் செல்கிறது.
  9. நமது கையில் உள்ள தசை நார்கள் சுருங்குவதன் மூலம் நாம் நமது கையை ஊசி குத்தும் இடத்திலிருந்து உடனடியாக விலக்கிக் கொள்கிறோம்.
  10. மேலே உள்ள உதாரணத்தில் தசை நார்கள் என்பது வலியின் காரணமான விளைவினை வெளிப்படுத்தும் உறுப்பாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 4.
தண்டுவடத்தின் அமைப்பினை விவரி.
விடை:

  1. தண்டுவடமானது குழல் போன்ற அமைப்பாக முதுகெலும்பின் உள்ளே முள்ளெலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள் அமைந்துள்ளது. மூளையைப் போன்று தண்டுவடமும் மூ வகை சவ்வுகளால் மூடப்பட்டுள்ளது.
  2. இது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்துள்ளது. தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது “ஃபைலம் டெர்மினலே” எனப்படுகிறது.
  3. தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது. இது மையக்குழல் எனப்படுகிறது.
  4. தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது. “H” எழுத்தின் மேற்பக்க முனைகள் ” வயிற்றுப்புறக் கொம்புகள்” என்றும், கீழ்ப்பக்க முனைகள் ”முதுகுப்புறக் கொம்புகள்” என்றும் குறிப்பிடப்படுகிறது.
  5. வயிற்றுப்புறக் கொம்புப்பகுதியில் கற்றையான நரம்பிழைகள் சேர்ந்து பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன. முகுதுப்புற கொம்பு பகுதிகளிலிருந்து வெளிப்புறமாக வரும் நரம்பிழைகள் எதிர்பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன.
  6. இவையிரண்டும் இணைந்து தண்டுவட நரம்புகளை உண்டாக்குகின்றன. வெளிப்புற வெண்மை நிற பகுதி நரம்பிழைக் கற்றைகளைக் கொண்டுள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 80
  7. தண்டு வடமானது, மூளைக்கும் பிற உணர்ச்சி உறுப்புகளுக்கும் இடையே உணர்வுத் தூண்டல்களையும், இயக்கத் தூண்டல்களையும், முன்னும் பின்னுமாக கடத்தக்கூடியது.
  8. இது உடலின் அனிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.

Question 5.
ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு நரம்பு தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன?
விடை:

  1. உணர் உறுப்புகளான கண், மூக்கு, தோல் போன்றவற்றின் மூலம், புறச் சூழ்நிலையிலிருந்து பெறப்படும் தூண்டல்கள் உணர்வேற்பிகளின் மூலம் உணரப்படுகின்றன.
  2. இத்தூண்டல்கள் மின்தூண்டல்களாக நியூரான்கள் வழி கடத்தப்படுகின்றன. மேலும் இத்தூண்டல்கள் டெண்ட்ரான் முனை வழியாக செல் உடலத்துக்குள் கடத்தப்பட்டு ஆக்ஸான் முனையை சென்றடைகின்றன.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 85
  3. இப்போது ஆக்ஸான் முனையானது நரம்புணர்வு கடத்திகளை (நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்) வெளியிடுகிறது. இவை நரம்பு இணைவுப் பகுதியில் பரவி அடுத்த நியூரானிலுள்ள டெண்ட்ரான்களை அடைந்து செல் உடலத்தில் மின் தூண்டல்களாக கடத்தப்படுகின்றன.
  4. இவ்வாறு தொடர்ந்து கடத்தப்பட்டு மின் தூண்டல்கள் மூளை அல்லது தண்டுவடத்தைச் சென்றடைகின்றன. இதற்குரிய துலங்கல்கள் (Response) மூளை அல்லது தண்டுவடத்திலிருந்து வெளிப்பட்டு குறிப்பிட்ட தசைகள் அல்லது சுரப்பிகளை சென்றடைகின்றன.
  5. ஒரு குறிப்பிட்ட நியூரான்களின் தொகுப்பில் நடைபெறும் நரம்பு தூண்டல்கள் செல்லும் பாதையானது, எப்பொழுதும் ஒரு நியூரானின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் முனைக்கு சினாப்ஸ் அல்லது சினாப்டிக் குமிழ் மூலம் கடத்தப்படுவதை சினாப்டிக் கடத்துதல் என்கிறோம்.
  6. நரம்புணர்வு கடத்திகள்: நரம்புணர்வு கடத்திகள் என்பவை ஒரு நரம்புச் செல்லின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நரம்புச் செல்லின் டெண்டிரான் முனைக்கு அல்லது எந்த இலக்கு உறுப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளதோ அந்த குறிப்பிட்ட இலக்கு உறுப்புக்கு நரம்புத் தூண்டல்களை கடத்தும் வேதிப் பொருள்கள் (அசிட்டைல் கோலின்) ஆகும்.

Question 6.
நியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குக. [PTA-6; Qy-2019] விடை:
அமைப்பின் அடிப்படையில் நியூரான்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. ஒருமுனை நியூரான்கள்: இவ்வகை நியூரான்களில் ஒருமுனை மட்டுமே சைட்டானில் இருந்து கிளைத்து காணப்படும். இதுவே ஆக்சான் மற்றும் டெண்டிரானாக செயல்படும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 86
  2. இரு முனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து இரு நரம்புப் பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று ஆக்சானாகவும் மற்றொன்று டெண்டிரானாகவும் செயல்படும். ஒருமுனை நியூரான்கள்
  3. பலமுனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து பலமுனை நியூரான்கள் பலடென்ட்ரான்கள் கிளைத்து ஒரு முனையிலும், ஆக்சான் ஒரு முனையிலும் காணப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 87

Question 1.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு ‘A’, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது ‘B’ என்னும் எலும்பு சட்டகத்துக்குள், ‘C’ என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. ‘A’யிலிருந்து, ‘D’ எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன. (PTA-6)

  1. ‘A’ என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
  2. அ) ‘B’ எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) ‘C’ எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
  3. ‘D’ என்பது எத்தனை இணை நரம்புகள்?

விடை:

  1. A என்பது தண்டுவடமாகும்.
  2. (அ) ‘B’ எனப்படும் எலும்புச் சட்டகத்தின் பெயர் நரம்புக் குழல்.
    (ஆ) ‘C’ எனப்படும் உறையானது மெனிஞ்சஸ் மூளை உறைகள்.
  3. ‘D’ என்பது 31 ஜோடி இணை நரம்புகள்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 2.
நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான ‘L’ செல்கள் ஆகும். செல்களில் நீண்ட கிளைத்த பகுதி ‘M’ என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் N’ என்றும் அழைக்கப்படும். இரண்டு ‘L’ செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி ‘O’ என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான ‘P’ நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.

  1. ‘L’ செல்களின் பெயரை கூறுக.
  2. ‘M’ மற்றும் ‘N’ என்பவை யாவை?
  3. ‘O’ என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
  4. ‘P’ எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.

விடை:

  1. ‘L’ செல் நியூரான் (அ) நரம்பு செல் ஆகும்.
  2. ‘M’ என்பது டெண்ட்ரைட்டுகள் ஆகும். ‘N’ என்பது ஆக்சான்.
  3. ‘O’ என்பது சினாப்ஸ்.
  4. ‘P’ எனப்படும் வேதிப்பொருள் நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் ஆகும்.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
சிறுமூளையின் பணிகளை எழுதுக. [PTA-6]
விடை:
சிறுமூளை இயக்கு தசைகளின் இயக்கங்களைத் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
நியூரான்களின் மூன்று வகை அமைப்பை எழுதி அவை காணப்படும் இடத்தைக் கூறுக.(Sep.20)
விடை:
நியூரான்களின் மூன்று வகை அமைப்புகளும், அவை காணப்படும் இடங்களும் :
ஒரு முனை நியூரான்கள் : வளர் கருவின் ஆரம்ப நிலையில் மட்டும் காணப்படும். முதிர் உயிரிகளில் காணப்படாது. இரு முனை நியூரான்கள் : கண்ணின் விழித்திரையிலும், நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபீதிலியத்திலும் காணப்படும்.
பல முனை நியூரான்கள் : ‘மூளையின் புறப்பரப்பான பெருமூளைப் புறணியில் காணப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 23 காட்சித் தொடர்பு Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 23 காட்சித் தொடர்பு

10th Science Guide காட்சித் தொடர்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது? [PTA-3]
அ) Paint
ஆ) PDF
இ_ MS Word
ஈ) Scratch
விடை:
ஈ) Scratch

Question 2.
பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம் (GMQP-2019)
அ) கோப்புத் தொகுப்பு
ஆ) பெட்டி
இ) Paint
ஈ) ஸ்கேனர்
விடை:
அ) கோப்புத் தொகுப்பு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Question 3.
நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது? [PTA-1]
அ) Script area
ஆ) Block palette
இ) Stage
ஈ) Sprite
விடை:
அ) Script area

Question 4.
நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது? [PTA-2]
அ) Inkscape
ஆ) Script editor
இ) Stage
ஈ) Sprite
விடை:
ஆ) Script editor

Question 5.
பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?
அ) Block palette
ஆ) Block menu
இ) Script area
ஈ) Sprite
விடை:
ஆ) Block menu

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு 1
விடை :
1. நிரலாக்கப் பகுதி Script Area – உ. நிரல் உருவாக்கம் Build Scripts
2. கோப்புத் தொகுப்பு Folder – ஈ. கோப்பு சேமிப்பு Store files
3. ஸ்கிராச்சு Scratch – ஆ. அசைவூட்ட மென்பொருள் Animation software
4. ஆடை திருத்தி Costume editor – இ. நிரல் திருத்தி Edit programs
5. நோட்பேடு Notepad – அ. குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes

III. சுருக்கமாக விடையளி

Question 1.
ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?
விடை:

  1. அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுக்களையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஸ்கிராச்சு எனப்படும்.
  2. இது ஒரு காட்சி நிரல் மொழி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Question 2.
திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுது.
விடை:
ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று பிரிவுகளைக் கொண்டது.

  1. ஸ்டேஜ் (Stage)
  2. ஸ்பிரைட் (Sprite)
  3. ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script editor)

(1) ஸ்டேஜ் (மேடை) :

  1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
  2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
  3. தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

(2) ஸ்பிரைட் :

  1. ஸ்கிராச்சு சாளரத்தின் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்டுகள் என்பர்.
  2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
  3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

(3) ஸ்கிரிப்ட் எடிட்டர் (அ) காஸ்டியூம் (ஒப்பனை) எடிட்டர் :
நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.

Question 3.
மேடை (STAGE) என்றால் என்ன? (அல்லது) ஸ்கிராச்சு சூழல் திருத்தியில் மேடை (STAGE) என்பது பற்றி சிறு குறிப்பு எழுதுக. (Sep.20)
விடை:

  1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
  2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
  3. தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

Question 4.
ஸ்பிரைட் (SPRITE) என்றால் என்ன?
விடை:

  1. ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் (Characters) ஸ்பிரைட்கள் என்பர்.
  2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
  3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

PTA மாதிரி வினா-விடை
1. மதிப்பெணம்

Question 1.
கணிப்பொறியில் குறிப்புகளைச் சேகரித்து வைக்க …………. பயன்படுகிறது. [PTA-4]
அ) Notepad
ஆ) Paint
இ) Scanner
ஈ) Scratch
விடை:
அ) Notepad

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Question 2.
கணினியில் இடம்பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் ………… என்று குறிக்கப்படுகிறது. [PTA-6]
அ) கட்டளை
ஆ) கோப்புத் தொகுப்பு
இ கோப்பு
ஈ) Paint
விடை:
இ) கோப்பு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

10th Science Guide தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்) …………..
அ) மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.
ஆ) ஆற்றல் செலவிடப்படுகிறது இ அவை மேல் நோக்கி கடத்துதல் முறையாகும்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது ……
அ) புறணி
ஆ) புறத்தோல்
இ) புளோயம்
ஈ) சைலம்
விடை:
ஈ) சைலம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Question 3.
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
அ) கார்பன்டை ஆக்ஸைடு
ஆ) ஆக்ஸிஜன்
இ நீர்
ஈ) இவை எதுவுமில்லை
விடை:
இ) நீர்

Question 4.
வேர்த் தூவிகளானது ஒரு [PTA-4)
அ) புறணி செல்லாகும்
ஆ) புறத்தோலின் நீட்சியாகும்
இ) ஒரு செல் அமைப்பாகும்
ஈ) ஆ மற்றும்
விடை:
ஈ) ஆ மற்றும் இ

Question 5.
கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை [PTA-3]
அ) செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
ஆ) பரவல்
இ) சவ்வூடு பரவல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)

Question 6.
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
அ) எண்டோகார்டியம்
ஆ) எபிகார்டியம்
இ) மையோகார்டியம்
ஈ) மேற்கூறியவை அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறியவை அனைத்தும்

