Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

7th Social  Science Guide இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி ………………….
அ) இடர்
ஆ) பேரிடர்
இ) மீட்பு
ஈ) மட்டுப்படுத்தல்
விடை:
ஆ) பேரிடர்

Question 2.
பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்.
அ) தயார் நிலை
ஆ) பதில்
இ) மட்டுப்படுத்தல்
ஈ) மீட்பு நிலை
விடை:
இ) மட்டுப்படுத்தல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
ஒரு திடீர் நகர்வு அல்லது புவிமேலோட்டின் திடீர் நடுக்கம் …………………… என அழைக்கப்படுகிறது.
அ) சுனாமி
ஆ) புவி அதிர்ச்சி
இ) நெருப்பு
ஈ) சூறாவளி
விடை:
ஆ) புவி அதிர்ச்சி

Question 4.
கனமழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் …………………….. என அழைக்கப்படுகிறது.
அ) வெள்ளம்
ஆ) சூறாவளி
இ) வறட்சி
ஈ) பருவ காலங்கள் 15
விடை:
அ) வெள்ளம்

Question 5.
…………………… வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
அ) ரேஷன் அட்டை
ஆ) ஓட்டுநர் உரிமம்
இ) அனுமதி
ஈ) ஆவணங்கள்
விடை:
ஆ) ஓட்டுநர் உரிமம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு ……………
விடை:
பேரழிவுகள்

Question 2.
பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
பேரிடர் மேலாண்மை

Question 3.
மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ………….. எனப்படும்.
விடை:
சுனாமி

Question 4.
தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் …………..
விடை:
101

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 5.
இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை ………….. பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.
விடை:
பாதுகாப்பது

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 2

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க

Question 1.
கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது
காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

Question 2.
கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்.
காரணம் (R) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன

அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளிக்க

Question 1.
இடர் வரையறு.
விடை:
பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு, மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும்.

Question 2.
பேரிடர் என்றால் என்ன?
விடை:
ஒரு பேரிடர் என்பது பொதுவாக “சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது”.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் ஆறு நிலைகள் யவை?
விடை:

  • தயார் நிலை
  • மட்டுப்படுத்துதல்
  • கட்டுப்படுத்துதல்
  • துலங்கல்
  • மீட்டல்
  • முன்னேற்றம்

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள எச்சரிக்கை அமைப்பு சார்ந்த இரண்டு நிறுவனங்கள் எவை?
விடை:

  • தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF)
  • மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA)

Question 5.
வெள்ளத்தினால் ஏற்படும் மூன்று விளைவுகள் பற்றி எழுதுக.
விடை:

  1. சொத்து மற்றும் உயிரிழப்பு
  2. மக்கள் இடப்பெயர்வு
  3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

Question 6.
இரயில் நிலையத்தில் பின்பற்றப்படவேண்டிய நான்கு நடவடிக்கைகள் குறித்து எழுதுக.
விடை:

  • இரயில் பாதுகாப்பு ஆலோசனைகளை தெரிந்து கொண்டு அதன்படி பின்பற்ற வேண்டும். இரயில் எந்த நேரமும், எந்த திசையிலும் வரக்கூடும்.
  • இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.
  • தண்டவாளங்களைக் கடந்து செல்லக்கூடாது.
  • நடைமேடையை பயன்படுத்த வேண்டும்.

Question 7.
தொழிற்சாலை விபத்து அடிக்கடி நிகழக்கூடிய நான்கு வேறுபட்ட தொழிற்சாலைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • சுரங்கத் தொழிற்சாலை
  • வேதியியல் தொழிற்சாலை
  • அணுமின் தொழிற்சாலை
  • சிமெண்ட் தொழிற்சாலை

VI. வேறுபடுத்துக

Question 1.
புவி அதிர்ச்சி மற்றும் ஆழி பேரலை (சுனாமி).
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 3

Question 2.
வெள்ளம் மற்றும் சூறாவளி.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 4

Question 3.
இடர் மற்றும் பேரிடர்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 5

VII. விரிவான விடையளி

Question 1.
பேரிடர் மேலாண்மை சுழற்சி பற்றி விளக்குக.
விடை:
பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளாகக் கொண்டு பேரிடர் சுழற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடருக்கு முந்தைய நிலை :
கட்டுப்படுத்துதல் மற்றும் மட்டுப்படுத்துதல் :
எதிர்கால பேரழிவு அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். பேரழிவைக் குறைத்தல் என்பது தாக்கத்தின் அளவைக் குறைப்பதாகும். மட்டுப்படுத்துதல் என்பது ஆபத்தைக் குறைப்பது மற்றும் பாதிக்கக் கூடிய நிலைமைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகும்.

தயார்நிலை:
இந்த படிநிலையானது அரசாங்கம், சமூகங்கள் மற்றும் தனி ஒரு மனிதன் பேரிடர் சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடக்கியதாகும். உதாரணமாக, அரசின் அவசரநிலை திட்டங்கள், எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல், சரக்குகளின் பராமரிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு, கல்வி மற்றும் தனிநபர் பயிற்சி போன்றவை அடங்கும்.

ஆரம்பகால எச்சரிக்கை :
பேரிடர் ஆரம்பிக்கும் நிலையில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ள பகுதிகளைப் பார்வை இடுவது மற்றும் பேரிடர் தொடங்க உள்ளது என்ற செய்தியினை மக்களுக்கு பாதிப்பில்லாத வழியில் தெரிவிப்பது போன்றவை ஆரம்ப கால எச்சரிக்கையாகும். பயனுள்ளதாக அமைய, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அளிக்கப்படும் எச்சரிக்கை நிகழ்வுகள் மக்கள் கல்வி மற்றும் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

பேரிடரின் தாக்கம் :
பேரிடரின் தாக்கம் என்பது பேரிடர் நிகழும் கால அளவு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறிக்கும். பேரிடர் நிகழும் கால அளவு என்பது அச்சுறுத்தலின் வகையைப் பொறுத்து அமையும். புவி அதிர்ச்சியின்போது நில நடுக்கமானது சில நொடிகள் நிகழும். அதுவே, ஆழிப்பேரலை ஏற்பட காரணமாகிறது.

பேரிடரின் போது:
துலங்கல்:
கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தல், தற்செயல் திட்டத்தை செயல்படுத்துதல், எச்சரிக்கை விடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை, மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது, தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல். ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு பேரிடருக்கும் இது முதல் கட்ட பதிலைக் குறிக்கிறது.

பேரிடருக்குப் பின் மீட்பு நிலை:
மீட்புநிலை என்பது அவசரகால நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு போன்ற 3 நிலைகளை உள்ளடக்கியது.

வளர்ச்சி:
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் என்பது தற்போதைய செயல்பாடு ஆகும். நீண்ட காலத் தடுப்பு மற்றும் பேரிடரைக் குறைத்தல் என்பது வெள்ளப்பெருக்கினைத் தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல், வறட்சியை ஈடுகட்ட நீர்ப்பாசன வசதிகள் செய்தல், நிலச்சரிவினைச் சரிசெய்ய மரம் நடுதல், சூறாவளி காற்று மற்றும் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் வீடுகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 2.
வெள்ளம் மற்றும் அதன் விளைவுகளையும் அதனை மட்டுப்படுத்துதல் பற்றியும் விளக்குக.
விடை:
வெள்ளப்பெருக்கு:
கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை (சுனாமி) அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதலே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.

பாதிப்புகள்:

  1. சொத்து மற்றும் உயிரிழப்பு
  2. மக்கள் இடப்பெயர்வு
  3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

மட்டுப்படுத்துதல் :

  • வெள்ளநீர் வடிய ஏற்பாடு செய்தல், வெள்ளப்பெருக்கினை தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல்.
  • மக்களையும் அவர்கள் உடைமைகளையும் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புதல்

Question 3.
ஏதேனும் 5 பொதுவான வாழும் நுட்பங்கள் பற்றி எழுதுக.
விடை:
புவி அதிர்ச்சியின் போது மேஜையின் கீழ் செல். தரையில் மண்டியிடு மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உறுதியான சுவற்றின் அருகில் செல், தரையில் அமர் மற்றும் தரையை இறுகப் பிடித்துக்கொள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். டார்ச் விளக்கினை மட்டும் பயன்படுத்தவும்.

தீ விபத்து எனில் அவசர சேவைக்கு 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஒருவருக்கு ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அவரை ஓடாமல் தரையில் படுத்து உருள செய்ய வேண்டும்.

சாலை விபத்தினைத் தவிர்க்க வேண்டுமெனில், ஓட்டுநர் உரிமம் பெற்றவரை மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் பின்பற்றபட வேண்டிய சாலைவிதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.

Question 4.
புவி அதிர்ச்சி, அதன் பாதிப்புகள் மற்றும் மட்டுப்படுத்துதல் படிநிலைகள் பற்றி எழுதுக.
விடை:
புவி அதிர்ச்சி:
ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கத்தை நிலநடுக்கம் என அழைக்கின்றோம். புவித்தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, மற்றும் மேற்பரப்பு பிளவு போன்றவை நிலநடுக்கத்திற்கு காரணமாகின்றன.

பாதிப்புகள்:
அதிகப்படியான நில நடுக்கத்தால் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகள் இடிந்து சேதமடைகிறது. நிலநடுக்கத்தால், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, தீ, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் நீர் குழாய்கள் உடைதல் போன்றவை நிகழ்கின்றன. இது ஆற்றின் பாதையைக்கூட மாற்றியமைக்கிறது.

பேரிடருக்கு முந்தைய நிலை:

  • அவசரநிலை திட்டங்கள்
  • எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல்
  • சரக்குகளின் பராமரிப்பு
  • பொது மக்கள் விழிப்புணர்வு

பேரிடரின் போது:

  • செயல்படுத்துதல், எச்சரிக்கைவிடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை
  • பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது

பேரிடருக்குப்பின் மீட்பு நிலை:
மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு

VIII. உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
நான் ஏன் இயற்கை பேரிடர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?
விடை:
பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.

நிறுவன மற்றும் செயல்பாட்டு திறன்கள் வளர்த்தல், சமாளிக்கும் திறனை அதிகப்படுத்துதல் போன்றவை பேரிடர் மேலாண்மை எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 2.
இந்தியாவில் நிலச்சரிவு அடிக்கடி நிகழும் 4 இடங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • மேற்கு கடற்கரைப் பகுதி மற்றும் கொங்கண மலைப்பகுதி
  • கிழக்கு கடற்கரைப் பகுதி
  • வடகிழக்கு மலைப்பகுதிகள்
  • வடமேற்கு மலைப்பகுதிகள்

7th Social  Science Guide இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Additional important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தைத் தாக்கிய மிக மோசமான புயல் ………………..
அ) கஜா
ஆ) தானே
இ) மகா
ஈ) ஒக்கி
விடை:
அ) கஜா

Question 2.
…………………… மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பு ஆகும்.
அ) தமிழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஆ) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்
இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஈ) விண்வெளித்துறை
விடை:
ஆ) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்

Question 3.
………………….. என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும்.
அ) சுனாமி
ஆ) வெள்ளப்பெருக்கு
இ) சூறாவளி
ஈ) நெரிசல்
விடை:
ஈ) நெரிசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
……….. ஓரங்களில் அமரக்கூடாது.
விடை:
இரயில் நிலைய மேடையின்

Question 2.
சுனாமி என்ற சொல் …………………… சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
ஜப்பானிய

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
………… மற்றும் ……….. இரண்டுமே பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
விடை:
இடர், பேரிடர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 6

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க

Question 1.
கூற்று (A) : இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும்.
காரணம் (R) : ஹரிக்கேன் என்பது ஒரு இயற்கை இடர். இந்த சூறாவளி நிலத்தை அடையும் பொழுது கட்டடங்களையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளி

Question 1.
நெரிசல் – வரையறு.
விடை:
நெரிசல் என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும். காயங்கள், மூச்சுத்திணறல் மற்றும் மிதித்தலினால் ஏற்படும் காயம், போன்றவை இதன் விளைவாக அமையும். பெரிய அளவிலான மக்கள் நெரிசலினால் ஏற்படும் பேரிடர் எளிமையான கூட்ட மேலாண்மை உத்திகளால் தடுக்க முடியுமென நம்பப்படுகிறது.

Question 2.
தீ விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
விடை:
தீ என்பது ஒரு பேரிடர். அது குறுகிய மின்சுற்று, வேதியியல் தொழிற்சாலை. தீப்பெட்டி மற்றும் வெடி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினைக் குறிக்கும்.

Question 3.
தீயின் மூன்று அம்சங்கள் யாவை?
விடை:

  • கண்டறிதல்
  • தடுத்தல்
  • அணைத்தல்

Question 4.
தொழிற்சாலை பேரிடர் என்றால் என்ன?
விடை:
தொழிற்சாலையானது அதன் உற்பத்தி, மற்றும் எஞ்சிய கழிவுகளை அகற்றுதல், அணுமின் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களால் பல ஆபத்துக்களை எதிர் கொள்கின்றன. உதாரணம்: போபால் விஷவாயு கசிவு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 5.
இடரை மட்டுப்படுத்துதல் முக்கியமானது ஏன்?
விடை:
பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.

VI. விரிவான விடையளி

Question 1.
புயல் என்றால் என்ன? அதன் பாதிப்புகள் யாவை?
விடை:
புயல் :
உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று “புயல்” என அழைக்கப்படுகிறது.

பாதிப்புகள்:
வெப்ப மண்டல சூறாவளியால் உருவாகும் முக்கிய பாதிப்புகளில் கனமழை, பலத்த காற்று, கரையின் அருகில் பெரிய புயல் மற்றும் சுழல்காற்று உள்ளடங்கும்.

Question 2.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அண்மையில் ஏற்பட்ட இடர்கள் பற்றி எழுதுக.
விடை:
2018மே2மற்றும் 3 தேதியில் அதிகதிசைவேகத்துடன்வீசிய புழுதிப்புயல் வட இந்தியாவின் ஒரு பகுதியைத் தாக்கியது. அதில் உத்திரபிரதேசத்தில் 43 பேர், இராஜஸ்தானில் 35 பேர் மற்றும் பிற மாநிலத்திலும் பலர் இறந்தனர். 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த காற்றானது 8000 மின்கம்பங்களை கீழே சாய்த்தது. நூற்றாண்டுகளாக வாழ்ந்த மரங்களையே வேரோடு சாய்த்தது.

2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தைத் தாக்கிய மிக மோசமான புயல் கஜா. இது கடலோர மாவட்டங்களில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக வேளாண்மையை சீர்குலைத்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 7

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

7th Social  Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது …………………….
அ) புவியியல் (ஜியோகிராஃபி)
ஆ) கார்டோகிராஃப்ட்
இ) பிஸியோகிராபி
ஈ) பௌதீக புவியியல்
விடை:
ஆ) கார்டோகிராஃப்ட்

Question 2.
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் …………………. திசைகள் ஆகும்.
அ) முக்கியமான
ஆ) புவியியல்
இ) அட்சரேகை
ஈ) கோணங்கள்
விடை:
அ) முக்கியமான

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
கலாச்சார நிலவரை படங்கள் என்பன ……………………. அமைப்புகளைக் காட்டுகின்றன.
அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக …………………. அமைகிறது.
விடை:
நிலவரைபடம்

Question 2.
முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ………………… எனப்படும்.
விடை:
திசைகள்

Question 3.
நிலவரைபடத்தில் உள்ள …………………. வரைபடத்தில்பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.
விடை:
குறிப்பு

Question 4.
காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் …………………… என அழைக்கப்படுகின்றன
விடை:
கிராமம் (அல்லது) நகர்ப்புற நிலவரைபடம்

Question 5.
சிறிய அளவை நிலவரைபடங்கள் ……… மற்றும் ………. போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.
விடை:
கண்டங்கள், நாடுகள்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக

Question 1.
வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.
விடை:
அளவை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 2.
வெண்மை , பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.
விடை:
வெண்மை

Question 3.
நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.
விடை:
நிலவரைபட நூல்

Question 4.
வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.
விடை:
காலநிலை

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 2

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க

Question 1.
i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட நகர் தொகுதி ஆகும்.
ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.
iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அ) 1 மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Question 2.
கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.
கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு

VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக

Question 1.
தட்டையான பரப்பில் பூமியைக் குறிப்பது.
விடை:
நிலவரைபடம்

Question 2.
நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்.
விடை:
அளவை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
தரைவழி மற்றும் சாலைவழி போக்குவரத்தினைக் காட்ட உதவும் குறியீடு.
விடை:
போக்குவரத்து நிலவரைபடம்

Question 4.
வேறுபட்ட நிலவரைபடங்களை உள்ளடங்கிய புத்தகம்.
விடை:
நிலவரைபட நூல்

Question 5.
நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைப்படம்.
விடை:
அரசியல் நிலவரைபடம்

VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க

Question 1.
நிலவரைப்படம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம் :
நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி அல்லது ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.

நிலவரைபடமானது கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.

Question 2.
கார்டோகிராஃபி என்றால் என்ன?
விடை:
கார்டோகிராஃபி:
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்பது கார்டோகிராஃபி என – அழைக்கப்படுகிறது. (கார்டே – நிலவரைபடம் ; கிராபிக் – வரைதல்)

Question 3.
முதன்மை திசைகள் யாவை?
விடை:
முதன்மை திசைகள்: –

  • வடக்கு
  • கிழக்கு
  • மேற்கு
  • தெற்கு

Question 4.
நிலவரைபட நூல் என்பது என்ன?
விடை:
நிலவரைபட நூல்:

  1. நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும்.
  2. நிலவரைபட நூல் படங்கள் அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது.

Question 5.
நிலவரைபட நூலின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவரைபட நூலின் வகைகள்:

  • பள்ளி நிலவரைபட நூல்
  • மேம்படுத்தப்பட்ட நிலவரைபட நூல்
  • பிராந்திய நிலவரைபட நூல்
  • தேசிய நிலவரைபட நூல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 6.
நிலவரைபடத்தின் பயன்கள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் பயன்கள்:

  • ஓர் இடத்தினை நேரில் சென்று பார்க்காமல் நிலத்தோற்றம் மற்றும் நில அமைப்புகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
  • நிலவரைபடங்கள் இராணுவத்தின் திட்டமிடல் பணியில் மகத்தான செயல்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
  • விமானங்கள் குறிப்பிட்ட இடத்தை சேரவும், கப்பல் கடலில் பாதுகாப்பாக செல்லவும் உதவுகின்றது.
  • நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.

VIII. விரிவான விடையளிக்க

Question 1.
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள் யாவை? அவற்றைப் பற்றி எழுதுக?
விடை:
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள்:

  • தலைப்பு
  • திசை
  • அளவை
  • குறிப்பு (அல்லது) சின்னங்களின் விளக்கங்கள் போன்றவை நிலவரைபடத்தின் அடிப்படைக்கூறுகள் ஆகும்.

தலைப்பு:

  • ஒவ்வொரு நிலவரைபடமும் அப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிக்கும் தலைப்பினை கொண்டிருக்கும்.
  • இந்திய நதிகள் என்ற தலைப்பு கொண்ட நிலவரைபடம் இந்திய நதிகளைப் பற்றி விளக்குவதாகும்.

திசைகள் :
வரைபடங்கள் பொதுவாக வடக்கு நோக்கிய நிலையில் வரையப்படுகிறது. வடக்கு என்பது ‘எனும் எழுத்தால் அம்புக்குறியீட்டுடன் குறிக்கப்படுகிறது. அது நிலவரைபடத்தில் மற்ற திசைகளை (கிழக்கு, மேற்கு, தெற்கு) கண்டறிய உதவுகிறது.

அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகள் விளிம்புகளில் வரையப்படுகிறது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 3

அளவை:

  • நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் நிலவரைபடத்தின் அளவை எனப்படும்.
  • 1 செ.மீ. = 10 கி.மீ நிலவரைபடத்தில் 1 செ.மீ. = நிலத்தில் 10 கி.மீ.)

குறிப்பு:

  • நிலவரைபடத்தில் வேறுபட்ட இயற்கை மற்றும் கலாச்சார அம்சங்களைக் காட்ட பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் குறியீடுகளைக் குறித்து விளக்குவது.
  • தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.

Question 2.
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் யாவை?
விடை:
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் :

  • நிலவரைப்படம் என்பது புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.
  • அவை கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் உட்பட சில குறிப்பிட்ட விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.
  • நிலவரைபடங்கள் அமைப்புகள் குறித்து புரிந்து கொள்ள வழி வகுக்கின்றது.
  • இயற்கை அமைப்புகள் (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்)
  • நீர்நிலை அமைப்புகள் (ஆறு, ஏரி, கடல்)
  • கலாச்சார அமைப்புகள் (சாலைகள், குடியிருப்புகள்)

Question 3.
கருத்தின் அடிப்படையில் வரைபடத்தை வகைப்படுத்தவும்?
விடை:

  • நிலவரைபடம் புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரையப்பட்டதாகும்.
  • ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் தனித்துவமுடையது.
  • பொதுவான சில அமைப்புகளின் அடிப்படையில் நிலவரைபடங்கள் பலவகைப்படும். (அளவை, கருத்து)

கருத்தின் அடிப்படையிலான நிலவரைபடங்கள் :

  • நிலத்தோற்ற வரைபடம்
  • புவியியல் வரைபடம்
  • காலநிலை வரைபடம்
  • மண் நிலவரைபடம்
  • கலாச்சார நிலவரைபடம்
  • அரசியல் நிலவரைபடம்
  • மக்கள் தொகை நிலவரைபடம்
  • பொருளாதார நிலவரைபடம்
  • போக்குவரத்து நிலவரைபடம்
  • கருத்து நிலவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 4.
நில வரைபடம் மற்றும் புவி மாதிரிகளை வேறுபடுத்தி எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 4

Question 5.
அளவையின் அடிப்படையில் நில வரைப்படத்தின் வகைகளை விரிவாக எழுது?
விடை:
நிலவரைபடத்தின் அளவை = நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம் : நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம்.

