Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Text Book Back Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Question 1.
கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் …..
அ) புஷ்யமித்ரர்
ஆ) அக்னிமித்ரர்
இ) வாசுவேதர்
ஈ) நாராயணர்
விடை:
அ) புஷ்யமித்ரர்
Question 2.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ……..
அ) சிமுகா
ஆ) சதகர்ணி
இ) கன்கர்
ஈ) சிவாஸ்வதி
விடை:
அ) சிமுகா
Question 3.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ……..
அ) கனிஷ்கர்
ஆ) முதலாம் கட்பிசஸ்
இ) இரண்டாம் கட்பிசஸ்
ஈ) பன் – சியாங்
விடை:
அ) கனிஷ்கர்
Question 4.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் …. பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத் தோங்கியது.
அ) தக்காணம்
ஆ) வடமேற்கு இந்தியா
இ) பஞ்சாப்
ஈ) கங்கை பள்ளத்தாக்கு சமவெளி
விடை:
ஆ) வடமேற்கு இந்தியா
Question 5.
சாகர்கள் ……….. நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
அ) சிர்கப்
ஆ) தட்சசீலம்
இ) மதுரை
ஈ) புருஷபுரம்
விடை:
அ) சிர்கப்
II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்
Question 1.
கூற்று : இந்தோ – கிரேக்கர்களின், இந்தோ – பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன. காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
Question 2.
கூற்று 1: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2 : இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.
அ) கூற்று 1 தவறு, ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு, ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
கூற்று 2 தவறு, ஆனால் கூற்று சரி
Question 3.
பொருந்தாததை வட்டமிடுக.
புஷ்யமித்ரர் வாசுதேவர் சிமுகா (கனிஷ்கர்)
விடை:
கனிஷ்கர்
Question 4.
ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
கடைசி சுங்க அரசர் யார்?
விடை:
தேவபூதி
சாகர்களில் மிக முக்கியமான, புகழ்பெற்ற அரசர் யார்?
விடை:
ருத்ரதாமன்
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
வாசுதேவர்
கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
விடை:
புனித தாமஸ்
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர் ………
விடை:
அர்சாகஸ்
Question 2.
தெற்கே……… இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்
விடை:
சுசர்மன்
Question 3.
ஹாலா எழுதிய நூலின் பெயர் ……..
விடை:
சட்டசாய் (சப்தசதி)
Question 4.
………. கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
விடை:
சுசர்மன்
Question 5.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ……… ஆகும்
விடை:
பெஷாவர் (புருஷபுரம்)
IV. சரியா தவறா என எழுதுக
Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த து.
விடை:
சரி
Question 2.
காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
விடை:
சரி
Question 3.
குந்தல சதகர்ணி, சாதவாகனவம்சத்தின், பத்தாவது அரசராவார்.
விடை:
தவறு
Question 4.
‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.
விடை:
சரி
V. பொருத்துக
விடை:
ஆ) 3, 4, 5, 1, 2
VI. பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக
1. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை உருவாக்கினார்.
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
3. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.
4. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
VII. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்
Question 1.
கடைசி மௌரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?
விடை:
- மௌரிய பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.
- அவர் அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
Question 2.
காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
- அக்னிமித்ரா காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னி மித்ரா நாடகத்தின் கதாநாயகன். (அக்னிமித்ரா புஷ்யமித்ர சுங்கரின் மகன்)
- இந்நாடகம் மேலும் வசுமித்ரர் கிரேக்கர்களை வெற்றி கொண்டதைக் குறிப்பிடுகின்றது. (வசுமித்ரர் அக்னிமித்ரரின் மகன்)
Question 3.
கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- வாசுதேவர்
- பூமிமித்ரர்
- நாராயணர்
- சுசர்மன்
Question 4.
சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.
விடை:
- சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
- ஹாலா பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் புகழ் பெற்றிருந்தார்.
Question 5.
சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?
விடை:
- காந்தாரம்
- மதுரா
- அமராவதி
- புத்தகயா
- சாஞ்சி
- பாகுத்
Question 6.
முதலாம் கட்செஸ்ஸின் சாதனைகைைளக் குறிப்பிடுக.
விடை:
- முதலாம் கட்பிசஸ் குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி.
- இவர் இந்தோ – கிரேக்க, இந்தோ – பார்த்திய அரசர்களை வெற்றி கொண்டார்.
- இவர் பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
- இவர் தன்னுடைய ஆதிக்கத்தை காபூல், காந்தாரம் மற்றும் சிந்துவரை பரப்பினார்.