Question 7.
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
அ) வெண்ட்ரிக்கிள் ஏட்ரியம் சிரை தமனி
ஆ) ஏட்ரியம் வெண்ட்ரிக்கிள் சிரை தமனி
இ) ஏட்ரியம் வெண்ட்ரிக்கிள் தமனி சிரை
ஈ) வெண்ட்ரிக்கிள் சிரை ஏட்ரியம் தமனி
விடை:
இ) ஏட்ரியம் வெண்ட்ரிக்கிள் தமனி சிரை

Question 8.
விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்? (GMQP-2019)
அ) ‘O’ வகை
ஆ) ‘AB’ வகை
இ) ‘A’ அல்லது ‘B’ வகை
ஈ) அனைத்து வகை
விடை:
அ) O’ வகை

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Question 9.
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ….
அ) SA கணு
ஆ) AV கணு
இ) பர்கின்ஜி இழைகள்
ஈ) ஹிஸ் கற்றைகள்
விடை:
அ) SA- கணு

Question 10
ஆம் வகுப்பு அலகு 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
10. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
அ) பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
ஆ) சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
இ) நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்த தட்டுகள்
விடை:
ஈ) இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்த தட்டுகள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி ……….. எனப்படும்
விடை:
நீராவிப் போக்கு

Question 2.
நீரானது வேர் தூவி செல்லின் ………….. பிளாஸ்மா சவ்வின் வழியாக செல்கிறது.
விடை:
அரை கடத்து

Question 3.
மண்ணிலிருந்து நீரை உறிஞ்சும் வேரின் பகுதி ……………. . [PTA-6]
விடை:
வேர்த்தூவி

Question 4.
இயல்பான இரத்த அழுத்தம். ……….
விடை:
120 mmHg/80 mmHg

Question 5.
சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு ………….. முறைகள் ஆகும்.
விடை:
72-75

III. பொருத்துக.

பிரிவு I
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 1
விடை:
1 – ஆ,
2 – அ,
3 – ஈ,
4 – இ

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

பிரிவு II
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 55
விடை:
1 – ஈ,
2 – அ,
3 – ஆ,
4 – இ,
5 – ஏ,
6 – எ,
7 – உ,
8 – ஊ

IV. சரியா அல்லது தவறா என எழுதவும். தவறாயின் சரியான கூற்றினை எழுதவும்.

Question 1.
உணவைக் கடத்துதலுக்கு காரணமான திசு புளோயமாகும்.
விடை:
சரி.

Question 2.
தாவரங்கள் நீராவிப்போக்கின் காரணமாக நீரை இழக்கின்றன.
விடை:
சரி.

Question 3.
புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை – குளுக்கோஸ்.
விடை:
தவறு.
சரியான கூற்று: புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை- சுக்ரோஸ்.

Question 4.
அபோபிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: சிம்பிலாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Question 5.
காப்பு செல்கள் நீரை இழக்கும் போது இலைத்துளை திறந்து கொள்ளும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: காப்பு செல்கள் நீரை இழக்கும் போது இலைத்துளை மூடிக் கொள்ளும்.

Question 6.
இதயத்துடிப்பின் துவக்கம் மற்றும் தூண்டலானது நரம்புகளின் மூலமாக நடைபெறும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: இதயத்துடிப்பின் துவக்கம் மற்றும் தூண்டலானது சைனோ ஏட்ரியல் (SA) கணுக்களின் மூலமாக நடைபெறும்.

Question 7.
அனைத்து சிரைகளும் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தை கடத்துபவையாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: நுரையீரல் சிரையினைத் தவிர, மற்ற அனைத்து சிரைகளும் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தினை கடத்துபவையாகும்.

Question 8.
WBC பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
விடை:
சரி.

Question 9.
வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால்லப் எனும் ஒலி தோன்றுகிறது.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 58

Question 1.
மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்கிலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக. [Qy-2019]
விடை:
பெரிகார்டியல் உறை.

Question 2.
மனித இரத்தத்தில் உள்ள RBC-யின் வடிவம் என்ன? [Qy-2019]
விடை:
இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்.

Question 3.
இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?
விடை:
ஹிமோகுளோபின் என்னும் நிறமி இருப்பதால்.

Question 4.
எவ்வகையான செல்கள் நிணநீரில் காணப்படுகின்றன?
விடை:
இரத்த வெள்ளையணுக்கள் (WBC).

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Question 5.
வெண்ட்ரிக்கிளிலிருந்து வெளிச் செல்லும் முக்கியத் தமனிகளில் காணப்படும் வால்வு எது?
விடை:
அரைச்சந்திர வால்வு.

Question 6.
இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது?
விடை:
கரோனரி தமனி.

VI. சிறு வினா.

Question 1.
நீராவிப்போக்கின் போது இலைத்துளை திறப்பதற்கும் மூடிக்கொள்வதற்குமான காரணத்தை கூறு.
விடை:

  1. இலைத்துளையானது பகலில் திறந்தும் இரவில் மூடியும் காணப்படும். இலைத்துளையின் செயல்பாடானது காப்பு செல்களின் விறைப்பழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது.
  2. பகலில் காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விரைப்புத் தன்மை அடைந்து இலைத்துளை திறந்து கொள்கின்றன.
  3. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்பழுத்தம் குறைந்து காப்பு செல்கள் சுருங்குவதால் இலைத்துளை மூடிக் கொள்கிறது.

Question 2.
கூட்டிணைவு என்றால் என்ன? [PTA-1]
விடை:
நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்.

Question 3.
வேரினுள் நீர் நுழைந்து, இலையின் மூலம் நீராவியாக வளிமண்டலத்தில் இழக்கப்படும் பாதையைக் காட்டுக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 60

Question 4.
ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரின் அளவைவிட இலையின் மூலம் நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் என்ன நிகழும்?
விடை:
ஒருதாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரின் அளவைவிட இலையின் மூலம் நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால்

  1. வெளியேற்றப்பட்ட அதிக அளவு நீரின் இழப்பை ஈடுகட்ட, வேர்கள் அதிக அளவு நீரை நிலத்திலிருந்து உறிஞ்சிவிடும்.
  2. ஆனால், நீர் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், இலைகள் வாடி, உலர்ந்து, விழுந்துவிடும்.
  3. இதனால் அந்த தாவரமே உயிரற்று போவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

Question 5.
மனித இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விவரி.
விடை:
மனித இதயத்தின் அமைப்பு

  1. இதயம் கார்டியாக் தசை எனும் சிறப்புத் தசையால் ஆனது.
  2. இது இரண்டு அடுக்கினால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது.
  3. இது நான்கு அறைகளைக் கொண்டது. மேல் அறைகள் இரண்டும் ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள் என்றும், கீழ் அறைகள் இரண்டும் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படும்.
  4. இவ்வறைகளைப் பிரிக்கின்ற இடைச்சுவர் ‘செப்டம்’ எனப்படும்.
  5. ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை முக்கிய சிரைகளான மேற்பெருஞ்சிரை, கீழ் பெருஞ்சிரை மற்றும் கரோனரி சைனஸ் மூலம் வலது ஆரிக்கிள் பெறுகிறது.
  6. நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை நுரையீரல் சிரைகளின் மூலம் இடது ஆரிக்கிள் பெறுகின்றது.
  7. இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி தோன்றுகிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Question 6.
மனிதர்களின் சுற்றோட்டமானது இரட்டைச் சுற்றோட்டம் என அழைக்கப்படுகிறது. ஏன்? [PTA-1]
விடை:
மனிதனின் இரத்தமானது ஒரு முழு சுழற்சியின் போது இதயத்தின் வழியாக இருமுறை ஆக்ஸிஜன் குறைந்த இரத்தமும் ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தமும் ஒன்றுக்கொன்று கலவாமல் இருமுறை சுற்றிவருவது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும்.

Question 7.
இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
விடை:

  1. இதய ஒலியானது இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் ஏற்படுகிறது.
  2. முதல் ஒலியான ‘லப் நீண்ட நேரத்திற்கு ஒலிக்கும். வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது.
  3. இரண்டாவது ஒலியான டப்’ சற்று குறுகிய காலமே ஒலிக்கும். இவ்வொலியானது வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.

Question 8.
இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன? [PTA-2]
விடை:

  1. இதய வால்வுகள் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
  2. இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதை தடுக்கவும் உதவுகின்றன.

Question 9.
Rh காரணியைக் கண்டறிந்தவர் யார்? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது? [PTA-6]
விடை:
Rh காரணியைக் கண்டறிந்தவர்கள் லேண்ட்ஸ்டெய்னர் மற்றும் வியன்னர். ரீசஸ் இனக்குரங்கின் இரத்தத்திலிருந்து Rh காரணி கண்டறியப்பட்டது. எனவே Rh காரணி என அழைக்கப்படுகிறது.

Question 10.
தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன? [PTA-5]
விடை :
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 61

Question 11.
சைனோ ஆரிக்குலார் கணு பேஸ் மேக்கர்’ என்று ஏன் அழைக்கப்படுகிறது? (PTA-5; GMQP-2019)
விடை:

  1. SA கணுவானது இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது. ஏனெனில் இது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது.
  2. சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது.

Question 12.
உடல் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் இரத்த ஓட்டத்தினை வேறுபடுத்துக. [PTA-2]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 66

Question 13.
இதய சுழற்சியின் நிகழ்வானது 0.8 வினாடிகளில் நிறைவடைகிறது எனில், ஒவ்வொரு நிகழ்வின் கால அளவையும் குறிப்பிடுக. விடை:
ஒவ்வொரு இதய சுழற்சியும் 0.8 விநாடிகளில் முடிவடையும். அவை கீழ்க்கண்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது
விடை:

  1. ஏட்ரியல் சிஸ்டோல் : ஆரிக்கிள்கள் சுருக்கம் 0.1 விநாடி.
  2. வெண்ட்ரிக்குலார் சிஸ்டோல் : வெண்ட்ரிக்கிள்கள் சுருக்கம் 0.3 விநாடி.
  3. வெண்ட்ரிக்குலோர் டையஸ்டோல் : வெண்ட்ரிக்கிள்கள் விரிவடைதல் 0.4 விநாடி

VII. கீழ்கண்ட கூற்றுக்கான காரணங்களைத் தருக.

Question 1.
தாவர வேர்கள் கனிமங்களை ஆற்றல் சாரா நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் கொள்வதில்லை.
விடை:
காரணம்:

  1. கனிமங்கள் மண்ணில் அயனிகளாக உள்ளதால் அவை சவ்வின் வழியாக எளிதில் புக முடியாது.
  2. மண்ணிலுள்ள கனிமங்களின் செறிவு வேர்களின் செல்களில் உள்ள செறிவுகளை விடக் குறைவாக உள்ளது.
  3. எனவே பெரும்பான்மையான கனிமங்கள் ஆற்றல் சார்ந்த கடத்துதல் மூலமாக வேரின் புறத்தோல் சைட்டோபிளாசம் வழியாக உள்ளே நுழைகிறது. இதற்கு தேவையான ஆற்றலை ATP மூலம் பெறுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Question 2.
இலைத்துளைகள் திறப்பதற்கும் மூடுவதற்கும் காரணமான அமைப்பு காப்பு செல்கள் ஆகும்.
விடை:
காரணம் :

  1. இலைத்துளை பகலில் திறந்தும் இரவில் மூடியும் காணப்படும். இலைத்துளையின் செயல் பாடானது காப்பு செல்களின் விறைப்பழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது.
  2. பகலில் காப்பு செல்களுக்குள் அருகிலுள்ள செல்களிலிருந்து நீர் புகுவதால் விறைப்புத்தன்மை அடைகிறது. அதனால் இலைத்துளை திறந்து கொள்கின்றன.
  3. இரவில் காப்பு செல்களை விட்டு நீர் வெளியேறுவதால் விறைப்பழுத்தம் குறைந்து காப்பு செல்கள் – சுருங்கி விடுகின்றன. இதனால் இலைத்துளை மூடிக் கொள்கிறது.

Question 3.
புளோயத்தின் வழியாக உணவுப்பொருளானது அனைத்து பகுதிகளுக்கும் பல திசைகளில் கடத்தப்படுகிறது. [PTA-4]
விடை:
காரணம் :

  1. புளோயம் உணவினை (சுக்ரோஸ் தோற்றுவாயிலிருந்து தேக்கிடத்திற்கு கடத்துகிறது. உணவு உற்பத்தியாகும் இடமான இலைகள் தோற்றுவாயாகவும், சேமிக்கும் அல்லது தேவையான இடம் தேக்கிடமாகவும் கருதப்படுகிறது. ஆனால் தோற்றுவாயும், தேக்கிடமும் தேவையைப் பொறுத்தும், பருவகாலத்தைப் பொறுத்தும் மாறுபடலாம்.
  2. தோற்றுவாய்க்கும் தேக்கிடத்திற்கும் உள்ள தொடர்பு அவ்வப்போது மாறுபாடு அடையக்கூடியது. உணவு இடம் பெயர்வது மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ (இரு திசைகளில்) நடைபெறுகிறது.