அளவையின் அடிப்படையில் நிலவரைபடங்கள் :

  • பெரிய அளவை நிலவரைபடம்
  • நிலஅளவைப் படங்கள்
  • தலவரைபடம்
  • சிறிய அளவை வரைபடங்கள்
  • சுவர் வரைபடங்கள்
  • நிலவரைபட நூல்

பெரிய அளவை நில வரைபடம் :

  • குறைந்த பரப்பு இடங்கள் குறித்த அதிக விவரங்கள்.
  • ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.

நிலஅளவைப் படங்கள் :
கிராமம் மற்றும் நகர்ப்புற நிலம் மற்றும் வீடு இருப்பிடம் குறித்து விளக்கம்.

தல வரைபடம்:
சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்கள் தருவன. இந்திய நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. (அமைப்புகள் – குன்றுகள், பள்ளத்தாக்குகள், கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள்).

சிறிய அளவை வரைபடங்கள்:

  • பெரிய அளவிலான பகுதிகள் (கண்டங்கள் அல்லது நாடுகள்)
  • அளவை : 1 செ.மீ = 1000 கி.மீ.

சுவர் வரைப்படங்கள் :
வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுகிறது. குறைந்த அளவு விவரங்களுடன் அதிக பரப்பளவு இடங்கள்.

நிலவரைபட நூல்:
பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
பயணிகளின் முதன்மை கருவி நிலவரைபடம் ஏன்?
விடை:
பயணிகள் முதன்மை கருவி நிலவரைபடம்
ஏனெனில்
நிலவரைபடத்தினை வாசித்தல் என்பது புவியியல் ரீதியான இருப்பிடம், இயற்கை அமைப்புகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது. வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை காட்டுகின்றன.

நிலவரைபடம் கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள் மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் பற்றிய விவரங்களைக் காட்டுகிறது.

போக்குவரத்து நிலவரைபடங்கள் சாலைகள், இருப்புப்பாதை, இரயில்வே நிலையம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றைக் காட்டுகின்றன.

மின்னணு வரைபடங்கள் உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்குகிறது.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இந்திய நிலவரைபடத்தில் பின்வரும் அமைப்புகளை உரிய சின்னங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு குறித்துக் காட்டுக.
அ) ஏதேனும் இரண்டு மாவட்டத் தலைநகரங்களைக் குறித்துக்காட்டுக.
ஆ) ஏதேனும் ஒரு ஆற்று வழிப்பாதையை வரைந்திடுக.
இ) ஏதேனும் ஒரு மலையைக் குறித்துக்காட்டு. – (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 2.
கொடுக்கப்பட்டவற்றிற்கு மரபுச் சின்னங்கள் மற்றும் குறியீடுகளை வரைந்திடுக.
அ) பாலம்
ஆ) கால்வாய்
இ) அணைக்கட்டு
ஈ) கோவில்
உ) காடு
ஊ) இரயில்வே நிலையம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 5

7th Social  Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிலவரைபடம் ……………….. ஒரு முக்கிய கருவியாக அமைகிறது.
அ) புவியியலாளர்
ஆ) மண்ணியலாளர்
இ) சுற்றுலா பயணி
ஈ) பயணி
விடை:
அ) புவியியலாளர்

Question 2.
நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் ……………………
அ) கார்டோகிராஃபர்
ஆ) கார்டியாலஜிஸ்ட்
இ) ஆர்க்கிடெக்ட்
ஈ) ஆர்ட்டிஸ்ட்
விடை:
அ) கார்டோகிராஃபர்

Question 3.
நிலவரைபடத்தின் தேவையான அடிப்படைக்கூறு …………………
அ) திசை
ஆ) வண்ண ம்
இ) குறியீடு
ஈ) எழுத்துக்கள்
விடை:
அ) திசை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் …………………….
விடை:
தனித்துவமுடையது

Question 2.
மின்ன ணு வரைபடங்கள் என்பது …………………… சேவைப்பகுதி .
விடை:
வலைதள

Question 3.
…………………… என்பது புவியின் முப்பரிமாண அமைப்பு.
விடை:
புவிமாதிரி

Question 4.
……………………. நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
விடை:
இந்திய நிலஅளவைத்துறை .

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 5.
…………………… என்பது புவியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரைவதாகும்.
விடை:
நிலவரைபடம்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக

Question 1.
விலங்குகளின் தோல், மின்னணு, ஈரநிலம், களிமண் பலகைகள்.
விடை:
மின்னணு

Question 2.
பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பீடபூமிகள், தொழிற்சாலைகள்.
விடை:
தொழிற்சாலைகள்

Question 3.
ஆறு, ஏரி, கடல், மலை .
விடை:
மலை

Question 4.
கட்டடங்கள், பயிர் வகைகள், சாலைகள், கால்வாய்கள்.
விடை:
பயிர்வகைகள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 6

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க

Question 1.
i) நிலவரைபடங்கள் நமக்கு அதிக விவரங்களைக் கொடுக்கக்கூடியது.
ii) ஒவ்வொரு நிலவரைபடத்திற்கும் குறிப்பு உண்டு.
iii) நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.

அ) i மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Question 2.
கூற்று 1: நிலவரைபடங்கள் வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாகக் காட்டுகின்றன.
கூற்று 2 : நிலவரைபடங்கள் இராணுவத்தினருக்கு முக்கியமல்ல

அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு

VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக

Question 1.
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல்.
விடை:
கார்டோகிராஃபி

Question 2.
1 செ.மீ = 1000 கி.மீ. வகை வரைபடம்.
விடை:
சிறிய அளவை வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள்.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்

Question 4.
நிலம் மற்றும் வீட்டின் இருப்பிடம் குறித்து விளக்கும் நிலவரைபடம்.
விடை:
நிலஅளவைப் படங்கள்

Question 5.
வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படும் நிலவரைபடங்கள்
விடை:
சுவர் வரைபடங்கள்

VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க

Question 1.
ஆரம்பகாலங்களில் நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் யாவை?
விடை:
நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் :

  • காகிதத்தோல் – விலங்குகளின் தோல்
  • பாப்பிரஸ் துணிகள்
  • ஈரநிலம்
  • களிமண் பலகைகள்

Question 2.
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள் யாவை?
விடை:
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள்:

  • நிலத்தோற்றம் (மலை)
  • பாறையியல்
  • மண்
  • மண்
  • வடிகால்
  • வானிலை கூறுகள்
  • தாவரங்கள்

Question 3.
தலவரைபடம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தலவரைபடம்:
தலவரைபடம் சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தருவன. இவை இந்தியாவின் நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது.

இவை பெரிய அளவை நிலவரைபடங்கள். இவை இயற்கை அமைப்புகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை விளக்குகின்றன.

Question 4.
நிலவரைபடத்திற்குத் தேவையான அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
தேவையான அடிப்படைக் கூறுகள்:

  • தலைப்பு
  • திசைகள்
  • அளவை
  • குறிப்பு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 5.
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது ஏன் கடினம்?
விடை:
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது கடினம், ஏனெனில்
உண்மையான அளவில் அவற்றை வரைய போதுமான இடமில்லை.

உண்மை வடிவங்கள்:

  • குடியிருப்புகள்
  • பாலங்கள்
  • தபால் நிலையங்கள்
  • இரயில்வே பாதைகள்
  • காடுகள்

Question 6.
நிலவரைபடத்தில் பயன்படும் ஏதேனும் நான்கு நிறங்களையும் அவை குறிக்கும் அமைப்புகளையும் எழுது?
விடை:
நிறங்கள் – அமைப்புகள்

  • வெள்ளை – பனி
  • பச்சை – காடுகள்
  • நீலம் – நீர்நிலைகள்
  • பழுப்பு – மலை, குன்று

VIII. விரிவான விடையளி

Question 1.
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் (அல்லது) முறைக்குறிகளும் குறியீடுகளும் – விளக்குக.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்:
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நிலவரைபடத்தின் புவிக்கூறுகள், முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளாக காட்டப்படுகின்றன. இவை கோட்டுக்குறியீடுகள் (அல்லது) நிறங்கள் போன்றவற்றால் காட்டப்படுகின்றன.
வெள்ளை → பனி
மஞ்சள் → விவசாயம்
பச்சை → காடுகள்
நீலம் → நீர்நிலைகள்
பழுப்பு → மலை, குன்று
சிவப்பு → குடியிருப்பு, சாலை
கருப்பு → இரயில்பாதை

இந்திய நில அளவைத் துறையானது (சர்வே ஆப் இந்தியா) நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
எ.கா:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 7

Question 2.
சிறு குறிப்பு வரைக.
அ) காலநிலை வரைபடங்கள்
ஆ) அரசியல் நிலவரைபடங்கள்
இ) பொருளாதார நிலவரைபடங்கள்
விடை:
அ) காலநிலை வரைபடங்கள்:
வெப்பநிலை பரவல், மழையளவு, மேகமூட்டம், ஒப்பு ஈரப்பதம், காற்று வீசும் திசை, வேகம் மற்றும் சில வானிலை கூறுகளைக் குறித்து காட்டுகின்றன.

ஆ) அரசியல் நிலவரைபடங்கள்:

  • ஒரு நாட்டின், மாநிலத்தின் அல்லது மாவட்டத்தின் நிர்வாக பிரிவுகளைக் காட்டுவதாகும்.
  • தொடர்புடைய நிர்வாகப் பிரிவுகளில் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை எளிதாக்க இந்த வரைபடம் உதவுகிறது.

இ) பொருளாதார நிலவரைபடங்கள் :

  • வெவ்வேறு வகைப்பட்ட பயிர்வகைகள்
  • தாதுக்கள்
  • தொழிற்சாலை அமைவிடங்கள்
  • வாணிப வழிகள்
  • பொருள்களை எடுத்துச் செல்லும் வழிகள் குறித்து விளக்கும் படங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 8

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

6th Social Science Guide ஆசியா மற்றும் ஐரோப்பா Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?
அ) கருங்கடல்
ஆ) மத்திய தரைக்கடல்
இ) செங்கடல்
ஈ) அரபிக்கடல்
விடை:
ஈ) அரபிக்கடல்

Question 2.
எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி
அ) தீபெத்
ஆ) ஈரான்
இ) தக்காணம்
ஈ) யுனான்
விடை:
ஆ) ஈரான்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது –
i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்
ii) சராசரி மழையளவு 200 மி.மீ ஆகும்.
iii) சராசரி வெப்பநிலை10°C ஆகும். மேற்கண்ட கூற்றுகளில்
அ) i மட்டும் சரி
ஆ) ii மட்டும் iii சரி
இ) i மற்றும் iii சரி
ஈ) மற்றும் ii சரி
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 4.
பட்டியல் I ஐ பட்டியல் | உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 1
விடை:
அ) 2, 3, 4, 1

Question 5.
இந்தியா ……. உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
அ) துத்தநாகம்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) நிலக்கரி
விடை:
ஆ) மைக்கா

Question 6.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
அ) ஆல்ப்ஸ்
ஆ) பைரனீஸ்
இ) கார்பேதியன்
ஈ) காகஸஸ்
விடை:
ஆ) பைரனீஸ்

Question 7.
‘ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது. சரியான தெரிவினைத் தேர்வு செய்க.
அ) இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன.
இ) இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரி
விடை:
ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Question 8.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
ஆ) ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.
இ) ஐரோப்பாவின் பெரும்பாலான ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
ஈ) ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.
விடை:
ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.

Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) மெஸ்டா – ஸ்பெயின்
ஆ) ஜூரா – பிரான்ஸ்
இ) பென்னின்ஸ் – இத்தாலி
ஈ) கருங்காடுகள் – ஜெர்மனி
விடை:
இ) பென்னின்ஸ் – இத்தாலி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 10.
ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
அ) ஐஸ்லாந்து
ஆ) நெதர்லாந்து
இ) போலந்து
ஈ) சுவிட்சர்லாந்து
விடை:
அ) ஐஸ்லாந்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் ……… முடிச்சிலிருந்து பிரிகின்றது.
விடை:
ஆர்மினியன்

Question 2.
உலகின் மிக ஈரப்பதமான இடம் ……….
விடை:
மௌசின்ராம்

Question 3.
உலகிலேயே ………… உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.
விடை:
பேரீச்சம் பழங்கள்

Question 4.
ஐரோப்பாவையும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் கடல்வழி …..
விடை:
சூயஸ் கால்வாய்

Question 5.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ……..
விடை:
டினிக்லிங்

Question 6.
ஐரோப்பாவின் இரண்டாம் இரண்டாவது உயரமான சிகரம் ……..
விடை:
மாண்ட் பிளாங்

Question 7.
ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை ………
விடை:
கண்ட காலநிலை

Question 8.
வட கடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் ………..
விடை:
டாகர் பாங்க்ஸ் (Dogger Banks)

Question 9.
ஐரோப்பாவின் மக்களடர்த்தி …….
விடை:
சதுர கிலோமீட்டருக்கு 34 நபர்கள்

Question 10.
…………. ஆறு ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது.
விடை:
டான்யூப்

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 80
விடை:
1. யூப்ரடீஸ் சடைக்ரிஸ்
2. அதிக மழை
3. தாய்லாந்து
4. நார்வே
5. ஸ்பெயின்

IV. மேலும் கற்கலாம்

Question 1.
கூற்று (A) : இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.
காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.
ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ. (A) சரி. ஆனால் (R) தவறு.
ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி
விடை:
ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி

Question 2.
கொடுக்கப்பட்ட ஆசியா வரைபடத்தில் குறி குறியீடுகள் : க்கப்பட்டுள்ள 1, 2, 3 மற்றும் 4 என்பன கீழ் கண்ட சமவெளிகளைக் குறிக்கின்றன.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 85
A. சிந்து – கங்கை சமவெளி
B. மஞ்சூரியன் சமவெளி
C. மெசபடோமியா சமவெளி
D. சீனச் சமவெளி

வரைபடத்தில் உள்ள எண்ணுடன் சமவெளிகளைப் பொருத்தி, பின் கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 86
விடை :
ஆ) 2 1 3 4

Question 3.
கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை
அ) கரும்பு
ஆ) பேரிச்சம்பழம்
இ) ரப்பர்
ஈ) சணல்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 87
விடை:
ஆ) பேரிச்சம்பழம்

V. சுருக்கமான விடையளி

Question 1.
ஆசியாவில் உள்ள முக்கிய மலையிடைப் பீடபூமிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அனடோலிய பீடபூமி
  • ஈரான் பீடபூமி
  • திபெத்திய பீடபூமி

Question 2.
‘மான்சூன் காலநிலை பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:

  • தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகள் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும்.
  • கோடை காலம் அதிக வெப்பமும் ஈரப்பதத்துடனும், குளிர்காலம் வறண்டும் காணப்படும்.
  • கோடை காலப் பருவமழைக் காற்றுகள் இந்தியா, வங்காள தேசம், இந்தோ – சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனா ஆகிய இடங்களுக்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்றன..

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
நிலத்தோற்றங்கள் ஆசியாவின் மக்கள் தொகை பரவலை எவ்வாறு பாதிக்கின்றது?
விடை:

  • உலக மக்கள் தொகையில் பத்தில் ஆறுபங்கு ஆசியாவில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட – இயற்கைக் கூறுகளினால் ஆசியாவின் மக்கட்பரவல் சீரற்றுக் காணப்படுகிறது.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி மிகக் குறைந்து காணப்படுகிறது. (சதுர கிலோமிட்டருக்கு 143நபர்கள்)

Question 4.
ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • டோக்கியோ
  • ஷங்காய்
  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • சென்னை
  • மும்பை
  • கராச்சி
  • துபாய்

Question 5.
‘வேறுபாடுகளின் நிலம்’ ஆசியா நிரூபி.
விடை:
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியா வேற்றுமையின் இருப்பிடம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஆசியா பல்வேறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்டது (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், விரிகுடாக்கள், தீவுகள்)
  • அது பல்வேறு காலநிலைகளைக் கொண்டது (நிலநடுக்கோட்டிலிருந்து துருவப்பகுதி வரை)
  • பல இனங்கள், மொழிகள், சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆசிய மக்களால் பின்பற்றப் படுகின்றன.

Question 6.
ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?
விடை:

  • சியாரா நெவேடா பைரினீஸ்
  • ஆல்ப்ஸ்
  • அப்னின்ஸ்
  • டினாரிக் ஆல்ப்ஸ்
  • காகசஸ்
  • கார்பேதியன்

Question 7.
ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை?
விடை:

  • வோல்கா
  • டான்யூப்
  • நீப்பர் ரைன்
  • ரோன்
  • போ
  • தேம்ஸ்

Question 8.
ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  • பிரான்ஸ்
  • ஸ்பெயின்
  • இத்தாலி
  • சிசிலி

Question 9.
ஐரோப்பாவின் மக்கள் தொகையைப் பற்றிச் சிறு குறிப்புத் தருக.
விடை:

  • ஐரோப்பா கண்டம் ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டது.
  • 2018ல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 742 மில்லியன் (உலக மக்கள் தொகையில் 9.73 சதவீதம்) ஐரோப்பிய மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள்

Question 10.
ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடு.
விடை:

  • கிறிஸ்துமஸ்
  • ஈஸ்டர்
  • புனித வெள்ளி
  • புனிதர்கள் நாள்
  • ரெடன்டோர்
  • டோமாட்டினா
  • கார்னிவல்

VI. வேறுபடுத்துக்

Question 1.
மலையிடைப் பீடபூமி மற்றும் தென்பீடபூமி
விடை:
மலையிடைப் பீடபூமி

  • அனடோலிய பீடபூமி
    (போன்டைனிலிருந்து டாரஸ்மலை வரை)
  • ஈரான் பீடபூமி
    (எல்பர்ஸிருந்து ஜாக்ரோஸ் வரை)
  • திபெத்திய பீடபூமி
    (குன்லுனிலிருந்து இமயமலை வரை)

தெற்கு பீடபூமிகள்

  • அரேபிய பீடபூமி (சௌதி அரேபியா)
  • தக்காண பீடபூமி (இந்தியா)
  • ஷான் பீடபூமி (மியான்மர்)
  • யுனான் பீடபூமி (சீனா)
    இப்பீடபூமிகள் வடக்கு பீடபூமிகளைக்
    காட்டிலும் உயரம் குறைந்து காணப்படுகின்றன.

Question 2.
வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர்பாலைவனம்
விடை:
வெப்பப் பாலைவனம்

  • அரேபிய பாலைவனம் (சௌதி அரேபியா)
  • தார் பாலைவனம்
    (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

குளிர்பாலைவனம்

  • கோபி பாலைவனம்
  • தக்லாமக்கன் பாலைவனம்
    ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம்
    அரேபிய பாலைவனமாகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
தூந்திரா மற்றும் டைகா
விடை:
தூந்திரப்பிரதேசம்

  • ஆர்டிக் மற்றும் வட ஸ்காண்டினேவிய உயர்நிலங்கள் தூந்திர வகை இயற்கைத் தாவரங்களைக் கொண்டுள்ளன.
  • இங்கு லிச்சன்ஸ் மற்றும் பாசி வகைகள் காணப்படுகின்றன.
    டைகா (ஊசியிலைக்காடுகள்)
  • தூந்திரப்பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் டைகா (ஊசியிலை) காடுகள் காணப்படுகின்றன.
  • இக்காடுகளில் பைன், ஃபிர், ஸ்புரூஸ் மற்றும் லார்ச் போன்ற முக்கிய மரவகைகள் காணப் படுகின்றன.

Question 4.
வடமேற்கு மேட்டு நிலம் மற்றும் ஆல்பைன் மலைத்தொடர்
விடை:
வடமேற்கு உயர்நிலங்கள்

  • இப்பிரதேசம், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மலைகள் ற்றும் பீடபூமிகளை உள்ளடக்கியது.
  • இது பிளவுபட்ட கடற்கரையினைக் கொண்டது. இக்கடற்கரைகள் பனியாறுகளால் உருவானவை.
  • இங்குள்ள அதிகமான ஏரிகள் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களாக செயல்படுகின்றன.
  • ஆல்பைன் மலைத்தொடர் ஆல்பைன் மலைத்தொடர் தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் ஆகும்.
  • சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்னின்ஸ், டினாரிக் ஆல்ப்ஸ், காகசஸ் மற்றும் கார்பேதியன் ஆகியவை முக்கிய மலைத்தொடர்கள்.
  • பைரனீஸ் மலைகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் இயற்கை எல்லையாக விளங்குகின்றன.

VII. காரணம் தருக

Question 1.
ஆசியா, அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
விடை:
ஆசியா அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது ஏனெனில்

  • ஆசியாவின் முக்கிய உணவுப் பயிர்களில் நெல் (அரிசி) ஒன்றாகும். உலகிலேயே மிக அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா
  • மியான்மர், ஜப்பான், வங்காளதேசம், தாய்லாந்து ஆகியவை பிற நெல்விளைவிக்கும் நாடுகள்.
  • அதிக மழைப்பொழிவு, செழுமை வாய்ந்த சமவெளிகள் மற்றும் மனிதவளம் அகியவற்றை
    பெற்றிருப்பதால் பருவமழை பெய்யும் ஆசியப்பகுதிகள் நெல்விளைய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன.
  • தென்கிழக்கு ஆசியாவின் ‘அரிசிக்கிண்ணம்’ என தாய்லாந்து அழைக்கப்படுகிறது.

Question 2.
ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஏனெனில்
விடை:

  • வட அரைக்கோளத்தில் பரவியுள்ள ஆசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு பல வகையான நிலத்தோற்றம் மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது.
  • உயர்ந்த மலைகள், பீடபூமிகள், பரந்த சமவெளிகள், தீவுகள் மற்றும் தீபகற்பங்கள் ஆகியவை – மக்கிய இயற்கை நிலத் தோற்றங்களாகும்.
  • வற்றாத ஆறுகள் பல்வேறு நிலப்பரப்புகளில் பாய்கின்றன. இந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பழமையான நாகரிகங்களின் தொட்டிலாகும்.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைந்து காணப்படுகிறது. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 143 நபர்கள்.
  • ஆசியா உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும், உள்ளடக்கியது.

