Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 1 நமது பூமி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 1 நமது பூமி

5th Social Science Guide நமது பூமி Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தொலைவு _____________ ஆகும்.
விடை:
150 மில்லியன் கிலோ மீட்டர்

Question 2.
பூமியின் சுழற்சியினால் _______________ ஏற்படுகிறது.
விடை:
பருவ காலங்கள்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 3.
பனியால் சூழப்பட்டுள்ள கண்டம் ______________ ஆகும்.
விடை:
அண்டார்டிக்கா

Question 4.
_______________ மிகப் பெரிய கண்டமாகும்.
விடை:
ஆசியா

Question 5.
செந்நிறக்கோள் என அழைக்கப்படுவது ______________
விடை:
செவ்வாய்

Question 6.
நம் பூமி _______________ சதவீதம் உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.
விடை:
71%

II. பொருத்துக.

1. மிகச்சிறிய கண்டம் – தொலைவான கோள்
2. நீலக்கோள் – ஆஸ்திரேலியா
3. நெப்டியூன் – பூமி
விடை:
1. மிகச்சிறிய கண்டம் – ஆஸ்திரேலியா
2. நீலக்கோள் – பூமி
3. நெப்டியூன் – தொலைவான கோள்

III. சுருக்கமான பதில் :

Question 1.
புவியின் தோற்றம் வரையறு.
விடை:
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெடிப்பு” என்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அதன் காரணமாக எண்ணிலடங்கா விண்மீன்களும் வான் பொருள்களும் தோன்றின. இவை அனைத்தும் பொதுவாக பேரண்டம் என அழைக்கப்பட்டது. இதனை அண்டம் என்று குறிப்பிடுகின்றனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 2.
சூரிய மண்டலத்தை வரையறு.
விடை:
சூரியக் குடும்பத்தில் சூரியன் உட்பட எட்டு கோள்கள், மற்றும் அதன் துணைக்கோள்கள், குறுங்கோள்கள், எரிகற்கள், வால்நட்சத்திரங்கள் ஆகியவை உள்ளன. இந்த பொருள்கள் அனைத்தும் அதன் வலுவான ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்டுள்ளன.

Question 3.
புவியில் எத்தனை பெருங்கடல்கள் உள்ளன?
விடை:
பூமியில் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் தெற்குக் கடல், ஆகிய ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.

Question 4.
வேறுபடுத்துக: சுற்றுதல் – சுழலுதல்
விடை:
பூமிக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன. பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணமாக இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனை சுற்றி வலம் வருவதினால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

IV. பத்தி விடையளி:

Question 1.
பேரண்டம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
பேரண்டம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்தவெளி ஆகும். இப்பேரண்டமானது கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள், எரிகற்கள் மற்றும் துணைக்கோள்களை உள்ளடக்கியுள்ளது. பிரபஞ்சத்தின் துல்லியமான அளவு இன்னும் முழுவதுமாக அறியப்படவில்லை. பிரபஞ்சம் இன்னும் வெளிப்புறமாக விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 2.
புவிக்கோளின் தன்மை பற்றி விவரி.
விடை:
பூமி சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள ஐந்தாவது பெரிய கோளாகும். பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் அதே வேளையில் சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டும் வலம் வருகிறது.

பூமிக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன. பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணமாக இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனை சுற்றி வலம் வருவதினால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

V. விரிவாக விடையளி

Question 1.
சூரிய குடும்பத்தின் படம் வரைந்து விளக்குக.
விடை:
நமது சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. வெளிக் கோள்கள் வாயுக்களால் ஆனவை. அவை வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன். உள்-பாறை கோள்கள் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் ஆகும். உறைந்திருக்கும் கோள்கள் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 1

VI. வசயல்யாகு

Question 1.
கண்டங்களைக் கண்டுபிடித்து அவற்றின் பெயரை எழுது.
விடை:
பூமியின் மேற்பரப்பில் நாம் வாழ்கிறோம். இது 7 கண்டங்களையும் 5 பெருங்கடல்களையும் உள்ளடக்கியது.

ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா – ஆகியவை ஏழு கண்டங்கள் ஆகும்.

நாம் வாழும் ஆசியக் கண்டம்தான் அனைத்திலும் மிகப் பெரியது. ஆஸ்திரேலியா, மிகச்சிறிய கண்டம். அண்டார்டிக்கா கண்டம் பனி நிறைந்தது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 2

Question 2.
வரைபடத்தில் ஐந்து பெரிய கடல்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 3

Question 3.
உலக வரைபடத்தில் பாலைவனங்கள் மற்றும் காடுகளை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 4

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

VII. வரைபடப்பயிற்சி:

Question 1.
உலக வரைபடத்தில் கண்டங்களின் பெயர்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 2