Question 4.
இலைகள் உதிரும்போது தாவரங்களில் கனிமங்கள் இழக்கப்படுவதில்லை. [PTA-2]
விடை:
காரணம் :

  1. சில தாவரங்களில் மூப்படைந்த உதிரும் நிலையிலுள்ள இலைகளில் உள்ள தனிமங்கள் இளம் இலைகளுக்கு இடம் பெயர்கின்றன. இந்நிகழ்ச்சி இலையுதிர் தாவரங்களில் நடைபெறுகிறது.
  2. பாஸ்பரஸ், சல்பர், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மிக விரைவாக இடம் பெயரும் தனிமங்களாகும்.
  3. கால்சியம் எளிதில் இடம் பெயர்வதில்லை. சிறிதளவு தனிமங்கள் சைலம் மற்றும் புளோயத்தினிடையே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

Question 5.
வலது ஆரிக்கிள் சுவரை விட வலது வெண்ட்ரிக்கிள் சுவர் தடிமனாக உள்ளது. காரணம் கூறுக.
விடை:
காரணம் :

  1. வலது ஆரிக்கிள் சுவரை விட வலது வெண்ட்ரிக்கிள் சுவர் தடிமனாக உள்ளது.
  2. ஏனெனில் இதயத்திலிருந்து இரத்தத்தை அதிக விசையுடன் உந்தி செலுத்துவதால் தடித்து காணப்படுகிறது.

Question 6.
பாலூட்டிகளின் முதிர்ந்த RBC-யில் செல் நுண்ணுறுப்புக்கள் காணப்படுவதில்லை. [PTA-4]
விடை:
காரணம் :

  1. பாலூட்டிகளின் RBC-யில் உட்கரு இல்லாதிருப்பதினால் அச்செல்லானது இருபுறமும் குழிந்த அமைப்பைப் பெற்று, அதிகளவு ஆக்சிஜன் இணைவதற்கான மேற்பரப்பினைப் பெற்றுள்ளது.
  2. RBC-யில் மைட்டோகாண்ட்ரியா இல்லாதிருப்பதால் அதிக அளவு ஆக்சிஜனை திசுக்களுக்கு கடத்துவதை அனுமதிக்கிறது.
  3. எண்டோபிளாச வலைப்பின்னல் இல்லாதிருப்பதினால் மெல்லிய இரத்தத் தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று RBC எளிதாக ஊடுருவுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 70.2

Question 1.
தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன. விவரி.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 70

  1. நீரானது வேர்த்தூவியினுள் சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது.
  2. ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது.
  3. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது.
  4. வேர்தூவிகள் நீரையும் கனிம உப்புக்களையும் பரவல் முறையில் உறிஞ்சுகின்றன.
  5. வேர்த்தூவியின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது வேரின் உட்புற அடுக்கிற்கு இரண்டு தனித்தனி வழிகளில் செல்கின்றன. அவை அப்போபிளாஸ்ட் வழி மற்றும் சிம்பிளாஸ்ட் வழி.
  6. அப்போபிளாஸ்ட் வழியில் நீரானது முழுக்க முழுக்க செல்சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியாகச் செல்கிறது.
  7. இவ்வகை கடத்துதலில் நீரானது எவ்வித சவ்வினையும் கடக்காமல் செல்கிறது. இந்த வகை கடத்துதல் செறிவின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  8. சிம்பிளாஸ்ட் வழி முறையில் நீரானது செல்லின் வழியாக செல்கிறது. அதாவது செல்லின் பிளாஸ்மா சவ்வில் நுழைந்து சைட்டோபிளாசத்தினை கடந்து பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாக அருகிலுள்ள செல்களுக்கு செல்கிறது.
  9. செல்சவ்வின் வழியாக நீர் செல்வதால் இவ்வகை கடத்துதல் மெதுவாக நடைபெறுகிறது. சிம்பிளாஸ்ட் வகை கடத்துதல் செறிவு சரிவின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Question 2.
நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப் போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
தாவரத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இலையின் புறத்தோல் துளை வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவதே நீராவிப்போக்கு எனப்படும். நீராவிப்போக்கின் முக்கியத்துவம்:

  1. நீராவிப் போக்கின் இழுவிசையின் காரணமாக நீரானது மேலே செல்ல காரணமாகிறது.
  2. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான நீர் கிடைக்கிறது.
  3. கனிமங்கள் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல உதவுகிறது.
  4. இலைகளின் மேற்பரப்பு குளிர்ச்சியாக இருக்க நீராவிப் போக்கு உதவுகிறது.
  5. செல்கள் விறைப்புத் தன்மையுடன் இருக்கச் செய்கிறது. இதனால் அவற்றின் வடிவம் மாறாமலும் இருக்க உதவுகிறது.

Question 3.
லி யூக்கோசைட்டுகள் துகள்கள் உடையவை மற்றும் துகள்களற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஏன்? அவற்றின் பெயர்களையும், பணிகளையும் குறிப்பிடுக.
விடை:
இரத்த வெள்ளையணுக்களில் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றில் உள்ள துகள்களைப் பொறுத்தது என்பதால், அவை,
(1) துகள்களுடைய செல்கள்
(2) துகள்கள் அற்ற செல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

(1) துகள்களுடைய செல்கள்: இவை சைட்டோபிளாசத்தில் துகள்களைக் கொண்டுள்ளன. இவை மூன்று வகைப்படும்.
(i) நியூட்ரோஃபில்கள்
(ii) ஈசினோஃபில்கள்
(iii) பேசோஃபில்கள்

(i) நியூட்ரோஃபில்கள்: நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
(ii) ஈசினோஃபில்கள்: உடலில் சில ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நச்சுகளை அழித்தல் மற்றும் நச்சு முறிவினை ஏற்படுத்துவது ஈசினோஃபில்களின் முக்கிய பணிகளாகும்.
(iii) பேசோஃபில்கள்: வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.

(2) துகள்களற்ற செல்கள் :
இவற்றின் சைட்டோபிளாசத்தில் துகள்கள் காணப்படுவதிலை. இவை இரண்டு வகைப்படும். (அ) லிம்ஃபோசைட்டுகள் (ஆ) மோனோசைட்டுகள்
(அ) லிம்ஃபோசைட்டுகள்: வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்பொருளை உருவாக்குகின்றன.
(ஆ) மோனாசைட்டுகள்: இவை விழுங்கு செல்களாதலால் பாக்டீரியவை விழுங்குகின்றன.

Question 4.
சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக. இதயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 80
இதயத்துடிப்பு பரவுதல்:

  1. மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சேர்ந்தது. இதயத் தசையில் காணப்படும் சிறப்புப் பகுதியான சைனோ ஏட்ரியல் கணு (SA) இதயம் சுருங்குவதைத் துவக்குகிறது. இது வலது ஏட்ரிய சுவரில் உள்ள மேற்பெருஞ்சிரைத் துளையின் அருகில் காணப்படுகிறது.
  2. SA கணுவானது மேற்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் காணப்படுகிறது. இது மெல்லிய தசை நாரிழைகளால் ஆனது.
  3. SA கணுவானது இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது. ஏனெனில் இது இதயத்துடிப்புகளுக்கான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது.
  4. சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது.
  5. SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு பரவுகிறது. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது.

Question 5.
இரத்தத்தின் பணிகளை பட்டியலிடுக. [Qy-2019]
விடை:
இரத்தத்தின் பணிகள் :

  1. சுவாச வாயுக்களைக் கடத்துகிறது (ஆக்சிஜன் மற்றும் CO2)
  2. செரிமானம் அடைந்த உணவுப் பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.
  3. ஹார்மோன்களைக் கடத்துகிறது.
  4. நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அம்மோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவறைறைக் கடத்துகிறது.
  5. நோய்தாக்குலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
  6. உடலின் வெப்பநிலை மற்றும் pH-ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கு ஊடகமாக செயல்படுகிறது.
  7. உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கிறது.

IX. கூற்று மற்றும் காரணம் கூறுதல்.

வழிமுறைகள் : கீழ்கண்ட கேள்வியில் கூற்று (A) மற்றும் அதற்குரிய காரணம் (R) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான பதிலை குறிப்பிடுக.
(அ) கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
(ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் காரணம் அந்த கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
(இ) (A) சரியாக இருந்து காரணம் (R) மட்டும் தவறு.
(ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

Question 1.
கூற்று (A): சுவாச வாயுக்களை கடத்துவதில் RBC முக்கியப் பங்கு வகிக்கின்றது.
காரணம் (R): RBC-ல் செல் நுண்ணுறுப்புகளும் உட்கருவும் காணப்படுவதில்லை .
விடை:
(அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று (A): ‘AB’ இரத்த வகை உடையோர் “அனைவரிடமிருந்தும் இரத்தத்தை பெறுவோராக” கருதப்படுகிறார்கள். ஏனெனில், அவர்கள் அனைத்து வகை இரத்தப் பிரிவினரிடமிருந்தும் இரத்தத்தினைப் பெறலாம்.
காரணம் (R): ‘AB’ இரத்த வகையில் ஆன்டிபாடிகள் காணப்படுவதில்லை
விடை:
(அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

VIII. உயர் சிந்தனை வினாக்கள் :

Question 1.
உலர்ந்த தாவரப்பொருளை நீரில் வைக்கும் போது உப்பிவிடும். இதற்கான நிகழ்ச்சி என்ன? வரையறை செய்க.
விடை:

  1. உலர்ந்த தாவரப் பொருளை நீரில் வைக்கும்போது, நீரினை உறிஞ்சி அது உப்புகின்ற நிகழ்ச்சி உள்ளீர்த்தல் எனப்படும்.
  2. எடுத்துக்காட்டாக உலர் விதைகள் மற்றும் உலர் திராட்சை நீரை உறிஞ்சி உப்பிவிடும். ஆனால் நீரில் கரையாது.
  3. உள்ளீர்த்தல் என்ற நிகழ்ச்சி முளைக்கும் விதைகளில் நடைபெறவில்லை என்றால் இளம் நாற்றுக்கள் விதைகளிலிருந்து வெளிவர இயலாது.

Question 2.
இடது வெண்ட்ரிக்கிள் சுவரானது மற்ற அறைகளின் சுவர்களைவிட தடிமனாக இருப்பது ஏன்?
விடை:
இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்து காணப்படுகின்றன.

Question 3.
இதய ஒலியைக் கண்டறிய மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்துவது ஏன்?
விடை:

  1. மனித உடலின் உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளைக் கண்டறிய ஸ்டெத்தாஸ்கோப் பயன்படுகிறது. ஸ்டெத்தாஸ்கோப்பினை மார்புப் பகுதியில் வைத்து இதயத்தின் ஒலியினைக் கேட்டறியலாம்.
  2. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் உள்ளதைத் தெரிந்து கொண்டு நோய்களை அடையாளம் கண்டறிய உதவும் சாதனமாகும். நவீன மின்னணு ஸ்டெத்தாஸ்கோப் மிகவும் துல்லியமானது.

Question 4.
நுரையீரல் தமனி மற்றும் நுரையீரல் சிரை ஆகியவை சாதாரண தமனி மற்றும் சிரை ஆகியவற்றின் பணிகளோடு ஒப்பிடும் போது எவ்வாறு வேறுபடுகின்றன?
விடை:

  1. சாதாரண தமனி ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தத்தினையும், சாதாரண சிரை ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தினையும் எடுத்துச் செல்கிறது.
  2. நுரையீரல் தமனி மட்டுமே தமனிகளில் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கிறது.
  3. இவை ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தினை இதயத்திலிருந்து நுரையீரலுக்கு சுத்தப்படுத்த எடுத்துச் செல்கிறது.
  4. இதைப் போல் நுரையீரல் சிரை மட்டுமே சிரைகளில் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்துச் செல்கிறது.