Question 3.
ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகின்றது.
விடை:
ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஐரோப்பா வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
  • அது 10.5 மில்லியன் ச.கிமீ பரப்பளவைக் கொண்டது.
  • அது வடக்கே ஆர்டிக் பெருங்கடல், தெற்கே கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கே யூரல் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

Question 4.
மேற்கு ஐரோப்பாவானது உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான கால நிலையைப் பெற்றுள்ளது.
விடை:
மேற்கு ஐரோப்பா உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான காலநிலையைப் பெற்றுள்ளது ஏனெனில்

  • வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகள் பொதுவாக லேசான ஈரப்பதமான காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • வட அட்லாண்டிக் வெப்பக்கடல் நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்கு பகுதிக்கு மிதமான வெப்பத்தை அளிக்கிறது.

VIII. ஒரு பத்தியில் விடையளி

Question 1.
ஆசியாவின் வடிகால் அமைப்பைப் பற்றி விவரி?
விடை:

  • ஆசியாவின் பெரும்பான்மையான ஆறுகள் மத்திய உயர் நிலங்களில் தோன்றுகின்றன.
  • ஓப், எனிசி, லேனா ஆகிய முக்கிய ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இவை குளிர்காலத்தில் உறைந்துவிடுகின்றன.
  • வற்றாத ஆறுகளான பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை, ஐராவதி போன்றவை உயர்ந்த மலைகளில் தோன்றுகின்றன. இவை குளிர் காலத்தில் உறைவதில்லை.
  • யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் மேற்கு ஆசியாவில் பாய்கின்றன.
  • அமூர், ஹோவாங்கோ, யாங்சி மற்றும் மீகாங் போன்றவை தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பாய்கின்றன. யாங்சி ஆசியாவின் மிக நீளமான ஆறு.

Question 2.
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி?
விடை:
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்கள்:
இரும்புத்தாது : ஆசியா உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தைக் கொண்டுள்ளது. சீனா, இந்தியா, துருக்கி, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இரும்புத்தாது இருப்புள்ள நாடுகளாகும்.

நிலக்கரி : நிலக்கரி படிம எரிபொருள். உலகிலேயே அதிக நிலக்கரி இருப்பு ஆசியாவில்தான் உள்ளது. ஆசியாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா.

பெட்ரோலியம் : பெட்ரோலியம் கனிம எண்ணெய் வளம். பெட்ரோலிய இருப்புகள் தென் மேற்கு ஆசியாவில்தான் அதிகமாக காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத், ஈரான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரேபிய குடியரசு ஆகியன பெட்ரோலிய உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். தெற்கு சீனா, மலேசியா, புரூனே, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா போன்றவை பெட்ரோலிய உற்பத்தி செய்யும் பிற நாடுகள்.

  • பாக்ஸைட் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகிறது.
  • மைக்கா அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா.
  • தகரம் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

Question 3.
பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?
விடை:

  • செங்குத்தான பாறைகளுக்கிடையே உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை ஆகும்.
  • இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன.
  • கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன.
  • கடந்த காலங்களில் நடைபெற்ற பனியாறுகளினால் உருவானவை பிளவுபட்ட கடற்கரைகள்
  • பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது. எ.கா. நார்வே.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 4.
ஐரோப்பாவின் காலநிலைப் பிரிவுகளைப் பற்றி விவரி?
விடை:

  • ஐரோப்பிய காலநிலை மித வெப்ப மண்டல காலநிலை முதல் துருவ காலநிலை வரை வேறுபட்டுக் காணப்படுகிறது…
  • தென்பகுதியில் காணப்படும் மத்திய தரைக்கடல் பகுதி காலநிலை மிதமான கோடைகாலமும் குளிர்கால மழையும் கொண்டது.
  • மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் பொதுவாக லேசான. ஈரப்பதம் வாய்ந்த காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் காலநிலை ஈரப்பதம் வாய்ந்த கண்ட காலநிலை
  • வடகிழக்கில் துணை துருவ மற்றும் தூந்திரக் காலநிலை காணப்படுகிறது.
  • ஐரோப்பா முழுவதும் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து வீசுகின்ற மேற்கத்திய காற்றுகளின் மிதமான தாக்கத்திற்கு உட்படுகின்றது.

X. செயல்பாடு

Question 1.
கீழ்க்கண்டவற்றைப் பூர்த்தி செய்க.
என்னுடைய மாவட்டம் ……… என் மாவட்டம் 1………. 2 ……… 3 ……….. க்குப் புகழ் பெற்றது. என் மாவட்டத்தின் எல்லைகள், வடக்கே … … கிழக்கே ……….. தெற்கு ……… மற்றும் மேற்கே ……. ஆகும். இது ……. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது …… வட்டங்களையும், …………. கிராமங்களையும் கொண்டுள்ளது……………………… ஆகியன முக்கிய மலைகள் / சமவெளிகள் /பீடபூமிகள் ஆகும். (அனைத்தும் இருந்தாலும் எழுதவும்) ………… ஆறுகள் என் மாவட்டத்தில் பாய்கின்றன. ……….. . ஆகிய மரங்களும் ………………….. ஆகிய வனவிலங்குகளும் உள்ள ன…………. …………… போன்ற முக்கிய தனிமங்கள் இங்குக் கிடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு ……………… தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. இங்கு விளையும் முக்கிய பயிர்கள் …
………… ஆகும். (கடலோர மாவட்டம் என்றால் மீன் வகைகள்) மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை …………. நாங்கள் ……….. விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
விடை:
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், குற்றாலம், அல்வா, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை, 16 வட்டங்கள், 559 கிராமங்கள், பொதிகை மலை, தாமிரபரணி சமவெளி, தக்காணப் பீடபூமி விளிம்பு, தாமிரபரணி, சிற்றாறு, மணிமுத்தாறு, பனை, வேம்பு, தென்னை , குரங்குகள், புலிகள், யானைகள், கருங்கல், சுண்ணாம்புக்கல், தோரியம், சிமெண்ட், பருத்தி ஆலை, பாத்திரங்கள், நெல், பருத்தி, கரும்பு, 3322644, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,

2. ஐரோப்பாவை இருப்பிடமாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த நாட்டை தேர்வு செய்வாய்? காரணங்களைப் பட்டியலிடுக.

3. ஆசியாவின் ஏதாவது ஒரு பிரதேசத்தைத் தேர்வு செய்க. ஆசியா வரைபடத்தில் இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலைக் குறிக்கவும். அது தொடர்பான படங்களை ஒட்டி வரவும்.

6th Social Science Guide ஆசியா மற்றும் ஐரோப்பா Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிப்பது
அ) சூயஸ் கால்வாய்
ஆ) பேரிங் நீர்ச்சந்தி
இ) மத்திய தரைக்கடல்
ஈ) பாக் நீர்ச்சந்தி
விடை:
அ) சூயஸ் கால்வாய்

Question 2.
உலகின் தாழ்வான பகுதி
அ) கருங்கடல்
ஆ) செங்கடல்
இ) சாக்கடல்
ஈ) மஞ்சள் கடல்
விடை:
இ) சாக்கடல்

Question 3.
தெற்காசியாவில் பாயும் ஆறுகள்
i) குளிர்காலத்தில் உறையும்
ii) வடக்கு நோக்கிப் பாயும்
iii) வற்றாத ஆறுகள்
அ) i மட்டும் சரி
ஆ) iii மட்டும் சரி
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
விடை:
ஆ) iii மட்டும் சரி

Question 4.
ஆசிய மொத்தப்பரப்பில் வேளாண்மைக்கு ஏற்ற நிலப்பரப்பு
அ) 18%
ஆ) 28%
இ) 40%
ஈ) 48%
விடை:
அ) 18%

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 5.
யாங்சி ஆறு பாயும் நாடு
அ) இந்தியா
ஆ) ஜப்பான்
இ) மியான்மர்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

Question 6.
வங்காளவிரிகுடாவில் அமைந்துள்ள தீவு
அ) மாலத்தீவு
ஆ) பஹ்ரைன்
இ) இலங்கை
ஈ) ஜப்பான்
விடை:
இ) இலங்கை

Question 7.
பொருந்தாத இணையைக் கண்டறி
அ) சைபீரிய சமவெளி – ஓப், எனிசி
ஆ) மஞ்சூரியன் சமவெளி – அமூர்
இ) சீன பெருஞ்சமவெளி – யாங்சி, சிகியாங்
ஈ) மெசபடோமிய சமவெளி – ஐராவதி
விடை:
ஈ) மெசபடோமிய சமவெளி – ஐராவதி

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 90
விடை:
1. கால்வாய்
2. நீர்ச்சந்தி
3. முடிச்சு
4. கணவாய்
5. பாலைவனம்

III. சரியா தவறா

Question 1.
ஆசியாவில் இரு மலை முடிச்சுகள் காணப்படுகின்றன.
விடை:
சரி

Question 2.
ஓப், எனிசி, லேனா ஆகியவை குளிர்காலத்தில் உறைந்து விடுகின்றன.
விடை:
சரி

Question 3.
தேக்கு, சந்தனம் ஊசியிலைக்காட்டு மரங்கள்
விடை:
தவறு

Question 4.
பிளவுபட்ட கடற்கரைப் பகுதியில் ஏரிகள் அதிகமாக உள்ளன.
விடை:
சரி

Question 5.
ஐரோப்பா முழுவதும் காணப்படும் முதன்மையான பயிர் கோதுமை
விடை:
சரி

IV. சுருக்கமான விடையளி

Question 1.
நாகரிகங்களின் தொட்டில் எது? ஏன்?
விடை:

  • ஆற்றுப் பள்ளத்தாக்குகள் நாகரிகங்களின் தொட்டிலாகும்.
  • ஏனெனில் பழமையான மெசபடோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் மற்றும் சீன நாகரிகம் ஆகி யன ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் தோன்றின.

Question 2.
தீவுக்கூட்டம் பற்றி நீ அறிந்ததென்ன?
விடை:

  • ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப் படுகிறது.
  • இந்தோனேசியா மிகப்பெரிய தீவுக்கூட்டம்

Question 3.
ஆசியாவில் காணப்படும் அரியவகை விலங்கினங்கள் எவை?
விடை:

  • உராங்குடான்
  • கோமோடோ டிராகன்
  • பெரிய பாண்டாக் கரடி

Question 4.
மத்திய தரைக்கடல் பகுதி மரங்கள் யாவை?
விடை:

  • சைப்ரஸ்
  • கார்க்
  • ஓக்
  • ஆலிவ்
  • செடார்

Question 5.
மீன் பிடித்தல் மிகப்பெரிய தொழிலாக நடைபெறும் நாடுகள் யாவை?
விடை:

  • நார்வே
  • ஐஸ்லாந்து
  • ரஷ்யா
  • டென்மார்க்
  • ஐக்கிய பேரரசு
  • நெதர்லாந்து

V. காரணம் கூறுக

Question 1.
ஐரோப்பா புதுமை வாய்ந்த பொருளாதார முன்னேற்றமடைந்த கண்டம்
விடை:
ஐரோப்பா புதுமை வாய்ந்த பொருளாதார முன்னேற்றமடைந்த கண்டம்
ஏனெனில்
கிடைக்கப்பெறும் வளங்கள், ஆற்றலுடைய படித்த வேலையாட்கள், ஆராயும் தன்மை, மற்ற நாடுகளுடனான தொடர்பு, புதுமையை நாடுதல் ஆகிய காரணிகள் அவ்வாறு மாற்றியுள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 2.
ஐரோப்பாவில் பல்வேறு வகையான வேளாண்முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
விடை:
ஐரோப்பாவில் பல்வேறு வகையான வேளாண் முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
ஏனெனில்

  • ஐரோப்பா தொழில் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பா நில அமைப்பு, காலநிலை, மண் ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படுகிறது.
  • இவை ஒன்றுடன் ஒன்று இடைவினை ஆற்றுவதால் பல்வேறு வேளாண் முறைகள் பயன் பாட்டில் இருக்கின்றன.
    (பயன்பாட்டில் உள்ள வேளாண் முறைகள் : மத்திய தரைப்பகுதி வேளாண்மை, பால் பண்ணை , கலப்புக் கால்நடை வளர்ப்பு, பயிர் வளர்ப்பு)

Question 3.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் குளிர்காலம் இல்லை.
விடை:
நிலநடுக்கோட்டுப் பகுதியில் குளிர்காலம் இல்லை.
ஏனெனில்
நிலநடுக்கோட்டிலும் அதனைச் சுற்றிலும் காணப்படுகின்ற ஆசியப் பகுதியிலும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை உள்ளது. குளிர்காலம் இல்லை . சராசரி வெப்பம் 27°C. சராசரி மழைப்பொழிவு 1270மி.மீ.

VII. ஒரு பத்தியில் விடையளி

Question 1.
ஐரோப்பாவில் காணப்படும் தொழில்கள் குறித்து விவரி.
விடை:

  • பெருந்தொழில்கள் : எஃகு மற்றும் இரும்புத்தாது உற்பத்தி, கப்பல் கட்டுதல், மோட்டார் வாகனங்கள், விமானம் தயாரித்தல், மருந்து வகைகள்.
  • நிலைத்த தன்மையற்ற பொருட்களைத் தயாரிக்கும் சிறு தொழிலகங்கள் ஐரோப்பா முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
  • சில நாடுகள் தங்கள் நாட்டுக்கென சிறப்பம்சம் பொருந்திய பொருட்களைத் தயாரிக்கின்றன.
    மிதிவண்டிகள் – இங்கிலாந்து, இத்தாலி, டச்சு
    கண்ணாடிகள் – சுவிடன், பின்லாந்து
    வாசனை திரவியங்கள்
    மற்றும் அழகு சாதனப்
    பொருட்கள் – பாரிஸ்
    துல்லியமான கருவிகள் – சுவிஸ்

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

6th Social Science Guide தென்னிந்திய அரசுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) தந்திவர்மன்
ஈ) பரமேஸ்வரவர்மன்
விடை:
ஆ) இரண்டாம் நந்திவர்மன்

Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
அ) மத்தவிலாசன்
ஆ) விசித்திரசித்தன்
இ) குணபாரன்
ஈ) இவை மூன்றும்
விடை:
ஈ) இவை மூன்றும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 3.
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அ) அய்கோல்
ஆ) சாரநாத்
இ) சாஞ்சி
ஈ) ஜூனாகத்
விடை:
அ) அய்கோல்

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை மக் செய்யவும்

Question 1.
கூற்று (i) : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று (ii) : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அ. கூற்று i தவறு
ஆ) கூற்று ii தவறு
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
இ. இரு கூற்றுகளும் சரி

Question 2.
பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுக்களைச் சிந்திக்கவும்
கூற்று (i) : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று (ii) : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்
அ: கூற்று i மட்டும் சரி
ஆ) கூற்று ii மட்டும் சரி
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
இ. இரு கூற்றுகளும் சரி

Question 3.
ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைச் சிந்தித்து அவற்றில் எவை சரியா ன கூற்றென்று கண்டறியவும்
விடை:
1. இவ்வம்சத்தை நிறுவியர் தந்திதுர்கா
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2,3 சரி
இ) 1,3 சரி
ஈ) மூன்றும் சரி
விடை:
ஈ) மூன்றும் சரி

Question 4.
கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
அ) எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
அ) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்
ஈ) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்
விடை:
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்

Question 5.
தவறான இணையைக் கண்டறியவும்
அ) தந்தின் – தசகுமார சரிதம்
அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
இ) பாரவி – கிரதார்ஜூனியம்
ஈ) அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்
விடை:
அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. ஹர்ஷவர்த்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
விடை:
இரண்டாம் புலிகேசி

Question 2.
…….. வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
விடை:
முதலாம் நரசிம்மவர்மன்

Question 3.
அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ……… ஆவார்
விடை:
ரவி கீர்த்தி

Question 4.
……… முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாவார்
விடை:
பரஞ்சோதி (சிறுத்தொண்டர்)

Question 5.
……………. ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
விடை:
குடுமியான்மலை, திருமயம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 80

V. சரியா /தவறா என எழுதுக

Question 1.
புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்
விடை:
சரி

Question 2.
ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி
விடை:
தவறு

Question 3.
மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்
விடை:
சரி

Question 4.
தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது’
விடை:
தவறு

Question 5.
விருப்பாஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
விடை:
தவறு

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஆதிகவி பம்பா
  • ஸ்ரீ பொன்னா
  • ரன்னா

Question 2.
பல்லவர் கட்டடக் கலையை நாம் எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:

  • பாறை குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
  • ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் – மாமல்லன் பாணி
  • கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி மற்றும் நந்திவர்மன் பாணி

Question 3.
கடிகை பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • காஞ்சியிலிருந்த கடிகை பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
  • அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்த்தது.
  • அங்கு நியாயபாஷ்யா நூலாசிரியர் ஆசிரியராக இருந்தார்.

Question 4.
பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைப் பாறைக்கல் ரதங்கள் ஆகும் – விளக்குக.
விடை:

  • பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில் கட்டட பாணியை உணர்த்துகின்றன.
  • ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக்கல்லிலிருந்து செதுக்கப் பட்டிருக்கின்றன. எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 5.
தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:

  • மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசராவார்.
  • அவர் தக்கோலம் போர்க்களத்தில் சோழர்களைத் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். (தக்கோலம் தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ளது)

VII. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க
விடை:
பல்லவர்காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்ற காலம். மாமல்லபுரம் 1984ல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டது. பல்லவர் கால கலையின் கலை அழகிற்கு எடுத்துக்காட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், பிறகோவில்கள், வராகர் குகை.

மகேந்திரவர்மன் பாணி : (பாறை குடைவரைக் கோவில்கள்)

மகேந்திரவர்மன் பாணி குகைக் கோவில்கள் மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

மாமல்லன் பாணி : (ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும்)

  • மாமல்லன் பாணி ஒற்றைக்கல் ரதங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு மாமல்லபுரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் ரதங்கள். மகிஷாசுர மர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை மாமல்லன் கட்டிய பிரபல மண்டங்கள்.
  • மகாபலிபுர திறந்த வெளிக் கலையரங்கம் மிக முக்கியமானது சிவபெருமான் தலை கங்கை நதி, அர்ச்சுனன் தபசு ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

ராஜசிம்மன் பாணி : (கட்டுமானக் கோவில்கள்)

ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) பாணி கோவிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகும். இக்கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

நந்திவர்மன் பாணி (கட்டுமானக் கோவில்கள்)

நந்திவர்மன் பாணி பல்லவ கோவில் கட்டடக்கலையின் இறுதிக்கட்டம். காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் நந்திவர்மன் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Question 2.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
எலிபெண்டா தீவு :

  • எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் இயற்பெயர் ஸ்ரீபுரி, உள்ளூர் மக்களால் காரபுரி என்று அழைக்கப்படுகிறது.
  • போர்த்துகீசியர்கள் உருவத்தை கண்ணுற்றபின் எலிபெண்டா எனப் பெயரிட்டனர்.
  • திரிமூர்த்தி சிவன் சிலை மற்றும் துவாரபாலகர்களின் சிலைகள் ஆகியவை குகை கோவிலில் காணப்படுகின்றன.

கைலாசநாதர் கோவில் – எல்லோரா :

  • முதலாம் கிருஷ்ணர் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார். இது எல்லோராவில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் ஒன்று.
  • இக்கோவில் 60000 சதுர அடிகள் பரப்பளவையும் விமானம் 90 அடிகள் உயரமும் கொண்டது.
  • திராவிடக் கட்டடக் கூறுகளைக் கொண்டுள்ள இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
விடை:

  • கல்யாணி மேலைச் சாளுக்கியர், கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த வாதாபிச் சாளுக்கியர்களின் வழித் தோன்றல்கள்.
  • கி.பி. 973ல் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் தைலப்பர், மாளவ அரசர் பராமாரரை தோற்கடித்தார்.
  • இரண்டாம் தைலப்பர் கல்யாணியைக் கைப்பற்றியபின் இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது.
  • முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார். மேலைச் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர்.
  • நர்மதை ஆற்றுக்கும் காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் சாளுக்கியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

IX. வாழ்க்கைத்திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. பல்லவர், சாளுக்கியர், ராஷ்டிரகூடர் ஆகியோரின் கோவில் கட்டடக் கலை குறித்த படங்களைச் சேகரிக்கவும், ஒவ்வொன்றுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை வேறுபடுத்தவும்.
2. களப்பயணம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடவும்.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
முதலாம் மகேந்திரவர்மன், இரண்டாம் புலிகேசி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுக.
விடை:

  • அர்ச்சுணன் ஒற்றைக் காலில் தவமிருக்கிறார். மத்தியில் பாம்பு வடிவ மனித உருவம் உள்ளது. தேவகணங்கள் சூழ சிவன் காணப்படுகிறார். வேடர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் காணப்படுகின்றன.
  • மேலும் யானைக்கூட்டத்தையும் காண முடிகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 2.
படத்தைப் பார்த்து அது குறித்துச் சில வாக்கியங்கள் எழுதவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 91

6th Social Science Guide தென்னிந்திய அரசுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அவனிசிம்மர் என்றழைக்கப்பட்டவர்
அ) சிம்ம விஷ்ணு
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) மகேந்திரவர்மன்
ஈ) அபராஜிதன்
விடை:
அ) சிம்ம விஷ்ணு

Question 2.
பல்லவ அரசின் மையப்பகுதி
அ) தொண்டை மண்டலம்
ஆ) கொங்கு மண்டலம்
இ) பாண்டிய மண்டலம்
ஈ) குமரி மண்டலம்
விடை:
அ) தொண்டை மண்டலம்

Question 3.
மங்களேசன் …… வம்சத்தினர்
அ) சாளுக்கிய
ஆ) பல்லவ
இ) ராஷ்டிரகூட
ஈ) குப்த
விடை:
அ) சாளுக்கிய

Question 4.
ராஷ்டிரகூடர்களின் புதிய தலைநகரம்
அ) மான்யக்கேட்டா
ஆ) ஔரங்கபாத்
இ) புரோச்
ஈ) பட்டடக்கல்
விடை:
அ) மான்யக்கேட்டா

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து பொருத்தமான விடையை எழுது.