Question 7.
கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- அஸ்வகோஷர்
- வசுமித்ரா
- நாகார்ஜூனா
VIII. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்
Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
விடை:
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் :
வடமேற்கிலிருந்து சாகர்கள், சிந்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ – கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய – கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் படையெடுத்தனர்.
- தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
- குப்தப்பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி அமைத்தனர்.
- சேடிகள் (கலிங்கம்) தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
Question 2.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
விடை:
- புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
- அவர் மேற்கு நோக்கி உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கி தனது அரசை விரிவு படுத்தினார்.
- அவர் பாக்டீரிய அரசனின் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்தார்.
- அவர் கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் முறியடித்தார்.
- மேலும் அவர் விதர்பாவையும் கைப்பற்றினார்.
Question 3.
கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:
- கௌதமிபுத்திர சதகர்ணி சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்
- இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தவர் என அவரது அன்னையால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்கீர்த்தியில் கூறப்படுகிறார்.
- பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
- இவரது கப்பல்வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஆந்திரர்களின் கடல்சார் திறன்களையும் கப்பல்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
Question 4.
கோண்டோபரித் அரசு வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:
- இந்தோ – பார்த்திய அரச அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.
- இந்தோ – பார்த்தியர் ஆட்சிப் பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியது.
- கோண்டோ பெர்னஸ் என்னும் பெயர் கிறித்துவ மறை பரப்பாளர் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.
- கிறிஸ்தவ மரபின்படி புனித தாமஸ் கோண்டோ பெர்னஸின் அரசவைக்கு வந்தார்.
- புனித தாமஸ் கோண்டோ பெர்னஸை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினார்.
Question 5.
இந்தோ -கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்
விடை:
மினான்டர் இந்தோ – கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர். ஏனெனில்
- அவர் நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
- அவரது நாணயங்கள் பரந்து விரிந்த காபூல் பள்ளத்தாக்கு மற்றும் சிந்துநதி தொடங்கி மேற்கு உத்திரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.
- மிலிந்த பன்கா என்னும் பௌத்த நூல் அரசன் மிலிந்தாவுக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாகும் (மிலிந்தா = மினான்டர்)
- அவர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றினார்.
Question 6.
சாகர்கள் யார்?
விடை:
- நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
- அவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்
- அவர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சிந்தியர்கள்.
- அவர்கள் சமஸ்கிருத மொழியில் சாகர்கள் என அறியப்பட்டனர்.
- அவர்களால் இந்தியாவில் இந்தோ- கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
Question 7.
கனிஷ்கருடைய மதக்கொள்கை பற்றி எழுதுக.
விடை:
- கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தர் ; அவரது பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
- அவர் அஸ்வகோஷர் (பாடலிபுத்திர துறவி) என்பவரின் போதனைகளால் பௌத்தத்தைத் தழுவினார்.
- அவர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவு மகாயானத்தை ஆதரிப்பவராகவும் முன்னெடுத்துச் செல்பவராகவும் விளங்கினார்.
- அரச மதமானதால் அவர் பல ஸ்தூபிகளையும் மடலாயங்களையும் கட்டினார் (மதுரா, தட்சசீலம் மற்றும் பேரரசின் இதர பகுதிகளில்)
- அவர் புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்கு சமயப் பரப்பாளர்களை அனுப்பினார்.
- அவர் நான்காவது பௌத்தப் பேரவையை குந்தலவனத்தில் (ஸ்ரீநகருக்கு அருகே) கூட்டினார்.
IX. உயர் சிந்தனை வினா
Question 1.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
விடை:
- இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக்கலைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளது.
- கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
- மகாயான பௌத்தர்கள் அவர்களிடமிருந்து குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கற்றனர்.
- அவர்கள் அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் திறன் பெற்றனர்.
- கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
Question 2.
மௌரியருக்குப் பின் வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக – வர்த்தக நிலை குறித்து எழுதவும்.
விடை:
- இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார்.
- அவர் அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார்.
- அவருடைய நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்களும் அரசருடைய பட்டயப் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.
- நாணயங்களில் அவை கரோஷ்தி மொழியில் உள்ளன.
X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)
1. சாதவாகனர், குஷானர் ஆகியோர்களின் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அமைந்து ள்ள இடங்களைப் பற்றி ஒரு ஆல்பம் (செருகேடு) தயார் செய்யவும்.
2. இந்தோ – கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் பண்பாட்டுப் பங்களிப்பு குறித்து வகுப்பறையில் மாணவர்களை விவாதிக்க செய்யவும்.