Question 5.
நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல். விளக்குக. [PTA-3]
விடை:

  1. நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல். ஏனெனில் நீராவிப் போக்கு தாவரங்களில் தவிர்க்க முடியாத ஒரு செயல். ஆனால் தீங்கு செயலுக்கு சாத்தியமே.
  2. நீர் ஆவியாக வெளியேற்றப்படுவதால் இலையின் பரப்புகள் உலர்ந்து விட நேரிடும். மேலும் தாவரமானது இறக்க நேரிடும். மேலும் தாவரங்களின் வளர்ப்பு வீதம் குறைந்து பொருளாதார சீர்கேடு உண்டாகும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
வேரின் ………….. அமைப்பானது நீரை உறிஞ்ச உதவுகிறது.
அ) வேர்த்தூவி
ஆ) கியுட்டிக்கிள்
இ) புளோயம்
ஈ) வேர்த்தொப்பி
விடை:
(அ) வேர்த்தூவி]

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
நவீன உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
அ) லேண்ட்ஸ்டீ னர்,
ஆ) வீனர்
இ) வில்லியம் ஹார்வி
ஈ) ஹிஸ்
விடை:
இ) வில்லியம் ஹார்வி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

4 மதிப்பெண்கள்

Question 1.
மனித இதயத்தின் வெளிப்புற அமைப்பை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும். [Sep-20]
விடை:
மனித இதயத்தின் வெளிப்புற அமைப்பு :
Samacheer Kalvi 10th Science Guide Chapter 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 90

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

10th Science Guide உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 

Question 1.
அட்டையின் இடப்பெயர்ச்சி …………. மூலம் நடைபெறுகிறது.
அ) முன் ஒட்டுறுப்பு
ஆ) பக்கக் கால்கள்
இ) சீட்டாக்கள்
ஈ) தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
விடை:
ஈ) தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்

Question 2.
அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
ஆ) புரோகிளாட்டிடுகள்
இ) ஸ்ட்ரோபிலா
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

Question 3.
அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
அ) கழிவு நீக்க மண்டலம்
ஆ) நரம்பு மண்ட லம்
இ) இனப்பெருக்க மண்டலம்
ஈ) சுவாச மண்டலம்
விடை:
ஆ) நரம்பு மண்டலம்

Question 4.
அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
அ) வாய்
ஆ) வாய்க்குழி
இ) தொண்டை
ஈ) தீனிப்பை
விடை:
இ) தொண்டை

Question 5.
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
அ) 23
ஆ) 33
இ) 38
ஈ) 30
விடை:
ஆ) 33

Question 6.
பாலூட்டிகள் ………………விலங்குகள்
அ) குளிர் இரத்த
ஆ) வெப்ப இரத்த
இ) பாய்கிலோதெர்மிக்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) வெப்ப இரத்த

Question 7.
இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
அ) ஓவிபேரஸ்
ஆ) விவிபேரஸ்
இ) ஓவோவிவிபேரஸ்
ஈ) அனைத்தும்
விடை:
ஆ) விவிபேரஸ்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 10

Question 1.
………….. மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.
விடை:
கடைசி 7 (அ) 27 முதல் 33 வரை உள்ள

Question 2.
ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது …………பல்லமைப்பு எனப்படும்.
விடை:
இருமுறை தோன்றும்

Question 3.
அட்டையின் முன் முனையிலுள்ள கதுப்பு போன்ற அமைப்பு ………….. எனப்படும்.
விடை:
முன் ஒட்டுறிஞ்சி (அ)வாய் ஒட்டுறிஞ்சி

Question 4.
இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு …………. என அழைக்கப்படுகிறது. [PTA-5]
விடை:
இரத்த உறிஞ்சிகள் (அ) சாங்கிவோரஸ்

Question 5.
…………….. நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தடுக்கிறது.
விடை:
சிறுநீரகம்

Question 6.
முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ……..
விடை:
37 இணைகள்

III. சரியா? தவறா? எனக் கண்டறிக. தவறானக் கூற்றை சரியானதாக மாற்றுக.

Question 1.
இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிபாரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான விடை: இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.

Question 2.
விந்து நாளம் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது. [PTA-6]
விடை:
தவறு.
சரியான விடை: விந்து நாளம் விந்து வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

Question 3.
முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப் பகுதி டயாஸ்டீமா எனப்படும். [PTA-6]
விடை:
தவறு.
சரியான விடை: முயலின் வெட்டும் பற்களுக்கும் முன் கடைவாய்ப்பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.

Question 4.
முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்புப் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது. விடை:
தவறு.
சரியான விடை: முயலின் பெருமுளை அரைக்கோளங்கள் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்புப் பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.

IV. பொருத்துக.

கலம் 1-ஐ கலம் II மற்றும் III உடன் சரியாகப் பெருத்தி விடையைத் தனியே எழுதுக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 50
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 60

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

Question 1.
ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயரை எழுதுக.
விடை:
ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயர் இந்தியக் கால்நடை அட்டை.

Question 2.
அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது? [PTA-1]
விடை:
அட்டை தோல் மூலம் சுவாசிக்கிறது.

Question 3.
முயலின் பல் வாய்பாட்டினை எழுதுக.
விடை:
முயலின் பல் வாய்பாடு Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 61

Question 4.
அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன?
விடை:
அட்டையின் உடலில் 11 இணை விந்தகங்கள் உள்ளன.

Question 5.
முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது? [PTA-6; Qy-2019]
விடை:
முயலின் வெட்டும் பற்களுக்கும் முன் கடைவாய்ப்பற்களுக்கும் இடையே உருவாகும் இடைவெளி டயாஸ்டீமா எனப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

Question 6.
இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை?
விடை:
நுரையீரல்கள் இரு சுவாசக் கிளைகளுடன் இணைந்துள்ள உறுப்பாகும்.

Question 7.
அட்டையின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் செயல்படுகிறது ?
விடை:
தசையாலான தொண்டை மூலம் அட்டை இரத்தத்தை உறிஞ்சுகிறது.

Question 8.
CNS-ன் விரிவாக்கம் என்ன?
விடை:
CNS என்பது Central Nervous System (முயலின் மைய நரம்பு மண்ட லமாகும்).

Question 9.
முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைப்பு எனப்படுகிறது?(PTA-4)
விடை:
முயலின் பற்கள் நான்கு வகைகளாக காணப்படுவதால் அவை ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைப்பு எனப்படுகிறது.

Question 10.
அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது? (PTA-2)
விடை:
அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y வடிவ காயத்தை உண்டாக்கிய பின் அதன் தசையால் ஆன தொண்டை இரத்தத்தினை உறிஞ்சுகிறது.

VI. குறுகிய விடையளி.

Question 1.
முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன்? [PTA-4, Sep.20]
விடை:
மூச்சுக் குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குறுந்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன.

Question 2.
அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக. [GMQP-2019]
விடை:
அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகள்:

  1. தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.
  2. உடலின் இரு முனைகளிலும் உள்ள ஓட்டுறிஞ்சிகள் அட்டையை விருந்தோம்பியுடன் உறுதியாக இணைத்துக் கொள்ளப் பயன்படும் கவ்வும் உறுப்புகளாகச் செயல்படுகின்றன.
  3. அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்றுதாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y – வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.
  4. உமிழ் நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படும் ஹிருடின் என்ற பொருள் இரத்தத்தை உறையவிடுவதில்லை. எனவே தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
  5. பக்கக் கால்களும் மயிர்க் கால்களும் காணப்படுவதில்லை. ஏனெனில் இவ்வுறுப்புகள் எந்த வகையிலும் தேவையில்லை.
  6. தீனிப்பையில் இரத்தம் சேமிக்கப்படுகிறது. இது அட்டைக்கு பல மாதங்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதன் காரணமாக சீரண நீரோ, நொதிகளோ அதிக அளவில் சுரக்க வேண்டிய தேவையில்லை.

VII. விரிவான விடையளி.

Question 1.
அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது?
விடை:
அட்டையின் சுற்றோட்ட மண்டலம் :

(i) இரத்த உடற்குழி மண்டலம் மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது. உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை. இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்த உடற்குழி திரவமானது ஹீமோகுளோபினைக் கொண்டுள்ளது.

(ii) சுற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன. ஒருகால்வாய் உணவுப்பாதையின் மேல் புறமாகவும், மற்றொரு கால்வாய் உணவுப் பாதையின் கீழ்ப்புறமாகவும் அமைந்துள்ளது. மற்ற இரு கால்வாய்களும் உணவுப்பாதையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இவ்விரு கால்வாய்களும் உட்புறம் வால்வுகளைக் கொண்டு, இதயம் போன்று செயல்படுகின்றன. நான்கு
கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 26 ஆவது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

Question 2.
அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக. [PTA-5]
விடை:
இடப்பெயர்ச்சி
அட்டை,

(i) தளத்தில் வளைதல் அல்லது ஊர்தல் முறையிலும்,
(ii) நீரில் நீந்துதல் முறையிலும் இடப்பெயர்ச்சி செய்கிறது.

(i) வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்: இவ்வகை இயக்கமானது தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல் மூலம் நடைபெறுகிறது. இவ்வியக்கத்தின் போது ஒட்டிக்கொள்வதற்கு இரு ஒட்டுறிஞ்சிகளும் உதவுகின்றன.

(ii) நீந்துதல் இயக்கம் :
அட்டையானது நீரில் மிகுந்த செயலாக்கத்துடன் நீந்தி, அலை இயக்கத்தை மேற்கொள்கிறது.

Question 3.
முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக. [Qy-2019]
விடை:
முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 95

  1. முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம் ஓரிணை விந்தகங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நாளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  2. விந்தகங்கள் விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன. விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும், தோலாலான விதைப்பைகளினுள் அமைந்துள்ளன.
  3. ஒவ்வொரு விந்தகமும் விந்து நுண்குழல்கள் என்ற சுருண்ட குழல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
  4. இக்குழல்களில் விந்து செல்கள் முதிர்ச்சியடையும் போது, அவை சேகரிக்கும் நாளங்களில் தேக்கப்பட்டு, எபிடிடைமிசுக்குக் கடத்தப்படுகின்றன. இருபக்க விந்து நாளங்களும் சிறுநீர்ப்பைக்கு சற்று கீழே சிறுநீர் வடிகுழாயில் இணைகின்றன. சிறுநீர் வடிகுழாய் பின்னோக்கி சென்று, ஆண்குறியில் சேர்கிறது.
  5. இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் மூன்று துணைச் சுரப்பிகள் உள்ளன. அவை முறையே புராஸ்டேட் சுரப்பி, கௌப்பர் சுரப்பி மற்றும் கழிவிடச் சுரப்பிகள் ஆகும்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
அர்ஜூன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்ததால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்ற போது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கொடூரமாக இருப்பதைக் கண்ட அர்ஜூன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும் போதே, அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும்?
விடை:
மருத்துவர் அர்ஜுனுக்கு பின்வருமாறு விளக்கமளித்தார்:

  1. அட்டைகள் ஹிருடின் என்ற புரதத்தைச் சுரப்பதன் மூலம் இரத்த உறைவைத் தடுக்கின்றன.
  2. மேலும் விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்க பொருளைச் செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை. நீண்ட நேரத்திற்கு பின்னரே அட்டை கடிந்திருப்பதை நாம் உணரலாம்.

Question 2.
சைலேஷ் தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில் சில முயல்களும் – உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும் போது அவற்றின் பற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம் கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா? விவரி.
விடை:

  1. சைலேஷ் முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயுள்ள இடைவெளிப்பகுதியை காண்கிறான்.
  2. அவன் தாத்தா அது பல் இடைவெளி அல்லது டயாஸ்டீமா எனக் கூறுகிறார். இந்த இடைவெளியானது கோரைப்பற்கள் வளரும் பகுதி. கோரைப்பற்கள் முயலுக்கு கிடையாது. எனவே இடைவெளி காணப்படுவதாகக் கூறினார்.
  3. மேலும் அவை மாமிச உண்ணிகளுக்கு மட்டுமே வளருவதாகவும் கூறினார். இந்த பல் இடைவெளியானது மெல்லும் போதும் அரைக்கும் போதும் உணவைக் கையாளுவதற்கு பயன்படுவதாகக் கூறினார்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

IX. மதிப்பு சார் வினாக்கள்

Question 1.
அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை ஏன்?
விடை:

  1. அட்டை கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளில் இரத்தத்தினை உணவாகப் பெறுகிறது. மேலும் இந்த இரத்தமானது வயிற்றுக்கு சொட்டு சொட்டாக அனுப்பப்படுகிறது.
  2. புரதச் சீரண நொதி மூலம் வயிற்றில் சீரணம் நடைபெறுகிறது.
  3. செரிக்கப்பட்ட இரத்தத்தை குடல் மெதுவாக உறிஞ்சிக்கொள்கிறது.
  4. சீரணமாகாத உணவான இரத்தம், தீனிப்பை அறைகளிலும் குடல் வாலிலும் சேமிக்கப் படுகின்றன. இது பல மாதங்களுக்கு அட்டைக்கு ஊட்டச்சத்தினை அளிக்கிறது.
  5. எனவே அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை.