Question 1.
கூற்று I : முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை ஆதிபுராணம் சித்தரிக்கிறது.
கூற்று II : ராஷ்டிரகூடர்கள் சமணத்தைப் பின்பற்றினார்கள்.
அ) கூற்று I தவறு
ஆ) கூற்று II தவறு
இ) இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
ஆ) கூற்று II தவறு

Question 2.
கூற்று I : அப்பரும் மாணிக்கவாசகரும் வைணவ அடியார்கள்
கூற்று II : நம்மாழ்வரும் ஆண்டாளும் சிவன் அடியார்கள்
அ) கூற்று I சரி
ஆ) கூற்று II சரி
இ) இரண்டு கூற்றுகளும் தவறு
ஈ) இரு கூற்றுகளும் சரி
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கடைசி பல்லவ மன்ன ன் ……..
விடை:
அபராஜிதன்

Question 2.
இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்த புலவர் ……….
விடை:
பெருந்தேவனார்

Question 3.
ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி ……
விடை:
வாகடகர்

Question 4.
நாட்சை சரியான முறையில் வைத்திருத்த கடைசி ராஷ்டிரகூட அரசர் ……..
விடை:
மூன்றாம் கோவிந்தன்

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
பல்லவர் கால புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியார்
விடை:
சரி

Question 2.
சிவனின் அவதாரங்கள் வராகம், நரசிம்மம், வாமனன்
விடை:
தவறு

Question 3.
ராஷ்டிரகூடர்கள் பிறப்பால் தெலுங்கர்கள்
விடை:
தவறு

Question 4.
சாந்து இல்லாமல் கற்களைக் கொண்டு கட்டிடம் கட்டும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தியவர்கள் சாளுக்கியர்கள்
விடை:
சரி

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
சிறுத்தொண்டர் பற்றி எழுதுக.
விடை:

  • முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி வாதாபி படையெடுப்புக்கு தலைமை ஏற்றவர்
  • வாதாபி வெற்றிக்குப்பின்னர் சிவபக்தரான அவர் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத் தொண்டர் என அறியப்பட்டார்.

Question 2.
மகேந்திரவர்மன் இலக்கியப்பணி குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • பல்லவமன்னர் மகேந்திரவர்மன் மத்தவிலாசப் பிரகசனம் உட்பட சில நாடகங்களை எழுதியுள்ளார்.
  • சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

Question 3.
சாளுக்கியர்களின் வெவ்வேறு ஆனால் தொடர்புடைய, சார்பற்ற வம்சங்கள் யாவை?
விடை:

  • வாதாபிச் சாளுக்கியர்கள்
  • வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)
  • கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)

Question 4.
‘வெசாரா பாணி’ – விளக்குக.
விடை:

  • சாளுக்கியர்கள் காலத்தில் வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது.
  • தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பணிகளின் கலப்பு வெசாரா பாணி

VII. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
பட்டடக்கல் குறித்து விவரி.
விடை:

  • பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்
  • இங்கு 10 கோவில்கள் உள்ளன. அவற்றில் 4 நாகாரா பாணியிலும் 6 திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.
  • திராவிட பாணி – விருபாக்ஷா கோவில், சங்கமேஸ்வர கோவில் நாகாரா பாணி – பாப்பநாதர் கோவில்
  • பட்டடக்கல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னம்

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

7th Social  Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வட அமெரிக்காவையும் ஆசியாவையும் ………………. பிரிக்கிறது.
அ) பேரிங் நீர் சந்தி
ஆ) பாக் நீர் சந்தி
இ) மலாக்கா நீர் சந்தி
ஈ) ஜிப்ரால்டர் நீர் சந்தி
விடை:
அ) பேரிங் நீர் சந்தி

Question 2.
…………………… உலகின் சர்க்கரைக் கிண்ண ம் என அழைக்கப்படுகிறது.
அ) மெக்ஸிகோ
ஆ) அமெரிக்கா
இ) கனடா
ஈ) கியூபா
விடை:
ஈ) கியூபா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 3.
………………….. வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
ஆ) மெக்கென்ஸி ஆறு
இ) புனித லாரன்சு ஆறு
ஈ) கொலரடோ ஆறு
விடை:
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

Question 4.
உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ……………
அ) ஆன்டிஸ்
ஆ) ராக்கி
இ) இமயமலை
ஈ) ஆல்ப்ஸ்
விடை:
அ) ஆன்டிஸ்

Question 5.
பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் ………………… வடிநிலப்படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.
அ) மெக்கென்ஸி
ஆ) ஒரினாகோ
இ) அமேசான்
ஈ) பரானா
விடை:
இ) அமேசான்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ………………. கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
விடை:
மரண பள்ளத்தாக்கு

Question 2.
உலகின் தலை சிறந்த மீன்பிடித் தளமாக ……………….. விளங்குகிறது.
விடை:
கிராண்ட் பேங்க்

Question 3.
சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள …………………. ஆண்டிஸ் மலைத்தொடரின் உயரமான சிகரமாகும்.
விடை:
அகான்காகுவா சிகரம்

Question 4.
பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ……………………. உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
விடை:
அமேசான் காடுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 5.
………………. ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.
விடை:
பிரேசிலி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 2

IV. காரணம் கூறுக

Question 1.
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
விடை:
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
ஏனெனில்
தெற்குப் பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளும் கோடைகாலங்களில் வீசும் வடகிழக்கு பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.

சூடான ஈரப்பதம் மிகுந்த தென்மேற்குப் பருவக்காற்றுகள் வட அமெரிக்காவின்வடமேற்குப் பகுதிகளுக்கு மழைப்பொழிவை தருவதோடு அல்லாமல் அப்பகுதி வெப்பமாக இருக்கவும் உதவுகிறது.

Question 2.
அமெரிக்கா “உருகும் பானை” என அழைக்கப்படுகிறது.
விடை:
அமெரிக்கா “உருகும் பானை என அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.

Question 3.
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
விடை:
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
ஏனெனில்

  • அமேசான் வடிநிலப் பகுதியில் பூமத்தியரேகை செல்கிறது. இங்கு வெப்ப காலநிலை காணப்படுகிறது.
  • அதே அட்சரேகையில் ஆன்டஸ் மலைகளின் மேல் அமைந்திருக்கும் கியுடோ 9350 அடி கடல் மட்டத்திற்கு மேல் அமைந்து மிதமான காலநிலையை கொண்டுள்ளது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
விடை:
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
ஏனெனில்

  • ஹம்போல்ட் (பெரு) குளிர் நீரோட்டம் பிளாங்டன்களை (மீன்களின் முக்கிய உணவு) பெரு நாட்டிற்கு அருகில் கொண்டு சேர்க்கிறது.
  • ஆழ்கடல் மீன் தொழில் பெரு கடற்கரையில் 3000 கி.மீ. வரை கடலுக்குள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • 50க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன.
  • பெருவின் கடற்கரையில் 40க்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.

V. வேறுபடுத்துக

Question 1.
ராக்கி மலைகள் மற்றும் அப்பலேஷியன் மலைகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 3

Question 2.
பிரெய்ரி மற்றும் பாம்பாஸ் புல்வெளிகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 4

Question 3.
துந்திர பகுதி மற்றும் டைகா பகுதி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 5

VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது.
காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

Question 2.
கூற்று (A) : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.
காரணம் (R) : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
இ) கூற்று தவறு. காரணம் சரி.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
வட அமெரிக்காவின் எல்லைகளை கூறுக.
விடை:
வட அமெரிக்காவின் எல்லைகள்:

  • வடக்கு – ஆர்க்டிக் பெருங்கடல்
  • கிழக்கு – அட்லாண்டிக் பெருங்கடல்
  • மேற்கு – பசிபிக் பெருங்கடல்
  • தெற்கு – தென் அமெரிக்கா

Question 2.
மெக்கன்சி ஆறு பற்றி குறிப்பு வரைக.
விடை:
மெக்கன்சி ஆறு :

  • மெக்கன்சி ஆறு வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருக்கிறது.
  • இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

Question 3.
வட அமெரிக்காவில் விளையும் பழங்களின் வகைகள் யாவை? அவற்றில் சில பழங்களைப் பட்டியலிடுக.
விடை:
சிட்ரஸ் வகை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
பழங்களின் பட்டியல் :

  • கிரான்பெரீஸ்
  • ப்ளூபெர்ரி
  • கான்கார்ட் திராட்சைகள்
  • ஸ்ட்ராபெர்ரி
  • நெல்லிக்கனி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை பற்றி குறிப்பு வரைக.
விடை:
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை:

  1. எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் வாழ்கிறார்கள் (மீன்கள் அதிகம் கிடைக்குமிடங்கள்).
  2. விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்துகிறார்கள். இஃலூக்களில் வாழ்கிறார்கள்.
  3. இவர்களால் சுற்றுச்சூழலை பெரிதும் மாற்றி அமைக்க இயலாத நிலை. எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

Question 5.
வட அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் யாவை?
விடை:
வட அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள்:

  • வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதி
  • கிரேட் ஏரி பகுதி
  • மெக்ஸிகோ
  • மத்திய அமெரிக்கா

Question 6.
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகளை எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகள்:

  • ஆன்டஸ் மலைத்தொடர்
  • ஆற்றுப்படுகை (அல்லது) மத்திய சமவெளிகள்
  • கிழக்கு உயர்நிலங்கள்

Question 7.
4 மணி ‘கடிகார மழை’ என்றால் என்ன?
விடை:
4 மணி ‘கடிகார மழை’:

  1. பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது.
  2. இந்நிகழ்வு பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது. எனவே இது 4 மணி ‘கடிகார மழை’ என்று அழைக்கப்படுகிறது.

Question 8.
தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பட்டியலிடுக.
விடை:
தென் அமெரிக்க வெப்ப மண்டலக் காடுகள் பூமத்திய ரேகை காடுகள்):
தாவரங்கள்:

  • ரப்பர்
  • சீமைத்தேக்கு
  • கருங்காலி
  • லாக்வுட்
  • சிபா
  • பிரேசில் கொட்டை

விலங்குகள்:

  • அனகோண்டா
  • ஆர்மாடில்லோஸ்
  • பிரன்ஹா
  • குரங்கு
  • பாம்பு
  • முதலை
  • கிளிகள்

Question 9.
எஸ்டான்சியாஸ் என்றால் என்ன ?
விடை:
எஸ்டான்சியாஸ்:
கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்டான்சியாஸ் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 10.
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளை கூறுக.
விடை:
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்:

  • சர்க்கரை
  • காபி
  • கொக்கோ
  • புகையிலை
  • மாட்டிறைச்சி
  • சோளம்
  • கோதுமை
  • பெட்ரோலியம்
  • ஆளி விதை
  • இயற்கை எரிவாயு
  • பருத்தி
  • இரும்புத்தாது
  • தாமிரம்

VIII. பத்தியளவில் விடையளி

Question 1.
வட அமெரிக்காவின் கால நிலை பற்றி விளக்குக.
விடை:
வட அமெரிக்காவின் காலநிலை:
அட்சக்கோடுகளின் அடிப்படையில் வெப்பமண்டல பகுதி முதல் தந்திர பகுதி வரை வட அமெரிக்கக் கண்டம் பரவியுள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் ஆசியாவை போலவே பலதரப்பட்ட காலநிலைகள் காணப்படுகின்றன.

ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்காக அமைந்திருப்பதால், ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் கடுங்குளிர் காற்றினை தடுக்கும் அரணாக செயல்படவில்லை . மத்திய சமவெளிகளில் ஊடுருவும் குளிர் காற்றினால் நீண்ட கடுங்குளிரும் குறுகிய வெப்ப கோடையும் காணப்படுகிறது.

சூறாவளி புயல்களால் மழைப்பொழிவு உண்டாகிறது. மத்திய சமவெளிகளில் உறைபனியோடு கூடிய குளிர்காலமும் வெப்ப மண்டலம் போன்ற அதிக வெப்பமுடைய கோடை காலமும் காணப்படுகின்றது.

தெற்குப்பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி முகத்துவார பகுதிகள் மற்றும் வளைகுடா கடற்கரை பகுதிகளும் வடகிழக்குப் பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.

அலாஸ்கா வெப்ப நீரோட்டம் வடமேற்கு கடற்கரை பகுதியில் பனி உறையாமல் இருப்பதற்கு காரணமாகிறது. மத்திய தரைக்கடல் காலநிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படுகிறது.

Question 2.
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை பற்றி எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை:

  • கனரக பொறியியல் தொழிற்சாலைகள் என்பவை
    • கனமான மற்றும் பருமனான மூலப்பொருட்கள்
    • பெருமளவிலான எரிபொருள்
    • பெருமளவிலான மூலதனம்
    • பெருமளவிலான போக்குவரத்து செலவினங்கள் பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
  • இவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளை சார்ந்துள்ளன.
  • ஆட்டோமொபைல் தொழிற்சாலை. வான்ஊர்தி தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரயில்பெட்டி தொழிற்சாலை, விவசாய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முக்கிய கனரக தொழிற்சாலைகள் ஆகும்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.
  • முக்கிய கனரக தொழில் மையங்கள்: டெட்ராய்ட், சிக்காகோ, பஃபலோ, இண்டியானாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், செயின்ட் லூயிஸ், பிலடெல்பியா, நியூயார்க், பால்டிமோர் மற்றும் அட்லாண்டா மற்றும் கனடாவின் வின்ஸர்.

Question 3.
தென் அமெரிக்காவின் ஆறுகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
தென் அமெரிக்காவின் ஆறுகள்:

  • இக்கண்டத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன.
  • குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன. பெரு கடற்கரையோர ஆறுகள் சில நீர் பாசனத்திற்கும். நீர் மின்சார தயாரிப்பிற்கும் பயன்படுகின்றன.
  • அமேசான் தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு மற்றும் உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும்.
  • ஆயிரக்கணக்கான கிளை நதிகள் > ரியோ, நீக்ரோ, மதீரா மற்றும் தாபாஜோஸ் முக்கியமானவை.
  • கிளை நதிகள் கடலில் கலக்கும் இடம் விரிவானது; வேகமானது (80 கி.மீ. தூரம் நன்னீர் )
  • ஒரினாகோ ஆறு கயானா உயர் நிலங்களில் தொடங்குகிறது. வடக்கு நோக்கி பாய்ந்து கரீபியன் கடலில் கலக்கிறது.
  • பராகுவே ஆறு இரு முக்கிய கிளை நதிகளைக் கொண்டது (பரானா மற்றும் உருகுவே). இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆற்றுப்படுகை என அழைக்கப்படுகிறது.
  • அனைத்து ஆறுகளும் முகத்துவாரத்திலிருந்து உள்நோக்கி குறிப்பிட்ட தூரம் வரை போக்குவரத்திற்கு பயன்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள் பற்றி எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள்:
தென் அமெரிக்கா உலகின் பலதரப்பட்ட கலவையான மக்கள்தொகையை கொண்டது. பெரும்பாலானோர் ஐரோப்பிய (ஸ்பானியர் மற்றும் போர்ச்சுக்கீசியர்) மற்றும் ஆப்பிரிக்க அடிமைகளாக கொண்டு வந்த ஆப்பிரிக்க வம்சாவளியினரும் ஆவர்.

பூர்வகுடி மக்கள் மலைகளிலும், மழைக்காடுகளிலும் தங்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர் என மூன்று முக்கிய இனங்கள் காணப்படுகின்றன.

பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் ”மெஸ்டிஜோ” என அழைக்கப்படுகின்றது.

ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் முலாடோ என அழைக்கப்படுகிறது.

பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் ஸாம்போ என அழைக்கப்படுகின்றது.

முக்கிய இனங்கள்: அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள், கருப்பர்கள். கலப்பினங்கள்: மெஸ்டிஜோ, முலாடோ, ஸாம்போ)

IX. வரைபட திறன்

Question 1.
பாடப்புத்தகம் மற்றும் நிலவரை படம் உதவிக்கொண்டு வட அமெரிக்காவை சுற்றியுள்ள கடல்கள், வளைகுடாக்கள் மற்றும் விரிகுடாகளை பெயரிடுக.
விடை:
கடல்கள் : (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

  • பசிபிக் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்
  • கரீபியன் பெருங்கடல்
  • பியுபோர்ட் கடல்
  • லாப்ரடார் கடல்
  • சலிக்கும் கடல்

விரிகுடாக்கள் :

  • பேஃபின் விரிகுடா
  • ஹட்சன் விரிகுடா
  • உங்காங் விரிகுடா
  • ஃபன்டி விரிகுடா
  • சீஸ்பெக் விரிகுடா

வளைகுடாக்கள்:

  • பனாமா வளைகுடா
  • கலிபோர்னியா வளைகுடா
  • அலாஸ்கா வளைகுடா
  • மெக்சிகோ வளைகுடா

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள தென் அமெரிக்க வரைபடத்தில் அமேசான், ஒரினாகோ, நீக்ரோ, பராகுவே, உருகுவே ஆறுகளை குறிக்கவும். (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
சில முக்கிய நகரங்களும் சில தொழிற்சாலைகளும் அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) பிட்ஸ்பர்க் (ஜவுளி, இரும்பு எஃகு, கப்பல் கட்டும் தொழில்)
விடை:
இரும்பு எஃகு

ஆ) சிகாகோ (வாகனங்கள், காகிதம், சிமெண்ட்)
விடை:
காகதம்

இ) சிலி (எண்ணை சுத்திகரிப்பு, சர்க்கரை, பருத்தி ஆடை)
விடை:
எண்ணை சுத்திகரிப்பு

ஈ) உருகுவே (தோல் பதனிடுதல், தாமிரம் உருக்குதல், பால் பொருட்கள்)
விடை:
பால் பொருட்கள்

Question 2.
வினாக்களுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுக்குள் எழுதவும்.

அ) தென் அமெரிக்காவின் உயரமான சிகரம்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 7

ஆ)
தென் அமெரிக்காவிலுள்ள இயங்கும் எரிமலை.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 8

இ) பரானா மற்றும் பராகுவே ஆறுகள் இணைந்து அழைக்கப்படுவது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 9

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

ஈ) உலகின் உயரமான நீர்வீழ்ச்சி.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 10

உ) உலகின் மிகப்பெரிய நதி.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 11

Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களை ஒட்டி ஒரு தொகுப்பை உருவாக்கவும்.

7th Social  Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வட அமெரிக்கா ………………….. பெரிய கண்டமாகத் திகழ்கிறது.
அ) இரண்டாவது
ஆ) மூன்றாவது
இ) நான்காவது
ஈ) ஐந்தாவது
விடை:
ஆ) மூன்றாவது

Question 2.
வட அமெரிக்கக் கண்டத்தின் மிக ஆழமான பகுதி …………………….
அ) மரண பள்ளத்தாக்கு
ஆ) சியார் நிவாரா
இ) சியாரர் மாட்ரே
ஈ) கலிபோர்னியா பள்ளத்தாக்கு
விடை:
அ) மரண பள்ளத்தாக்கு

Question 3.
புனித லாரன்ஸ் ஆறு ……………….. ஏரியில் தன் பயணத்தை துவங்குகிறது.
அ) சுப்பீரியர்
ஆ) வின்னிபெக்
இ) அதபாஸ்கா
ஈ) ஒன்டேரியோ
விடை:
ஈ) ஒன்டேரியோ

Question 4.
கீரிப்பிள்ளை , முயல்கள் …………………….. காடுகளில் காணப்படுகின்றன.
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்
ஆ) வெப்ப மண்டல மழை
இ) தூந்திர
ஈ) டைகா
விடை:
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்

Question 5.
உலகின் முக்கிய இறைச்சி ஏற்றுமதியாளராகத் திகழும் நாடு ……………….
அ) பிரேசில்
ஆ) சிலி
இ) பெரு
ஈ) அர்ஜென்டினா
விடை:
ஈ) அர்ஜென்டினா

Question 6.
தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் …………………. மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
அ) கப்பல்கள்
ஆ) சாலைகள்
இ) இருப்புப்பாதைகள்
ஈ) வான்வழி
விடை:
அ) கப்பல்கள்

Question 7.
ஆப்பிரிக்கர்களை …………………… அடிமைகளாகக் கொண்டு வந்ததன் மூலம் ஆப்பிரிக்க வம்சாவழியினர் தென் அமெரிக்காவில் உருவாயினர்.
அ) பூர்வகுடி இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) கருப்பர்கள்
ஈ) லத்தீன் அமெரிக்கர்கள்
விடை:
ஆ) ஐரோப்பியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 8.
உலகில் இரண்டாவதாக அதிகப்படியான இரும்புத்தாது இருப்பைக் கொண்டுள்ள நாடு …………………
அ) இந்தியா
ஆ) ரஷ்யா
இ) பிரேசில்
ஈ) அர்ஜென்டினா
விடை:
இ) பிரேசில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………… மற்றும் …….. விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
விடை:
பார்லி, ஓட்ஸ்

Question 2.
……………….. தொழிலில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னிலை வகிக்கிறது.
விடை:
இரும்பு எஃகு

Question 3.
மெக்ஸிகோவின் மக்கள் அடர்த்தி ……………………..
விடை:
51 நபர்கள்

Question 4.
உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் ………………….. ல் உள்ளது.
விடை:
சிகாகோ

Question 5.
அமேசான் நதியில் காணப்படும் பிரன்ஹா எனும் வகை மீன் கடுமையான ………………… ஆகும்.
விடை:
மாமிசஉண்ணி

Question 6.
உரத்தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான ………………….. படிவுகள் கிடைக்கும் ஒரே இடம் தென் அமெரிக்கா.
விடை:
சோடியம் நைட்ரேட்

Question 7.
சோளம் என்பது ………………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
மக்காச்சோளம்

Question 8.
……………….. நெடுஞ்சாலை அமைப்போடு இணைந்து சாலைகளின் மிகப்பெரிய வலைப்பின்னலை பிரேசில் கொண்டுள்ளது.
விடை:
பான் அமெரிக்கன்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 12

IV. காரணம் கூறுக

Question 1.
மிஸிஸிப்பி ஆறு “பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
விடை:
மிஸிஸிப்பி ஆறு ” பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
மிஸிஸிப்பி ஆறு மலைகளின் கீழே பாய்ந்து வரும்போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 2.
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
விடை:
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
ஏனெனில்

  • கிராண்ட் பேங்க் பகுதியில் கல்ப் வெப்ப நீரோட்டமும் லாபரடார் குளிர் நீரோட்டமும் சந்தித்து கொள்வதால் மீன்கள் வளர்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்குகிறது.
  • லாபரடார் நீரோட்டம் மீன்களுக்கு உணவாகும் பிளாங்டன்கள் எனப்படும் கடல்பாசிகளை அதிக அளவில் எடுத்து வருகிறது.