XI. கட்டக வினா
விடை:
6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Additional Important Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Question 1.
சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்
அ) பாஹியான்
ஆ) யுவான் சுவாங்
இ) யூச் – சி
ஈ) பன் – சியாங்
விடை:
ஆ) யுவான் சுவாங்
Question 2.
புஷ்யமித்திரர் …… ஐ தனது தலைநகராக்கினார்
அ) பாடலிபுத்திரம்
ஆ) பெஷாவர்
இ) குந்தலவனம்
ஈ) பார்குத்
விடை:
அ) பாடலிபுத்திரம்
Question 3.
சுங்கர் காலத்தில் கற்களுக்குப் பதிலாக …….. பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.
அ) மரம்
ஆ) இரும்பு
இ) தாமிரம்
ஈ) செங்கல்
விடை:
அ) மரம்
Question 4.
உலகப்புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் … பள்ளத்தாக்கில் இருந்தன
அ) பாமியான்
ஆ) கங்கை
இ) காஷ்மீர்
இ) கென்யான்
விடை:
அ) பாமியான்
Question 5.
…. படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது
அ) சமஸ்கிருதம்
ஆ) கரோஷ்தி
இ) கன்ன டம்
ஈ) பிராகிருதம்
விடை:
அ) சமஸ்கிருதம்
II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.
Question 1.
கூற்று : பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளை ஆக்கிரமித்தனர். காரணம்:மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
Question 2.
கூற்று : மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்
கூற்று II : கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
அ) கூற்று 1 தவறு. ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
சிமுகாவைத் தொடர்ந்து பதவியேற்ற அவருடைய சகோதரர் ……..
விடை:
கிருஷ்ணர்
Question 2.
நின்ற கோலத்திலான புத்தரின் வெண்கலச்சிலை கண்டறியப்பட்ட இடம் …….
விடை:
ஒக்-யோ
Question 3.
இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் ………
விடை:
சாகர்கள்
Question 4.
சாக அரசர் மோகாவின் தலைநகர் ………
விடை:
சிர்காப்
Question 5.
ருத்ரதாமனின் …… கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
விடை:
ஜுனாகத் கிர்னார்
IV. சரியா தவறா
Question 1.
சதகர்னி, சிமுகாவின் சகோதரியின் மகன்
விடை:
சரி
Question 2.
நாக்காள் பதோம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லால் ஆன முத்திரை தாய்லாந்தில் – உள்ளது
விடை:
சரி
Question 3.
மாவோஸின் பெயர் மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
சரி
Question 4.
குஷாணர்கள் சத்ராபிகளை பிராந்திய ஆளுநர்களாக நியமித்தனர்.
விடை:
தவறு
Question 5.
குஷாண ஆட்சியாளர்கள் பௌத்தர்கள்.
விடை:
சரி
V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி
Question 1.
கலிங்கத்தில் காரவேல அரசர் குறித்து குறிப்பு வரைக.
விடை:
- அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர்
- காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டு கூறுகிறது.
Question 2.
சாதவாகனர்களின் ஆட்சிப்பகுதிகளை பெயரிடுக.
விடை:
- மகாராஷ்டிரா
- வடக்கு கொங்கன்
- பெரார்
- குஜராத்
- கத்தியவார்
- மாளவம்
Question 3.
சாகர்கள் எவ்வாறு இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர்?
விடை:
- சாகர்கள் இந்தியப் பெயர்களைச் சூடிக் கொண்டனர்.
- அவர்கள் இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.
Question 4.
பௌத்தக் கல்வியும் பண்பாடும் எங்கே சென்றன?
விடை:
பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சசீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன.
VI. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்
Question 1.
கனிஷ்கருடைய படையெடுப்புகள் குறித்து எழுது.
விடை:
- கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
- அவர் மகதத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.
- விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக பார்த்திய அரசருக்கு எதிராகப் போர்தொடுத்தார்.
- அவர் சீனத்தளபதி பன் – சியாங் என்பவரைத் தோற்கடித்து சீனர்கள் ஊடுருவலைத் தடுத்தார்.
- அவரது பேரரசு காஷ்மீரிலிருந்து கீழே வாரணாசி வரையிலும் தெற்கே விந்திய மலைகள் வரையிலும் பரவியிருந்தது.
- பேரரசில் காஸ்கர், யார்க்கண்ட் மற்றும் பாரசீகம், பார்த்தியா எல்லைகளும் அடங்கும்.
மனவரைபடம்