Question 2.
முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற்போல் எவ்வாறு அமைந்துள்ளது? [PTA-3]
விடை:

  1. முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
  2. முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என அழைக்கப்படுகிறது.
  3. மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவைக் கையாளுவதற்கு இந்த பல் இடைவெளி பயன்படுகிறது.
  4. வாய்க்குழியின் தளப்பகுதியில் தசையாலான நாக்கு உள்ளது. தாடைகளில் பற்கள் உள்ளன.
  5. மெல்லிய சுவருடைய குடல்வால் நீட்சி, சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்குமிடத்தில் காணப்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா, செல்லுலோசைச் செரிக்க உதவுகிறது.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
முயலின் உடல் வெப்பநிலையை பராமரிக்க அதன் தோலில் அமைந்துள்ள சுரப்பிகள் யாவை? (PTA-3)
விடை:
முயலின் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் உதவுகின்றன.

அரசு தேர்வு வினா-விடை

1. மதிப்பெண்

Question 1.
முயலில் இந்த பற்கள் காணப்படுவதில்லை.
அ) வெட்டும் பற்கள்
ஆ) கோரைப் பற்கள்
இ) முன்கடைவாய் பற்கள்
ஈ) பின்கடைவாய் பற்கள் [Qy-2019]
விடை:
ஆ) கோரைப் பற்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

10th Science Guide தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ………… பகுதியில் காணப்படுகிறது.
அ) புறணி
ஆ) பித்
இ) பெரிசைக்கிள்
ஈ) அகத்தோல்
விடை:
ஈ) அகத்தோல்

Question 2.
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலைகள்
ஈ.) மலர்கள்
விடை:
ஆ) தண்டு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

Question 3.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது …………. எனப்படும்.
அ) ஆரப்போக்கு அமைப்பு
ஆ) சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
இ) ஒன்றிணைந்தவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) ஒன்றிணைந்தவை

Question 4.
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது [GMQP-2019; Sep.20]
அ) கார்போஹைட்ரேட்
ஆ) எத்தில் ஆல்கஹால்
இ) அசிட்டைல் கோ.ஏ
ஈ) பைருவேட்
விடை:
ஆ) எத்தில் ஆல்கஹால்

Question 5.
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது [PTA-3; Qy-2019]
அ) பசுங்கணிகம்
ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
இ) புறத்தோல் துளை
ஈ) மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
விடை:
ஆ) மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)]

Question 6.
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது? [PTA-4]
அ) ATP யானது ADP யாக மாறும் போது
ஆ) CO2 நிலை நிறுத்தப்படும் போது
இ) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
ஈ) இவை அனைத்திலும்.
விடை:
இ) நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
புறணி இதனிடையே உள்ள து ……………
விடை:
எபிபிளமா மற்றும் அகத்தோல்

Question 2.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் காணப்படும் வாகுலார் கற்றை ………….
விடை:
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை

Question 3.
கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்……………
விடை:
சைட்டோ பிளாசம்

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் ……….. லிருந்து கிடைக்கிறது.
விடை:
நீர்

Question 5.
செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை …..
விடை:
மைட்டோகாண்டிரியா

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்.
விடை:
தவறு.
சரியான கூற்று: தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்.

Question 2.
தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

Question 3.
ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பிரியம் காணப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இருவித்திலை தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.

Question 4.
இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இருவித்திலைத் தாவர இலையின் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.

Question 5.
இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.
விடை:
சரி.

Question 6.
காற்று சுவாசத்தைவிட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைவான ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 30

விடை:
1-இ,
2- ஈ,
3-அ,
4-உ,
5-ஆ

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

Question 1.
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
விடை:
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்திருந்தால், அதற்கு ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்று பெயர்.

Question 2.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
விடை:
ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான கார்பன், வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடிலிருந்து பெறப்படுகிறது.

Question 3.
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது? (PTA-5)
விடை:
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி கிளைக்காலிஸிஸ் ஆகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

Question 4.
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரண மடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
விடை:
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரண மடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் காற்றில்லா சுவாசம்.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
இருவித்திலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
விடை:

  1. அகத்தோலுக்கு உட்புறமாக அமைந்த தண்டின் மையப்பகுதி ஸ்டீல் ஆகும். இதில் பெரிசைக்கிள், வாஸ்குலார் கற்றைகள் மற்றும் பித் காணப்படுகின்றன.
  2. வாஸ்குலார் கற்றைகள் : வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை, திறந்தவை, மற்றும் உள்நோக்கு சைலம் கொண்டவை.

Question 2.
இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
இலையிடைத்திசு: மேல்புறத் தோலுக்கும் கீழ்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும். இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இருவகை செல்கள் உள்ளன.

  1. பாலிசேட் பாரன்கைமா: மேல்புறத் தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள், அதிக பசுங்கணிகங்களுடன் காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச்சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.
  2. ஸ்பாஞ்சி பாரன்கைமா: இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோளவடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.

Question 3.
ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 60

Question 4.
மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
விடை:
தாவரங்களில் உள்ள திசுத் தொகுப்புகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தியுள்ளனர். அவை

  1. மேல் திசுத்தொகுப்பு அல்லது புறதோல் திசுத்தொகுப்பு.
  2. அடிப்படை அல்லது தளத்திசு தொகுப்பு.
  3. வாஸ்குலார் திசுத்தொகுப்பு.

Question 5.
1 ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது? [PTA-3]
விடை:
ஒளிச்சேர்க்கை:

  1. ஒளிச்சேர்க்கை என்பது தற்சார்பு ஊட்ட உயிரினங்களான, ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாகும்.
  2. இந்த நிகழ்ச்சியில் கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால், சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தில் கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது.
  3. இந்நிகழ்ச்சியின் போது ஆக்ஸிஜன் வெளியேற்றப்படுகிறது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 66
    குளோரோபில் கார்பன் டை ஆக்சைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்
  4. ஒளிச்சேர்க்கை நடைபெறும் இடங்கள்:
    பசுந்தாவரங்களில் ஒளிச்சேர்க்கையானது இலைகள், பசுமையான தண்டுகள் மற்றும் மலர் மொட்டுகள் ஆகிய உறுப்புகளில் நடைபெறுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

Question 6.
ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
விடை:

  1. ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தில் உள்ளே நடைபெறுகிறது. ஒளிசார்ந்த வினை அல்லது ஒளிவினை பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது.
  2. இந்நிகழ்வு (ஒளிவினை) சூரிய ஒளியின் முன்னிலையில் தைலக்காய்டு சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச் சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH,-வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள் வினைக்குப் பயன்படுகின்றன.
  3. ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வின் போது ஒளிசார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH, உதவியுடன் CO2 ஆனது, கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
  4. எனவே, ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஒளிவினை நடைபெற வேண்டும்.

Question 7.
ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 68
கார்பன்டை ஆக்சைடு + நீர் → குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன்

VII. விரிவான விடையளி.

Question 1.
வேறுபாடு தருக.
அ. ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர் [Sep.20]
ஆ. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் (GMQP-2019)
விடை:
அ) ஒரு வித்திலைத் தாவர வேர் மற்றும் இரு வித்திலைத் தாவர வேர்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 80

ஆ) காற்று சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் வேறுபாடு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 85

Question 2.
காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன ? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
விடை:
காற்று சுவாசத்தின் படிநிலைகள் :
அ. கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு):

  1. இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும்.
  2. இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது.
  3. இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.

ஆ. கிரப்சுழற்சி :

  1. இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம் – matrix).
  2. கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும்.
  3. இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.

இ) எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:

  1. மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது.
  2. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2 வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணமடைகின்றன.
  3. இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP யால் எடுத்துக் கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது.
  4. இது ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும்.
  5. இந்நிகழ்ச்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக் கொண்டு நீராக (H2O) ஒடுக்கமடைகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

Question 3.
ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விருநிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 86
ஈடுபடும் மூலப்பொருட்கள் : ஒளி சார்ந்த வினை – ஒளிச்சேர்க்கை நிறமி, சூரிய ஒளி ஒளிசாரா வினை – ATP, NADPH2, CO2
இறுதிப்பொருட்கள் : ஒளி சார்ந்த வினை – ATP, NADPH2 ஒளிசாரா வினை – கார்போஹைட்ரேட்
நடைபெறும் இடம் : ஒளிசார்ந்தவினை – கிரானாவில் நடைபெறுகிறது. ஒளிசாரா வினை – ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்.
அ) ஒளிவினையின் போதும், இருள் வினையின் போதும் மனிதனுக்கு தேவையான முக்கிய பொருள்கள் கிடைக்கின்றன. அவை யாவை? (PTA-5)
ஆ) ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடு பொருட்கள் : இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றன. அந்த வினைபடு பொருட்களை குறிப்பிடுக.
விடை:
அ)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 87
ஆ) வினைபடுபொருள்கள் : சூரிய ஒளி, நீர், ஒளிச்சேர்க்கை நிறமி, ATP, CO2 மற்றும் NADPH2

Question 2.
பசுங்கணிகத்தின் எந்தப்பகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?
விடை:

  1. ஒளிச்சார்ந்த செயல் பசுங்கணிகத்தின் கிரானா பகுதியில் நடைபெறுகிறது.
  2. கால்வின் சுழற்சி பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
வாஸ்குலார் கற்றை என்றால் என்ன? [PTA-1]
விடை:
சைலம் மற்றும் புளோயம் திசுக்களைக் கொண்டுள்ள கற்றைகள் வாஸ்குலார் கற்றைகள் எனப்படும். சைலம் நீர் மற்றும் கனிமங்களை கடத்துகிறது. புளோயம் உணவுப் பொருள்களை கடத்துகிறது.

4 மதிப்பெண்கள்

Question 1.
ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றையின் பல்வேறு வகைகளைப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க. (7 Marks) (PTA-4)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 90
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 91

Question 2.
இருவித்திலைத் தாவர வேரின் உள்ளமைப்பின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க. [PTA-6)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 95

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

5th Social Science Guide கல்வி உரிமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
_____________ என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படியாகும்.
அ. கல்வி
ஆ. ஆய்வு
இ. அகழ்வராய்ச்சி கல்வி
விடை:
அ. கல்வி

Question 2.
____________ விட மேம்பட்டதாகும்.
அ. எண் கணிதம்
ஆ. எழுத்தறிவு
இ. மேலே உள்ள அனைத்தும்
விடை:
இ. மேலே உள்ள அனைத்தும்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 3.
“கல்வி என்பது மனிதனுள் ஏற்கனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு” என்பது ____________ இன் பிரபலமான கூற்று ஆகும்.
அ. மகாத்மா காந்தி
ஆ. முனைவர்.இராதாகிருஷ்ணன்
இ. சுவாமி விவேகானந்தர்
விடை:
இ. சுவாமி விவேகானந்தர்

Question 4.
________________ குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.
அ. எழுத்தறிவு உரிமைச் சட்டம்
ஆ. கல்வி உரிமைச் சட்டம்
இ. பள்ளி உரிமைச் சட்டம்
விடை:
ஆ. கல்வி உரிமைச் சட்டம்

Question 5.
கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு ______________ ஐ வடிவமைத்துள்ளது.
அ. தேசிய கல்வி கொள்கை
ஆ. தொடக்கக் கல்வி தொடர்பான தேசிய கொள்கை
இ. எழுத்தறிவுக்கான தேசிய கொள்கை
விடை:
அ. தேசிய கல்வி கொள்கை

II. பொருத்துக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 2

III. சரியா தவறா?

Question 1.
ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 2.
சமூகம், சூழ்நிலை மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது.
விடை:
சரி

Question 3.
பள்ளி உரிமை சட்டம் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தின் முறைகளை விவரிக்கிறது.
விடை:
தவறு

Question 4.
ஒருவரைக் கல்வி அறிவு உடையவராக மாற்றுவதற்கான முதல்படியாக எண் கணிதம் விளங்குகிறது.
விடை:
தவறு

Question 5.
முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்ட திட்டம் இலவச மதிய உணவுத் திட்டமாகும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
விடை:
கல்வி என்பது, ஒருவர் பெற்ற எழுத்தறிவை மட்டும் குறிப்பதன்று. இது எழுத்தறிவை விட மேம்பட்டதாகும். கல்வியின் மூலம், காரணத்தை ஆய்ந்து அறிதல், வாழ்வியல் திறன்களை வளர்த்தல், எது சரி, எது தவறு என்பதனை அறிதல், ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து வாழ்தல் ஆகியவற்றை அறிந்து கொள்கிறோம்.

Question 2.
கல்வி உரிமைகள் குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை:
ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு. இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்வதற்கு (Ensure) கல்வி உரிமைச் சட்டம் (RTE) உள்ளூர் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெவ்வேறு பொறுப்புகளை அளித்துள்ளது.

6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கல்வி உரிமைச் சட்டம் (2009) விவரிக்கிறது.