Question 3.
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
விடை:
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
ஏனெனில்
இப்பகுதி பல இயங்கும் எரிமலைகளைக் கொண்டுள்ளது. மேலும் நில அதிர்வுகளையும் பார் அடிக்கடி எதிர்கொள்கிறது.

Question 4.
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
விடை:
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
ஏனெனில்
தொழில்மயமாதலுக்கு முக்கிய காரணியான உள்கட்டமைப்பு (குறிப்பாக போக்குவரத்து) போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை. தொழில்மயமாதலுக்கு போக்குவரத்து அத்தியாவசியமான தேவை.

கரடுமுரடான நிலப்பரப்பின் காரணமாக தென் அமெரிக்காவில் ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் போதிய அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை.

V. வேறுபடுத்துக

Question 1.
நிலச்சந்தி மற்றும் நீர்ச்சந்தி.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 13

Question 2.
வட அமெரிக்காவின் மத்திய தரைக்கடல் தாவர வகைகள் மற்றும் பாலைவனக்காடுகள்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 14

Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடிகால் அமைப்பு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 15

VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று (A) : வட அமெரிக்கா 1492 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
காரணம் (R) : 1507 ஆம் ஆண்டு இத்தாலிய ஆய்வுப்பணி அமெரிக்கோ வெஸ்புகி இந்நிலப்பகுதிக்கு வந்ததை அடுத்து “அமெரிக்கா” எனப் பெயரிடப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 2.
கூற்று (A) : மத்திய அமெரிக்காவுடன் இணைந்து, தென் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.
காரணம் (R) : குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு (லத்தீன்மொழி பேசுபவர்கள்) அவர்களின் காலனியாக ஆட்சிசெய்யப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
மத்திய அமெரிக்காவின் ஏழு சிறிய நாடுகளின் பெயர்களைக் கூறு.
விடை:
மத்திய அமெரிக்க நாடுகள் :

  • நிகாராகுவா
  • ஹாண்டுராஸ்
  • குவாதமாலா
  • பனாமா
  • கோஸ்டாரிக்கா
  • எல்சால்வடார்
  • பெலிஸ்

Question 2.
வட அமெரிக்காவின் இயற்கையமைப்பு பிரிவுகளைக் குறிப்பிடு.
விடை:
வட அமெரிக்க இயற்கையமைப்பு பிரிவுகள் :

  • ராக்கி மலைகள்
  • பெரும் சமவெளிகள்
  • அப்பலேஷியன் உயர்நிலம்
  • கடற்கரை சமவெளிகள்

Question 3.
வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றனவா? விளக்குக.
விடை:

  1. ஆம். வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றன.
  2. குறிப்பாக மின்னசொட்டா பகுதியில் காணப்படுகின்றன. இவை மிகச்சிறியதாக இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
  3. ஐந்து முக்கிய ஏரிகளைக் கொண்ட முக்கிய தொகுப்பு கிரேட் ஏரிகள். மிகப்பெரியது சுப்பீரியர் ஏரி. இது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
  4. கனடாவில் காணப்படும் ஏரிகள் வின்னிபெக் ஏரி, கிரேட் பேர் ஏரி மற்றும் அதபாஸ்கா ஏரி

Question 4.
பனாமா கால்வாய் – சிறு குறிப்பு வரைக.
விடை:
பனாமா கால்வாய்:

  1. 80 கி.மீ. நீளமுள்ள பனாமா கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. பனாமா நிலச்சந்தியின் குறுக்கே இது 1914ல் வெட்டப்பட்டது.
  2. இக்கால்வாய் ஐரோப்பா மற்றும் வட, தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு இடையிலான தூரத்தை வெகுவாகக் குறைக்கின்றது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 5.
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து குறித்து எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து:-

  1. வட அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களும், தொழில்துறை மையங்களும் விமான வழிகளால் இணைக்கப்பட்டுள்ளன.
  2. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, டொராண்டோ, மாண்ட்ரீல் மற்றும் மெக்ஸிகோ நகரம் ஆகியவை சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.

Question 6.
சவானா புல்வெளி நிலம் குறித்து நீவிர் அறிவது என்ன?
விடை:
சவானா புல்வெளி நிலம்:

  • காலநிலை- வெப்பமான ஈரப்பதம் நிறைந்த கோடைகாலம். குளிர்ந்த ஈரப்பதமான குளிர்காலம்
  • பகுதி – கயானா உயர்நிலங்கள், பிரேசிலியன் உயர்நிலம், வட அர்ஜென்டினா மற்றும் பராகுவே
  • தாவரங்கள்- உயரமான ஒழுங்கற்ற புற்கள் மற்றும் கருவேல மரங்கள் –
  • விலங்குகள்- கேபிபாரா, மார்ஷிமான், வெள்ளை வயிறு மற்றும் சிலந்தி குரங்கு

Question 7.
எஸ்டான்சியாஸ் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
எஸ்டான்சியாஸ்:

  • எஸ்டான்சியாஸ் என்பவை கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் ஆகும். இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன.
  • இச்சிறிய புல்வெளி தளங்கள் மேலும் பராமரிப்பு தளங்களாக பிரிக்கப்பட்டு கால்நடைகள் தரம் பிரித்து முத்திரை இடப்படுகின்றன.
  • எஸ்டான்சியாரே என்பவர் எஸ்டான்சியாவின் பராமரிப்பாளர். அவரின் கீழ் கவ்சோ எனப்படும் வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.

Question 8.
தென் அமெரிக்காவின் முக்கிய இயற்கை தாவர பகுதிகள் யாவை?
விடை:
முக்கிய இயற்கை தாவர பகுதிகள்:
தென் அமெரிக்கா நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகளைக் கொண்டது. அவைகள்

  • அமேசான் படுகை
  • கிழக்கு உயர் நிலங்கள்
  • கிராண்ட் சாக்கோ
  • ஆன்டஸ் மலைச்சரிவுகள்

Question 9.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தென் அமெரிக்காவின் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகளை பெயரிடு.
விடை:
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகள்:

  1. இரண்டு நீர்வழிப்போக்குவரத்துகள் உள்ளன. அவை
  2. பராகுவே – உருகுவே வடிநிலப்பகுதி (நான்கு நாடுகளை உள்ளடக்கியது)
  3. அமேசான் வடிநிலப்பகுதி (ஆறு நாடுகளை உள்ளடக்கியது) (ஒவ்வொன்றும் பல ஆயிரம் மைல்கள் பயணிக்கும் நீர்வழியை கொண்டுள்ளன).

Question 10.
தென் அமெரிக்காவின் பல்வேறு இசைகள் குறித்து எழுதுக.
விடை:
தென் அமெரிக்க இசைகள்: தென் அமெரிக்க நாடுகளில் பல்வேறு வகையான இசைகள் உள்ளன. மிகவும் பிரபலமான இசை வகைகள்.

  1. பிரேசிலிருந்து சம்பா
  2. அர்ஜென்டினாவிலிருந்து டேங்கோ
  3. உருகுவே மற்றும் கொலம்பியாவிலிருந்து கும்பியா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 11.
தென் அமெரிக்காவில் ஆடு வளர்ப்பு – சிறு குறிப்பு தருக.
விடை:
ஆடு வளர்ப்பு:

  1. தென் அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
  2. டைரா டெல் பியுகோ மற்றும் ஃபாக்லாந்து தீவுகளின் மிதவெப்ப மண்டல புல்வெளிகள் ஆடுகள் வளர்க்க ஏற்றவை.
  3. முக்கிய ஆடு வளர்ப்பு நாடுகள்: அர்ஜென்டினா மற்றும் உருகுவே

Question 12.
வட அமெரிக்காவின் பண்ணை பராமரிப்பு குறித்து உனக்கு என்ன தெரியும்?
விடை:
பண்ணை பராமரிப்பு:

  • பால் உற்பத்திக்காக கால்நடைகளை வளர்ப்பது, பண்ணை பராமரிப்பு என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கிய தொழிலாகும்.
  • குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் மிகுந்த பிரெய்ரி, பெரும் ஏரிகள் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையின் வடகிழக்குப் பகுதிகளில் இத்தொழில் அதிகமாக உள்ளது. (உலகின் மொத்த பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் 25%)

VIII. பத்தியளவில் விடையளி

Question 1.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றின் மக்கள் தொகைப் பரவலை விவரி.
விடை:
மக்கள்தொகைப் பரவல்:
வட அமெரிக்கா:
வட அமெரிக்காவின் மக்கள் தொகை 364,446,736 (2018 ஆம் ஆண்டு ). இது உலக மக்கள் தொகையில் 4.77 சதவீதம். மக்கள் தொகை அடர்த்தி 20 நபர் / ச.கி.மீ.

அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (கிழக்கு), கிரேட் ஏரி பகுதி, மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா

மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (மத்திய பகுதி), மத்திய உயர் நிலங்கள், மெக்ஸிகோ உயர் நிலங்கள், கனடா (மத்திய மற்றும் மேற்கு பகுதிகள்)

குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கனடா (வடக்கு), அலாஸ்கா, ராக்கி மலைகள் மற்றும் பாலைவனப் பகுதிகள்

தென் அமெரிக்கா:
தென் அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 429,115,060. இது உலக மக்கள் தொகையில் ஐந்தாம் இடம். மக்கள் தொகை அடர்த்தி 21 நபர் / ச.கி.மீ.

அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கயானா, வெனிசுலா, சுரினாம், கொலம்பியா, பிரேசில் மற்றும் பெரு

மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
பராகுவே, சிலி, உருகுவே

குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் அமேசான் வடிநிலம்

Question 2.
வட மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் மொழி மற்றும் சமயம் குறித்து எழுதுக.
விடை:
மொழி மற்றும் சமயம்:
வட அமெரிக்கா:
மொழிகள்: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்

சமயங்கள்:

  • பல்வேறு சமய நம்பிக்கைகள் கலாச்சாரம், தத்துவம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் தாக்கம் உண்டாக்குதல்.
  • 80% கிறிஸ்தவத்தைப் பின்பற்றுதல்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருகும் பானை என அழைக்கப்படுதல்
    (நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து புதிய கலாச்சாரம் உருவாதல்)

தென் அமெரிக்கா:
மொழிகள்:

  • போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் (பிரதான மொழிகள்)
  • டச்சு, பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ஹிந்தி (பயன்படுத்தும் பிற மொழிகள்)

சமயங்கள்:

  • கிறிஸ்தவம் (பிரதான சமயம்) தக்கது
  • இஸ்லாம் மற்றும் இந்து (பின்பற்றப்படும் பிற மதங்கள்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 3.
அட்டவணைப்படுத்துக: வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களின்
அ) முக்கிய நாடுகள்
ஆ) சுற்றியுள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்
இ) முக்கிய பாலைவனங்கள்
ஈ) முக்கிய ஆறுகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 16

Question 4.
தென் அமெரிக்காவின் வேளாண்மை குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தென் அமெரிக்காவின் வேளாண்மை:

  • தென் அமெரிக்காவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேளாண்மை தொழில் செய்து வருகிறார்கள். இங்கு தன்னிறைவு வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
  • பெரும்பான்மையான பகுதி அமேசான் காடுகளைப் போன்ற காடுகளால் மூடப்பட்டுள்ளது.
  • அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டுமே முன்னேறிய வேளாண்மை முறைகளை கொண்டுள்ளன. தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டினா, வேளாண் தொழிலில் முன்னேறிய நாடு ஆகும்.
  • ஈரப்பதம் நிறைந்த பாம்பாஸ் பகுதியில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதியின் இயற்கை மற்றும் காலநிலை அமைப்பு வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கிறது.
  • கோதுமை அர்ஜென்டினாவின் பாம்பாஸ் பகுதிகளில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றது.
  • ஆன்டிஸ் மலைத்தொடரின் ஆறுகள் பாயும் பியட்மான் பள்ளத்தாக்குகளில் விவசாயிகள் திராட்சைத் தோட்டங்களையும் சிட்ரஸ் பழங்களையும் விளைவிக்கின்றனர்.
  • காபி, கொக்கோ, கரும்பு, வாழை, பருத்தி போன்ற பணப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.

மனவரைபடம்

Question 1.
கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 17

Question 2.
கண்டங்களை ஆராய்தல் – தென் அமெரிக்கா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 18

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

7th Social  Science Guide தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Text Book Back Questions and Answers

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
அ) பாடலிபுத்திரம்
ஆ) வல்ல பி
இ) மதுரா
ஈ) காஞ்சிபுரம்
விடை:
அ) பாடலிபுத்திரம்

Question 2.
ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?
அ) அர்த்த – மகதி பிராகிருதம்
ஆ) இந்தி
இ) சமஸ்கிருதம்
ஈ) பாலி
விடை:
அ) அர்த்த – மகதி பிராகிருதம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?
அ) புத்தமதம்
ஆ) சமணமதம்
இ) ஆசீவகம்
ஈ) இந்து மதம்
விடை:
ஆ) சமணமதம்

Question 4.
தலையணைப்பகுதி செதுக்கப்படாமல உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
அ) வேலூர்
ஆ) காஞ்சிபுரம்
இ) சித்தன்னவாசல்
ஈ) மதுரை
விடை:
அ) வேலூர்

Question 5.
கழுகுமலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
அ) மகேந்திரவர்மன்
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்
இ) பராந்தக வீரநாராயண பாண்டியன்
ஈ) இரண்டாம் ஹரிஹரர்
விடை:
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ………………..
விடை:
நேமிநாதர்

Question 2.
புத்த சரிதத்தை எழுதியவர் …………………… ஆவார்.
விடை:
அஸ்வகோஷர்

Question 3.
………………. நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.
விடை:
7ஆம்

Question 4.
பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என …………….. எடுத்துரைக்கிறார்.
விடை:
மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 5.
மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆதரித்தனர்.
விடை:
ஆசீவகர்களை

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 2

IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி

Question 1.
பொருந்தாததைக் காண்க. திருப்பருத்திக்குன்றம், கீழக்குயில்குடி, கழுகுமலை, நாகப்பட்டினம், சித்தன்னவாசல்
விடை:
நாகப்பட்டினம்

Question 2.
கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Question 3.
சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
ii) ‘பள்ளி’ என்பது புத்த மதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பலவிகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டது.

அ) (i) மற்றும் (iii) சரி
ஆ) (i, ii) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii, iii) மற்றும் (iv) சரி
விடை:
அ) (i) மற்றும் (iii) சரி

Question 4.
தவறான இணையைக் காண்க
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
3. விசுத்திமக்கா – புத்தகோசா
4. புத்தர் – எண்வகை வழிகள்
விடை:
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்,
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு

V. சரியா? தவறா?

Question 1.
12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்க முறையைச் சந்திக்க நேர்ந்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.
விடை:
சரி

Question 4.
நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின.
விடை:
தவறு

Question 5.
சோழர்காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
விடை:
தவறு

VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

Question 1.
சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளைப் பட்டியலிடுக.
விடை:
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள் :

  1. எந்த உயிரையும் துன்புறுத்தாமலிருத்தல் – அகிம்சை
  2. உண்மை – சத்யா
  3. திருடாமை – அசௌர்யா
  4. திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா
  5. பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா

Question 2.
புத்தரின் நான்கு பேருண்மைகளைக் கூறுக?
விடை:
புத்தரின் நான்கு பேருண்மைகள்:

  1. வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை ப உள்ளடக்கியதாகும்.
  2. துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
  3. ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
  4. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப் பெறலாம்.

Question 4.
திரிபிடகாவின் மூன்று பிரிவுகளை விளக்குக.
விடை:
திரிபிடகாவின் மூன்று பிரிவுகள்:

  • வினய பிடகா – பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. தூய்மையான நடத்தையைப் பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • சுத்த பிடகா – விவாதங்களைச் சான்றுகளாகக் கொண்டு பௌத்தத்தின் மூலக் கோட்பாடுகளைக் கூறுகின்றது.
  • அபிதம்ம பிடகா – நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவதாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 4.
சித்தன்னவாசலின் முக்கியத்துவத்தை வெளிக் கொணர்க.
விடை:
சித்தன்னவாசலின் முக்கியத்துவம் :

  • சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
  • ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையான குகையும், மற்றொரு முனையில் குடைவரைக் கோவிலும் உள்ளன.
  • தரையில் 17 சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன. இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்கள் என நம்பப்படுகிறது.
  • கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது.
  • அறிவர் கோவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்குகைக்கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள் புகழ்பெற்ற அஜந்தா சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகளை வரிசைப்படுத்துக.
விடை:
சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகள்: சமணம் :
மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.

மகாவீரர் இயற்கை எய்திய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் சமண அறிஞர்கள் ஒரு பேரவையைக் கூட்டி தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர் (முதல் சமண பேரவைக் கூட்டம் – பாடலிபுத்திரம்).

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட இரண்டாம் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. காலப்போக்கில் கற்றறிந்த பல சமணத் துறவிகள் (அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்டவர்கள்) சமயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர்.

ஏறத்தாழ கி.பி. 500இல் சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த முடிவு செய்தனர். ஏனெனில் சமண இலக்கியங்களை மனனம் செய்வது மிகச் சிரமமானது என உணர்ந்தனர்.

சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1) ஆகம சூத்திரங்கள் 2) ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் (12 நூல்கள், 84 நூல்கள்).

பௌத்தம் :

  • புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.
  • ஏறத்தாழ கி.மு. 80ல் அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.
  • திரிபிடகா பௌத்த பொது விதிகள். அது மூன்று கூடைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • ‘வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா ஆகியவை மூன்று பிரிவுகளாகும்.
  • ஜாதகங்கள் மற்றும் புத்த வம்சா ஆகியவை பொது விதிகளைப் பற்றிக் கூறுபவை. பாலி மொழியில் எழுதப்பட்ட பொது விதிகள் அல்லாத நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது (மிலிந்த பன்கா, மகா வம்சம், தீபவம்சம், விசுத்திமக்கா (புத்தகோசா)).

Question 2.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சமணம், பௌத்தம், சார்ந்த ஆதார எச்சங்களை விளக்கமாய் பட்டியலிடுக
விடை:
சமணம் சார்ந்தது:
சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப் பகுதிக்கும், காவேரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டைப் பகுதிக்கும், இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது.

சித்தன்னவாசல் குகைக்கோவில் (நிலத்திலிருந்து 70 மீ உயரம், 17 சமணப்படுக்கைகள், தமிழ்-பிராமிக் கல்வெட்டு, சுவரோவியங்கள்).

காஞ்சிபுரம் – திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் (திருப்பருத்திக்குன்றம்), சந்திரபிரபா கோவில். (பல்லவர் கால கட்டடக் கலைப்பாணி, சுவரோவியங்கள், பல கிராமங்களில் சமணம் குறித்த தடயங்கள்)

கழுகுமலை சமண குடைவரைக் கோவில் (எட்டாம் நூற்றாண்டு, பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையன். பஞ்சவர் படுக்கை).

வேலூர், திருமலை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் சமணக் கோவில்கள் காணப்படுகின்றன.

பௌத்தம் சார்ந்தது:

  • தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • குகைகளில் காணப்படும் 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சின்னங்கள் பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.
  • வீரசோழியம் (11 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்), புத்தரின் செப்புச் சிலைகள் (13 ஆம் நூற்றாண்டு, நாகப்பட்டினம்) ஆகியவை பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
  • தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் (சேலம் மாவட்டம் ) இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றன. சூடாமணி விகாரை நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டது.
  • மணிமேகமலை (சீத்தலை சாத்தனார்), மத்தவிலாச பிரகாசனம் (மகேந்திர வர்மன்) ஆகியவை ஆவணங்களாகும்.
  • பௌத்த விகாரை (காவிரிப்பூம்பட்டின அகழ்வாய்வு), 1.03 மீட்டர் உயர புத்தர் சிலை (பத்மாசனகோலம், திருநாட்டியட்டாங்குடி, திருவாரூர் மாவட்டம்) ஆகியவையும் பௌத்தம் சார்ந்த ஆதார எச்சங்கள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
ஆசீவகத்தத்துவத்தின் சாரம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம் குறித்து விவாதிக்க. ஆசீவகத் தத்துவம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம்
விடை:
ஆசீவகத் தத்துவம்:

  • ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி. முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைப்பிடித்தனர்.
  • அவர்களுடைய தத்துவம் வேதப்பாடல்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகள், சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய கால ஆய்வுகள் முதலியவற்றில் காணக்கிடைக்கின்றது.

தமிழகத்தில் ஆசீவகம் தோன்றுதல்:

  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. தென்னிந்தியாவில் பரவியிருந்தது.
  • தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.
  • பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆட்சிக்கால கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
  • இதுபோன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் பாலாற்றின் பகுதிகளில் (கர்நாடகா மற்றும் தமிழ்நாடு – வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) 14ஆம் நூற்றாண்டு வரை ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
அவைதீக மதங்களுக்கும் வேதமதத்திற்கும் உள்ள பொதுவான அம்சங்களையும் வேறுபாடுகளையும் அலசி ஆராய்க.
விடை:
அவைதீக மதங்கள் மற்றும் வேதமதம்:
அவைதீக மதங்களின் நிறுவனர்களான மகாவீரரும் புத்தரும் தங்கள் அறபோதனைகளை வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வைத்தனர்.

அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளின் மூலமாகப் பின்வந்த சந்ததிகளிடம் கையளிக்கப்பட்டன.

பெண்கள் பணியாளர்களாக (யக்சிகள்) அனுமதிக்கப்பட்டனர். அவைதீக மதமான சமணத்தில் பெண்களும் துறவறம் பூண அனுமதி கொடுக்கப்பட்டது. பெண்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளித்தது.

அரச வாழ்வு, துறவு வாழ்வு ஆகிய இரண்டுமே தவறு என பௌத்தம் கூறியது. புத்தர் இடைப்பட்ட வழியை (எண்வகை வழிகள்) கண்டறிந்தார். மகாவீரர் ஐம்பெரும் உறுதி மொழிகளைக் கண்டறிந்தார். இப்படிப்பட்டவழிகள் வேதமதத்தில் கண்டறியப்படவில்லை.

Question 2.
ஏன் இத்தகைய அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை ?
விடை:
அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை ஏனெனில்.

  • பக்தி இயக்க காலம் முதல் பக்தி இயக்கப் பெரியோர்கள் அவைதீக மதங்களை எதிர்த்தனர். அவை அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கின.
  • முக்கிய மதங்கள் சாமானிய மக்களின் மொழிகளுக்கு தங்களை மாற்றிக் கொண்டன.
  • பல்லவர் காலம் முதலாகவே அவைதீக மதமான பௌத்தம் சைவ. வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
  • கோசலா மகாவீரருடன் ஆறாண்டுகள் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.
  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவைதீக மதமான ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோர் ஆட்சிக் கால கிராம சமூகத்தினர் சிறப்பு வரிகளை ஆசீவகர் மீது விதித்தனர்.

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் மாவட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று எங்கெல்லாம் பௌத்தம், சமணம் சார்ந்த எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவோ அவற்றைப் பார்வையிட்டு வரலாம்

7th Social  Science Guide தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
………………….. எனப்படும் நூலின்படி இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது.
அ) பிகநிதயா
ஆ) தீபவம்சம்
இ) ஜாதகங்கள்
ஈ) மிலிந்தபன்கா
விடை:
அ) பிகநிதயா

Question 2.
யுவான் சுவாங் கி.பி. …………………. நூற்றாண்டில் தென்னிந்தியா வந்தார்.
அ) ஐந்தாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) ஒன்பதாம்
விடை:
ஆ) ஏழாம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
…………………… நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அ) பர்மா மற்றும் ஜப்பான்
ஆ) சீனா மற்றும் இலங்கை
இ) ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா
ஈ) திபெத் மற்றும் சீனா
விடை:
ஈ) திபெத் மற்றும் சீனா

Question 4.
பர்சவநாதர் …………………… தீர்த்த ங்கரர் ஆவார்.
அ) முதல்
ஆ) கடைசி
இ) 24வது
ஈ) 10வது
விடை:
அ) முதல்

Question 5.
………………… ஆறாண்டுகள் மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார்.
அ) பாஞ்சாலா
ஆ) அவந்தி
இ) கலிங்கா
ஈ) கோசலா
விடை:
ஈ) கோசலா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பல்லவர், சோழர் மற்றும் …………… ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
விடை:
ஹொய்சாளர்

Question 2.
…………………. கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்டது.
விடை:
மணிமேகலை

Question 3.
ஆகம சூத்திரங்கள் ……………….. மொழியில் எழுதப்பட்டுள்ளன.
விடை:
அர்த்த – மகதி பிராகிருத

Question 4.
குகைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் ……………….. என அழைக்கப்படுகிறது.
விடை:
பஞ்ச பாண்டவ மலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 5.
………………….. பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது.
விடை:
மௌரியப்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 3

IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி

Question 1.
பொருந்தாததைக் காண்க.
ரிஷபநாதர், மகாவீரர், பர்சவநாதர், பாகுபலி, நாகசேனர், நேமிநாதர்
விடை:
நாகசேனர்

Question 2.
கூற்று : பக்தி இயக்கப் பெரியோர்கள் பௌத்தத்தை எதிர்த்தனர். பௌத்தம் அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கியது.
காரணம் : அது பக்தி இயக்க காலம்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Question 3.
சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர்.
ii) விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வாழ்விடம்’ அல்லது ‘இல்லம்’ என்று பொருள்.
iii) அழகுமிக்க சுவரோவியங்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் வரையப்படவில்லை.
iv) ஆசீவகர்கள் வினைப்பயன். மறுபிறவி, முன் தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அ) (i) மற்றும் (iii) சரி சான்
ஆ) (i), (ப்) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii), (iii) மற்றும் (iv) சரி
விடை:
ஆ) (i), (ii) மற்றும் (iv) சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 4.
தவறான இணையைக் காண்க
1. கழுகுமலை – தூத்துக்குடி
2. திருப்பருத்திக்குன்றம் – காஞ்சிபுரம்
3. லத்தேரி – வேலூர்
4. கீழக்குயில்குடி – இராமநாதபுரம்
விடை:
4. கீழக்குயில்குடி – இராமநாதபுரம்

V. சரியா? தவறா?

Question 1.
இருகப்பா, புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடராவார்.
விடை:
சரி

Question 2.
இரண்டாம் சமணப் பேரவைக் கூட்டம் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது.
விடை:
தவறு

Question 3.
மகாவம்சம், தீபவம்சம் ஆகியன இலங்கையின் வரலாற்றுத் தொகுப்புகள்.
விடை:
சரி

Question 4.
தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் நூலான நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும்.
விடை:
சரி

Question 5.
ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலி புத்தா ஆவார்.
விடை:
சரி

VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

Question 1.
சமணத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு – விளக்குக.
விடை:
சமணத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு:

  • கி.பி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டது. (திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்)
  • திகம்பரர், சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொண்டனர்.
  • அவற்றின் உள்ளடக்கம் கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றில் வேறுபட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 2.
சுவரோவியங்கள் குறித்து குறிப்பு வரைக.
விடை:
சுவரோவியங்கள்:

  • விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹரராயரின் காலத்தில் அழகுமிக்க சுவரோவியங்கள் வரையப்பட்டன.
  • கோவில்களிலுள்ள சுவரோவியங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
  • திரிலோக்கியநாத கோவிலின் ஓவியங்களின் மீது புதுப்பித்தல் பணியின் போது வர்ணங்கள் பூசப்பட்டுவிட்டதால் பாழாகிவிட்டன.
  • திரிகூட பஸ்தி எனும் இரண்டாவது கருவறையில் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

Question 3.
விகாரைகள் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
விகாரைகள் :

  • விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வாழ்விடம் அல்லது இல்லம் என்று பொருள்படும். சுற்றித்திரியும் துறவிகள் இவற்றை மழைக்காலங்களில் விகாரைகளை தங்குமிடங்களாகப் பயன்படுத்தினர்.
  • பின்னர் இவை கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன. நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.

Question 4.
பௌத்த கல்விப்புலம் குறித்து எழுதுக.
விடை:
பெளத்த கல்விப்புலம்:

  • பௌத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டு செய்தன.
  • உலகின் பல பகுதிகளிலிருந்தும் கல்வி கற்பதற்காக மாணவர்கள் இங்கு வந்தனர்.
  • நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த கல்வி மையங்கள் எனப் பெயர்பெற்றன.
  • திபெத், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பௌத்தத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டனர்.

VII. விரிவான விடையளி

Question 1.
பௌத்த இலக்கியம் குறித்து எழுதுக.
விடை:
பௌத்த இலக்கியம் :
புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்குப்பின் கி.மு.80ல் எழுதப்பட்டன. அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.

பொது விதிகளைப் பற்றி கூறுபவை:
திரிபிடகா (மூன்று கூடைகள்):

  • வினய பிடகா (பௌத்தத் துறவிகளுக்கான பொது விதிகள்)
  • சுத்த பிடகா (பௌத்த மூலக் கோட்பாடுகள்)
  • அபிதம்ம பிடகா (நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவது).

ஜாதகங்கள்:
பௌத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறுவது.

புத்தவம்சா:
கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படும் 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எடுத்துரைப்பது.

பொதுவிதிகள் அல்லாதவை :
மிலிந்த பன்கா:
‘மிலிந்தாவின் கேள்விகள். மிலிந்தாவுக்கும் (பாக்டீரியன் அரசன்) பிட்சுவான நாகசேனர் இடையே நடந்த உரையாடல்.

மகாவம்சம் மற்றும் தீபவம்சம்:
இலங்கையின் வரலாற்றுத் தொகுப்புகள். முந்தையது (இந்தியத் துணைக்கண்டத்தின் அரச குலங்கள் பற்றியது). பிந்தையது (புத்தர் போதனைகளையும் இலங்கையில் அவற்றைப் பரப்பியோரையும் பற்றியது)

விசுத்திமக்கா:
புத்தகோசாவால் எழுதப்பட்டது (முதல் பௌத்த உரையாசிரியர்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 2.
சமணர்களின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களை விளக்குக.
விடை:
சமணர்களின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்:
ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள் தனிநபர்களால் எழுதப்பட்டு துறவிகளாலும் அறிஞர்களாலும் தொகுக்கப்பட்டன.

ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்:

  • அவை பிராகிருதம், சமஸ்கிருதம், பண்டைய மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, இந்தி, கன்னடம், தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
  • 84 நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. (41 சூத்திரங்கள், 12 உரைகள், ஒரு மாபெரும் உரை), 41 சூத்திரங்கள் (11 அங்கங்கள், 12 உப அங்கங்கள், 5 மூலங்கள், 5 சேடாக்கள், 8 பல வகைப்பட்ட நூல்கள்).
  • பிராந்திய மொழிகளில் (இந்தி, தமிழ், கன்னடம்) எழுதப்பட்ட சில சமண நூல்களையும் நாம் பெற்றுள்ளோம்.
  • சீவக சிந்தாமணி (தமிழ் காப்பியம், சங்க இலக்கியம்) திருத்தக்கத்தேவர் என்பவர் இயற்றியது.
  • நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.

Question 3.
தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள் பற்றி எழுதுக.
விடை:
தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள் :
சித்தன்னவாசல், திருப்பருத்திக்குன்றம், கழுகுமலை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் சமணக்கோவில்கள் காணப்படுகின்றன. அவை வேலூர், திருமலை மற்றும் மதுரை.

வேலூர்:

  • குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின் உள்ளே (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • அவை வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியில் காணப்படுகின்றன.
    • இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன (மூன்றில்).
    • ஒன்றில் நான்கு படுக்கைகள் மற்றொன்றில் ஒரு படுக்கை.
    • தலையணைப் பகுதி இல்லை.

திருமலை:
இச்சமணக் கோவில் ஆரணி நகரின் அருகே அமைந்துள்ளது. (திருவண்ணாமலை – கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)

  • மூன்று சமணக் குகைகள், இரண்டு சமணக் கோவில்கள்
  • 16 மீட்டர் உயரமுள்ள நேமிநாதருடைய சிலை. உயரமான சமணச்சிலை.

மதுரை:

  • கீழக்குயில்குடி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  • மதுரை – தேனி நெடுஞ்சாலையில் மதுரைக்கு மேற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
    • பராந்தக வீரநாராயண பாண்டியன் காலம் (கி.பி. 860 முதல் 900 வரை)
    • 8 சிற்பங்கள், ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி சிற்பங்கள் உள்ளன.
    • மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் 26 குகைகள், 200 சமண கற்படுக்கைகள், 60 கல்வெட்டுகள், 100 சிலைகள்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் …..
அ) புஷ்யமித்ரர்
ஆ) அக்னிமித்ரர்
இ) வாசுவேதர்
ஈ) நாராயணர்
விடை:
அ) புஷ்யமித்ரர்

Question 2.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ……..
அ) சிமுகா
ஆ) சதகர்ணி
இ) கன்கர்
ஈ) சிவாஸ்வதி
விடை:
அ) சிமுகா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ……..
அ) கனிஷ்கர்
ஆ) முதலாம் கட்பிசஸ்
இ) இரண்டாம் கட்பிசஸ்
ஈ) பன் – சியாங்
விடை:
அ) கனிஷ்கர்

Question 4.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் …. பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத் தோங்கியது.
அ) தக்காணம்
ஆ) வடமேற்கு இந்தியா
இ) பஞ்சாப்
ஈ) கங்கை பள்ளத்தாக்கு சமவெளி
விடை:
ஆ) வடமேற்கு இந்தியா

Question 5.
சாகர்கள் ……….. நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
அ) சிர்கப்
ஆ) தட்சசீலம்
இ) மதுரை
ஈ) புருஷபுரம்
விடை:
அ) சிர்கப்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : இந்தோ – கிரேக்கர்களின், இந்தோ – பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன. காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று 1: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2 : இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.
அ) கூற்று 1 தவறு, ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு, ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
கூற்று 2 தவறு, ஆனால் கூற்று சரி

Question 3.
பொருந்தாததை வட்டமிடுக.
புஷ்யமித்ரர் வாசுதேவர் சிமுகா (கனிஷ்கர்)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 100
விடை:
கனிஷ்கர்

Question 4.
ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
கடைசி சுங்க அரசர் யார்?
விடை:
தேவபூதி
சாகர்களில் மிக முக்கியமான, புகழ்பெற்ற அரசர் யார்?
விடை:
ருத்ரதாமன்
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
வாசுதேவர்
கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
விடை:
புனித தாமஸ்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர் ………
விடை:
அர்சாகஸ்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
தெற்கே……… இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்
விடை:
சுசர்மன்

Question 3.
ஹாலா எழுதிய நூலின் பெயர் ……..
விடை:
சட்டசாய் (சப்தசதி)

Question 4.
………. கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
விடை:
சுசர்மன்

Question 5.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ……… ஆகும்
விடை:
பெஷாவர் (புருஷபுரம்)

IV. சரியா தவறா என எழுதுக

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த து.
விடை:
சரி

Question 2.
காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
விடை:
சரி

Question 3.
குந்தல சதகர்ணி, சாதவாகனவம்சத்தின், பத்தாவது அரசராவார்.
விடை:
தவறு

Question 4.
‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.
விடை:
சரி

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 80
விடை:
ஆ) 3, 4, 5, 1, 2

VI. பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக

1. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை உருவாக்கினார்.
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
3. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.
4. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.

VII. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?
விடை:

  • மௌரிய பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.
  • அவர் அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.

Question 2.
காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:

  • அக்னிமித்ரா காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னி மித்ரா நாடகத்தின் கதாநாயகன். (அக்னிமித்ரா புஷ்யமித்ர சுங்கரின் மகன்)
  • இந்நாடகம் மேலும் வசுமித்ரர் கிரேக்கர்களை வெற்றி கொண்டதைக் குறிப்பிடுகின்றது. (வசுமித்ரர் அக்னிமித்ரரின் மகன்)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வாசுதேவர்
  • பூமிமித்ரர்
  • நாராயணர்
  • சுசர்மன்

Question 4.
சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.
விடை:

  • சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
  • ஹாலா பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் புகழ் பெற்றிருந்தார்.

Question 5.
சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?
விடை:

  • காந்தாரம்
  • மதுரா
  • அமராவதி
  • புத்தகயா
  • சாஞ்சி
  • பாகுத்

Question 6.
முதலாம் கட்செஸ்ஸின் சாதனைகைைளக் குறிப்பிடுக.
விடை:

  • முதலாம் கட்பிசஸ் குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி.
  • இவர் இந்தோ – கிரேக்க, இந்தோ – பார்த்திய அரசர்களை வெற்றி கொண்டார்.
  • இவர் பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
  • இவர் தன்னுடைய ஆதிக்கத்தை காபூல், காந்தாரம் மற்றும் சிந்துவரை பரப்பினார்.

Question 7.
கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அஸ்வகோஷர்
  • வசுமித்ரா
  • நாகார்ஜூனா

VIII. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
விடை:
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் :
வடமேற்கிலிருந்து சாகர்கள், சிந்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ – கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய – கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் படையெடுத்தனர்.

  • தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
  • குப்தப்பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி அமைத்தனர்.
  • சேடிகள் (கலிங்கம்) தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
விடை:

  • புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
  • அவர் மேற்கு நோக்கி உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கி தனது அரசை விரிவு படுத்தினார்.
  • அவர் பாக்டீரிய அரசனின் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்தார்.
  • அவர் கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் முறியடித்தார்.
  • மேலும் அவர் விதர்பாவையும் கைப்பற்றினார்.

Question 3.
கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:

  • கௌதமிபுத்திர சதகர்ணி சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்
  • இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தவர் என அவரது அன்னையால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்கீர்த்தியில் கூறப்படுகிறார்.
  • பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
  • இவரது கப்பல்வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஆந்திரர்களின் கடல்சார் திறன்களையும் கப்பல்படை வலிமையையும் உணர்த்துகின்றன.

Question 4.
கோண்டோபரித் அரசு வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • இந்தோ – பார்த்திய அரச அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.
  • இந்தோ – பார்த்தியர் ஆட்சிப் பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • கோண்டோ பெர்னஸ் என்னும் பெயர் கிறித்துவ மறை பரப்பாளர் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.
  • கிறிஸ்தவ மரபின்படி புனித தாமஸ் கோண்டோ பெர்னஸின் அரசவைக்கு வந்தார்.
  • புனித தாமஸ் கோண்டோ பெர்னஸை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினார்.

Question 5.
இந்தோ -கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்
விடை:
மினான்டர் இந்தோ – கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர். ஏனெனில்

  • அவர் நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
  • அவரது நாணயங்கள் பரந்து விரிந்த காபூல் பள்ளத்தாக்கு மற்றும் சிந்துநதி தொடங்கி மேற்கு உத்திரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.
  • மிலிந்த பன்கா என்னும் பௌத்த நூல் அரசன் மிலிந்தாவுக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாகும் (மிலிந்தா = மினான்டர்)
  • அவர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றினார்.

Question 6.
சாகர்கள் யார்?
விடை:

  • நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
  • அவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்
  • அவர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சிந்தியர்கள்.
  • அவர்கள் சமஸ்கிருத மொழியில் சாகர்கள் என அறியப்பட்டனர்.
  • அவர்களால் இந்தியாவில் இந்தோ- கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 7.
கனிஷ்கருடைய மதக்கொள்கை பற்றி எழுதுக.
விடை:

  • கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தர் ; அவரது பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
  • அவர் அஸ்வகோஷர் (பாடலிபுத்திர துறவி) என்பவரின் போதனைகளால் பௌத்தத்தைத் தழுவினார்.
  • அவர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவு மகாயானத்தை ஆதரிப்பவராகவும் முன்னெடுத்துச் செல்பவராகவும் விளங்கினார்.
  • அரச மதமானதால் அவர் பல ஸ்தூபிகளையும் மடலாயங்களையும் கட்டினார் (மதுரா, தட்சசீலம் மற்றும் பேரரசின் இதர பகுதிகளில்)
  • அவர் புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்கு சமயப் பரப்பாளர்களை அனுப்பினார்.
  • அவர் நான்காவது பௌத்தப் பேரவையை குந்தலவனத்தில் (ஸ்ரீநகருக்கு அருகே) கூட்டினார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக்கலைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளது.
  • கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
  • மகாயான பௌத்தர்கள் அவர்களிடமிருந்து குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கற்றனர்.
  • அவர்கள் அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் திறன் பெற்றனர்.
  • கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

Question 2.
மௌரியருக்குப் பின் வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக – வர்த்தக நிலை குறித்து எழுதவும்.
விடை:

  • இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • அவர் அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார்.
  • அவருடைய நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்களும் அரசருடைய பட்டயப் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.
  • நாணயங்களில் அவை கரோஷ்தி மொழியில் உள்ளன.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. சாதவாகனர், குஷானர் ஆகியோர்களின் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அமைந்து ள்ள இடங்களைப் பற்றி ஒரு ஆல்பம் (செருகேடு) தயார் செய்யவும்.
2. இந்தோ – கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் பண்பாட்டுப் பங்களிப்பு குறித்து வகுப்பறையில் மாணவர்களை விவாதிக்க செய்யவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 91

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்
அ) பாஹியான்
ஆ) யுவான் சுவாங்
இ) யூச் – சி
ஈ) பன் – சியாங்
விடை:
ஆ) யுவான் சுவாங்

Question 2.
புஷ்யமித்திரர் …… ஐ தனது தலைநகராக்கினார்
அ) பாடலிபுத்திரம்
ஆ) பெஷாவர்
இ) குந்தலவனம்
ஈ) பார்குத்
விடை:
அ) பாடலிபுத்திரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
சுங்கர் காலத்தில் கற்களுக்குப் பதிலாக …….. பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.
அ) மரம்
ஆ) இரும்பு
இ) தாமிரம்
ஈ) செங்கல்
விடை:
அ) மரம்

Question 4.
உலகப்புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் … பள்ளத்தாக்கில் இருந்தன
அ) பாமியான்
ஆ) கங்கை
இ) காஷ்மீர்
இ) கென்யான்
விடை:
அ) பாமியான்

Question 5.
…. படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது
அ) சமஸ்கிருதம்
ஆ) கரோஷ்தி
இ) கன்ன டம்
ஈ) பிராகிருதம்
விடை:
அ) சமஸ்கிருதம்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளை ஆக்கிரமித்தனர். காரணம்:மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று : மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்
கூற்று II : கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
அ) கூற்று 1 தவறு. ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளுமே சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சிமுகாவைத் தொடர்ந்து பதவியேற்ற அவருடைய சகோதரர் ……..
விடை:
கிருஷ்ணர்

Question 2.
நின்ற கோலத்திலான புத்தரின் வெண்கலச்சிலை கண்டறியப்பட்ட இடம் …….
விடை:
ஒக்-யோ

Question 3.
இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் ………
விடை:
சாகர்கள்

Question 4.
சாக அரசர் மோகாவின் தலைநகர் ………
விடை:
சிர்காப்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 5.
ருத்ரதாமனின் …… கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
விடை:
ஜுனாகத் கிர்னார்

IV. சரியா தவறா

Question 1.
சதகர்னி, சிமுகாவின் சகோதரியின் மகன்
விடை:
சரி

Question 2.
நாக்காள் பதோம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லால் ஆன முத்திரை தாய்லாந்தில் – உள்ளது
விடை:
சரி

Question 3.
மாவோஸின் பெயர் மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 4.
குஷாணர்கள் சத்ராபிகளை பிராந்திய ஆளுநர்களாக நியமித்தனர்.
விடை:
தவறு

Question 5.
குஷாண ஆட்சியாளர்கள் பௌத்தர்கள்.
விடை:
சரி

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
கலிங்கத்தில் காரவேல அரசர் குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர்
  • காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டு கூறுகிறது.