Question 3.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கு என்ன?
விடை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

  • இந்தத் திட்டத்தின் நோக்கம்
  • தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்
  • 14 வயது வரையிலான குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச் செய்தல்.
  • கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.

Question 4.
தேசிய கல்வி கொள்கை பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது. தேசிய கல்வி கொள்கை தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலான அனைத்துக் கல்வி முறைகளையும் உள்ளடக்கியது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 5.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் இரண்டு கூறுகளைப் பற்றி எழுதுக.
விடை:

  • தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
  • கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.

V. விரிவான விடையளிக்க.

Question 1.
இந்தியக் கல்வி முறை பற்றி எழுதுக.
விடை:
1. குருகுலம் என்பது பண்டைய இந்தியாவில், பின்பற்றிக் கொண்டிருந்த கல்வி முறையாகும். குரு (ஆசிரியர்) மற்றும் ஷிஷ்யா (மாணவர்) ஆசிரமத்தில் வசித்து வந்தனர்.

2. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்கவும் 2001ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) தொடங்கப்பட்டது.

3. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெற வழி வகுக்கிறது.

4. 2018 ஆம் ஆண்டில் மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (SS) அறிமுகப்படுத்தப்பட்டது.

5. 2019ம் ஆண்டு தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை கல்வியை மேம்படுத்த தேசியக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

Question 2.
கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகள்

  • தொடக்கக் கல்வி நிறைவடையும் வரை, எந்த மாணவரும்
    பள்ளியிலிருந்து நிறுத்தப்படுவதில்லை.
  • அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு இருபத்தைந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • கல்வியின் தரத்தில் முன்னேற்றம்
  • ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவேண்டும்.
  • மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நிதி பகிரப்படும்.

Question 3.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் குறிக்கோள்கள்

  • தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின்
    கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.
  • கல்வி உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் ஆதரித்தல்.
  • பெண்கள் கல்வியில் கவனம் செலுத்துதல்.
  • மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.
  • கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

5th Social Science Guide கல்வி உரிமைகள் Additional Important Questions and Answers

Question 1.
குழந்தையின் வளர்ச்சிக்கான முதல்படி ____________ ஆகும்.
விடை:
கல்வி

Question 2.
கல்வியின் நோக்கம் வெறும் _____________ பெறுவது மட்டும் அல்ல.
விடை:
எழுத்தறிவைப்

Question 3.
கல்வி ______________ வளர்க்கிறது.
விடை:
ஞானத்தை

Question 4.
பண்டைய இந்தியாவில் _____________ என்ற கல்விமுறை பின்பற்றப்பட்டது.
விடை:
குருகுலம்

Question 5.
அன்றையக் கல்வி முறையில் குருவும் சிஷ்யர்களும் _____________ வசித்து வந்தனர்.
விடை:
ஆசிரமத்தில்

Question 6.
இலவச மற்றும் கட்டாயக் கல்வியை _____________ உறுதி செய்கிறது.
விடை:
கல்வி உரிமைச் சட்டம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 7.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் வயது வரம்பு ______________
விடை:
6 முதல் 14 வரை

Question 8.
சட்டமன்றப் பிரிவில் கல்வியானது ____________ பிரிவின் கீழ் வருகிறது.
விடை:
பொதுப் பட்டியல்

Question 9.
2019ஆம் ஆண்டு இந்திய அரசு வடிவமைத்தது ______________
விடை:
தேசிய கல்விக் கொள்கை

Question 10.
பெண்கல்வியில் கவனம் செலுத்துதல் _____________ திட்டத்தின் ஒரு குறிக்கோள் ஆகும்.
விடை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்

II. பொருத்துக

1. ஜூலை 15 – சுவாமி விவேகானந்தர்
2. 1968 ஆம் ஆண்டு – பண்டைய கல்விமுறை
3. 2009ஆம் ஆண்டு – முதல் தேசிய கல்வி கொள்கை
4. குருகுலம் – கல்வி வளர்ச்சி நாள்
5. அமெரிக்கச் சொற்பொழிவு – கல்வி உரிமைச் சட்டம்
விடை:
1. ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
2. 1968 ஆம் ஆண்டு – முதல் தேசிய கல்வி கொள்கை
3. 2009ஆம் ஆண்டு – கல்வி உரிமைச் சட்டம்
4. குருகுலம் – பண்டைய கல்விமுறை
5. அமெரிக்கச் சொற்பொழிவு – சுவாமி விவேகானந்தர்

5th Social Science Guide கல்வி உரிமைகள் InText Questions and Answers

பக்கம் 140 செயல்பாடு நாம் செய்வோம்

புதிருக்கு விடை காண்க
குறிப்புகள்
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள் 4

Question 1.
நான் அழுக்காக இருக்கும்பொழுது வெண்மையாகவும், தூய்மையாக இருக்கும்பொழுது கருப்பாகவும் இருப்பேன். நான் யார்?
விடை:
கரும்பலகை

Question 2.
நான் இளம் வயதில் உயரமாகவும், வயதாகும்போது குட்டையாகவும் இருப்பேன். நான் யார்?
விடை:
பென்சில்

Question 3.
உலர்ந்திருக்கும் பொழுது நான் ஈரமாக்கப்படுவேன். நான் யார்?
விடை:
துண்டு

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 3 கல்வி உரிமைகள்

Question 4.
எனக்குக் கழுத்து உண்டு. ஆனால், தலை இல்லை . நான் யார்?
விடை:
குடுவை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 2 வேளாண்மை Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 2 வேளாண்மை

5th Social Science Guide வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
________________ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.
அ. நீர்ப்பாசனம்
ஆ. வேளாண்மை
இ. அகழ்வராய்ச்சி
விடை:
ஆ. வேளாண்மை

Question 2.
______________ என்பவர் உணவு அல்லது மூலப் பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.
அ. மருத்துவர்
ஆ. ஆசிரியர்
இ. விவசாயி
விடை:
இ. விவசாயி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
_______________ வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
அ. வணிக
ஆ. கலப்புப் பொருளாதார
இ. தன்னிறைவு
விடை:
ஆ. கலப்புப் பொருளாதார

Question 4.
_______________ நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.
அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்
ஆ. மெட்ரோ நீர் வாரியம்
இ. யூனியன் குடிநீர் வாரியம்
விடை:
அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்

Question 5.
தமிழகத்தில் உள்ள ______________ மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
அ. கோயம்புத்தூர்
ஆ. சென்னை
இ. கடலூர்
விடை:
அ. கோயம்புத்தூர்

II. பொருத்துக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 1
விடை:
1. தோட்ட வேளாண்மை – ஒற்றைப் பணப் பயிர்
2. கலப்புப் பொருளாதார வேளாண்மை – விலங்குகளை வளர்ப்பது
3. வணிக வேளாண்மை – விற்பனை நோக்கம்
4. கிணற்று நீர்ப் பாசனம் – பழைமையான முறை
5. தன்னிறைவு வேளாண்மை – குடும்ப நுகர்வு

III. சரியா தவறா?

Question 1.
தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும்.
விடை:
சரி

Question 2.
தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன.
விடை:
தவறு

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண்பாசன முறையாகும்.
விடை:
சரி

Question 4.
தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
சரி

Question 5.
மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
வேளாண்மை என்றால் என்ன?
விடை:
வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும்.

Question 2.
விவசாயிகளைப் பற்றி எழுதுக.
விடை:
விவசாயி என்பவர் , உணவு அல்லது மூலப்பொருள்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார். இந்தியா, விவசாயிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பான்மையான இந்தியர்கள் நேரடியாகவோ, மறைமுகமகவோ விவசாய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்.

Question 3.
வேளாண்மையின் வகைகளைக் கூறுக.
விடை:
வேளாண்மையில் பல வகைகள் உள்ளன. * தன்னிறைவு வேளாண்மை * வணிக வேளாண்மை * தோட்ட வேளாண்மை * கலப்புப் பொருளாதார வேளாண்மை

Question 4.
கிணற்று நீர்ப் பாசனம் என்றால் என்ன?
விடை:
கிணற்றிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு நீரை வெளியேற்றுவது கிணற்று நீர்ப்பாசனம் எனப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் கிணற்று நீர்ப்பாசன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வகைப் பாசனம் மிகவும் மலிவான பாசன முறையாகும்.

Question 5.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
மத்திய நிலத்தடி நீர் வாரியம் நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

V. விரிவான விடையளிக்க

Question 1.
கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.
விடை:
தோட்ட வேளாண்மை :
ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப்பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவது தோட்ட வேளாண்மையாகும். எடுத்துக்காட்டுகள் : தேயிலை, காபி, இரப்பர்

கலப்புப் பொருளாதார வேளாண்மை :
கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது, பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமல்லாமல் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது. கலப்பு விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தவர்களாக உள்ளனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 2.
ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசனமுறைகளைப் பற்றி விவரி.
விடை:
தெளிப்பானை நீர்ப்பாசனம் :
தெளிப்பானை நீர்ப்பாசனம் என்பது மழைப்பொழிவு போன்ற நீர்ப்பாசன முறையாகும். குழாய்கள் மூலம் தெளிப்பான்கள் வழியாக நீர் மழை போன்று தெளிக்கப்படுகிறது.

சொட்டு நீர்ப் பாசனம் :
சொட்டு நீர்ப் பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். இம்முறையானது, நீர் – மற்றும் மண்ணின் ஊட்டச்சத்துகளைச் சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த நீர்ப்பாசன முறையில் நீரானது குழாய்களின் மூலம் தாவரங்களின் வேர்களில் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் மண்ணின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும்.இதனால், நீர் ஆவியாவது குறைகிறது.

Question 3.
தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.
விடை:
தமிழ்நாடு, வெவ்வேறு வேளாண் காலநிலைகள் மற்றும் மாறுபட்ட மண் வகைகளைக் கொண்டுள்ளது. இது பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்கள், தோட்டப் பயிர்கள், பூக்கள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் உற்பத்திக்கு ஏற்றதாகும். தமிழ்நாட்டில் தோட்டக்கலை வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறையாகும்.

இங்கு நெல் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி மாநிலத்தின் முக்கிய உணவாகும்.

அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் (கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, பச்சைப் பயறு, உளுத்தம் பருப்பு மற்றும் கொள்ளுப் பயறு) ஆகியவை முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.

பணப்பயிர்களில் பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள், காபி, தேயிலை, இரப்பர், தேங்காய், எள் மற்றும் மிளகாய் ஆகியவை அடங்கும்.

மாம்பழம் மற்றும் வாழைப்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர்கள் ஆகும்.

மல்லிகை, செவ்வந்திப் பூ, சாமந்திப் பூ மற்றும் ரோஜா ஆகியவை தமிழகத்தில் வளர்க்கப்படும் முக்கிய பூ வகைகளாகும்.

5th Social Science Guide வேளாண்மை Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா ஒரு ____________ நாடு.
விடை:
விவசாய

Question 2.
குடும்ப நுகர்வுக்கு மட்டும் பயன்படுவது ____________ வேளாண்மை ஆகும்.
விடை:
தன்னிறைவு

Question 3.
சந்தையில் விளைபொருள்களை விற்பதே _______________ வேளாண்மையின் நோக்கம் ஆகும்.
விடை:
வணிக

Question 4.
கலப்புப் பொருளாதார வேளாண்மையில் பயிர்களுடன் ______________ வளர்க்கப்படுகின்றன.
விடை:
விலங்குகளும்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 5.
விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கும் அரசு நிறுவனம் ______________ ஆகும்.
விடை:
இந்திய உணவுக் கழகம்

Question 6.
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையிலுள்ள தரகர்களை நீக்க _____________ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
விடை:
உழவர் சந்தையை

Question 7.
வடமேற்கு மற்றும் _______________ பருவ மழையின் மூலம் தமிழகத்திற்கு தண்ணீ ர் கிடைக்கிறது.
விடை:
தென்கிழக்குப்

Question 8.
_____________ நீர்ப்பாசனம் என்பது மிகப் பழமையானது.
விடை:
கிணற்று

Question 9.
வடஇந்தியாவில் அதிகம் பின்பற்றப்படுவது ______________ நீர்ப்பாசனம் ஆகும்.
விடை:
கால்வாய்

Question 10.
பசுமைப் புரட்சியின் தந்தை
விடை:
Dr. M.S. சுவாமிநாதன்

II. சுருக்கமாக விடை தருக

Question 1.
பயிர் உற்பத்தியில் மகசூல் அதிகரிக்கும் முறையின் பெயர் என்ன?
விடை:
பசுமைப் புரட்சி

Question 2.
மழைப் பொழிவு போன்ற நீர்ப் பாசன முறை எது?
விடை:
தெளிப்பானை நீர்ப்பாசனம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
பழங்கள், பூக்கள், அலங்காரத் தாவரங்கள் வளர்க்கும் அறிவியல் கலை எது?
விடை:
தோட்டக்கலை

Question 4.
தமிழகத்தின் முக்கியமான உணவு எது?
விடை:
அரிசி

Question 5.
தானியங்களும், பருப்பு வகைகளும் எவ்வகைப் பயிர்கள்?
விடை:
உணவுப் பயிர்கள்

Question 6.
பணப் பயிர்களுக்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
பருத்தி, கரும்பு, காபி, தேயிலை

Question 7.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?
விடை:
தஞ்சாவூர்

Question 8.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது?
விடை:
கோயம்புத்தூர்

Question 9.
தஞ்சாவூர் எங்கு அமைந்துள்ளது?
விடை:
காவிரி டெல்டாவில்

Question 10.
இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு

5th Social Science Guide வேளாண்மை InText Questions and Answers

பக்கம் 127. செயல்பாடு நாம் செய்வோம்

விவசாயிக்கு அவரின் பண்ணையைக் கண்டுபிடிக்க உதவுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 2
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 3

பக்கம் 131 செயல்பாடு நாம் செய்வோம்

(இழுவை, இயந்திரம், தூற்றி, விவசாயி)
பின்வருவனவற்றைக் கண்டுபிடிக்க.
Question 1.
நமக்காக உணவை உற்பத்தி செய்பவர்.
வி __ __ யி
விடை:
வசா

Question 2.
இது உழுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இ __ வை இ __ __ __ __ ம்
விடை:
ழு யந்திர

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
இது வைக்கோலில் இருந்து தானியங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தூ __ றி
விடை:
ற்

Question 4.
இந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் மாநிலம் எது?
விடை:
ஆந்திரப்பிரதேசம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
____________ கோட்டை விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது.
அ. உதயகிரி
ஆ. வேலூர்
இ. செஞ்சி
விடை:
ஆ. வேலூர்

Question 2.
திருமலை நாயக்கர் அரண்மனை ______________ யில் அமைந்துள்ளது.
அ. சேலம்
ஆ. திருமலை
இ. மதுரை
விடை:
இ. மதுரை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
உலகின் இடைக்கால கையெழுத்துப் பிரதி நூலகங்களில் ______________ மஹால் ஒன்றாகும்.
அ. சரஸ்வதி
ஆ. லட்சுமி
இ. துர்கா
விடை:
அ. சரஸ்வதி

Question 4.
பத்மநாபபுரம் அரண்மனை ____________ பில் அமைந்துள்ளது.
அ. ஊட்டி
ஆ. கன்னியாகுமரி
இ. சென்னை
விடை:
ஆ. கன்னியாகுமரி

Question 5.
_____________ கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அ. திண்டுக்கல்
ஆ. செஞ்சி
இ. தரங்கம்பாடி
விடை:
இ. தரங்கம்பாடி

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 2

III. சரியா தவறா?

Question 1.
தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 2.
வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன.
விடை:
சரி

Question 3.
திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Question 4.
ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின் மற்றொரு பெயராகும்.
விடை:
தவறு. (ஊமையன் கோட்டை என்பது திருமயம் கோட்டையின் மற்றொரு பெயராகும்)

Question 5.
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் யாவை?
விடை:
சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனைகளும், கோட்டைகளும் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

Question 2.
தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படும் தரங்கம்பாடி கோட்டை, தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் (Tranquebar) வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது.

இந்தக் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. கோட்டையின் மையப் பகுதியில் நான்கு குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத்தூண் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?
விடை:
செஞ்சிக் கோட்டை பல சிறப்பு அமைவுகளைக் கொண்டுள்ளது. அவை: திருமண மண்டபம், கோவில்கள், ஆனைக்குளம், களஞ்சியங்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.

Question 4.
திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறுகுறிப்பு வரைக.
விடை:
திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை நகரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

Question 5.
தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர் யார்? – அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் நாயக்க அரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது தஞ்சாவூர் மராத்தியரின் அதிகாரப்பூர்வ இல்லமாகத் திகழ்ந்தது.

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் ஒரு சுற்றுலாத்தலமாகும். இது மூன்று தனித்தனி பார்வையிடங்களைக் கொண்டுள்ளது. அவையாவன : அரண்மனை, கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி (Manuscript) நூலகம் (சரஸ்வதி மஹால்)

V. விரிவான விடையளிக்க

Question 1.
வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.
விடை:
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

தமிழ்நாட்டின் கோட்டைகளில், வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. இது ஆழமான மற்றும் அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளது. இந்த அகழி, ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருந்ததால் படையெடுப்பவர்கள் இதனைக் கடக்க அஞ்சினர்.

வேலூர்க் கோட்டை இராணுவக் கட்டடக்கலைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இது இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற கோபுரங்கள், உட்புற கோபுரங்களைவிடத் தாழ்வாக உள்ளன. 1799ஆம் ஆண்டில், 1 திப்பு சுல்தானின் குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்குச் சிறை வைக்கப்பட்டது. 1806ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது. வேலூர்க் கோட்டைக்குள் புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. வேலூர்க் கோட்டையின் உள்ளே முக்கியமான ஐந்து மஹால்கள் காணப்படுகின்றன,

அவையாவன: ஹைதர் மஹால், திப்பு மஹால், பேகம் மஹால், கண்டி மஹால், பாதுஷா மஹால்

Question 2.
திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.
விடை:
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள திண்டுக்கல் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டை திண்டுக்கல் மலைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

மைசூர் அரசின் படையெடுப்பில் இருந்து தங்கள் நாட்டைக் காக்கும் பொருட்டு, மதுரை நாயக்கர்களால் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது. கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை, இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக் கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.
விடை:
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று நினைவுச் சின்னமாகும். இது கல்குளம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.

பத்மநாபபுரம் அரண்மனை கேரள கட்டடக் கலையைக் கொண்டு மரத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது கலை மற்றும் கைவினைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல்வேறு பார்வையிடங்கள் உள்ளன.

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_________________, _____________ மற்றும் _____________ போன்ற அயல் நாட்டினர் இந்தியாவில் கோட்டைகளைக் கட்டினர்.
விடை:
டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

Question 2.
விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது _______________ ஆகும்.
விடை:
வேலூர்க் கோட்டை

Question 3.
1799ஆம் ஆண்டு _______________ குடும்பம் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது.
விடை:
திப்பு சுல்தானின்

Question 4.
வேலூர்க் கோட்டையில் _______________ உள்ளது.
விடை:
ஜலகண்டேஸ்வரர் கோயில்

Question 5.
மலைக் கோயில் என அழைக்கப்படுவது ______________ கோட்டையாகும்.
விடை:
திண்டுக்கல்

Question 6.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை _______________
விடை:
புனித ஜார்ஜ் கோட்டை

Question 7.
திருமயம் கோட்டை ______________ என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
ஊமையன் கோட்டை

Question 8.
சதுரங்கப்பட்டினம் கோட்டை _______________ உள்ளது.
விடை:
காஞ்சிபுரத்தில்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 9.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டை _______________ ஆகும்.
விடை:
செஞ்சிக்கோட்டை

Question 10.
டேனிஷ் கோட்டை என்பது ________________ கோட்டையைக் குறிக்கும்.
விடை:
தரங்கம்பாடி

II. பொருத்துக

1. தரங்கம்பாடி – சரஸ்வதி மஹால்
2. செஞ்சிக்கோட்டை – இராணுவக் கட்டடக்கலை
3. தஞ்சாவூர் கோட்டை – ஆனைக்குளம்
4. பத்மநாபபுரம் அரண்மனை – சரிவகம்
5. வேலூர்க் கோட்டை – கன்னியாகுமரி மாவட்டம்
விடை:
1. தரங்கம்பாடி – சரிவகம்
2. செஞ்சிக்கோட்டை – ஆனைக்குளம்
3. தஞ்சாவூர் கோட்டை – சரஸ்வதி மஹால்
4. பத்மநாபபுரம் அரண்மனை- கன்னியாகுமரி மாவட்டம்
5. வேலூர்க் கோட்டை – இராணுவக் கட்டடக்கலை

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் InText Questions and Answers

பக்கம் 113 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின்வரும் படங்களுக்குப் பெயரிடுக. (அரசர், அரசி, இளவரசர், இளவரசி)
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 4

பக்கம் 117 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின் வரும் பொருள்களை அவற்றின் பெயர்களுடன் இணைத்துக் காட்டுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 5
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 6

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

10th Science Guide கார்பனும் அதன் சேர்மங்களும் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C,H, அந்தச் சேர்மத்தின் வகை
அ) அல்கேன்
ஆ) அல்கீன்
இ) அல்கைன்
ஈ) ஆல்கஹால்
விடை:
ஆ) அல்கீன்

Question 2.
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?
அ) ஆல்டிஹைடு
ஆ) கார்பாசிலிக் அமிலம்
இ) கீட்டோன்
ஈ) ஆல்கஹால்
விடை:
ஈ) ஆல்கஹால்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 3.
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு …….
அ) ஆல்
ஆ) ஆயிக் அமிலம்
இ) ஏல்
ஈ) அல்
விடை:
இ) ஏல்

Question 4.
பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
அ) C3 H8 மற்றும் C4 H10
ஆ) C2 H2 மற்றும் C2 H4
இ) CH4 மற்றும் C3 H6
ஈ) C2H5 OH மற்றும் C4 H8 OH
விடை:
அ) C3 H8 மற்றும் C4 H10

Question 5.
C2H5 OH + 3O2 → 2CO2 + 3H2O என்ப து
(Sep.20)
அ) எத்தனால் ஒடுக்கம்
ஆ) எத்தனால் எரிதல்
இ) எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
ஈ) எத்தனேல் ஆக்சிஜனேற்றம்
விடை:
ஆ) எத்தனால் எரிதல்

Question 6.
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் …………
அ) 95.5%
ஆ) 75.5%
இ) 55.5%
ஈ) 45.5%
விடை:
அ) 95.5%

Question 7.
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
அ) கார்பாக்சிலிக் அமிலம்
ஆ) ஈதர்
இ) எஸ்டர்
ஈ) ஆல்டிஹைடு
விடை:
ஆ) ஈதர்

Question 8.
TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப்பொருளைக் குறிக்கிறது?
அ) தாது உப்பு
ஆ) வைட்டமின்
இ) கொழுப்பு அமிலம்
ஈ) கார்போஹைட்ரேட்
விடை:
இ) கொழுப்பு அமிலம்

Question 9.
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டை பற்றி தவறான கூற்று எது?
அ) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
ஆ) சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
இ) டிடர்ஜென்ட்டின் அயனி பகுதி – SO3Na+
ஈ) கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
விடை:
அ) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமாக அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் ……………… ஆகும்.
விடை:
வினைச் செயல் தொகுதி

Question 2.
அல்கைனின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு.
விடை:
CnH2n-2

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 3.
IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது (அடிப்படைச் சொல் / பின்னொட்டு / மின்னொட்டு).
விடை:
அடிப்படைச் சொல்

Question 4.
(நிறைவுற்ற / நிறைவுறா) …………. சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.
விடை:
நிறைவுறா

Question 5.
அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும்பொழுது ……….. (ஈத்தீன்/ ஈத்தேன்) கிடைக்கிறது.
விடை:
ஈத்தீன்

Question 6.
100% தூய ஆல்கஹால் ……….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
தனி ஆல்கஹால்

Question 7.
எத்தனாயிக் அமிலம் …………. லிட்மஸ் தாளை …………… ஆக மாற்றுகிறது.
விடை:
நீல, சிவப்பு

Question 8.
கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் …………. எனப்படும்.
விடை:
சோப்பாக்கல் வினை

Question 9.
உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்க ள் ………… (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.
விடை:
நேரான

III. பொருத்துக. (PTA-2)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 55

விடை:
1-இ,
2-ஈ,
3-உ,
4-ஆ,
5-அ

IV. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சரியான தெரிவோ அதனை தெரிவு செய்க.

i.
கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி.
அ) A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது.
ஆ) A சரி R தவறு
இ) A தவறு R சரி
ஈ) A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Question 1.
கூற்று A: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்க ள் சிறப்பாக செயல் புரிகின்றன. (PTA-4)
காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.
விடை:
அ) A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 2.
கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்.
காரணம் R: ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பை பெற்றுள்ளன.
விடை:
ஈ) A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல

V. சிறுவினாக்கள்

Question 1.
எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக. [PTA-2]
விடை:

  1. எளிய கீட்டோன்: அசிட்டோன்
  2. மூலக்கூறு வாய்ப்பாடு:
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 75

Question 2.
கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்பாடை எழுதுக.
1. புரப்பேன்
2. பென்சீன்
3. வளைய பியூட்டேன்
4. பியூரான்
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 76

Question 3.
எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக. (அல்ல து) ஆல்ஹால்களைக் கண்டறியும் சோதனையின் வினையைக் கூறுக. [Sep.20]
விடை:
எத்தனாலைக் காரங்கலந்த KMnO4 அல்லது அமிலங்கலந்த K2Cr2O7 கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது எத்தனாயிக் அமிலம் உருவாகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 79
இந்த வினையின் போது ஆரஞ்சு நிறமுடைய K2Cr2O7 பச்சையாக மாறுகிறது. எனவே, இது ஆல்கஹால்களைக் கண்டறியும் சோதனைக்கு பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 2.
டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுபடுத்துகின்றன? இம்மாசுபாட்டினை தவிர்க்கும் வழிமுறை (PTA-3)
விடை:

  1. சில டிடர்ஜெண்ட்களின் ஹைட்ரோ கார்பன் கிளை சங்கிலி தொடரை பெற்றிருக்கும்.
  2. தண்ணீ ரில் இருக்கும் நுண்ணுயிரிகளால் இவற்றை மக்கச் செய்ய இயலாது.
  3. இதனால் நீர் மாசடைந்து விடுகிறது.
  4. மிகக் குறைந்த அளவு டிடர்ஜென்ட்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டினை குறைக்கலாம். பாஸ்பேட் இல்லாத டிடர்ஜென்ட்களை பயன்படுத்தலாம்.