Question 2.
சாதவாகனர்களின் ஆட்சிப்பகுதிகளை பெயரிடுக.
விடை:

  • மகாராஷ்டிரா
  • வடக்கு கொங்கன்
  • பெரார்
  • குஜராத்
  • கத்தியவார்
  • மாளவம்

Question 3.
சாகர்கள் எவ்வாறு இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர்?
விடை:

  • சாகர்கள் இந்தியப் பெயர்களைச் சூடிக் கொண்டனர்.
  • அவர்கள் இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.

Question 4.
பௌத்தக் கல்வியும் பண்பாடும் எங்கே சென்றன?
விடை:
பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சசீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

VI. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
கனிஷ்கருடைய படையெடுப்புகள் குறித்து எழுது.
விடை:

  • கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
  • அவர் மகதத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.
  • விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக பார்த்திய அரசருக்கு எதிராகப் போர்தொடுத்தார்.
  • அவர் சீனத்தளபதி பன் – சியாங் என்பவரைத் தோற்கடித்து சீனர்கள் ஊடுருவலைத் தடுத்தார்.
  • அவரது பேரரசு காஷ்மீரிலிருந்து கீழே வாரணாசி வரையிலும் தெற்கே விந்திய மலைகள் வரையிலும் பரவியிருந்தது.
  • பேரரசில் காஸ்கர், யார்க்கண்ட் மற்றும் பாரசீகம், பார்த்தியா எல்லைகளும் அடங்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
அ) கடற்கரைக் கோவில்
ஆ) மண்டகப்பட்டு
இ) கைலாசநாதர் கோவில்
ஈ) வைகுந்தபெருமாள் கோவில்
விடை:
அ) கடற்கரைக் கோவில்

Question 2.
மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால். எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
அ) 1964
ஆ) 1994
இ) 1974
ஈ) 1984
விடை:
ஈ) 1984

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
அ) புடைப்புச் சிற்பங்கள்
ஆ) விமானங்கள்
இ) பிரகாரங்கள்
ஈ) கோபுரங்கள்
விடை:
ஆ) விமானங்கள்

Question 4.
அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
அ) திருக்குறுங்குடி
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) திருவில்லிபுத்தூர்
விடை:
அ) திருக்குறுங்குடி

Question 5.
வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நந்திவர்மன்
இ) ராஜசிம்மன்
ஈ) இரண்டாம் ராஜராஜன்
விடை:
ஆ) நந்திவர்மன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ………………… என்ற இடத்தில் உள்ளது.
விடை:
மண்டகப்பட்டு

Question 2.
முற்கால சோழர் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றியது.
விடை:
செம்பியன் மகாதேவி

Question 3.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் …………………. ஆகும்.
விடை:
1000- கால் மண்டபம்

Question 4.
பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ……………………. பெயர்பெற்றது.
விடை:
கோபுரங்கள்

Question 5.
விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ………………… ஆகும்.
விடை:
மண்டபம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 2

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்
விடை:
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
திருவில்லிபுத்தூர் அழகர்கோவில், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை
விடை:
பொருந்தாதது எதுவுமில்லை (ஐந்து கோவில்களிலும் விஜயநகர நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன)

Question 4.
பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
அ) கி.பி. 600-850
ஆ) கி.பி. 850-1100
இ) கி.பி. 1100-1350
ஈ) கி.பி. 1350-1600
விடைகள் :
அ) கி.பி. 600-850 : பல்லவர் காலம்
ஆ) கி.பி. 850-1100 : முற்காலச் சோழர் காலம்
இ) கி.பி. 1100-1350 : பிற்காலச் சோழர் காலம்
ஈ) கி.பி. 1350-1600 : விஜயநகர / நாயக்கர் காலம்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர் காலகட்டடக்கலைப்பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
விடை:
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
3. பிள்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.

V. சரியா? தவறா?

Question 1.
இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
விடை:
சரி

Question 2.
முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.
விடை:
தவறு

Question 3.
பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.
விடை:
சரி

Question 4.
பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Question 5.
தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.
விடை:
தவறு

VI. குறுகிய விடையளி

Question 1.
பஞ்சபாண்டவ இரதம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
பஞ்சபாண்டவ இரதம்:

  • தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன (மகாபலிபுரம்).
  • அவை திரௌபதி இரதம், தர்ம ராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியவை.
  • அவை மாடக்குழிகளாலும், பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • பிரமாண்டமான கலைப்படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி புடைப்புச் சிற்பம் ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்ட கருங்கல் பாறையாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றிக் கூறுக
விடை:
சித்தன்னவாசல் ஓவியங்கள்:

  1. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும். அவர்கள் குகைச் சுவர்களில் சாந்துபூசி, ஈரம் காய்வதற்கு முன்னரே ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.
  2. இன்றைக்கு இருப்பனவற்றுள் தாமரைத் தடாக ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  3. மிகச் சிறந்த வர்ணங்களின் பயன்பாட்டிற்கும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள நேர்த்திக்கும் – புகழ்பெற்றதாகும். தாமரை மலர்கள், குளமெங்கும் நீரில் பரவிக்கிடக்கும் இலைகள், யானை. எருமை, அன்னப்பறவை. பூக்களைப் பறிக்கும் மனிதன் ஆகிய ஓவியக்காட்சி மனங்களைக் கொள்ளை கொள்கின்றது.

Question 3.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்கள்:

  • தஞ்சாவூர் பெரிய கோவில் ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது.
  • அதன் விமானம் 216 அடிகள் உயரம் கொண்டதாகும். உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்று. அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
  • இங்குள்ள மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும் (16 அடி நீளம் 13 அடி உயரம்).

Question 4.
இராமேஸ்வரம் கோவில் நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தைக் கூறுக.
விடை:
நம் கவனத்தை ஈர்க்கும் இராமேஸ்வரம் கோவில்:

  1. இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது.
  2. இது மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.
  3. வெளிப்பிரகாரம் (7 மீட்டர் உயரம், 120 மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு மேற்குப் பிரகாரங்கள்)
    • வடக்கு தெற்கு பிரகாரங்கள் (195 மீட்டர் நீளமுடையவை)
    • உட்புறப் பிரகாரங்கள் (மிகப்பழமையானவை)
  4. 1200க்கும் மேற்பட்ட தூண்கள் வெளிப்பிரகாரத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது விளக்குக. குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களுக்கான மாற்றம் (பல்லவர் காலம்):
விடை:

  • பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது.
  • குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்படும். பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.
  • பல்லவ அரசர் மகேந்திரவர்மன் குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாவார். மண்டகப்பட்டு, முதல் குடைவரைக் கோவிலாகும்.
  • குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் அக்கோவிலைத் தாங்கி நிற்கும்.
  • கி.பி.700 க்குப் பின் குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டானது. கடற்கரைக் கோவில் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்.
  • ஒரே பாறையில் கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் – கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன.
  • காஞ்சி கைலாசநாதர் கோவில் (ராஜசிம்மன்), வைகுண்டப்பெருமாள் கோவில் (இரண்டாம் நந்திவர்மன்) ஆகியவை எடுத்துக்காட்டுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
விஜயநகர , நாயக்கர் கால கட்டடக்கலையானது பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கட்டடக்கலையிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது என விவாதிக்கவும்.
விடை:
விஜயநகர / நாயக்கர் கால கட்டடக்கலை:
விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடக்கலைப் பாணி ‘மண்டபங்கள்’ உருவானது.

15 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக்கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.

கோவில்களோடு சேர்ந்து தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் கட்டப்பட்டன. சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது.

பல்லவர்கள் மற்றும் பிற்காலச் சோழர்கள் காலக் கட்டடக்கலை :
பல்லவர் ஆட்சிக்காலத்தில் குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்பட்டு பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.

குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி. 700க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது.

ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப்பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக்குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிற்காலச் சோழர்கள் காலத்தில் தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக்கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன.

தஞ்சாவூர் பெரிய கோவில் (கி.பி.1009) ராஜராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

பிற்காலச் சோழர்கள் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
திராவிடக் கட்டடக்கலை உள்நாட்டில் தோன்றியதை விளக்குக.
விடை:
உள் நாட்டில் தோன்றிய திராவிடக் கட்டடக்கலை :

  • திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.
  • மகாபலிபுரத்திலுள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில் முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) தமிழ் திராவிடக் கட்டடக்கலையின் எடுத்துக்காட்டுகளாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவை இயற்கை சக்திகளால் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாம்.
  • தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
    • பல்லவர் காலம் (கி.பி 600 – 850)
    • முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850 – 1100)
    • பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100 – 1350)
    • விஜயநகர / நாயக்கர் காலம் (கி.பி. 1350 – 1600)
    • நவீன காலம் (கி.பி. 1600க்கு பின்ன ர்)

Question 2.
கோயில் கலை வளர்ச்சியானது நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கியது என்பதை தெளிவுபடுத்துக.
விடை:
நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கிய கோயில் கலை வளர்ச்சி:

  • நாயக்கர்கள் காலத்தில் (விஜயநகர காலம்) மண்டபங்களிலுள்ள ஒற்றைக்கல் தூண்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.
  • தூண்களில் குதிரைகள், சிங்கங்கள் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.
  • 15 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டடக் கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.
  • தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் நுழைவாயில்கள் கட்டப்பட்டன.
  • பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும் முறை அதிகரித்தது. இவற்றை நாம் அழகியநம்பி கோவில், கோபாலகிருஷ்ண கோவில், ஆதிநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் காணலாம்.
  • மண்டபக் கட்டடக்கலைக்கு 1000-கால் மண்டபம், ரதிமண்டபம் (திருக்குறுங்குடி, நாங்குநேரி) ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
  • நாயக்கர் கால ஓவியங்கள் வரதராஜ பெருமாள் கோவில், கூடலழகர் கோவில் மற்றும் திருவில்லிபுத்தூர், அழகர் கோவில், திருவண்ணாமலை மற்றும் திருவரங்கம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க ஆட்சியாளர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கோவில்களுக்குச் சென்று கட்டுமானத்திலும் சிற்பங்களிலும் அவை ஒன்றோடொன்று எவ்விதம் வேறுபடுகின்றன என்பதைக் கண்டறியவும்.

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………. கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது.
அ) காஞ்சி கைலாசநாதர்
ஆ) நெல்லையப்பர்
இ) மீனாட்சியம்மன்
ஈ) வைகுண்டப் பெருமாள்
விடை:
ஈ) வைகுண்டப் பெருமாள்

Question 2.
முற்கால ………………….. பல்லவர்களின் சமகாலத்தவராவர்.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) நாயக்கர்கள்
விடை:
இ) பாண்டியர்கள்

Question 3.
…………………….. சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
அ) சித்தன்னவாசல்
ஆ) திருமலாபுரம்
இ) மதுரை
ஈ) கழுகுமலை
விடை:
அ) சித்தன்னவாசல்

Question 4.
முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்.
அ) விஜயாலயன்
ஆ) செம்பியன் மகாதேவி
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
விடை:
ஆ) செம்பியன் மகாதேவி

Question 5.
தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் …………………… ல் கட்டி முடிக்கப்பட்டது.
அ) 1009
ஆ) 1019
இ) 1029
ஈ) 1039
விடை:
அ) 1009

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………………. கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும்.
விடை:
திராவிட

Question 2.
பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் ……………. தாய்ப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.
விடை:
லிங்கங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
கி.பி. 850ல் …………………. காலத்தில் சோழர்கள் முக்கியத்துவம் பெறத் துவங்கினார்கள்.
விடை:
விஜயாலய சோழன்

Question 4.
மதுரைநாயக்க அரசர்களின் சிற்றரசர்களான ………………….. இராமநாதபுரத்தை ஆண்ட னர்.
விடை:
சேதுபதிகள்

Question 5.
விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் பெரும்பாலும் …………………… கதைக் காட்சிகளைக் கொண்டுள்ளன.
விடை:
ராமாயணக்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 3

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம்
2. இராஜசிம்மன் – பல்லவர்கள் காலம்
3. இராஜராஜன் II – பிற்காலச் சோழர்கள் காலம்
4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்
விடை:
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம், 4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்

Question 2.
கூற்று : கி.பி. 1009ல் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
காரணம் : இது ராஜேந்திர சோழன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
இராஜராஜன், இராஜேந்திரன், இராஜராஜன் II, செம்பியன் மகாதேவி, இராஜசிம்மன். விஜயாலயன்
விடை:
இராஜசிம்மன்

Question 4.
பின்வரும் காலத்தின் சிறப்புக்கூறுகளைப் பெயரிடுக.
அ) பல்லவர்கள் காலம்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம்
இ) பிற்காலச் சோழர்கள் காலம்
ஈ) விஜயநகர / நாயக்கர் காலம்
விடைகள்:
அ) பல்லவர்கள் காலம் : பாறைச் சிற்பங்கள்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம் : விமானங்கள்
இ) பிற்காலச் சோழர்கள் காலம் : கோபுரங்கள்
ஈ) விஜயநகர நாயக்கர் காலம் : மண்டபங்கள்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
2. தாராசுரம் கோவிலை இராஜேந்திர சோழன் கட்டுவித்தார்.
3. கட்டுமானக் கோவில்கள் சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த அதிக வாய்ப்பினைக் கொடுக்கவில்லை.
4. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையல்ல.
விடை:
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

V. சரியா? தவறா?

Question 1.
வைகுண்டப் பெருமாள் கோவிலிலுள்ள கருவறைகளில் ஒன்று சிவபெருமானுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
தாதாபுரம் கோவில் திண்டிவனத்துக்கு அருகேயுள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
சித்தன்னவாசல் பௌத்த துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
விடை:
தவறு

Question 4.
இந்திரனின் யானை வழிபட்ட கடவுள் ஐராவதீஸ்வரர்.
விடை:
சரி

Question 5.
வெளிப்புறத்தில் கட்டப்பட்ட தூண்களுடன் கூடிய மண்டபங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டவை.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்களை விவரி.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்கள்:

  • பாறை குடைவரைக் கோவில்களில் குகைகளின் சுவர்கள் கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • கட்டுமானக் கோவில்களைப் பொருத்தமட்டிலும் கருவறையின் சுவர்களில் அலங்கார வேலைப்பாடுகள் காணப்படவில்லை. மாறாகக் கட்டுமானங்களிலும் தூண்களிலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இச்சிற்பங்கள் கம்பீரமாகவும், அகன்ற தோள்களோடும் ஒடிசலான உடல்வாகுடனும் அழகான ஆபரணங்களோடும் உயரமான கிரீடங்களோடும் காட்சியளிக்கின்றன.

Question 2.
பிள்ளையார்பட்டி கோவில் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
பிள்ளையார்பட்டி கோவில்:

  • பிற்காலப் பாண்டியர்களின் பங்களிப்புக்கு சான்றாக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிள்ளையார்பட்டியிலுள்ள (காரைக்குடிக்கு அருகில்) குடைவரைக் கோவில் அமைந்துள்ளது.
  • சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • நுழைவாயிலைப் பார்த்தவண்ணம் அழகான கணேசனின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
  • தேசிவிநாயகம் என குகைக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கைகளைக் கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலது புறமாகத் திரும்பியுள்ளது.

Question 3.
முற்கால சோழர்கள் கட்டடக்கலை பற்றி குறிப்பு வரைக.
விடை:
முற்கால சோழர்கள் கட்டடக்கலை:

  1. இக்கால கோவில் கட்டடக்கலை செம்பியன் மகாதேவி பாணியைப் பின்பற்றி அமைந்தது.
  2. கோவில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் என்ற மாடக்குழிகள் இருந்தால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம்.
  3. எ.கா: திருப்புறம்பியம் (செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட்டது) கோவில்.

Question 4.
விஜயநகர / நாயக்கர் கால சிறப்பித்துக் சொல்ல வேண்டிய மிகப்பெரும் கலைப் படைப்புகள் யாவை?
விடை:
சிறப்பான மாபெரும் கலைப் படைப்புகள்:

  1. ஜலகண்டேஸ்வரர் கோவில் (வேலூர்)
  2. தாடிக் கொம்பில் உள்ள கோவில் (திண்டுக்கல்)
  3. கிருஷ்ணாபுரத்தில் உள்ள கோவில் (திருநெல்வேலி)
  4. பெரிய கோவிலுக்குள் அமைந்த சுப்பிரமணியசுவாமி கோவில் (தஞ்சாவூர்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 5.
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பெயரிடுக.
விடை:
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்கள்:

  • சிவன்
  • விஷ்ணு
  • பிரம்மன்
  • பார்வதி
  • கணபதி
  • சுப்பிரமணியன்
  • தட்சிணாமூர்த்தி

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள் – விவாதிக்க.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள்:
முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவராவர்.

பாண்டியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குகைக்கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளில் முக்கியமானவை மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி (சிவன், விஷ்ணு, பிரம்மாவுக்குப் படைத்தளிக்கப்பட்டவை).

சிவலிங்கம் கருவறையின் மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீர் வெளியே செல்ல கால்வாயும் உள்ளது.

தூண்கள் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அலங்கார வேலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லை. புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

பாறைகுடைவரைக் கோவில்களும் கட்டுமானக் கோவில்களும் சிறப்புமிக்க அம்சங்களாகும். கழுகுமலை வெட்டுவான் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பாண்டியர் கட்டடக்கலை பாணியை பறைசாற்றுகின்றன.

சிற்பங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றன. சித்தன்னவாசல் (புதுக்கோட்டை) மற்றும் திருமலாபுரம் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உன்னதமான ஒவியங்கள் உள்ளன. ஓவியக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

Question 2.
தென்னிந்தியாவில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி பற்றி உனக்குத் தெரிந்ததை எழுது.
விடை:
கோவில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சி:
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை பின்வருமாறு.

  • முதல் கட்டம் – பல்லவர் காலம் கி.பி. 600 – 850
  • இரண்டாம் கட்டம் – முற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 850 – 1100
  • மூன்றாம் கட்டம் – பிற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 1100 – 1350
  • நான்காம் கட்டம் – விஜயநகர நாயக்கர் காலம் கி.பி. 1350 – 1600
  • ஐந்தாம் கட்டம் – நவீன காலம் கி.பி. 1600க்குப் பின் திராவிடக் கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனில் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
அ) பொய்கை ஆழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆண்டாள்
விடை:
ஆ) பெரியாழ்வார்

Question 2.
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமாநந்தர்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆதி சங்கரர்
விடை:
ஈ) ஆதி சங்கார்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
அ) வல்லபாச்சாரியார்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சூர்தாஸ்
விடை:
இ) இராமாநந்தர்

Question 4.
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
அ) மொய்னுதீன் சிஸ்டி
ஆ) சுரவார்டி
இ) அமீர் குஸ்ரு ஸ்ரு
ஈ) நிஜாமுதின் அவுலியா
விடை:
அ) மொய்னுதீன் சிஸ்டி

Question 5.
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
அ) லேனா
ஆ) குரு அமீர் சிங்
இ) குரு நானக்
ஈ) குரு கோவிந் சிங்
விடை:
இ) குரு நாதால்,

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் …………………
விடை:
விஷ்ணு சித்தர்

Question 2.
சீக்கியர்களின் புனித நூல் ……………… ஆகும்.
விடை:
குரு கிரந்சாகிப்

Question 3.
மீராபாய் ………………. என்பாரின் சீடராவார்
விடை:
ரவிதாஸ்

Question 4.
……………….. என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.
விடை:
இராமானுஜர்

Question 5.
தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ……………… என்ற இடத்தில் அமைந்துள்ளது.
விடை:
கர்தார்பூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 2

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
துக்காராம் – வங்காளம்
சைதன்யதேவா – மகாராஷ்டிரா
பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
குருத்வாராக்கள் – சீக்கியர்கள்
விடை:
1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.
விடை:
ஆண்டாள்

V. சரியா? தவறா?

Question 1.
இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.
விடை:
சரி

Question 2.
இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.
விடை:
சரி

Question 3.
குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
விடை:
சரி

Question 4.
கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.
விடை:
சரி

Question 5.
அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
திருமுறை பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
திருமுறை:

  • திருமுறை சைவப் புனித நூல்களின் அடிப்படை.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) திருமுறையைத் தொகுத்தார் (நாயன்மார்களின் பாடல்கள் தொகுப்பு).
  • திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது (11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பி, 12வது நூல் சேக்கிழார் – பெரிய புராணம்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்?
விடை:
நாயன்மார்கள்:

  • நாயன்மார்கள் 63 பேராவர் (சைவ அடியார்கள்)
  • ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள்) முக்கியமானவர்கள்

Question 3.
சீக்கிய மதத்தைத் தோற்றுவிக்க குருநானக் எவ்விதம் உதவினார்?
விடை:
சீக்கிய மதம்:

  • குருநானக்கின் போதனைகளே புதிதாக நிறுவப்பட்ட சீக்கிய மதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது.
  • 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் நிறுவினார்.
  • நானக் வேதச் சடங்குகள், சாதிப்பாகுபாடுகள் ஆகியவை மீது வெறுப்புக் கொண்டிருந்தார்.