Question 3.
சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக. [Sep-20]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 80

VI. விரிவான விடையளி

Question 1.
படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.
விடை:
படிவரிசை:
(i) படிவரிசை என்பது ஒரே பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டையும் ஒத்த வேதிப் பண்புகளையும்
கொண்ட ஒரே தொகுதி அல்லது ஒரே வகையில் உள்ள கரிமச் சேர்மங்களைக் குறிப்பதாகும்.

படிவரிசை சேர்மங்களின் பண்புகள்:

  1. ஒரு படிவரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மெத்திலீன்-CH2 என்ற பொது வேறுபாட்டில் வேறுபடுகின்றன.
  2. ஒரு படி வரிசையில் உள்ள அனைத்து சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும், வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும்.
  3. ஒரு படிவரிசையிலுள்ள அனைத்து சேர்மங்களையும் ஒரே பொது வாய்ப்பாட்டினால் குறிப்பிட இயலும். (எ.கா) அல்கேன் -CnH2n+1
  4. எல்லாச் சேர்மங்களும் ஒத்த வேதிவினைகளில் ஈடுபடுகின்றன.
  5. எல்லாச் சேர்மங்களையும் ஒரே முறையில் தயாரிக்க இயலும்.

Question 2.
CH3 – CH2 – CH2 – OH என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.
விடை:
பிற வினைச் செயல் தொகுதி கரிமச் சேர்மங்களை பெயரிடுதல்
CH3 – CH2 – CH2 – OH

  1. படி 1: இது மூன்று கார்பன் இருக்கும் சங்கிலித் தொடர். எனவே அடிப்படைச் சொல் புரப் ஆகும்.
  2. படி 2: கார்பன்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை பிணைப்புகளாக இருப்பதால் ‘யேன்’ என்ற முதன்மை பின்னோட்டை சேர்க்க வேண்டும்.
  3. படி 3: கார்பன்சங்கிலியில் – OHதொகுதி இருப்பதால் இது ஒரு ஆல்கஹால். எனவே – OHதொகுதி அண்மையில் அமையும் விதமாக கார்பன் அணுவிலிருந்து எண்ணிடுதலைதொடங்கவேண்டும். (விதி 3)
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 85
  4. படி 4: OH தொகுதியின் இட எண் 1. எனவே இரண்டாம் நிலை பின்னொட்டாக 1 – ஆல் சேர்க்க
    வேண்டும். எனவே சேர்மத்தின் பெயர்
    புரப் + யேன் + (1-ஆல்) = புரப்பேன் -1-ஆல்

Question 3.
கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
விடை:
எத்தனால் தயாரிக்கும் முறை:
(i) தொழிற்சாலைகளில் கரும்புச் சாறின் கழிவுப் பாகிலிருந்து நொதித்தல் முறையில் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
(ii) கழிவுப்பாகு என்பது செறிவு மிகுந்த கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிகமாக்கும் பொழுது மீதமுள்ள ஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவமாகும்.
(iii) இதில் 30% சுக்ரோஸ் உள்ளது. இதை படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாது.

1. கழிவுப்பாகினை நீர்த்தல் :
கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு 8 லிருந்து 10 சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.

2. அம்மோனியம் உப்புகள் சேர்த்தல் :
நொதித்தலின் போது ஈஸ்ட்டிற்குத் தேவையான நைட்ரஜன் கலந்த உணவினைக் கழிவுப்பாகு கொண்டுள்ளது. நைட்ரஜன் அளவு குறைவாக இருப்பின், அம்மோனியம் சல்பேட் அல்லது அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உரமூட்டப்படுகிறது.

3. ஈஸ்ட்சேர்த்தல் :
படி 2-இல் கிடைக்கும் கரைசல் பெரிய நொதித்தல் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. கலவை 303K வெப்பநிலையில் சில நாட்களுக்கு வைக்கப்படுகிறது. அந்த நாட்களில் ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், மற்றும் சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 86
எத்தனால் நொதித்த நீர்மம் கழுவு நீர்மம் என அழைக்கப்படுகிறது.

4. கழுவு நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல் :
15 முதல் 18 சதவீதம் ஆல்கஹாலும் மீதிப்பகுதி நீராகவும் உள்ள நொதித்த நீர்மமானது பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. முக்கியப் பின்னப் பகுதியாகக் கிடைத்த எத்தனாலின் நீர்க்கரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது. இது எரிசாராயம் என அழைக்கப்படுகிறது. இக்கலவை சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் சுட்ட சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்டு 12 மணி நேரம் வைக்கப்படுகிறது. இக்கலவை மீண்டும் காய்ச்சி வடிக்கப்படும் போது தூய ஆல்கஹால் (100%) கிடைக்கிறது. இந்தத் தூய ஆல்கஹால் தனி ஆல்கஹால் எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 4.
கீழ்க்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
அ. NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்ஸிஜனேற்ற வினை
ஈ. எத்தனாலின் எரிதல் வினை
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 90

Question 5.
சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக. [PTA-6]
விடை:
சோப்பின் தூய்மையாக்கல் வினை

  1. ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதிப் பகுதிகளை பெற்றுள்ளன. இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினைபுரிகிறது.
  2. ஒரு முனை சிறிய தலை போன்ற கார்பாக்சிலேட் தொகுதி கொண்ட முனைவுள்ள பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரையுடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.
  3. முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது.
  4. முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக் கொள்கிறது.
  5. நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கி கொள்கிறது.
  6. நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது. சோப் அல்லது டிடர்ஜெண்டை நீரில் கரைக்கும் பொழுது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்த கொத்துகளாக (Micelles) மீசெல்ஸ் உருவாகிறது.
  7. இந்த கொத்துகளில் ஹைட்ரோகார்பன் சங்கிலி பகுதியானது, அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக்கொள்கிறது.
  8. இவ்வாறாக சோப்பின் முனைவற்ற பகுதி அழுக்கைச் சுற்றிக் கொள்கிறது.
  9. சோப்பின் கார்பாக்ஸிலேட் பகுதி, கொத்துகளை நீரில் கரையச் செய்கிறது. இவ்வாறாக அழுக்கு சோப்பினால் நீக்கப்படுகிறது.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O அதில் – OH இட எண் 2.
அ) அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
ஆ) IUPAC பெயரினை எழுதுக.
இ) இச்சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?
விடை:
அ) Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 96
ஆ) 2-பியூட்டனால் (அ) பியூட்-2-ஆல்
இ) நிறைவுற்றவை

Question 2.
ஒரு கரிமச் சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2. இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B-யை தருகிறது. [PTA-5]
அ) சேர்மம் A-யை கண்டறிக.
ஆ) சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
இ) இந்நிகழ்விற்கு பெயரிடுக.
விடை:
அ) எத்தனாயிக் அமிலம் (அசிட்டிக் அமிலம்)
ஆ) Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 97
இ) எஸ்டராதல் வினை

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
ஈத்தேனை விட ஈத்தீன் வினைதிறன் மிக்கது. ஏன்? (4 Marks) [PTA-1]
விடை:
ஈத்தீனில் வலிமை குறைந்த இரட்டை வேதிப்பிணைப்பு இருப்பதால் அதன் நிலைப்புத் தன்மை ஈத்தேனைவிடக் குறைவு. எனவே ஈத்தேனைவிட ஈத்தீன் வினைதிறன் மிக்கது.

4 மதிப்பெண்கள்

Question 2.
IUPAC விதிகளின்படி கீழ்காணும் சேர்மங்களுக்கான அமைப்பு வாய்ப்பாடுகளைக் காண்க. (PTA-2)
அ) பென்டனாயிக் அமிலம்
ஆ) 2- மெத்தில் – பியுட்டன் – 2- ஆல்
விடை:
அ) பென்டனாயிக் அமிலம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 98

ஆ) 2-மெத்தில் பியுட்டன்-2-ஆல்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99

Question 3.
கரிமச் சேர்மங்களின் IUPAC பெயரிடும் முறையின் அடிப்படையில் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ள கோடிட்ட இடங்களை நிறைவு செய்க. (7 Marks) [PTA-2]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99.1

Question 4.
கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து அவற்றுள் எத்தனால் மற்றும் எத்தனாயிக் அமிலத்திற்கான பொருத்தமான கூற்றுக்களை வகைப்படுத்துக. (7 Marks) [PTA-4]
அ) இதன் 95.5%-மும் நீரும் சேர்ந்த கரைசல் எரிசாராயம் எனப்படும்.
ஆ) இச்சேர்மத்தின் தூய வகை உறையும் பொழுது பனிக்கட்டி போன்ற படிகங்களாகின்றன.
இ) இச்சேர்மத்தினை சோடாச் சுண்ணாம்பு கொண்டு வெப்பப்படுத்தும்பொழுது கார்பாக்சில் நீக்கம் நடைபெறுகிறது.
விடை:
அ) எத்தனோல்
ஆ) எத்தனோயிக் அமிலம்
இ) எத்தனோயிக் அமிலம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 5.
A என்ற சேர்மம் ஒரு நிறமற்ற திரவம் மற்றும் எரிசுவை கொண்டது. சேர்மம் A-யின் ஆவியை 573K வெப்பநிலையில், சூடேற்றப்பட்ட தாமிரத்தின் மீது செலுத்தும்போது ஹைட்ரஜன் நீக்கம் நடைபெற்று அசிட்டால்டிஹைடு உருவாகிறது. சேர்மம் A-ஐக் கண்டறிக. இவ்வேதிவினையில் தாமிரத்தின் பங்கு என்ன? இவ்வேதிவினைக்கான சமன் செய்யப்பட்ட வேதிச் சமன்பாட்டை எழுதுக. [PTA-6]
விடை:
A என்ற சேர்மம் எத்தனால்.
இது நிறமற்றது திரவம் மற்றும் எரிசுவை கொண்டது.
தாமிரத்தின் பணி: எத்தனாலின் ஆவியை வெப்பப்படுத்தப்பட்ட காப்பர் வினையூக்கியின் முன்னிலையில் (573K) செலுத்தும் போது ஹைட்ரஜன் நீக்கமடைந்து அசிட்டால்டிஹைடைத் தருகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99.4

Question 6.
சோப்பை நீருடன் சேர்க்கும்பொழுது ஏன் மீசெல்ஸ் உருவாகிறது என்பதை தகுந்த படத்துடன் விளக்குக. [PTA-5]
விடை:
(i) ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதிப் பகுதிகளை பெற்றுள்ளன. இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினைபுரிகிறது.

(ii) ஒருமுனை சிறிய தலை போன்ற கார்பாக்சிலேட் தொகுதி கொண்ட முனைவுள்ள பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கலி தொடரைடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99.5
(iii) முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது. முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக்கொள்கிறது.

(iv) நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கிக் கொள்கிறது. நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது.

(v) சோப்பு அல்லது டிடர்ஜெண்டை நீரில் கரைக்கும் பொழுது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்த கொத்துகளாக (Micelles) மீசெல்ஸ் உருவாகிறது.

(vi) இந்த கொத்துகளில் ஹைட்ரோகார்பன் சங்கிலி பகுதியானது, அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக் கொள்கிறது. இவ்வாறாக சோப்பின் முனைவற்ற பகுதி அழுக்கைச் சுற்றிக் கொள்கிறது.

(vii) சோப்பின் கார்பாக்சிலேட் பகுதி, கொத்துகளை நீரில் கரையச் செய்கிறது. இவ்வாறாக அழுக்கு சோப்பினால் நீக்கப்படுகிறது.