Question 4.
பண்டரிபுரம் விதோபா கோவிலுக்கு, துக்காரம் எவ்விதம் பணியாற்றினார்?
விடை:
துக்காராமும் விதோபா கோவிலும்:

  • துக்காராம் (கவிஞர், திருத்தொண்டர் – மகாராஷ்டிரா) அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே நன்கு அறியப்பட்டிருந்தார்.
  • அவருடைய பாடல்களான அபங்கா (அல்லது) கீர்த்தனைகள் விதோபா குறித்து இயற்றப்பட்டது (விஷ்ணுவின் அவதாரம்),
  • விதோபா கோவில் பந்தர்பூரில் உள்ளது. (சோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா)

Question 5.
கபீரின் சமயக்கருத்துக்கள் கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோருக்கு ஏற்புடையதாயிற்று என்பதை முன்னிலைப்படுத்து.
விடை:
கபீரின் சமயக்கருத்துக்கள்:
பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. ஆனால் கபீர் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் நம்பினார்.

கபீர் சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

VII. விரிவான விடையளி

Question 1.
தென்னிந்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரது பங்களிப்பினைப் பற்றிக் கூறு.
விடை:
பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரின் பங்களிப்பு:
கடவுளின் மீதான முழுமையான பக்தியே மனிதனை வாழ்வின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்து முக்தியை அருளுமென பக்தி இயக்கங்களை நிறுவிய சான்றோர்கள் கருதினர்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தென்னிந்தியாவில் தொடங்கிற்று. ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல். கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல், மதச் சின்னங்களைச் சுமந்து செல்லுதல், கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவை உள்ளடங்கும்.

தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது. சூபி தத்துவமும் இதே போன்ற கருத்தையே போதித்தது.

ஆழ்வார்கள் (வைணவ பக்தி அடியார்கள்), நாயன்மார்கள் (சிவனை வழிபடும் சைவ அடியார்கள்), ஆதிசங்கரர் (அத்வைதம்), இராமானுஜர் (விசிஷ்டாத்வைதம்) ஆகியோர் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பிய சான்றோர் ஆவர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார், சூர்தாஸ், மீராபாய், சைதன்யதேவா, துளசிதாசர் மற்றும் துக்காராம் ஆகியோர் வடஇந்தியாவில் பக்தி இயக்கம் பரவக் காரணமான சான்றோர்கள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
சூபியிஸம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்விதம் தடம் பதித்தது?
விடை:
சூபியிஸம் மற்றும் இந்தியாவில் அதன் தடம் பதிப்பு:
சூபியிஸம்:

  • சூபி எனும் சொல் சுப்’ என்பதிலிருந்து தோன்றியதாகும். அதன் பொருள் கம்பளி ஆகும். சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது இந்து, பௌத்த சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது.

இந்தியாவில் தடம் பதித்தல்:

  • பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தானிய ஆட்சியின்போது சூபியிஸம் முக்கியத்துவம் பெற்றது.
  • இந்தியக் கருத்தாக்கங்களான யோகப்பயிற்சி, தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றை கைக்கொண்டது.
  • மொய்னுதீன் சிஸ்டி, சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கினார். நிஜாமுதீன் அவுலியா டெல்லியின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எண்ணற்ற நபர்களால் பின்பற்றப்பட்டார்.
  • பிர்தௌசி அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பீகாரில் மட்டுமே காணப்பட்டன. அது சுரவார்டியின் ஒரு கிளைப் பிரிவாகும். (சுரவார்டி அமைப்பு தோற்றுவித்தவர் அப்துல்-வகித் அபு நஜிப் எனும் ஈரானிய சூபி).

Question 3.
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கம் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
விடை:
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்:

  • இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டது. அதனால் அது இஸ்லாமின் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட்டது.
  • பக்தி இயக்கச் சான்றோர்களால் இஸ்லாமியத் தத்துவக்கூறுகள் வலியுறுத்தப்பட்டு அமைதியும், இணக்கமும் வளர்ந்தன (தத்துவக் கூறுகள் கடவுள் ஒருமைப்பாடு மற்றும் உலக சகோதரத்துவம்).
  • சாமானிய மக்களின் மொழியைப் பயன்படுத்தி பக்தி இயக்கம் சாமானிய மக்களின் இயக்கமானது.
  • இந்திய மொழிகள் வளர்வதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிராந்திய மொழிகளின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாய் அமைந்தது.
  • இந்து அரசுகளின் அரசர்கள் சரிவைச் சந்தித்த சமஸ்கிருத மொழிக்கு ஆதரவு நல்கினார்.
  • தமிழ் மட்டுமே பக்தி இயக்கக் காலப் பகுதியில் உயிர்த்துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி. பக்தி இயக்கக் கோட்பாடுகளால் அன்றாட வாழ்க்கையைச் சித்தரித்த தமிழ் இலக்கியம், சமயங்களுக்கும், சமய இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது.
  • சாதி முறையும் சமூக ஏற்றதாழ்வுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
இஸ்லாத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தது என்பதை ஆராய்க.
விடை:
வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தல் :
இந்து. இஸ்லாம் ஆகிய இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை .

ஹரிதாசரின் கூற்று “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே”.

பிற சமய கடுந்தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு, ஆண், பெண் சமத்துவத்தையும் முன்னிறுத்தினர்.

ஆதி சங்கரர் பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாது வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.

சமூக, சமத்துவக் கருத்துகளைப் பரப்பிய இராமானுஜர் கோவில்களில் நுழைவதற்கான சாதியக் கட்டுபாடுகளை கண்டனம் செய்தார்.

கபீர், குருநானக் (புதிய சமயப்பிரிவுகள்) மற்றும் வங்காளத்தில் சைதன்ய தேவா ஆகியோர் சிறப்பாய் செயல்பட்டனர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார் (தெலுங்கு), சூர்தாஸ் (ஆக்ரா), மீராபாய் (மேவார்), துளசிதாசர், துக்காராம் ஆகியோரும் பக்தி இயக்கத்தைப் பரப்பியதன் மூலம் வேத இந்து மதத்தைப் பாதுகாத்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழகத்தின் பக்தி இயக்கப் பெரியோர் வாழ்ந்த பகுதிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பகுதிகளுக்கு நேரில் செல்க.

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகவத் கீதையில் ……………… சிறந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
அ) பக்திமார்க்கம்
ஆ) ஞானமார்க்கம்
இ) கர்மா மார்க்கம்
ஈ) நிர்வாணம்
விடை:
அ) பக்திமார்க்கம்

Question 2.
அத்வைதத்தைப் போதித்தவர் ……………
அ) ஆதி சங்கரர்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சைதன்யர்
விடை:
அ) ஆதி சங்கரர்

Question 3.
17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் ………………..
அ) சூர்தாசர்
ஆ) துளசிதாசர்
இ) துக்காராம்
ஈ) ரவிதாஸ்
விடை:
இ) துக்காராம்

Question 4.
சிஸ்டி …………………… இயற்கை எய்தினார்.
அ) கர்தார்பூர்
ஆ) குர்தாஸ்பூர்
இ) லாகூர்
ஈ) ஆஜ்மீ ர்
விடை:
ஈ) ஆஜ்மீர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
குருநானக் ……………….. என்ற தனது சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்.
அ) ஆதிக்கிரந்தம்
ஆ) லேனா
இ) குரு கோவிந் சிங்
ஈ) குரு அர்ஜுன் சிங்
விடை:
ஆ) லேனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கபீரின் பாடல்கள் ………………. மொழியில் எழுதப்பட்டவை.
விடை:
போஜ்புரி

Question 2.
2019 குருநானக்கின் ……………….. வது பிறந்தநாளைச் சிறப்பிக்கிறது.
விடை:
550

Question 3.
சூபியிஸம் ………………. கடுமையான ஒழுக்க விதிகளை மறுத்தது.
விடை:
உலேமாக்களின்

Question 4.
வங்காளத்தில் பக்தி இயக்கம் ………………… உடன் தொடர்புடையது.
விடை:
சைதன்ய தேவா

Question 5.
பெரியாழ்வார் ஆண்டாளை கோவில் ………………….. கண்டெடுத்தார்.
விடை:
துளசித் தோட்டத்தில்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 3

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
இராமானுஜர் – அத்வைதம்
திவ்விய பிரபந்தம் – நாயன்மார்கள்
கபீர் – சீக்கியர்
கிர்பான் – குறுவாள்
விடை:
1. ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
5. கிர்பான் – குறுவாள்

Question 2.
கூற்று : கபீர் வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட இராமாநந்தரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.
காரணம் : அவர் கடவுள்களையும், பெண் கடவுள்களையும் நம்பினார். –

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
சிஸ்டி, பிர்தௌசி, சுரவார்டி, கால்சா
விடை:
கால்சா

V. சரியா? தவறா?

Question 1.
சிஸ்டி அமைப்பை பின்பற்றியவர்களுள் கவிஞர் அமீர் குஸ்ருவும் ஒருவர்.
விடை:
சரி

Question 2.
தர்மசாலைகள் குருத்வாராக்கள் ஆயின.
விடை:
சரி

Question 3.
உயிர் துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே.
விடை:
தவறு

Question 4.
மீராபாய் அவருடைய கீர்த்தனைகள் மூலம் பிரபலமானார்.
விடை:
தவறு

Question 5.
ஆதிசங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
வைணவத்தின் இரு பிரிவுகள் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
வைணவத்தின் இரு பிரிவுகள் வடகலை வைணவம் மற்றும் தென்கலை வைணவம்.

வடகலை வைணவம்:
காஞ்சிபுரத்தில் வடகலை வைணம் செழித்தோங்கியது. அது புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வி மையம். வடகலையின் முக்கியத்துவம் சமஸ்கிருத வேத நூல்கள்.

தென்கலை வைணவம்:
திருவரங்கத்தை தென்கலை வைணவம் மையமாகக் கொண்டிருந்தது. தென்கலையின் முக்கியத்துவம் தமிழ்மொழியில் எழுதப்பட்ட (12 ஆழ்வார்கள்) திவ்விய பிரபந்தம்.

Question 2.
வல்லபாச்சாரியார் குறித்து ஒரு சிறுகுறிப்பு வரைக.
விடை:
வல்லபாச்சாரியார்:
பார் வல்லபாச்சாரியார் ஒரு தெலுங்கு தத்துவஞானி. அவர் மதுராவுக்கு அருகே கோவர்த்தன் குன்றுகளில் கிருஷ்ண பகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தார்.

Question 3.
கால்சாவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய ஐந்து தனித்தன்மைகள் யாவை?
விடை:
கால்சா உறுப்பினரின் ஐந்து தனித்தன்மைகள்:

  • கேஷ் – (வெட்டப்படாத முடி)
  • கன்கா – (சிகைக்கோல்)
  • கிர்பான் – (குறுவாள்)
  • கடா – (இரும்புக் காப்பு)
  • கச்சேரா – (கீழ்ப்பகுதி உள்ளாடை)

Question 4.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி எவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.
விடை:
தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகள் (ஏழாம் நூற்றாண்டு):

  • ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல்.
  • கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல்.
  • மதச் சின்னங்களை அணிந்து கொள்தல் (அல்லது) அடையாளச் சின்னங்களைச் சுமந்து செல்தல்.
  • கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்தல்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
சமய இயக்கங்களில் பிற சமயங்கள் சார்ந்த கூறுகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டப்பட்டதா?
விடை:
இல்லை . எவ்விதத் தயக்கமும் காட்டப்படவில்லை .
இந்து, இஸ்லாம் இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை.

எடுத்துக்காட்டு: “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” என்பது ஹரிதாசர் கூற்று.

VII. விரிவான விடையளி

Question 1.
“ஆதி சங்கரரின் தத்துவமும் அவரின் பணிகளும்” – விவரி.
விடை:

  • ஆதிசங்கரர் (சங்கராச்சாரியார்) அத்வைதம் எனும் தத்துவத்தைப் போதித்தார்.
  • “ஞானத்தைப் பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா) இணையும்” என்பதே அத்வைதத்தின் சாரமாகும்.
  • சங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார். அவை கற்றுக் கொள்ளுதல் மற்றும் வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன.
  • பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாத அவர் வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.
  • பிரம்ம சூத்திரம் (வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூல்) நூலுக்கு அவர் எழுதிய உரையே அவர் பணிகளில் சாலச் சிறந்தது. அவர் உபநிடதங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

Question 2.
“குருநானக்” வரலாற்றைச் சுருக்கமாக எழுது
விடை:
குருநானக்:

  • குருநானக் 1469ல் லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார்.
  • செய்வதில் ஆர்வம் காட்டினார்.
  • இயல்பான உலக வாழ்க்கையில் அவரை அவருடைய பெற்றோர்கள் ஈடுபடுத்துவதில் அக்கறை கொண்ட போதிலும், அவர் ஆன்மீகத்தில் மனச்சாய்வு கொண்டிருந்தார்.
  • நானக் பல புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த பின் இறுதியில் லாகூருக்கு அருகிலுள்ள கர்தார்பூரில் குடியேறினார். 1539 அங்கே இயற்கை எய்தினார்.
  • இந்திய அரசால் நானக் கோவிலையும் (குர்தாஸ்பூர்) குருத்வாரா தர்பார் சாகிப்பையும் (பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர்) இணைக்கும் நடைபாதை ஒன்றை 2019ல் அவருடைய

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்தி இயக்கத்திற்கு கபீரின் பங்களிப்பு – விளக்குக.
விடை:
கபீர் மற்றும் பக்தி இயக்கம் :
கபீர் ஓர் இஸ்லாமியராக இருந்தபோதிலும், இராமாநந்தரின் (வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட அடியார்) செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.

சில இந்து சமயக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் இந்து இஸ்லாம் சமயங்களிடையே ஒத்திசைவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார்.

அவரின் கருத்துக்கள் இந்து சமூகத்தில் குறிப்பாக கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோர்க்கு ஏற்புடையதாய் அமைந்தன. கபீர் சமயம், சாதி, செல்வம் அடிப்படையிலான பாகுபாடுகளை கண்டனம் செய்தார்.

அவர் கடவுள் ஒருவரே, அவர் வடிவமற்றவர் என்று நம்பினார். பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. கபீர் பொருளற்ற சடங்கு முறைகளையும் எதிர்த்தார்.

அவருடைய பாடல்கள் போஜ்புரி மொழியோடு உருது கலந்து எழுதப்பட்டவை. (கிரந்தவளி மற்றும் பைஜக் அவருடைய கவிதைத் தொகுப்புகள்)

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ……
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோ அடிகள்
ஈ) முடத்திருமாறன்
விடை:
ஆ) சேரன் செங்குட்டுவன்

Question 2.
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
விடை:
இ) பல்லவர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 3.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ……. ஆவர்.
அ) சாத வாகனர்கள்
ஆ) சோழர்கள்
இ) களப்பிரர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை:
இ) களப்பிரர்கள்

Question 4.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ………
அ) மண்ட லம்
ஆ) நாடு
இ) ஊர்
ஈ) பட்டினம்
விடை:
இ) வர்

Question 5.
குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ) கொள்ளையடித்தல்
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ) வேளாண்மை
விடை:
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
விடை:
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மட்டும்
விடை:
ஆ. 1 மற்றும் 3 மட்டும்

Question 3.
பண்டைக்காலத்தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.
அ. ஊர்<நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை:
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 80
விடை:
அ) 3, 2, 1

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வெண்ணி போரில் வெற்றி பெற்றது …………
விடை:
கரிகால் வளவன்

Question 2.
சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ……….
விடை:
தொல் காப்பியம்

Question 3.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ……… கட்டினார்
விடை:
கரிகாலன்

Question 4.
படைத்தலைவர் ………… என அழைக்கப்பட்டார்
விடை: தானைத்தலைவன் Question 5. நில வரி ……. என அழைக்கப்பட்டது விடை:
இறை

IV. சரியா /தவறா

Question 1.
சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர் விடை:
தவறு

Question 2.
சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
விடை:
தவறு

Question 3.
கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை:
சரி

Question 4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 90
விடை:
அ. பாண்டியர்
ஆ. சேரர்
இ. சோழர்
ஈ) வேளிர்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறு கட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கிய சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தொல்காப்பியம்
  • எட்டுத் தொகை
  • பத்துப்பாட்டு

Question 2.
நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
விடை:
பண்டைத் தமிழகத்தில் போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்ற நடப்பட்டவை நடுகற்கள் (வீரக்கற்கள்)

Question 3.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • குறிஞ்சி – முல்லை மருதம்
  • நெய்தல் – பாலை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அரிக்கமேடு
  • ஆதிச்ச நல்லூர்

Question 5.
கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பாரி
  • காரி
  • ஓரி
  • பேகன்
  • ஆய்
  • அதியமான்
  • நள்ளி

Question 6.
களப்பிரர் காலத்தைச் சேர்ந்த ஏதேனும் மூன்று தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை
  • யாப்பெருங்கலம்
  • பெரியபுராணம்

VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
விடை:

  • சங்ககாலப் பெண்கள் கற்றறிந்தவர்கள், அறிவுக் கூர்மையுடையவர்கள்
  • அரிய நூல்களைக் கொடுத்துச் சென்றுள்ள நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்தனர்.
  • சொந்த விருப்பத்தைச் சார்ந்து திருமணம் அமைந்தது. கற்பு மிகச் சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது.
  • பெற்றோரின் சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு உண்டு.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்படுகிறான். நிறுவுக.
விடை:

  • கரிகாலன் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படைகளை வெண்ணி போரில் தோற்கடித்தார். காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
  • வேளாண்மை மேம்பாட்டிற்காக காவிரியில் கல்லணை கட்டினார்.
  • புகார் துறைமுகம் மூலம் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பட்டினப்பாலை நூல் மூலம் தெரிகிறது. எனவே கரிகாலன் சோழர்களின் மிகச்சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்.

Question 2.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரிய புராணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கியச் சான்றுகள் களப்பிரர்கள் ஆட்சி குறித்தவை.
  • சீவகசிந்தாமணி, குண்டலகேசி, இரண்டும் களப்பிரர்கள் காலத்தவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன. .
  • இக்காலத்தில்தான் சமணமும், பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து முறை உருவானது.
  • வணிகமும் வர்த்தகமும் செழித்தோங்கின. எனவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல.

X. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. பல்வகை நிலப்பரப்புக் காட்சிப் படங்களைச் சேகரித்து, ஒட்டி, அவை எந்தத் திணைப் பகுதியைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்கவும். அங்கு விளையும் முக்கியப் பயிர்கள், வாழும் மக்களின் தொழில் ஆகியவை பற்றி எழுதவும்.

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 91
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 92

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூற்றுப்படி தமிழ்மொழி …….. மொழியின் அளவிற்குப் பழமையானது
அ) சீன
ஆ) கிரேக்க
இ) இலத்தீன்
ஈ) ஆங்கிலம்
விடை:
இ) இலத்தீன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 2.
சிலப்பதிகார காவியப் பாத்திரம்
அ) கண்ண கி
ஆ) மணிமேகலை
இ) சீதை
ஈ) பாஞ்சாலி
விடை:
அ) கண்ண கி

Question 3.
பாண்டியர் துறைமுகம்
அ) புகார்
ஆ) கொற்கை
இ) முசிறி
ஈ) தொண்டி
விடை:
ஆ) கொற்கை

Question 4.
இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிடப்படுவது
அ) முசிறி
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) புகார்
விடை:
அ) முசிறி

II. கூற்றை வாசிக்கவும். சரியான விடையை (✓) செய்யவும்

கூற்று : களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல.
காரணம் : இலக்கியச் சான்றுகள், புதிய எழுத்துமுறை, வணிகம் வர்த்தகம் செழிப்பு பற்றி தெரிகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?

1. பாண்டியர் அத்திப்பூ மாலை சூடினர்
2. குறிஞ்சி மக்களின் வழிபடு தெய்வம் இந்திரன்
3. இயற்கை வரலாறு நூலின் ஆசிரியர் இளைய பிளினி
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 3
விடை:
அ) 1, 2 மற்றும் 3

III. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
‘மென்புலம்’ – ‘வன்புலம்’ குறிப்பு தருக.
விடை:
மென்புலம் :

  • மருத நிலம் ‘மென்புலம்’ (நன்செய்) என அழைக்கப்பட்டது. நெல்லும் கரும்பும் விளைந்தன.
    வன்புலம் :
  • நெய்தல் தவிர மற்றவை ‘வன்புலம் ‘ (புன்செய்) என அழைக்கப்பட்டன. தானியங்களும் பருப்புவடை ககளும் விளைந்தன.

Question 2.
அணிகலன்கள் செய்யப் பயன்பட்டவை யாவை?
விடை:

  • தங்கம்
  • வெள்ளி
  • முத்துக்கள்
  • நவரத்தினக் கற்கள்
  • சங்கு
  • பாசிமணிகள்

Question 3.
முக்கிய இறக்குமதிப் பொருட்கள் யாவை?
விடை:

  • புஷ்பராகம்
  • ஈயம்
  • திராட்சை மது
  • கண்ணாடி
  • குதிரைகள்

Question 4.
இந்தியப் பட்டு குறித்து நீ அறிவன யாவை?
விடை:

  • இந்திய வணிகர்கள் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்த பட்டு மிக முக்கியமானது.
  • ரோமப் பேரரசர் ஆரிலியன் இந்தப் பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என்றார்.

Question 5.
அரசுரிமைச் சின்னங்கள் யாவை?
விடை:

  • செங்கோல்
  • முரசு
  • வெண்கொற்றக் குடை

IV. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்ககால மத நம்பிக்கைகள், சமூக பிரிவுகள் பற்றி விவரி.
விடை:

  • மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன்.
  • வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன் (விஷ்ணு, இந்திரன். வருணன், கொற்றவை ஆ கியோராவர்.
  • நடுகல் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது.
  • பௌத்தமும் சமணமும் கூட உடனிருந்தன.
  • வடக்கே வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை.
  • ஒப்பீட்டளவில் வர்ணாசிரம முறை திராவிடத் தென்னாட்டில் பின்னர் வந்ததே.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 99